New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பாதிரி இளம்பெண்களை ஏமாற்றி கர்ப்பமடையச் செய்ததாக, மகள் போலீஸாரிடம் புகார்!


Guru

Status: Offline
Posts: 24791
Date:
பாதிரி இளம்பெண்களை ஏமாற்றி கர்ப்பமடையச் செய்ததாக, மகள் போலீஸாரிடம் புகார்!
Permalink  
 


பாதிரி இளம்பெண்களை ஏமாற்றி கர்ப்பமடையச் செய்ததாக, மகள் போலீஸாரிடம் புகார்!

ஓகஸ்ட் 4, 2024

பாதிரி இளம்பெண்களை ஏமாற்றி கர்ப்பமடையச் செய்ததாகமகள் போலீஸாரிடம் புகார்!

பாதிரி கற்பழிப்பு என்று இன்னொரு புகார்: வழக்கம் போல, மறுபடியும் ஒரு கிருத்துவப் பாதிரி கற்பழித்தர் என்று செய்தி வந்துள்ளது. இம்முறை தன் மகளை மட்டுமல்லாது, மகளின் தோழிகளையும் ஏமாற்றி கர்ப்பழித்து வருவதாக, மகளே புகார் கொடுத்ததாக செய்து வந்துள்ளது. கிரேக்க புராணங்களில் அத்தகைய உறவுமுறைகள் அதிகமாக உள்ளன. தந்தை மகள் மீது மோகம் கொன்டு உடலுறவு கொள்வது, மகன் தாயைப் புணர்வது என்றெல்லாம் விவரிக்கப் பட்டுள்ளன. இது, கிருத்துவத்தில் நுழைந்து-நுழைக்கப் பட்டு, பிஷப்புகள், பாதிரிகள் மடாலய தலைவர்கள் அதிகமாகவே பெண்களை இவ்வகையில் சதாய்த்துள்ளனர். கான்வென்ட் என்பதே, அத்தகைய முறையில் பிறந்த குழந்தைகளை வளர்க்கும், நிர்வகிக்கும் இடம் என்றும் உள்ளது. கன்னியாஸ்திரி மடங்களைப் பற்றி சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், இந்தியாவிலேயே அத்தகைய உதாரணங்கள் அதிகமாகவே வெளிவந்துவிட்டன. கிருத்துவர்கள் தமது சமூகத்தை சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும், பலமுறை எடுத்துக் காட்டியாகி விட்டது. இருப்பினும்,தொடர்ந்து இத்தகைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தந்தை மீது மகள் புகார் – பாலியல் வன்மபுணர்ச்சி: சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் 21 வயதான ‘சானி லிடியா கிரேஸ்’ என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்[1]. அதில், மதபோதகர் மற்றும் வழக்கறிஞர் என்ற போர்வையில் உள்ள எனது தந்தை மோசஸ் செல்லதுரை, பலருடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருப்பதாகவும், சிலரை திருமணம் செய்துக்கொண்டு ஏமாற்றி வாழ்ந்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்[2]. இதையெல்லாம் தெரிந்து தன் அம்மா பிரிந்த நிலையில், அவரை முறையாக விவகாரத்து செய்யாமலேயே தந்தை, பல அப்பாவி பெண்களின் வாழ்க்கையில் விளையாடி வருவதாகப் புகாரில் தெரிவித்தார்[3]. காதலித்து தாய் தந்தை திருமணம் செய்து இருந்தாலும் திருமணத்தை மீறிய உறவிலேயே இருவரும் பிரிந்ததாகக் கூறும் சானி லிடியா கிரேஸ், தன் தந்தை மோசஸ் செல்லதுரையால் 24 வயதே ஆன தனது தோழி கருத்தரித்து, குழந்தை பெற்றதாக அதிர்ச்சி தகவலைக் கூறினார்[4]. அவரை திருமணம் செய்யாமல் ஏமாற்றியது போல, பலரையும் கர்ப்பமடையச் செய்து, பின் பணம் கொடுத்து ஏமாற்றி வருவதாகத் தந்தை மோசஸ் செல்லதுரையின் மீது அவரது மகள் சானி லிடியா கிரேஸ் பகீர் குற்றச்சாட்டைப் புகாரில் கூறினார்[5]. இது குறித்துக் கேட்டால் மோசஸ் செல்லதுரையின் தாயும் அவரின் தவறுக்கு உடந்தையாக இருந்து மிரட்டுவதாகக் கூறினார்[6]. இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட டிஜிபி அலுவலகம், திருநெல்வேலி காவல் ஆணையாளருக்கு அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.

பல இளம்பெண்களை கற்பழித்ததாக தந்தை மீதுமகள் கொடுத்த புகார்: இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சானி லிடியா கிரேஸ், ”ஐஜியை சந்தித்து எனது  அப்பா மோசஸ் செல்லதுரை மீது புகார் கொடுத்தேன்[7].  திருமணத்தை மீறிய உறவால் எங்கள் குடும்பம் பிரிந்தது[8]. ஆனால், இதுவரை, ஆனால் அப்பா தற்போது வரை அம்மாவுக்கு விவகாரத்து கொடுக்கவில்லை. வழக்கறிஞர் என்று புகார் கொடுக்க வந்த பெண்ணை கூட, விட்டு வைக்காமல் திருமணம் செய்து குழந்தை கூட பிறந்துவிட்டது. நான் எனது தாயுடன் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்தபோதுதான், இதெல்லாம் தெரிய வந்தது. உடனே, மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தேன். அந்த விசராணையில் நேரில் ஆஜரான எனது தந்தை மோசஸ் செல்லதுரை, ‘ஆயிரம் பெண்களைக் கூட திருமணம் செய்வேன் தப்பே இல்லை என்பது போல் தான் நடந்துக்கொண்டார். என்னிடம் ரூ.20,ரூ. 60 என்று லட்சத்தில் விலை பேசினார். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. அப்பாவின் திருமணத்தை மீறிய உறவால் இளம்பெண்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு உடனடியாக முடிவுகட்டுவதற்குப் புகார் அளித்தேன்” என்று கூறினார்.

மகள் கொடுத்த புகார் என்றில்லாமல்துரித விசாரணை ய்ண்மைநிலையினை எடுத்துக் காட்டவேண்டும்: தொடர்ந்து பேசியவர்,  “பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் புகார் கொடுக்கும் அளவுக்கு தைரியம் இல்லை. எனது நண்பரைக் கூட விட்டு வைக்காமல், அவளிடம் பழகி கர்ப்பமாக்கி விட்டார். அவளுக்கு இப்போது 8 மாதத்தில் குழந்தை உள்ளது. அந்த குழந்தையும் ஒரு நாள் என்னைப் போல் போராட வரும். அதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருநெல்வேலியில் உள்ள எனது தாத்தாவின் குழுமம் என் அப்பாவுக்கு பலமாக உள்ளது. போலியாக மதபோதகர் சான்றிதழ் வாங்கி இருக்கிறார். இதற்கெல்லாம் என்னிடம் ஆதாரம் உள்ளது. இதனைச் சமர்ப்பித்துள்ளேன்…” என்று டிஜிபி அலுவலகத்தில் அளித்த புகாரைச் சானி லிடியா கிரேஸ் செய்தியாளர்களிடம் விரிவாகக் கூறினார்.

சமூகக் குற்றம்சமூகத்தை பாதிக்கும்சீரழிக்கும்: தன் தோழி உட்பட பல பெண்களை திருமணம் செய்து தந்தை மோசடி செய்து வருவதாக சென்னை, டிஜிபி அலுவலகத்தில் இளம் பெண் புகாரளித்த விவகாரத்தில், மகளின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து தந்தை பதில் புகார் அளித்திருக்கிறார்[9]. வழக்கறிஞர் தந்தையின் மீது பெற்ற மகளே பகீர் குற்றச்சாட்டுக் கூறியுள்ள நிலையில், இதை முற்றிலும் மறுத்த மோசஸ் செல்லதுரை பொய் புகார் என்று மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது[10]. மறுத்தால் குற்றம் செய்தது மறைந்து விடாது. நிரூபிக்க வேண்டும்.மேலும், இது ஒரு தீவிரமான-முக்கியமான சமூகப் பிரச்சினையாகும். பெண்களுக்குத் தொடர்ச்சியாக, இத்தகைய பாலியல் வன்மங்கள் தொடர்ந்தால், சமூகத்தில் பற்பல எதிர்விளைவுகள் ஏற்படும். பெண்களின் கற்பு கேள்விக்குறியாக்கப் படும் பொழுது, உறவுகள் பாதிக்கப் படும், சமூக நெறிமுறைகள் பாதிக்கப் படும். எனவே, இத்தகைய குற்றங்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

கிருத்துவர்கள் இவ்வறு தொடர்ந்து கற்பழிப்பு வழக்குகளில் கைதாகும் நிலையினையும் கவனிக்க வேண்டியுள்ளது: அதாவது, முன்பெல்லாம் புகார் கொடுக்காமல், சமரசமாகப் பேசித் தீர்த்துக் கொள்ளும் முறை இருந்தது. சில விவகாரங்களில் திருமணம் செய்து கொல்வது, கருக்கலைப்பது, இழப்பீடாக அணம் கொடுப்பது என்றெல்லாம் கூறப் பட்டன.

  1. உதாரணமாக, மார்ச் 2023 இல், 30 வயதான சிரோ மலங்கரா கத்தோலிக்க தேவாலய பாதிரியார், பெனடிக்ட் ஆன்டோ, பல பெண்களை பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தலுக்காக தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டார்.
  2. மற்ற வழக்குகளில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேவாலய மைதானத்தில் வசித்து வந்த மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 54 வயதான எஸ்.தேவர்க்கம் என்ற போதகர் கைது செய்யப்பட்டார்.
  3. திருநெல்வேலி மாவட்டத்தில் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மற்றொரு பாதிரியார் எஸ் செல்வராஜ் கைது செய்யப்பட்டார்.
  4. கேரளாவில் ஒரு முக்கிய வழக்கில், 2014 மற்றும் 2016 க்கு இடையில் 45 வயதான பிஷப் தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி குற்றம் சாட்டினார். அவர் 2018 இல் கைது செய்யப்பட்டாலும், பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவங்கள் தனித்தனியாக இல்லை, தமிழகத்திலும் பிற இடங்களிலும் இதுபோன்ற பல வழக்குகள் நிகழ்கின்றன.

© வேதபிரகாஷ்

04-08-2024


[1] நக்கீரன், என் தோழியைக் கூட விட்டுவைக்கவில்லை” – தந்தை மீது மகள் பாலியல் குற்றச்சாட்டு, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 03/08/2024 | Edited on 03/08/2024.

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/daughter-complained-my-father-misbehaved-many-women

[3] தினத்தந்தி, கல்யாணம் பண்ண சொன்ன கடவுள்.. கர்பமாக்குவதே முழுநேர வேலை – சென்னை பாஸ்டரின் அந்தரங்க லீலைகள், By தந்தி டிவி 2 ஆகஸ்ட் 2024 7:24 AM

[4] https://www.thanthitv.com/news/tamilnadu/chennai-daughter-father-crime-thanthitv-279238?infinitescroll=1

[5] தமிழ்.ஒன்.இந்தியா, மகளின் தோழியை கர்ப்பமாக்கிய அப்பா.. பல அபார்ஷன்.. இவர் ஒரு பாதிரியாராம்சென்னை போலீஸுக்கு ஓடிய பெண், By Hemavandhana, Updated: Friday, August 2, 2024, 15:33 [IST].

[6] https://tamil.oneindia.com/news/chennai/who-is-this-chennai-pastor-and-daughter-complaint-against-her-own-father-in-dgp-office-626707.html

[7] ஜீநியூஸ்,என் அப்பா காமக்கொடூரன்… அப்பா மீது மகள் பாலியல் புகார்!, Zee Media BureauAug 3, 2024, 08:21 PM IST

[8] https://zeenews.india.com/tamil/videos/daughter-complaints-about-sexual-harrasment-by-her-father-519622

[9] தினத்தந்தி, மகளின் தோழியை நான் திருமணம் செய்யவில்லை” – மகள் குற்றச்சாட்டுக்கு தந்தை பதில், By தந்தி டிவி, 3 ஆகஸ்ட் 2024 8:47 நக்கீரன், என் தோழியைக் கூட விட்டுவைக்கவில்லை” – தந்தை மீது மகள் பாலியல் குற்றச்சாட்டு, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 03/08/2024 | Edited on 03/08/2024.

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/chennai-fatherdaughter-thanthitv-279485



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard