New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாடாவை அவிழ்த்து, பின் பாவாடையைத் தூக்கி அங்கே பார்த்தால் உங்களுக்கே தெரியும் !! கருணாநிதி


Guru

Status: Offline
Posts: 24778
Date:
நாடாவை அவிழ்த்து, பின் பாவாடையைத் தூக்கி அங்கே பார்த்தால் உங்களுக்கே தெரியும் !! கருணாநிதி
Permalink  
 


முக்தா சீனிவாகனின் முகநூல் பதிவு :நாடாவை அவிழ்த்து, பின் பாவாடையைத் தூக்கி அங்கே பார்த்தால் உங்களுக்கே தெரியும் !! நடந்த உண்மை என்ன என்று அம்மையாரே உங்களுக்குத் தெரியும் !! கலைஞர் கருணாநிதி சட்டமன்றத்தில் வழங்கிய இரண்டு பொருள் படைத்த விளக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையின் புதிய பதிவும் விளக்கமும் !! உங்கள் அனைவரின் கனிவான கவனத்திற்கு !! 

அரசியலில் இது சகஜமப்பா!

உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!

அன்பும் பண்பும் ஒருங்கே அமையப்பெற்று இன்றையதினம் உலகம் முழுவதும் ஆங்காங்கே அனைத்து நாடுகளிலும் வாழ்ந்துவரும் எனது உயிரினும் மேலாக நான் நேசித்து, எனது இதயம் என்னும் சிம்மாசனத்தில் அமர வைத்து பூஜித்து வரும் அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!

உங்கள் அனைவரின் இமைகள் திறந்திடும் இந்த இனிய காலை

வேளையில் உங்கள் அனைவரின்

வாழ்வினிலும் எந்தவிதமான

சுமைகளும் இல்லாமல்,

ஒருவேளை அவை இருந்தாலும், அந்த சுமைகள் அனைத்தும் முற்றிலுமாக நீங்கி, உங்கள் வாழ்க்கையில் சுகங்கள் மட்டுமே நிறைந்து இருந்து , நீங்கள் அனைவரும் வாழ்ந்திட வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் நான் வணங்கிடும் எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களில் எனது இந்த அன்புக் கோரிக்கை ஒன்றினை மட்டுமே வைத்து/ சமர்பித்து வாழ்ந்து வரும் உங்கள் அனைவரின் அன்புச் சகோதரன் மதுரை T.R.பாலு உங்கள் அனைவரையும் இதய சுத்தியுடன் வணங்கி மகிழ்ந்திடும் இனிமை நிறைந்த நல்ல இன்பத்திருநாள் இது.

அன்பர்களே !! கட்டுரையின்

தலைப்பாக நான் மேலே பதிவு செய்த அந்த சம்பவம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிகழ்ந்து இன்றைக்கு ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்கும் மேலாகஇருக்கும்.

அப்போது எனக்கு வயது சுமார் 17 இருக்கும். செய்தித் தாளில் நான் படித்து இரசித்திட்ட அந்த

வரலாற்றுச் சிறப்பு மிக்க அப்போதைய தமிழக முதல்வர் மாண்புமிகு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சி (காங்கிரஸ்) துணைத்தலைவி T.N.அனந்த நாயகி அம்மையார், இவர்கள்இருவருக்கும் இடையில் நடைபெற்ற சுவாரசியமான சொற்போரின்போது ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட வாய் வார்த்தைகளின் வண்ணமிகு அணிவகுப்பின் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த அந்த நிகழ்வினைத் தூய்மையான தமிழில் மூழ்கடித்து அந்த நிகழ்வுகளை மீண்டும் உங்களது விழிகளுக்கு விருந்தாக்கி இங்கே படைப்பதில் நான் மட்டற்ற மன மகிழ்ச்சி அடைகின்றேன் எனது அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே !! இந்த சம்பவம் 1969-197௦ ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் கேள்வி நேரத்தின்போது முதல்வர் அவர்களுக்கும்சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இந்த இருவருக்கும் இடையில் நிகழ்ந்த சொற்போர், இப்போது உங்களது பார்வைக்கு விருந்து,அது சமுதாயத்தின் சீர்திருத்த மருந்து :- T.N.அனந்தநாயகி:- 1967ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வரும் ஆகிய கலைஞர் அவர்களே !! நான் உங்களைப் பார்த்து கேட்கிறேன் !!

(இப்போது இருப்பதுபோல தமிழ்

பண்பாட்டையும் நாகரீகத்தையும்

குழிதோண்டிப் புதைத்திடும்

வண்ணம் அவர் முதல்வராகஇருந்த

காலத்தேயும் சரி !! எதிர்கட்சித்

தலைவராக இருந்தபோதும் சரி,

இங்கே தற்போது நம்மிடையே

வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சில

மனிதப்பதர்கள் முத்தமிழ் அறிஞர்

தலைவர் கலைஞர் அவர்களைப்

பார்த்து சற்றும் சபை நாகரீகம்

என்றால் அதன் அடிச்சுவடே

அறிந்திடாத, சபை கண்ணியம்

என்றால் என்ன என்பதனை ஒரு

கடுகின் அளவு கூட கற்றோ அல்லது

அனுபவ அறிவின் வாயிலாக அறிந்திடாத/தெரிந்திடாத / மூளை என்பதே முற்றிலும் இல்லாத வகையில் இங்கே " சிலர் " அழைப்பதுபோல !! (ஏய் ? கருணாநிதி ?? நான் உன்னைப் பார்த்து கேட்கிறேன் "",உனக்கு வெட்கம்,மானம், சூடு,சுரணை இருக்கா ?"" என்றெல்லாம் கேட்கின்ற மனிதப் பதர்கள் வாழ்ந்திடாத பொற்காலம் அது.இவர்களுக்காகவே பாட்டுக்கோட்டையின் தலைவன் பட்டுக்கோட்டை மறைந்தஒப்பற்றக் கவிஞன் ஒரு திரைப்பாடலில் சொன்னது போல :- தரையைப் பார்த்து இருக்குது நல்ல கதிரு !! தன்குறையை மறந்து மேலே பாக்குது பதரு !! அதுபோல் அறிவு உள்ளது (தலைவர் கலைஞர் போல சிலர்) அடங்கி கிடக்குது வீட்டிலே !!

எதுக்கும் ஆகாத சிலது ( நான் இங்கே யாரைப்பற்றி எல்லாம் குறிப்ப்பிட வேண்டும் என்பது உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன்.அதனாலேயே சம்பந்தப் பட்டவர்களது பெயர்தனைபதிவு செய்து அவர்கள் செய்த பாவத்தில் என்னையும் நான் ஒரு பங்காளியாக ஆக்கிக்கொள்ள விரும்ப வில்லை அன்பர்களே !!) எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம்செய்யுதுவெளியிலே!! அதாலே மனுஷனை மனுஷன் சாப்புடுறாண்டா தம்பிப் பயலே !! இது மாறுவதெப்போ !! தீருவதெப்போ !! நம்ம கவலை !! என்று ஒரு சரித்திரம் புகழ்ந்திடும் திரைப்படப்பாடல் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் புரட்சி நடிகர் என்று தலைவர் கலைஞரின் அன்புக் கரங்களால் பட்டம் பெற்ற M.G.R. & பானுமதி இணைந்து நடித்து அந்தகாலத்தில் வெளிவந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க படம் " தாய்க்குப்பின் தாரம் " என்னும் படத்தில் இடம் பெற்ற பாடல்தான் எனது நினைவினில் வருகின்றது

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !! (இப்போது T.N.அனந்தநாயகி அம்மையாரின்பேச்சுதொடர்கிறது):- நான் மாண்புமிகு தமிழகமுதல்வர் கலைஞர் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன். நீங்களும் எங்களிடம் இருந்து ஆட்சியை உங்கள் கைக்கு மாற்றிக்கொண்டு ஏறத்தாழ ...............

முதல்வர் கலைஞர் குறுக்கிட்டுப் பேசுகிறார்) அம்மையார் அவர்கள் குறிப்பிட்ட கருத்து,உண்மைக்கு சற்றும் பொருந்தாத ஒன்று. ஆகவே அதனை மறுத்து சில உண்மைகளை இந்த அவைக்குத் தெரிவித்திட எனக்கு அனுமதி வழங்கிட வேண்டும் பேரவைத் தலைவர் அவர்களே !!

பேரவைத் தலைவர் :- நீங்கள் பேசிட அனுமதி இப்போது வழங்கப் படுகிறது.

முதல்வர்:- நன்றி பேரவைத் தலைவர் அவர்களே !! தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும். மாண்புமிகு எதிர்கட்சித் துணைத்தலைவர் திருமதி T.N.அனந்தநாயாகி அம்மையார் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், அம்மையார் அவர்களே !!

நாங்களாக ஒன்றும் ஆட்சிப் பொறுப்பை உங்கள் கைகளில் இருந்து எடுத்துக் கொள்ளவில்லை.

மாறாக மக்கள் பார்த்து தேர்தலின்போது நீங்கள் பெற்றதைவிடவும் நாங்கள் அதிகமான வாக்குகளைப் பெற்றதனால் மக்கள் பார்த்து எங்களது கரங்களிலே ஆட்சிப் பொறுப்பினை ஒப்படைத்தார்களே அன்றி, நாங்கள் உங்கள் கரங்களில் இருந்து அந்தப் பொறுப்பை பிடுங்கும் அளவிற்குப் பண்புஇல்லாதவர்கள் இல்லை 

அம்மையார் அவர்களே !! ஏன் என்றால் நாங்கள் அரசியல் பயின்றது எங்கள் ஒப்பற்றதலைவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சீர்திருத்தப் பள்ளியில் என்பதனை நான் இங்கே மெத்தப்பணிவன்புடன் குறிப்பிடக் கடமைப்பட்டுள்ளேன் !!

சபாநாயகர் :- இப்போது அம்மையார் அவர்கள் உரைநிகழ்த்தலாம்.

அனந்த :- மிகவும் நன்றி !! மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே !! சரி !! முதல்வர் அவர்கள் சொன்னதுபோலவே வைத்துக்கொள்வோம். மக்கள் உங்களுக்கு ஆளும் பொறுப்பினை ஒப்படைத்து இருக்கிறார்கள். அதனை நான் மறுக்கவில்லை. 2 ஆண்டு காலங்களில் நீங்கள் இந்த தமிழ்நாட்டிற்கு, ஓட்டுப் போட்டு உங்களை இந்த அரிய மாபெரும் மதிப்பிற்குரிய முதல்வர் என்னும்   சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்த்தபொது மக்களுக்கு, என்ன நன்மைகளைச் செய்திருக்கிறீர்கள்? இது ஒன்றுதான் நான் இங்கே உங்கள் முன்னிலையில் வைத்திட விரும்பும் கேள்வி இதுதான்.

பேரவைத் தலைவர்:- மாண்புமிகு முதல்வர், அம்மையார் உங்கள் முன்பாக வைத்திட்ட கேள்விக்கு தாங்கள் இப்போது பதில் உரைத்திடலாம்.

முதல்வர் கலைஞர்:- மிக்க நன்றி !! மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே !! மாண்புமிகுஎதிர்கட்சித் துணைத் தலைவர் திருமதி அனந்தநாயகி அம்மையார் அவர்கள், வாக்களித்து எங்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்திட்ட பொதுமக்களுக்கு நாங்கள் என்னென்ன நல்ல காரியங்களைச் செய்து இருக்கிறோம் என்று, அன்னார் எழுப்பியுள்ள கேள்விக்கு நான் இங்கே தருகின்ற பதில் இதுதான்.மாண்புமிகு எதிர்க்கட்சித் துணைத்தலைவர் அவர்களே !! நாங்கள் ஆட்சிக்குவந்து அதன் பின் வாக்களித்த பொதுமக்களுக்கு என்னென்ன நன்மைகள் செய்தீர்கள் என்பதுதான் அமம்மையார்அவர்கள்  இந்த சபையின் முன்னே வைத்திட்ட கேள்வி. இந்தக் கேள்விக்கு நான் அளிக்கும் பதிலை யாரும் தவறான பொருள்கொண்டு படித்திட வேண்டாம் என்று முன்கூட்டியே இந்த பேரவைக்கு நான் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன்.

" நாடாவை அவிழ்த்து, பின் பாவாடையை தூக்கி அங்கே பார்த்தால் உங்களுக்கே தெரியும் " இதுதான் நான் இப்போதைக்கு உங்களுக்கு தர உள்ள பதிலாகும். என்று முதல்வர் கலைஞர் அவர்கள் பதிலுரைத்துவிட்டு அமர்ந்ததும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்றுஒருசேர, பேரவைத்தலைவர் அவர்களைப் பார்த்து ஒரே கோஷமாக கூச்சல்,கூக்குரலிட்டு, ஒட்டு மொத்தமாக எழுந்து நின்று முதல்வர் அளித்த பதில் உறுப்பினரின் உரிமையையும் கண்ணியத்திற்கும் கௌரவத்திற்கும் இழுக்குத் தரும் விதமாக மாண்புமிகு முதல்வர் அவர்கள், எதிர்கட்சித் துணைத் தலைவர் அவர்களை அவமானப் படுத்திவிட்டார். எனவே அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதோடு முதல்வர் பேசிய பேச்சுக்காக அவர்மீது உரிமைக்குழு நடவடிக்கையையும் மேற்கொள்ளவேண்டுகிறோம் என்று ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று வேண்டுகோள் வைத்தனர்.

பேரவைத்தலைவர்:- முதலில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவரவர்கள் இருக்கையில் அமர்ந்து அவையின் கண்ணியத்தை காத்திட வேண்டுகிறேன். இப்போது மாண்புமிகு முதல்வர் அவர்கள்தாம் அளித்த பதிலுக்கு உண்டான உண்மைப்பொருள் விளக்கத்தினை அளித்திட வேண்டுகிறேன்.

முதல்வர் கலைஞர் :- மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே !!இது போன்ற ஒரு நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்றுதான் நான் நினைத்து எனது பதிலைப் பதிவு செய்வதற்கு முன்னமே தெரிவித்திருந்தேன். இந்த கேள்விக்கு நான் அளிக்க இருக்கும் பதிலை யாரும் தவறாக பொருள் கொள்ள வேண்டாம் என்று எச்சரித்ததை இங்கே நினைவுபடுத்த வேண்டுகிறேன்.

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே !! அரசின் ஆவணங்களைக் கொண்ட கோப்பு, அதில் உள்ள ஆவணங்கள் அடங்கிய காகிதங்கள் கட்டி வைக்கப்பட்டிருக்கும் அதன் மீது சிவப்பு வண்ண இரண்டு பக்க உரைக்கு பாவாடை என்றும் ஒரு பொருள் உண்டு. அதைக் கட்டப் பயன்படுத்தும் கயிறுக்கு நாடா என்றும் பெயர் உண்டு. இது ஒன்றும் இந்த அவையின் மாண்புமிகு உறுப்பினர்கள் யாரும் அறியாததல்ல என்று சொல்லி எனது பதிலுக்கான விளக்க உரையை நான் இந்த அளவிலே நிறைவு செய்கின்றேன்மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே .என்றார் கலைஞர் அவர்கள்.

பேரவைத்தலைவர்:- முதல்வரின் விளக்கம் எற்புடையதாகவே உள்ளது. எனவே இதில் உரிமைமீறல் என்ற பிரச்சினைக்கு இடம் இல்லாததால் பேரவையின் காங்கிரஸ் உறுப்பினர்களின் வேண்டுகோள் மறுக்கப்படுகிறது. இப்போது அடுத்த கேள்விக்குச் செல்லலாம்.

இத்துடன் இந்தக் கட்டுரைமுடிவுக்கு வருகின்றது.

பார்த்தீர்களா நேயர்களே !! எந்த அளவிற்கு நாங்கள் வாழ்ந்திருந்தகாலங்களில் தமிழ்நாடு சட்டமன்றம் எவ்வாறு ஜனநாயக ரீதியில் செயல் பட்டுக்கொண்டு இருந்தது ? என்பதற்கு இதையும் விடவா வேறு உதாரணங்கள் வேணும்தங்களுக்கு. நன்றி !! வணக்கம் !!



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard