கல்வெட்டு காசுகளீல் உள்ள சங்க கால சேர மன்னர்கள்
சங்க கால சேர மன்னர்கள் பதிற்றுப்பத்து 5ம் பத்து மற்றும் சிலப்பதிகாரக் கதையில் கண்ணகிக்கு கோவில் எழுப்பிய சேரன் செங்குட்டுவன் காலம் பொஆ. 188 -244 என வரலாற்று அறிஞர்களிடம் கருத்து ஒற்றுமை வருகிறது
நாம் வரலாறு தேடுகையில் இரண்டு பழைய கல்வெட்டுகளை மற்றும் ராமாயண, & சங்கப் பாடல் கதைகளை பலர் சுட்டுவதைக் காணலாம்
1. அசோகர் குஜராத் கிர்னார் கல்வெட்டு,
2. ஒடிஸ்ஸாவின் கலிங்க அரசன் காரவேலன் கல்வெட்டு
3. அகநானூறு மற்றும் பல பாடல் பாடிய மாமூலனார்- நந்தர், மௌரியர் பற்றிய குறிப்புகள்
4. வால்மிகி இராமாயணத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் வானர அரசன் சுக்ரீவன் ஹனுமாருக்கு தேடும் வழி கூறுகையில் பாண்டிய, சேர, சோழர்கள் பற்றி கூறினார்
அசோகர் தமிழகம் வரவே இல்லை, மைசூர் வரை வந்தவர் அங்கு சொன்னபடி பக்கத்தில் இருந்த அரசர் நாட்டிற்கு ஆரிய பௌத்தம் பரப்ப தூதர் அனுப்பியதைக் குறித்துள்ளார். இதில் உள்ள சோடா, பாடா சோழரையும் பாண்டியரையும் குறிக்கிறது என்றும், ஸதியபுதோ, கேதளபுதோ என்பது அதியமான், சேரர் என்பது அறிஞர் கருத்து
கலிங்க அரசன் காரவேலன் கல்வெட்டு அவன் பக்கத்து நாடு தாமிரலிப்தியைத் தான் குறிக்கும் என்பது தற்போது கருத்து ஒற்றுமை உள்ளது
பரிபாடல் - 11ம் பாடலில் உள்ள வானியல் குறிப்புகள்படி அது பொஆ. 634 ஜூன்.17ம் தேதி குறிக்கிறது என்றார் எல்.டி.சாமிக்கண்ணு பிள்ளை, அவர் நூல்கள் தான் இன்றும் இந்தியாவின் அனைத்து கல்வெட்டு குறிப்புகளை காலம் குறிக்க பயன்படுவது