
"ஊழல், அலட்சியம், நிர்வாகச் சீர்கேடு, பாலியல், பாதுகாப்பின்மை இதற்கெல்லாம் போட்டிகள் நடந்தால் இந்தியாவுக்குத்தான் அத்தனை பதக்கங்களும் கிடைக்கும். இதை வாங்குவதற்கு விளையாட்டுவீரர்கள் வேண்டாம். அரசியல்வாதிகளும் அதிகாரவர்க்கமுமே போதும்' -டெல்லிவாசிகளிடமிருந்து இப்படிப்பட்ட கமெண்ட் சர்வசாதாரணமாகக் கேட்கிறது. 19-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் அக்டோபர் 3 முதல் 14 வரை நடைபெறவுள்ள நிலையில், உலக நாடுகளின் பார்வையில் கேவலப்பட்டு நிற்கிறது இந்திய விளையாட்டு அமைப்பு.

காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தாமதமாவதும், விளையாட்டு மைதானங்களின் தரம் பற்றிய சந்தேகம் எழுவதும் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. டெண்டரை லண்டனைச் சேர்ந்த ஒரு டுபாக்கூர் கம்பெனிக்கு டெல்லி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் அமைப்பாளர் சுரேஷ்கல்மாடி கொடுத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு வெளிப்பட்ட நாளிலிருந்தே சர்ச்சைகள் நீடிக்கின்றன.
எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது என்றார் கல்மாடி. கட்டி முடிக்கப்பட்ட ஒரு உள்விளையாட்டு அரங்கத்தை திறந்துவைத்தார் மத்திய அமைச்சர் ஜெய்ப்பால் ரெட்டி. கொஞ்ச நேரத்தில் மழை பெய்ய, தண்ணீர் ஒழுகி, விளையாட்டரங்கம் நீச்சல்குளமானது. கல்மாடியின் நிர்வாக லட்சணத்தின் சாயத்தை மழை வெளுத்துவிட்டது.
""உலக அரங்கில் பெயர் கெட்டுப்போய்விடும். அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட வேண்டும்'' என்றார் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில். அப்போது அவரது குரலை பிரதமர் உள்பட யாரும் பொருட்படுத்தவில்லை. சோனியா இதில் நேரடியாக கவனம் செலுத்தாவிட்டாலும் அவரது நம்பிக்கைக்குரியவர்களான மணிசங்கரய்யரும் திக்விஜய்சிங்கும் போட்டிகள் நடைபெறும் முறையை யும் கல்மாடியின் நடவடிக்கை களையும் கடுமையாக விமர் சித்தனர்.
அமெரிக்கா சம்பந்தப்படாத எந்த விஷயத்திலும் பிரதமரும் ப.சி உள்ளிட்ட சீனியர் அமைச்சர்களும் கவனம் செலுத்துவ தில்லை. காமன்வெல்த் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா இல்லாததால் அவர்கள் ஆரம்பத் தில் அலட்சியமாகவே இருந்தார்கள் என்கிறது விளையாட்டு வீரர்கள் தரப்பு. கல்மாடியின் பவரைக் குறைத்து ஒரு குழுவிடம் அதிகா ரத்தை ஒப்படைக்கலாம் என்றிருக்கிறார் கில். இதையறிந்த கல்மாடி, இன்டர்நேஷனல் ஒலிம்பிக் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் மூலம், விளையாட்டில் அரசு தலையீடு கூடாது என குரல்கொடுக்க வைத்தார்.
விளையாட்டு மந்திரியை காமன்வெல்த் போட்டிகளிலிருந்து ஓரங்கட்டிவைத்துவிட, கல்மாடி காட்டில் அடைமழை பெய்தது. டிரெட்மில் உள்ளிட்ட கருவிகளை 25 நாட்கள் வரை வாடகைக்கு எடுக்க உத்தரவிட்டார் கல்மாடி. அதற்கான தொகையோ, அந்தக் கருவிகளை விலைக்கு வாங்கினால் ஆகும் செலவைவிட கூடுதலாக இருந்தது. அதுபற்றியெல்லாம் அவர் கவலைப்படவேயில்லை. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் தனது பேரம் படிந்தால்தான் அதை செயல்படுத்தினார். நடை மேம்பாலம் சரிந்து விழுந்த சம்பவம், வெயிட் லிஃப்டிங் அரங்கத்தின் கூரை பெயர்ந்த சம்பவம் எனத் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்புகள், கல்மாடி எந்தளவுக்கு விளையாடி யுள்ளார் என்பதைக் காட்டியது.
ஒரு விஷயம் மட்டும் ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அது, வெளிநாட்டு வீரர்கள் எந்த நாட்டுப் பெண்களை விரும்புவார்கள் என்பதை யறிந்து, அதற்கேற்றபடி பல நாடுகளிலிருந்தும் மேற்படி பெண்களை காண்ட்ராக்ட் பேசி அழைத்துவந்து டெல்லியின் பிரபல ஓட்டல்கள் பலவற்றிலும் தங்க வைத்திருந்தனர் புரோக்கர்கள். (காண்க- பெட்டிச் செய்தி) ஆனால், போட்டி யில் பங்கேற்கவேண்டிய நாடுகளோ டெல்லிக்கு வருவது பற்றியோ சிக்க ஆரம்பித்தன. நடக்கவிருக்கும் போட்டிகளின் தரம் குறித்த கேள்விகளை அவை எழுப்ப, அப் போதுதான் மத்திய அரசின் கவனம் காமன்வெல்த் போட்டிகளின் பக்கம் திரும்பியது.
ஜும்மா மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வெளிநாட்டவர் இருவர் காய மடைந்ததால் ஆஸ்திரே லியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல நாட்டு வீரர்களும் போட்டி யில் பங்கேற்க பய மாக இருக்கிறது என்று கூறி விலக ஆரம்பித்தனர். சைக்கிள் சாம்பிய னான ஹெண்டர் சன், "என் மனைவி என்னை டெல்லிக் குப் போகவேண் டாம் என்கிறாள். அவள் பயப்படும்போது நான் எப்படி பங்கேற்பது?' என்றார். இந்தியாவில் காமன் வெல்த் போட்டிகளை நடத்த அனுமதித்தது எப்படி என்று கனடா நாடு கேள்வி எழுப்பியது. "தரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யாவிட்டால் நாங்கள் வரமாட்டோம்' என்றது இங்கிலாந்து. 4 ஆண்டுகள் கழித்து, அடுத்த காமன்வெல்த் போட்டிகளை நடத்தப்போகும் ஸ்காட்லாந்து, "எங்கள் நாட்டில் ஸ்டேடியங்கள் தயார். காட்சிப் போட்டிகளை நடத்தப்போகிறோம்' என அறிவித்தது.
இதன்பிறகுதான் இந்திய அரசாங்கம் இந்த விஷயத்தில் சீரியஸாக கவனம் செலுத் தத் தொடங்கியது. செப் டம்பர் 23-ந் தேதியன்று கல்மாடியை ஓரங்கட்டிவிட்டு, பிர தமர் தலைமையில் கேபினட் செகரட்டரி சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில், காமன்வெல்த்போட்டி இந்தியாவின் கௌ ரவப் பிரச்சினை என்பது தெளிவாக்கப் பட, சரிந்து விழுந்த நடைபாலத்தை கட்டித்தரும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. 4 நாளில் பணி களை முடிப்பதாக உறுதியளித்த ராணு வம், கல்மாடியின் எஸ்டிமேட்டில் மூன் றில் ஒரு பங்குதான் செலவாகும் என்றும் எஸ்டிமேட் தந்துள்ள தாம்.
பிரதமரின் தலையீட்டிற்குப் பிறகு, இப்போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் தூதரகங்களுடன் பேசி, நிலைமை யை சுமுகமாக்கும் முயற்சிகள் ஆரம்பமாயின.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அமெரிக்காவில் இருந்தார். அவருடன் இருந்த வெளியுறவுத் துறை அதிகாரிகள், தூதரகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒவ்வொரு நாடாக சம்மதிக்க வைத்தனர். சுமார் 40 மணி நேரம் இந்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.
டெல்லியில் தயாராகியுள்ள விளை யாட்டு கிராமம், இந்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டதும், வெளிநாட்டுத் தூதர்கள் நம்பிக்கையுடன் விளையாட்டு கிராமத்திற்கு வந்து பார்வையிட்டு தங்கள் நாட்டு வீரர்கள் பங்கேற்கலாம் என அறிவித்தனர். ஏற்பாடுகள் எங்களுக்குத் திருப்தி அளிக்கின்றன என்று ஒவ்வொரு நாடாக அறிவிக்க ஆரம்பித்தன.
ஆனால், தென்னாப்பிரிக்க தடகள வீரருக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் பாம்பு புகுந்ததால் பதற்றம் அதிகமானது. இந்திய குத்துச்சண்டை வீரர் அகில்குமாரின் அறையின் கட்டில் உடைந்து விழுந்த துடன், பாத்ரூமும் நாறிக்கிடந்தது.
ஸ்காட்லாந்த் டென்னிஸ் வீராங்கனை எலினா உள்பட ஆஸ்தி ரேலிய, மலேசிய தடகளவீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்கப்போவ தில்லை என அறிவிக்க... போட்ஸ் வானா, கனடா நாட்டு வீரர்கள் வெளியில் ரூம்போட்டுத் தங்குவதாக அறிவித்தனர். மேலும் மேலும் நெருக்கடி ஏற்பட்ட நிலையில், நடந்த தவறுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்பதாக சுரேஷ்கல்மாடி அறிவித்தது புதிய திருப்பத்தை உண்டாக்கியது. இன்னொரு திருப்பமாக, அரசாங்கத்தின் மீது குற்றம்சாட்டி பேட்டியளித்து வந்த காமன்வெல்த் போட்டிகளின் தலைமை செயல் இயக்குநர் மைக் ஹூப்பர், தனக்கும் இதில் பொறுப்பிருக்கிறது என்று பல்டியடித்து, தற்போது நிலைமைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அறிவித்திருப்பதால், காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் மானம் காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை லேசாகப் பிறந்துள்ளது.
""இந்திய அரசு இப்போது காட்டிய வேகத்தை 2 மாதம் முன்பே காட்டியிருந்தால் இத்தனை அவமானங்கள் வந்திருக்காது. முகத்தில் அடிக்கப்பட்ட சாணியைக் கழுவிவிட்டு, இப்ப நான் சுத்தமா இருக்கிறேன் என்று சொல்வதைவிட, முகத்தில் சாணி அடிக்கப்படாத அளவுக்கு நடந்துகொள்வதுதானே புத்திசாலித்தனம்'' என்கிறார்கள் விளையாட்டுத் துறை ஆர்வலர்கள்.
குவிந்த அழகிகள்!
காமன்வெல்த் விளையாட்டு எனும் 12 நாள் திரு விழாவுக்காக உள்நாடு-வெளிநாடுகளைச் சேர்ந்த ஒன்றரை கோடி பேர் டெல்லியில் குவியக்கூடும் என எதிர்பார்க்கப்படு கிறது. இவர்களின் தேவையைக் கணக்கிட்டு விமானநிலையம், ரயில்நிலையம், போட்டி நடைபெறும் இடங்களில் தானியங்கி ஆணுறை இயந்திரங்கள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு மெஷினும் 3000 ஆணுறைகளை சப்ளை செய்யக் கூடியதாம். ஆணுறைகளின் அவசியத்தை உணர்த்தும் விதத்தில் பல நாடுகளிலிருந்தும் பாலியல் தொழிலாளர்களை இறக்குமதி செய்திருக்கிறார்கள் புரோக்கர்கள். ரஷ்யா, ஸ்பெயின், பிரான்ஸ், ஸ்காட்லாந்து, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் இந்தப் பெண்களுக்கு விசா வழங்க மறுத்தபோது, புரோக்கர்கள் தரப்பிலிருந்து மத்திய அரசைத் தொடர்பு கொண்டுள்ளனர். விசா வழங்குவதில் கால தாமதம் செய்யவேண்டாம் என மத்திய அரசின் உத்தரவை யேற்று தூதரகங்கள் செயல்பட்டுள்ளன.
12 நாட்களுக்கு 6 லட்சம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படை யில் ஒவ்வொரு பாலியல் தொழிலாளியும் டெல்லி ஓட்டல்களில் தங்கியுள்ளனர். அதிகபட்சம் 2 பார்ட்னர், வீடியோ எடுக்கக் கூடாது, டிப்ஸ்களை தட்டிப்பறிக்கக்கூடாது என்ற கண்டிஷன் களைப் போட்டுத்தான் இங்கே வந்திருக்கிறார்களாம் இந்த வெளிநாட்டுப் பெண்கள். வீடியோ எடுக்கவேண்டு மென்றால் தனி ரேட் என்ற ஒப்பந்தம் போட்டிருக்கும் பெண்களும் உண்டாம்
























