New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க நூல்களிற் கூறப்படும் வைதிக மார்க்கம்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
சங்க நூல்களிற் கூறப்படும் வைதிக மார்க்கம்
Permalink  
 


சங்க நூல்களிற் கூறப்படும் வைதிக மார்க்கம்

(1) வேதங்களும் அங்கங்களும் நக்கீரனார்
இயற்றிய திருமுருகாற்றுப்படையில் , இருபிறப்பினர் ஆறு அங்கங்களைக்
கொண்ட வேதங்களை நாற்பத்கெட்டு ஆண்டுகளிற் கற்றனர் என்பதை
அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிப வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல . ( 179-182 )
என்ற அடிகளாற் குறிக்கின்றனர். ஒருவன் உபநயனம் செய்விக்கப்பட்ட பின்னரே வேதங்களைக் கற்க உரியன் ஆவான்; உபநயனமே அவனுக்கு இரண்டாம் பிறப்பு; அப்போது, காயத்ரீ தாய், ஆசிரியன் தந்தை; நான்கு வேதங்களைக் கற்றல் வேண்டும்; இல்லையேல் மூன்று, இரண்டு வேதங்களையேனும், இல்லையேல் ஒன்றையேனுங் கற்றல் வேண்டும் ; ஒவ்வொரு வேதத்தையுங் கற்கப் பன்னிரண்டு ஆண்டே காலம் ; எனத் தர்மசாஸ்திரங்கள் கூறுகின்றன .
( Cf. கௌதமதர் மஸூத்திரம் 1 , 1 , 6 ; 1 , 1 , 9 ; 1,3,51 ; 1 , 3 , 52 )

மூலங்கிழார் புறநானூற்று 166 ஆவது செய்யுளில் வேதங்கள் நான்கு , அங்கங்கள் ஆறு , அவை சிவபிரானிடமிருந்து தோன்றின என்பதை ,
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்று புரிந்த வீரிரண்டின்
ஆறுணர்ந்த வொருமுது நூல் . (1-4 )
என்ற அடிகளிற் கூறுகின்றனர் . உலகில் உள்ளனவெல்லாம் கடவுளிடமிருந்தே தோன்றின என்பது ‘ யதோ வா இமாநி பூதாநி ஜாயந்தே என்ற உபநிஷத்து வாக்கியத்திலும் , வேதங்களும் அவரிடமிருந்தே தோன்றின என்பது சாஸ்த்ரயோ நித்வாத் என்ற வ்யாஸஸுத்திரத்திலும் கூறப்பட்டன .

கடுவனிளவெயினனார் பரிபாடல் மூன்றாம் பாடவின்கண் இருபத்தோரு லகமும் , ஆங்குள்ள உயிர்களும் திருமாவிடமிருந்தே தோன்றின என மாயாவாய்மொழியாகிய வேதங் கூறும் என்பதை,
மூவே ழுலகமு முலகினுண் மன்பது
மாயோய் நின்றவயிற் பரந்தவை யுரைத்தே
மாயா வாய்மொழி . ( 9-11 )
என்ற அடிகளிற் கூறினர் . மாயாவாய்மொழி என்றவிடத்து மாயா என்ற அடைமொழி வேதம் நித்தியம் என்பதை அறவித்தலுங் காண்க . அவரே அப்பாடலிற் கடவுளை வேதத்து மறை நீ ( 66 ) என்பதும் , பகவத்கீதையில் ப்ரணவ : ஸர்வ உேவேஷ எனக் கண்ணபிரான் ஏழாவது அத்தியாயத்திற் கூறுவதும் ஒத்திருக்கின்றன . மறை என்பதற்கு உரைகாரர் உபநிடதம் எனப் பொருள் கூறியிருப்பனும் , அதற்குப் பிரணவம் என்ற பொருளுங் கொள்ளலாம் என்பதைப் பகவத்கீதை அறிவிக்கின்றது .

வேதங்களாற் கடவுள் அறியப்படுகிறார் என்பதைக் கீரந்தையார் பரிபாடலில் ,
நாவ லந்தண ரருமறைப் பொருளே . ( 2 , 57 )
என்றவிடத்து அருமறைப்பொருள் என்பதால் அறிவிக்கின்றனர் இதனை , பகவத்கீதையில்
வேசை : ச ஸர்வைரஹமேவ வே .: ( 15 , 15 ) என்றதனாற் கண்ணபிரானும் , சாஸ்த்ரயோநித்வாத் வேதாந்தஸுத்திரத்தான் வியாஸரும் கூறுகின்றனர் .



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

வேதங்கள் எழுதப்படாமல் குருமுகமாகவே கற்பிக்கப்பட்டு வந்தன என்பதைக் குறுந்தொகையில் பாண்டியன் எழுதி நெடுங்கண்ணனார் ,
பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
எழுதாக் கற்பி னின்சொ லுள்ளும்
பிரிந்தோர் புணர்க்கும் பண்பின்
மருந்து முண்டோ . ( 156) என்றவிடத்து எழுதாக்கற்பு என்ற சொல்லாற் குறித்தனர் .
இக்கருத்தினையே பதிற்றுப்பத்திலும் புறநானூறு முதலியவற்றிலும் வழங்கப்படும் கேள்வி என்ற சொல்லும் அறிவிக்கும் :
உரைசால் வேள்வி முடித்த கேள்வி
அந்தண ரருங்கல மேற்ப . ( பதிற் . 64 , 4-5 )
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை . ( பதிற் . 70 ; 18-9 )
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்ப ( பதிற் . 74 , 1-2 )
கேள்வி முற்றிய வேள்வி யந்தணர்க்கு . ( புறநா . 361 , 3 - 4 )
அந்தணரே வேதங்களைச் சிறப்பாகக் கற்றுப் பாடினர் என
மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியிற் கூறினர் :
சிறந்த வேதம் விளங்கப் பாடி
அந்தணர் பள்ளியும் ( 468-476 )
அந்தணர் வேதம் பாட (656 ) அவற்றின் கருத்தை விரித்து விளக்கியோரை வாய்மொழிப் புலவர் எனக் குன்றம்பூதனார் பரிபாடல் ஒன்பதாம் பாட்டிற் கூறினர் :

நான்மறை விரித்து நல்லிசை விளக்கும்
வாய்மொழிப் புலவீர் கேண்மின் ( 12-13 )
வேதங்கள் தர்மத்தைப்பற்றிக் கூறுகின்றன என ஓதலாந்தையார் ஐங்குறுநூற்றில் உணர்த்தினர் .
அறம்புரியருமறை ( 387 )

அந்தணரே வேதத்தைக் கற்பித்த காரணம்பற்றி வேதத்தை அந்தணர் மறை ( தொல் . எழுத் 102 ) எனத் தொல்காப்பியனாரும் , அந்தணரருமறை ( பரிபா. 2 , 57 ; 3 , 14 ) எனக் கீரந்தையாரும்

கடுவனிளவெயினனாரும் , அந்தணர் முதுமொழி ( கலித் . 126 , 4) என நல்லந்துவனாரும் , அந்தணர் நூல் ( திருக் . 543 ) எனத் திருவள்ளுவனாரும் கூறினர் .

வேதங்களைக் காக்கும் பிராம்மணர் வசிக்கும் இடத்திற் கிளிகளும் வேதவாக்கியங்களைக் கூறின என உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையிற் கூறினர் : -

வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாள ருறைபதி (300-1)

வேதத்தில் உணர்த்தப்பட்ட வேள்விகளைப் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதியும் சோழன் கரிகாற்பெருவளத்தானும் செய் ,ததாகப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறும் :

நற்பனுவ னால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிற்ப்பின் வேள்வி முற்றி ( 15 , 17-20 )

எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் ( 224, 8-4 )

பாலினது இயற்கைக் குணமாகிய இனிப்பு எவ்வாறு மாறாதோ அவ்வாறே வேதநெறி மாறாது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர்,
பா அல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி

நடுக்கின்றி நிலியரோ ( புறநா . 2 , 18-21 ) என்ற அடிகளிற் குறிப்பாய் உணர்த்துகின்றனர் .

பசுவின்கண் பால் குறைந்தால் உலகிற்கு எவ்வளவு கேடு உண்டாகுமோ, அவ்வளவு கேடு பிராம்மணன் வேதத்தை மறந்தால் உண்டாகும் எனக் குறிப்பாற் கூறி , அதற்குக் காரணம் அரசன் முறைப்படிப் பாதுகாவாமையே எனத் திருவள்ளுவனார்

ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின் ( 560 ) என்ற குறளிற் கூறினர் .

வேதத்தின் கரைகண்ட பார்ப்பனரைச் செல்வர் எனக் திரிகடுகம் 70 - ஆவது செய்யுளில் நல்லாதனாரும் , வேதங்களை அந்தணர் ஆராய்வார் என நான்மணிக்கடிகை 89 - ஆஞ் செய்யுளில் விளம்பிநாகனாரும் , அந்தணர் வேதத்தை அத்தியயனஞ் செய்தல் இன்பத்தைத் தரும் என இனியவை நாற்பது 8 - ஆஞ் செய்யுளில் பூதன் சேந்தனாரும் உரைத்தனர்



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

( 2 ) வர்ணங்களும் ஆச்ரமங்களும்
தமிழ்நாட்டு மக்கள் நால்வகைப்பட்டனர் எனவும் , அவர் பார்ப்பனர் , அரசர் , வணிகர் , வேளாளர் எனவும் , அவருள் பார்ப்பனர்க்கு அறுதொழில்களும் , அரசர்க்கு ஐந்து தொழில் களும் , ஏனையோர்க்கு அறுதொழில்களும் உள்ளன எனவுந் தொல்காப்பியனார் பொருளதிகாரத்திற் கூறினர் .

நூலே அந்தணர்க் குரிய ( மர . 71 )
படையும் அரசர்க் குரிய ( மர . 72 )
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை ( மர . 78 )
வேளாண் மாந்தர்க் குழுதூ ணல்லது
இல்லென மொழிப் பிறவகை நிகழ்ச்சி ( மர . 81 )
அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபி னரசர் பக்கமும்
இருமூன்று மரபி னேனோர் பக்கமும் ( புறத் . 16 )

ர்ப்பனர்க்குரிய அறுதொழில்கள் ஓதல் வேட்டல் அவற்றைப் பிறர்க்குச் செய்தல் ஈதல் ஏற்றல் என்பன எனப் பாலைக் கௌதமனார் பதிற்றுப்பத்து 24- ஆவது செய்யுள் 6-8 அடிகளில் உணர்த்தினர் . இவ்வர்ணப்பிரிவுகளையும் அவரவர்க்குரிய தொழில்களையும் கௌதமதர்மஸுத்திரம் முதலான தர்ம சாஸ்திர நூல்கள் கூறுகின்றன . ஆங்குப் பிராம்பணர்க்கு அறுதொழில்கள் கூறப்பட்டிருப்பினும், ஏற்றலைத் தவிர்த்து ஏனையவற்றை எல்லை கடந்து அவர் செய்யலாம் எனவும் , ஏற்றலை எவ்வளவு குறுக்கலாமோ அவ்வளவு குறுக்கவேண்டும் எனவும்

வால்மீகிராமாயணமும் வ்யாஸமஹாபாரதமுங் கூறும் :
ஸ்வகர்மநிரதா : ஸம்யதா : ச ப்ரதி ரஹே ( பா . 6,13 )
பர்திரஹே ஸங்குசிதா ஆரஹஸ்யா: ( அச்வ . 102 , 81 )
ஓதல் ஓதுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கிப் பிராம்மணரைக் கவிஞர் தத்தம் நூல்களிற் பல்வகைச் சொற்களாற் குறித்தனர் : - நான்மறைமுனிவர் (புறநா . 6 ) , நான்மறை முதல்வர் ( புறநா . 26 ; 93 ) , நான்மறையாளர் ( ஆசரரக் . 53 ) , கேள்வியுயர்ந்தோர் ( புறநா . 221 ) அருமறையந்தணர் ( சிறுபாண் . 204 ) , நான்மறையோர் ( பட்டினப் . 202) . அவற்றுடன் வேட்டல் வேட்டுவித்தல் இவற்றின் சிறப்பு நோக்கி கேள்வி முற்றிய வேள்வியந்தணர் ( புறநா . 361 ) , வேள்வி முடித்த கேள்வியந்தணர் ( பதிற் 64 ) என்ற சொற்களாற் குறித்தனர் . உண்மையைக் கூறுக ( ஸத்யம் வடி ) என்ற மறைவிதி பிராம்மணர்க்கு நியமவிதியாதல்பற்றி மாங்குடி மருதனார் மதுரைக்காஞ்சியில் அவரைப் பொய்யறியா நன்மாந்தர் என்கின்றனர் . அவர் தர்மச்செயலிலே ஈடுபடுதல்பற்றி , பதிற்றுப்பத்தில் அறம்புரியந்தணர் ( 24 ) எனக் கூறப்படுகின்றார் . அவர்க்குள்ள அறுதொழில்களை நோக்கி அவரை அறுதொழிலோர் என்கின்றனர் திருவள்ளுவனார் . ஆசறுகாட்சியவர் எனக் குறிஞ்சிப்பாட்டில் 17 - ஆம் அடியில் அவர் கூறப்படுகின்றனர் . அந்தணராய்ப் பிறத்தலே சிறந்தது என நான்மணிக்கடிகை 33 - ஆம் செய்யுளில் விளம்பி நாகனார் கூறினர் .

தோல்வேலை செய்பவன் இழிபிறப்பாளன் இழிசினன் எனப் புறநானூற்றில் 170 , 82 , 287 செய்யுட்களிற் கூறப்பட்டான் . துடியன் பாணன் பறையன் கடம்பன் இந்தால் வரும் அந்நூலில் 335 - ஆம் செய்யுளிற் குறிக்கப்பட்டனர் .



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

ஒவ்வொரு வர்ணத்தாரும் தத்தமக்குரிய நிலையிலிருந்து தவறின் அவர் இழிந்தாராகக் கருதப்பட்டு அவரவர்க்குள்ள உரிமையைப் பெறவில்லை என்பதை
அன்னா ராயினு மிழிந்தோர்க் கில்லை ( மரபு . 85 )

என்ற சூத்திரத்தில் தொல்காப்பியனார் உணர்த்துகின்றார் .

ச்ரமங்கள் அல்லது நிலைகள் நான்கு வகைப்படும் ; அவை பிரும்மசாரிநிலை , ரூஹஸ்தநிலை , வானப்பிரஸ்தநிலை , ஸந்தியாஸிநிலை ஆகும் .

பிராம்பணப்பிரும்மசாரி குடுமி வைத்திருந்தான் எனக் கபிலர் ஐங்குறுநூற்றில்

நம்மூர்ப்
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும்
குடுமித் தலைய ( 202 )

என்றவிடத்துக் கூறியுள்ளார் . அவன் ஒன்பது நூலால் ஆக்கிய மூன்று வடங்கொண் - பூணூலை அணிந்து நாற்பத்தெட்டு ஆண்டு

வேதாத்தியயநஞ் செய்தான் என நக்கீரனார் திருமுருகாற்றுப்படையில்

அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ ( 179 & 184 ) என்றவிடத்து உணர்த்தினர் .

அவன் புரசதண்டத்தையும் தாழ்ந்த கமண்டலத்தையும் , விரதவுணவையுங் கொண்டனன் எனக் குறுந்தொகையுள் ஏனாதி நெடுங்கண்ணனார்

செம்பூ முருக்கி னன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப்
படிவ வுண்டிப் பார்ப்பன மகனே ( 156 ) என்றவிடத்து விளம்பினர் .

பிரும்மசாரி வேதங் கற்றவுடன் கிருஹஸ்தாச்ரமத்தை அடைய விவாஹஞ் செய்துகொள்கிறான் . அவ்விவாஹம் எட்டு வகைப்படும் எனவும் , அவை பிராம்மம் , பிராஜாபத்யம் , ஆர்ஷம் , தைவம் , காந்தர்வம் , ஆஸுரம் , ராக்ஷஸம் , பைசாசம் எனவும் கௌதமதர்மஸூத்ரம் ( 1, 4 , 4-11 ) முதலிய நூல்கள் கூறும் அவற்றுள் முன்னர் நான்கும் பெருந்திணைப்பாற்பட்டன ; காந்தர்வம் களவினை ஒத்தது ; ஆஸுரம் , ராக்ஷஸம் , பைசாசம் இம்மூன்றுங் கைக்கிளைப்பாற்பட்டன ; எனத் தொல்காப்பியனார் களவியல் 15 , 1 , 14 சூத்திரங்களிற் கூறினர் . விவாஹத்தில் மனைவியுடன் கணவன் அக்னியை வலம் வருதலை கலித்தொகையுள் மருதனிளநாகனார் ,

காதல்கொள் வதுவைநாட் கலிங்கத்து ளொடுங்கிய
மாதர்கொண் மானோக்கின் மடந்தைதன் றுணையாக
ஓதுடை யந்தண னெரிவலஞ் செய்வான்போல் . (69) என்றவிடத்துக் கூறினர் .

ஒருவரை ஒருவர் ஏழடி பின்சென்றால் அவர் அவர்க்கு நண்பர் ஆவர் என்பதைப் பொருநராற்றுப்படையில் முடத்தாமக் கண்ணியார் ,

காலி னேழடிப் பின் சென்று . ( 166 )

என்றவிடத்துக் குறித்தனர் . இதே கருத்தினை வேதவ்யாஸரும் மஹாபாரதம் வனபர்வத்தில் ,
ஸதாம் ஸாப்தப்பம் மித்ரம் ஆஹு ; ஸந்த : குலோசிதா: என்றனர் . ( 261 , 37 )



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

விவாஹத்தில் குழந்தைகளைப் பெற்ற சுமங்கலிகள் மண மகளை ஆசீர்வதித்தலை அகநானூற்றில் நல்லாவூர்கிழார்,

புதல்வர் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
கற்பினின் வழா அ நற்பல வுதவிப்
பெற்றோர் பெட்கும் பிணையை யாகுக . ( 86 )
என்றவிடத்து உணர்த்தினர் . இக்கருத்தினையே ,

ஸுமங்கலீ : இயம் வய : இமாம் ஸமேத பச்யத
ஸௌஜாடியம் அஸ்யை உத்வா பாயாஸ்தம் விபரேதா ||
என்று வைதிகமந்திரங் கொண்டது .

பெண்ணைத் தானஞ்செய்ய ஒருவரும் இல்லையேல் அவள் தானே தன்னைக் கணவற்குத் தானஞ் செய்து கொள்ளலாம் என்பதைத் தொல்காப்பியனார் ,

கொடுப்போ ரின்றியுங் கரண முண்டே. (கற்பு . 2 ) என்ற சூத்திரத்திற் கூறினர் . அக்கருத்தையே மஹாபாரதம் ஆதிபர்வத்தில் வ்யாஸர் ,

ஆத்மனோ வந்யு : ஆத்மைவ உதிராத்மைவ சாத்மன : |
ஆத்மனைவாத்பனோ உாநம் கர்த்துமர்ஹஸி யர்மத : || ( 94,13 )
என்றவிடத்துக் கூறுகின்றனர் .

மூவர்க்குரிய அக்னிஸாக்ஷிகமான கன்யகாதானம் வேளாளராலும் பின்னர்க் கொள்ளப்பட்டதெனத் தொல்காப்பியனார்
மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமு முண்டே ( கற்பு . 3 ) என்ற சூத்திரத்திற் குறித்தனர் .

ருது காலத்திற் கணவன் மனைவியிடமிருந்து பிரிதல் தகாது என்பதைத் தொல்காப்பியனார்

பூப்பின் புறப்பா டீரறு நாளும்
நீத்தகன் றுரையா ரென்மனார் புலவர் ( கற்பு . 46 ) என்றவிடத்துக் கூறினர் . இவ்வாறே திரிகடுகம் 17 - ஆம் செய்யுளுங் கூறும் .

வேதங்களைக் காக்கும் பிராம்மணர் வசிக்கும் இடத்திற் கிளிகளும் வேத வாக்கியங்களைக் கூறின என உருத்திரங்கண்ணனார் பெரும்பாணாற்றுப்படையிற் கூறினர் : -
வளைவாய்க் கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப் பாள ருறைபதி (300-1)

வேதத்தில் உணர்த்தப்பட்ட வேள்விகளைப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியும் சோழன் கரிகாற்பெருவளத்தானும் செய் ,ததாகப் புறநானூற்றுச் செய்யுட்கள் கூறும் :
நற்பனுவ னால்வேதத்து
அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி யாவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிற்ப்பின் வேள்வி முற்றி ( 15 , 17-20 )
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழின்முடித் ததூஉம் ( 224, 8-4 )

பாலினது இயற்கைக் குணமாகிய இனிப்பு எவ்வாறு மாறாதோ அவ்வாறே வேதநெறி மாறாது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் ,

பா அல் புளிப்பினும் பகலிருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ ( புறநா . 2 , 18-21 ) என்ற அடிகளிற் குறிப்பாய் உணர்த்துகின்றனர் .

பசுவின்கண் பால் குறைந்தால் உலகிற்கு எவ்வளவு கேடு உண்டாகுமோ, அவ்வளவு கேடு பிராம்மணன் வேதத்தை மறந்தால் உண்டாகும் எனக் குறிப்பாற் கூறி , அதற்குக் காரணம் அரசன் முறைப்படிப் பாதுகாவாமையே எனத் திருவள்ளுவனார்
ஆபயன் குன்று மறுதொழிலோர் நூன்மறப்பர்
காவலன் காவா னெனின் ( 560 ) என்ற குறளிற் கூறினர் .

வேதத்தின் கரைகண்ட பார்ப்பனரைச் செல்வர் எனக் திரிகடுகம் 70 - ஆவது செய்யுளில் நல்லாதனாரும் , வேதங்களை அந்தணர் ஆராய்வார் என நான்மணிக்கடிகை 89 - ஆஞ் செய்யுளில் விளம்பிநாகனாரும் , அந்தணர் வேதத்தை அத்தியயனஞ்

செய்தல் இன்பத்தைத் தரும் என இனியவை நாற்பது 8 - ஆஞ்
செய்யுளில் பூதன் சேந்தனாரும் உரைத்தனர் .



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard