New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: M Karunanidhi DMK Government Achievements


Guru

Status: Offline
Posts: 9863
Date:
RE: M Karunanidhi DMK Government Achievements
Permalink  
 


தினமும் ரூ.48 கோடிக்கான போலி லாட்டரி கேரளாவுக்கு கடத்தல்: எம்.பி., புகார்

கட்டப்பனா : "தமிழக - கேரள எல்லையான வாளையார் வழியாக, தினமும் 48 கோடி ரூபாய் மதிப்பிலான போலி லாட்டரி சீட்டுகள், கேரளாவுக்கு கடத்தப்பட்டு விற்பனையாகிறது' என, எம்.பி., புகார் தெரிவித்துள்ளார்.


பி.டி.தாமஸ் எம்.பி., கூறியதாவது: கேரள மாநிலத்திற்கு தினமும், 48 கோடி ரூபாய் மதிப்பிலான போலி லாட்டரி சீட்டுகள், கடத்தி வரப்பட்டு விற்பனையாகிறது. இது வாளையார் வழியாக, கேரள மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இங்குள்ள சோதனை சாவடியில்தான் முறைகேடுகள் நடப்பதாக, மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் புகார் கூறியுள்ளார். போலி லாட்டரி சீட்டுகளை தடுக்க, குண்டர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். போலி லாட்டரி சீட்டுகள் கேரளாவுக்கு கொண்டு வர, எந்த அனுமதியும் கடத்தல் கும்பல் பெறவில்லை. நிதித் துறைக்கும், லாட்டரி மாபியா கும்பலுக்கும் உள்ள ரகசிய உடன்பாடு காரணமாகத் தான், போலிகள் அதிகளவில் மாநிலத்திற்குள் வர முடிகிறது. அவை எந்த மாநிலத்தில் அச்சடிக்கப்பட்டு, எங்கு குலுக்கல் நடைபெறுகிறது? விற்காத லாட்டரி சீட்டுகள் என்னவாகின்றன? பரிசுத் தொகைக்கான பணம், மாநில கஜானாவில் செலுத்தப்பட்டுள்ளதா? சிக்கிம், பூடான் அரசுக்கான தொகை, எந்த கருவூலம் வழியாக வழங்கப்படுகிறது? இவ்விஷயத்தில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஐயங்களை களைய, நிதி அமைச்சர் முன்வர வேண்டும். இவ்வாறு பி.டி.தாமஸ் தெரிவித்துள்ளார்.




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

சிறுபான்மை கல்லூரி முதல்வர்கள் விவகாரம் : கல்விக்குழுவில் சேர்ப்பது குறித்து இன்று முடிவு
சென்னை : நிபந்தனையுடன் பணிபுரிய அனுமதி வழங்கப்பட்ட, சிறுபான்மை கல்லூரிகளின் முதல்வர்களை, பல்கலைக்கழக கல்விக்குழு உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்வது குறித்து, சென்னைப் பல்கலைக் கழக சிண்டிகேட் இன்று முடிவெடுக்கிறது.

சென்னை பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சில சிறுபான்மை தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் நியமனத்திற்கு பல்கலைக் கழகம் கல்வி அனுமதி வழங்காமல் இருந்தது. கோர்ட் உத்தரவை அடுத்து, முதல்வர்கள் நியமனத்திற்கு சென்னைப் பல்கலைக் கழகம் நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. சென்னைப் பல்கலைக் கழக கல்விக்குழுவில்(அகடமிக் கவுன்சில்), முதுநிலை படிப்பை நடத்தும் கல்லூரிகளின் முதல்வர்கள் உறுப்பினர்களாக இடம்பெறுவர். நிபந்தனையுடன் அனுமதி பெற்ற கல்லூரி முதல்வர்கள் ஆறு பேர், தங்களை கல்விக்குழு உறுப்பினர்களாக சேர்க்குமாறு பல்கலைக்கு கடிதம் எழுதியிருந்தனர். சென்னைப் பல்கலை சிண்டிகேட் உறுப்பினரை, கல்விக்குழு உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு தேர்வு செய்வர். மேலும் கல்விக்குழு உறுப்பினர்கள் சிண்டிகேட், செனட் அமைப்பில் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவும் தகுதி பெறுவர். கல்விக்குழு உறுப்பினராக சேர்க்குமாறு கோரிய ஆறு முதல்வர்களின் கடிதம் தொடர்பாக, பல்கலை நிர்வாகம் சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை கேட்டது. அவர்களை கல்விக்குழு உறுப்பினர்களாக நியமிக்கலாம்; ஆனால் ஓட்டுப் போட அனுமதிக்கக் கூடாது என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள சென்னைப் பல்கலைக் கழக சிண்டிகேட் கூட்டத்தில் இப்பிரச்னை குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படுகிறது. சிறுபான்மை கல்லூரிகளின் முதல்வர்கள் ஆறு பேரையும், கல்விக்குழு உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ள ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘எங்கள் பஞ்சாயத்தை கலைத்துவிடுங்கள்!’’
மக்கள் கோரிக்கை; தவிக்கும் கலெக்டர்

Nellai%202.jpg


கிராமங்களின் தொகுப்புதான், நாடு. கிராமங்களின் முன்னேற்றம்தான் ஒரு நாட்டின் முன்னேற்றம்... கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. நடைமுறையில்? 

Nellai%204.jpg‘‘எங்கள் பஞ்சாயத்தைக் கலைத்து விடுங்கள்’’ என்று மக்களும், கவுன்சிலர்களும் அரசுக்கு கோரிக்கை மனு கொடுக்கும் அளவுக்குப் போயிருக்கிறது நெல்லை மாவட்டத்திலுள்ள தாழையூத்து கிராமத்தில்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பஞ்சாயத்தின் தலைவியாக இருப்பவர் கிருஷ்ணவேணி. துணைத் தலைவராக இருப்பவர் மீரான்கனி. அரசியல் கட்சிகளின் செல்வாக்கு இல்லாத இந்த கிராமத்தில், இருவருக்கும் ஏற்பட்ட மோதல்தான் ்தை அபார்ஷன் செய்யும் அபாயத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது.

தாழையூத்து பஞ்சாயத்து துணைத்தலைவர் மீரான்கனியிடம் பேசினோம்.

“பஞ்சாயத்து என்பது மக்கள் பிரச்னைகளை தீர்க்கக் கூடிய இடம். ஆனால் தலைவர் கிருஷ்ணவேணியால் பிரச்னை உற்பத்தியாகிற இடமாக மாறிவிட்டது. அவருடைய கணவர் பொய்யாமொழி மின்வாரியத்தில் வேலைபார்க்கிறார். ஆனால், முழு நேரமும் அவர் இருப்பது பஞ்சாயத்து அலுவலகத்தில்தான். இதன் அடிப்படையில் எழுந்த குற்றச்சாட்டால், அவர் வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

இதற்கு நான்தான் காரணம் என்று நினைத்து என் மீதும், என் ஆதரவாளர்கள் மீதும் பல பொய் வழக்குகளைப் போட்டுவருகிறார் பஞ்சாயத்துத் தலைவர். அவற்றை நீதிமன்றத்தில் சந்தித்து வருகிறோம். எனது ஆதரவாளர்கள் மீது தீண்டாமை வழக்குகள் மாறி, மாறி தொடுக்கப்படுகிறது. நான் சாதி, மத பேதம் பார்ப்பவன் அல்ல. ஆனாலும் என் பதவியைப் பிடுங்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ, அதையெல்லாம் செய்து பார்த்தார். ஒன்றும் நடக்கவில்லை. எனவே, ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று நான் அவரை, கையைப் பிடித்து இழுத்து தாக்கிவிட்டதாக பொய் புகார் கொடுத்திருக்கிறார். 

Nellai%203.jpgஎனவேதான், இத்தனை பிரச்னைகளோடு இருக்கும் இந்த பஞ்சாயத்தை உடனடியாக கலைக்க வேண்டும். மீதமுள்ள ஒரு வருடத்துக்கு தனி அதிகாரியை நியமித்து இயக்கவேண்டும் என்று கேட்டு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறோம்’’ என்றார்.

பஞ்சாயத்து உறுப்பினர் மகேஷ் நம்மிடம்,

“அந்தம்மாவின் கணவர் தலையீடு அதிகமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வழக்குதான். என் மீது கூட ஒரு கேஸ் போட்டுள்ளார்கள். அந்த பஞ்சாயத்தை கலைப்பது தான் ஒரே வழி. மொத்தமுள்ள 12 கவுன்சிலர்களில், 10 -கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்துள்ளோம்’’ என்றார்.

தாழையூத்து கிராமத்தைச் சேர்ந்தவரும் தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட பொருளாளருமான நேஷனல் சாகுல் என்பவரிடம் பேசினோம்.

‘‘பஞ்சாயத்துத் தலைவருக்கு மக்கள் பிரச்னைகளை புரிந்து கொள்ள முடியவில்லை. தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற பெண்ணுக்கு நாங்கள் ஆதரவாக வேலை செய்தோம். மறுக்கவில்லை. ஆனால் இவர் வெற்றி பெற்றவுடன், இவருக்கு வாழ்த்துக்களை சொல்லி இவர் மீது, நம்பிக்கை வைத்தோம். நாங்கள் யாரும் ஜாதி வித்தியாசம் பார்ப்பதில்லை. ஆனால் அவர் அப்படி நினைக்கிறார். பலர் மீது பொய் வழக்குகள் போடப்படுகின்றது. இந்த பஞ்சாயத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லாத சூழல் உருவாகிவிட்டது. இதனால், இனி இந்த பஞ்சாயத்து எங்களுக்குத் தேவையில்லை... கலைப்பது ஒன்று தான் வழி” என்று குமுறினார்.

Nellai%205.jpgஇவர்கள் கூறுவதற்கு, பஞ்சாயத்து தலைவி கிருஷ்ணவேணியிடம் விளக்கம் கேட்டோம்.

“ இங்குள்ள தலித்துகள் காலம் காலமாய், இவர்களுக்கு அடங்கிப் பழக்கப்பட்டு விட்டார்கள். முதலாளி என்றுதான் இவர்களை அழைப்பது வழக்கமாம். நான் நாகர்கோவிலிருந்து இங்கு வந்தவள். இவர்கள் கூப்பிடுவது போல் முதலாளி என்று கூப்பிட்டு எனக்கு பழக்கம் இல்லை. ஒரு அருந்ததியப் பெண் நமக்கு தலைவியாக இருப்பதா என்று ஈகோ பார்க்கிறார்கள். நான் வீட்டிலேயே இருக்க வேண்டும், இவர்கள் சொல்லும் இடங்களிலெல்லாம் கையெழுத்திட வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். நடக்கவில்லை. இவர்களால் கமிஷன் வாங்க முடியவில்லை. எனவே தகாத முறையில் நடந்து கொள்கிறார்கள். 

இவர்கள் கூறுவது போல பொய் வழக்கு போடுவதற்கு, எனக்கு கிறுக்கா பிடித்திருக்கிறது? இடையில், துணைத்தவைர் மீரான்கனி, ஆறுமாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். அப்போது வேறு ஒரு கவுன்சிலர்தான் செக்குகளில் கையெழுத்து போட்டுவந்தார். அப்போது பஞ் சாயத்து நிர்வாகம் ஒழுங்காகத்தான் நடந்தது. கடந்த ஆகஸ்ட் 15, கிராம சபை கூட்டத்தில், பொதுமக்கள் கையெழுத்திடும் புத்தகத்தை பிடுங்க முயற்சி செய்தார்கள். தடுக்க முயன்ற என்னை தாக்கினார்கள். காயம் ஏற்படவே அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். சிகிச்சையளித்த டாக்டர்களிடம் கேட்டால் உண்மை தெரியும்” என்றார்.

இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயராமனிடம் பேசினோம்.

“தாழையூத்து பஞ்சாயத்து உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு உள்ளது. இரு தரப்பும் மனு கொடுத்துள்ளனர். அரசு விதிமுறைகளின்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அது உறுதியாக எடுக்கப்படும்” என்றார். ஆனால், இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க முடியாமல் தவிப்பதாகவும் ஒரு தகவல்.

நாட்டின் வளர்ச்சிக்கு கிராமங்கள்தான் முதுகெலும்பு. அந்த முதுகெலும்புகளே, ‘எங்களை முறித்துவிடுங்கள்’ என சொன்னால்? தனி மனித மோதல்களும், ஜாதி, மத ரீதியான மோதல்களும் அகலும் வரை, கிராமங்கள் எப்படி முன்னேற முடியும்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Tamil Nadu least compliant with NREGA’s norm on payment mode

New Delhi, Aug 22 Less than a per cent of the wages paid under NREGA was routed through bank and post office accounts in Tamil Nadu, even as the country&aposs average stood at 84 per cent last fiscal.

 

The government has been stressing on NREGA wage payments through bank or post office accounts to avoid partial or non-payment of wages to workers, complaints of which had become quite frequent.In 2009-10, while total wage under the rural employment guarantee scheme paid in Tamil Nadu was Rs 1,711 crore, just Rs 2.4 crore was disbursed through bank and post office accounts, officials informed.

With 0.14 per cent of wages for unskilled workers under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) paid through the accounts, the southern state is behind even the less-banked states of Northeast.

This is despite regional spread of branches of scheduled commercial banks being skewed towards southern India that has 28.1 per cent of the country&aposs total 88,363 bank branches.

Central part of the country has almost 20 per cent of the branches, 17 per cent in the north, 16 per cent each in the east and the west, and a meager 2.7 per cent in the Northeast.

Of the 90&aposunbanked&aposblocks in India, about 80 are in the Northeast, according to the Reserve Bank of India.

While Nagaland and Sikkim beat the national average with 85.4 per cent and 844 per cent wages disbursed through bank and post office accounts, Assam and Manipur showed better compliance to guidelines with 76 per cent and 50 per cent.

Rest of the Northeast — Meghalaya, Tripura, Arunachal Pradesh and Mizoram — paid over 30 per cent through accounts.

“As per the Operational Guidelines, 2008 of MGNREG Act, the type of banks to be allowed (eg rural banks, cooperatives, nationalised, post offices, mobile banks for inaccessible areas), should be selected in the light of the local conditions, with a view to ensuring smooth and timely payments,”Finance Minister Pranab Mukherjee recently said.

States and Union Territories that showed compliance of 99 per cent and above are Jharkhand, Himachal Pradesh, Goa, Dadra and Nagar Haveli, Uttarakhand, Madhya Pradesh, Uttar Pradesh and Gujarat, sources informed.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

20100829a_00910c006-manalkollai.jpg?w=198&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_09_2010_002_012colera.jpg?w=300&h=162

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

31_08_2010_011_011-sirupaanmai.jpg?w=147&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_09_2010_012_032-umasankar.jpg?w=300&h=85

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_09_2010_002_047-fake-malaria.jpg?w=127&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_09_2010_002_061-osr.jpg?w=168&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

31_08_2010_004_028arunthathiyar.jpg?w=300&h=118

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

01_09_2010_006_010-poli.jpg?w=300&h=147

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_09_2010_001_041-iodine-tn.jpg?w=300&h=155

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

03_09_2010_001_028-uma-tansi.jpg?w=300&h=210

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அமைச்சர் தம்பி உயிருக்கு குறி! தமிழகத்தைக் கலக்கும் பிரபல தாதா திகில் வாக்குமூலம்!

1.jpg
தமிழக அளவில்... கூலிப்படை நெட் ஒர்க்காக செயல்பட்டு.. பகீர் க்ரைம்களை அரங் கேற்றிவந்த ஒரு டேஞ்சரஸ் தாதாவைக் காக்கிகள் சுற்றி வளைக்க... விசாரணையில் அவன் கொடுத்திருக்கும் வாக்குமூலம்... அரசியல்வட் டாரத்தில் பதட்டப் பரபரப் பை ஏற்படுத்த ஆரம்பித்திருக் கிறது.

பிடிபட்டிருக்கும் தாதா வேறுயாருமல்ல, திருச்சி குணா. டெல்டா மாவட்டங் களை சாதி ரீதியில் எதிரும் புதிருமாய் நின்று கதிகலங்க வைத்த மணல்மேடு சங்கரும், முட்டை ரவியும் இப்போது இல்லை. முதலில் போலீஸ் டீம், முட்டை ரவியை 2006-ல் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளியது. இதைக்கண்டு தன்னையும் போலீஸ் சுடலாம் என பதறிய மணல்மேடு சங்கர்... தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பலவகைகளிலும் முயன்றான். எனினும்... அவ னது உயிரையும் உருவியெடுத்தது காக்கிகளின் துப்பாக்கி. இதற் கிடையே முட்டை ரவி இறந்தபிறகு... ரவியின் டீமுக்கு தலைமை ஏற்றவன்தான் இந்தத் திருச்சி குணா. இவன் டெல்டா லிமிட்டையும் தாண்டி.. ஆத்தூர் சுமன், செங்கல்பட்டு ரவிபிரகாஷ், சீர்காழி சத்யா, செல்லதுரை, சுந்தரபாண்டி, சின்ன ஆனந்த், பல்லு குமார், விக்டர், ஒத்தக்கை வினோத் ஆகிய தன் சிஷ்யகோடிகள் மூலம்... தமிழகம் முழுக்க தன் க்ரைம் சாம்ராஜ்யத்தை விஸ்தரித்திருக் கிறான். இந்த குணாவின் க்ரைம் ஜாதகத்தை மேலும் துருவியபோது மேலும்பல அதிரடித் தகவல்கள் கிடைத்தன.

திருச்சி குணாவுக்குப் பூர்வீகம் இலங்கை. சின்ன வயதில் குடும்பத்தோடு அகதியாய் தமிழகம் வந்தான் குணா. திருச்சி பெரிய கடைவீதி சந்துக்கடை மார்க்கெட் பகுதியில் அவன்குடும்பம் அடைக்கலமானது. அம்மா நர்ஸாக இருக்க... குணாவோ... சேர்வார் தோஷத்தால் ரவுடியாக வளர ஆரம்பித்தான். இவனது க்ரைம் அதிரடிகளைக்கண்ட அப்போதைய திருச்சியின் பிரபல தாதாவான பிச்சைமுத்து... ’"நீ என்னோடு இருக்கவேண்டியவன்டா... வாடா'’என இவனைத் தன் சிஷ்யனாக சேர்த்துக்கொண்டான். அவனால் மனித ரத்த வாசனையை அறிந்துகொண்ட குணா... பிச்சை முத்துவின் என்கவுண்ட்டருக்குப் பின்தான் முட்டை ரவி டீமில் ஐக்கியமானான். 1.jpg


முட்டை ரவிக்காக... தலித் சமூகத்தைச் சேர்ந்த சேட்டு, டிங்கி, சுரேஷ் ஆகிய மூவரையும் மணிகண்டம் பைபாஸ் பகுதியில்.. பட்டப்பகலில் படு பயங்கரமாகக் கொன்று... குணா திருச்சியையே பரபரக்க வைத்தான். அதேபோல் செங்கல்பட்டு தாதாவான குரங்கு குமாரை... அவனது எதிரிகளுக்காகத் தீர்த்துக்கட்டியும் பதட்டத் தகிப்பை ஏற்படுத்தினான். இதேபோல்... கீரனூர் வழக்கறிஞர் கார்த்திகேயனை.. நாகேந்திரன் டீம் போட்டுத்தள்ள.. கார்த்தி டீம் நாகேந்திரனை பதிலுக்குப் பொலி போட்டது. உடனே கார்த்தி டீமைச் சேர்ந்த சக்தி, சிவா, அண்ணாமலை ஆகியோரை படுகொலை செய்யும் அசைன்மெண்ட்டை சிறையில் இருந்த குணாவிடம் நாகு டீம் கொடுத்து... அவனை ஜாமீனிலும் வெளியே எடுத்தது. இந்தத் தகவல் மெல்ல காக்கிகளுக் குப் போக... எஸ்.ஐ. மணிமாறன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த டீம்தான் கடலூரில் பதுங்கியிருந்த குணாவைத் தற்போது மடக்கியிருக்கிறது. அப்போதுதான் அவன் வைத்திருந்த ஒரு வி.ஐ.பி. பற்றிய பகீர் அசைன்மெண்ட் காக்கிகளுக்குத் தெரியவந்தது..

நம்மிடம் அந்த காக்கி அதிகாரி ""குணா டேஞ்சரஸான ஆள். திருச்சி ஃபைனான்ஸியர் பாலுவிடம் பணம்கேட்டு கொலைமிரட்டல் விடுத்த அவனை சமீபத்தில் பிடிக்கப் பார்த்தோம். ஆனா எங்க கைகளையே வெட்டிட்டு தப்பிச்சிட்டான். அடுத்து மண்ணச்சநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த அவனைப் பிடிக்க முயன்றோம். துப்பாக்கியால் சுட்டப்ப மயிரிழையில் தப்பிசிட்டான். இப்பதான் வசமா மாட்டியிருக்கான். இவனுக்கு தி.மு.க. வட்டச் செயலாளர் ஒருவரே பினாமியா இருப்பதையும்... டிரிபிள் மர்டர் அசைமெண்ட்டுக்காக... நாகுவின் உறவினரான மாஜி.. அ.தி.மு.க. ஒ.செ ஒருவர் இவனுக்கு கார் வாங்கிக் கொடுத் திருப்பதையும் சொன்னான். அதோட திருச்சியின் பிரபல வி.ஐ.பி ஒருத்தரையும் குறிவைத்திருந்ததாக எங்கக்கிட்ட வாக்குமூலம் கொடுத்தான்''’ என்று அதிரவைத்தார். 

விசாரணையின்போது குணா ""வக்கீல் கார்த்திகேயன் டீமைச் சேர்ந்த 3 பேரைப் பொலி போடறதோட... அந்த ராமஜெயத் தையும் தீர்த்துக்கட்டும் அசைன்மெண்ட்டோட இருந்தேன். அதுக்குள்ளப் பிடிச்சிட்டீங்க'' என்று சொல்ல...’""எந்த ராமஜெயத்தை?''’என காக்கி அதிகாரிகள் நெற்றி சுருக்கினர். குணாவோ ""அதாங்க... போக்குவரத்துத்துறை அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயத்தைத் தான்''’என்றான் கேஷுவ லாய். இதைக்கேட்டு வெல வெலத்துப்போன காக்கி அதிகாரிகள்... ""யார்றா உனக்கு இந்த அசைன் மெண்ட்டைக் கொடுத்தது?'' என்றபோது... ""இங்க லோக்கல்ல இருக்கும் சில அரசியல் புள்ளிகள் தான். அதை இப்போ பகிரங்கமா சொல்ல மாட்டேன்''’என்றான் அழுத்தமாக. இந்தத் தகவலை மேலிடத்திற்கு அனுப்பி வைத்து விட்டு... மேற்கொண்டு அவனை விசாரிக்கும் முடிவில் பரபரத் துக் கொண்டிருக்கிறார்கள் காக்கிகள்.

அமைச்சரின் இளவலைக் கொல்லும் அளவிற்கு... யார் எதிரிகள் இருக்கிறார்கள்? இந்தக் கேள்வியை... திருச்சிக்காரர்களால் எம்.டி. என அழைக்கப்படு பவரும் அமைச்சர் நேருவின் தம்பியுமான ராம ஜெயத்திடமே கேட்டோம். புன்னகையோடு பேச ஆரம்பித்தவர்.... ""நானும் கேள்விப்பட்டேன். எனக் கும் ரவுடிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எந்த ரவுடிக்கும் ஆதரவாகவோ...எதிராகவோ நான் போலீஸில் பேசியது கூட கிடையாது. தலைவர் கலைஞர் இடும் கட்டளைக்கு ஏற்றபடி... அண்ணனுக்கு ஒத்தாசையாக கழகப்பணிகளைச் செய்துவருகிறேன். வியாபாரத்தில் கூட எனக்கு எதிரிகள் என்று யாரும் இல்லையே''’என்றார் யோசனையாய்.

மேலும், மிகப்பெரிய டெரர் அசைன்மெண்டு களை அரங்கேற்றும் முன்... திருச்சி குணா மடக்கப் பட்டிருப்பது ஆறுதலான ஒன்று


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

04_09_2010_005_013-smoke.jpg?w=300&h=182
04_09_2010_015_010-kothadimai.jpg?w=300&h=156


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அட்டகாச (கு)"டி'ரைவர்கள்!

சமீபகாலமாக பேருந்தில் ஏறுவதற்கு முன்பு டிரைவர், கண்டக்டர் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்துப் பயணத்தைத் தொடர வேண்டியுள்ளது. எல்லாம் டாஸ்மாக் படுத்தும் பாடு.

முன்பெல்லாம் போக்குவரத்து ஊழியர்களில் சிலர் தங்கள் உடல் வலியை மறக்க ஓய்வு நேரத்தில் குடித்தனர். இப்போதோ அந்த சிலர் டூட்டிக்கே குடித்துவிட்டு வருகின்ற சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இது தனிப்பட்ட நபர் உரிமைப் பிரச்சினையென்றால் சாதாரண மாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இது பொதுமக்களின் உயிர் பிரச்சினை. உதாரணத்திற்கு சில சம்பவங்கள்... 
ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வந்த அரசுப் பேருந்து (டி.என். 63-1102) பரமக்குடிவரை ஒழுங்காக வந்தது. அங்கு டிரைவர்கள் மாறினார்கள். இளையாங்குடி சாலை கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் டிரைவராக ஏறினார். ஏறும் போதே ரொம்ப தட்டுத் தடுமாறித்தான் ஏறியிருக்கிறார். பேருந்திலோ சரியான கூட்டம். டிரைவரிடமிருந்து கிளம்பிய பழவாசனை பேருந்தின் கடைசி சீட்டுவரை போய் திரும்பி வந்தது.

உஷாரான சில பயணிகள் முன்னெச்சரிக்கையோடு இறங்கி வேறு பேருந்தில் ஏறிவிட்டனர். போதை டிரைவர் பற்றி பொருட் படுத்தாத பயணிகள் அதைப்பற்றி கவலைப்படவில்லை.

பேருந்து கிளம்பியது. பஸ் ஸ்டாண்டுக்குள் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் சிதறி ஓடினார்கள். அப்படியொரு ஆர்ப்பாட்டத்தோடு பேருந்து கிளம்பியது. டிரைவருக்கோ இதைப் பார்த்து ரொம்ப குஷி. சிரிப்பு வேறு. அதற்குப் பின்பு பெண்களும், ஆண்களும் அலற ஆரம்பித்தனர். உச்சமான வேகத்தில் பாம்பு போவது போல் பேருந்து சாலையில் போனால் ஜனங்கள் அலறாமல் என்ன செய் வார்கள்?

""நிதானமா போப்பா'' என்று கண்டக்டர் சொல்வதைக் கேட்பதாய் இல்லை டிரைவர் சண்முகம்.

ஒருவழியாக சத்திரக்குடி வந்ததும்... உயிரைக் கையில் பிடித் துக்கொண்டிருந்த கூட்டத்தில் பாதி கீழே இறங்கிவிட்டது. "ராமேஸ்வரம் வரைக்கும் டிக்கெட் எடுத்தாச்சே' என்று பொருளாதார ரீதியாக சிந்தித் தவர்கள் மட்டும் உயிர் பயமில்லா மல் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள்.

சத்திரக்குடியில் பாதி பேரை இறக்கிவிட்டு மீதி பேர் களோடு பேருந்து கிளம்பிவிட்டது. அங்கு பேருந்துக்காக காத்து நின்று கொண்டிருந்தவர்களிடம் பேசினோம். ""பின்னே என்ன சார். அரை போதை யில் இருக்காரு. சமாளிச்சு பஸ்ஸை ஓட்டிடுவார்னு நெனைச்சோம். ஆனா, அவரு மரண போதையில இருக்காரு சார். இதுவரைக்கும் ஆக்ஸிடெண்ட் ஆகாம வந்ததே கடவுளோட புண்ணியம். கண்டக்டர் சொல்றதையும் கேட்கமாட்டேங் கிறார். திடீர்னு கையை விட்டுட்டு சீட்ல சாஞ்சுக்கிட்டு பஸ் ஓட்டுறாரு. பரமக்குடியில இருக்கிற டைம் கீப்பர், டிக்கெட் கேன்வாசர், எப்படி இவ ரை வண்டி ஓட்ட அனுமதிச் சாங்கன்னு தெரியலை'' என்றனர் மிரட்சியோடு.

மறுபடியும் பேருந்து டான்ஸ் ஆடிக்கொண்டே போக... அதற்கு மேல் பொறுக்க முடியாத பயணி கள், டிரைவர் சீட் அருகே போய் "பஸ்ஸை நிறுத்து, நிறுத்து' என்று சத்தம் போட... அதற்குப்பின் சுதாரித்த டிரைவர், லாந்தை என்ற இடத்தில் ஒருவழியாக பேருந்தை நிறுத்தினார். பயணிகள் இறங்கி டிரைவரை அடிக்கப் போனார்கள். கண்டக்டர் அவர்களைத் தடுத்து சமாதானப்படுத்த, அந்த நேரமாக அந்த வழியாக பரமக்குடிக்கு சென்றுகொண்டிருந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி. அமல் ராஜ், தனது வாகனத்தை நிறுத்தி பயணிகளிடம் என்ன பிரச்சினை என்று விசாரித்தார்.

பயணிகள் விபரத்தைக் கூறியதும் கடுப்பான அவர், டிரான்ஸ்போர்ட் நிர்வாகத்தைத் திட்டிவிட்டு பயணிகளை வேறு பேருந்தில் அனுப்பும்படி உத்தரவிட்டது மட்டுமில்லாமல், டிரைவரை மது சோதனை செய்து வழக்குப் போடும்படி ராமநாதபுரம் மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு உத்தரவிட்டு அங்கிருந்து சென்றார்.

அதற்குப் பிறகு போலீஸார் வந்து டிரைவர் சண்முகத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென் றனர். தற்போது போக்குவரத்துக் கழகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. பொதுமக்களோ... அந்த திகில் பயணத்தை மறக்க முடியாமல் உள்ளனர்.

இதைப் போலவே கடந்த மாதம் அழகன் குளம் டூ ராம்நாடு வருகின்ற டவுன் பஸ்ஸை ராம சாமி என்ற டிரைவர் கடும்போதையுடன் ஓட்டிவர... பயணிகள் எல்லோரும் அலறித் துடிக்க... கண்டக்டர் பிரேக்கை மிதித்து வண்டியை நிறுத்தி னார். அந்த ஊரிலிருந்த பிரைவேட் டிரைவர் ஒரு வர் மூலம் வண்டியை ராம்நாட் கொண்டு வந்தார் கள். டிரைவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

22-ந் தேதி திருச்சி டூ ராமேஸ்வரம் வருகின்ற பி.பி. பேருந்து ஒன்றில் கண்டக்டர் போதையுடன் ஏறி, டிக்கெட் போடுகிறேன் பேர்வழி என்று சீட்டு மேல் கால் வைத்து பயணிகளின் தலை, தோள் களின் மீது ஏறி டிக்கெட் போட்டதால் பெரும் ரகளையானது. என்ன செய்வது? யாரும் புகார் செய்வதில்லை. இது அவர்களுக்கு வசதி.

இதே ரூட்டில் கடந்த மாதம் டிரைவர் ஃபுல் மப்பில், நிற்க வேண்டிய ஸ்டேஜில் நிற்காமல் செல்ல... தேவகோட்டை ஒத்தக்கடை ஸ்டாப்பில் இறங்க வேண்டிய இளம்பெண்ணை, அங்கே இறக்கிவிடாமல், பயணிகள் எல்லோரும் கத்தியும் கண்டுகொள்ளாமல்... ஏழு கிலோமீட்டர் தள்ளியுள்ள புளியால் என்ற ஊரில் இறக்கிவிட் டார். நள்ளிரவு நேரம். நல்ல வேளையாக அந்தப் பெண் செல் மூலம் தன் வீட்டுக்குத் தகவல் தெரிவிக்க... அவர்கள் தேவகோட்டையிலிருந்து ஆட் டோ மூலம் பஸ்ஸை துரத்தி வந்து அந்தப் பெண்ணை கூட் டிச் சென்றார்கள். இப்படி பல சம்பவங்கள்... 

இதையெல்லாம் தடுத்து நட வடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம் என்ன செய்கிறது? என்று பொதுவான ஊழியர்களிடம் கேட்டோம். 

""என்னைக்கு அரசியல் கட்சி கள் உள்ளே நுழைஞ்சதோ அப்போ திருந்து குடி மட்டுமில்லாம அனைத்துக் கெட்ட பழக்கங்களும் தொழிலாளர்களுக்கு வந்துவிட்டது. வேலை பார்த்துக்கிட்டிருக் கும்போதே கட்சிக் கூட்டம், கல்யாணம், காது குத்துனு கிளம்பிப் போய் தண்ணியப் போட்டுட்டு வந்து மறுபடியும் டூட்டி பார்ப்பாங்க. பெரும்பாலும் சென்னை, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்னு நைட்ல ஹால்ட் அடிக்கிற குறிப்பிட்ட சில டிரை வருங்க சரக்கு சாப்பிடுவாங்க. போதை தெளியாம கிளம்புறப்பதான் இது போன்ற பிரச்சினை வருது'' என்றனர்.

இதுபோன்று இனிமேலும் நிகழா மல் இருக்க போக்குவரத்து அமைச்சர் நேருதான் சாட்டையைச் சுழற்ற வேண்டும்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வேலை முழு நேரம்! சம்பளம் பகுதி நேரம்! -போராடும் சத்துணவு ஊழியர்கள்!

1.jpg
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்களின் சங்கத்தைச் சேர்ந்த 27-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் டிஸ்மிஸ்ஸும் 42-க்கும் மேற்பட்டவர்கள் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த விவகாரம் அரசு ஊழியர்களிடம் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.

முதல்வர் கலைஞரோ, "தி.மு.க. ஆட்சியில்தான் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மூன்று முறை ஊதிய உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது, இவர் களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக 3780-ம் அதிகபட்ச ஊதிய மாக 4694-ம் வழங்கப்படுகிறது. இவை தவிர பதவி உயர்வு, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகை கால முன்பணம், ஓய்வூதியம், பொங்கல் பரிசுத்தொகை என பல்வேறு நன்மைகள் செய்யப்பட்டு வருகிறது. தவிர பகுதிநேர ஊழியர்களான இவர்கள், முழுநேர ஊழியர்களுக்கு வழங்கப்படு கிற சம்பளத்தைக் கேட்கிறார்கள்' என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் போராட்டம் நடத்திய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் கே.பழனிச்சாமியிடம் விசாரித்தபோது, ""தொகுப்பூதியம் பெற்றுவரும் எங்களை காலமுறை ஊதியம் பெறுபவராக மாற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் கலைஞர். ஆனால் செய்ய வில்லை. சம்பள கமிஷன் பரிந்துரைகள் வராத நிலையிலே கடந்த 27 வருடமா போராடிக்கிட்டிருக்கோம். கொஞ்சமாக சம்பளத்தை உயர்த்தினார்.

ஆறாவது ஊதியக் குழுவில், ஒரு ஊழியருக்கு குறைந்த பட்சம் அடிப்படைச் சம்பளம் 4800 என்றும் அதுவே எஸ்.எஸ். எல்.சி. பாஸ் செய்திருந்தால் அவருக்கு 5200-ம் தரவேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. இதைத்தான் தாருங்கள் என்கிறோம். அதை மறுத்த தால்தான் போராட்டம் நடத்தினோம்.

ஓய்வூதியம் 400, 500, 600 தருவதாகச் சொல்கிறார் கலைஞர். இதே ஆட்சியில் முதியோர்களுக்கு ஓய்வூதியமே 500 தருகிறார்கள். அரசுக்கு வேலையே செய்யாத முதியவர்களுக்கு 500, அரசுக்காக ஓடாய் உழைக்கிற எங்களுக்கும் 500. இது நியாயம்தானா? இன்னொரு விஷயம்... போலீஸ் மோப்ப நாய்களுக்கு 6, 7 வருஷத்துக்குப் பிறகு ஓய்வு கொடுத்துவிடுவார்கள். அதைப் பராமரிப்பதற்காக ஒரு நாய்க்கு 1500 ரூபாய் மாதம் தருகிறது இந்த அரசு. அதாவது அந்த நாய் வாழ்வதற்காக. ஆனா, எங்களுக்கு வெறும் 500. அந்த நாயைவிட நாங்கள் கேவலமானவர்களா?

அரசு உத்தரவில்தான் நாங்கள் பகுதி நேரம் என்கிறது. ஆனா நாங்கள் காலை 9 முதல் 4 மணி வரை என ஒரு நாளைக்கு 7 மணி நேரம் வேலை பார்க்கிறோம். இது பகுதி நேரமா? முழு நேரமா? அதனால், ஏதேதோ காரணம் சொல்லி எங்களை வஞ்சிக்காமல் எங்களின் நியாயமான உணர்வுகளை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார்.

போராட்டம் நடத்தியவர்களை டிஸ்மிஸ், சஸ்பெண்ட் செய்திருப்பதை மற்ற அரசு ஊழியர் சங்கங்களே ஏற்கவில்லை. ""இதுபோன்ற நடவடிக் கையை எடுப்பது ஜெயலலிதாதான். தி.மு.க.விடம் எதிர்பார்க்கவில்லை. இந்த நட வடிக்கை எதிர்மறை பலன்களை தி.மு.க.வுக்கு கொடுக்கும்'' என்கிறார்கள் இவர்கள்.

அரசுக்கும் சத்துணவு பணியாளர்களுக்கும் இடை வெளி அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_09_2010_004_026-granite.jpg?w=300&h=161

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_09_2010_012_010-govt-school.jpg?w=300&h=210

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_09_2010_006_014-gas.jpg?w=300&h=281

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

05_09_2010_002_017-sale.jpg?w=230&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘தி.மு.க.வினருக்குத்தான் சுனாமி வீடுகளா?’’
கொதிக்கும் மீனவர்கள்

Kishore.jpg



அதிகாரிகள்லதான் தி.மு.க. அதிகாரிகள், அ.தி.மு.க. அதிகாரிகள்னு பிரிச்சு வச்சிருக்காங்கன்னா... எங்களையும் கட்சிக்காரங்க மாதிரி பிரிச்சு வச்சிட்டாங்களா?’’ 

Kishore%206.jpg-தி.மு.க. கரைவேட்டி கட்டியவர்களுக்கு மட்டுமே சுனாமி நிவாரண வீடுகள் வழங்கப்பட்ட விவகாரத்தில்தான் இப்படி சீறுகிறார்கள், ராமநாதபுரம் மாவட்ட கடலோர கிராமமான நரிப்பையூர் வெள்ளப்பட்டி மீனவ மக்கள். 

கென்னடி என்பவர் நம்மிடம் முதலில் பேச ஆரம்பித்தார். ‘‘நரிப்பையூர் பஞ்சாயத்தில் எங்க ஊர் உட்பட ஏறத்தாழ 18 மீனவ கிராமங்கள் இருக்கின்றன. கடலாடி தாசில்தாரும், நரிப்பையூர் ஆர்.ஐ., வி.ஏ.ஓ.வும் உண்மையான பயனாளிகள் லிஸ்ட்டை ரெடி செய்து கொண்டிருக்கும்போதே, சாயல்குடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.வி.சுப்பிர-மணியனும், தி.மு.க. ஆதரவு நரிப்பையூர் பஞ்சாயத்து தலைவியான சேர்மக்கனி காமராஜும் இடையில் புகுந்தனர். ஊரில் ஓட்டுவீடு, காரைவீடு, 3 சென்ட் சொந்த வீட்டு மனையடியுள்ள தி.மு.க. கரை-வேட்டிக்காரர்களின் பெயர்களை பயனாளிகளாக சேர்க்குமாறு வற்புறுத்-தி-னார்கள். 

Kishore%201.jpgஅதிகாரிகள் தயங்கியபோது, அவர்களுக்கு தெம்-பூட்டிய வி.வி.சுப்ர-மணியன், ‘நம்ம இவங்களுக்கு சுனாமி வீடு கட்டிக்-கொடுத்தாலும், ரெட்டை இலைக்குத்தான் ஓட்டுப்போடுவாங்க. அதனால, இந்த கிராமத்துக்கு அலாட் ஆகியுள்ள 61 சுனாமி வீடுகளையும் தி.மு.க.வினருக்கு மட்டுமே ஒதுக்கினால் போதும்’ என மிரட்டினார். அதிகாரிகளும் தி.மு.க.வினருக்கு மட்டும், தலா ஒரு வீட்டுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை சாங்ஷன் செய்து கொடுத்து-விட்டனர்’’ என்றார். கிராம பெரியவரான சண்முகம், மகளிர் சுயஉதவிக்குழு தலைவி மரியபுஷ்பம் ஆகியோர் நம்மிடம், 

‘‘நாங்களெல்லாம் அ.தி.மு.க.வும் கெடையாது. தி.மு.க.வும் கெடையாது. அன்னாடம் கடலுக்குப் போயி வலை போட்டால்தான் கால்வயிறு கஞ்சியாவது குடிக்க முடியும். இப்படி வறுமையில் வாடுற எங்களுக்கு சுனாமி வீடு வாங்க தகுதி இல்லையாம்! ஆனா ஏற்கனவே வீடு வச்சிருக்குறவங்களுக்கு மறுபடியும் வீடாம்... என்ன கொடுமைங்க இது?’’ என்றார்கள் ஆதங்கமாக. 

சாயல்குடி ஒன்றிய அ.தி.மு.க. மீனவரணி செயலாளர் செந்தூர்பாண்டி மற்றும் சாயல்குடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் மூக்கையா ஆகியோர் இந்த பிரச்னை பற்றி நம்மிடம், 

‘‘நரிப்பையூர் பஞ்சாயத்து மட்டுமின்றி, கடலோர பஞ்சாயத்துக்களான வாலிநோக்கம், மாரியூர், மூக்கையூர், ரோஸ்மாநகர், மங்களா கன்னிராஜபுரம் ஆகிய கடலோர கிராமங்களிலும் சுனாமி வீடுகளை தி.மு.க.வினர் மட்டுமே பெற்றுள்ளனர். வாலிநோக்கம் பஞ்சாயத்தில் ஒதுக்கப்பட்ட 25 சுனாமி வீடுகளும் தி.மு.க. பஞ்சாயத்து தலைவியான வகிதா சகுபர் கொடுத்த லிஸ்ட்படிதான் நடந்துள்ளது. 

Kishore%204.jpgஇதில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் மீனவர் காலனி வீடு கட்டியிருப்பவர்கள், பஞ்சாயத்து நிதி மூலம் இந்திரா குரூப் ஹவுஸ் வீட்டுத்திட்டம் மூலம் வீடுகட்டியவர்கள், மீனவர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் குடியிருப்பு வீடுகள் கட்டியுள்ளவர்கள் எல்லாம் சுனாமி வீட்டுக்கு பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது ஏற்கனவே வீடு இருப்பவர்களுக்கு தி.மு.க. கரைவேட்டி அந்தஸ்தை அடிப்படையாக வைத்து சுனாமி வீட்டையும் அடிஷனலாக வழங்கியுள்ளார்கள். இந்த விஷயத்தில் நடந்துள்ள முறை-கேடு-கள் அனைத்-தையும் அம்மா கவனத்துக்கு கொண்டு-போய்விட்டோம். கூடிய விரைவில் மீனவர்களுக்காக விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்’’ என்றார்கள் ஆவேசமாக. 

புகார்கள் பற்றி நரிப்பையூர் பஞ்சாயத்துத் தலைவி சேர்மக்கனி காமராஜிடம் பேசினோம். 

‘‘சுனாமி வீடுகள் ஒதுக்கீடு அதிகாரம் பஞ்சாயத்துக்களுக்கு துளிகூட கிடையாது. வருவாய் துறையினரும், கன்னியாகுமரியை சேர்ந்த ‘செவாலியர்’ தொண்டு நிறுவனத்தினரும் இணைந்துதான் பயனாளிகள் பட்டியலை தேர்வு செய்தார்கள்’’ என திட்டவட்டமாக மறுத்தார். 

வாலிநோக்கம் சேர்மன் வகிதா சகுபர், ‘‘வாலிநோக்கத்தில் பக்கீர் மஸ்தான், சிக்கந்தர், அப்துல்காதர் ஆகிய 3 அ.தி.மு.க. கிளைச் செயலாளர்களுக்கும், சுனாமி வீட்டை ஒதுக்கி கொடுத்துள்ளேன். எனது சிபாரிசில் மந்திரி சுப.தங்கவேலனிடம் 56 பெயர்களை கொடுத்து, கட்சி வேறுபாடு பாராமல் இவர்களுக்கெல்லாம் சுனாமி வீட்டை பெற்றுக் கொடுத்துள்ளேன். அ.தி.மு.க.வினரின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது’’ என்றார். 

தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்ர-மணி-யனிடமும் புகார்கள் பற்றி பேசினோம். 

Kishore%202.jpg‘‘அட ஏன் சார்... இடையில நாலு வீடு விட்டுப் போச்சுன்னு அமைச்சர் சுப.தங்கவேலன் மூலமா சிபாரிசுக்கு போனோம். அமைச்சரின் சிபாரிசையே அதிகாரிகள் மதிக்கலை. என் சிபாரிசை கேட்டா வீடு ஒதுக்குவாங்க?’’ என்றார் சிரித்தபடி. சுனாமி வீடுகள் திட்ட துணை ஆட்சியர் ஆதிநாராயணனிடம் பேசினோம். ‘‘வீடு ஒதுக்கிய விஷயத்தில் இப்போது சரமாரியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், போலி பயனாளிகளை கேன்சல் செய்யும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. அதெல்லாம் மாவட்ட சுனாமி திட்ட வளர்ச்சி அதிகாரிக்குத்தான் உள்ளது’’ என்றார், 

மாவட்ட திட்ட அதிகாரியான ஆனந்த ராஜீவ் என்ன சொல்கிறார்? ‘‘இது ஒரு உலக வங்கி திட்டம். உலக வங்கி இந்த திட்டத்துக்கு கொடுத்துள்ள முக்கிய நிபந்தனையே, சுனாமி வீடு கோரும் பயனாளி, தான் குடியிருக்கும் வீட்டுக்கான பட்டா 10 வருடத்துக்கு முன் பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். பெரும்பாலும் 2 வருஷம் 3வருஷம் முன்பு பெற்ற பட்டாவை வைத்துக் கொண்டு, வீடு கிடைக்காமல் போன அதிருப்தியில்தான் இப்படியெல்லாம் எதையாவது கதை கட்டி விடுகிறார்கள். ஒரே குடும்பத்தில் அப்பா, மகன் இரண்டு பேருக்கும் பட்டா இருக்கும். அப்படி உள்ளவர்களுக்கு இரண்டு வீடு அலாட் ஆகியிருக்கும். இதைத்தான் கட்சி கலரெல்லாம் பூசி பூதாகரப்படுத்துகிறார்கள். இது சம்பந்தமாக ஆதாரப்பூர்வமாக புகார் கொடுத்தால் உடனடியாக கட்டுமானப் பணியை நிறுத்த உத்தரவிடுகிறேன்’’ என்றார். 

கட்சி பேதமில்லாமல் அனைவரையும் கடுமையாக பாதித்துச் சென்றுவிட்டது சுனாமி. ஆனால், அதற்கு நிவாரணம் கொடுப்பதில் எவ்வளவு தாமதம்... எவ்வளவு பாரபட்சம்? சுனாமியே தேவலாம் போலிருக்கிறது! 


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

போன உயிர் திரும்புமா? 
-அலட்சிய ‘ஆரம்பம்’... சோக முடிவு!

Salem%202.jpg



கோடிகளை வாரி-யிறைத்து ஸ்பெஷாலிட்டி மருத்துவ-மனைகளையெல்லாம் அரசு திறந்தும் பயன் என்ன? ஆரம்ப சுகாதார நிலையங்கள் எந்த அளவில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான், பிரேமாவின் மரணம்.

Salem%201.jpgசேலத்தில், சங்ககிரி-திருச்செங்கோடு ரோட்டில் உள்ள மோரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. அவருடைய மகள் பிரேமா. கோபிச்-செட்டிப்பாளையத்துக்கு மருமகளாகச் சென்றவர், பிரசவத்துக்காக தாய்வீட்டுக்கு வந்தார். 

பிரசவ வலி எடுக்கவே, அருகில் இருக்கும் வடுகப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பிரேமாவை அழைத்துச் சென்றார் மணி. ஒரு டாக்டர் கூட அந்த ஆரம்ப சுகாதார மையத்தில் இல்லை. நர்ஸ் ஊசி மருந்தை செலுத்த, அங்கேயே உயிரை விட்டு விட்டார் பிரேமா. அவர் வயிற்றுக்குள் இருந்த பிஞ்சும் வெளி உலகை எட்டிப் பார்க்காமலேயே மூச்சை அடக்கி விட்டது. மகளை இழந்து நிற்கும் மணி, நர்ஸ்கள் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி, போலீஸ் ஸ்டேஷன் படியேறிவிட்டார். பிரேமாவின் சித்தியான சிவகாமி நம்மிடம் பேசினார். ‘‘கடந்த 23-ந் தேதி திங்கட்கிழமை பிரேமாவுக்கு பிரசவ நாள் குறித்துக் கொடுத்தார்கள் டாக்டர்கள். அதனால வடுகப்பட்டி ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணினோம். நாங்க காலைல எட்டு மணிக்கு ஆஸ்பத்திரிக்கு போனோம். ஒரு நர்ஸ் மட்டும்தான் இருந்தாங்க. அட்மிஷன் போட்டதோட சரி. திரும்பி வந்து பார்க்கவே இல்லை. பிரேமாவின் உடல்நிலையைப் பார்க்கும்படி நர்ஸை கூப்பிட்டோம். ஆனா, அவங்க வரவே இல்லை. செல்போன்ல பேசிகிட்டே இருந்தாங்க. 

திரும்பவும் கெஞ்சி கேட்டதும், வேண்டா வெறுப்பா ராத்திரி எட்டு மணிக்கு வந்து ஒரு ஊசி போட்டாங்க. அவங்க ஊசி போட்ட கொஞ்ச நேரத்துல பொண்ணுக்கு பனிக்குடம் உடைஞ்சி போச்சு. பிரேமாவுக்கு ஜன்னி வந்த மாதிரி இழுத்து பேச்சு மூச்சு இல்லாம ஆகி போயிடுச்சு’’ என்றவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.

Salem%203.jpgபிரேமாவை இழந்து நிற்கும் மணி நம்மிடம் பேசும்போது, ‘‘பொண்ணு சலனம் இல்லாம கிடக்குதேன்னு கேட்டோம். மயக்கமா இருந்தா அப்படிதான் இருக்கும். எல்லாரும் வெளில போங்கன்னு சொல்லி அனுப்பிட்டாங்க. இரவு ஒரு மணி வரைக்கும் எதுவுமே சொல்லாம எம் புள்ளைய வெச்சிருந்துட்டு, ‘சீரியஸா இருக்கு. திருச்செங்கோடு ஜி.எச்.சுக்கு போங்க’னு சொல்லி, அனுப்பிட்டாங்க. அங்க கொண்டு போனோம். எம் புள்ளை செத்துப் போயிட்டதா சொல்லிட்டாங்க...’’ என முகத்தில் அறைந்துகொண்டு அழுதார்.

Salem.jpgவடுகப்பட்டி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்குச் சென்றோம். குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக யாரும் பதிலளிக்க முன்வரவில்லை. சேலம் பொது சுகாதார துணை இயக்குநர் நிர்மல்சனிடம் பேசினோம். ‘‘அந்த பெண் உடம்பில் நஞ்சு கொடி விலகி மரணம் சம்பவித்துவிட்டது. அந்த நேரத்தில் டாக்டர் இல்லாமல்போனது தவறுதான். டாக்டர் இருந்தாலும் அதை கண்டுபிடிப்பது கஷ்டம்தான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்து ஊழியர்களின் கவனக் குறைவால் மரணமடைந்தது தெரியவந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 

எல்லாம் சரி... போன உயிர்?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

‘‘சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அழகு இதுதானா?’’
மார்க்ஸிஸ்ட் ராமகிருஷ்ணன் கிண்டல்

CPM%201.JPG



தமிழக அரசுக்கு எதிராக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தவர்கள் கொஞ்ச காலமாக வேகத்தைக் கூட்ட, ஆளும் தரப்பிலிருந்து பதில் கணைகள் வேகமாகப் பாய ஆரம்பித்திருக்கின்றன.

திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, திடுமென தி.மு.க. பக்கம் சாய, ஆளும்தரப்பு மீது கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள் மார்க்ஸிஸ்ட் தோழர்கள். 

‘தமிழகத்தில் கொலை வெறித்தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்’ என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது கலைஞர் கடுமையான குற்றச்சாட்டுக்களோடு அறிக்கைவிடும் அளவுக்கு விவகாரம் வீரியமாக நீண்டு கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் குடியாத்தத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு தயாராகிக் கொண்டிருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தமிழ் மாநில செயலாளர் ராமகிருஷ்ணனை சந்தித்தோம்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பரா-மரிக்-கப்படுகின்றது என்று சமீபத்தில் நடந்த கலெக்டர்கள் மாநாட்டில் சொல்லியிருக்கிறாரே முதல்வர்?

தமிழகத்தில் வழிப்பறி, திருட்டு, கொலை சம்பவங்கள் எதுவும் குறையவில்லை என்பதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறது. குற்ற எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை பச்சைக் குழந்தையைக் கேட்டாலும் சொல்லும். அப்படி இருக்கும்போது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிப்பதாக யார் சொன்னாலும் அதில் உண்மை இல்லை. மொத்தத்தில், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவதில் தமிழக காவல் துறை தோல்வியடைந்துவிட்டது என்பதுதான் நிஜம்.

கம்யூனிஸ்ட் வைத்த கொள்ளிதான் இந்தியாவின் சில மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் தாக்குதல்கள், அராஜகம், உயிர்பலி என்று விவகாரம் கொழுந்துவிட்டு எரிகிறது என்றும் கலைஞர் சொல்லியிருக்கிறாரே, கவனித்தீர்களா? மாவோயிஸ்ட்களும், மம்தாவும் சேர்ந்து கொண்டுதான் மேற்குவங்கத்தில் எங்கள் இயக்கத்தவரை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். போராட்ட வடிவங்களை திசை திருப்புவதில் கைதேர்ந்தவர் கலைஞர். பொதுவாக அரசுக்கு எதிராக யார் போராடினாலும் அதை திசைதிருப்ப, இப்படியெல்லாம் சொல்லக் கூடியவர்தான் நம் முதல்வர். அதனால் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

தமிழகத்தில் வன்முறை, கொலை வெறித் தாக்குதலை நடத்த கம்யூனிஸ்ட்டுகள் திட்டமிட்டுள்ளதாக குற்றம்சாட்டுகிறாரே முதல்வர்?

மதுரையில் எங்கள் கட்சி கவுன்சிலர் லீலாவதியை கொன்றது தி.மு.க.வினர்தான். பள்ளி பாளையத்தில் கந்துவட்டியை எதிர்த்த வேலுச்சாமி சமூகவிரோதிகளால் அடித்து கொல்லப்பட்டார். இதெல்லாம் கொலை-வெறியோடு கம்யூனிஸ்ட்காரர்கள் செய்தவையா? கோட்டையை முற்றுகையிடுவதாக அறிவித்துவிட்டு வந்த சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைக்கு காது கொடுக்காமல் அவர்களை கைது செய்தது, கம்யூனிஸ்ட்களின் கொலை வெறியா? தேவையில்லாமல் கம்யூனிஸ்ட்கள் மீது புழுதிவாரி தூற்றுகிறார் கலைஞர்.

மக்கள் விரோத கொள்கைகளால் தி.மு.க அரசு மீது மக்களுக்கு அதிருப்தி கூடிக் கொண்டே வருகிறது. அந்த நிலைமையை எதிர்கொள்ள முடியாமல், ஆத்திரத்தில் உளறிக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

அப்படியென்றால், இந்த அரசுக்கு பிரச்னைகளை கையாளத் தெரியவில்லை என்கிறீர்களா?

CPM.JPGசத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து நீண்டகாலமாக போராடி வருகிறார்கள். அவர்களை அழைத்து பேசியிருக்கலாம். சென்னையில் நடந்த மறியலை தமிழகம் தழுவிய மறியலாக மாற்றியது கலைஞரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைதான். அப்படியென்றால், பிரச்னையை சரியாக அணுகத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்? 

குடியாத்தம் நகரில் குடிசைகள் அகற்றப்பட்ட விஷயத்திலும் இப்படித்தான், முறையாக அணுகாமல், பிரச்னையை பூதாகரப்படுத்தி விட்டார்கள். பிரச்னையை சுமூகமாக பேசி முடிக்காமல் வளரவிட்டுவிட்டு, தேவையில்லாமல் எங்கள் இயக்கத் தலைவர்களை கைது செய்து, சிறையில் அடைக்கிறது காவல்துறை. உத்தப்புரம் பிரச்னையிலும் தவறான அணுகுமுறையைத்தான் மேற்கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் அரசுக்கு எதிராக யார் போராடினாலும் அவர்களுக்கு எதிராக பொய் வழக்கு போடுவது என்று கிளம்பினால், சட்டம்-ஒழுங்கை பராமரிக்கும் அழகு இதுதானா? ஆக, தவறை தன் பக்கம் வைத்துக் கொண்டு கம்யூனிஸ்ட்களை குற்றம் சொல்லிக் கொண்டிருக்கிறார் முதல்வர்.

உத்தப்புரம் பிரச்னையிலும் உங்களை குற்றம்சாட்டுகிறாரே கலைஞர்?

உத்தப்புரத்தில் தலித்துகள் தங்கள் பகுதிக்குள் வரக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது தீண்டாமை சுவர். அந்த சுவற்றை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடியதால்தான் அந்தப் பிரச்னையே வெளியுலகுக்கு தெரியவந்தது. போராட்டத்துக்கு பிறகு சுவரை உடைத்தார்கள். ஆனாலும் அந்தப் பகுதியை தலித் மக்கள் பயன்படுத்த இதுவரை அனுமதி இல்லை. அந்தப் பகுதியில் நிழற்குடை கட்ட எம்.பி., தன் பொது நிதியில் இருந்து நிதி ஒதுக்கினார். அந்த நிதியைக் கூட பயன்படுத்த அரசுக்கு மனமில்லை. 

தலித் மக்களுக்கு அங்கே ஒரு பிரச்னை என்றதும் அதைத் தீர்த்து வைக்க போராடிக் கொண்டிருக்கிறோம். தீர்க்கப்படும் வரையில் போராடிக் கொண்டிருப்போம். தனித்து போட்டி... என் தலைமையை ஏற்க வரும் கட்சிகளுடன்தான் தேர்தல் கூட்டணி... என்று கூறிவருகிறார் விஜயகாந்த். அப்படியிருக்கும்போது அவரை அ.தி.மு.க. அணிக்கு கொண்டு வருவதற்கு கம்யூனிஸ்ட்டுகள் முயல்வதாக தகவல் பரவி இருக்கிறதே?

தேர்தல் பற்றி யோசிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் அதைப் பேசுவோம்

முல்லைப்பெரியாறு விஷயத்தில் கேரள கம்யூனிஸ்ட் அரசைக் கண்டிக்காமல் தமிழக கம்யூனிஸ்ட்கள் இரட்டைவேடம் போடுவதாக ஒரு விமர்சனம் உண்டே? 

என்றைக்கும் மாநிலத்தின் நலனை பாதுகாப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பின்தங்கியதில்லை. முல்லைப்-பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை வைத்து தீர்வு காணப்பட வேண்டும் என்பதுதான் மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலை. அதில் மாற்றமில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

City turning into transit point for drug smuggling

A Selvaraj | TNN

Chennai: The city,it appears,is becoming a transit point for the smuggling of raw material for party drugs,particularly Amphetamine-Type Stimulant (ATS),to South-East Asia.Three persons,including a Malaysian national,who were arrested here on Friday last with 300 kg of Ephedrine,told Narcotics Control Bureau (NCB) officials that they had exported similar consignments to Malaysia at least five times in the recent past.
Kalidoss alias Doss (34),a Malaysian national spotted roaming at the Chennai port on Friday,was intercepted by NCB officials and questioned.He told them about a consignment destined for Malaysia and a team rushed to a pest control firm on Second Line Beach Road in Parrys and recovered 300 kg of Ephedrine.It was concealed in 12 card-board drums that were to be loaded in containers.The NCB officials arrested booking agents Sathyan and Sukumaran in this connection.
In June,directorate of revenue intelligence (DRI) officials on a tip-off nabbed a man from Coimbatore near Koyambedu.Based on the information provided by him,we raided a medical shop in Aminjikarai owned by Sikkar Chand and seized 25 kg of Ephedrine.We also arrested five persons,including Chand.In July,a man from Hyderabad was arrested for the possession of 30 kg of Ephedrine.The accused told us they had been in the racket for quite some time and had been smuggling the chemical to China through the Phillipines, a DRI official told TOI.
Ephedrine,a chemical,is used to prepare medicines for treatment of asthma.The white crystalline powder is used in Malaysia and Indonesia as a primary raw material for preparing ATS.
The ATS,called Yaba in Malaysia,is a popular party drug in China,Japan,Malaysia and Indonesia as well as in Australia,NCB sources said.
The ATS is becoming familiar in Chennai pubs.In India,individuals cannot possess Ephedrine without proper permission.However,smugglers have been procuring it for Rs 1 lakh a kg.When it reachs Malaysia,the rate increases to Rs 3 lakh a kg.Soon,after it becomes ATS,the cost soars to almost Rs 20 lakh a kg in the international market.With more smugglers using Chennai as a transit point,the enforcement agencies are devising new methods to counter them, a senior NCB official said.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

08_09_2010_007_006-cement1.jpg?w=300&h=89
08_09_2010_001_056-schools.jpg?w=300&h=98


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

காற்றாலை மின் உற்பத்தியாளர்களுக்கு மின்சார வாரியம் ரூ.700 கோடி பாக்கி

கோவை : தமிழ்நாடு முழுவதும் மின் உற்பத்தி செய்யும் காற்றாலைகளுக்கு, தமிழ்நாடு மின்வாரியம், 700 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. நிலுவையில் உள்ள தொகையால் காற்றாலை உரிமையாளர்கள், வங்கிக்கு கடனை திரும்பச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.


தமிழகத்தில், கடும் மின் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த மின் பற்றாக்குறையை சமாளிக்க, தமிழகத்தில் சென்னை தவிர பிற இடங்களில் மின்வெட்டை அரசு அமல்படுத்தி வருகிறது. தமிழகத்தின் தேவையில், 20 சதவீத அளவிற்கு தற்போது காற்றாலைகள் மின் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றன. கோவை, நெல்லை, நாகர்கோவில் போன்ற மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காற்றாலைகள் அதிகளவில் அமைந்துள்ளன. ஆண்டுக்கு ஆறுமாதங்கள் வரை இந்த மின் உற்பத்தி அரசுக்கு கைகொடுக்கிறது. மாநில அரசு இந்த மின்சாரத்தை பெற்று, தொழில் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது. சராசரியாக காற்றாலைகள் தினமும், 2,000 மெகாவாட் மின்சாரத்தை காற்று வீசும் காலங்களில் உற்பத்தி செய்கின்றன. தினமும் கிடைக்கும் இந்த மின்சாரத்தால், மின்பற்றாக்குறையை பெருமளவில் அரசு சமாளித்து வருகிறது. காற்றாலை மின்சாரத்திற்கு அரசு அளிக்கும் கட்டணமும் குறைவே. பழைய காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு, 2.20 ரூபாய் அளிக்கிறது. புதிய காற்றாலைகள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றிற்கு ரூ.3.40 வழங்குகிறது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில், யூனிட் ஒன்றிற்கு நான்கு ரூபாய் வரை வழங்கப்படுகிறது.


தமிழகத்தில் உள்ள காற்றாலைகளில் பெரும்பாலானவை வங்கி கடனுதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் பெரும்பாலான காற்றாலைகளை, ஸ்பின்னிங் மில்கள், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களும் அமைத்துள்ளன. இவை, வங்கிகளின் கடனுதவி பெற்று அமைத்துள்ளன. சில கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த காற்றாலைகளில் இருந்து, காற்று வீசினால் மட்டுமே காசு பார்க்க முடியும்; கடனை செலுத்த முடியும். காற்றாலை மின்சாரத்தை சில நிறுவனங்கள், சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. தேவைக்கும் மேல் இருக்கும் மின்சாரத்தை அரசுக்கு அளிக்கின்றன அல்லது சேமிப்பில் வைத்துக் கொள்கின்றன. ஆனால், பல காற்றாலைகள், மின் உற்பத்திக்காக மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. இவை, உற்பத்தி செய்யும் மின்சாரத்தை அரசுக்கு விற்பனை செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. விலைக்கு வாங்கும் மின்சாரத்திற்கு உரிய காலத்தில், அரசு பணம் கொடுப்பதில்லை. இது குறித்து சமீபத்தில் சென்னையில் குறைதீர் கூட்டம், மின்வாரிய தலைவர் சி.பி.சிங் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள காற்றாலை மின் உற்பத்தியாளர்கள், குறைகளை கொட்டித்தீர்த்தனர். இவற்றை பொறுமையுடன், மின்வாரிய தலைவர் கேட்டார்; இவற்றை விரைவில் தீர்த்து வைப்பதாக கூறினார்.


காற்றாலைகளுக்கு கொடுக்க வேண்டிய மின் பாக்கி குறித்தும், காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் முறையிட்டனர். பிப்ரவரி மாதம் வரை மட்டுமே உற்பத்தி செய்த மின்சாரத்திற்கான தொகையை மின்வாரியம் வழங்கியுள்ளது. கடந்த ஆறு மாதமாக உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்திற்கு இதுவரை தொகையை தராமல் நிலுவையில் வைத்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 150 கோடி ரூபாய் அளவிற்கு மின்வாரியம் கொடுக்க வேண்டிய தொகை நிலுவையில் உள்ளது. இவ்வாறு, 700 கோடி ரூபாய் பாக்கியை தராமல் வைத்துள்ளது. காற்றாலை உரிமையாளர்கள், வங்கிக்கடன் வாங்கி பலர் அமைத்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் இவர்கள் வங்கிக்கு லட்சக்கணக்கில் வட்டி மட்டுமே கட்ட வேண்டிய நிலையில் உள்ளனர். இந்நிலையில், மின்வாரியம் தொகையை வழங்க காலம் தாழ்த்துவதால், செய்வதறியாது திகைத்து வருகின்றனர். மின்வாரியமோ, வரும் செப்., 15ம் தேதிக்குள் மார்ச் மாதத்திற்கான தொகையை தருவதாக கூறியுள்ளது. செப்., 30ம் தேதிக்குள் ஏப்ரல் மாதத்திற்கான தொகையை அளிப்பதாகவும் கூறியுள்ளது. விரைவாக இந்த தொகையை அளிக்குமாறு, காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த கெடு தவறினால், உடனே மின்சாரத்தை துண்டிக்கும் மின்வாரியம், இப்படி பல மாதங்களாக பாக்கி வைத்திருப்பது காற்றாலை மின் உற்பத்தியாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

"தமிழக அரசு பொய் சொல்கிறது" பிபிசி - ‎19 மணிநேரம் முன்பு‎தமிழக காவல் துறை இயக்குனர் பதவிக்கு, லத்திகா சரண் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைக்கிறது என்று மூத்த ஐபிஎஸ் ...

பிபிசி‎19 மணிநேரம் முன்பு‎
தமிழக காவல் துறை இயக்குனர் பதவிக்கு, லத்திகா சரண் நியமிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைக்கிறது என்று மூத்த ஐபிஎஸ் ...


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் விவகாரம்: கோவில் மேம்பாட்டு பணிகளுக்கு, அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை; பரம்பரை அறங்காவலர் விளக்கம்Chennai செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 07, 3:08 PM IST
சென்னை, செப்.7-
பெரியபாளையம் பவானி அம்மன் கோவில் விவகாரம்:      கோவில் மேம்பாட்டு பணிகளுக்கு, அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை;    பரம்பரை அறங்காவலர் விளக்கம்பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகளுக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை” என்று பரம்பரை அறங்காவலர் சேதுரத்தினம் அம்மாள் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலின் பரம்பரை அறங்காவலர் மற்றும் மேலாளராக கடந்த 39 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இந்த பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கியிருப்பது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளேன். என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு, அறநிலை யத்துறை ஆணையருக்கு விளக்கம் அளித்துள்ளேன்.
கோவில் பிரகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய பல்வேறு கட்டுமான பணிகளுக்காக, அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முறைப்படி கடிதம் அனுப்பி உள்ளேன். நினைவூட்டல் கடிதங்கள் பலமுறை அனுப்பியும், முறைப்படி எங்களுக்கு பதிலளிக்காமல், காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
கோவிலில் மேற்கொண்டுள்ள சில பணிகள் மேலும் தள்ளிப்போடமுடியாத நிலையில் அனுமதியை எதிர்நோக்கி மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பணிகள் முன் அனுமதி பெறாமல் செய்யப்பட்டன என்று குற்றம்சாட்டுகிறார்கள். கோவிலில் எந்த ஒரு பணிக்கும் ஆணையரோ, வேறு எந்த அதிகாரியோ இதுவரை எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை.
எனக்கு 82 வயதாகிறது. இந்த தள்ளாத வயதிலும், கோவில் காரியம் என்பதால், சிரமம் பாராமல் எல்லா காரியங்களையும் முன்னின்று கவனித்து வருகிறேன். பெண் பக்தர்கள் வேப்பஞ்சேலை மாற்றிக்கொள்வதற்காக, வசதிகளுடன் கூடிய அறை கட்டுவதற்கு பலமுறை அனுமதி கேட்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை.
இவ்வாறு சேதுரத்தினம் அம்மாள் கூறினார்.


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அதிகார துஷ்பிரயோகம் & எங்கெங்கும்!
Carkodan%202.jpg

 

சென்றவாரம் செய்தித்-தாள்களைப் புரட்டியதில் நம்மை நோகடித்த சில செய்திகள்...

1. ஆப்பமும் இறால்புட்டும் தரவில்லை என்பதற்காக ஏர் இந்தியா பைலட் ஒருவர், விமானத்தை எடுக்க மறுத்துவிட்டாராம். வேடிக்கைக் கதை இல்லை. வேதனைக் கதை. கொச்சியிலிருந்து சென்னைக்கு வரவேண்டிய விமானம் இவரது பிடிவாதத்தால் ஏழு மணிநேரம் தாமதமாகப் புறப்பட்டதாம். இதனால் அடுத்தடுத்து செல்ல வேண்டிய மூன்று சேவைகளை ஏர் இந்தியா கேன்சல் செய்ய நேரிட்டது. இத்தனைக்கும் பைலட்டிற்கு ஐந்து நட்சத்திர ஓட்டல் சாப்பாடு கொடுத்திருக்கிறார்கள். அவருக்கு பிடித்த ஆப்பமும், இறால் புட்டும் அதில் இல்லை என்று கோபித்துக் கொண்டு சாப்பிட மறுத்ததுடன் விமானத்தையும் எடுக்க மறுத்தார்.

Carkodan%201.jpg2. உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.ஸின் சஸ்பென்ஷனை விலக்கிக் கொண்டு, தமிழக அரசு அவரை டான்சியின் மேலாண்மை இயக்குனராக நியமித்தது. எனினும் ஜாதிச் சான்றிதழ் மற்றும் சொத்துகுவிப்பு பற்றிய விசாரணை தொடருமாம்.

3. ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் (வேதாந்தா குரூப்) சுமார் 750 கோடி ரூபாய் கலால் வரி ஏய்ப்பைக் கண்டுபிடித்த கலால் ஆணையர் கண்ணன் திடீரென்று வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டார். இவர் செய்த குற்றம் அரசாங்கத்திற்கு வரவேண்டிய 750 கோடி ரூபாயைக் காப்பாற்ற முனைந்தது.

4. ‘தனியார் தொலைக்காட்சி குழுமத்தின் முக்கிய நிர்வாகி ஒருவர் நடுரோட்டில் நள்ளிரவில் ‘ஸ்பிரிட்’டாக சண்டைபோட்டதுடன், அவருடைய அடியாட்கள் எதிர்தரப்பினரின் வீடுகளையும் அவர்களில் ஒருவர் சம்பந்தப்பட்ட ஹோட்டலையும் சூறையாடியிருக்கின்றனர்’ என்று வெளியான செய்தி. இந்த விவகாரத்தில் ஒரு குடும்பப் பெண்ணையும் தாக்கிக் கொலை மிரட்டல் விட்டிருக்கிறார்கள்.

இந்த நாலு நாட்டு நடப்புக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? நாலுமே அதிகார துஷ்பிரயோகம். முதலாவது அரசு ஊழியரின் அடாவடி-அதிகார துஷ்பிரயோகம். ஏர் இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு அளிக்கப்படும் சேவையின் தரமே சர்ச்சைக்குரியது. இதில் ஆப்பத்திற்காக பைலட் அத்தனை பயணிகளையும் ஏழு மணிநேரம் உட்கார வைத்ததுடன், ஏர் இந்தியா உயரதிகாரிகள் கெஞ்சிக் கூத்தாடியபின்தான் விமானத்தை எடுத்திருக்கிறார். தனியார் நிறுவனமாயிருந்தால் இவரை அப்படியே வீட்டுக்கனுப்பி இருப்பார்கள். இவர்களைக் கையாள அரசுக்கும், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் விசேஷ அதிகாரங்கள் கொடுக்க வேண்டும். அரசு சார்ந்த நிறுவனம் என்ற மமதையில் இப்படி லூட்டி அடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது என்றால் ஏர் இந்தியாவைக் கட்டாயமாக தனியார் வசம் ஒப்படைப்பதில் எள்ளளவும் தவறில்லை.

Carkodan.jpgஉமாசங்கர் விஷயத்தில் அவர் செய்த மாபெரும் குற்றம் ஊழலைத் தடுக்க முற்பட்டார் என்பதாகத்தான் இருக்க முடியும். ஒருபுறம் ஊழலைக் கண்டுபிடிக்க உதவும் உண்மை விளம்பிகளின் (கீலீவீstறீமீ-தீறீஷீஷ்மீக்ஷீs) பாதுகாப்பிற்குச் சட்டம் இயற்றுவதாக பாவ்லா நடைபெறுகிறது. மறுபக்கம் அப்படிப்பட்ட அபூர்வ மனிதர்களை எப்படியாவது அடக்கிவிட அராஜக முயற்சிகள் அவிழ்த்துவிடப்படுகிறது. இவரைப் பத்து லட்ச ரூபாய்க்கு பிளாட் வாங்கியதெப்படி என்று கேட்கும் விஜிலென்ஸ் வேங்கைகளின் கண்ணுக்கு தமிழ்நாட்டின் பாதி சொத்துக்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினர்கள் கைவசம் வந்தது எப்படி என்பது புலப்படுவதில்லை!

தலித் என்ற கரிசனமும் பாதுகாப்பும் உண்மையான நேர்மையான தலித்துகளுக்கு இல்லை தமிழ்நாட்டில். ஊழல் ராஜாக்களுக்கு மட்டுமே இந்த ‘ராயல்’ பாதுகாப்பு. இது அரசாட்சியில் இருப்பவர்களது அதிகார துஷ்பிரயோகம்.

அடுத்து, கலால் ஆணையரின் இடமாற்றத்திற்குப் பின்னால் ஒரு மத்திய அமைச்சர் இருப்பதாகச் செய்தி. பின்னே, கொடுத்ததை வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டிருக்காமல் அரசாங்கத்திற்கு 750 கோடி வரவேண்டும் என்று கேட்கிறாரே? எவ்வளவு பெரிய குற்றம்? ஏதோ கண்ணனைப் பிடித்த நல்லகாலம்... உமாசங்கர் கதி இவருக்கு ஏற்படாமல் இடமாற்றத்தோடு விட்டார்களே. இதுவும் அரசின் உயர்பதவியில் இருப்பவர்களது அதிகாரத் துஷ்பிரயோகம்.

cartoon_snake.jpgஅரசியல்வாதிகளின் அதிகார வரம்பு மீறல்களைப் பார்த்து அரசு அதிகாரிகளும் பணியாளர்களும் கெட்டுப்போகிறார்கள். இதுவாவது பரவாயில்லை. அரசின் அதிகார மையத்தைச் சுற்றி இருக்கும் சுற்றங்கள் எல்லை மீறுகின்றன. இதுவும் போதாது என்று அந்தச் சுற்றங்களைச் சுற்றியிருக்கும் சாதாக்களும் தன்னையே அதிகார மையமாகக் கற்பனை செய்து கொண்டு கோதாக்களில் இறங்கி விடுகிறார்கள். இத்தனையும் நடந்து பத்திரிகைகளில் தெரிந்தும் தெரியாமலும், பட்டும் படாமலும் பயந்தும் நயந்தும் விவரங்கள் வெளியான பிறகும் ஆட்சியில் இருப்பவர்கள் குறைந்தபட்சம் நேரடியாகக் குற்றம் புரிந்தவர்களையாவது கைது செய்தார்களா? செய்ய மாட்டார்கள். அவர்கள் தயவு இவர்களுக்குத் தேவை. இவர்கள் தயவு அவர்களுக்குத் தேவை. இது பரஸ்பர தேவைக் கூட்டணி. 

அதுசரி & பொதுமக்களின் பாதுகாப்புக்குத் தேவை? அது கிடக்கிறது கழுதை. ஆயிரம் ரூபாயை வெட்டினால் ஓட்டுப்பெட்டியில் கொட்டும் இனத்திற்கு (ஈனத்திற்கு?) பாதுகாப்பு ஒரு கேடா? வாழ்க ஜனநாயகம்!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

அரசே மிரட்டுவதாக புகார்:
ஜெ.வை சந்திக்கும் கேபிள் ஆபரேட்டர்கள்! 

Cable%201.jpg



அடக்கமான அரசு கேபிள் டி.வி.’ என்ற தலைப்பில் கடந்த 26.8.2010 இதழில் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம். 

அதுவரை நடைப்-பிண-மாகவே இருந்துவந்த அரசு கேபிள் டி.வி. நிர்வாகம், அந்த செய்திக்குப் பிறகு எடுத்துள்ள நடவடிக்கைகள் கேபிள் ஆப-ரேட்டர்களை மீண்டும் கொந்தளிக்க வைத்துள்ளது. வேலூரில் அரசு கேபிள் ஆபரேட்ட-ராக இருந்தவரும், அரசு கேபிள் ஒளிபரப்பாளர்கள்(!) சங்க மாநில துணைச் செயலாளருமான சீனுவாசன் ஒரு கடிதத்தைக் காட்டி நம்மிடம் பேசினார். 

Cable.jpg‘‘ஆயிரத்துக்கும் மேல் இணைப்புகளை வைத்திருந்த தனியார் கேபிள் ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டி.வி.யில் இணைந்தபின் அவர்-களிடமிருந்த வாடிக்கையாளர்களை இழந்து விட்டனர். அதற்கு காரணம் அரசு கேபிளின் கட்டண சேனல்கள் மக்களுக்கு விருப்பமான சானல்களாக இல்லாததுதான். நியாயப்படி பார்த்தால் அரசுதான் எங்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும். ஆனால், ‘நீங்கள் கட்டண பாக்கி வைத்துள்ளீர்கள்’ என அரசே எங்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளதுதான் வேதனை. என்னிடம் இருந்த 750 இணைப்புகள் அரசு கேபிளில் இணைந்தபின் 200 ஆக குறைந்து-விட்டது. என்னிடமிருந்த 200 இணைப்பு-களுக்கு நான் செலுத்த வேண்டிய தொகை மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய். அதை 3 மாதங்கள் செலுத்தியும் விட்டேன். இணைப்பு துண்டிக்கப்பட்டவுடன் அவர்கள் கணக்குப்படி பார்த்தாலும் கூட நான் தரவேண்டிய பாக்கி மிகக் குறைந்த தொகையாகத்தான் வரும். ஆனால் அரசு இப்போது, ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணம் கட்டு என கடிதம் அனுப்புகிறது. அரசு கூறியபடியே கட்டண சேனல்களை கொண்டு வந்திருந்தால் அதிகளவு வாடிக்கையாளர்களை சேர்த்திருக்க முடியும், தற்போது ஏற்பட்டுள்ள இந்த நஷ்டத்துக்கு அரசே முழுப் பொறுப்பேற்கவேண்டும்’’ என ஆவேசப்பட்டார். 

இதுபோல் அரசிடமிருந்து ‘அபராத’ கடிதம் வந்ததால் கோபமாகியிருக்கும் கேபிள் ஆபரேட்டர்கள், 

‘‘அரசு கேபிள் திட்டத்தை அறிவித்து அதில் சேர முயற்சித்தபோது, ஆபரேட்டர்களை தனியார் ஆட்கள் பகிரங்கமாக மிரட்டினர். அதையும் மீறி அரசின் திட்டத்தில் இணைந்தவர்களையும் நம்பிக்கை மோசடி செய்து, இப்போது கட்டண பாக்கி என அரசே மிரட்டுகிறது. அரசை நம்பிய ஒரே காரணத்துக்காக ஆபரேட்டர்களை துன்புறுத்துவது மாநிலமெங்குமுள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்களில் பெரும்பான்மையானவர்களை எதிர்க்கட்சிகளை நாடத் தூண்டியுள்ளது. அரசு கேபிளில் இணைந்து நஷ்டமடைந்தவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து தங்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்குமாறு கேட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இது சம்பந்தமாக கேபிள் ஆபரேட்டர்களை வைத்து மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்’’ என்கிறார்கள். 

விரைவில் அரசு கேபிள் டி.வி. ஆப-ரேட்-டர்கள் சங்கத்தினர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்ததாக புகைப்படம் வரலாம். அரசுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! 



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

பூச்சிக் கொல்லியிலும் போலி:
கருகிய மஞ்சள்... வீரிடும் விவசாயிகள்! 

Erode.jpg



விளைவித்த பொருளுக்கு சரியான விலை கிடைக்கலை’, ‘விவசாயத்-துக்குத் தேவையான தண்ணி கிடைக்கலை’ என்று எத்தனையோ ‘கிடைக்கலை’களுக்கு மத்தியில்தான் தமிழகத்து விவசாயிகளின் வாழ்க்கை ஓடிக்-கொண்டிருக்கிறது. இப்படி கஷ்டங்களோடு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் விவசாயிகளை பூச்சி கொல்லி மருந்து நிறுவனம் ஒன்று போலியாக மருந்துகளை சப்ளை செய்து ஏமாற்றினால்? அப்படியொரு சிக்கலை சந்தித்து, நொந்துபோய் கிடக்கிறார்கள் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ளது கண்ணாடிபுதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள். 

Erode%201.jpgசமீபத்தில் பெய்த மழையைத் தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்தார்கள். செழுமையாக வளர்ந்த மஞ்சள் செடிகள் முழுவதும் செம்பழுப்பு நோய் தாக்க ஆரம்பிக்க, அந்த நோயை கட்டுப்படுத்தி செடிகளை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார்கள் விவசாயிகள். அதற்காக பயன்படுத்தபட்ட பூச்சி கொல்லி மருந்து தான் விவசாயிகளின் வாழ்க்கையில் சோகத்தை அள்ளிக் கொட்டியிருக்கிறது.

கவுந்தப்பாடி மற்றும் கோபி-ச்-செட்டிப்-பாளையம் பகுதிகளைச் சோந்த விவசாயிகள் பெருமாள், சுப்பிரமணி ஆகியோர் நம்மிடம் இது குறித்துப் பேசினார்கள்.

‘‘எங்க பகுதியில பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் செடி முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னால செம்பழுப்பு நோய் தாக்கியது. மார்கெட்டுல மஞ்சளுக்கு நல்ல கிராக்கி இருக்குன்னு தெரிஞ்சதும்தான், விதை மஞ்சளை கிலோ 70 ரூபாய்க்கு வாங்கி பயிரிட்டோம்.

பயிர் நல்லாத்தான் வளர்ந்துச்சு. ஆனா, திடுமென செம்பழுப்பு நோய் தாக்குனதும், அதிர்ந்து போய்ட்டோம். சாகுபடி பாதிக்குமேன்னு கவலை வந்துடுச்சு. சரி, ஏதாவது செஞ்சு பயிரை காப்பாத்தணுமே, அதுனால, பூச்சி மருந்து அடிக்கறதுன்னு முடிவெடுத்து, எங்கள் பகுதியில் உரம், பூச்சிக் கொல்லி மருந்துகளை வியாபாரம் செய்யும் சிவக்குமாரை தேடிப் போனோம். 

Erode%203.jpgஒரு மில்லி 1 ரூபாய் என எங்கள் நிலத்தின் அளவுக்கேற்ப 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் வரைக்கும் கொடுத்து பூச்சிக் கொல்லி மருந்தை வாங்கி-னோம். செடிகளிலும் தெளித்தோம். ஆனா, பூச்சி சாகலை. செடிகள் கருகத் தொடங்கியது.

பதறி-யடிச்சிகிட்டு போயி கேட்டா, அதற்கு சிவக்-குமாரிடம் முறை-யான பதில் இல்லை. ‘பணத்தைத் திருப்பிக் கொடுத்துடறேன். ஆனா, எங்கிட்ட பூச்சி மருந்து வாங்கு-ன-துக்கான பில்லைக் கொடுங்க’னு கேட்-டாரு. மருந்து வாங்கும் போதே நாங்க பில் கேட்டோம். ஆனா, ‘அதுக்கு தனியா 200 ரூபாய் வரை செலவாகும். தேவைன்னா கொடுக்-கிறே’ன்னு சொன்னாரு. சரி, எதுக்காக தேவை-யில்லாம 200 ரூபாய் செலவு செய்யணும்னு நாங்க பில் வாங்கலை.

அதை அவருகிட்ட சொன்னதும், ‘பில் இருந்தா பணத்தைத் திருப்பித் தர்றேன். இல்லைன்னா, முடியாது’ன்னு கறாரா பேசினாரு. அதுக்குப் பின்னாடி அவரை கண்காணிக்கத் தொடங்கினோம். அப்பதான் கவுந்தப்பாடியில ஒரு வீட்ட வாடகைக்கு பிடித்து அவரு குடோனா பயன்படுத்திக்கிட்டு வர்றது தெரிஞ்சுது. அவருக்கு கோபியிலும் ஒரு கடை இருக்கு. 

ஒரு நாள் நாங்க எல்லாரும் சேர்ந்து அந்த குடோனை முற்றுகையிட்டோம். அப்ப தான் அவரு ‘சைட்டோ செம்’ என்ற மருந்து நிறுவனத்தின் பெயரில் போலியாக மருந்து தயார் செய்து விற்பனை செய்தது தெரிஞ்சுது. உடனே, பவானி வேளாண்மை நிறுவனத்துக்குத் தகவல் கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் நீண்ட நேரமாகியும் வராததால் போராட்டத்தில் ஈடுபட்டோம். பிறகு தான் காவல்துறையினர் வந்து அந்த குடோனில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்...’’ என்றார்கள்.

Erode%202.jpgபோலி பூச்சிக் கொல்லி மருந்து தயாரிப்பு குறித்து காவல்-நிலையத்தில் புகார் கொடுத்துள்ள பவானி வேளாண்மை உதவி இயக்குனர் பாபுவிடம் பேசினோம்.

‘‘விவசாயிகள் பூச்சிக் கொல்லி மருந்தை உபயோகிக்கும் முன்பாக எங்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். அப்படி கேட்டிருந்தால் இப்படி ஒரு பிரச்னை ஏற்பட்டிருக்காது. நாங்கள் நடத்திய ஆய்வில் அந்த மருந்து போலியானது என்று தெரிய வந்திருக்கிறது. அதன்பின்னர்தான் காவல்துறையினர் உதவியுடன் அங்கு இருந்த போலியாக தயார் செய்யப்பட்ட பூச்சி மருந்துகளையும் அதை தயார் செய்ய பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களையும் கைபற்றினோம். தற்போது அவையெல்லாம் ஆய்வுக்காக கோவை வேளாண் பல்கலைகழகத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. முடிவுகள் வந்ததும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் துவங்கும்...’’ என்றார்.

கவுந்தப்பாடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் பேசிய-போது, ‘‘விவசாயிகள் முறையாக தகவல் கொடுத்திருந்தால், சிவக்குமாரை கைது செய்ய முடிந்திருக்கும். ஆனால், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நேரத்தை பயன்படுத்தி சிவக்குமார் தலைமறைவாகி விட்டார். 

இருந்தாலும், கோபியில் அவர் நடத்திய கடை அவரது மனைவி உமா பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவரையும், கடை ஊழியர் அமுல்பேபி என்பவரையும் கைது செய்திருக்கிறோம். விரைவில் சிவக்குமாரையும் கைது செய்வோம்...’’ என்றார்.

நாட்டில் அசலைவிட போலிகள் அதிகமாகிவிடும் போல!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

வ.உ.சி.க்கு வெண்கலச் சிலை:
மறக்கப்பட்ட மைதீன்கான்; மருகும் ஆதரவாளர்கள்!

Nellai.jpg


தென் மாவட்டங்களுக்கும் ஜாதிக் கலவரங்களுக்கும் ரொம்பவே பிணைப்பு உண்டு. இந்த ஜாதி கலவரங்களுக்கு பிரதான காரணமாக இருப்பவை ஜாதியத் தலைவர்களின் சிலைகள்.


தேசிய தலைவர்கள் கூட ஜாதிய சிந்தனைகளால் சுருக்கப்பட்டு, அடையாளம் மாற்றப்பட்டு, குறிப்பிட்ட சமுதாயத்தினரால் மட்டும் போற்றப்படும்போதுதான் பிரச்னைகள் வெடிக்கின்றன.

Nellai%201.jpg இப்படி ஜாதி சிந்தனையோடு சிலைகள் அமைக்கப்படுவது ஒருபுற-மிருக்க,ஓட்டு வங்கியை குறிவைத்தும் சிலைகள் அவ்வப்போது பிறக்கின்றன. இதனால், சிலைகளை மையமாக வைத்து நடத்தப்படும் அரசியல்களுக்கு தென்மாவட்டங்களில் எப்போதும் பஞ்சமிருக்காது. இப்படி ஓட்டு அரசியலுக்காக லேட்டஸ்ட்டாக சிலையாக மலர்ந்-திருக்-கிறார் வ.உ.சி.!

அந்த சிலை திறப்பு விழாவிலும், ஆளும்-கட்சியினர் ஒன்றுபட்டு நிற்கவில்லை. கோஷ்டி அரசியல் செய்து பரபரப்புக் கிளப்பியிருக்கிறார்கள்.

செப். 5-ம் தேதி மாலை வ.உ.சிதம்பரனார் சிலையை நிதியமைச்சர் அன்பழகன் திறந்து வைத்தார். அதன்பிறகு, விழாவில் நிறைய முக்கியஸ்தர்கள் பேசினார்கள். ஆனால், பேசியவர்களில் ஒருவர்கூட வ.உ.சி. சிலையை அமைத்துக் கொடுத்த, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் டி.பி.எம் மைதீன்கான் குறித்து பேசவில்லை. கவனமாக அவர் பெயரை தவிர்த்தார்கள்.

Nellai%202.jpg இது நெல்லையில் இருக்கும் அமைச்சர் மைதீன்கானின் ஆதர-வாளர்களை ரொம்பவே கொதிக்க வைத்திருக்கிறது.

அவர்கள் சிலரிடம் பேசியபோது, “கொஞ்ச காலத்துக்கு முன்பாக நெல்லை வ.உ.சி. மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மைதீன்கான். அப்போது அவரை அணுகிய சிலர், ‘நெல்லையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி. சிலை, மக்கள் பார்வையில் படும் இடத்தில் இல்லை. அதனால், நெல்லையின் பிரதான இடம் ஒன்றில் வ.உ.சி.க்கு புதிய சிலை அமைக்க வேண்டும். வெண்கல சிலையொன்று செய்து திருவனந்தபுரம் சாலை பகுதியில் வைத்தால், நன்றாக இருக்கும்’ என்று சொன்னார்கள்.

உடனே, ‘சிலையை நானே அமைத்துத் தருகிறேன்’ என்று சொன்னார் அமைச்சர். கும்பகோணத்தில் உள்ள ஒரு சிற்பி மூலம் சிலை உருவாக்கப்பட்டது. கிட்டதட்ட நாலு லட்ச ரூபாய் செலவில் சிலை செய்து, நெல்லைக்கும் கொண்டு வரப்பட்டு, சிலை நிறுவும் விழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சமயத்தில்தான் சிலர் சிலை திறப்புவிழாவை மையமாக வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தார்கள். உள்குத்து அரசியல் விவகாரம் அறிந்த அமைச்சர், சிலையை சிலை அமைப்பு குழுவினரிடம் ஒப்படைத்து விட்டார். ‘நீங்களே, விழாவை சிறப்பாக நடத்துங்கள்’ என்றும் சொல்லிவிட்டார். ஆனாலும், விழாவுக்கான செலவுகளை அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

விழா நாளில் அமைச்சர் சென்னையில் இருந்தாக வேண்டிய கட்டாயம். துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ஒன்று இருந்ததால், அமைச்சரால் நெல்லையில் இருக்க முடியவில்லை. இந்திய-ஆஸ்திரேலிய நட்புறவை பலப்படுத்தும் வகையில் நடந்த காட்சி கிரிக்கெட் போட்டிக்காக அவர் சென்னையில் தங்கி விட்டார். இதை வசமாகப் பயன்படுத்தி மொத்த விழாவிலும் அமைச்சரை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். சிற்பியையும் கண்டு கொள்ளவில்லை. அமைச்சர் அன்பழகன் விழாவில் பேசும்போது, வ.உ.சிதம்பரனாரின் நன்றி உணர்வு குறித்து பேசினார். ஆனால், பெருந்தன்மையோடு சிலை அமைத்துக் கொடுத்த அமைச்சரை யாரும் நன்றியோடு நினைத்துப் பார்க்கவில்லை...’’ என்று குமுறலை வெளிப்படுத்தினார்கள்.

இதுகுறித்து நெல்லை மேயரும், சிலை அமைப்புக் குழு புரவலருமான ஏ.எல்.சுப்பிரமணியனிடம் பேசினோம்.

“விழாவில் மைதீன்கான், கலந்து கொள்ள முடியாதது குறித்து நான் பேசினேன். அதனை சரியாக யாரும் கவனிக்கவில்லை போல...’’ என்று சிம்பிளாக முடித்துக் கொண்டார்.

நல்லவேளை, வ.உ.சி. சிலையாகி விட்டார். இல்லையென்றால்..?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ரயில்வே திட்டத்தை கொண்டு வந்தது- யார்?
மன்னார்குடி மல்லுகட்டு!

Thanjai.jpg



ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிவிப்பு மன்னார்குடி தி.மு.க.வை இரண்டாக பிளந்திருக்கிறது. பிளக்ஸ் போர்டுகள் சகிதம் இரண்டு தரப்பினர் ஊருக்குள் சலசலப்புகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீடாமங்கலத்திலிருந்து மன்னார்குடி செல்வதற்கு ரயில்வே பாதை இருக்கிறது. அதனை அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடுக்கி விடப்பட்டு வேகமாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மன்னார்குடி& பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை திட்டம் தீட்டப்பட்டு அதற்கும் 216 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது ரயில்வே நிர்வாகம். அந்த அறிவிப்பைத் தொடர்ந்துதான் மன்னார்குடி தி.மு.க.வில் திடீர் சலசலப்பு.

Thanjai%201.jpg‘திட்டத்தை எங்கள் அண்ணன்தான் கொண்டு வந்தார்’ என்று முன்னாள், இந்நாள் அமைச்சர்களின் ஆதரவாளர்கள், அவர்களுக்கு நன்றி தெரிவித்து ப்ளக்ஸ் போர்டுகளை வைக்கவேதான் சர்ச்சைகள் கிளம்பியிருக்கிறது.

இது குறித்து மன்னார்குடி நகர தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘மன்னார்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைதான், நீடாமங்கலத்துக்கும் மன்னார்குடிக்கும் இடையே அகல ரயில்பாதை அமைப்பது. இத்திட்டத்தை நிறைவேற்றி தந்தார் என்று சொல்லி, மன்னார்குடி நகர, ஒன்றிய நிர்வாகிகள் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு நன்றி தெரிவிக்க ஆசைபட்டார்கள். பாராட்டு விழா நடத்துவது என்றும் முடிவெடுத்தார்கள். நன்றி தெரிவித்து நகர் முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில், தனது உறவினர் வீட்டுத் துக்க நிகழ்ச்சிக்காக மன்னார்குடி வந்தார் முன்னாள் மத்திய அமைச்சரும், ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர் பாலு.

அப்போது, மன்னார்குடி தி.மு.க.வினர் பழனிமாணிக்-கத்துக்கு பாராட்டு விழா நடத்த திட்டமிட்டிருக்கும் தகவலை சிலர் சொல்லியிருக்கிறார்கள்.

உடனே, கொதித்துப் போனாராம் பாலு. கொஞ்ச நேரத்திலேயே மன்னார்குடியில் இருக்கும் எல்லா பத்திரிகையாளர்களுக்கும் போன் போட்டு, ‘நாளை காலை டி.ஆர்.பாலு நிருபர்களைச் சந்திக்கிறார். மறக்காமல் வந்துவிடுங்கள்...’ என்று சொன்னார்களாம் அவரது ஆதரவாளர்கள். திருச்சி கோட்ட ரயில்வேத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் போனது. அவர்களும் நிருபர்கள் சந்திப்புக்கு அழைக்கப்பட்டார்கள்.

மறுநாள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய டி.ஆர்.பாலு, ‘‘மன்னார்குடி-பட்டுக்கோட்டை, நீடாமங்கலம்-மன்னார்குடி ரயில் திட்டத்தை நான்தான் கொண்டு வந்தேன். முதல்வரின் கட்டளைக்கிணங்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் மம்தா பனார்ஜியை நேரில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினேன். அதன்பிறகுதான், திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இதனை மம்தா பானர்ஜி கடந்த ஆகஸ்ட் 26&ம் தேதியிட்டு முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வேகமாக நடைபெறப்போகும் இந்தப் பணிகள் வரும் ஜனவரிக்குள் முடிவடையும்’’ என்றார்.

Thanjai%202.jpg பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பாலு இப்படிச் சொன்னதுமே, மாமன்னர் மருது-பாண்டியர் சிலை அமைப்புக் குழுவினர் உற்சாக-மடைந்தார்கள். அவர்களும் தி.மு.க.-வினர் சிலரும் சேர்ந்து, டி.ஆர். பாலுவுக்கு நன்றி தெரிவித்து ஊர் முழுவதும் பிளக்ஸ் போர்டுகளை வைத்து விட்டார்கள். இதைத் தொடர்ந்துதான், மன்னார்குடி தி.மு.க.வில் சலசலப்புகளும் முணுமுணுப்புகளும் கேட்க ஆரம்பித்திருக்கிறது’’ என்றார் அந்த லோக்கல் பிரமுகர். மத்திய அமைச்சர் பழனி-மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். ‘‘நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி, தொகுதி மறுசீரமைப்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதிக்குள் வந்துவிட்டது. தற்போது தஞ்சாவூர் எம்.பி.யாக இருப்பவர் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம்.

கடந்த 2009&ம் ஆண்டு மன்னார்குடி நகராட்சி வளாகத¢தில் நடைபெற்ற இலவச டி.வி. வழங்கும் விழாவில் கலந்து கொண்டார் பழனிமாணிக்கம். அப்போது, மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், கடல்பொருட்கள் ஏற்றுமதியாளர்கள், உப்பு மற¢றும் தென்னை உற்பத்தியாளர்கள் என்று பலரும் அமைச்சரை சந்தித்தார்கள்.

நீடாமங்கலம்& மன்னார்குடி& பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை திட்டத்தை நிறைவேற்றித் தரும¢படி, அப்போது அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்கள்.

அதைத் தொடர்ந்துதான், தற்போது ரயில்வே துறை திட்டத்தை நிறைவேற்ற முயன்றிருக்கிறது. அதற்கு பழனிமாணிக்கத்துக்கு நன்றி சொல்ல விழைந்தோம். டி.ஆர்.பாலுவும் இதற்காக முயற்சி எடுத்திருக்கிறார் என்ற தகவல், அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்துச் சொன்ன பிறகுதான் எங்களுக்குத் தெரியும். மொத்தத்தில் தி.மு.க.-வினர் முயற்சித்துத்தான் திட்டம் வந்திருக்கிறது. இதனால், விவசாயிகள் பெரும் பயன்பெறுவார்கள்’’ என்று சொன்னவர்கள், ‘‘இத்திட்டத்தை நிறைவேற்றித் தந்த மத்திய அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு நன்றி தெரிவித்து பிளக்ஸ் போர்டுகள் வைத்தோம். டி.ஆர். பாலு ஆதரவாளர்களும் போட்டியாக பிளக்ஸ்களை வைக்க ஆரம்பித்து விட்டார்கள். பாலுவுக்கு கட்சி உடன்பிறப்புகள் யாரும் பிளக்ஸ் வைக்கவில்லை. மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அமைப்புக்குழு சார்பில்தான் வைத்துள்ளனர்.

அந்தந்த தொகுதி எம்.பி.யின் பரிந்துரைப்படிதான் தொகுதிக்கு உட்பட்ட திட்டங்கள் நிறைவேறும் என்பது தெரிந்த விஷயம்தானே? எங்கள் தொகுதி எம்.பி.ங்கறதால பழனிமாணிக்கத்திடம் சொன்னோம். பணி நடைபெறுகிறது. மொத்தத்தில் யார் செய்தால் என்ன? தி.மு.க.வினர் செய்ததுதானே?’’ என்றும் சொன்னார்கள்.

டி. ஆர். பாலுவுக்கு ஆதரவாக பிளக்ஸ் போர்டுகள் வைத்திருக்கும் மாமன்னர் மருதுபாண்டியர் சிலை அமைப்புக் குழுவினர் சிலரிடம் பேசினோம்.

‘‘எங்களுக்கு அரசியல் தெரியாது. நாங்கள் அறிந்து, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலுதான், ரயில்வே திட்டத்துக்காக முயற்சித்தார். அதுக்காக எங்கள் நன்றியைச் சொல்லியிருக்கிறோம்...’’ என்று மட்டும் சொன்னார்கள்.

‘‘மன்னார்குடிக்கு கிடைத்திருக்கும் இத்திட்டத்தால் வர்த்தகர்கள் மட்டுமல்ல... விவசாயிகளும் பயன்பெறுவார்கள். இந்தப் பகுதியில் விலைவாசி நிச்சயம் குறையும். அதனால், இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எங்கள் நன்றி’’ என்கிறார் மன்னார்குடி வணிகர் சங்கத் தலைவர் ராஜகோபாலன்.

‘இந்த உரிமைக் கொண்டாட்ட விவகாரம் முற்றி, எந்தகட்டத்திலும் திட்டத்துக்கு முட்டுக்கட்டை விழுந்துவிடக் கூடாது’& இதுதான் மன்னார்குடிவாசிகளின் இப்போதைய கவலை!



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

நசுக்கப்படும் போராட்டங்கள்:
தேர்தல் நேரத்தில் வெளிப்படும் இயல்பு!

Kalai%202.jpg



காலமுறை ஊதியம், பதவி உயர்வு, ஓய்வூதியம், உணவுப்பொருட்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரித்தல்’ போன்ற கோரிக்கைகளை முன்வைத்து, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தலைமையில், தமிழகத்தில் உள்ள சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கடந்த சில ஆண்டுகளாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முந்தைய ஆட்சியிலும் அவர்கள் போராடி வந்துள்ளனர்.

‘சத்துணவு ஊழியர்கள் பகுதிநேர ஊழியர்களாக நியமிக்கப்-பட்டவர்கள். அவர்களுக்கு முழுநேர ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை தரமுடியாது’ என்பது தமிழக அரசின் வாதம். அப்படி-யென்றால், அவர்களை பணிமூப்பின் அடிப்படையில் அரசுப்பதவிகளில் முன்னுரிமை அடிப்படையில் நியமிக்கலாமே! அது கூட நியாயமற்ற கோரிக்கையா?

அதை விடுங்கள். காய்கறி, விறகு போன்ற அன்றாட பயன்பாட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க அரசு ஒதுக்கும் நிதி நம்மை பதறச்செய்கிறது. இவ்வளவு குறைவான தொகை கொண்டு, எப்படி அவர்களால் இதுநாள்வரை குழந்தைகளுக்கு உணவு வழங்கமுடிந்தது? என்பது புரியாத புதிராக உள்ளது. இவ்வாறு கண்ணுக்கு புலப்படாத தொகை ஒதுக்கி வழங்கப்படும் உணவு எப்படி சத்துணவாகும்? அதற்கு வெத்துணவு என்றல்லா பெயரிட வேண்டும்! இந்த லட்சணத்தில் எம்.ஜி.ஆர். காலத்தில் வழங்கப்பட்ட சத்துணவை நாங்கள் மேலும் சத்துள்ள உணவாக மாற்றியுள்ளோம் என்று வேறு பெருமை பேசப்படுகிறது.

சத்துணவு ஊழியர்களை அழைத்துப் பேசுவதில் அரசுக்கு என்ன தயக்கம்? முதல்-வருடன்தான் பேசுவோம் என்று அவர்கள் பிடிவாதம் பிடித்ததாக சமூகநலத்துறை அமைச்சர் கூறியுள்ளார். அப்படியென்றால் முதல்வர் பேசியிருக்கலாமே! எம்.ஜி.ஆர். ஆட்சியின் போது, ஜனநாயக மாதர்சங்கத்தினர் தங்கச் சாலையில் இருந்து கோட்டைக்கு ஊர்வலம் வந்தபோது, அவர்களை யானைக்கவுனியில் இடைமறித்து, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். மனுவை பெற்றுக் கொண்டதோடு அங்கேயே பல கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு கையொப்பம் இட்டதை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

Kalai.jpgசத்துணவு ஊழியர்களிடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறும் ஊழலை சுட்டிக்காட்டியும், அவ்வூழியர்கள் தங்கள் பணிகளை சரிவர ஆற்றுவதில்லை என்று கூறியும் மக்களை அவர்களுக்கு எதிராக திருப்ப அரசு முயல்கிறது. ‘மக்கள் இவர்கள் போராட்டங்களை ஆதரிக்கவில்லை’ என்று கூறுகிறது. தமிழக அரசு ஊழியர் போராட்டத்தின் போது, அன்றைய முதல்வர் ஜெயலலிதா இதே வாதத்தைத்தான் முன்வைத்தார். எப்படிப்பார்த்தாலும், சத்துணவு ஊழியர்களில் ஒருசிலர் செய்யும் ஊழல் இவர்களது ஊழலுக்கு முன்பு கடலில் கரைத்த பெருங்காயம் போலதான்.

சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்து நடத்திய பல கட்டப்போராட்டங்கள், 30.08.2010 அன்று நடத்தவிருந்த முற்றுகைப் போராட்டம் உட்பட, அனைத்தும் ஜனநாயக நெறிமுறைக்கு உட்பட்ட சாத்வீகப் போராட்டங்கள்தான். கடைசி கட்ட முற்றுகைப் போராட்டத்தை அடக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் கடந்த ஜெயலலிதா ஆட்சியின் கடைசி கட்டத்தில் அரசு ஊழியர் மீது ஏவப்பட்ட சட்டத்திற்கு புறம்பான அடக்குமுறைகளை நினை-வூட்டுகின்றன. மறியல் போராட்ட களத்திற்கு வராமல் அவர்களை அரசு பார்த்துக் கொண்டது. புறப்பட்ட இடங்களிலும், வீடுகளிலும் அவர்கள் கைது செய்து தடுக்கப்பட்டனர். பேருந்துகளிலும், ரயில்வண்டிகளிலும் வந்தவர்கள் கீழிறக்கப்பட்டுள்ளனர். முன்னணி ஊழியர்கள் வேலைநீக்கம், இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் மீறி முதல்வரின் அறிக்கைகள் அமைந்துள்ளன. ‘சத்துணவு ஊழியர்கள் படையெனத் திரண்டு வருகிறார்கள். அவர்களை வழிநடத்தும் மார்க்-சிஸ்டுகள் ஒவ்வொரு போராட்டத்தையும் கலவரமாக மாற்றி விடுகிறார்கள். அதனால் மாவோயிஸ்டுகளின் வன்முறை தமிழகத்தில் நடைபெறும் ஆபத்து உள்ளது. ஏனெனில் இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் அராஜகத்தை தூண்டிவிட்டவர்களே, கம்யூனிஸ்டுகள்தான். மாவோயிஸ்டுகள் இயக்கத்தை தடை செய்ய மத்திய அரசு முயற்சித்த போது, அதை தடுத்து நிறுத்தியவர்கள் இவர்கள்தான். இந்திய மாவோயிஸ்டுகளின் மறுபதிப்பான நேபாள மாவோயிஸ்டுகளையும் இவர்கள் ஆதரிக்கிறார்கள்’ என்று பதற்றத்தில் நமது முதல்வர் வரலாற்றை திரித்து, உண்மைக்குப் புறம்பாக & அதுவும் தேவையற்ற ஒரு சூழலில் அறிக்கைவிட்டிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆங்கிலத்தில் ‘‘panicky reaction’்பார்கள். தமிழில் அதை ‘பயத்தில் எதிர்வினை ஆற்றல்’ எனலாம். அதுதான் இதுவா?

1968-ல் சி.பி.எம்.மிடமிருந்து பிரிந்த நக்சல்-பாரிகள்தான் இன்றைய மாவோயிஸ்டுகள். அதனால், அவர்கள் இவர்களைத் தூண்டினார்கள் என்றால், தி.மு.க.விலிருந்து பிரிந்த அ.தி.மு.க.வின் செயல்-பாடுகளுக்கு தி.மு.க.வினர் பொறுப்-பேற்பார்களா? இவ்விரு கட்சிகளும் எதிரும் புதிருமாகத்தானே இருக்கின்றனர். அதேபோன்று, மாவோயிஸ்டுகளும் மார்க்சிஸ்டுகளும் மேற்கு வங்கத்தில் மோதிக் கொண்டுதானே இருக்கிறார்கள். மாவோயிஸ்டு இயக்கத்தை தடை செய்வதால் பயன் இல்லை என்றும் அதை வெறும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையாக மட்டும் பார்ப்பதை விடுத்து, ஒரு சமூக, அரசியல் பிரச்னையாக மத்திய அரசு பார்க்கவேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரியதில் என்ன தவறு? அடுத்து, நேபாள மாவோயிஸ்டுகளை இந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைத்து முதல்வர் பேசியிருப்பது, ‘குதிரைக்கு குர்ரம் என்றால், யானைக்கு எர்ரம்’ என்பது போல் உள்ளது. நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக, சரியான மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில், பரந்துபட்ட எழுச்சியை உருவாக்கி, போராடி வருகிற நேபாள மாவோயிஸ்டுகளையும் மார்க்சீயத்திற்குப் புறம்பான இந்திய மாவோயிஸ்டுகளையும் ஒப்பீட்டளவில் பார்க்கலாமே ஒழிய, ஒருங்கிணைத்து பார்ப்பது சரியல்ல.

அந்த வகையில், சத்துணவு ஊழியர்கள் நடத்திவரும் போராட்ட வடிவங்கள் எல்லாம், முன்பு எதிர்கட்சியாக இருந்தபோது, தி.மு.க. நடத்திய போராட்ட வடிவங்கள்தானே. அவைகள் அனைத்தும், (மதுரையில் இந்திரா காந்திக்கு எதிராக நடத்திய கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் தவிர்த்து) அறவழியில் நடந்த போராட்டங்கள் தானே? இந்தியாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியினர் முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலை முழுமையாக ஏற்றுக் கொண்டவர்கள், வெறும் பெயரில் மட்டும் புரட்சியாளர்கள், பரம சாதுக்கள். இவர்கள் தலைமையில் நடக்கும் போராட்டத்தைக் கண்டு முதல்வர் அஞ்சலாமா?

பிறகு ஏன், இந்த அளவுக்கு அடக்குமுறைகளை பயன்படுத்த வேண்டும்! இதற்கு, ‘சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, இப்போராட்டங்கள் நடத்தப்-படுகின்றன’ என்ற முதல்வரின் கூற்றில் சிறிதளவு பதில் கிடைக்கிறது. தி.மு.க. அரசானாலும், ஜெ. தலைமையிலான அ.தி.மு.க. அரசானாலும் தங்களது 5 ஆண்டு பதவிக் காலத்தின் முடிவில், தங்களது தவறான செயல்பாடுகளால் மக்களிடம் இருந்து தனிமைப்பட்டு விடுகிறார்கள். கடைசி காலத்தில் அடுத்த தேர்தல் குறித்த அச்சம் அவர்களை பீதி கொள்ளச் செய்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். யார் போராடினாலும் அவர்கள் தங்கள் ஆட்சியைக் கவிழ்த்து விடுவார்கள் என்ற பயம் இவர்களுக்கு இயற்கையாகவே வந்து விடுகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் போராடினால், முதல்வர் மதுவிலக்கை கொண்டுவருவேன் என்கிறார். சத்துணவு ஊழியர்கள் போராடினால், தனது ஆட்சியை கவிழ்க்கப் போகிறார்கள் என்கிறார். கோவை, திருச்சி கூட்டங்களில் ஜெயலலிதாவுக்கு திரண்ட கூட்டத்தைப் பார்த்து ஒருவேளை மிரண்டுவிட்டாரா?



__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

டாஸ்மாக் சரக்கில் புகையிலைச் சாறு!
கும்பகோணம் பயங்கரம்

Tasmac.jpg



தமிழக அரசு மதுவிலக்கை அறிவிக்க வேண்டும் என காந்தியவாதிகள் காத்திருக்கிறார்கள். அதேநேரம், ‘தமிழகத்தில் மேலும் 39 புதிய வகை மதுபானங்களை அறிமுகப்படுத்த தமிழக அரசு ஒப்புதல்’ என செய்தி வெளியாகி மதுவிலக்கு கோரும் காந்தியவாதிகளின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டிருக்கிறது.

Tasmac%201.jpgஇந்த நிலையில், கும்பகோணத்திலிருந்து நமது காதில் ஒரு குண்டு வந்து விழுந்தது.

‘‘கும்பகோணம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானத்தில் புகையிலை சாறு கலப்படம் செய்து விற்கப்படுகிறது. இதனால், குடிமகன்களுக்கு பார்வையிழப்பு மற்றும் புற்றுநோய் உண்டாகும் அபாயம் அதிகரித்திருக்கிறது’’ என்பதுதான் அந்த கும்பகோண குண்டு!

கும்பகோணம் நகரத்தில் 23 டாஸ்மாக் கடை-களும், அதனைச் சுற்றியுள்ள திருவிடைமருதூர், பாபநாசம் பகுதிகள் என மொத்தம் 75-க்கும் அதிகமான கடைகளும் உள்ளன. இங்கே வாடிக்கையாகக் குடிக்கும் குடிமகன்கள்தான், ‘இப்பல்லாம் பாட்டிலைத் திறந்தா ஒரே புகையிலை நாத்தம் அடிக்குது’ என புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதுபற்றி ரகசியமாக விசாரித்த-போது திகிலூட்டும் செய்திகள் கிடைத்தன. ‘‘புகையிலை பாக்-கெட்டுகளை அதிகளவில் வாங்கி தண்ணீரில் ஊறவைத்து சாறு தயாரிக்கிறார்கள். பின்னர் ஒவ்வொரு பாட்டிலில் இருந்தும் மூன்றில் ஒரு பங்கு ‘ஒரிஜினல்’ சரக்கை எடுத்துவிட்டு அதற்கு இணையாக புகையிலை சாற்றை பாட்டிலில் கலந்து விடுகின்றனர்.

இதன் மூலம் குடிமகன்களுக்கு கலர் வித்தியாசமும் போதை வித்தியாசமும் தெரிவதில்லை. மதுபாட்டில்களில் சீல் வைக்கப்பட்ட மூடியைத் திறந்து புகையிலை சாறு கலந்துவிட்டு மீண்டும் அதுபோலவே மூடுவதற்காக பிரத்யேகமான மெஷின் பயன்படுத்துகின்றனர். இந்த மெஷினை 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர். இதற்காக பல தொழிலாளர்கள் ஈடுபடுத்-தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சம்பள-மாக பாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் வழங்கப்படுகிறதாம்.

தினமும் கடைக்கு சென்று ஒரே பிராண்ட் சரக்கு வாங்குபவர்களுக்கு கலப்பட சரக்கு கொடுப்பதில்லை. புதிதாக வருபவர்கள், கிராமப்புரத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்த்து கேள்வி கேட்காதவர்களுக்கு மட்டும்தான் கலப்பட சரக்கு விற்பனை செய்யப்படுகிறது’’ என விளக்கி முடித்தனர்.

Tasmac%202.jpg‘‘மதுபானத்தில் கலப்படம் நடப்பது பற்றி புகார் கூறியும் சுவாமிமலை போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக புகார் கொடுப்பவர்களையே போலீஸார் மிரட்டுகிறார்கள்’’ என குற்றம்சாட்டி சமீபத்தில் கும்பகோணம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன் தீக்குளிக்க முயன்ற சம்பவமும் நடந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க வெளிமாநில சரக்குகளும் அவ்வப்போது டாஸ்மாக் பார்களில் உலா வருகின்றன. கும்பகோணத்தை சேர்ந்த கட்சிப் பிரமுகர் ஒருவர் போலீஸாரின் முழு ஒத்துழைப்போடு அவ்வப்போது காரைக்காலுக்கு காரில் சென்று பெட்டி பெட்டியாக சரக்குகளை கொண்டுவந்து பல பார்களுக்கு சப்ளை செய்வதாகவும் டாஸ்மாக் பட்சிகள் காதுக்குள் கூவுகின்றன.

இப்படி கும்பகோணத்துக்கு வந்த சரக்குகளை உள்ளூர் போலீஸார் பிடித்து வழக்கு போடுவதும் பின்னர் வழக்கம்போல் சரக்குகள் கொண்டு வரப்படுவதும் தொடர்கதையாகத்தான் இருக்கிறது.

இதுபற்றி காரைக்கால் அருகில் வசிக்கும் சண்முகம் என்பவர் நம்மிடம் பேசுகையில், ‘‘தமிழக டாஸ்மாக் கடைகளில் 70, 80 ரூபாய்களுக்கு விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில்கள் காரைக்காலில் 23 முதல் 36 ரூபாய் வரை கிடைக்கின்றன. இதனை கடத்தி 100 கி.மீ. சுற்றுவட்டாரத்தில் எந்த தமிழக டாஸ்மாக் பார்களுக்கும் கொண்டு சென்று கொடுக்க பல இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சரக்கு கொண்டு செல்வது எல்லா சோதனை சாவடிக்கும் தெரியும். ‘கவனிப்புகள்’ பலமாக இருப்பதால் கண்காணிப்புகள் இல்லவே இல்லை. இப்படி கடத்திச் செல்லும்போது அதிக வேகத்தில் செல்வதால் ஆங்காங்கு சாலை விபத்துகளும் நடந்த வண்ணம் இருப்பதுதான் கொடுமை" என்றார் சண்முகம்.

இதுபற்றி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.பி.ஜி. சிவக்குமார் நம்மிடம், ‘‘மதுபானக் கடைகளால் வருமானம் பெருமளவில் வருவதால், டாஸ்மாக்கில் என்ன நடந்தாலும் அரசு கண்டுகொள்வதே இல்லை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இப்படி கலப்படம் செய்வதால் புற்றுநோய், கண்பார்வை இழப்பு, உடல் உறுப்புகள் செயலிழத்தல் போன்ற விபரீதங்கள் ஏற்படும் என்பதை அறிந்தும் சில ஊழியர்கள் பணத்துக்காக இதைச் செய்கிறார்கள். உடனே அவர்களைக் கண்டறிந்து கடுமையாக தண்டிக்கவேண்டும்’’ என்றார்.

டாஸ்மாக் கண்காணிப்பாளர் ஒருவரிடம் பேசியபோது தயவுசெய்து என்பெயரை குறிப்பிட வேண்டாம் என்றவர், ‘‘கடந்த 20 நாட்களுக்கு முன்புவரை கலப்பட சரக்கு விற்கப்-பட்டது உண்மைதான். அதுபோல டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு பிறகு பார்களில் காரைக்கால் சரக்கு விற்கப்படுவதாகவும் செய்தி வந்தது. இதற்கு போலீஸார்தான் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் தற்போது டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் கடுமையான உத்தர-விட்டிருக்கிறோம். கலப்பட சரக்கு தற்போது விற்கப்படவில்லை எனினும் அவ்வப்போது ‘திடீர் விசிட்’ செய்து சோதனை நடத்துகிறோம்’’ என்றார்.

பணம் வருமென்றால் ‘எதையும்’ அனுமதிக்குமா அரசு?




__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

13_09_2010_004_056-manuscript.jpg?w=300&h=148

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

12_09_2010_002_009-suya1.jpg?w=300&h=135

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

12_09_2010_011_022-edupidi.jpg?w=300&h=239

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

தமிழகத்தில் முழு அடைப்புக்கு தடை தொடர்கிறது: உச்ச நீதிமன்றம்

First Published : 14 Sep 2010 02:06:54 AM IST


புது தில்லி, செப். 13: தமிழகத்தில் முழு அடைப்பு (பந்த்) நடத்த விதிக்கப்பட்ட தடை தொடர்வதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை கூறியுள்ளது.

 

÷முன்னதாக சேது சமுத்திர திட்டம் தாமதத்தை எதிர்த்து தமிழகத்தில் ஆளும் திமுக, 2007 அக்டோபர் 1-ம் தேதி மாநிலம் தழுவிய பந்த் நடத்த அழைப்பு விடுத்தது. இதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் இந்த விஷயத்தில் தலையிட உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. இதனையடுத்து அதிமுக உச்ச நீதிமன்றத்தை நாடியது.

 

÷பந்த் நடத்துவது சட்டவிரோதம், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலை மீறும் செயல் என்று இது தொடர்பான மனுவில் அதிமுக கூறியிருந்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் பந்த் நடத்த 2007 செப்டம்பர் 30-ம் தேதி தடை விதித்தது. இதனையடுத்து திமுக தனது முழு அடைப்புப் போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றிக் கொண்டது.

 

÷இதனிடையே இது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி, மற்றும் ஏ.எஸ். கங்குலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் திங்கள்கிழமை கூறியுள்ளது: தமிழக பந்த் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தாக்கல் செய்துள்ள ரிட்மனு மீதான தீர்ப்பு வரும் வரை, உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் பந்த் நடத்த விதித்த தடை அமலில் இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

ஓராசிரியர் பள்ளிகளால் கல்வித் தரம் பாதிப்பு?

First Published : 14 Sep 2010 12:00:00 AM IST

13school.jpg
செய்யூர் தாலூகா, கரிக்கங்தாங்கலில் உள்ள ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி (கோப்பு படம்).
மதுராந்தகம், செப்.13:   காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் தாலூகாவில் ஆதிதிராவிட நலத்துறையின் தொடக்கப் பள்ளிகளில் ஒர் ஆசிரியர் பள்ளிகள் அதிகம் இயங்கி வருகின்றன.

 

÷மதுராந்தகம், செய்யூர் தாலுகாக்களில் உள்ள தொழுப்பேடு, தண்டரைபுச்சேரி, விளாங்காடு, அரசூர், துறையூர், கரிக்கங்தாங்கல், வேட்டூர், கோட்டாக்காடு, கடுகுப்பட்டு, தொன்னாடு, கயப்பாக்கம், நெட்ரம்பாக்கம், பூங்குணம், பொறையூர், கீழ்மருவத்தூர் ஆகிய 16 கிராமங்களில் ஆதிதிராவிட நலத்துறையின் தொடக்க நலப் பள்ளிகளில் தலைமை ஆசிரியரைக் கொண்டு ஒர் ஆசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் அதிகபட்சமாக 40 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

 

÷இப் பள்ளிகள் 3 ஆண்டுகளாக ஒரே ஆசிரியரைக் கொண்டுதான் இயங்கி வருகின்றன. பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஐந்து வகுப்பு மாணவர்களுக்கும் கண்காணித்து கல்வி கற்பிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி தரம் பாதிக்கப்படுகிறது.

 

÷மேலும்,உடல் நிலை பாதிக்கப்பட்டாலும்,அவசியமான விடுப்புகள் எடுக்க முடியாமல் இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். ஆசியர்களுக்கான பணியிடை பயிற்சி,அலுவலக பணி நிமித்தமாக செல்லும் போது மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியாத நிலை உள்ளது. இந்த நேரத்தில் மாணவர்களே கல்வி கற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மதுராந்தகம் தாலூகாவுக்குட்பட்ட பாத்தூர் தொடக்கப் பள்ளிக்கு அக்கிராம மக்கள் மாணவர்களை அனுப்ப மறுக்கும் போராட்டம் நடத்திய பின்னர் வேறு பள்ளியிலிருந்து மாற்றுப் பணியாக ஆசிரியரை தாற்காலிகமாக நியமித்தனர்.

 

÷தண்டரைபுச்சேரியில் தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்கக்கோரி அக்கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர் முன்பு போராட்டம் நடத்தியும் இதுவரை ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.

 

÷இந்த நிலைமை குறித்து அந்த துறை சார்ந்த வட்ட அளவிலான உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த காலிப்பணியிடங்களுக்காக விரைவில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். அப்பொழுது காலியாக உள்ள இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.

 

÷மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஆகவே,கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை உடனே நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் உடனடி கோரிக்கையாகும்


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2010_011_015-srirangam.jpg?w=300&h=215

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

14_09_2010_015_003-ccbi.jpg?w=175&h=300

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2010_004_056classroom.jpg?w=300&h=160
15_09_2010_010_004-koodi.jpg


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2010_015_010-koothandaramar.jpg?w=300&h=258
15_09_2010_015_015-dindukkal.jpg?w=300&h=110


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

15_09_2010_006_003-school1.jpg?w=300&h=140
15_09_2010_001_012-grn1.jpg?w=300&h=124


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

TN decision to allow practitioners of Indian medicine to prescribe allopathic drugs has sparked a serious debate

Govt has made quackery legal


Traditionally,the vital aspect of Indian systems of medicine is purity.With the recent notification to amend the Drugs and Cosmetics Act by the state health department,enabling Indian medicine practitioners to prescribe allopathic drugs,this vital ingredient will be lost forever.The state has legalised quackery.In July,the Madras High Court ordered that registered practitioners of Indian systems can practice surgery,obstetrics,ENT,ophthalmology and anaesthesia.The Indian Medical Association has gone on an appeal against the order.Now,we will have to fight another case against the state government for allowing them to prescribe these drugs.
It is unfair to even suggest that they can practise modern medicine after the little training they undergo at their colleges.Anatomy,physiology and biochemistry subjects they learn may be common to those of MBBS,but pharmacology is not.Each system has a specific syntax,a variant factor and a dynamic factor.A new syllabus may introduce them to the modern pharmacology paper,but medicine is not just science.At a medical college,a student learns in a hospital environment where only modern medicine is practised.They study,watch and debate on modern medicines for five years unlike a student of Indian medicine,who has a cursory approach to them for a few hours during their course.
Allowing such students to practise modern medicine is like asking a doctor to programme software or asking a goldsmith to cobble a shoe.When the government allowed practitioners of Indian medicine to work at government centres,it said it did so to bring in holistic care and treatment choice for patients.A patient visits the practitioner of Indian medicine with the hope and faith he has 
in the system.Is it not unfair to violate it 
and prescribe modern medicine 

Were trained,so we can practise



Nothing can grow without change.The Central Council of Indian Medicine,the autonomous body governing education in Indian systems of medicine,has realised this years ago.It had amended its Act and allowed students of Indian medicine to also study parts of modern medicine.It was brought into the curriculum and students were trained in it.The government has now allowed them to practise this.So,why is it being branded as quackery 
The government has not just appointed practitioners of Indian medicine to work in primary health centres,it has also enrolled us in many other projects to control and prevent blindness,TB,malaria and HIV/AIDS.In the cities,there are senior government officials and experts in allopathy.In the rural areas,a good majority of people come to practitioners of Indian medicine.We give children oral rehydration,we give folic acid and iron tablets to pregnant women and we advise people about mosquito control.We dont indent to do heart transplants or other marathon surgeries,but when there is an emergency and a doctor is trained and qualified to handle it,its unfair to stop him.No practitioner of Indian medicine gives up his/her stream of medicine.
The practitioner only includes allopathy in the prescription.I am glad the Madras high court and the state government have been supportive.
Sadly,most allopaths consider themselves to be elite.They have never been questioned when they prescribed Indian medicines.I know some allopathic medical practitioners who have been prescribing Indian medicines.Why have they not been branded as quacks Dont we see nurses,physiotherapists and even chemists doling out drugs 


As told to Pushpa Narayan



Pc0041400.jpg
V K Subburaj | HEALTH SECRETARY,TAMIL NADU
Pc0041600.jpg

Pc0041800.jpg
Dr TN Ravishankar,honourary secretary,Indian Medical Association
Pc0041700.jpg
Dr Hakim Syed Khaleefathullah,vice-president (Unani),Central Council Of Indian Medicine


__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

17_09_2010_015_010-st.jpg?w=123&h=30017_09_2010_016_013-karaikal.jpg?w=300&h=163

__________________


Guru

Status: Offline
Posts: 9863
Date:
Permalink  
 

Populism remains key thrust for TN economy

After 4 Years Of Sops And Doles,State Is Still In Welfare Mode Ahead Of Assembly Polls 

K Venkataramanan | TNN

Chennai: For the DMK regime in Tamil Nadu,which began its present tenure in May 2006 with a slew of sops,it has been four-and-a-half years of unbridled populism.Proud of its huge social safety net and projecting itself as a model welfare state,the government has been constantly balancing its development plans with its primary thrust on welfare schemes.
It is a largely unacknowledged fact that the state governments finances are under strain,and that its total liabilities are going to cross Rs one lakh crore at the end of the current fiscal.But then,it has to contend with the consequences of the economic slowdown of two years,which entailed higher public spending and a wider social security net.With just six months left for the assembly elections to be called,this surely is no time for the Karunanidhi government to reverse the trend of populism.
None,of course,would officially admit that any populism is at work in the states political economy or that its debt burden is high.Critics say the DMKs emphasis on concessions,freebies and doles are not merely making a dent in the financial system,but could be construed an affront to the peoples dignity.Since 1967,when the DMK came to power,there has been a concerted effort to depoliticise the masses,erase the critical faculty of the people and deprive them of their dignity, says Dr C Lakshmanan,assistant professor,Madras Institute of Development Studies (MIDS).
Arguing that there was no demand from any section of society for ration rice to be sold at one or two rupees,Lakshmanan said,The government should feel ashamed that there are people in such state of want that they need such cheap rice or somebody to feed their children at school. The government was creating a dependent psychology aimed at blunting the peoples rationality and questioning spirit.It wants to create a patron-client or master-slave relationship between the state and its people. Loan waivers are justified only for the deserving,but there are thousands of marginal farmers who didnt have access to loans in the first place to benefit from waivers, he argued and added that more sops could be expected closer to the polls.
However,state planning commission member and University of Madras associate professor of econometrics,Dr R Srinivasan,dismisses the idea that the governments recent announcements,ranging from higher pay for some sections to free motors for irrigation pumpsets,could be termed election sops.The hike for Tasmac employees was in response to an agitation,he noted.Free motors would help farmers with no access to surface water to draw ground water in an energy-efficient manner.
Further,he noted that the governments distribution of two acres of land to the poor had led to the creation of 1.20 lakh acres of fresh cultivable land.
The mid-day meal in school was considered populist once,but today,it is seen as an effective social intervention to ensure nutrition for children, Srinivasan said.He recalled such criticism when late K Kamaraj introduced noon meals in rural primary schools and late M G Ramachandran launched the nutritious meal scheme across the state.Research had established that these had a positive effect on attendance,he said.
The states finance managers justify the high revenue deficit in its final figures for last year and the estimates for this fiscal.
The deficit on its revenue account was a whopping Rs 5,019 crore by March 31,2010,as falling tax and registration collections and additional payout because of implementing pay commission recommendations played havoc with its year-beginning projections.And the current year has projected a revenue shortfall of Rs 3,396 crore,but the official explanation is that as the country is on recovery mode from the slowdown,the year had been declared one of fiscal adjustment by the Centre.
Rejecting the idea of a debt trap,finance minister K Anbazhagan said in his reply to the budget debate that the states interest payment was a manageable 12.12% of its projected revenue spending.
Global rating agency Fitch Ratings had a word of advice to the state government in July: Control untargeted subsidies and reduce power sector deficit to meet its medium term fiscal targets.

Pc0070700.jpg



__________________
« First  <  Page 4  >   Last »  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard