New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
Permalink  
 


தா.கிருட்டிணன் கொலை-

அழகிரிக்கு இது ‘ஃபைனல் பஞ்ச்’ என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் அனைவரும் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டது எதிர்பாராத ஒன்று. யாரும் கொலை செய்யவில்லை என்றால்... தா.கிருட்டிணனே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலை செய்துகொண்டாரா?’ தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா எழுப்பிய இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியது. ‘குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்’ என தேர்தல் வாக்குறுதியும் அளித்தார். இதன்படி, வாக்குறுதியை நிறைவேற்ற போலீஸாரும் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த 2001-ம் ஆண்டு தி.மு.க.விலிருந்து அழகிரி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் செல்வாக்கு சரிந்திருந்தது. மதுரையில் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனின் செல் வாக்கும் சிவகங்கையில் ‘தா.கி.’ என்று தி.மு.க.வினரால் அன்பாக அழைக்கப்படும் தா.கிருட்டிணனின் செல்வாக்கும் ஓங்கியிருந்தது. இந்நிலையில், 2003-ம் ஆண்டு தி.மு.க. உள்கட்சித் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் இருந்துதான் அழகிரி ராஜ்ஜியத்துக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் சேர்த்துக் கொள்ளப்பட்ட அழகிரி, இந்த தருணத்துக்காகவே காத்திருந்தார். உள்கட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களை நிறுத்தி வெற்றி பெற வைத்து, தனது ‘பவரை’ கட்சி மேலிடத்துக்குக் காட்டவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கினார். சிவகங்கையின் மாவட்டச் செயலாளராக தனது ஆதரவாளர் சிவராமனைக் கொண்டு வர அழகிரி கடும் முயற்சி செய்தார். இதற்கு தா.கி முட்டுக்கட்டையாக இருந்தார். பெரியகருப்பனை மாவட்டச் செயலாளராக கொண்டு வருவதற்கு அவர் வரிந்துகட்டிக் கொண்டு இறங்கினார். இந்த விவகாரத்தில் தா.கி. மற்றும் அழகிரிக்கு இடையே மறைமுகமாக நடந்த மோதல் வெளிப்படையாக நடக்க ஆரம்பித்தது. கட்சியினர் கலந்து கொள்ளும் கூட் டங்களிலும் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் அளவுக்கு மோதல் உருவானது. இந்தப் பஞ்சாயத்து, கட்சித் தலைமை வரை போனது. அழகிரி விஷயத்தில் குறுக்கிட கட்சித் தலைமை ஆர்வம் காட்டவில்லை. நாளுக்கு நாள் அழகிரியின் ஆதிக்கம் அதிகமானதால், நொந்து போன தா.கி., தலைமைக்கே புகார் செய்தார். அப்போதும் இந்தப் பிரச்னை கண்டுகொள்ளப்பட வில்லை. தலைமை மௌனம் சாதிப்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தது அழகிரி கோஷ்டி. இதனையடுத்து, அழகிரியின் நடவடிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு பல கடிதங்கள் எழுதினார் தா.கிருட்டிணன். அந்தக் கடிதங்களும் குப்பைத் தொட்டிக்கே சென்றது. இரு தரப்பிலும் கோஷ்டி அரசியல் உச்சத்தை அடைந்த நிலையில்தான் தா. கி. கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். 20.5.2003 அன்று அதிகாலை நடைப்பயிற்சிக்குச் சென்ற அவர், மர்ம நபர்களால் கண்டந்துண்டமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சராக இ ருந்தவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தா.கி. படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கொலை வழக்கில் அழகிரி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். துணை மேயர் மன்னன், எஸ்ஸார் கோபி, முபாரக் மந்திரி உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுரை அண்ணாநகர் போலீஸார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. தமிழகத்தில் இந்த வழக்கு முறையாக நடக்காது, இந்த வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என முத்துராமலிங்கம் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இதனையடுத்து, இந்தக் கொலை வழக்கு ஆந்திர மாநிலம், சித்தூர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. ‘‘இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் போடப்பட்டுள்ளது’’ என்று கூறி, அழகிரி உள்ளிட்ட 13 பேரையும் சித்தூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா, இந்தத் தீர்ப்பை கடுமையாக விமர்சித்தார். ‘யாருமே கொல்லவில்லை என்றால், தா.கிருட்டிணனே தானே கத்தியை எடுத்து கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டாரா?’ என்று கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்த வழக்கிற்காக ஆரம்பம் முதல் போராடிவரும், தி.மு.க .இளைஞரணியின் முன்னாள் அமைப்பாளரும், தற்போதைய அ.தி.மு.க. வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியனிடம் இந்த விவகாரம் குறித்துப் பேசினோம். ‘‘அழகிரி தன்னை மிரட்டியதாக கருணாநிதிக்கே பல கடிதங்களை எழுதியுள்ளார் தா.கி. இந்நிலையில், கூலிப்படையை வைத்து அவரை அந்த முக்கியப் புள்ளிதான் கொலை செய்தார் என்பது ஊர் அறிந்த விஷயம். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் போது இந்த வழக்கு முறையாக நடக்காது என்று தான் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. அதிகாரத்தைக் கையில் வைத்திருந்ததால், சாட்சிகளை மிரட்டி பிறழ் சாட்சிகளாக மாற்றி இந்த வழக்கில் இருந்து அழகிரியும், மற்றவர்களும் எளிதாகத் தப்பியுள்ளனர். இந்த வழக்கில் தா.கி.யின் மனைவி பத்மாவதி, தம்பி ராமையா மற்றும் அரசு சாட்சிகள் உட்பட 131 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். ‘என் கணவரைக் கொலை செய்தவர்களை கடவுள் தண்டிப்பார்’ என்று கூறி தா.கி.யின் மனைவி பத்மாவதி நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வரவில்லை. தா.கி.யின் தம்பி ராமையாவும், அவரது குடும்பத்தினரும் ஆளும் கட்சியினரால் கடுமையாக மிரட்டப்பட்டனர். நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வராமல் இருப்பதற்காக தா.கி. குடும்பத்தார் சிலருக்கு கட்சியில் பதவிகள் தரப்பட்டது. இதுதவிர, அரசு ஊழியர்களாக இருக்கும் சாட்சிகளும் மிரட்டப்பட்டனர். முக்கிய சாட்சிகள் எல்லாம் ‘பல்டி’ அடிக்கவே, இந்த வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதன்பிறகு, தமிழக அரசு இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவில்லை. ஏன் மேல்முறையீடு செய்யவில்லை என்று கேட்டபோது, ‘இந்த வழக்கு மேல் முறையீடு செய்ய உகந்தது அல்ல’ என்று ஆந்திர அரசு வழக்கறிஞர் கூறிவிட்டார்’ என்று விளக்கம் கொடுத்தார் கருணாநிதி. ஆந்திர வழக்கறிஞர் அப்படி கூறியதற்கான ஆதாரத்தை ஆந்திர அரசிடமும், தமிழக அரசிடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு பல மாதங்களாகியும் பதில் வரவில்லை. மேலும், கருணாநிதிக்கு தா.கி. எழுதிய கடிதத்தின் நகல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. குற்றம்சாட்டப்பட்டவர் முதல்வர் மகன் என்ற ஒரே காரணத்திற்காக, கொலை வழக்கில் போலீஸார் மேல் முறையீடு செய்யவில்லை. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள் ளதால், மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இப்போது தா.கி.யின் மனைவி பத்மாவதி சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறார். இந்த வழக்கை நீதிமன்ற மறுவிசாரணை செய்யக்கோரி நீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்போகிறேன்’’ என்றார். இது ஒருபுறமிருக்க, தா.கி. படுகொலை வழக்கை மீண்டும் விசாரிக்க போலீஸாரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரம் ஒரு போலீஸ் ‘டீம்’ சி த்தூர் சென்று வந்துள்ளது. அந்த ‘டீம்’ சித்தூர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையை அலசி ஆராய்ந்து வந்துள்ளது. இந்த டீம் கொண்டு வந்த ஆதாரங்களைக் கொண்டு இந்த வழக்கை மறுவிசாரணை செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் மதுரை போலீஸார். இது குறித்து பெயர் சொல்ல விரும்பாத உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ‘‘இந்த வழக்கை அப்படியே மேல்முறையீடு செய்தால், ஒரு பயனும் இருக்காது. எனவே, இந்த வழக்கில் சாட்சிகளை மீண்டும் ‘மறு விசாரணை’ செய்ய நடவடிக்கை எ டுத்து வருகிறோம். எந்த வழக்கிலும் அரசு ஊழியர்களாக இருக்கும் சாட்சிகள், பிறழ் சாட்சியாக மாறமாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் அனைவரும் பிறழ்சாட்சியாக மாறியுள்ளனர். வி.ஏ.ஓ.க்கள் ஸ்ரீதரன், சுப்பிரமணியன், குருநாதன், ஜெயசீலன், அண்ணாதுரை, வருவாய் அலுவலர்கள் ராஜேந்திரன், சௌந்திரபாண்டியன், தாசில்தார்கள் சுந்தரராஜமூர்த்தி, கொம்பையன், முத்துச்சாமி, துணை கலெக்டர் திருமூர்த்தி ஆகியோர் இந்த வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டு, பிறழ்சாட்சியாக மாறிவிட்டனர். இவர்களில் பலர் இப்போது ஓய்வும் பெற்றுவிட்டனர். இவர்கள் நடந்த உ ண்மையைச் சொல்ல தற்போது முன்வருகிறார்கள். அதேபோல், தா.கி.யின் மனைவி பத்மாவதி மற்றும் சிலரும் அழகிரிக்கு எதிராக சாட்சி சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படி அழகிரிக்கு எதிராக சாட்சி சொல்ல வருபவர்களிடம் தனியாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, அந்த வாக்குமூலங்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, மறுவிசாரணை கேட்கப்போகிறோம். சித்தூர் நீதிமன்றத்தில் சாட்சிகள் தமிழில் சொன்ன விஷயங்களை, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக தெலுங்கில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். மேலும், கடந்த மாதம் நடந்த ரெய்டின்போது, எஸ்ஸார் கோபி தோட்டத்தில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், இந்தக் கொலை பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்தக் கடிதத்தையும், கருணாநிதிக்கு தா.கி. கைப்பட எழுதிய கடிதத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் போகிறோம். குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தை முதலமைச்சராக இருந்ததால், மேல்முறையீடு செய்யவில்லை என கால தாமதத்திற்குக் காரணம் கூறினால் கண்டிப்பாக எங்களுக்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவிடும்’’ என்றார் நம்பிக்கையுடன். ஏற்கெனவே அழகிரி மீது பல வழக்குகள் இருந்தபோதிலும் இந்த வழக்கில் அவர் நிச்சயம் சிக்குவார். அழகிரிக்கு இது ‘ஃபைனல் பஞ்ச்’ என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். : ராமசாமி வீர. வெற்றிப்பாண்டியன்



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

மதுரை அண்ணனிடம் மாட்டிய 
ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் !

ஏனோ தெரியவில்லை - இன்னும் கூட
தமிழ் பத்திரிகைகள் சில செய்திகளை
வெளியிட தயங்குகின்றன.

தமிழ் நாட்டிற்கு தெரிய வேண்டிய ஒரு
விஷயம் - தமிழ் பத்திரிகைகள் எதிலும்
வரவில்லை.

இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் செய்தி -

ராஜ் டிவி, மதுரை ராயல் கேபிள் விஷன்
நிறுவனத்திடமிருந்து (முதலாளி யார்
தெரியும் இல்லையா ?) மார்ச் 2008 
முதல் வரவேண்டிய தொகைக்காக 
(மொத்தம் ரூபாய் 6,68,80,881)
The Telecom  Disputes  Settlement
and Appellate Tribunal ) 
TDSAT-ல் ஒரு வழக்கு போட்டிருக்கிறது.

ராஜ் டிவியின் வேண்டுகோளை ஏற்று,
வழக்கு முடிவடையும் வரை ராயல் கேபிள் 
விஷன் நிறுவனம் தனது அசையும் மற்றும்
அசையா சொத்துக்கள் எதையும் 
விற்கக் கூடாது என்று ட்ரைபியூனல் 
தடை உத்திரவு  பிறப்பித்திருக்கிறது.

அலைவரிசையை மார்ச் 2008 முதலே
பெற்று வந்தாலும், அண்ணன் நிறுவனம்
ஒப்பந்த பத்திரத்தில் கையெழுத்து
போடாமல் தவிர்த்து வந்ததாகவும்,
மீண்டும் மீண்டும் நினைவுறுத்தியும் 
பணமும் கொ



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சி.பி.ஐ. நடத்தும் முப்பெரும் விழா!

செப்டம்பர் 15

 

ஸ்பெக்ட்ரம் புயல் மீண்டும் டெல்லியில் மையம்கொண்டு, பெரும் அதிர்வுகளை உருவாக்கக் காத்திருக்கிறது. செப்டம்பர் 15-ம் தேதி என அதற்குத் தேதியும் குறிக்கப்​பட்டுள்ளது!

ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முன்னோட்டங்கள் தேவை இல்லை. டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நீதிபதி ஷைனி முன்பாக நடந்துவரும் இந்த ஸ்பெக்ட்ரம் வழக்கில், இது வரை இரண்டு குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ‘மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யும் வரை கைது செய்யப்​பட்ட யாருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது!’ என்று சி.பி.ஐ. தரப்பு இந்தச் சிறப்பு நீதிமன்றத்தில் வாதங்களை வைத்ததால், கைதான யாரும் இதுவரை வெளியில் வர முடியவில்லை. ‘இவர்களை வெளியில் விடாமல் இன்னும் எத்தனை காலத்துக்கு உள்ளேயே வைத்திருக்கப்போகிறீர்கள்?’ என்று நீதிபதி ஷைனியே சி.பி.ஐ. தரப்பு வக்கீல்களிடம் கோபமாகக் கேட்டார். இதைத் தொடர்ந்து இதுவரை பதிவான இரண்டு குற்றப் பத்திரிகைகளை அடிப்படையாக​வைத்துக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.

ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. சரத்குமார் உள்ளிட்ட அனைவரும் தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதி ஷைனி முன்னால் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.

கடந்த 25-ம் தேதி ஆ.ராசா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில்குமார், சில அதிர்ச்சியான தகவல்களைச் சொல்லி நீதிமன்றத்தின் கவனத்தை முழுமையாகத் தங்கள் பக்கம் திருப்பினார்.

”ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சதி மற்றும் மோசடி நடந்துள்ளதாக இந்த வழக்கு நடந்து வருகிறது. ஆனால், இதில் அரசுக்கு எந்த விதமான இழப்பும் ஏற்படவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங், அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரும் தெரிவித்து இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல் பதிவாகி உள்ளது. எனவே, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ப.சிதம்பரம், கபில்சிபல் ஆகிய மூவரையும் இந்த நீதிமன்றத்துக்கு அழைத்து, சாட்சிகளாக விசாரிக்க வேண்டும். அவர்களுக்கு சம்மன் அனுப்ப வேண்டும்!” என்று வழக்கறிஞர் சுஷில்குமார் சொன்ன தகவல், அங்கே இருந்த சி.பி.ஐ. தரப்பை மட்டும் அல்ல… செய்தி பரவியதும் பிரதமரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

”ஸ்பெக்ட்ரம் உரிமங்களைப் பெற்ற உடனேயே அதை வேறு நிறுவ​னங்களுக்கு விற்பனை செய்த​தாகப் புகார் சொல்லப்​பட்டுள்ளது. ஆனால், உரிமங்கள் விற்கப்​படவில்லை. அதிகபட்ச உச்சவரம்பான 74 சதவிகிதத்துக்கு உட்பட்டு சில நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றுள்ளன. அந்தப் பரிவர்த்தனைக்கும் மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அன்னிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தந்துள்ளது!” என்று சொன்ன சுஷில்குமாரின் வாதங்கள், ப.சிதம்பரத்துக்கும் சிக்கலைக் கொடுத்துள்ளன.

அடுத்து தயாநிதி மாறன் மற்றும் அருண்ஷோரி​யையும் அவர் விட்டுவைக்கவில்லை. ”2003-ம் ஆண்டு மத்திய அமைச்சரவை நிறைவேற்றிய விதிமுறைகளைத்தான் ராசா பின்பற்றினார். ஆனால், அந்தக் காலகட்டத்தில் அமைச்சர்களாக இருந்த அருண்ஷோரி மற்றும் தயாநிதி மாறனை இதுவரை ஏன் கேள்வி கேட்கவில்லை? 2007-ம் ஆண்டு தயாநிதி மாறன் பதவி விலகும் முன்பு ஸ்வான் நிறுவனத்துக்கு உரிமம் வழங்கும் கோப்புகளில் கையெழுத்துப் போட்டு இருக்கிறார். அதை ராசா பதவிக்கு வந்ததும் வெளியில் சுட்டிக் காட்டி இருக்கிறார்!” என்று சுஷில்குமார் சொல்வது, தயாநிதி மாறனை பெரும் சிக்கலுக்கு உள்ளாக்கி உள்ளது.

”சி.பி.ஐ. தனது ஆவணங்களை இந்த கோர்ட்டில் இன்னமும் தாக்கல் செய்யவில்லை. இந்த ஆதாரங்​களை உடனடியாகத் தாக்கல் செய்து… அதை எங்களுக்கும் தந்தால்தானே வழக்கை எதிர்கொள்ள முடியும்?” என்றும் சுஷில்குமார் கேள்வி எழுப்பினார். இந்த ஆவணங்கள் அனைத்தையும் கேட்டு ராசா, ஒரு அவசர மனுவையும் தாக்கல் செய்தார். இது சி.பி.ஐ-க்கு ஒரு விதமான நெருக்கடியைக் கொடுத்துள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனை சி.பி.ஐ. அதிகாரிகள் மட்டத்தில் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 15-ம் தேதி தங்களது மூன்றாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்யலாம் என்று அவர்கள் முடிவு எடுத்ததாகவும் சொல்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஷைனி முன் ஆஜரானார், சி.பி.ஐ. வழக்கறிஞர் கே.கே.வேணு​கோபால். ”இந்த வழக்கில் சி.பி.ஐ. தனது விசாரணையை முடித்துவிட்டது. தனது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி தாக்கல் செய்யும்!” என்று அறிவித்து, புயல் சின்னத்தைக் காட்டி உள்ளார். அதற்கு முன்னதாக வருவாய்த் துறை மற்றும் அமலாக்கப் பிரிவினர் தங்களது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வார்கள் என்றும் வேணுகோபால் சொன்னார்.

”இந்தக் குற்றப் பத்திரிகையில் கைது செய்யப்பட்ட அனை​வரும் என்ன குற்றம் செய்தார்கள் என்பதை முழுமையாகக் கொண்டுவருவோம். இந்த மொத்த சதியிலும் ஒவ்வொருவருக்கும் என்ன பங்கு என்பதையும் சொல்வோம். இதற்காகச் செய்யப்பட பணப் பரிவர்த்தனைகள், எங்கு சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பதையும் கொண்டு​​வருவோம்!” என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார் குறித்த முழுமையான குற்றச்சாட்டுகள் வெளியில் வரலாம். மேலும், தயாநிதி மாறன் குறித்து ஏற்கெனவே தனது அறிக்கையில் சி.பி.ஐ. சில தகவல்களைச் சொல்லி இருந்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தொழில் அதிபர் சிவசங்கரன் இது தொடர்பாக விரிவான வாக்கு​மூலத்தை சி.பி.ஐ-யின் முன்பு பதிவு செய்துள்ளார். ”என்னுடைய ஏர்செல் நிறுவனம், தயாநிதி மாறனின் வற்புறுத்தலால்தான் மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது!” என்பது இவரது குற்றச்சாட்டாக உள்ளது. இந்தப் புகாரை செப்டம்பர் 15-ம் தேதிய குற்றப் பத்திரிகையில் சேர்க்கப்போகிறார்களா அல்லது அது தனியாக வருமா என்பது தெரியவில்லை!

இப்படி மொத்தமும் தி.மு.க. பிரமுகர்களை மையம்கொண்டதாக அந்தக் குற்றப் பத்திரிகை இருக்கப்​போகிறது. பொதுவாக தி.மு.க. செப்டம்பர் 15-ம் தேதியை முப்​பெரும் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடும். இந்த ஆண்டு சி.பி.ஐ-யும் சேர்ந்து ‘கொண்டாடப்’போகிறது?!

சரோஜ் கண்பத்

தப்பியது கலைஞர் டி.வி.?

2ஜி வழக்கின் விசாரணை குறித்து அவ்வப்போது சி.பி.ஐ. தரப்பிலும் அமலாக்கப்பிரிவு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்துக்கு விசாரணை நிலவர அறிக்கை கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 1-ம் தேதி மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அளித்த அறிக்கையில், ’2ஜி வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களின் வெளிநாட்டு முதலீடுகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சுமார் 200 வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் செய்யப்பட்டுள்ள முதலீடுகளை ஆய்வு செய்துவருகிறோம். இதில் சுமார்  7,800 கோடி முதல்

 9,000 கோடி வரை பணப்பட்டுவாடா நடந்திருக்கலாம்’ என்று அமலாக்கப் பிரிவின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சைப்ரஸ், சேனல் ஐலேண்ட் போன்ற தீவுகளில் இருந்து பெரும்பாலான ஆவணங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு 2000 முதல் 2004-ம் ஆண்டு வரையிலான பி.ஜே.பி. ஆட்சியில் பிரமோத் மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்திலும் பின்னர் தயாநிதி மாறன் அமைச்சராக இருந்த காலத்தில் நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்தும் சி.பி.ஐ. சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. இதில், ‘மகாஜன் மற்றும் அருண்ஷோரி காலத்தில் அரசின் கொள்கைக்கு மாறாக ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சில கம்பெனிகளுக்கு அதிகப்படியாக ஒதுக்கப்பட்டது. அதனால் முழுமையாக விசாரணை நடத்தவேண்டும். தயாநிதி மாறன் அமைச்சராக இருந்தபோது ஏர்செல் நிறுவனத்துக்கு கால தாமதம் செய்து ஒதுக்கீடு செய்துள்ளார். ஆனால் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம், அவர் கால தாமதம் செய்து ஏர்செல்லுக்கு ஸ்பெக்ட்ரம் கொடுத்துள்ளாரே தவிர, ஏர்செல் நிறுவனத்தைக் கட்டாயப்படுத்தி தனக்கு சாதகமான ஆதாயம் பெற்றதற்கான சாட்சியம் எங்களுக்கு கிடைக்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

கலைஞர் டி.வி. பணத்தை வட்டியோடு திருப்பிக் கொடுத்த தாகக் கூறுவதை சி.பி.ஐ. தரப்பு ஏற்றுக்கொள்கிறது என்றும் அதனால் கலைஞர் டி.வி-க்கு உடனடியாக பிரச்னை ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் ஷாகித் பால்வாவின் ஐந்து நிறுவனங்களின் சொத்துகளும், சில வீடுகள், நிலம், வணிகக் கட்டடங்கள் ஆகியவைகளோடு வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டு 2ஜி வழக்கில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், வரும் செப்டம்பர் 15-ம் தேதி அன்று சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்ய இருக்கும் குற்றப் பத்திரிகை மேலும் சில புயல்களைக் கிளப்பும் என்றே தெரிகிறது.

 200 கோடி வந்தது கனிமொழிக்குச் சொல்லப்படவில்லை!”

கடந்த மே 20-ம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட கனிமொழிக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகத் தொடர்ந்து சிறையில் இருக்கிறார். இதனால் ஏற்பட்ட ஆவேசம், அவரது வழக்கறிஞர் மூலமாக வெடித்தது. ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார்தான் கனிமொழிக்கும் வழக்கறிஞர். ‘கனிமொழி மீது வழக்குத் தொடர்ந்து நடைபெறுமானால், பிரதமரையும் சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுத்துப் பேசினார் சுஷில்குமார்.

‘கனிமொழியை இந்த வழக்கில் சேர்த்த சி.பி.ஐ., முறைப்படி அனுமதி பெறவில்லை. அவர் மாநிலங்களவை எம்.பி. ஆனால், அவரை சி.பி.ஐ. ஒரு தனிப்பட்ட நபராகவே கருதிக் கைது செய்துள்ளது. அவரைக் கைது செய்தது குறித்து முறைப்படி மாநிலங்களவைத் தலைவரிடம் அனுமதிகூட பெறவில்லை. கலைஞர் டி.வி-யில் 20 சதவிகிதப் பங்கு இருப்பது மட்டுமே அவர் செய்த குற்றம் தவிர, வேறு எந்தத் தவறும் அவர் செய்யவில்லை. ஆனால், அவர்தான் கலைஞர் டி.வி-க்கு மூளையாக இருந்தார் என்று சொல்லப்​படுவது தவறு. அந்த டி.வி. 10 சதவிகித வட்டிக்கு  200 கோடியைக் கடன் வாங்கிய விவகாரத்துக்கும் கனிமொழிக்கும் சம்பந்தம் இல்லை. அந்த விஷயம் அவருடைய கவனத்துக்கும் கொண்டுவரப்படவில்லை. இரண்டு பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், கனிமொழியை சி.பி.ஐ. கைது செய்துள்ளது. ஆனால், ஆவண சாட்சியங்கள் எதுவும் கனிமொழிக்கு எதிராக இல்லை!” என்று சுஷில்குமார் வாதிட்டார். இந்த வாதங்களை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே இருந்தார் கனிமொழி!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்!


2ஜிஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை செப்டம்பர் 15-ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்யப்போகிறது. இந்த நிலையில், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முதல் கட்டமாக, கலைஞர் டி.வி-க்கு  214 கோடி கொடுத்த டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் சொத்துகளை முடக்கிக் கையகப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டார்கள். இதில் தொடர்புடைய மற்ற நிறுவனங்கள் மீதும் அடுத்தக் கட்ட நடவடிக்கை பாயும் என்கிறார்கள். கடந்த ஜூலை 6-ம் தேதி தொடங்கி இதுவரை 2ஜி விவகாரத்தில் எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை செப்டம்பர் 1-ம் தேதி சி.பி.ஐ தரப் பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள்.

 இந்த நிலையில், தனது அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு, ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இந்தியா திரும்பிவிட்டார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்!

”உண்மையைச் சொல்லுங்கள்! ஸ்பெக்ட்ரம் வழக்கை கிடப்பில்போட உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா? தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் உங்களை சந்தித்துப் பேசியதாக பரபரப்பு கிளம்பியுள்ளதே?”

”சென்னையில் டாக்டர் மோகன் காமேஷ்வரன் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே ஸ்டாலின் வந்தார். சம்பிரதாயத்துக்கு நான், ‘ஹெள ஆர் யூ?’ என்று கேட்க, அவரும், ‘ஃபைன்’ என்றார். இவ்வளவுதான் நடந்தது. வேறு எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. வழக்கு விசாரணை நீண்ட தூரம் போய்விட்டது. அதனால், இந்த நேரத்தில் என்னை யாரும் அணுக மாட்டார்கள். ஊழல் விவகாரத்தைத் தடுக்கவோ, கிடப்பில் போடவோ இனி யாராலும் முடியாது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மாட்டியவர்களுக்கு கடைசியாக ஒரே ஒரு சான்ஸ் உண்டு. அவர்கள் அப்ரூவர் ஆகலாம். குற்றத்தில் உடந்தையாக இருந்தவர்கள், அப்ரூவர் ஆகி… பணம் எப்படி பெறப்பட்டது? யார் யாருக்கு கைமாறியது? என்று அனைத்து விவரங்களையும் தானாக முன்வந்து கோர்ட்டில் சொன்னால், தண்டனை குறையலாம்”

”டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் சொத்துகளை முடக்க அமலாக்கப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளார்களே?”

”ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் முதன்முதலாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்கிற வகையில் எனக்கு மகிழ்ச்சி. 2002-ல் கொண்டுவரப்பட்ட சட்டம் அது. சட்டவிரோதமாகப் பணம் கை மாறினால், அதன் மூலம் வாங்கப்பட்ட சொத்துகளைக் கைப்பற்ற, மத்திய அரசுக்கு அதிகாரம் உண்டு. அந்த வகையில், கலைஞர் டி.வி-க்கு டிபி ரியாலிட்டி மூலம்  214 கோடி கைமாறி இருக்கிறது கலைஞர் டி.வி-யின் முதலீட்டுப் பணமே சில கோடிகள்தான். அப்படி இருக்கும்போது, இத்தனை கோடிகள் எதற்காகக் கை மாறியது? அந்தப் பணத்தை ஏதோ கடனாகப் பெற்றதாகச் சொல்லி, அவசரம் அவசரமாகத் திருப்பித் தந்து இருக்கிறார்கள் கலைஞர் டி.வி. தரப்பினர். செய்த குற்றத்தை மறைக்க நாடகம் போட்டு, மொத்தமாக மாட்டிக்கொண்டார்கள்.

மத்திய அமைச்சர் சிதம்பரத்திடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வாதம் நடத்தப்போகிறேன். உச்ச நீதிமன்றம் எனக்குத் தனிப்பட்ட முறையில் ஸ்பெக்ட்ரம் வழக்கை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. ஆக, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு வழக்குகள் நடக்கப்போகின்றன. சி.பி.ஐ. வழக்கு தனி. என்னுடைய வழக்கு தனி. நான், சி.பி.ஐ-யிடம் உள்ள ஆவணங்களைப் பெறலாம். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்பு உள்ளவர்களிடம் நானும் குறுக்கு விசாரணை நடத்துவேன். ஊழல் விவகாரத்தில் ஆரம்பம் முதல் ஒவ்வொரு முறையும் சி.பி.ஐ. தானாகவே எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. அவர்களுக்கு எஜமானர் மத்திய அரசுதானே… அதனால், கொஞ்சம் மந்தமாகத்தான் செயல்பட்டார்கள். நான்தான் கோர்ட் மூலம் உத்தரவுகளைப் பெற்று சி.பி.ஐ-யை விரைவாகச் செயல்படவைத்தேன். வழக்கு விசாரணையில் எங்காவது சி.பி.ஐ. தவறு செய்தால், நான் விட மாட்டேன்.”

”சோனியா காந்தி பற்றி பேச்சே இல்லையே?”

”அதுதான் புதிராக இருக்கிறது. அவருக்கு வெளிநாட்டில் ஆபரேஷன் என்று மட்டும் தகவல் சொல்லப்பட்டது. வேறு எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. பிரதமருக்கு ஹார்ட் ஆபரேஷன் நடந்தபோது, தினமும் அவரது உடல்நிலை பற்றி ஆஸ்பத்திரி தகவல் வெளியிட்டது. வாஜ்பாய் அவரது முழங்காலில் ஆபரேஷன் செய்துகொண்டபோதும், தகவல்கள் வெளிவந்தன. ஆனால், சோனியா விஷயத்தில் இதுவரை எதுவுமே வெளியிடப்படவில்லை. போனில்கூட அவர் பேசவில்லை. வீடியோ கான்ஃபெரன்ஸ் வசதி எல்லாம் உள்ள இந்தக் காலத்தில் சோனியா ஏன் இதைப் பயன்படுத்தவில்லை என்பதுதான் புரியவில்லை.”

”ஊழலை எதிர்த்து நீங்கள் நடத்தும் சட்டப் போராட்டத்துக்கு அண்ணா ஹஜாரே ஆதரவு தருவாரா?”  

”ஊழலை ஒழிக்க மூன்று வகையான நடவடிக் கைகள் எடுக்கப்பட வேண்டும். ஒன்று, இரும்புப் பிடி சட்டம் இயற்ற வேண்டும். இதைத்தான் அண்ணா வலியுறுத்துகிறார். இரண்டாவது, ஊழலை ஒழிக்க ஏற்கெனவே உள்ள சட்டத்தை முடுக்கி வெற்றிகரமாக செயல்படுத்தவைக்க வேண்டும். இதைத்தான் நான் செய்கிறேன். மூன்றாவது, ஊழல் விஷயத்தில் மக்களின் அணுகுமுறை முற்றிலும் மாற வேண்டும். காசுக்காக ஆசைப்பட்டு குறுக்கு வழியில் போகிற மனோபாவம் மாறுவதற்கு ஆன்மிக மறுமலர்ச்சி வர வேண்டும். அப்போதுதான், ஊழல்கள், தவறுகள் செய்ய யாருக்கும் மனம் இடம்கொடுக்காது. இதை செய்ய நம் நாட்டில் உள்ள சாமியார்களும், சாதுக்களும் முன்வர வேண்டும்!”

ஆர்.பி.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி-விக்கிலீக்ஸ்

 
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி தனது மகள் கனிமொழி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. ஆனால் துணைவி ராசாத்தி அம்மாளின் கட்டாயத்தால்தான் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வந்தார் கருணாநிதி என்று முன்னாள் அமெரிக்கத் துணைத் தூதர் டென்னிஸ் ஹாப்பர், அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளில் கூறப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தத் தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம், சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் துணைத் தூதராக இருந்த டென்னிஸ் ஹாப்பர் அனுப்பிய கேபிளில், மூத்த காங்கிரஸ் உறுப்பினர் சிவப்பிரகாசம் என்பவர் தன்னிடம் பேசியது குறித்த தகவல்களை வெளியுறவுத்துறைக்கு அனுப்பியுள்ளார். அதில் பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங் சற்றும் பொருத்தமில்லாதவர். அவர் ஒரு மோசமான பிரதமராக இருப்பார். அவர் அடிப்படையில் ஒரு அதிகாரி. விலைவாசிப் பிரச்சினையால் அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சிவப்பிரகாசம் தெரிவித்தார். மேலும் பிரகாசம் கூறுகையில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங், திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்தார். அப்போது, பிரதமர் பதவிக்கு போட்டியிட தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அர்ஜூன் சிங், கருணாநிதியைக் கேட்டுக் கொண்டார். இருப்பினும் அதற்கு கருணாநிதி ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக சோனியா காந்தி பிரதமராக விரும்புவதாக கூறினார் என்றார். அதேபோல தனது மகள் கனிமொழியை அரசியலுக்குக் கொண்டு வருவதில் கருணாநிதிக்கு விருப்பம் இல்லை என்றும், அவருடைய தாயார் ராஜாத்தி அம்மாளின் தொடர் வற்புறுத்தல் காரணமாகவே கனிமொழிக்கு ராஜ்யசபா எம்.பி சீட்டை கருணாநிதி கொடுத்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியுள்ளார். முதல் மனைவியான தயாளு அம்மாளின் இரு மகன்களான அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகியோர் செல்வாக்கோடு இருப்பதைப் பொறுக்க முடியாமல்தான் மகள் கனிமொழியை அரசியலுக்கு கொண்டு வர ராஜாத்தி அம்மாள் துடித்ததாகவும் சிவப்பிரகாசம் கூறியதாக ஹாப்பர் தனது கேபிளில் கூறியிருப்பதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Kalaignar TV may get away by paying just 1.25 cr fine to ED 

Pradeep Thakur TNN 

New Delhi: In the first ray of hope for the DMK,the Enforcement Directorate is likely to impose a penalty of just Rs 1.25 crore on Kalaignar TV owned by DMK chief M Karunanidhis wife and daughter in the case of the alleged payoff of Rs 200 crore by the Shahid Balwa-promoted DB Realty in the 2G scam.Ironically,the alleged bribe-givers might end up paying a much heftier Rs 222 crore.
Properties worth Rs 1.25 crore belonging to Kalaignar TV will be attached in the coming weeks and recoveries will be made once the case is adjudicated.Similarly,ED officials have already initiated attachment of properties worth Rs 222 crore belonging to Balwa group companies,which include Dynamix Realty,DB Realty,Conwood Construction and Developers,Nihar Constructions and Eversmile Construction Company.
The reason why Kalaignar TV is being held liable for so little and the Balwas for so much is because of the fact that Rs 200 crore was paid back to the Balwas once the heat on the 2G scam was on.Karunanidhis daughter Kanimozhi and others associated with Kalaignar TV then claimed they had only borrowed the money from DB Realty,and it was not a pay-off.
According to the EDs calculation,Kalaignar TV saved Rs 1.25 crore on interest by using the Rs 200 crore to repay an external commercial borrowing,which carried a 16% interest rate.Hence,the penalty of that amount.

Govt got 3K cr from 2G spectrum 


T he Telecom Regulatory Authority of India has told the CBI that the allocation of 2G spectrum,master-minded by former telecom minister A Raja,had earned between Rs 3,000 crores and Rs 7,000 crores for the government.P 10 

Mahajans tenure under scanner 


T he CBI is looking into allocation of extra spectrum to certain companies during the tenure of late Pramod Mahajan as telecom minister.Agency sources said they would also examine former finance minister Jaswant Singh.P 10



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

EDs action could strengthen Kanis defence in 2G case 


When the CBI unearthed the bribe trail,Kalaingar TV returned the entire amount to the DB group with an interest of 10%.Thus,the ED argues,Kalaignar TV saved 6% on the loan amount for the period it had the money,which works out to Rs 1.25 crore.
The reason why the Balwas and their associates are liable for a penalty totaling the entire amount,plus interest on it,is because the money ultimately found its way back to them.Thus,as far as the ED is concerned,the beneficiary of the money laundered in this case is the DB group.The proposed attachment action by the ED could strengthen Kanimozhis defence that the money received by her TV channel was a loan,which she returned with interest.Kanimozhi was arrested on May 21 this year on charges of receiving payoffs of Rs 200 crore in Kalaignar TV.
The DMK wanted no action to be taken against any of the family members of party chief Karunanidhi.Though Kanimozhi with 20% share in the TV channel was arrested,the CBI did not mention Karunanidhis wife Dayalu Ammal,who has 60% share in the channel,in the chargesheet.
Together,they own 80% shares in Kalaingar TV,the rest being in the name of company managing director Sharad Kumar.The ED had booked Sharad Kumar and Kanimozhi in the payoffs case under the Prevention of Money Laundering Act,along with Karim Morani of Cineyug Films and Asif Balwa and Rajiv B Agarwal of Kusegaon Realty.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கலைஞர் டிவிக்கு ரூ.1.25 கோடி அபராதம்: 2 வாரத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு!

 
டெல்லி: டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடமிருந்து ரூ. 200 கோடி பெற்ற வழக்கில் கலைஞர் டிவிக்கு அமலாக்கப் பிரிவு ரூ. 1.25 கோடி அபராதம் விதிக்கும் என்று தெரிகிறது. இந்தப் பணத்தைக் கொடுத்த, டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கு ரூ. 222 கோடி அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரத்தை மிகக் குறைந்த விலைக்கு பெற்றதற்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு டி.பி. ரியாலிட்டி நிறுவனம் ரூ. 200 கோடி கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. ஆனால், அந்த நிறுவனத்திடம் வட்டிக்குத் தான் ரூ. 200 கோடியைப் பெற்றதாகவும், அதை 10 சதவீத வட்டியோடு திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் தான் திமுக எம்பி கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் கலைஞர் டிவிக்கும் ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கும் அபராதம் விதிக்கும் பணிகளில் அமலாக்கப் பிரிவு ஈடுபட்டுள்ளது. பணத்தைத் திரும்பத் தந்துவிட்டதால் கலைஞர் டிவிக்கு ரூ. 1.25 கோடி மட்டுமே அபராதம் விதிக்கப்படுவதாகத் தெரிகிறது. டி.பி. ரியாலிட்டி நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 200 கோடியை கலைஞர் டிவி தனது கடன்களை அடைக்க பயன்படுத்தியுள்ளது. இந்தக் கடன்கள் 16 சதவீத வட்டிக்கு வாங்கப்பட்டவை. ஆனால், டி.பி. ரியாலிட்டி நிறுவனத்துக்கு கலைஞர் டிவி 10 சதவீதம் மட்டுமே வட்டியோடு பணத்தைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. இதன்மூலம் கலைஞர் டிவிக்கு 6 சதவீத வட்டித் தொகையான ரூ. 1.25 கோடி மிச்சமாகியுள்ளது. இதனால் இந்தப் பணத்தை கலைஞர் டிவி அபராதமாக செலுத்த வேண்டும் என்று அமலாக்கப் பிரிவு கருதுகிறது. இந்த அபராதத் தொகையை வசூலிக்கும் வகையில், கலைஞர் டிவியின் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையப்படுத்தும் பணியை அமலாக்கப் பிரிவு விரைவிலேயே தொடங்கவுள்ளது. அதே போல கலைஞர் டிவிக்குப் பணம் தந்த டி.பி. ரியாலிட்டிக்கு ரூ. 222 கோடியளவுக்கு அபராதம் விதிக்கவும் அமலாக்கப் பிரிவு முடிவு செய்துள்ளது. இவர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கக் காரணம், ரூ. 200 கோடியை கலைஞர் டிவிக்குத் தந்துவிட்டு அதை வட்டியோடு திரும்பப் பெற்று லாபமும் அடைந்துள்ளது இந்த நிறுவனம். தவறும் செய்துவிட்டு வட்டி லாபமும் அடைந்த நிறுவனம் என்ற வகையில், அந்த நிறுவனம் ரூ. 200 கோடியையும் அதற்குக் கிடைத்த வட்டியான ரூ. 22 கோடியையும் அபராதமாகச் செலுத்த வேண்டும் என அமலாக்கப் பிரிவு கூறுகிறது. இந்த நிறுவனத்தின் ரூ. 222 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கும் பணிகளையும் அமலாக்கப் பிரிவு ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஷாகித் உசேன் பல்வாவுக்குச் சொந்தமான டைனமிக்ஸ் ரியாலிட்டி, டிபி ரியாலிட்டி, கன்வுட் கன்ஸ்ட்ரக்ஷன், நிகார் கன்ட்ரக்ஷன், எவர்ஸ்மைல் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பென் ஆகியவற்றின் ரூ. 222 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது. அமலாக்கப் பிரிவின் இந்த நடவடிக்கை மூலம் வழக்கு விசாரணை கனிமொழிக்கு சாதகமாகத் திரும்பலாம் என்று தெரிகிறது. அமலாக்கப் பிரிவின் இப்போது எடுத்துள்ள நடவடிக்கைகள் மூலம், கலைஞர் டிவிக்கு, டிபி ரியாலிட்டி நிறுவனம் தந்த பணம் லஞ்சம் அல்ல, கடன் தான் என்பது உறுதியாகிறது என்று கனிமொழி தரப்பு வாதாடலாம். இந்த வழக்கில் கனிமொழி, சரத்குமார், டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனத்தின் கரீம் மொரானி, இன்னொரு துணை நிறுவனமான குசேகாவ்ன் ரியாலிட்டி நிறுவனத்தின் ஆசிப் பல்வா, ராஜிவ் அகர்வால் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு சட்ட விரோத பணப் பரிமாற்றப் பிரிவின் கீழ் வழக்குத் தொடர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2 வாரத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு: இந் நிலையில் கனிமொழி விரைவில் ஜாமீனில் விடுதலையாகலாம் என்றும் தெரிகிறது. 2ஜி வழக்கில் 3வது குற்றப் பத்திரிகையை, சிபிஐ அடுத்த வாரம் தாக்கல் செய்ய உள்ளது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான விசாரணையும் விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்த விசாரணைகள் முடிந்து விட்டால் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யலாம். இதனால் 100 நாட்களுக்கும் மேலாக திகார் சிறையில் உள்ள கனிமொழி, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை முடிந்ததும், தன்னை பிணையில் விடுதலை செய்யக் கோரி மனு செய்வார் என்று தெரிகிறது. சிபிஐ தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாது என்று தெரிவதால், இரு வாரங்களில் கனிமொழி விடுதலையாக வாய்ப்புள்ளது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

இந்திரா காந்தியையே மன்னிப்பு கேட்க வைத்த இயக்கம் திமுக. கருணாநிதி


"மறைந்த பிரதமர் இந்திராவால் கூட தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை. அவரே வருத்தம் தெரிவிக்கும் அளவுக்கு தி.மு.க.,வை மக்கள் தாங்கிப் பிடித்தார்கள்,'' என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த திருமண விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியதாவது: தி.மு.க.,வுக்கு இப்போது வந்துள்ள சோதனைகள் பற்றி பேசப்பட்டுள்ளது. இதையெல்லாம் தாங்கி பழக்கப்பட்ட இயக்கம், தாங்கும் வலிமை கொண்ட இயக்கம் என்பதை, அன்பழகன் சுட்டிக்காட்டினார். நெருக்கடி காலக் கொடுமைகளை விடவா, சோதனை வந்து விடப்போகிறது! நெருக்கடி நிலைக்கு காரணமான, இந்தியாவின் தலைசிறந்த தலைவியான, இந்திராவாலேயே தி.மு.க.,வை வீழ்த்த முடியவில்லை. "நடந்த காரியங்களுக்காக நான் வருந்துகிறேன்' என, அவரே வருத்தம் தெரிவிக்கும் நிலைக்கு திராவிட மக்கள், தமிழ் மக்கள் தி.மு.க.,வை தாங்கிப்பிடித்தனர்.


 

அந்த வரலாறு மீண்டும் திரும்ப, இன்றைய ஆட்சியாளர்கள் வழி வகுத்தால், அதற்காக நன்றி கூற நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜனநாயகத்தை தமிழக சட்டசபையில் காண முடிகிறதா என்றால் இல்லை, ஜனநாயகம் சட்டசபையில் தேடும் பொருளாகி விட்டது. அதனால் தான், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபைக்கு சென்று, சபாநாயகர், திருக்குறளை படித்து முடித்ததும், வெளியேறினர். அவர்கள் நிருபர்களிடம், "நல்ல சொற்களை கேட்டு முடித்து விட்டோம்; தீய சொற்களை கேட்க நாங்கள் தயாராக இல்லை' என, கூறினர். திருக்குறளை தவிர, காதால் கேட்கும் எந்த சொல்லும், தமிழக சட்டசபையில் ஒலிக்கவில்லை என்பதற்கு இதுவே சான்று. தி.மு.க.,வை பொறுத்தவரை, ஆளுங்கட்சியாக இருந்தபோது, எந்த அளவிற்கு கண்ணியமாக, நாகரிகமாக, எதிர்க்கட்சிகளை மதிக்கும் வகையில் நடந்துகொண்டோம் என்பதை, இன்றைய ஆட்சியாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


 

ஒரு பெரிய மேதாவி, சட்டசபையில் இவருக்குத்தான் தெரியுமென்று மண்வெட்டிக்கதை சொல்லியிருக்கிறார். தங்க மண்வெட்டி தேடியோர் யார்? முதலில், இரண்டு கோடி ரூபாய் சொத்தை, 66 கோடி ரூபாயாக்கி, இன்றைக்கு பெங்களூரு கோர்ட்டில் தொங்கி கொண்டிருப்பவர் யார்? என்பதை, கதை சொல்வோர் எண்ணிப் பார்க்க வேண்டும். சட்டசபையில் எதை வேண்டுமானாலும் பேசலாமா? தி.மு.க., தலைவர்கள் சட்டசபைக்குள் வந்து, இந்த பேச்சை கேட்க தயாராக இல்லை. காதில் பஞ்சை வைத்துக் கொண்டுதான், சட்ட சபைக்குள் வரவேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு கருணாநிதி பேசினார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அழகிரி, மனைவி, மகனுக்கு மதுரை கலெக்டர் சகாயம் சம்மன்!

 
மதுரை: மதுரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் பொறியியல் கல்லூரியை கட்டுவதற்கு, பாசனக் கால்வாய்களை சேதப்படுத்தியது தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, அவரது மனைவி காந்தி மற்றும் மகன் துரை தயாநிதி ஆகியோருக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சகாயம் சம்மன் அனுப்பியுள்ளார். மூவரும் வரும் 16ம் தேதி நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. மதுரை அருகே சிவரக்கோட்டை என்ற இடத்தில் தயா பொறியியல் கல்லூரியை அழகிரி கட்டி வருகிறார். இதற்காக அப்பகுதியில் விவசாயிகளிடமிருந்து நிலத்தை வாங்கியுள்ளார் அழகிரி. இந் நிலையில் கல்லூரிக்கு அருகில் உள்ள வயல்களுக்கு செல்லும் பாசன கால்வாய்களை சேதப்படுத்தி இந்தப் பொறியியல் கல்லூரி கட்டப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டுள்ளது. சிவரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயிகள் நல சங்கத்தின் தலைவர் எம்.ராமலிங்கம், இது தொடர்பாக கலெக்டர் சகாயத்திடம் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், தயா பொறியியல் கல்லூரி கட்டுமானப் பணிகள் காரணமாக பாசன கால்வாய்கள் சேதமடைந்திருப்பதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து கல்லூரியின் நிறுவனத் தலைவர் மு.க.அழகிரி, அறக்கட்டளையின் உறுப்பினர்கள் காந்தி, துரை தயாநிதி ஆகிய மூவருக்கும் சம்மன் அனுப்பியுள்ளார் கலெக்டர் சகாயம். அதில், ஏழை விவசாயிகள் இந்த கால்வாய் பாசனத்தை பெரிதும் நம்பி இருக்கிறார்கள். இந்த கால்வாய் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு நீர்ப்பாசன பணிகள் சட்டம் 1959 பிரிவு 7ன் கீழ் இது குற்றமாகும். மேலும் இந்த பாசன கால்வாய் மேம்பாட்டுக்கு 38.87 லட்ச ரூபாயும், வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் 50.74 லட்ச ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. ஏரிகள் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளன. தயா அறக்கட்டளை கட்டிய கல்லூரி காரணமாக அரசு செலவழித்த பணம் விரயமாகி உள்ளது. இதனால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாய பணிகள் சட்டம் 1959 தமிழ்நாடு விவசாயிகள் நீர்ப்பாசன நிர்வாகச் சட்டம் 2000, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றம் சட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் குற்றங்களை அழகிரி கல்வி அறக்கட்டளை செய்திருக்கிறது. எனவே இது குறித்து விளக்கம் அளிக்க வரும் 16ம் தேதி காலை 11 மணிக்கு என் முன் ஆஜராகவேண்டும் என்று சம்மனில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்மன் கடந்த 6ம் தேதியே அழகிரிக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

”தி.மு.க-வின் முப்பெரும் விழா வழக்கமாக செப்டம்பர் 15-ம் தேதிதான் நடக்கும். இம்முறை செப்டம்பர் 18-ம் தேதி வேலூரில் நடக்கும் என்று அறிவித்து இருந்தார்கள். திடீரென தேதியும் இடமும் மாறி இருக்கிறது.  30-ம் தேதி சென்னையில் முப்பெரும் விழா நடக்கும் என்று தலைமைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 15ம் தேதிதான் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் ஆகிறது. அந்த சமயத்தில் முப்பெரும் விழா நடத்துவதை தி.மு.க. விரும்பவில்லை. அன்றைய தினம் சி.பி.ஐ. ஏதாவது சொல்லிவிடக் கூடாது என்ற பயம் இருக்கிறது. மூன்றாவது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துவிட்டால் கனிமொழிக்கு ஜாமீன் கிடைப்பது எளிது என்று சில மூத்த வழக்கறிஞர்கள் கருணாநிதிக்குச் சொல்லி இருக்கிறார்கள். மகளும் இருந்தால் நல்லதுதானே என்றும் கருணாநிதி நினைக்கிறார். 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகிவிட்டால், 30-ம் தேதிக்குள் கனிமொழிக்கு ஜாமீன் வாங்கி அழைத்து வந்துவிடலாம் என்று துடிக்கிறாராம் கருணாநிதி. அதற்காகத்தான் இந்த தள்ளி வைப்புகள்!”
”ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு பலத்த சர்ச்சையைக் கிளப்பி உள்ளதே?”

”ஸ்பெக்ட்ரம் வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சர் ஆகி வருவதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் சொல்கின்றன. டெல்லி வட்டாரத்தில் பலமாகப் பேசப்படும் விஷயங்களை நான் உமக்குச் சொல்கிறேன். மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எனப்படும் ‘டிராய்’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைதான் இந்த சந்தேகங்களுக்கு அடிப்படைக் காரணம். ’2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் மத்திய அரசுக்கு எந்தவிதமான இழப்பும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது அந்த அறிக்கை. ஏலத்தில் விடாமல் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்று கொடுத்ததால் அரசுக்கு  1.75 லட்சம் கோடி இழப்பு என்று மத்திய கணக்குத் தணிக்கை அறிக்கை சொன்ன பிறகுதான் நாட்டில் இந்த விஷயம் தீயாய் கிளம்பியது. சி.பி.ஐ. இந்த விஷயத்தைக் கையில் எடுத்து விசாரித்தது. இதில் முகாந்திரம் இருப்பதாக நம்பிய பிரதமர், அன்றைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசாவை ராஜினாமா செய்யச் சொன்னார். இதில் கலைஞர் டி.வி. சம்பந்தப்பட்டு இருப்பதாகச் சொல்லி, கனிமொழியும் கைதானார். தயாநிதி மாறன் மீது புகார் கிளம்பியது. அவரையும் ராஜினாமா செய்யச் சொன்னார் பிரதமர். 14 பேர் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்து போய்க் கொண்டு இருக்கிறார்கள். நீதிபதி சைனி, குற்றச்சாட்டுகளை பதிவு செய்யும் காரியத்தில் மும்முரமாகி உள்ளார். இப்படிப்பட்ட நிலைமையில்தான் டிராய், ‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் இழப்பு எதுவும் ஏற்படவில்லை’ என்று சொல்கிறது. ஆ.ராசா ஆதரவு வட்டாரத்தின் முகத்தில் இப்போதுதான் கொஞ்சம் சிரிப்பு மலர ஆரம்பித்துள்ளது!”
”டிராய்… தடுமாறுவது ஏன்?”
”எல்லாம் ப்ளாக் மெயில் பாலிடிக்ஸ்தான் என்று சொல்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள். பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்றைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகிய இருவர் மீதும் ஆ.ராசாவும் கனிமொழியும் சிறப்பு நீதிமன்றத்தில் வைத்த நேரடியான தாக்குதல்தான் டிராயின் இந்த வழுக்கலுக்குக் காரணமாம். ‘அவர்கள் இருவருக்கும் தெரியாமல் நான் எதையும் செய்யவில்லை’ என்று ராசா சொன்னார். அதையே கனிமொழியும் சொன்னார். மன்​மோகன், சிதம்பரம் இப்போதைய தொலைத் தொடர்​புத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகிய மூவரையும் சாட்சிகளாகச் சேர்க்க வேண்டும் என்று இவர்களது தரப்பு வழக்கறிஞர் சுஷில்குமார் சொல்லி மேலும் டென்ஷனை அதிகப்படுத்தினார். இதைத் தொடர்ந்துதான் காங்கிரஸ் மேலிடம் தனது சுருதியை மெள்ளக் குறைக்க ஆரம்பித்துள்ளதாம்…”
”ஆனால் சி.பி.ஐ.?”
”அரசாங்கம் தகவல்களை முறையாகக் கொடுத்து விசாரணைக்கு ஒத்துழைப்பும் தந்தால்தானே வழக்கை முறையாக நடத்த முடியும்? என்னதான் நேர்மையான அதிகாரிகள், வளைந்து கொடுக்காத அதிகாரிகள் இருந்தாலும் பெரிய இடத்துப் பொல்லாப்பை எவ்வளவு காலம்தான் சமாளிக்க முடியும்? இதை எல்லாம் வைத்துப் பார்த்தால் ஸ்பெக்ட்ரம், லேசாக கலர் மங்க ஆரம்பித்து இருப்பதாகவே சொல்கிறார்கள். இந்த நேரத்தில்தான் பிரசாந்த் பூஷண் மனுவும் தாக்கல் ஆகி உள்ளது. ‘தயாநிதி மாறனின் பங்குகள் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைகளை சி.பி.ஐ. கண்டு கொள்ளவில்லை. எனவே அவரிடம் முறையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடவேண்டும்’ என்று சொல்கிறது பிரசாந்த் பூஷணின் மனு. டிராய் கொடுத்த அறிக்கையை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த 6-ம் தேதி ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதாவது உள் குழப்பம் ஆரம்பம் ஆகிவிட்டது. இது இந்த வழக்கை ஊத்தி மூடுவதற்கான முஸ்தீபுகளாகத்தான் தெரிகிறது”
”உச்ச நீதிமன்றம் சும்மா இருக்காதே?”
”அவர்களது மேற்பார்வையில்தான் வழக்கே நடக்கிறது. எனவே அவர்களும் இதை உன்னிப்பாகத்தான் கவனிக்கிறார்கள். டிராய் அறிக்கை வெளியானதற்கு மறுநாள் சுப்ரீம் கோர்ட்டில் ஸ்வான் இயக்குநர் வினோத் மற்றும் யுனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா ஆகியோரது ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. நீதிபதிகள் சிங்வீ, டாட்டூ ஆகியோர் அடங்கிய பெஞ்ச்தான் இதை விசாரித்தது. வினோத், சஞ்சய் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, ‘ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று டிராய் சொல்லி இருக்கிறது’ என்பதை ஜாமீன் வழங்குவதற்கான ஆதாரமாகக் காட்டினார். அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ. வக்கீலும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான ஹரீன் ரவால், ‘டிராய் அறிக்கை, மத்திய அரசுத் துறைகளுக்கு இடையிலான தகவல் பரிமாற்றம்தான். அது ரகசியமானது’ என்றார். ‘பத்திரிகையில் வெளியான பிறகு என்ன ரகசியம்? இந்த அறிக்கை பற்றி நாங்கள் விசாரிக்கிறோம்’ என்றார்கள் நீதிபதிகள். எனவே உச்ச நீதிமன்றம் சும்மா விடாது என்றே தெரிகிறது. ரகசியமான அறிக்கையை பத்திரிகைக்கு யார் லீக் பண்ணியிருக்க முடியும்.. என்பதும் தெரியாத ரகசியம் அல்ல!” என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2 ஜியும், தி.மு.கவின் பங்களிப்பும்!

 
தி.மு.க ஒரு தப்பும் பண்ணல, அவர்களை வேண்டுமென்றே குறிவைத்து தாக்கி கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றசாட்டை வைத்துள்ளார், அவரது வாதத்தின் படியும் மற்றும் பல்வேறு கழக சொம்புதூக்கிகளின் வாதத்தின் படியும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம் அரசுக்கு 7000 கோடி லாபம் தான், அதனால் நட்டம் ஒன்றுமில்லை, ஆகவே தி.மு.க நிரபராதி மட்டுமல்ல மக்களுக்காக உழைத்த மகான்களை கொண்ட கழகம் அது.

காசுக்கு கூட்டத்தில் கத்துபவன் கூட இந்த அளவு இந்த அளவு குரல் கொடுக்க மாட்டான் என்றால் இவர்கள் எந்த அளவு மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பதை நண்பர்கள் அறிக!, 2ஜி ஊழல் ராசாவிலிருந்து ஆரம்பிக்கபட்டதல்ல, அது தயாநிதி மாறனில் இருந்து விசாரிக்கபட வேண்டும் என்பது பலரது வாதம், ஆனால் தயாநிதி மாறன் இந்தியாவின் தொலைதொடர்பு துறையை தூக்கி நிறுத்தியவர் போல் பேசி கொண்டிருக்கிறார்கள் நமது சொம்புதூக்கிகள்!

இந்தியா முழுவதும் பேச ஒரு ருபாய் என்ற திட்டத்தின் மூலம் மக்களின் கவனத்தை பெற்றவர் தயாநிதிமாறன், ஆனால் உண்மையென்ன?

அந்த திட்டத்தில் பயன்பெற நீங்கள் மாதம் 450 வாடகை கட்ட வேண்டும், இழப்பீட்டை விட அதிக அளவு லாபம் பார்த்து மக்களை ஏமாற்றியர் தான் இந்த ஹைடெக் ஏமாற்றுகாரர், இந்தியாவை போன்ற பல நாடுகள் S.T.D முறையை ஒழித்து விட்டது, அதாவது வாசிங்டன்னில் இருந்து ஃப்லோரிடாவுக்கு பேசினாலும், கலிஃபோர்னியாவிலிருந்து நியூயார்க் பேசினாலும் அது உள்ளூர் அழைப்பு தான், இந்தியாவில் தான் பக்கத்துக்கு ஊருக்கு பேசினாலும் S.T.D. இதில் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக்(unplug) பண்ணினார் என தெரியவில்லை!?

maps_of_usa_states_city.jpg


அதிக பட்ச உச்சவரப்பு கட்டணம் பற்றி மட்டுமே TRAI பேசியிருக்கிறதே தவிர குறைந்த பட்ச கட்டணம் என்று எதையும் நிர்நயிக்கவில்லை!, அவர்கள் பத்து பைசாவுக்கும் கொடுக்கலாம், ஐந்து பைசாவுக்கும் கொடுக்கலாம், இரண்டு பைசாவுக்கும் கொடுக்கலாம், ஒரு பைசாவுக்கும் கொடுக்கலாம் ஏன், சும்மா கூட பேச அனுமதிக்கலாம், அது அவர்கள் லாபத்தை குறைத்து கொண்டு சந்தையை தன்வசம் ஆக்க செய்யும் யுக்தியே தவிர இதிலும் தயாநிதி மாறன் எதை அன்ப்ளக் பண்ணினார் என தெரியவில்லை.

சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்தை மலேசியா நிறுவனத்திடம் விற்க மிரட்டினார் என சிவசங்கரனே வாக்குமூலம் கொடுத்த பிறகும், சி.பி.ஜ தயாநிதிமாறனை சும்மா ஒப்புக்கு விசாரித்து கொண்டிருப்பது அதிகாரவர்க்கத்தின் பணம் எது வரை பாய்ந்துள்ளது என்பதை காட்டுகிறது, இங்கணம் இருக்க திரும்ப திரும்ப கழக கண்மணிகளால் தி.மு.க விற்கு எவ்வாறு சொம்பு தூக்க முடிகிறது என்று தான் தெரியவில்லை, ஊழலின் மொத்த உருவமான தி.மு.க மற்றும் காங்கிரஸை இன்னும் ஒரு கட்சியாக இந்தியாவில் வைத்து கொண்டிருப்பது இந்திய மக்களின் பொறுமைக்கு ஒரு சாட்சி என்பேன்!

nithi.jpg


இன்னும் முடியல!

என்னிடம் பத்து ருபாய் அடக்கமுள்ள பொருள் நாலைந்து இருக்கிறது, நான் ராசா என்ற படித்த அன்ப்ளக்கிடம் அதை விற்பதற்கான உரிமையை தருகிறேன், அது சந்தையில் பல நூறு மடங்கு அதிக விலைக்கு விற்கக்கூடியது, சான்று உலக சந்தையிலும் அந்த பொருள் விற்பனைக்கு உள்ளது, அப்பேற்பட்ட பொருளை அந்த ராசா பதினோறு ருபாய்க்கு விற்று, ஹைய்ய்ய்ய்ய்ய்யா உங்களுக்கு ஒரு ருபாய் லாபம் பெற்று தந்து விட்டேன் என தவ்வுகிறான். 

நீங்களே சொல்லுங்கள் ஐயா, இந்த வேலையை செய்ய எனக்கு எதற்கு அந்த படித்த அன்ப்ளக், என் கடைக்கு, அதை சார்ந்தவர்களுக்கு எவ்வளவு லாபம் பெற்று தர முடியுமோ அதை விட்டு விட்டு, நானும் லாபத்தில் விற்றேன் பார் என்று ஒரு விளக்கம், அதற்கு ஆமாம் சாமி போட்டு கொண்டு ஒரு கூட்டம்.

வெக்கமாயில்லை, ஒவ்வொரு மனிதனின் உழைப்பும் வியர்வையும் தான் இந்தியா, நீ வெளிநாட்டு வங்கியில் கோடி கோடியாய் சேர்க்க இப்படி ஊழலால் ஏமாற்றி கொண்டிருக்கிறாயே!, உன்னையெல்லாம் பெத்தாங்களா, இல்ல........................


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23324921-arivunithi-jamin.jpg?w=640&h=630



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

azagiri-ellam-thrseyal-thuklak.jpg?w=640&h=920



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ.180 கோடி வாங்கி கலைஞர் டி.விக்கு தந்த பல்வா- சிபிஐ

 
டெல்லி: தனது ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் பெறுவதற்காக, எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ. 180 கோடி கடனை, கலைஞர் டிவிக்குக் கொடுத்துள்ளார் ஷாகித் ஹூசேன் பல்வா என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

டிபி ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தையும் நடத்தி வரும் பல்வாவின், துணை நிறுவனமான சினியுக், கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி வழங்கியது. இதை கடனாக வாங்கியதாகவும் வட்டியோடு சேர்த்து ரூ. 214 கோடியைத் திருப்பித் தந்துவிட்டதாகவும் கலைஞர் டிவி கூறுகிறது.

ஆனால், இது தனது நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக பல்வா தந்த லஞ்சம் என்கிறது சிபிஐ. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெடிக்க ஆரம்பித்தவுடன், கலைஞர் டிவி மிக விவரமாக இந்தப் பணத்தை வட்டியோடு திருப்பித் தந்து கடன் போல காட்டியது என்பது சிபிஐயின் வாதம்.

இந் நிலையில் பல்வா எங்கிருந்து இந்த ரூ. 200 கோடியை திரட்டினார் என்பது குறித்து சிபிஐ நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்துள்ளன. டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் கட்டுமான திட்டப் பணிகளுக்காக எல்ஐசியின் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்திடம் ரூ. 180 கோடியை கடனாக வாங்கியுள்ளார் பல்வா.

ஆனால், அந்தப் பணத்தை கட்டுமானத் திட்டத்துக்குப் பயன்படுத்தாமல் அப்படியே கலைஞர் டிவிக்கு தந்துள்ளார் என்று சிபிஐயின் Bank security and frauds cell (BS&FC) பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த விவகாரத்தில் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டி.எஸ்.விஜயனுக்கும் பங்குள்ளதா என்பது குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.

நமக்கெல்லாம் ரூ. 20 லட்சம் வீட்டு லோன் தரவே, நமது தாத்தாவின் சொத்து பத்திரத்தில் ஆரம்பித்து, நமது பேரக்குழந்தையின் போட்டோ வரை கேட்கும் எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ், பல்வா மாதிரியான ஆட்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கட்டுமானத் திட்டப் பணிகளுக்காக எல்ஐசியின் இந்த துணை நிறுவனம் கடன் தருவதில் ஏராளமான முறைகேடுகளும் லஞ்சம் கைமாறுவதாகவும் பொதுவான புகார்கள் உள்ளன. இந் நிலையில் இப்போது பல்வா-கலைஞர் டிவி விவகாரத்தை வைத்து இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்தும் சிபிஐ விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

கட்டுமானப் பணிகளுக்கு தரப்பட்ட நிதியை பல்வா முறையாகப் பயன்படுத்துகிறாரா என்பதை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் கண்காணித்திருக்க வேண்டும். ஆனால், இந்த விஷயத்தில் அது நடக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. அந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அவர் திருப்பிவிட்டதை எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் ஏன் கேள்வி கேட்கவில்லை என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கழுகார் வந்ததுமே… ”டெல்லி…” என்றோம் எதிர்பார்ப்புடன்!

”சற்றே பொறுத்திரும்!” எனக்  கை அமர்த்திவிட்டு, ”ஒரு தி.மு.க. தொண் டர் இன்று அதிகாலையில் என்னிடம் சொல்லி வருத்தப்பட்ட ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டு, மற்ற விஷயங்களுக்குப் போகலாம்!” என்று ஆரம்பித்தார்.

புதுச்சேரியில் பெரும் தொழில் அதிபர் களில் ஒருவர் கேசவன். மணக்குள விநாயகர் என்ற பெயரில் ஏராளமான கல்வி நிறுவனங்கள் அவருக்கு உண்டு. பிள்ளைச் சாவடி கேசவன் என்றால்தான், அவரைத்

 

தெரியும். அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர் பலருக்கும் புதுச்சேரிப் பக்கம் போனால், ரிசர்வ் பேங்க் அவர்தான். அண்ணாமலை ஹோட்டலில் அவர் பெயரைச் சொல்லி எவ்வளவும் அனுபவித்துக்கொள்ளலாம். அப்படிப்பட்ட மனிதர் புற்றுநோய் காரணமாக கடந்த வாரத்தில் இறந்துபோனார். புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் ஜானகிராமன் அங்கேயே வந்து உட்கார்ந்துவிட்டார். இன்னாள் முதல்வர் ரங்கசாமி மூன்று முறை அவரது வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்திச் சென்றார். இந்தத் தகவல் முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு முதலில் சொல்லப்பட்டது. ஏனென்றால், அவர்தான் கேசவனுக்கு ஆத்மார்த்த நண்பர். அவரால் பல உதவிகளையும் பெற்றவர். ‘கடலூரில் இருக்கிற பொன்முடியைப் பார்த்துட்டு, நான் அங்கே வர்றேன்’ என்று துரைமுருகன் சொன்னாராம். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவும் அப்போது புதுவையில்தான் இருந்துள்ளார்கள். அதே அண்ணாமலை ஹோட்டலில் தங்கி இளைப்பாறிவிட்டு கடலூர் சென்றார்கள். அவர்கள் வருவார்கள் எனக் கேசவனின் உடல் மூன்று மணி நேரம் வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் காத்திருந் தார்கள். ஆனால் கடைசி நேரத்தில், ‘நாங்க அவசரமாக சென்னைக்குப் போகணும்.’ என்று தகவல் மட்டும் சொல்லி அனுப்பிவிட்டார்கள். பலத்த ஏமாற்றத்துடன் உடல் எடுக்கப்பட்டது. சாலைக்கு அருகிலேயே கேசவன் வீடு என்பதால், புதுச்சேரி சாலையின் ஒரு பக்கம் கேசவனின் இறுதி ஊர்வலம் போய்க்கொண்டு இருந்தபோது, இன்னொரு பக்கமாக இவர்கள் மூவரும் பயணம் போய்க்கொண்டு இருந்தார்களாம். இதைச் சொன்ன தொண்டன், ‘ஜெகத்தும் வேலுவும் இன்னொரு கட்சியில் இருந்து வந்தவர்கள். ஆனால், மாணவர் காலத்தில் இருந்து தி.மு.க-வில் இருந்த துரைமுருகன் இப்படி நடந்து கொள்ளலாமா? ஒரு பணக்காரத் தி.மு.க. பிரமுகருக்கே இந்த நிலைமை என்றால், ஏழைத் தொண்டன் செத்தால் எப்படி மதிப்பார்கள்?’ என்று குமுறிவிட்டார் தொண்டர்!” என்று நிறுத்திய கழுகார், சிறிது இடைவெளிவிட்டு மறுபடியும் தொடங்கினார்…



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ராஜ் டிவி நிறுவனத்திடம் ரூ.6 கோடி மோசடி செய்த மத்திய அமைச்சர்அழகிரியின் ராயல் கேபிள் விஷன்.

ரு புறம், நில அபகரிப் பில் முன்னாள் மாண்பு மிகுக்கள் சிக்கித் தவிக்க... இன்னொரு புறம், அரசு கேபிள் ஜமாய்க்க... அடுத்து என்ன நிகழுமோ என்று தி.மு.க. திகிலடித்துக்கிடக்கிறது. இந்த நிலையில்... மதுரையில் பாதிக்கும் மேற்பட்ட கேபிள் நெட்வொர்க்கைத் தனது கட்டுக்குள் வைத்திருக்கும் ராயல் கேபிள் விஷன் மீது பாய்ந்திருக்கிறது புதுப் பிரச்னை! 

 

மத்திய அமைச்சரான அழகிரி குடும்பத்துக்கு சொந்த மான 'ராயல் கேபிள் விஷன்’ 2008-ம் ஆண்டு முதல் ராஜ் டி.வி. மற்றும் ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் ஆகிய சேனல்களுக்கு சந்தாதாரராக மாறி, மதுரை யின் சில பகுதிகளில் ஒளி பரப்பிக்கொள்வதற்கான ஒப்பந்தம் போட்டது. ஆனால், பேசியபடி ராயல் கேபிள் விஷன், சந்தாத் தொகையைச் செலுத்தவில்லை என்று தொலைத் தொடர்பு வழக்கு கள்தீர்ப்பாயத்தில் வழக்குப் பதிவு செய்து இருக்கிறது ராஜ் டி.வி.

 

இது தொடர்பாக ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்தின் சீஃப் ஆபரேட்டிங் ஆபீஸர் வித்யாதர் நம்மிடம் பேசினார். ''கடந்த 15.3.2008 அன்று ராயல் கேபிள் விஷனும், ராஜ் டி.வி-யும் ஓர் ஒப்பந்தம் போட்டன. மாதா மாதம் சேவை வரி உட்பட  13,14,612 சந்தாத் தொகையாக ராஜ் டி.வி-க்கு செலுத்துவதாகச் சொன்னார்கள், ராயல் கேபிள் விஷன் நிறுவனத்தார். அதன்படி பிரதி மாதம் 15-ம் தேதி, சந்தாத் தொகையைச் செலுத்தி வர வேண்டும். ஆனால், செலுத்தவில்லை. 'ஒவ்வொரு மாதமும் சந்தாத் தொகை செலுத்த வேண்டும்’ என்பதை நினைவூட்டினோம். வாய் மொழியாகவும் கேட்டுப் பார்த்தோம். ஆனால், அப்போது தி.மு.க. ஆளும் கட்சியாக இருந்த காரணத்தால், ஏதேதோசொல்லி மிரட்டினார்கள். சந்தா தர முடியாது என்றார்கள். சந்தாத் தொகையைக் கேட்டு ராஜ் டி.வி. நிறுவனத்தாரின் அலுவலர்கள் யாரேனும் சென்றால், தமிழகம் முழுக்க ராஜ் டி.வி. ஒளிபரப்புக்கு பங்கம் விளைவித்துவிடுவோம் என்ற ரீதியில் மிரட்டினார்கள்.

 

இப்படி, 2008-ம் ஆண்டு முதல் இப்போது வரை ராயல் கேபிள் விஷன் செலுத்தாமல்விட்ட சந்தாத் தொகை  5,12,52,318 ஆகும். நிலுவையில் உள்ள இந்தத் தொகைக்கு 18 சதவிகித வட்டியைக் கூட்டினால்,  6 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும். மேலும், சந்தாத் தொகையை செலுத்தாமல், தொடர்ந்து ராஜ் டி.வி. சேனலை மதுரையில் ராயல் கேபிள் விஷனின் கீழ் வரும் பகுதிகளில் ஒளிபரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், 29.7.2011 அன்று ராயல் கேபிள் விஷனிடம் இருந்து கடிதம் ஒன்று வந்தது. அதில், 'சந்தாத் தொகையைச் செலுத்தத் தேவை இல்லை என்ற அடிப்படையில்தான் ராஜ் டி.வி. சேனலை ஒளிபரப்ப ஒப்புக்கொண்டோம்’ என சொல்லப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து 8.8.2011 அன்று நாளிதழ்களில், 'இன்று முதல் அடுத்த 21 நாட்கள் மட்டுமே ராஜ் டி.வி. மதுரை யின் சில பகுதிகளில் ஒளிபரப்பாகும். அதற்குப் பிறகு ராஜ் டி.வி. சேனல் ஒளிபரப்புச் சேவை நிறுத்தப்படும்’ என ராயல் கேபிள் விஷன் அறிவித்திருந்தது. ஆனால், 21 நாட்கள் முடிந்த பின்னும், ராயல் கேபிள் விஷனின் கீழ் வரும் மதுரைப் பகுதிகளில் இன்று வரை ராஜ் டி.வி. ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

 

எங்களுடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாமல் ராயல் கேபிள் விஷன் எவ்வாறு நாளிதழ்களில் அப்படி அறிவிக்கலாம்? இது எந்த விதத்தில் நியாயம்? ஆகவே, 'எந்த ஒரு காரணத்தைக்கொண்டும் ராஜ் டி.வி. சிக்னலை ராயல் கேபிள் விஷன் நிறுத்தக் கூடாது. நிலுவைத் தொகையை தீர்ப்பாயத்தில் ராயல் கேபிள் விஷன் டெபாசிட் செய்ய வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க தனியாக ஓர் ஆணையரை நியமிக்க வேண்டும்’ என்று மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தீர்ப்பாயத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்து இருக்கிறோம். இன்று வரை ராயல் கேபிள் விஷனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. வருகிற 29-ம் தேதி தீர்ப்பாயத்தில் வழக்கு விசாரணைக்கு வரப்போகிறது. நியாயத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்!'' என்று சொன்னார்.

 

ராஜ் டி.வி-யின் புகார் குறித்து விளக்கம் கேட்பதற்காக மதுரை ஆண்டாள்புரம் டி.பி.கே. ரோட்டில் உள்ள ராயல் கேபிள் விஷன் அலுவலகத்துக்குச் சென்றோம். வரவேற்பரையில் இருந்தவர், 'எங்கள் அதிகாரி ராஜ பிரபுவோ மற்ற பொறுப்பான ஆட்களோ இப்போது அலுவலகத்துக்கு வருவது இல்லை. சாதாரண ஊழியர்கள் மட்டும்தான் இப்போது இருக்கிறோம். அதனால், அந்தப் புகார்பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது...' என்றார் படபடப்போடு.

 

'அவர்களது செல்போன் நம்பரைக் கொடுங்கள், நாங்கள் பேசிக்கொள்கிறோம் அல்லது நீங்களே போன் போட்டுக் கொடுங்கள்...'' என்று கேட்டோம். 'நான் உள்ளே போய் பேசிவிட்டு, அவர் என்ன சொல்கிறார் என்பதைச் சொல்கிறேன்!' என்று உள்ளே போனவர் சில நிமிடங்களில் திரும்பி வந்து, 'எங்கள் மேலாளர் மகேஷிடம் பேசினேன். அவர் மேல் அதிகாரியிடம் பேசினாராம். 'எதுவும் பேச வேண்டாம். அவர்களுக்குக் கிடைத்த தகவலை வெளியிட்டுக் கொள்ளட்டும்’ என்று சொன்னார்' என்றவரிடம், 'சரி, உங்கள் பெயர் என்ன?' என்று கேட்டோம்.'சார், ப்ளீஸ் என் பெயர் வேண்டாமே...' என்று நழுவிக்கொண்டார்.

 

நமக்குப் பதில் சொல்லாவிட்டாலும், இம்மாதம் 29-ம் தேதி தொலைத் தொடர்பு தீர்ப்பாயத்தில் பதில் அளித்தாக வேண்டுமே...  என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்! இருப்பினும் ராயல் கேபிள் விஷன் சார்பில் எப்போது விளக்கம் அளித்தாலும் நாம் வெளியிடத் தயாராகவே இருக்கிறோம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

செல்வியின் மருமகன் மீது நில மோசடி வழக்கு

 
தியாகராயநகரைச் சேர்ந்தவர் சோமசேகர். இவருக்கு சொந்தமாக ஜி.என்.செட்டி ரோட்டில் 1 1/2 கிரவுண்டு இடம் உள்ளது. இதன் அருகில் இருக்கும் 4 1/2 கிரவுண்டு நிலத்தையும் சோமசேகர் வாங்க முடிவு செய்தார்.

19_09_2011_003_026-mk-kin-fraud.jpg?w=517&h=531
இது தொடர்பாக முன்னாள் முதலஅமைச்சர் கலைஞரின் மகள் செல்வியின் மருமகன் டாக்டர் ஜோதிமணியும், அவரது உறவினர்கள் 2 பேரும் சோமசேகரை சந்தித்து பேசியதாக தெரிகிறது. 




அந்த இடத்தை வாங்கி தருவதாக கூறி சோமசேகரிடம், டாக்டர் ஜோதிமணி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி நிலத்தை வாங்கி கொடுக்காததால் சோமசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். 

அதில், பாஸ்கரன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான 4 1/2கிரவுண்டு நிலத்தை வாங்கி தருவதாக கூறி ஜோதிமணி ரூ. 1 கோடியே 40 ஆயிரம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். 

இந்த புகார் மனு பாண்டி பஜார் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகார் மனுவை விசாரித்த பாண்டி பஜார் போலீசார் ஜோதிமணி மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரது அக்காள் உமா மகேஸ்வரி, மானேஜர் ஆனந்த் ஆகியோர் மீதும் மோசடி தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, சம்பந்தப்பட்ட நில பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உடனடியாக இந்த வழக்கில் கைது நடவடிக்கை இருக்காது என்று தெரிவித்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

19_09_2011_001_022-tnhb-dayanithi-plot.jpg?w=534&h=609



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தினகரன் நாளிதழ் எரிப்பு வழக்கு. சிபிஐ காட்டும் வேகத்தால் திக்குமுக்காடும் திமுக.

தினகரன் நாளிதழ் அலுவலக எரிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் சி.பி.ஐ. அப்பீலை ஏற்று நோட்டீஸ் அனுப்ப...  தி.மு.க. தரப்பு  பதறிப்போயிருப்பதுடன் போலீஸார் காட்டும் வேகத்தால் திக்குமுக்காடிப் போயிருக்கிறது.

அழகிரிக்கு எதிராக கருத்துக் கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து, மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகத் துக்கு பெட்ரோல் குண்டுகளை வீசி சிலர் தீவைத்தனர். இந்தத் தாக்குதலில் கம்ப்யூட்டர் பிரிவில் பணியாற்றிய  கோபிநாத், வினோத்குமார் மற்றும் பாதுகாவலர் முத்துராமலிங்கம் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கைதான மதுரை கீரைத்துறையைச் சேர்ந்த பாட்ஷா (41) போலீஸாரிடம் அளித்த  வாக்குமூலத்தில், ”நான் அட்டாக் பாண்டியிடம் டிரைவராகப் பணிபுரிகிறேன். கருத்துக் கணிப்பில்  மு.க.ஸ்டாலினுக்கு அதிக ஆதரவும், அழகிரிக்கு மிகக்குறைவான ஆதரவும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டி ருந்தது. இதனால் அழகிரியின் நண்பரான அட்டாக் பாண்டி மனவேதனை அடைந்தார்.

நேராக தினகரன் பத்திரிகை அலுவலகத்திற்கு காரில் சென்றோம். எங்களுடன் இருபத்தைந்துக்கும் மேற்ப ட்டோர் வந்தனர். அங்கு அலுவலகக் கண்ணாடி களை உடைத்தோம். பெட்ரோல் குண்டுகளை வீசி,   வாகனங்களுக்குத் தீயிட்டோம். பின்னர் கூட்டம் திரண்டதால் தப்பி ஓடிவிட்டோம்’’ என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து, அட்டாக் பாண்டி கைதானார். இந்த வழக்கு தொடர்பாக ஊமச்சிக்குளம் டி.எஸ்.பி.யாக இ ருந்த ராஜாராம் உள்ளிட்ட 17 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பல தரப்பிலும் இருந்து  தொடர்ந்து தரப்பட்ட நெருக்கடி காரணமாக, இந்த வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது தி.மு.க. அரசு.

விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகள், 32 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். நீதிமன்றத்தில்  85 பேர் சாட்சியமளித் தனர். பெரும்பாலோர் பிறழ் சாட்சிகளாக மாறினர். குற்றச்சாட்டுக்கு நேரடி சாட் சியங்கள் இல்லாததால்,  இந்த வழக்கில் குற்றம்சாட்டப் பட்ட அனைவரையும் கடந்த 2009-ம் ஆண்டு மது ரை நீதிமன்றம் விடுதலை செய்தது.
சி.பி.ஐ. தரப்பில் இந்த வழக்கில் அப்பீல்  செய்யாமல் விட்டதற்கு, பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.  இதையடுத்து, நான்கு மாதங்கள் கழித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. அப்பீல்  செய்தது. “இந்த அப்பீல் மனுவை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், வழக்கில் விடுதலையான பதினேழு பே ருக்கும் நோட்டீஸ் அனுப்பியதால், தி.மு.க. வட்டாரம் பதறிப்போயிருக்கிறது.

அடுத்து என்னவாகும்? என உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அழகுமணியிடம் கேட்டோம்.

‘‘ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை, ஆதாரங்களை ஆய்வு செய்து கீழ் நீதிமன்றம்  வழங்கிய தண்டனை சரியா அல்லது தவறா என உயர்நீதிமன்றம் முடிவு செய்யும்.

குற்றம் சாட்டப்பட்டவரை கீழ் நீதிமன்றம் விடுதலை செய்தாலும், மேல்முறையீட்டில் அதை ரத்து செய்து  உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கலாம். உதாரணத்துக்கு, ஆலடி அருணா கொலை வழக்கில்  எஸ்.ஏ.ராஜாவை விடுதலை செய்தது கீழ்நீதிமன்றம்.


இதுபோன்ற சம்பவங்களில் வீடியோ, போட்டோக்கள் போன்றவை முக்கிய சாட்சிகள். அவற்றை நீதிமன்றம்  நிராகரிக்க முடியாது. இலங்கையில் நடந்த போர்க்குற்ற வீடியோ ஆதாரங்களை உலக நாடுகளே சாட்சியமாக  ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த வழக்கில் கீழ்நீதிமன்றம் நிராகரித்த அல்லது சரியாகக் கவனத்தில் கொள்ளாத வீடியோ ஆதாரங்களை  உயர்நீதிமன்றம் விசாரிக்கும்.

தேவைப்பட்டால் சாட்சியங்களையும்  விசாரிக்க உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. ஒரு வேளை  இந்த சாட்சிகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என சி.பி.ஐ. தரப்பில் மனு போட்டாலும் உயர்நீதிமன்றம்  விசாரிக்கும்.
‘பெஸ்ட் பேக்கரி’ வழக்கில் சாட்சிகள் விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு  முக்கியமானது. அது இந்த வழக்கிற்கும் பொருந்தும்.

இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தார் தங்களையும் சாட்சியமாக விசாரிக்குமாறு உயர்நீதிமன்றத் தை அணுகலாம்.  வீடியோ, போட்டோ ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சி.பி.ஐ. லாகவமாக இந்த  மேல்முறையீட்டு வழக்கில் கையாளும். அதேபோல வழக்கை விரைந்து முடித்து தண்டனை வாங்கித் தரவும்  சி.பி.ஐ. முயற்சி எடுக்கும்’’ என்றார் நம்பிக்கையுடன்.

உயர்நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸ் குறித்து தி.மு.க. வட்டாரத்தில் வேறுவிதமாக பேச்சு  உள்ளது.

“இந்த வழக்கு திடீரென வேகம் எடுக்கக் காரணம் சி.பி.ஐ.தான். தி.மு.க. தனித்துப் போட்டி என காங்கிரஸை  கழற்றிவிட்டவுடன் சி.பி.ஐ.யும் சுறுசுறுப்பாகிவிட்டது. அழகிரி ஆதரவாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதன்  மூலம் அவருக்கும் பிரஷர் கொடுக்க முயற்சிக்கிறார்கள்.இது காங்கிரஸின் வேலைதான்..’’ என்று  கொதிக்கிறார்கள் உடன்பிறப்புகள்.
இருந்தாலும், இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. நடத்தும்போது தமிழக அரசின் ஒத்துழைப்பு முழுமையாகக்  கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, பிறழ் சாட்சிகளாக மாறியவர்கள் எல்லாம் நீதிமன்றத்தில்  தைரியமாக சாட்சியம் அளிப்பார்கள் என்றும் சி.பி.ஐ. தரப்பு நம்புகிறது.
“மனித வாழ்வை புனிதமாகக் கருதுகிறோம். மற்றவர்களுக்குத் தீங்கிழைப்பதைவிட எங்கள் உயிரை  மாய்த் துக் கொள்வதையே விரும்புவோம்...’’ 

-இது பகத்சிங் கடைசியாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம்.

ஓர் உயிரின் அருமையை உணர்ந்து தூக்குக் கயற்றின் பிடியில் இருந்த போதுகூட பகத்சிங் கொடுத்த மரண  வாக்குமூலம் எங்கே...? மூன்று உயிர்களைக் குடித்து விட்டு தைரியமாக உலாவும் கொலைகாரர்கள் எங்கே...?  உயர்நீதிமன்றத் தீர்ப்புக்காக கண்ணீருடன் காத்திருக்கிறார்கள் உறவுகளை இழந்தவர்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

23_09_2011_005_051-mk-kin-fraud.jpg?w=640&h=305



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_09_2011_016_004_001.jpg?w=535&h=695

28_09_2011_016_007-rajaththi.jpg?w=356&h=496



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_09_2011_002_007-nkkp-raja-kunkum.jpg?w=459&h=441



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

28_09_2011_005_011-daya-engg-college.jpg?w=350&h=523



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

கனிமொழிக்கு தூக்கு தண்டனை கிடைக்கும் என்று செய்தி போடாதவரை மகிழ்ச்சி - கருணாநிதி!

 
கனிமொழிக்கு தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று செய்தி வெளியிடாதவரை மகிழ்ச்சியே என்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். 

கனிமொழி மீது தற்போது சி.பி.ஐ. சாற்றியிருக்கின்ற குற்றச்சாட்டு, பத்தாண்டுகள் தண்டனைக்குரியது என்று இன்று மாலைப் பத்திரிகைகளில் பெரிதாக வெளியிட்டிருக்கிறார்களே? என்று செய்தியாளர் கேட்ட கேள்விக்கு

''மாலை மலர், மாலை முரசு போன்ற நாடார் பத்திரிகைகள், கனிமொழி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் இந்த அளவிற்கு சாதிப் பற்றோடு அந்தச் செய்திக்கு முக்கியத்துவம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றெல்லாம் செய்தி வெளியிட்டிருக் கிறார்கள். அவர்கள் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்றுபோடவில்லை. அதுவரை மகிழ்ச்சி.'' என்று பதில் அளித்தார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகளுக்குப் பதிலாக பத்திரிக்கையாளர்களே நீதிபதிகளாக மாறி தீர்ப்பு வழங்குவது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்று கருணாநிதி மேலும் தெரிவித்தார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_10_2011_001_014-tamil-maiyam.jpg?w=518&h=689



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_10_2011_002_012-2g-cabinet.jpg?w=640&h=382



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_10_2011_009_002-kani-bail-plea.jpg?w=640&h=310



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_10_2011_402_023-stalin-promotion.jpg?w=640&h=723



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

21326734-cag-reaffirm-2g-loses.jpg?w=408&h=1125



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2242178-2g-new.jpg?w=640&h=653



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

02_10_2011_001_029-cbi-2g-70-k.jpg?w=640&h=506



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

29_09_2011_001_046-maxis-maran.jpg?w=548&h=601



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_10_2011_006_038-daya-land.jpg?w=531&h=698



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_10_2011_007_011-daya-cyber-park.jpg?w=539&h=364



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

 2382921-arivalayam-j.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_10_2011_012_018-day-tech-park.jpg?w=640&h=188



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2458546-kani-oppose.jpg?w=640&h=234



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_10_2011_001_005-kani-jamin.jpg?w=542&h=909



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_10_2011_015_007-stalin-friend-raided.jpg?w=548&h=576



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

24146125-ramdoss.jpg?w=640&h=1080



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22147937-mk-marans.jpg?w=640&h=1500



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வழக்கு மேல் வழக்கு.

ப்போதுதான் வீரபாண்டி ஆறுமுகம் விடுதலையாகி வெளியே வந்தார். அதற்குள் அடுத்த வழக்கு... சிக்கியதோ அவரது மகனும், மருமகள்களும். ‘இந்தக் கொடுமை  தேவையா?’ என்று குலதெய்வம் மாரியம்மன் கோயிலில் வலம் வந்து கொண்டிருக்கிறது வீரபாண்டியார் குடும்பம். 
ஏழரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தை அதிகார துஷ்பிரயோகம் செய்து வெறும் ஏழரை லட்ச ரூபாய்க்கு பினாமி மூலம் ஏலம் எடுத்து  மோசடி செய்ததாக, வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ஆ.ராஜா, ராஜாவின் மனைவி சாந்தி, வீரபாண்டியாரின் மறைந்த மகன் நெடுஞ்செழியனின் மனைவி பிருந்தா,  வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ் உள்ளிட்ட 16 பேர் மீது சேலம் மாநகர நில அபகரிப்பு மீட்புப் பிரிவு போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை  வழக்குப் பதிவு செய்தனர்.

சேலத்தின் ஹாட் டாபிக்காக அனைவராலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் இந்த விவகாரம் பற்றி போலீஸ் தரப்பில் விசாரித்தபோது அதிர வைக்கும்படியான பல தகவ ல்கள் கிடைத்தன.

‘‘சேலம் மாவட்டத்தில் தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள நில அபகரிப்பு மோசடி வழக்குகளில் இது கொஞ்சம் வித்தியாசமானது. வேளாண்மைத்துறையின் கட்டுப்பாட்டில்  இயங்கி வரும் சேலம் மாவட்ட கூட்டுறவு விவசாய சேவா சங்கம் சேலம் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. 

இந்தச் சங்கத்துக்கு சேலம் - கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் அரியானூர் அருகே 1973-ம் ஆண்டு  76 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. எந்தவிதப் பயன்பாடும்  இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து காணப்பட்ட இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தன் குடும்பத்தாருக்குத் தாரை வார்த்துவிட்டார். அதற்காக,  சங்கத்தின் தனி அதிகாரியாக இருந்த செல்வராஜை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

கூட்டுறவு விவசாய சேவா சங்கத்துக்குச் சொந்தமான இந்த நிலம், சங்கத்தை விட்டு வெகு தொலைவில் உள்ளதாலும், இந்த நிலத்தினால் சங்கத்துக்கு எந்தவிதமான  உபயோகமும் இல்லாததாலும் இந்த நிலத்தை விற்பனை செய்து விடலாம் என்று தனி அலுவலரான செல்வராஜ் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. 

சங்கத்தில் அப்போது நியமனப் பதவிகளில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வீரபாண்டி ஆ.ராஜா, அவரது மனைவி சாந்தி, ராஜாவின் அண்ணி பிருந்தா நெடுஞ்செழியன்  உட்பட 27 பேர் சேர்ந்து இதற்கான தீர்மானத்தை 14.09.2009 அன்று நிறைவேற்றியுள்ளனர். இதற்கு அடுத்த நாள் இதற்கான நில ஏல விற்பனைக்கான விளம்பரம்  நாளிதழ்களில் வெளியாகின. 

15.10.2009 நடந்த பொது ஏலத்தில் வீரபாண்டி ராஜாவின் பினாமி என்று கூறப்படும் காண்ட்ராக்டர் பெரியேரிப்பட்டி காமராஜ் மற்றும் அவரால் ஏற்பாடு செய்து அழைத்து  வரப்பட்ட 13 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த ஏலத்தில் கலந்து கொள்ள வந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த பொன். பழனிசாமி உள்ளிட்டோர் அடியாட்களால்  அடித்து விரட்டப்பட்டனர்.

மார்க்கெட் நிலவரப்படி சாலையோரத்தில் அந்தப் பகுதியில் இருந்த மற்ற நிலங்களின் விலை சதுர அடி சுமார் 2300 ரூபாய்க்கும் அதிகம். அதே சமயம், பொது ஏலம்  என்ற பெயரில் காமராஜுக்கு சதுர அடி நிலம் வெறும் 23 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.  

இந்த நில மோசடி பற்றி பொன். பழனிசாமி மற்றும் நான்கு பேர் போலீஸில் புகார் அளித்தும் கொண்டலாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த லட்சுமணன், அதன்  மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டார். 

சங்கத்தின் தனி அலுவலருக்கு சங்கத்தின் சொத்தினை விற்க எந்தவிதமான அதிகாரமும் இல்லை என்பதும், சர்ச்சைக்குரிய நிலம் பதிவாளரின் ஒப்புதல் இல்லாமலேயே  விற்கப்பட்டிருக்கிறது என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

இது தொடர்பாக வேளாண்துறை நடத்திய  விசாரணையில், முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமாகியிருக்கிறது. இதனையடுத்து, காமராஜுக்கு விற்கப்பட்ட நிலத்தை  அவரிடமிருந்து மீண்டும் திரும்பப் பெறுவது என்று அதிகாரிகள் முடிவெடுத்தனர். இது தொடர்பான மேல் நடவடிக்கைக்காக நிலம் விற்றது தொடர்பான கோப்புகள் வேளண்மை ஆணையரகத்தின் பதிவாளரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏழரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள அரசாங்கத்தின் சொத்தை வெறும் ஏழரை லட்ச ரூபாய்க்கு விற்க இந்த அதிகாரிக்கு தைரியமூட்டியது யார்? அவரைப் பின்னின்று  இயக்கியது யார்? யாருக்கோ பினாமியாக இருந்து இந்த நிலத்தை வாங்கிய பெரியேரிப்பட்டி காமராஜ் தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு ஒப்பந்தக்காரர். 

கடந்த ஐந்தாண்டுகளில் பெரிய அளவில் அவர் சொத்து சேர்த்திருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

76 சென்ட் நிலத்தை வாங்கியதிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. யாருடைய உத்தரவையோ செயல்படுத்துவதற்காக தனி அதிகாரி செல்வராஜ் தன்னிச்சையாக முழு  அதிகாரங்களுடன் நடந்து கொண்டுள்ளது வெளிப்படையாகவே தெரிகிறது. சங்கத்தின் நில விற்பனையை பெரும் குற்றமாகக் கூறும் அவர், அது குறித்து போலீஸில் புகார்  செய்யாமல் ஏலத்தை எடுத்தவருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் மட்டும் அனுப்ப என்ன காரணம்? 

குற்றம் சாட்டப்பட்டவரை அதிலிருந்து விடுவிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே உள்ளது. நிலத்தை திரும்ப ஒப்படைத்து விட்டால் நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பதாக நீதிபதியைப் போல தனி அதிகாரி செல்வராஜ் எப்படி உத்தரவிட முடியும்? போன்ற வினாக்கள் பாதிக்கப்பட்ட பழனிசாமி தரப்பால் எழுப்பப்பட்டன.

நீதிமன்ற உத்தரவையடுத்து, இந்தப் புகாரின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றனர் போலீஸார்.

இதுகுறித்து வீரபாண்டியாரின் மூத்த மகள் மகேஸ்வரி, “இதுவரையில் எங்கள் குடும்பத்து ஆண்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் போட்டாங்க. இப்போது இந்த  வழக்கில் செழியன் மனைவி பிருந்தாவையும், ராஜா மனைவியையும் சேர்த்திருக்காங்க. இதெல்லாம் நியாயமான்னு எங்க குலதெய்வம் மாரியம்மன்கிட்ட முறையிட்டு வந் திருக்கோம்’’ என்றார் அமைதியாக.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

2334562-arivalayam.jpg?w=640&h=276



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_11_2011_002_011-kani-cbi.jpg?w=640&h=539



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_11_2011_001_063-kani.jpg?w=533&h=655



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_11_2011_011_002-day-cyber-park.jpg?w=640&h=363



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22239437-hc-tnpsc.jpg?w=640&h=632



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

22956265-kalignar.jpg?w=640&h=201



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

mk-kani-daya.jpg?w=640&h=796

mk-kani-daya-2.jpg?w=640&h=838



__________________
« First  <  Page 14  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard