அன்னதானகூடம் ஸ்டாலின் திறந்தார்
சென்னை, ஜூன் 10:மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் திருக்கோயிலில் ரூ. 13 லட்சம் செலவில் கட்டப்பட்ட அன்னதான மண்டபத்தை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
.
முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வி, இவரது மகள் எழிலரசியும், அவரது கணவர் டாக்டர் ஜோதிமணி ஆகியோர் மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணியம்மன் கோயில் அருகே டாக்டர் ஜோதி மணியின் தந்தை கரந்தை. கப்பல் முருகேசன் செட்டியார், தாயார் ஜானகி அம்மாள் ஆகியோரது நினைவாக ரூ. 13 லட்சம் செலவில் அன்னதான மண்டபத்தை கட்டியுள்ளனர்.
இன்று காலை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் முன்னிலையில் அன்னதான மண்டபத்தையும், கல்வெட்டையும் திறந்து வைத்தார். முதலமைச்சரின் மனைவி தயாளு அம்மாள் குத்து விளக்கேற்றினார்.
இந்நிகழ்ச்சியில் சாந்தா ஸ்டாலின், செல்வி, மு.க. அழகிரி மகள் கயல்விழி, அவரது கணவர் வெங்கட், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மனைவி பிரியா, கலாநிதி மாறனின் மனைவி காவேரி மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்.
மேலும் எஸ்.வி.சேகர் எம்எல்ஏ, தென் சென்னை மாவட்ட திமுக செயலாளர் ஜே. அன்பழகன், 144வது வட்ட திமுக செயலாளரும், முண்டகக்கண்ணியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவருமான எல்.உதயகுமார், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் சம்பத், முதன்மைச் செயலாளர் முத்துச்சாமி, ஆணையாளர் (பொறுப்பு) காவேரி, ஆலய செயல் அலுவலர் த.மோகனசுந்தரம் மற்றும் அறங்காவலர்கள் வாசுதேவன், டில்லி, கிருஷ்ணவேணி, ராமநாதன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். புதிய அன்னதான மண்டபம் திறப்பு விழாவையொட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அமைச்சர் பேட்டி¦தொடர்ந்து அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:தமிழ் நாட்டில் 360 திருக்கோயில்களில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து திருக்கோயில்கள் வளாகத்திற் குள்ளேயே தற்போது அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன் அருகிலேயே தனியாக அன்னதான மண்டபங்களை உருவாக்கி தொடர்ந்து அன்னதானம் வழங்க திட்டமிட்டிருக்கிறோம். அந்த வகையில் டாக்டர் ஜோதிமணி எழிலரசி குடும்பத்தினர் முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கு ரூ. 13 லட்சம் செலவில் இந்த அன்னதான மண்டபத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இதனை துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார். அற நிலை யத் துறை சார்பில் தமிழகம் முழுவதும் பல திருக்கோயில்களில் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கு நடந்து வருகிறது.
தற்போது மத்திய அரசின் 13வது நிதிக்குழு கோயில் திருப்பணிக்காக தமிழகத்திற்கு ரூ. 100 கோடி ஒதுக்கியிருக்கிறது. இந்த தொகை முழுவதையும் கொண்டு இன்னும் ஏராளமான திருக்கோயில்களில் திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
பொது மக்களும் தாராளமாக நன்கொடை தந்தால் திருப்பணிகளுக்கும் இதுபோன்ற அன்னதான மண்டபங்கள் கட்டுவதற்கும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்..
முண்டகக்கண்ணி கோயிலில் முதல்வர் குடும்பத்தினர்
சென்னை, ஜுன்.10 (டிஎன்எஸ்) சென்னை மயிலாப்பூர் அருள்மிகு முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயிலில் முதல்வரின் துணைவியார் தயாளு அம்மாள் உட்பட அக்குடும்பத்தினர் அம்மனை தரிசனம் செய்தனர்.
முண்டகக்கண்ணி அம்மன் கோயில் எதிரே முதல்வரின் பேத்தி எழிலரசி மற்றும் அவரது கணவர் டாக்டர் ஜோதிமணி ஆகியோர் 13 லட்சம் ரூபாய் செலவில் அன்னதான மண்டபம் ஒன்றை கட்டியுள்ளனர். இந்த மண்டபத்தை துணை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். முதலமைச்சர் மு கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள் குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வரின் மனைவி சாந்தா ஸ்டாலின், முதலமைச்சரின் மகளும், ஏழிலரசியின் தாயாருமான செல்வி, மு க அழகிரியின் மகள் கயல்விழி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறனின் மனைவி பிரியா, கலாநிதி மாறனின் மனைவி காவேரி, முதல்வரின் மகன் மு க தமிழரசு குடும்பத்தினர் உட்பட முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அன்னதான திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஆணையர் சம்பத், முதன்மைச் செயலாளர் முத்துசாமி, முண்டகக்கண்ணி அம்மன் திருக்கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் மோகன சுந்தரம், ஆணையாளர் காவேரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.












குறிப்பாக, சி.ஐ.டி. காலனி வீட்டில் வேலை செய்யும் சரவணன், ராஜாத்தி அம்மாளுக்கு சொந்தமானதாகச் சொல்லப்படும் ‘வெஸ்ட்கேட் லாஜிஸ்டிக்ஸ்’ என்ற நிறுவனத்தில் பொறுப்பில் இருப்பதாக விசிட்டிங் கார்டு அடித்து வைத்திருக்கிறார். அந்த அடையாளத்துடன் பெரிய அதிகாரிகளை அணுகி சாதித்த காரியங்கள், அவரது பெயரில் இருக்கும் சுமார் 130 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பற்றிய அத்தனை விவரங்களும் கலைஞரிடம் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கொடுத்தவர் மிக முக்கியமான அதிகாரி. இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரித்து ஆதாரத்துடன் அறிக்கை தருமாறு, அவருக்கு உத்தரவிட்டிருந்ததே கலைஞர்தான்.
விமர்சனங்களை தடுக்கும் வகையில் தானே கவனமாகச் செயல்பட்டுவரும் நிலையில், இப்படி வில்லங்கத் தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, பல கோடிகள் சுருட்ட சரவணனை அனுமதித்த கோபம் கலைஞருக்கு. தன்னை மீறி நடந்த, தனக்குத் தெரியாமல் நடந்த சில விஷயங்களுக்காக இவ்வளவு கடுமையும், வெறுப்பும் காட்டுவது எந்த வகையில் நியாயம்? என்பது ராஜாத்தியம்மாளின் மனநிலை.
அப்படியானால் பெரியாரின் மத ஒழிப்பை தாங்கள் பின்பற்றவில்லையா?
ருகை தந்த



ஆனால், இ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்ற சிலரின் எதிர்ப்புக் குரல் கேட்கவே, ராதாபுரம் பேருந்து நிலையத்துக்கு காமராஜர் பெயரை சூட்டியதோடு, தியாகி சுடலைமுத்து நாடார், சிவாஜி முத்துக்குமார் ஆகியோரை விடுதலை செய்தும் உத்தரவிட்டிருக்கிறார் கலைஞர்.

![[dinakaran.jpg]](http://saintthomasfables.files.wordpress.com/2010/07/dinakaran.jpg?w=209)
![[dn_100507_e1_04_cni.jpg]](http://saintthomasfables.files.wordpress.com/2010/07/dn_100507_e1_04_cni.jpg?w=209)
![[DN_10-05-07_E1-06-04 CNI.jpg]](http://saintthomasfables.files.wordpress.com/2010/07/dn_10-05-07_e1-06-04cni.jpg?w=300)






















தனது மகன் பிரபு திருமணத்தை கலைஞர் முன்னிலையில் நடத்த வேண்டும் என்பது வீரபாண்டியாரின் ஆசை. முதல்வரின் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளோடு வீரபாண்டியாரின் இந்த ஆசையும் ஆகஸ்ட் 20-ம்தேதி நிறைவேறியிருக்கிறது. திருமண ஏற்பாடுகள் ஒரு புறம், அரசு விழாக்கள் ஒரு புறம், முதல்வர் வருகை சம்பந்தப்பட்ட பணிகள் ஒரு புறம் என்று கடந்த ஒரு மாதமாகவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டிருந்தார் வீரபாண்டியார். கட்-அவுட், பேனர்களில் முதல்வர், துணை முதல்வர் படம் போதும் என்று தொண்டர்களை கேட்டுக்கொண்டாலும், அவர்கள் யாரும் கேட்டதாகத் தெரியவில்லை. வரவேற்பு கட்-அவுட் முழுவதும் வீரபாண்டியாரும், மகன் ராஜா எம்.எல்.ஏ.வும் இருக்கிறார்கள்.
இதையடுத்து களத்தில் இறங்கிய வீரபாண்டியார் போக்குவரத்து நெருக்கடி இல்லாமல், பொதுக்கூட்டம் முடிந்து முதல்வர் ஜங்ஷன் செல்லவும் வசதியாக இருக்கும் என்பதால் மூன்று ரோடு பக்கமாக உள்ள ஜவஹர் மில் இடத்தை ‘டிக்’ செய்தார். சேலத்தின் எல்லா ஊர்களிலும் கிளைக் கழக கூட்டங்களை நடத்தச் சொல்லி ஒரு கிளைக்கு மூன்றுக்கும் குறையாத வண்டிகள் வர வேண்டும் என்று கட்டளை இட்டிருக்கிறார் வீரபாண்டியார்.
இது ராஜேந்திரனுக்கு ரொம்பவே டென்ஷனை உருவாக்க, தகுந்த நேரத்தை பார்த்துக் கொண்டிருந்தார் ராஜேந்திரன். இப்போது சேலத்தில் போஸ்டர் முதற்கொண்டு அழகிரிக்கு வீரபாண்டியார் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றி ஸ்டாலின் காதுக்கு கொண்டு போனதால் ஸ்டாலின் வராமல் கழன்றுகொண்டார்’’ என்கிறார்கள் அவர்கள்.
மேடையில் பேச விரும்பும் பேச்சாளர்கள் வரலாம் என்று அறிவிக்கப்பட்டும், கூட்டத்தில் இருந்து சிறு மூச்சு கூட வரவில்லை. காரணம், கலைஞர் முன்னிலையில் எதைப்பேசுவது? எப்படி பேசுவது, பாராட்டி பேசுவதா? தங்கள் பிரச்னைகளை எடுத்துப் பேசுவதா? என்று இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தனர்.


வில்லிவாக்கம் பகுதி மக்கள் மீது மட்டும் தி.மு.க.காரர்களுக்கு ஏன் இந்த திடீர் பாசம்? தொகுதியில் இருக்கும் தி.மு.க. தலைகளிடம் விசாரித்தோம்.
‘கடந்த மூன்று தேர்தல்களாக வில்லிவாக்கம் தொகுதியில் தி.மு.க. கூட்டணிதான் ஜெயித்து-வருகிறது. அந்த வகையில் இந்தத் தொகுதி தி.மு.க. தலைவர்கள் போட்டி போட பாதுகாப்பான தொகுதிதான். கடந்த தேர்தல் வரையில் இந்தத் தொகுதிதான் தமிழகத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக இருந்தது. ஆனால், தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் இந்தத் தொகுதியிலிருந்து சில ஏரியாக்களைப் பிரித்து, அம்பத்தூர் என்ற புதுத் தொகுதியை உருவாக்கிவிட்டனர். அதனால், கிட்டத்தட்ட ஒன்பது லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்களை உள்ளடக்கி இருந்த இந்தத் தொகுதியின் இப்போதைய வாக்களர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேர்தான். ஆக, குறைந்த அளவுள்ள வாக்காளர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்து, அவர்களை தங்கள் பக்கம் அரவணைத்துக் கொண்டுவிட்டால், எளிதாக ஜெயித்துவிடலாம் அல்லவா?
கொசுக்களும் மனிதர்களோடு போட்டிப்போட்டு வாழ்ந்துகிட்டு இருக்கு. புழல் ஏரியில் இருந்து நியூ ஆவடி ரோடு டேங்க்கிற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. அந்த குழாயின் இரண்டு பக்கமும் குடியிருக்கும் மக்கள் குழாய்க்குள்ளேயே எல்லாக் கடன்களையும் முடிக்கிறார்கள். சுகாதாரமில்லாமல் இருப்பதால், அந்த குழாய் பக்கத்தில் வாழும் பனிரெண்டாயிரம் குடும்பங்களை அகற்ற அரசு முயற்சித்து வருகிறது. அது பெரும் பிரச்னையாக இருக்கிறது. தொகுதிக்குள் ரவுடிகள் ராஜ்யம், கட்டுப்படுத்த முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. இப்படி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஆறுமாத இடைவெளிக்குள் தீர்த்து விட முடியுமா?’’ என்கிறார்கள் லோக்கல் சமூக ஆர்வலர்கள்.




காலை 9.50 மணிக்கு வெற்றி முரசு ஒலிக்க விஜயகாந்த் கார் திருமணப் பந்தலுக்குள் நுழைந்தது. தாம்பூலத் தட்டில் இருந்த மாங்கல்யத்தை எடுத்து மணமகன் கையில் கொடுத்தார் விஜயகாந்த். கட்டி முடித்ததும் ஆசீர்வதித்துவிட்டு, மணமக்களை கையோடு கூப்பிட்டு வந்து மண்டபத்துக்கு வெளியே பொதுக்கூட்ட மேடையில் உட்காரவைத்தார்.




