சொத்துக்கள் -வெளியாகி இருக்கும் பட்டியல் !
இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு இடுகை
எழுதி இருந்தேன் – இந்த திருட்டுப் பணத்தில்
வாங்கிய அசையும் மற்றும் அசையா சொத்துக்களை
முடக்க நடவடிக்கை எடுப்பார்களா என்று கேட்டு !
இன்று இந்த பெரிய மனிதர்கள் சேர்த்து இருக்கும்
மற்றும்
சேர்க்க முயன்று கொண்டிருக்கும்
சொத்துக்களைப் பற்றிய பட்டியல் ஒன்றினை
இன்று வெளியிட்டிருக்கிறது ஜூனியர் விகடன் -
அதிலிருந்து சுருக்கமாக -
1)லண்டன் அருகே ஹன்ஸ்ப்ரேர் என்கிற தீவு -
பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ளது.
2)மலேசியாவில் பிஸியான ஜே.பி. ஏரியா
அருகே சுமார் 600 ஏக்கர் அளவிற்கு மூங்கில்
எஸ்டேட்.
3) சென்னை ஒட்டேரி அருகே பல மாடி
பில்டிங் ஒன்று. ( கட்டப்பட்டு வருகிறது )
4) பழைய மகாபலிபுரம் சாலையில் பல மாடி
அபார்ட்மெண்ட் ஒன்று.(கட்டப்பட்டு வருகிறது )
5) சென்னைக்கு வெளியே சிறு நகரம் ஒன்றில்
பெரிய மாளிகை ஒன்று.(கட்டப்பட்டு வருகிறது)
6) திருச்சி மாவட்டத்தில் ஒரு பிரபலமான
கல்லூரி பல நூறு கோடி ரூபாய் விலையில்
(ரெடிமேட் )ஏற்கெனவே
விலைக்கு வாங்கப்பட்டுள்ளது.
சிபிஐ வசம் இந்த தகவல்கள் ஏற்கெனவே
உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு மேல்
கைது செய்வது, வழக்கு தொடுப்பது,
நடவடிக்கை எடுப்பது போன்றவை –
ஆளும் கட்சியின்,(மத்திய அரசின் )
விருப்பத்தைப் பொறுத்தே இருக்கும்.
பி.கு. இதை எழுதி முடித்த நேரத்தில்
செய்தி வந்து கொண்டிருக்கிறது.எனவே
மீண்டும் தொடர்கிறேன் –
இதில் தொடர்புடைய சில ‘பெரிய’ இடங்கள் -
கலைஞரின் உயிர் காக்கும் மருத்துவக்
காப்பீட்டுத் திட்டத்தின் உரிமையாளர்கள்,
(ஸ்டார் க்ரூப், துபாய் )
அனில் அம்பானி ( தம்பி )
இன்னும் பல பெயர்கள் தொடரலாம் !
இப்போது கூட – மக்கள் உயிர்ப்புடன் செயல் பட்டால்
நிறைய செய்யலாம். செய்ய வைக்க வேண்டும் -
பதவியிலுள்ள ( அதிகாரமுள்ள )
உச்ச நீதி மன்ற நீதிபதியை கொண்டு ஒரு
விரைவு நீதிவிசாரணை நடத்த வேண்டும்.
தொடர்புடையவர்களின் சொத்துக்கள்
(முக்கியமாக பாஸ்போர்ட் ) முடக்கப்பட வேண்டும்.
வழங்கப்பட்ட லைசென்சுகள்
உடனடியாக ரத்து செய்யப்பட்டு – மீண்டும் புதிதாக
ஏலம் விடப்பட வேண்டும்.
இந்த ஊழல் அரக்கர்களைக் காக்க முயற்சிக்கும்,
வக்காலத்து வாங்கும் அரசியல்வாதிகளை -
மக்கள் நன்கு “கவனித்து” – “ஆவன”
செய்ய வேண்டும்.
செய்வார்களா