New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதமாற்றம் தேசிய பேரபாயம் -வைரவேல் சுப்பையா


Guru

Status: Offline
Posts: 24590
Date:
மதமாற்றம் தேசிய பேரபாயம் -வைரவேல் சுப்பையா
Permalink  
 


மதமாற்றம் தேசிய பேரபாயம் 1
---- ------ ------- -------- --
மதமாற்றத்தை தடுக்க சட்டம் மட்டும் போதாது.
அதேவேளையில் இந்த விஷயத்தில் போர் குணமும் ஆகாது.
ஏனெனில் இந்து தர்மம் காக்க நாம் மதமாற்ற கும்பல்களிடம் காட்டும் ஆவேசத்தையும், செய்யும் விவாதங்களுக்கும் உள்நோக்கம் கற்பித்து நொடியில் நம்மை மதவெறிபிடித்த மிருகங்களாக சித்தரிக்க
இந்து விரோத சிந்தனைகளை விதைப்பதை முழு நேர வேலையாக கொண்டு செயல்படும் மத மாற்ற கும்பல்களின் நேரடி மற்றும் மறைமுக ஆதரவு ஊடகங்களும்,
அவர்களிடம் பண பிச்சை பெற்று நாகரீக பிழைப்பு நடத்தும் மதச்சார்பற்ற முகமூடி அணிந்த பல சமூக ஆர்வலர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களும்,
அவர்களிடம் நிதி பெற்று போலி மதச்சார்பின்மை பேசி ஓட்டு பிச்சை எடுக்கும் அரசியல் கூட்டங்களும் தயாராக உள்ளது.
இங்கே அவசரமும் ஆக்ரோஷமும் தேவையில்லை.
மாறாக இங்கே தேவையான விஷயம் என்னவென்றால்
"மாபெரும் புரிதலுடன் கூடிய சிந்தனை மாற்றம்"
இங்கே மதமாற்ற கும்பல்களின் ஆட்டம் அதிகமாக இருக்க முக்கிய காரணம்
* அபரிமிதமான பண பலம்
* சலுகையாக வழங்கப்பட்ட நிலம்
* வலுவான கல்வி நிறுவன கட்டமைப்பு, அங்கே வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல மதத்தை திணிக்கும் நடைமுறைகள்
* திட்டமிட்டு செயல்படும் பல தரப்பட்ட குழுக்கள்
* இந்து மத புராணங்களை தவறாக சித்தரித்து திரிக்கப்படும், திணிக்கப்படும் வரலாறு
* இந்திய வரலாற்றை தங்களது மதத்திற்கு ஏற்றபடி கற்பனை கதைகளை புனைந்து செய்யப்பட்டு வரும் பிரச்சாரம்
* இந்திய அரசியல் சட்டம் தரும் மத சுதந்திரம் பற்றிய புரிதல்
* மதமாற்றத்தை தடுக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தொடர்ந்து முடக்க 24 மணி நேரமும் செயல்படும் குற்றவியல் சட்டநிபுணர்கள் குழு
* எந்த நேரமும் இவர்களுக்கு ஆதரவாக கொடி பிடித்து கோஷம் போட தயாராக இருக்கும் போலி மதச்சார்பின்மை பேசும் அரசியல்வாதிகள்
* இந்துக்களிடையே வலுவாக இருக்கும் ஜாதி பிரிவினை
* இந்துக்களுக்கு அரசியல் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம் பற்றி அறிவோ, விழிப்புணர்வோ இல்லாமல் பார்த்து கொண்ட சமூக கட்டமைப்பு
* வலுவாக இருக்கும் இந்து மத குருக்கள், சாமியார்கள் குறித்து தொடர்ந்து பரப்பபடும் பொய் பிரச்சாரம்
* நான் இந்து என்று சொல்லி கொள்ள வெட்கபடும் அளவிற்கு அவர்கள் சொல்லும் கற்பனை குற்றச்சாட்டுகள்
* இயல்பான வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் அதனால் ஏற்படும் மன நெருக்கடிகளுக்கும் காரணமாக மதத்தை, நம்பிக்கைகளை தொடர்பு படுத்தி குற்றம் சாட்டுவது.
* குழுவாக இணைந்து கிறித்தவத்தால் மேம்பட்ட நிலையை அடைந்ததாக கட்டமைக்கப்படும் பிம்பம், நாடகம். அந்த நாடகத்தை நமக்கு தெரிந்தவர்களை வைத்தே அரங்கேற்றம் செய்து அப்பாவிகளை நம்ப செய்வது.
* மேலும் மேலும் இவர்கள் தங்களை வலுப்படுத்தி கொள்ள அனைவரிடமும் வசூலிக்கும் தசமபாகம்
* எந்த கணக்குகளையும் வரவு செலவுகளையும் கேட்டு பெற வகையில்லாத கூறு கெட்டவர்கள் வடிவமைத்த சட்டம்
* இவர்கள் அத்துமீறி நடக்க முக்கிய காரணம்,
இந்த கூட்டம் செயலில் காட்டும்
மத தலைமைக்கு கட்டுபட்டு, சுய சிந்தனையுடன், எதையும் சீர் தூக்கி பார்த்து
சுய விருப்பு வெறுப்புடன் செயல்பட முடியாத சுதந்திரம் அற்ற,
தொடர் மூளை சலவையின் மூலமாக ஆக்கிரமிக்கப்பட்ட, நம்பிக்கைகள் என்ற பெயரில் திணிக்கப்பட்ட விஷயங்களை தவிர
வேறெதுவையும் சிந்திக்க விடாத தொடர் பிரச்சார ஒருங்கிணைப்பு
* இவர்களது ஒற்றுமையை பயன்படுத்தி தவறான, திணிக்கப்பட்ட முடிவுகளை உருவாக்க கூடிய வல்லமையை காட்டி நடத்தபடும் ஆதாய அரசியல்
* ஓட்டுக்களை காட்டி அரசியல்வாதிகளை சாதகமாக வால் ஆட்ட செய்யும் தந்திரம்
* அவங்க நல்லவங்கன்னு நம்மவர்களையே வைத்து நமக்கு எதிராக கம்பு சுத்த உருவாக்கப்பட்ட மூளையில்லாத நடுநிலை கூட்டம், நமக்கும் இந்த நடுநிலை கூட்டத்தை சமாளிப்பதே வேலையாக்கப்படுகிறது.
* இந்துக்களை சிறுபான்மையினராக மாற்றும் நோக்கோடு மறைமுகமாக ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நிற்கும் ஆபிரஹாமிய மதங்கள்
* இந்து மதம் சொல்லிய அறநெறிகளை மறந்து, சிற்றின்பத்தில் மூழ்கி, விதண்டாவாதம் பேசி தறிகெட்டு திரியும் சுயநல இந்துக்கள்
* தங்களது பணிகளின் எல்லையை சுருக்கி கொண்ட இந்துமத குருக்கள்
* அதர்மம் எல்லை மீறி நடக்கிறது என்பதை அறிந்தும் பாராமுகம் காட்டி,
ஒற்றுமையை மேம்படுத்த முயற்சிக்காத
இந்து தர்மம் அறிந்த மடபயலுக கூட்டம்
.
மதமாற்றம் இப்போது நடைமுறையில் உள்ள மிக உயரிய வியாபாரம்.
மதமாற்ற கும்பல்கள் உங்களை நீங்களே அறியாத வண்ணம் விழுங்க துடிக்கும் அரக்க சிந்தனை உள்ள கூட்டம்
இந்த சதிகார கூட்டங்களை வீழ்த்த முக்கிய தேவை என்ன?
"இந்து தர்மம் பற்றிய ஓர் அடிப்படை சிந்தனை மாற்றம்"
'குறைந்த பட்ச இந்து தர்மங்களை விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ள வலுவான அமைப்பு'
'ஜாதிகளை கடந்த இந்து ஒற்றுமை குறித்த விழிப்புணர்வு'
"இதைப்பற்றி நிறைய, நிறைய விவாதங்கள் நடத்தப்பட வேண்டும், இதை முன்னெடுக்க பண பலம் உள்ள
வலுவான தெளிவான சிந்தனை உடைய இந்து தர்ம கட்டமைப்பு வகுக்கப்பட வேண்டும்."
"சுயநலம் இல்லாத அற சிந்தனை கொண்ட இந்து மத வல்லுநர்கள் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டு புதிய சிந்தனைகளை வகுத்து செயல் வடிவம் தர வேண்டும்."
இன்னும் எழுதுவோம்.
வைரவேல் சுப்பையா


__________________


Guru

Status: Offline
Posts: 24590
Date:
RE: மதமாற்றம் தேசிய பேரபாயம் -வைரவேல் சுப்பையா
Permalink  
 


மதமாற்றம் தேசிய பேரபாயம் 2
ஓட்டு ஆயுதம்:
'திமுக ஆட்சியில் இருப்பது நாங்கள் போட்ட பிச்சை' என்று பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசியதை தவறுதலகவோ அல்லது கோபத்திலோ பேசிவிட்டதாகவோ எண்ண வேண்டாம்.
அவர் தெரிந்தே தான் பேசியிருக்கிறார். ஏனெனில் அவர்களின் பலம் அவருக்கு தெரியும். அதேவேளையில் கும்பல் ஓட்டுக்களுக்கு திராவிட கட்சிகள் தரும் மரியாதையும் 'நன்றாக' புரியும்.
நன்றாக யோசித்து பாருங்கள் ஜார்ஜ் பொன்னையா உதிர்த்த வார்த்தைகளை வேறு யாராவது பேசி இருந்தால், திமுக தரப்பின் பதிலடி என்னவாக இருக்கும்?. அல்லது இவ்வாறு பேச வேறு யாருக்கேனும் தைரியம் வந்து விடுமோ? அல்லது பேசி விட்டு சுதந்திரமாக இருந்திடதான் முடியுமா?
2019 ல் நடந்த பாராளுமன்ற பொதுதேர்தலின் போது அனைத்து சிறுபான்மை சபைகளும், ஜமாஅத் களும் அரசியல் பேசின. இதை உங்களில் யாராவது மறுக்க முடியுமா?. அந்த விஷயங்கள் அப்போதே சர்ச்சையை கிளப்பியது. ஆனால் விளைவுகள், பாஜக அதிமுக கூட்டணி படு தோல்வி.
காரணம் ஒரு பக்கமாக சாய்ந்த சிறுபான்மை மக்களின் ஓட்டுக்கள்.
இங்கே சபைகள் மற்றும் ஜமாஅத்கள் யாரும் சுதந்திர சிந்தனை உடன் வாக்களிக்க அனுமதிப்பது இல்லை. இறை சிந்தனைகளை தாண்டி அவர்கள் அங்கே அரசியலும் பேசி திணிக்கின்றனர். இவர்களின் தலைமையை மீறி வாக்களிக்க முன்வருவோரின் சதவீதம் என்பது அதிகபட்சம் ஐந்து சதவீதம்.
இதன் உண்மை தன்மை அறிய நீங்கள் எந்த கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்களிடமும் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
அரவக்குறிச்சியில் வெற்றியின் விளிம்பில் இருந்த அண்ணாமலை பள்ளபட்டி பகுதி வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு 15000 வாக்குகள் பின்தங்கிய காரணம் உங்களுக்கு புரிகிறது தானே?
திமுகவோ அல்லது அதிமுகவோ சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்று விட்டார்கள் என்றால்,
உதாரணமாக,
ஐம்பதாயிரம் மொத்த ஓட்டுகள் இருக்கும் ஒரு தொகுதியில் சிறுபான்மை மக்களின் மொத்த ஓட்டு பத்தாயிரம் என்று வைத்து கொள்ளுங்கள்.
சிறுபான்மை மக்களின் ஆதரவை பெற்ற திமுக
விடுதல், வெளியூரில் வசிப்பவர்கள், வயது முதிர்ச்சியால் ஓட்டு போட முடியாதோர் தவிர்த்து (சிறுபான்மை ஓட்டுகளில்)
மிகவும் சாதாரணமாக 8000 வாக்குகள் உறுதி என்ற நிலையில், அவர்கள் 8001 ல் இருந்து பெற வேண்டிய வாக்குகளுக்காக மட்டும் வேலை பார்த்தால் போதும்.
ஆனால் இந்த தொகுதியில் ஓட்டுக்களை பெற
பாஜக, பத்தாயிரம் ஓட்டுகள் நமக்கு விழ வாய்ப்பு இல்லை என்ற முடிவோடு மீதமுள்ள நாற்பதாயிரம் ஓட்டுகளில் ஒன்றாம் ஓட்டிலிருந்து கணக்கை ஆரம்பித்து பிரச்சாரம் செய்ய வேண்டும்.
எவ்வளவு கடினமான துயரமான விஷயம் என்று எண்ணி பாருங்கள்.
இது எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த கூடிய விஷயம் என்று எண்ணி பாருங்கள்.
ஆனால் இதுபற்றிய விழிப்புணர்வு இல்லாத இந்துக்கள் 25 சதவீதம் பேர்
* ஓட்டு பதிவு நாளை விடுமுறை தினமாகவே பார்க்கின்றனர்.
* சோம்பேறிதனத்தால் ஓட்டு போட வராதோர் ஏராளம்
* பணம் பெற்று வாக்களிப்போரும் ஏராளம்
* சமீப காலமாக நடந்த தேர்தல்களில் 60 சதவீதம் பேருக்கு பட்டுவாடா என்ற கணக்கில் பண பரிமாற்றம் நிகழ்ந்ததாக சில ஏஜென்சிகளின் தகவல்கள் சுட்டி காட்டின.
நேற்று வரை நமது உறவினராக இருந்து மதமாறிய ஒருவர் சில நாட்களிலேயே பாஜகவிற்கு எதிர் நிலைப்பாடு எடுப்பதை கண்ணால் காணலாம்.
இவர்களது செயல், சிந்தனை, பேச்சு அனைத்திலும் இவர்கள் சார்ந்திருக்கும் சபை திணித்த இந்து வெறுப்பு இழையோடும்.
சிறுபான்மை மக்களிலும் சில விதிவிலக்கான மக்கள் இருக்கின்றனர். அவர்கள் நல்லது கெட்டதை ஆராய்ந்து நியாயமான சுதந்திர சிந்தனையுடன் செயல்படுபவர்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை சதவீதம் மிகவும் குறைவு.
இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டிய உலகளாவிய அரசியல் ஏராளமாக உள்ளது.
உலக அரசியலின் மையப்புள்ளி மதம் தான்.
அந்த விளையாட்டின் முடிவுகளை பல நேரம் பணமும், படை பலமும் தீர்மானிக்கிறது.
சில நேரங்களில் அறிவார்ந்த வியூகங்கள் வெற்றி பெறுகிறது.
ஆனாலும் ஞாபகம் கொள்ளுங்கள்,
வெற்றி பெற எண்ணிக்கை மட்டுமே காரணம் இல்லை, அது யுத்தத்திலும் சரி அரசியலிலும் சரி.
இன்னும் பேசுவோம்.
வைரவேல் சுப்பையா


__________________


Guru

Status: Offline
Posts: 24590
Date:
Permalink  
 

மதமாற்றம் தேசிய பேரபாயம்3
கிறித்தவர்கள் இந்துக்களை மதமாற்றம் செய்ய பயன்படுத்தும் முக்கிய ஆயுதங்கள் வறுமை, ஜாதி கொடுமை.
இந்துக்களிடையே ஒற்றுமையும், வாழ்வியல் தத்துவம் குறித்த புரிதலும், விழிப்புணர்வும் இல்லை.
இந்த விழிப்புணர்வை தர தவறிய ஆன்மீக குருமார்கள், ஆதீனங்கள், ஆச்சாரியர்கள் என அனேவரும் காரணம்.
ஆனாலும் அவர்களை சொல்லியும் குற்றம் இல்லை. நீண்ட கால இஸ்லாமிய, கிறித்தவ அடிமைத்தனம்.
மக்களாட்சி மலர்ந்த பிறகு மொழி வெறி, இன வெறி அரசியலை தூண்டி
பகுத்தறிவு, நாத்திகம் என்ற பெயரில்
இறை வழிபாடை கைங்கர்யமாக செய்யும் ஒரு ஜாதியை மட்டும் குறிவைத்து ஒரு கூட்டம் செய்த ஆர்ப்பாட்ட அரசியல்.
பகுத்தறிவு என்ற பெயரில் பாதி அறிவுடன்
மாற்று மதங்களிடம் நல்லுறவு பேணுகிறோம் என்ற பெயரில் ஓட்டு அரசியலுக்காக மதமாற்ற கும்பல்களின் அடிமைகளாக மாறிய திராவிட கும்பல்கள் காலத்தில் தான் மதமாற்றம் அதிகமாக ஊக்குவிக்கப்பட்டது.
மக்களிடையே நிலவிய வறுமை மற்றும் ஜாதி பிரிவினைகளையே ஆயுதம் ஆக்கி மதமாற்ற கும்பல்கள் வெளிநாடுகளில் இருந்து பெற்று வரும் பெரும் செல்வத்தின் துணை கொண்டு முழுவீச்சில் செயல்பட்டனர்.
இவர்களுக்கு பாதை வகுத்து தரும் மிஷனரிகள் இந்தியாவினை புவியியல்ரீதியாக, சமூக நிலை மற்றும் ஜாதி ரீதியாக அலசி ஆராய்ந்து தெளிவாக திட்டமிட்டு பல்லாயிரம் பேரை நடிக்க பயிற்றுவித்து சம்பளம் கொடுத்து மதமாற்றத்தில் ஈடுபட களமிறக்கினர்.
அவர்களது வேலை பகுதி வாரியாக வறுமையில் வாடும் மக்கள் இருக்கும் இடங்களில் குறைந்த விலையிலோ அல்லது தானமாகவோ இடங்களை பெற்று தேவாலயங்களை முதலில் ஆரம்பிப்பது. கடந்த ஐம்பதாண்டு கால திராவிட ஆட்சியில் லட்சத்திற்கும் மேற்பட்ட கிறித்தவ ஆலயங்களை அமைத்துள்ளனர்.
கிறித்தவத்தில் பெந்தேகோஸ்ட், செவன்த் டே அட்வெண்டிஸ்ட், ஆர்சி, புரட்டஸ்டென்டு, ஏஜி சபை, சிஎஸ்ஐ, டிஇஎல்சி என எத்தனை பிரிவுகள் இருக்கிறதோ, அத்தனையும் மிஷனரிகளின் துணையோடு வளமான நிலையில் இருந்து ஆங்காங்கே மதமாற்ற தொழிலில் ஈடுபட ஆரம்பித்தனர்.
இவர்களிடையே இத்தனை பிரிவுகள் ஏன் உள்ளது என்று கூட கேள்வி எழுப்ப முடியாத அளவில் தான் இந்துக்களின் மதங்களை பற்றிய புரிதல்கள் உள்ளது.
ஆனால் இவர்கள் இந்துக்கள் இடையே இருக்கும் ஜாதி பிரச்சினையையே மூலதனமாக கொண்டு தங்கள் மதமாற்ற தொழிலை விரிவுபடுத்த ஆரம்பித்தனர்.
அதனால் தான் இவர்களின் முக்கிய நகர்வுகள் அனைத்தும் பட்டியலின மக்கள் வசிக்கும் இடங்களை நோக்கியதாக இருக்கும்.
முதலில் அன்பு, அரவணைப்பு என வறுமையில் உழல்பவர்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு, தங்களை பார்த்து புன்னகைக்கும் அனைவரையும் கிறித்தவத்தால் ஆக்கிரமிக்க தொடங்கினர்.
ஆட்சியாளர்களின் தவறால் சேரிகளிலும், காலனிகளிலும் ஒதுக்கப்பட்டிருந்த மக்கள் பலரும் கிறித்தவத்தால் ஆட்கொள்ளப்பட முக்கிய காரணமாக இருந்தது பெருங்கொண்ட ஜாதிகளின் அடக்குமுறை.
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில ஜாதிகளை சேர்ந்தோர், தாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் இடங்களில் பட்டியலினத்தவர்கள் மீது ஏவிய அடக்குமுறையே அவர்கள் மாற்று மதங்களை நோக்கி செல்ல முக்கிய காரணம். இதை நம்மால் மறுக்க முடியாது.
இந்த விஷயத்தில் இன்னும் நாம் திருந்தவில்லை. ஒற்றுமையை வளர்க்க நாம் எந்த முயற்சியையும் செய்ய வில்லை. இன்றளவும் மதசகிப்புத்தன்மை பேசும் திராவிட கூட்டம் சில குறிப்பிட்ட ஜாதிகளை தூக்கி பிடித்து கொண்டு இருக்கத்தானே செய்கிறது.
மக்களிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என்று நினைத்து இருந்தால்
அன்றைய இஸ்லாமிய கிறித்தவ ஆக்கிரமிப்பாளர்களும்
மக்களாட்சியின் ஆரம்ப கட்ட ஆட்சியாளர்களும் ஒற்றை சட்டத்தால் ஜாதி என்ற வார்த்தையையே நீக்கி இருக்கலாம்.
ஆனால் அனைவருக்குள்ளும் இருக்கும் சுயநலம் இன்றைய தேதி வரை அந்த சூழல் உருவாகாத நிலையை பார்த்து கொள்கிறது.
இட ஒதுக்கீடு முறை வந்த பிறகு சட்ட ரீதியாக கூட இனி ஜாதிகள் ஒழிக்கப்படும் வாய்ப்புகள் சிறிதும் இல்லை. யாரும் ஒத்துகொள்ள போவதில்லை. நிலையை மேலும் சிக்கலாக்கி விட்டனர்.
ஆனால் பொது மக்கள் பலரிடமும் ஜாதி குறித்த அக்கறை கொஞ்சம் கொஞ்சமாக மட்டுப்பட்டு வருகிறது என்பது ஆறுதல்.
ஆனால் படையெடுத்து வந்த கிறித்தவ இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறிய பிறகும்
மீண்டும் இந்த தேசத்தை மதத்தின் பெயரால் அடக்கி ஆள நவீன மதமாற்ற யுத்தம் செய்து வருகின்றனர்.
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் பல நூறு ஆண்டுகளாக அடிமைகளாக நடத்திய கூட்டத்தை அன்பாளர்கள், சமத்துவம் காப்பவர்கள், சமூக நீதி வழங்குபவர்கள் என இவர்கள் ஏற்றுக்கொள்ள முக்கிய காரணம்
ஆதிக்க மனப்பான்மை கொண்ட சில ஜாதிகள்
வயிற்றுக்கு சோறு போடாமல் ஒரு கூட்டத்தை ஒதுக்கி விரட்டியதே,
ஆனால் அவர்கள் சோறு போட்டு அவர்களுக்கு ஆதரவாக திருப்பி கொண்டனர்.
மதமாற்றம் நிறுத்தப்பட வேண்டும் என்றால்
நம்மிடையே மீதம் இருக்கும் மேல்ஜாதி, கீழ்ஜாதி என்ற சிந்தனை ஒழிக்கப்பட வேண்டும்.
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்ற பாரதியின் வரிகள் மீது நமது வாரிசுகளுக்காவது நம்பிக்கை வர வேண்டும்.
இன்னும் பேசுவோம்.
வைரவேல் சுப்பையா
 


__________________


Guru

Status: Offline
Posts: 24590
Date:
Permalink  
 

மதமாற்றம் தேசிய பேரபாயம் 4
இந்துக்களை மதம் மாற்ற
ஆயுதமாக்கப்பட்டு வரும் திருமண பந்தம்:
கிறித்தவத்தில் இணைந்த உடன் சாதி மறுப்பு நடந்து விட போவதில்லை.
ஏனெனில் மிஷனரிகளின் கொள்கையே
அந்தந்த பகுதி மக்களின் நம்பிக்கைகள், சமூக பழக்க வழக்கங்களை பகடையாக்கியே மதமாற்றம் செய்ய வேண்டும் என்பதே.
அதனால் தான் இப்போதும், இந்து மத வழிபாட்டு முறைகள் பலவும் கிறித்தவர்களால் காப்பி அடிக்கப்பட்டு பின்பற்றபடுகிறது.
உதாரணமாக மாலை போட்டு விரதம் இருப்பது, பாத யாத்திரை, கொடிமரம், சப்பர ஊர்வலம், முகூர்த்த கால் நடுவது, ஏசு ஆயுதபூஜை, குழந்தைகள் பெயரை அரிசியில் எழுதுவது என அத்தனையும்.
அதே நேரத்தில் கிறித்தவத்தை ஏற்று கொண்ட இந்துக்கள் யாரும் தங்களது சாதி வழக்கங்களை கைவிடுவது கிடையாது. ஜாதியை அறவே கைவிட வேண்டும் என்றும் அது குறித்து ஏதும் சிந்திக்க கூடாது என்றும் கிறித்தவ தலைமைகள் சொல்வதில்லை. சொல்லவும் மாட்டார்கள்.
ஏனெனில் ஜாதி உறவு என்பதை வலை போல, ஆயுதங்களை போல பயன்படுத்தி பல காலமாக மக்களை கட்டாய மதமாற்றத்திற்கு ஆட்பட செய்கின்றனர்.
அவர்களுக்கு தேவை எவ்வழியிலாவது தினமும் மாற்று மதத்தவர்கள் சிலரை மதமாற்றம் செய்ய வேண்டும். அதற்கு பக்க பலமாக நம்மில் பரவி இருக்கும் ஜாதிய சிந்தனைகளையே அவர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள்.
கிறித்தவராக மத மாறியவர்கள் திருமணம் என்று வரும்போது இந்துக்களில் தங்களது ஜாதி பெண்களையே குறி வைக்கின்றனர். அப்படி பெண் பார்க்கும் போது தங்களை தீவிர கிறித்தவர்களாக காட்டி கொள்வதில்லை.
அங்கே தங்களை இந்துக்கள் என காட்டி கொள்ள சொல்லும் பொய் தான்
"நாங்கள் குல தெய்வ வழிபாடுகளை தொடர்கிறோம். இன்னும் நாங்கள் அங்கே வரி செலுத்தி வருகிறோம். ஆனாலும் வாரா வாரம் சர்ச்சுக்கு போவோம்.
நாங்களும் தீபாவளி பொங்கல் கும்பிடுவோம் அதோடு கிறிஸ்துமஸ்ஸும் கொண்டாடுவோம்.
அட மதம் என்னாங்க மதம் நமக்கு ஜாதி தான் முக்கியம் என்று வலைவீசுவார்கள்.
அமைதியான குடும்பம்.
தங்கமான பையன். நல்ல வருமானம்.
இதை விட்டா இனி நல்ல சம்பந்தம் கிடைக்காது.
அட என்னாங்க, இந்த காலத்துல மதத்தை யார் பாக்குறா?"
இப்படி மெல்ல ஆரம்பித்து பெண் வீட்டாரின் நம்பிக்கைகளை பெற்று திருமணம் செய்கிறார்கள்.
ஆனால் திருமணத்திற்கு முன்பே பெண்ணுக்கு ஞானஸ்நானம் செய்ய வேண்டும் என்று சொல்லி கிறித்தவராக மதமாற்றி விடுவார்கள். ஆனால் அது இதோடு நிற்க போவதில்லை.
திருமணத்தை சர்ச்சில் நடத்தி விட்டு, அப்படியே வரவேற்பை மண்டபத்தில் வைக்கிறார்கள். திருமண நடைமுறைகளும் இந்துக்கள் போன்றே.
ஆனால் அதன் பிறகு முதலில் பொட்டு வைப்பதை நிறுத்துவதில் ஆரம்பித்து, நமது வீட்டில் சாமி கும்பிட்டு சமைப்பதை சாப்பிட மறுப்பது என நம்மை உயிரோடு வதைக்க ஆரம்பிப்பார்கள்.
உறவு பாசத்தை பகடையாக உருட்டி அந்த பெண்ணின் மூலமாக அந்த குடும்பத்தையே மதம் மாற்ற
இரக்கம் இல்லாமல் மனரீதியான அழுத்தங்களை கணவர் வீட்டார் மூலமாக ஊசியாக குத்துவார்கள்.
அந்த பெண் கிறித்தவ பாதிரிகளின் நடவடிக்கைகளில் மூளை சலவைக்கு ஆளாகி விட்டால் அதன் பிறகு அந்த பரம்பரை முழுமைக்கும் கிறித்தவ திணிப்பு தொடரும். மறுத்தால் தீபாவளி பொங்கல் என எந்த நல்ல நாட்களையும் நிம்மதியாக கொண்டாட விடுவதில்லை. குழந்தைகளை வீட்டுக்கு வரவிடாமல் தடுத்து பாசத்தால் நம் உள்ளத்தில் ஈட்டியை பாய்ச்சுவார்கள். நம் கண் முன்னே நமது நம்பிக்கைகளை கொச்சை படுத்துவர். இவர்களது கொடுமையால் அந்த குடும்பம் அனுபவிக்கும் வேதனையை வார்த்தைகளால் விளக்க முடியாது.
புதிதாக கிறித்தவம் தழுவியவர்கள் செய்யும் அக்கப்போர்கள் அளவில்லாதவை. அவர்களுக்கு மதம் குறித்த புரிதலோ அல்லது நம்பிக்கைகள் குறித்த விளக்கமோ தெரியாது. இந்து மதத்தின் மீது தங்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்களை யாரிடமும் கேட்டு தெளிவதில்லை. ஆனால் தங்களது மூளையில் பாதிரிகள் திணித்த விஷயங்களை அரைகுறையாக புரிந்து கொண்டு பேசி பேசி நமது தாவு தீர்ப்பார்கள்.
இங்குள்ள கிறித்தவ மத தலைவர்களுக்கு பக்தியின் மூலமாக மதத்தை வளர்ப்பதை விட, இது போன்ற செயல்களின் மூலமாக எவ்வகையிலாவது மதத்தை வலுக்கட்டாயமாக திணித்து பணத்தை குவிக்க வேண்டும் என்பதே குறி.
மதமாற்ற யுக்திகள் மீன்களை பிடிக்கும் தூண்டில் அல்ல, அவை மொத்தமாக வளைத்து நொறுக்கும் ஆக்டோபஸ் கரங்கள்.
இந்த கரங்களில் சிக்குண்டு தவிப்பதை தவிர்க்க வேண்டும் என்றால், உங்கள் வீட்டுக்கு கிறித்தவம் தழுவிய யாராவது வந்து வரன் கேட்டால் ஒரு முறைக்கு நூறு முறை நன்றாக யோசித்து முடிவெடுங்கள். அல்லது ஆரம்பத்திலேயே தவிர்த்திடுங்கள்.
தைரியம் இருந்தால், அவர்களிடம் தாய் மதம் திரும்புவதாக இருந்தால் திருமணம் பற்றி பேசலாம் என்று கேட்டு பாருங்கள். உங்களை திரும்பி பார்க்காமல் நடந்து விடுவார்கள். அவ்வளவு தான் அவர்களது ஜாதி ஈடுபாடு.
மதமாற்றம் தேசிய பேரபாயம் என்று உணருங்கள். உங்களால் முடிந்தவரை விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்யுங்கள்.
இன்னும் பேசுவோம்.
வைரவேல் சுப்பையா


__________________


Guru

Status: Offline
Posts: 24590
Date:
Permalink  
 

மதமாற்றம் தேசிய பேரபாயம் 5
பதிவு செய்யபடாத மதமாற்றமும் இட ஒதுக்கீடு மோசடியும்:
சுதந்திர இந்தியாவில் நீண்ட நெடிய காலமாக நடந்து வரும் மோசடிகளில் முக்கியமானது என்னவென்றால் மாற்று மதத்தை தழுவிய பிறகும் அதை அரசு ஆவணங்களில் பதியாமல்
இந்துக்களுக்கு ஜாதி ரீதியாக சட்டம் அனுமதித்துள்ள அதே சலுகைகளை அனுபவித்து மோசடிகளில் ஈடுபட்டு
இந்துக்களின் உரிமைகளை பறிப்பது.
சாதி கொடுமைகளால் கிறித்தவ மதத்தை தழுவுகிறோம் என்று மதம் மாறும் கூட்டம் ஒன்று தங்களை சட்டபூர்வமாக கிறித்தவர்களாக அடையாளபடுத்தி கொண்டு இந்து மதத்தில் இருந்து வெளியேறாமல்,
குறிப்பிட்ட சர்ச்சுகளின் ஆவணங்களின் படி மட்டும் கிறித்தவராகி அவர்கள் தரும் பொருளாதார பலன்களையும், கல்வி நிறுவனங்களில் தங்களது பிள்ளைகளுக்கு சலுகைகளையும் பெற்று கொண்டு
தங்களது மதமாற்றத்தை சட்ட பூர்வமாக பதிவு செய்யாமல்
வெளியே சான்றிதழ் படி இந்துவாகவும், உள்ளே மனதளவில் கிறித்தவர்களாகவும் தொடர்பவர்கள் லட்சக்கணக்கில் உள்ளார்கள்.
இதற்கு அந்தந்த சர்ச் நிர்வாகமே ஊக்கம் தருகிறது. அவர்களுக்கு தேவை தசமபாகம் அளிக்கும் ஓர் ஆள். பாதிரிகளின் சொல்கேட்டு தலையாட்டி பொம்மைகளாக இருக்க ஓர் கூட்டம்.
ஆனால் இது உண்மையான இந்து பட்டியலினத்தவர்களின் உரிமைகளை கொள்ளையடிக்கும், தட்டி பறிக்கும் செயல். இதனால் பாதிக்கப்பட்ட இந்து பட்டியலின மக்கள் இன்னும் பொருளாதார ரீதியாக வளர்ச்சி பெறாமல் இருப்பதற்கு முக்கிய காரணமே
உள்ளத்தில் கிறித்தவத்தையும், சான்றிதழ்களில் இந்துமதத்தையும் சுமந்து கொண்டு இரண்டு பக்கமும் சலுகைகளை அனுபவித்து கொண்டு இரட்டை குதிரைகளில் சவாரி செய்தபடி வெள்ளையும் சொல்லையுமாக வெட்கமின்றி திரியும் கபட வேடதாரிகள் இவர்கள்.
இன்று அலுவல் ரீதியாக சமூகத்தில் மதமாற்றத்தையும் ஊக்குவித்து கொண்டு, இந்து விரோத செயல்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கு துணை போவதில் முதல் இடம் இவர்களுக்கு தான்.
இவர்கள் பிறந்த நாட்டிற்கோ, மதத்திற்கோ அல்லது மாற்றமாகிய மதத்திற்கோ உண்மையானவர்களாக இல்லாமல்
ஊரையும், தெய்வங்களையும், தன்னையும் ஏமாற்றி திரியும் மோசடியாளர்கள்.
இட ஒதுக்கீட்டின் பலன் உண்மையான பட்டியலினத்தவர்களுக்கு சேர விடாமல் தடுத்து அவர்களை தொடர்ந்து ஏழைகளாகவே வைத்திருந்து மத மாற்றத்தை வியாபாரம் ஆக செய்து வரும் கூட்டத்தின் சதி இது.
முக்கியமாக இந்துக்களின் உரிமைகளை களவாடும் கபடவேடதாரிகள், உள்ளிருந்தே இந்து விரோத தேச விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் கிறிப்டோக்கள்.
மதமாற்றம் தேசிய பேரபாயம்.
இன்னும் பேசுவோம்
வைரவேல் சுப்பையா


__________________


Guru

Status: Offline
Posts: 24590
Date:
Permalink  
 

மதமாற்றம் தேசிய பேரபாயம் 6
கிறித்தவம் வறுமையை ஒழித்து விட்டதா?
ஆரம்பத்தில் ஆயுத பலத்தால் வளர்ந்த கிறித்தவம் இப்போது வறுமையினை ஆயுதமாக்கி வளர முற்படுகிறது.
எளிய மக்கள், வறுமையில் வாடும் மக்கள் தான் கிறித்தவ மதமாற்றத்தின் முதல் இலக்கு.
ஆதரவற்றோர்களையும் வறுமையில் வாடுபவர்களையும் குறி வைத்து தான் மதமாற்ற கும்பல்கள் களம் இறங்குகிறது.
எங்கெங்கு புதிய சர்ச்சுகள் அமைக்கபடுகிறதோ அங்கெல்லாம் வெளியிடங்களில் இருந்து பலரும் கூட்டமாக அழைத்து வரப்பட்டு பைபிள் பிரசங்கம் கேட்க வைக்கப்படுகிறார்கள். பிரசங்கம் முடிந்த பிறகு வயிற்றிற்கு சோறிடுவோம் என்று சொல்லியே அழைத்து செல்கிறார்கள்.
வறுமையை ஒழிப்பதற்காகவோ அறவே நீக்குவதற்காகவோ கிறித்தவம் ஒரு போதும் பாடுபட்ட வரலாறு இல்லை. அப்படி செய்திருந்தால் அவர்களிடம் இருக்கும் பணத்தில் உலகையே வறுமையில் இருந்து மீட்டிருக்கலாம்.
மாறாக வறுமைக்கு நீங்கள் கிறித்துவை சரணடையாததே காரணம் என்று சொல்லி, உணவுடன் பைபிள் வரிகளையும் ஊட்டி மூளைச்சலவை செய்து
அவர்களின் வயிறை வளர்ப்பதோடு மதத்தையும் வளர்க்கின்றனர்.
கொரானா பேரழிவில் இருந்து மக்களை காக்க நிதி தாருங்கள் என்று பிரதமர் வெளிப்படையாக அழைப்பு விடுத்தார். லட்சங்களையும் கோடிகளையும் குவித்து வைத்திருக்கும் மிஷனரிகளின் சர்ச்சுகளும் மசூதிகளும் எவ்வளவு பணம் கொடுத்தார்கள்?
அது குறித்து தங்களது கவனத்திற்கு எந்த செய்தியாவது வந்ததா?
ஆனால் மோடி ரேஷன் கார்டுகள் வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச உணவு தானியங்கள் வழங்க உத்தரவிட்டார்.
"இவர்கள் மதமாற்ற சிந்தனை இல்லாமல் பத்து பைசா கூட செலவழிக்க முன் வர மாட்டார்கள்."
உங்களிடம் ஓர் கேள்வி எழலாம் இப்போது?
இந்துமதம் ஏழைகளை, வறுமையில் வாட அனுமதித்தது ஏன்? அவர்களை புறக்கணித்து விட்டதா?
வறுமையில் வாடுபவர்களுக்கு வயிற்றிற்கு சோறு போடாதது இந்து மதத்தின் தவறல்லவா?
இந்துமதம் ஒரு போதும் வறுமையில் வாடுபவர்களை புறக்கணிக்கவில்லை, புறக்கணிக்கவும் சொல்லவில்லை.
இந்துமதம் ஏழைகளுக்கு உணவளிக்க ஒரு போதும் தவறியதில்லை.
ஏனெனில் மக்களாட்சிக்கு முற்பட்ட மன்னராட்சி காலங்களில் வழித்தடங்கள் எங்கும் அன்ன சத்திரங்கள் இருந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த காலங்களில் உழைப்பவர்களுக்கு நெல்மணிகளே ஊதியமாக தரப்பட்டுள்ளது.
இந்து மத சாஸ்திரங்கள் பசுக்களுக்கும் பறவைகளுக்கும் உணவிடுவதை புண்ணிய காரியங்களென்று வகுத்து வைத்துள்ளது. அப்படி இருக்கையில் ஏழைகளுக்கும் வறுமையில் வாடுபவர்களுக்கும் உணவளிக்க மறுத்திருக்குமா இந்து மதம்?
தானங்களில் முக்கியமானதாக அன்னதானத்தை இந்துமதம் முன்னிறுத்தியது ஏன்?
மானிடர் அனைவருக்கும் வயிற்றிற்கு சோறு கிடைக்க வேண்டும் என்ற நல் எண்ணமே.
அப்படி இருந்தும் இன்று பிச்சைகாரர்கள் நிரம்பி வழிவது ஏன்?
உழைக்க வழியில்லாத அரசாங்க சலுகைகளை பெற முடியாத ஆதரவற்றோர்களும், பிச்சை எடுப்பதையே தொழிலாக ஆக்கி கொண்டவர்களுமே கையேந்தி நிற்கின்றனர்.
எங்கே?
கோவில் வாசல்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும். எவரேனும் உணவில்லாமல் உறங்க சென்றதாக அடையாளம் காட்ட முடியுமா உங்களால்?
ஆனால் உழைத்து பிழைப்பவர்கள் பலரும் போதிய வருமானம் இன்றி பட்டினி கிடப்பதை யாராலும் மறுக்க முடியாது. அவர்களுக்கு மக்களாட்சி வழங்கும் சலுகைகள் கிடைக்க பெற செய்ய வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.
ஆன்மீக நாட்டத்தால் பசி மறந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர்களும், பிட்சை பெற்றே பசி போக்கிய குருமார்களும், தனது குடும்பம் பசியோடிருந்தாலும் தெய்வத்திற்கு அமுது படைத்த பக்தியாளர்களும், தானங்களை வாரி வழங்கிய வள்ளல்களையும், சம்பாதித்ததை எல்லாம் குடும்பத்தாருக்கு உணவுக்காக கொடுத்த தந்தைமார்களும் நிரம்பியது இந்து மதம்.
"ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்"
பிறரின் பசியை போக்குபவர்கள் பசிமறந்து தவமிருப்பவர்களை விட உயர்ந்தோர் என்றார் திருவள்ளுவர்.
ஸ்ரீ கிருஷ்ணா பரமாத்மா பகவத் கீதையில்
"அன்னத் பவனி பூதனி "
என்று கூறுகிறார். இதற்கு என்ன பொருள் என்றால் இந்த உலகத்தில் பசியில் வாடும் உயிர்களுக்கு உணவிட்டால் பிறவி கர்மாக்களை வெற்றி கொள்ளலாம்.
"உண்டி கொடுத்தோரே
உயிர் கொடுத்தோர்"
என்று புறநானூற்று பாடல் தெரிவிக்கிறது.
இவை எல்லாம் சிறிய சான்றுகள் மட்டும் தான்.
இந்து தர்மம் முழுவதும் தர்மங்களையும் தானங்களையும் மிகவும் உயரிய தர்மங்களாக சிறப்பித்து பேசுகின்றன.
இன்றைய தேதியில் இந்து கோவில்களில் மட்டுமே அன்ன தானங்கள் தொடர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமை இப்படி இருக்கையில், வறுமையில் உழல்பவர்களை கை கொடுத்து தூக்கி விட மறந்த ஆட்சியாளர்களின் தவறுகளை மதமாற்ற கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்கிறார்கள்.
"இந்து தர்மம் போதித்த அற சிந்தனைகளை மறந்து கடமை மறுத்தவர்களால் 'படியும்' கரைகள் மட்டுமே இந்துமதத்தை சேருகிறது. ஆனால் இந்து மதம் பவித்ரமானது, இந்து மதம் ஒருபோதும் யாரையும் வெறுக்கவோ ஒதுக்கவோ சொல்ல வில்லை."
இன்னும் பேசுவோம்.
வைரவேல் சுப்பையா


__________________


Guru

Status: Offline
Posts: 24590
Date:
Permalink  
 

மதமாற்றம் தேசிய பேரபாயம் 7
பிரசங்க களமாகும் பள்ளிகள்
இந்தியாவில் இருக்கும் பள்ளிகளில் 11 சதவீதம் பள்ளிகள் மிஷனரிகளின் ஆளுமைக்குட்பட்ட கிறித்தவ பள்ளிகள்.
இவற்றில் பெரும்பாலான பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள். அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இங்கேயும் கிடைக்கும்.
இந்தியா முழுவதும் உள்ள கிறித்தவ பள்ளிகளில் பாடங்களை பயிற்றுவிக்கும் தரம் திருப்திகரமானதாகவே இருக்கிறது. அதில் குறை சொல்ல முடியாது.
ஆனால் ஆரம்ப நிலை பள்ளிகளில் பள்ளி கல்வியுடன் பைபிள் சிந்தனைகளை கதைகளாக, பாடல்களாக திணிக்கும் போது தான் ஆட்சேபங்கள் எழுகிறது.
அனைத்து கிறித்தவ பள்ளிகளிலும் ஆரம்ப நிலை கல்வியில் அறிவிக்கப்படாத ஒரு பகுதியாக கிறித்தவ போதனைகள் இருக்கும். இது தான் பிரச்சினைக்குரிய விஷயம்.
ஏனெனில் வயதுக்கு வந்த, சுய சிந்தனை உள்ள எந்த மனிதனும் தனக்கு சரி என்று தோன்றும் அறத்திற்கு உட்பட்ட எதையும் செய்யும் தழுவும் உரிமைகளை சட்டம் தருகிறது.
ஆனால் குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது மற்றும் உணமை, பொய்க்கு இடையேயான வேறுபாடுகள் தெரியாது. அந்த நிலையில் அவர்கள் திரும்ப திரும்ப கேட்கும் விஷயங்கள் அவர்கள் ஆள் மனதில் பதியகூடியவை.
அதையே ஆயுதமாக பயன்படுத்தி மிஷனரிகள் குழந்தைகளின் மனதில் கிறித்தவ மத போதனைகளை தொடர்ந்து திணித்து வருகின்றனர். இதை அவர்களால் உணரவும் முடியாது, இதை ஏன் என்னிடம் சொல்றீங்க என்று கேட்கவும் முடியாது.
வீட்டில் என்ன தான் நமது பழக்க வழக்கங்களை போதித்து நாம் வளர்த்து வந்தாலும். நமது பிள்ளைகளுக்கு இந்து ஆன்மீக கல்வியை பயிற்றுவிப்பதில்லை. ஏனெனில் பெரும்பாலான மக்களுக்கு நமது மதம் குறித்த விரிவான அறிவு இருப்பதில்லை.
எதுக்க இருக்கறது எந்த சாமியாக இருந்தாலும், நமக்கு தெரிஞ்சது சாமி கும்பிடனும், ஏதாவது வேண்டிக்கனும். விபூதி குங்குமம் பூசிக்கனும். மணியடிச்சிட்டு கிளம்பி வந்துடனும். அவ்வளவு தான். நமக்கு இருக்கும் குறைந்த பட்ச மத அறிவு.
சரி. இப்படி மதத்தை திணிக்கறத தட்டி கேட்க முடியுமா?
முதல் கேள்வி, எங்க பள்ளிகூடத்தில் வந்து சேருங்கன்னு நாங்க கூப்பிடல.
இரண்டாவது தாராளமாக உங்க பிள்ளையோட டிசி ய வாங்கிட்டு போங்க
இவ்வளவு தான்.
அருகில் வேறு நல்ல பள்ளிகள் இல்லாத நிலையில் நம்மால் என்ன செய்து விட முடியும்?
அதோடு டீச்சர்கள கொஸ்டின் பண்ணினால் மார்க் போட மாட்டாங்க என்று பயமுறுத்தி வைத்துள்ள நமது எஜீகேசன் சிஸ்டம்.
இதனால் தான்
துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலருக்கும் பள்ளிகளில் நடக்கும் அத்துமீறல்கள், தவறுகளை தட்டி கேட்கும் தைரியம் வருவதில்லை. ஏனெனில் பிரச்சினை அனைத்து மாணவர்களுக்குமாக இருக்கும், நாம் தட்டி கேட்க போய் நிற்கும் போது அது தனிப்பட்ட பிரச்சினையாக சித்தரிக்கப்படும். அதோடு நாம் நிர்வாகத்தை பகைத்து கொண்டால் நமது பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கபடுமோ என்ற அச்சத்தின் விளைவாகவும் யாரும் முன்வருவதில்லை.
ஆனால் அவர்களது நோக்கத்தில் அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள்.
அது, மாற்று மத குழந்தைகள் வளரும் போதே கிறித்தவத்தை பற்றிய புரிதல்களோடு வளர்க்க வேண்டும். அவர்கள் பெரியவர்கள் ஆகும் போது கிறித்தவம் அவர்களுக்கு அந்நியமாக தோன்ற கூடாது. அவர்களை அறியாமல் அவர்கள் மனதில் ஆழமாக கிறித்தவத்தை திணித்து விட வேண்டும்.
இதை தான் செய்கிறார்கள் அவர்கள்.
நம்மவர்களை நம்மிடம் இருந்து மெல்ல திருடுகிறார்கள்.
இன்னும் பேசுவோம்.
வைரவேல் சுப்பையா


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard