ஈ.வெ.ராமசாமியார் வரலாறு: தமிழகத்தில் சிலருக்கு அவர் ஹீரோ, பலருக்கு வில்லனாக இருப்பது ஏன்?
பெரியார் 1945ல் கல்வியைப் பற்றி மாணவர்கள் மத்தியில் பேசினார்.
அதில் அவர் முடிவாகச் சொன்னது இது:
“ஆகவே மாணவர்களே நீங்கள் இந்தப்படிப்பு படிக்காவிட்டால் அறிவே இல்லாதவர்களாக ஆகி விட மாட்டீர்கள். இந்தப் படிப்பு படிப்பதாலேயே பெரிய அறிவாளி ஆகி விடமாட்டீர்கள்
நீங்கள் படிக்கும் இவ்வளவு சரித்திரம், பூகோளம் விஞ்ஞானம், வான சாஸ்திரம், உடல்கூறு சாஸ்திரம் முதலியவை உங்கள் வாழ்வில், நீங்கள் டிப்டிக் கலெக்டரோ, கலெக்டரோ, முன்சீப்போ, ஜட்ஜியோ ஆனாலும் கூட அதற்கு ஏதாவது பயன்படுகிறதா? பரீட்சையில் உங்களை வாட்டவும் உங்கள் படிப்பை நீடிக்கச் செய்யவும் படிப்பதற்கு அதிகப்பணம் செலவு செய்யவும் இதன்பேரால் பலர் பிழைக்கவும் பயன்படுவதல்லாமல் உங்கள் உத்தியோகத் தினசரி நடப்பிற்கு பயன்படுகிறதா?
எனவே எவ்வளவு மோசமான கல்வி? எவ்வளவு மோசமான கல்வி ஸ்தாபனம்? எவ்வளவு மோசமான ஆசிரியர்? எவ்வளவு மோசமான படிப்பிக்கும் தன்மை என்று பாருங்கள்.”
இதை விடத் தட்டையாக, பாமரத்தனமாக, கல்வியைப் பற்றி அடிப்படை புரிதல் கூட இல்லாமல் பேசியிருப்பவர்கள் மிகச் சிலரே இருப்பார்கள்.
இவருக்கு அறிவு (knowledge) வேறு புத்திகூர்மை (intelligence) வேறு என்ற அடிப்படை கூடத் தெரியவில்லை. மேலும் கல்வியை லாப நஷ்டத் துலாக் கோலில் அளவிடுவதை கல்வியை உண்மையாகவே மதிப்பவர்கள் என்றும் செய்ய மாட்டார்கள். ஆஸ்கார் வைல்ட் சொன்னது நினைவிற்கு வருகிறது: He knows the price of everything and the value of nothing.
"எல்லோருக்கும் ஒரு வழி என்றால் இடும்பனுக்குத் தனி வழி" என்று ஒரு பழமொழி உண்டு. இது பெரியாருக்குப் பொருந்தும். அதாவது அதிர்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்திக் கொண்டே பேசிக் காலம் கழித்தவர் அவர்.
தனிவழி என்பதனாலேயே அது சரியான வழியாக ஆகி விடாது என்பது உண்மையான பகுத்தறிவோடு (பெரியாரின் இனவெறிப் பகுத்தறிவல்ல) சிந்திப்பவர்களுக்கு நிச்சயம் தெரியும்.
திமுக ஆதரவாளர்களைப் போல வேடிக்கையானவர்கள் யாரும் கிடையாது.
1. வாழ்நாள் முழுவதும் மக்கள் ஆட்சி முறையை எதிர்த்தவரை மக்கள் ஆட்சியை ஆதரித்தவர் என்பார்கள்.
2. தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்பவரைத் தமிழ் இனக்காவலர் என்பார்கள்.
3. தாத்தா, மகன், பேரன், வரை நாட்டை ஆள அனுமதித்து விட்டு நாங்கள் குலத்தொழிலை எதிர்க்கிறோம் என்பார்கள்.
4. கட்சியில் பல வருடங்கள் இருந்த திருமதி கனிமொழியை மறந்து விட்டு மகன் என்ற ஒரே காரணத்தினால் திரு உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்து விட்டு, நாங்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம் என்பார்கள்.
5. 3 சதவீதம் என்று ஓயாமல் பேசிக் கொண்டே எல்லோருக்கும் எல்லாம் என்பார்கள்
"நான் தலைவராக இருந்தபோது எனக்குத் தோன்றியதைச் செய்தேன். யாருடைய கருத்தையும் நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. நான் நினைத்தது எப்போதுமே சரியென்றுதான் இருந்தேன். என்னுடைய எண்ணத்தை மாற்றிக் கொள்ள எந்தத் தேவையும் ஏற்படவில்லை. நான் தலைவனாக இருக்கிறபடியால் மற்றவர்கள் நான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்."
இது 1944 சேலம் மாநாட்டில் பெரியார் பேசியதன் சாரம்.
"பாசிசத்தையும் பழைமையையும் நாட்டிலே படையெடுக்க விடக்கூடாது – அது போல கழகத்தில் பாசிசத்தை வளர்த்துள்ள தலைமையில் இனியும் இருந்து பணியாற்றவும் கூடாது. நாட்டைப் பாழ்படுத்தும் சக்திகளை எதிர்த்துப் போராடும் செயலையும் மறக்கக் கூடாது – அதுபோல், ஜனநாயகத்தை – தன்மானத்தை அழிக்கும் போக்கினை மேற்கொண்டுவிட்ட தலைவரிடம் இனிக்கூடிப் பணியாற்றுவது என்பது முடியாத காரியம்.”
இது அண்ணா பெரியாரைப் பற்றி திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த போது பேசியது.
"தானே தலைவனாய், எழுத்தாளனாய் பேச்சாளனாய், என்று தான் ஒருவரால் மட்டுமே இயக்கம் வளர்வதாகப் பெரியார் இதுவரை கூறிவந்தார். அவரது மதிப்பைக் காலிழந்தும், கண்ணிழந்தும் பொருளிழந்தும் தியாகத் தழும்புகளைப் பெற்ற தொண்டர்கள் பெற்றதில்லை. கட்சியின் வளர்ச்சி தன்னால் தான் என்று சொல்லி வந்தாரே தவிர உண்மையாக யாரால் என்பதை அவருடைய உள்ளம் உரைத்தது கிடையாது. கழகத் தொண்டர்களை அவர் பாராட்டியது இல்லை என்பது மட்டுமல்ல; அவரது மிரட்டலுக்கும் ஆடும்படியும் வைத்து வந்தார்.”
இதுவும் அண்ணா.
"அரசர்களை ஒழிப்பதற்கென்று பல நாளாகக் கிளர்ச்சிகள் குடிமக்களாலேயே செய்யப்பட்டு, சில அரசரைக் கொன்றும் சிலரை விரட்டியும் விட்டு, அரசனல்லாத ஆட்சியையே உலகில் பெரும்பாகத்தில் மக்கள் ஏற்படுத்திவிட்டார்கள் என்றாலும், அதாவது அரசன் ஒழிக்கப்பட்டு விட்டான் என்றாலும், அரசன் செய்து வந்ததுபோல் மக்களை அடக்கி ஆளும் ஆட்சி என்பதாக ஒன்று இன்று மக்களுக்கு அவசியம் வேண்டியதாகவே இருக்கிறது."
"இப்படி தேவையிருக்கும் ஒரு ஆட்சிக்கு “அரசன் என்பதாக ஒருவன் தேவை இல்லை. மக்களாகிய நாமே ஆட்சித் தலைவனாக இருந்து கொண்டு ஆட்சி நடத்திக் கொள்ளலாம்” என்று மக்கள் கருதியது அல்லது யாரோ சிலர் கருதியது என்பது மாபெரும் முட்டாள்தனம் அல்லது அயோக்கியத் தனமேயாகும். இதன் பயன் என்னமாய் முடியுமென்றால், மக்களுக்கு ஏற்கெனவே இருந்து வரும் கெட்ட குணங்கள், கூடாத குணங்கள் என்று சொல்லப்படுபவையான பொய், புரட்டு, பித்தலாட்டம், ஏமாற்றுதல், வஞ்சித்தல், கொலை, கொள்ளை, பலாத்கார காலித்தனம், அமைதி இன்மை, குழப்பம் முதலிய சமுதாய வாழ்வுக்குக் கூடாததான காரியங்கள் நடைபெறவும், நாளுக்குநாள் மக்கள் இவற்றில் ஈடுபடவுமான, மக்களின் சமூக வாழ்வுமுறை கெடவுமான நிலை ஏற்பட்டுத் தாண்டவமாடு வதுதான் விளைவாக இருக்கும், இருந்தும் வருகிறது."
இது பெரியார். 1968ல்.
"ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது."
இதுவும் பெரியார். கீழ்வெண்மணி படுகொலைக்களுக்கு பின் உதிர்த்த பொன்மொழிகள்.