திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்
சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.
திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார். உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை திருவள்ளுவர் நாம் தூங்க செல்வது போன்று தான் நம் இறப்பு மீண்டும் தூங்கியபின் எழுவது போல தான் பிறப்பு என்கிறார்; நாம் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம். பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து இந்தப் பிறவிப் பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே முடியும் என தெளிவாக கூறுகிறார்
திருவள்ளுவர்ஒருமுழுமையானஆத்திகர் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து கற்பதன் முழு பயனே இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்வதற்கே என வலியுறுத்துகிறார்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. குறள் 9: கடவுள் வாழ்த்து இறைவன் திருவடியை தன் தலையால் வணங்காதவர் தலையில் உள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்றும் திருவள்ளுவர் மிகத் தெளிவாக கூறுகிறார்
வள்ளுவர் பார்வையில் மனிதனின் கல்வியும் அறிவும் எதற்கு பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு : குறள் 358: மெய்யுணர்தல்
அறியாமையாகிய மீண்டும் மீண்டும் பிறப்பதில் இருந்து வீடுபேறு அடையும் வழியை தேடுவதற்கே அறிவு ஆகும் பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல் வாழ்வின் அடிப்படையான மெய்ப்பொருளை நாடாது மற்றவர்கள் மற்றவற்றை முக்கியம் என வாழ்வதால் தான் துன்பம் உள்ள பிறவிகள் உண்டாகிறது
திருவள்ளுவர்இறைவன்மறுப்பைமுழுமையாகநிராகரிக்கிறார்
தமிழ் மரபில் இருந்து விலகிய இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த கிறிஸ்தவ காலனி ஆதிக்க சக்திகளின் போதனைகளால் பிறப்பு மீண்டும் மீண்டும் என்பது கிடையாது கடவுள் என்பது கற்பிதம் என மெய்யறிவு மாறான கோட்பாடு உடையவர்கள் திருக்குறளை தங்கள் வழியில் அர்த்தம் செய்து சிறுமை செய்ய எளிதாக "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறளை கூறுவார்கள்.
வள்ளுவர் மிகத் தெளிவாக கூறுவது என்ன எண்குணத்தான் எனும் இறைவன் திருவடிகளை தன் தலையால் வணங்காதவர் தலைகளில் உள்ள கண் காது மூக்கு என் போன்ற ஐம்பொறிகளால் பயனில்லை என்கிறார்.
பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல். மீண்டும் மீண்டும் மிதக்கும் வழியினை அடைவதே வாழ்க்கையின் நெறியாகக் கொண்டு வாழ்வதே கல்வியறிவின் பையன் என்கிறார் இவற்றையெல்லாம் ஒருவர் ஏற்காவிடில் மிகத்தெளிவாக மெய்யுணர்வை அறிவை ஏற்காதவர்கள் ஐம்புலன்களை கட்டுப் படுத்தினாலும் பயனில்லை என மிகத் தெளிவாக இறை நம்பிக்கைக்கு மாறான நாத்திகத்தை உலகத்தையும் அவர் மிகவும் தெளிவாக மறுக்கிறார் ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354:மெய்யுணர்தல். இவற்றை நாம் மேலும் விரிவாக பல்வேறு அதிகாரங்களின் பிற குறட்பாக்களில் மூலம் மற்ற தலைப்புகளின் போது பார்க்கலாம்.
திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், குறள் வெண்பா மற்றும் யாப்பு போன்றவை இது திருக்குறள் ஆக்கப்பட்டு ஒரு நூறு ஆண்டுகளுக்கு உள்ளாக எழுந்ததே தமிழ் சமணர் மணக்குடவர் உரை. அவர் அங்கங்கே சமண கருத்துக்களை சுட்டிக்காட்டி இருந்தாலும் மிகத்தெளிவாக திருவள்ளுவர் சுட்டிக்காட்டுவது உலகை படைத்த கடவுள் தான் என காட்டுகின்றார். எனவே தமிழ் மரபை ஒட்டி மணக்குடவரின் உரையைப் அடிப்படையிலேயே நம் ஆய்வு தொடர்கிறது.
திருக்குறளின் மெய்யறிவை ஏற்காத திருக்குறள் போற்றும் இந்திய ஞானமரபின் மெய்யறிவு சிந்தனை இருந்து விலகி நாத்திக கருத்துக்களை வைத்துக்கொண்டு திருக்குறளை உரை செய்வது என்பது அந்நிய கிறிஸ்தவ மத மாற்ற சக்திகளுக்கு உதவுவதற்காக தான் என்பது அறிஞர்கள் ஏற்பதாகும்.
திருக்குறள் 1330 குறட்பாக்களையும் உணர்ந்து; வள்ளுவர் வழியில் இறை நம்பிக்கை, மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறைவன் திருவடி உருவ வழிபாட்டை அடிப்படையில் நாம் இந்த ஆய்வினை தொடர்வோம்.[/font]
நட்பை தேர்ந்தெடுக்கையில் குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793:நட்பாராய்தல் மணக்குடவர் உரை:ஒருவனுடைய குணமும் குடிப்பிறப்பும் குற்றமும் குறைவில்லாத சுற்றமும் முன்பே ஆராய்ந்து, பின்பு அவனை நட்பாகக் கொள்க. இவையெல்லாம் ஒத்தனவாயின் உறவு நீளச் செல்லு மென்றவாறாம். மு. வரதராசன் உரை:ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும். மு. கருணாநிதி உரை:குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை:ஒருவனது குணம், குடும்பப் பிறப்பு, குற்றம், குறையாத சுற்றம் ஆகியவற்றை அறிந்து நட்புக் கொள்க.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: மணக்குடவர் உரை:மேற்கூறியவற்றுள் உயர்குடிப்பிறந்து தன்மாட்டுப் பிறர் சொல்லும் பழிக்கு அஞ்சுமவனை அவன் வேண்டிய தொன்று கொடுத்தும் நட்பாகக் கொள்ளல் வேண்டும். மு. வரதராசன் உரை:உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும். மு. கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும். சாலமன் பாப்பையா உரை:நல்ல குடியில் பிறந்து தன்மீது சொல்லப்படும் பழிக்கு அஞ்சு பவனின் நட்பை விலை கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
அரசன் தன் அமைச்சரை/ நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கையில்
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. குறள் 681: தூது மணக்குடவர் உரை:அரசன்மாட்டு அன்புடைமையும், அமைந்த குடியின்கண் பிறத்தலும், வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையும் தூதாகிச் சென்று சொல்லுமவனது இயல்பாம். வேந்தனால் விரும்பப்படும் குணமுடைமையாவது அவன் விரும்புவனவற்றைத் தான் விரும்பாமை. மு. வரதராசன் உரை:அன்புடையவனாதல், தகுதியான குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள். மு. கருணாநிதி உரை:அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும். சாலமன் பாப்பையா உரை:நாட்டு மக்கள், அரசு, உறவு இவற்றின் மீது அன்பும், நற்குணம் நிறைந்த குடிப்பிறப்பும், அரசு விரும்பும் பண்பும் கொண்டிருப்பவரே தூதர்.
அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும். குறள் 501: தெரிந்துதெளிதல் மணக்குடவர் உரை:அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார். மு. வரதராசன் உரை:அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான். மு. கருணாநிதி உரை:அறவழியில் உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும். சாலமன் பாப்பையா உரை:அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும் மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.
குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் சுட்டே தெளிவு. குறள் 502:தெரிந்துதெளிதல் மணக்குடவர் உரை:உயர்குடியிற் பிறந்து காமம் வெகுளி முதலான குற்றித்தினின்று நீங்கி, தனக்கு வரும் பழியை அறுக்கவல்ல நாணமுடையவன்கண்ணதே அரசனது தெளிவு. இதுவும் உடன்பாடென்று கொள்ளப்படுமென்றவாறு. மு. வரதராசன் உரை:நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். மு. கருணாநிதி உரை:குற்றமற்றவனாகவும், பழிச்செயல் புரிந்திட அஞ்சி நாணுகின்றவனாகவும் இருப்பவனையே உயர்குடியில் பிறந்தவன் எனத் தெளிவு கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை:நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும்.
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். குறள் 543: செங்கோன்மை மணக்குடவர் உரை:அந்தணர்க்கு உரித்தாகிய வேதத்திற்கும் அதனால் கூறப்பட்ட அறத்திற்கும் முதலாக நின்றது அரசன் செய்யும் முறைமை.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர். குறள் 528: சுற்றந்தழால் மு.வரதராசனார் உரை: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பி சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில். குறள் 582: ஒற்றாடல் மு.வரதராசனார் உரை: எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக் கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும். சாலமன் பாப்பையா உரை: பகைவர், நண்பர், பொதுவானவர் என எல்லாரிடத்திலும் நிகழ்வான எல்லாவற்றையும், எப்போதும் ஒற்றால் விரைந்து அறிந்து கொள்ள வேண்டியது அரசின் வேலை.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். குறள் 674: வினைசெயல்வகை கலைஞர் மு.கருணாநிதி உரை: ஏற்ற செயலையோ, எதிர்கொண்ட பகையையோ முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும். மு.வரதராசனார் உரை: செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும். சாலமன் பாப்பையா உரை: செய்யத் தொடங்கிய செயல், அழிக்கத் தொடங்கிய பகை இவை இரண்டிலும் மிச்சம் இருந்தால் அவை தீயின் மிச்சம் போல வளர்ந்து அழிக்கும் (ஆதலால் எதையும் முழுமையாகச் செய்க).
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார். குறள் 880: பகைத்திறந்தெரிதல் மு.வ உரை:பகைத்தவருடையத் தலைமையைக் கொடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சு விடும் அளவிற்கும் உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர். குறள் 973:பெருமை பரிமேலழகர் உரை:மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் - செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார், கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் -அவை செய்து பெரியராயினார்; தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும் சிறியராகார். (மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு பாட்டானும் முறையே குடிமை மாத்திரத்தானும் செல்வ மாத்திரத்தானும் அஃது உளதாகாமை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை:மேலான இடத்திருந்தாலும், மேன்மையில்லாதார் மேன்மக்களாகார்: கீழான இடத்திருந்தாலும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களாகார். இடமென்பது செல்வத்தினால் இருக்குமிடம்.
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்திலர் பாடு. குறள் 409: கலைஞர் மு.கருணாநிதி உரை:கற்றவர் என்ற பெருமை, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேறுபாட்டைப் போக்கிவிடும். மு.வரதராசனார் உரை:கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த குடியில் பிறந்திருந்தும் கல்விக் கற்றவரைப் போன்ற பெருமை இல்லாதவரே. சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே. பரிமேலழகர் உரை:கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.). மணக்குடவர் உரை: கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர். இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது. Translation:Lower are men unlearned, though noble be their race, Than low-born men adorned with learning's grace. Explanation:The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின் வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும் நாண் இன்மை நின்ற கடை - குறள் 102:9
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார். குறள் 935: கலைஞர் மு.கருணாநிதி உரை:சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின். குறள் 937: கலைஞர் மு.கருணாநிதி உரை:சூதாடும் இடத்திலேயே ஒருவர் தமது காலத்தைக் கழிப்பாரேயானால், அது அவருடைய மூதாதையர் தேடிவைத்த சொத்துகளையும் நற்பண்பையும் நாசமாக்கிவிடும்.
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் மனம்போல வேறு படும். குறள் 822: கூடாநட்பு மு.வரதராசனார் உரை:இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.
பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர் ஆகுதல் மாணார்க் கரிது. குறள் 823: மு.வரதராசனார் உரை:பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்த போதிலும், அவற்றின் பயனாக நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்) மாட்சியடையாதவர்க்கு இல்லை.
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம் தீங்கு குறித்தமை யான். குறள் 827:
கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு. குறள் 819:தீ நட்பு கலைஞர் மு.கருணாநிதி உரை:சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதவரின் நட்பு கனவிலேகூடத் துன்பத்தைத்தான் கொடுக்கும்.
நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாள் பவர்க்கு. குறள் 791: நட்பாராய்தல் கலைஞர் மு.கருணாநிதி உரை:ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவுக்குக் கேடுகளை உண்டாக்கும்.
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா இனனும் அறிந்தியாக்க நட்பு. குறள் 793: கலைஞர் மு.கருணாநிதி உரை:குணமென்ன? குடிப்பிறப்பு எத்தகையது? குற்றங்கள் யாவை? குறையாத இயல்புகள் எவை? என்று அனைத்தையும் அறிந்தே ஒருவருடன் நட்புக் கொள்ள வேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக் கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. குறள் 794: கலைஞர் மு.கருணாநிதி உரை:பழிவந்து சேரக் கூடாது என்ற அச்ச உணர்வுடன் நடக்கும் பண்பார்ந்த குடியில் பிறந்தவருடைய நட்பை எந்த வகையிலாவது பெற்றிருப்பது பெரும் சிறப்புக்குரியதாகும்.
உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. குறள் 425: அறிவுடைமை பரிமேலழகர் உரை:உலகம் தழீஇயது ஒட்பம் - உலகத்தை நட்பாக்குவது ஒருவனுக்கு ஒட்பமாம், மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு - அந்நட்பின்கண் முன் மலர்தலும் பின் கூம்புதலும் இன்றி ஒரு நிலையனாவது அறிவாம். ('தழீஇயது', 'இல்லது' என்பன அவ்வத் தொழில்மேல் நின்றன. உலகம் என்பது ஈண்டு உயர்ந்தோரை. அவரோடு கயப்பூப்போல வேறுபடாது கோட்டுப் பூப்போல ஒரு நிலையே நட்பாயினான்,எல்லா இன்பமும் எய்தும் ஆகலின், அதனை அறிவு என்றார்.காரியங்கள் காரணங்களாக உபசரிக்கப்பட்டன.இதனைச் செல்வத்தில் மலர்தலும் நல்குரவில் கூம்பலும்இல்லது என்று உரைப்பாரும் உளர்.).
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு. குறள் 426:
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு. குறள் 212: ஒப்புரவறிதல்
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். குறள் 214:
திருவள்ளுவர் கூறியதும் - திருக்குறளை திராவிடியார் புலவர் நச்சுப் பொய்களும் வள்ளுவம் 133 அதிகாரங்கள் என வெவ்வேறு வாழ்வியல் பொருள்/அறத்தினை விளக்க இயற்றப் பட்ட குறட்பாக்களில் ஏதோ ஒரு குறளை தன்னிச்சையாய் குறளில் இல்லாத பொருளை வலிந்து கூறிக் கொண்டு, அதுவே வள்ளுவத்தின் அடிப்படை என பயனற்ற உண்மைக்கு மாறான கூச்சல் செய்வோர் எடுத்து ஆளும் 3 குறட்பாக்களை வள்ளுவர் வழியிலேயே நாம் காண்போம்
கல்வி கற்றலின் தொடக்கம் அகரம், எழுத்து எல்லாம் என்றால் (எண்-எழுத்து இரண்டும் கண், கண்ணுடையார் என்பவர் கற்றவர்) கற்பவை எல்லாம் எனவும், ஒருவன் பெற்ற அக்கல்வி அவன் எங்கே இருந்தாலும் அவனோடே இருப்பது போல கடவுளும் எங்கும் நிறைந்து உள்ளார் என்பதும் விளங்கும்.
திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில் திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்று அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த ஆங்கிலேய கிறிஸ்தவர்களும் திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும்
சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக் காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.
திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார். உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை
திருவள்ளுவர் நாம் தூங்க செல்வது போன்று தான் நம் இறப்பு மீண்டும் தூங்கியபின் எழுவது போல தான் பிறப்பு என்கிறார்; நாம் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து இந்தப் பிறவிப் பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே முடியும் என தெளிவாக கூறுகிறார்
திருவள்ளுவர்ஒருமுழுமையானஆத்திகர் கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். குறள் 2: கடவுள் வாழ்த்து கற்பதன் முழு பயனே இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்வதற்கே என வலியுறுத்துகிறார் கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. குறள் 9: கடவுள் வாழ்த்து இறைவன் திருவடியை தன் தலையால் வணங்காதவர் தலையில் உள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்றும் திருவள்ளுவர் மிகத் தெளிவாக கூறுகிறார்
வள்ளுவர் பார்வையில் மனிதனின் கல்வியும் அறிவும் எதற்கு பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு : குறள் 358: மெய்யுணர்தல் அறியாமையாகிய மீண்டும் மீண்டும் பிறப்பதில் இருந்து வீடுபேறு அடையும் வழியை தேடுவதற்கே அறிவு ஆகும் பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல் வாழ்வின் அடிப்படையான மெய்ப்பொருளை நாடாது மற்றவர்கள் மற்றவற்றை முக்கியம் என வாழ்வதால் தான் துன்பம் உள்ள பிறவிகள் உண்டாகிறது
எனது இந்த 50வது பதிவு, நிலையான ஒரு தத்துவத்தை பற்றியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நிலை மாறும் இவ்வுலகில் நிலையான ஒன்று இறைவன் மட்டுமே. இறைவனை விவாதப் பொருளாக எடுத்தால், அந்த விவாதம் முற்றுப் பெறாது என்பதை, எனது முந்தைய பதிவில் தெரிவித்து இருந்தேன். இம்முறை இறைவனை பாடுபொருளாக வைத்து எழுத எனக்கு தகுதியில்லை என்பதை நன்கு அறிவேன். அச்சமயம், எனது ஆசான், வள்ளுவன் என் நினைவுக்கு வந்தான். நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்சனைகள், கேள்விகள், சந்தேகங்கள், அனைத்திற்கும் வள்ளுவனின் குறளில் தீர்வு உள்ளது. அப்படியென்றால் இறைவனை பற்றிய எனது கேள்விக்கும் வள்ளுவனிடம் பதில் இல்லாமலா போய்விட போகிறது. இறைவனை பற்றிய எனது ஏழு (ஒவ்வொரு குறளின் நீளம் ஏழு வார்த்தைகள்தானே..) கேள்விகளுக்கு வள்ளுவன் கூறும் பதிலை காணலாம்.
முதலில் எனது கேள்வி இருக்கும். அதன் பின்னர் பதிலாக வள்ளுவனின் குறள்/குறளின் சில வார்த்தைகள் இருக்கும். வள்ளுவனின் அந்த பதிலை நான் எவ்வாறு புரிந்து கொண்டேன் என்பதை, அதன்பின்னர் விளக்கி இருக்கிறேன். எனது கேள்விக்கு ஏற்றாற் போல குறளின் வரிசையை மட்டும் மாற்றி இருக்கிறேன். பொருளை மாற்றவில்லை. தவறு இருப்பின், வள்ளுவனின் நேசர்கள் என்னை மன்னிக்கவும்.
முதல் கேள்வி : இறைவன் இருக்கிறானா??
பதில் : ஆதி பகவன் முதற்றே உலகு.
விளக்கம்: 'உலகு' என்பது ஆகுபெயர். இந்த பூமியை மட்டுமில்லாமல், பூமியில் வாழும் உயிர்களையும் சேர்த்து உலகு என்று குறிப்பிடுகிறார். ஆக இப்புவியில் முதலில் தோன்றிய உயிருக்கும், கடைசியில் தோன்றும் உயிருக்கும் முதன்மையானவன் அவன். அப்படிப்பட்ட முதன்மையானவன் இல்லாமல் இருப்பானா?? நம்மை இந்த உலகிற்கு கொண்டு வந்த தாய்-தந்தையரும் இறைவனின் அம்சமாக கருதப்படுவதற்கும் காரணம் இதுவே... தாய் மூலம்தான் நாம் இந்த உலகிற்கு பிறந்தோம் என்று நம்புவோமேயானால், இறைவன் இருப்பதையும் நம்பித்தான் தீர வேண்டும்.
இரண்டாம் கேள்வி: 'எனது தாயை காண்கிறேன். அவளுடன் பேசுகிறேன். அவள் பேச்சை கேட்கிறேன்.' என்பதனால் அவள் இருப்பை நான் நம்புகிறேன். பார்க்க முடியாத, கேட்க முடியாத, இறைவனை இருப்பதாய் நான் எப்படி நம்ப முடியும்?
பதில் : தனக்குவமை இல்லாதான், எண்குணத்தான்.
விளக்கம்:- புரியாத ஒன்றை எளிதாய் புரிய வைக்க 'உவமை' கையாளப்படும். 'வெள்ளத்தனைய...', 'இனிய உளவாக...' போன்ற குறள்களில் உவமைகளை வெகுவாக, அழகாக கையாண்ட வள்ளுவனே இறைவனை ஒரு உவமைக்குள் அடக்க இயலவில்லை. ஐம்பொறிகளால் நாம் இறைவனை உணர முடியுமென்றால், வள்ளுவன் உவமையுடன் விளக்கி இருப்பான். ஆக மனதினால் மட்டுமே இறைவனை நீ உணர முடியும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
பிறவிக்குருடர்கள் யானையை தொட்டுப்பார்த்து அவரவர் கற்பனைக்கு ஏற்றபடி உணர்ந்து கொள்வதுபோல், மனதினால் இறைவனின் எண்குணத்தை உணரலாம்.
மூன்றாவது கேள்வி: மனதினால் மட்டுமே உணர முடிகின்ற இறைவனின் இயல்புகள் என்னென்ன?? (அல்லது) நான் இறைவனாக முடியுமா??
பதில் : வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி.
விளக்கம் : இறைவன் விருப்பு-வெறுப்பு அற்றவன். இவ்வுலக பொருள்களின்,உயிர்களின் மேல் விருப்பு-வெறுப்பு இருக்கும்பட்சத்தில் மனிதனுக்கு மன அமைதி இல்லாமல் போய்விடுகிறது. ஆக இந்த இரண்டும் இல்லாமல் சமநிலையில் இருக்கும்போது நாம் இறைவனாவோம். உதாரணம்: ரமணர். மனோநாசம் செய்து, விருப்பு-வெறுப்பு அற்றவர். இறைவன் ஐம்புல ஆசைகளை ஒழித்தவன். உலக ஆசைகள் எல்லாம் துறந்தால், நாமும் இறைவனாய் போற்றப்படுவோம். உதாரணம்: புத்தர், பட்டினத்தார். இறைவன் அறக்கடல். 'அறன் வலியுறுத்தல்' அதிகாரத்தில் அறத்தை பற்றி இன்னும் நிறைய சொல்லியிருக்கிறார். வள்ளுவன் வலியுறுத்தும் அறங்களை,நெறிகளை பின்பற்றினால், 'வானுறையும் தெய்வத்துள் வைக்கபடும்' என்று அவரே கூறியிருக்கிறார். உதாரணம்: பகவான் ராம கிருஷ்ணர், வள்ளலார்.
நான்காம் கேள்வி: அத்தகைய இயல்புடைய இறைவன் அவர் வேலையை பார்த்துக் கொண்டு இருக்கட்டும். நான் என் வேலையை பார்த்து கொண்டு இருக்கிறேன். எனக்கும் அவருக்கும் தொடர்பற்ற நிலையில் இருந்துவிட்டு போகிறோமே.. என்ன கெட்டு போச்சு??
பதில் : கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.
விளக்கம் : என்னை அடித்து துவைத்த குறள் இது. இது வள்ளுவனின் இரண்டாவது குறள். முதல் குறளில் இறைவனை வணங்குகின்றார். அடுத்த குறளிலேயே நம் அனைவரையும் வணங்க சொல்கிறார். தனது குறளை படித்து அர்த்தம் புரிந்து கற்க முடியுமென்றால், அக்கல்வியின் பயனாக இறைவனை தொழுதே தீர வேண்டும் என ஆணித்தரமாக அடித்து சொல்கிறார்.
படிப்பது வேறு, கற்பது வேறு. படித்த,கேட்ட, மற்றவர் செய்து காட்டிய ஒன்றை நாம் செய்து பார்த்து அதை உணர்ந்து கொள்வதே கற்பது. அப்படி, நாம் உணர்ந்து கற்றுக்கொள்ள உறுதுணையாய் இருக்கும் இறைவனை தொழாமல் இருப்பது தவறு என்று இடித்துரைக்கிறார்.
ஐந்தாம் கேள்வி: இறைவனை தொழ வேண்டும் என்று சொல்கிறீர்கள். நான் தொழுவதால் எனக்கு என்ன பயன்?
பதில்: இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
விளக்கம்: இறைவனின் உண்மையான புகழை விரும்பி நினைக்கும் அன்பர்க்கு அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இரண்டும் அடைவதில்லை.
ஆறாம் கேள்வி: தொழ வேண்டிய அந்த இறைவனை நான் தொழாமல் போனால் என்னாகும் ? (அல்லது) இறைவனை தொழுவதால் ஏற்படும் பயன் எனக்கு ஒன்றும் தேவையில்லை. அப்படி தொழாமல் இருந்து விட்டு போகிறேனே... என்ன கெட்டு போச்சு??
பதில்: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
விளக்கம்: பிறவி என்னும் பெருங்கடலில் நாம் அனைவரும் விழுந்து விட்டோம். அதான், பிறந்து விட்டோமே. கரை சேர வேண்டுமென்றால் இறைவனடியை தொழ வேண்டும். இல்லையென்றால் கரை சேர முடியாது.
ஏழாவது கேள்வி: ஒரு செயலை செய்யாவிட்டால் தீங்கு கண்டிப்பாக ஏற்படும். செய்தால் நன்மை ஏற்படும். அப்படிப்பட்ட செயலை செய்பவன் அறிவாளி, செய்யாதவன் கற்றறிந்த மூடன். இறைவனை தொழுவதும் அப்படிப்பட்ட செய்கையே ஆகும். நான் எப்படி இறைவனை தொழ வேண்டும்?? எந்த முறை சிறந்த முறை?
பதில் : மலர்மிசை ஏகினான்
விளக்கம் : அன்பரின் நெஞ்ச மலரில் வீற்றிருப்பவன் இறைவன். நமக்கு விருப்பபட்ட உருவத்தில் (விநாயகராய்,முருகனாய்,பெருமாளாய், அபிராமியாய்,இயேசுவாய்,அல்லாவாய், ராமனாய், கிருஷ்ணனாய், புத்தரை, அனுமானாய், ஈஷ்வரனாய்) இறைவனை அன்புடன் மனத்தினில் நினைத்தாலே, நமது இதய கமலத்தில் வந்து வீற்றிருப்பான். நமது வீட்டிற்கு வந்த ஒரு விருந்தினரை, குழந்தையை கனிவாய் கவனிப்பது போல், நமது இதய கமலத்தில் வந்து குடியேறிய இறைவனையும் விருப்பபடி உபசரிப்பதே மிகச்சிறந்த தொழுகையாகும்.
எழுத்துக்கள்எல்லாம்அகரத்தைமுதலாககொண்டிருக்கின்றன. அதுபோல்உலகம்இறைவனில் இருந்து தொடங்கியது
2
அனைத்து அறிவும் ஆகி இருக்கும் இறைவன் நல்ல திருவடிகளைத் தொழுவதே, கற்ற கல்வியின் முழு பயன்.
3
அன்பரின்அகமாகியமலரில்வீற்றிருக்கும்.கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.
4
விருப்பும்வெறுப்புமற்றகடவுளின் திருவடிகளைமறவாமல்நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை
5
கடவுளின்பெருமைஅறிந்துபோற்றி வணங்குவோருக்குநல்வினைதீவினைஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை
6
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளை பக்குவப்படுத்திய கடவுளின் பொய்யற்ற ஒழிக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்கை வாழ்வர்.
7
தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத்சேர்ந்தவரேஅல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது
8
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே பிற பொருள் இன்பம் கடலை நீந்திக் கடப்பர்
9
எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்ளின் தலைகளில்உடல், கண், காது, மூக்கு, வாய்எனும்ஐம்பொறிகள்இருந்தும்பயனற்றவையாகும்
10
கடவுளின் திருவடிகளை அடைந்தவர், மட்டுமே மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் பிறவி பெருங் கடலை கடப்பார். கடவுளின் திருவடிகளை அடையாதவர் அதனைக் கடக்க இயலாது..
வள்ளுவமும் அன்னியரும் நவீன திராவிடியார் புலவர்களும்
இந்தியாவை ஆக்கிரமித்த கிறிஸ்துவ மிஷநரிகள் மதம் பரப்ப தமிழ் கற்க, மக்கள் போற்றிய திருக்குறளை கற்று மொழிபெயர்க்கும் போது 18ம் நூற்றாண்டிலேயே ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனி 1730ல் மற்றும் கரௌலா க்ரௌல் 1865 ஜெர்மன் 8மொழியில் மொழி பெயர்த்த திரிபுகளைத் தொடங்கினார். குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் "பிறவிப்பெருங்கடல்" என்பதன் பொருள் "Ocean of repeated births" ஆனால் 'sea of this birth' இருவரும் எனப் வள்ளுவத்தின் அடிப்படை ஆணிவேர் கருத்துக்களை திரித்தனர்.இது போலே பலத் திரிபுகள். திருக்குறள் உலகைப் படைத்த இறைவனை ஏற்கும் மெய்யியல் ஞான மரபு நூல் என்பதை திரிக்க எல்லீஸ் வள்ளுவத்தை சமணம் எனப் பரப்பி ஒரு காசும் வெளியிட்டார்.
G.U.போப் பைபிள் கற்காமல் வள்ளுவர் எழுதி இருக்க இயலாது, மயிலையில் பொ.ஆ.10ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் கிறிஸ்துவ கப்பல் வியாபாரிகள் மூலம் சுவிசேஷம் கற்று தான் திருக்குறள் இயற்றினார் எனப் பரப்பினார். கிறிஸ்துவக் குழு இந்த போப் கருத்தை வலியுறுத்த எழுந்த தேவநேயப்ப்பாவாணர், ஆர்ச் பிஷப் அருளப்பா குழு தெய்வநாயகம் என்பவர் பெயரில் பல நூல்களும், பின்னர் ஏன் ஒரு முனைவர் பட்டமும் வாங்கப்பட்டது
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.
திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல், துதிப்பாடல் நூல் அல்ல, எனவே கடவுள் வணக்கத்தின் அவசியத்தையும் அதன் பயனையும் மிகத் தெளிவாக வலியுறுத்தி உள்ளார். திருவடி பற்றுதல் என்பதில் இறைவனை மனதில் நிலை நிறுத்த உருவ வழிபாட்டினை ஏற்று போற்றுவதும் தெளிவாகும்.
திருவள்ளுவர் இறைவன் மறுப்பை முழுமையாக நிராகரிக்கிறார் தமிழ் மரபில் இருந்து விலகிய இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த கிறிஸ்தவ காலனி ஆதிக்க சக்திகளின் போதனைகளால் பிறப்பு மீண்டும் மீண்டும் என்பது கிடையாது கடவுள் என்பது கற்பிதம் என மெய்யறிவு மாறான கோட்பாடு உடையவர்கள் திருக்குறளை தங்கள் வழியில் அர்த்தம் செய்து சிறுமை செய்ய எளிதாக "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறளை கூறுவார்கள். வள்ளுவர் மிகத் தெளிவாக கூறுவது என்ன எண்குணத்தான் எனும் இறைவன் திருவடிகளை தன் தலையால் வணங்காதவர் தலைகளில் உள்ள கண் காது மூக்கு என் போன்ற ஐம்பொறிகளால் பயனில்லை என்கிறார். கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. குறள் 356: மெய்யுணர்தல். பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல். மீண்டும் மீண்டும் மிதக்கும் வழியினை அடைவதே வாழ்க்கையின் நெறியாகக் கொண்டு வாழ்வதே கல்வியறிவின் பையன் என்கிறார் இவற்றையெல்லாம் ஒருவர் ஏற்காவிடில் மிகத்தெளிவாக மெய்யுணர்வை அறிவை ஏற்காதவர்கள் ஐம்புலன்களை கட்டுப் படுத்தினாலும் பயனில்லை என மிகத் தெளிவாக இறை நம்பிக்கைக்கு மாறான நாத்திகத்தை உலகத்தையும் அவர் மிகவும் தெளிவாக மறுக்கிறார்
ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354:மெய்யுணர்தல். இவற்றை நாம் மேலும் விரிவாக பல்வேறு அதிகாரங்களின் பிற குறட்பாக்களில் மூலம் மற்ற தலைப்புகளின் போது பார்க்கலாம்.
திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், குறள் வெண்பா மற்றும் யாப்பு போன்றவை இது திருக்குறள் ஆக்கப்பட்டு ஒரு நூறு ஆண்டுகளுக்கு உள்ளாக எழுந்ததே தமிழ் சமணர் மணக்குடவர் உரை. அவர் அங்கங்கே சமண கருத்துக்களை சுட்டிக்காட்டி இருந்தாலும் மிகத்தெளிவாக திருவள்ளுவர் சுட்டிக்காட்டுவது உலகை படைத்த கடவுள் தான் என காட்டுகின்றார். எனவே தமிழ் மரபை ஒட்டி மணக்குடவரின் உரையைப் அடிப்படையிலேயே நம் ஆய்வு தொடர்கிறது.
திருக்குறளின் மெய்யறிவை ஏற்காத திருக்குறள் போற்றும் இந்திய ஞானமரபின் மெய்யறிவு சிந்தனை இருந்து விலகி நாத்திக கருத்துக்களை வைத்துக்கொண்டு திருக்குறளை உரை செய்வது என்பது அந்நிய கிறிஸ்தவ மத மாற்ற சக்திகளுக்கு உதவுவதற்காக தான் என்பது அறிஞர்கள் ஏற்பதாகும்.
திருக்குறள் 1330 குறட்பாக்களையும் உணர்ந்து; வள்ளுவர் வழியில் இறை நம்பிக்கை, மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறைவன் திருவடி உருவ வழிபாட்டை அடிப்படையில் நாம் இந்த ஆய்வினை தொடர்வோம்.
திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்றது. இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த மணக்குடவர் உரையோடு அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. வள்ளுவம் இயற்றிய அடுத்த நூற்றாண்டு தொடங்கி திறனாய்வு செய்து திருவள்ளுவமாலை என்ற தொகுப்பும் எழுதப் பட்டு உள்ளது.
16ம் நூற்றாண்டு முதல் இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த பல்வேறு ஐரோப்பிய நாட்டு கிறிஸ்தவ மிஷநரிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இருந்த போதிலும் பெரும்பாலோனோர் திருக்குறள் கற்றனர் என்பது வள்ளுவம் பரவலாக மடங்கள்/குருகுலப் பள்ளிகளில் போற்றிக் கற்றதும், பல்வேறு சுவடிகள் இருந்ததையும் உறுதி செய்யும். திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும
சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.
திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார். உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. குறள் 339: நிலையாமை திருவள்ளுவர் நாம் தூங்க செல்வது போன்று தான் நம் இறப்பு மீண்டும் தூங்கியபின் எழுவது போல தான் பிறப்பு என்கிறார்; நாம் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து இந்தப் பிறவிப் பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே முடியும் என தெளிவாக கூறுகிறார்
திருவள்ளுவர்ஒருமுழுமையானஆத்திகர் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவர் பயன்படுத்தும் குணப்பெயர்கள் - தனக்கு உவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இலான், ஆதி பகவன், வாலறிவன் இந்தப் பதங்கள் எல்லாமே உலகைப் படைத்த கடவுளை - பரம்பொருள் அல்லது இந்திய ஞானமரபில் பிரம்மத்தையே குறிக்கும்
கற்பதன் முழு பயனே இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்வதற்கே என வலியுறுத்துகிறார்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. குறள் 9: கடவுள் வாழ்த்து இறைவன் திருவடியை தன் தலையால் வணங்காதவர் தலையில் உள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்றும் திருவள்ளுவர் மிகத் தெளிவாக கூறுகிறார்
வள்ளுவர் பார்வையில் மனிதனின் கல்வியும் அறிவும் எதற்கு பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு : குறள் 358: மெய்யுணர்தல் அறியாமையாகிய மீண்டும் மீண்டும் பிறப்பதில் இருந்து வீடுபேறு அடையும் வழியை தேடுவதற்கே அறிவு ஆகும்
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல் வாழ்வின் அடிப்படையான மெய்ப்பொருளை நாடாது மற்றவர்கள் மற்றவற்றை முக்கியம் என வாழ்வதால் தான் துன்பம் உள்ள பிறவிகள் உண்டாகிறது