New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லை – சூசைப்பிரகாஷம், ஆதிசிவன், ம


Guru

Status: Offline
Posts: 24791
Date:
மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லை – சூசைப்பிரகாஷம், ஆதிசிவன், ம
Permalink  
 


மாஷா டிரஸ்ட், அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லை – சூசைப்பிரகாஷம், ஆதிசிவன், மற்றும் போக்சோவில் கைது, சிறை முதலியன!

ஜனவரி 24, 2024

மாஷா டிரஸ்ட்அன்னை நியோமி கருணை இல்ல மாணவியருக்கு பாலியல் தொல்லை – சூசைப்பிரகாஷம்ஆதிசிவன்மற்றும் போக்சோவில் கைதுசிறை முதலியன!

மாஷா டிரஸ்ட் ஆரம்பிக்கப் பட்டது: MASHA TRUST (தமிழ்நாடு அரசு அங்கீகரிக்கப்பட்ட எண்.814/2005) – முதன்மையாக ஒரு சமூக சேவை அமைப்பு. இது ஏழை, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாடு, முன்னேற்றம் மற்றும் இயலாமைக்காக செயல்படுகிறது. இது 1996 ஆம் ஆண்டில் ஏழைகளின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்த சில கருணையுள்ள இதயங்களால் நிறுவப்பட்டது. இது ஏழைகளுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது, அவர்களின் பிரச்சனைகளை முதலில் உணரவும், அடையாளம் காணவும் செய்கிறது. MASHA இன் இறுதி இலக்கு அவர்கள் தங்களுக்கு உதவ உதவுவதாகும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை அடையாளம் காண கற்றுக்கொண்டவுடன், அதைத் தீர்க்க MASHA அவர்களுக்கு உதவுகிறது. கூட்டு முயற்சிதான் தீர்வு. மாஷா அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, அவர்கள் ஒரு கண்ணியமான வாழ்க்கையை நடத்த உதவுகிறார்கள். இது அவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் அதை மாசுபடாமல் வைத்திருப்பது ஆகியவற்றை கற்பிக்கிறது.

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-

காப்பகம் இல்லம் ஆரம்பிக்கப் பட்ட நோக்கம்: ஆதரவற்ற குழந்தைகள், வெறிச்சோடிய அபல பெண்கள், புறக்கணிக்கப்பட்ட வயதான மூத்த குடிமக்கள் தங்குமிடம் மற்றும் அன்பு, பாசம், அக்கறை மற்றும் தனிப்பட்ட கவனத்துடன் பராமரிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வழிதவறிச் சென்று சமூகவிரோத சக்திகளின் கைகளில் இரையாகக்கூடிய இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. அது அவர்களை சமூக ரீதியாக பயனுள்ள மற்றும் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைத்து உருவாக்குகிறது. பலருக்கும் மனவலியை ஏற்படுத்தியிருக்கும் ஒரு விவகாரத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம் என்று ஒரு ஊடகம் பீடிகையுடன் ஆரம்பிக்கிறது. மதுரை மாவட்டம் சமயநல்லூரில் மாஷா அறக்கட்டளையானது நியோமி அன்பு இல்லத்தை நடத்திவருகிறது[1]. 1996-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த காப்பகத்தில் தங்கியுள்ள 25 சிறுமிகள் அருகிலுள்ள சமயநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்[2]. அங்கு ஆதரவற்ற நிலையிலுள்ள 34 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்-

சூசைப்பிரகாஷம் காப்பகத்தை ஏன் துவக்கினேன் என்று விளக்கினார்: இப்படி ஒரு இல்லம் ஆரம்பிக்கும் எண்ணம் தனக்குள் உருவானதன் பின்னணியைச் சொல்கிறார் அதனை நிர்வகித்துவரும் சூசைப்பிரகாசம்[3]. “இந்தியாவில் மிகவும் பாதிப்புக்கு ஆளாகிவருபவர்களாக பெண்கள் உள்ளனர்பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதியானது நம் தேசத்தில் பரவலாக உள்ளதுஅதனாலேயேசிறுமிகளுக்காக இப்படி ஒரு இல்லத்தைத் தொடங்கினேன்.” என்கிறார்[4]. அப்படித்தான், பற்பல அனாதை இல்லங்கள், காப்பகங்கள், கூநோக்கு இல்லங்கள் என்றெல்லாம் ஆரம்பிக்கப் பட்டுள்ளன, படுகின்றன. குறிப்பாக கிறிஸ்துவ நிறுவனங்கள் அதிகமாகவே இவற்றை ஆரம்பித்து நடத்துகின்றன. அவை தான் பெரும்பாலான இத்தகைய பாலியல் குற்றங்களில் மாட்டிக் கொண்டுள்ளன. செய்திகளில், ஊடகங்களிலியே நூற்றுக் கணக்கான விவகாரங்கள், கைதுகள், வழக்குகள் என்றெல்லாம் வந்துள்ளன.

ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தது…

ஆதிசிவன் பாலியல் வன்ம குற்றத்தில் கைது மற்றும் சிறை: இந்நிலையில், காப்பகத்தின் அறங்காவலரான கருமாத்தூரை சேர்ந்த ஆதிசிவன், அங்குள்ள 13 முதல் 15 வயதுக்குட்பட்ட 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனிடம் ஜனநாயக மாதர் சங்கத்தினர் புகார் அளித்தனர்[5]. இதையடுத்து சைல்டு லைன் உறுப்பினர் காவல் சண்முகம் தலைமையில் 3 பேர் கொண்ட குழு காப்பகத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டனர்[6]. இதில் புகார் உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆதிசிவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்[7]. மேலும், காப்பகத்தில் இருந்த சிறுமிகள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள வேறு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். ‘படிப்பது ராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்’ எனச் சொல்வதுபோல, நியோமி அன்பு இல்லத்தில், ஏடாகூடமாக என்னென்னவோ நடந்து தொலைத்திருக்கிறது. அதனால்தான், அந்த இல்லத்தின் இன்னொரு நிர்வாகியான ஆதிசிவன் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்திருக்கிறார் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளரான கிரேஸ் ஷோபியாபாய்[8].  

 

ஆதிசிவன் கைதான பின்னணி இது: ஆதிசிவன் அவ்வில்லத்தில் படித்துவரும் சிறுமிகள் நால்வரிடம் அத்துமீறி நடந்துகொண்டது, மதுரை மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் வரை புகாரானது. உடனே, குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், நியோமி அன்பு இல்லத்துக்கே வந்து மாணவிகள் அனைவரிடமும் விசாரணை நடத்தினார். அப்போது, பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகளும், இல்லத்தின் அலுவலகத்தில் வைத்து ஆதிசிவன் தங்களை எவ்வாறு தொந்தரவு செய்தார் என்பதையும்,  வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதையும் அழுதபடி கூறியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து, சண்முகம் அளித்த புகாரை விசாரித்து, ஆதிசிவனைக் கைது செய்திருக்கிறது காவல்துறை. நியோமி அன்பு இல்லத்தின் நிர்வாகி சூசைப்பிரகாசத்திடம் நடந்த அத்துமீறல் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அந்த 4 மாணவிகளும் மதுரை – முத்துப்பட்டியிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மற்ற மாணவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.  

ஆதிசிவனா……..

சூஷைப்பிரகாசமும்ஆதிசிவனும்: சமயநல்லூர் வட்டாரத்தில்  “34 குழந்தைகளின் அப்பா என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் சூசைப்பிரகாசம்மற்ற காப்பகங்களிலிலிருந்து இருந்து இது வேறுபட்டது என்பார்எப்படியென்றால்வெளிநாட்டு நிதி உதவியை நம்பாமல்தன் சொந்த முயற்சியால் நடத்தப்படும் இல்லம் எனச் சொல்வார்அன்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் என்று அப்போது அவர் கூறியதென்னவோ நன்றாகத்தான் இருந்ததுஆனால்ஆதிசிவனால் அங்கு நடந்த செயல் கொடூரமானதாக அல்லவா இருக்கிறது?,” என்கிறார்கள் ஆதங்கத்துடன். அனாதை சிறுமிகளுக்கு ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில், காப்பக சுவர்களைத் தாண்டி தங்களின் அத்துமீறல் வெளியில் வராது என்ற நினைப்பில், ஒருசிலர் வெறிகொண்ட மனித மிருகங்களாக நடந்துகொள்வது கொடுமையானது! அத்தகையோருக்கு, ‘தண்டிக்கப்படுவோம்’ என்ற அச்சத்தை,  இதுபோன்ற கைது நடவடிக்கைகள் ஏற்படுத்தும் என்று நம்புவது மட்டுமே தற்காலிக ஆறுதலாக உள்ளது.

குறிப்பு: இது 2019ல் நடந்த விவகாரம் ஆகும். பொதுவாக, செய்தித் தாள்களைப் படித்து, விவரங்களை சேகரித்து, சரிபார்த்து, எழுதி, ஆதாரங்களைத் தொகுத்து, தேவையான செய்தித்தாள் கட்டிங்ஸ், புகைப் படைங்கள் முதலியவற்றை சேர்த்து, பிளாக் போட சுமார் 3 முதல் 5 மணி நேரம் ஆகிறது. சில நேரங்களில் குறிப்பிட்டல் நாளில், வாரத்தில் அதிகமான முக்கியமான செய்திகள் வரும் பொழுது அவ்வாறு சேகரித்து வைக்கப்பட்ட, ஏன் தயாராக இருக்கும் கட்டுரையைக் கூட இணைதளத்தில் ஏற்ற முடியாமல் போகிறது. ஏன் சில நாட்கள் ஆனால் மறந்தும் போகிறது. இதனால், திடீரென்று, இணை தளத்தில் எதையோ தேடும் பொழுது, சில செய்திகள் காணப்படுகின்றன. அடடா, இது தெரிந்த விசயமாயிற்றே, நாம் கூட பிளாக் போட்டிருக்கிறோமே என்ற எண்ணம் வரும். ஆனால், தேடிப் பார்த்தால் கிடைக்காது, இருக்காது பிறகு, நாம் போடவில்லை என்பது தெரிய வரும். அவ்வாறு கிடைத்தது தான் இது. நடந்தது 2019 இப்பொழுது 2024, ஐந்தாண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் ஆணப் படுத்த வேண்டும் என்ற நோக்கில் இது இன்று பதிவு செய்யப் படுகிறது.

© வேதபிரகாஷ்

15-10-2024

அன்னை நியோமி அன்பு இல்லம் – மாஷா அறக்கட்டளை, சமயநல்லூர்- கட்டிடம்.


[1]  MASHA TRUST (Tamilnadu Govt. approved No.814/2005) – is primarily a social service organization. It works for the upliftment, progress and enabling of the poor, downtrodden people. https://www.maduraidirectory.com/masha.php

[2] நக்கீரன், ஆதரவளிக்கிறோம் என்ற போர்வையில்! –அனாதை சிறுமிகளிடம் அத்துமீறல்!, அதிதேஜா, Published on 13/08/2019 | Edited on 13/08/2019, wa

[3] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/under-guise-supporting-orphaned-little-girls

[4] தமிழ்.நியூஸ்.18, ஆதரவற்றோர் காப்பகத்தில் 4 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த நிர்வாகி கைது!, LAST UPDATED : AUGUST 13, 2019, 8:54 PM IST.

[5] https://tamil.news18.com/news/tamil-nadu/orphanage-administrator-arrested-for-raped-girl-children-skd-192979.html

[6] ஜெயா.பிளஸ், காப்பக உரிமையாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது – மதுரை, Aug 13, 2019

[7] https://www.youtube.com/watch?v=HFMC8fUabkQ

[8] மதுரை மாவட்டம் சமூக ஊடகம், Maduraidistrictsocialmedia, 13 ஆகஸ்ட், 2019 ; https://www.facebook.com/photo/?fbid=2793452697350139&set=pb.100068849632048.-2207520000



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard