ஒரு ராமசாமியோ... ஒரு வீரபாண்டியனோ... ஒரு கஸ்பரோ...எதோ ஒரு சூழலில் இஸ்லாத்திற்கு மாறிவிட்டான் அவன் சூழல் அரபு நாட்டு வேலை வாய்ப்பாக இருக்கட்டும் அல்லது இங்கே பகுத்தறிவு போர்வையில் உலவும் மத ஏஜண்டுகளின் வார்த்தை ஜாலத்தால் ஏற்ப்பட்ட மாற்றமாக இருக்கட்டும் அல்லது இஸ்லாமிய நண்பர்கள் ,முதலாளிகள் & மௌலவிகளின் வசீகர பேச்சாற்றல்கள் அவர்களின் புத்தகங்கள் மூலம் கவிழ்ந்ததாக இருக்கட்டும் எதோ ஒரு சூழல் 30,40 வயதான மனைவி குழந்தைகளுடன் அன்புடன் வாழ்ந்து வந்தவனை அல்லாஹ்வின் ஹிதாயத்து மூலம் ஆம் அப்படித்தான் தக்கியா செய்வார்கள் இஸ்லாத்திற்கு மாறி விட்டான் இங்கே அல்லாஹ்வின் ஹிதாயத் ஒருவனுக்கு கிடைத்து விட்டது அங்கே ஒரு மனைவி இரு குழந்தைகள் வாழ்வு கேள்விக்குறியாகி இருக்கிறது மதம் மாறிய இவனுக்கு இவனைப்போல் மதம் மாறிய ஒருத்தியைக்கொண்டு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் ஆனால் முந்தைய மனைவி ,குழந்தைகளின் கதி ஒருவனின் மத மாற்றத்தால் ஒரு குடும்பமே சீரழிய தொடங்குகிறது பல சமயங்களின் சமதம் மாறிய சிலர் முந்தைய தனது உறவினர்களுடன் கூடி முந்தைய மத பண்டிகைகளிலும் கலந்து முஹம்மதிய ஏகத்துதுவதை குழித்தோண்டி புதைத்து விடுகிறார்கள் அதனால் சமீப காலமாக இந்த சிக்கலை தீர்க்க மௌலவிகள் சில யுக்திகளை கடைப்பிடிக்கிறார்கள் ஒருத்தனை மதம் மாற்றாமல் குடும்பத்தோடு மதம் மாற்ற முனைந்து வருகிறார்கள் இதுவும் ஆபத்தானதே முந்தைய மத சாதிவெறியவர்கள் இவர்கள் தாக்கப்படும் சூழலும் ஏற்படுகிறது .
மதமாற்றம் தனி நபர் உரிமை என்பதேபெரும் அயோக்கியதனம் மத மாற்றத்திற்கு முட்டு கொடுக்கும் அயோக்கியர்கள் முதலில் அந்த மதங்கள் (இஸ்லாம், கிருத்துவம்) ஒழுங்கானது ,அறிவு பூர்வமானது , மனிதாபிமானது ,வன்முறையற்றது என்பதை நிருபிக்கட்டும் ஒரு சாக்கடையில் (மதத்தில்) சாதிய வன்மம் தீண்டாமை இருக்கிறது என்றால் அதை தான் ஒழிக்க வேண்டுமே தவிர இன்னொரு சாக்கடைக்குள் நுழைந்துக்கொள்ள கூடாது சில மத ஏஜண்ட்களுக்கு கூழும் ,கூலியும் கிடைப்பதால் அறியா மக்களின் வாழ்க்கையை அடகு வைக்க முயல்கிறார்கள் .பெரும்பான்மை சமூகத்தை தீண்டாமை என்று மதம் மாற்றி விட்டு பிறகு ஒடுக்கப்பட்டவர்கள் ,சிறுபான்மையினர்
என்ற லேபிளிலும் அனுதாபத்தையும் சலுகைகளையும் பெற்று கொள்வது அறிவுடமையா? ஒரு பெரும்பான்மை சமூகம் தான் மத மாற்றம் என்ற பெயரில் சிறுபான்மையாக சுருங்கி வீழ்கிறது .மத மாற்றம் என்பது ஒரு மலிவான அதேவேளை சூழ்ச்சியான அரசியல் . பகுத்தறிவு சமநீதி ,சமூக நீதி என்று பேசிக்கொண்டு மத மாற்றத்தை ஊக்குவிப்பது ஆபத்தானதாகும்
சமூகமும் சிந்தனையும் திருத்தப்பட வேண்டும் .
சாதிக் சமத்
கருத்து திருத்தமும் மாற்றமும் ஏக்கமும் ஏமாற்றமும் இவற்றிற்கான அறியாமையும் அறிவும் கட்டாயமும் விலையும் செலவும் வேறுபடும் மாறுபடும் மனம் அமைதியில்லாமல் ஊசலாடும்.
ஏ. ஆர். ரஹ்மான், யுவன் சங்கர் என பல படிகளில் அந்த மதத்தை ஏற்றவர்கள் உண்டு.
பௌதம் சமணம் ஆசீவகம் போன்ற மதங்கள் தொடர் நெருக்கடிகளல் பலவீனம் அடைந்தது.
அந்நிய படை எடுப்புகளின் பொழுது வைதீக மேலாண்மை அவர்களுக்கு ஊழியம் செய்தது. விசுவாசமா இருந்து தம் சாதி பங்கை பெற்றது. இன்றும் அது காங் பாஜக திமுக ஆதிமுக என மிக சாதுர்யமாக தம்மை தொடர் வலிய பெருமையாக உற்சிதப்படுத்தி வருகிறது.
இந்த போட்டியில் வேட்டை ஆடும் மிருகங்களிடம் இருந்து தப்ப வேறு ஒரு மதம் தேவைபடுகிறது.
இந்து மதத்தில் இருந்து தப்ப நமது நாட்டில் கிருஸ்துவ இஸ்லாமிய மாதங்களே பலருக்கு உள்ளது.
இந்த மதத்தில் உழைப்பு ஆற்றல் வாய்ப்பு சுரண்டல் என அங்கு கறை ஒதிங்கினால் அதுவும் பல தலைவலியாக உள்ளது.
சமய சமூக சீர்திரத்தமும் நுகர்வு பலவீனங்களால் ஊழலுக்கு பலி ஆகிறது.
எந்த அடையாளமும் இல்லாது யார் கண்ணிலும் படாமல் இந்த கருத்து எதிர்வாதம் என சிக்கலில்லாமல் தப்பிப்பது ஒருவகை கலையே. வழி?