New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கீழடி அகழாய்வு - முன்னுரை


Guru

Status: Offline
Posts: 25177
Date:
கீழடி அகழாய்வு - முன்னுரை
Permalink  
 


 

மனித இனம் தோன்றிய காலம் முதல், அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம், பாதுகாப்பு ஆகியவற்றைப் பூர்த்தி செய்யவும், பின்னர் மேம்பட்ட தேவைகளான நோய் தீர்த்தல், போக்குவரத்து, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு போன்றவற்றிற்காகவும் தொடர்ச்சியாகப் பல கண்டுபிடிப்புகளை மேற்கொண்டது. இந்தக் கண்டுபிடிப்புகளும், அவற்றின் மூலம் உருவான புதிய அறிவும், அறிவியலின் வளர்ச்சிக்கு வித்திட்டன.

தமிழகத்தின் தொல்லியல் அகழாய்வுகள் கடந்த 40 ஆண்டுகளில் பல முக்கியமான தரவுகளை கண்டுள்ளது. கொடுமணல், பொருந்தல், அழகன்குளம், ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற பல களங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள், இங்கே 2000 ஆண்டுகளாக மக்கள் வாழ்த தொன்மைகள் பற்றி உலகிற்கு வெளிக் காட்டுகிறது. இவற்றில் கீழடி மீது ஒரு குருங்குழுவின் திட்டமிட்ட ஆரவாரமான பிரசாரத்தால் மிகுந்த ஊடக, அரசியல் மற்றும் பொதுமக்கள் மீது திணிக்கப் படுகிறது.

கீழடி அகழாய்வு பற்றிய பரப்புரைகள் தொல்லியல் அறிவியலை ஒட்டி, தொல்லியல் துறை அகழாய்வு அறிக்கையினை முழுமையாக ஆராய்ந்தும் தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு அகழாய்வு களங்களின் தரவுகளை ஒட்டி கூறாமல், வெற்று வெற்று மிகையாக மாறியுள்ளது என பன்னாட்டு தொல்லியல் அறிஞர்கள் காட்டி உள்ளனர் என்பதை விரிவாகக் காண்போம்.

கீழடி அகழாய்வு பற்றிய கருத்துக்களோடு சங்க இலக்கியத்தின் காலம், தமிழ் எழுத்து நடைமுறை பற்றியும், கீழடியில் நடந்த குடியேற்றம், மக்கள் தொகை, அன்றைய வாழ்க்கை முறை பற்றி பரவும் கருதுகோள்கள் ஒரு முழுமையான நுண்ணிய விமரசன நோக்கில் ஆராய்வோம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard