New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எழுத்து சீர் திருத்தம்


Guru

Status: Offline
Posts: 25159
Date:
எழுத்து சீர் திருத்தம்
Permalink  
 


 எழுத்து சீர் திருத்தம்

 

 

இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மொழியுரிமை மாநாட்டில் கலந்துகொண்ட மதுரை பாராளுமன்ற உறுப்பினர் திரு.சு.வெங்கடேசன் அவர்கள்,’பாஜக தலைவர் திரு.கே.அண்ணாமலை அவர்களே, நீங்கள் ஒவ்வொருமுறை உங்களின் பெயரை எழுதும்பொழுதும் கையெழுத்திடும்பொழுதும் வீரமாமுனிவர் என்ற கிறிஸ்துவருக்கும் தந்தை பெரியார் என்ற நாத்திகருக்கும் நன்றி சொல்லிவிட்டுத்தான் நீங்கள் கையெழுத்துப்போட வேண்டும். ஏனென்றால் கே என்பதில் வரும் இரட்டை சுழியை(’÷’) கொடுத்தவர் வீரமாமுனிவர். ணா என்ற எழுத்தையும் லை என்ற எழுத்தையும் கொடுத்தவர் பெரியார் என்று கதை விட்டிருக்கிறார் சு.வெங்கடேசன்.
சு.வெங்கடேசன் காவல் கோட்டம், வேள்பாரி போன்ற வரலாற்று நாவல்களை எழுதியதால் தமிழ் எழுத்தின் வரலாறு நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் அரசியல் பிழைப்புக்காக தமிழ் எழுத்தின் வரலாற்றை எப்படியெல்லாம் மறைத்து மக்களை முட்டாளாக்குகிறார் என்பது அவரது பேச்சு உறுதிபடுத்தியுள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்காக வேறொரு கட்சியிடம் இருந்து 25 கோடி வாங்கியதன் நன்றிக்காக வரலாற்றை மறைப்பது என்பது தமிழுக்கு - தமிழருக்கு செய்யும் துரோகம். அதை தெரிந்தே சு.வெங்கடேசன் செய்திருக்கிறார்.
’ இரட்டைச் சுழி' எழுத்தை கண்டிபிடித்தவர் அல்லது அதை தமிழுக்கு முதலில் கொண்டுவந்தவர் வீரமாமுனிவர் அல்ல என்று எப்போதோ நிறுவப்பட்டுவிட்டது. அவ்வெழுத்து ஏற்கனவே தமிழ் எழுத்தில் தமிழர்கள் எழுத தொடங்கிவிட்டனர்.
மதுரைச்சார்ந்தவர் சு.வெங்கடேசன். அந்த மதுரையிலேயே இதற்கான ஆதாரம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ளது. அதைப் பற்றி தொல்லியல் அறிஞர், முனைவர் இரா. நாகசாமி அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்.
உயிர்மெய்யெழுத்தில் ‘ஏ’, ‘ஓ’ வருமிடங்களில் இப்பொழுதும் இர்ட்டைக் கொம்பு ’ே’ போடுகிறோம். பண்டைய கல்வெட்டுக்களில் ஒற்றைக்கொம்புதான் உள்ளது. தொல்காப்பியத்தின்படி எகர, ஒகர குறிலையும், நெடிலையும் வேறுபடுத்திக்காட்ட குறிலுக்குப் புள்ளியிட வேண்டும் என்பதே மரபு. ‘எகர ஒகரத் தியற்கையும் அற்றே’ என்பதால் அது புலப்படும். சில கல்வெட்டுக்களில் குறிலுக்குப் புள்ளியும், நெடிலுக்குக் கோடும் போட்டுள்ளனர். ஆயினும் பெரும்பாலான கல்வெட்டுக்களில் வேறுபாடே இல்லை. இரண்டுக்கும் ஒரு கொம்புதான் இட்டுள்ளனர். மொழி தெரிந்தவர்தான் புரிந்துகொள்ள முடியும். கி.பி.18ஆம் நூற்றாண்டில் தமிழகம் வந்த ‘பெர்சி’ பாதிரியார் இந்த தகவலைத் தருவதோடு, புதியதாகத் தமிழ் கற்பவர்கள், இந்த வேறுபாட்டை அறிந்துகொள்வது கடினமாக இருக்கிறது என்று குறிலுக்கு ஒரு கொம்பும், நெடிலுக்கு இருகொம்புகளும் இட்டு, வேறுபடுத்தியதாக ஒரு குறிப்புண்டு. இங்குள்ள மங்கம்மாள் காலத்திய ஓவியத்தில் ‘மீனாக்ஷி தேவி அக்னிதேவனோடு யுத்தம் செய்தது’ என்பது போன்ற விளக்கங்கள் எழுதியுள்ள இடத்து, நெடில் வருகின்ற இடங்களில் சில இடங்களில் ஒற்றைக் கொம்புகளும், சில இடங்களில் இரட்டைக் கொம்புகளும் இட்டு எழுதியிருப்பதை இங்கே காணலாம். ஒன்று போலவே எழுதாமல், ஒரு இடத்தில் எழுதியும், மறு இடத்தில் எழுதாமலும் விட்டுள்ளது இந்த மரபு இன்னும் வேரூன்றவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றது. ஆயினும், வந்துவிட்டது என்பது இந் ஓவிய விளக்கங்களால் ஐயம்திரிபறத் தெளியக்கிடக்கின்றது. ராணிமங்கம்மாள் 1706இல் இறந்துவிட்டாள். பெர்சி பாதிரியார் தமிழ்நாட்டுக்கு வந்த து 1710 என்று ஆதாரப்பூர்வமாக அறியப்பட்டுள்ளது. 1700இலேயே தீட்டப்பட்ட இந்த ஓவியத்தில் இரட்டைக் கொம்புகள் போடப்பட்டுள்ளது. பெர்சி பாதிரியார் தமிழகத்தில் காலடி வைப்பதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே இங்கிருப்பது நோக்கத்தக்கது. ஆதலின் இப்பெரியார், இரட்டைக் கொம்புகளைப் புதிதாகக் கண்டுபிடித்தார் என்று சிலர் குறித்துள்ளது இப்போது மாற்றம் பெற வேண்டும். ஆயினும் குறிலுக்கு ஒரு கொம்பும், நெடிலுக்கு இரட்டைக் கொம்புகளும் இட்டு, ஒரே சீராக எழுதப்படாமல் இருந்திருக்கின்றது. பெர்சி பாதிரியார் வந்தபோது சீராக இரட்டைக் கொன்பையே போட்டால் தெளிவு வரும் என்று மதுரையில் அவர் கற்றிருக்க வேண்டும். (நூல் : ஓவியப் பாவை, பக்.134-135)
தமிழக தொல்லியல் துறை வெளியிட்ட இந்த நூல் 1979லேயே வெளிவந்துவிட்டது. இர்ண்டாம் பதிப்பு 2010ல் வெளிவந்திருக்கிறது. வரலாற்று நாவல்கள் எழுதும்போது இவற்றையெல்லாம் வாசித்திருப்பார். ஆனாலும் இரட்டை சுழி கொம்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஓவியங்களிலேயே காணக்கிடைக்கிறபோது, மதுரைவாசியான சு.வெங்கடேசன் அவர்களுக்கு மட்டும் தெரியாமல் போனது வியப்புதான். அதனால் இரட்டை சுழி எழுத்திற்காக வீரமாமுனிவருக்கு அண்ணாமலை அவர்கள் நன்றி சொல்லவேண்டியதில்லை.
ணா, லை போன்றவை ஈவெரா கொண்டுவந்த சீர்திருத்தம் என்கிறார் சு.வெங்கடேசன். ஈவெரா சொல்வதற்கு முன்னமே, ஏன் அதைப் பற்றி ஈவெரா யோசிக்காத காலகட்டத்தில் இவ்வெழுத்துக்களைப் பற்றிய விவாதம் தொடங்கிவிட்டது.
சில கல்வெட்டுகளில் இந்த ’கால்’ எழுத்து குறிப்பிடப்பட்டாலும் அவ்வெழுத்துப் பற்றிய விவாதம் விடுதலைப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்கள் நடத்திவந்த ஞானபானு இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் தமிழில் எழுத்துக்குறை என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை ஞானபானு இதழில் ஜூலை 1915ல் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அதே ஞானபானு இதழில் செப்டம்பர் 1915ல் தமிழ் எழுத்துக்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார்.
அதில் ‘...இப்புலவரிற் சிலர் றா, றோ, னா, னோ என்று எழுப்பட்டுத் தமிழ்ப் பாஷையைக் கற்றாளுதலை இன்னும் எளிதாக்க வெண்டுமென்று விரும்புகின்றனர்’ என்று குறிப்பிடுகிறார். அதாவது சில எழுத்துக்களுக்கு கீழ்வரும் விலங்கு என்பதை அகற்றிவிட்டு கால் எழுத்து எழுதலாம் என்று புலவர்கள் விரும்புகின்றனர் என்கிறார். அதனால் எழுத்தின் விலங்கொடித்தவர் ஈவெரா அல்ல, தமிழ்ப் புலவர்களே என்பதை சு.வெங்கடேசன் புரிந்துகொள்ள வேண்டும்.
அண்ணாமலை என்ற பெயரில் வரும் லை என்ற எழுத்தையும் அறிமுகப்படுத்தியவர் ஈவெரா அல்ல. பல்லவர் கால செப்பேடுகளில் ஏற்கனவே இருந்தவைதான். பல்லவ அரசனான சிம்மவர்மன் தன்னுடைய ஆட்சியின் ஆறாம் ஆண்டில் அளித்த தானத்தைத் தெரிவிக்கும் சாசனம் ஐந்து செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இது பள்ளன் கோயில் செப்பேடு என்று அழைக்கப்படுகிறது. அதில் ஐந்து விதமான லை எழுத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒன்று அண்ணாமலை என்ற பெயரில் வரும் லை ஆகும். (நூல் : பல்லவர் செப்பேடுகள் முப்பது, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,)
தும்பிக்கையுள்ள எழுத்துகள் , கீழ்விலங்குகொண்ட எழுத்துக்களை மாற்ற வேண்டும் என்ற கருத்துடன் முருகப்பா செட்டியாரால் வெளியிடப்பட்ட குமரன் இதழில், ’தமிழ் எழுத்தில் திருத்தம்’ என்ற தலைப்பில் 4-9-1930ல் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. தும்பிக்கையுள்ள, கீழ்விலங்குகொண்ட எழுத்துகளுக்குப் பதிலாக ணா, லை போன்ற எழுத்துக்களை குறிப்பிட்டு இப்படி சீர்திருத்தினால் பயில்பவருக்கு வெகு சௌகரியமாக இருக்கும் என்று அக்கட்டுரை எழுதியிருக்கிறது.
இந்தக் கட்டுரையில் கடைசியில் குறிப்பு என்று குமரன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதுதான் வெகுமுக்கியம்.
குறிப்பு – இந்தத் திருத்தங்களில் உயிர்மெய் எழுத்துக்களின் குறிப்பிடப்பட்டிருக்கும் திருத்தங்களுடன் பரிஷார்த்தமாக இவ்வாரக் குமரன் மூன்றாம் பக்க கட்டுரை வெளியிடப்படுகிறது. அதைப்பற்றிய நேயர்களின் அபிப்பிராயத்தைத் தெரிவிக்கும்படி வேண்டுகிறோம். பத்திரிகைகளிலும் நாவல்களிலும் முதலில் இம்முறைகள் கையாளப்படுமானால் விரைவில் வழக்கத்திற்கு வந்துவிடக்கூடும். அதுபோலவே மூன்றாம் பக்க கட்டுரை இந்த எழுத்துச் சீர்திருத்தத்துடன் வெளிவந்துள்ளது. அதனால் இது ஈவெராவால் கொண்டுவரப்பட்ட அல்லது அறிமுகப்படுத்தப்பட்ட எழுத்து அல்ல.
1933 - திசம்பர் 23, 24 நாட்களில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழன்பர் மாநாட்டில் 15 வது தீர்மானமாக எழுத்துச் சீர்திருத்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
1933 -ல் தமிழ் வரிவடிவ ஆராய்ச்சி என்ற தலைப்பில் சிங்கப்பூர்த் தமிழ் அறிஞர் சு. சி. சுப்பையா “சிங்கப்பூர் முன்னேற்றம்” இதழில் தொடர் கட்டுரை எழுதினார். இதற்குப் பிறகுதான் 1935ல் ஈவெரா அவர்கள் தன்னுடைய பத்திரிகையில் ஏற்கனவே குமரன் இதழில் வெளிவந்த எழுத்துக்களையும் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த அய், அவ் போன்ற எழுத்துக்களையும் எழுதி எழுத்துச் சிக்கனத்திற்காக பயன்படுத்தி வருகிறார்.
1941 - சனவரி 18, 19 நாட்களில் மதுரையில் நடைபெற்ற “தமிழ் இலக்கிய மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1948 - பிப்ரவரி 14, 15 நாட்களில் சென்னையில் நடைபெற்ற “அகிலத் தமிழர் மாநாட்டில்” எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் எழுத்துச் சீர்திருத்தக் குழுவும் அமைக்கப்பட்டது.
1950 -ல் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராக இருந்தபொழுது எழுத்துச் சீர்திருத்தக் குழுவை அமைத்தார். உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் நடந்த ஒவ்வொரு மாநாட்டிலும் எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றன இப்படி பலருடைய முயற்சியும் தொடர்ந்து நடைபெற்றுவந்த்து.
ஈவெராவின் நூற்றாண்டு விழாவின்போது (1978) ஈவெரா பயன்படுத்தி வந்த எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்கும் விதமாக அரசு ஆணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில்கூட ஈவெரா அறிமுகப்படுத்திய அல்லது கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம் என்று இல்லாமல் ஈவெரா ’மேற்கொண்ட தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்’ என்றுதான் அந்த அரசாணை 19-10-1978ல் வெளிவந்தது. பின்பு அந்த அரசாணையிலும் (15-2-1979) திருத்தம் கொண்டுவந்து ஐ, ஔ போன்றவை கைவிடப்படவேண்டியதில்லை என அரசு இப்போது கருதுகிறது என்று திருத்தியது. ஆகவே ஈவெராவுக்கும் அண்ணாமலை நன்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இரட்டை சுழி எழுத்து மற்றும், ணா, லை எழுத்துகள் பல்வேறு காலகட்டங்களில் சீர்திருத்தம் பெற்று பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. தமிழர்களின் வரலாற்றை - பங்களிப்பை மறைப்பதில் பிறமொழியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியாகத்தான் தமிழர்கள் கண்டுபிடித்து பயன்படுத்திய எழுத்துக்களை வீரமாமுனிவர், ஈவெரா ஆகியோர் கண்டுபிடித்தனர் என்று வரலாற்றை திரித்து பரப்பி வருகிறார் கம்யூனிஸ்டான சு.வெங்கடேசன்அவர்கள்.
சு.வெங்கடேசன் என்று எழுதுவதற்கும் கையெழுத்து போடுவதற்கும் தெலுங்கரான சு.வெங்கடேசன்தான் முதலில் தமிழர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
ம.வெங்கடேசன்
எழுத்தாளர்
(இக்கட்டுரைக்கான பெரும்பாலான தரவுகள் பழங்காசு சீனிவாசன் அவர்களின் பாரதி ஆய்வு நூலகத்திலிருந்து பெறப்பட்டது.)
Ezuththu%207.jpg

Ezuththu%206.jpg

Ezuththu%205.jpg

Ezuththu%204.jpg

Ezuththu%203.jpg

Ezuththu%202.jpg

Ezuththu%201.jpg

Pallan%20Koil%20seppedu.jpg
 


__________________


Guru

Status: Offline
Posts: 25159
Date:
Permalink  
 

 
EVR%20ezuththu.jpg
விடுதலை ஞாயிறு மலரில் (20-1-2024) கி.தளபதி என்பவர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் யாரால்? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் எழுதுகிறார் :-

”1936ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரையின் தொகுப்பை “மொழி – எழுத்து” என்ற தலைப்பில் குடிஅரசு பதிப்பகம் 1948இல் வெளியிட்டுள்ளது. மேற்படி உரையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தே நான் இதை கவனித்து வந்திருக்கிறேன் என்று குறிப்பிடுகிறார். அதாவது இதைப்பற்றிய சிந்தனை 1896 வாக்கிலேயே பெரியாருக்கு தோன்றியிருக்கிறது.”

என்று எழுதியிருக்கிறார். ஈவெரா பிறந்த ஆண்டு 1879. எழுத்துச் சீர்திருத்தம் 1896லேயே தோன்றியிருக்கிறது என்றால் அப்போது ஈவெராவுக்கு வயது 17. இந்த வயதில் ஈவெரா என்ன செய்துகொண்டிருந்தார் என்பதை சாமி சிதம்பரனார் எழுதிய ஈவெராவின் வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தாலே தெரிந்துகொள்ளலாம். அப்போது அவர் மைனராய் திரிந்துகொண்டிருந்தார் என்று சாமி சிதம்பரனார் எழுதியிருக்கிறார்.

இப்படித்தான் எவ்வித ஆதாரமும் இல்லாமல் யாரும் ஆய்வு செய்யமாட்டார்கள் என்ற மமதையில் தங்களுக்கு தோன்றியதை எல்லாம் எழுதி மக்களை முட்டாளாக்கி வருகின்றனர் திராவிட இயக்கத்தினர்.
Ezuththu%208.jpg


நெடிலுக்குரிய இரட்டைக் கொம்பு சுழி எழுத்து வீரமாமுனிவர் வருவதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் (கிபி.1700) மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஓவியத்தை விளக்கும் எழுத்துக்களில் காணப்படுகிறது.
 
1902 ல் திருக்களார் சுவாமிநாத உபாத்தியாயர் எனும் கள்ளர் குலத்தை சேர்ந்த தமிழ் ஆசிரியரின் "சைவமும் தமிழ் பாசையும்" என்ற நூலில் தமிழ் எழுத்து சீரமைப்பு பற்றி எழுதியுள்ளார்.
இதே நூலில்தான் அவர் 18 வகையான தமிழ்குடிகளை பட்டியலிட்டு இவர்களே தமிழர்கள் என்றும், இந்த குலப் பிரிவுகளுக்கும் ஆரிய வருணாசிரமம் சொல்லும் நான்கு வருணத்திற்கும் ஒட்டும் இல்லை உறவுமில்லை என்று மறுத்திருப்பார்.
ஆனா பாருங்க இந்த திராவிட மொழியறிஞர்கள் சிலர் தமிழ் எழுத்து சீர்திருத்தம் கண்டுபிடிச்சு கொண்டு வந்ததே இவர்தான், இவர் இல்லையெனில் கணினியில் தமிழை எவனுமோ டைப் செய்ய முடியாது என்று கதைவிடுவானுங்க பாருங்க....
ஆரணி பழநிதீபன், M.A., B.L.,
 
ணை, ளை, னை, ணா, றா, னா இவற்றை முதல் முதலில் எழுதிக் காட்டியது சொ.முருகப்பா என்கிற ஒரு தமிழ் இதழாசிரியர்.
அதன் பின்பே இந்தச் சீர்திருத்தத்தை முருகப்பாவிடமிருந்து காப்பி செய்து ஈவேரா தனது குடியரசிலும், விடுதலையிலும் எழுதத் தொடங்குகிறார். செல்வ வளம் மிக்கவரான ஈவேரா தொடர்ந்து இதழ் நடாத்துகிறார்.
ஆரம்பத்தில் இதனை எழுதிக்காட்டிய சொ. முருகப்பா வரலாற்றில் இன்று மறைக்கப்பட்டுள்ளார்.
1930-1931 இந்த இடைவெளியில்தான் சொ.முருகப்பா அந்தச் சீர்திருத்த முறைமையைத் தன்னுடைய #குமரன் இதழ்மூலம் கொண்டுவந்தார். ஆனால் ஈவேரா 1935 இன் பிறகுதான் இதனை அறிமுகப்படுத்துகிறார். ஈவேரா தான் எல்லாவற்றுக்கும் மூலம் என்று பெரியாரிஸ்டுகளால் செய்யப்படும் வரலாற்றுத் திரிபு எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
தமிழ் எழுத்துகள் திடீரென உருக்கொண்டவையல்ல. சமூக வளர்ச்சிப் போக்கில் இவ்வெழுத்துகள் தேவை கருதி உருமாறி வளர்ந்திருக்கின்றன. கற்பாறையிலும், அதன் பிறகு பனை ஓலையிலும் எழுதப்பட்ட எழுத்துகள் அதன் தேவைக் கேற்பவும், விரைவாக எழுதுவதற் கேற்பவும், ஓர் எழுத்துக்கும் பிரிதொரு எழுத்துக்குமிடையே ஒன்று போல கருதும் எழுத்து மயக்கம் ஏற்பட்டு விடாதபடியும் எழுத்துகளின் வடிவங்கள் உறுதி செய்யப்பட்டன.
இன்றைக்கு நம் பயன்பாட்டில் உள்ள தமிழ் எழுத்து வடிவங்கள் பல ஆயிரம் ஆண்டுகளின் கால வளர்ச்சியில் மக்கள் பயன்பாட்டுத் தேவைக்கேற்ப வளர்ந்த வரிவடிவங்களாகும்.
19ஆம் நூற்றாண்டில் அச்சு இயந்திரங்களின் வருகையாலும், இன்ன பிற காரணங்களாலும் எழுத்துச் சீர்திருத்தம் கோரி குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
1915 ஆம் ஆண்டில் பாரதியாருக்கும், வ.உ. சிதம்பரனாருக்கும் நடந்த கருத்துப் பரிமாற்றம் முதன்மையான ஒன்றாகும். அதே ஆண்டில் சுப்பிரமணிய சிவா நடத்திய ‘ஞான பானு’ ஏட்டில், ‘தமிழ் எழுத்துகள்’ என்ற தலைப்பில் வ.உ.சி. எழுதிய கட்டுரை ஒன்றில், இக்காலத்திலே (ஓணான் சுருட்டிய வால் போன்று உள்ள எழுத்துகள்) எழுதப்படும் எழுத்துகளுக்கு மாற்றாக றா, றோ, னா, னோ, என்று எழுத வேண்டும் என்று சிலர் கருதுவதாக குறிப்பிட்டுள்ளார்.
1930 இல் காரைக்குடியில் இருந்து வெளி வந்த ‘குமரன்’ இதழில் அதன் ஆசிரியர் திரு. முருகப்பா என்பவர் ணா, றா, னா, ணை, ளை, னை என்ற வரிவடிவங்களை பயன்படுத்தி கட்டுரையொன்றை எழுதி வாசகர்களின் கருத்தை கேட்டுள்ளார்.
இந்தக் கால கட்டத்தில் தான் குத்தூசி குருசாமி அவர்கள் முன்மொழிந்திட பெரியாரும் எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியதோடு, தனது ஏடுகளில் தமிழில் உள்ள சில எழுத்துகளை மாற்றம் செய்து வெளியிட்டார்.
பெரியார் வந்த பிறகு தான் தமிழ்நாட்டில் எழுத்து சீர்திருத்த சிந்தனை பிறந்தது என்று கூறுவது தவறானதாகும்.
பெரியார் தனது குடியரசு, விடுதலை ஏடுகளில் எழுதி வந்தவை எழுத்து குறைப்பே அன்றி எழுத்துச் சீர்திருத்தம் அல்ல, அதுவும் கூட தமிழின் பழைய எழுத்து வரிவடிவமேயன்றி புதியன அல்ல. இதற்கு கல்வெட்டு சான்றுகளும் உள்ளன.
கவிமணி தேசிக விநாயகர் நாஞ்சில் நாட்டு கல்வெட்டுகளை இதற்கு சான்றாக கூறியிருப்பதாக தனித் தமிழியக்க மூத்த அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு:
க், ங், ஞ், ட், த், ந், ப், ம், ய், ர், வ், ழ், ற், எனும் பதினான்கு மெய்களும் ஐகாரம் ஏறக் கை, ஙை, சை, என்றாயின.
ஐகார அடையாளமாக இரட்டைச்சுழி அமைக்கப்பட்டு வந்தன.
அப்படியே ண. ல. ள. ன, என்னும் நான்கு எழுத்துகளும் ணை, லை, ளை, னை என்று இரட்டைச்சுழி துணை எழுத்தோடு எழுதப்பட்டன.
இந்த நான்கு எழுத்துகளும் மற்றைய எழுத்துகளில் வேறுபட்டவை.
சுழிகளால் அமைந்தவை. ‘ண’ மூன்று சுழி.
‘ல’ ஒரு சுழி.
‘ள’ ஒரு சுழி.
‘ன’ இரண்டு சுழி.
இச்சுழி எழுத்துகளோடு இரண்டு சுழித்துணை எழுத்து ஒட்டும் போது,
(ணை) மூன்று சுழி ஐந்து சுழியாகவும்,
ஒரு சுழி (லை) மூன்று சுழியாகவும்,
ஒரு சுழி (ளை) மூன்று சுழியாகவும்,
இரண்டு சுழி (னை) மூன்று சுழியாகவும் மாறி விடும் அல்லவா?
இச்சுழிகளுள் ஒவ்வொன்றைக் குறைக்கும் வகையால் மேலே துதிக்கையாக்கினர்.
‘வ’ என்பது சுழியுடைய எழுத்தாக இருப்பினும், அதற்கு துதிக்கை இட்டால் லகரத்தோடு மயக்கம் ஏற்படுத்தும் என எண்ணி மற்றைப் பதின்மூன்று எழுத்துகள் போல் வைத்துக் கொண்டனர்.
‘கா’ முதலிய நெடில்களின் கால்கள் ண, ற, ன, என்பவற்றில் சுழியாக இருந்தன.
அவற்றை மற்ற எழுத்துகளின்படியே கால் இட்டு எழுதுதல் புதிதாகத் தோன்றவில்லை.
பெரிய சீர்திருத்தமாகவும் படாமல் இயல்பாக இருப்பவையாயின.
பெரியார் மேற்கண்ட பழைய வரி வடிவ எழுத்துகளோடு நில்லாது ஐ, ஒள, விலும் மாற்றம் செய்திட்டார். அவற்றை அய், அவ், என்றே எழுதினார்.
உயிர் எழுத்தை நீக்கி விட்டு உயிர்மெய்யை வைத்துக் கொள்வது குழப்பத்தையே தரும்.
அதாவது ‘ஐ’ என்ற உயிர் இல்லாமல் தலை, மலை, மனை முதலிய உயிர்மெய்கள் எவ்வாறு வரும்?
மேலும் கய், தய்யல், பிழய், மழய், என்று எழுதியதோடு,
வந்தான்= வன்தான்,
மாங்காய்= மான்காய்,
பஞ்சம்= பன்சம் – என்றெல்லாம் பெரியார் எழுதத் தொடங்கினார்.
அதுமட்டுமின்றி, நண்பரை Fரண்ட்ஸ் என்றும், வரிக்குதிரை என்பதை Zப்பிரா என்றும் ஆங்கில எழுத்துகளை தமிழோடு கலந்து துணிந்து எழுதிட்டார்.
எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் எழுத்துகளை அறவே அகற்றிவிட்டு முழுவதும் ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தினால் நான் மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறினார்.
1978இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்ட போது பாவலரேறு பெருஞ்சித்திரனார் சினங்கொண்டு “தமிழ்மொழியைப் பற்றி கவலைப்படாத நிலையில் தமிழ் எழுத்தைப்பற்றி மட்டும் ஏன் அக்கறை காட்ட வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
பாவாணரும் கூட 1937இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பெரியாருடன் தொடர்பு கொண்டு இறுதிவரை நெருங்கிப் பழகியும், அவர் ‘விடுதலை’ எழுத்தை மேற்கொள்ளும்படி சொல்லவோ, எழுதவோ இல்லை என்கிறார்.
தமிழ் ஆட்சி மொழியாகவும், கல்லூரிகளில் பயிற்று மொழியாகவும் வருவதை யாரெல்லாம் விரும்பவில்லையோ, யாரெல்லாம் ஆங்கிலமே தமிழர் வாழ்வில் தலைமை பெற்றுள்ள நிலை நீடிப்பதை விரும்புகிறார்களோ அவர்களெல்லாம் எழுத்துச் சீர்திருத்தம் பேசுவதாக சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் குறிப்பிடுவார்.
பெரியார் வழியில் வீரமணி, வ.செ.குழந்தைசாமி ஆகியோர் எழுத்துச் சீர்திருத்தம் பேசிக் கொண்டே ஆங்கில மொழிக்கு பல்லக்கு தூக்கி வருவது கண்கூடான உண்மையாகும்.
தமிழின் தாழ்வுற்ற நிலை போக்காது எழுத்துச் சீர்திருத்தம் எவர் பேசினாலும் அவர் தமிழுக்கு எதிரி என்பதை இனியாவது தமிழர்கள் உணர வேண்டும்.
தமிழ் சீர்திருத்த வரலாற்றைப் பார்த்தால் தெரியும் சாதியத்துக்கு எதிராக ஆரம்பத்தில் போராடிய எம்.சி. ராஜா மற்றும் இரட்டைமலை சீனிவாசன் முதலானவர்கள் இன்று வரலாற்றில் மறக்கடிக்கப்பட்டுள்ளனர். கூச்சலுடன் மேலெழுந்த ஈவேரா மட்டுமே சாதி எதிர்ப்பின் பிதாமகன் என்று முத்திரை குத்துகின்றனர்.
அதே போன்றுதான் இந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய இவர்களது திரிபுக் கருத்தும்.
ஈ.வே. ராமசாமி தமிழறிவு அற்ற சமூகச் சீர்திருத்தவாதி. அவரை அனைத்துக்குமான மேதாவி என்று வரையறுப்பது முட்டாள்த்தனம். போக்கிரித்தனம்.
இதற்குள் புரையோடிக்கிடக்கும் கேவலமான அரசியல் ஆதாயம் தமிழர்களைத் தற்குறிகளாக்கியபடிதான் இருக்கும். உண்மையான வரலாறுகள் இப்படித்தான் மறக்கடிக்கப்படும்.
இன்றைய இணைய காலத்தில் ராமசாமியை ஒரு (Icon) ஆக ஆக்கித் திரியும் மூடர்களைப் பற்றி கவலை இல்லை. ஆனால் தமிழ் வரலாற்றின் முன்னோடிகளை ஈவேரா என்ற ஒரேயொரு அரசியல் முன்மாதிரியைக் கொண்டு மறக்கடிப்பதுதான் கொடுமையானது.
நல்ல உதாரணம் ஒன்று உண்டு. அண்மையில் ஒரு நண்பர் பேசும்போது கூறினார் பண்டார வன்னியன் என்கிற தமிழரசனின் சிலையைப் பார்த்துச் சிங்களப் போலிஸ்காரர் ஒருவர் கூறினாராம் பண்டார வன்னியன் ஒரு சிங்கள அரசர் என்று. ஏனென்றால் "பண்டார" என்பது இங்குள்ள சிங்களவர்களின் பெயர்களில் காணக்கூடிய ஒன்று. அந்த போலிஸ்காரருக்கு பண்டார வன்னியன் ஒரு தமிழ்ப் போர் வீரன், வன்னியின் கடைசித் தமிழ் அரசன் என்ற வரலாறு தெரியாமல் போனதில் சிறிய பெயர் அடையாளமே குறுக்காக நின்றுள்ளது. அந்த போலிஸ்காரரைப் போலத்தான் ஈ.வே. ராமசாமியைப் பின்தொடர்ந்து கூச்சல் போடுபவர்களின் அறியாமையும்.
வரலாறு தொடர்ந்து திரிக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதற்கு எல்லைகள் என்பதே கிடையாது. இந்த பெரியாரிஸ்டுகள் திரித்த வரலாற்றைவிட, கேவலப்படுத்திய தமிழ் மரபைவிட வேறு யாருமே இங்கு செய்யமாட்டார்கள்.
ஈ.வே.ராமசாமியை ஒரு பொருட்படுத்த வேண்டிய தமிழறிஞர், எழுத்துச் சீர்திருத்தவாதி என்று சொல்லமுடியாது.
ஒரு சாதாரணமான சமூகசேவகர் அவ்வளவுதான். அதற்கும் அவர் மட்டுமே முன்னோடி இல்லை.
ந.பழநிதீபன், M.A., B.L.,


__________________


Guru

Status: Offline
Posts: 25159
Date:
Permalink  
 

 

 
 
'தமிழுக்கு இரட்டை சுழியை கொடுத்தவர் வீரமாமுனிவர்' என்று சு.வெங்கடேசன் பேசியுள்ளார். அதை மறுக்கும் விதமாக தமிழ் இந்து தளத்தில் பதில் அளித்துள்ளார் ம.வெங்கடேசன். "குறிலுக்கு ஒரு கொம்பும், நெடிலுக்கு இரட்டைக் கொம்புகளும் இட்டு, ஒரே சீராக எழுதப்படாமல் இருந்திருக்கின்றது. பெர்சி பாதிரியார் வந்தபோது சீராக இரட்டைக் கொன்பையே போட்டால் தெளிவு வரும் என்று மதுரையில் அவர் கற்றிருக்க வேண்டும். " என்று ஓவியப் பாவை நூலை மேற்கோள் காட்டுகிறார் ம.வெங்கடேசன்.
ம.வெங்கடேசன் சொல்வதே சரி. அதற்கு ஆதாரமாக வீரமாமுனிவர் (இயற்பெயர் ஜோசப் பெஸ்கி) எழுதிய நூல் முன்னுரையிலேயே தெளிவாக உள்ளது.
பெஸ்கி தன் Grammatica Latina Tamulica நூலில் (1740) லத்தீனில் எழுதப்பட்ட முன்னுரையில் தெளிவாகவே முன்னர் சில இடங்களில் இருந்த முறையை formalize செய்வதாக மட்டுமே சொல்கிறார்.
ம.வெங்கடேசன் சொல்வது போல, குறிலுக்கும் நெடிலுக்கும் வேறுபாடு காட்ட இந்த இரட்டைச் சுழி கொம்பு + மேல் கோடு முன்னரே இருந்துள்ளது. வீரமாமுனிவர் இதை சற்றே மாற்றி, மேல் கோடுக்கு பதிலாக சுழியில் ஒரு மாற்றம் செய்யலாம் என்கிறார். தொடர்ந்து வந்த அச்சு பரவலாக்கத்தில் பெஸ்கியின் யோசனை எடுத்தாளப்பட்டது
பெஸ்கியின் லத்தீன் முன்னுரை பகுதி:
Ezuththu%2010.jpg

 
'Eodem modo cum figura exprimens e breve et e longum , o-breve et o longum , esset eadem, ad distinctionem , longis nullo notatis signo, * brevibus superscribendum docuerunt anti-qu illud - Sic மெய் legitur mey longum, cum ெ nullo notetur signo , et est pasce : at QlduLj Regitur mey breve, et est veritas. Sic பொய் sine signo , legitஉர் poy longum.et est eundo: at பொய் legitur poy bர்eve , et est mendacium. Attamen nullibi signa...' (லத்தீன் மூலம் ஆர்க்கைவ் தளத்தில் கிடைக்கிறது)
இதன் ஆங்கில மொழியாக்கத்தை வேப்பேரி கிறிஸ்தவ அச்சகம் 1806/1831ல் வெளியிட்டது. கிறிஸ்தோபர் ஹென்ரி ஹோர்ஸ்ட் மொழியாக்கம்.
இணைத்துள்ள படங்களை பார்க்கலாம். இரட்டைச் சுழி எழுத்துமுறை முன்னரே இருப்பதை பெஸ்கியே சொல்கிறார். தன் பங்குக்கு சில மாற்றுமுறைகளை சொல்கிறார்
பெஸ்கி போன்ற பலர் இப்படி பல யோசனைகள் சொல்லியுள்ளனர். அச்சுப் பரவலாக்க காலகட்டத்தில் சில ஏற்றுக்கொள்ளப்பட்டு பரவலாயின. பெஸ்கி போன்றவர்களுக்கு இருபதாம் நூற்றாண்டு ஸ்பான்ஸர்கள் மூலம் பெயர் நிலைத்துள்ளது
(இருபதாம் நூற்றாண்டு எழுத்து சீரமைப்பு சர்ச்சை பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன். இன்னும் சுவாரசியமானது)
 
" எழுத்துச் சீர்திருத்தம் "
Viira%20peshi.jpg Ezuththu%2011.jpg
தமிழ் எழுத்துக்களின் சீர்திருத்தமுறைகளை உருவாக்கித் தந்தவர் வீரமாமுனிவர் என்பது பாதி ஏற்றுக்கொள்ளத்தக்கதே...
முற்காலத்தில் குறில், நெடில் எழுத்துக்கள் ஒரே மாதிரியாகத்தான் எழுதப்பட்டன.
ஒற்றைக்கொம்புதான் வழக்கத்தில் இருந்தன.
" தேடுதல் " என்ற சொல்
" தெடுதல் " என்றுதான் எழுதப்பட்டன..
நெடில் எழுத்துக்களை குறிக்க இரட்டைக் கொம்பு எழுத்தை அறிமுகம் செய்தவர் வீரமாமுனிவர். இச்செய்தி சரிதான்..
ஆனால்..
"ஆ" காரத்தை குறிக்க "ஆ " என்னும் எழுத்தைக் கொடுத்தவரும் வீரமாமுனிவர்தான் என்று ஒரு செய்தி சுற்றுகிறது.. இது தவறு.. " ஆ " என்னும் நெடில் " அர" என்னும் இரண்டு எழுத்துக்களால் தமிழர்கள் பயன்படுத்தினார்கள் என்பது மிகமிகத் தவறான ஒரு செய்தி..
" ஆ " என்னும் நெடில் எழுத்து வீரமாமுனிவர் கொடுக்கவில்லை..
வீரமாமுனிவர் காலத்துக்கு 800 ஆண்டுகளுக்கு முன்பே
"ஆ " என்னும் நெடில் எழுத்து தமிழர்களிடையே இருந்தது.
ஆடவல்லான், ஆடு, ஆழ்வார், என்னும் சொற்களில் " ஆ " என்னும் எழுத்தை கல்வெட்டுகளில் காணலாம்..
10 ஆம் நூற்றாண்டு.
தஞ்சை பெரியகோவில் கல்வெட்டில்
" ஆழ்வார் பராந்தகன் குந்தவை "....
" ஆ " என்னும் அ வுக்கு கீழ் சுழிக்கப்பட்ட நெடில் எழுத்தைக் காணலாம்.
அதாவது " ஆ" என்னும் நெடில் எழுத்து தமிழர்களின் பாரம்பரிய எழுத்துத்தான்.
இதை வீரமாமுனிவர் கொடுத்தார் என்பது வழக்கம்போல் அபிமானிகளின் கட்டுக்கதை.
அன்புடன்..
மா.மாரிராஜன்..


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard