இருந்தும் ராசாத்தி அம்மாள் ஒற்றைக் காலில் நின்று வேண்டாம் என்று கறாராகச் சொல்லிவிட்டாராம்...’’
‘‘ஏனாம்?’’
‘‘குஷ்புவை எப்படியும் அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பு கச்சை கட்டி நிற்கிறதாம். இதுதான் ராசாத்தி அம்மாளின் பயங்கர கோபத்துக்குக் காரணம். மேலும், கனிமொழியும் அழகிரியின் மகள் கயல்விழியும்கூட, ‘குஷ்புவுக்கு ஏன் தளபதி தரப்பு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?’ என சீறினார்கள ம். ஒருபக்கம் அண்ணனுக்கு ஒரு செக்... இன்னொரு பக்கம் மறைமுகமாக சகோதரிக்கு ஒரு செக்... இதுதான் தளபதியின் மூவ் என நினைக்கிறார்களாம்.’’
‘‘ஓ’’
‘‘மேலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் யாரோடு கூட்டணி வைப்பது என்ற விவாதத்திலும்கூட சர்ச்சை நடந்ததாம். எப்படியும் விஜயகாந்தை கூட்டணிக்குள் வளைத்துப் போட்டுவிட வேண்டும் என ராசாத்தி அம்மாள் தரப்பு முனைப்பாக இருந்ததாம். கனிமொழிக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடக்க... தொகுதி சீட்டுகள் கம் சில ‘ப’ விட்டமின் விவகாரம் குறித்தும் அலசி, ஓ.கே. என பேச்சு கனிந்துவிட்டதாம். இது கட்சித் தலைமைக்குச் சொல்லப்பட்ட நிலையில், ஸ்டாலின் தரப்பு மட்டும் ‘ஏன் வீண் வேலை?’ என கூட்டணிக்கு முட்டுக்கட்டை போட்டதுடன் தவிர்த்துவிட்டதாம். ‘அப்போதே கேப்டன் தலையைப் பிடிக்காமல் இப்போது வாலைப் பிடிக்க ஸ்டாலின் தரப்பு குலாவுகிறது. ஆரம்பத்தில் கனிமொழியால் ஏற்பட்ட கூட்டணியை ஸ்டாலின் சம்மதித்திருந்தால் இந்த வீழ்ச்சி நடந்திருக்காது. அப்போதும் அவருக்கு பக்குவம் இல்லை; இப்போதும் இல்லை’ என காய்ச்சி எடுக்கிறதாம் ராசாத்தி தரப்பு..’’











































ஆனால், அந்த அதிருப்தியை நம் பக்கம் கொண்டுவர நம்மால் முடியவில்லை. காரணம், அ.தி.மு.க. மீது இருக்கும் அதிருப்தி தொடர்ந்து நீடிப்பதில்லை. தோன்றிய நிலையிலேயே மறைந்துவிடுகிறது. ஏனென்றால், யார் தப்புச் செய்தாலும், அவர்களைத் தள்ளி வைக்கிறார் ஜெயலலிதா. அதனால், அந்த மாவட்டச் செயலாளர் மீதோ அமைச்சர் மீதோ ஏற்பட்ட அதிருப்தி சில நாட்களில் மறைந்துவிடுகிறது. நம் கட்சியில் 20 வருடம், 30 வருடம் என்று ஒரே மாவட்டச் செயலாளர் இருந்தால், அவர் தவறு செய்திருந்தாலும் அவர் மீது நடவடிக்கை...’ என்று அன்பழகன் பேசிக்கொண்டிருந்தபோதே கருணாநிதி குறுக்கிட்டு, ‘இங்கே அதைப் பேச வேண்டாம். நாம் தனியாகப் பேசலாம். எனவே, அந்த சப்ஜெக்ட்டை விட்டுவிடுங்கள்’ என முட்டுக்கட்டை போட்டுவிட்டாராம். அத்துடன் அன்பழகன் அமர்ந்துவிட்டார். எப்போதுமே கருணாநிதி மனதில் நினைப்பதை மட்டுமே வார்த்தைகளாகக் கொட்டும் அன்பழகன், இப்படி முரண்பட்டுப் பேசியதில் எம்.எல்.ஏ.க்களுக்கு ஏக அதிர்ச்சியாம்.
ஆரம்ப காலம்தொட்டே கட்சியில் தனக்கென்று ஆதரவாளர்கள் யாரையும் அன்பழகன் வைத்துக்கொள்வதில்லை. ஆனாலும் தவறாமல் அன்பழகன் வீட்டில் ஆஜராகிவிடுவார். இது இன்று நேற்றைய பழக்கமல்ல. 1967-ல் அன்பழகன் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காலத்திலேயே, எம்.எல்.ஏ.வாக இருந்த ஆற்காட்டார் தேடிப்போய் உருவாக்கிக்கொண்ட பழக்கம் அது. பிந்தைய ஆண்டுகளில் ஆற்காட்டாருடன், துரைமுருகனும் சேர்ந்துகொள்வார். மூவரும் கட்சியின் நடவடிக்கைகளை விவாதிப்பதுண்டு. கொஞ்ச நாட்களாகவே, “நம் கட்சியின் போக்கு எனக்கே பிடிக்கவில்லை. அண்ணா நாடகம் எழுதி, அந்த நாடகத்தில் அவரே நடித்து வளர்த்த கட்சி இது. இன்று கட்சியின் எதிர்காலம் கேள்விக்குறியாகத் தெரிகிறதே? என்று வருத்தப்பட ஆரம்பித்துவிட்டாராம் அன்பழகன். ‘நானாவது அரசியலில் இருந்து விலகி இருக்கலாம் என்றால், கலைஞர் விட மறுக்கிறார். என்னைக் கட்டாயப்படுத்தி இந்த முறை தேர்தலில் நிற்க வைத்தார். என்ன செய்வது என்றே தெரியவில்லை” என அன்பழகன் நொந்துபோய் பேசியதாகக் கூறுகிறார்கள். துரைமுருகனும் தன் பங்குக்கு, “இந்தத் தேர்தலில், சீனியர்கள் ஒதுங்கிக்கொள்ளலாம். அடுத்த தலைமுறைக்கு வழிவிடலாம். கட்சியை வழி நடத்தும் குழு ஒன்றை அமைத்து அதற்கு நீங்களே தலைவராக இருங்கள்’ என்று தலைவரிடம் பேசிப் பார்த்தேன். அவர் ஒப்புக்கொள்ளவேயில்லை. ‘அப்படி செஞ்சா என்னை யாருய்யா மதிப்பான்?’ என்று தலைவர் கோபப்படுகிறாரே தவிர, யதார்த்தத்தை அவர் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை” என கொட்டித் தீர்த்ததாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே கட்சியிலிருந்தும் தீவிர அரசியலிலிருந்தும் ஒதுங்கியே இருக்கும் ஆற்காட்டார், ‘என்னைக் கேட்டால், ஸ்டாலினை முன்னிறுத்தி கடந்த முறை தேர்தலைச் சந்தித்து இருக்கலாம். அதைச் சொன்னால், தலைவருக்குப் பிடிக்காதே?’ என்கிறாராம், சக தலைவர்களிடம்.



