கபாலீசுவரரைப் பற்றிய தினமலரின் திடீர் சரித்திர ஆராய்ச்சி: உண்மையான கோவில் கடற்கரையில் இருந்ததாம்!
தினமலரின் இரட்டை வேடங்கள்: கபாலிசுவர் கோவில் கடற்கரையில் சாந்தோம் சர்ச் இருந்த இடத்தில் இருந்ததாம்: தாமஸ் கட்டுக்கதையைத் தொடர்ந்து பரப்பி வந்த “தினமலர்”, இப்பொழுது என்னமோ திடீரென்று, உண்மையான கபாலீசுவரர்க் கோவில் கடற்க்கரையில் தான் இருந்தது என்று செய்திகளை வெளியிடுவது வேடிக்கையாக இருக்கிறது. அப்படியென்றால், கிருத்துவர்கள் அக்கோவிலை இடித்தார்கள் என்ற உண்மையைத்தான், தினமலர் இப்பொழுது தெரிந்து கொள்கிறது போலும். பிறகு எப்படி, முரண்பட்ட செய்திகளை மெத்தப் படித்த திரு. ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக இருக்கும் அதே தினமலரில் வெளிவரும்? வாசகர்களை ஏமாளிகள் என்று நினைத்து விட்டார்களா? “தாமஸ் கட்டுக்கதை” என்ற எனது இணைத்தளத்தைப் பார்க்கவும்[1]. அதில் தாமஸ் கட்டுக்க் கதை இந்தியாவில் கிருத்துவர்கள் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர்[2]மற்றும் ஊடகங்களில் தொடர்ந்து அத்தகயைப் பொய்ப்பிரசாரத்தை உண்மைபோல அதுவும் சரித்திரம் போல பரப்பி வருகின்றனர். அதற்கு தினமலர் உதவி வருவது எனக்குத் தெரிய வந்தது[3].
கபாலீஸ்வரர் கோவிலே சொல்கிறது,முன்புதான் கடற்கரையில் இருந்ததாக! என்ற தலைப்பில் பதிவு செய்தபோது, “கி.பி 1566ல், மைலாப்பூர் போர்ச்சுகீசியர்களில் வீழ்ந்த போது, இந்த கோவில் முழுவதுமாக இடிக்கப் பட்டது. இந்த கோவிலானது 300 வருடங்களுக்கு முன்பு மறுபடியும் (இப்பொழுதுள்ள இடத்தில்) கட்டப் பட்டதாகும். பழைய (முந்தைய கபாலிஸ்வரர்) கோவிலில் இருந்த கல்வெட்டுகள் உடைந்த நிலையில் இந்த கோவிலிலும், செயின்ட் தாமஸ் சர்ச்சிலும் காணலாம்”, என்று எடுத்துக் கட்டியுள்ளேன்[4]. இருப்பினும் சமீக காலத்தில் தெய்வநாயகம், செபாஸ்டியன் சீமான்[5] போன்ற கிருத்துவர்கள் ஏதோ ஆதாயத்திற்காக இக்கட்டுக்கதையை எடுத்துக் கொண்டு குழப்பி வருகின்றனர்[6]. சிறிதும் வெட்கம் இல்லாமல் கருணாநிதி, ஸ்டாலின் கூட இதில் பங்குக் கொண்டு கூத்தாடிகளாக / கைப்பாவைகளாக வேலைசெய்துள்ளனர்[7]. முருகனைப் பிடித்த குரங்கு, ஏசுவைப் பிடித்து விட்டது. ஆமாம், பட்டை விபூதி ஜான் சாமுவேலுக்கு ஏசுபைத்தியம் பிடித்து விட்டது[8]. பாவம் ஜி.ஜே. கந்தப்பன், ராஜமாணிக்கம் ஆத்மாக்கள் சாந்தியடைவதாக! தினமலரின் உபயம் தொடர்ந்து வந்தது[9].
சிதறிக்கிடக்கும் கபாலீசுவரர் கோவில் கல்வெட்டுகள்:இத்தலைப்பில், இன்று தினமலர், ஏதோ புதியதாக கண்டு இடித்து விட்டால் போல சில விஷயங்களைப் போட்டிருக்கிறது. “சென்னை வட்டாரத்தில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பல விதங்களில் சிறப்புடையது. எனினும், இக்கோவிலின் தொன்மையை அறிய உதவும் கல்வெட்டுகள், பல இடங்களில் சிதறிக் கிடக்கின்றன. முழுமையாகவும் கிடைக்கவில்லை”[10]. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், டாலமி என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர், மயிலாப்பூரை, மல்லியார்பா என கூறுகிறார்.
தினமலர் கூறுவது:கி.பி. 5ம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த ஐயடிகள் காடவர் கோன், திருமங்கையாழ்வார், கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர், அப்பர் சுவாமிகள் ஆகியோர், மயிலாப்பூரை தங்கள் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
கடற்கரையில் மயிலாப்பூர் இவர்களில், அப்பர் சுவாமிகள் இத்தலத்திற்கு தனிப் பதிகம் பாடவில்லை எனினும், வேறு இரு திருப்பதிகங்களில் மயிலாப்பில் எனக் குறிப்பிடுகிறார். | என்னுடைய விளக்கம்:மயிலார்ப்பு என்பதற்கு பொருள் ‘மயிலாதல்’- உமை மயிலாலாக ஆகியதால் மயிலார்ப்பு-ஊர் என்பது மயிலாப்பூர் ஆனது என்பர். 5ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமழிசை ஆழ்வாரின் நான்முகம் திருவந்தாதியில்
“……………………………………. நீளோ தம் வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக்கேணியான்”, என்பதெல்லாம் தெரியவில்லை போலும். 6ம் ஊற்றாண்டில் வாழ்ந்த ஐயடிகள் காடவர் கோன் என்னும் பல்லவ அரசர் பாடிய சிவத்தளி வெண்பாவில், “மயிலைத்திருப்புன்னை யங்கானல் சிந்தியா யாகில் இருப்பின்னை யன்காந் திளைத்து…….”, என இக்கோயிலைப் பாடியுள்ளார். |
திருநாவுக்கரசர் தேவாரத்தில் மூன்றிடங்களில் மயிலாப்பு கூறப்பெறுகின்றது.
|
அதன் பின், அருணகிரிநாதர் இத்தலத்திற்கு, 10 திருப்புகழ்கள் பாடியுள்ளார். இவர் காலம் வரை, கடற்கரையோரம் தான் மயிலாப்பூர் கோவில் இருந்தது. | அருணகிரிநாதரின் திருப்புகழ்ப் பகுதியில், “கடலக் கரைதிரை யருகேசூழ் மயிலைப் பதிதனில் உறைவோனே” என்ற அத்தாட்சியால் தெரியவரும். |