New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைத் தமிழர் வாழ்வில் - கோவில் வழிபாடும் - அர்ச்சகர்களும்


Guru

Status: Offline
Posts: 24811
Date:
பண்டைத் தமிழர் வாழ்வில் - கோவில் வழிபாடும் - அர்ச்சகர்களும்
Permalink  
 


பண்டைத் தமிழர் வாழ்வில் - கோவில் வழிபாடும் - அர்ச்சகர்களும்

நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8

நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20

பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே		20
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே
பரிசிலர்க்கு முறையாக வழங்கி,
தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
வணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்

நான்மறை முதல்வர் சுற்றம் ஆக - புறம் 26/13

அடு_களம் வேட்ட அடு போர் செழிய
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக
மன்னர் ஏவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே		15
நோற்றோர் மன்ற நின் பகைவர் நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே

போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போரையுடைய செழியனே!
விசாலமான அறிவையும், ஐம்புலனும் அடங்கிய விரதங்களையும்
நான்கு வேதங்களையும் உடைய அந்தணர் சுற்றியிருக்க
மன்னர்கள் ஏவல் செய்ய. நிலைத்த
வேள்வியைச் செய்துமுடித்த தப்பாத வாளினையுடைய வேந்தனே!
தவம் செய்தவர் உன் பகைவர், உனக்கு
எதிரிகள் என்னும் பெயரினைப் பெற்று
உன்னுடன் போரிட இயலாதவராய் இருந்தாலும் மேலுலகத்தில் சென்று வாழ்கின்றவர் - (தவம் செய்தவர்)

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7

அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
அறத்தை விரும்பிய கொள்கைகளையுடைய நான்கு வேதங்களையுடைய அந்தணர்
நன்கு வளர்ந்த தருப்பைப்புல்லைப் பரப்பி, அதில் அவரைக் கிடத்தி,
தனது வீரமே பற்றுக்கோடாக நல்ல போரில் மடிந்த


நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின் - புறம் 362/9

ஆ குரல் காண்பின் அந்தணாளர்
நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்
அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்		10
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ
கை பெய்த நீர் கடல் பரப்ப
பகைவரைத் தாக்குதற்கு அவர்கள் எழுப்பும் ஒலியைக் கேட்பீராக. அந்தணர்களே!
நான்மறைகளில் இதைப் பற்றிக் குறிப்பிடப்படவில்லை, இப்போர் அருளின் அடிப்படையில் செய்யப்படாததால்;
அறநூல்களிலும் கூறப்படவில்லை, இது பொருள்பற்றிய செயலாகையால்;
நிலையாமையைப் பற்றிய தெளிவின்மை நீங்கி, தெளிவின்மை காரணமான மயக்கத்தையும் போக்கி
அந்தணர்களுக்குக் கொடையளிக்கும் பொழுது அவர்கள் கையில் வார்த்த நீர், கடல்வரை ஓட,
நீர்வளம் மிகுந்த மருதநிலத்து ஊர்களைக் கொடுத்து, 

நான்மறையோர் புகழ் பரப்பியும் - பட் 202

அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும்	200
நல் ஆனொடு பகடு ஓம்பியும்
நான்மறையோர் புகழ் பரப்பியும்
பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும்
புண்ணியம் முட்டா தண் நிழல் வாழ்க்கை
கொடு மேழி நசை உழவர்		205
தேவர்களைப் போற்றியும், வேள்வியைச் செய்வித்தும்						200
நல்ல பசுக்களோடு எருதுகளைப் பாதுகாத்தும்,							
அந்தணர்க்குள்ள புகழை அவர்க்கு நிலைநிறுத்தியும்,
(பல)பண்டங்களை ஆக்கியிட்டும், புதிய நல்லுணவு கொடுத்தும்,
அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய,
வளைந்த மேழி(யால் உழவுத்தொழிலை) விரும்பும் உழவரும் -	

நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் - அகம் 181/16

ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை			15
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன்
ஆலமுற்றம் கவின் பெற தைஇய
உலகமெல்லாம் பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய
நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய முக்கண்ணையுடைய பரமனின்
ஆலமுற்றம் என்னுமிடத்தில் அழகுபெற உருவாக்கப்பட்ட

வஞ்சி:28/175 சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம் கூறுகிறது
வானவர் போற்றும் வழிநினக் களிக்கும்
நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான்



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
RE: பண்டைத் தமிழர் வாழ்வில் - கோவில் வழிபாடும் - அர்ச்சகர்களும்
Permalink  
 


 

பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் - பெரும் 373
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்
காந்தளையுடைய அழகிய பக்கமலையில் யானை கிடந்தாற் போன்று
பாம்பணையாகிய படுக்கையில் துயில் கொண்டோனுடைய திருவெஃகாவிடத்து,
தவ பள்ளி தாழ் காவின் - பட் 53
தவ பள்ளி தாழ் காவின் அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் 55 மா இரும் பெடையோடு இரியல்_போகி பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர் தூது_உண்_அம்_புறவொடு துச்சில் சேக்கும் முது மரத்த முரண் களரி
தவஞ்செய்யும் (சமண,பௌத்த) பள்ளிகள் இருக்கும் தாழ்வான மரங்கள் கொண்ட சோலைகளில்
மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகையை வெறுத்து, குயில்கள் தம்முடைய			55
கரிய பெரிய பேடைகளுடன் விரைவாக(விழுந்தடித்து)ப் பறந்தோடி,
பூதங்கள் (வாசலில்)காத்துநிற்கும் நுழைவதற்கு அரிய காவல் உள்ள (காளி)கோட்டத்தில்,
கல்லைத் தின்னும் அழகிய புறாக்களுடன் ஒதுக்குப்புறமாகத் தங்கும்
பழைமையான மரத்தின் (கீழான) மற்போர் (செய்யும்) களங்கள் (கொண்ட பட்டினம்) -


பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்
சிறந்த வேதம் விளங்க பாடி
விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி		470
உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும்
அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும்
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து		475
பூவும் புகையும் சாவகர் பழிச்ச
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்

சான்ற கொள்கை சாயா யாக்கை			480
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார்
கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை
பல் புரி சிமிலி நாற்றி நல்குவர
கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்து
செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து		485
நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி
இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும்
குன்று பல குழீஇ பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி

செற்றமும் உவகையும் செய்யாது காத்து
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் -
சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,
சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,

நிலம் நிலைகொண்ட (இந்த)உலகத்தில் ஒன்றாகிய (இறை)தாங்களேயாய்,(தாம் ஒருவரே தனித்திருந்து)	470
உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே நின்று சேரும்
அறத்தின் வழி (ஒருக் காலமும்)தப்பாது அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய
பெரியோர் பொருந்தி இன்புற்று வதியும்
மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருக்கைகளும் -
வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய			475
பூக்களையும், புகையினையும் (ஏந்தி)விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,
சென்ற காலத்தையும் வருகின்ற காலத்தையும்
இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கத்தோடே நன்றாக உணர்ந்து,
வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,

(தமக்கு)அமைந்த விரதங்களையும், இளையாத உடம்பினையும்,					480
நிறைந்து அடங்கின அறிவினையும் உடையார் நெருங்கினராய் இருந்து நோற்றற்கு,
கல்லைப் பொளிந்தாற் போன்று ஒடுங்கிய வாயை உடைய குண்டிகையைப்
பல வடங்களையுடைய நூலுறியில் தூக்கி, அருளுதலையுடைய,
குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து,
செம்பால் செய்ததைப் போல செவ்விய சுவர்களில் ஓவியமெழுதி,					485
கண்பார்க்கும் விசையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி,
வியப்பமைந்த நறிய பூக்களையுடைய (அமண்)பள்ளியும் -
மலைகள் பலவும் திரண்டு பொலிவன (போலத்)தோன்ற;
அச்சத்தையும், வருத்தத்தையும், பற்றுள்ளத்தையும் போக்கி,

பகைமையையும், மகிழ்ச்சியையும் கொள்ளாமல் (தம்மைப்)பாதுகாத்து,				490

 



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

புறநானூறு 6, பாடியவர்: காரிகிழார்பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிதிணை: பாடாண்துறை: செவியறிவுறூஉவாழ்த்தியல்
வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
கீழது முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்  5
நீர்நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரிகோல் ஞமன் போல, ஒரு திறம்
பற்றல் இலியரோ நிற்றிறம் சிறக்க!  10
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி, அடர்ப் புகர்ச்
சிறுகண் யானை செவ்விதின் ஏவிப்,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் 15
பரிசின் மாக்கட்கு வரிசையின் நல்கிப்,
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே,
இறைஞ்சுக பெரும நின் சென்னி! சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே,  20
வாடுக இறைவ நின் கண்ணி! ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே,
செலியர் அத்தை நின் வெகுளி! வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே,
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய 25
தண்டா ஈகைத் தகைமாண் குடுமி,
தண்கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும, நீ நிலமிசையானே!

Puranānūru 6, Poet Kari Kizhār sang to Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Seviyarivurūu, Vālthiyal
May your great glory and endless fame spread to the north
of the lofty northern Himalayas with snow, south of the fierce
Kumari river of the south, east of the eastern ocean dug out of
the earth that has waves that attack the shores, west of the very
ancient western ocean, in the earth, the lowest tier that rose out
of the ocean, below the land and in the upper world with cows!       

May you be without bias, like the perfect pointer of a balance
that measures large quantities!  May your abilities flourish!
You entered the countries of those who opposed you
in battles, goaded your elephants with dense spots and small
eyes to charge, took many guarded forts with green fields, and
distributed the fine ornaments you seized, according to rank.

May your umbrella bow down when it circumambulates
the temple of Sivan with three eyes who is praised by sages! 
May your head bend down when the Brahmins of the four
Vedas praise you!  May your garland wilt, assaulted by
the smoke of flames you lit in the lands of your enemies!

May your anger vanish when you see your women wearing
pure jewels, their faces bright with the anger of lovers’ quarrels!
O Great Kudumi who gives without limits!  You who have won
everything and never boasts about your victories!
May you live long on this earth forever, like the moon with
cool rays and the glowing sun with bright rays!

Notes:  Puranānūru poems 6, 9, 12, 15 and 64 were written for this king.   This is the only poem written by this poet who came from a town named Kāriyāru.

Meanings:  வடாஅது – in the north, வடக்கின்கண் (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), பனிபடு நெடுவரை வடக்கும் – and north of the tall Himalayas with snow, தெனாஅது – in the south, தெற்கின்கண் (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), உருகெழு குமரியின் தெற்கும் – and south of fierce Kumari river in the south, குணாஅது – on the east side (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), கரை பொரு தொடு கடல் – dug ocean whose waves attack its shores (dug up by the mythological Sakarars – சகரர்), குணக்கும் – also in the east, குடாஅது – in the west, மேற்கில் (இசை நிறை அளபெடை, ஏழாம் உருபின் பொருள்பட வந்தது), தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் – and in the west of the ancient ocean, கீழது – கீழதாகிய, what is below, முப்புணர் அடுக்கிய – three arranged levels of earth, sky and heaven, முறை முதற் கட்டின் – the first one in the levels, நீர்நிலை நிவப்பின் கீழும் – and below the earth rising out of a body of water, மேலது – above, ஆனிலை உலகத்தானும் – and to the upper world with cows, ஆனாது – not satisfied, உருவும் – causing others to fear, புகழும் ஆகி – and attaining great fame, விரி சீர் – large amounts of material, தெரிகோல் ஞமன் போல – like the perfect pointer stick of a balance (துலாக்கோலின் நாக்கு), ஒரு திறம் பற்றல் இலியரோ – may you not lean on one side (இலியரோ – ஓகாரம் அசைநிலை, an expletive), நிற்றிறம் (நின் திறம், நின்றிறம் நிற்றிறம் என வலிந்து நின்றது) சிறக்க – may your abilities flourish (சிறக்க – வியங்கோள் வினைமுற்று), செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – in the nations of enemies who opposed you in campaigns (தேஎத்து – இன்னிசை அளபெடை), கடற்படை குளிப்ப மண்டி – entered rapidly with your ocean-like army, அடர்ப் புகர் – dense spots, சிறுகண் யானை – small-eyed elephants, செவ்விதின் ஏவி – ordered them perfectly to attack, ordered them to attack at the right time, பாசவல் படப்பை – fields with green leaves (பாசவல் – பசிய விளைநிலம்), ஆர் எயில் பல தந்து – took many difficult forts, அவ் எயில் கொண்ட செய்வுறு நன்கலம் பரிசின் – the beautifully created precious ornaments that you seized from those forts, மாக்கட்கு வரிசையின் நல்கி – gave to people according to rank, பணியியர் அத்தை நின் குடையே – may you royal umbrella bow down (அத்தை – அசைநிலை, an expletive), முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ்செயற்கே – to go around the temple of god with three eyes who is praised by the sages – Sivan, இறைஞ்சுக பெரும – may it bend down O lord, நின் சென்னி – your head, சிறந்த – great, நான்மறை முனிவர் – Brahmins with their four Vedas, ஏந்து கை எதிரே – in front of their lifted hands, வாடுக இறைவ நின் கண்ணி – may your garland wilt O my lord, ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே – due to burning the land of your enemies and causing smoke to spread (எறித்தலானே – ஏகாரம் அசைநிலை, an expletive), செலியர் அத்தை – may it leave (அத்தை – அசைநிலை, an expletive), நின் வெகுளி – your rage, வால் இழை மங்கையர் – women with pure jewels, women with white pearls, துனித்த – with anger, வாள் முகத்து எதிரே – on seeing their bright faces, ஆங்க – அசைநிலை, an expletive, வென்றி எல்லாம் வென்று – won everything, அகத்து அடக்கிய – kept inside, தண்டா ஈகைத் தகை மாண் குடுமி – great Kudumi who gives without limits, தண் கதிர் மதியம் போலவும் – like the moon with cool rays, தெறு சுடர் – hot rays, ஒண் கதிர் ஞாயிறு போலவும் – like the sun with bright rays, மன்னிய – stable, பெரும – O lord, நீ – you, நிலமிசையானே – on this earth (நிலமிசையானே – ஏகாரம் அசைநிலை, an expletive)



__________________


Guru

Status: Offline
Posts: 24811
Date:
Permalink  
 

புறநானூறு 9, பாடியவர்: நெட்டிமையார், பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, திணை: பாடாண், துறை: இயன் மொழி
“ஆவும், ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்” என  5
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்,
கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய, குடுமி, தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின் நெடியோன்  10
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

Puranānūru 9, Poet Nettimaiyār sang for Pandiyan Palyākasālai Muthukudumi Peruvazhuthi, Thinai: Pādān, Thurai: Iyan Mozhi
He announces in a righteous manner, “Cows,
Brahmins with the nature of cows, women, those
who are sick, and those living in the southern
land with no gold-like sons to perform precious
last rites, take refuge!   We are ready to shoot
volleys of arrows!”

May he with martial courage, whose flags flying
on his murderous elephants throwing shadows on the
sky, our king Kudumi, live for long, more days
than the number of sands on the banks of Pakruli River
with fine water,
where his ancestor Nediyōn celebrated ocean festivals,
and gave musicians fresh, reddish gold gifts!

Notes:   Puranānūru poems 6, 9, 12, 15 and 64 were written for this king.   This poet wrote Puranānūru poems 9, 12 and 15 for this king.  ஒளவை துரைசாமி உரை – பிணியுடையீரும், புதல்வர்ப் பெறாஅதீரும் என்னும் முன்னிலைப் பெயரோடு, ஆவும், பார்ப்பன மாக்களும், பெண்டிரும் என்னும் படர்க்கைப் பெயர்கள் விராய் வந்து, ‘நும் அரண் சேர்மினே’, என்னும் முன்னிலை வினையான் முடிதல், ‘செய்யுள் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்’ (தோல். சொல். எச்ச 67) என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும்.  முந்நீர் – தமிழகம் கிழக்கு தெற்கு மேற்கு ஆகிய மூன்று திசையானும் நீர்வளைவுண்டது.  முந்நீர் என்னும் தமிழ்க்கிளவி இம்முப்புறக் கடலமைப்பைச் சுட்டுவது – வ. சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ நூல், ஆற்று நீரும், ஊற்று நீரும் மழை நீரும் உடைமையான் முந்நீர் – ஒளவை துரைசாமி புறநானூறு 9 உரை, நிலத்தைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய நீர் – நச்சினார்க்கினியர் மதுரைக்காஞ்சி 75 உரை.   மணலினும் பலவே:  அகநானூறு 93 – தண் ஆன்பொருநை மணலினும் பலவே, புறநானூறு 9- நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே, புறநானூறு 43 – எக்கர் இட்ட மணலினும் பலவே, புறநானூறு 55 – வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே, புறநானூறு 136 – நுண் பல மணலினும் ஏத்தி, புறநானூறு 363 – இடு திரை மணலினும் பலரே, புறநானூறு 387 – கல்லென் பொருநை மணலினும், மதுரைக்காஞ்சி 236 – திரை இடு மணலினும் பலரே, மலைபடுகடாம் 556 – வடு வாழ் எக்கர் மணலினும் பலரே.

Meanings:  ஆவும் – and cows, ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – and Brahmins who have the nature of cows, பெண்டிரும் – and women, பிணி உடையீரும் – and those of you with diseases, பேணி – protecting, தென்புல வாழ்நர்க்கு – to those who live in the south, அருங்கடன் இறுக்கும் –  performing final rites, பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும் – and those of you who have not given birth to gold-like sons (பெறாஅதீரும் – இசை நிறை அளபெடை), எம் அம்பு கடி விடுதும் – we are going to shoot our arrows rapidly (கடி – விரைவுப்பொருள் தரும் இடைச்சொல்), நும் அரண் சேர்மின் – you reach a safe place (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி, a verbal plural suffix of the second person), என அறத்து ஆறு நுவலும் – he utters words with righteous path, பூட்கை மறத்தின் – with martial courage, with the principle of courage, கொல் களிற்று மீமிசைக் கொடி – flags on murderous male elephants (மீமிசை – ஒருபொருட் பன்மொழி), விசும்பு நிழற்றும் – shades the skies, எங்கோ – my king, வாழிய குடுமி – O Kudumi! may you live long, எங்கோ – our king, செந்நீர்ப் பசும் பொன் – fresh reddish gold, வயிரியர்க்கு ஈத்த – gave to artists, முந்நீர் விழவின் – at the ocean festivals, நெடியோன் – your ancestor Nediyōn, நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே – many more days than the number of sands on the banks of Pahruli river with good water (பலவே – ஏகாரம் அசைநிலை, an expletive)

அருஞ்சொற்பொருள்:
1. ஆன் = பசு; இயல் = தன்மை; ஆனியல் = ஆன்+இயல் = பசு போன்ற தன்மை. 2. பேணுதல் = பாதுகாத்தல். 3. இறுத்தல் = செலுத்தல். 5. கடி = விரைவு; அரண் = காவல். 6. நுவல் = சொல்; பூட்கை = கொள்கை, மேற்கோள். 7. மீ = மேலிடம், உயர்ச்சி, மீமிசை = மேலே. 9. செந்நீர் = சிவந்த தன்மையுடைய (சிவந்த); பசும்பொன் = உயர்ந்த பொன். வயிரியர் = கூத்தர். 10. முந்நீர் = கடல்; விழவு = விழா; நெடியோன் = உயர்ந்தவன் (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோர்களில் ஒருவன்)

கொண்டு கூட்டு: அறத்தாறு நுவலும் பூட்கை, எங்கோ, குடுமி வாழிய, பஃறுளி மணலினும் பலவே எனக் கூட்டுக.

உரை: ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard