திரு. செந்தில் பாலாஜி கைது செய்தது தொடர்பாக பல தொலைக்காட்சிகளில் விவாதங்கங்கள் நடைபெற்றது.பல கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்துவந்ததை பார்த்துக்கொண்டிருந்தேன். சிலர் முக்கியமான சட்டம் சம்பந்தமான கேள்விகளை எழுப்பினர்.பா ஜ க வை எதிர்க்கின்ற கட்சிகள் இந்த கைது நடவடிக்கைகளுக்கு பாஜக தான் காரணம் என்றெல்லாம் குற்றம் சாட்டினர்.
இந்த வழக்கு பற்றி அனைவருக்கும் காலையில் இருந்து தொலைக்காட்சிகளும் பத்திரிகைகளும் தகவல்களை வழங்கி வருகிறதை பார்க்க முடிகிறது..ஆனால் பாஜக வை குற்றம் சாட்டும் சில கட்சித்தலைவர்கள் இந்த வழக்கில் நீதிமன்றங்களின் தீரிப்புக்களை வேண்டும் என்றே மறைத்து பேசுவதாகவே தோன்றுகின்றது.
வழக்கு உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் சென்றபோது அந்த நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக இந்த வழக்கு விசாரணை துரிதமாக இரண்டு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு உத்தரவிட்டது . மேலும் அமலாக்க துறைக்கு எதிரான தடையையும் நீக்கி அதுவும் பண மோசடி சட்டத்தின் கீழ் விசாரிக்க உத்தரவிட்டது.இதுலே குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன வென்றால் விசாரணை அதிகாரிகள் காலதாமதம் செய்வதாக எங்களுக்கு தெரிய வந்தால் நங்கள் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க வேண்டி இருக்கும் என்று உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் எச்சரித்தது..
“The investigation officer shall proceed with further investigation in all cases by including the offences under the PC Act (Prevention of Corruption Act). Any let-up on the part of the investigation officer in this regard will pave the way for this court to consider appointing a special investigation team in the future.”
மாநில காவல்துறை விசாரிக்கும் போது எப்படி அமலாக்கத்துறை எந்த வழக்கை விசாரிக்கலாம் என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள். அமலாக்க துறைக்கு Jurisdictional facts இல்லை என்று வாதிடுகின்றனர்.
இந்த Prevention of Money laundering ( PMLA) சட்டத்தின் படி அந்த சட்டத்தில் குறிப்பிட பட்டுள்ள அட்டவணை "A" வில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டங்களில் உள்ள குற்றங்களை நிகழ்த்தினால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிய அதிகாரம் உள்ளது.இவைகளுக்கு predicate offences என்று பெயர்.
PMLA சட்டத்தில் அட்டவணை A வில் கொடுக்கப்பட்டுள்ள சட்டங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Scheduled Offences Under PMLA
The following legislations and listed offences are:
The statutes and offences specified under Part A of the Schedule:
Paragraph 1- Offences under Indian Penal Code (IPC), 1860;
Paragraph 2-Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985;
Paragraph 24- Protection of Plants Varieties and Farmers Rights Act, 2001;
Paragraph 25- The Environment Protection Act, 1986;
Paragraph 26- Water (Prevention and Control of Pollution) Act, 1974;
Paragraph 27- Air (Prevention and Control of Pollution) Act, 1981;
Paragraph 28- The Suppression of Unlawful Acts against Safety of Maritime Navigation and Fixed Platforms of Continental Shelf Act, 2002;
Paragraph 29- The Companies Act, 2013.
அதே போல அரசு அலுவலங்களில் குறிப்பாக தலைமை செயலகத்தில் அமலாக்க அதிகாரிகள் நுழைந்து சோதனை போடுவது எந்த விதத்தில் சட்ட படி சரி என்று ஒருவர் வாதிட்டார். இது குறித்து PMLA சட்டத்திலேயே ஷரத்து 17 இல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது..இன்னும் சொல்லப்போனால் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூட திரு. கார்த்தி சிதம்பரம் போன்றோர் தொடுத்த வழக்கில் அமலாக்க துறையின் இந்த அதிகாரத்தை உறுதி செய்துள்ளது..
PMLA சட்டம் ஷரத்து 17 படி அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு எல்லாவிதமான இடங்களிலும், கட்டிடங்களிலும், வாகனங்களிலும், கப்பல்கள் ஏன் விமானங்களையும் எந்த நேரத்திலும் சோதனை செய்ய அதிகாரம் வழங்கியுள்ளது.. இவர்களுக்கான இந்த அதிகாரங்கள் குறித்தெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க பட்டு பல்வேறு சமயங்களில் உச்சநீதிமன்றம் அமலாக்க துறைக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கியுள்ளது.
17 Search and seizure. —
(1) Where 15 [the Director or any other officer not below the rank of Deputy Director authorised by him for the purposes of this section,] on the basis of information in his possession, has reason to believe (the reason for such belief to be recorded in writing) that any person—
(i) has committed any act which constitutes money-laundering, or
(ii) is in possession of any proceeds of crime involved in money-laundering, or
(iii) is in possession of any records relating to money-laundering, then, subject to the rules made in this behalf, he may authorise any officer subordinate to him to—
(a) enter and search any building, place, vessel, vehicle or aircraft where he has reason to suspect that such records or proceeds of crime are kept;
(b) break open the lock of any door, box, locker, safe, almirah or other receptacle for exercising the powers conferred by clause (a) where the keys thereof are not available;
(c) seize any record or property found as a result of such search;
(d) place marks of identification on such record or make or cause to be made extracts or copies therefrom;
(e) make a note or an inventory of such record or property;
(f) examine on oath any person, who is found to be in possession or control of any record or property, in respect of all matters relevant for the purposes of any investigation under this Act:
மற்றுமொரு தொலைக்காட்சியில் பேசிய ஒரு திமுக தலைவர் செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் வாங்கியதை ஒப்புக்கொண்டுவிட்டார் மற்றும் வாங்கியவர்களிடம் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டார். அப்படி இருக்கும் போது இது எப்படி குற்றமாகும் என்று பேசியதை பார்த்தேன். லஞ்சம் கொடுத்தவருக்கும் லஞ்சம் வாங்கியவருக்குமிடையே சமரசம் ஏற்பட்டு விட்டதால் இதிலே வழக்கு எப்படி நிற்கும் என்று பேசியதை பார்த்து இவர்களை என்ன சொல்வது என்று புரிய வில்லை. செந்தில் பாலாஜி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வில் இவர்கள் இந்த வாதத்தை வைத்தபோது நீதியரசர் ராமசுப்ரமணியம் அவர்கள் கொதித்தே போனார்.
He was referring to how a “compromise” was struck between the “bribe giver” and the “bribe taker” and he observed: “What was compromised between the complainant and the accused is not just their disputes, but justice, fair play, good conscience and the fundamental principles of criminal jurisprudence.
இன்னும் ஒருமூத்த பத்திரிகையாளர் மிகுந்த கோபத்தோடு கேட்டார் . மத்திய அரசு எப்படி துணை ராணுவப்படையை தலைமை செயலகத்தில் பாதுகாப்பிற்கு அழைத்துவந்து சோதனை நடத்தலாம் என்றார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதில்லயா ? மாநில அரசு தன்னுடைய காவல்துறையை அங்கு அவர்களுக்கு எதிராக நிறுத்தினால் என்ன செய்ய முடியும்..மாநில அரசிற்கு சொல்லாமல் எப்படி துணை ராணுவத்தை அங்கு அழைக்கலாம் கேட்டார். அந்த பத்திரிகையாளர் நம் அரசியல் அமைப்பு சட்டத்தின் ஷரத்து 246 யில் உள்ள ஏழாவது அட்டவணை யில் இதற்கான அதிகாரங்கள் ஏற்கனேவே மத்திய அரசிற்கு உள்ளது.ஆகவே மத்திய அரசு சட்டத்திற்கு புறம்பாக எதையும் செய்யவில்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
மேலும் இன்று திரு. செந்தில் பாலாஜி அவர்களின் வழக்கறிஞர்கள் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் 41 A படி திரு. செந்தில் பாலாஜி அவர்களை கைது செய்யும் முன் அவருக்கு நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும் என்று வாதிட்டார்கள். ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். prevention of money laundering act என்பது சிறப்பு சட்டம். அந்த சட்டத்திலேயே கைதுகள் எப்படி செய்யப்பட வேண்டும் என்று விரிவாக சொல்லப்பட்டுள்ளது. கைது செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய நடைமுறைகள் என்ன என்பது அந்த சட்டத்தின் 19 வது ஷரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் சொல்ல போனால் முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அமலாக்க துறைமீது இதே காரணத்தை வைத்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. PMLA சட்டம் என்பது ஒரு சிறப்பு சட்டம் ஆகவே குற்றவியல் நடைமுறை சட்ட விதி 41 A பொருந்தாது என்று சொல்லிவிட்டது.
இதையெல்லாம் பார்க்கும் போது திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இந்த வழக்கின் உண்மைத்தன்மை சென்றுவிடாமல் பார்த்துக்கொள்வதிலேயே அக்கறையோடு உள்ளதாகவே தோன்றுகிறது..மேலும் மத்திய பாஜகவை குற்றம் சொல்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர்.பாஜக பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது என்ற அப்பட்டமான உண்மைக்கு மாறான தகவல்களை பரப்புகிறார்கள். உண்மையில் இவர்கள் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எதிராக மற்றும் திரு.அமித் ஷா அவர்களுக்கு எதிராக எந்த அளவிற்கு புலனாய்வு துறையை ஏவி விட்டார்கள் என்பதை நாடே அறியும்.
இதை வழக்கில் ஒரு வேடிக்கை என்னவென்றால் திரு. செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுத்தே தீரவேண்டும் என்று மிக கடுமையாக அன்று பேசியவர்கள் திமுக வினர் தான்.