New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மனநல காப்பகம் –25ஆண்டுகள் அனுமதி இல்லாமல், 20பேர் மர்மமாக இறந்தது, இறந்த 100க்கும் மேற்பட்டோர் புத


Guru

Status: Offline
Posts: 24791
Date:
மனநல காப்பகம் –25ஆண்டுகள் அனுமதி இல்லாமல், 20பேர் மர்மமாக இறந்தது, இறந்த 100க்கும் மேற்பட்டோர் புத
Permalink  
 


மனநல காப்பகம் – 25 ஆண்டுகள் அனுமதி இல்லாமல் நடந்தது, 20 பேர் மர்மமாக இறந்தது, இறந்த 100-க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டது, சீல் வைக்கப் பட்டது!

ஜூலை 13, 2024

மனநல காப்பகம் – 25 ஆண்டுகள் அனுமதி இல்லாமல் நடந்தது, 20 பேர் மர்மமாக இறந்ததுஇறந்த 100-க்கும் மேற்பட்டோர் புதைக்கப் பட்டதுசீல் வைக்கப் பட்டது!

லவ்ஷோர் சேரிடபிள் டிரஸ்டின் மனநல காப்பகம் நடத்தப் படுவது: பிறகு 25 ஆண்டு காலமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி [Kunthaladi Bekki] பகுதியில் கடந்த 1999ல் இருந்து டாக்டர் அகஸ்டின் (60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்[1].  பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அகஸ்டின் லவ்ஷேர் [Love Shore] / முகாம் என்ற பெயரில் ஒரு சாரிடபிள் டிரஸ்ட்டை [The Loveshore Charitable Trust ] நடத்தி வந்தார். இதெல்லாம் கிருத்துவர்களின் வேலை தான் என்று தெரிகிறது.  இதற்கு அவர் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. பிறகு 25 ஆண்டு காலமாக அவ்வாறு காப்பகம் எப்படி நடத்தப் பட்டது என்பது திகைப்பாக இருக்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்காமல் அடைத்து வைத்திருப்பதகாவும் மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய புகார் கிடைக்கப் பெற்றிருக்கிறது. 25 ஆண்டு காலமாக நடந்து வருகிறது என்றால், நிச்சயமாக பலருக்கும் விசயம் தெரிந்திருக்கும். பிறகு, புகார் மட்டும் ஏன் ரகசியமாகக் கொடுக்கப் படவேண்டும். இங்கு மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்[2].

20 பேர் மர்மமான முறையில் இறந்துவிட்டத்காப்பகம் அருகில் புதைக்கப்பட்டது– புகார்:  இவ்வாறு நடந்து வருநிலையில், இவர்களில் 20 பேர் மர்மமான முறையில் இறந்துவிட்டதாகவும், அவர்கள் காப்பகம் அருகில் புதைக்கப்பட்டதாகவும் பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது[3]. அந்த புகாரின் அடிப்படையில் காப்பகத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்[4]. அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் ஊழியர்களிடம் நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து 5 மணி நேரத்துக்கும் மேலாக காவல்துறையினர் விசாரணை நடத்தினர்[5]. புகாரின் அடிப்படையில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, தேவாலா டிஎஸ்பி சரவணன் தலைமையிலான குழுவினர் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்[6]. அவர்கள் என்ன விவரங்களை வெளியிட்டனர் என்று தெரிவிக்கப் படவில்லை. மனநலம் குன்றியவர் என்பதலால், உறவினர் கண்டுகொள்ளவில்லை போலும்.

போதிய அடிப்படை வசதிகள் செய்யாமலும்சுகாதாரமற்ற முறையிலும் காப்பகம் செயல்பட்டது: மாவட்ட கலைக்டர் அருணா உத்தரவின்படி கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மனநல மருத்துவர் விவேக், தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்[7]. இத்தகைய பல துறையைச் சேர்ந்தவர் ஆய்வில் மேற்கொண்டதும் அவனிக்கத் தக்கது. அப்போது முறையாக அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் செய்யாமலும், சுகாதாரமற்ற முறையிலும் காப்பகம் செயல்பட்டது தெரியவந்தது[8]. ஆக, ஒருவழியாக இந்த உண்மையை கண்டுபிடித்தாகி விட்டது.  ஆனால், இவ்வாறு ஒருசில வரிகளில் முடித்த்து விட்டது, மேலும் மர்மத்தை வளர்ப்பதாக இருக்கிறது. 

09-07-2024 அன்று சீல் வைக்கப் பட்டது: இதையடுத்து காப்பகத்தில் இருந்த 9 ஆண்கள், 4 பெண்கள் என 13 பேரை மீட்டு கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர்[9].  தொடர்ந்து காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது[10]. இந்த காப்பகத்தில் இருந்த 20 பேர் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? என்பது மர்மமாக உள்ளது[11]. ஆரம்பத்தில் இந்த காப்பகத்தில் 60 பேர் இருந்ததாகவும், அதன்பின் 33 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது[12]. ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 13 பேர் மட்டுமே இருந்துள்ளனர்[13]. மற்றவர்களின் நிலை என்ன? என்பது மர்மமாக உள்ளது[14]. இதுவரை மனநல காப்பகத்தில் இருந்தவர்கள் பற்றிய எந்தவிதமான பதிவுகளும் காப்பகத்தில் இல்லை[15]. மேலும் இறந்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? இறந்தவர்களை உடல் கூராய்வு செய்தது உள்ளிட்ட எந்த விவரங்களும் இல்லை[16]. இப்படி மர்மமாக உள்ளது, பதிவுகள் இல்லை, என்றெல்லாம் குறிப்பிடுவதுமாச்சரியமாக இருக்கிறது. இதையடுத்து உண்மைத்தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது.

இறந்த 100-க்கும் மேற்பட்டோரை யாருக்கும் தெரியாமல் காப்பகம் அருகே உள்ள இடத்தில் புதைத்ததாக விசாரணையில் பகீர் தகவல்: அதன்படி நேற்று பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை காவல் நிலையத்தில் மனநல காப்பக உரிமையாளரான கேரளாவை சேர்ந்த டாக்டர் அகஸ்டின் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடந்தது. முழு விசாரணைக்கு பின்னரே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மன நலக் காப்பகத்தில் இறந்த 100-க்கும் மேற்பட்டோரை யாருக்கும் தெரியாமல் காப்பகம் அருகே உள்ள இடத்தில் புதைத்ததாக விசாரணையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த இடம் இன்னும் தெரியவில்லை போலிருக்கிறது. இவையெல்லாம் பலர் சம்பந்தப் படாமல் எய்யப் படும் கரியங்கள் அல்ல. பிறகு, எல்லோருமே மறைக்கிறார்களா அல்லடு அவ்வாறு பணிக்கப் பட்டிருக்கின்றார்களா என்று கவனிக்க வேண்டு. இதனைத் தொடர்ந்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி மனநலம் காப்பகத்தின் உரிமையாளரான தலைமறைவாக இருந்த அகஸ்டின், அவரது மனைவி கிரேசி மற்றும் ஊழியர்கள் என 10 பேருக்கு போலீஸார் சம்மன் வழங்கினர். அதாவது, இன்னும் கைது செய்யப் படவில்லை

பொதுவாக கிறிஸ்தவ நிறுவனங்கள் இத்தகைய அத்து/சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ளன: ஒரு குறிப்பிட்ட காப்பகம் / தங்குமிடம் இதுபோன்ற விசாரணைக்கு உட்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல. வேலூரில் உள்ள செயின்ட் ஜோசப் அறக்கட்டளை பழைய மற்றும் ஏழ்மையான முதியோர் 2022 அக்டோபரில் குடியுரிமை துஷ்பிரயோகம் மற்றும் இறந்தவர்களின் எலும்புகளை விற்பனை செய்ததாகக் குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்பட்டது. இதன் விளைவாக 69 முதியவர்கள் காப்பாற்றப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டனர். அன்பு ஜோதி ஆசிரமம் என்ற ஏழை கிறிஸ்தவ நிறுவனத்துடன் தொடர்புடைய நான்கு பேர், 2023 பிப்ரவரியில் விழுப்புரத்தில் பலாத்காரம் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டனர். பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை பற்றிய அறிக்கைகள் முன்னுக்கு வந்த பின்னர் 142 குடியிருப்பாளர்கள் காப்பாற்றப்பட்டனர். பதிவு செய்யப்படாத ஸ்தாபனம் 2005 இல் திறக்கப்பட்டதிலிருந்து உணவு மற்றும் வேலைகள் பற்றிய பொய்யான வாக்குறுதிகளுடன் எழை மக்களை ஈர்த்து அவர்களை இவ்வாறெல்லாம் துன்புருத்தப் பட்டது தெரியவந்தது.

© வேதபிரகாஷ்

13-07-2024


[1] தினகரன், அனுமதியின்றி செயல்பட்டதாக சீல் வைப்பு மன நல காப்பகத்தில் 20 உடல்கள் புதைப்பாஉரிமையாளர் – ஊழியர்களிடம் விசாரணை, July 12, 2024, 2:18 am.

[2] https://www.dinakaran.com/buried_mental_asylum_permission_owner_inquiry/

[3] மாலைமலர், காப்பக வளாகத்தில் புதைக்கப்பட்ட 20 பேர் உடல்கள் – 10 பேரிடம் விசாரணை, By Maalaimalar12 ஜூலை 2024 10:36 AM

[4] https://www.maalaimalar.com/news/state/investigation-of-10-people-including-the-owner-of-the-bodies-of-20-people-buried-in-the-archive-complex-near-bandalur-728642

[5] தமிழ்.இந்து, குந்தலாடி மனநல காப்பக உரிமையாளர் உட்பட 10 பேரிடம் விசாரணை, ஆர்.டி.சிவசங்கர்,Published : 11 Jul 2024 08:09 PM; Last Updated : 11 Jul 2024 08:09 PM

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1277925-investigation-of-10-people-including-the-owner-of-the-kundaladi-mental-asylum.html

[7] தமிழ்.இந்து, பந்தலூர் அருகே சட்டவிரோத காப்பகத்தில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட 13 பேர் மீட்பு, ஆர்.டி.சிவசங்கர், Published : 09 Jul 2024 05:54 PM; Last Updated : 09 Jul 2024 05:54 PM.

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/1276856-illegal-asylums-near-pandalur.html

[9] விகடன், நீலகிரிசட்டவிரோத காப்பகம்அடைத்துவைக்கப்பட்ட மன நலம் குன்றியோரை மீட்ட அதிகாரிகள்! – என்ன நடந்தது?, சதீஸ் ராமசாமி, Published:09 Jul 2024 2 PM; Updated:09 Jul 2024 2 PM

[10] https://www.vikatan.com/crime/illegal-centre-for-mental-illness-got-busted-in-nilgiris – google_vignette

[11] தமிழ்.ஒன்.இந்தியா, மனநலக் காப்பகத்தில் இறந்த 100 பேரை தடயமே இல்லாமல் புதைத்த படத் தயாரிப்பாளர்பந்தலூரில் பக் பக் பக்!, By Vishnupriya R, Published: Friday, July 12, 2024, 18:28 [IST]

[12] https://tamil.oneindia.com/amphtml/news/nilgiris/cinema-producer-runs-illegal-mental-health-care-unit-at-nilgiri-621145.html

[13] இ.டிவி.பாரத், நீலகிரி மனநல காப்பகத்தில் 20 பேர் இறப்புஅதிகாரிகள் நேரில் விசாரணை! – nilgiri mental health care centre,By ETV Bharat Tamil Nadu Team, Published : Jul 9, 2024, 5:35 PM IST

[14] https://www.etvbharat.com/ta/!state/an-investigation-is-being-conducted-20-people-died-in-mental-health-care-centre-nilgiris-tns24070905184

[15] தினமலர், நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பெக்கி என்ற இடத்தில் அனுமதியின்றி செயல்பட்ட மன நல காப்பகத்தில் 13 பேரை மீட்ட அதிகாரிகள், 09-07-2024

[16] https://www.dinamalar.com/photos/today-photos/480737



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard