திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள்-திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள் - வேத தர்ம சாஸ்திரங்களே
1. ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் - குறள் 56:10 கொடுங்கோன்மை
2. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். மணக்குடவர் உரை: பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது.
3. விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரொடு ஏனையவர் - குறள் 410 கல்லாமை அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.
4. நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - குறள் 373 ஊழ் ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
5. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3 தூது அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும்.
6. பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 727 அவையஞ்சாமை கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம்.
7. உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின் அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 743 அரண் உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
8. நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 783 நட்பு பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும்.
9. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 683 தூது அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும். 10. ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் தெற்று என்க மன்னவன் கண் குறள் 581 ஒற்றாடல் ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும். மணக்குடவர் உரை: ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக. அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது.
11.மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் யா உள முன் நிற்பவை - குறள் 636 அமைச்சு இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன. மணக்குடவர் உரை: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது. 12. வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 726 அவையஞ்சாமை நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?. 13. அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய நூல் இன்றி கோட்டி கொளல் குறள் எண்:401 கல்லாமை அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது. 14.மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 மருந்து மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும். 15.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து எபால் நூலோர்க்கும் துணிவு - குறள் 533 பொச்சாவாமை மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும். வள்ளுவர் கால பண்டை தமிழகத்தில் சட்டமும் நீதியும் C.M.கணபதி (மார்கிசிஸ்டு)
மார்க்சீய அறிஞர் கணபதி அவர்கள் தொல்லியல் அடிப்படையில் - கல்வேட்டுகள், செப்பேடுகள் இத்தோடு சங்க இலக்கியம் - இரட்டை காப்பியம் என தொடர்பு படுத்தி - தமிழக மன்னர்கள் பயன்படுத்திய நீதி - சட்ட நூல் வழிகாட்டிகள் மனுஸ்மிருதி போன்ற வடமொழி நூல்கள் தான் எனத் தெளிவாய் காட்டியுள்ளாரே
வேத தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பவை 543,560, 21, 28, 134, 183, 322,37 & 46 அரசியல் நூல்களை 636, 693, 743, 581, 727 பொதுவாக நூல்களை 533, 401, 726, 783, 373 மருத்துவம் சம்பந்தமானவை 941..
திருக்குறள் இருக்கும் முதலில் எழுதப்பட்ட மிகவும் பழமையான உரை மணக்குடவர் உரை (10நூற்றாண், சமணரான மணக்குடவர் திருக்குறளை வேத தர்ம சாஸ்திர ஞானமரபில் வந்ததாகத்தான் பொருள் செய்துள்ளார். வள்ளுவர் பல்வேறு திருக்குறளில் முந்து நூல்களை சுட்டிக் காட்டுகிறார்.
பார்ப்பனன் ஒருவன் தன் மனைவி செய்த பிழைக்கு பாவ நிவர்த்தி என வடமொழியில் கொடுத்த வாசகத்தைப் படித்து தர்ம சாஸ்திரபடி தானங்கள் செய்ய கோவலன் உதவியது உள்ளது. வள்ளுவரும் இதைத் தெளிவாக உரைப்பார் புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும். குறள் 183: புறங்கூறாமை அறநூல்எனும்தமிழ்சொல்வடமொழியின்தர்மசாஸ்திரங்களைக்குறிக்கும், இவற்றைஅந்தணர்கள்எழுதியவை. அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும் பிறன் போல நோக்கப்படும் - குறள் 105:7
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள் 101:9 அறனறிந்துவெஃகாஅறிவுடையார்ச்சேரும் திறன்அறிந் தாங்கே திரு. குறள் 179: வெஃகாமை மணக்குடவர் உரை:அறத்தை யறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தானே தகுதியறிந்து அப்போதே சேரும், அறனறிதல்- விரும்பாமை யென்றறிதல். இது செல்வமுண்டாமென்றது. அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள் 45:1 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின் அருளாதான் செய்யும் அறம். குறள் 249: அருளுடைமை. மணக்குடவர் உரை:தெளிவில்லாதான் மெய்ப்பொருளைத் தெளிந்தாற்போலும்: ஆராயின்அருளில்லாதான் செய்யும் அறமும். இஃது அறஞ் செய்யவும் மாட்டாரென்றது. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். குறள் 91: இனியவைகூறல். மணக்குடவர்உரை:ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ? சாலமன்பாப்பையாஉரை:அறம் அறிந்தவர் வாயிலிருந்து பிறந்து, அன்பு கலந்து உள்நோக்கம் இல்லாது வருவதே இனிய சொல்.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்க முடையார்வாய்ச் சொல். குறள் 415: கேள்வி. மணக்குடவர் உரை:வழுக்குத லுண்டான விடத்து உதவும் ஊன்றுகோல் போலும்: ஒழுக்கமுடையார் கூறுஞ் சொற்கள். இது கேட்பது ஒழுக்கமுடையார்மாட்டென்பது கூறிற்று. சாலமன் பாப்பையா உரை:கற்று, ஒழுக்கம் மிக்கவரின் வாயிலிருந்து பிறந்த சொற்கள் வழுக்கும் தரையில் ஊன்றுகோல் உதவுவது போல் துன்ப நேரத்தில் உதவும். கறுத்துஇன்னாசெய்தவக்கண்ணும்மறுத்தின்னா செய்யாமைமாசற்றார்கோள். குறள் 312: இன்னாசெய்யாமை மணக்குடவர் உரை:தாஞ்செய்த குற்றத்தினாலே வெகுண்டு, இன்னாதவற்றைத் தமக்குச் செய்தவன்மாட்டும் தாம் அதற்கு மாறாகப் பின்பு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு.
சிறப்பீனும்செல்வம்பெறினும்பிறர்க்குஇன்னா செய்யாமைமாசற்றார்கோள். குறள் 311: இன்னாசெய்யாமை மணக்குடவர் உரை:மிகுதியைத் தருகின்ற செல்வத்தைப் பெறினும் பிறர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை குற்றமற்றார் கோட்பாடு. இது பழி வாராத செல்வம் பெறினும் தவிரவேண்டுமென்றது. வேட்பத்தாஞ்சொல்லிப்பிறர்சொல்பயன்கோடல் மாட்சியின்மாசற்றார்கோள். குறள் 646: சொல்வன்மை மணக்குடவர் உரை:தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு. இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார். குறள் 140: ஒழுக்கமுடைமை. மணக்குடவர்உரை:அறிவிலாதார் பல நூல்களைக் கற்றாலும் உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதலை அறியார். இஃது ஒழுக்கமாவது உயர்ந்தாரொழுகின நெறியில் ஒழுகுதலென்பதூஉம் அவ்வொழுக்கம் கல்வியினும் வலி யுடைத்தென்பதூஉம் கூறிற்று.
உலகம்தழீஇயதொட்பம்மலர்தலும் கூம்பலும்இல்லதறிவு. குறள் 425: அறிவுடைமை மணக்குடவர் உரை:ஒருவனுக்கு ஒள்ளிமையாவது உலகத்தோடு பொருந்தினது: அதனை நீர்ப்பூப்போல மலர்தலுங் குவிதலுமின்றி யொருதன்மையாகச் செலுத்துதல் அறிவு. இஃது உயர்ந்தாரோடு நட்புப் பண்ணுதலும் அறிவென்றது. மு. கருணாநிதி உரை:உயர்ந்தோரே உலகோர் எனப்படுவதால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும். சாலமன் பாப்பையா உரை:உலகை நட்பாக்கிக் கொள்வது அறிவு; நட்பின் ஆரம்பத்தில் பெரிதாக மகிழ்வதும், நாளடைவில் வாடுவதும் இல்லாது. எப்போதும் ஒரே சீராக இருப்பது அறிவு. எவ்வதுறைவதுஉலகம்உலகத்தோடு அவ்வதுறைவதறிவு. குறள் 426: றிவுடைமை மணக்குடவர் உரை: யாதொருவாற்றா லொழுகுவது உலகம். அதனோடு கூடத்தானும் அவ்வாற்றா னொழுகுதல் அறிவாவது. அறிவாவாது எத்தன்மைத்து என்றார்க்கு முற்பட உயர்ந்தாரோடு பொருந்த ஒழுகுதல் அறிவு என்றார்.
அறனறிந்துமூத்தஅறிவுடையார்கேண்மை திறனறிந்துதேர்ந்துகொளல். குறள் 441: பெரியாரைத் துணைக்கோடல். மணக்குடவர் உரை:அறத்தின் பகுதியறிந்து முதிர்ந்த அறிவுடையாரது கேண்மையை அவரவர் செய்தியாகிய திறங்களை யறிந்து ஆராய்ந்து கொள்க. இது புரோகிதரைக் கூட்டுமாறு கூறிற்று. அறம்பொருள்இன்பம்உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்துதேறப்படும். குறள் 501: தெரிந்துதெளிதல். மணக்குடவர் உரை:அறமும் பொருளும் இன்பமும் உயிரச்சமுமென்னும் நான்கின் கூறுபாட்டினையும் ஆராய்ந்து, ஆராய்ந்தபின்பு ஒருவன் அரசனால் தெளியப்படுவான். முன்பு நான்கு பொருளையும் ஆராயவேண்டுமென்றார் பின்பு தேறப்படுமென்றார். மு. வரதராசன் உரை:அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
இருள்நீங்கிஇன்பம்பயக்கும்மருள்நீங்கி மாசறுகாட்சியவர்க்கு. குறள் 352: மெய்யுணர்தல்.மணக்குடவர் உரை: மயக்கத்தினின்று நீங்கிக் குற்றமற்ற அறிவுடையார்க்கு, அறியாமையாகிய விருள் நீங்க முத்தியாகிய இன்ப முண்டாம். இது மெய்யுணர்ந்தார்க்கு வினைவிட்டு முத்தியின்ப முண்டா மென்றது. சாலமன் பாப்பையா உரை:மயக்கத்திலிருந்து விலகிக் குற்றமற்ற மெய்யை உணரும் நிலையை அடைந்தவர்க்கு, அந்நிலை துன்ப இருளை விலக்கும்; இன்ப நிலையைக் கொடுக்கும். ஐயத்தின்நீங்கித்தெளிந்தார்க்குவையத்தின் வானம்நணியதுடைத்து. குறள் 353: மணக்குடவர் உரை:மெய்ப்பொருளை ஐயப்படுதலினின்று நீங்கித் துணிந்தவர்க்கு இவ்வுலகத்தினும் மேலுலகம் நணித்தாம் தன்மையுடத்து. துணிந்த அறிவின்கண்ணது எல்லாவுலகுமாதலின் அவ்வறிவுடையார்க்கு உலகம் ஒருங்குதோற்றுதலின் நணித்தாமென்றவாறு. இது மெய்யுணர்வு எவ்விடமும் அறியுமென்றது. மு. வரதராசன் உரை:ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகை விட அடைய வேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும். ஐயுணர்வுஎய்தியக்கண்ணும்பயமின்றே மெய்யுணர்வுஇல்லாதவர்க்கு. குறள் 354: மணக்குடவர் உரை:மெய் முதலாகிய பொறிகளைந்தினானும் அறியப் படுவனவெல்லாம் அறிந்தவிடத்தும், அதனான் ஒருபயனுண்டாகாது; உண்மையை யறியும் அறிவிலாதார்க்கு. மு. கருணாநிதி உரை:உண்மையைக் கண்டறிந்து தெளிவடையாதவர்கள், தமது ஐம்புலன்களையும் அடக்கி வெற்றி கண்டிருந்தாலும் கூட அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. சாலமன் பாப்பையா உரை:மனம் அடங்கக் கற்றவர் என்றாலும், உண்மையை உணரும் உணர்வு இல்லாதவர்க்கு ஒரு பயனும் இல்லை. பரிமேலழகர் உரை:ஐயுணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே - சொல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டான் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டுத் தம் வயத்ததாய வழியும், அதனால் பயனில்லையேயாம், மெய்யுணர்வு இல்லாதவர்க்கு - மெய்யினையுணர்தல் இல்லாதார்க்கு. (ஐந்தாகிய உணர்வு : மனம் , அஃது எய்துதலாவது, மடங்கி ஒரு தலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல். அங்ஙனம் நின்ற வழியும் வீடு பயவாமையின் 'பயம் இன்று' என்றார். சிறப்பு உம்மை எய்துதற்கு அருமை விளக்கி நின்றது. இவை இரண்டு பாட்டானும் மெய்யுணர்வு உடையார்க்கே வீடு உளது என மெய் உணர்வின் சிறப்புக் கூறப்பட்டது.).
திருக்குறளிற்கு பொருள் காணும் முறை 1.திருவள்ளூவர் தன் முதல் அதிகாரம் முதல் கடைசி அதிகாரம் வரும் சொல்லும் அனைத்தின்அடிப்படையை கசடு இன்றி கற்று உணர வேண்டும். 2.திருவள்ளுவரின் உள்ளக் கிடக்கினை உணர வேண்டும். 3.அதிகாரத் தலைப்பை ஒட்டி வள்ளுவரின் உள்ளத்தை உணர வேண்டும். 4.வள்ளுவத்தின் அடிப்படையான மெய்பொருள் கண்டு மீண்டும் பிறவா நிலை அடையும் வழியை முழுமையாய் மனதார ஏற்று பொருள் காண வேண்டும் 5.கல்வி கற்பதே இறைவனின் திருவடி பற்றவே, அறிவு என்பதே மீண்டும் மீண்டும் பிறக்கும் அறியாமை எனும் பேதைமையை விலக்கிட இறை எனும் செம்பொருளும், உலகின் உச்சமான பிறப்பற்ற வீட்டையும் அடைய முயல்வதே, கசடு இன்றி கற்று மெய்யறிவு- மீண்டும் பிறவாதிருக்கும் நெறியை அடையவே 6. சங்க இலக்கியங்கள்- பத்துப்பாட்டு &எட்டுத் தொகை நூல்கள், அதன் பின்பு எழுந்த தொல்காப்பியம் அடுத்து திருக்குறள் இயற்றப்பட்டது, இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் குறளிற்கு பின்பானது. வள்ளுவர் காலத்திற்கு முந்தைய நூல்களில் உள்ள சொல்லை அதே பொருளில் மட்டுமே வள்ளுவர் கையாண்டு இருப்பார், வேறு மாற்று பொருளில் எழுதுவது இலக்கிய- இலக்கண மரபு அன்று.
7.வள்ளுவரின் நடை அமைவு -மரபு இவற்றை மேல் சொன்னவையோடு ஒத்து அமைக்க வேண்டும்.
8.திருவள்ளுவர் காலத்தில் பயனில் இருந்த பொருள் உணர்ந்து பயன்படுத்த வேண்டும். அவர் காலத்திற்குப் பின்பு வேறு பொருள் மாறியிருந்தால் அதைப் பயன்படுத்தல் தவறு.
9.மேற்கத்திய சுய-நல நுகர்ச்சி தன்மை நம்பிக்கைகளையோ, நீங்கள் முற்போக்கு என நம்புவபற்றை மற்றும் 20ம் நூற்றாண்டின் அறிவியல் அடிப்படை 1200 வருடம் முன்பான வள்ளுவரின் மீது திணிக்கக் கூடாது.
நாம் எளிமையாக முதல் அதிகாரத்தில் உள்ள "முதல்" சொல்லை எப்படி எல்லாம் வள்ளுவர் பயன்படுத்தி உள்ளார் எனப் பார்ப்போம்
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு - குறள் 1 கடவுள் வாழ்த்து நாம் முதல் குறளில் வரும் முதல என்பதை தொடக்கம், இந்த உலகம் இறைவனிடம் இருந்து தொடங்கியது, பிரம்மம் எனும் இறைமை இவ்வுலகைப் படைத்தார் வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை வியாபாரத்தில் போடும் மூலதனம் என பயன்படுத்தி உள்ளார். முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம் சார்பு இலார்க்கு இல்லை நிலை - குறள் 449 பெரியாரைத் துணைக்கோடல் ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை ஊக்கார் அறிவுடையார் - குறள் 463 தெரிந்துசெயல்வகை
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை. நோய் வரும் காரணம் என்ன எனும் பொருளில் பயன்படுத்தி உள்ளார். நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 948 மருந்து
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-கொடியில் அடியிலே என செடியின் தொடக்கம் எனும் பொருளில் ஊடியவரை உணராமை வாடிய வள்ளி முதல் அரிந்து அற்று - குறள் 1304 புலவி
வள்ளூவர் முதல் என்ற இதே சொல்லை-முதலான எண்ணப்பட்ட மூன்றும் எனும் பொருளில் மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 - மருந்து
திருக்குறள் இயற்றி ஒரு நூறு ஆண்டிற்குள் எழுந்த உரை தமிழ் சமணர் மணக்குடவர் உரை, அதை தொடந்து மேலும் பல உரைகள். ஆனால் 19ம் நூற்றாண்டிற்குபின் காலனி ஆதிக்க நச்சு பொய்களின் அடிமையாக தமிழ் மெய்யியலை ஏற்காத கயமை புலவர் உரைகள் எல்லாம் மறையக் காரணம் வள்ளுவம் சொல்வதை சிறுமைப் படுத்தலே
திருவள்ளுவர் செய்த முன்னுரை பாயிரத்தின் நீத்தார் பெருமை அதிகாரம் என்பது தவ முனிவர்கள் பெருமை கூறுவது, அதில்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை. சீரிய ஒழுக்கத்தில் நின்று துறந்த தவ முனிவர்களது பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் துணிவாக சொல்கின்றன.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். குறள் 28: நீத்தார் பெருமை. நிறைந்த ஞானம் அடைந்த தவமுனிவர்கள் பெருமையை அவர்கள் இவ்வுலகில் சொன்ன எழுதாக் கற்பு எனும் மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.
மேலுள்ள குறட்பாக்கள் பல ஆயிரம் ஆண்டு தொடர்ச்சி உள்ள ஞானமரபை ஏற்று போற்றி அவ்வழியிலே திருக்குறள் தந்துள்ளார் என்பது தெளிவாகும்.
திருவள்ளுவர் முன்னோர் நூல்களை பல்வேறு பெயர்களால் சுட்டி உள்ளார், நூல் என்ற பெயரில் மட்டுமே 18 முறை கூறி உள்ளார், அதில் குறள் 1273ல் உள்ளது மட்டுமே மணி கோர்க்கும் நூல் என்ற பொருளில் உள்ளது
மேலும் பல பெயர்கள் மற்றும் இலக்கிய உத்தி மூலமாக திருவள்ளுவர் தன்க்கு முன்பான மெய்யியல் ஞானமரபு நூல்களை குறிப்பிடுவதைக் காண்போம்.
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து எபால் நூலோர்க்கும் துணிவு - குறள் 533 பொச்சாவாமை மறதியால் உடையவர்களுக்கு புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிபாகும்.
நாம் நூல் எனக் குறிப்பிட்டே குறள் கூறியதைப் பார்த்தோம், தற்போது பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல். பிறனில் விழையாமை. குறள் 141: பிறன் மனைவியிடத்து விருப்பம் கொள்ளும் அறியாமை, உலகில் அற வழி நூல்களையும் பொருள் நூல்களையும் ஆராய்ந்து உணர்ந்தவர்களிடம் இருப்பது இல்லை.
மேலுள்ள குறளில் அறம் என நீதி நூல்களையும் பொருள் என பொருள் நூல்களையும் கூறி உள்ளார்.