புதுடில்லி ஜூலை 7 : இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்து போது தயாநிதி மாறன் 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஏர் செல் நிறுவன பங்குகளை மலேஷியவின் ‘மேக்சிஸ்’ நிறுவனத்திற்கு விற்க நிர்பந்தித்தார் என உச்சநீதிமன்றத்தில், தாக்கல் செய்த அறிக்கையை அடுத்து, தற்போது ஜவுளித்துறை அமைச்சராக இருக்கும்தயாநிதி மாறன் பதவி விலகியுள்ளார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள, தயாநிதிமாறனின் பதவி விலகல், காங்கிரஸ் மேலிடம் திமுக தலைவர் கருணாநிதியை தொடர்பு கொண்டு பேசியதன் பின்னர், திமுகவின் தலைவரின் இசைவின் பேரில் நடந்துள்ளது.
முன்னதாக, வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் ‘அருண் ஷோரி’ தொடங்கிய வைத்த 2 G அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடானது, தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் இரண்டு அமைச்சர்கள் பின்பற்றிய நிலையில், முதலில் அமைச்சர் ராஜாவிடம் தொடங்கிய ஊழல் விசாரணை பின்னோக்கி சென்று இப்போது தயாநிதி மாறனின் பதவி பறிப்பளவிற்கு வந்துள்ளது.
இனி கூடிய விரைவில் இன்னும் பின்னோக்கி சென்று ‘அருண் ஷோரி’ மற்றும் ‘வாஜ்பாய்’ அமைச்சரவையின் அமைச்சர்களின் கூட்டு முடிவை கேள்விக்காளாக்கி, ‘சட்டத்தின்’ பிடிக்குள் ‘பாஜகவின்’ பல பெரும் தலைகளை சிக்க வைக்கும் என எதிர்பார்க்கபடும், நிலையில் காங்கிரஸ் தனது காய்களை மெதுவாக ஆனால் உறுதியாக நகர்த்தி இந்திய அரசியலில் தனது பிடியை உறுதி செய்து கொள்ள முனைகிறது என்பது உறுதி.
முன்னதாக இந்தியவின் தொலைத்தொடர்பு அமைச்சகத்தில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விடயத்தில், பெரும் ஊழல் நடந்ததாக எழுந்த புகார்களின், அடிப்படையில் திமுகவைச் சேர்ந்த ராசா தொலைத்தொடர்பு அமைச்சர் பதவியிலிருந்து விலக நேர்ந்து பின்னர் கைது நடவடிக்கைக்கும் ஆளானார்.
2 G அலைக்கற்றை ஊழலில் அடுத்த பின்னோக்கிய விசாரணை நிலையில், இப்போது தயாநிதி மாறனின் முறை வந்து, பதவி விலகி சிபிஐ யின் விசாரணையை எதிர் நோக்கி இருக்கும் நிலையில் ‘மாறன்’ குடும்பத்தினரின் அரசியல் மற்றும் தொழில் செயல்பாடுகள், அந்த செயற்பாடுகளால் திமுக என்ற ‘திராவிட இயக்கத்திற்கு’ ஏற்பட்டுள்ள சொல்லொன்னா பாதிப்புக்கள், மற்றும் பெரும் பின்னடைவு ஆகியவை பற்றி ஆராயப்படுவது தவிர்க்க முடியாததாகியுள்ளது.
எனவே இப்போது நாம் காணப்போவது என்னவென்றால் ‘மாறன்’ குடுபத்தினரின் செயல்பாடுகள், அந்த செயல்பாடுகளுக்கு பின்னால் இருந்த சமூக, இன, அரசியல் மற்றும் தத்துவ ரீதியான, அடிப்படைககளை அக்கு வேறு ஆணி வேறாக அலசப்போகிறோம்.
முதலாவதாக ராசாவுக்கு முன்னர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக பதவி வகித்த தயாநிதி மாறன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுழற்றி அடிக்கத்தொடங்கியது, மிகவும் சமீபத்தில்தான். குறிப்பாக, தனது வீட்டில் அவர் அமைத்த ஒரு ‘தொலைதொடர்பு தானியங்கி பரிமாற்ற கேந்திரம்’ (Hi-tech Exchange) மூலம் சுமார் 300 தனி தொலைபேசி தொடர்புகளை சட்டவிரோதமாக ‘சன் டிவி’ யின் ‘காணொளி தகவல் தரவேற்றத்திற்கு’ (Video data upload) பயன்படுத்தியது மூலம் அரசுக்கு சுமார் 400 கோடி ரூபாய்களை இழப்பு ஏற்படுத்தியது குறித்த குற்றச்சாட்டுக்கள் மற்றும் மலேசிய மேக்சிஸ் நிறுவன பிரச்சனை போன்றவை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, தொழிலதிபர் சிவசங்கரன் வசமிருந்த ஏர்செல் நிறுவன பங்குகளை, தனது மலேஷிய நண்பரின் நிறுவனமான மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க வைத்து, பின்னர் மாக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவத்தின் மூலம் தந்து, தனது சகோதரர் கலாநிதி மாறனின் ‘சன் டிவி’ நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்ததன் மூலம், பெரும் லாபமடைய, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக ‘சிவசங்கரன்’ ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து நடந்த சிபிஐ விசாரணைகளில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டிற்கு வலுவான ஆதாரங்களாக, தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சராக இருந்த போது அவரது, உதவியாளராக இருந்தவரின் சாட்சியம் கிடைத்த நிலையிலேயே மத்திய புலனாய்வு அமைப்பு, நீதிமன்றத்தில் இவ்வாறான உறுதியான மனுவை தாக்கல் செய்து, மாறன் பதவி பறிப்புக்கு வழி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தயாநிதி மாறனின் ராஜிநாமாவையடுத்து மாறன் சகோதரர்களுக்கு சொந்தமான நிறுவனங்களான சன்டிவி மற்றும் ஸ்பைஸ்ஜெட் பங்குகளின் பெரும் சரிவை சந்தித்துள்ளன. பதவி விலகல் நடந்த அன்றே சன் டிவி பங்குகளின் விலையில் 7 சதவீத சரிவும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத பங்கு விலைகளில் சுமார் 3 சதவீத சரிவும் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திமுக வை அழித்ததே ‘மாறன்கள் தான்’ என்ற முதல்வர் ஜெயலலிதாவின் கருத்து அரசியல் நோக்கர்களால் மிகவும் ஆமோதிக்கும் ஒன்றாக இருக்கிறது. ஜெயலலிதா இந்த கருத்தை, இப்போது கூறுவதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. இவ்வாறு கூறுவதன் மூலம் ‘மாறன்’ மற்றும் திமுக வுக்கிடையே பிளவை ஏற்படுத்தி, ‘திமுக’ வை பிளவுபடுத்தி ‘கூத்தாடுவதே’ அவரது நோக்கம் என்பதிலும் சந்தேகமில்லை.
சரி மாறன் சகோதரர்கள், ஜெயலலிதா இப்போது குற்றம் சாட்டுவதை போல ‘திமுக வின்’ அழிவுக்கு அல்லது கடும் பின்னடைவுக்கு காரணமாக தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருந்திருப்பார்களேயாயின் அது எதனால் என்று பார்ப்பதற்கு சற்று பின்னோக்கி ‘முரசொலி மாறனிடமிருந்து’ நமது ஆராய்ச்சியை தொடங்க வேண்டியிருக்கும்.
மாறன் சகோதரர்களில் தந்தையான ‘முரசொலி மாறன்’ திமுக-பாஜக உறவை தொடங்கி வைத்து தனது மற்றும் தனது மகன்களின் வளர்ச்சிக்கு அடித்தளம் இட முயன்ற போதே ‘திமுக’ பாதை மாறத்தொடங்கிவிட்டதை அவதானிக்க கூடியதாக இருந்தது என்று கூறுகிறார்கள்.
இவ்வாறான முரசொலி மாறனால் தொடங்கி வைக்கப்பட்டு, பின்னர் ‘மாறன’ குடும்பத்தினரது திராவிட கொள்கைகளிலிருந்து முழுமையாக ‘பாதை மாறிய’ நடவடிக்கைகளுக்கு, முக்கியமான ஒரு பின்னணி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த பின்னணி ‘முரசொலி மாறன்’ காலம் தொடங்கி வழங்கி வரும் திருமண உறவு வழக்கு முறையாகும். இந்த கலப்பு திருமண முறையானது ‘மாறன்’ குடுபத்தின் ‘திராவிட தனித்தன்மைக்கு’ முடிவு கட்டியதுமன்றி, குடும்ப ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
‘முரசொலி மாறன்’ குடும்பத்தில் ஒரு வினோதமான கலப்பு திருமண உறவு முறை, முரசொலி மாறன் காலத்திலிருந்தே தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
திராவிடர்களின் அடிமைத்தனத்திற்கும், சாதி ஒடுக்குமுறைக் கொடுமைகளுக்கும் 2000 ஆண்டுகளாக காரணம் என்று எப்போதும் கடுமையாக தாக்கி குறை சொல்லி, ‘பார்ப்பனர்கள்’, ‘பார்ப்பன தத்துவம்’ என இன்றுவரை ‘திமுக’ இழிவு படுத்தி வந்த, ‘பிராமண’ சமுதாயத்தோடு திருமண உறவு முறைகளை மேற்கொள்ள தொடங்கியதுதான்.
முரசொலி மாறனின் குடும்ப திருமண உறவுமுறைகள் பெரும்பாலும் சர்ச்சையை கிளப்பாமல் போனதற்கு, முக்கிய காரணம் அதன் மூலம் திமுக அரசியல், சமூக மற்றும் பொதுவாக ‘பிராமணர்கள்’ அதிகமிருக்கும் ஊடக, அதிகார மட்டங்களில் பலன் பெற்றதுதான்.
இந்த ‘திராவிட – ஆரிய’ உதடுகளின் சந்திப்பு முதலில் நடந்தது, முரசொலி மாறன், ஏ.என். கல்யாண சுந்தர ஐயரின் மகளான மல்லிகா மாறன் என்ற ஒரு பிராமண குடும்பத்து பெண்ணை திருமணம் செய்து கொண்டபோதுதான்.
இதன் தொடர்ச்சியாக தனது மகன்கள் யாவரையும் பிராமண குடும்பத்தினர்களோடு மட்டுமே சம்பந்தம் செய்து திருமணம் செய்து வைத்துள்ளார் ‘முரசொலி மாறன்’.
குறிப்பாக ‘ஹிந்து பத்திரிகை ராமின் மச்சினியான பிரியா என்பவர் தான் தயாநிதி மாறனின் மனைவி. பிரியா, ரங்கராஜன் ஐய்யங்கார் என்பாரின் மகள் ஆவார்.
இது போன்றே கலாநிதி மாறனின் மனைவியான காவேரியும் ஒரு பிராமண பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக, ‘பிராமண எதிர்ப்பு குறித்து பேசும்’ திமுக வின் தலைமை குடும்ப உறவுகளில், மருமக்கள் வழியில் ஒரு ‘பிரதிலோமர்’ (ஒரு பிராமணரல்லாத ஆணுக்கும பிராமண பெண்ணுக்கு பிறக்கும் குழந்தைகள். இதற்கு மாற்றமாக இருந்தால் ‘அனுலோமர்’ என்று பெயர். இவர்களை முழு பிராமணர்களாக ‘மனு ஸ்மிருதி’ ஏற்காததால் இப்பிரிவுமுறை வந்தது) குடும்ப தொடர்ச்சியே வழி வழியாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ‘முரசொலி மாறன்’ குடும்ப திருமண உறவுகளே, திமுக -பாஜக உறவுக்கு காரணம் என்பது வெள்ளிடை மலை.
இதன் தொடர்ச்சியாகவே ‘முரசொலி மாறனின்’ குடும்பத்தினர் மற்றும் சந்ததியினர், தங்களுக்கென ஒரு இன ரீதியான ‘தனித்தன்மையை’ (Cultural Identity), தனிப்பட்ட தோற்றங்களில், குடும்ப உறவு முறைகளில், அரசியல் மற்றும் தொழில் துறை நடவடிக்கைகளில் மேற்கொள்ள நேரிட்டது, இயல்பே.
இதன் விளைவாக சன் டிவி க்கும் மற்ற வலது சாரி ஊடகங்களுக்கும் அதிக வித்தியாசமில்லாத நிலை உருவாகியது. சன் டிவி யில் நிகழ்ச்சி வழங்குவோரிலும், பல முன்னணி பதவிகளிலும், ‘மக்கள் டிவி’ போன்று தமிழர்களுக்கும், தமிழுக்கும் முக்கியத்துவம் தரப்படாமல், திராவிட கொள்கைகளுக்கு எதிரானவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டது வெள்ளிடைமலை.
இதன் விளைவாகவே, தனது ‘தொலைதொடர்பு அமைச்சர் பதவியை’ திமுக தலைமை, ஒரு தலித்தான ராஜாவிற்கு வழங்கியபோது ‘மாறன் சகோதரர்களின்’ இரட்டிப்பான கண்டனத்திற்கு அது காரணமானது. ராஜாவிற்கும், மாறன் சகோதரர்களுக்கும் எந்த நேரடியான தகராறு இல்லையென்றாலும், ராஜாவின் மீதான 2 G குற்றச்சாட்டுக்களை, சன் டிவி கடும் வேகத்துடன் வைப்பதற்கும் இதுவே காரணமானது.
ஒரு படி மேலே சென்று, 2 G பிரச்சனையில் ராஜா பதவி விலகி கைதானபோது, மாறன் சகோதரர்கள் தரப்பில் அது ஒரு ஐந்து நட்ச்சத்திர ஓட்டல் கொண்டாட்டத்திற்கு காரணமானதற்கும் காரணத்தை வேறெங்கும் தேடவேண்டாம்.
உண்மையில் ராஜாவின் வீழ்ச்சி தங்களது வீழ்ச்சியின் முன்னோட்டமே என்பதை ‘மாறன்’ சகோதரர்கள் அன்று அறிந்திருக்கவில்லை.
இப்போது, தயாநிதி மாறனின் பதவி விலகலின் போதும், ராஜா தரப்பு நீதிமன்றத்தில் வைத்து ராஜாத்தி அம்மாள் மற்றும் அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் இனிப்பு பரிமாரியதாக ‘மாலைசுடர்’ வெள்ளி , 08 ஜூலை, 2011 11:34 காலை இணைய வெளியீட்டில், செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக, இன ரீதியாக ‘திராவிட – ஆரிய’ இனங்களுக்கிடையே திரிசங்கு சொர்கத்தில் இருந்த ‘மாறன்’ குடும்பத்தினர் மற்றும் தங்களை அரசியல் ரீதியாக வளர்த்து கொள்ள முயன்ற மாறன் சகோதரர்கள், திமுகவை அதற்கு எல்லா வகையிலும் அரசியல் ரீதியாக பயன்படுத்த முயன்றனர்.
இதன் நேரடி விளைவாக அரசியல் ரீதியாக முன்னேறிய ‘மாறன் குடும்ப’ அங்கத்தினர்கள், அதனுடன் கூடாக, சன் டிவி போன்ற ஒரு ஊடக சாம்ராஜ்யத்தையும் நிறுவி எளிதில் முன்னேற்றி, இந்தியாவின் முன்னணி ஊடகமாக மாற்றவும், ஆசியாவின் மிகபெரிய ‘பணக்காரர்கள்’ பட்டியலில் இடம் பெறவும் முடிந்தது.
ஆனால், இவ்வாறு வளர்ந்த ‘மாறன் சகோதரர்களின்’ செயல்பாடானது, அரசியல், ஊடகம், தொழில் துறை என்பதையும் தாண்டி, கலாநிதி மாறன் சன் டிவி மூலம் பெற்ற வெற்றியை போன்றே, தயாநிதி மாறனை இந்திய அரசியலில் ‘தன்னிகரில்லா’ தென்னகத்து தலைவனாக, ‘புது டில்லியில்’ நிலை நிறுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் இறங்க தொடங்கியதுதான், எல்லாவற்றையும் தலை கீழாக புரட்டி போடச்செய்த முதல் படி.
தயாநிதி மாறனின் இந்த அரசியல் பேராசை, ‘மாறன்’ குடும்பத்திற்கு மட்டுமின்றி ‘திமுக விற்கே’ பெரு நஷ்டமாகிப்போனது முன்னரே கூறியது போன்று வராலாறாகிப்போன நிலையில், இந்த ‘நிறைவேறா’ பேராசைக்கு காரணம் ‘மாறன் சகோதரர்களின்’ சொந்த நடவடிக்கைகளா அல்லது பின்னணியில் இருந்து ‘திமுக’ மற்றும் ‘திராவிட இயக்க’ வீழ்ச்சியை திட்டமிட்ட வகையில் நடத்தி முடிக்க முயன்ற வேறு எவருமா, என்ற லட்சம் கோடி ரூபாய்கள் பெறுமான கேள்விக்கு பதிலளிக்க பல்வேறு அனுமானங்கள் நிலவுகின்றன.
எது எவ்வாறாயினும் ஜெயலலிதா கூறியது போன்று, திமுக வின் தற்போதைய நிலைக்கு, மாறன் குடும்பத்தினரின் பங்கு கணிசமான அளவிற்கும் அதிகமானது என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது.