டாக்டர் கெயித் மூரும் இஸ்லமிய பிரச்சாரகர்களால் அதிகம் மேற்கோள் காட்டப் படுபவர் ஆகையால் இப்பதிவில் அவருடைய குரானிய அறிவியலை அலசுவோம்.
வாழ்க்கை குறிப்பு
இவர் கனடா நாட்டிலுள்ள டொரான்டொ பல்கழைகழகத்தில் உடற்கூற்றியல் தலைவராக 11ஆண்டுகள் ப்ணியாற்றீயவர். சவுதி அரேபியாவின் கிங் அப்துலஜீஸ் பல்கலைகழகத்திலும் பணி புரிந்துள்ளார்.
உடற்கூற்றியல்,கருவியல் குறித்து இவர் எழுதிய பல நூல்கள் பல மொழியில் உள்ளது.இவருடய நூல்கல் மருத்துவ கல்லூரியில் பாட நூலாக இடம் பெற்றுள்ளன.இவர் குரானை படித்து அதில் கூறப்பட்ட கரு வளர்ச்சி அறிவியலை கண்டு மதம் மாறியதாக கூறப்படுகிறது.(இவருடைய இஸ்லாமிய பெயர் என்னவோ?)
குரானில் கருவியல்
குரானில் உள்ள (1)சில வசனங்கள் கரு வளர்ச்சியின் நிலைகளை கூறுவதாகவும்,(2)அது இதற்கு முன் யாராலும் குறிப்பிடப்படாதாகவும்,அது (3) இப்போதுள்ள அறிவியல் கூறும் கருத்து போலவே உள்ளதாகவும் இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற விஷயங்களை அறிந்தவர் இறைவன் மட்டுமே ஆகவே குரான் இறைவேதம்,இஸ்லாமே உண்மையான மதம் என்றும் கூறுகின்றனர்.
இவர்கள் கூறுவது சரியா?
முதலில் கரு வளர்ச்சி குறித்து கொஞ்சம் விவரம் அறிய கீழ்க்காணும் சுட்டியை பார்க்கவும்.
http://www.ehd.org/resources_bpd_illustrated.php?page=6&language=90
கரு வளர்ச்சி குறித்து கூறும் குரான் வசனங்கள்
* * *
22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்;) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
* * *
QURANIC STAGES OF PRENATAL DEVELOPMENT
STAGE 1. nutfa — sperm- இந்திரியத் துளி
STAGE 2. ‘alaqa — clot-இரத்தக் கட்டி
STAGE 3. mudagha — piece or lump of flesh-தசைப் பிண்டம்
STAGE 4. ‘adaam — bones-எலும்பு
STAGE 5. dressing the bones with muscles-மாமிசத்தை அணிவித்தோம்;
இதில் முக்கியமாக கால அளவு எதுவுமே எந்த நிலைக்கும் (எப்போதும் போல்) கொடுக்கப் படவில்லை. நீங்கள் நான் சொன்ன சுட்டியில் உல்ள காணொளிகளை பார்த்து இருந்தாலே இந்த விளக்கம் ஒன்றும் பெரிதாக சொல்லவில்லை என்று புரிந்து இருக்கும்.
என்னினும் அவர்கள் இந்த கருத்து கரு வளர்ச்சி நிலைகள் யாராலும் குரானுக்கு முன்பு கூறப்படவில்லை என்கிறார்கள்.
கிரேக்க மருத்துவ விஞ்ஞானியாய கேலன் என்பவர் (சுமார் கி.பி 131ல் பிறந்தவர்) இவருடைய மருத்துவ புத்தகங்கள் இன்றும் பாதுகாகக் பட்டு ஆராயப்படுகின்ற்ன.இவர் கூறும் நிலைகள் இந்த சுட்டியில் காணலாம்.அதன் நிலைகளை மட்டும் நான் குறிப்பிடிகிறேன்
GALEN’S STAGES OF PRENATAL DEVELOPMENT
STAGE 1. The two semens-ஆண் மற்றும் பெண்ணின் கலப்பு விந்து
STAGE 2. embryo-கரு
STAGE 3. unshaped flesh-தசைக்கட்டி
STAGE 4. bones-எலும்பு
STAGE 5. flesh grows on and around the bones-தசை மூடுதல்
இரண்டும் ஏறக்குறைய ஒரே மாதிரியே உள்ளது மற்றும் கேலன் ஆண் மற்றும் பெண்ணின் விந்து கலப்பை கூறுகிறார்.
ஆகவே இதுவரை யாரும் கூறாத ஒன்றை குரான் கூறவில்லை.
எலும்புகளுக்கு பிறகு மாம்சத்தினால் போர்த்துவதென்றால் நடக்காத காரியம் ,,எலும்புகள் தோல் மற்றும் சதைக்குள்லேயே உருவாகிறது என்பதையும் சுட்டியின் காளொளியில் கண்டு இருக்கலாம்.கரு(குழந்தைக்கு) உணவு தொப்புள் கொடி வழியாக செல்வது,வெவ்வேறு உடல் உறுப்புகள் உருவாதல் பற்றி எதுவும் கூறப்படவில்லை.
ஆக்வே கேலன் மற்றும் குரானின் கருத்து தவறானது.இது அறிவியலோடு ஒத்து போகவில்லை.
கரு வளர்ச்சி பேசும் குரானிய விஞ்ஞானிகள் அது தொடர்பான குரான் வசனங்களை மட்டுமே மேற்கோள் கட்டுகிறார்கள் .சில ஹதிதுககளும்(நல்ல ஹார்லிக்ஸ் சாப்பிட்டு பலமான) கரு வளர்ச்சி பற்றி கூறுகின்றன.ஏன் அதை கூறுவது இல்லை என்றால் அதில் கால அளவுகள் 40 நாட்களாக குறிப்பிடப்பட்டு உள்ளது.ஹதிதின் படி நிலைகள்.
HADITH’S STAGES OF PRENATAL DEVELOPMENT
STAGE 1. sperm–for 40 days-விந்து 40 நாட்கள்
STAGE 2. ‘alaqa — clot for 40 days-ரத்தக் கட்டி
STAGE 3. mudagha — flesh for 40 days-தசைக்கட்டி
120 நாட்கள் கழித்து கூட கரு ஒரு சதை பிண்டமாகவே இருக்கும் என்று ஹதிது கூறுகிறது.அந்த ஹதிதுகளையும் கொடுத்துள்ளேன்.
* * *
3208. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்:
உங்கள் படைப்பு உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்களில் ஒருங்கிணைக்கப்படுகிறது. பிறகு அதே போன்ற காலத்தில் (40 நாள்களில் அட்டை – போன்று) ஒரு கருக்கட்டியாக மாறுகிறது. பிறகு, அதே போன்ற காலத்தில் (மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைப் பிண்டமாக மாறுகிறது. பிறகு அல்லாஹ் ஒரு வானவரை (அதனிடம்) அனுப்புகிறான். அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. (அவை:) அதன் (கருவாக இருக்கும் அந்த மனிதனின்) செயலையும் (அவனுடைய செயல்கள் எப்படியிருக்கும் என்பதையும்), அதன் வாழ்வாதாரத்தையும் (அவனுக்க என்னென்ன எந்த அளவு கிடைக்கும் என்பதையும்), அதன் வாழ்நாளையும் (அவன் எவ்வளவு நாள் வாழ்வான் எப்போது இறப்பான் என்பதையும்), அது (இறுதிக் கட்டத்தில்) துர்பாக்கியசாலியா, நற்பேறுடையதா என்பதையும் (நான் விதித்தபடி) எழுது” என்று அந்த வானவருக்குக் கட்டளையிடப்படும். பிறகு அதனுள் உயிர் ஊதப்படும். இதனால் தான், உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து விடுவார். (அதன் விளைவாக, நரகம் புகுந்து விடுவார்,) ஒருவர் (தீய) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் நரகத்திற்குமிடையே ஒரேயொரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் விதி அவரை முந்திக் கொள்ளும். அதனால் அவர் செர்க்கவாசிகளின் செயலைச் செய்வார். (அதன் காரணத்தால் சொர்க்கம் புகுவார்.)
Volume :3 Book :59
3332. உண்மையே பேசுபவரும், உண்மையே அறிவிக்கப்பட்டவருமான இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் நாற்பது நாள்கள் (கருவாக) சேமிக்கப்படுகிறீர்கள். பிறகு அவ்வாறே (40 நாள்களில்) அந்தக் கரு (அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பிடித்துத் தொங்கும்) ஒரு கருக்கட்டியாக மாறி விடுகிறது. பிறகு, அவ்வாறே (இன்னொரு நாற்பது நாள்களில் மெல்லப்பட்ட சக்கை போன்ற) ஒரு சதைப்பிண்டமாக மாறி விடுகிறது. பிறகு, அல்லாஹ் அதனிடம் ஒரு வானவரை நான்கு கட்டளைகளைத் தந்து அனுப்புகிறான். (அதன்படி) அதன் செயல்பாடு (எப்படியிருக்கும் என்று)ம் அதன் ஆயுளும், அதன் உணவும் (பிற வாழ்வாதாரங்களும் எவ்வளவு என்றும்) எழுதப்படுகின்றன. அக்குழந்தை துர்பாக்கியசாலியா நற்பாக்கியசாலியா என்பதும் எழுதப்படுகிறது. பிறகு அதனுள் உயிர் ஊதப்படுகிறது. இதனால் தான், மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான். இறுதியில், அவனுக்கும் நரகத்திற்குமிடையே ஒரு முழம் மட்டும் தான் இடைவெளி இருக்கும். அப்போது (எதிர் பாராத விதமாக) விதி அவளை முந்திக் கொள்ள, அவன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்து சொர்க்கத்தில் நுழைந்து விடுவான். ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்த வண்ணமிருப்பான். இறுதியில் அவனுக்கும் சொர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் தான் இருக்கும். அப்போது, (எதிர் பாராத விதமாக) விதி அவனை முந்திக் கொள்ள அவன் நரகவாசிகளின் செயலைச் செய்து நரகத்தில் புகுந்து விடுவான்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
Volume :4 Book :60
* * *
இதனை கூறியவர்தான் இந்த கெயித் மூர்.
இன்னும் குரானில் கரு வளர்ச்சி என்றால் அது சொல்லும் விதமாக வளர்ந்தால் அது மனித குழந்தையாக இருக்காது ஜின்( இஸ்லாமியர்களின் பேய்)குழந்தை ஆக இருக்கும் என்று கூறி முடிக்கிறேன்.