New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
Permalink  
 


கனிமொழியை கட்சியிலிருந்து நீக்குங்கள்: கோபாலபுரத்தில் ரூத்ரதாண்டவம் ஆடிய செல்வி !

 

 

”தி.மு.க. என்ற இயக்கத்தை கட்டிக் காப்பாற்ற தம்பி கருணாநிதி இருக்கிறார்” பல ஆண்டுகளுக்கு முன்னால் அண்ணா சொன்னார்.

அண்ணா சொன்னது போல, தி.மு.க.வை அண்ணாவுக்குப் பிறகு 50 ஆண்டுகளாக தி.மு.க. என்ற இயக்கத்தை எத்தனையோ சரிவுகளில் இருந்து தூக்கி நிறுத்தியவர் கலைஞர். பொதுவாழ்வில் அவர் கையாண்ட வித்தைகளில், பல எதிரிகள் வீழ்ந்தனர். சில எதிரிகள் வாழ்ந்தனர். ஆனாலும், கலைஞர் என்ற அரசியல்வாதியை யாருமே வீழ்த்த முடியவில்லை. பொதுவாழ்விலிருந்து அவரை நீக்கவும் முடியவில்லை.

Selvi-karuna-22தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக பொதுவாழ்வில் நிலைத்து நிற்கும் அரசியல்வாதியான கலைஞர், குடும்ப வாழ்க்கையில் நிலை குலைந்து போயிருக்கிறார். பொதுவாழ்வில் அவரது கண்ணசைவில் எல்லோரும் கட்டுண்டு கிடந்தார்கள். குடும்ப வாழ்வில் அவரது எந்த அசைவுக்கும் குடும்பத்தினர் கட்டுப்படவில்லை.

1993ல் வைகோ வெளியேற்றப்பட்ட பிறகு, கட்சிக்குள் நடக்கும் அத்தனை களேபரங்களுக்கும் காரணம் குடும்பம்தான் என்று அறியாதவர் அல்ல கலைஞர். குடும்பம் அதிகார மையங்களாக மாறுவதை தடுக்காமால் விட்டதன் விளைவு, இன்று டெல்லி திகார் சிறைவரை சென்றுவிட்டார் கனிமொழி. அந்த மகள் மீது அவர் வைத்திருக்கும் பாசம் நாளுக்கு நாள் அதிகரிக்க, குடும்பத்தின் இன்னொரு பூகம்பத்தை உருவாக்கி இருக்கிறது.

”சிறையில் 135 நாட்களுக்கு மேல் இருந்துவிட்டு, வரும் நவம்பர் 3ம் தேதியில் கனிமொழி வெளியே வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் அவரது மனைவி ராசாத்தியும் இருக்கின்றனர். இந்த வேளையில், கோபாலபுரத்தில் தனது மூத்த மகள் செல்வி ஆடி ரூத்ரதாண்டவத்தால், அதிர்ச்சியில் சிலையாக நின்றார் கலைஞர்” என்று கட்சியின் உயர் பொறுப்பில் இருப்பவர் சொல்லக்கேட்டு, அதை விசாரித்தால், அது வெறும் ரூத்ரதாண்டவம் மட்டுமல்ல, தி.மு.க.வின் எதிர்காலமே அதில் அடங்கி இருக்கிறது என்பதுதான் உண்மை.

அக்டோபர் 20ம் தேதி மாலை டெல்லிக்கு கிளம்பினார் கருணாநிதி. அதற்கு முன்பாகத்தான், கோபாலபுரத்தில் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. சி.ஐ.டி. காலனியிலிருந்து மாலை கோபாலபுரத்துக்கு வந்திருக்கிறார் கலைஞர். குடும்பத்தினரைத்தவிர வேறு யாரும் இல்லை அங்கே. தயாளும்மாள், ஸ்டாலின், செல்வி ஆகிய மூவரும் இருக்க, மெளனமாக இருந்த கலைஞரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தாராம் செல்வி.

kani_630994d“என்னப்பா… நாங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா. ஜெயில்ல இருந்து கனி சென்னைக்கு வந்தா ஏர்போர்ட்டுக்கு போய் கட்சி சீனியருங்க எல்லாம் வரவேற்கனும்னு சொன்னீங்களா” என்று செல்வி கேட்க, வழக்கம் போல் மெளன சாமியார் போல் காட்சி தந்திருக்கிறார் கலைஞர்.

“அவளை எப்ப கட்சிக்குள் கொண்டு வந்தீங்களோ, அன்னிக்கியே கட்சி நாசமா போச்சு. இன்னிக்கி கட்சி இந்த கதிக்கு ஆளானது யாராலன்னு நெனைச்சிப் பாத்தீங்களாப்பா. அதை நெனைச்சிப் பாத்தீங்கன்னா இப்படி இருக்கமாட்டீங்கப்பா நீங்க. அவளை ஏர்போர்ட்டுக்கு போய் வரவேற்கணும்ன்னு சொல்றீங்களே. அவ என்ன கட்சிக்கு தியாகம் செஞ்சிட்டு போய் ஜெயில்ல இருக்காளா. அவளுக்கு கட்சியில அந்தஸ்து கொடுக்கணும்னு ஏம்பா இப்படி துடிக்கறீங்க…

“ஏர்போர்ட்டுக்கு வரணுமாம். மறுநாளே மகளிர் அணியோட பொதுக்கூட்டம் நடத்துவீங்களாம். அதுக்கு அவளையே தலைமை தாங்கச் சொல்வீங்களாம். அடுத்த நாளே, மாவட்டச் செயலாளர் எல்லாம் அவ வீட்டுக்கு போய் பார்க்கணுமாம். உடனே, அவளை கட்சி ஆபிசுக்கு கூட்டிட்டு போய், ஏதாவது பொறுப்பு கொடுக்கணும்னு பேசி இருக்கறீங்களே. இதெல்லாம் செஞ்சா, கட்சிக்காரனுங்க என்ன நினைப்பானுங்க. சொல்லுங்கப்பா..

“ஒன்னே ஒன்னுப்பா. நீங்க என்ன செய்வீங்களோ… எது செய்வீங்களோ. அவ வரட்டும். அவ கேசுக்காக எத்தனை கோடி வேணாலும் செலவு செய்யுங்க. அதுக்காக, எங்க பங்குக்கும் நாங்க ஏதாவது செஞ்சி தொலைக்கறோம். ஜெயில்ல இருந்தப்போ அவளை கட்சியை விட்டு நீக்க முடியாதுன்னு சொன்னீங்க. சரி. இப்ப வெளியில வந்ததுமே, கட்சியில இருந்து தூக்கிடுங்க. அதுதான் இந்த குடும்பத்துக்கும், கட்சிக்கும் நல்லது. ஆனா, அவளுக்கு கட்சியில அந்தஸ்து கொடுக்கனும் முக்கியத்துவம் கொடுக்கணும்ன்னு நினைச்சி, ஏதாவது செஞ்சீங்க, நாங்க சும்மா இருக்க மாட்டோம்” என்று வெடி வெடியென வெடித்து கிளம்பிய செல்வி, இருபத்தைந்து நிமிடங்களுக்கு மேல் கொதித்துவிட்டு நின்றார்.

இத்தனை நடக்கும் போது, மெளனமாக இருந்த கலைஞர், அடுத்து சீறிப் பாய்ந்தாரா என்றால், அதுதான் இல்லை. சிலை போலவே, சக்கர நாற்காலியிலேயே அமர்ந்துக் கொண்டிருந்தாராம். மோட்டு வளையை பார்ப்பதும் மோவாயை தேய்த்துக் கொள்வதுமாகவே இருந்திருக்கிறார்.

DMK_Leaders_Ten7811கோபாலபுரத்தில் இருந்துக் கொண்டு, தனது கருத்துக்களை அவர் எதைச் சொன்னாலும் அதுவும் அந்த நேரத்தில் எடுபடாது என்று உணர்ந்த கலைஞர், மெல்ல அறிவாலயம் சென்று, அன்று இரவு சி.ஐ.டி. காலனிக்கு சென்றிவிட்டாராம். அங்கிருந்தபடியே, கோபாலபுரத்தில் நடந்த ரூத்ரதாண்டவத்தின் பின்னணி என்ன என்று விசாரித்திருக்கிறார்.

இரு தினங்களுக்கு முன்பாக, போட் கிளப்பில் கோபாலபுரத்து குடும்பங்கள் ஒன்றாக அமர்ந்து விவாதம் செய்திருப்பது கலைஞருக்கு தெரிந்துவிட்டது. அங்கே எடுக்கப்பட்ட முடிவுகளின் படி செல்வி களத்தில் இறங்கி இருப்பதும் உணர்ந்துக் கொண்டார். இந்த விஷயத்தை இப்படியே ஆறப்போட்டுவிட்டு, டெல்லி கிளம்பி இருக்கிறார்.

கோபாலபுரத்தில் நடந்த விஷயங்களை, கலைஞரின் பாதுகாவலர் மற்றும் உதவியாளர் நித்யா மூலமாக கேள்விப்பட்ட ராசாத்தி கொதித்து எழுந்துவிட்டார். டெல்லி சென்றதுமே, கனிமொழிக்காக கலைஞரிடம் ஒரே ஒரு நிபந்தனையை விதித்திருக்கிறார் ராசாத்தி. ‘இனி அரசியலில் இருந்து கனிமொழியை விலகச்சொன்னால், பல பேர் அரசியலை விட்டு விலக வேண்டியிருக்கும்” என்று ராசாத்தியும் பூடகமாக பேச, தத்தளித்திருக்கிறார் கருணாநிதி.

அதன்பிறகு, டெல்லியில் நடந்த எந்த சந்திப்பிலும் தயாநிதி மாறனை காணவேயில்லை. முற்றிலும், தயாநிதியை அழைக்கவே கூடாது என்பதுதான் ராசாத்தி போட்ட முக்கிய நிபந்தனையாம். மேலும், சோனியாவை சந்திக்கச் சென்ற போது, கலைஞரின் காரில் ஏற முற்பட்ட தயாநிதியை டி.ஆர்.பாலு நைசாக பேசி, இறக்கியிருக்கிறார்.

Kanimozhi-with-father-karunanidhiசோனியாவுடனான சந்திப்பில், கலைஞர் நலம் விசாரிக்கு முன்பே, “எல்லாரும் எங்களை கைவிடறாங்கம்மா. நீங்கத்தான் எப்படியாவது எங்களை காப்பத்தணும்’னு சொல்லி ராசாத்தி வைத்த ஒப்பாரி, சோனியாவை மிரள வைத்திருக்கிறது.

சோனியா சந்திப்பு முடிந்தத அன்றே, கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக கோர்ட் அறிவித்துவிட்டது. 24ம் தேதியிலேயே கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை பொய்த்துப்போனத்தில் ராசாத்தி இன்னும் அதிக வேதனையில் மூழ்கிவிட்டார். இந்த நேரத்தில் சென்னைக்கு கிளம்பினால், டெல்லியில் பூகம்பம் வெடிக்கும் என்று நினைத்து, மேலும் ஒரு நாள் தங்கிவிட்டு, சென்னை திரும்பினார் கலைஞர்.

எது எப்படியோ, வரும் நவம்பர் 3ம் தேதி கனிமொழி வெளியே வருவதற்கான அறிகுறிகள், தெளிவாக தெரியும் நிலையில், கலைஞர் சில முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கிறார்.

அதற்கு முன்பாக, கோபாலபுரத்தில் விதிக்கப்பட்ட ஒரே நிபந்தனையை ஏற்பாரா அதற்கு பதில் ராசாத்தி போட்ட ஒரே நிபந்தனையை ஏற்பாரா என்பது அவர் எடுக்க வேண்டிய முடிவு.

கோபாலபுரத்தில் “இனி அரசியலில் கனி கூடாது” என்பதுதான் ஒரே நிபந்தனை.

”அரசியலில் கனி நீடிக்க வேண்டும். இல்லையென்றால்…. ”என்று ராசாத்தி போட்ட நிபந்தனை.

இதில் ராசாத்திக்கு ‘அது நடக்காது. நீ கேட்டது நடக்கும்’ உறுதி தந்திருகிறாராம்.

ஆக, தி.மு.க. தொண்டன் அடுத்த சரிவுக்கு… மன்னிக்கவும், அடுத்த சரித்திரத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறான்.

நன்றி: இந்திரன், தமிழக அரசியல்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24311250-kani-bail-no.jpg?w=640&h=700



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_11_2011_001_040-kani-no.jpg?w=640&h=62704_11_2011_009_011-kani-bail-ramjethmalani.jpg?w=640&h=241

04_11_2011_012_008-kani-mk-family.jpg?w=640&h=372



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_11_2011_010_026-2g-pmo-stops.jpg?w=640&h=395



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_11_2011_010_025-kani-cbi-trick.jpg?w=516&h=923



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

11_11_2011_012_022-kanimozi-special-puja.jpg?w=640&h=359



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

12_11_2011_012_015-mk-selvi-cheats.jpg?w=640&h=227



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_11_2011_006_037-meenakshi-amman-in-airport-alagiri.jpg?w=121&h=150



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஜாமீனுக்காக கனிமோழி அவசரப்படுவது ஏன்? அதிர்ச்சி தகவல்

ட என்னங்க... இந்த நாட்டில் என்ன நடக்குதுன்னே புரியலை...'' என்று சலித்துக் கொண்டவர் வேறு யாரும் அல்ல, ஆ.ராசாதான். டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் 2ஜி வழக்கின் விசாரணையை திகார் ஜெயில் வளாகத்துக்கு மாற்றும் உத்தரவு வந்த நேரத்தில்தான், டென்ஷனாகி இப்படிச் சொன்னார்.   

பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் சில வசதிக்குறைவு மற்றும் பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதால், நீதிமன்றத்தை மாற்றுவதாக கடந்த 22-ம் தேதி ஓ.பி.சைனி உத்தரவு போட்டார்.  குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா உட்பட 14 பேரும் தங்கள் அதிருப்தியை உடனடியாகத் தெரிவித்தார்கள்.

இப்படி ஒரு அதிரடி மாற்றம் ஏற்படுவதற்குக் காரணம் சுக்ராம்தான். ஆம், கடந்த 19-ம் தேதி முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமை ஒருவர் தாக்கினார். இதைப் பார்த்த  உளவுத்துறை அவசர அவசரமாக காரியத்தில் இறங்கி 2ஜி சிறப்பு நீதிமன்றத்தை மாற்ற வேண்டிய அவசியத்தை டெல்லி உயர் நீதிமன்றத்துக்கு சொன்னது. ஆனால், சிறப்பு நீதிமன்றத்தின் இடம் மாற்றத்தை, குற்றம் சாட்டப்பட்ட 14 பேரின் வழக்கறிஞர்களும் ஏற்றுக்கொள்ளாமல், மறுநாள் உயர் நீதிமன்ற பெஞ்சில் புகார் செய்தனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எ.கே.சிக்ரி அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, சிறப்பு நீதிமன்றத்திற்கு தகுந்த இடத்தைத் தேடுவதற்கு ஒரு குழுவை அமைத்தார். டெல்லி உயர் நீதிமன்ற பதிவாளர் - ஜெனரல், பாட்டியாலா கோர்ட் கூடுதல் தலைமை பெருநகர் மாஜிஸ்திரேட், 2ஜி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் இந்தக் குழுவில் இடம் பெற்றனர். இதன்படி, பாட்டியாலா நீதிமன்ற வளாகத்திலேயே விசாலமாக உள்ள அரங்கு அல்லது அருகேயுள்ள விஞ்ஞான் பவன் மற்றும் இந்திய வர்த்தகச் சுற்றுலா நடக்கும் பிரகதி மைதான் ஆகிய இடங்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் ஆலோசனை இந்த குழுவுக்குச் சொல்லப்பட்டுள்ளது.

அரசு தரப்பும், குற்றம் சாட்டபட்டவர்கள் தரப்பும் இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொண்டதற்குக் காரணங்கள் உண்டு.

2ஜி வழக்கில் ஆளும் கட்சி சம்பந்தப்பட்டவர்கள் விவகாரம் நெருங்கி வருவதாலும் சுப்பிரமணிய சுவாமி போன்றவர்கள் அவ்வப்போது வந்து தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பதும் ஆளும் கட்சியின் கண்ணை உறுத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பாட்டியாலா கோர்ட்தான் வசதியாக உள்ளது.  அனைவருமே உறவினர்கள் தரும் உணவையே சாப்பிடுகிறார்கள். மேலும் இவர்கள் நீதிமன்ற அரங்கிற்குள்ளேயே உட்கார்ந்து அரட்டை அடிப்பதும்,  செல்போன் மூலம் இன்டர்நெட் பார்ப்பது, கம்பெனி சம்பந்தப்பட்ட ஃபைல்களைப் பார்ப்பது என்று பலரும் பிஸியாகவே இருக்கிறார்கள். ஆ.ராசாவை சந்திக்க தினமும் ஒரு டஜன் கட்சிக்காரர்களும் நெருங்கியவர்களும் வருகிறார்கள். இது எல்லாமே திகார் ஜெயில் வளாகத்தில் நடக்காது.

இவர்கள் சுதந்திரம் இந்த கோர்ட்டில் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், கடந்த 23-ம் தேதி உச்ச நீதிமன்றம் யுனிடெக், ஸ்வான் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஐந்து பேர் களையும் ஜாமீனில் விடுதலை செய்தபோது நடந் ததை வைத்தே அறிந்துகொள்ளலாம். நீதிபதி சைனி இருக்கையில் அமர்ந்திருந்த நிலையிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவரது உறவினர் களும் பெரிய பெரிய சாக்லேட்களை மாற்றி மாற்றிக் கொடுத்தார்கள், ஒருவரை ஒருவர் கட்டி அணைத்துக்கொண்டு ஆர்ப்பரித்தனர். தாங்க முடியாத அளவுக்குப் போனதால், நீதிபதி கோபம் அடைந்து,  வழக்கறிஞர்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் தவிர அனைவரையும் வெளியேறும்படி உத்தரவு போட்டார். இதில் பத்திரிகையாளர்களும் வெளியேற்றப்பட்டனர். இதுவெல்லாம் திகார் ஜெயிலுக்குள் என்றால் நடக்காது.

டெல்லி திகார் ஜெயில் வளாக நீதிமன்றம், சீக்கிய தீவிரவாதிகளின் மிரட்டலுக்கு உள்ளான இந்திரா காந்தி கொலை வழக்கிற் காகவே தொடங்கப்பட்டது. இப்போது டெல்லி குண்டு வெடிப்பு வழக்கு கள் நடக்கிறது. அதனால் திகார் சிறை வளாகத்தில் விசாரணைகள் நடந்தால் சிறை பாதுகாப்பைக் கருதி பார்வையாளர்கள் மட்டுமல்ல பத்திரிகையாளர்களும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வழக்கு வேகவேகமாக நடந்து விரைவில் தண்டனை அறிவித்து விடலாம். உறவினர்கள், நண்பர்கள், கட்சிக்காரர்கள் என்று யாரையும் பார்க்க முடியாமல், 'திகார் டு திகார்’ என்றே காலம் கழியலாம்.  இப்போது அவர்கள் அனைவரும்  டெல்லி நகருக்குள் 16 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து ரிலாக்ஸ் ஆகின்றனர். இது தடைபடும். அதனால்தான் அனை வருடைய வழக்கறிஞர்களும் தங்கள் வசதிக்குறைவைச் சொல்லி, வெற்றியும் பெற்றுவிட்டனர்.

மும்பையிலிருந்து வந்திருந்த பால்வா மற்றும் யுனிடெக் சார்பு வழக்கறிஞர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு,  ''சிறைச் சாலைக்குள் நீதிமன்றத்தை நடத்த வேண்டும் என்று சொல்வதற்கு இது ஒன்றும் தீவிரவாதிகள் அல்லது வெடி குண்டு சம்பந்தப்பட்ட வழக்கு அல்ல, ஊழல் வழக்குதான்'' ஆவேசமானார்கள்.  மற்ற வழக்கறிஞர்களும், ''இந்த கோர்ட்டில் அசௌகரியங்கள் இருப்பது உண்மைதான். அதற்காக நகரத்தின் அடுத்த முனைக்குக் கொண்டு போவது சரியல்ல. போக்குவரத்து நெரிசலில் ஒரு தடவை போய் வரவே மூன்று மணி நேரத்திற்கு மேலாகும். வழக்கறிஞர்களாகிய நாங்கள் இந்த ஒரு வழக்கை மட்டுமின்றி, மற்ற வழக்குகளிலும் ஆஜராகவேண்டும். அதனால் பாட்டியாலா கோர்ட்தான் எங்களுக்கு வசதி. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கு அருகே இருந்தால்தான் எங்களுக்கு வந்து போக முடியும்'' என்று காரணங்களை அடுக்கினார்கள். அதை டெல்லி உயர் நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

புதிய நீதிமன்றம் அமைக்கப்படும் பட்சத்தில் அதில் மீடியாக்களுக்கு கண்டிப்பாக இடம் இருக்காது என்பதை மட்டும் இப்போதே சொல்கிறார்கள். அப்போதுதான் ஆளும் கட்சி சம்பந்தப்பட்ட விஷயத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் சொன் னாலும், மீடியாவில் வராது என்கிறார்கள். ஏதோ ஒரு மர்மத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது ஸ்பெக்ட்ரம்!

 

கனிமொழி  அவசரப்படுத்துவது ஏன்?

குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஹெச்.எல்.தத்தா ஆகியோர் அடங்கிய

பெஞ்ச் ஜாமீன் வழங்கியது. இந்த மனுக்களை இரண்டு நபர் பெஞ்ச் விசாரித்தாலும் நீதிபதி சிங்வி தீர்ப்பை எழுதவில்லை. நீதிபதி தத்தாதான் தீர்ப்பை எழுதினார். கருத்து மாறுபாடு இருக்கும் பட்சத்தில்தான் பெஞ்ச் நீதிபதிகள் தனித்தனியாக தீர்ப்பு எழுது வது வழக்கம். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பில் நீதிபதி தத்தா கூறுகையில், ''ஒருவர் மீதான விசாரணை முழுமை பெறாதவரை அந்த நபர்களை பழி பாவம் அற்றவர்களாகவே கருதவேண்டும். விசாரணைக் குற்றவாளிகளை கால வரம்பின்றி சிறையில் வைத்திருப்பதும் அரசியல் சாசனத்தின் 21-வது பிரிவில் கொடுக்கப்பட்ட உரிமையை மறுப்பதாகும். வழக்கின் சாட்சியங்களை கலைப்பார்கள் என்று சி.பி.ஐ. சொல்லுவதற்கு பொருத்தமான காரணங்களை முன்வைக்கவில்லை. மிகப்பெரிய அளவில் பொருளாதாரக் குற்றங்கள் நடந்து இருக்கலாம். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆபத்து தான். அதே சமயத்தில் வழக்கின் புலனாய்வு முடிந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஜாமீனில் செல்ல தடை விதிக்க வேண்டியதில்லை. இவர்கள் ஜாமீனில் இருக்கும்போது வழக்கை சீர்குலைக்கும் முயற்சியாக சாட்சிகளுக்கு நேர்முகமாகவோ மறைமுகமாகவோ மிரட்டல்கள் விட்டால் சி.பி.ஐ. இவர்களது ஜாமீன்களை ரத்து செய்யவும் சி.பி.ஐ. கோரலாம்'' என்றார்.

இந்த தீர்ப்பு கொடுத்த நம்பிக்கை காரணமாக டிசம்பர் 1-ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த விசாரணையை முன்கூட்டியே நடத்த கனிமொழி, சரத்குமார் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் மட்டும் இவர்கள் துரிதப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி டிசம்பர் 1-ம் தேதி விசாரணையைத் தொடங்கி, தீர்ப்பு கொடுக்க ஒரு வாரத் திற்கு மேல் ஆகி, அதன்பிறகு தள்ளுபடி செய்யப்பட்டால், உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற தாமதமாகிவிடும். டிசம்பர் இறுதியில் குளிரின் தாக்கம் அதிகரிக்கும் என்பதுடன் கிறிஸ்துமஸ் விடுமுறை யும் தொடங்கிவிடும். அதனால்தான் அதற்குள் ஜாமீன் பெறவே இப்படி திடீர் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2011_014_003.jpg 2g story



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2143984.JPG kani jamin



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21012828.JPG kani29_11_2011_004_063.jpg kani bail



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_11_2011_001_010.jpg kani 192



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21559453.JPG kani party post



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21233187.JPG azagri office



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_12_2011_012_016.jpg vaithika sumariyadai marriage



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

3ஜி ஊழலில் கருணாநிதி மகளா ?

தற்போது வெளி வர இருப்பது 2ஜி அல்ல.   3ஜி ஊழல். இந்த 3ஜி ஊழலில் சம்பந்தப் பட்டிருப்பது, மிகச் சிறந்த நெடுந்தொடர் நாயகியும், கருணாநிதியின் மற்றொரு மகளுமான செல்வி.   இந்தச் செல்வியைப் பற்றி சவுக்கு வாசகர்களுக்கு ஓரளவுக்கு தெரியும் என்றாலும், இந்தச் செல்விதான் கருணாநிதி குடும்பத்திலேயே மோசமான நபர்.   ஒரு நபர், கருணாநிதிக்கும் நண்பராக, மாறன் சகோதரர்களுக்கும் நண்பராக எப்படி இருக்க முடியும் ?  ஆனால் செல்வியால் முடியும்.    மாறன் சகோதரர்களுக்காக செல்வி அழுது ஆர்ப்பாட்டம் செய்வதை நேரில் பார்த்திருந்தால், பல நெடுந்தொடர்களின் நடித்திருக்கும் தேவயானி கூட, ‘இவரின் நடிப்புக்கு முன், நாம் வேஸ்ட்’ என்று நடிப்பதையே விட்டிருப்பார்.  அப்படிப்பட்ட ஒரு கைதேர்ந்த நடிகை தான் செல்வி.

 selvi334

இந்த செல்வி எப்படி 3ஜி ஊழலில் சிக்குகிறார் ?

 

3ஜி ஏலம் நடந்து முடிந்து இன்று ஐடியா, ஏர்டெல், வோடபோன் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் 3ஜி சேவைகளை வழங்குவதாக அறிவித்து வருகின்றன.  3ஜி என்றால் என்ன ?  3ஜி என்றால் வீடியோ அழைப்புகள், வீடியோ ஸ்ட்ரீமிங், லைவ் டிவி போன்ற, அதி நவீன வசதிகளை வழங்குவதே 3ஜி சேவை.  ஆனால், இப்போது எந்த நிறுவனமாவது, வீடியோ அழைப்புகளைத் தருகின்றதா ?  பிறகு எதற்காக இந்த 3ஜி.  இன்டெர்நெட், மெயில் போன்ற வசதிகளை நாம் 2ஜியிலேயே பார்க்க முடியுமே… பிறகு எதற்கு 3ஜி…. ?

 

உண்மையான 3ஜி சேவைகள் வழங்கப் படாததற்கு காரணம், அதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமையே..

 

2008ல் ஆ.ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது, பிஎஸ்என்எல் நிறுவனம், 2ஜி மற்றும் 3ஜிக்கான உள் கட்டமைப்பு வசதிகளைச் (டவர்கள் நிறுவுதல், பராமரித்தல், டீசல் ஜெனரேட்டர்களை நிறுவுதல், குளிர்சாதன வசதிகளைச் செய்தல்) செய்வதற்கான டெண்டர் அழைப்பு விடுக்கிறது.

  

இந்த நேரத்தில்தான், செல்வி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கனிமொழி உள்ளிட்ட அனைவரும் நிறைய சம்பாதித்து விட்டார்கள் என்றும், தான் பெங்களுரில் உள்ளதால், தனக்கு எதுவுமே கிடைக்கவில்லை என்றும் புலம்பியதாகத் தெரிகிறது. இதையடுத்து கருணாநிதி, ராசாவிடம் இது குறித்து பேசியதாகவும் தெரிகிறது.

 

செல்விக்கு பணம் சம்பாதித்துக் கொடுப்பதற்காகவே இரண்டு நிறுவனங்கள் களத்தில் குதிக்கிறன.   ஒன்று, பி.ஆர்.சாப்ட் டெக் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்.  இதன் பதிவு செய்யப் பட்ட அலுவலகம் சென்னை, அண்ணா நகர் கிழக்கு, ஓ ப்ளாக், கணபதி காலனி, 30வது தெரு, எண் 6.   இந்தக் கம்பெனியின் மொத்த முதலீடு வெறும் 10 லட்ச ரூபாய் தான்.  சிம்பிளாகச் சொன்னால் இது ஒரு லெட்டர் பேட் கம்பேனி.  இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எம்.கே.பாஸ்கர் மற்றும் வி.ராம்குமார் ஆகியோர்.  பாஸ்கருக்கு 9000 ஷேர்களும், ராம் குமாருக்கு 1000 ஷேர்களும் இருக்கின்றன.    இந்த நிறுவனம் தொடங்கப் படுகையில் தனது பிரதான தொழிலாக மென்பொருட்களை தயாரிப்பது, இணையதள வடிவமைப்பு என குறிப்பிட்டுள்ளது.

 

MOA_Page_1

MOA_Page_5

 

இதே போன்று மற்றொரு டுபாக்கூர் நிறுவனம் தேசி ஹோல்டிங்ஸ் மற்றும் கன்சல்டன்ட்ஸ். இந்த நிறுவனம் 2005ல் பங்குச் சந்தையில் தொழில் செய்வதற்காக தொடங்கப் படுகிறது.   இந்தக் கம்பெனியின் முதலீடும் வெறும் ஒரு லட்ச ரூபாய் தான்.   இந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் எம்ஆர்டி.ராமானுஜம் மற்றும் எம்.வி.தாமோதரன் ஆகியோர்.  ராமானுஜம் 9900 ஷேர்களும், தாமோதரன் 100 ஷேர்களும் வைத்துள்ளனர்.  இந்நிறுவனம் தொடங்கப் படுகையில் தனது பிரதான தொழிலாக “பங்குச் சந்தையில் முதலீடு செய்தல், முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை சொல்லுதல், கடன் ஏற்பாடு செய்தல் போன்றவற்றை குறிப்பிட்டுள்ளது.

 MOA_Page_1

MOA_Page_5

1 மே 2008 அன்று பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெண்டர் வெளியிடப் படுகிறது.  அன்று அரசு விடுமுறை நாள் (உழைப்பாளர் தினம்) என்பது குறிப்பிடத் தக்கது.

 

டெண்டர்கள் மொத்தம் நான்கு மண்டலங்களாக பிரிக்கப் படுகின்றன. இந்த டெண்டர்களில் மேற்கு மண்டலத்துக்கு ஸ்பான்கோ டெலி சிஸ்டம்ஸ் என்ற நிறுவனம் ஆர்டரை பெறுகிறது.   வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு ஆக்மி டெலி பவர் என்ற நிறுவனம் ஆர்டரைப் பெறுகிறது.  தென் மண்டலத்துக்கு டிவிஎஸ்-ஐசிஎஸ் என்ற நிறுவனம் ஆர்டரைப் பெறுகிறது.       இந்த ஆர்டரின் படி, நான்கு மண்டலங்களிலும், 3 ஆண்டுகளுக்குள், 60 ஆயிரம் மொபைல் டவர்களை அமைத்து 3ஜி இணைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.  இது நடப்பது 2008ல்.

 

இதன் நடுவே நெடுந்தொடர் நாயகி செல்வியின் வேண்டுகோளுக்கிணங்க ராசா தனது காய் நகர்த்தலை தொடங்குகிறார்.

 

மேலே குறிப்பிட்ட இரண்டு டுபாக்கூர் நிறுவனங்களையும் களத்தில் இறக்க முடிவு செய்கிறார்.   ஆனால் இந்த இரண்டு நிறுவனங்களும் தொலைத் தொடர்புத் தொழிலில் சம்பந்தப் படாத நிறுவனங்களாயிற்றே….  அவை எப்படி தொலைத் தொடர்புத் தொழிலில் இறங்க முடியும் ?   உடனே ராசா, அந்த நிறுவனங்களை அழைத்து, தொலைத் தொடர்புத் தொழில் இருப்பது போல, உங்கள் நிறுவனங்களை மாற்றுங்கள் என்று உத்தரவிடுகிறார்.

 

மே மாதம் டெண்டர் வெளியிடப் படும் என்பது தெரிந்து முதலில் களம் இறங்குவது தேசி ஹோல்டிங்ஸ் நிறுவனம்.  இந்நிறுவனம், 7 ஏப்ரல் 2008 அன்று தனது நிறுவனத்தின் பெயரை தேசி ஹோல்டிங்ஸ் என்பதை மாற்றி “ஜெனெக்ஸ்ட் டெலிகாம் பிரைவட் லிமிட்டெட்” என்று மாற்றுகிறது.   அந்த நிறுவனத்தின் பிரதான தொழில்கள் என, தொலைத்தொடர்புச் சாதனங்கள் தயாரிப்பது, விற்பனை செய்வது, தொலைத்தொடர்புத் துறை தொடர்பான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தொலைத்தொடர்புத் தொழிலில் ஈடுபடுவது என மாற்றப் படுகிறது. (வெறும் 10 லட்ச ரூபாயில்)

 Copy_of_board_resoultions

 

ஒரே வாரத்தில் மீண்டும் இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப் படுகிறது.  ஜெனெக்ஸ்ட் டெலிகாம் பிரைவேட் லிமிடெட் என்ற பெயர், “ஐஸ் டெலிகாம்” என மாற்றப் படுகிறது.   இந்த மாற்றம் நிகழ்வது 10 ஜுன் 2008ல்.

 Copy_of_resolutions_board_meeting.-3

மற்றொரு டுபாக்கூர் நிறுவனமான பிஆர் டெக் சாப்ட்வேர் நிறுவனமும் தனது பெயரை மாற்றுகிறது.  27 மே 2009 அன்று இந்நிறுவனத்தின் பெயர் “ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்று மாற்றம் செய்யப் பட்டு, இந்த விபரம் கம்பெனிப் பதிவாளரிடம் அனுப்பப் படுகிறது. இந்த நிறுவனம் ஈடுபடும் தொழில்கள் என 3ஜி தொழில் நுட்பம் மற்றும் தொலைத் தொடர்பு தொடர்பான வேலைகள் என திருத்தம் செய்யப் படுகிறது.

 Copy_of_board_of_directors_mintiues

ஏற்கனவே, ஐஸ் டெலிகாம் என்ற பெயரில் ஒரு நிறுவனம், தொலைத் தொடர்புத் துறையிலேயே இருப்பதால், எப்படி இன்னொரு நிறுவனம் ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் என்ற பெயரில் தொடங்க முடியும் என கம்பெனி பதிவாளர் ஒரு கடிதம் அனுப்புகிறார்.  அந்தக் கடிதத்துக்கு பதில் அனுப்பிய ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் தாமோதரன், “பி.ஆர்.சாப்ட் டெக் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப் படுவதாக அறிகிறோம்.   அந்த நிறுவனம் எங்கள் குழுமத்தைச் சேர்ந்தது. அதனால் பெயர் மாற்றம் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை” என்று தெரிவிக்கிறார்.

 Change_of_company_name_intimation_letters

இந்த நேரத்தில் பிஎஸ்என்எல்லின் டெண்டர்கள் வழங்கப் பட்டு முடிந்து விடுகின்றன.  உடனே ராசா, இந்த இரண்டு டுபாக்கூர் ஐஸ் நிறுவனங்களையும் அழைத்து, தென் மண்டலத்துக்கு ஆர்டரைப் பெற்ற டிவிஎஸ் நிறுவனத்தோடு பங்குதாரராக சேரும்படியும், டிவிஎஸ் நிறுவனத்திடம் தான் பேசுவதாகவும் தெரிவிக்கிறார்.   தொலைத் தொடர்புத் துறை அமைச்சரை பகைத்துக் கொண்டு தொழில் செய்ய முடியாது என்பதை நன்கு உணர்ந்த டிவிஎஸ், இந்த இரண்டு நிறுவனங்களையும் இணைத்துக் கொண்டு, டிவிஎஸ் – ஐசிஎஸ் என்று ஒப்பந்தம் போடுகிறது.   இந்த ஒப்பந்தத்தின் படி, ஐஸ் நிறுவனத்துக்கு 50 சதவிகிதப் பங்கும், டிவிஎஸ் நிறுவனத்துக்கு 50 சதவிகிதப் பங்கும் என்று ஒப்பந்தம் போடப் படுகிறது.   டிவிஎஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம், ஐஸ் டெலிகாம் போன்ற டுபாக்கூர் நிறுவனத்தோடு பாதிக்குப் பாதி என்று பங்கு பிரித்தது, ஆ.ராசாவின் மிரட்டல் இல்லாமல் நடந்திருக்கும் என்பதை நம்ப முடியவில்லை.

 Slide2

Slide3

Slide4

Slide5

Slide6

ஆனாலும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்ட டிவிஎஸ் நிறுவனம், இந்த ஆர்டரை செயல்படுத்த முதலீடு செய்வதற்கு முன்வரவில்லை.  டிவிஎஸ் நிறுவனத்துக்கும், ஆர்டர் கிடைத்தவுடன், அதை சர்வதேசச் சந்தையில் ஏதாவது ஒரு பெரிய நிறுவனத்துக்கு அதை விற்று விட்டு 10 சதவிகித கமிஷனை எடுத்துக் கொள்ளலாம் என்றே முயல்கிறது.

 

டிவிஎஸ்  - ஐசிஎஸ் நிறுவனத்தின் இந்த டெண்டரை சர்வதேசச் சந்தையில் விற்பதற்கு முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. இந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் மூவர். ஐஸ் டெலிகாம் நிறுவனத்தின் ஷ்யாம் சுந்தர்.   ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் பிவி.சஞ்சீவ் குமார் மற்றும் டிவிஎஸ்  - ஐசிஎஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சாம்சன் மேனுவேல்.  இவர்கள் மூவரும் சர்வதேசச் சந்தையில் இந்த ஒப்பந்தத்தை விற்பதற்கு முயல்கிறார்கள்.  ஆனால் 2009 ஜுன் வாக்கில், 2ஜி விவகாரத்தில் நடைபெற்றிருந்த ஊழல் ஊடகங்களில் பெரும் அளவில் கசியத் தொடங்கி விட்டன.  இதனால், வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் முதலீடு செய்யத் தயாராக இல்லை.

 

இதனால் இந்த மூவர் குழு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை வரவழைப்பதற்காக ஒரு கன்சல்டன்டை நியமிக்கின்றனர். அந்த கன்சல்டன்டின் பெயர் சஞ்சீவ் குமார் திவிவேதி.   அவருக்கு மொத்த முதலீட்டில் 1.5 சதவிகிதம் கமிஷன் என்று பேசப் படுகிறது.

 Mandate

 

இவர் வெளிநாட்டில் முதலீட்டாளர்களைத் தேடும்போது, கலிபோர்னியாவைச் சேர்ந்த செல்வராஷ் என்ற என்ஆர்ஐ இந்த திட்டத்தில் ஆர்வம் காட்டுகிறார்.   இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே இவர் மொரீஷியஸ் நாட்டில் வீனஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை தொடங்குகிறார்.   அக்டோபர் 14 2009 அன்று செல்வராஜோடு நடந்த மீட்டிங்கில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதம் நடந்ததோடு, ஐஸ் டெலிகாம் நிறுவனத்துக்கு அட்வான்ஸாக ஒரு பெரும் தொகை மொரீஷியஸ் நாட்டில் ஒரு வங்கியில் போடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இந்த நிலையில், இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு இருந்த போதே, 21 அக்டோபர் 2009 அன்று 2ஜி ஊழல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்கிறது.  சிபிஐ வழக்கு பதிவு செய்து ரெய்டு நடத்த 11 மாதங்கள் ஆனது என்பது வேறு விஷயம்.  ஆனால் சிபிஐ வழக்கு பதிவு செய்த விவகாரம் தெரிந்த உடனேயே, சம்பந்தப் பட்ட அனைவரும், தலைமறைவானார்கள்.

 

இதில் கன்சல்டன்டாக நியமிக்கப் பட்ட திவிவேதி என்பவர் ஏராளமான பணத்தைக் கொடுத்து, ஏமாந்து தற்போது ரவுடிகளால் மிரட்டப் பட்டு வருவதாக சென்னை கமிஷனரிடத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

 

சரி… இதில் செல்வி எங்கே வருகிறார் ?

 

ஐஸ் டெலிவென்ச்சர்ஸ் நிறுவனத்தின் முகவரி எண் 19/21, ரஞ்சித் ரோடு, கோட்டூர்புரம், சென்னை.  இந்த முகவரியில்தான் பல்வேறு மீட்டிங்குகள் நடந்தது என்றும், இந்த கட்டிடமே கருணாநிதியின் மகள் செல்வியுடையது என்றும் தெரிவிக்கிறார் திவிவேதி.

 

தற்போது இந்த திவிவேதி, பிஎஸ்என்எல் டெண்டரில் தனக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்று நம்பி தான் செலவு செய்த 7 கோடி ரூபாயை பெற்றுத் தர வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.  இந்தப் புகாரில், செல்வி பெயரைச் சொல்லித்தான் ஷ்யாம் என்பவர் தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவிக்கிறார். ஐஸ் டெலிவென்ச்சர்ஸ், ஐஸ் டெலிகாம் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே, செல்வியுடவை என்பது இவருடைய குற்றச் சாட்டு.

 DSC_1631

மாநிலப் போலீசார் விசாரணை நடத்துவதை விட, இதில் சிபிஐ விசாரணை நடத்தினால், கனிமொழியோடு செல்வியும் திஹாரில் இருப்பாரா என்பது தெரிய வரும்.

அண்மைச் செய்தி : இந்தக் கட்டுரை பதிப்பிக்கப் பட்ட பின்னர் வந்த செய்தி.  இந்த ஊழலில் சம்பந்தப் பட்டுள்ள ஷ்யாம் என்ற நபர், 1996ம் ஆண்டில் கோபாலபுரத்தில் கருணாநிதி குடும்பத்தில் வந்து சேர்கிறார். சேர்ந்த முதலே செல்வியோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்.   செல்வியின் மகள் செந்தாமரையின் கணவர் டாக்டர் ஜோதிமணியும், ஷ்யாமும், ஒரிஸ்ஸாவில் பாக்சைட் மற்றும் இரும்புத் தாது எடுக்கும் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.  மேலும், இவர்களோடு சேர்ந்து தொழில் செய்யும் மற்றொருவர், முன்னாள் தலைமைச் செயலாளர் திரிபாதியின் மகன் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பு :  இந்த ஊழலை மற்ற எந்த ஊடகத்துக்கும் முன்பாக, சவுக்கு வாசகர்களுக்காக பிரத்யேகமாக வழங்குவதில் சவுக்கு பெருமகிழ்ச்சி கொள்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

212170.JPG stalin abduction complaint



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_12_2011_012_015.jpg stalin



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_12_2011_005_025.jpg assembly construction court hc



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_12_2011_005_013.jpg alagiri



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_12_2011_001_005.jpg stalin case



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_12_2011_010_012.jpg durai murugan dairy



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_12_2011_006_025.jpg raja lonely



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

07_12_2011_008_004.jpg kani welcome



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22533578.JPG stalin



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 224346.JPG udayanithi



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கருணாநிதி வாழ்த்தினார். ஸ்டாலின் மிரட்டினார். புகார் கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர்.

 
மு.க.ஸ்டாலின் மீது புகார் கிளம்பி இருப்பதுதான் தமிழக அரசியலின் ஹாட் டாபிக். . ஸ்டாலின் மீது புகார் சொன்னவர் அவரது பக்கத்து வீட்டுக்காரரான சேஷாத்ரி குமார். அந்த வழக்கை வைத்துக்கொண்டு பரபரப்பு இல்லாமல் அமைதியாக காய்களை நகர்த்திக்கொண்டு இருக்கிறது சென்னை காவல் துறை!

 'ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள 8-ஏ என்ற எனது வீட்டை, மு.க.ஸ்டாலின் தனது மகளுக்காக அபகரித்துக்கொண்டார்’ என்று, சேஷாத்ரி குமார் என்பவர் கடந்த 29-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு கொடுத்தார். இதுபற்றி  விசாரணை நடத்தியது மத்தியக் குற்றப் பிரிவு போலீஸ்.  மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது கடந்த 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அன்று, ராமநாதபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்டாலின், அன்று இரவே திருச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு நள்ளிரவு 2-30 மணிக்கு வந்தார். விமான நிலையத்திலேயே கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவியது. ஆனால், போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக மேலும் பல ஆதாரங்களைச் சேகரிக்கும் பணியில் தீவிரமாக இருப்பதால், கைது படலம் அன்று அரங்கேறவில்லை.


இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? புகார் கொடுத்து இருந்த சேஷாத்ரி குமாரை, ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

 
''1962-ல் எங்க அப்பா நாராயணசுவாமி ஐயர்தான் சென்னை ஷெரீஃப். அவர், மெட்ராஸ் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சுக்கு மூன்று முறை தொடர்ந்து தலைவராக இருந்தவர். ஒரே நேரத்தில் 20 நிறுவனங்களில் இயக்குநராகவும் இருந்தார். வணிகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பாகப் பல பத்திரிகைகளில் அவரது கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. எம்.எல்.சி.யாகவும் பதவி வகித்து இருக்கிறார். ராஜாஜியின் சுதந்திரா கட்சியில் தீவிரமாகப் பணியாற்றியவர். சி.என்.அண்ணாதுரை, மு. கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் தலைவர்களுடனும் நட்புடன் இருந்தவர் என் அப்பா. அதனால்தான், ஷெரீஃப் பதவியை என் அப்பாவுக்கு வழங்கினார் அண்ணா. இப்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் என் வீடு இருக்கும் தெருவுக்கு 'சித்தரஞ்சன் சாலை’ என்று பெயர் சூட்டியதும் என் அப்பா நாராயணசுவாமி ஐயர்தான். 1973-ல் நடந்த என் கல்யாணத்துக்கு மு.கருணாநிதி வந்து வாழ்த்தினார். அதுக்குப் பிறகு, 90-ல் நான் தொடங்கிய என் நிறுவனத்தையும்  கருணாநிதிதான் திறந்துவைத்தார். இதெல்லாம் அவருக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்.'' என்று தங்களது குடும்பத்துக்கும் கருணாநிதி குடும்பத்துக்கும் உள்ள நெருக்கத்தைச் சொன்னவர், அதற்கு ஆதாரமான புகைப்படங்களையும் கொடுத்தார்!

''என் பங்காகக் கிடைத்த சித்தரஞ்சன் சாலையில் இரண்டரை கிரவுண்ட் வீட்டைத்தான் என்னிடம் இருந்து பறித்துவிட்டார்கள். 2009-ம் ஆண்டில், சீனிவாசன் என்பவரும் ராஜாசங்கரும் என்னைச் சந்தித்து, ஸ்டாலின் என்னைப் பார்க்க விரும்புவதாக கூறினர். நான் ஒரு இன்ஜினியர். அமெரிக்காவில் எம்.எஸ். படித்தவன். நதிகள் இணைப்பு குறித்து ஏராளமாக எழுதியும், கருத்தரங்குகளில் பேசியும் வருகிறேன். ஜனாதிபதியாக இருந்தபோது அப்துல் கலாம் என்னை இரண்டு முறை ராஷ்டிரபதி மாளிகைக்கு அழைத்துப் பேசி இருக்கிறார். 'சரி, நதிகள் இணைப்பு பற்றி ஏதாவது பேசுவதற்குத்தான் ஸ்டாலின் அழைக்கிறார் போல’ என்று நினைத்துத்தான் அவர் வீட்டுக்குப் போனேன். நதிகள் குறித்து சுமார் அரை மணி நேரம் அவரிடம் பேசினேன். 'சாருக்கு நாட்டுப்பற்று ரொம்ப ஜாஸ்தியா இருக்கு!’ என்று கூறினார். அதன் பிறகுதான், என் வீட்டு விஷயத்தை ஆரம்பித்தனர். 'அதை விற்க வேண்டிய அவசியம் இப்போது எனக்கு இல்லை’ என்று கூறினேன். அருகில் நின்றுகொண்டு இருந்த சீனிவாசன், ராஜாசங்கர் இருவரையும் காட்டிப் பேசிய ஸ்டாலின், 'இந்த வீடு விஷயமா அவங்க பேசுவாங்க’ என்று கூறிவிட்டார்.

அதன் பிறகுதான், சீனிவாசனும் ராஜா சங்கரும் என்னைத் தொடர்ந்து மிரட்ட ஆரம்பித்தனர். சுப்பா ரெட்டியும் ஒரு முறை என் வீட்டுக்கு வந்தார். அப்போது, 'அந்த வீட்டுக்கு மதிப்பு எதுவும் கிடையாது. அந்த இடத்துக்கு மட்டும்தான் மதிப்பு இருக்கிறது’ என்று சொன்னார். நான், 'அந்த வீட்டை விற்கவே இல்லை என்று சொல்கிறேன், நீங்கள் எதுக்கு அதற்கான மதிப்பு எல்லாம் போடுகிறீர்கள்’ என்று கேட்டேன். அவரும், 'நீங்கள் வீட்டை விற்க இருப்பதாகச் சொன்னதால்தான் வந்தேன்’ என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார். 2009-ல் இருந்து, ராஜா சங்கரும் சீனிவாசனும்தான் தொடர்ந்து மிரட்டிக்கொண்டே இருந்தனர்.


ஒரு நாள், பத்திரப் பதிவாளரை என் வீட்டுக்கே அழைத்து வந்து, என் மனைவி மற்றும் மகளிடம் இருந்து என் பெயருக்கு 'பவர்’ எழுதி வாங்கினார்கள். அன்று நடந்த மிரட்டலில் என் மனைவியும் மகளும் மிகவும் பயந்துவிட்டனர். வீட்டை அவர்களுக்கே கொடுத்து விடுங்கள் என்றுகூட என்னிடம் சொன்னார்கள். ஆனால், என் அப்பா நாராயணசுவாமி - அம்மா விசா​லாட்சி நினைவாக 'நார்விஷா’ என்று பெயர் சூட்டி இருந்த அந்த வீட்டை விற்க எனக்கு இஷ்டம் இல்லை. 2009- ஆகஸ்ட்டில், என் உயிருக்கே ஆபத்து வரும் சூழ்நிலை ஏற்பட்டது. உடனே, கைலாயம் சென்றுவிட்டேன். 'இந்தப் பிரச்னையில் இருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ளும் சக்தியை எனக்குக் கொடு’ என்று சிவனிடம் வேண்டினேன். ஒரு மாதம் கழித்து சென்னை திரும்பினேன். மிரட்டல் மீண்டும் தொடங்கியது. நானும் என் மனைவியும் சென்று, ஸ்டாலின் மனைவி துர்காவதி மற்றும் உதயநிதியைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று சீனிவாசனிடம் கூறினேன். அவர் எங்களை ஸ்டாலின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். எங்களைச் சந்திப்பதை உதயநிதி தவிர்த்து விட்டார். துர்காவதி மட்டும்தான் எங்களிடம் பேசினார். 'பக்கத்துலயே இருக்கே, அதான் வாங்கிப் போட்டுடலாம்னு நெனச்சேன்’ என்று சொன்னார். அது என் தாய் - தந்தை நினைவாக இருக்கும் வீடு என்பதை அவரிடம் விளக்கினேன். அவருக்கு அது புரியவில்லை. 'வாடகைக்கு வேண்டுமானால் உங்​களுக்​குத் தருகிறேன்’ என்றேன். அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அப்போது,  உதயநிதி கொடுக்கச் சொன்னதாக 'கைடு லைன் வேல்யூ’- புத்தகத்தை என்னிடம் கொடுத்தார் சீனிவாசன். 'இது எதுக்கு? எனக்கு தேவைன்னா இன்டர்நெட்ல பாத்துக்குவேன்’ என்றேன்.

அதற்குப் பிறகு மிரட்டல் அதிகரித்தது. 'நீங்களா குடுக்கலேன்னா நாங்களே எடுத்துக்குவோம்’னு சீனிவாசன் சொன்னார். ஒரு கட்டத்தில், 'இதே தெருவில் எனக்கு இரண்டரை கிரவுண்ட் நிலத்தை வாங்கிக் கொடுத்துவிட்டு, இந்த இடத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்’ என்றுகூட சொல்லிப் பார்த்தேன். என் வீட்டுக்கு எதிரே ஸ்டெர்லிங் சிவசங்கரனுக்கு சொந்தமாக இடம் இருந்தது. ஆனால், ஸ்டாலினுடைய ஆட்களோ, 'எங்களுக்கும் அவருக்கும் இப்போது உறவு நன்றாக இல்லை. அது முடியாது’ என்று சொல்லி விட்டனர்.

இதற்கெல்லாம் பிறகுதான் ஒரு நாள் என் வீட்டுக்கு வந்த ராஜா சங்கரும் சீனிவாசனும், 'உங்ககிட்ட​தான் இவ்வளவு நாள் பொறுமையா இருக்கோம்’ என்று கடுமையாக மிரட்டினர். திடீர்னு ஒரு நாள், திருவல்லிக்கேணியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலத்துக்கு என்னை இழுத்துட்டுப் போனங்க. அங்கதான், வேணுகோபால் ரெட்டியைப் பார்த்தேன். அவருக்கு நான் என் வீட்டை விற்பதாகப் பத்திரம் தயார் செய்துவைக்கப்பட்டு இருந்தது. அதில் நான் கையெழுத்துப் போடுவதைத் தவிர வேறு வழி இல்லை. இவர்கள்தான் இப்போது என்னை யார் என்றே தெரியாது என்று சொல்கிறார்கள்.

என் வீட்டை அபகரித்த ஒரு மாதத்துக்குப் பிறகு, சீனிவாசன் மீண்டும் என் வீட்டுக்கு வந்து, என் காலில் விழுந்து அழுதார். அவருடைய கண்ணீர் என் கால்களை நனைத்தது. 'என்னைக் கழட்டி​விட்டுட்​டாங்க சார்...’ என்று கதறினார். சாய்பாபா பக்தன்னு சொல்லிட்டு இந்த மாதிரி செய்றியேன்னு திட்டினேன்.

இப்போ நான் போலீஸில் புகார் கொடுத்ததை என் உறவினர்கள், நண்பர்களில் சிலர் வரவேற்கிறாங்க. சிலர் 'அவங்ககிட்ட எல்லாம் ஏன்டா மோதுற?’னு திட்டுறாங்க. ஆனா, நான் கொடுத்த புகாருக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனக்கும் அரசியலுக்குமே சம்பந்தம் இல்லை. நான், போலீஸையும் கோர்ட்டையும்தான் நம்புறேன். என் வீட்டை விற்க வேண்டிய அவசியமே இல்லை. இந்த சூழ்நிலையில் எனக்கு அறிமுகமே இல்லாத ஹைதராபாத் வேணுகோபால் ரெட்டிக்கு எதுக்கு நான் விற்கணும்? அடிப்படையான இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?'' என்று வருத்தத்துடன் பேசி முடித்த சேஷாத்ரி குமாரின் கண்கள் கலங்கி இருந்தன.

வேணுகோபால் ரெட்டியைப் பற்றி விசாரிக்க போலீஸார், ஹைதராபாத் சென்றுள்ளனர். சேஷாத்ரி குமாரின் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் போலீஸார்  வாக்குமூலம் வாங்கி உள்ளார்கள். 'தொடர்ந்து தனக்கு வந்த மிரட்டல்களை இவரிடம்தான் குமார் தினமும் சொல்லி வந்தார்’ என்கிறது போலீஸ்.  


''குமார் சொல்வதில் உண்மையில்லை!'' 

ஸ்டாலின், 2-ம் தேதி காலை தனது பரிவாரங்களுடன் டி.ஜி.பி. அலுவலகம் வந்தார். அங்கு, டி.ஜி.பி (நிர்வாகம்) ராஜேந்திரனிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில், ''ஒரு சொத்து பரிவர்த்தனை தொடர்பாக என் மீதும், என்னுடைய மகன் உதயநிதி மற்றும் சிலர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது ஒரு அடிப்படையற்ற புகார். அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வழக்குடன் எனக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. எனது மகன் உதயநிதி, அவரது கம்பெனி மூலமாக அந்தச் சொத்தின் தற்போதைய உரிமையாளருடன் வாடகை ஒப்பந்தம் ஒன்று செய்துள்ளார். புகார்தாரருடன்( அதாவது குமாருடன்!) எந்தத் தொடர்பும் கிடையாது. குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை சரிபார்க்காமல், அது பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்யான, கவலை​யளிக்கும் புகார் கொடுத்ததற்காக, புகார்​தாரர் மீது உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்'' என்று கூறி இருந்தார் ஸ்டாலின்.

நான் ஒரு அப்பாவி: உதயநிதி

இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில், உதயநிதி தாக்கல் செய்துள்ள மனுவில், ''இந்தக் குற்றச்சாட்டுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நில அபகரிப்பு செய்தது போல தோற்றம் உருவாக்கி பொய்யான புகார் கொடுத்து உள்ளார். என் தந்தை வீட்டுக்கு அருகில் அந்த இடம் இருப்பதால், அந்த இடத்தை நான் வாடகைக்கு எடுத்து உள்ளேன். புகாரின் தன்மையை ஆராயாமல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்​ளனர். நான் ஒரு அப்பாவி. எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

 எனக்கு தொடர்பு இல்லை: ராஜாசங்கர்

இந்தப் புகார் தொடர்பாக விளக்கம் கேட்பதற்காக, ராஜா சங்கரை தொடர்பு கொள்ள பல முறை முயன்றோம். அவரது தொடர்பு எண்கள் எதுவும் உபயோகத்தில் இல்லை. அவரது வழக்கறிஞர் குமரேசனிடம் பேசினோம். ''இந்த சொத்து பரிமாற்றத்தில் ராஜா சங்கருக்கு எந்தத் தொடர்பும் இல்லை'' என்று உறுதியாகச் சொல்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கனிமொழியின் வருகையால் ஸ்டாலின் கிலி.

  

 
டிசம்பர் 3-ம் தேதி அதிகாலையில் இருந்தே கோபாலபுரம் குதூகலபுரமாக மாற, காலை 10 மணியளவில் சி.ஐ.டி. காலனியோ துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தது. 

காரணம் கனிமொழி!

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்குக்காக கைது செய்யப்பட்ட கனிமொழி, கடந்த ஆறு மாத காலமாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர் சட்டப் போராட்டத்தால்  ஜாமீன் கிடைத்தது. அதன் விளைவாக, சென்னை மண்ணை மிதித்திருக்கிறார். அந்தக் கொண்டாட்டத்தின் பிரதிபலிப்புதான் இது. 

மூன்றாம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி விமானத்தில் கனிமொழியோடு அவர் கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் கிளம்பினர். மதியம் 1.20மணிக்கு சென் னை விமான நிலையத்தில் லேண்ட் ஆனது விமானம். விமான நிலையத்தின் ஓய்வறையில் மகளைக் காண வேண்டும் என்ற தவிப்பில் 12.20 மணியிலிருந்தே காத்திருந் தார் கருணாநிதி; துணைக்கு துணைவியார். கூடவே, தயாளு அம்மாள், ஸ்டாலின், செல்வி, ‘முரசொலி’ செல்வம்... என பெரிய பட்டாளம். 

ஓய்வறைக்கு கனிமொழி வந்ததும், ‘அப்பாடா, வந்திட்டியா..’ என கண்கலங்கி மகளின் உச்சியில் முத்தமிட்டு, ‘பாரும்மா, உனக்காக எவ்வளவு பேர் காத்திருக்காங்க பாத் தியா..’ என்று வெளியே கரகோஷம் செய்துகொண்டிருந்த கூட்டத்தைக் காட்டினார். அதைப் பார்த்து கனிமொழியின் கண்களும் கலங்கின. ‘நல்ல எதிர்காலம் உனக்குக்  காத்திருக்கும்மா’ என்று கருணாநிதி ஆசிர்வதிக்க, தயாளு அம்மாள் கனிமொழியைக் கட்டிப்பிடித்து முத்தமிட, அவரைப் பார்த்து, ‘‘நீங்க எதுக்கும்மா இவ்வளவு து£ரம்  வந்தீங்க. நான் வந்து உங்களைப் பார்த்திருப்பேன்’ல என்று புன்னகைத்தார் கனிமொழி. அருகில் வந்த செல்வி, கனிமொழியின் கையைப் பிடித்துக்கொண்டு நலம் விசாரித் தார். ஸ்டாலின், ‘வாம்மா..’ என்று சிரித்து வரவேற்றுவிட்டு சட்டென்று கிளம்பிவிட்டார். அடுத்தடுத்து சொந்தபந்தங்கள் எல்லாம் பாச மழை பொழிய... சந்தோஷத்தால்  திக்குமுக்காடி தந்தையின் காரில் ஏறி கிளம்பினார் கனிமொழி. 
இதற்கிடையே, கனிமொழி வரவேற்பை படாடோபமாகக் கொண்டாட வேண்டும் என கட்சித் தலைமை அறிவித்ததால், சென்னை விமான நிலையத்திலும், சி.ஜ.டி.  காலனியிலும் வழியெங்கும், ‘சூரியன் வந்தாச்சு.. தலைவி வந்தாச்சு..’ ‘மானமிகு கனிமொழி’ ‘கருணாநிதியே வருக’ என்று கனிமொழி பேரவை, தி.மு.க. கலை இலக்கியப்  பேரவை  சார்பிலும் பேனர்களும், போஸ்டர்களும் தூள் கிளப்பின.

சி.ஜ.டி. காலனி வீட்டின் வாயில், காலை 10 மணி முதல் மேளதாளங்கள் முழங்க, சென்னை சங்கமத்தில் பங்கேற்ற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அமர்க்களப்பட்டன.  கேரளாவில் இரண்டு நம்பூதிரிகள், செம்பில் இருந்த தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளித்து பூஜை செய்து கழகக் குடும்பம் வருவதற்காக சுறுசுறுப்பாக இருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து கருணாநிதி  கனிமொழி கார் சி.ஜ.டி. காலனி வீட்டுக்கு வந்ததும், பூசணிக்காயில் கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்தனர். அதன் பின்னரே  கனிமொழி இறங்கினார். முன்னதாக, 30-க்கும் மேற்பட்டோர் ஆரத்தி எடுக்க வீட்டில் காத்திருந்தனர். என்ன கணக்கோ தெரியவில்லை, 13 பேர் மட்டுமே ஆரத்தி எடுக்க  அனுமதிக்கப்பட்டனர். 

கனிமொழி வருவதற்கு முன்பு ‘சங்கமம்’ நிகழ்ச்சியில் எமலோக தர்பார் நாடகம் நடத்தப்பட்டது. பூலோகத்தில் இருந்து எமலோகம் வருபவர்களிடம் விசாரணை நடத்தி  பாவக் கணக்கைத் தீர்க்க நரகத்திற்கும், நன்மை செய்தவர்களை சொர்க்கத்திற்கும் அனுப்புவதுதான் இந்த நாடகத்தின் சாராம்சம். ‘‘ஏன் இந்த நாடகம்?’’ என்று கட்சியின்  முக்கியப் பிரமுகரிடம் காதைக் கடித்தோம். ‘‘கேரள பணிக்கரின் ஐடியாதான் இது. சிறையில் இருந்து வெளியே வரும் கனிமொழி மனக்கலக்கத்தோடு இருக்கக்கூடாது.  எதிர்காலத்திலும் அது அவருக்கு ஒரு திருஷ்டியாக இருக்கும். நடந்துவிட்ட சிறை சம்பவம் ஒரு வடுவாகவே அவரை அலைக்கழிக்கும். ஆகவே,  அதை நிவர்த்திக்கத் தான் இந்த நாடகம். தலைவரின் மகள் இதைப் பார்த்தால் இனி எந்தப் பிரச்னையும் வராது. அதற்காகத்தான் இந்த நாடகம்’’ என்றார். திராவிடச் சடங்கோ என நினைத் துக்கொண்டோம்.  

வீட்டிற்குள் நுழைந்த கனிமொழி அங்கிருந்த பொதுச் செயலாளர் அன்பழகன் காலில் விழுந்து ஆசி வாங்கினார். அப்போது, ‘‘அம்மா, டெல்லி வந்து உன்னைப் பார்க்க  முடியவில்லை’’ என்று வருத்தப்பட்டார். ‘‘பரவாயில்லை, உங்கள் உடல்நிலை எப்படி? வீட்டில் எல்லோரும் சௌக்கியமா?’’ என்று கேட்டார் கனிமொழி.

இதனைத் தொடர்ந்து, தி.மு.க. ஆட்சியில், வேலைவாய்ப்பு முகாம் நடத்தியபோது பயனடைந்த இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் அணியினர் வாழ்த்துகளைச்  சொன்னார்கள். கருணாநிதி வரும்போது முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி வணக்கம் தெரிவிக்க, ‘‘உன்னைய  யாரு இந்தக் கூட்டத்துல வரச் சொன்னது?’’ என்று  கோபப்பட்டார் கருணாநிதி. பிறகு கூட்டத்தில் இருந்தால், மேலே விழுந்துவிடுவார்கள் என்று அவரை தனது அறையில் உட்கார வைக்கும்படி உதவியாளர்களிடம்  சொன்னார்.  எல்லோரும் சாப்பிட்டுப் போங்க என்று கூறிவிட்டு, மதிய உணவு அருந்த மாடிக்குச் சென்றார். மேலும், கனிமொழி வெளியே வந்திருப்பதால், அவருக்கு ந ல்லது நடக்கும் என ஆயிரம் தொண்டர்களுக்கு அன்னதானமும் நடந்தது.

கனிமொழியும் கல்லூரித் தோழிகளுடன் சாப்பிடும் அறைக்குச் செல்ல, கருணாநிதி மகளை அழைத்து சாதத்தை பாசமாக ஊட்டினார். மகள் சிறைக்குச் சென்ற பிறகு  அசைவ உணவு சாப்பிடுவதை நிறுத்திய கருணாநிதி, சாம்பார் சாதம், காலிஃபிளவர் கூட்டு, வறுத்த வஞ்சரம் மீன் இரண்டு துண்டு, இரண்டு மெதுவடை ஆகியவற்றைச்   சாப்பிட்டார். வழக்கமாக, அவர் இப்படிச் சாப்பிட மாட்டார். அன்றைய தினம் அவர் மெனு ஃபுல்லாக இருந்ததற்குக் காரணம் மகளின் வருகை. பின்பு, கருணாநிதி ஓய்வு  எடுக்கச் செல்ல, கனிமொழி கீழே வந்து கட்சிப் பிரமுகர்களிடம் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தார். இரவில் கனிமொழியே சமையல் செய்து அனைவருக்கும்  பரிமாறினார்.

மறுநாள் காலையில், வெளியூரில் இருந்து கட்சித் தொண்டர்கள் சி.ஐ.டி. காலனி வீட்டை மொய்க்க., பெரும் திருவிழாவைப் பார்த்ததைப்போல் கனிமொழியின் முகத்தில் கூத்தாடியது சந்தோஷம்!

கனிமொழி சென்னை வந்த அதே விமானத்தில்தான், கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் வந்தார். அவரை வரவேற்க, கலைஞர் டி.வி. நிர்வாகிகளும்,  குடும்பத்தினரும் விமான நிலையத்திற்கு வந்திருந்தனர். வெளியே இருந்த மீடியாக்களின் கூட்டத்தைப் பார்த்து அவர் மாற்றுவழியில் சென்றுவிட்டார். நீண்ட நாட்களுக்குப்  பிறகு தனது குடும்பத்தினரை சந்திப்பதால், தன்னை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நிர்வாகிகளிடம் கூறிவிட்டாராம் சரத்குமார்.


அதிகாரத்தைப் பயன்படுத்தி வீட்டை அபகரித்துக்கொண்டதாக முன்னாள் துணைமுதல்வர் ஸ்டாலின் மீது சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சேஷாத்ரி குமார்  என்பவர் புகார் கொடுக்க, ஸ்டாலின்,  அவரது மகன் உதயநிதி, நண்பர் ராஜா சங்கர், ஓட்டல் அதிபர் சுப்பாரெட்டி, வேணுகோபால் ரெட்டி மற்றும் சீனிவாசன் ஆகியோர்  மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதை அறிந்து வக்கீல்கள் புடைசூழ டி.ஜி.பி. ஆபீஸுக்கு விரைந்தார் ஸ்டாலின். ‘என் மீது எப்.ஐ.ஆர். போட்டீர்களே, கைது செய்யவேண்டியது தானே’ என்று கேள்வி  எழுப்ப, அப்போது அங்கிருந்த கூடுதல் டி.ஜி.பி.ராஜேந்திரன் அமைதியாக இருந்தார்.

உடனே, ஸ்டாலின் இரண்டு புகார் மனுக்களை அவரிடம் கொடுத்தார். ஒன்று, தன் மீது கொடுக்கப்பட்ட வழக்கு தொடர்பான விளக்கம், மற்றொன்று, சிறுதாவூர் மற்றும்  கொடநாடு நிலம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா மீதான புகார். அதன்பிறகு பரபரப்பாக பேட்டியளித்துவிட்டு பறந்து சென்றார் ஸ்டாலின்.

இந்தப் புகார் தொடர்பாக, ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் விளக்கம் கேட்க முயற்சித்தோம். அவர்களிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்க
வில்லை. 

இது குறித்து ஸ்டாலின் தரப்பில் விசாரித்த போது, ‘‘ஸ்டாலின் மீது குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக போலீஸார் பொய் வழக்கைப் பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின்  பினாமி பெயரில் அந்த வீட்டை வாங்கியதாகக் கூறுவது அப்பட்டமான பொய். அவர் வாங்கிய வீட்டை, உதயநிதியின் சினிமா கம்பெனிக்காக வாடகைக்குக் கொடுத்தார்,  அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது’’ என்கின்றனர் ஸ்டாலின் தரப்பினர்.

இதற்கிடையில், முதல்வர் மீது பொய்குற்றச்சாட்டுக்களைக் கூறிய ஸ்டாலின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் பரஞ்ஜோதி கூறியுள்ளார்.  ‘‘கனிமொழி ஜாமீனில் வந்ததால், க ட்சியில் தனக்கு உண்டான முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால் தொண்டர்களிடம் ஸ்டாலின் நாடகமாடுகிறார்’’ என்று அமைச்சர் பரஞ்சோதி குற்றம்சாட்டியுள்ளார்.

குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லாத ஸ்டாலின் ‘ஆதாரம் இருக்கிறது. நடவடிக்கையை சந்திக்கத் தயார்’ என்று மட்டும் பதில் அளித்திருக்கிறார். ஸ்டாலினின் இந்த  அதிரடிக்குக் காரணம் ‘கனியா? கிலியா?’ என்பது விரைவில் தெரியும் என்கிறார்கள் போலீஸார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இனிமேல் பாருங்கள் எனது அரசியலை. கனிமொழியின் வைராக்கிய பேட்டி.

 
டிசம்பர் மூன்றாம் தேதி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்தவர்கள், 'வழி தவறி அண்ணா அறிவாலயத்துக்குள் நுழைந்துவிட்டோமோ...’ என்று ஒரு கணம் குழம்பியிருப்பார்கள். 193 நாட்கள் திகார் சிறைவாசத்துக்குப் பிறகு, கனிமொழி சென்னை திரும்பிய தினம் அது!
 'கனியக்கா எத்தனை மணிக்கு வர்றாங்க? ஃப்ளைட் வந்துடுச்சா?’ என்று எதிர்ப்பட்டோரிடம் எல்லாம் விசாரித்தபடி அலைந்துகொண்டு இருந்தார்கள் பாசக்கார உடன்பிறப்புக்கள். சென்னை சங்கமம் புகழ் இசைக் கலைஞர்களின் 'டங்குணக்க டங்குணக்க’ மேள தாளங்கள் அதிரத் துவங்க, தொண்டர் களோடு மகளிர் அணியினரும் சேர்ந்து ஆடியது அக்மார்க் குத்தாட்டம்!
சரியாக மதியம் 12.20-க்கு தயாளு அம்மாளுடன் மு.க.ஸ்டாலின் விமான நிலையம் வந்தார். பெங்களூரில் இருந்து வந்திருந்த செல்வி தனது கணவர் செல்வத்துடன் வர, மு.க.தமிழரசு தன் மனைவி மோகனாவுடன் நுழைந்தார். சற்று நேரத்தில் கருணாநிதியுடன் ராஜாத்தி அம்மாள் வந்தார். அவர்களை ஜே.கே.ரித்தீஷ் கும்பிடு போட்டு வரவேற்றார். இதற்குள் தொண்டர் களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் திமிற ஆரம்பித்தது விமான நிலைய வளாகம்!
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் விமான நிலைய வரவேற்பறையில் காத்திருந்தார்கள். ''கனி வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?'' என்று கருணாநிதி கேட்க... ''ஒன்றரை மணிக்கு வரும் ஃப்ளைட்'' என்று சொல்லி இருக்கிறார்கள். அப்போது குடும்ப உறுப்பினர்களைப் பார்த்து கருணாநிதி, ''கனி ஜெயில்ல ரொம்பவே கஷ்டப்பட்ருச்சு. தொண்டர்களும் ரொம்ப எதிர்பார்ப்பு வெச்சிருக்காங்க. கனிக்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கணும்'' என்று ஆரம்பிக்க... ''அதைப்பத்தி உடனே ஏன் பேசணும்?'' என்று விவகாரத்தைச் சற்றுத் தள்ளிவைத்தாராம் ஸ்டாலின்.
ஜெட் ஏர்வேஸ் விமானம் தரை இறங்கியதும் வரவேற்பு அறையில் இருந்து வெளியே வந்தார் கருணாநிதி. மகன் ஆதித்யா, கணவர் அரவிந்தன் சகிதம் சிரித்த முகத்தோடு வந்த கனியைப் பார்த்ததும், கருணாநிதியின் கண்களில் இருந்து கரகரவென வழிந்தது நீர். கனிமொழியை அருகில் வரச் சொல்லி அணைத்து, நெற்றியில் முத்தம் கொடுக்க... தயாளு அம்மாளும் கனியைக் கட்டி அணைத்துக்கொண்டார். ஓரிரு நிமிடங் கள் அங்கு நிலவியது கனத்த அமைதி. அதைக் கலைத்தது ஆதித்யாதான். ''அதான்... அம்மா வந்துட்டாங்கள்ல... அப்புறம் ஏன் அழறீங்க தாத்தா?'' என்றபடி கன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைக்க... நெகிழ்ந்துவிட்டார் கருணாநிதி. கட்சியினர் அளித்த பூங்கொத்துக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக்கொண்டு கருணாநிதியுடன் வெளியே வந்தார் கனிமொழி.
''கனியக்கா... கனியக்கா...'' என்று உணர்ச்சி மிகுதியில் முண்டியடித்து முன்னேறிய கூட்டத்தைப் பார்த்ததும் கனிமொழி முகத்தில் உற்சாக சந்தோஷம். விமான நிலையத்தில் இருந்து சி.ஐ.டி. காலனி செல்லும் வழியெங்கும் கனிமொழியை வாழ்த்தி ஏகப்பட்ட விளம்பரத் தட்டிகள். 'இனி நீ பூங்கொடி அல்ல; போர்க் கொடி’, 'ஏழைகளின் தோழி நீ... எழுச்சி சூரியனாய் வாழி நீ’, 'பூட்டிய இரும்புக் கூண்டின் கதவு திறந்தது... அதிகாரக் கூட்டத்தின் கனவு கலைந்தது’ என்றெல்லாம் ஏகத்துக் கும் வாழ்த்து மழை!  
கூண்டுக்குள் இருந்து கிளி வெளியே வருவதுபோல வரையப்பட்ட படத்துடன் 'சிறைபட்டது நீ... வதைபட்டது நாங்கள்!’ என்று எழுதப்பட்ட பேனர், கனிமொழியின் வீட்டுக்கு எதிரே பிரமாண்டமாகப் படபடத்தது. வீட்டு வாசலின் முன் போடப்பட்டு இருந்த பிரமாண்ட கோலத்தின் நடுவே 'வெல்கம்’ என்ற வரவேற்பு வாசகம்!
ஆரத்திகள், கற்பூர தீபம், திருஷ்டிப் பூசணிக்காய் சுற்றல் வைபவங்கள் முடிந்து, கார் வீட்டுக்குள் நுழைந்து நின்றபோது, கார் கதவைத் திறக்க முடியாத அளவுக்குக் கூட்டம். பேராசிரியர் அன்பழகன், ஆற்காட்டார், கோ.சி.மணி போன்றவர்கள் கனிமொழிக்கு சால்வை போர்த்த, வீட்டில் இருந்த உறவுகள் ஆரத்தி எடுத்து, கனி மொழியின் நெற்றியில் பொட்டுவைத்தனர். மற்றவர்கள் தன்னை 'எப்படி இருக்கீங்க?’ என்று கேட்பதற்கு முன்னரே, ''எப்படி  இருக்கீங்க?'' என்று முந்திக்கொண்டு அவர் களை விசாரித்தார் கனிமொழி. வீட்டு வளாகத்துக்குள் கூடியிருந்த தொண்டர் களுக்கு சரவண பவன் விருந்து. வீட்டுக் குள் மீன் குழம்பு மணம் கமகமத்தது. சமையல் தயாராகி கனியைச் சாப்பிட வருமாறு ராஜாத்தி அம்மாள் அழைக்க...
''வாய்க்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகி இருக்கும். என் கையால சாப்பிடும்மா!'' என்று கருணாநிதி சோறு எடுத்து கனிமொழிக்கு ஊட்ட... ''நீங்களும் என் கையால சாப்பிட்டு எத்தனை நாளாச்சு!'' என்று கனியும் அப்பாவுக்குச் சோறு ஊட்டினார்.
சி.ஐ.டி. காலனி இல்லம் இதற்கு முன் இப்படி ஒரு கொண்டாட்டத்தை எதிர்கொண்டது இல்லை. சிறைபட்ட நாட்களின் வருத்தங்களை அந்த ஒரே நாளிலேயே மறக்கும் அளவுக்கு இருந்தது சந்தோஷப் பரவசம். ஆனாலும், கனிமொழி முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. கிடைத்த சிறு சிறு இடைவேளைகளில் அவரிடம் பேசியதில் இருந்து...
''எப்படி இருக்கீங்க?''
''பழைய பலம் திரும்பிய மாதிரி இருக்கு. எப்பவும் உணராத உற்சாகமும் புத்து ணர்ச்சியும் என்னைத் திக்குமுக்காடவைக்குது. விமான நிலையத்துக்கே தொண்டர்கள் திரண்டு வந்து வரவேற்று மகிழ்ந்ததைப் பார்த்தபோது நெகிழ்ந்து விட்டேன். பேராசிரியரும் ஆற்காட்டாரும் வீட்டுக்கே வந்து என்னை வாழ்த்தியது... நானே எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சி. என் வலியைவிடப்பெரிய ஆறுதல் இதெல்லாம்!''
'' 'சிறைக்குச் செல்லும் நிலைக்குக் கொண்டுவந்துவிட்டதே...’ என்று அரசியல் மீது வெறுப்பு வரவில்லையா?''
''என்னை அரசியலுக்குக் கைப்பிடித்து அழைத்து வந்தவர் தலைவர்தான். அரசியலில் தலைவர் சந்திக்காத சோதனைகளே இல்லை. அந்தச் சோதனைகளை எல்லாம் போர்க் குணத்தோடு எதிர்த்துப் போராடி வெற்றிபெற்றார். தலைவரிடம் இருக்கும் தைரியம், போர்க் குணம் எனக்கும் உண்டு. நான் எந்தத் தப்பும் செய்யவில்லை. தவறான பழி என் மீது விழுந்துவிட்டது. அதில் இருந்து மீண்டு நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன். அரசியல் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. இனிமேல் பாருங்கள் எனது அரசியலை. தலைவர் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நான் தொடர்ந்து தீவிர அரசியலில்தான் இருப்பேன். என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் தொண்டர்களின் நம்பிக்கைக்கு ஏற்பச் செயல்படுவேன்!'' என்று உறுதிமிக்க குரலில் பேசி முடித்துக் கைகளைக் கூப்புகிறார்!


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kani puyal



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

kanimozhi_illus_20110509.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kani



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

The MIDAS Touch 
 

AIADMK and the DMK...they are politically arch rivals...but when it comes to business...money seems to unite these strange bedfellows. This is an unwritten rule in Tamil Nadu politics...one such business entity that has always flourished in Tamil Nadu is Midas Golden Distilleries Limited and people connected with it.  
tasmac.JPG
Midas Golden Distilleries Limited...   This firm has now become the largest supplier of alcohol to the state run TASMAC. It's no wonder that the total share of Midas distilleries to the TASMAC has gone up to 38% after AIADMK came to power...as everyone is aware of the powerful people behind MIDAS. One among them is Mohan, who is the all-in-all of the Midas golden distilleries...at present he is one of the crucial power centers in the state administration according to AIADMK insiders.   People who want to curry favours in the government rally around Midas Mohan say sources.
sabareesn.jpg
Whispers doing rounds in the business circles is that Midas Mohan's son Sanjay has recently acquired a contract to dispose of the scrap from Hyundai Car Manufacturers, which according to business sources is a very lucrative order.  
 
Curiously the contract of Sanjay is being executed along with a DMK bigwig.  Sanjay’s business partner in the scrap business is S.K.Mani who is a close confidant of Udhayanidhi Stalin, the son of DMK’s heir apparent M.K.Stalin. DMK insiders say  Mani is a very close acquaintance of Stalin’s daughter Senthamarai, son-in-law Sabarish and Stalin’s wife Durga.  He is often seen spending hours together in their household is the information in power corridors. 

Despite such close connections to the first family of the DMK...Mohan has allowed his son to enter into this lucrative business deal...this seems to have disappointed many in the AIADMK camp because Mohan is portraying an image who only advances interests of the ruling AIADMK government.  Sources in the AIADMK roughly estimate that personal assets of Mohan, who is popularly known as Midas Mohan alone would be around Rs.400 crores.
ind0317b.gif
But unperturbed by tongues wagging, Mohan is carrying on with his business merrily with the active backing of ‘Chinnamma’.     Even during the DMK regime, the fortune graph of Midas Distilleries only kept rising.   With its steady growth, thanks to the DMK regime’s orders from TASMAC, Midas Distilleries has now become a formidable player in the field giving strong completion to United Breweries, Shaw Wallace,Empee Distilleries, etc.  
In fact, sources in TASMAC administration say, to popularize the brands of Midas, officials are instructed to load the retail outlets with more Midas brands. 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

kalaignar_tv kani 3 Gallery_45165652037

 Gallery_26311892272 DSC_0168 sabareesn

kanis kanimozhi1 kanimozhi_illus_20110509



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22219609.JPG kani in rajyasaba



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கனிமொழிக்கு பதவி வழங்கிட ...... எதிர்ப்பு.

 
Kanimozhi_nilacharal.jpg
கனிமொழிக்கு, தி.மு.க.,வில் முக்கியப்பதவி வழங்குவதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கனிமொழிக்கு எதிராக, மற்றொரு பெண் வாரிசு கொம்பு சீவிய முயற்சி தோல்வியில் முடிந்தது. இருப்பினும், கனிமொழிக்கு ஆதரவு தெரிவிப்பது யார்? எதிர்ப்பு தெரிவிப்பது யார்? என்பதை கண்டறியும் வகையில், உடனடியாக பதவி வழங்காமல், "நூல் விட்டு' பார்க்கிறார் கருணாநிதி என, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டில்லி திகார் சிறைவாசத்திற்கு பின், சென்னை வந்த கனிமொழிக்கு, தி.மு.க.,வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். யாரும் எதிர்பார்க்காத வகையில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் செல்வி உட்பட அனைவரும், சென்னை விமான நிலையம் வரை சென்று வரவேற்றனர். கனிமொழியின் எதிர்கால அரசியல் வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்க வேண்டும் என, அவரின் தாயார் ராஜாத்தி பிடிவாதமாக இருந்து வருகிறார்.
கனிமொழிக்கு பதவி கொடுப்பதால், ஆண் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் குறைந்து விடும் என்பதால், அவருக்கு பதவி வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என, கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த மற்றொரு பெண் வாரிசு, மூத்த சகோதரரின் வீடு தேடி சென்று, கொம்பு சீவிவிட்டார்.

அதற்கு, அந்த மூத்த சகோதரரும், மற்றொரு சகோதரரும், "தந்தையின் கோபத்திற்கு நாங்கள் ஆளாக விரும்பவில்லை' எனக்கூறி நழுவினர். அதன் பின், அந்த பெண் வாரிசு, கனிமொழிக்கு பதவி வழங்கக் கூடாது என, நேரடியாக போர்க்கொடி தூக்கினார். அதேசமயம், ஆறு மாதம் சிறைவாசம் அனுபவித்த கனிமொழி மீது, கருணாநிதிக்கு அனுதாபம் ஏற்பட்டிருப்பதால், அவருக்கு பதவி வழங்கி, தி.மு.க.,வின் பெண் தலைவராக உருவாக்கவும், கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், கனிமொழிக்கு பதவி வழங்குவதற்கு முன், கட்சியிலும், குடும்பத்தினரிடமும், எந்த மாதிரி எதிர்ப்புகள் வருகின்றன, எதிர்ப்பவர்கள் யார்? யார்? ஆதரிப்பவர்கள் யார்? யார்? என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில், அவருக்கு பதவியை உடனே வழங்காமல், கருணாநிதி நூல் விட்டுப் பார்த்து, மவுனம் காத்து வருகிறார்.

இது குறித்து, நம்பத்தகுந்த தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழலால் தான், தி.மு.க., தோல்வி அடைந்தது என, தி.மு.க., மத்திய அமைச்சர் கூறிய கருத்து, கனிமொழி தரப்பில் மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் தோல்விக்கு, பொருந்தாத கூட்டணி உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. மதுரையை சுற்றியுள்ள பத்து தொகுதிகளில், தி.மு.க., ஏன் தோல்வி அடைய வேண்டும். தென் மாவட்டங்களில், கனிமொழி தலைமையில் வேலை வாய்ப்பு முகாம் நடந்ததால், அங்கே சில தொகுதிகளில், தி.மு.க., வெற்றி பெற முடிந்தது என்ற வாதம் கனிமொழி தரப்பில் முன் வைக்கப்பட்டுள்ளது.கலைஞர் "டிவி'யில், கனிமொழி 20 சதவீதம் பங்கு பெற்றதால், அவர் சிறைவாசம் அனுபவித்தார். ஆனால், 60 சதவீதம் பங்கு பெற்ற குடும்பத்தினருக்கு, கனிமொழியால் எந்த பிரச்னையும் வரவில்லை. அந்த ஒரு காரணத்தை முன் வைத்துத் தான், பதவி வழங்க கருணாநிதி விரும்புகிறார். ஆனால், பெண் வாரிசு தான், தனது சகோதரர்களிடம் கொம்பு சீவிவிட்டார். அது பலிக்கவில்லை.

கனிமொழியை பொறுத்தவரையில், பதவி தாருங்கள் என, தந்தையிடம் வாய் திறந்து கேட்கவில்லை. தந்தைக்கு தன்னால் எந்த இடையூறும் வரக் கூடாது என்பதில், அவர் கவனமாக இருக்கிறார். ஆனால், ராஜாத்தி தான் கனிமொழியின் எதிர்கால அரசியலை கருத்தில் வைத்து, பதவி கேட்கிறார். கனிமொழிக்கு பதவி வழங்கும் பிரச்னையால், சில நாட்கள் ஸ்டாலின், அறிவாலயத்திற்கு செல்லாமல், அன்பகத்தில் இருந்து கட்சிப் பணிகளை கவனித்துள்ளார். அதேபோல், ஸ்டாலின் மனைவி துர்காவும், கனிமொழியை சந்திக்காமல் புறக்கணித்துள்ளார். இந்த பிரச்னைகளை எல்லாம், விரைவில் கருணாநிதி தீர்த்து வைப்பார்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

WR_369192



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_12_2011_012_031.jpg thya it park



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_12_2011_010_005.jpg co-operative property sales illegal



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

16_12_2011_104_003.jpg stalin case



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நாள் குறிச்சாச்சு? வேகம் எடுக்கும் ஸ்டாலின் கைதுப் படலம்

Saturday  17  December  2011  07:14:37 AM

வீடு அபகரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின், போலீஸ் வளையத்துக்குள் வரும் நேரம் நெருங்குகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடந்து வருகின்றன.   

 

'சென்னை ஆழ்வார்​பேட்டை சித்தரஞ்சன் சாலையில் வசிக்கும் ஸ்டாலின், தனது வீட்டை அபகரித்துக்கொண்டார்’ என்று கடந்த மாதம் 29-ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷ னரிடம் மனு கொடுத்தார் சேஷாத்ரி குமார். இதையடுத்து, ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, ஸ்டாலினின் நண்பர்கள் ராஜாசங்கர், வேணுகோபால் ரெட்டி, சீனிவாசன், சுப்பாரெட்டி,  ஆகியோர் மீது, டிசம்பர் 1-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

உடனே, ஸ்டாலின் டி.ஜி.பி. அலுவலகத்துக்கே போய், 'விசாரணைக்குத் தயார்’ என்று பரபரப்பு கிளப்பினார். உதயநிதி, ராஜா சங்கர் இருவரும் முன் ஜாமீன் பெற்றனர்.

 

 

இந்த வழக்கு இப்போது வேகம் எடுத்திருக்கிறது என்று சொல்லும் காவல் துறை உயர் அதிகாரி ஒருவர், ''வழக்குக்குத் தேவையான ஆவணங்களையும் ஆதாரங்களையும்  மத்தியக் குற்றப்பிரிவு சேகரித்து உள்ளது. சேஷாத்ரி குமாரின் வீட்டுக்கே சென்று, அவருடைய மனைவி மற்றும் மகளிடம் இருந்து அந்த வீட்டை, குமார் பெயருக்கு 'பவர்’ பதிவு செய்ததாகக் கூறப்படும் திருவல்லிக்கேணி சார்பதிவாளர் பால்பாண்டியன் மற்றும் பத்திரப் பதிவுத்துறை டி.ஐ.ஜி. ஹரிஹரன் ஆகியோரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

 

சேஷாத்ரி குமாரின் வீட்டுக்கே சென்று 'பவர்’ பத்திரத்தைப் பதிவு செய்யுமாறு, ஹரிஹரன் உத்தரவு இட்டதாக சார்பதிவாளர் பால்பாண்டியன் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார். துணை முதல்வருக்காக இந்தச் சொத்து வாங்குவதாகவும், அதனால் தேவையான உதவிகளைச் செய்யும்படி உயர் அதிகாரிகளிடம் இருந்து தனக்கு உத்தரவு வந்ததாக ஹரிஹரனும் கூறி இருக்கிறார். இவர்கள் இருவரும் வலுவான சாட்சிகள் என்பதால், அவர்கள் 164-வது பிரிவின் கீழ், மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

 

புகார்தாரர் சேஷாத்ரி குமார், சார்-பதிவாளர் பால்பாண்டியன் ஆகிய இருவரும், சைதாப்பேட்டை 23-வது மாஜிஸ்திரேட் முன்பு, கடந்த புதன்கிழமை மதியம் 2 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டு, வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள். அதனால், அவர்களால் பல்டி அடிக்க முடியாது. இதன் அடிப்படையில் எங்களது அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றார்.

 

வாக்குமூலம் கொடுத்தது உண்மையா என்று பத்திரப் பதிவுத்துறை டி.ஐ.ஜி. ஹரிஹரனிடம் பேசினோம். ''மத்தியக் குற்றப்பிரிவு போலீஸில் இருந்து எனக்கு சம்மன் வந்தது. நான் ஆஜர் ஆனதும், உதவி கமிஷனர் விசாரித்தார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதைக் கூறினேன். அதைப் பதிவு செய்துகொண்டார்கள். மற்றபடி, மாஜிஸ்திரேட் முன்பு நான் வாக்குமூலம் கொடுக்கவில்லை'' என்றார்.

 

சேஷாத்ரி குமார் மாஜிஸ்தி​ரேட்டிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'பெற்றோர் நினைவாக வைத்திருந்த அந்த வீட்டை விற்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை’ என்று தெளிவாகக் கூறியுள்ளார். மேலும், இடத்தைக் கேட்டு மிரட்டியது உண்மைதான் என்பதற்கான ஆதாரங்களைக் கொடுத்துள்ளார். தேதி வாரியாக தன் வீட்டுக்கு வந்தவர்கள், போனில் மிரட்டியவர்கள், வீட்டில் குடியிருந்தவர்களை மிரட்டி விரட்டியவர்கள் என்று முழுமையான பட்டியலையும் இவர் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்து இருக்கிறாராம்.

 

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடக்கும்போது, 'போலீஸ் மிரட்டி வாக்குமூலம் வாங்கியது’ என்று தடம் புரண்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் மாஜிஸ்திரேட்டிடம் ரகசிய வாக்குமூலம் அளிக்க மத்தியக் குற்றப் பிரிவு ஏற்பாடு செய்ததாம். 'நாள் குறிச்சாச்சு’ என்று கண் சிமிட்டுகிறார் ஓர் உயர் போலீஸ் அதிகாரி.

 

கைதுக்குத் தயார் என்றுதான் ஸ்டாலினும் சொல்லி இருக்கிறார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2244746.JPG bwhurua no jamin



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_12_2011_006_004.jpg thaya



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

18_12_2011_402_012.jpg cong dmk



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20_12_2011_009_031.jpg raza kani



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

30_12_2011_010_010.jpg azagiri office



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_12_2011_006_021.jpg daya college2272890.JPG Completion

 



-- Edited by devapriyaji on Saturday 31st of December 2011 07:25:46 AM

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_12_2011_016_019.jpg daya college



__________________


Guru

Status: Offline
Posts: 24614
Date:
Permalink  
 

01_01_2012_002_021.jpg tamil new year



__________________
« First  <  Page 15  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard