New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!


Guru

Status: Offline
Posts: 24603
Date:
RE: ‘டிவி சீரியல் ‘ பார்க்காதீர்கள் : கனிமொழி!
Permalink  
 


01_01_2012_010_007.jpg alagiri off ice  suurrender



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

04_01_2012_001_050.jpg Raja kani



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

04_01_2012_009_009.jpg acharya



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

05_01_2012_004_037.jpg ALAGIRI



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

05_01_2012_002_011.jpg Raj meets achari



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

06_01_2012_012_009.jpg Udayanithi



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

06_01_2012_012_011.jpg Kani Birthday



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

06_01_2012_003_002.jpg Udayanithi



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

21822843.JPG daya college



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

06_01_2012_013_026.jpg 2G UN Wanted qustions



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

24039859.JPG kani rasathi



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

07_01_2012_012_003.jpg udayanithi



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

09_01_2012_001_027.jpg Mk uzal



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கனிமொழி கையில் இளைஞர் அணி?மூத்த திமுக நிர்வாகிகளுக்கு விரைவில் 'விஆர்எஸ்

 

 
செங்கல்பட்டு: இளைஞர் அணியினருக்கு வயது நிர்ணயம் செய்யப்படுவதைப் போல மாநில அளவிலும் நிர்வாகிகளுக்கு வயது நிர்ணயம் செய்யப்படும். அப்போது நானே கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக இளைஞர் அணிச் செயலாளராகவும் இருக்கும் 54 வயது மு.க.ஸ்டாலின் சமீபத்தில், 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு திமுக இளைஞர் அணியில் இடமில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது திமுக இளைஞர் அணியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் அவர் மும்முரமாக இறங்கியுள்ளார்.இதுகுறித்து செங்கல்பட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தி.மு.க.வில் அடிமட்டம் முதல் மேல் மட்டம் வரை இளைஞர்கள் பங்குபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நான்கூட பதவிக்காக ஆசைப்பட்டு இந்த பொறுப்பில் இல்லை. 

தி.மு.க. இளைஞர் அணியில் ஒன்றிய அளவில் 30 வயது, மாவட்ட அளவில் 40 வயது என நிர்வாகிகளுக்கு வயது நிர்ணயிப்பதுபோல் மாநில அளவிலும் நிர்வாகிகளுக்கு வயது நிர்ணயம் கொண்டு வரப்படும். அப்போது நான்கூட மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்.

தி.மு.க.வுக்கு இளைஞர்கள் மூலம் புதுரத்தம் கொடுக்க முயற்சி எடுத்து வருகிறேன். ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் உள்ள நிர்வாகிகள் எவ்வாறு பணி செய்கிறார்கள் என்பதை நானே நேரடியாக பார்வையிடுவேன். நிர்வாகிகள் மாற்றம் 4,5 மாதங்களில் முடிந்து விடும் என கருதுகிறேன் என்றார்.

இதன் மூலம் மாநில நிர்வாகிகள் மட்டத்தில் பெரிய அளவிலான மாற்றத்தை திமுக சந்திக்கப் போவதாக கூறப்படுகிறது. திமுக இளைஞர் அணிப் பொறுப்பிலிருந்து ஸ்டாலின் விலகி அவருக்குப் பதில் வேறு ஒருவர் நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தப் பொறுப்பி்ல கனிமொழி அமர்த்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏகமாக உள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி, திஹார் சிறைக்குப் போய் தியாகியாக திரும்பி வந்துள்ள கனிமொழிக்கு முக்கியப் பதவி தர வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. அதற்கேற்ப இளைஞர் அணிப் பொறுப்பை அவருக்கு அளிக்கும் வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

அதேபோல மாநில அளவிலான பல மூத்த திமுக நிர்வாகிகளுக்கும் விடை கொடுத்து வீட்டுக்கு அனுப்பப்படும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

 


களமிறங்கிய கனிமொழி. வழிமறித்த உறவுகள்.

Sunday  08  January  2012  01:36:19 PM

முன்பெல்லாம் கனிமொழியின் பிறந்தநாள் தேதிகூட கட்சியின் நிர்வாகிகளுக்குத் தெரியாது. ஆனால், இன்றோ நிலைமை தலைகீழாகியிருக்கிறது. பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் கனிமொழியும் இடம்பிடித்துவிட்டார். கனிமொழியின் பிறந்தநாளை வியாழனன்று தமிழகம் முழுவதும் தடபுடலாக கொண்டாடி அசத்தியிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்!

வழக்கமாக கருணாநிதியின் பிறந்த நாளுக்கு மட்டுமே தொண்டர்கள் திரண்டுவந்து வாழ்த்துச் சொல்வார்கள். கடந்த தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு கருணாநிதிக்கு இணையாக அவரது பிறந்தநாளை வட மாவட்டத் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல், அழகிரியின் பிறந்த நாளை தென் மாவட்டத்தில் உள்ள உடன்பிறப்புகள் கொண்டாடி வருகின்றனர். இந்த கொண்டாட்டங்களை எல்லாம் விஞ்சும் வகையில் இப்போது கனிமொழியின் பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். 

திகார் ஜெயிலில் இருந்து சென்னை திரும்பிய கனிமொழிக்கு பல்வேறு பட்டங்கள் வழங்கி உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கருணாநிதி மட்டுமல்லாது ஒட்டுமொத்த கோபாலபுரமே சென்று அவரை விமான நிலையத்தில் வரவேற்றது. இதனைத் தொடர்ந்து கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; மாநில அளவில் பொறுப்புகள் கொடுக்க வேண்டும் என்று அவரது தாயார் ராசாத்தி அம்மாள் கருணாநிதியை வலியுறுத்தத் தொடங்கினார். இது குடும்பத்துக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் எப்போதும் இல்லாத அளவிற்கு பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடியிருக்கிறார்கள். 

இது குறித்து ராசாத்தி அம்மாளுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் ஆண்டுதோறும் கனிமொழி பிறந்தநாளை அந்த மாவட்டத்தில் கொண்டாடுவார்கள். அவர்கள் பலர் இப்போது சென்னைக்கு வந்துவிட்டனர். இந்த ஆண்டு சென்னையில் கனிமொழி பிறந்த நாளை கொண்டாட வேண்டும் என்று நினைத்து ராசாத்தி அம்மாளை அணுகினார்கள். அவரும் பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கொண்டாட சம்மதித்தார். இதுகுறித்து போஸ்டர், அழைப்பிதழ் அடித்தபோது, வட சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சேகர் ‘என்னுடைய பெயரைப் போடக்கூடாது. நான் வர மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். இதையடுத்து அவர் பெயர் போடாமல் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. இதை சிலர் பிரச்னையாக்கிவிட்டார்கள். கருணாநிதி தலையிட்ட பின்னரே அவர்கள் விழாவை நடத்த சம்மதித்தார்கள்’’ என்று கூறினர். 

தி.மு.க. புள்ளிகள் சிலரிடம் கேட்டபோது, ‘கனிமொழிக்கு கட்சியிலும் அரசியலிலும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்று அவர் தாயார் விரும்புகிறார். அவர் பின்னணியில்தான் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடந்தது. அவர்கள் ஸ்டாலின் பெயரையோ, கட்சியின் மாநில நிர்வாகிகள் பெயரையோ போடாமல் அழைப்பிதழ் அச்சிட்டுவிட்டார்கள். இது ஸ்டாலின் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தது உண்மைதான். இந்த கொண்டாட்டத்தை கோபாலபுரம் வீட்டினர் யாரும் விரும்பவில்லை. பின்னர் தலைவர் தலையிட்டு பேசினார். அழைப்பிதழில் ஸ்டாலின் பெயரைப் போட வேண்டும் என்று அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டனர். கூடவே பேராசிரியர் பெயரையும் இணைத்துக் கொண்டனர். மாவட்டச் செயலாளர் சேகரை தலைவரே போனில் தொடர்பு கொண்டு விழாவை சிறப்பாக நடத்த உத்தரவிட்டுள்ளார்’’ என்றார்.

கனிமொழிக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்பதால்தான் கோபாலபுரத்து வீட்டினர் இது போன்ற தடங்கல்களை ஏற்படுத்துவதாக ராசாத்தி தரப்பு நினைக்கிறது. கோபாலபுரத்தைச் சேர்ந்தவர்களோ, ‘வழக்கில் சிக்கிய கனிமொழியால் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்கிறது. ஆளும் கட்சியில்கூட அவப்பெயருக்கு பயந்துதான் ஒரு குடும்பத்தினரையே ஒதுக்கி வைத்துள்ளார்கள். இதனால் அவர்கள் கட்சியின் ‘இமேஜ்’ மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கனிக்கு எந்த பதவி கொடுத்தாலும் மக்கள் விரும்ப மாட்டார்கள் அதனால்தான் வேண்டாம் என்று சொல்கிறோம்.’ என்று கருணாநிதியை வலியுறுத்துகிறார்களாம். 

உள்விவகாரங்கள் இப்படி ஒருபக்கம் இருக்க, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜாஅண்ணாமலை மன்றத்தில் நடந்த விழாவில், 50 லட்சம் வரை செலவு செய்து நலத்திட்ட உதவிகள் வழங்கி கட்சியினரையே ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்கள் கனி தரப்பினர். இப்படி கனிமொழி பிறந்தநாள் தமிழகத்தில் தடபுடலாக நடந்து கொண்டிருக்க, 2ஜி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருந்ததால் பிறந்த நாளை டெல்லியில் கொண்டாடினார் கனிமொழி. சென்னையில் இருந்த அவரது மகன் ஆதி, அம்மாவிற்காக ஸ்பெஷலாக ஆர்டர் செய்து கேக் வாங்கிக்கொண்டு 4-ம் தேதி மாலை டெல்லி சென்றான். 5-ம் தேதி காலையில் கணவர் அரவிந்த், மகன் ஆதியுடன் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடிய கனிமொழிக்கு, கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின் உள்ளிட்டோர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தனர். பின்பு 9.30 மணிக்கெல்லாம் பாட்டியாலா நீதிமன்றத்துக்கு கனிமொழி சென்றார். அங்கு ராசா, அவரது மனைவி, எம்.பி.ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் வாழ்த்துக் கூறினர். 

‘‘பெரியார், அண்ணா, கலைஞருக்குப் பிறகு கழகத்தினர் தமிழகம் முழுவதும் பிறந்த நாள் கொண்டாடியது கனிமொழிக்கு மட்டுமே’’ என்று உற்சாகமாக கூறுகிறார்கள் உடன்பிறப்புகளில் ஒரு பிரிவினர்.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

ஜெ-சசி நட்பு போல ஸ்டாலின் -ஜின்னா நட்பு முறிந்ததா?

Sunday  08  January  2012  01:53:45 PM 

 

நெருங்கியே இருப்பவர்கள் திடீ ரென பிரிந்துவிடுவதும், முட்டி மோதிக்கொள்பவர்கள் ஒரேநாளில் இணைவதும், நிழல்கள் நிஜமாவதும், நிஜம் நிழலாகிப் போவதும் அரசியலில் அடிக்கடி காணக் கிடைக்கிற காட்சிகள்தான். இப்போது ஜெ.-சசி பிரிவுக்கு இணையாக தமிழக அரசியலில் மற்றொரு பிரிவுக் காட்சியும் தி.மு.க.வில்  நிகழ்ந்துள்ளது. ஸ்டாலினுக்கும் அவரது நண்ப ரான அசன் முகமது ஜின்னாவுக்கும் இடையே நிகழ்ந்து வரும் மௌன மோதல்தான் அது.

கடந்த சட்டசபைத் தேர்தல் வரை தி.மு.க. வினரால் அரசல் புரசலாக அறியப்பட்டிருந்த ஜின்னா, தேர்தலின் போதுதான் பிரபலமடைந்தார். காரணம், அதுவரை ஸ்டாலின் போட்டியிட்டு வந்த  ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதியில் ஜின்னாவே போட்டியிட்டார். இந்த அளவுக்கு நெருக்கமாக இருந்த அந்த நட்புதான் இப்போது பிளவாகியிருக்கிறது.

‘தி.மு.க.வில் வட்டச் செயலாளர் பதவிக்காக போராடியே வாழ்க்கையைக் கடந்துவிட்டவர்கள் பலர். ஆனால், திடீரென வந்த ஜின்னாவுக்கு மாநில அளவில் இளைஞரணி துணைச் செயலாளர் பதவி, எம்.எல்.ஏ. சீட் என ஸ்டாலின் முக்கியத்துவம் கொடுத்ததால்தான் அவருக்குப் பிடிக்காதவர்கள் இந்த விரிசலுக்கு வழிவகுத்திருக்கிறார்கள்..’ என்கிறது ஒரு தரப்பு. இன்னொரு தரப்போ, ‘ஸ்டாலினுடன் இருந்த நெருக்கத்தை ஜின்னா பயன்படுத்தி கட்சியிலும், ஸ்டாலின் குடும்பத்திலும்கூட பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தினார். இதனால்தான் தளபதி அவரை வெளியேற்றிவிட்டார்’ என்கிறது.

உண்மையில் ஜின்னாவின் பின்னணி என்ன?

கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர்தான் ஜின்னாவின் பூர்வீகம். பள்ளிப் படிப்பை அங்கு முடித்துவிட்டு சென்னையில் பட்டப் படிப்பு மற்றும் சட்டப் படிப்பை முடித்தார். பின்னர் 2008-ல் ஜின்னாவே தனியாக ஒரு வெப்சைட் தொடங்கி அதில் ஸ்டாலின் பற்றிய செய்திகளை வெளியிட்டார். இதுவே நாளடைவில் ஸ்டாலினுடன் தொடர்புகொள்ளும் வழியாக உருவெடுத்தது. ஒரு கட்டத்தில் ஜின்னாவின் அறிவுக்கூர்மையும் அணுகுமுறையும் ஸ்டாலினை வசீகரித்தது. அதோடு கடந்த தி.மு.க. ஆட்சியில் ஜின்னா அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். இந்நிலையில்தான், திடீரென ஸ்டாலினின் நிழலாகவே இருந்த ஜின்னாவை சேர்ந்து காணமுடியவில்லை வழக்கமாக தி.மு.க. கூட்டங்களுக்கு ஸ்டாலினுடன் வரும் ஜின்னா, தி.மு.க. பொதுக்குழு அன்று தாமதமாக வந்ததோடு, தனியாகப் போய் அமர்ந்துகொண்டார். ஸ்டாலினும் அவரும் பேசிக்கொள்ளவே இல்லை. அதேபோல் முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம் நடந்தபோது, தாம்பரத்தில் உண்ணாவிரதம் இருந்தார் ஸ்டாலின். ஆனால் அங்கு செல்லாமல் அறிவாலயத்தில் நடந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார் ஜின்னா. சமீபத்தில் ஸ்டாலின் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோதும் ஜின்னா சென்று பார்க்கவில்லையாம். புத்தாண்டு வாழ்த்துத் தெரிவிக்கக்கூட ஸ்டாலின் வீட்டிற்கு ஜின்னா செல்லவில்லை. இவையெல்லாம்தான் இருவருக்கும் இடையே ஏதோ மோதல் இருக்கிறது என்று கட்சி வட்டாரத்தில் கசியக் காரணமாகியிருக்கிறது.

‘இவ்வளவு நெருக்கமாக இருந்த இருவருக்குள்ளும் பிரிவு வர என்ன காரணம்?’ என தி.மு.க. நிர்வாகி களிடம் கேட்டோம். “ஆமாங்க... எங்களுக்கும் அதே சந்தேகம்தான். ரொம்ப நாளா தளபதி பக்கத்தில் ஜின்னாவைப் பார்க்க முடியலை. ஆனா பிரச்னை என்னன்னு தெரியலை’’ என்று மட்டும் சொல்லிவிட்டு விழிக்கிறார்கள். 

நாம் தொடர்ந்து விசாரித்ததில், இருவரின் பிரிவுக்கும் காரணமே, ஸ்டாலினின் மருமகன் சபரீசன் என்று தெரிய வந்தது. பெயர், போட்டோவுக்கு மறுத்த தி.மு.க. நிர்வாகி ஒருவர், இதற்கான காரணத்தை விளக்கினார். ‘‘ரொம்ப சின்ன வயசிலேயே கட்சிக்குள்ள வந்த ஜின்னா, கட்சியோட மூத்த தலைவர்கள்கிட்ட நெருக்கமா பழகினார். ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த காலங்களில் அவருக்கு அதிகாரபூர்வமாக பல உதவியாளர்கள் இருந்தாலும் மறைமுக உதவியாளராகவும், அதிகாரம் நிரம்பியவராகவும் இருந்தவர் ஜின்னாதான். திரைமறைவில் ஸ்டாலின் உதவியாளராக இருந்த ஜின்னா, தேர்தல் தோல்விக்குப் பிறகு, பலர் அறியும் வகையில் ஸ்டாலின் உதவியாளராகவே மாறிவிட்டார். ஆனால் சமீபகாலமாக இருவரையும் இணைந்து பார்க்கவே முடியவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள்தான். 

தி.மு.க. துணைப் பொதுச் செயலாளராக இருந்த பரிதி இளம்வழுதி, ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு கூறும் அளவிற்கு பிரச்னை எழக் காரணமே ஜின்னாதான். பரிதியால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர தளபதியிடம் அழைத்து வந்தது ஜின்னாதான். அதேநேரத்தில், அப்பிரச்னை தொடர்பாக தளபதியை சந்தித்துப் பேச அவரது வீட்டிற்கு பரிதி சென்றபோது, ஸ்டாலினைச் சந்திக்க விடாமல் சதி செய்ததும் ஜின்னாதான். அதாவது, தி.மு.க.வை முன் நின்று வளர்த்தவர்களில் பரிதியின் தந்தையும் முக்கியமானவர். அப்படிப்பட்ட பாரம்பரிய கட்சிக்காரர்களையே ஜின்னாவால் தூக்கி எறிய முடிந்தது. 



அடுத்ததாக, ஆட்சி மாற்றம் வந்ததும் தி.மு.க.வினர் மீது நிலமோசடிப் புகார் குவியத் துவங்கியது. அப்போதே தளபதி, ‘என்னையும், என் குடும்ப உறுப்பினர்களையும் குறி வைத்து பொய் வழக்குப் போடுவார்கள். நமது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் அந்த மாதிரி சர்ச்சையில் சிக்குகின்ற அளவிற்கு ஏதாவது செய்துள்ளார்களா?’ என்று கேட்டார். ‘அப்படியெல்லாம் யாரும் இல்லண்ணே’ என்று கூறினாராம் ஜின்னா. 

இந்த நேரத்தில்தான், சென்னை சூளைமேட்டில் ‘சித்ரா பில்டர்ஸ்’ நிறுவனம் நடத்திய கோவிந்தன், குரோம்பேட்டையில் உள்ள தன்னுடைய நிலத்தை  ஸ்டாலின் மருமகன் சபரீசன் மோசடி செய்துவிட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். முஸ்லிம் சமுதா யத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டரே இந்த வழக்கை விசாரித்திருக்கிறார். ஜின்னா உதவியோடு அவரை கவனித்தாராம் சபரீசன். புகார் கொடுத்த கோவிந்தன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. போலீஸ் கொடுத்த டார்ச்சரில் அவர் தலைமறைவாக இருப்பதாக சிலரும், தற்கொலை செய்துவிட்டதாக சிலரும் சொல்கிறார்கள்.  

இந்த விஷயத்தை டீல் செய்த ஜின்னா, இதுபற்றி தளபதியிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லையாம். கோவிந்தன் குடும்பத்தினர் கோர்ட்டிற்குப் போனபிறகுதான், இந்த விஷயமே தளபதி காதுக்கு வந்தது. ஜின்னாவைக் கூப்பிட்டு தளபதி கோபமா சத்தம் போட்டிருக்கிறார்.. ‘உங்க மருமகன் சபரீசன்தான் மாமாவிற்குத் தெரியாமல் இந்தப் பிரச்னையை முடித்துவிடலாம்னு சொன்னார்’ என்று ஜின்னா பதில் சொன்னாராம். கடும்கோபத்தில் கன்னாபின்னாவென்று ஜின்னாவை தளபதி திட்டியிருக்கிறார். அதன்பிறகு தளபதி வீட்டுப்பக்கமே ஜின்னா வருவதில்லை. தளபதி ஆதரவாளர்கள் சிலர்தான் ஜின்னாவை சமாதானப்படுத்தினார்கள்’’ என்று விளக்கமாகப் பேசினார்.

அதேபோல், ஜின்னாவுக்கு எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்பட்டதுகூட கருணாநிதியின் குடும்பத்தில் பலருக்குப் பிடிக்கவில்லை. சீட் கிடைத்ததும் வாழ்த்துப் பெறுவதற்காக தமிழரசு உட்பட பலரின் வீட்டிற்குச் சென்றாராம் ஜின்னா. ஆனால், அவரை முதலில் தமிழரசு தன் வீட்டிற்குள் சேர்க்கவில்லை. அந்த அளவுக்கு தலைமையிலும் சரி, கட்சிக்காரர்களிடமும் சரி ஜின்னாமீது வெறுப்பு அதிகமாகிவிட்டது. ஸ்டாலின் தனது தொகுதியை ஜின்னாவுக்கு விட்டுக் கொடுத்தாரா? ஜின்னா தொகுதியை ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுத்தாரா? என்பதெல்லாம் கட்சிக்காரர்களுக்குக் கவலையில்லை. முப்பத்தெட்டே வயதான ஜின்னா ஸ்டாலினுடனான தனது நெருக்கத்தை வைத்துக்கொண்டு அவர் போட்ட ஆட்டம்தான் இன்று அவரை ஓரம்கட்ட வைத்திருக்கிறது என்கின்றனர்.  

இப்பிரச்னை குறித்து ஜின்னாவிடமே நேரடியாகக் கேட்டோம். ‘‘தளபதி உடல்நிலை சரியில்லாமல் இருந்தப்போ நான் வெளியூரில் இருந்தேன். புத்தாண்டு அன்னிக்கு எப்போதும் நான் எனது சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். அதுபோல் இவ்வருடமும் சென்றுவிட்டேன். இந்த இரு தினங்களிலும் நான் தளபதியை பார்க்கச் செல்லாததால், எங்களுக்குள் மனவருத்தம் என்று கதைகட்டிவிட்டார்கள். நான் எப்போதும் போல் அண்ணன் தளபதியுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன். வரும் 7, 8-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்தில் இளைஞர் அணி சார்பில் நடக்கும் கலந்தாய்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்க்கச் சொல்லியுள்ளார் தளபதி. அந்தப் பணிகளில் கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்’’ என்று எதுவும் நடக்காதது போல கூலாக பதில் சொன்னார் ஜின்னா. 

‘‘வழக்கமாக ஸ்டாலின் மீதான வழக்குகளை ஜின்னாவே கவனித்துக்கொள்வார். ஆனால் சமீபத்தில் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி மீது கொடுக்கப்பட்ட நிலமோசடி வழக்கில் ஜின்னாவுக்கு எந்த வேலையும் தரப்படவில்லை. வேறு வழக்கறிஞர்கள்தான் அந்த வழக்கை டீல் செய்கிறார்கள். அப்புறம் இரண்டு பேருக்குள்ளும் சண்டை இல்லைன்னு சொன்னா எப்படி நம்புவது?’’ என்று கேட்கிறார்கள் தி.மு.க.வினர்.

அரசியலில் இது நண்பர்கள் விலகும் 
காலம்போல!  



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

40 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமே கட்சியில் பொறுப்பு. 60 வயது ஸ்டாலின் பேட்டி.

Thursday  05  January  2012  02:30:59 PM 

கடந்த சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. பெரும் சரிவை சந்தித்தது. இந்த தேர்தல்களில் இளைஞர்களின் வாக்கு பெருமளவில் தி.மு.க. பக்கம் விழவில்லை என்ற பேச்சு கட்சி வட்டாரத்தில் எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இளைஞர் அணியில் இருப்பவர்கள் வயதானவர்கள்.
 
மேலும் புதிதாக வருபவர்களுக்கு இளைஞர் அணியில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.   தி.மு.க.வின் முக்கியமான அமைப்பாக விளங்குவது இளைஞர் அணிதான். இந்த இளைஞர் அணி 1980-ல் உருவாக்கப்பட்டது. 1981-ல் மு.க.ஸ்டாலின் உள்பட 7 பேர் இளைஞர் அணியின் நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.
 
தற்போது மு.க.ஸ்டாலின் இளைஞர் அணியின் செயலாளராக உள்ளார். பல பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். தேர்தல் தோல்விக்கு பிறகு இளைஞர் அணியை பலப்படுத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 
 
கடந்த தேர்தலில் நாங்கள் பின்னடவை சந்தித்தது உண்மை. மக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்பி வாக்களித்தார்கள். ஆனால் இப்போது மிகவும் அதிருப்தியில் உள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் 26 சதவீத வாக்குகள் பெற்றுள்ளோம். தி.மு.க.வின் அடித்தளம் பலமானது. இளைஞர் அணியில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம் என் பதை உணர்ந்துள்ளோம்.  
 
இப்போது அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர் அணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் அவர்களில் திறமையான 50 பேர் கொண்ட பட்டியலை தேர்வு செய்வார்கள். நான் நேரடியாக சென்று அவர்களிடம் விவாதம் நடத்தி திறமையானர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.
 
மாவட்ட அளவில் நிர்வாகிகளின் அதிகபட்ச வயது வரம்பு 40-க்குள் இருக்க வேண்டும். நகர, ஒன்றிய, பேரூர் அமைப்புகளில் நிர்வாகிகள் வயது அதிகபட்சமாக 30-க்குள் இருக்க வேண்டும். உறுப்பினராக சேரும் போதே வயது சான்றிதழ் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
வயதானவர்கள் கழகத்தில் பணியாற்றுவார்கள். தகுதியும், திறமையும் கொண்ட இளைஞர்களுக்கு இளைஞர் அணியில் பொறுப்புகள் கிடைக்கும். ஏற்கனவே காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்து நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 
இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு நடக்கிறது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து தேர்வு செய்யப்படுவார்கள். 3 மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். நிர்வாகிகள் நியமனம் முடிந்த பிறகு மாநில அளவில் இளைஞர் அணி மாநாடு நடைபெறும்.
 
இவ்வாறு அவர் கூறினார்


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

deiva



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கலைஞர் டி.வி-க்கு ரூ.200 கோடி லஞ்சம்: ரூ 223 கோடி சொத்து முடக்கம் !

 

images?q=tbn:ANd9GcTqwKJxoxo74Xgrur9yKJJRomPzQvE65lNDwugJPVBo34EYndrIEA2ஜி  அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு 5 நிறுவனங்களின் அசையா சொத்துக்களை முடக்க நீதிமன்றத்தின் ஒப்புதலை பெற்றுள்ளது, இதனால் 2ஜ் அலைக்கற்றை வழக்கு அடுத்த கட்டத்தினை நோக்கி சென்றுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் கடன் அல்லது பங்குப் பத்திரங்கள் மூலம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்களின் வழியாக, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது.


சாஹித் உஸ்மான் பல்வாவின் டைனமிக்ஸ் ரியால்டி நிறுவனத்துக்கு இந்தப் பணம் திருப்பியளிக்கப்பட்டிருக்கிறது' என்று அமலாக்கப் பிரிவின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. லஞ்சப் பணத்தை கைமாற்றி விடுவதற்காக பயன்பட்ட நிறுவனங்களுக்கு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் போலியானவை என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  டைனமிக்ஸ் ரியால்டி நிறுவனத்தின் ரூ. 134 கோடி, கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் ரூ. 22 கோடி, நிஹார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் ரூ. 1.1 கோடி, டி.பி. ரியால்டியின் ரூ. 52 கோடி, எவர்ஸ்மைல் நிறுவனத்தின் ரூ. 13 கோடி ஆகிய ஐந்து நிறுவனங்களின் சுமார் ரூ.222 கோடி சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்க இருக்கிறது. இந்த வழக்கில் சொத்துகள் முடக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 

இது தொடர்பான அமலாக்கப் பிரிவின் உத்தரவை நிறைவேற்ற வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை மோசடித் தடுப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

Kalki cartoon



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

17_01_2012_012_027.jpg Stalin Hitech



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

14_01_2012_008_066.jpg Kani



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

22_01_2012_402_005.jpg kani



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கனிமொழிக்கும் தயாநிதிக்கும் முன் சீறிப் பாய்ந்த உதயநிதி.!

 

Stalin-Udayanidhi-20120124-3A.jpg

 

Viruvirupu,
உதயநிதியை எப்படி அழைப்பது? ‘இளைய தளபதி’, ‘சின்னத் தளபதி’ என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள். வேறு பெயர் தேட வேண்டும் என்பதே உதயநிதிக்கு உள்ள ஒரேயொரு சிக்கல்.
‘மினி தளபதி’ அல்லது ‘மைக்ரோ தளபதி’ என்று பட்டம் கொடுக்க முடியாதபடி, தாத்தாவின் தமிழ் உணர்வு உள்ளது. ‘பேராண்டி தளபதி’ என்று கிராமிய டச்சுடன் பட்டம் கொடுக்கலாமா?
 
 
 
 
 
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மற்றொரு சுவாரசியமான வாரிசுப் போட்டியைக் காணப் போகின்றது. கட்சிக்காக பலரும் கடுமையாக உழைத்தாலும், பதவி என்று வரும்போது தலைவர் குடும்பத்துக்கு கொடுத்துவிட்டு, விரலைச் சப்பிக்கொண்டு வீடுதிரும்பும் வழக்கம் உடையவர்கள் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள்.

ஏற்கனவே தலைவர் குடும்பத்தில் 4 போட்டியாளர்களுக்கு (ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன்) கைதூக்கி அனுபவசாலிகளான தி.மு.க. உறுப்பினர்கள், 5-வதாக இளம் சிங்கம் (அப்படித்தான் போஸ்டர் அடிப்பார்கள்.. இருந்து பாருங்கள்) ஒன்றுக்கு ஆதரவாகவும் கைதூக்கும் பாக்கியத்தைப் பெறப் போகிறார்கள்.
சீறிவரப் போகும் இளம் சிங்கம், ஸ்டாலின் மகன் உதயநிதி.
ஒரு வகையில் உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும், ஸ்டாலின் தனது கடமையை சரியாகத்தான் செய்து வருகிறார். அவருடைய தந்தை (கருணாநிதி) அவருக்கு கட்சியில் எப்படி பாதை போட்டுக் கொடுத்தாரோ, அதேபோல தனது மகனுக்கும் பாதை போட்டுக் கொடுப்பதில் தனது கடமையில் இருந்து தவறவில்லை ஸ்டாலின். தற்போது மாவட்டம் தோறும் சென்று மகனுக்கு பாதை போடுவதில் பிஸியாக உள்ளார்.
கடந்த சில நாட்களாக தி.மு.க. இளைஞர் அணிக்கு மாவட்டம் மாவட்டமாக ஆட்சேர்ப்பு செய்வதும், பொறுப்புக்கு புதியவர்களை நியமிப்பதுமாக ஸ்டாலின் காலில் சக்கரம் போட்டு சுற்றிக்கொண்டு இருக்கிறார். இளைஞர் அணி பெறுப்புகளில் புதிதாக நியமிக்கப்படும் ஆட்கள், என்ன அடிப்படையில் நியமிக்கப் படுகிறார்கள்? கடுமையான நிபந்தனைகள் ஏதும் கிடையாது! இளவரசருக்கு ஒத்து ஊதக்கூடிய ஆளா என்பதே ஒரே நிபந்தன!
கட்சியின் மிகப் பிரபல இளைஞரான (!) ஸ்டாலினுக்கு 60 வயதாகிறது. தி.மு.க.-வின் நல்ல காலம், இந்த இளைஞருக்கு, மற்றொரு இளைஞராக ஒரு மகன் உள்ளார். இல்லாவிடின், தி.மு.க.-வின் ‘இளைஞர் ஏஜ்-லிமிட்’ 60-க்கும் மேலே சென்றிருக்கும். இளவரசர் பட்டத்துக்கு ரெடி என்ற சமிக்கைகள் வந்துவிட்ட காரணத்தால், “அடாடா.. இப்போது நான் இளைஞன் இல்லையே” என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் தளபதி.
உதயநிதி இப்போது ஏன் அரசியலுக்கு வர வேண்டும்? சில காரணங்கள் உள்ளன. முதலாவது, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உதயநிதி சினிமாவில் தயாரிப்பு, ஆக்டிங் என்று பிஸி. இப்போது அந்த பிஸினஸில் அவ்வளவாக அலுவல் கிடையாது. குடும்ப பிஸினஸான கட்சி இருக்கவே இருக்கிறது. அதில் ஆளை அமர்த்தி விடலாம்.
இரண்டாவது, இவரை இதற்குள் கொண்டுவராவிட்டால், கனிமொழியும் இதே பதவியில் கண் வைக்கலாம். அழகிரி மகன் துரை தயாநிதியும் இதே பதவியில் கண் வைக்கலாம். கொஞ்ச நாள் விட்டுவிட்டால், தற்போது ஸ்கூல் செல்லும் கனிமொழியின் மகனும் பதவிக்கு ரெடியாகி விடலாம். இவர்கள் எல்லோரும் இளைஞர்கள் என்று தலைவர் ஒப்புக் கொண்டால், பொதுக்குழு, செயற்குழு, கிச்சன் குழு, என்று சகல குழுவுமே ஒப்புக்கொண்டு விடும்.
போட்டி அதிகமாகுமுன், நாற்காலியைப் பிடிப்பதே மியூசிகல் சேரில் வெற்றி பெறுவதற்கான பாலபாடம்.
“சரி, கட்சிப் பதவிக்கு வருவதற்கு உதயநிதி ஸ்டாலினுக்கு தகுதி இருக்கிறதா?”
என்னங்க இப்படி கேக்கிறீக? உதயநிதி ஸ்டாலினுக்கு தி.மு.க. முக்கியஸ்தராக தகுதி உள்ளது என்று ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறதே! இது எப்போது நடந்தது? வேறு ஒன்றுமில்லை, தமிழக அரசால் உதயநிதி ஸ்டாலின்மீதும் நில அபகரிப்பு வழக்கு தொடரப்பட்டு, அவர் முன்ஜாமீன் பெற்று நடமாடிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. வி.ஐ.பி.-களின் அடையாளமே நில அபகரிப்பும், ஜாமீனும்தானே!
அந்த விதத்தில் உதயநிதி தி.மு.க.-வின் தலைவர்களில் ஒருவராக எலிஜிபிள்!
“தமிழக அரசால் எலிஜிபிள் ஆக்கப்பட்ட உதயநிதியை தி.மு.க. பொதுக்குழுவில் உள்ள வாய் திறக்காத வெஜிடபிள்கள் எதிர்க்கவா போகிறார்கள்? ஜோரா கையை தூக்கி ஆதரவு தெரிவித்து விடுவார்கள்” என்று ஸ்டாலின் நினைக்கிறார்.
இதில் ஒரேயொரு சிக்கல்தான் உள்ளது. அதைத்தான் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அது என்ன சிக்கல்?
தி.மு.க.-வில் ஸ்டாலினை தளபதி என்று அழைக்கிறார்கள். உதயநிதியை எப்படி அழைப்பது? ‘இளைய தளபதி’, ‘சின்னத் தளபதி’ என்றெல்லாம் நடிகர்கள் இருக்கிறார்கள். வேறு பெயர் தேட வேண்டும் என்பதே உதயநிதிக்கு உள்ள ஒரேயொரு சிக்கல்.
‘மினி தளபதி’ அல்லது ‘மைக்ரோ தளபதி’ என்று பட்டம் கொடுக்க முடியாதபடி, தாத்தாவின் தமிழ் உணர்வு உள்ளது. ‘பேராண்டி தளபதி’ என்று கிராமிய டச்சுடன் பட்டம் கொடுக்கலாமா?


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

27_01_2012_012_039.jpg stalin



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

கலைஞர் டி.வி&’யை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், டி.வி. நிர்வாகத்தில் கனிமொழி தரப்புக்கு எந்த பங்கும் இல்லை

 

 
imagesklklklklkk.jpgஸ்பெக்ட்ரம் பிரச்னையில் சிக்கி ஒருவழியாக ஓய்ந்திருக்கும் நிலையில் ‘கலைஞர் டி.வியை ஸ்டாலின் கைப்பற்றிவிட்டதாகவும், டி.வி. நிர்வாகத்தில் கனிமொழி தரப்புக்கு எந்த பங்கும் இல்லை என வரும் தகவல்கள் கட்சிக்குள்ளும் வெளியேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது! 
11a.jpg2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் விஸ்வரூபமெடுக்க, அதன் விளைவாக ஆ.ராசா கைது செய்யப்பட்டார். அதன் பிறகு, சி.பி.ஐ.யின் பார்வை கருணாநிதி குடும்பத்தின் மீது வி ழுந்தது. ‘‘200 கோடி ரூபாயை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு ஷாஹித் பல்வா கொடுத்திருக்கிறார். அந்தப் பணம் 2ஜி விவகாரத்துக்காக கலைஞர் டி.வி.க்குக் கொடுக்கப்பட்ட லஞ்சப் பணமே’’ என சி.பி.ஐ. குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் கனிமொழி, கலைஞர் டி.வி.யின் இயக்குநர் சரத்குமார் இருவரும் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டனர். 
ஆறுமாத சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தற்போது அவர்கள் ஜாமீனில் வந்து டெல்லியிலேயே தங்கி விசாரணையைச் சந்தித்து வருகின்றனர். 

சிறையில் இருந்து வெளியே வந்ததும் கனிமொழிக்கு கட்சிப் பதவி கொடுக்கப்படும் எனச் சொல்லப்பட்டது. கனிமொழிக்கு கட்சிப்பதவி கிடைக்காத நிலையில், அவர் கலைஞர் டி.வி.யில் வகித்துவந்த இயக்குநர் பதவியும் பறிபோயிருக்கிறது. கனிமொழியின் பதவியை கல்யாணசுந்தரம் என்பவர் பெற்றிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரித்தோம். 

‘‘கனிமொழி சிறையில் இருக்கும்போதே, அவருக்குத் தெரியாமல் அந்த நிறுவனத்தின் இயக்குநராக தி.மு.க.வின் அமைப்புச் செயலாளரான கல்யாணசுந்தரத்தை நியமித்து உள்ளனர். 2011-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதியன்று சென்னையில் நடந்த கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களின் நான்காவது வருடாந்திரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு எடுக்கப்படும்போது, கலைஞர் டி.வி.யில் தலா 20% பங்குகளை வைத்துள்ள கனிமொழி, சரத்குமார் இருவரும் சிறையில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடமும் தகவல்கூட தெரிவிக்காமல் அவசரஅவசரமாக கல்யாண சுந்தரத்தை நியமித்திருக்கிறார்கள்.

ஸ்டாலின் ஆதரவாளரான கல்யாணசுந்தரம், ரத்தன் டாடாவின் ‘டாடா கம்யூனிகேஷன்ஸ்’ நிறு வனத்தில், மத்திய அரசின் சார்பில் போர்டு மெம்பராக 2005-ம் ஆண்டு நியமிக்கப்பட்டவர். தொலைத் தொடர்புத் துறையை தங்கள் வசம் வைத்திருந்த தி.மு.க., அக்கட்சியின் அமைப்புச் செயலாளரை தொலைத் தொடர்புத் துறை சம்பந்தப்பட்ட நிறுவனத்திலேயே போர்டு மெம்பராக நியமித்தது ஏன் என்று அப்போதே சர்ச்சை எழுந்தது. அதையெல்லாம் மீறி, கல்யாணசுந்தரம் டாடா நிறுவனத்தில் போர்டு மெம்பராக தொடர்ந் தார். கனிமொழி கைது செய்யப்பட்ட மே 20-ம் தேதி அன்று கல்யாணசுந்தரம் தன் போர்டு மெம்பர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்போது அவரை கலைஞர் டி.வி.யில் அவசர அவசரமாக இயக்குநராக நியமித்திருக்கிறார்கள். கனிமொழியும், சரத்குமாரும் சிறையில் இருந்ததால், அவர்கள் மீட்டிங்குக்கு வரமுடியாமல் போய்விட்டது என்று காரணம் சொல்கிறார்கள். ஆனால், வருடாந்திர பங்குதாரர் கூட்டங்களில் பங்கேற்க முடியாதவர்கள், தங்கள் சார்பாக ஒரு நபரை கூட்டத்தில் பங்குகொள்ள பரிந்துரை செய்யலாம் என்று கலைஞர் டி.வி. கம்பெனி விதிகளில் உள்ளது. அதைக்கூட ஏன் அவர்களால் செய்ய முடியாமல் போய்விட்டது என்பதுதான் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல், கலைஞர் டி.வி.யில், முதலில் தலைமை நிதி அதிகாரியாகவும், பின்னர் இயக்குநராகவும் இருந்த அமிர்தத்திற்கு, ஒரு பங்கு ரூ.950 என்ற மதிப்பில் 30 பங்குகள் 22 செப்டம்பர் 2011 அன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயக்குநராக இருக்கும் ஒருவருக்கு பங்குகள் ஒதுக்கீடு செய்வதுகூட கனிமொழிக்கும், சரத்குமாருக்கும் தெரியாமல் நடந்தது ஏன்?’’ என்கிறார்கள் கனிமொழியின் தரப்பில் உள்ள புள்ளிகள்.

வேறு சிலர், ‘‘அடுத்தகட்டமாக கனிமொழியின் 20 சதவிகிதப் பங்குகளை ரத்து செய்து, கனிமொழிக்கு கலைஞர் டி.வி.யில் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் செய்துவிட ஸ்டாலின் தரப்பு முனைப்பாக இருக்கிறது’’ என்கிறார்கள். 

கனிமொழியிடம் கேட்டபோது கருத்துச் சொல்ல மறுத்துவிட்டார். அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, “தொடக்கம் முதலே நாங்கள் சொல்லி வந்ததுதான் நடந்து கொண்டிருக்கிறது. திரைமறைவில் இருந்து பேரம் நடத்தியவர்கள் தற்போது வெளிப்படையாக அந்த நிறுவனத்தைக் கைப்பற்றி, அதிலிருந்து கனிமொழியை வெளியேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். கலைஞர் டி.வி. காரணமாக கனிமொழி ஆறு மாதங்கள் தன் மகனைப் பிரிந்து சிறையிலிருந்து தற்போது வழக்கு விசாரணையைச் சந்தித்து வருகிறார். ஆனால், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள், எவ்விதப் பிரச்னைக்கும் ஆளாகாமல், தற்போது கலைஞர் டி.வி.யைக் கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள்’’ என்று ஆதங்கப்பட்டனர் அவர்கள்.

இந்த விவகாரம் குடும்பத்திற்குள் பெரிய மோதலை ஏற்படுத்தியிருப்பதால், சமாளிக்க முடியாமல் திணறுகிறாராம் கருணாநிதி! 

அருணாச்சலம்
thanks kumudam +chandran NH


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

28_01_2012_001_003.jpg Arivalayam says home of orphans



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

30_01_2012_012_018.jpg DMK Kali virunthu



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

பிரதமர் அலுவலகத்தில் சிறைவைக்கப்பட்ட தா.பாண்டியன் !

 
resize_20120131090648.jpgந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், ஈழத்தமிழர்கள் விஷயமாக பிரதமர் மன்மோகன்  சிங்கைச் சந்தித்தபோது, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என பிரதமர் அலுவலகத்திலேயே  சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது!
தா.பாண்டியனுக்கு
அப்படி என்னதான் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்...

“இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த 2009-ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசை அதில் தலையிட வலியுறுத்தி  டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்தது. பெயரளவில் அது  அனைத்துக் கட்சிக் குழு என்று சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் அதில் இருந்தவர்கள் தி.மு.க.வுக்கு  அனுசரணையானவர்கள்தான். ஆனால், அவர்கள் யாருமே எதிர்பாராத வகையில் கடைசி நேரத்தில் பிரதமர் அலு வலகத்திற்குள் நுழைந்தார், தா.பாண்டியன். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டத்தில் தீவிரமாக இருந்த தா.பாண் டியனின் திடீர் என்ட்ரியால், குழுவின் தலைவரான டி.ஆர்.பாலுவுக்குக் கடும் அதிர்ச்சி!

பின்னர் குழுவினர் இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஒரு கோரிக்கை மனுவை பிரதமரிடம் கொடுத்தனர்.  தா.பாண்டியனும் தன் பங்குக்கு, ‘இலங்கையில் அரசியல் தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும். அங்கே சொந்த நாட்டு மக்கள்  மீதே ராணுவம் தாக்குதல் நடத்துவதை உடனே நிறுத்த வேண்டும், இலங்கைக்கு இந்தியா எந்த ஆயுதத் தள வாடங்களையும் அனுப்பக் கூடாது’ என பிரதமரிடம் வலியுறுத்தியிருக்கிறார். இவரது கோரிக்கைகளுக்கு பிரதமர்  வாய்திறக்காத நிலையில், பக்கத்தில் இருந்த பிரணாப் முகர்ஜியோ, ‘ராணுவத் தளவாடங்கள் வழங்குவது இரு நாட்டு  உறவுகள் சம்பந்தப்பட்டது. அதை நிறுத்த முடியாது’ என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார்.

லட்சக்கணக்கான தமிழர்கள் செத்துக்கொண்டிருந்த வேளையில், மனசாட்சியே இல்லாமல் மத்திய அமைச்சர் ஒருவர்  பேசியதையும், பிரதமர் வாயே திறக்காமல் மௌனமாக இருந்ததையும் அப்போதே தமிழகக் குழுவினர் அம்பலப்படுத்தி  யிருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர் வெளியே வந்து, மத்திய அரசு  உடனே நடவடிக்கை எடுக்க உறுதி தந்திருப்பதாக மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்தார்கள்.

தா.பாண்டியன் உண்மையைச் சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவரை நடத்திய விதம்தான் ரொம்பக் கொடுமை.  ‘உள்ளே நடந்த விஷயங்களை நீங்கள் வெளியே சொல்லக் கூடாது. நீங்கள் ஏதாவது சொல்லிவிட்டால் அது  தமிழர்களுக்கு இன்னும் கெடுதலாகிவிடும்’ என டி.ஆர்.பாலு திரும்பத் திரும்பச் சொல்லி தா.பாண்டியனை பிரதமர் அ லுவலகத்தின் உள்ளேயே உட்கார வைத்துவிட்டார். ‘மவுனச் சாமியாராக’ இருந்த பிரதமரோ இன்னும் ஒருபடி மேலே  போய் தா.பா.விடம், ‘உங்களுக்குப் புலிகளை நன்றாகத் தெரியுமே? நீங்கள் எப்படி இவர்களோடு வந்தீர்கள்?’ என்கிற  ரீதியில் பேசி நேரத்தைக் கடத்தி, மீடியாக்கள் கிளம்பிப் போன பிறகே தா.பா.வை வெளியே விட்டிருக்கிறார். நாகரிகம்  கருதி தா.பா.வும் இவற்றை முழுமையாக வெளியே சொல்லவில்லை’’ என்றார்கள் அவர்கள்.

இதுபற்றி தா.பாண்டியனிடமே கேட்டோம். “வெளியூரில் இருந்த நான் தமிழகக் குழுவினர் பிரதமரைச் சந்திப்பதைக்  கேள்விப்பட்டு நானாகப் போய் அதில் பங்கேற்றது உண்மைதான். முன்னாள் எம்.பி. என்ற வகையில் பிரதமர் அலு வலக அதிகாரிகள் என்னைத் தடுக்கவில்லை. பிரதமர் மௌனமாக இருந்தது, பிரணாப் முகர்ஜி பேசியது, டி.ஆர்.பாலு  நடந்துகொண்டவிதம் பற்றியெல்லாம் பொதுக்கூட்டங்களில் ஏற்கெனவே நான் பேசியிருக்கிறேன். அடுத்தபடியாக இந்த  விவகாரம் சம்பந்தமாக ஒரு புத்தகமே எழுத இருக்கிறேன்’’ என்றார்.

ஈழத் தமிழர் பிரச்னையில் காங்கிரஸ், தி.மு.க.வின் துரோகத்தை அந்தப் புத்தகம் வலுவாகவே அம்பலப்படுத்தும் என் கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

25612281.JPG radiaa tapes



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

31_01_2012_012_023.jpg stalin azagiri



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

evr-periyar-alagiri-mk-kalainjar-dmk-posters-elections



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

kalaignar-thiruvalluvar-poster.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

04_02_2012_001_005.jpg dmk met

22242796.JPG Dmk pothukuzu



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

2262931.JPG dmk kundar



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

தி.மு.க.4 பெட்டிக் கடைகளாக...

 

Pc0062300.jpgதி.மு.க.4 பெட்டிக் கடைகளாக...சிதறுண்டு போகும் - குமுறுகிறார் பெரம்பூர் கந்தன் (தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்)

தி.மு.க.வின் கொள்கைகளையும் லட்சியங்களையும் ஆழக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு ‘தம் குடும்பம் மட்டுமே கழகக் குடும்பம்’ என்று கலைஞர் செயல்படுவதால் எதிர்காலத்தில் கட்சி நான்கு பெட்டிக் கடைகளாகச் சிதறுண்டு போகும்," என்று எச்சரிக்கிறார் பெரம்பூர் கந்தன். இவர் கலைஞர் பாசறையின் அமைப்பாளர். தவிர, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர். தி.மு.க. பொதுக்குழு கூடும் சமயம் கந்தன் வீசுவது சாதாரண குண்டல்ல; கந்தக குண்டு...

அண்ணா கழகக் குடும்பத்தை எப்படிப் பார்த்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன். 1962 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 50 இடங்களில் கழகம் வென்றது. அதே சமயம் தில்லியில் மக்களவைக்கு எட்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். தமிழகத்தில் சட்டமன்றக் கட்சிக்கு நெடுஞ்செழியனும், பாராளுமன்ற கட்சிக்கு இரா.செழியனும் தலைவர்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற பேச்சு இருந்தது. அண்ணா, நெடுஞ்செழியன் மற்றும் செழியனைக் கூப்பிட்டார். ‘சகோதரர்களான நீங்கள் இருவரும் இந்த இரு அமைப்புகளிலும் தலைவர்களாக இருப்பது என்பது, கழகம் ஒரே குடும்பத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது போலத் தோற்றம் கொடுக்கும். எனவே உங்களில் ஒருவருக்குத்தான் வாய்ப்புக் கொடுக்க முடியும். அது யார் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்,’ என்று சொல்லிவிட்டார். கடைசியில் செழியன் பாராளுமன்றக் கட்சித் தலைவராகப் போடப்படாமல் நாஞ்சில் மனோகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதுதான் அண்ணா கழகக் குடும்பத்தை நடத்திய முறை.

ஆனால் இப்போது என்ன நடக்கிறது? மகன் துணை முதல்வர். அவரைவிடத் தகுதியானவர்கள் கழகக் குடும்பத்தில் இல்லையா? மற்றொரு மகன் மத்திய அமைச்சர். மகள் தில்லி மேலவை உறுப்பினர். பேரன் மத்திய அமைச்சராக இருந்தவர். இப்போது கலைஞரின் சிந்தனைகள் கழகத்தின் எதிர்காலம் குறித்து இல்லை. எந்தெந்தப் பதவிகளை யார், யாருக்குப் பங்கு போட்டுக் கொடுத்தால் குடும்பத்தில் பிரச்னை வராது என்பதே அவரது 24 மணி நேர யோசனையாக இருக்கிறது. எந்த வகையில் கழகச் சட்ட திட்டங்களைத் திருத்தினால், வாரிசுகளின் வாரிசுகளுக்குப் பதவிகள் கிடைக்கும் என்று ஆராய்கிறார்கள். இந்த நிலை உருவாவதற்கு, பேராசிரியர் அன்பழகனும் ஒரு காரணமாகிப் போனார். மூத்த தலைவர் என்ற முறையில் நடக்கின்ற தவறுகளைச் சுட்டிக் காட்டாமல், தமக்கு இரண்டாவது இடம் சாஸ்வதமாக இருந்தால் சரி என்று சுயநலத்துடன் செயல்பட்ட பேராசிரியர், இந்த இயக்கம் இப்படித் தறிகெட்டுப் போவதற்குக் காரணமாக அமைந்தவர்களில் ஒருவராகி விட்டார். இந்த வகையில் வரலாறு அவரது நிலைப்பாட்டை விமர்சனப் பார்வையோடு தான் அணுகும்.

மொழி, இனம், பொருளாதாரம், சாதி பேதமற்ற சமதர்ம சமுதாயம் ஆகியவை குறித்து மிகத் தெளிவாகச் சொல்லப்பட்ட கொள்கைகள் கலைஞர் காலத்தில் நீர்த்துப் போய்விட்டன. உயர்மட்டத்திலேயே சுய நலம் குடிகொண்டதால், கட்சியிலிருக்கும் இளைய தலைமுறையும், பதவி, பணம் என்று அலைபாய்கிறது. யாருக்கும் கொள்கைத் தெளிவு இல்லை. ஒரு உதாரணம். ஜனவரி 25ம் தேதி என்பது தமிழுக்காக உயிர்விட்ட தியாகிகளின் நினைவைப் போற்றுகின்ற தினம். ஆனால் இதையே ஒரு கொண்டாட்டமாக சித்திரிக்கிறார்கள். பேச வரும் தலைவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பது என்று கூட்டம் போட்டு யோசிக்கிறார்கள். இதன் மூலம் சிலரது பிழைப்பு ஓடுகிறது. இன்று இயக்கத்தில் வியாபாரிகள் அதிகமாகி விட்டார்கள். பிரைவேட் லிமிடெட் கம்பெனி போல் ஆகிவிட்டது கட்சி.

கழகத்துக்கு உண்மையாகப் பாடுபட்டவர்களுக்கு மதிப்பில்லை. 1991 - 96ல் சட்டமன்றத்தில் ஒற்றை உறுப்பினராக இருந்து கட்சியின் கௌரவத்தைக் காப்பாற்றி, ஜனநாயகத்துக்குப் போராடிய பரிதி இளம்வழுதி, சிலரது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப, கருவேப்பிலையாக ஓரம் கட்டப்படுகிறார். ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்ற கோஷத்தை வெற்று கோஷமாக்கிவிட்டு, அயராது உழைத்த கலைஞரின் குடும்பம் இன்று இந்தியாவின் முன்னணி செல்வந்தர்களில் ஒன்றாகிவிட்டது. கட்சிப் பத்திரிகையான முரசொலி, தொண்டர்கள் உழைத்துக் கொடுத்த பணத்தில் வளர்ந்தது. ஆனால் அதன் நிர்வாகம் கலைஞர் குடும்பத்தின் கையில். அண்ணா அவர்கள் கழக ஏடான ‘நம் நாடு’ பத்திரிகையை, கழக நிர்வாகிகளிடம் அல்லவா ஒப்படைத்திருந்தார்?

இப்போது சொன்னவற்றைவிட மிகப் பெரிய கொடுமை 2009ல் முள்ளிவாய்க்காலில், கொத்துக் கொத்தாக ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டபோது மத்திய அரசில் பதவிதான் முக்கியம் என்று நாற்காலியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தமிழினத்துக்கே துரோகம் செய்தாரே... இதை மன்னிக்கவே முடியாது. ‘இன துரோகி’ பட்டத்துக்குப் பொருத்தமானவர் கலைஞரே. இந்த உச்சபட்ச துரோகம்தான் எனக்குத் தீராத மனக்கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இனியும் என்னால் கழகத்தில் நீடிக்க முடியாது. எனவே நான் என்னை அதிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வின் ‘கொள்கை’ ஊழல் புகாரில் மாட்டிக் கொண்டு ஒரு வருடமாக திகாரில் இருக்கிறது. எனவே வெட்கப்பட்டு வேதனைப்பட்டு என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஊழல் புகாரில் ஜெயிலில் இருந்தவருக்கு, பட்டுக் கம்பள வரவேற்பு! ஊழலுக்குத் தாலாட்டுப் பாடும் கட்சியில் எப்படி இருக்க முடியும்?" என்றுகேட்கிறார் கந்தன். இவர் வீசும் ஏவுகணைகளால் பொதுக்குழுவில் சலசலப்பு ஏற்படும்" என்கிறார்கள் சில மூத்த பிரமுகர்கள். பொதுக்குழுவில் இதைவிட இன்னும் பூதாகரமான வெடிகள் வெடித்தாலும் ஆச்சரியமில்லை.

நன்றி - கல்கி
படம் நன்றி - Times of India.



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

05_02_2012_003_002.jpg dmk



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

05_02_2012_401_022.jpg dmk kenjal



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

getimage



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

23026406.JPG Alagiri mounaguru



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

02



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

07_02_2012_005_010.jpg Ramesh Praba Kalaignar tv chief



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

உரசல்... 'கருணாநிதியா? ஸ்டா​லினா?' என்று பரிணாம வளர்ச்சி

 

 

 
அடுத்த தலைவர் யார்?

துவரைக்கும் 'ஸ்டாலினா? அழகிரியா?' என்றே இருந்தஉரசல்... இப்போது 'கருணாநிதியா? ஸ்டா​லினா?' என்று பரிணாம வளர்ச்சி கண்டிருப்பதாகத்தான் சொல்ல வேண்டும்!
புதிய உறுப்பினர் சேர்ப்பு, தி.மு.க.வின் சட்ட திட்டங்களில் மாற்றம், நாடாளுமன்றத் தேர்தல்... இப்படி விவாதிக்க வேண்டிய பலவிஷயங்களை தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்து, பொதுக்குழுவுக்கு அனைவரையும் அழைத்தார். ஆனால் 'தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்?' என்பதற்கான விவாத களமாகவே இந்தப் பொதுக்குழு அமைந்துவிட்டது. 'இனி இந்தப் பிரச்னையை கருணாநிதி அதிக தூரத்துக்குத் தள்ளிப் போட முடியாது’ என்பதையும் பொதுக்​குழு நடப்பு​கள் உணர்த்தி​ விட்டன.
'ஸ்டாலினே அடுத்த தலைவர்’ என்று அவரது ஆதர​வாளர்கள் முழங்கி வருகிறார்கள். 'அழகிரிக்கே அந்தப் பதவி’ என்று தென் மாவட்டங்களில் இருந்து கூவிக் கொண்டிருக்கிறார்கள் அஞ்சாநெஞ்ச அடிப்பொடிகள்! கூடவே, 'கலைஞர் இருக்கும்வரை, அவர்தான் தலைவர்’ என்றும் ஒரு உஷார் 'பொடி'யை இவர்​கள் தூவுகிறார்கள்.
'ஸ்டாலின் பெயரை கலைஞரே முன்மொழிந்து, அவரை கட்சியின் அரியா சனத்தில் உட்கார வைக்க வேண்டும்’ என்பது ஸ்டாலின் ஆதரவாளர்களின் ஆசை! கனிமொழி தரப்புக்கோ இந்த பரமபத விளையாட்டில் முக்கிய கட்சிப் பதவியில் எதையாவது பெற்றே தீரவேண்டும் என்ற பரபரப்பு!
ஸ்டாலின், அழகிரி... இருவரில் யாரை இப்போதைக்கு உயர்த்திப் பிடித்தாலும் கட்சி ஆட்டம் காணும் என்பதால் கருணாநிதி மொத்தமாகவே மௌனம் காக்கிறார். அவரது மௌனத்தை இனியும் தொடர அனுமதிக்க முடியாது என்று ஸ்டாலின் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் என்பதையே பொதுக்குழு காட்டியது. 
 
கடந்த 3ம் தேதி, சென்னை அண்ணா அறிவாலயத்​தில் தி.மு.க-வின் பொதுக்குழு கூடியது.
அன்று, பேரறிஞர் அண்ணா நினைவுதினம். அண்ணா நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்து அறிவாலயத்தில் உட்கார்ந்தார் கருணாநிதி. தீர்மானங்​கள், அஞ்சலித் தீர்மானங்கள் என்று வாசிப்பதில் காலை வேளை முழுமை​யாகக் கழிந்தது. மதிய வெயில் முடியும் நேரத்தில் 'சொல்லிவைத்த' மாதிரி சூட்டைக் கிளப்பினார் வீரபாண்டி ஆறுமுகம்.
முந்தைய நாள் நடந்த உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்திலேயே சீறியிருந்தார் வீரபாண்டி ஆறுமுகம். எனவே, இங்கே«யும் ஏதாவது வில்லங்​கமாகப் பேசுவார் என்று ஸ்டாலின் ஆதரவு ஆட்கள் எதிர்பார்த்தே வந்தார்கள். அதற்கு பீடிகை போடுவது மாதிரியே கருணாநிதி, அன்பழகன், வீராசாமி, துரைமுருகன், சற்குணபாண்டியன், வி.பி.துரைசாமி ஆகிய அனைவர் பெயரையும் சொன்ன வீரபாண்டி ஆறுமுகம்... ஸ்டாலின் பெயரை மட்டும் சொல்ல 'மறந்து' போனார். திடீரென ஞாபகம் வந்தவர் போல...
''பொருளாளர் பெயரை நான் மறந்து விட்டேன். தம்பி ஸ்டாலின் அவர்​களே! தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டால் மன்னிக்கத்தான் வேண்டும்!'' என்று சொல்லி விட்டு, பேச்சைத் தொடர்ந்தார் ஆறு​முகம்.
''வடமாவட்டத்தில் தளபதி கழகப் பணிகளை சிறப்பாக ஆற்றி வருகிறார். தென்மாவட்டத்தில் அஞ்சாநெஞ்சன் தனது பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகிறார். தலைவர் இதனைக் கண்​காணித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்... தலைவர் இருக்கும் போதே, 'அடுத்த தலைவர் யார்?’ என்று சிலர் பேசுவது சரியானதாக இல்லை. தலை​வருக்குப் பிறகு அஞ்சாநெஞ்சனோ... தளபதியோ... யார் வேண்டுமானாலும் தலைவராக வரட்டும். இப்போது அதைப் பற்றி பேச வேண்டுமா?'' என்று கேட்டு லேசாக இடைவெளி விட்டார் வீரபாண்டி ஆறுமுகம்.
'ஆமா... தளபதிதான் வரணும்’ என்று ஒருவர் குரல் கொடுத்தார். 'தளபதிதான் அடுத்த தலைவர்’ என்று இன்னொருவர் குரல் கொடுக்க... 'தளபதி’...'தளபதி’ என்று பலரும் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். அடுத்து சிலர் வீரபாண்டி ஆறுமுகத்தை காட்டமாக விமர்சித்துக் குரல் கொடுத்தனர். அப்படியும் ஆற்றாமை அடங்காதவர்களாக நான்கைந்து பேர் தாங்கள் உட்கார்ந்து இருந்த இடத்தை விட்டு எழுந்து மேடையை நோக்கி நகர்ந்து வர ஆரம்பித்தார்கள்.
 
இதைப் பார்த்த வீரபாண்டி ஆறுமுகம், 'அடிக்கப் போறியா? இந்தா அடி?’ என்று நெஞ்சை நிமிர்த்தி முன்னால் வர ஆரம்பித்தார். சேலத்து சிங்கமாச்சே... அதுவும் சிலுப்பிக் கொண்டது! கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகிய மூவரும் இதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தார்கள். திடீரென டென்ஷன் ஆன கருணாநிதி.... 'வீல் சேரை எடுத்துட்டு வாய்யா!’ என்றார். 'நல்லா இருக்குய்யா... நல்லா இருக்கு! நான் போறேன்... நீங்களெல்லாம் என்னமோ பண்ணுங்க!’ என்று கடுகடுத்துச் சொல்ல ஆரம்பித்தார் கருணாநிதி. ஸ்டாலினுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தனக்காகக் குரல் தரும் ஆதரவாளர்களை அடக்கி அமர வைக்கவும் அவர் முன் வரவில்லை. தொடர்ந்து ஏதோ முணுமுணுத்துக்கொண்டே இருந்தார் கருணாநிதி. அவரை அன்பழகன் சாந்தப்படுத்தினார். 'ஒண்ணுமில்லே... நீங்க அமைதியா இருங்கள்!’ என்று அன்பழகன் சொல்ல... 'நீங்க எதுக்குப் போறீங்க..? வருத்தப்படாம இருங்க!’ என்று ஸ்டா​லினும் சமாதானம் சொன்னார். ஆனால், ஸ்டாலின் முகத்தை கருணாநிதி ஏறெடுத்தும் பார்க்கவே இல்லை.
மைக் பிடித்த அன்பழகனின் பேச்சு பல உள் அர்த்தங்கள் கொண்டதாக இருந்தது.
''வீரபாண்டி ஆறுமுகம் பேசியதும் என்னுடைய கருத்துதான். ஸ்டாலின் மிகச்சிறப்பாக கழகப் பணி ஆற்றுகிறார் என்று நான் பாராட்டுகிறேன். அதற்காக, நான் வகிக்கும் பொதுச்செயலாளர் பொறுப்பை அவருக்குத் தூக்கிக் கொடுத்து விடுவேனா? எனக்குப் பிறகு அவர் அந்தப் பொறுப்பில் உட்காரலாம். ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் கலைஞரின் பிள்ளைகள். அந்த அடிப்படையில் எனக்கும் பிள்ளைகள்தான். அவர்கள் கழகப் பணி ஆற்றலாம். ஆனால், தனித்தனி அணியாக பணியாற்றக் கூடாது. தகுதியின் அடிப்படையில்தான் அந்தத் தலைமைப் பதவி வரவேண்டும். கலைஞரை விட நான் வயதில் மூத்தவன். அவர் தலைவராக வந்து உட்காரும்போது எனக்கே சில கூச்சங்கள் இருந்தன. என் வீட்டில் உள்ளவர்கள்கூட அதைக் கிண்டல் செய்தார்கள். ஆனால் கலைஞர், தனது தகுதியால் உயர்ந்து நின்றார். அவரைப் போல என்னால் உழைக்க முடியாது. அவரே இயக்கம். இயக்கமே அவர் என்று வளர்ந்தார். அப்படிப்பட்ட தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர... சும்மா தலைவராகத் துடிக்கக் கூடாது.
இந்த வயதிலும் கலைஞர் சுறுசுறுப்புடன் உழைக்கிறார். நேற்று இரவு கூட அவருக்கு உடல் நலமில்லை. கால், கை நரம்புகள் வலித்தன. 'மதியம் வரைக்கும் பொதுக்குழுவை நடத்தி முடித்துக் கொள்ளலாம்!’ என்று நான் சொன்னேன். 'எத்தனையோ மைல் தூரத்தில் இருந்து வந்திருப்பவர்களை ஏமாற்றக் கூடாது. மாலை வரைக்கும் பொதுக்குழு நடக்கட்டும்’ என்று கலைஞர் சொன்னார். தன்னுடைய உடல்நலம் பற்றிக் கவலைப்படாமல், இயக்கமே தன் உயிராகக் கருதி நடத்தும் கலைஞரைப் போல் வேறு யாரும் இருக்க முடியாது!'' என்று அன்பழகன் பேசப்பேச... நெகிழ்ந்து, குளிர்ந்து, நிமிர்ந்தார் கருணாநிதி.
அடுத்து தலைவர் என்ன பேசப் போகிறாரோ என்ற ஆவல் அரங்கம் முழுக்க தகித்த நிலையில் மைக் பிடித்த கருணாநிதி, ''பேராசிரியர் பேச்சு முழுமையும் என்னுடைய கருத்துதான். அடுத்த பொதுக்குழுவுக்கு நான் இருந்தால் பேசுகிறேன். நன்றி!'' என்று சுருக்கமாக, உருக்கம் காட்டி முடித்ததில் பலருக்கும் அதிர்ச்சி!
'தலைவர் பேசணும்.. தலைவர் பேசணும்’ என்று குரல்கள். அன்பழகனும், கருணாநிதியை பேசச் சொல்லி கேட்டுக் கொண்டார். கருணாநிதிக்கு முன்னால் இருந்த டீ பாயை எடுத்து விட்டார்கள். சிறுநேர மனமாற்றத்துக்குப் பிறகு டீ பாய்... மைக் ஆகியவை மறுபடி வைக்கப்பட்டன!
கருணாநிதி தழுதழுக்கும் குரலில் பேசினார். 'அவர்களே... இவர்களே' என்று எவரையும் விளிக்காமல்... 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே!’ என்ற வார்த்தை​களையும் கூட சொல்லாமல் நேரடியாகவே மனவருத்தங்களைக் கொட்ட ஆரம்பித்தார்.
பொதுக்குழு நிகழ்வுகளில் இடம்பெற்ற ஒருவர் கூறுகையில், ''ஒருவர் தன்னுடைய அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி, மீண்டும் தனக்கே வாக்களிக்கும்படி கேட்கும் வகையில் இருந்தது தலைவரின் அந்தப் பேச்சு. 'இந்தக் கட்சிக்காகவும் உங்களுக்காகவும் எப்படி எல்லாம் நான் உழைத்தேன். எனக்கு நீங்கள் காட்டுகின்ற நன்றி இதுதானா?' என்று கேட்பது போலத்தான் இருந்தது அந்தப் பேச்சு'' என்றார்.
''கொட்டுகிற மழையில் ராபின்சன் பூங்காவில் இந்தக் கட்சியை ஆரம்பித்த காலம் முதல் தொடர்​பவர்கள் நானும் பேராசிரியரும். ஊர் ஊராகப் போய் அயராமல் கொடி ஏற்றி வைத்துக் கட்சி வளர்த்தவன் நான். இந்தக் கட்சிக்காக நான் செலவிட்ட உழைப்பு இன்று இங்கே வந்திருக்கிற பல பேருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த நாட்டுக்குத் தெரியும். பேரறிஞர் அண்ணாவுக்கு நன்றாகத் தெரியும்.
இப்படிப்பட்ட கட்சியில் பொதுக்குழு சீரோடும் சிறப்போடும் அமைதியாக நடக்கிறதே என்று ஒற்றர்கள் மூலமாகக் கேள்விப்பட்டு அவர்களை விட்டே சிலரைத் தூண்டி விட்டு இருக்கிறார்கள். வீரபாண்டி ஆறுமுகம் பேசியதில் தவறு எதுவும் இல்லை. அவர் தி.மு.க. தொண்டர்களுக்குச் சில வேண்டுகோளை வைத்தார். அதைத் திரித்து, ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பதைப் போல காட்டிக் கொள்ளக் கூடிய சிலர் கட்சியில் பிளவை ஏற்படுத்த... சில குண்டர்கள் முயற்சித்ததை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதை யார் தூண்டி விட்டார்கள், இதைப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்பதை என்னுடைய இதயத்தில் எழுதி வைத்துக் கொண்டேன்!'' என்ற போது கருணாநிதியின் குரல் கம்மியது. மொத்தக் கூட்டமும் நிசப்தமாக அடுத்து தலைவர் என்ன சொல்லப் போகிறாரோ என்று கவனித்தது. அவருக்குப் பக்கத்தில் இருந்த ஸ்டாலின் தலையைக் குனிந்தவாறு கம்மென்று உட்கார்ந்திருந்தார்.
கருணாநிதி தொடர்ந்தார்...
''நீங்கள் ஸ்டாலினுக்கு உதவி செய்யவில்லை. அவர் வளர்வதற்கு முன்னால் அவருக்கு களங்கத்தைக் கற்பித்திருக்கிறீர்கள். தி.மு.க.வில் இதுவரை நடந்த அனைத்து தேர்தல்களும் அமைதியாகத்தான் நடந்துள்ளது. சுமுகமாக, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துத்தான் நடந்துள்ளது. அப்படித்தான் இனியும் நடக்க வேண்டுமென நான் நினைத்தேன். ஆனால், என்னைப் பற்றிய பெருமைகளை எல்லாம் நானே சொல்லி, 'என்னை மீண்டும் தலைவராகத் தேர்ந்து எடுங்கள்’ என்று என்னால் உங்களிடம் பிச்சை எடுக்க முடியாது. அதை நான் செய்யவும் மாட்டேன். அதுதான் உங்களில் சிலருக்கு விருப்பமாக இருந்தால், அடுத்த பொதுக்குழுவில் தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் என்று நடத்தி, யாருக்கு எவ்வளவு வாக்குகள் என்ற எண்ணிக்கையைப் பார்த்து முடிவு செய்யலாம்.!'' என்று கருணாநிதி சொன்னபோது... அதன் ஆழ-அகல பரிமாணங்கள் புரிந்து அதிர்ந்து போனது பொதுக்குழு.
கருணாநிதியின் கையை பேராசிரியர் அன்பழகன் தொட்டு அமுக்கினார். 'இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம்!’ என்று அவர் நிதானப்படுத்துவது போல இருந்தது. அதைப் புரிந்து கொண்ட கருணாநிதி சட்டென உணர்வுகளை தன் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து... காங்கிரஸ் கூட்டணி குறித்து பதில் சொல்வதற்கு சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.
அதைச் சொல்லிவிட்டு பேச்சை முடிக்க நினைத்​தாலும்... நடந்த சம்பவங்களின் வேதனை முழுதுமாக ஆற்ற முடியாமல் இருந்ததோ என்னவோ... பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி இப்படி கிண்டலடித்தார் தலைவர் -
''நீங்கள் எல்லாம் நல்ல சிந்தனையாளர்கள்தான். இல்லாவிட்டால் ஒரு பொதுக்குழு இந்த அளவுக்கு அமைதியாக நடப்பதற்கு இந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்க மாட்டீர்கள். நாளைக்கு இதுதான் எல்லாப் பத்திரிகைகளிலும் வரும். நம்மை இருட்டடிப்பு செய்ய நினைக்கிற பத்திரிக்கையாளர்கள்கூட இருட்​டடிப்பு செய்ய முடியாது! உங்களுடைய அருமையான, ஆதங்கமற்ற, அன்பான, மேடையை நோக்கிப் பாய்ந்து தம்பி வீரபாண்டி ஆறுமுகத்தையே திக்குமுக்காடச் செய்கின்ற வேகம் வரவேற்கத்தக்கது. அப்போதுதானே தி.மு.க-வுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்! அந்த விளம்பரத்தைக் காசில்லாமல் உண்டாக்கிய உங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பொதுக் குழுவைப் பற்றி - இப்போதுள்ள தி.மு.க. பற்றி எனக்கு புரிய வைத்தமைக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகிறேன்'' என்று சொல்லிவிட்டு, விடை பெற்றார் கருணாநிதி!
இந்த மாதிரியான கூட்டம் நடந்து முடிந்து, கருணாநிதி பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் போதெல்லாம் ஸ்டாலின் உடன் இருப்பார். ஆனால், அன்று அவர் இல்லை. தனியாகப் போய் நின்று கொண்டார். அவரை, கருணாநிதி தன் அருகில் அழைக்கவும் இல்லை.
''அரசியலில் இருந்து ஓய்வு எடுத்துக் கொள்​ளுங்கள்.. ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள் என்று என்னுடைய மனைவிகள் சொல்லிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், என்னால்தான் ஓய்வு பெற முடியவில்லை'' என்று கிண்டலாகச் சொல்லிச் சென்றார். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகே கருணாநிதிக்கு பக்கத்தில் வந்தார் ஸ்டாலின். ''வீட்டுக்குத்தானே..? நானும் வர்றேன்!'' என்றார் ஸ்டாலின். ''வீட்டுக்கு போகலைப்பா... ஆபீஸுக்குப் போறேன்'' என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு பதில் அளித்தார் கருணாநிதி.
பொதுக்குழு நடந்த 'கலைஞர் அரங்கத்தில்’ இருந்து அறிவாலயத்தில் தன்னுடைய அலுவலக அறைக்கு வந்தவர், அரைமணி நேரத்துக்கும் மேலாக அங்கேயே உட்கார்ந்து சக தலைவர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார். ஸ்டாலினுடன் பயணிக்கும் சில நிமிடங்களை அன்றைக்குத் தவிர்க்க நினைத்தாரோ என்னவோ...!
''கூச்சல் போட்டவர்களுக்கும் ஸ்டாலினுக்கும் சம்பந்தமில்லை என்றால் உடனே மைக் அருகில் வந்து அவர்களை ஸ்டாலின் கண்டித்திருக்க வேண்டும். கூச்சல் போட்டவர்களை வீரபாண்டி ஆறுமுகத்திடம் மன்னிப்புக் கேட்கும்படி செய்திருக்க வேண்டும். அதைச் செய்யாமல் அவர் வேடிக்கை பார்த்தது சரியில்லை'' என்பது, பொதுக்குழு உறுப்பினர் ஒருவரின் கருத்து. ''இதைத் தூண்டிவிட்டவர்கள் யார் என்று என் மனதுக்குள் எழுதி வைத்துவிட்டேன் என்று, தலைவர் சொல்வது ஸ்டாலினை மனதில் வைத்துத்தான்! 'தலைவர் பதவிக்கான தேர்தலில் அடுத்த முறை போட்டி இருக்கட்டும். நான் போட்டி போடுகிறேன். யார் அடுத்த தலைவர் என்று பார்த்து விடலாம் என்ற தொனியில் தலைவர் பேசியது, பகிரங்கமாக ஸ்டாலினுக்கு விடுக்கப்பட்ட சவால்'' என்றும் சொல்கிறார் அவர்.
அதிரடியான அழகிரி 'நல்லபிள்ளை’ என்று பெயர் எடுக்க... அமைதியான ஸ்டாலின் 'சர்ச்சையில்’ சிக்கியது தி.மு.க.வில் ஏதோ ஒன்று நடக்கப் போவதற்கான அறிகுறி!
முந்தைய நாள் நடந்த கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் கூட்டத்துக்கு வந்து கடைசி வரிசையில் உட்கார்ந்த அழகிரி... மறுநாள் நடந்த பொதுக்குழுவுக்கு காலையில் வந்து முன்வரிசையில் அமர்ந்தார். அவருடன் தயாநிதி மாறன், மன்னன், மூர்த்தி, எஸ்ஸார் கோபி ஆகியோரும் வந்தார்கள். காலை நிகழ்வுகள் முடிந்ததும் மதிய சாப்பாட்டுக்காக கிளம்பிப் போன அழகிரி, பிறகு மதியம் வரவில்லை.
எனவே வீரபாண்டி ஆறுமுகத்தின் பேச்சு, அதன்பிறகு நடந்தவற்றை அழகிரி பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. ''சும்மா அங்கே போய் வேடிக்கை பார்க்கிறதுக்கு எதுக்குப் போகணும்?'' என்று ஆதரவாளர்களிடம் சொன்னாராம் அழகிரி.
''அவர் வந்திருந்தால், கதையே வேறு மாதிரிப் போயிருக்குமோ..?'' என்று கேட்டுக் கொண்டு கலைந்தார்கள் பொதுக்குழுவில் சிலர்!
- ப.திருமாவேலன், இரா.தமிழ்கனல்
அட்டை மற்றும் படங்கள்: என்.விவேக் 
கனிமொழிக்காக....
 
கனிமொழிக்காக பேசினார் விஜயா தாயன்பன். ''கனிமொழி இல்லாமல் நடக்கிறதே என்று கோவை பொதுக்குழுவின்போது வருத்தப்பட்டேன். சென்னை பொதுக்குழுவுக்கு அவர் வந்துவிட்டது மகிழ்ச்சியைத் தருகிறது. என்னைப் போலவே நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்று நினைக்​கிறேன்'' என்று சொல்லி நிறுத்தினார். பொதுக்குழு அமைதியாக இருந்தது.
''நீங்கள் கைதட்டவில்லை என்றாலும் மகிழ்ச்சி​யாகத்தான் இருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும்'' என்று 'சும்மா கிடந்த சங்கை' ஊதிவிட்டு உட்கார்ந்தார். 
ஃபேஸ்புக்கா? டி.வி-யா?
தயாநிதி மாறன் பேசும்போது தி.மு.க.வின் பிரசார உத்திகளில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார். ''இன்றைக்கு இன்டர்நெட், ஃபேஸ்புக், ஆர்குட் என்று சமூக வலைதளங்கள் வந்துவிட்டன. இதைத்தான் இளைஞர்கள் அதிகம் பார்க்கிறார்கள். படிக்கிறார்கள். இந்த ஏரியாவையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கேயோ கனடாவில் உட்கார்ந்து கொண்டு தி.மு.க-வை திட்டி இணையதளத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்க நாமும் தயாராக வேண்டும்'' என்று சொன்னார்.
அடுத்துப் பேசிய திருச்சி சிவா, ''ஃபேஸ்புக், ஆர்குட் என்பவை படித்தவர்கள் மீடியம்தான். ஆனால், அனைவர் வீட்டிலும் இருப்பது டி.வி! உங்களிடம் இருக்கும் டி.வி. மூலமாக தி.மு.க.வுக்கு பிரசாரம் செய்தீர்கள் என்றாலே போதும். தி.மு.க. முழு வெற்றி பெறும்'' என்று சொன்னார்!
''எனக்கு எந்த பயமும் இல்லை!''
வழக்கறிஞர் ஜோதி பேசும் போது பிரதமர் மன்மோகன் சிங்கையும் கடுமையாகக் குற்றம் சாட்டினார். ''ஒரு அரசியல்வாதி இந்தியாவின் பிரதமராக இருந்திருந்தால் இந்தப் பிரச்னையே வந்திருக்காது. அரசியல் தெரியாத பொருளாதார வல்லுநராக அவர் இருப்பதுதான் சிக்கல்'' என்று சொன்னதும், முன்வரிசையில் இருந்த தயாநிதி மாறன் எழுந்து, ''பிரதமரைப் பற்றி தனிப்பட்ட முறையில் குற்றம் சொல்ல வேண்டாம். அவரை எதற்கு குற்றம் சாட்டுகிறீர்கள்?'' என்று கேட்டார்.
''உங்களுக்கு வேண்டுமானால் பிரதமரைப் பற்றிப் பயம் இருக்கலாம். எனக்கு எந்தப் பயமும் இல்லை. அதனால்தான் உண்மையைப் பேசுகிறேன்'' என்பது ஜோதியின் பதில்!
உயர்நிலைக் குழுவில் தொடங்கிய உஷ்ணம்!
தி.மு.க-வின் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்யும் முயற்சி பற்றி, கடந்த 3-ம் தேதியன்று அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடி விவாதித்தது. அதில், முக்கிய இடம் பிடித்தவை, மூன்று யோசனைகள். ஒன்று, நகர மற்றும் ஒன்றிய அளவில் ஒரே பதவிக்கு தொடர்ந்து ஒருவர் மூன்று முறைக்கு மேல் போட்டியிடக் கூடாது... அடுத்து, பெரிய மாவட்டங்களை கட்சிப் பொறுப்பைப் பொறுத்தவரை இரண்டாகப் பிரிப்பது. மூன்றாவது... பதவியைப் பிடிப்பதற்காக ஒரே ஊருக்குள் கட்சித் தேர்தலின்போது மட்டும் கிளைகளை உருவாக்குவதைத் தடுக்கும் வகையில், ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிளை, அதற்குக் கீழ் ஊராட்சியின் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு கிளை மட்டுமே இருக்க வேண்டும் என்பது.
ஊராட்சிக் கிளை திருத்தத்துக்கு எல்லாரும் ஒரே குரலில் ஆதரவு தெரிவித்தனர். அதேசமயம், மூன்று முறைக்கு மேல் போட்டியிடக்கூடாது என்ற யோசனையை, அனைவருமே எதிர்த்தார்கள். இதேபோல் மாவட்டப் பிரிப்புக்கு அதிக எதிர்ப்பு கிளம்பியது. ''கரூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்டங்களில் நான்கு தொகுதிகள்தான் உள்ளன. நாகை, தூத்துக்குடி, கன்னியாகுமரியிலோ ஆறு தொகுதிகள், தஞ்சையில் ஒன்பது தொகுதிகள், நெல்லையில் 10 தொகுதிகள், சேலம், விழுப்புரத்தில் 11 தொகுதிகள், வேலூரில் 13 தொகுதிகள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் எதிர்மாறாக தொகுதிகளின் எண்ணிக்கை இருக்கிறது. தி.மு.க-வைப் பொறுத்தவரை, ஏற்கெனவே தருமபுரியில் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்ட அமைப்புகள் உள்ளன. 100 வார்டுகள் வந்துவிட்ட மதுரை மாநகராட்சி தனி மாவட்டமாக உள்ளது. அதே போல, 100 வார்டுகள் பெற்​றுள்ள கோவை மாவட்டத்தையும் இரண்டாகப் பிரிக்கலாம். அதிக தொகுதிகள் உள்ள மாவட்டங்களை மாவட்டச் செயலாளர்​களின் யோசனைப்படி பிரிக்கலாம்'' என்று, டி.கே.எஸ்.இளங்​கோவன் பேச, முதல் முயற்சியிலேயே அதைக் கிள்ளியெறியும் வகையில் சீறிப்பாய்ந்து விட்டார், வீரபாண்டி ஆறுமுகம்.
''63 வாங்கி 5 கூட ஜெயிக்க முடியாத கட்சி எதுக்கு?''
தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான குரல்கள் அதிகமாக ஒலித்தன. காலை நிகழ்ச்சியில் பேசிய குளித்தலை சிவராமன், குத்தாலம் கல்யாணம் ஆகிய இருவருமே, ''காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி தொடர வேண்டாம்'' என்று வலியுறுத்தினார்கள். இவர்களது பேச்சுக்கு உறுப்பினர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்தது. ''அதே சமயம் தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்பட்டுச் செயல்படுவோம்'' என்பதையும் சொல்லிச் சென்றார்கள்.
 
மதியம் நிகழ்வுகளில் பேசிய வழக்கறிஞர் ஜோதி, இந்தக் கருத்தை விலாவாரியாக எடுத்து வைத்தார்.
''போஃபர்ஸ் விவகாரத்தில் இருந்து தப்பித்துக் கொள்​வதற்காக, தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இன்றுவரை எதை எதையோ செய்து பார்க்கிறது காங்கிரஸ். தங்களைப் பாதுகாத்துக் கொள்ள இந்த மாதிரி நடப்பவர்கள், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஆ.ராசாவையும் கனிமொழியையும் மாட்டிவிட்டு தாங்கள் தப்பிக்க நினைக்கிறார்கள். 63 ஸீட்களை நம்மிடம் கேட்டு வாங்கியவர்களால், ஐந்து சீட் கூட ஜெயிக்க முடியவில்லை. அவர்களோடு எதற்கு நாம் கூட்டணியைத் தொடர வேண்டும்? காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்றால்... அதற்காக பாரதிய ஜனதாவுடன் அணி சேர வேண்டும் என்று நான் சொல்லவில்லை'' என்று பேசி பரபரப்பு ஆக்கினார் ஜோதி.
பேராசிரியர் அன்பழகன் பேசுகையில், ''ஜோதி அதிக விவரமானவர். தலைவர் கலைஞரிடம் தனியே சொல்ல வேண்டியதை எல்லாம் இங்கே பொதுக்குழுவில் பேசி இருக்க வேண்டாம்'' என்று கூறினார்.
இதற்கெல்லாம் தனது பேச்சில் பதில் சொன்னார் கருணாநிதி.
''காங்கிரசுடன் உறவு வேண்டுமா வேண்டாமா என்று பிரச்னை எழுவதற்கான தேவையே இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸுடன் உறவு வேண்டாம் என்று உங்களிடம் கேட்காமலேயே நாங்கள் முடிவு எடுத்தோம். உங்கள் எண்ணமும் அதுவாகத்தான் இருக்கும் என்று நினைத்தோம். அப்படி, நாடாளுமன்றத் தேர்தலில் முடிவு எடுக்க முடியாது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைக்கவில்லை என்றால், மதவாத பா.ஜ.க. ஆட்சியில் அமருவதற்கு நாமே உதவி செய்தது போலாகும். பா.ஜ.க-வை வரவிடாமல் தடுக்க நமக்கு இருக்கும் ஒரே மாற்று காங்​கிரஸ்தான்.
'காங்கிரஸ் உங்களுக்கு நன்மை செய்ததா?’ என்று நீங்கள் கேட்கலாம். 'உங்கள் மகள் கனிமொழியியை திகார் சிறையிலே வாட வைத்தார்களே?’என்று கேட்கலாம். 'தம்பி ராசாவை பூட்டி மகிழ்ந்தார்களே?’ என்று கேட்கலாம். தன்னலத்தை மறந்து விட்டு இந்தியாவின் எதிர்காலத்தைப் பற்றித்தான் நான் யோசிப்பேன். எனக்கு கனிமொழியின் வேதனை பெரிதல்ல. இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாக ஆக்க விடமாட்டேன். இப்போதே, ஜெயலலிதாவை பிரதமர் ஆக்க சோ போன்றவர்கள் முயற்சியைத் தொடங்கி விட்டார்கள். இதை நாம் எப்படி ஏற்க முடியும்? காங்கிரஸுக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. அந்தக் கட்சியைத்தான் தொடர்ந்து ஆட்சியில் வைக்க வேண்டும் என்று சொல்கிற அளவுக்கு அவர்கள் நமக்கு எந்த நன்றியையும் செய்து விடவில்லை. ஆனால், காங்கிரசுக்காக அல்ல... வேறு வழியில்லை என்பதற்காக காங்கிர¬ஸையே ஆதரிக்க வேண்டி இருக்கிறது'' என்றார் கருணாநிதி!


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

‘‘தி.மு.க. பொதுக்குழுவில் பதவி கிடைக்காததால் நொந்து போயிருக்கும் வாரிசுகளை ஒட்ட வைக்க பாடுபடுகிறாராம் கருணாநிதி. குழுவுக்கு அடுத்த நாளே அழகிரி, ஸ்டாலின், கனிமொழி மற்றும் மூத்த தி.மு.க தலைவர்கள் சிலரின் கூட்டத்தைக் கூட்ட முயன்றாராம்.
தனது உதவியாளர் சண்முகநாதன் மூலமாக இதுபற்றி வாரிசுகளுக்கும் தகவல் கொடுத்துள்ளார். ஆனால், கூட்டம்தான் நடக்கவில்லை. மலேசிய பயணம் பற்றி ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதால், அதை கேன்சல் செய்ய முடியாது என்று சொல்லிக் கிளம்பிவிட்டார் அழகிரி. உடல் நலத்தைக் காரணம்காட்டி ஸ்டாலினும் ஒதுங்கிக்கொள்ள, ‘அப்பா என்ன முடிவெடுத்தாலும் கட்டுப்படத் தயார்’ என்று சென் டிமென்டாக சொல்லிவிட்டாராம் கனிமொழி.’’

‘‘ஐயகோ!’’

‘‘இனி கழகத்தில் எனக்கு துணைத் தலைவர் பதவியோ, இணைத் தலைவர் பதவியோ தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம் ஸ்டாலின். ‘கழகத்தில் முதல் இடம் கருணாநிதிக்கு, அடுத்த இடம் அன்பழகனுக்கு, மூன்றாவது இடம்தான் தனக்கு’ என விசனப்பட்ட ஸ்டாலின், ‘அட்லீஸ்ட் உள்கட்சித் தேர்தல் முடிந்த பிறகு கூடும் பொதுக்குழுவிலாவது தனக்கு தலைவர் பதவி கிடைத்துவிடும்’ என நம்பியிருந்தாராம். ‘50 வயதிற்குள்ளேயே தலைவர் பிளஸ் முதல்வர் பதவிகள் தந்தைக்கு வந்துவிட்டது. மகனான தான் 60 வயதிலாவது தி.மு.க. தலைவராக வேண்டும்’ என்று ஆசைப்படுகிறாராம். அப்படி தலைவர் பதவியைக் கொடுக்காவிட்டால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாகவும் முடிவெடுத்துவிட்டாராம்.’’

‘‘கருணாநிதியின் ரியாக்ஷன்?’’

‘‘மகனிடமிருந்து ‘சுரீர் சுரீர்’ என விழும் சாட்டையடியைப் பார்த்து தடுமாறும் கருணாநிதி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இதுபற்றி ஆலோசனை நடத்தி வருகிறாராம். தன்னோடு அன்பழகன், ஆற்காடு வீராசாமி, கோ.சி.மணி, வீரபாண்டி ஆறுமுகம், அழகிரி, துரைமுருகன் ஆகிய ஏழு பேரைக்கொண்ட ‘ஆட்சிமன்றக் குழு’ ஒன்றை அமைப்பதுபற்றி யோசிக்கிறாராம் கருணாநிதி. தி.மு.க தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் முழு அதிகாரம் கொண்டதாக இந்த ஆட்சிமன்றக் குழு இருக்குமாம். இது சாத்தியமாகிவிட்டால், கட்சியின் தலைவராக ஸ்டாலினும், பொதுச் செயலாளராக குடும்பத்துக்கு வெளியில் இருந்து ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படுவாராம். ஸ்டாலின் தலைவராக இருந்தாலும்கூட, முக்கிய முடிவுகளை ஆட்சிமன்றக் குழுதான் எடுக்குமாம்.’’

‘‘ஆக, இடதுசாரி கட்சிகளில் இருக்கும் பொலிட் பீரோ போல் இந்தக் குழு இயங்குமோ?’’ என்று சிஷ்யை கேட்க... ரியாக்ஷன் காட்டாமல், 

‘‘தி.மு.க. பொதுக்குழுவுக்குப் பின்பு அறிவாலயத்தில் நடந்த திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் ‘சங்கர் என்ற இன்ஜினீயரை நிற்க வைக்கலாம்’ என கருணாநிதி சொல்லியிருக்கிறாராம். சங்கர் முன்னாள் எம்.சி.யாம். அ.தி.மு.க. பெண் வேட்பாளரான முத்துச்செல்வியும் இன்ஜினீயர் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்க து..’’ என்ற வம்பானந்தா தொடர்ந்து, ‘‘சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதியை அறிவிக்கும் முன்னரே அதைச் சந்திக்க 34 பேர்கொண்ட குழுவை அமைத்திருக்கிறார் ஜெயலலிதா. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் மட்டும் போதாது. எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் டெபாசிட்டை இழக்க வேண்டும் என்பதுதான் ஜெயலலிதாவின் விருப்பமாம். இந்த விருப்பம் இந்தக் குழுவுக்கு கட்டளையாகவே போட்டப்பட்டுள்ளதாம். அதே நேரத்தில் இந்த குழுவில் 26 அமைச்சர்களைச் சேர்த் துள்ள ஜெயலலிதா, சிலரை மட்டும் ஒதுக்கி வைத்திருக்கிறார். அந்த அமைச்சர்கள் முதல்வரின் ஹிட் லிஸ்டில் இருப்பதாகவும் விரைவில் அவர்களுக்கு பதவி பறிபோகலாம் என்றும் கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.’’
thanks kumudam



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

14932125.JPG new kuttani



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

14_02_2012_001_007.jpg stalin veerapandi



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

15_02_2012_012_007.jpg raja dmk



-- Edited by Admin on Wednesday 15th of February 2012 04:13:49 PM

__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

'எனக்கே இந்தக் கதியா?’ கருணாநிதி

 

'முரசொலி’ நாளிதழை அவசரமாக எடுத்து வரச்சொல்லி வாசிக்க ஆரம்பித்தார். திங்கள் கிழமை காலையில் வெளியான இதழின் 2-வது பக்கத்தில் தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் ஓர் அறிவிப்பு வெளியாகி இருந்தது. வீரபாண்டி ஆறுமுகத்தை எச்சரிக்கும் அறிக்கை!


'தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலின் மாவட்ட அளவில் பல இடங்களில் இளைஞர் அணிக்கு உறுப்பினர்களைச் சேர்த்து நிர்வாகிகளை அறிவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், இளைஞர்அணி உட்பட பல்வேறு கழக அணிகளுக்கு நேரடியாக மாவட்டக் கழகமே தேர்வு செய்வதாக சேலம் மாவட்டத்தில் தனியாக அறிவிக்கப்பட்டு இருப்பது தலைமைக் கழகத்தின் அனுமதியைப் பெறாதது. இது, கழகக் கட்டுப்பாட்டையும் மீறியது என்பதால், அந்த முயற்சியைக் கைவிட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது’ என்ற தொனியில் அந்த பெட்டிச்செய்தி எச்சரித்தது.

இதைப் படித்துவிட்டு நிமிர்ந்த கழுகார், ''புதிய பிளவுக்கான அடித்தளம் இந்தப் பெட்டிச் செய்திக்குள் இருக்கிறது. மாவட்டம் மாவட்டமாகச் சென்று இளைஞர் அணிக்குப் புதிய நிர்வாகிகள் தேர்ந்து எடுப்பதை பெரும் கடமையாகச் செய்து வருகிறார் ஸ்டாலின். ஆனால், சேலம் மாவட்டத்துக்கு மட்டும் வீரபாண்டி ஆறுமுகமே தேர்ந்து எடுத்தால், அதை எப்படி ஏற்றுக்கொள்வார் ஸ்டாலின்? வீரபாண்டி ஆறுமுகத்தின் செயல்பாடுகளைப் பார்த்துக் கொதித்துப் போனாராம்.''

''என்ன செய்தாராம்?''



''இந்த செய்தியைக் கேள்விப்பட்டபோது விருதுநகரில் இருந்தார் ஸ்டாலின். அங்கே, இளைஞர்அணி துணை அமைப்பாளர் ஏ.எஸ்.கே.ரமேஷ்குமார் என்பவரின் வீடு திறப்புவிழாவில் இருந்தார். அதை முடித்துவிட்டு தி.மு.க. முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் பேத்தி திருமணத்தை நடத்தி வைத்தார். அப்போதுதான், வீரபாண்டி ஆறுமுகத்தின் செயல் பாடுகள் சொல்லப்பட்டன. அங்கே இருந்தபடியே கருணாநிதியின் பி.ஏ. சண்முகநாதனுக்கு போன் செய்து தன் கோபத்தை வெளிக் காட்டினார் ஸ்டாலின்.''

''ஏன் அப்பாவிடம் பேச மாட்டாரா?''

''பிப்ரவரி 3-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு நடந்தது. இன்று 13-ம் தேதி. இடைப்பட்ட 10 நாட்களுக்குள் இரண்டு முறைதான் கருணாநிதியை, ஸ்டாலின் சந்தித்தார் என்கிறார்கள். அதுவும் கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று சந்திக்காமல், அறிவாலயத்தில் பார்த்து வணக்கம் வைத்துத் திரும்பிவிடுகிறாராம். இருவருக்கும் சரியான முறையில் பேச்சுவார்த்தை இல்லை என்று சொல்லப் படுகிறது. அதனால் நேரடியாக கருணாநிதிக்குப் பேசாமல், தூதராக சண்முகநாதனைப் பயன்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின்.''

''என்ன சொன்னாராம் ஸ்டாலின்?''

''வீரபாண்டி ஆறுமுகத்தின் செயல்பாட்டைக் கடுமையாக எதிர்த்தாராம். 'எல்லா மாவட்டத்துக்கும் நான் போய் இளைஞர் அணி ஆட்களைத் தேர்ந்தெடுப்பேன். சேலத்தில் மட்டும் அவர் தேர்ந்து எடுக்கிறார் என்றால், சேலத்துக்குள் நான் வரக்கூடாதா? இந்தக் கூட்டம் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதுன்னு தலைவரை அறிவிப்பு வெளியிடச் சொல்லுங்க. இல்லைன்னா, நாளை முதல் நான் எந்த ஊருக்கும் போக மாட்டேன். எந்தக் கூட்டத்திலும் கலந்துக்க மாட்டேன். வீட்லயே சும்மா உட்கார்ந்துடுவேன்’ என்று சீறினாராம். பிப்ரவரி 14, 15 ஆகிய தேதிகளில் அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நடக்கும் தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கு ஸ்டாலின் வருவதாகத் தேதி கொடுத்திருந்தார். அதையும் கேன்சல் செய்ய முடிவெடுத்து விட்டாராம். இதைக் கேள்விப்பட்ட கருணாநிதி, வீரபாண்டி ஆறுமுகத்தை அழைத்து சமாதானம் செய்ய முயற்சித்தார். அது பலிக்கவில்லை!''



''சேலத்துச் சிங்கமாச்சே?''

'' 'அறிவித்த கூட்டம்.... அறிவித்த மாதிரி நடக்கும்’ என்பது வீரபாண்டி ஆறுமுகத்தின் பதில். எனவேதான், தலைமைக் கழகம் சார்பில் இந்தப் பெட்டிச் செய்தி தயார் ஆனது. இந்தச் செய்தியைக் காலையில் எழுந்து படித்துப் பார்த்து விட்டுத்தான், வீரபாண்டி ஆறுமுகம் கூட்டத்துக்குக் கிளம்பினார். 'இளைஞர்அணி நிர்வாகிகளை தலைமைக் கழகம் தேர்வு செய்யும். நான் இளைஞர் அணி நிர்வாகிகளாக வர விரும்பு வர்களுக்கு விண்ணப்பம் கொடுக்கத்தான் வந்தேன்’ என்று வீரபாண்டி ஆறுமுகம் அடித்த கமென்ட்தான் காமெடியின் உச்சம். இதை....''

''அதை...?''

''கருணாநிதியும் அழகிரியுமே ரசித்ததாகச் சொல்கிறார்கள். 'கருணாநிதி, அன்பழகனுக்குத் தெரி விக்காமல் ஆறுமுகம் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்க மாட்டார்’ என்றும் சொல்கிறார்கள் சிலர். கருணாநிதி இப்படி நடந்துகொள்வதற்கு சில சம்பவங்களையும் இவர்கள் அடுக்குகிறார்கள்.

பொதுக்குழு முடிந்த மறுநாள், 'அந்தக் கூட்டத்துல கத்தினவங்க யாரையுமே எனக்குத் தெரியலயே... யாரு அவங்க?’ என்று கருணாநிதி கேட்டதாகவும்... அதற்கு அறிவாலயத்து அலுவலர்களால் சரியான பதில் சொல்ல முடியவில்லை என்கிறார்கள். 'பொதுக்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். தலைமைக் கழகத்துக்கு நெருக்கமானவர்கள் அல்லது முன்னாள் அமைச்சர்கள், அரசியலில் ஆக்டிவ் ஆக இல்லாத பிரமுகர்களுக்கு சிறப்பு அழைப் பாளர்கள் என்று கார்டு தரப்படும். ஆனால், இந்த முறை ஸ்டாலினுக்கு வேண்டிய மாவட்டச் செயலாளர்களுக்கு மட்டும் ஆளுக்கு 50 பாஸ்கள் தரப்பட்டுள்ளன. தளபதிக்கு எதிராக யாராவது பேசினால் கூச்சல் போடுவதற்காகவே அவர்களை அழைத்து வந்துள்ளார்கள்’ என்று கருணாநிதிக்குச் சொல்லப்பட்ட தகவலை வைத்துத்தான் அவர் இப்படி சந்தேகக் கேள்வியைக் கேட்டிருக்கிறார். சிறப்பு பாஸ் வாங்கியவர்கள் யார் என்று கருணாநிதி கேட்க, அதற்கு சரியான பதில் சொல்லாமல் அவர்கள் விழிக்க... 'எனக்கே இந்தக் கதியா?’ என்று அவர் புலம்பியபடி அறிவால யத்தைவிட்டு வெளியேறியதாகவும் பேச்சு. 'எதையுமே என்னிடம் சொல்லிட்டுப் பண்ணக்கூடாது, கேட்டுட்டுப் பண்ணக்கூடாதுன்னு உங்களுக்கு யாரு சொல்லியிருக்கா?’ என்றும் கேட்டாராம் கருணாநிதி.''

''ம்!''

''அறிவாலயம் வட்டாரத்தில் வலம் வரும் ப்ளான் ஒன்றைச் சொல்கிறேன். 'இன்றைய நிலையில் ஸ்டாலினுக்கு தலைவர் பதவி ஒன்றுதான் பாக்கி. மற்றது அனைத்தும் அவர் கைவசம் வந்து விட்டது. முரசொலியில் அவரது மகன் உதயநிதி முக்கியப் பொறுப்புக்கு வந்து விட்டார். நிர்வாகம் அனைத்தும் அவர் வசம் வந்துவிட்டது. தலைவர் மற்றும் அழகிரி போன்றவர்களால் செய்திகளை வரவழைக்க முடியுமே தவிர, நிர்வாகத்தில் தலையிட முடியாது. அழகிரி பிறந்தநாளை முன்னிட்டுத் தரப்பட்ட விளம்பரங்களில்கூட சிலவற்றை மட்டும்தான் வெளியிட்டார்கள். 'இடம்இல்லை’ என்று, சில விளம்பரங்களை நிறுத்திவிட்டதாக மதுரையில் சிலர் புலம்புகிறார்கள்.

அடுத்து, கலைஞர் டி.வி. அதில், நிர்வாகப் பொறுப்பில் இருந்த கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவரும் சைலன்ட் ஆன நிலையில் நியமிக்கப் பட்டவர் ஸ்டாலின் நிழலாக வலம் வரும் வக்கீல் கல்யாணசுந்தரம். இதில், அழகிரி தரப்பு நியமனம் எதுவும் இல்லை. எனவே, கலைஞர் டி.வி-யும் இவர்களது வசம் ஆனது. அறிவாலயத்தைப் பொறுத்தவரை உச்சபட்ச அதிகாரம் பொருந்தியவர்களாகச் சொல்லப்படும் மேலாளர்கள் ஜெயக்குமார், பத்மநாபன் ஆகிய இருவரும் முழுக்க ஸ்டாலின் ஆட்களாகவே மாறிவிட்டார்கள். இப்படிப்பட்ட நிலைமையில் ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி ஒன்றுதான் பாக்கி என்று சொல்கிறார்கள்.''

''இதை எல்லாம் தெரிந்தும்கூட கருணாநிதி வருத்தப்பட்டு இருக்கலாம். பொதுக்குழுவுக்குச் சில நாட்களுக்கு முன், ஒரு நிகழ்ச்சிக்கு கருணாநிதி சென்றாராம். அப்போது அவரை வரவேற்றவர்கள் அனைவரும் தங்களின் சட்டை பாக்கெட்டில் ஸ்டாலின் படத்தை வைத்திருந்தார்களாம். கார் கிளம்பிய பிறகு 'எல்லாரும் யாரு படத்தை பாக்கெட்டுல வெச்சிக்காங்கன்னு பார்த்தியாய்யா?’ என்று கமென்ட் அடித்தாராம். அதில் வருத்தம்தான் தூக்கலாக இருந்ததாம்.''

''போகிற போக்கைப் பார்த்தால், அடுத்த பொதுக் குழு சிக்கலாகத்தான் இருக்கும்!'' என்று நாம் சொன்னதைக் கேட்டுச் சிரித்தபடி ஜெயலலிதா மேட்டருக்குத் தாவினார் கழுகார்!


__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

16_02_2012_018_013.jpg dayanithi for cottion prices



__________________


Guru

Status: Offline
Posts: 24603
Date:
Permalink  
 

16_02_2012_012_006.jpg azaagiri dmk chief post



__________________
« First  <  Page 16  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard