
http://idlyvadai.blogspot.com/2010/08/blog-post_1252.html
தமிழ்நாட்டில் நிலவும் விசித்திரமான சமூக, அரசியல், பத்திரிகைச் சூழல் என் ‘ஓ’பக்கங்கள் பகுதிக்கு இதழியல் வரலாற்றில் இடம் தேடிக் கொடுத்திருக்கிறது. ஓர் எழுத்தாளரின் ‘பத்தி’ தொடர்ந்து வெவ்வேறு பத்திரிகைகளில் வருடக்கணக்காக வெளியாவது இதுவே முதல் முறை. கடந்த ஏழாண்டுகளில் இரண்டு பத்திரிகைகளில் இடம் மாறி இப்போது மூன்றாவதாக ‘கல்கி’ இதழுக்கு வந்திருக்கிறது. காரணங்கள் விமர்சனங்களைச் சகிக்காத அரசியல் சூழலும், கருத்துச் சுதந்திரத்தைவிட வணிகத்தை முதன்மைப்படுத்துகிற பத்திரிகைச் சூழலும் தான்.
கல்கி இதழில் நான் எழுதும் முதல் தொடர் பகுதி இதுவேயாகும். என்னுடைய இரண்டு சிறுகதைகள் எழுபதுகளில் கல்கியில் வெளிவந்திருக்கின்றன. அதில் ஒரு கதை ‘டெலிவிஷன்’. நேரடி ஒளிபரப்பில் பங்கேற்கும் ஒரு வேலையற்ற பட்டதாரி இளைஞன், யாரும் எதிர்பாராதபோது லஞ்சம் ஊழல் பற்றிப் பகிரங்கமாகப் பேசி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பற்றிய கதை. இது வெளியானதும் அப்போது தூர்தர்ஷனில் நேரடி ஒளிபரப்புகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். வெவ்வேறு தேர்தல் சமயங்களில் சிறப்பு நிருபராக கல்கி சார்பில் சென்று தொகுதி நிலவரங்கள் பற்றி சில கட்டுரைகள் எழுதி யிருக்கிறேன். 1978-இல் நாங்கள் பரீக்ஷா நாடகக் குழு தொடங்கியபோது. முதல் நாடகம் பற்றி எழுதிய ஒரே வார இதழ் ‘கல்கி’தான்.
லஞ்சம் ஊழல் இல்லாத நேர்மையான அரசு நிர்வாகம் வேண்டும்; சக மனிதர்களிடம் அன்பும் சமத்துவமும் பேணும் வாழ்க்கை நெறி குழந்தையிலிருந்தே ஊட்டு விக்கப்படவேண்டும்; ஆபாசமும் வக்கிரமும் வன்முறையும் ஆதிக்கம் செலுத்தாத கலை இலக்கியச் சூழல் வேண்டும்... என்ற பார்வைகள்தான் நானும் ‘கல்கி’ இதழும் சந்திக்கும் புள்ளிகள். என்னை ‘ஓ’ போடவைக்கும் ஆச்சரியமான, அதிர்ச்சியான, அவலமான, அக்கறைக்குரிய விஷயங்களைப் பற்றி இங்கே வாசகர்களுடன் பகிர்வதே இந்தப் பகுதியின் நோக்கம். பல விஷயங்களைப் பற்றி நம் கருத்து உடன்படலாம்; மாறுபடலாம். ஆனால் எல்லாவற்றைப் பற்றியும் விவாதிப்பதற்கும் சிந்திப் பதற்குமான ஒரு கருத்துச் சுதந்திரச் சூழல் தேவை என்பதே நம்மை இணைக்கும் ஒற்றைப் பார்வை.
பொதுவாக நடிகர்களுக்குக் கூச்சம் இருக்கக்கூடாது என்பது நடிப்பின் தேவைகளில் ஒன்று. எந்தப் பாத்திரத்தையும் ஏற்று நடிக்க அப்போதுதான் முடியும். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, வசனகர்த்தாவாக நாடகத்திலும்
சினிமாவிலும் பெயர் வாங்கியவர்; நடிகராக அல்ல. ஆரம்ப நாட்களில் ஒரு சில நாடகங்களில் நடித்திருக்கிறார். அப்போதுதான் அவருக்குக் கூச்சம் விட்டுப் போயிருக்க வேண்டும்.
இன்று தமிழ்நாட்டில் எதைப் பற்றியும் எந்தக் கூச்சமும் இல்லாத அரசியல்வாதிகளில் முதன்மையானவர் அவர் ஒருவர்தான்.
அரசு திட்டங்களுக்கும் கட்டடங்களுக்கும் தலைவர்களின் பெயர் சூட்டும் வழக்கம் அங்கொன்றும் இங்கொன்றுமாக அபூர்வ மாக இருந்ததை, எழுபதுகளில் தாம் ஆட்சிக்கு வந்தபிறகு மிகப்பெரிய அளவில் விரிவுபடுத்தியவர் கலைஞர் கருணாநிதி.
இதற்கு முன்பெல்லாம் அரசு திட்டங்களுக்கு பெரியார், அண்ணா பெயரையோ அஞ்சுகம் அம்மையார் பெயரையோ முத்துவேலர், முத்துலட்சுமி பெயர்களையோ சூட்டிக்கொண்டிருந்தவர், இப்போதெல்லாம் தம் பெயரையே சூட்டிக் கொண்டிருக்கிறார். கலைஞர் காப்பீட்டு திட்டம், கலைஞர் வீட்டு வசதி திட்டம், கலைஞர் மாளிகை என்று பெயர்கள் சூட்டப்படுகின்றன.
அரசாங்கத்தின் ராணி மேரி மகளிர் கல்லூரியில் புதிய கட்டடத்துக்குத் தம் பெயரைச் சூட்டிவிட்டு தானே அதைத் திறந்தும் வைத்திருக்கிறார். ஒப்புக்காக அதைத் திறக்கப் பேராசிரியர் அன்பழகனாரைக் கூட அழைக்கவில்லை. இன்னும் பாக்கியிருப்பது தமக்கான சிலை, தம் உருவப்படம், தம் பெயரில் அருங் காட்சியகம்... இவற்றையும் அவரே திறந்து வைப்பதுதான்.
கலைஞர் பெயர் சூட்டப்பட்ட வீட்டு வசதி திட்டம், மத்திய அரசின் நிதி உதவியுடன் நடக்கிறது என்று கூட்டணியை ‘வலி’க்கச் செய்யும் ஒரு பேச்சை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதும், அதற்கு கருணாநிதி ஒரு விரிவான பதில் அறிக்கை வெளியிட்டார். கலைஞர் வீட்டு வசதி திட்டம் முழுக்க மாநில நிதியில் நடக்கிறது. மத்திய அரசின் இந்திரா காந்தி திட்டத்துடன் அதை இளங்கோவன் குழப்பிக்கொண்டு விட்டார் என்பதுதான் அறிக்கையின் சாராம்சம். ஆனால் மாநில அரசு நிதியில் நடப்பதால், அதற்கு தம் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்பது பற்றி பதிலே கிடையாது.
இதில் இன்னொரு பிரச்னை என்ன வென்றால் கலைஞர் என்பதை தம் பெயர் என்று கலைஞர் கருணாநிதியே நம்பத் தொடங்கிவிட்டார் என்பதுதான். அதனால் தான் ஜெயலலிதா தன்னைக் கருணாநிதி என்று குறிப்பிட்டுப் பேசுவதைக் கண்டித்து ஒரு பொதுக் கூட்டத்தில் பொரிந்து தள்ளியிருக்கிறார். ‘என் வயது என்ன, உன் வயது என்ன’ என்றெல்லாம் ஏகவசனம் வேறு. கூடவே ‘நான் வயதில் பெரியவன் என்பதால் உன்னைக் குழந்தையிலிருந்தே எனக்குத் தெரியும் என்பதால் ஏகவசனத்தில் கூப்பிடும் உரிமை எனக்கு உண்டு’ என்று சமாதானம் வேறு.
ஒருவரை அவர் பெயர் சொல்லி அழைப் பது தவறு என்ற விசித்திரமான பண்பாடு தமிழக அரசியலில் மட்டும்தான் இருக்கிறது. இதில் இடதுசாரிக் கட்சிகளைத் தவிர மீதி எல்லா கட்சிகளும் தங்கள் தலைவர்களுக்கு அடைமொழி சூட்டும் கலாசாரத்தில் விழுந்திருக்கின்றன.
தமிழ்நாட்டுக்கு வெளியே பத்திரிகையாளர்கள் பிரதமரை ‘மிஸ்டர் மன்மோகன் சிங்’ என்றோ மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர் என்றோ முகத்துக்கு நேரே கூப்பிடுகிறார்கள். இங்கே அப்படிப் பேசினால் உதை விழும். அலுவலகத்துக்கு ஃபோன் செய்து நிருபரைப் பற்றிப் புகார் செய்வார்கள்.
ஜெயலலிதா தம்மைக் கருணாநிதி என்று அழைப்பது பண்பாட்டுக் குறைவு என்று அறிக்கை விடுத்திருக்கும் இதே கருணாநிதி தான், தொடர்ந்து தம் ஆட்சியை மைனாரிட்டி தி.மு.க அரசு என்று ஜெயலலிதா பேசினால், அவரை திருமதி ஜெயலலிதா என்று அழைப்பேன் என்று பண்பாடு பொங்கித் ததும்பும் ஓர் எச்சரிக்கையை வெளியிட்டார். ஜெயலலிதா திருமதியா இல்லையா என்பதற்கும் தி.மு.க. மைனாரிட்டி அரசா இல்லையா என்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
உலகத்தில் எந்த நாட்டிலும் இங் குள்ளது போல அரசியல்வாதிகளின் பெயர் சூட்டும் கலாசாரம் இல்லை. மிகப் பெரும் தலைவர்களின் பெயர்களை விமான நிலை யத்துக்கோ நூலகத்துக்கோ சூட்டும் போதுகூட அவர் இறந்த பிறகே சூட்டுகிறார்கள். சிலைகள் வைப்பதும் அப்படித்தான்.
ஜாதிச் சண்டைகள் வருகின்றன என்பதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்கள் பெயர்களில் இருந்த தலைவர்கள் பெயர்களையெல்லாம் நீக்கி உத்தரவிட்டவர் கலைஞர் கருணாநிதி. தம் நெஞ்சறிவது பொய்யற்க என்ற கூச்சம் இன்னும் கொஞ்சமேனும் அவருக்கு மீதம் இருக்குமானால், உடனடியாக அரசு திட்டங்கள், கட்டடங்கள் பெயர்களிலிருந்து தம் பெயரை நீக்க அவர் உத்தரவிட முன்வரவேண்டும். இல்லாவிட்டாலும் பின்னாளில் ஆட்சி கைமாறும்போது, இந்தப் பெயர்களெல்லாம் அடுத்த ஆட்சியாளரால் நீக்கப்படும் என்ற உண்மையாவது அவருக்கு உறைக்க வேண்டும்.
இன்னும் நூறு வருடம் கழித்து வரும் தமிழ்க் குழந்தைகள் இப்படித் தம் பெயரை தாமே சூட்டி மகிழ்ந்த தலைவர்கள் பற்றி என்ன நினைப்பார்கள் என்று தயவுசெய்து கற்பனை செய்து பாருங்கள். கூச்சமாக இருக்கும்.
கல்கி, ஞாநிக்கு வாழ்த்துகள்

மேடையில் பேச விரும்பும் பேச்சாளர்கள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டும், கூட்டத்தில் இருந்து சிறு மூச்சு கூட வரவில்லை. காரணம், கலைஞர் முன்னிலையில் எதைப்பேசுவது? எப்படி பேசுவது, பாராட்டி பேசுவதா? தங்கள் பிரச்னைகளை எடுத்துப் பேசுவதா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தனர்.

ஆனால், இ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சிலரின் எதிர்ப்புக் குரல் கேட்கவே, ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதோடு, தியாகி சுடலைமுத்து நாடார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் கலைஞர்.

வில்லிவாக்கம் பகுதி மக்கள் மீது மட்டும் தி.மு.க.காரர்களுக்கு ஏன் இந்த திடீர் பாசம்? தொகுதியில் இருக்கும் தி.மு.க. தலைகளிடம் விசாரித்தோம்.
‘கடந்த மூன்று தேர்தல்களாக வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. கூட்டணிதான் ஜெயித்து-வருகிறது. அந்த வகையில் இந்தத் தொகுதி தி.மு.க. தலைவர்கள் போட்டி போட பாதுகாப்பான தொகுதிதான். கடந்த தேர்தல் வரையில் இந்தத் தொகுதிதான் தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. ஆனால், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் இந்தத் தொகுதியிலிருந்து சில ஏரியாக்களைப் பிரித்து, அம்பத்தூர் என்ற புதுத் தொகுதியை உருவாக்கிவிட்டனர். அதனால், கிட்டத்தட்ட ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களை உள்ளடக்கி இருந்த இந்தத் தொகுதியின் இப்போதைய வாக்களர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர்தான். ஆக, குறைந்த அளவுள்ள வாக்காளர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களை தங்கள் பக்கம் அரவணைத்துக் கொண்டுவிட்டால், எளிதாக ஜெயித்துவிடலாம் அல்லவா?
கொசுக்களும் மனிதர்களோடு போட்டிப்போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கு. புழல் ஏரியில் இருந்து நியூ ஆவடி ரோடு டேங்க்கிற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. அந்த குழாயின் இரண்டு பக்கமும் குடியிருக்கும் மக்கள் குழாய்க்குள்ளேயே எல்லாக் கடன்களையும் முடிக்கிறார்கள். சுகாதாரமில்லாமல் இருப்பதால், அந்த குழாய் பக்கத்தில் வாழும் பனிரெண்டாயிரம் குடும்பங்களை அகற்ற அரசு முயற்சித்து வருகிறது. அது பெரும் பிரச்னையாக இருக்கிறது. தொகுதிக்குள் ரவுடிகள் ராஜ்யம், கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. இப்படி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஆறுமாத இடைவெளிக்குள் தீர்த்து விட முடியுமா?’’ என்கிறார்கள் லோக்கல் சமூக ஆர்வலர்கள்.



காலை 9.50 மணிக்கு வெற்றி முரசு ஒலிக்க விஜயகாந்த் கார் திருமணப் பந்தலுக்குள் நுழைந்தது. தாம்பூலத் தட்டில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து மணமகன் கையில் கொடுத்தார் விஜயகாந்த். கட்டி முடித்ததும் ஆசீர்வதித்துவிட்டு, மணமக்களை கையோடு கூப்பிட்டு வந்து மண்டபத்துக்கு வெளியே பொதுக்கூட்ட மேடையில் உட்காரவைத்தார்.

![[dinakaran.jpg]](http://saintthomasfables.files.wordpress.com/2010/07/dinakaran.jpg?w=209)
![[dn_100507_e1_04_cni.jpg]](http://saintthomasfables.files.wordpress.com/2010/07/dn_100507_e1_04_cni.jpg?w=209)





இந்த விஷயம் மெல்ல சேலம் பகுதி தி.மு.க.-வினரிடமும் பரவ ஆரம்பிக்க, இரண்டுவிதமான ரியாக்ஷன்கள் சேலம் தி.மு.க.வில்.
இதுபற்றியெல்லாம் அவ்வப்போது லேசுபாசாக முதல்வரிடம் சொன்னபோது, ‘யோவ், நானே பல விஷயங்களில் ஸ்டாலின் சொல்றபடிதானேய்யா நடந்துக்கறேன்...’ என்று சொல்லி, அடுத்த தலைமுறைக்கு வழிவிடுமாறு மறைமுகமாக உணர்த்தியிருக்கிறார். அதன்பிறகுதான், வீரபாண்டியாருக்கு ஓய்வு விஷயத்தில் தீவிர எண்ணம் வந்துவிட்டது’’ என்றார்.







இந்த முப்பெரும் விழாவில் எப்போதும் ஒரு மெசேஜ் இருக்கும். இந்த முறை கிடைத்த மெசேஜ்... கலைஞர் தனது வாரிசுகளின் மூக்குடைத்துவிட்டு, குஷ்புவுக்கு ராஜ மரியாதை செய்திருப்பதுதான். அந்த விஷயத்துக்கு இறுதியில் வருவோம். நாகர்கோவில் தேர்வான ரகசியம்!
‘ ஆளாளுக்கு என் பேரை சேருங்கன்னு டார்ச்சர் செய்யறீங்களா... இருங்க என் வேலையை நான் காட்டுறேன்’ என்று கலைஞர் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் மறுநாள் தான் தெரிந்தது.
இதற்கிடையில், முப்பெரும் விழா நாளில் நான் மதுரையில் இல்லாமல் இருப்பது போல் வெளியே தெரியக்-கூடாது. மதுரையில் இருந்து கொண்டுதான் விழாவுக்கு வரவில்லை என எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே, தொகுதி மேம்பாட்டு நிதியில் மதுரையில் நடைபெறும் சில வேலைகளை தனது படை, பரிவாரங்கள் சூழ சென்று பார்வை-யிட்டாராம் அழகிரி.
அப்படி வந்த லாபமான 18ஆயிரத்து 500 கோடி ரூபாயில் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களையும் பிராட் பேண்ட் சேவை கண்ணாடி இழைகள் (பைபர் ஆப்டிகல்) மூலம் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டம்தான் இந்த திட்டம்’’ என்றனர். 







ராமநாதபுரம் எம்.ஏ.சேக் ஆரம்ப காலம் தொட்டு மு.க.அழகிரியின் தீவிர விசுவாசி. அழகிரியின் ஆதரவாளராக அடையாளம் காட்டப்பட்டதாலேயே அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான ‘சூப்பாத்தா’வின் (லோக்கல் உடன்பிறப்புகள் சுப.தங்கவேலனுக்கு வைத்த செல்லப் பெயர் இது) அக்கினி பார்வைக்கு ஆளானார் எம்.ஏ.சேக். அதனாலேயே, இன்று வரைக்கும் தி.மு.க.வில் பதவி ஏதும் இல்லாமல், கரை வேஷ்டி கட்டிய தி.மு.க. தொண்டனாக மட்டும் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் ‘அழகிரி ஆதரவாளர்’ என்ற முத்திரையை மட்டும் எம்.ஏ. சேக் இழக்க விரும்பியது கிடையாது.
‘‘அழகிரி அண்ணனைப் பார்க்க வேண்டாம் என்று மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுக்கு ‘சூப்பாத்தா’ கட்டளை போட்டாலும்... அண்ணன் கோபித்து கொள்வார் என்பதற்கு பயந்து, பரமக்குடி யூனியன் அலுவலகம் முன்பாக தனது மகன்களான சுப.த. சம்பத், சுப.த. திவாகர் இரண்டு பேரையும் வரவேற்கச் சொல்லி நிறுத்தியிருந்தார். சூப்பாத்தாவின் மகன்களுடைய வரவேற்பு பற்றி தகவல் தெரிந்ததும் அண்ணன், தனது ரூட்டையே மாற்றி சிவகங்கை, நயினார்கோவில், ஆர்.எஸ்.மங்கலம் என பரமக்குடிக்குள் நுழையாமலேயே ராமநாதபுரத்துக்கு வந்துவிட்டார்.






