மூன்று நேரங்களில் தொழவோ, இறந்தவர்களை அடக்கம் செய்யவோ வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்து வந்தார்கள்.
1. சூரியன் உதயமாகத் துவங்கியதிலிருந்து நன்கு உயரும் வரை.
2. நண்பகல் துவங்கியதிலிருந்து சூரியன் சாயும் வரை.
3. சூரியன் அஸ்தமிக்கத் துவங்கியதிலிருந்து நன்கு மறையும் வரை.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் அல்ஜுஹ்னீ (ரலி) நூல்: முஸ்லிம் 1373
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தொழுகையைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள்!'' என்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "சுப்ஹுத் தொழுகையைத் தொழுங்கள். பிறகு சூரியன் உதயமாகி உயரும்வரை தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. ∆∆அப்போது தான் அதற்கு இறைமறுப்பாளர்கள் சிரம் பணிகின்றனர். அதன் பிறகு தொழுங்கள்! அந்த நேரத்தில் தொழும் தொழுகை (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படக் கூடியதும் (வானவர்கள்) வருகை தரக்கூடியதுமாகும். அப்போது முதல் ஈட்டியின் நிழல் கிழக்கிலோ, மேற்கிலோ சாயாமல் அதன்மீதே விழும் வரை (நண்பகல் வரை) தொழுங்கள்! பிறகு தொழுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், அப்போது நரகம் எரிக்கப்படுகிறது. பிறகு நிழல் (கிழக்கே) சாய்ந்துவிட்டால் தொழுங்கள். அந்நேரத் தொழுகைக்கு (வானவர்களால்) சாட்சியமளிக்கப்படுகிறது. அவர்கள் அதில் பங்கேற்கின்றனர். பிறகு அஸ்ர் வரை தொழுங்கள். பிறகு சூரியன் மறையும் வரை தொழுவதை நிறுத்திவிடுங்கள்! ஏனெனில், அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான் மறைகிறது. இந்த நேரத்தில் அதற்கு இறை மறுப்பாளர்கள் சிரம் பணிகின்றனர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அம்ர் பின் அபசா (ரலி)
நூல் : முஸ்லிம் 1512
காரணம் புரிந்ததா?
சூரியன் உதயமாகும் போது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதயமாகிறது. அதனால்தான் முஹஸல் தொழ வேண்டாம் என்கிறார் .
அதேப்போல் சூரியன்
ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே தான் மறைகிறது. அதனால் தொழவேண்டாம் என்கிறார்
//அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களை
" குருடர்களாகவும்,"
" ஊமைகளாகவும், "
"செவிடர்களாகவும் "
"தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்;"
இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.
(அல்குர்ஆன் : 17:97)
காஃபீர்கள் மறுமையில் பார்வை பேச்சு செவி திறன் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன ? ஏன் முஹம்மதே இப்படி உளரிவைக்கிறீர்?
இதற்கு முன்பு நீர் உளரியதை பாரும்
//“எவன் என்னுடைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க்கையே இருக்கும்; மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாவே எழுப்புவோம்” என்று கூறினான்.
(அல்குர்ஆன் : 20:124)//
இங்கே குருடன் என்று மட்டும் கூறியுள்ளீர் அப்படி என்றால் பேச்சு, கேட்கும் திறனுக்கு பாதிப்பில்லை இதோடு விட்டீரா இன்னொரு முறை வேறொரு விதமாக உளரியுள்ளீர்
(அப்போது அவன்) “என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்?” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 20:125)
(அதற்கு இறைவன்,) “இவ்விதம்தான் இருக்கும்; நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன; அவற்றை நீ மறந்துவிட்டாய்; அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய்” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 20:126)
இங்கே பேச்சு திறன் கேட்கும் திறன் உண்டு என்கிறீர் அடுத்த உமது உளரலை பாரும்
//இன்னும் (பட்டோலையாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், “எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள்செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.
(அல்குர்ஆன் : 18:49)
இன்னும், குற்றவாளிகள்: (நரக) நெருப்பைப் பார்ப்பார்கள்; தாங்கள் அதில் விழப்போகிறவர்கள் என்பதைத் தெரிந்து கொள்வார்கள்; அதிலிருந்து தப்ப மாற்றிடம் எதையும் காண மாட்டார்கள்.
(அல்குர்ஆன் : 18:53)
மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், “எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை; நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்” என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).