New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அழகிய போராட்டம் -தரம்பால்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
அழகிய போராட்டம் -தரம்பால்
Permalink  
 


அழகிய போராட்டம் (பகுதி- 1)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அறிமுகம்

இந்திய மூல சிந்தனையாளரும் வரலாற்று ஆராய்ச்சியாளருமான ஸ்ரீ. தரம்பாலின் நூற்றாண்டு இது. நம்மிடையே வாழ்ந்து மறைந்த கடைசி காந்திய சிந்தனையாளர் இவர்.

உத்தரப் பிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கன்டாலா எனப்படும் சிறிய நகரத்தில் 1922 பிப். 19-இல் பிறந்தவர் தரம்பால்.  இளைஞர்களுக்கு மகாத்மா காந்தி விடுத்த அழைப்பை ஏற்று 1942-43ல் பட்டப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். அவர் 1948 ஆம் ஆண்டு இந்திய கூட்டுறவு சங்கத்தின் (Indian Cooperative Union) நிறுவன உறுப்பினராக இருந்தார்.

காந்தியடிகளின் சீடர்களுள் ஒருவரான மீரா பென்னுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அப்போது இந்திய பஞ்சாயத்து பரிஷத் மற்றும் தன்னார்வக் குழுக்களின் கிராமப் புனர் நிர்மாணப் பணிகளுக்கான அமைப்பில் (AVARD) 1958 முதல் 1964 வரை அவர் பொதுச்செயலாளராகப் பணியாற்றினார். காந்தியப் போராளியான ஜெயபிரகாஷ் நாராயணனுடனும் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.

2001இல் தேசிய பசுப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சிலில் (1990) இரு முறை உறுப்பினராக இருந்துள்ளார்.

தரம்பாலின் வாழ்நாள் சாதனை என்பது, பிரிட்டிஷ் காலனி ஆட்சிக்கு முந்தைய பாரதத்தின் கல்வி நிலை, கலை, அறிவிய, தொழில்நுட்ப சாதனைகள் தொடர்பாக, ஆங்கிலேயரின் ஆவணங்களைக் கொண்டே, காத்திரமான ஆய்வு முடிவுகளை நூல்களாக எழுதி வெளியிட்டதாகும். இவர் எழுதிய 1. Indian Science and Technology in the Eighteenth Century (1971), 2. Civil Disobedience and Indian Tradition (1971), 3. Panchayat Raj and India’s Polity (1962), 4.  The Madras Panchayat System: A General Assessment (1973), 5. The Beautiful Tree: Indigenous Indian Education in the Eighteenth Century (1983), 6. Understanding Gandhi (2003), 7. The British Origin of Cow-slaughter in India With Some British Documents on the Anti-Kine-Killing Movement 1880-1894 (2003) ஆகியவை முக்கியமான ஆராய்ச்சி நூல்களாகும்.

இவற்றில் சில மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளருமான திரு. பி.ஆர்.மகாதேவனால் அழகிய நதி (1), அழகிய போராட்டம் (2), அழகிய மரம் (5) தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அழகிய மரம், அழகிய நதி ஆகியவை கிழக்கு பதிப்பக வெளியீடாக வெளியாகி உள்ளன. தனது நூல்களுக்கு தரம்பால் எழுதிய  முன்னுரைகளின் தொகுப்பையும் ’அழகிய இந்தியா’ என்ற நூலாக கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பிறகே பாரதத்தில் கல்வி, அறிவியல், தொழில் வளர்ச்சி சாத்தியமானது என்ற கண்மூடித்தனமான வாதங்களுக்கு சரியான பதிலடி கொடுப்பவை தரம்பாலின் நூல்கள். பாரதத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்த அறிவியக்கத்தை அறுத்தெறிந்ததே ஆங்கிலேயரின் சாதனை என்பது தரம்பாலின் ஆய்வு முடிவு.

வாழ்வின் இறுதிப்பகுதியில் மஹாராஷ்டிரத்தின் சேவாகிராமத்தில் தங்கியிருந்த தரம்பால், 2006 அக். 24-இல் மறைந்தார். இந்த ஆண்டு, ஸ்ரீ. தரம்பாலின் நூற்றாண்டு கொண்டாடப்படுகிறது.

மொழிபெயர்ப்பாளர் பி.ஆர்.மகாதேவன்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த திரு. பி.ஆர்.மகாதேவன், 20 ஆண்டுகளுக்கு மேலாக இதழியல், பதிப்புத் துறையில் இயங்கி வருகிறார். கணையாழி, காலச்சுவடு, ஆனந்தவிகடன் ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தற்போது கிழக்கு பதிப்பகத்தில் 12 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.

1. தென்னாபிரிக்காவில் சத்யாகிரகம் (மகாத்மா காந்தி), 2. கத்தியின்றி ரத்தமின்றி (கிருஷ்ணம்மாள் – ஜெகந்நாதன்), 3. வேத கால பாரதம் (பாளா சாஸ்த்ரி ஹரிதாஸ்), 4. தற்செயல் பிரதமர்: மன்மோகன் சிங் (சஞ்சய் பாரு), 5. அழகிய மரம்: 18-ம் நூற்றாண்டு இந்தியாவில் பாரம்பரியக் கல்வி (தரம்பால்), 6. அழகிய நதி: 18-ம் நூற்றாண்டு இந்தியாவின் விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் (தரம்பால்), 7. பாகிஸ்தான் இந்தியப் பிரிவினை (டாக்டர் அம்பேத்கர்), 8. சிலை திருடன் (எஸ்.விஜயகுமார்), 9. வானமே எல்லை (கேப்டன் கோபிநாத்), 10. இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு (ராய் மாக்ஸம்) உள்ளிட்ட 15 நூல்களை இவர் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

காளையார் கோவில் ரதம் (சிறுகதைத் தொகுப்பு), 2. மறைக்கப்பட்ட பாரதம், 3. யார் வைத்த நெருப்பு (இலங்கைப் பிரச்னை), 4. சரஸ்வதி மேரி டீச்சர், 5. ஸ்வாமி அம்பேத்கர் (நாடகத் தொகுப்பு), 6. இந்து மதம்: நேற்று இன்று நாளை, 7. பாரதம்: நேற்று இன்று நாளை, 8. ஒரு விசுவாசமான கலகக்காரனின் வெளிவராத கடிதங்கள்- உள்ளிட்ட 13 நூல்களையும் இவர் எழுதி இருக்கிறார்.  ‘பொருள் புதிது’ இணையதளத்தின் ஆசிரியர் குழுவில் வழிகாட்டி வருகிறார்.

இங்கு தொடராக வெளியாக உள்ள  ‘அழகிய போராட்டம்’, இதுவரை தமிழில் வெளிவராத நூல். தரம்பாலின் Civil Disobedience and Indian Tradition (1971) நூலே இங்கு திரு. பி.ஆர்.மகாதேவனால் தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

$$$

நூலாசிரியர் உரை

1965ல், இந்தியா தொடர்பான பிரிட்டிஷாரின் 1819ம் நூற்றாண்டு ஆவணங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தபோது, 1874ல் நடைபெற்ற தக்காணக் கலவரம் பற்றிய சில தரவுகளைப் பார்க்க நேர்ந்தது. அஹமது நகர் மற்றும் புனேயில் இருந்த சில மாவட்டங்களில் நடந்த அந்தப் போராட்டத்தின்போது, சில கிராம சமூகங்கள் ஒத்துழையாமை மற்றும் பிற ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்தது பற்றி அந்த ஆவணம் குறிப்பிட்டிருந்தது. அந்தப் போராட்டம் முக்கியமாக வட்டிக்குப் பணம் கொடுத்தவர்களுக்கு எதிராகவும், அவர்களுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்தப் போராட்டங்களில் பின்பற்றப்பட்ட வழிமுறைகள் எல்லாமே சமீப காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவற்றைப் போலவே இருந்தன. இது தொடர்பாக மேலும் ஆராய்ந்து பார்த்தபோது இந்தியாவின் பல பகுதிகளில் இதுபோல பல ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்புப் போராட்டங்கள் நடந்திருப்பது தெரியவந்தது.

நான் இதை சற்றும் எதிர்பார்த்திருக்கவே இல்லை. இது என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. காந்தியடிகள் இவை பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்று அவருடைய கட்டுரைகள் சிலவற்றை மறு வாசிப்பு செய்தேன். இந்தக் காலகட்டம் வரை ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பு இயக்கமும் சமீப காலத்திய போராட்ட வடிவம் என்றும், காந்தியடிகளே அதை ஆரம்பித்துவைத்தவர் என்றும் நினைத்திருந்தேன். காந்தியடிகள் இந்தப் போராட்ட வழிமுறையைச் செழுமைப்படுத்தி கூர்மைப்படுத்திப் பயன்படுத்தினார் என்றாலும், இதை அவர் தொரோ, டால்ஸ்டாய், ரஷ்கின் போன்ற ஐரோப்பியரிடமிருந்துதான் பெற்றுக்கொண்டிருந்தார் என்றும் கருதினேன். ஆனால் காந்தியடிகளின்  ‘ஹிந்து ஸ்வராஜ்ஜியம்’ நூலை மீண்டும் படித்துப் பார்த்தபோது, காந்தியடிகள் இதுபற்றிச் சொல்லியிருக்கும் விஷயம் ஒன்றைப் பார்த்தேன்: இந்தியாவில் அமைதி வழியிலான போராட்டங்கள் வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் தேசம் முழுவதிலுமே இருந்து வந்துள்ளன. ஆட்சியாளர்களுடன் அதிருப்தி ஏற்பட்டால் ஒத்துழைக்க மறுப்பது இந்தியர்களின் குணமாக இருந்திருக்கிறது.

காந்தியடிகளுடன் நெருக்கமான நட்புறவு கொண்டிருந்த, அவரை நன்கு அறிந்திருந்த, ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றில் பங்கெடுத்திருந்த அவருடைய பல நண்பர்களுக்கு இந்தப் பத்தியை அனுப்பிவைத்தேன். இந்தச் செய்தியைப் படித்ததும் அவர்களும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். எனினும் அவர்களுக்கு ஆச்சரியத்தோடு ஒருவித சந்தேகமும் கூடவே எழுந்திருந்தது. இந்தியாவில் முன்னமே அமைதி முறையிலான போராட்டங்கள் இருந்திருப்பதாக காந்தியடிகள் சொல்லியிருப்பதை அவர்கள் பெரிதாக நம்பவில்லை. கடந்த கால இந்தியாவை உயர்வாகச் சொல்ல வேண்டும் என்ற காந்தியடிகளின் லட்சியவாத நோக்கமே இதில் வெளிப்படுகிறது; மற்றபடி ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம் போன்றவை இருந்திருப்பதற்கான ஆதாரமாக இதை எடுத்துக்கொள்ள முடியாது என்று அவர்கள் சொன்னார்கள்.

வரலாற்றுக்கு முந்தைய பன்னெடுங் காலத்திலிருந்தே இந்திய மக்கள் எல்லாருமே யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்களுக்கு முழுவதும் அடிபணிந்துதான் இருந்திருக்கிறார்கள் என்றே காந்தியடிகளின் நெருங்கிய நண்பர்கள் அனைவருமே சொன்னார்கள். அன்றைய மக்களுக்கு சமூகப் பிரச்னை, அரசியல் பிரச்னை போன்ற சாதாரண விஷயங்களில் அக்கறையே இருந்திருக்கவில்லை என்றே அவர்கள் சொன்னார்கள். காந்தியடிகளுக்கு மிக நெருக்கமாக இருந்து அவருடன் போராட்டங்களில் பங்குபெற்றவர்கள் மட்டுமல்ல, அவரை மறுதலித்து நின்றவர்களுமே கூட இந்த எண்ணங்களைத் தான் கொண்டிருந்தனர்.

இப்படியான சந்தேகங்கள், கேள்விகளுக்கான பதிலை மிக விரிவாக பல்வேறு ஆவணங்களை அலசிப் பார்த்து ஆதாரபூர்வமாகவே சொல்ல வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஆவணங்கள் அனைத்தும் 1966 வாக்கில் லண்டனில் இருந்த இந்தியா ஆஃபீஸ் லைப்ரரியின் வருவாய் மற்றும் சட்ட ஆவணங்களை ஆராய்ந்து அவற்றில் இருந்து எடுத்தவையே. இந்த அமைதிப் போராட்டங்கள் குறித்த முதல் தரவானது டாக்டர் சஷி பூஷன் சௌத்ரி எழுதிய  ‘சிவில் டிஸ்டர்பன்சஸ் ட்யூரிங் பிரிட்டிஷ் நூல் இன் இந்தியா: 1765 -1857′ என்ற நூலில் இருந்துதான் எனக்குக் கிடைத்தது.

மேற்கு வங்காள ஆவணக் காப்பகம், இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி, தில்லியில் இருக்கும் காந்தி சமாரக் சங்க்ராலயா போன்ற பல்வேறு அமைப்புகளின் பணியாளர்களுக்கு இந்த ஆய்வில் எனக்கு உதவி புரிந்தமைக்காக நன்றிகள் பல.

இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கும் ஆவணங்கள் எல்லாம் 1966லேயே சேகரிக்கப்பட்டுவிட்டன என்றாலும், அவற்றின் உள்ளீடுகளைப் புரிந்துகொண்டு முழுவடிவில் ஒருங்கிணைத்து முடிந்தது, காந்தி பீஸ் பவுண்டேஷன் வழங்கிய உதவிகளின் மூலம்தான். இந்தியா ஆஃபீஸ் லைப்ரரி மற்றும் இந்தியா ஆஃபீஸ் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் இருந்து இங்கு வெளியிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் எல்லாம் லண்டனில் இருக்கும்  ‘கன்ட்ரோலர் ஆஃப் ஹெர் மெஜஸ்டி’யின் அனுமதி பெற்றே வெளியிடப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தில் வெளியிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் மற்றும் அவை தொடர்பான விளக்கங்கள், புரிதல்கள் பற்றி பல நண்பர்கள் மிகுந்த அக்கறையுடன் ஆலோசனைகளும் விமர்சனங்களும் வழங்கியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பெர்னி ஹோரோவிட்ஸ், முஹம்மது ரஃபீக் கான், ராதாகிருஷ்ணா ஆகியோர் அதிக நேரம் செலவிட்டு அக்கறையுடன் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு விசேஷ நன்றிகள். இந்தப் புத்தகத்தின் தயாரிப்பில் உதவிய நரேந்திர கோயலுக்கும் நன்றிகள்.

பனாரஸில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் கல்கத்தாவில் இருந்த ஃபோர்ட் வில்லியம் பிரிட்டிஷ் மேலதிகாரிகளுக்கு எழுதிய கடிதங்கள், பெங்கால் பிரிட்டிஷ் அதிகாரிகள் லண்டனுக்கு அனுப்பிய கடிதங்கள் ஆகிய இந்த ஆவணங்கள் எல்லாம் நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைக்கிரமமாக இங்கு வெளியிடப்பட்டுள்ளன. பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்த சம்பவங்களை நன்கு புரிந்துகொள்ள உதவும் நோக்கில் அப்படியாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

மூல நூலில் இருந்த அதே உச்சரிப்பு, எழுத்துப் பிழைகளுடனே இந்த ஆவணங்கள் (ஆங்கிலத்தில்) அப்படியே வெளியிடப்பட்டுள்ளன. எனினும் இந்தப் பிழைகளினால் அர்த்தம் புரிந்துகொள்வதில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

 -தரம்பால்

ஜூலை, 1971.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அழகிய போராட்டம் (பகுதி- 2)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அணிந்துரை

காந்திக்கு முன்பான இந்தியாவில்

அஹிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கம்

-ஜெயபிரகாஷ் நாராயணன்-

இந்தியாவில் பழங்காலத்தில் இருந்தவர்கள்  ‘தன்னை அறிதலே மிக உயர்ந்த ஞானம்’ என்று கருதினார்கள். தன்னை அறிபவரை அனைத்தையும் அறிபவராக, அனைத்தையும் அடைபவராகக் கருதினர். தனிநபர்களுக்கு மட்டுமல்லாமல் இது தேசங்களுக்கும் பொருந்தும். தேசம் என்பதை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் வரையறுக்கலாம். அப்படி வரையறுப்பது எளிய விஷயம் ஒன்றும் அல்ல. எதுவாக இருந்தாலும் அதனுடைய ஆன்மாவானது வெளிப்புற அம்சங்களில் அல்ல. அந்த தேசத்தில் இருப்பவர்களின் மனதில் உள்ளார்ந்திருக்கும் உலகத்திலேயே இருக்கிறது. அந்த உள்ளார்ந்த அக உலகின் அம்சங்களில் மிக முக்கியமானது சுய அடையாளமே. ஒரு தேசத்தில் இருப்பவர்கள் தம்முடைய மற்றும் தம்முடைய முன்னோர்களின் சுய பிம்பமாக, அடையாளமாக எதைக் கருதுகிறார்களோ அதுவே மிகவும் முக்கியம்.

பிரிட்டிஷார் நம்மை ஆண்டபோது ஏகாதிபத்திய ஆட்சியின் தேவைகள், விருப்பு வெறுப்புகள் ஆகியவையே நம்மை வழிநடத்தின. லோகாயதம், நல்லொழுக்கம், அறிவு ஆகியவற்றில் நாம் எல்லோரும் மிகவும் கீழானவர்கள் என்று அவர்கள் நம்மைச் சித்தரித்தனர். இந்திய தேசத்தை இப்படியாகத் திட்டமிட்டு அவமதித்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று, தனது கலாச்சாரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றை அந்த அந்நியர்களால் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்பதுதான். எனவே, காலப்போக்கில் அரசியல் ஆதிக்கம் முழு வலிமை பெற்றதும் நாம் நம்மைப்பற்றி பிரிட்டிஷார் தீட்டிய இழிவான சித்திரமே நமது உண்மை உருவம் என்று ஏற்றுக்கொண்டுவிட்டோம். பிரிட்டிஷார் காட்டிய கண்ணாடியில் தெரிந்த நமது அவலமான முகமே நமது உண்மையான முகம் என்று நினைத்துவிட்டோம்.

சமஸ்கிருத இலக்கியம், இந்திய தத்துவம், கலை, அறிவியல் ஆகியவை பற்றி மேற்கத்திய அறிஞர்களில் சிலர் புகழ்ந்து சொன்ன விஷயங்கள் எதையுமே நமது சுதந்திரப் போராட்டத்துக்கு நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது கடந்த கால சாதனைகள் எல்லாம் மிகப் பெரிய அளவில் பூதாகரப்படுத்தப்பட்டு புதிதாக உருவாகி வந்த தேசிய மதிப்பீடுகளுக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்பட்டன.

சுதந்திரம் கிடைத்ததைத் தொடர்ந்து சில காலம் நீடித்த பெருமித மயக்கங்களைத் தொடர்ந்து தன்னைத் தானே இழிவுபடுத்திக்கொள்ளும் சுய இழிவு மனப்பான்மை ஆரம்பமானது. குறிப்பாக மேற்குலகக் கல்வி பெற்றவர்கள் இந்தப் போக்கை முன்னெடுத்துச் சென்றனர். நவீனமயமாக்கம், அறிவியல் சிந்தனை என ஏதாவது ஒரு வழியில் இந்திய அடையாளங்கள், அம்சங்கள் ஆகியவற்றை ஓரங்கட்டினர். இந்தப் போக்கு இன்றும் முடிவுக்கு வந்துவிடவில்லை. இந்திய சமுதாயத்தில் அல்லது வரலாற்றில் இருந்த தவறுகள், தீமைகள் – இவற்றை நாம் மூடி மறைத்துவிட வேண்டும் என்று நான் சொல்ல வரவில்லை. ஆனால் மாரில் அடித்துக்கொண்டு அழுதல், தன்னைத் தானே இழிவுபடுத்திக் கொள்ளுதல் போன்றவையெல்லாம் தேச நிர்மாணத்துக்குத் தேவையான மன உறுதியை, உந்துதலை ஒருபோதும் தரப் போவதில்லை. அடிமைத்தனமாக அந்நியர்களை நகலெடுப்பதும் எந்த வகையிலும் நமக்கு உதவப் போவதில்லை.

நம்முடைய இந்த துரதிர்ஷ்ட மனநிலைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நமது வரலாற்றைப் பற்றி, குறிப்பாக நமது முன்னோர்களின் சமூக, பொருளாதார, அரசியல் வாழ்க்கை குறித்த போதிய புரிதல் இல்லாததுதான். நமது முன்னோர்களின், பல வகைகளில் முக்கியமான குறைபாடு, வரலாறு குறித்த தெளிவான சிந்தனை இல்லாததும் வரலாற்றுத் தரவுகளை புராணங்கள் ஆக்கும் மனச்சாய்வு கொண்டிருந்ததும்தான். இதன் விளைவாக இந்தியாவிலும் பிற நாடுகளிலும் நவீன வரலாற்று ஆய்வுகள் பெருமளவுக்கு முன்னெடுக்கப்பட்ட நிலையிலும் நமது வரலாற்று அறிவானது மிகவும் மட்டுப்பட்டதாகவே இருக்கிறது. குறிப்பாக சமூக வரலாற்றுப் பிரிவில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம்.

அதோடு நமது கடந்த காலத்தில் ஏராளமான இடைவெளிகள், இருண்ட காலங்கள் பல இருக்கின்றன. அவை பற்றி நமக்குப் பெரிதாக எதுவுமே தெரியாது. அவற்றில் முக்கியமானது மொகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கும் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் வருகை, பிரிட்டிஷ் ஆட்சி அதிகாரம் ஆகியவற்றுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெளிவாகத் தெரியாது. அந்தக் காலகட்டம் உண்மையிலேயே அரசியல்ரீதியாக நாம் பிரிந்து சிதையத் தொடங்கியிருந்த காலகட்டம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், ஸ்ரீ தரம்பால் ஆய்வு செய்து தொகுத்து வெளியிட்டிருக்கும் படைப்புகள், அரசுக்கு எதிராக மகத்தான போராட்டத்தை முன்னெடுத்த எளிய மக்களைப் பற்றி நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. இரும்புக் கொல்லர்கள், மேஸ்திரிகள், ஜோலகிர்கள், ஹுஜம்கள், தர்சிகள், காகர்கள், பேரர்கள் என அனைத்துப் பாட்டாளி வகுப்பினரும் ஆட்சி அதிகாரம் எல்லை மீறிச் செல்வதாக உணர்ந்து கிளர்ந்து எழுந்துவிட்டனர் என்று 1810இல் பனாரஸில் இருந்த நீதிபதி குறிப்பிட்டிருப்பதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் இருந்த 500க்கு மேற்பட்ட சமஸ்தானங்களில் இருந்த மன்னர்கள் மேற்கொண்ட ஆட்சியைப் பற்றிச் சொல்லும்போது “இந்து அரசு என்பது சர்வாதிகாரம் மிகுந்தது. வானளாவிய அதிகாரம் கொண்டது. அதனுடைய மக்கள் அடிமைகளாக அடங்கி ஒடுங்கிக் கிடந்தனர்’ என்று பொதுவாகச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்நிய மற்றும் இந்திய ஆராய்ச்சியாளர்கள் பலர் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது நிலைமை முற்றிலும் வேறாக இருந்ததைப் பார்க்க முடியும். சில நேரங்களில் மக்கள் ஒன்றுதிரண்டு திறமையற்ற அரசரைப் பதவியிலிருந்து நீக்கியதும் கூட நடந்திருக்கிறது. ஆனால் அவையெல்லாம் ஏதோ லட்சியவாதப் புனைவுகள் என்றும், நடைமுறையில் அப்படி எல்லாம் இல்லை என்றும் சொல்பவர்களும் உண்டு.

இந்து சாஸ்திரங்களின் அடிப்படையில் பார்த்தால் அரசர் என்பவர் ஒருநாளும் சர்வ அதிகாரம் பெற்றவராக இருந்திருக்கவில்லை. தர்மத்துக்குக் கட்டுப்பட்டு அவர் ஆட்சி புரிய வேண்டி இருந்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் காலகாலமாக உருவாகிவந்த கடமைகள், பொறுப்புகள், சலுகைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தர்ம மதிப்பீடுகளை, சம்பந்தப்பட்ட யாரும் முறையாகப் பின்பற்றியிருக்கவில்லை. தர்ம சாஸ்திரங்களை மீறி நடந்த சர்வாதிகார மன்னர்கள் இது விதிவிலக்கு என்பது போலல்லாமல் அதுதான் வழிமுறை என்பதாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதுண்டு.

ஸ்ரீ தரம்பால் இந்த நூலில் முன்வைத்திருக்கும் விஷயங்கள் வேறுவிதமான உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றன. பனாரஸ், பாட்னா, சரூண், முர்ஷிதாபாத், பகல்பூர் போன்ற பகுதிகளில் வீடுகள் மற்றும் கடைவீதிகளை மூடி விதிக்கப்பட்ட புதிய வரிகளை எதிர்த்து மக்கள் முன்னெடுத்த ஒத்துழையாமை இயக்கம் பற்றிய தகவல்கள் அப்போதைய பிரிட்டிஷ் அதிகாரிகளின் ஆவணங்களில் இருந்து முன்வைக்கப்பட்டுள்ளன.

வருடத்தைக் கொஞ்சம் 110 – 120 வருடங்களுக்கு முன்னதாக மாற்றி, வரியின் பெயரை மாற்றி வேறுசில மேலோட்டமான மாற்றங்கள் செய்து கொண்டால் போதும். 1920கள், 1930களில் ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்களில் என்ன நடந்தனவோ அவை அப்படியே அந்த நூறு வருடங்களுக்கு முன்பாக நடந்திருக்கின்றன என்று ஸ்ரீ தரம்பால் சொன்னது முற்றிலும் சரியே. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பிரிட்டிஷ் ஆவணங்களில் இடம்பெற்றுள்ள விவரங்கள் சமகாலத்தில் இப்போது நடந்த நிகழ்வுகளுக்கு இணையாகவே இருக்கின்றன.

இந்த நூலில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கும் ஆவணங்களைப் பார்த்தால் இந்திய வரலாற்றில் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்பட்டவர்களுக்கும் இடையில் இரு தரப்பின் உரிமைகள் பொறுப்புகள் தொடர்பான ஒரு தெளிவான புரிதல் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது. எப்போதெல்லாம் இந்தப் பாரம்பரியமான வழிமுறைகளில் சர்வாதிகார ஆட்சியாளர்களால் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளனவோ அப்போதெல்லாம் குடிமக்கள் அமைதியான முறையில் ஒத்துழையாமை மூலமாகத் தமது எதிர்ப்பைப் பதிய வைத்துள்ளனர். எப்போதெல்லாம் அப்படியான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறதோ, ஆட்சியாளர்கள் அதை சட்டவிரோதமாக, கலகக்குரலாகவோ, அவிசுவாசம் என்றோ எதிர்த்திருக்கவில்லை. அந்த எதிர்ப்பை எந்த வழியிலாவது அடக்கிய ஆகவேண்டும் என்று நினைத்திருக்கவில்லை. அந்தப் போராட்டத்தை மிகவும் சரியான வழிமுறை என்று மதித்து பிரச்னைக்கு உடனடியாக, சுமுகமான தீர்வுக்கான முயற்சியை எடுத்திருக்கிறார்கள்.

இங்கு விவரிக்கப்பட்டிருக்கும் அமைதியான மக்கள் போராட்டமானது திடீரென்று முளைத்து விடவில்லை. நன்கு நிலைபெற்ற சமூக அரசியல் பாரம்பரியத்தில் அவற்றின் வேர்கள் கடந்த காலத்தில் அழுத்தமாக ஊன்றி இருந்திருக்க வேண்டும். இஸ்லாமியர்களின் மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சியானது பலகாலம் நீடித்திருந்த நிலையிலும், 19ஆம் நூற்றாண்டிலும் இந்த அமைதியான போராட்ட வழிமுறையானது நீடித்து வந்திருப்பதைப் பார்க்கும்போது இந்தப் பழம்பெரும் பாரம்பரியத்தின் வலிமையும் முக்கியத்துவமும் நன்கு புரிய வருகிறது.

இந்த அற்புதமான பழம்பெரும் போராட்ட வழிமுறையை பிரிட்டிஷார் எப்படி துல்லியமாகத் திட்டமிட்டு அழித்தார்கள் என்பதைப் பின்வரும் பக்கங்களில் ஸ்ரீ தரம்பால் வேதனையுடன் விவரிக்கிறார். பிரிட்டிஷார் இந்தியாவில் தனது ஆட்சி அதிகாரத்துக்கு மிகப் பெரிய தொடர்ச்சியான தடைக்கல்லாக இந்த வழிமுறையைப் பார்த்திருக்கிறார்கள்.  ‘அரசின் கவுரவத்தை காப்பது’,  ‘பொது சமூகத்தில் அமைதியை நிலைநாட்டுவது’, ’அரசாங்கத்தின் மீது மக்கள் சமூகம் வைத்திருக்க வேண்டிய மரியாதையை தக்கவைப்பது’ ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் பார்த்ததால் இப்படியான எதிர்ப்புகளுக்கு எந்த இடமும் தரக் கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள்.

இந்தப் போராட்டங்களைப் பார்த்து பிரிட்டிஷார் பெருமளவுக்கு பயந்தார்கள் என்று இதுதொடர்பாக ஸ்ரீ தரம்பால் சொல்வதை நான் முழு மனதுடன் அங்கீகரிக்கிறேன். மக்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அடங்கி ஒடுங்கி இருந்தால்தான் நமக்கு மிகவும் நல்லது என்று அவர்கள் நினைத்தார்கள். இந்தப் பாதுகாப்பு உணர்வை அடைவதற்காக அவர்கள் ராணுவ பலத்தையே நம்பினார்கள். பிரிட்டிஷாரின் இந்த அணுகுமுறையே நம் நாட்டினரின் ஆன்ம பலத்தை அழித்து ஒழித்தது.

1930ல் காங்கிரஸ் செயற்குழு சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டபோது பொருளாதாரம், அரசியல், கலாசாரம், ஆன்மிகம் நான்கு தளங்களிலும் பிரிட்டிஷ் ஆட்சியினால் நம் தேசத்துக்கு ஏற்பட்ட அழிவு பற்றிக் குறிப்பிடும்போது இந்த விஷயத்தையே அது குறிப்பிட்டது. அதன் பின்னான ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 26 அன்று ஆயிரக்கணக்கான பொதுக்கூட்டங்களில் இந்த விஷயமே பிரதானமாக முன்னிறுத்திப் பேசப்பட்டது. மக்களை நிராயுதபாணிகளாக ஆக்கி, அந்நிய ராணுவத்தின் ஆக்கிரமிப்பின் மூலமும் அவற்றின் கொடூரமான தாக்குதலின் மூலம் மக்கள் மனதில் எழும் போராட்டக் குணத்தை அழித்து ஒழித்தார்கள். அதுவே தேசத்தின் ஆன்ம பலத்தை அழியச் செய்தது.

இந்தப் புத்தகத்தின் சுவாரசியமும் மதிப்பு மிகுந்த முன்னுரையில் ஸ்ரீ தரம்பால், காந்திஜியின் சத்யாகிரக சிந்தனைகளின் வேர்களைப் பற்றி அலசிப் பார்த்து அதுபற்றிய புதிய ஒளிகளைப் பாய்ச்சியிருக்கிறார். காந்திஜியின் சத்யாகிரகக் கொள்கையின் அடிப்படையான அம்சமாக இருந்தது என்பது காலகாலமாக நம் தேசத்தில் ஆட்சியாளர்களுக்கும் ஆளப்பட்ட மக்களுக்கும் இடையில் இருந்த தொடர்புதான். அந்தத் தொடர்பு காந்திக்கும் நன்கு தெரிந்திருந்தது. காந்திஜி, தான் எழுதிய ’ஹிந்து ஸ்வராஜ்யம்’  நூலிலேயே தனது சத்யாகிரக சிந்தனைகளுக்கு நம் தேசத்தின் அந்தப் பழங்கால பாரம்பரியமே முக்கிய காரணம் என்று வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். இருந்தும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களும், அவரைப் பற்றி பிற நூல்கள் எழுதியவர்களும் அந்த சத்யாகிரகத்துக்கான வேர்களை எங்கெல்லாமோ தேடினார்களே தவிர, காந்தியடிகளின் வார்த்தைகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுத்திருக்கவில்லை.

காந்திஜியின் கூர்மையான அவதானிப்பு நீங்கலாக அந்தப் பழம்பெரும் போராட்ட வடிவத்தின் தடயங்கள் எதுவுமே இருந்திருக்கவில்லை என்பதால் ஒருவேளை இப்படி நடந்திருக்கலாம் (‘ஹிந்து ஸ்வராஜ்’ நூலில் சௌராஷ்ட்ராவில் இருக்கும் ஒரு குக்கிராமம் பற்றிக்கூட காந்திஜி விவரித்திருப்பார். அவருடைய பார்வை அவ்வளவு கூர்மையானது). அல்லது, பரந்து விரிந்த தேசம் முழுவதிலும் அப்படியான சாத்விகப் போராட்டமானது வாழ்வின் எல்லாத் தளங்களிலும் முன்னெடுக்கப்பட்டதற்குப் போதுமான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்திருக்கவில்லை. அல்லது ஆட்சியாளர்கள் நமக்கு நெருக்கடி தரும் செயல்களைச் செய்யும்போது அவர்களை எதிர்க்கும் மனநிலையை நாம் இழக்கத் தொடங்கி விட்டதாலோ என்னவோ, அந்தப் பழம்பெரும் ஒத்துழையாமைப் போராட்டம் பற்றி காந்தி சொன்ன சில மேலோட்டமான வாக்கியங்களை வழக்கம்போல அவர் கடந்த காலத்தை பற்றிச் சொல்லக் கூடிய லட்சியவாத, யுட்டோப்பியக் கனவு வார்த்தைகள் என்று புறமொதுக்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

காந்திஜி ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளர் அல்ல. எனினும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களைவிட மிக அழுத்தமான உள்ளொளி கொண்டவர். மக்கள் தலைவராக அவர் அபாரமான வெற்றி பெற்றதற்கு இந்த உள்ளுணர்வுதான் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்திருக்கிறது.

சுதந்திரத்துக்குப் பிந்தைய, ஜனநாயக இந்தியாவில் சத்யாகிரகத்துக்கு இருக்கும் இடம் பற்றிய ஸ்ரீ தரம்பாலின் சிந்தனைகளும் மிகவும் முக்கியமானதும் சுவாரசியமானதும் ஆகும்.

சுதந்திர இந்தியாவில் இருக்கும் ஆட்சியைப் பற்றி அடிக்கடிச் சொல்லப்படும் விமர்சனம் என்னவென்றால், காலனிய சக்திகள் பொருளாதாரச் சுரண்டலுக்கும் அதிருப்திகளை ஒடுக்குவதற்கும் எந்த அதிகாரவர்க்கத்தைப் பின்பற்றினார்களோ அதுவே எந்தவித மாற்றமும் இல்லாமல் இப்போதும் பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த அதிகார வர்க்கத்தின் மிக மோசமான எதிர்பார்ப்புகளில் ஒன்று என்னவென்றால்  ‘மக்களின் முதல் கடமை அடங்கி ஒடுங்கி நடப்பதுதான்’. அதன் பிறகே எதிர்ப்பை வெளிப்படுத்தலாம் என்ற பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சிந்தனையே இப்போது நிலவுகிறது.

அதோடு இப்போது இருக்கும் அதிகார வர்க்கம் அந்நிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது அல்ல; ஜனநாயகரீதியாக நம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய அரசுதான் என்ற வாதமும் அந்த அதிகார வர்க்கத்தின் தவறுகளை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே எப்போதாவது அரசை எதிர்த்து யாராவது உண்ணாவிரதம் இருந்தாலோ, ஒத்துழைக்க மறுத்தாலோ வேலை செய்யாமல் இருந்தாலோ அவர்கள் அந்தப் போராட்டத்தைக் கைவிடும் வரை அல்லது அரசால் அடக்கி ஒடுக்கப்படும் வரை அரசு எந்திரம் பேச்சுவார்த்தைக்கு முன்வருவதில்லை. பிரச்னையைத் தீர்க்க எந்த நடவடிக்கை எடுப்பதும் இல்லை. இதன் விளைவாக பாதிக்கப்பட்ட மக்கள் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். அதன் பிறகு அரசாங்கம் அவர்களுக்கு அடிபணிகிறது; சமரசத்துக்கு முன்வருகிறது.

சத்யாகிரக முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு சிற்சில அரசியல் ஆதாயங்கள் பெறப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால், சுதந்திர இந்தியாவின் அரசாங்கம் மட்டும், மக்கள் தங்களுக்கு எதிரானதாகவும் அதிருப்திகரமாகவும் இருக்கும் விஷயங்களை எதிர்க்கவும் அமைதியான முறையில் போராடவும் அனுமதித்திருந்தால் கடந்த 25 ஆண்டுகளில் மக்களின் போராட்டச் செயல்பாடுகளிலும் சில நியாயமான கட்டுப்பாடுகளை, ஒழுக்கங்களைக் கொண்டுவந்திருக்கும். அதேபோல அரசாங்கத்தின் அணுகுமுறையிலும் நியாயமான மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கும். ஜனநாயக அமைப்பில் மக்கள் விரோத அரசுகளை அடுத்துவரும் தேர்தலில் அப்புறப்படுத்தும் அதிகாரம் மக்கள் வசமே உண்டு என்று பொதுவாகச் சொல்லப்படும் விஷயத்துக்கு ஆச்சார்ய கிருபளானி ஒரு தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார். ஸ்ரீ தரம்பால் அதை முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்:

எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அடுத்த தேர்தல் வரும் வரையில் அல்லது ஒரு ஆட்சியை தூக்கி எறியும் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிலருக்கு அந்தப் பிரச்னையானது உடனே தீர்த்தாக வேண்டிய வாழ்வா சாவா பிரச்னையாக இருக்கக்கூடும். சத்தியாகிரக வழியில் போராடும் உரிமையை மறுப்பது என்பது நீண்ட காலத்துக்கு, சர்வாதிகார சக்திக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அடங்கி ஒடுங்கியிருக்க வேண்டும் என்று சொல்வதற்கு இணையானது.

                -ஜெயபிரகாஷ் நாராயண்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அழகிய போராட்டம் (பகுதி- 3)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 1

பொதுவாக இந்திய மக்கள் தனிநபர் என்ற வகையிலும் ஒட்டுமொத்த சமூகமாகவும் அரசு மற்றும் அரசாங்கத்தை எப்படி அணுகினார்கள். ஒரு சில விதிவிலக்குகள் நீங்களாக இந்திய மக்கள் மந்தமாக, அடங்கி ஒடுங்கி, சாதுவாக நடந்து கொண்டிருக்கிறார்கள்; பெற்றோர்கள் மீது குழந்தைகள் எப்படியான பய உணர்வுடன் இருப்பார்களோ அதுபோலவே இந்திய மக்கள் தம்மை ஆட்சி செய்தவர்களுக்கு அடி பணிந்தே இருந்தனர் என்றுதான் பலரும் நம்புகிறார்கள். இப்படியாக இந்திய வரலாறு பற்றி எழுதப்பட்ட நூல்கள் ஏராளம்.

கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வருபவை இந்தியர்கள் அப்படி அடிமைகளாக அடங்கி ஒடுங்கி இருந்திருக்கவில்லை என்பதையே நூல்கள் காட்டுகின்றன. இப்படியான  ‘புதிய’ மாற்றத்தை சிலர் வருத்தத்துடன் பார்க்கின்றனர். ஆனால் ஒருவர் எதிர்த்தாலும் வரவேற்றாலும், அந்தப் போராட்ட மனோபாவத்தை ஐரோப்பிய சிந்தனைகளின் பரவலால் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள். மேலும் இந்தியப் பொதுவெளியில் இந்த மனோபாவம் வெளிப்படுவதற்கு மகாத்மா காந்தியே காரணம் என்றும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். ஐரோப்பிய சிந்தனைகள், மற்றும் காந்திய சிந்தனைகள் ஆகியவற்றிலிருந்து இந்திய மக்களை விலக்கிவைக்க முடிந்தால் இந்திய மக்கள் அமைதியாக, அடங்கி ஒடுங்கித்தான் கிடப்பார்கள் என்று அவர்கள்  கருதுகிறார்கள்.

அரசாங்கத்தின் அநீதி, சுரண்டல், அடக்குமுறை (நிஜமான மற்றும் கற்பிதமான) ஆகியவற்றுக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் இந்திய மக்களின் எதிர்ப்பானது இரண்டு வழிகளில் வெளிப்பட்டுள்ளது. ஒன்று ஆயுதங்கள் மூலமான எதிர்வினை. இன்னொன்று ஆயுதங்கள் இல்லாத எதிர்வினை. ஆயுதப் போராட்டமானது ஒரு சிலர் அல்லது கடுமையான ஒழுங்குக்கு உட்பட்ட சிறிய குழுக்கள் மூலமே முன்னெடுக்கப்பட்டு இருக்கிறது. அரவிந்தர், சாவர்க்கர், பகத்சிங், சந்திரசேகர ஆசாத் போன்றோர் அவர்களுடைய காலத்தில் ஆயுதப் போராட்டத்துக்கான மகத்தான எடுத்துக்காட்டுகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள். ஆயுதங்கள் இல்லாத அமைதிப் போராட்டமானது ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம், சத்யாகிரகம் போன்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இரண்டாவதாகச் சொல்லப்பட்டிருக்கும் அகிம்சைப் போராட்டமானது இருபதாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டது. மகாத்மா காந்தியால் ஆரம்பிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது.

காந்தியால் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டமானது முதலில் தென் ஆப்பிரிக்காவில் தொடங்கப்பட்டது. அதன்பின் இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டது. ஒரு சிலருடைய கூற்றின்படி காந்தியடிகள் அந்த அகிம்சைப் போராட்டத்தை தொரேயூ, டால்ஸ்டாய், ரஷ்கின் போன்றோரிடம் இருந்தே கற்றுக் கொண்டிருக்கிறார். வேறுசிலர் என்ன சொல்கிறார்கள் என்றால், ஒத்துழையாமை இயக்கமும் சட்டமறுப்பு இயக்கமும் காந்தியடிகளின் மகத்தான சுயமான கண்டுபிடிப்பு. அவருடைய மேதமையினாலும் ஆன்மிக உயர் சிந்தனையினாலும் கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள்.

மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கச் சிந்தனைகளின் வேர்கள் ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில்தான் உள்ளன என்ற கூற்று பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. தொரோ பற்றி எழுதிய ஒருவர்,  “அரசு நியாயமற்ற முறையில் நடந்து கொண்டால் மக்கள் எப்படி எதிர்ப்பைத் தெரிவிக்கவேண்டும் என்பது தொடர்பாக தொரோ எழுதிய  ‘ரெசிஸ்டென்ஸ் டு சிவில் கவர்மெண்ட்’ கட்டுரைதான் இந்திய ஒத்துழையாமை இயக்கத்தின் அஸ்திவாரமாகத் திகழ்கிறது”*1 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபத்தில் எழுதிய வேறொரு எழுத்தாளர்,  “தொரோவிடமிருந்து காந்தி ஒத்துழையாமை தொடர்பான உந்துதலைப் பெற்றார். ரஸ்கினிடமிருந்து அரசுடன் எப்படி ஒத்திசைவுடன் செயல்பட்டுப் போராட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டார்” *2 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொரு எழுத்தாளர் குறிப்பிடுகையில்  “தொரோ, வில்லியம் லாய்ட் கேரிஸன், டால்ஸ்டாய் ஆகியோரிடமிருந்து கற்றுக்கொண்டதை சீலேயின் கருத்துகளுடன் ஒப்பிட்டு காந்தி வடிவமைத்துக் கொண்டார். பிரிட்டிஷ் அரசுக்கு இந்தியர்கள் தந்து வரும் ஆதரவை விலக்கிக்கொண்டால் பிரிட்டிஷாரின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதை அவர்களிடமிருந்துதான் தெரிந்து கொண்டார்” *3 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

காந்தி ஒத்துழையாமை இயக்க வழிமுறையை சுயமாகவே கற்றுக்கொண்டார் என்ற இரண்டாவது கோட்பாட்டை முன்வைப்பவர்களும் மிக அதிகமாகவே இருக்கிறார்கள். அவர்களில் விஷய ஞானம் மிகுந்தவர்கள், பிரகலாதனிடம் தொடங்கி பழங்காலத்தில் இருந்த பலரிடமிருந்து காந்தி அதைக் கற்றுக் கொண்டதாக சொல்கிறார்கள். ஆர்.ஆர்.திவாகர் என்ன சொல்கிறாரென்றால்,  “பிரகலாதன், சாக்ரடீஸ் ஆகியோரிடமிருந்து மகாத்மா காந்தி, மனிதர்கள் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்னைகளுக்கு முழு வடிவம் பெறாத, பாதி அளவுக்கு மத நம்பிக்கை சார்ந்த ஒரு தீர்வை முன்வைத்தார். தீமை மற்றும் அநீதிக்கு எதிராக அகிம்சை முறையில் போராடுவதற்கான ஒரு ஆயுதத்தை மனித இனத்துக்கு உருவாக்கிக் கொடுத்தார்” என்கிறார். தர்ணா, ஹர்த்தால், தசத்யாகா (கைவசம் இருக்கும் அனைத்தையும் துறந்துவிட்டுச் செல்லுதல்) போன்ற இந்திய பாரம்பரிய வழிமுறைகளைச் சொல்லிக்காட்டி, “இந்தியர்கள் அன்றாட லௌகிக விஷயங்கள் தாண்டியே சிந்தித்தனர். தனிநபர் முக்தி சார்ந்தே சிந்தித்தனர். ஒரு குழுவாக சமூகமாக அவருடைய தேவைகள் சார்ந்து எதையும் முன்னெடுக்கவில்லை. இன்றைய காலம் போன்ற நீண்ட நாட்கள் ஹர்த்தால் செய்வது போன்ற தொழில் முடக்கங்கள் எல்லாம் இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திருக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார் அவர். *4.

மகாத்மா காந்தியின் அரசியல் தத்துவத்தை ஆராய்ந்து எழுதி இருக்கும் ஒருவர்,  “காந்தி முன்னெடுத்த அகிம்சைப் போராட்டமானது மனித சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முன்னெப்போதும் இருந்திராத ஒன்று. மிகவும் புதுமையானது” *5 என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மகாத்மா காந்தியை ஆய்வுசெய்த இன்னொருவர்,  “ஒத்துழையாமை இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் போன்றவையெல்லாம் மகாத்மா காந்தியின் சமூகச் சூழலிலிருந்து இயல்பாக மலர்ந்த சிந்தனையே” என்று குறிப்பிட்டிருக்கிறார். *6

இந்த இரண்டு பார்வைகளுமே  ‘ஆன் த ட்யூட்டி ஆஃப் சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்ற தொரோவின் கட்டுரைக்கான அறிமுகப்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன. அந்த நூலாசிரியர் அந்த முன்னுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

தொரோவின் ஒத்துழையாமை பற்றிய கட்டுரையானது அகிம்சை வழியிலான போராட்டங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தொரோவுக்கு முன்பாக, தீமைகள் நிறைந்த உலகில் தமது மத நம்பிக்கைகளுக்கு விசுவாசமாக இருக்க விரும்பிய சில தனிநபர்கள் மற்றும் குழுக்களினால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. சமூக, அரசியல் மாற்றங்களைக் கொண்டு வருவதற்காக அரசை எதிர்த்து அகிம்சை வழியில் போராடுதல் என்பதற்கு எந்த ஆர்வமும் காட்டப்பட்டிருக்கவில்லை. அறுபது ஆண்டுகள் கழித்து மகாத்மா காந்தியின் மூலமாக இது மக்கள் போராட்ட இயக்கமாக அரசியலில் அக்கறை கொண்டு முன்னெடுக்கப்பட்டது. அன்று ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், முதல் அணுகுமுறையிலிருந்து இரண்டாவது அணுகுமுறை நோக்கிய நகர்வுக்கு தொரோதான் முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியிருக்கிறார். *7.

காகா கலேல்கர் *8, ஆர்.பைன் *9 போன்றவர்கள், காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்துக்கும் இந்தியாவின் பழங்கால வழிமுறைகளுக்கும் இடையிலான தொடர்பு பற்றி லேசாகக் குறிப்பிடுகிறார்கள். எனினும் கலேல்கர் சொல்வதுபோல,   ‘மனித குலத்துக்கு மஹாத்மா காந்தி உருவாக்கிக் கொடுத்த போராட்ட வழிமுறை’ என்றே கருதுகிறார்கள்.  “த்ராகா (Traga – நவீன எழுத்தாளர்களில் பாரதத்தின் பழம்பெரும் த்ராக வழிமுறை பற்றிக் குறிப்பிட்டிருப்பது கேல்கர் மட்டுமே), தர்ணா, பாஹர்வாடியா என மகாத்மா காந்தி வாழ்ந்த சௌராஷ்டிரா பகுதியில் நிலவிய வழிமுறைகள் மகாத்மாவின் மனதில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கக்கூடும்” என்பதைப் பற்றியும் கலேல்கர் லேசாகத் தொட்டுக் காட்டியிருக்கிறார். *10.

பழங்கால இந்திய அரசாட்சி, மன்னர்கள் அல்லது பிற ஆட்சியாளர்களின் கடமைகள், உரிமைகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் சமீபகாலப் படைப்புகள் அனைத்தும் இந்திய மக்கள் ஆட்சியாளர்களுக்கு அடங்கி ஒடுங்கி நடந்துகொண்டார்கள் என்ற சமீபத்திய கருத்தாக்கத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. ராஜா என்றாலே மக்களை திருப்திப்படுத்துபவர் என்றுதான் அர்த்தம். அப்படி என்றால் அந்த ராஜா மக்களை திருப்திப்படுத்தும் நோக்கில் சில குறிப்பிட்ட கடமைகளைச் செய்தாக வேண்டும். அதைச் செய்யவில்லையென்றால் அந்த ராஜாவைப் பதவியிறக்கம் செய்துவிடுவார்கள் என்று சில நூலாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு பகுதியை இங்கு மேற்கோள் காட்டுகிறேன்.

தனது ஆட்சிக்கு உட்பட்ட மக்களைப் பாதுகாக்காமல், வரியை வசூலித்து, மக்களின் செல்வத்தைக் கொள்ளை அடித்துத் தீயவனாக நடந்துகொள்ளும் ஒரு மன்னனை மக்கள் வெகுண்டெழுந்து கொன்றுவிட வேண்டும். தலைமைப் பண்பு இல்லாத அப்படியான மன்னன் தீமை மற்றும் அழிவின் அதாவது கலியின் அவதாரம்.  ‘மக்களைக் காப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு அவர்களைக் காப்பாற்றவில்லை என்றால், பைத்தியம் பிடித்த நாயைக் கொல்வதுபோல அந்த மன்னரை மக்கள் ஒன்று கூடிக் கொன்றுவிட வேண்டும். *11.

பழங்காலத்தில் ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு என்னவிதமாகவும் இருந்திருக்கலாம்; துருக்கியர்கள் அல்லது மொகலாயர்களின் ஆட்சியில், 17, 18ஆம் நூற்றாண்டில் எப்படி வேண்டுமானாலும் இருந்திருக்கலாம். ஜேம்ஸ் மில் இதுபற்றிக் கூறும்போது,  “இந்தியாவில் மன்னர்களை மக்கள் பயத்துடனும் பக்தியுடனுமே பார்த்தார்கள்” என்கிறார் *12. மேலும், காந்தியடிகளைப் பொருத்த வரையில்,  “மக்கள் நல்லதோ கெட்டதோ, சட்டத்தை மதித்து நடக்க வேண்டும். முற்காலத்தில் அப்படி இருக்கவில்லை. அப்போதெல்லாம் மக்கள் தங்களுக்குப் பிடிக்காத சட்டங்களை மதித்து நடக்கவில்லை” *13. அமைதி வழியிலான போராட்டத்தைப் பற்றி மேலும் விவரித்துச் சொல்கையில் காந்தி சொல்கிறார்:

இந்தியாவில் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும் அமைதியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. மன்னர்கள் மக்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்யாத போது மக்கள் மன்னர்களுக்கு ஒத்துழைப்பு தர மறுத்திருக்கிறார்கள். இதுவே அகிம்சைப் போராட்டம். *14.

தனக்குத் தெரிந்து நடந்த ஒத்துழையாமைப் போராட்டம் ஒன்று பற்றியும் காந்தி குறிப்பிடுகிறார்:

ஒரு சிறிய சமஸ்தானத்தில் மன்னர் கொண்டுவந்த ஒரு விஷயம் சில கிராமத்தினருக்குப் பிடிக்கவில்லை. உடனே அந்த கிராமத்தை விட்டுக் கிளம்பிவிட்டார்கள். அந்த மன்னர் மிகுந்த பதற்றத்துக்கு உள்ளானார். தனது மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, தான் கொண்டுவந்த புதிய சட்டத்தைப் பின்வாங்கிக் கொண்டார். இப்படியான பல சம்பவங்கள் இந்தியாவில் இதற்கு முன் நடந்துள்ளன. *15.

(காந்தியடிகள் சொல்லியிருக்கும் இந்த நிகழ்வு, 1810 – 11இல் முர்ஷிதாபாத்தில் நடந்ததாகக் குறிப்பிட்டிருப்பது போன்ற கிராமத்தை விட்டு வெளியேறும் நிகழ்வுகள் எல்லாம் பிந்தைய காலத்தில் நடந்ததுதான். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்கள் பற்றிய விவரங்கள் அதற்கு முந்தைய காலத்தில் நடந்தவை. ஊரை விட்டு வெளியேறுதல் என்பது போன்ற எதிர்ப்புகள் எல்லாம் ஆட்சியாளரிடம் இருந்து மக்கள் வெகுவாக அந்நியப்பட்டுப் போவதையே காட்டுகின்றன. இப்படி அவர்கள் சென்றுவிடுவதால் மன்னருடைய அதிகாரம் கணிசமாக வலுவிழந்துவிடுகிறது. இப்படியான நிகழ்வுகள் எல்லாம், மக்கள் மன்னர்களை பயபக்தியுடன் பார்த்தார்கள் என்ற கூற்றுக்கு முற்றிலும் மாறாக இருக்கின்றன. இப்படியான அதீத எதிர்ப்பு நிலையானது இந்திய ஆட்சியாளர்கள் இருந்தபோது செல்லுபடியாக இருக்கலாம்; ஏனென்றால், அந்த மன்னர்கள் எல்லாம் பிரிட்டிஷாரைப்போல மக்களிடமிருந்து அந்த அளவுக்கு அந்நியமானவர்கள் கிடையாது. எனவே, அந்த வழிமுறையை முற்றிலும் அந்நியர்களான பிரிட்டிஷாருக்கு எதிராகப் பயன்படுத்தும்போது அதன் தாக்கம் மிகக் குறைவாகவே இருந்திருக்கும்).

காந்தி இந்தியப் பாரம்பரிய வழிமுறைகளில் இருந்தே ஒத்துழையாமை இயக்கத்துக்கான விடுதலையுணர்வைப் பெற்றார் என்று நிறுவுவதற்கு இதற்கு மேலும் எதுவும் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன். அது அவருக்குள்ளாக இருந்து இயல்பாகவே வெளிப்பட்டது. ஐரோப்பாவில், அமெரிக்காவில் அந்தப் போராட்ட வழிமுறை சொற்ப அளவில் பயன்படுத்தப்பட்டது என்பது காந்தியின் மனதில் ஏற்கனவே இருந்த அந்த விஷயத்தை மேலும் வலுப்படுத்தி இருக்கக்கூடும். எனினும் தனது தலைமையின் கீழ் இந்தியாவில் மிகப் பெரிய அளவில் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்ததற்கு இந்தியாவில் அப்படியான போராட்ட வழிமுறை முன்பாகவே வேரூன்றியிருந்ததுதான் முக்கியமான காரணம்.

மகாத்மா காந்தியும், ஜேம்ஸ் மில் ஆகிய இருவரும் முறையான வரலாற்று ஆசிரியர்களைவிட இந்தியாவில் ஆட்சியாளருக்கும் ஆளப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவு பற்றி மிகத் தெளிவாகவே புரிந்து வைத்திருந்திருக்கிறார்கள். ரொம்பவும் பின்னால் எல்லாம் போக வேண்டியது இல்லை. 1819ஆம் நூற்றாண்டுகளில் இந்திய, பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் எழுதியிருப்பவற்றை முறையாக ஆராய்ந்து பார்த்தாலே போதும். மகாத்மா காந்தியும் ஜேம்ஸ் மில்லும் எவ்வளவு துல்லியமாக இந்திய வரலாற்றைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பது நன்கு தெரிந்துவிடும். அதுபோலவே சட்டமறுப்பு, ஒத்துழையாமை ஆகியவையெல்லாம் நியாயமற்ற அரசுக்கு எதிராக இந்திய மக்கள் முன்னெடுத்த போராட்ட வழிமுறைகளில் மிகவும் முக்கியமானவை என்பதையும் தெரிந்துகொண்டுவிடமுடியும்.

மிகவும் மேலோட்டமாக ஆய்வு செய்து பார்த்தால்கூட ஒத்துழையாமைப் போராட்டம் தொடர்பான பல உதாரணங்கள் எளிதில் கிடைக்கும். பிரிட்டிஷ் அதிகார வர்க்கத்தினரின் கடிதப் பரிமாற்றங்களில் இதற்கான ஆவணங்கள் தெளிவாகக் காணக் கிடைக்கின்றன. உதாரணமாக, மதராஸில் இருந்த பிரிட்டிஷ் கவர்னர் அண்ட் கவுன்சிலின் கடிதப் பரிமாற்றத்தில் நவம்பர் 1680 தேதியிட்ட ஆவணம் ஒன்று,  ‘மதராசப்பட்டணத்தில் அதிருப்தியுற்ற சில மக்கள்’ பிரிட்டிஷாரின் தவறான செயல்பாடாக அவர்கள் கருதியதற்குக் காட்டிய எதிர்வினை பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

வெள்ளையடிக்கும் பெயின்டர்களும் பிறரும் செயின்ட் தாமஸ் சர்ச்சுக்கு அருகில் ஒன்றுகூடினர். டவுனில் இருந்த வேறுசில இந்து ஜாதியினருக்குக் கடிதங்களும் அனுப்பியிருந்தனர். துபாஷிகளாக கம்பெனியில் பணிபுரிந்தவர்கள், தலைமை  ப்யூன்கள், துணி துவைப்பவர்கள் என பலருக்கும் கடிதங்கள் அனுப்பியிருந்தனர். அவர்களுக்கு உதவியாக வரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று வேறு சிலரை மிரட்டியும் இருந்தனர். அப்படியாக ஒன்றுதிரண்டு அனைவரும் டவுனுக்குள் வரும் உணவுப் பொருள் வண்டிகளைத் தடுத்தனர். நாங்கள் பெத்த வெங்கடாத்ரி மூலம் பக்கத்து டவுனில் இருந்து வாடகைக்கு பிடித்திருந்த வண்டிகள் அனைத்தையும் வரவிடாமல் தடுத்தனர். சென்ன பட்டணம் அல்லது மதராச பட்டினத்துக்கு உணவுப் பொருட்கள், விறகு போன்றவையோ எதுவுமே கொண்டு செல்லக் கூடாது என்று முரசறைந்து தெரிவித்தனர். எங்களுக்காக சுண்ணாம்பு தயாரித்துத் தந்தவர்களின் வீடுகள் முற்றுகை இடப்பட்டன. மேற்கொண்டு விறகு எரித்து எதுவும் தயாரித்துத் தர முடியாதபடியும் சுண்ணாம்பு சிப்பிகளை சேகரிக்க முடியாமலும் தடுத்தனர். *16

இந்த மோதல் சில நாட்கள் நீடித்தது.  ‘கருப்பு போர்ச்சுகீசியர்’ பலரை பிரிட்டிஷார் படையில் நியமித்தனர். மிதமாக இருந்தவர்களைத் தீவிரமாகப் போராடியவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மனைவி,  குழந்தைகளைச் சிறைபிடித்து வைத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தரப்படும் என்று எச்சரித்தனர். இறுதியில் ஒருவித சமரசத்துக்குப் பின் அந்த மோதல் முடிவுக்கு வந்தது.

1830 – 31 வாக்கில் கனரா பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதுகுறித்துத் துணை கலெக்டர் எழுதியது:

இங்கு நிலைமை மோசமாகிக் கொண்டுவருகிறது. இங்கு மக்கள் அமைதியாகத்தான் இருந்தனர். திடீரென்று சில நாட்களில் கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டனர். நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எண்ணூர் பகுதியில் 11,000 பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக 300 ரயத்கள் கூட்டமாக வந்தனர். தாசில்தாரின் கச்சேரி அலுவலகத்துக்குள் நுழைந்தனர். ஒரு பைசாகூடக் கொடுக்க முடியாது; முழு வரியையும் நீக்கித்தான் ஆக வேண்டும் என்றனர். தாசில்தார், பயிர் விளைச்சல் நன்றாக இருக்கிறது; ஜமாபந்தி இதமாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது என்று எடுத்துரைத்தார். போராட்டக்காரர்கள்,  ‘எங்களுக்கு இவையெல்லாம் பிரச்னை இல்லை. அரசாங்கத்தின் செயல்பாடு பொதுவாகவே சரியாக இல்லை. நீதிமன்றம், அரசு எல்லாம் அவர்களை ஒடுக்குகிறது. ஸ்டாம்ப் ரெகுலேஷன், உப்பு, புகையிலை மீதான ஏகபோக உரிமை, இவற்றையெல்லாம் நீக்கியாக வேண்டும்’ என்று சொன்னார்கள். *17.

தாசில்தாருக்கு கலெக்டர் என்ன சொன்னார் என்பது பற்றியும் அவரே குறிப்பிட்டிருக்கிறார்:

தினமும் கூடிக் கொண்டிருக்கும் கூட்டத்தை எல்லா வழிகளையும் பயன்படுத்தித் தடுக்கும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவு கொடுக்கும்படி கேட்டுக் கொண்டேன். பல்வேறு தாலுகாக்களுக்குப் போராட்ட உணர்வைத் தூண்டியபடி எழுதப்பட்டுக் கொண்டு செல்லப்படும் கடிதங்களை வழியில் பறிமுதல் செய்யச் சொன்னேன். *18

மேலும் அவர் குறிப்பிடுகையில்…

ரயத்கள் தங்களைத் தண்டிக்க முடியாதென்று சொல்கிறார்கள். கிஸ்தியைக் கொடுக்க முன்வந்த ஒரு விவசாயியை அவர்கள் ஊர் விலக்கம் செய்துவிட்டனர். போராட்டம் பரூர் வரை வந்துவிட்டது. சீக்கிரமே கடம்பூரையும் எட்டி விடும். ஜமாபந்தி தணிக்கைகள் கடுமையாக இருப்பதால் அல்ல இந்த அதிருப்தி. பிரிட்டிஷ் அரசின் மீது ஒட்டுமொத்தமாகவே அவர்களுக்கு ஒரு அதிருப்தி எழுந்துள்ளது. மிக விரைவாகவே இந்த அதிருப்திக் கனலை அணைத்தாக வேண்டும். இந்த மாவட்டத்தில் ஒரே ஒரு கூலித் தொழிலாளியைக்கூட பணிக்கு வரவைக்க முடியவில்லை. தாசில்தார் மிகுந்த சிரமத்துக்குப் பின்னரே நேற்று இங்கு என்னை வந்து சந்தித்தார். *19.

இந்தப் போராட்டங்கள் சில நேரங்களில் வன்முறையை நோக்கி நகர்ந்தன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் த்ராகா, கூர் என்றெல்லாம் அழைக்கப்பட்ட ஒரு வழிமுறையை, அதாவது போராட்டக்காரர்கள் தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல் என்பதாகவே இருந்தன. அரசு வன்முறையை கையில் எடுத்தபோதுதான் அதைத் தடுத்துக் கொள்ளும் முகமாகவே மக்கள் வன்முறையில் இறங்கினார்கள். 1820 – 40களில் மகாராஷ்டிராவில் நடந்த  ‘பந்த்’ போராட்டங்களில் அப்படித்தான் நடந்தது. *20. எந்தவிதமான அரசின் வன்முறைக்கு எதிராக மக்கள் வன்முறையைக் கையில் எடுத்தனர் என்பது தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டிய விஷயம்.

நவீனகால ஒத்துழையாமை இயக்கங்களில் வன்முறை வெடிக்கின்றன. அதை ஒடுக்குவதற்கு அரசும் மிகப் பெரிய வன்முறையில் ஈடுபடுகிறது. இந்த விஷயத்தையும் நாம் தனியாக விரிவாக அலசிப் பார்க்க வேண்டும்.  ‘கலெக்டிவ் வயலன்ஸ் இன் ஐரோப்பியன் பெர்ஸ்பெக்டிவ்’  என்ற படைப்பில் சார்லஸ் டிலி சொல்கிறார்: சட்டவிரோதமான ஆனால் அகிம்சை வழியிலான போராட்டங்களைத் தடுக்கும் நோக்கில் அரசு எப்போது தீவிரமாகக் களமிறங்குகிறதோ அப்போதுதான் பெரிய அளவிலான வன்முறை நிகழ்வதை எங்களுடைய ஆய்வுகள் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன. மிகப் பெரிய அளவிலான படுகொலைகள், காயங்கள் எல்லாம் அரசுத் தரப்பு படைகள் மற்றும் காவலர்களால் தான் நிகழ்த்தப்பட்டுள்ளன. கலகக்காரர்களாலோ போராட்டக்காரர்களோ செய்யப்பட்ட வன்முறையைவிட அரசின் வன்முறையே மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. இதுபற்றி மைக்கேல் வால்சர் குறிப்பிடுகையில், அமெரிக்காவிலும் இதுதான் நிலைமை என்று குறிப்பிட்டிருக்கிறார். (ஓப்ளிகேஷன்ஸ்: எஸ்ஸேஸ் ஆன் டிஸொபீடியன்ஸ், வார் அண்ட் சிட்டிசன்ஷிப், 1970, பக் 32).

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் புதிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்களில் எதுவுமே வெற்றி பெறவில்லை (இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் போராட்டம் உட்பட). அதற்குப் பல காரணங்கள் உண்டு. ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையில் பொதுவான, ஏற்றுக்கொள்ளத்தக்க மதிப்பீடுகள் இருந்தால்தான் இத்தகைய போராட்டங்கள் வெற்றி பெற முடியும். இந்திய ஆட்சியாளர்களை அப்புறப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் இந்திய மக்களுக்கும் இடையில் அப்படியான எந்த ஒரு பொதுவான மதிப்பீடுகளும் இருந்திருக்கவில்லை.

1819ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களின் ஒழுக்கம், மனோபாவம், சிந்தனை ஆகியவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்களாகவே இருந்தனர். ஜேம்ஸ் மில் குறிப்பிட்ட,  ‘ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது இயல்பான விஷயம்தான்’  என்ற பார்வையானது மெள்ள மெள்ள மாறி  ‘மக்கள் எந்தக் கேள்வியும் கேட்காமல் அரசாங்கத்துக்குக் கட்டுப்பட்டு ஆகவேண்டும்’ *21 என்பதாக மாறிவிட்டது. 1900களின் ஆரம்பகட்டத்தில் கோபாலகிருஷ்ணன் கோகலே குறிப்பிட்டதுபோல்,  ‘மக்களின் வேலையே அடிபணிந்து கிடப்பதுதான்’ என்ற மனோபாவமே பிரிட்டிஷாரிடம் இருந்தது. *22.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

  1. என்சைக்ளோபீடியா ஆஃப் தி சோசியல் சயன்சஸ் (1963), தொரேயு பற்றிய கட்டுரை, மாக்ஸ் லெர்னர்.
  2. அதுலானந்த சக்கரவர்த்தி, தீ லோன்சம் பில்க்ரிம் (1969), பக் 32.
  3. சி.டி.எஸ். தேவனேசன், தி மேக்கிங் ஆஃப் மகாத்மா (1969) பக் 378-9.
  4. ஆர்.ஆர்.திவாகர், சாகா ஆஃப் சத்யாகிரஹா (1969), பக் 8-11.
  5. புத்த்தேவ் பட்டாச்சார்யா, எவல்யூஷன் ஆஃப் தி பொலிடிக்கல் பிலாசஃபி ஆஃப் காந்தி (1969) பக் 286.
  6. வி.வி.ரமண மூர்த்தி, நான் வயலன்ஸ் இன் பாலிடிக்ஸ் (1958) பக் 148.
  7. ஜெனே ஷார்ப், தொரேயு: ஆன் தி ட்யூட்டி ஆஃப் சிவில் டிஸ் ஒபீடியன்ஸ் (1963) பக் 1
  8. ககா கலேகர், எவல்யூஷன் ஆஃப் டி பிலாசஃபி ஆஃப் சத்யாகிரஹா (1969) காந்தி தர்ஷனில் வெளியிடப்பட்டது. 1969-பிப்ரவரி 2, 1970.
  9. ஆர்.பைன், தி லைஃப் அண்ட் டெத் ஆஃப் மஹாத்மா காந்தி (1969)  பக் 217.
  10. காகா கலேகர்: அதே புத்தகம்
  11. மஹாபாரத மேற்கோள். பி.வி.கனே. ஹிஸ்டரி ஆஃப்தர்ம சாஸ்திரம், தொகுதி 3, (1946) பக் 26.
  12. ஜேம்ஸ் மில், எவிடன்ஸ் டு ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் கமிட்டி, இன் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் பேப்பர்ஸ், 1831-31, தொகுதி 14, பக் 6-7.
  13. ஹிந்த் ஸ்வராஜ் (1946) பக் 58
  14. அதே புத்தகம் பக் 60.
  15. அதே புத்தகம் பக் 61.
  16. ஃபோர்ட் செயிண்ட் ஜார்ஜ்: டைரி அண்ட் கன்சல்டேஷன்ஸ், நவம்பர், 1680.
  17. இந்தியா ஆஃபீஸ் ரெக்கார்ட்ஸ் (ஐ.ஓ.ஆர்) போர்ட்ஸ் கலெக்‌ஷன்ஸ்: எஃப் 4/தொகுதி 1415, எண் 558444. அசிஸ்டெண்ட் கலெக்டர் பிரதான கலெக்டருக்கு அனுப்பியவை, கனரா, ஜனவரி 17, 1831, பக் 158-61.
  18. அதே புத்தகம்
  19. அதே புத்தகம்
  20. பிரிடிட்ஷாருக்கு எதிராக மஹாராஷ்டிரா மக்கள் எண்ணற்ற Bunds பண்ட்கள் அமைத்தது தொடர்பான தகவல்கள் 1820-40 காலகட்டத்து பம்பாய் பிரஸிடன்ஸி அரசியல் மற்றும் நீதித்துறை ஆவணங்கள் தொகுப்பில் இருக்கின்றன. 1826-28-ல் ராமோசஸ் மூலம் அமைக்கப்பட்ட போர்பந்தர் பண்ட் அவற்றில் ஒன்று.
  21. கேம்ஸ் மில் புத்தகம்.
  22. எம். ராமசந்திர ராவ், பி.ஏ.பி.எல். எம்.எல்சி. (மெட்ராஸ் 1917) எழுதிய தி டெவலப்மெண்ட் ஆஃப் இந்தியன் பொலிட்டி நூலில் கோபால கிருஷ்ண கோகலே சொன்னதன் மேற்கோள். பக் 291.


__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அழகிய போராட்டம் (பகுதி- 4)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 2

நாம் மேற்கொண்டு இதுபற்றிப் பார்ப்பதற்கு முன்னதாக,  18-ஆம்  நூற்றாண்டின் பிற்பகுதியிலும்,19-ஆம்  நூற்றாண்டின் ஆரம்பக் கட்ட்த்திலும் பிரிட்டிஷ் இந்திய நிர்வாகம் எப்படி இருந்தது என்பதைப் பற்றி பார்ப்போம்.

பொதுவாக நம்பப்பட்டு வருவதற்கு மாறாக, 1784  வாக்கிலிருந்து (அதற்கு முன் இல்லை என்று வைத்துக்கொண்டாலும்)  இந்தியா தொடர்பாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் கிழக்கிந்திய கம்பெனிக்கு பெரிய பங்கு எதுவுமே இருக்கவில்லை.  தீர்மானங்கள் மட்டுமல்ல, பல நேரங்களில் ஆரம்பகட்ட செயல்திட்ட வரைவுகள் கூட 1784களுக்குப்  பின்னர் இந்திய விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளும் கமிஷனர்கள் குழுவிடம்  தான் ஒப்படைக்கப்பட்டிருந்தது.  அந்தக் குழுவானது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில்  ஒரு சட்டம் மூலமாக உருவாக்கப்பட்டிருந்தது.  பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உறுப்பினர்கள்தான்  அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். 1858  வரையிலும் அந்தக் குழுவே இந்தியா தொடர்பான அனைத்து தீர்மானங்களையும் எடுத்தது. 

 1858 வாக்கில் பிரிட்டிஷ்  ராணியின்  நேரடிக்  கட்டுப்பாட்டின் கீழ் இந்திய நிர்வாகம் கொண்டுவரப்பட்டதென்பது,  அதுவரையில் கிழக்கிந்திய கம்பெனி செய்துவந்த குமாஸ்தா வேலையில் இருந்து  அதை அப்புறப்படுத்தியது மட்டுமே. அனைத்து முடிவுகளையும் எடுத்துவந்த முந்தைய குழுவை   ‘செக்ரட்டரி ஆஃப் ஸ்டேட் இந்தியா’ என்று பெயர் மாற்றம் செய்வது மட்டுமே நடந்தது.

பெங்கால் பிரசிடென்சியின்  பிரிட்டிஷ் நிர்வாகத்தின்  தலைமைப் பொறுப்பில் இருந்தவர்  கவர்னர் ஜெனரல் இன் கவுன்சில்.  அவருக்குக் கீழே பல்வேறு அரசுத் துறைகள் இருந்தன.  அந்தத் தலைமைப் பதவியானது  இந்தியாவுக்கான  கமிஷனர்கள்  குழுவினால் 1785-இல்  உருவாக்கப்பட்டது.  அரசாங்கத் துறை,  ராணுவம்,  பொது நலத் துறை,  வருவாய்த் துறை,  நீதித் துறை,  உளவுத் துறை போன்ற முக்கியமான துறைகள் அனைத்தும்  வில்லியம் ஃபோர்ட்டில் (கல்கத்தா)  இருந்து செயல்பட்டன. கவர்னர் ஜெனரல் இன் கவுன்சில் (கவர்னர் ஜெனரல் இல்லாதபோது,  கமாண்டர் இன் சீஃப் தலைவராகச் செயல்படுவார்) வாரத்தில் சில நாட்கள் ஒன்றுகூடி குறிப்பிட்ட அரசாங்கத் துறை செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து  வழிகாட்டுதலை அளிக்கும்.  இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்,  உத்தரவுகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள்  அல்லது தனிநபர்களுக்கு அந்தந்தத் துறையின் செகரட்டரி தெரியப்படுத்துவார்.  அவர் கவுன்சில் நடத்தும் கூட்டங்களில் பங்குபெற்று  அதுதொடர்பான ஆவணங்களைப் பதிந்து வைத்திருப்பார்.  இவை அல்லாமல் 1785-இல்  கொண்டுவரப்பட்ட வழிகாட்டிக் குறிப்புகள் மூலமாக கவர்னர் ஜெனரல் இன் கவுன்சிலுக்கு உதவியாக பல்வேறு துணை அமைப்புகளை உருவாக்கியிருந்தது. அந்த கவுன்சிலின் உறுப்பினர்களே அந்தத் துணை அமைப்புகளுக்கு தலைவராக இருந்து  அரசின் பரந்துபட்ட செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வழிகாட்டி நடத்தினர். அந்தத் துணை அமைப்புகளில் ராணுவத் துறையும்,  வருவாய்த் துறையும்தான்  மிகவும் முக்கியமானவை (மதராஸ் பிரசிடென்சி,  பம்பாய் பிரசிடென்சியிலும்  இது போன்ற ஏற்பாடுகள் 1785லேயே  உருவாக்கப்பட்டன).

 இந்தக் காலகட்டத்தில் மாவட்ட  ‘கலெக்டரின்’ பணி என்பது  வருவாய் மதிப்பீடு,  வரி சேகரிப்பு என்பதாகவே இருந்தது (வங்காளம், பனாரஸ், பீஹார் போன்ற பகுதிகளில்). காவல் துறை நிர்வாகம்,  நீதி நிர்வாகம் போன்ற பிற பணிகள் எல்லாம்  மேஜிஸ்ட்ரேட்  என்ற பதவியை வகித்தவரின்  பொறுப்பில் விடப்பட்டிருந்தன.  பொதுவாக,  கலெக்டர் என்பவருக்கான உத்தரவுகள் வருவாய்த் துறையிலிருந்து தரப்பட்டன.  மாறாக மேஜிஸ்ட்ரேட் என்பவர் கவர்னர் ஜெனரல் இன் கவுன்சிலில் நீதித் துறையின் தலைவரிடமிருந்து உத்தரவுகளைப் பெற்று செயல்பட்டார்.  கலெக்டரும்,  மேஜிஸ்ட்ரேட்டும்  அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் தனித்தனி அதிகார வர்க்கமாக உயர்நிலை அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர். எனினும்  அவர்களையும் விட உயர்நிலையில் இருந்த அதிகாரிகளுடன் கொண்ட தொடர்பின் அடிப்படையில் பார்த்தால், கலெக்டரை விட மேஜிஸ்ட்ரேட் ஒரு படி கூடுதல் அதிகாரம் பெற்றவராக இருந்தார். பனாரஸ் மற்றும் வேறுசில மாவட்டங்களில் கூடுதலாக வேறு இரண்டு தனியான, உயர்நிலை அதிகாரிகள் இருந்தனர். ராணுவ நிர்வாகம், மேல் கோர்ட் என இரண்டு தனிப் பதவிகள் இருந்தன. இந்தப் பதவிகளுக்கு இடையிலான சில தொடர்புகள்,  அணுகுமுறையில் இருந்த வித்தியாசம் போன்றவை இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ஆவணங்களில் இருந்து நன்கு தெளிவாகின்றன. 

பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு இடையிலான கடிதப் பரிமாற்றமாக  இந்த நூலில் இடம் பெற்றிருக்கும் ஆவணங்கள், முழுவதுமாக மறந்துவிட்ட ஒத்துழையாமை இயக்கப் போராட்டம் பற்றி தெளிவாக விவரிக்கின்றன. 1810-11  வாக்கில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக  பனாரஸ்,  பாட்னா,  சரண்,  முர்ஷிதாபாத்,  பாகல்பூர் ஆகிய பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அகிம்சைப் போராட்டம் பற்றி  விவரிக்கின்றனர். காந்திய ஒத்துழையாமை இயக்கம்,  சட்டமறுப்பு இயக்கம்  ஆகியவற்றுக்கு முன்னதாகவே முன்னெடுக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் தொடர்பாக  நமக்குக் கிடைத்திருக்கும் மிகவும் தெளிவான,  ஆதாரப்பூர்வமான ஆவணம்  இதுவே.   எனவே அதுபற்றி வரும் பக்கங்களில் சற்று விரிவாகவே பார்ப்போம்.

1810 வாக்கில்,  இங்கிலாந்து தலைமையிடம் இருந்து கிடைத்த வழிகாட்டுதலின் பேரில்,  வங்காள அரசு (கல்கத்தா ஃபோர்ட் வில்லியமில் இருந்தது)  வங்காளம்,  பீகார்,  ஒரிசா,  பனாரஸ் போன்ற பகுதிகளிலும்  புதிதாக கைப்பற்றிய பகுதிகளிலும் (இவை பின்னாளில் உத்தரபிரதேசத்தின் பகுதிகளாகின) பல புதிய வரிகளை விதித்தது. நிதிக்குழு  பரிந்துரைத்த விதிகளில் ஒன்று, வீடுகளுக்கும் கடைகளுக்கும் வரி விதிக்க வழிவகுத்தது.  இந்த வரி அக்டோபர் 6, 1810-இல்  ரெகுலேஷன் XV, 1810  மூலம் அமல்படுத்தப்பட்டது.

இந்தப் புதிய சட்டம்  என்ன சொன்னதென்றால், இந்த புதிய ரெகுலேஷன் அரசின் நிதி ஆதாரத்தைப் பெருக்குவதற்காக கல்கத்தா  நகரில் இருக்கும் வீடுகளுக்கு  வரி விதிக்கத் தீர்மானித்திருக்கிறது. வங்காளம்,  ஒரிசா,  பனாரஸ்  போன்ற பகுதிகளில் இருக்கும் முக்கிய நகரங்களில் உள்ள வீடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டு இந்த வரி குறிப்பிட்ட காலகட்டத்திற்கு  விதிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டது.  இந்த ரெகுலேஷன்,  எதைக்கொண்டு கட்டப்பட்டிருந்தாலும் அனைத்து குடியிருப்பு வீடுகளும் (சில விதிவிலக்குகள் நீங்கலாக) ஆண்டு வாடகையில் ஐந்து சதவிகிதத்தை அரசுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்று சொன்னது. அனைத்துக் கடைகளும் ஆண்டு வாடகையில் 10 சதவிகிதத்தை வரியாகச் செலுத்த வேண்டும். ஒரு வீடு அல்லது கடை வாடகைக்கு விடப்படாமல்  உரிமையாளரே அனுபவிப்பதாக இருந்தால்   அக்கம்பக்கத்தில் அதே அளவில் இருக்கும் வீடுகள்,  கடைகள் ஆகியவற்றுக்கு என்ன வரி விதிக்கப்படுகிறதோ,  அதையே இந்த உரிமையாளர்களும் கொடுக்க வேண்டும்.

ராணுவத்தினர் வசிக்கும் வீடுகள்,  பங்களாக்கள்,  கட்டிடங்கள்  ஆகியவற்றுக்கு இந்த வரி கிடையாது.  மத வழிபாட்டு கட்டடங்கள்,  வீடுகளுக்கு இந்த வரி கிடையாது.  ஆட்கள் குடியிருக்காத  வீடுகள்,  வியாபாரம் நடக்காத  கடைகள் ஆகியவற்றுக்கும் வரி கிடையாது.  மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி வசூலிக்கப்பட வேண்டும்.  உரிய தொகை செலுத்தப்படவில்லை என்றால் அந்த வீடு அல்லது கடை விற்கப்பட்டு, வரி பாக்கித் தொகையானது அதிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.  அப்போதும் அந்த வரி பாக்கி முழுவதுமாக கிடைக்கவில்லை என்றால் அந்த உரிமையாளரிடம் இருக்கும் பொருள்கள்,  கால்நடைகள் ஆகியவற்றைப் பெற்று அந்த வரி பாக்கியாகப் பெற்றுக்கொள்ளலாம். 

முறைகேடான வரிவிதிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடலாம்  என்று சொல்லப் பட்டிருந்தாலும்,  அப்படியான விண்ணப்பங்களை  முடக்கும் நோக்கில்,  தவறான விண்ணப்பங்களுக்கு  அபராதம் விதிக்கும் அதிகாரம் மேஜிஸ்ட்ரேட்டுக்கு  உண்டு என்றும் சொல்லப்பட்டிருந்தது. அந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து பார்க்கும்போது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாக இருந்தால்  சூழ்நிலைக்கு ஏற்ப அபராதம் விதிக்கலாம் என்றும் சொல்லி இருந்தது.

இப்படியான மொத்த வரி வருவாயில் 5 சதவிகிதம் மாவட்ட கலெக்டருக்கு கமிஷனாகத் தரப்பட்டது.  அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தில் இது  மிகவும் சகஜமான விஷயமாகவே இருந்தது.  மொத்த நில வருவாயிலும்  ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அவர்களுக்கு ஏற்கனவே கமிஷனாகத் தரப்பட்டு வந்தது.

இந்த புதிய  வரியின் மூலம் ஆண்டுக்கு மூன்று லட்சம் ரூபாய் அரசுக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஒருவகையில் இதே பெரிய தொகை தான்.  அதே காலகட்டத்தில் கொண்டுவரப்பட்ட  புதிய வரிகள்  அல்லது ஏற்கனவே இருந்த வரிகளுடன் சேர்க்கப்பட்டவை  இவற்றின் மூலமாகக்  கிடைத்த ஒட்டுமொத்த வருவாயில் இந்த வீட்டு வரிகள் வெறும் 10 % மட்டுமே இருந்தன. பெங்கால் பிரசிடென்சியில் 1810-11  ஆண்டுக்கான மொத்த வரி வசூல் 10.68 கோடியாக இருந்தது.  அதில் பெரும்பகுதி  கிராமப்புறங்களில் இருந்தே கிடைத்தது.  இந்த வீட்டு வரி அதனோடு ஒப்பிடும்போது மிகவும் குறைவானது தான்.  ஆனால் அந்தக் காலகட்டத்தில் விதிக்கப்பட்ட வேறு பல விதிகளோடு சேர்த்து பார்க்கும்போது நகரப்பகுதிகளில் புதிய வரிகள்  கூடுதலாக விதிக்கப்பட்டிருந்தன.  அதுதொடர்பான அதிருப்திகள் எல்லாம் ஒன்று குவியும் புள்ளியாக இந்த வீட்டு வரி  இருந்தது.

பனாரஸ் நிகழ்வுகள்

பனாரஸில் முதலில் போராட்டம் ஆரம்பித்தது.  வட இந்தியாவில் அப்போது இருந்த நகரங்களிலேயே மிகவும் பெரியது அரசு இதுதான்.  பாரம்பரிய அமைப்புகள் பாதுகாக்கப்பட்டு,  செயலூக்கத்துடன் இருந்ததும் இங்குதான். எனவே அங்கு போராட்டம் ஆரம்பித்தது என்பது மிகவும் இயல்பான விஷயம்தான்.  அத்துடன் அதிலிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் வீட்டு வரி சட்டத்தை மிகவும் தீவிரமாக அமல்படுத்த  முயன்றதும் போராட்டத்துக்கு ஒரு காரணமாக இருந்தது.

அந்த வரிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட வாதங்கள்  எல்லாம் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடிதப் பரிமாற்றங்கள்,  பனாரஸ் வாசிகள் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு (அதில் எழுதப்பட்டிருந்த வாக்கியங்களும் பாணியும்   ‘மரியாதைக் குறைவாக’ இருந்ததாகச் சொல்லப்பட்டு அந்த வழக்கு ரத்து செய்யப்பட்டது)  ஆகியவற்றிலிருந்து  நமக்கு தெரிய வருகின்றன *23.

முந்தைய சுல்தான்கள் வீடுகளின் மீது வரி விதித்து இருக்கவே இல்லை.  அவர்களுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில்  வாரிசுரிமை மூலமாகவோ  விலைக்கு வாங்கியதன் மூலமாகவோ  ஒருவருக்கு கிடைத்த வீட்டுக்கு முந்தைய அரசுகள் வரி  விதித்திருக்கவே இல்லை. சொத்துக்களை விற்கும் போதும் உரிமையாளர்கள் விற்பனை வரியில் இருந்தும்  விலக்கு அளிக்கப்பட்டிருந்தனர். 

எனவே இந்த புதிய வரியானது ஒட்டுமொத்த சமூகத்தின்  உரிமையில் குறிப்பிடுவதாக இருக்கிறது.  நீதி பரிபாலனத்தின் முக்கிய குறிக்கோள்களை மீறுவதாக இருக்கிறது. இந்த வீட்டு வரியானது  காவல் துறையினரின் செலவுகளைச் சமாளிப்பதற்காகத்  கொண்டு வரப்பட்டிருக்கிறது என்பது நன்கு தெரிகிறது. வங்காளத்திலும் பீகாரிலும்  காவல்துறையின் செலவுகள்  ஸ்டாம்ப் டியூட்டி,  மற்றும் பிற வரிகளின் மூலமாக ஈடு கட்டப்படுகின்றன.   பனாரஸில் காவல் துறையின் செலவுகள் நில வருவாயிலிருந்து  (Malgoozaree) ஈடு கட்டப்பட்டன. அப்படி என்றால் இந்த புதிய வரி எதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டது?

சாஸ்திரங்களின் படி பார்த்தால் பனாரஸ் முழுவதுமே  புண்ணிய பூமி.  வழிபாட்டுக்கு உரியது.  ரெகுலேஷன் 15, 1810 -ன்படி  வழிபாட்டு மையங்களுக்கு  வரி கிடையாது.

பனாரஸில்  சுமார் 50,000  வீடுகள் உள்ளன.  இதில் மூன்றில் ஒரு பங்கு ஹிந்துக்கள்,  முஸ்லிம்கள், மற்றும் பிற சமயப் பிரிவினர் ஆகியோரின் வழிபாட்டு இடங்களாக திகழ்கின்றன.  ஹிந்துக்களும் முஸ்லிம்களும் தானமாகக் கொடுத்த வீடுகள் அவை.  எஞ்சிய வீடுகளில் இருந்து கிடைக்கும்  சொற்ப வரியை வைத்து பதுக்பந்தி (Phatuckbundee.) செலவுகளை மட்டுமே ஈடுகட்ட முடியும்.  இப்படியான நிலையில் இந்த புதிய வரியானது பலர் மீது மிகுந்த நெருக்கடியை உருவாக்குவதோடு அரசின் நல்லெண்ணத்துக்கு  விரோதமாகவுமே  இருக்கப்போகிறது.

பல வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடு பழுதுபட்டால் அதைச் சரி செய்யவும்  புதிதாக கட்டவோ  முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள். மேலும் பலரோ அந்த வீடுகளில் இருந்து கிடைக்கும்  வாடகையை வைத்துதான்  தங்கள் குடும்பத்தையே கஷ்டப்பட்டு ஓட்டி வருகிறார்கள்.  அப்படியானவர்கள் எப்படி இந்த வரியைக் கொடுக்க முடியும்?

இந்த நலிவடைந்த விண்ணப்பதாரர்களின் நலனையும் மகிழ்ச்சியையும் வளர்த்து எடுப்பதற்குப் பதிலாக எங்களுக்குத் தொடர்ந்து பல நெருக்கடிகள் தரப்படுகின்றன.  பல்வேறு சலுகைகளிலிருந்து  விலக்கப்பட்டிருக்கிறோம். ஆதாயங்களை ஈட்டிக் கொள்வதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கிறோம்.  அத்துடன் பல்வேறு கடுமையான கெடுபிடிகள் எங்கள் மீது சுமத்தப்படுகின்றன.  காலப்போக்கில் அது மேலும் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

வாழ்வாதாரங்களைக் கவனித்துக் கொள்ளுதல் சிரமமாகிவருகிறது.  முத்திரைப் பதிவு வரிகள், கோர்ட் வரிகள், பத்து மடங்கு பெருக்கப்பட்டிருக்கும் நகராட்சி வரிகள் போன்றவையெல்லாம் ஏழை- பணக்காரர் என அனைவரையும் பாதித்து வருகின்றன.  இந்தப் புதிய வரியானது  காயத்தின் மீது உப்பைத் தடவுவது போல இருக்கிறது; ஹிந்துக்கள், முஸ்லிம்கள் இரு தரப்பினருக்குமே பெரும் வேதனையைத் தருகின்றது. இதுபோன்ற வரிவிதிப்புகளினால்  அத்தியாவசியப் பொருள்களின் விலையானது கடந்த 10 ஆண்டுகளில் பதினாறு மடங்கு அதிகரித்து விட்டிருக்கிறது.  இதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும். வேறு வாழ்வாதாரம் இல்லாத எங்களுக்கு இந்த வரியை எப்படி கொடுக்க முடியும்?

பனாரஸில் இருந்த   பிரிட்டிஷ் அதிகாரிகள்தான் முதன்முதலில் இந்த வரியை அமல்படுத்த முன்வந்திருக்கிறார்கள்.  நகர நிர்வாக அமைப்பும்,  ராணுவக் கட்டமைப்பும் வலுவாக இருந்ததனால் அங்கு இது சாத்தியமாகியிருக்கும். பனாரஸ் கலெக்டர் அந்த ரெகுலேஷனைக் கொண்டு வந்த ஏழே வாரத்துக்குள்  அதிவிரைவாக அந்தச் சட்டத்தை அமல்படுத்த அந்த அதிகாரிகள் முன்வந்ததற்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருந்திருக்கலாம்.  ஆனால் அதிகாரிகள் வரி விதிப்பு, வசூலிப்புப் பணிகளை மிக விரிவாக ஆரம்பித்துவிட்டிருந்தனர். 

நவம்பர் 26 அன்று கலெக்டர்,  தான் செய்யவிருந்தவை பற்றி மேஜிஸ்ட்ரேட்டுக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.  ஒவ்வொரு வீட்டுக்கும்  எவ்வளவு வரி கட்ட வேண்டும் என்ற மதிப்பீட்டை ஆரம்பிக்கப் போவதாகவும்,  பல்வேறு தானாக்களில் இந்தச் சட்டம் தொடர்பான நகலை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும்படியும்  கேட்டுக்கொண்டிருந்தார். மொஹல்லாக்களில் தனது பணியாளர்கள் சென்று வீடுகளின் வ ரி மதிப்பீட்டைச் செய்யும்போது காவலர்களின் உதவி தேவை என்றும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதரும்படியும் மேஜிஸ்ட்ரேட்டிடம் கேட்டுக்கொண்டிருந்தார். 

டிசம்பர் 6 அன்று  கலெக்டர்,  கூடுதல் விவரங்களைத் தந்ததோடு, தானாதாரர்களிடமிருந்து  உடனடி உதவிகள் கிடைக்க வழி செய்யும்படி மாஜிஸ்ட்ரேட்டுக்கு  இன்னொரு கடிதம் அனுப்பியிருந்தார்.  தற்காலிக மேஜிஸ்ட்ரேட் ஆக இருந்தவர்  டிசம்பர் 11 அன்று கலெக்டருக்கு அனுப்பிய கடிதத்தில்,  தான் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றி தெரிவித்திருந்தார். அத்துடன்  வரி மதிப்பீடு செய்யப் போகிறவர்களுக்கு காவலர்களின் உதவி இப்போதைக்கு தேவைப்படாது என்றும் தெரிவித்திருந்தார்.  அதேநேரம்,   “உங்களுடைய பணியாளர்கள்  சட்டபூர்வமான செயல்களைச் செய்யும்போது வீட்டு உரிமையாளர்கள் யாரேனும் எந்த வகையிலாவது தடங்கல்கள் ஏற்படுத்தினால்,  அது பற்றிய தகவலை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்.  நான் உடனே   உங்களுக்கு உதவும்படி காவல் துறை அதிகாரிகளுக்கு  உரிய உத்தரவு இடுவேன்”  என்றும் தெரிவித்திருந்தார்.

வரிவிதிப்பு தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பமாகின.  அதைத் தொடர்ந்து எதிர்ப்புகளும் உடனே கிளம்பின.  தற்காலிக மாஜிஸ்ட்ரேட் கல்கத்தா பிரஸிடென்ஸிக்கு டிசம்பர் 25 -ல் கடிதம் எழுதினார். 

 “மாண்புமிகு கவர்னர் ஜெனரல் இன் சீஃபுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்கவில்லையென்றால் நான் தவறு செய்தவனாகிவிடுவேன். ரெகுலேஷன் 15, 1810 அமலாக்கப்படுவதைத் தொடர்ந்து இந்த நகரத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். நிலைமை மிகவும் மோசமாகிவருகிறது” இந்தப் போராட்டத்தின் பின்னணி பற்றிய தகவல்களைக் கொடுத்த பின்னர் மேலும் எழுதுகிறார்:

 “மக்கள் பெரும் கூச்சலிடுகிறார்கள். கடைகள் அனைத்தையும் மூடிவிட்டார்கள். தமது பணிகளை நிறுத்திவிட்டார்கள். பெருமளவிலான எண்ணிக்கையில் கூட்டமாகக் கூடி  அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று என்னை வறுபுறுத்துகிறார்கள். கலெக்டருக்கு உத்தரவிட்டு வரி மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்தச் சொல்லும்படிக் கேட்கிறார்கள். அவர்களுடைய கோரிக்கை நியாயமானதாக எனக்குத் தோன்றவில்லை. அவர்கள் தரும் கோரிக்கை மனுவை அரசுக்கு அனுப்பிவைக்கிறேன் என்றும் அரசிடமிருந்து உத்தரவு வரும்வரை வரி மதிப்பீட்டுப் பணிகள் தொடரட்டும் என்றும் சொன்னேன். அப்படி அந்தப் பணிகளை யாரேனும் தடுத்தால் அவர்களுக்கு எதிராக நான் நடவடிக்கை எடுப்பேன் என்றும் சொன்னேன். அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்தால், நாளை அரசு அந்த வரியை ரத்து செய்யாமல் போகும்போது இப்போது இருக்கும் அதிருப்தியோடு அதுவும் பல மடங்கு நெருக்கடிகளையே உருவாக்கும்.”

மூன்று நாட்களுக்குப் பின்னர், 28 அன்று வேறொரு அறிக்கை சமர்ப்பித்தார்:

 “இந்தக் கலகக் குழுவானது 20ஆம் தேதி மாலையில் இருந்து பல்வேறு இடங்களில் இருந்து வந்து குழுமியிருக்கிறார்கள். படைவீரர்களின் தலைகளைப் பார்த்ததும்  அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். 26 ஆம் தேதி காலை வரை யாரும் மீண்டும் வரவில்லை. எனவே அனைவரும் அமைதியாகத் தத்தமது பணிகளுக்குத் திரும்பிவிடுவார்கள் என்று நம்பினேன்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

 ஆனால், அன்று மதியமே மீண்டும் கூட்டம் கூடியது. ஹிந்துக்கள், முஸ்லிம்கள், அனைத்து வகுப்பினரும் ஒரே குரலில் உறுதியுடன் நின்றனர். நான் கலெக்டருக்கு உத்தரவிட்டு வரி மதிப்பீட்டுப் பணியாளர்களை அந்தப் பணியில் இருந்து நிறுத்திவைக்க வேண்டும். அந்த வரியானது ரத்து செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை நான் அவர்களுக்குத் தர வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்கள் அப்படிக் கூக்குரலிட்டு ஒரே இடத்தில் குழுமி நின்று சதி வேலையில் ஈடுபடுவதால், நான் அவர்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்துவிடுவேன் என்று நினைக்கிறார்கள்.  இரும்புக் கொல்லர்கள், வீட்டு வேலைக்காரர்கள், ஹஜாம்கள், தர்சீக்கள், காகர்கள், பேரர்கள் என அனைத்துத் தொழிலாளர் வர்க்கமும் ஒரே மனதுடன் இந்தச் சதி வேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள். 26ஆம் தேதியன்று எரிப்பதற்குக் கொண்டுவரப்பட்ட பிணங்கள் கூட கங்கைக் கரையில் அநாதையாகக் கைவிடப்பட்டுக் கிடந்தன. இறுதிச் சடங்குப் பணிகளைச் செய்வதற்கு உரியவர்கள் யாரும் அதற்கு முன்வரவில்லை. பல்வேறு வர்க்கங்களைச் சேர்ந்த மக்கள், நகரின் ஒரு இடத்தில் கூடிவிட்டிருக்கிறார்கள் . நான் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றினால் ஒழிய அங்கிருந்து நகர மாட்டோம் என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்கள்.”

டிசம்பர் 31 அன்று தற்ஆலிக மாஜிஸ்ட்ரேட் வேறொரு கடிதம் அனுப்பியிருந்தார்:

 “ஆயிரக்கணக்கான மக்கள் பகலும் இரவுமாக குறிப்பிட்ட இடத்தில் வந்து குழுமியவண்ணம் இருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் சேர மறுப்பவர்களுக்கு அவர்கள் அபராதம் விதிக்கிறார்கள். புதிய வரிக்கு எதிரான இந்த எதிர்ப்பானது எந்த அளவுக்குப் போயிருக்கிறதென்றால் யாரேனும் ஒரு தனி நபர் இந்தச் சதி வேலையில் இருந்து விலகத் தீர்மானித்தால் அனைவராலும் அவமானப்படுத்தப்படுவதோடு ஜாதியில் இருந்து விலக்கியும் வைக்கப்பட்டுவிடுகிறார்.”

இந்தச்  ‘சதி வேலையானது’  அதிகாரிகள் பல முயற்சிகள் எடுத்த பின்னரும் நிற்காமல் தொடர்ந்து நடந்தது. இதனிடையில் தற்காலிக மாஜிஸ்ட்ரேட் கலெக்டருக்கும் மூத்த நீதிபதி ஒருவருக்கும் கடிதம் எழுதினார். தமது பயணத்தை முடித்துக்கொண்டு உடனே வரும்படி அதில் கேட்டுக் கொண்டார். அந்த மூத்த நீதிபதிக்கு பனாரஸின் மன்னரிடமும் அந்த நகரத்தின் முக்கிய நபர்களிடமும் நல்ல செல்வாக்கு இருந்தது. கலெக்டர் ஜனவரி, 1, 1811 அன்றூ தனது பயணத்தை முடித்துக்கொண்டு கல்கத்தா பிரஸிடன்ஸியின் தலைமைப் பொறுப்பில் இருந்தவரைச் சந்திக்க வந்தார். தற்காலிக மாஜிஸ்ட்ரேட் கீழ்க்கண்டவாறு அறிக்கை சமர்ப்பித்தார்:

 “வீட்டு வரிக்கு எதிரான கும்பலானது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மிக மோசமான நிலைமையை இப்போது எட்டிவிட்டது. மக்கள் நகரங்களையும் பணியையும் விட்டுவிட்டு அந்த இடத்தில் குழுமுகிறார்கள். அரசிடமிருந்து சாதகமான பதில் கிடக்கும் வரை அங்கேயே இருக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.  நானும் அந்தப் அப்குதியின் பிற அரசு அதிகாரிகளும் என்னதான் சமாதானம் சொன்னாலும் எந்தப் பலனும் இல்லை.

இந்தக் கும்பலின் செல்வாக்கு அந்தப் பிராந்தியம் முழுவதிலும் பரவுவதாக நம்ப இடம் இருக்கிறது. வேறொரு கோரிக்கையை முன்வைத்து அணிதிரண்ட இரும்புக் கொல்லர்கள் இந்தச் சதியில் முன்னணி இடத்தை எடுத்துக்கொண்டனர். அந்தப் பிராந்ந்தியத்தில் இருந்த அனைத்து ஊர்களில் இருந்தும் அனைத்துக் கொல்லர்களும் இங்கு வந்துவிட்டனர். இதன் காரனமாக ரயத்துகளுக்கு விவசாயப் பணிகளில் மிகப் பெரிய கஷ்டங்கள் வரத் தொடங்கியிருக்கிறது. அதிருப்தியாளர்களின் என்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே நேரம், பனாரஸில் நடக்கும் போராட்டத்துக்கு ஆதரவாக இந்தப்  பிராந்தியத்தில் வசிப்பவர் அனைவருமே அணிதிரண்டு கொண்டிருக்கிறார்கள்.”

அதே நாளில் கலெக்டரும் நடந்தவை பற்றி விரிவாக ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறார்:

 “எனக்குக் கிடைத்த தகவலின் படி சுமார் 20,000 பேர் ஒன்றாகக் கூடி அமர்ந்து போராட்டம் (தர்ணா என்று அதை அழைக்கலாம்) செய்கிறார்கள். புதிய வரி ரத்து செய்யப்படாதது வரை அந்த இடத்தைவிட்டு அகல மாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். பக்கத்து ஊரகப் பகுதிகளில் இருந்து ஒவ்வொரு ஜாதியினரும் சக ஜாதியினரை இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்கும்படிக் கேட்டுக் கொள்வதால் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தப் போராட்டக்காரர்களில் எந்தக் குழு மிகவும் தீவிரமாக இருக்கிறது; எந்த ஒரு குழு மற்றவர்களைவிட அதிக அத்துமீறலைச் செய்கிறது என்று பார்த்தால் இரும்புக் கொல்லர்கள் குழுவைத்தான் சொல்ல வேண்டும். அவர்கள்தான் அக்கம்பக்கத்தில் தமது ஆட்களை அணி திரட்டி இந்தப் போராட்டத்தை முதலில் ஆரம்பித்தனர். அதோடு நில்லாமல் இந்தப் பிராந்தியத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்த அனைத்து இரும்புக் கொல்லர்களையும் இந்தப் போராட்டத்தில் இறக்கவைத்துள்ளனர். விவசாய அறுவடைப் பணிகளை எல்லாம் (அறுவடைக் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது)  முடக்கத் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஜமீந்தார்களும் ரயத்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ இந்த வரியை ரத்து செய்யும்படி நம்மை நிர்பந்திக்கும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த இரும்புக் கொல்லர்களும் பிற அனைத்து ஜாதியினரும்,  அனைத்து வகுப்பினரும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் மிகுந்த பிணைப்புடன் இந்த உறுதி மொழியில் உறுதியாக நிற்கிறார்கள்.

வெளிப்படையான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது என்பது  இப்போதைக்கு அவர்களுடைய இலக்காக இல்லை. ஆயுதங்களை கையில் எடுக்காமல் இருப்பதன் மூலம் தங்களுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைக்கும்;  இப்படியான அமைதியான போராட்டக்காரர்களை அரசு பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு நிச்சயமாகத் தாக்காது என்று நம்புபவர்களாகவே இருக்கிறார்கள்.  அந்த நம்பிக்கையினால் நாளுக்கு நாள் அவர்களுடைய எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது.” 

பிற நகரங்களுக்கும் இந்தப் போராட்டத்துக்கும் இடையிலான தொடர்பு பற்றிக் கீழ்க்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்:

 “நம்பகமான நபர்களிடமிருந்து எனக்குத் தெரியவந்திருக்கும் விஷயம் என்னவென்றால், பாட்னாவில் வசிப்பவர்கள் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டுங்கள் என்று கேட்டு பனாரஸ் போராட்டக்காரர்களுக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். அது பனாரஸைவிடப் பெரியது. பனாரஸ்காரர்களுக்கு தமது கோரிக்கையை வலுவாக முன்னெடுக்க வழி பிறந்துவிடும். அஸிமாபாத்தும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டால் அவர்களுக்கும் வீட்டு வரியை ரத்து செய்யவேண்டி வந்துவிடும். பனாரஸ் மட்டும் கேட்டுக் கொண்டால் பாட்னா உடனே இதுபோல போராட்டத்தில் இறங்கிவிடும்.”

ஜனவரி நாலாம் தேதி வாக்கில் நிலைமை கொஞ்சம் நிதானமானதுபோல இருந்தது. நகரின் முக்கியமான நபர்கள் சிலரிடம் இருந்து கிடைத்த உதவிகளின் மூலம் இரும்புக் கொல்லர்கள் அனைவரையும் பணிக்குத் திரும்ப அழைக்கும்படி நில உடமையாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க தற்காலிக மேஜிஸ்ட்ரேட்டினால் முடிந்திருந்தது. எனினும் அவர் கூறியிருப்பதாவது:

 “நிலைமை கொஞ்சம் நிதானமடைந்திருக்கிறது. என்றாலும் பெரிதாக எதையும் நம்பிவிட முடியாது.  இந்த மக்களின் மதக் கட்டமைப்பு, முக்கிய, மரியாதைக்குரிய நபர்கள் எல்லாரும் தமது தீர்மானத்தில் உறுதியுடன் இருக்கிறார்கள். என்னவிதமான அச்சுறுத்தலுக்கும் சமாதானத்துக்கும் இடம்கொடுக்காமல் இருக்கும்படி இந்தக் குழுவினரை வழிநடத்திவருகிறார்கள். ஒவ்வொரு வர்க்கத்தின் முக்கிய நபர்கள் எல்லாம் இந்தக் கூட்டத்தில் இருந்து விலகிச் செல்ல விரும்பும் நபர்களை அவரவர் ஜாதியில் இருந்து வெளியேற்றியாக வேண்டியிருக்கிறது. ஊர் முழுவதும் தமது ஒற்றர்களை அனுப்பி இந்தக் கும்பலில் இருந்து வெளியேறுபவர்களைப் பிடித்து இழுத்து வருகிறார்கள். நான் அப்படியான செயலில் ஈடுபடுபவர்களுக்குக் கடுமையான தண்டனைகள் தந்தேன். இருந்தும் மற்றவர்கள் அப்படியான தவறுகளைச் செய்வதில் இருந்து அது தடுக்கவில்லை.”

ஜனவரி எட்டாம் தேதியன்று, நிலைமை வெகுவாக மாறியது.  “அரசுக்கு எதிராக இப்படியான கலகத்தை இனியும் தொடர்ந்து முன்னெடுத்தால் என்னவிதமான பின்விளைவுகள் ஏற்படும் என்று இந்த நகரவாசிகள் மெள்ள உணர ஆரம்பித்தனர்” என்று தற்காலிக மாஜிஸ்ட்ரேட்,  ‘மிகுந்த மன நிறைவுடன்’ ஓர் அறிக்கையை அனுப்பினார்.  ‘அபாயகரமான சூழலை’ விவரித்துவிட்டு, தான் அதை வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டதாக நினைத்த அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “அனைத்துத் தரப்பு மக்களும் நகரத்தில் ஒரு பகுதியில் ஒன்று கூடி, தமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் ஒழிய அந்த இடத்தை விட்டு நகரக் கூடாது என்று உறுதிமொழி எடுத்திருந்தனர். நாள்தோறும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒவ்வொரு கிராமத்துக்கும் தூதுவர்களை அனுப்பி போராட்டச் செய்தியைக் கொண்டு சேர்த்தனர். வீட்டுக்கு ஒருவர் பனாரஸில் நடக்கும் போராட்டத்தில் பங்கெடுக்கும்படிக் கேட்டுக்கொண்டனர். ஆயிரக்கணக்கான இரும்புக் கொல்லர்கள், கூன்பிகள், கொரீயர்கள் தமது வீடுகளில் இருந்து புறப்பட்டு இந்தக் கூட்டத்தில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். அதேநேரம், நகரத்தில் இருந்து பலர் வெளியேறவும் தொடங்கினர். பணிகளை முடக்க விரும்பாதவர்களை வற்புறுத்தி வேலையை நிறுத்த வைத்தனர். அனைவராலும் அவமானப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும் கூட்டத்தில் பங்கெடுக்காவிட்டால் தரப்படும் தண்டனைகளில் இருந்து தப்பவும் சிலர் ஊரை விட்டு வெளியேறினர். ஒவ்வொரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தனர். கணிசமான தொகை சேகரிக்கப்பட்டது. போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுடைய குடும்பத்தினருடைய தேவைகளை அந்தப் பணம் கொண்டு பூர்த்தி செய்தனர்.

இப்படி கூட்டமாக கூடியவர்களுக்கு போதுமான உணவுப் பொருட்கள், சமைப்பதற்கான விறகுகள் எல்லாம் தரப்பட்டன. நகரத்தில் தானியம் தவிர வேறு எதுவுமே வாங்க முடியாத நிலை இருந்தது. மத அமைப்புகள் தமது முழு சக்தியையும் பயன்படுத்தி, மக்கள் ஒற்றுமையாக தங்களுடைய முடிவுகளில் வலுவுடன் இருப்பதற்கு உதவி வந்தனர். அந்தக் கூட்டத்திலிருந்து விலகி வரும் தைரியம் பெற்றிருந்த ஒரு சிலரை கூட அவமானத்தில் இருந்தும்,  ஓரங்கட்டப்படுவதிலிருந்தும்  காப்பாற்ற முடியாமல் காவலர்கள் தவித்தனர்.”

போராட்டத்தில் பரிசல் காரர்களின் பங்குபற்றி  கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

                “இந்தச் சதி வேலையில் பரிசல் காரர்களும் இழுக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு மிகப் பெரிய அளவில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.  மறு கரையுடனான  தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டு விட்டன. படகுப் போக்குவரத்தை முடக்கி இருக்கும் நபர்களின் படகுகளை அரசாங்கம் பறிமுதல் செய்யும் என்று நான் அறிவித்தேன். அதனால் பரிசல் காரர்கள் உடனே பணிக்கு திரும்பிவிட்டார்கள்.  அதுபோல காவல் துறையினர் கும்பல்கள் கூட்டுவதைச்  செய்துவரும் பல்வேறு வகுப்புகளை சேர்ந்த சிலரை கைது  செய்துள்ளனர். அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையும் தரப்பட்டுள்ளன.  கூட்டத்தில் மேலும் அதிக ஆட்கள்  சேர்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.”

வேறு சில விஷயங்கள் பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தார்.   “அனைவருமே தளர்ந்தும் வறுமையில் ஆழ்ந்தும்விட்டிருக்கிறார்கள்.  ‘கூட்டத்தினர் கலைந்து சென்றால்தான்  அரசாங்கத்திடம்  இருந்து  சாதகமாக எதையாவது எதிர்பார்க்க முடியும்’  என்று நான் சொன்ன ஆலோசனை பலருக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே குறையத் தொடங்கியிருக்கும் கூட்டமானது இன்னும் சில நாட்களில் முற்றாக்க் கலைந்து போய்விடும்” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

முந்தைய பதற்றமான நிலை குறித்த அறிக்கைகள் கல்கத்தாவுக்குச்  சென்று சேர்ந்திருந்தன.  ஜனவரி 5ஆம் தேதி கவர்னர் ஜெனரல் இன் கவுன்சில் முதன்முதலாக இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினார்.  டிசம்பர் 31 தேதி வரையிலும் அனுப்பப்பட்ட அறிக்கைகள்,  பனாரஸ்ஸில் இருந்த போராட்டக்காரர்களின் விண்ணப்பம்  ஆகியவற்றையெல்லாம்  படித்துப் பார்த்த பின்  தனது முடிவை தெரிவித்தார்.   ‘வீட்டு வரியை ரத்து செய்வதற்கு  எந்த ஒரு நியாயமான காரணமும் இல்லை.  மக்களுடைய போராட்டம் மற்றும் கூக்குரலைக் கேட்டு ஒரு வரியை விலக்கிக் கொள்வது என்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல.  வேறு எந்தக் கொள்கை முடிவும்  அந்த வரியை நீக்கும்படி வழி காட்டவும் இல்லை’ என்று அரசு தெரிவித்தது.  மேஜிஸ்ட்ரேட் எடுத்த நடவடிக்கைகள்  சரிதான் என்று சொன்ன அரசு  மேலும் கீழ்க்கண்டவாறு தெரிவித்தது: 

 “இனியும் அரசை எதிர்த்து இதுபோல ஏதேனும் எதிர்ப்பைத் தெரிவித்தால்  மிகக் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு,  எச்சரிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மக்களுடைய ஒவ்வொரு உரிமைகளையும் பாதுகாக்கும் நோக்கில் அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்.  அதேநேரம்  சட்டவிரோதமாகக் கூட்டமாக கூடி கூச்சலிட்டு பிற  தவறான செயல்களைச் செய்து  விண்ணப்பங்கள் கொடுத்தால் எல்லாம் கவர்னர் ஜெனரல்   மசிந்து விடமாட்டார்.”

 ‘நியாயமான நடவடிக்கைகள்’  என்று சொன்னது என்னவென்றால், மக்கள் நுழைவாயில், வேலிகள் ஆகியவற்றைச் சரி செய்தல்,  ஊர்க்காவலர்களுக்கு  சம்பளம் தருதல் ஆகியவற்றுக்காக மக்கள் தாமாகவே தமக்குள்ளாகவே சேகரித்துக் கொடுத்துவந்த  ‘பதுகபந்தி’ தொகையை  இனிமேல் தர வேண்டாம்.    அரசாங்கமே அவற்றையெல்லாம் இனிமேல் பார்த்துக் கொள்ளும். ராணுவ அதிகாரிகளுடன் பேசி முடித்த பின்பும்,  தேவையான பிற ஏற்பாடுகள் செய்த பின்பும் இந்த்த் தகவல் மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்று தீர்மானமானது.

ஜனவரி இரண்டாம் தேதி அனுப்பப்பட்ட அறிக்கையில் நிலைமை மோசமானதைப் பற்றித்  தெரிவிக்கப் பட்டிருந்தது.  அரசாங்கம் ஏழாம் தேதி அனுப்பிய பதிலில் ராணுவத்தைப் பயன்படுத்தும் வழிமுறை பற்றித் தெரிவித்திருந்தது.  “மக்களை அமைதி நிலைக்குக் கொண்டுவர  அரசாங்க அதிகாரி  ஓர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.  இதுபோன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டால் என்னவிதமான மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.”

 புதிய வரியை நீக்குவதற்கு எந்த ஒரு நியாயமான காரணமும்  இருப்பதாக கருதவில்லை என்று  அரசு தெரிவித்ததோடு,  “வரி வசூலிப்பை  முன்னெடுக்க மாஜிஸ்ட்ரேட்டுக்கும் கலெக்டருக்கும்  தேவையான உதவிகளை ராணுவம் செய்துதர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தது.  மேலும், 

 “கவர்னர் ஜெனரல் இன் சீஃப்  மிகுந்த அக்கறையுடன் ஓர் எச்சரிக்கை விட வேண்டிய பொறுப்பு இருப்பதாக உணருகிறது. சமூகத்தில் குழப்பம் விளைவிக்கும் சக்திகள்  இனிமேலும் இதைத் தொடர்ந்தால் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.  நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.  அனைத்து வகுப்பு மக்களுக்கும் உரிய பாதுகாப்பு தரப்படும்.  அதேநேரம் சட்டவிரோதமான கும்பல் கூடுதல்,  கூச்சல், குழப்பம் விளைவித்தல்  போன்றவற்றை நியாயமான கடுமையான முறையில் ஒடுக்கும் பொறுப்பை  அரசு ஒருபோதும் கைவிடாது.”

ஜனவரி ஏழாம் தேதிக்கும், அரசாங்கம் தனது தீர்மானத்தை அறிவித்த ஜனவரி 11க்கும் இடையில், கவர்னர் ஜெனரல்  இன் சீஃபுக்கு வேறொரு விஷயம் தோன்றியது.   ‘நிதானமாக ஆராய்ந்து பார்த்தபோது  புதிய வரியில்  சில மாறுதல்கள் தேவை.  இந்த வரியினால்  அதிக அளவு பாதிக்கப்படவிருக்கும்  மக்களுடைய கோரிக்கையில் இருக்கும் நியாயங்கள்  கணக்கில் கொள்ளப்படும்’ என்று அவர் தெரிவித்தார். 

ஜனவரி நான்காம் தேதி மாஜிஸ்ட்ரேட் இடமிருந்து கிடைத்த ஓரளவுக்கு நம்பிக்கையூட்டும் அறிக்கையைப் பார்த்தபின், 11 ஆம் தேதி அன்று  இரண்டு கடிதங்கள் அனுப்பியது.  அதில்  பனாரஸில்  இருந்த  அதிகாரிகளுக்கு,  மத வழிபாட்டு மையங்களுக்கு வரியிலிருந்து விலக்கு தந்தது போலவே,  நலிவடைந்த நிலையில் இருக்கும் மக்களுடைய வீடுகளுக்கும் வரிவிலக்கு தரும்படி கேட்டுக் கொண்டது. அப்படியானவர்களுடைய வீட்டின் வரியானது அரசுக்கு பெருமளவுக்கு முக்கியமானதாக இருக்க முடியாது என்று தெரிவித்தது.  இந்தத் தீர்மானங்களை மக்களுக்குத் தெரிவிப்பது தொடர்பாக அந்த அறிக்கையில் கீழ்க்கண்டவாறு சொல்லப்பட்டிருந்தது: 

 “இந்தத் தீர்மானங்களை மக்களுக்குத் தெரிவிப்பதற்கு முன்னதாக அதை எப்படி இதமாகச் சொல்லலாம் என்று யோசித்துப் பார்க்கவும்.  அரசாங்கத்தின் அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமலும்  அவருடைய மரியாதையை இழக்காமலும் அந்த விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்.  மக்கள் மத்தியில் அரசின் மீது அப்படியான நம்பிக்கையும் மரியாதையும் இருப்பது மிகவும் அவசியம். குறிப்பாக இதுபோன்ற குழப்பங்கள் உருவாகி இருக்கும் நிலையில்  அரசு தன் கௌரவத்தை கட்டிக்காத்தாக வேண்டும்.”

அந்த அறிக்கை முடிவாக இப்படியாகச் சொன்னது:

                “மக்கள் சமீபத்தில் முன்னெடுத்த சட்டவிரோத குற்றச் செயல்பாடுகளைக் கைவிட்டுவிட்டு அரசுக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். அதன்மூலமே  அரசாங்கத்தின் நியாயமான,  அக்கறையான நடவடிக்கைகளுக்குப்  பொருத்தமான வர்களாக அவர்களாக முடியுமென்று லார்ட்ஷிப் இன் கவுன்சில் கருதுகிறது.”

பனாரஸ் வாசிகள் கொடுத்த விண்ணப்பத்தை முழுவதுமாக நிராகரித்து ஜனவரி 5ஆம் தேதி அரசு அனுப்பிய தீர்மானமானது 13 ஆம் தேதி அன்று மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.  14ஆம் தேதியிலிருந்து  ‘மக்கள் மீண்டும் கூட்டம் கூட தொடங்கிவிட்டனர்‘.  ஜனவரி 7ஆம் தேதி அரசு அனுப்பிய அறிக்கையானது இதனிடையில் வந்து சேர்ந்தது.  மக்களை அமைதி வழிக்கு கொண்டுவர  உதவும் என்ற நோக்கில் அதுவும் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. பதினெட்டாம் தேதி அன்று அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் மாஜிஸ்ட்ரேட் இதுபற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்: 

 “லக்னோவில் இருந்து படைகள் வந்து சேராமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று படைத்தளபதி தெரிவித்துவிட்டார்.  இதனிடையில் அரசு பதினோராம் தேதி என்று அனுப்பிய அறிக்கையும்  பனாரசுக்கு வந்து சேர்ந்தது.”

ஆனால் மக்கள் இதுபோன்ற நியாயமற்ற நடவடிக்கைகளை தொடர்ந்து எடுக்கும் வரையில் அரசின் அன்புக்கு அவர்கள் தகுதியானவர்களே அல்ல.  எனவே அரசு தீர்மானித்து இருக்கும் நல்ல முடிவுகளை மக்களுக்கு இப்போது சொல்ல முடியாது என்று மாஜிஸ்ட்ரேட் கருதினார்.

இரண்டு நாட்கள் கழித்து 20 ஆம் தேதி அன்று , ‘நிலைமையில்  சிறிது மாற்றம் இருப்பதாகவும்,  சாதகமான முடிவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும்’  மாஜிஸ்ட்ரேட் அரசுக்குக்  கடிதம் அனுப்பினார். கூடுதல் படைகள் வந்து சேரும் வரை காத்திருக்கலாம் என்று தீர்மானித்திருந்தார்.  ‘அரசின் உத்தரவுகளை’  தனக்கு சரியென்று தோன்றிய வகையில் அமல்படுத்த அவர் விரும்பினார்.   ‘கும்பல் கூடும் மக்களைக் கலைந்து போகச் செய்வது,  சட்டவிரோதமான,  கலகத்தனமான  செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது  ஆகியவையே நாளுக்கு நாள் முக்கியமான விஷயமாக ஆகிவருகிறது’  என்று அவர் தெரிவித்திருந்தார்.  மேலும் அந்த கடிதத்தில்,

  “அரசுக்கு எதிரான இப்படியான எதிர்ப்பை அனுமதிப்பது சரியல்ல. அரசின் வலிமை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது.  ஒரு நாட்டின் அரசின் மீது அதன் மக்கள் மரியாதை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம்.”  அதே கடிதத்தில் அவர் மேலும் தெரிவித்திருப்பது:

 “ரெகுலேஷன் XV, 1810ஐ பின்வாங்க முடியாது என்று அரசு தெரிவித்தபின்  அதை எதிர்த்து அனல் கக்கும் வார்த்தைகள் கொண்ட போஸ்டர்கள் தெருக்களில் ஒட்டப்பட்டன.  அவற்றின் இரண்டு நகல்களை உங்கள் பார்வைக்காக அனுப்பி வைத்திருக்கிறேன்.  அப்படியான செய்தியைக் கொண்ட காகிதங்களை வைத்திருப்பவர்களைப் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம் தருவதாக அறிவித்திருக்கிறேன். நிலைமையின் தீவிரம் உங்களுக்குப் புரிந்திருக்கும் என்பதால் நான் செய்தது சரியானதுதான் என்று ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.”

அரசு எடுத்த கடுமையான முயற்சிகளினால் மக்களின் ஒற்றுமையும் தன்னம்பிக்கையும் வலுவிழக்கத் தொடங்கின.  மாஜிஸ்ட்ரேட் மீது வைத்த நம்பிக்கை பொய்த்துப் போனது.  பனாரஸ் அதிகாரவர்க்கம் எடுத்த பல்வேறு முயற்சிகளின் விளைவுகள் ஒரு சில நாட்களிலேயே  தெரிய ஆரம்பித்தன.  கல்கத்தாவுக்கு  பனாரஸ் மக்கள்  புறப்பட்டுச் செல்வதென்று முடிவு செய்தனர்.  வீட்டு வரி தொடர்பாக ஒத்த சிந்தனை உள்ள ஊர்களின் ஊடாகச் செல்லத் தீர்மானித்தனர். ஒவ்வொரு வீட்டின் உரிமையாளர் அல்லது அவருடைய பிரதிநிதி வர வேண்டும்.  அல்லது கல்கத்தாவுக்குச்  செல்லும் குழுவுக்குத்  தேவையான பொருள் உதவியைத் தர வேண்டும் என்று தீர்மானிக்கப் பட்டிருப்பதாக மாஜிஸ்ட்ரேட் கடிதம் அனுப்பினார். மேலும் அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருந்தது:

 “ஒரு சிலர் அந்த பயணத்திற்குத் தயாராகிவிட்டனர்.  வழியில் தடுக்கப்படுவார்கள்  அல்லது அவர்கள் உறுதியாக நம்பக்கூடிய விஷயத்தில் தோற்றுப் போவார்கள் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.”

                இதனிடையில் பனாரஸ் மக்கள் இன்னொரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தனர்.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்:

23. மேற்கு வங்காள ஆவணக் காப்பகம்: பெங்கால் ஜுடிஷியல் கிரிமினல் ப்ரொசீடிங்ஸ், பிரவரி 8, 1811, ஒரிஜினல் கன்சல்டேஷன்ஸ், எண்: 6.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அழகிய போராட்டம் (பகுதி- 5)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 2 (தொடர்ச்சி)

“முறைகேடாக,  விதிமுறைகளை மீறி  ஒன்றுகூடி இருந்த மக்களிடமிருந்து இந்த விண்ணப்பம் தரப்பட்டிருக்கிறது.  இது மிகவும்  தவறானது.  அதோடு அதில் எழுதப்பட்டிருக்கும் வாக்கியங்களும் பாணியும் மிகவும் மரியாதைக் குறைவாக இருக்கிறது.  அதுவே அந்த விண்ணப்பத்தை ஏற்க முடியாது என்பதற்கு கூடுதல் காரணமாகத் இருக்கிறது”என்று மாஜிஸ்ட்ரேட் அதைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.

மாஜிஸ்ட்ரேட்டைப் பொருத்த வரையில், இப்படியாக நடந்து வரும் விஷயங்களெல்லாம்  ஒத்துழையாமையையே  உருவாக்குகின்றன.  மக்கள் மத்தியில் மிகப் பெரிய ஒழுங்கின்மையையே  கொண்டுவரும். இந்த நிலையில் சில வயதான மற்றும் விசுவாசமான பொது சேவைகள் நிலைமையை மேலும் மோசமாக்கும்.  அரசு தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றித் தரச் சொல்லி பனாரஸ் ராஜா மூலமாக முயற்சிகள் எடுத்துள்ளனர்.  மக்கள் ஓரளவுக்கு அமைதி படுத்தப்பட்டு விட்டிருக்கிறார்கள்.  எனினும் நிலைமை இன்னும் சீரடையவில்லை.  தற்காலிக  மாஜிஸ்ட்ரேட் தனது  ஜனவரி இருபத்தி எட்டாம் தேதி அறிக்கையில்,   ‘ஒரு பொது மன்னிப்பு வழங்கலாம்.  இந்த நகரத்தின் மனிதர்கள் அனைவரும் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார்கள்.  அரசாங்கத்தின் நலனுக்குத் தேவையானவை ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டது’  என்று  ஆலோசனை தெரிவித்திருக்கிறார் 

தற்காலிக  மாஜிஸ்ட்ரேட்டின்  இந்த அறிக்கையைப்  பெற்றுக்கொண்ட அரசு பிப்ரவரி 4ஆம் தேதி  மக்கள் அமைதி நிலைக்கு திரும்பியது குறித்து மிகுந்த சந்தோஷத்தைத்  தெரியப்படுத்தியது;  தற்காலிக  மாஜிஸ்ட்ரேட்டின் செயல்பாடுகளை வெகுவாகப் பாராட்டியது.  அரசுக்கு உதவியாக இருந்தவர்களுக்கு சிறப்புப் பட்டங்கள் தர முடிவு செய்யப்பட்டது.  ‘பதுக பந்தி’ வரியானது மாற்றப்படாமல் அப்படியே இருக்கட்டும். யாரெல்லாம் அதைச் செலுத்தி இருக்கிறார்களோ  அதே அளவுக்கான தொகையை அவர்கள் செலுத்தும்  வீட்டு வரியில்  இருந்து திருப்பிக் கொடுத்துவிடலாம் என்ற மாஜிஸ்ட்ரேட் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் அவர் சொன்ன பொதுமன்னிப்பு ஆலோசனையை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.  அதுபற்றி அரசு கூறியது:

 “சமீபகாலத்தில் பனாரஸ் மக்கள் ஈடுபட்ட சட்டவிரோதமான கலகச்செயல்களுக்கு  பொதுமன்னிப்பு வழங்குவதில் எந்த ஒரு நியாயமான காரணமும் இருப்பதாக கவர்னர் ஜெனரல் இன் கவுன்சில் கருதவில்லை.  மாறாக, நீதி நிலைநாட்டப்படடவும்,  இதுபோன்ற கலகங்கள் இனிமேல் நடக்காமலும் இருக்கவும் வேண்டுமென்றால், இந்தக் குழப்பங்களை முன்னின்று நடத்தியவர்கள் அந்தக் குற்றத்திற்காக நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று லார்ட்ஷிப் இன் கவுன்சில்  கருதுகிறார்.”

அதேநேரம்  பெருமளவிலான நபர்கள் தண்டிக்கப்படத் தேவையில்லை  என்று மாஜிஸ்ட்ரேட்டுக்கு அரசு வழிகாட்டியிருந்தது.

இதனிடையே பனாரஸ் மன்னர்  மற்றும்  ‘விசுவாசமான, நம்பிக்கைக்குரிய பொது சேவகர்கள்’ மூலமாக  மக்களை அமைதிப்படுத்தும் முயற்சிகள்  முன்னெடுக்கப்பட்டன. பனாரஸ் மன்னர்  தனது மக்கள் சார்பில் முன்வைத்த விண்ணப்பத்தை பிப்ரவரி  ஏழாம் தேதி அன்று,  தற்காலிக மாஜிஸ்ட்ரேட்  அரசுக்கு அனுப்பி வைத்தார்  ‘இறுதி விண்ணப்பமாக’ அதை  அவர் குறிப்பிட்டிருந்தார்.  மக்கள்  லார்ட்ஷிப் இன் கவுன்சில் முன்பாக கடைசி விண்ணப்பமாக மிகவு ம் பணிவுடன் அதை சமர்ப்பித்திருப்பதாகத் தெரிவித்திருந்தார்.  அவர்கள்  மனதில்  அரசுக்கு ஒத்துழைப்பு தரக் கூடாது என்ற எண்ணம் ஒருபோதும் இருந்ததில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். ஜனவரி 13ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் சொன்னதைக் கேட்டு,  அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று நம்பி, விதிவிட்ட வழி செல்வோம் என்று அவர்கள் அனைவரும் எழுந்து  வீட்டுக்குச் சென்று விட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

எனினும் அரசானது  ஜனவரி பதினோராம் தேதி தெரிவித்த தீர்மானங்களுக்கு மேலாக பனாரஸ் மக்களின் கோரிக்கைக்கு பெருமளவில் செவிசாய்க்க விரும்பியிருக்கவில்லை.  அரசின் அந்த்த் தீர்மானமும்,  முன்பு எடுக்கப்பட்ட சிறிய திருத்தங்களும் ஒரு வாரம் கழித்து பிப்ரவரி 23ஆம் தேதி அன்று மன்னருக்கும் பனாரஸின்  முக்கிய பிரமுகர்களுக்கும்  மாஜிஸ்ட்ரேட் மூலம் தெரிவிக்கப்பட்டது.  அவர் மக்களுக்குத் தெரிவித்த அறிக்கையில், ‘இனிமேல் இந்த விஷயம் தொடர்பாக யாருக்கும் எந்தப் புகாரும் அதிருப்தியும் இருக்க வாய்ப்பில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால்,  பனாரஸ் மன்னர் மூலமாகக்  கொடுத்த விண்ணப்பத்தில் விதிவிட்ட வழி செல்வோம் என்று முடிவெடுத்ததாகச் சொன்ன மக்கள்  மாஜிஸ்ட்ரேட் நினைத்தது போல  அடிபணிந்து போய்விடவில்லை.  ஒரு வருடம் கழித்து, 1811,  டிசம்பர் 28 அன்று கலெக்டர் அனுப்பிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “யாருடைய வீடுகளின் வரி அளவுகள் எல்லாம் மதிப்பிடப்பட்டு விட்டனவோ அவரிடம் சென்று  வரி வசூலித்து வரும்படி எனது உள்ளூர் அதிகாரிகளை அனுப்பி வைத்தேன்.  ஒவ்வொரு வீட்டுக்குமான  வாடகை,  அதற்கான வரி  ஆகியவற்றைக் கணக்கிட்டுக் கொடுத்திருந்தேன். யாருக்காவது அந்த வாடகை,  வரி தொடர்பாக ஏதேனும் மாற்றுக்கருத்து இருந்தால் அதை எனக்குத் தெரியப்படுத்த வேண்டும்.  முறையான விசாரணைகள் நடத்தப்பட்டு சரியான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தேன்.   அப்படியான அவர்களுடைய  கருத்துக்களைக் கேட்பதற்கு வாரத்தில்  ஒரு குறிப்பிட்ட நாளை  ஒதுக்கி இருந்தேன். வீட்டு உரிமையாளர்களுக்கும்,  வாடகைதாரர்களுக்கும்  அந்தச் செய்தி சென்று சேர்ந்து இருக்கவில்லை.  எவர் ஒருவருமே வரி தொடர்பாக எந்த விண்ணப்பத்தையும்,  எதிர்ப்பையும் தெரிவித்திருக்கவும் இல்லை. 

இப்படியான நிலையில்  பலரும் வரி மதிப்பீட்டாளர்கள் தங்கள் பணியைச் செய்ய மௌனமாக அனுமதித்தனர்.  அவர்கள் கேட்கும் எந்த ஒரு தகவலையும் தராமலும் எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமலும் இருந்தனர்.  மதிப்பீட்டாளர் என்ன சொன்னாலும் நாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.  அதிகாரிகள் அதைத் தடுக்க முடியாது.  அதேநேரம் அவர்கள் சொல்வதைச் செய்யப் போவதுமில்லை என்ற முடிவுடன் இருந்தனர்.” 

இருந்தும்  அதிகாரிகளுக்கு ஆறுதலாக ஒரு விஷயம் நடந்ததாக கலெக்டர் குறிப்பிட்டிருக்கிறார். 

 “ஒரு சில விதிவிலக்குகளும் இருந்தன.  அரசுப் பதவியில் இருந்த அல்லது அரசாங்கச் செயல்பாடுகளுடன் தொடர்பில் இருந்த,  அல்லது வேறு சில தனியான, முக்கியமான பிரமுகர்கள்  அரசுக்கு தமது விசுவாசத்தை,  கீழ்ப்படிதலைக்  காட்ட முன்வந்தனர்.  அவர்கள் என்னை வந்து சந்தித்து தமது வீடுகள்,  கடைகள் தொடர்பான தகவல்களைத் தந்தனர்.  அவற்றுக்கான வாடகையைத் தெளிவாக்க் குறிப்பிட்டனர்.  வரி தொடர்பான மதிப்பீட்டை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டனர்.” 

எனினும் இப்படியான சொற்ப விதிவிலக்குகள் பெரிய திருப்தியை அரசுக்குத் தந்திருக்கவில்லை.  அந்த அறிக்கையை முடிக்கும்போது அவர் ஒரு விஷயத்தை அழுத்தமாக் குறிப்பிட்டிருக்கிறார்.  ”முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது இருப்பதை விட மிகப் பெருமளவிலான ராணுவம் இங்கு வந்து சேர்ந்தால்தான் வரி வசூலிப்பு வேலைகளை முன்னெடுக்க முடியும்” என்று அழுத்தமாகத்  தெரிவித்திருக்கிறார்.

இப்படியான எதிர்ப்பும் ஒத்துழையாமையும்  பிப்ரவரி மாத  ஆரம்பத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது.  பனாரஸ் வாசிகளின் ‘இறுதி விண்ணப்பத்தை’  அரசுக்கு அனுப்பிய மாஜிஸ்ட்ரேட் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “எந்த விகிதத்தில் வரி விதிக்கப்படும்,  வாடகைகள் மதிப்பிடப்படும் என்பது பற்றியெல்லாம் அவர்களுக்கு அக்கறையே இல்லை.  வீட்டு வரிவிதிப்பு என்ற  கோட்பாட்டையே அவர்கள் அடிப்படையில் எதிர்க்கிறார்கள்.  இப்படியான  வரிவிதிப்பு  இந்த தேசத்தின் சட்டதிட்டங்கள், விதிமுறைகள் ஆகியவற்றுக்கு முற்றிலும் மாறுபட்டது என்றும், மிகவும் நூதனமானதாகவும்  அவர்களுக்குத் தெரிகிறது.  எந்த ஒரு அரசுக்கும்  இப்படியான ஒரு வரியை விதிக்க அதிகாரம் இல்லை என்று அவர்கள் கருதுகிறார்கள்.  இந்த வரி விதிப்பை  எதிர்க்கவில்லை என்றால் நாளுக்கு நாள் இந்த வரி அதிகரித்தபடியே செல்லும் என்று கருதுகிறார்கள்.  அவர்களுக்கு சொந்தமாக இருக்கும் அனைத்தின் மீதும் இது போன்ற வரிகள் விதிக்கப்பட்டு விடுமென்று அஞ்சுகிறார்கள். இப்படியான நிலையில் அவர்கள் எளிதில் வீட்டு வரி கொடுக்க சம்பாதித்து விடுவார்கள் என்று எனக்கு தோன்றவில்லை.”

 பாட்னாவில்  நடந்தவை:

  இப்போது வேறு நகரங்களில் நடந்ததைப் பார்ப்போம்.  ஜனவரி இரண்டாம் தேதி அன்று எழுதிய கடிதத்தில் பனாரஸ் கலெக்டர் குறிப்பிட்டதுபோல  அங்கு நடந்தவற்றை  பிற நகரத்தினர் கூர்மையாக்க் கவனித்து வந்தனர்.  ஜனவரி 2 ஆம் தேதி அன்று  பாட்னா மாஜிஸ்ட்ரேட்  வீட்டு வரி தொடர்பாக  அந்த நகரவாசிகள் கொடுத்த 12 விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பி வைத்தார்.  அரசு அவற்றில் எட்டு விண்ணப்பங்களை நிராகரித்தது.பனாரஸில்  இதுதொடர்பான விவாதங்கள் நடந்து வருவதால்  “பாட்னா நகரவாசிகள் கூட்டங்கள்  நடத்த விடாமல்  அல்லது மேலும் பல விண்ணப்பங்கள் கொடுக்க விடாமல், இதமாகவும் ஆறுதலாகவும் கையாளும்படி அரசு மாஜிஸ்ட்ரேட்டுக்கு ஆலோசனை வழங்கியிருந்தது.  தனது அதிகார வரம்பிற்கு உட்பட்டு பல நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் ஏதேனும் சட்டவிரோதமான  கடிதங்கள் எழுதப்பட்டாலோ  குழப்பம் விளைவிக்கும்  கூட்டங்கள் நடத்தப்பட்டாலும் உடனடியாக அந்தத் தகவலைத் தெரிவிக்கும்படியும்  அரசே கேட்டுக்கொண்டிருந்தது.

சரூண் பகுதியில் நடந்தவை:

ஒரு வாரம் கழித்து  (ஜனவரி 9)  சரூண்  பகுதியின் மாஜிஸ்ட்ரேட்  அரசுக்கு கடிதம் அனுப்பினார்.  அந்தப் பகுதி மக்கள் கொடுத்த விண்ணப்பங்களை அனுப்பி வைத்ததோடு கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

 “கலெக்டர் வரி மதிப்பீட்டுப் பணிகளைச்  செய்வதற்கு ஆட்களை அனுப்பியபோது பெரும் பதற்றம் உருவானது.  அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டிருந்தன.  மிக மோசமான சம்பவம் நடக்கப் போவதற்கான அறிகுறிகள் நன்கு தெரிந்தன.”  வரி மதிப்பீட்டுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்திக் கொண்டதற்கான காரணங்களை  விவரித்த பின்னர் அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “இந்தப் பகுதியில் ராணுவம் எதுவும் இல்லை.  அரசின் மரியாதைக்குக்  களங்கம் விளைவிக்கும் செயல்கள் நடக்க ஆரம்பித்திருப்பது எனக்கு நன்கு புரிகிறது. அரசாங்கத்திடமிருந்து உத்தரவு வரும் வரை வரி மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்தி வைக்கும்படி கலெக்டரை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.”

ஜனவரி 11 ஆம் தேதி அன்று  மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் நீங்கலாக சரூண்  பகுதி மக்களுக்கு எந்த வகையிலும் வரிவிலக்கு அளிக்க வேண்டாம் என்று அரசு உத்தரவிட்டது.  இந்த உத்தரவு ஜனவரி பதினெட்டாம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.  அதில் அரசு மேலும் தெரிவித்திருந்தது: 

 “சரூண்  இப்பகுதி மக்கள் வரி விதிப்புக்கு எதிராக வெளிப்படையாக எந்தச் செயலிலும் ஈடுபட மாட்டார்கள் என்று நம்புவதாக கவர்னர் ஜெனரல் இன் கவுன்செல் நம்புகிறது.”

இப்படியான நம்பிக்கை இருந்த நிலையிலும்  அதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது: 

 “நிலைமை கை மீறிப் போனால்  அரசின் உத்தரவுகள் மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் அதிகாரிகளுக்கு உதவுவதற்காக தினாபூரில் இருக்கும்  ராணுவத்தை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்.”

 முர்ஷிதாபாத்தில் நடந்தவை:

மார்ச் இரண்டாம் தேதி முர்ஷிதாபாத்துக்கு  அனுப்பிய கடிதத்திலும் இதுபோன்ற உத்தரவுகள் இடம்பெற்றிருந்தன.  ஆனால் இங்கு நிலைமை மேலும் மோசமாக இருந்தது.  பிப்ரவரி 25 அன்று இரண்டு விண்ணப்பங்களை மாஜிஸ்ட்ரேட் அரசுக்கு அனுப்பி வைத்ததோடு கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்:

 “பிரதான வணிகர்கள் வரிவிதிப்பை எதிர்ப்பதற்குப் பதிலாக  அதைத் தவிர்க்கும் நோக்கில் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி கூட்டமாக ஒரு இடத்தில் கூடி நிற்கத் திட்டமிட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன் எனக்கு தகவல் கிடைத்தது.  சில முன்னணிப் பிரபலங்கள்  அப்படிச் செய்யவும் செய்தனர்.  அவர்களை நான் வீடுகளுக்குச் சென்று விடும்படி பேசி அனுப்பினேன். 

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

நகரைவிட்டு வெளியேறிச் செல்லும் முடிவு வலுப்பெற்று வருகிறது.  எனக்கு வந்த விண்ணப்பங்களில் இடம்பெற்ற வாக்கியங்கள் விவகாரமானவை என்பதால்  அவற்றை உங்களுக்கு என்னால் அனுப்ப முடியவில்லை.  வயலில் கூடியிருந்த சிலரை நான் பேசி வீடுகளுக்கு அனுப்பி வைத்தேன்.  விவகாரமான வாக்கியங்கள் கொண்ட விண்ணப்பம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

 ‘இறைவனின் அருளால் இந்த பூமியில் வசிக்கும் எந்த ஒரு அரசரும் தனது மக்களைக்  கொடுமைப்படுத்தியது கிடையாது.  இது ஆங்கிலேய கனவான்களுக்கு நன்கு தெரியும்.  கடவுள் தனது படைப்புகளை எந்தவிதத் துன்பமும் வராமல் காத்து வருகிறார். ஆனால் சில ஆண்டுகளாக எங்களுடைய துரதிர்ஷ்டவசமான விதியினால் நாங்கள் அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் காரணமாக அரசு இருந்துவருகிறது. தொடர்ந்து சில வருடங்களாக ஏற்பட்ட நோய்களினால் நகர  மக்கள்தொகை வெகுவாகக் குறைந்திருக்கிறது. முந்தி இருந்ததில் பாதிப் பேர் தான் இப்போது இருக்கிறார்கள்.  நகராட்சி விதிக்கும் வரிகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. 100  ரூபாய் சொத்தை 200 ரூபாய் கொடுத்து வாங்க முடியாது.  சுங்கவரியானது இரண்டு மடங்கு, சில நேரங்களில் நான்கு மடங்கு கூட அதிகரித்திருக்கிறது.  நகரத்திலிருந்து வேறு இடத்துக்கு சொத்தை மாற்ற விரும்பினால் அதற்கும் தனியாக வரி செலுத்த வேண்டி இருக்கிறது.  வீடுகளுக்கும் கடைகளுக்கும் கூட வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.  அது புதிய ஒடுக்குமுறை.  அரசின் இந்த உத்தரவானது எங்களை வெடிகுண்டு வைத்துத் தகர்த்தது போலிருக்கிறது.’

 (அந்த அறிக்கையின் முடிவில் மாஜிஸ்ட்ரேட் எழுதியிருந்தது வீட்டு வரி தொடர்பாக எழுந்திருக்கும் அதிருப்தியானது  மிகவும் ஆழமாக இருக்கிறது.  அதோடு அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் எழுந்திருக்கிறது. எனவே நிலைமை மோசமானால் என்ன செய்வது?”  என்று  அரசிடம் ஆலோசனை கேட்டிருந்தார்.

ஆனால் மாஜிஸ்ட்ரேட் பயந்ததுபோல மூர்ஷிதாபாத்தில் பிரச்னை பெரிதாக வெடிக்கவில்லை. பாகல்பூரில் நடந்த சம்பவங்களையும் வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஏழு மாதங்கள் வரையிலும் வரி வசூல் பணிகள் அங்கு நடக்கவில்லை என்பது தெரியவருகிறது. அக்டோபர் 19 அன்று வருவாய்த் துறையின் ஓய்வு பெறும் நிலையில் இருந்த மூத்த அதிகாரி ஒருவர் அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அவரே வருவாய்த் துறை மற்றும் நீதித் துறையின் செயலாளராக இருந்தார். அனைத்து உத்தரவுகள், ஆலோசனைகள் எல்லாம் அவருடைய கையொப்பத்தின் மூலவே வெளியிடப்பட்டன. வீட்டு வரி பற்றிக் குறிப்பிடுகையில் அவர் இப்படி எழுதியிருக்கிறார்:

 “கல்கத்தா நகரம் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் ஊர்களுக்கு அல்லாமல் வேறு இடங்களுக்கு இந்த வீட்டு வரியானது பிற பகுதிகளில் பொருட்படுத்தத் தகுந்த விஷயமாக அரசுக்கு இருக்காது என்று நினைக்கிறேன். பிற பகுதிகளில் இந்த வரிக்கு எதிராக கணிசமான அளவுக்கு எரிச்சல் நிலவுகிறது. அந்த எரிச்சல் முழுவதுமாக மறைய நீண்ட காலம் என்றே தோன்றுகிறது. பெருவாரியான மக்களின் நன்மதிப்பைப் பெற ஒரு 2-3 லட்சம் ரூபாயை விட்டுக் கொடுப்பதென்பது பெரிய விஷயமே இல்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.

அக்டோபர் 22 அன்று அரசு இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு வருவாய் போர்டுக்கு அதைத் தெரிவித்தது.

 “ரெகுலேஷன் 15,1810ன் மூலம் கொண்டுவரப்பட்ட வீட்டு வரியை நிறுத்தி வைப்பதில் வைஸ்பிரசிடெண்ட் இன் கவுன்சில் மகிழ்ச்சியடைகிறது. எந்தப் பகுதிகளில் வரி மதிப்பீட்டுப் பணிகள் நடந்து முடியவில்லையோ அங்கு அதை அப்படியே நிறுத்தும்படியும். எங்கெல்லாம் வரி வசூலிப்பு ஆரம்பித்திருக்கிறதோ அந்த இடங்களிலும் அதை நிறுத்தும்படியும் அறிவுறுத்துகிறது. அதே நேரம் எந்த இடங்களில் எல்லாம் இது தொடர்பாக போராட்டங்கள் நடக்கின்றனவோ அங்கு மட்டும் இந்தக் காலகட்டத்துக்கு எதையும் நிறுத்தி வைக்கவேண்டாம்.”

ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களிடமிருந்தும் அவர்கள் மாவட்டத்தில் நிலைமை என்ன என்பது பற்றிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அரசு கேட்டுக்கொண்டது. அந்த அறிக்கைகள் கிடைத்ததும் வரியை ரத்து செய்வது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்கும். வெளிப்படையான எதிர்ப்புகள் இருக்கும் இடங்களில் மட்டும் முழுவதுமாக அல்லது பகுதியளவுக்கு வரி வசூலிக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்தது.

பாகல்பூரில் நடந்தவை:

பாகல்பூரில் வீட்டு வரிக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி நடந்தது. அக்டோபர் 2 அன்று பாகல்பூர் கலெக்டர் எழுதிய கடிதம்:

 “30 செப்டம்பர், முந்தா நாள் திங்கட்கிழமையாக இருந்ததால் வரி வசூலிப்பு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால் தாசில்தாரின் வருகையைக் கண்டதுமே மக்கள் தமது கடைகளையும் வீடுகளையும் மூடிக் கொண்டுவிட்டனர். நேற்றும் அரசாங்க அதிகாரிகளினால் எதுவும் செய்யமுடியவில்லை. மாலையில் நான் வண்டியில் வெளியே போனபோது சாலையில் இரு மருங்கிலும் ஆயிரக்கணக்கானவர்கள் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. ஆனால், தங்களுடைய நிராதரவான நிலைமை குறித்து புகார் மழை பொழிந்தனர். வரியைச் செலுத்த முடியாது என்று கூச்சலிட்டுச் சொன்னார்கள்.”

மறுநாள் அரசுக்கு மாஜிஸ்ட்ரேட் எழுதிய கடிதமும் இதை உறுதிப்படுத்துகிறது. கடைகள் மூடப்பட்டது குறித்து விவரித்த மாஜிஸ்ட்ரேட் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்:

 “நகரின் முக்கியஸ்தர்கள் என்னை வந்து சந்திக்கும்படி நேற்று காலையில் அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களுடைய நடத்தை மிகவும் முறையற்றது என்றும் அரசாங்கத்தின் உத்தரவை தடுத்து நிறுத்தவே முடியாது என்றும் எடுத்துரைத்தேன். வீட்டை விட்டு வெளியேறி ஊரை விட்டே போனாலும் போவோமே தவிர வரியைக் கொடுக்க மாட்டோம் என்று சொன்னார்கள். என்ன விகிதத்தில், எத்தனை மாதத்துக்கு ஒருமுறை வரி கட்டவேண்டும் என்ற தகவல்களை எல்லாம் அவர்களுக்கு விளக்கவே இடம் தரவில்லை.

என்னதான் அவர்கள் இப்படி எதிர்த்தாலும், மூர்ஷிதாபாத்தில் அல்லது அக்கம்பக்கத்தில் இருக்கும் வேறு ஜில்லாக்களில் வரி வசூல் ஆரம்பமானால் நாங்களும் தரத் தயார் என்று சொன்னார்கள். எனவே அதுவரை வரி மதிப்பீட்டுப் பணிகளை நிறுத்திவைக்கும்படி கலெக்டரைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.”

 மாஜிஸ்ட்ரேட்டின் குறுக்கீட்டை கலெக்டர் விரும்பியிருக்கவில்லை. இப்படியான சட்டவிரோதமான எதிர்ப்புக் கூட்டங்கள் நடப்பதால் வரி விதிப்புப் பணிகளின் தொடக்க கட்டத்திலேயே அதை நிறுத்துவதென்பது அரசு  அதிகாரத்தின் ஆணிவேரை அறுப்பது போன்றது. ஓர் அரசுக்கு அதன் மக்கள் மீது அந்த அதிகாரம் இருந்தே ஆக வேண்டும் என்று குறிப்பிட்டு இதுதொடர்பாக அரசின் ஆலோசனையைக் கேட்டிருந்தார்.

இதற்குப் பதில் அளிக்கும் முகமாக அக்டோபர் 11 அன்று அரசு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது. கலெக்டர் சொன்னது சரிதான் என்றும் மாஜிஸ்ட்ரேட்டின் நடத்தையை  ‘ஒப்புக்கொள்ளவில்லை’ என்றும் தெரிவித்திருந்தது.  “மாஜிஸ்ட்ரேட் வரி வசூலிப்புப் பணிகளை நிறுத்தியதென்பது பாகல்பூர், மூர்ஷிதாபாத், பாட்னா மற்றும் பல பகுதிகளில் மக்கள் இப்படிக் கூட்டமாகக் கூடி குழப்பம் விளைவிக்க ஊக்கம் தருவதாகவே அமைந்திருக்கிறது. அந்த உத்தரவை மாஜிஸ்ட்ரேட் உடனே வெளிப்படையாகத் திரும்பப் பெறவேண்டும். வீட்டு வரி வசூலிப்புப் பணிகளில் ஈடுபட கலெக்டருக்கு அனைத்து வகைகளிலும் உதவ வேண்டும்” என்று அறிவுறுத்தியது.

அந்த உத்தரவு அக்டோபர் 20-ம் தேதியன்று பாகல்பூருக்கு வந்து சேர்ந்தது. 21 அன்று இரவு பத்து மணி வாக்கில் கலெக்டர் அரசுக்குத் தெரிவித்த விஷயம்:

 “இன்று மாலை வரி வசூல் பணியில் ஈடுபட்டிருந்தபோது நான் என் வண்டியில் வைத்து மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டேன் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். செங்கற்கள், கற்கள் போன்ற பல பொருட்கள் என் தலையைக் குறிவைத்து எறியப்பட்டன. என் முகத்திலும் தலையிலும் மிகப் பெரிய காயம் பட்டிருக்கிறது. திரு. க்ளாஸ் அவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்து தப்பித்திருக்கவில்லையென்றால் என் உயிரை இந்த உலகில் எதுவுமே காப்பாற்றியிருக்க முடியாது.”

இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் மற்றும் அவருடைய உதவியாளர் (தற்காலிக மாஜிஸ்ட்ரேட்) ஆகிய இருவரின் அறிக்கைகளும் ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன. நவம்பர் 15 அன்று எழுதப்பட்டிருக்கும் கடிதத்தில், கலெக்டர் மட்டும் அடித்து விரட்டி, கூட்டத்தினரைக் கோபம் கொள்ளச் செய்யாமல் இருந்திருந்தால் இந்த்த் தாக்குதல் நடந்திருக்காது என்று நம்ப இடம் இருக்கிறது (அந்தப் பகுதியில் இருக்கும் கனவான்கள் பலரின் கருத்தும் இதுவே) என்று குறிப்பிட்டிருக்கிறார். கலெக்டர், வீட்டு வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது  தாக்கப்பட்டதாக அரசுக்குத் தெரிவித்திருப்பதென்பது  ‘உண்மைக்குப் புறம்பான’ செய்தி.  ‘செய்தியை உடனடியாக அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற பதற்றத்தில் எழுதிய கடிதமென்பதால் இப்படியான தவறான  செய்தி சொல்லப்பட்டிருக்கிறது’ என்று அரசு பின்னர் குறிப்பிட்டிருந்தது.

கலெக்டர் அவசர அவசரமாக அனுப்பிய தந்திச் செய்தியில்  “வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தாக்கப்பட்டதாகச் சொன்னபோது கல்கத்தா அரசு அதை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டுவிட்டது. பதற்றத்தில் சொன்ன தவறான செய்தி என்ற புரிதல் அப்போது இருந்திருக்கவில்லை. அக்டோபர் 11 அன்று அனுப்பிய உத்தரவை நினைவுகூர்ந்ததோடு மாஜிஸ்ட்ரேட்டை உடனே சஸ்பெண்ட் செய்தது. வரி வசூலிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட கலெக்டருக்கு போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்து கொடுத்திருந்தால் பாகல்பூர் மக்கள் அந்தக் கடிதத்தில் சொல்லியிருப்பதுபோல கலெக்டருக்கும் அவர் மூலமாக அரசுக்கும் இப்படி அத்துமீறி நடந்துகொண்டு அவமானத்தை விளைவித்திருக்க மாட்டார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறது. 

அது மேலும் கூறுகையில்,  மாஜிஸ்ட்ரேட் பதவிக்கு திடமாகச் செயல்படும் துடிப்பான நபர் ஒருவரை நியமிக்கவிருப்பதாகவும் அந்த நபர் மக்கள் வரியை முறையாகச் செலுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இந்த விஷயமானது 28, அக்டோபர் 1811 எழுதிய கடிதத்திலும் இடம்பெற்றுள்ளது. இறுதியாக, “கலெக்டரும் காவல் துறை அதிகாரிகளும் தமது அரசாங்கக் கடமையை நிறைவேற்ற உதவும் வகையில் பாகல்பூருக்குக் கூடுதல் ராணுவப் படை (தேவை என்று தளபதி கருதினால்) அனுப்பவும்” என்று தெரிவித்தது.

 “அரசாங்கத்தின் தீர்மானமானது பாகல்பூரில் நடைபெற்ற சம்பவங்களில் எந்த்த் தாக்கத்தையும் ஏற்படுத்த முடிந்திருக்கவில்லை. ஏனென்றால் மக்களின் போராட்டங்கள் எல்லாம் அடக்கப்பட்ட பின்னே அந்தத் தீர்மானம் பாகல்பூர் அதிகாரிகளுக்கு வந்து சேர்ந்தது. எனினும் அங்கு எழுந்த  ‘எதிர்ப்பு அல்லது தடையை’த் தாண்டி வர உள்ளூர் அதிகாரிகள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. இதற்கு முக்கியமான காரணம், இந்த பிரச்னையை எப்படி அணுகுவதென்பதில் இருந்த கலெக்டருக்கும் மாஜிஸ்ட்ரேட்டுக்கும் இடையிலான மாறுபட்ட பார்வையே காரணம். அரசின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட மிகக் கடுமையான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும் என்பது கலெக்டரின் பார்வை. ஆனால், காவல் துறை மற்றும் ராணுவத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கவிருந்த மாஜிஸ்ட்ரேட் நிதானமான வன்முறையற்ற வழியைப் பின்பற்ற விரும்பினார்.

22-ம் தேதியன்று நடைபெற்ற மக்கள் கூட்டத்தைப் பற்றி 24ஆம் தேதி மாஜிஸ்ட்ரேட் அரசுக்குத் தெரிவித்திருந்தார்:

 “ஷாஹ்ஜங்கி பகுதியில் என்னை வந்து சந்திக்கும்படி சில படைகளுக்கு உத்தரவு கொடுத்திருந்தேன். அங்கு முன்பே சென்ற நான் அவர்கள் வருவதற்காகக் காத்திருந்தேன். அங்கு சுமார் 8000க்கும் மேற்பட்ட மக்கள்  கூடியிருந்தனர். ஆனால் அவர்கள் யார் கையிலும் எந்த ஆயுதமும் இல்லை. கூட்டத்தின் தலைவர்கள் மையத்தில் இருந்தனர். எனவே அவர்களை எங்களால் கைது செய்யமுடியவில்லை. இறுதிச் சடங்குகள் செய்வதாக எங்களிடம் சொல்லப்பட்டது. அங்கேயே கூட்டமாக இருந்தால் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்று அறிவித்ததும் அனைவரும் அமைதியாகக் கலைந்து சென்றனர். மறு நாள் காலையில் ஒரு விண்ணப்பம் எழுதிக் கொண்டுவந்து கொடுக்க அனுமதி கேட்டார்கள். விண்ணப்பம் முறையாக, மரியாதையான முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். வீட்டு வரியை ரத்து செய்ய மாட்டேன் என்பதையெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லிவிட்டு, அவர்கள் தரும் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன் என்று சொன்னேன். எல்லாம் பேசி முடித்த பின்னரும் ஆங்காங்கே பலர் கூடி நின்றனர். நெசவாளர்கள், மற்றும் பல்வேறு கைவினைத் தொழிலாளர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். எஞ்சியவர்கள் வயதான பெண்களும் சிறுவர்களுமாக இருந்தனர். நான் அவர்களிடம் சென்று பேசினேன். கூட்டம் கலைந்த பின் கடைசியாக எஞ்சியிருப்பவர்களைச் சுட்டுவிடுவேன் என்று அவர்கள் அஞ்சுவதாகச் சொன்னார்கள். அப்படிச் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததும் நாங்கள் புறப்பட்டபோது அவர்கள் கலைந்து தத்தமது வீடுகளுக்குச் சென்றனர்.

மேலும் ஹில் ரேஞ்சர்ஸ் படைப் பிரிவின் தளபதி சொன்னார்:  “பிரதான போராட்டத் தலைவர்கள் புறப்பட்டுப் போனதும் எஞ்சிய கூட்டத்தினர், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்  துப்பக்கிச் சூடு பற்றி எந்த பயமும் இல்லாமலே அங்கு இருந்தனர். ஒருவகையில் அப்படியான தாக்குதலை எதிர்பார்த்தே அங்கு குழுமி நின்றனர்” என்று குறிப்பிட்டிருக்கிறார். மறுநாள் விண்ணப்பம் கொடுக்க அந்த மக்கள்  வரும்போது தேவையான ஆயுதப் படைகள் அங்கு இருக்க வேண்டும்.   அல்லது அவர்களிடமிருந்து எந்த விண்ணப்பத்தையும் பெற்றுக் கொள்ளாமல் இருந்தால் கூட சரிதான். வேண்டுமானால் அந்த விண்ணப்பத்தை அவர்கள் கடிதமாக அனுப்பிவைக்கட்டும் என்று ராணுவத் தளபதி மாஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவித்திருக்கிறார். 

மறுநாள் மாஜிஸ்ட்ரேட் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், முன்பு தான் குறிப்பிட்டதுபோல எந்த விண்ணப்பமும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். 23 அன்று மாலையில் ராணுவ உதவி கோரப்பட்டது. 24 மணி நேரம் கழித்து கலெக்டர் அனுப்பிய அறிக்கையில் ‘நேற்றைய இரவு எடுத்த நடவடிக்கை அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைத்துவிட்டது’ என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனிடையில் மாஜிஸ்ட்ரேட் வேறு பல நடவடிக்கைகளை எடுத்தார். அக்கம்பக்கத்து மாவட்டங்களில் இருக்கும் மாஜிஸ்ட்ரேட்களுக்கு  ஒரு செய்தி அனுப்பினார்.

பிற மாவட்டங்களில் இருந்து பாகல்பூருக்கு யாரும் கூட்டமாக பத்து பேருக்கு மேல் சேர்ந்து வராதபடி பார்த்துக்கொள்ளும்படியும் எந்தவித ஆயுதமும் பாகல்பூருக்குள் வராதபடியும் பார்த்துக்கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டிருந்தார். அத்துடன் உள்ளூரில் நடக்கும் அனைத்துவித தகவல் தொடர்பு வழிமுறைகளையும் தடுத்துவிடும்படியும் ஏதேனும் சந்தேகத்துக்கு இடமானதாக இருந்தால் உடனே தனக்குத் தெரிவுக்கும்படியும் கேட்டுக்கொண்டிருந்தார். இதனிடையில் இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னர் ஒருவித குழப்பம் ஏற்பட்டது. அக்டோபர் 22 அன்று வீட்டு வரியை ரத்து செய்வது தொடர்பாக அரசு எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து, பாகல்பூர் கலெக்டரை வரி வசூலிப்பை நிறுத்தும்படி வருவாய்த் துறை கேட்டுக்கொண்டது. இந்தத் தீர்மானத்துக்கு அரசில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் வரி வசூலிப்பு ஆரம்பித்தது.

ஜனவரி 1812-ல் பாகல்பூரில் இருந்த ஐரோப்பியர்கள் சிலர் வீட்டு வரி கொடுக்க மறுத்தனர். அந்தப் பகுதியில் வரி வசூலிப்பைத் தொடர்வதற்காக இடப்பட்ட உத்தரவு தங்களுக்குப் பொருந்தாது என்று அவர்கள் வாதிட்டனர். அதைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் வசிக்கும் ஐரோப்பியர்களிடமிருந்து வீட்டு வரி வசூலிக்க வேண்டாம் என்று கலெக்டருக்கு வேறொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கல்கத்தாவைச் சுற்றி இருந்த பகுதிகளில் வசித்த ஐரோப்பியர்களுமே இந்த வீட்டு வரியைச் செலுத்த மறுத்ததாகவும் அதை அவர்கள் மீது திணிக்கவோ வரி செலுத்தாவிட்டால் அவர்களுடைய வீடுகளை பறிமுதல் செய்யவோ முடியுமா என்று தெரியவில்லை என்று அட்வகேட் ஜெனரல் கருத்து தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து ஏற்கனவே வேறுபகுதிகளில் வரி வசூலிப்பை நிறுத்தியபோதிலும் கல்கத்தாவின் புற நகர் பகுதிகளில் மட்டும் வரி வசூலிப்பை அனுமதித்திருந்த அரசு அதையும் நிறுத்தியது.

ஜனவரி 12, 1812 அன்று அரசு வருவாய்த் துறைக்கு ஓர் அறிக்கையை அனுப்பியது. ரெகுலேஷன் 15, 1810 வரி வசூலிக்கும் சட்டத்தை கவர்னர் ஜெனரல் இன் சீஃப் நிறுத்திவைக்கத் தீர்மானித்தது. இந்த வரி ரத்து அறிவிப்பானது மே 8, 1812 அன்று ரெகுலேஷன் VII, 1812 என்ற பெயரில் நிறைவேறியது.

வீட்டு வரிவிதிப்பைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்த விஷயத்தை லண்டனில் இருந்த அதிகாரிகளுக்கு வங்காள அரசு பிப்ரவரி, 12, 1811ல் எழுதிய கடிதத்தின் மூலம் முதன்முதலாகத் தெரியப்படுத்தியது. அதைத் தொடர்ந்து டிராஃப்ட் எண் 218 (1811-12) மே 23, 1812-ல் உருவாக்கப்பட்டது.

மூல டிராஃப்டில் இருந்த ஒரு பத்தி இந்திய விவகாரங்களுக்கான கமிஷனர்கள் போர்டுக்கு அனுப்பிய இறுதி டிராஃப்டில் இடம்பெறவில்லை. வரியை விலக்குவதாக தீர்மானித்திருந்ததால் அது அவசியமில்லை என்று கருதி நீக்கப்பட்டது. அந்தப் பத்தி:

 ‘இந்த விஷயம் குறித்து (வீட்டு வரி) மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் பரிசீலித்த பின்னர், இந்த வீட்டு வரியை ரத்து செய்ய முடிவு செய்திருக்கிறோம். சமீபத்திய உரையாடலில் இருந்து இது உங்களுக்கே தெரிந்திருக்கும். மக்களுடைய கூக்குரல் போராட்டத்தினால் உங்கள் அரசு அடிபணிந்துவிட்டதாக ஒரு பிழையான தோற்றம் இதனால் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, நீங்கள் சொல்லியிருக்கும்படியான திருத்தங்களைச் செய்து கொள்ளலாம்.’

அந்தப் பத்தியில் மேலும் இடம்பெற்றிருந்த விஷயம்:

 ‘அந்த்த் திருத்தங்கள் இல்லாமல் இந்த வரியை வசூலிக்க முற்பட்டால் அது மிகப் பெரிய தவறாகவே முடியும். எனவே அதை அமல்படுத்தும்படியாக என்னவெல்லாம் மாற்றங்கள் செய்ய வேண்டுமோ அதற்கான நடவடிக்கையை உடனே எடுங்கள். அரசின் மேலாதிக்கத்தை அதிக அளவுக்கு விட்டுக் கொடுக்காமலும் இதை அமல்படுத்துங்கள்.’

ஆனால், கல்கத்தா அரசுக்கு இப்படியான உணர்வுகளை லண்டனில் இருந்து பரிமாற வேண்டிய அவசியமே இருந்திருக்கவில்லை. ஏனென்றால் அவர்களுமே இதே எண்ணத்தில்தான் இருந்தனர். எந்தவொரு பின்வாங்கலும்  அரசின் மேலாதிக்கத்தைக் காயப்படுத்தாத வகையில்தான் மேற்கொள்ளப்படும் என்றுதான் அவர்களும் தீர்மானித்திருந்தார்கள். லண்டன் இது தொடர்பான அறிக்கையை அனுப்புவதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, வங்காளத்தில் இருந்து டிசம்பர், 14, 1811-ல் அனுப்பப்பட்ட வருவாய்த் துறை கடிதமானது, கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது:

 “வாதங்கள் எல்லாமே அந்த வரி தொடர வேண்டாம் என்பதையே சுட்டிக் காட்டுகின்றன. அதே நேரம் அரசாங்கத்தின் மேலாதிக்கத்துக்கு வலுச் சேர்த்தாக வேண்டிய அவசியமும் இருக்கிறது. அரசு தனது சட்டபூர்வ அதிகாரங்களைச் செயல்படுத்த முடியாமல் தடுக்கும் எதிர்ப்பு சக்திகளை அடக்கியாகவும் வேண்டும். பனாரஸ் மக்கள் வெகு காலத்துக்கு முன்னதாகவே அரசாங்கத்தின் மேலாதிக்கத்துக்கு அடிபணிந்துவிட்டார்கள். எனவே அந்த வரியை உடனே ரத்து செய்யவும் நாங்கள் விரும்பவில்லை. அதேநேரம் இந்த உத்தரவுகள் கிடைக்கும் போது இந்த வரிக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்துவரும் வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்தவும் விரும்பவில்லை.”



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அழகிய போராட்டம் (பகுதி- 6)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 3  

பிரிட்டிஷ் ஆவணங்களில் இருந்து 1810-11 காலகட்டத்தில் பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்ததாகத் தெரியவரும்  போராட்டங்கள் எல்லாம் 1920-  1930களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கச் செயல்பாடுகளைப் போலவே  இருப்பதை ஒருவர் புரிந்துகொள்ள முடியும். 1810-11 வாக்கில் பனாரஸிலும் பிற பகுதிகளிலும் நடந்த விஷயங்களை சுருக்கமாக இங்கு மறு பார்வை பார்ப்பது மிகவும் அவசியமாக இருக்கும்.

வீட்டு வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே இந்தப் போராட்டம் ஆரம்பித்திருக்கிறது. எனினும் அதற்கு முன்னதாகவே பல்வேறு விதமான அதிருப்திகள், மகிழ்ச்சியின்மைகள் பல காலமாகவே உள்ளுக்குள் இருந்துவந்துள்ளன. 1810 வாக்கில் இந்தப் பகுதிகள் எல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு உட்பட்டு ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன. பனாரஸ், பாகல்பூர், மூர்ஷிதாபாத் போன்ற பகுதிகளில் இருந்த மக்கள் பிரிட்டிஷ் அரசின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொள்ள ஆரம்பித்திருந்தனர். பனாரஸ்வாசிகள் சொன்னதுபோல, வீட்டு வரியானது ஏற்கெனவே இருந்த காயத்தின் மேல் உப்பைத் தடவுவது போலவே இருந்திருக்கிறது. மூர்ஷிதாபாத் மக்கள் அந்தப் புதிய ஒடுக்குமுறையானது வெடிகுண்டு வெடித்ததுபோல இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பனாரஸில் நடந்த முதல் ஒத்துழையாமை இயக்கத்தின் முக்கிய அம்சங்கள்:

1. அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. இறுதிச் சடங்குகள் செய்ய உரிய நபர்கள் கிடைக்காததால் பிணங்கள் எரிக்கப்படாமல் கங்கைக் கரையில் அநாதையாக விடப்பட்டன. அந்த அளவுக்கு தொழில்கள் முடங்கின.

2. ஆயிரக்கணக்கான மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு அரசாங்க்க் கணக்கு, 2,00,000 பேர் பல நாட்கள் தர்ணாவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கிறது. வீட்டு வரி ரத்து செய்யப்படாவிட்டால் அந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

3. பல்வேறு கைவினைக் கலைஞர்கள், தொழிலாளர்கள் அனைவரும் தத்தமது தொழில் குழுமங்கள் அமைப்புகள் மூலமாக  தொடர்புகளை உருவாக்கி போராட்டங்களை ஒருங்கிணைத்திருக்கிறார்கள்.

4. அந்த நேரத்தில் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்த இரும்புக் கொல்லர்கள் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். பிற பல்வேறு பகுதிகளில் இருந்த இரும்புக் கொல்லர்கள் அனைவரையும் போராட்டத்தில் பங்கெடுக்க வைத்திருக்கிறார்கள்.

5. பரிசல்காரர்கள் முழுமையாக பணி முடக்கம் செய்திருக்கிறார்கள்.

6. தமது கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை அந்த இடத்தைவிட்டு அகல மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்திருக்கிறார்கள்.

7. ஒவ்வொரு கிராமத்துக்கும், பனாரஸில் நடந்த போராட்டத்துக்கு வீட்டுக்கு ஒருவர் வந்து கலந்துகொள்ளும்படி செய்தி அனுப்பியிருக்கிறார்கள்.

8. ஒவ்வொரு வர்க்கத்தைச் சேர்ந்த நபர்களும் போராட்டம் தொடர தங்களால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கிறார்கள். போராட்டக்காரர்களின் குடும்பத்தினருக்கு வாழ்வாதாரத்துக்குத் தேவையான உதவிகளைச் செய்து தந்திருக்கிறார்கள்.

9. மத அமைப்புகள் மக்கள் ஒற்றுமையாகப் போராட அனைத்து வகையிலும் தமது செல்வாக்கைப் பயன்படுத்தியுள்ளன.

10. மக்கள் கூட்டம் பரந்து விரிந்து இருந்தது. போராட்டத்தில் இருந்து விலக நினைத்தவர்களை அவமானப்படுவதில் இருந்தும், ஓரங்கட்டப்படுவதில் இருந்தும் பாதுகாக்காக காவல் துறையால் முடியவில்லை என்று மாஜிஸ்ட்ரேட் தெரிவித்திருக்கிறார்.

11. பனாரஸின் தெருக்களில் போராட்டம் தொடர்பான  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. அனல் கக்கும் வார்த்தைகள் கொண்ட சுவரொட்டிகள் கடுமையாகக் கண்டிக்கத் தக்க தொனியில் இருந்திருக்கின்றன. அந்த சுவரொட்டி காகிதங்களை வைத்திருப்பவர்களைப் பிடித்துத் தஉவோருக்கு ஐநூறு ரூபாய் சன்மானம் வேறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

ஆயுதங்கள் இல்லாத போராட்டம் பற்றி மக்களுடைய பார்வை என்னவாக இருந்ததென்பது தொடர்பாக கலெக்டரின் கூற்றில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது:

                “வெளிப்படையான வன்முறைச் செயல்களில் ஈடுபடுவது என்பது  இப்போதைக்கு அவர்களுடைய இலக்காக இல்லை. ஆயுதங்களை கையில் எடுக்காமல் இருப்பதன் மூலம் தங்களுக்கு ஒருவித பாதுகாப்பு கிடைக்கும்;  இப்படியான அமைதியான போராட்டக்காரர்களை அரசு பயங்கரமான ஆயுதங்கள் கொண்டு நிச்சயம் தாக்காது; சிவில் அதிகாரிகளால் தங்களை அப்புறப்படுத்தவும் முடியாது என்று நம்புபவர்களாகவே மக்கள் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையினால் நாளுக்கு நாள் அவருடைய எண்ணிக்கை பெருகிக் கொண்டே செல்கிறது.” 

இப்படியான தீர்மானங்களை எடுப்பது மக்களுக்கு மிகவும் இயல்பாகவே இருந்திருக்கிறது. மேலும் இப்படியாகப் போராடுவது என்றால் அரசுடன் மக்கள் பகைமை கொண்டிருப்பதாக அர்த்தமில்லை. அவர்கள் அனுப்பி நிராகரிக்கப்பட்ட விண்ணப்பத்தில் இது மிகவும் தெளிவாகக் குறிப்பிடவும் பட்டிருக்கிறது.   ‘உங்களால் அனுபவிக்கும் துயரத்துக்கு உங்களைத் தவிர வேறு யாரிடம் முறையிட முடியும்?  நீங்கள் செய்த செயலுக்கு உங்களிடம் தானே விண்ணப்பிக்க முடியும்?’ என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆட்சியாளர்- ஆளப்படுபவர் தொடர்பாக அந்த மக்கள் மத்தியில் அந்தக் காலகட்டம் வரையிலும் இருந்த சிந்தனையானது, பரவலாக அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே இருந்திருக்கிறது. அந்தவிதமான உரையாடலானது உண்மையில் பாரம்பரியமாகவே நீடித்து வந்திருக்கிறது. இப்படியான உரையாடலானது தேவைப்படும் நேரங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அப்படியான நேரங்களில் என்ன செய்வார்கள் என்பது பனாரஸ் போராட்டத்தில் இருந்து முழுவதுமாக நன்கு தெரியவருகிறது.

இந்திய மக்கள் தங்களுக்கு முற்றிலும் அந்நியமான மதிப்பீடுகளைக் கொண்ட, எந்தவித பொது அம்சமும் இல்லாத புதிய ஆட்சியாளர்களிடம் தமது இத்தகைய பாரம்பரியமான போராட்டங்கள் எந்தப் பலனையும் தர முடியாது என்பதை மிகவும் தாமதமாகவே புரிந்துகொண்டனர். இதனால்தான் ஒரு பக்கம் அவர்கள் வன்முறையைக் கையில் எடுக்கவேண்டிய தேவை உருவாகியிருக்கிறது. இன்னொருபக்கம், எதிர்ப்புக் காட்டாமல் முடங்கிப் போகவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாட்னா, சரூண், மூர்ஷிதாபாத் (சற்று மிதமானதாகத் தோன்றும்வகையில்), பாகல்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றவை எல்லாமே பனாரஸில் நடந்தவற்றைப் போலவே இருந்திருக்கின்றன. பாகல்பூரில் கலெக்டர் தான் எங்கு இருக்கிறோம் என்பதை மறந்துவிட்டு எடுத்தேன் கவிழ்த்தேன் என அதிரடியாகச் செயல்பட்டிருக்கிறார். மக்கள் அவருடைய நடவடிக்கைகளினால் ஆத்திரமடைந்த நிலையிலும் அமைதியாகவே போராடியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கில் ஆயுதங்கள் இன்றி ஓரிடத்தில் கூடியிருக்கிறார்கள். பெண்களும் குழந்தைகளும் துப்பாக்கிச் சூடு தொடர்பான எந்த பயமும் இன்றி அதைத் துணிந்து எதிர்கொள்ளும் நோக்கிலேயே கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த வருடத்தை கொஞ்சம் 110-120  வருடங்களுக்கு முன்னதாக மாற்றிக்கொண்டு,  வரியின் பெயரை மாற்றிக்கொண்டு வேறுசில மேலோட்டமான மாற்றங்கள் செய்து கொண்டால் போதும்.  1920- 30களில்  என்ன நடந்தனவோ  அவை அப்படியே அந்த நூறு வருடங்களுக்கு முன்னதாக நடந்திருக்கின்றன.

மக்கள் ஒன்றுகூடிய விதம், முன்னெடுத்த நடவடிக்கைகள், ஒற்றுமையைத் தக்கவைக்கச் செய்தவை, போராட்டம் குறித்து மக்கள் மனதில் இருந்த அடிப்படையான மனோபாவம் – இவை எல்லாமே இந்த இரண்டு காலகட்டங்களிலும் ஒரே மாதிரியாகவே இருந்திருக்கின்றன.

இந்த 1810-11 வாக்கில் நடந்த ஒத்துழையாமைப் போராட்டத்துக்கும் சத்யாகிரஹம் என்று சொல்லப்பட்ட போராட்டத்துக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை என்று இதற்கு அர்த்தமில்லை.  ‘சத்யாகிரஹம்’ என்ற வார்த்தை காந்தியடிகளால் உருவாக்கப்பட்டதுதான். ஆஸ்ரம வாழ்க்கை அனுபவம் பெறாத ஒருவருக்கு அதை முறையாகப் பின்பற்ற முடியாது. ஆனால், சாதாரண சத்யாகிரஹம் என்பது  1810-11-ல் பனாரஸில் நடந்ததுபோல வெறும் ஒத்துழையாமை  மற்றும் சட்ட மறுப்பு என்பதுபோலவே நடந்து முடியும்.

செக்கோஸ்லோவியர்களுக்கும் போலந்து நாட்டினருக்கும் காந்தியடிகள் சத்யாகிரஹ வழிமுறையைப் பரிந்துரைத்தபோது (அந்த நாட்டினர் அவர்களுடைய திறமை, வாழ்க்கைப் பார்வைக்கு ஏற்ப அதை மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம்) பனாரஸில் நடந்த போராட்டத்தைத்தான் மனதில் கொண்டு சொல்லியிருக்க வேண்டும்

ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. 1810-11 களில் மக்கள், நமது விருப்பம்போலச் செயல்படவும் இடம் பெறவும் முடிந்தவர்களாக இருந்தனர்.  நூறு வருடங்களுக்குப் பிந்தைய இந்தியர்களுக்கு அது முடிந்திருக்கவில்லை. இரண்டுக்கும் இடையிலான அந்த நூற்றாண்டில் (வேறு சில பகுதிகளைப் பொருத்தவரையில் அதை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ)  மக்களின் ஒட்டுமொத்த தைரியமும் தன்னம்பிக்கையும் ஒட்ட உறிஞ்சி எடுக்கப்பட்டு விட்டன.  ஒருவகையில் மேல்தளத்தில் என்றாலும், அந்த மக்கள்  உறைந்துபோன நிலையில்,  தமக்குள் உடைந்தவர்களாக,  அடிமைகளாக ஆகிவிட்டிருந்தனர்.  இப்படியான காலகட்டத்தில்தான் காந்தியடிகள் மக்கள் மத்தியில் அந்தப் பழைய தன்னம்பிக்கையையும்,  துணிச்சலையும் மீட்டுக் கொண்டு வந்தார்.

காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தையும் சட்ட மறுப்பு போராட்டத்தையும் மிகப் பெரிய அளவிலும் வெற்றிகரமாகவும்  முன்னெடுத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.  மகாத்மா காந்தி இந்தப் போராட்டங்களை எல்லாம் நடத்திய  இருபதாம் நூற்றாண்டில்  பிரிட்டிஷார் ஒப்பீட்டளவில்  மிதமானவர்களாக  மாறி இருந்தனர்.  இந்தியர்களின்  சாத்விக அணுகுமுறை  பிரிட்டிஷாரிடமும்  பிரதிபலித்திருந்தது. மகாத்மா காந்தியின் தனிப்பட்ட ஆளுமை கூட பிரிட்டிஷார் மனதில் அப்படியான நல்ல உணர்வுகளை உருவாக்கி இருக்கக்கூடும்.

பெரும்பாலான  பிரிட்டிஷார், காந்தியடிகளுடனான  தனிப்பட்ட உரையாடல்களில்,  இந்தியர்களுக்கு பிரிட்டிஷார் செய்து வரும் கொடுமைகள் பற்றி மனப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர்.  இதற்கு மாறாக 18-19ஆம்  நூற்றாண்டில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மனிதத்தன்மையற்ற,  மிகவும் கொடூரமான அரசாங்கத்தின் கையாட்களாக மட்டுமல்லாமல், தாமே அத்தகைய மனிதத்தன்மையற்றவர்களாகவும் இரக்கம் அற்றவர்களாகவும்  இருந்தனர்.  எது அவர்களிடையே அப்படியான சாதகமான மாற்றத்தைக் கொண்டு வந்தது?  ஒப்பீட்டளவில் மிதமாக நடந்துகொள்ள வைத்தது எது? என்பதெல்லாம் விரிவாக ஆராய்ந்து பார்க்கப்பட வேண்டிய ஒன்று.



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அழகிய போராட்டம் (பகுதி- 7)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம் – 4

1810-11 வாக்கில் பனாரஸில்  நடந்த போராட்டங்கள் எல்லாம்  அரசாங்கம் மற்றும் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் உள்ளடக்கியதாகச்  சொல்ல முடியாது. 18-19ஆம்  நூற்றாண்டு தொடர்பான (அதற்கு முந்தைய காலம் பற்றியும் இருந்தால்) அனைத்து முதல் நிலை ஆவணங்களையும் முறையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.  அப்போதுதான் வேறு என்ன விதமான போராட்ட வடிவங்கள் இருந்திருக்கின்றன;  அவற்றின் தன்மைகள் எத்தகையவை என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியும். 

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்,  தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஒத்துழையாமை,  சட்ட மறுப்பு போன்ற அமைதியான வழிகளில் போராடுவது என்பது இந்தியப் பாரம்பரியத்தின்  ஓர் அங்கமாக இருந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.  

“இந்திய தேசம் முழுவதிலும் வாழ்க்கையின் அனைத்துத் தளங்களிலும்  அமைதி வழியிலான எதிர்ப்பைக் காட்டுவது தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது.   நமது ஆட்சியாளர்கள் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினால் நாம் அவர்களுடன் ஒத்துழைக்க மறுப்பது உண்டு” என்ற காந்திஜியின் கூற்றையும் அது உறுதிப்படுத்துகிறது. 

உள்ளுணர்வு சார்ந்தோ,  ஏதேனும் சம்பவத்தைப் பார்த்தோ,  காந்தியடிகளுக்கு இந்தப் பாரம்பரியம் பற்றி நன்கு தெரிந்திருக்கிறது.

ஒத்துழையாமை அணுகுமுறையும் சட்டமறுப்பு மனோபாவமும் இந்தியப் பாரம்பரியத்தில்  இருந்திருக்கிறது என்ற விஷயத்தைத் தெரிந்து கொள்வதன் மூலம் இன்று இந்தியாவுக்கு ஏதேனும் பலன் உண்டா?

நிச்சயமாக, மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் அதிகார வர்க்கத்திற்கும் இதனால் நல்ல பலன் உண்டு. மக்கள்- ஆட்சியாளர்கள் இடையேயான உறவு  மேம்படுவதற்கு இது தொடர்பான புரிதல் மிகவும் அவசியம்.  இன்றும் இந்திய அரசு நல்ல முறையில் நடப்பதற்கு இந்த மனோபாவத்தைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

மேலே இதுதொடர்பாகப் பார்ப்பதற்கு முன்னால், இன்றைய இந்திய அரசு 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து கற்றுக்கொண்டு பின்பற்றி வரும் இரண்டு முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்:

முதலாவது,  மக்கள் பற்றியும்  அரசாங்கம் பற்றியும் 18- 19ஆம்  நூற்றாண்டுகளில் பிரிட்டிஷாரின் மனநிலை,  அணுகுமுறை  ஆகியவை என்னவாக இருந்தனவோ  அதையேதான் இன்றைய நமது ஆட்சியாளர்களும் பின்பற்றி வருகிறார்கள். 

 1810-11 காலகட்ட அரசாங்க ஆவணங்களைப் பார்த்தால்,   ‘மக்கள் அரசுக்கு எந்த விதக் கேள்விகளும் கேட்காமல் அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்’  என்று அன்றைய ஆட்சியாளர்கள்  பல இடங்களில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க முடியும்.   ‘ஓர் அரசானது,  மக்களுடைய கூச்சல் குழப்பங்களுக்கு  வளைந்து கொடுத்துவிடக் கூடாது.  மக்களுடைய விருப்பங்கள் எதையாவது நிறைவேற்றித் தருவது என்றால் அரசின் மேலாதிக்கத்தை விட்டுக் கொடுக்காத வகையில் அதை செய்ய வேண்டும்‘  என்று குறிப்பிட்டு இருப்பதையும் பார்க்க முடியும்.

பாகல்பூர் கலெக்டரைப் பொருத்த வரையிலோ,  சட்டவிரோதமான எதிர்ப்புக் கூட்டங்கள் நடப்பதால் வரி விதிப்புப் பணிகளின் தொடக்க்க் கட்டத்திலேயே அதை நிறுத்துவதென்பது அரசின் அதிகாரத்தின் ஆணிவேரை அறுப்பது போன்றது. ஓர் அரசுக்கு அதன் மக்கள் மீது அந்த அதிகாரம் இருந்தே ஆக வேண்டும்.

பனாரஸ் மாஜிஸ்ட்ரேட் ஜனவரி 20, 1811-இல்  அனுப்பிய கடிதத்தில் இந்தவிதமாகவே குறிப்பிட்டிருக்கிறார்.  ‘அரசுக்கு எதிரான இப்படியான எதிர்ப்பை அனுமதிப்பது சரியல்ல.  அரசின் வலிமை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே செல்கிறது.  ஒரு நாட்டின் அரசின் மீது அதன் மக்கள் மரியாதை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியம்’.

இப்படியான எண்ணங்கள், வார்த்தைகள் எல்லாம் இன்றைய இந்திய அரசின் சட்டதிட்டங்கள்,  விதிமுறைகள் ஆகியவற்றிலும் அப்படியே இடம் பெற்றுள்ளன; தொடர்கின்றன.

இரண்டாவதாக, மகாத்மா காந்தி முன்னெடுத்த போதிலும் இந்திய மக்கள் அனைவரின் மனதிலும்  பழைய துணிச்சலும்,  தன்னம்பிக்கையும் சம அளவில் மீட்டெடுக்கப்படவில்லை.  பலர் மனதில் இது எந்தத் தாக்கத்தையும் செலுத்தவில்லையோ என்று கருதும் அளவுக்குத் தான் இதன் செல்வாக்கு இருக்கிறது.  அல்லது ஆரம்பத்தில் ஏற்பட்ட ஒரு சிறு பொறியைத் தாண்டி வேறெதுவும் நடக்காமல் மயான அமைதிக்குள்  அடங்கியதுபோல ஆகிவிட்டது.  பனாரஸில் பார்த்ததுபோல ஒரு குறிப்பிட்ட அளவுக்குப் போராடிவிட்டு,  இனிமேல் நம்மால் தடுக்க முடியாது;  வெற்றி பெற முடியாது என்று சோர்ந்து போனது போலாகிவிட்டது.

1947-ல்  இருந்து  சுதந்திர இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பு போராட்டமும் அவசியம்தானா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்த அமைதிப் போராட்ட வழிமுறையானது  சமூக,  அரசியல் மாற்றத்தை விரும்பக் கூடியவர்கள் உட்பட இந்திய அரசியல் களத்தில் பிரச்னைகள் தொடர்பாக அக்கறை கொண்டவர்கள்  அனைவரையும்  பதற்றமடையச் செய்கிறது. 

சுதந்திர தேசத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் ஆட்சிதான் நடக்கிறது என்பதால்  ஒத்துழையாமை இயக்கம்,  சட்ட மறுப்பு இயக்கம் போன்றவற்றுக்கெல்லாம் இடமில்லை என்று ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.  வேறு சிலரோ சில குறிப்பிட்ட விஷயங்களுக்கு மட்டும் அதை பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.  எந்த விஷயங்களுக்கெல்லாம் ஒத்துழையாமை இயக்கத்தைப் பயன்படுத்தலாம் என்ற விஷயத்தில் நிறைய கருத்து வேறுபாடுகள் உள்ளன.  ஏற்றுக்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை வலியுறுத்த மட்டுமே  அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்றும் சொல்கிறார்கள். வேறு சிலரோ ஏற்றுக்கொள்ளப்பட்ட,  சில அடிப்படையான மதிப்பீடுகளை மாற்றியமைப்பதற்கும் கூட ஒத்துழையாமை இயக்கத்தை பயன்படுத்தலாம் என்கிறார்கள்.

ஆனால் இது ஒன்றும் புதிய கருத்து மோதல் அல்ல.  காந்தியடிகளால் ஒத்துழையாமை இயக்கப் போராட்டம்,  சட்ட மறுப்பு இயக்கம் போன்றவை மறு உருவாக்கம் செய்யப்பட்ட காலத்திலேயே இத்தகைய விவாதங்கள் நடந்துள்ளன.  இதை எதிர்த்தவர்களில் அரசியல் அங்கமாக இருந்தவர்கள் மட்டுமல்லாது, ஸ்ரீனிவாச சாஸ்திரி,  ரவீந்திரநாத் தாகூர் போன்றவர்களும் இருந்தனர்.

சட்டதிட்டங்களை அழிக்கக்கூடிய,  சமூக ஒழுங்கு மற்றும் ஒழுங்கமைவு பெற்ற அரசை அழிக்கக்கூடிய,  அனைத்தையும் கவிழ்க்க முனையக் கூடிய,  தூக்கி எறியக் கூடிய,  அராஜகத்தைக் கொண்டுவரக் கூடிய எந்த ஒரு இயக்கமும் தவறானது தான் என்று சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். *25

  ஒத்துழையாமை இயக்கம் என்பது இந்தியாவின் கௌரவத்துக்கு இசைவானது அல்ல. அந்தப் போராட்டங்கள் உள்ளார்ந்த பல அபாயங்களை கொண்டவையாக இருக்கின்றன *26  என்று தாகூர் கருதினார்.

ஒத்துழையாமை இயக்க அணுகுமுறைக்கு மிகக் கடுமையான எதிர்ப்பானது ஆர்.பி.பராஞ்சபே மூலம்தான் முன்வைக்கப்பட்டது. டிசம்பர் 26, 1924  அன்று லக்னோவில் நடைபெற்ற இந்திய தேசிய  தாராளவாதக் கூட்டமைப்பு  மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்தியபோது அவர் அதைக் கடுமையாக விமர்சித்தார்.  ஒத்துழையாமை இயக்கம்,  சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை தொடர்பான மிகவும் தீவிரமான காத்திரமான விமர்சனப் பார்வை என்பதால் அவர் பேசியதை சற்று விரிவாக இங்கு பார்ப்போம். பராஞ்சபே கூறியது:

 “ஓரளவுக்கு படித்த மக்களிடையே,  ஒத்துழையாமை இயக்கம் என்பது மிகப் பெரிய தேசபக்திச் செயல்பாடு என்ற எண்ணம் அழுத்தமாக ஊன்றப்பட்டிருக்கிறது.  இதுவே இன்றைய காலகட்டத்தில் தீவிர பிரசாரத்தினால் நடந்தேறி இருக்கும்  மிக மிக மோசமான செயல்.  சத்யாகிரஹம் என்ற பெயரிலும்,  ஒத்துழையாமை,  சட்ட மறுப்பு என்ற பெயரிலும் தேசம் முழுவதிலும் மிகுந்த அக்கறையுடன் முன்னெடுக்கப்படுகிறது. அதனால் ஏற்படும் அபாயங்களை நாம் ஏற்கனவே நன்கு பார்க்க முடிகிறது. 

இந்தப் பக்கம் அல்லது அந்தப் பக்கத்தில்  தவிர்க்கமுடியாமல் வன்முறையைக் கைக்கொள்ளும் படியாகவே  அது செய்துவருகிறது.  அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பை  அவ்வப்போது அது தரக்கூடும்.  ஆனால் மக்கள் மீது அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் நிரந்தரமானது. இதனால் சட்டம்- ஒழுங்கு மீதான  மரியாதையானது  முழுவதுமாக மறைந்து போய்விடுகிறது.  சமூகத்தில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும்  தேசபக்தர்கள்  என்று சொல்லப்படுபவர்களை நகலெடுப்பதன் மூலம் தாமும் தேசபக்தர்களாக ஆகி விடுவதாக நம்பிக்கை கொள்ள அது வழிவகுக்கிறது.

மகாத்மாக்கள்,  மெளல்விகள், தேசபந்துக்கள்  ஆகியோரின் எதிர்பார்ப்புகள் எல்லாம் பூர்த்தியான பின்னரும், மக்கள் மத்தியில் இந்த ஒத்துழையாமை குணமும் சட்டமறுப்பு மனோபாவமும் தொடர்ந்து்  நீடிக்கும். அவர்களுடைய கையில் ஆட்சி அதிகாரம் வரும்போது,  அவர்கள்  அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக  இப்போது  விதைத்து வரும் இந்தக் களைகள் எல்லாம்  அன்று மிகப் பெரிதாக வளர்ந்து அப்புறப்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதைப் பார்ப்பார்கள். வில்லங்கமான,  குறுகியகால ஆதாயத்தை பெறும் நோக்கில் முடிவற்ற துன்பத்தை  தரக்கூடிய ஒரு செயலை முன்னெடுக்கும்  தொலைநோக்குப் பார்வை இல்லாத ஒரு செயல் இதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. 

தீவிர சிந்தனை கொண்ட தலைவர்கள் வரிகொடா இயக்கத்தை  சற்று நகைப்புடனேயே பார்ப்பார்கள்.  எந்த அரசாக இருந்தாலும் வரிகள் விதிக்கப்படத்தான் செய்யும்.  மக்கள் அதைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.  வரிகளைக் கொடுக்காமல் இருப்பதுதான் மிகப் பெரிய தேசபக்திச் செயல் என்று மக்களுக்குக்  கற்றுக் கொடுக்கப்பட்டு விட்டதென்றால், எதிர்கால அரசுகளுக்கு வரி வசூலிப்பது என்பது கிட்டத்தட்ட முடியாத ஒரு செயல் ஆகிவிடும்.” *27.

காலப்போக்கில் இந்திய தேசியவாதத்தின் ஒற்றை முகமாக மகாத்மா காந்தி ஆகிவிட்டார்.  எனவே இதுபோன்ற விமர்சனங்கள் வலுவிழந்துவிட்டன.  ஒத்துழையாமை இயக்கம்,  சட்ட மறுப்பு இயக்கம் ஆகியவை தொடர்பாக தனிநபர்கள் பலர் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர்.  என்றபோதிலும் 1930 -ன்  நடுப்பகுதி வாக்கில்  அநீதிக்கு எதிரான இந்தியப் போராட்ட வடிவமாக  அவையே நிலைபெற்றுவிட்டன.

இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சி அகற்றப்பட்டதும்,  சாஸ்திரி,  தாகூர், பராஞ்சபே  போன்றோரின் கருத்துகள் முன்னிலைக்கு வந்தன. எதிர்பார்த்தது போலவே இதுதொடர்பான எதிர்ப்பும் அதிருப்தியும்  அரசாங்கத்தில் அங்கமாக இருப்பவர்களாலேயே  முன்வைக்கப்பட்டன. இதில் வருத்தத்துக்குரிய நகைமுரண் என்னவென்றால், ஒத்துழையாமை இயக்கத்தையும்,  சட்ட மறுப்பையும்  இன்று எதிர்ப்பவர்கள் பலர், காந்தியின் காலத்தில் அந்தப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றவர்கள் தான்.

ஆனால் ஒத்துழையாமை இயக்கம்,  சட்டமறுப்பு இயக்கம் ஆகியவற்றுக்கு எதிரான அந்த மனோபாவத்தை எதிர்த்த பெரிய தலைவர்கள் அப்போதும்  இருக்கத்தான் செய்தார்கள். ஜே.பி.கிருபளானி 1953, டிசம்பர் மாதம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:

 “ஜனநாயக நாட்டில் சத்யாகிரஹத்திற்கு இடமில்லை என்று இன்றைய காங்கிரஸ் எஜமானர்கள் சொல்வதை நான் மறுக்கிறேன்.  காந்தியடிகள் வடிவமைத்த சத்யாகிரஹம் என்பது வெறும் அரசியல் போராட்டக் கருவி  மட்டுமே அல்ல.  சமூக,  பொருளாதாரத்  தளங்களிலும் அதைப் பயன்படுத்த முடியும்.  நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எதிராகவும் கூட அதைப் பயன்படுத்த முடியும்.  காந்தியடிகள் அதை ஒரு வாழ்க்கைக்  கோட்பாடாக முன்வைத்திருக்கிறார்.  எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடக்கும் ஜனநாயக நாட்டில் சத்யாகிரஹத்துக்கு இடமில்லை என்பது அபத்தம்.  அதிலும் அதிகார வர்க்கத்தின் கையில் அனைத்து அதிகாரமும் குவிந்திருக்கும்  இன்றைய நிலையில்  அப்படிச் சொல்லவே முடியாது.”

 மேலும் அவர் கூறுகையில், “எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்காக அடுத்த தேர்தல் வரும் வரையில் அல்லது ஒரு ஆட்சியைத் தூக்கி எறியும் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.  ஒரு சிலருக்கு அந்த பிரச்னையானது உடனே தீர்க்க வேண்டிய வாழ்வா, சாவா பிரச்னையாக இருக்கக் கூடும்.  சத்யாகிரஹ வழியில் போராடும் உரிமையை மறுப்பது என்பது  நீண்ட காலத்திற்கு சர்வாதிகார சக்திக்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு இணையானது” என்றார். *28

இந்தப் புதிய எதிர்ப்பு மற்றும்  அதிருப்தியானது  மிகவும் சிக்கலானது;  தீவிரமானதும் கூட.  இவற்றில் பெரும்பாலானவை, ஒத்துழையாமை இயக்கத்தையும் சட்டமறுப்பு போராட்டத்தையும் முழுவதுமாக எதிர்க்கவில்லை.  ஜனநாயக அரசுக்கு இது *29 தேவையற்றது,  தீங்கு விளைவிக்கக்கூடியது என்பதாகவே கே.சந்தானம் போன்றோர் கூறுகிறார்கள்.  அவரைப் பொறுத்த வரையில் சில விஷயங்களில் ஜனநாயக அரசுக்கு எதிரான சத்யாகிரஹப்  போராட்டத்தை நியாயப்படுத்தவே முடியாது *30.

யு .என்.திபார் 1955-ல் (அப்போது அவர்தான் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர்)  சொன்னது:   “ஜனநாயகத்தில் அல்லது ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளில் சத்யாகிரஹத்திற்கான  தேவை மிக மிக்க் குறைவு தான்”. *31

எனினும் சந்தானம் போன்றவர்கள் கூட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது  போன்ற விசேஷத் தருணங்களில் தனிநபர்கள் சத்யாகிரஹத்தில் ஈடுபடுவதை ஆதரிக்கவே செய்கிறார்கள்.  முன்னாள் தலைமை நீதிபதியான பி.பி.கஜேந்திர கட்கர்  இதுபோன்ற கருத்தை கொண்டவர்தான்.  மார்ச் 1967-ல்  அவர் குறிப்பிட்டது: வேறு அனைத்து வழிகளிலும் முயன்று பார்த்துவிட்டு,  அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை என்றால் ஜனநாயகத்திலும் கூட சத்யாகிரக வழிமுறையை ஒருவர் பின்பற்றலாம். *32

அப்படியாக ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றுக்கான இப்போதைய எதிர்ப்பானது 1920களில் இருந்ததற்கு முற்றிலும் மாறானது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் மரியாதைக்குரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் இப்போதும் ஒத்துழையாமை இயக்கம் போன்றவற்றுக்கு ஆதரவாக இருப்பதில்லை. எனினும் மக்கள் மத்தியில் இந்தப் போராட்டங்களுக்கான வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. அது ஒருவகையில் அறிவுத் தன்மை கொண்டது என்றாலும், ஜனநாயகத்துக்கு நேரிடையாகப் பங்களிக்கவும் முடியும் .

உண்மையான ஜனநாயகத்துக்கு உண்மையான சத்யாகிரஹம் என்பது உதவிகரமாக இருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்ற சந்தானத்தின் பார்வையை *33 பலரும் இன்று ஏற்றுக் கொள்வார்கள்.  எனினும் இப்போதைய (1971இல் எழுதியது) ஆட்சியாளர்கள் மற்றும் அதிகார வர்க்கங்கள் இதைப் புரிந்து ஏற்றுக் கொள்வதாகத் தெரியவில்லை.  இதற்கு முக்கியமான ஒரு காரணம் என்னவென்றால் இன்றைய ஒத்துழையாமை இயக்கப் போராட்டங்கள் எல்லாம் அற்ப விஷயங்களுக்காக எல்லாம் முன்னெடுக்கப்படுகின்றன.

யு.என்.திபோர், சந்தானம் ஆகியோர் தமது கூற்றுகளை முழுவதுமாக விளக்கிச் சொல்லாமல் மைய விஷயம் பற்றியே பேசியிருக்கிறார்கள். திபோரைப்  பொருத்தவரையில், ஜனநயகத்தில்  சத்யாகிரஹம் என்பது  அரசு அல்லது அரசியல் சாசனத்தின் அஸ்திவாரத்தையே குலைக்கும் செயல் அல்லது திட்டத்துக்கு எதிராக மட்டுமே முன்னெடுக்கப்பட வேண்டும். *34

சந்தானத்தைப் பொருத்தவரையில்,  மக்களுடைய அடிப்படை உரிமைகளைத் தற்காத்துக் கொள்வதற்கான மிக எளிய,  துரிதமான தீர்வுகளை தரக்கூடிய வழிமுறையாக சத்யாகிரஹத்தை அவர் பார்க்கிறார். எப்படியான செயல்களெல்லாம் அரசு அல்லது அரசியல் சாசனத்தின் அஸ்திவாரத்தைச் சிதைக்க முடியும்?  இவையெல்லாம் அடிப்படை உரிமைகள் என்ற விஷயத்தில்தான்  இவர்களும் இவர்களைப் போன்றவர்களும் தவறு செய்கிறார்கள். *35

அரசு முன்னெடுக்கும் எந்தச் செயல் அரசையே அழிக்கும்?  அடிப்படை  உரிமைகளை  மறுப்பது என்றால் என்ன?  வெறும் சட்ட திட்டங்களின் அடிப்படையில் மட்டும் பார்த்து இதற்கான பதில்களைச்  சொல்லிவிட முடியாது. 

 ஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்.  மிகப் பெருமளவிலான பட்டினி,  பாதுகாப்பின்மை போன்றவையெல்லாம் அரசு மற்றும் அரசியல் சாசனத்தின் அடித்தளத்தை சிதைக்கக் கூடியவை தான்.  கூடவே  அவையெல்லாம் அடிப்படை உரிமைகளை மறுப்பவர்.  நம் நாட்டில் 40 சதவீதத்துக்கு  அதிகமான மக்கள்  பசி, பாதுகாப்பின்மை,  மோசமான சுற்றுச்சூழலில் வாழ்வது போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  நிச்சயமாக அது இப்போது இந்திய அரசு,  அல்லது அரசியல் சாசனத்தின் மூலம் உருவானது அல்ல என்பது உண்மைதான்.  கடந்த 200 ஆண்டுகளாக நடந்து வந்த வீழ்ச்சி அது. இன்றைய அரசுகளால் அதை நீக்குவதற்கு முடியவில்லை;  அல்லது போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்பதும் உண்மைதான்.  இவையெல்லாம் நம் அரசாங்கம் மற்றும் அரசியல் சாசனத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்க கூடியவைதான். பட்டினி,  பாதுகாப்பின்மை போன்றவற்றை நீக்க (பணி உத்தரவாதம்,  வேலை இல்லாதவர்களுக்கு,  முதியோருக்கு,  உடல் குறைபாடு உடையவர்களுக்கு உதவித்தொகை,  நோயாளிகளுக்குத்  தேவையான உதவிகள் வழங்குதல்  மற்றும் அரசியல் சாசனம் வகுத்திருக்கும் பிரிவினருக்கு உதவுதல்)  ஒத்துழையாமை இயக்கம்,  சட்ட மறுப்பு இயக்கம் போன்றவற்றை முன்னெடுப்பது என்பது வீழ்ச்சியிலிருந்து நம்மை நிச்சயம் காப்பாற்றும். 

முழுவதுமாகத் தடுக்க முடியாவிட்டாலும். வினோபா பாவே போன்ற பொறுப்புணர்வு மிகுந்த, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்கக்கூடியவர் கூட  இப்படிச் சொல்லியிருக்கிறார்:   “மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டும்  அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை என்றால் அதை நடைமுறைப்படுத்த சத்தியாகிரகத்தில் ஈடுபடலாம்”. (சத்யாக்ரஹ விசார்- பக் 65). 

பசி மற்றும் பாதுகாப்பின்மையை  சரி செய்வதைத் தவிர வேறு  சிக்கலான,  விவகாரமான பணி வேறு எதுவும் இல்லை.  அந்தப் பணிகளுக்கான சட்டபூர்வ அங்கீகாரம் ஆதரவு போன்றவையெல்லாம் அரசியல் சாசனத்திலும் மக்களாட்சியிலும் அழுத்தமாக  உறுதி செய்யப்பட்டுள்ளன. *36

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

24. ஜேம்ஸ் மில் (ஹெச்.ஹெச். வில்சன்) ஹிஸ்டரி ஆஃப் பிரிட்டிஷ் இந்தியா, தொகுதி ஏழு, பக் 467.

25. பி.கோதண்ட ராவ், வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி: எ பொலிட்டிகல் பயோக்ரஃபி (1963) பக் 195.

26. டி.ஜி.டெண்டுல்கர், தி மஹாத்மா (1951-54) தொகுதி 2, பக் 59-60.

27. ஆர்.பி. பராஞ்சபே, செலக்டட் ரைட்டிங்ஸ் அண்ட் ஸ்பீச்சஸ் (1940) பக் 176-7.

28. ஜனதா (வார இதழ்) ஜனவரி 26, 1954 : ஜே.பி. கிருபளானியின் பேச்சு. முன்னணி கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஜனவரி, 17, 1954, பக் 3.

29. கே.சந்தானம், சத்யாக்ரஹா அண்ட் ஸ்டேட் (அ960) பக் 62.

30. கே.சந்தானம், அதே புத்தகம்.

31. டைம்ஸ் ஆஃப் இந்தியா: செப்டம்பர் 22, 1955, யு.என்.திபோரின் கட்டுரை, சத்யாகிரஹத்தின் பின்னால் உள்ள காரணம்.

32. ஃப்ரீ பிரஸ் ஜர்னல், மார்ச் 3, 1967: பிரஸ் ரிப்போர்ட் ஆஃப் லெக்சர்

33. கே.சந்தானம், அதே புத்தகம், பக் 67.

34. டைம்ஸ் ஆஃப் இந்தியா, அதே

35. கே.சந்தானம், அதே,பக் 67.

36. கான்ஸ்டிட்யூஷன் ஆஃப் இந்தியா, ஆர்ட்டிகிள் 41



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

அழகிய போராட்டம் (பகுதி- 8)

-தரம்பால்

தமிழில்: பி.ஆர்.மகாதேவன்

அத்தியாயம்- 4 (தொடர்ச்சி)

பிரிட்டிஷார் இதுபோன்ற பிரச்னைகளுக்கு எதிர்வினை புரியாததற்கான காரணம்,  இந்தியாவில் அவர்களுடைய ஆட்சிக்கான தார்மிக உரிமை என்பது கடைசி வரையிலும் இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்னதாக  இருந்த இந்திய  ஆட்சியாளர்கள் பலருக்கு ஆட்சிபுரிவதற்கான தார்மிக உரிமை வலுவாக இருந்தது.  எனவே மக்களுடைய போராட்டங்களுக்கு அடி பணிந்து,  தனது கொள்கைகளை மாற்றிக் கொண்டு,  அல்லது தான் செய்ய நினைத்ததைக்  கைவிட்டுக்கொள்ள  முடிந்திருந்தது.  

ஆள்வதற்கான  அவர்களுடைய  உரிமைகள்  அதனால் எந்த வகையிலும் பாதிக்கப்படப் போவதில்லை.  இன்னும் சொல்லப்போனால், மக்களுடைய கோரிக்கைகளுக்குச் செவிமடுத்து அவர்களுக்குப் பிடிக்காததை ரத்து செய்வதன் மூலம் அவர்களுடைய ஆட்சி அதிகார உரிமையை ஆட்சியாளர்கள் மனதிலும் மக்களுடைய மனதிலும் வலுப்படுத்தவே செய்திருக்கின்றன. ஆட்சி புரிவதற்கு தார்மிக உரிமை பெற்ற  ஆட்சியாளரால் மட்டுமே  இப்படியாக விட்டுக் கொடுக்கவும் பின்வாங்கவும் முடியும்.

மாறாக இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷாருக்கு சில பகுதிகளில்  ஆட்சி புரிவதற்கான அதிகாரத்தை மக்களில்  சிலரிடமிருந்து  அல்லது ஒட்டுமொத்த மக்களிடமிருந்து பெற்றிருக்கக்கூடும்.  எனினும் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால்  அவர்களுக்கு இந்தியாவை ஆள்வற்கான தார்மிக உரிமை ஒருபோதும் இருந்ததில்லை. அவர்கள் ஆக்கிரமிப்புச் செய்த சக்திகளாக, ராணுவத்தின் மூலம் அத்துமீறி நிலை பெற்றவர்களாகவே  கடைசி வரை இருந்தனர்.  இந்த ஆக்கிரமிப்புக்கு அவர்கள் நமது ராணுவத்தை தந்திரமாகவும்  மிகக் குறைவாகவேயும்  ஒப்பீட்டளவில்  பயன்படுத்தியுள்ளார்கள்  என்பது உண்மைதான்.  இருந்தபோதிலும் இந்தப் படைபலம் என்பது அந்த அளவுக்கு சிறியதொன்றும் அல்ல.

 1857  வரையிலும் இந்தியாவில் இருந்த ஆக்கிரமிப்புப் படைகளில் 4 இந்தியர்களுக்கு  ஓர்  ஐரோப்பியர் என்ற விகிதத்தில் இருந்திருக்கிறார்கள்.  சில நேரங்களில் ஆறு இந்தியர்களுக்கு  ஓர் ஐரோப்பியர் என்பதாக்க்கூட அவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.  ஆனால் 1857க்குப்  பிறகு அவர்கள் மிகவும் பயந்துபோய் விட்டார்கள்.  அதைத் தொடர்ந்து இரண்டு இந்திய வீரர்களுக்கு ஓர் ஐரோப்பியர் என்ற வகையில்  ஐரோப்பியர்களின் எண்ணிக்கை படையில் அதிகரித்தது.  1900 மற்றும் அதற்குப் பின்னரும் கூட இதுதான் நிலைமை.

1856-ல் ஐரோப்பியப் படையினரின் எண்ணிக்கை 45,104;  1860-ல் 92,866;  1908-ல் 75,702.  அதேநேரம் 1856-ல் இந்திய வீரர்களின் எண்ணிக்கை 2,35,221; 1908-ல் 1,48,996 (பிரிட்டிஷ் பார்லிமென்டரி பேப்பர்ஸ், 1908,  தொகுதி 74).

அப்படியாக இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சி எந்தவித தார்மிக உரிமையும் இன்ன்றித்தான்  நீடித்தது என்ற உணர்வானது,  ராபர்ட் கிளைவ்,  தாமஸ் மன்றோ,  ஜான் மால்கம்,  சார்லஸ் மெட் கஃபே  போன்ற பலதரப்பட்ட மனிதர்களால் வெளிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ளது. 1857-ல்  இது மேலும் வெளிப்படையாக அனைவருக்கும் தெரியவந்தது.

‘இந்தியாவின் மீதான நமது ஆதிக்கமும்  ஆக்கிரமிப்பும் படைபலத்தின் மூலமே பெறப்பட்டது.  அதன்மூலமே நிலைநிறுத்தப்பட வேண்டும்.  இந்தியாவின் ஒவ்வொரு மன்னரும் பயத்தின் மூலமாகவே அடக்கி வைக்க வேண்டும்’ *37 என்பதுதான் பிரிட்டிஷாரின் ஆட்சி தொடர்பான  ராபர்ட் கிளைவின் ஆதாரமான கோட்பாடு.

57 வருடங்களுக்குப் பின்னர் மெட்கஃபேயும் கிட்டத்தட்ட இதையே குறிப்பிட்டிருக்கிறார்.  இன்னும் சொல்லப்போனால் அதைவிட வெளிப்படையாகவே குறிப்பிட்டிருக்கிறார். 1829-ல்  அவர்  சொன்னது:

 “நாம் முன்னெப்போதையும் விட இந்தியாவில் அதிக வலிமை கொண்டவர்கள் போலத் தோற்றமளித்துக் கொண்டிருக்கிறோம்.  ஆனால் எளிதில் நம்மை வீழ்த்திவிட முடியும்.  நமது வீழ்ச்சி ஆரம்பித்தால் மளமளவெனச் சரிந்து விடுவோம். பிரிட்டிஷ் இந்திய சாம்ராஜ்யத்தின்  அதிவேக வீழ்ச்சியானது நாம் அதிசயிக்கும் வகையில் பெற்ற வெற்றியை விட மிகுந்த ஆச்சரியத்துடன் இந்த உலகில் பார்க்கப்படும்.” *38.

அவர் மேலும் சொல்கிறார்:  “இந்த அபாயத்துக்கான  முக்கிய காரணம் என்னவென்றால்,  நமது வலு என்பது  உண்மையில் நமது பலத்தின் மீது அமைந்திருக்கவில்லை.  அது ஒரு தோற்ற மயக்கம் மட்டுமே.  நமது உண்மையான பலம் என்பது நம்மால் அடக்கி ஆளப்படும்  இந்தியாவின் பரந்து விரிந்த தேசத்தில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் ஐரோப்பிய ராணுவப் படையில் தான் இருக்கிறது. அதுவே நமது ஒரே பலம்.  அந்தப் படைவீரர்களின் இதயமே நமக்கு ஆதரவாக நிற்கிறது.  நெருக்கடியான காலகட்டங்களில் அவர்களை மட்டுமே நாம் நம்பியாக வேண்டியிருக்கும்.

                நமது பிற  இந்தியக் குடிமைக் கட்டமைப்புகள் எல்லாம்  ஒருவகையில் அதிர்ஷ்டத்தை நம்பி இருப்பவையே. அவையெல்லாம்  நமக்காகவும் சேவை புரிகின்றன என்றாலும், அவற்றின் இருப்புக்காகவே  பெரிதும் செயல்படுகின்றன. எந்தச் சக்தியின் மூலம் அந்த அமைப்புகள்  இயங்குகின்றன என்ற வகையில், நெருக்கடி நேரத்தில் அந்த சக்திகளுக்கு அவர்கள் நிச்சயம் விசுவாசத்தை காட்டக்கூடும்.  எனினும் அவர்களுடைய உள்ளார்ந்த உணர்வுகளில் நமக்கு எதிரான தன்மையே நிறைந்து காணப்படும்.  மோசமான  அரசு நிர்வாகம் என்பதனால் அல்ல;  இயல்பான, தவிர்க்கமுடியாத எதிர்ப்பு உணர்வினாலே அது நிறைந்து காணப்படும். இப்போதைய சூழல் மாறி நமக்கு எதிராக உள்ளூர் மக்களுக்குச் சாதகமான ஒரு நிலை உருவாகும் என்றால், அவர்களுடைய மதிப்பையும் மரியாதையையும் நாம் எதிர்பார்க்க முடியாத நிலையே ஏற்படும்.  சில அற்புதமான அர்ப்பணிப்புகளை நாம் பார்க்க முடியக் கூடும்.   ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரையிலான இந்தியாவை ஒருங்கிணைக்கும் பொதுவான உணர்வுக்கு மாறாக சிலர் நம் பக்கம் இருக்கவும் கூடும்.” *39

அதுக்கு அவர் மேலும் சொல்கிறார்: “நமக்கான பெரும் அச்சுறுத்தல் ரஷ்யப் படையெடுப்பில் இருந்து வரப்போவதில்லை.  இந்தியர்களின் மனங்களில்  நாம் வெல்ல முடியாதவர்கள் என்ற எண்ணம் அழியத் தொடங்குவதுதான் நமக்கான பெரும் அச்சுறுத்தல். வேரோடு பிடுங்கி எறியும் அதிருப்தியானது  மிக அதிகமாகவே  உள்ளொடுங்கி இருக்கிறது. செயலூக்கத்துடன் அதை கிளர்ந்தெழச் செய்யும் சூழல்  எப்போது வேண்டுமானாலும் வந்துவிடக்கூடும்”. *40.

சில மாதங்களுக்கு முன்பாக மெட்கஃபே  ஓர் ஆலோசனை வழங்கியிருந்தார்:   ‘மக்கள் திரளில் செல்வாக்கு மிகுந்த பகுதியானது பொதுவான விருப்பங்கள்,  பொதுவான பார்வைகள் மூலமாக  நமது ஆட்சியுடன்  பிணைப்புக் கொண்டதாக இருக்க வேண்டும்.  அப்போதுதான் நம்மால் வேரூன்ற முடியும்.  இல்லை என்றால் நமது ஆட்சியானது எப்போதுமே நிலையில்லாததாகவே இருக்கும்’.  அதற்கான வழிமுறையாக இந்தியாவில் நம் நாட்டினரை தெளிவாகத் திட்டமிட்டு  குடியமர்த்த வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். *41.

இப்படியான மதிப்பீடுகளே இந்தியாவில் இருந்த பிரிட்டிஷ் ஆட்சி பற்றி பிரிட்டிஷார் பலருக்கும் இருந்தது.  அதுவே அவர்களுடைய அரசின் கொள்கைகளிலும் செயல்திட்டங்களும் வெளிப்பட்டது.  ‘ஐரோப்பியப் படைகளின் பலம்’,  ‘வெல்ல முடியாதவர்கள் என்ற தோற்ற மயக்கம்’  இவை நீங்கலாக பிரிட்டிஷாருக்கு இந்தியாவை ஆட்சி செய்வதற்கு எந்தவிதமான அங்கீகாரமோ  தார்மிக உரிமையோ  இருந்திருக்கவில்லை.  இதனால் இந்தியர்களுக்கு எந்தவிதச் சலுகை தரும் நிலையிலும் பிரிட்டிஷார் இருந்திருக்கவில்லை.  மக்கள் போராட்டத்திற்கு அடிபணிதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. 

 ஏதாவது சலுகை தருவது என்பது (1810-11  காலகட்டத்தில் வரிவிதிப்புக்கு எதிரான  போராட்டத்தின்  முடிவில் தந்ததுபோல) அவர்களைப் பொருத்த வரையில்  மேலும் அதிக  சலுகைகளைப்  போராடி பெறும் மனநிலைக்கு  மக்களை ஊக்குவித்து விடும்  என்று நினைத்தார்கள்.  அதே அவர்களுடைய ஆட்சியின் அனைத்து  அதிகாரங்களையும் சிதைப்பதில்தான் போய் முடியும் என்று நினைத்தார்கள்.  எனவே ஏதேனும் சலுகை தருவதோ,  சரணடைவதோ  தவிர்க்க முடியாமல் போகும்போது  அரசின் மேலாதிக்கத்துக்கு எந்தவிதக்  களங்கமும் வராத வகையில்   வெளிப்படையாகத்  தெரியும் வகையில் விட்டுக் கொடுக்காமல் அதைச் செய்ய வேண்டும்  என்றே நினைத்தார்கள்.

அப்படியாக, பிரிட்டிஷாரால் நிலைநிறுத்தப்பட்ட  ‘அரசு என்பது தவறே செய்ய முடியாது’ என்ற கோட்பாடானது (அதன் நீட்சியாக அரசின் பிற அங்கங்களான அதிகாரவர்க்கமும்) பிரிட்டிஷ் அதிகாரம் இந்தியாவில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பின்னரும் நீடித்து வருகிறது. ஓர் அரசானது மிகவும் பலவீனமாகத் தன்னை உணர்வதால், தன்னை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில், போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தைக் கைவிட்டால் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு விட்டுக்கொடுக்க முன்வருகிறது. அரசு பிழை செய்யவே முடியாது என்ற கோட்பாடானது அப்படியாக மாறியமைக்கப்பட்ட நிலையில், அப்படியான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு  அமைந்த விதிகளும் சட்டங்களும் அப்படியே நீடிக்கின்றன.

இந்தப் பிந்தைய கட்டமைப்பே அரசுக்கு அங்கீகாரத்தையும் தார்மிக பலத்தையும் தந்து வருகிறது. இப்படியான நிகழ்வுகள் மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுவிட்டிருக்கிறது. அரசின் நம்பகமற்ற, பகைமை நிறைந்த அந்நியமான நிலைப்பாடுகள் எல்லாம் கட்டுக்குலையமால் காப்பதோடு வன்முறையைக் கையில் எடுத்தால்தான் நாம் சொல்வது அரசுக்குக் கேட்கும் என்ற மனநிலைக்கு மக்களைத் தள்ளுகிறது. சமீபகாலமாக நடந்து வரும் கலவரங்கள், போராட்டங்கள், படுகொலைகள், காவல் துறையின் துப்பாக்கிச் சூடு போன்றவையெல்லாம் அந்த உணர்வையே எடுத்துக்காட்டுகின்றன.

ஒத்துழையாமை மற்றும் சட்ட மறுப்புப் போராட்டங்களுக்கான எதிர்ப்பு மற்றும் கோட்பாட்டளவிலேயே கூட அவற்றை எதிர்க்கும் போக்குகள் எல்லாம் அரசு அதிகாரத்தில் இருந்தவர்களாலும் 1947க்கு முன்பாக  சீனிவாச சாஸ்திரி, தாகூர், பராஞ்சபே போன்றவர்களாலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமாக, அரசு இயந்திரம் எந்த்த் தவறுமே செய்ய முடியாத ஒன்று என்ற பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட கோட்பாடே விளங்குகிறது.

இப்போது மிகவும் விசித்திரமானதாகவும் மிகவும் வலுவிழந்ததாகவும் தோன்றும் இந்தக் கோட்பாடானது இன்று வரையிலும் இறந்து புதைக்கப்படவில்லை. அதன் வேர்கள் ஆட்டம் கண்டுவிட்டிருக்கிறது என்றாலும் விழுந்துவிடவில்லை. இன்று ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் இந்திய அரசாங்கத்தின் கோட்பாட்டு வடிவமைப்பாளர்களும் அந்த வேர்களை மீண்டும் வலுப்பெற வைக்க தமது திறமையையும் கவனத்தையும் செலவிட்டு வருகின்றனர்.

அந்நிய அரசாட்சிக்கு எதிராகப் பயன்படுத்தும்போது ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பு இயக்கமும் நியாயமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு ஆட்சியாளர்களை எதிர்த்து அவற்றைப் பயன்படுத்துவது தவறு. இந்தப் பார்வையின் அடிப்படையில்தான் இந்தியாவின் பல்வேறு தலைவர்கள் (வரலாற்று, அரசியல் கோட்பாட்டு ஆசிரியர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்), பொதுவாக வர்க்கபேதமற்ற, மக்கள் நல அரசு அமைய வேண்டும் என்று நினைக்கும் நிலையிலும் நடைமுறையில் தவறே செய்ய முடியாத அரசு என்ற  கோட்பாட்டின் புதிய ஆதரவாளர்களாக ஆகி விட்டிருக்கிறார்கள். இப்படியான கோட்பாடானது காந்தியடிகள் தமது நீண்ட, நெடிய பொது வாழ்க்கையில் முன்வைத்த அனைத்துக்குமே எதிரானது. பாரம்பரியமாக, காலம் காலமாக ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்து வந்திருக்கும் இந்திய மக்களின் அடிப்படை மனநிலைக்கும் இது முற்றிலும் எதிரானது.

அதே நேரம் சில  ‘புரட்சிகரக்’ கோட்பாடுகள் முன்வைப்பதுபோல இந்த ஒத்துழையாமை இயக்கமும் சட்ட மறுப்பு இயக்கமும் முடிவற்றுச் செய்துகொண்டே இருக்க வேண்டியவையும் அல்ல. தேவை ஏற்படும்போது மட்டுமே அவற்றை மேற்கொள்ள வேண்டும். ஆட்சியாளர்களும் பிற அதிகாரவர்க்கங்களும், ஆளப்படுபவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களுடன் ஒத்திசைவுடன் நடந்துகொள்ளும்போது  இப்படியான போராட்டங்களுக்கான தேவை வெகுவாகக் குறைந்துவிடும். 

பிற வகைப் போராட்டங்களைப் போலவே, ஒத்துழையாமை, சட்ட மறுப்புப் போராட்டங்களும் எல்லா பிரச்னைகளையும் தீர்க்கக்கூடியவை அல்ல. சில அரசியல், சமூகப் பிரச்னைகள், சூழல்களுக்கு இவற்றைப் பயனப்டுத்த முடியாது. முன்னரே சொன்னதுபோல ஒத்துழையாமை இயக்கம் வெற்றிபெற வேண்டுமென்றால் மோதிக்கொள்ளும் இரு தரப்பினரும் பொதுவான மதிப்பீடுகளைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய தரப்புகள் தற்காலிகமாவது பொதுவான மத, சமூக- அரசியல் மதிப்பீடுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். எல்லாச் சூழ்நிலைகளிலும் இப்படியாக இருப்பதில்லை.

18-19-ம் நூற்றாண்டு இந்தியாவில் ஆளப்பட்டவர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையில் பொதுவான மதிப்பீடுகள் எதுவுமே இருந்திருக்கவில்லை. ஹிட்லரின் அதிகாரம் பரவியபோது ஐரோப்பாவிலும் இப்படியான நிலையே இருந்தது. தைமூரின் படையெடுப்பின்போது வட இந்தியாவிலும் இப்படியான நிலையே இருந்தது. ஓர் அந்நிய சக்தியைக் கையாள இந்தப் போராட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி வெற்றி கண்டதில் மகாத்மா காந்தியின் மேதமை, வீழ்த்த முடியாத துணிச்சல், ஒப்புவமை இல்லாத நிர்வாகத் திறமை போன்றவையே வெளிப்படுகின்றன.

ஓரளவுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைகள் (20ஆம் நூற்றாண்டுவாக்கில் பிரிட்டிஷ் அதிகார சக்திகள் ஒப்பீட்டளவில் மென்மையாகிவிட்டிருந்தன என்பதும் ஒரு காரணம்), பெருமளவுக்கு மகாத்மாவின் அபாரமான ஆளுமை ஆகியவையே இந்தியத் தரப்பில் இருக்கும் நியாயங்களை, பிரிட்டிஷாரைச் சில நேரங்களில் புரிந்துகொள்ளவைக்க மகாத்மாவுக்கு உதவி புரிந்திருக்கின்றன. படிப்படியான போராட்டங்கள் மூலமாக (நில வருவாயில் தொடங்கி அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், உப்பு சத்யாகிரஹம், கள்ளுக்கடை மறியல், உலகப் போரில் இந்தியா வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டதற்கான எதிர்ப்பு) காந்தியடிகள், வெள்ளையனே வெளியேறு என்ற இறுதிப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஹிட்லருக்கு எதிராக செக்கோஸ்லாவாகியாவினர், போலந்து நாட்டினர் ஆகியோரும் இப்படியான போராட்டத்தை முன்னெடுக்கும்படி காந்தியடிகள் கேட்டுக்கொண்டார். அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக இப்படியான போராட்டங்களுக்குத் தரும் ஆதரவென்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள் நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பயன் தராது என்று எந்தவகையிலும் அவர் சொல்லவில்லை.

ஒத்துழையாமையும் சட்டமறுப்பும், ஜனநாயகமும் சுதந்தர நாடும் நன்கு செயல்பட உதவும் விஷயங்களே. இன்னும் சொல்லப்போனால் அவை இறுக்கமான சட்ட அமைப்புகளைவிட மிகவும் முக்கியமானவை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மாநில அல்லது நாடாளுமன்றத் தேர்தல்கள் அல்லது இப்படியாகத் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புகளுக்குள் நடக்கும் மட்டுப்பட்ட விவாதங்கள், பரிசீலனைகள் ஆகியவற்றைவிட அமைதிப் போராட்டங்கள் மிகவும் அவசியமானவையே.

சர்வாதிகாரம், அநீதி, அடக்குமுறை ஆகியவற்றுக்கு எதிராக இப்படியான அமைதிப் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் உண்மையில் அரசையும் மக்கள் சமூகங்களையும் காப்பாற்றக் கூடியவர்களே. அவர்கள் மட்டும் இல்லையென்றால், சமூகமானது வெறும் இயதிரம் போன்ற ஒன்றாகவே முடங்கிப் போகும். அல்லது சர்வாதிகாரப் போக்கினால் முழுமையான அராஜகம் மற்றும் ஆயுதப் போராட்டம் போல முடியும்.

$$$

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

37. ஐ.ஓ.ஆர். ஃப்ரான்சிஸ் பேப்பர்ஸ் : எம்.எஸ்.எஸ். யுர் இ, பக்கம் 37. ஹிண்ட்ஸ் ஆஃப் அ பொலிட்டிக்கல் சிஸ்டம் ஃபார் தி கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா (1772)

38. லண்டன் பப்ளிக் ரெக்கார்ட் ஆஃபீஸ், எலென்பரோ பேப்பர்ஸ், PRO/30/9/4/Part II/2. அக்டோபர்11, 1829, சி.ஜே.மெட்கஃபே

39. அதே.

40. அதே.

41. திர்ஹம், பேலியோக்ராஃபி அண்ட் டிப்ளமேட்டிக் துறை: ஏர்ல் க்ரே பேப்பர்ஸ், பாக்ஸ் 36/ ஃபைல் 1, பிப்ரவரி, 19, 1829, சி.ஜே.மெட்கஃபே.

(நிறைவு)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard