New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவப் பித்தலாட்டம் - இரும்பாநாடு சே.பத்மநாபன்


Guru

Status: Offline
Posts: 23950
Date:
கிறிஸ்தவப் பித்தலாட்டம் - இரும்பாநாடு சே.பத்மநாபன்
Permalink  
 


 01 ஆரியப் படை எடுப்புக் கோட்பாடு

 https://sarngavarsham.blogspot.com/2021/12/1.html   கிறிஸ்தவர்கள் உலகில் எந்தெந்த நாடுகளை ஆட்சி செய்தார்களோ அந்தந்த நாடுகளிலெல்லாம் தங்கள் மதத்தைப் பரப்ப எல்லாவிதமான முயற்சிகளையும் எடுக்கத் தவறியதில்லை. ஒருகுறிப்பிட்ட நாட்டுக்கு மதம் பரப்பச் செல்லும் கிறிஸ்தவர்கள் முதலில் அந்த நாட்டின் அல்லது அவர்கள் செல்லும் பிராந்தியத்தில் உள்ள மொழியைக் கற்றுக் கொள்வார்கள்.பிறகு அங்கு உள்ள இலக்கியங்களைக் கற்று அவற்றின் பெருமைகளை எடுத்துக்கூறி அங்குள்ளவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். அவர்களின் விஷம எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத அப்பகுதி மக்கள் “ஆஹா! ஒரு அன்னியன் நம் நூல்களைப் படித்து எவ்வளவு பெருமையாகச்சொல்கிறான் பாருங்கள்!” என்று தங்களுக்குள் வியந்து போவார்கள். பிறகு அந்த இலக்கியங்களை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் மெள்ள மெள்ளத் தங்களின் மதச்சாயத்தை அந்த நூல்களின்மேல் பூசி அந்தப்பகுதி மக்களை நம்பவைத்துக் கிறிஸ்தவர்களாக்க முயற்சிப்பார்கள்.இதைத்தான் கடந்த 200 வருடங்களாக இந்தக் கிறிஸ்தவர்கள் நம் நாட்டில் செய்துகொண்டிருக்கிறார்கள். (நம் நாட்டு வேத இலக்கியங்களைக் கற்ற மேற்கத்தியர்களில் சிலர் உண்மையிலேயே நமது வேத இலக்கியங்களின் தொன்மையையும் சிறப்பையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டிருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது) தம் மதத்தைப் பரப்பவேண்டும் என்பதற்காகவே இந்திய மொழிகளைக்கற்று நம் வேத இலக்கியங்களைப் படித்தவர்கள் அவற்றில் உள்ள சில சொற்களுக்கும் விஷயங்களுக்கும் தங்களுக்கு சாதகமாகப் பொருள்கொண்டு நம் நாட்டில் ஓருவிதமான பிரிவினை உணர்வை மக்களிடையே எற்படுத்தித் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தனர்/நினைக்கின்றனர்.ஜெர்மானியரான மேக்ஸ் முல்லர் நம் வேதங்களை மொழிபெயர்க்கக் கிழக்கிந்தியக் கம்பேனியாரால் நியமிக்கப்பட்டவர். அவர் வேத இலக்கியங்களில் இடம் பெறும் “ஆரிய” என்ற சொல்லை ஒரு மொழியியலில் வரும் வகைப்படுத்தலாகவே விளக்கினார்.ஆனால் அது மிக விரைவில் ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லாகக் காலனிய ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டது. ஆரிய இனம் என்ற ஒரு தனி இனம் இருந்ததாகவும் அவர்கள் இந்திய நாட்டுக்கு அந்நியமானவர்கள் என்றும் ஒரு கருத்தை முன்வைத்தார்கள்.இவர்களின் “இன அறிவியலை” மக்களைப் பிளவுபடுத்தும் அறிவியலாகப் பயன்படுத்தி மரபுவழியான இந்து சமூஹத்தைப் பாகுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்திய சமூஹத்தில் “ஆரியரல்லாதவர்கள்” என இவர்களால் சித்தரிக்கப்பட்டவர்கள் ஆரியர்களின் கொடுமைகளுக்கு உள்ளான விளிம்புநிலை மனிதர்களாகக் காட்டப்பட்டார்கள்.ரிக் வேதத்தில் வரும் தாஸர்கள் அல்லது தஸ்யுக்கள் என்ற சொல் ஆரியரல்லாதவர்களைக் குறிக்கும் சொல் என்ற ஒரு கருத்தை உருவாக்கினர். அதைப்போலத் தென்னிந்தியாவில் மதம் பரப்ப வந்த பாதிரியார்கள் திராவிட இன அடையாளத்தை உருவாக்கித் தமிழ்நாட்டில் பிரிவினையைத் தூண்டினர்.அவர்களில் முதல்வர் கால்டுவெல் பாதிரியார். ஆரியர்களால் விரட்டப்பட்ட அந்தப் பூர்வ குடிகள்தான் திராவிடர்கள் என்று அடையாளப்படுத்தினார் த்ராவிடமொழி ஒப்பிலக்கண ஆசிரியரான இந்தக் கால்டுவெல் பாதிரியார்.இந்தப் பாதிரியாரின் நோக்கம் என்னவெனில், தமிழ் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்தன்மைவாய்ந்த மொழி என்பதை நிறுவுவதே.அதாவது ஆரியர்கள் என்பவர்கள் பிராம்மணர்களே என்றும் அவர்களது மொழி ஸம்ஸ்க்ருதம் என்றும் அவர்கள் தூய தமிழ் பேசிய திராவிடர்களை வஞ்சகமாக அடிமைப்படுத்தித் தங்கள் செல்வாக்கை அவர்கள் மத்தியில் ஏற்படுத்திக்கொண்டனர் என்றும் அவர் எழுதிவைத்தார்.இவரது இந்த ஆய்வு முடிவு, "தமிழ் மொழி தனிச்சிறப்பு வாய்ந்த மொழி . அதன் தூய்மை ஆரியர்களான பிராம்மணர்களின் தொடர்பாலும் ஆதிக்கத்தாலும் கெட்டுவிட்டது"என்ற கருத்துப் பரவ வழிவகுத்தது.

ரிக் வேதத்தில் சொல்லப்படும் தஸ்யுக்களே திராவிடர்கள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர் கிறிஸ்தவ மதப் பரப்பாளர்கள். சிந்துச்சமவெளியை ஆய்வு செய்த சர் ஜான் மார்ஷல் சிந்துச்சமவெளியில் சிறந்த நாகரிகம் உள்ள மக்கள் வாழ்ந்ததாகவும் அவர்களே இந்தியாவின் பூர்வ குடிகள் என்றும் அவர்களை கைபர்,போலன் கணவாய் வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்கள் விரட்டினார்கள் என்றும் எழுதிவைத்தார்.

மெக்காலே கல்விமுறை நம் நாட்டில் ஆரம்பமானதுமுதல் பள்ளிகளில் குழந்தைகளுக்கு இந்த விஷயம்தான் கற்றுக்கொடுக்கப்படுகிறது. முதலில் நாட்டு மக்களை இரு கூறாகப் பிரித்தார்கள்.அடுத்து மொழியைப் பிரித்தார்கள்.இந்த நாட்டிலுள்ள மக்களிடமிருந்து பிராம்மணர்களை அந்நியப்படுத்தாதவரை இம்மக்களை மதம் மாற்ற முடியாது என்பதை நன்றாகப்புரிந்துகொண்ட கிறிஸ்தவப் பாதிரியார்கள் இப்படிப்பட்ட ஆதாரமற்ற அபத்தக்கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி மக்கள் மனதில் விஷவிதையை விதைத்தனர்.ஆட்சியிலும் அவர்களே இருந்ததால் அவர்களுக்கு ஸாதகமாகப்போயிற்று.1542-ல் மதம் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்த ஃப்ரான்ஸிஸ் க்ஸேவியர்(Francis Xavier) என்ற கிரிஸ்தவப் பாதிரியார்,

I want to free the poor Hindus from the stranglehold of the Brahmins and destroy the places where evil spirits are worshipped…. If there were no Brahmins in the area all Hindus would accept conversion to our faith.(ஏழை இந்துக்களை பிராம்மணர்களின் பிடியிலிருந்து விடுவிக்கவும் தீய ஆவிகள் வழிபடப்படும் இடங்களை அழிக்கவும் நான் விரும்புகிறேன்….இந்தப் பகுதியில் பிராம்மணர்கள் இல்லை என்றால் எல்லா இந்துக்களும் நமது மத நம்பிக்கையை ஏற்றுக்கொள்வர்) என்று கூறியிருக்கிறார்.இந்து மதத்தில் பிராம்மணர்கள் தவிர்க்கமுடியாத முக்கிய சக்தி என்பதையும் பிராம்மணர்களை ஒழித்தாலொழிய இந்துக்களை மதம் மாற்ற இயலாது என்பதையும் கிறிஸ்தவப் பாதிரியார்கள் நன்கு உணர்ந்திருந்தனர் என்பதை இதனால் உணரமுடிகிறது.அதனால்தான் பிராமண த்வேஷத்தையும் ஸம்ஸக்ருத த்வேஷத்தையும் இம்மண்ணில் விதைத்தனர். இவர்களது சூழ்ச்சி ஏற்கனவே இங்கிருந்த சில ப்ராம்மண த்வேஷிகளுக்கும் பிரிவினை வாதிகளுக்கும் சாதகமாகி நீதிக்கட்சி,திராவிடர் கழகம், தனித்தமிழ் இயக்கம் முதலியவை தோன்றின.

இந்தக் கிறிஸ்தவர்கள் தங்கள் மதத்தைப்பரப்ப வேண்டுமென்ற ஒரே நோக்கத்துக்காக ஆய்வு என்ற பெயரில் எந்தப்பொய்யையும் சொல்லத் தயங்கமாட்டர்கள். ஆரிய-திராவிடப் பிரிவினை வாதத்துக்கும் ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குள் வந்து இங்குள்ள பூர்விகக் குடிகளை அடித்துவிரட்டினர் என்பதற்கும் எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்பதையும் அது ஒரு புனை கதை என்பதையும் பல மேற்கத்திய அறிஞர்களே நிறுவியுள்ளனர்.அவற்றில் சிலவற்றைப்பார்ப்போம்.சமீபத்தில் சிந்துச்சமவெளியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட தொல்லியல்துறை வல்லுனரான ஜிம் ஷாப்பர்(Jim Shopper): “None of the excavation results show an invasion from outside. The cultural development of (ancient India) is the cultural dimension that has taken place on this soil. ”(எந்த ஒரு அகழ்வாய்வு முடிவும் இந்த நாட்டுக்கு வெளியிலிருந்து இங்கு யாரும் படையெடுத்து வந்ததாகக் காட்டவில்லை.இந்த மண்ணில் நிகழ்ந்த பழங்கால இந்தியாவின் கலாசார வளர்ச்சியின் பரிமாணங்களே இவை.) என்று கூறுகிறார்.இருபது வருடங்களுக்குமேல் ஹரப்பாவில் அகழ்வாய்வு செய்த மார்க் கென்னயிர்(Mark Kennoir) என்ற அறிஞர்

“There is no evidence that the Aryan invasion took place as the old archaeologists thought. Much research needs to be done on the relationship between the Indus-Saraswati culture and the people who lived near it. ”(ஆரியப்படையெடுப்பு என்ற பழைய தொல்லியல் ஆய்வாளர்களின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை.சிந்து-ஸரஸ்வதி கலாசாரத்துக்கும் அதன் அருகில் வசித்த மக்களுக்கும் உள்ள தொடர்பு சம்பந்தமாக அதிகப்படியான ஆய்வு செய்யவேண்டிய தேவை உள்ளது)என்று கூறுகிறார்.மேலும் அவர் ‘ஹரப்பா’என்பது ரிக் வேதத்தில் சொல்லப்படும் “ஹரிவிப்பா”வாக இருக்கலாம் என்ற ஒரு அறிவுசார்ந்த ஊகத்தை முன்வைக்கிறார்.(புரு வம்சாவளியினருக்கும் துர்வஸு வம்சாவளியினருக்கும் ஹரிவிப்பா என்ற இடத்தில் போர் நடந்ததாக ரிக் வேதம் குறிப்பிடுகிறது.புருவும்,துர்வஸுவும்வேத கலாசாரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

இதுதவிர டேவிட் ஃப்ராலி(David Frawley) என்ற மேற்கத்தியர் மேற்படி ஆரியப்படையெடுப்புக்கொள்கையை ஆதார பூர்வமாக மறுத்து “The Myth of The Aryan Invasion of India”என்ற தலைப்பில் ஒரு நூலே எழுதியிருக்கிறார்.பல இந்திய ஆய்வாளர்களும் இந்த கோட்பாட்டை ஆதாரபூர்வமாக மறுத்துள்ளனர்.இதைவிட ஸ்வாரஸ்யமான தகவல் என்னவென்றால் நமது அரசியல் சட்டச் சிற்பிகளில் ஒருவரான டாக்டர் தாதாஸாஹேப் அம்பேத்கார் ஆரியப்படையெடுப்புக்கோட்பாடு ஒரு புனைவு என்கிறார். (நம் நாட்டைச் சேர்ந்த நேரு,திலகர் போன்றோர் “ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்” என்ற கோட்பாட்டை ஆதரித்தவர்கள்). இங்குள்ள திராவிடக் கட்சிகள் “பெரியாரும் அம்பேத்காரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்”என்பார்கள். அதைப்போல இங்குள்ள ,பொதுவுடைமை வாதிகள்,பிரிவினைவாதிகள் இவர்களும்கூட அம்பேத்காரை ஏற்பவர்கள். ஆனால் இவர்கள் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் அம்பேத்காரே ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டுக்கு வேதத்தில் ஆதாரமில்லை என்று கூறிவிட்டார்.

 

அம்பேத்கார் ரிக் வேதத்தை எழுத்தெண்ணிப்படித்தவர்.அவர் அதைப்படித்ததன் நோக்கம் எதுவாக இருந்தாலும் உண்மையை இருட்டடிப்பு செய்யாமல் மனசாட்சியின்படி கருத்துக் கூறியவர்.ஆகவே அவரை அறிஞர் என்று சொல்வதில் தவறில்லை.ஆரியப்படையெடுப்புக்குறித்து அவரது கருத்து பின்வருமாறு:

“The theory of Aryan invasion is not based on factual information. Rather the theory of Aryan invasion was first developed and then the information was selected and fabricated in such a way as to prove it true. It falls to the ground enough for every research.

There is no evidence in the Vedic literature of the Aryan invasion of India or the conquest of the Dasyuks or Dasas who are considered to be the aborigines who lived here. There is no evidence that the difference between the Dasars or the Dasyus and the Aryans is racial or that the skin color of the Aryans is different from that of the Das-Tasyus. ”

(ஆரியப் படையெடுப்புக்கோட்பாடு உண்மைத் தகவலை அடிப்படையாகக்கொண்டது அன்று.முதலில் இது உருவாக்கப்பட்டு, பிறகு அதை உண்மை என்று நிரூபிக்கும் வகையில் தகவல் தேர்ந்தெடுக்கப்பட்டுப் புனையப்பட்டது.ஒவ்வொரு ஆய்விலும் அது மண்ணைக்கவ்வியது.இந்தியாவின் பூர்வ குடிகள் என்று கருதப்படுகிற தஸ்யுக்கள் அல்லது தாஸர்களை ஆரியர்கள் படையெடுத்துவந்து தோற்கடித்தனர் என்பதற்கு வேத இலக்கியங்களில் சான்று இல்லை.ஆரியர்களுக்கும் தஸ்யுக்கள் அல்லது தாஸர்களுக்குமான வேற்றுமை இன அடிப்படையிலானது என்பதற்கும்,ஆரியர்களின் தோல்நிறம் தஸ்யுக்களின் தோல்நிறத்திலிருந்து வேறுபட்டது என்று சொல்வதற்கும் எவ்வித ஆதாரமும் இல்லை.) அம்பேத்கார் உட்பட எத்தனையோபேர் இந்த ஆரியப் படையெடுப்புக்கோட்பாடு ஒரு கட்டுக்கதை என்பதை ஆதாரபூர்வமாக நிலைநாட்டிய பின்பும் நம் நாட்டுப் பள்ளிக்கூடப் பாடப்புத்தகங்களில் இந்த ஆரியப் படையெடுப்புக்கோட்பாடுதான் இடம் பெற்றுள்ளது.குழந்தைகளின் மனதிலும் இந்த விஷவிதை விதைக்கப்படுகிறது. அம்பேத்காரே ஆரியப்படையெடுப்புக் கோட்பாட்டை நிராகரித்தபின் இங்குள்ள அவரது ஆதரவாளர்கள் ஏன் இன்னும் அந்தக் கோட்பாட்டைப் பிடித்துக்கொண்டு அலைகிறார்கள்?ஏனெனில் கிறிஸ்தவ மிஷினரிகள் அவர்களுக்கு பணம் வழங்குகின்றன.அதுதான் உண்மை.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
RE: கிறிஸ்தவப் பித்தலாட்டம்
Permalink  
 


02. திராவிடம் கண்டுபிடிக்கப்படுதல்

ஐரோப்பியர்கள் மேற்கொண்ட மனித இனஅறிவியல் ஆய்வுகளின் முடிவுகள் பல்வேறு நாடுகளில் இனவாத உணர்வுகளையும் பிரிவினை வாதங்களையும் ஏற்படுத்திவிட்டது. இந்தியாவும் அதற்கு பலியானது.மனித இனத்தைப் பல இனங்களாகப் பிரித்தால்தான் அந்த இனங்களுக்குள் சண்டையை மூட்டிவிட்டுத் தமது மதம்பரப்பும் நோக்கத்தை சாதித்துக்கொள்ளமுடியும் என்பதை நன்றாக உணர்ந்திருந்த கிறிஸ்தவப்பாதிரிமார்கள் அதற்கேற்றவகையில் காய் நகர்த்தினர்.தங்களது இலக்கை அடையப் படிப்படியான திட்டங்களை சாமர்த்யமாகத் தீட்டினார்கள்.மொழி இலக்கணத்தை ஆய்வு செய்யவந்த கால்டுவெல் மொழியையும் இனத்தையும் தொடர்புபடுத்தி “திராவிடம்” என்ற ஒரு சொல்லை ஒரு தனி இன அடையாளமாகக் காட்டினார்.இச்சொல்லை முதன்முதலில் இன அடையாளமாகக் காட்டியவர் இந்தப் பாதிரியார்தான். கால்டுவெல்லுக்கு முன் இச்சொல் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு மற்றும் மொழியைக் குறிப்பதாகவே பயன்படுத்தப்பட்டது.

ஆரிய பிராம்மணர்களின் வருகைக்கு முன் இங்கிருந்த பூர்விகக் குடிகளே திராவிடர்கள் என்று கால்டுவெல் சொன்னார். அதேநேரத்தில் திராவிடர்களின் மூதாதையர்கள் துரானிய இனத்தைச் சேர்ந்த காட்டுமிராண்டிகள் என்றும் முதலில் அவர்கள் வடஇந்தியாவில் குடியேறினர் என்றும் வெளிநாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் அவர்களை விரட்டியடித்ததால் தென்னாட்டுக்கு வந்தனர் என்றும் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்குப் புலம்பெயர்ந்த ஆரிய பிராம்மணர்களிடமிருந்து அவர்கள் நாகரிகத்தைக் கற்றுக்கொண்டனர் என்றும் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். திராவிடர்களின் மொழியான தமிழுக்கு ஆரியரின் தென்னாட்டு வருகையால் ஸம்ஸ்க்ருதக் கலப்பு ஏற்பட்டு அதன் தனித்தன்மையை இழந்தது என்றும் தமிழில் உள்ள வடமொழிச்சொற்களை நீக்கிவிட்டால் தூய செம்மொழியாகத் தமிழைக் காணலாம் என்றும் எழுதிவைத்தார். கால்டுவெல்லின் முடிவான கருத்து என்னவெனில் திராவிட மொழிகள்,மக்கள் மற்றும் கலாசாரம் என்பவையெல்லாம் பிராம்மணர்களோடு தொடர்பில்லாத வேறுமூலத்தைக்கொண்டவை என்பதே.பிராம்மணரல்லாத தென்னிந்தியர்களை திராவிடர் என்ற தனி இனத்தவர்களாகக் காட்டி அவர்களை வேற்றினமாக்கினார்.

இவரது இந்த இன ஆய்வுதான் தென்னிந்தியாவில் வாழ்ந்துவரும் சிறுபான்மையினரான பிராம்மணர்களுக்கும் பெரும்பான்மையினரான பிராம்மணரல்லாதவர்க்கும் இடையே இன,மொழி,சமய ரீதியிலான பிளவு ஏற்பட வழிவகுத்தது.அத்துடன் “தொன்மையான” “தூய”திராவிட மொழி மற்றும் கலாசாரத்தை மீட்டெடுக்கும் செயல்திட்டமும் உருவானது.தங்களுக்கென்று தனித்தன்மை வாய்ந்த மொழி, இன, பண்பாட்டு அடையாளம் கல்டுவெல்லால் கொடுக்கப்பட்டவுடன் தமிழ் மொழியை உயர்த்திப்பிடிக்கும் திராவிடப் பண்பாட்டை தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராம்மணரல்லாத கிளர்ச்சியாளர்கள் வட இந்தியாவைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஆரிய, ஹிந்து, ஸம்ஸ்க்ருதப் பண்பாட்டுக்கு எதிரானதாக அடையாளப்படுத்தத் தொடங்கினர்.கால்டுவெல்லின் மனதில் தோன்றியிருந்த பிராம்மண எதிர்ப்புவிஷமும் இந்த இனவாதத்தோடு சேர்ந்துகொண்டது.இன்று தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட இயக்கங்களின் மூல புருஷர் இந்தக் கால்டுவெல்தான் .இந்தப்பாதிரியாருக்குச் சிலையெல்லாம் வைத்துக்கூட இவர்கள் வணங்குகிறார்கள்.தங்களை அடிமைத் தளையிலிருந்து மீட்க வந்த மீட்பராகவே இந்தப் பாதிரியாரைப் போற்றுகிறார்கள் இங்குள்ள திராவிட இனவாதிகள்.ஆனால் இந்தப் பாதிரியார் ஆரிய இனத்தைவிட திராவிட இனம் உயர்ந்தது என்று தன் நூலில் கூறவே இல்லை.துரானிய இனத்தைச்சேர்ந்த காட்டுமிராண்டிகளே திராவிடர்கள் என்றார் அவர்.அப்படியானால் கால்டுவெல்லைத் தங்கள் மீட்பராகக் கருதும் இன்றைய திராவிடர்கள் தங்கள் மூதாதையர் நாகரிக மற்றகாட்டுமிராண்டிகள் என்பதை ஒப்புக்கொண்டுதானே ஆகவேண்டும்? தங்களுக்குப் பெருமை மிகுந்த வரலாறு இருந்ததாக இவர்கள் எப்படி மார்தட்டிக்கொள்ளமுடியும்.? இவர்களின் வரலாறே கால்டுவெல்லிடமிருந்துதானே தோன்றுகிறது.?

கால்டுவெல்லின் மொழியியல் ஆய்வே கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் செயலின் ஒரு அங்கம்தானே தவிர திராவிட இனத்தைப் பெருமைப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டதன்று. ஆரியர்கள் ஐரோப்பியத்தொடர்பு கொண்டவர்கள் என்று கருதப்பட்டதால் திராவிடர்கள் ஆரியர்களைவிடக் கீழானவர்கள் என்றே கால்டுவெல் கருதினார். “ஆரியர்கள் வந்து அவர்களிடம் நாகரிகத்தை போதித்ததுடன் ஜாதிப் பிரிவினையையும் தங்கள் பண்பாட்டையும் அவர்களிடம் புகுத்தித் தங்களுக்குக் கீழானவர்களாகவே அவர்களை வைத்திருந்தார்கள். அதனால் திராவிடர்கள் தங்கள் மொழியின் தனித்தன்மையையும் தங்களது பண்பாட்டின் தனித்தன்மையையும் இழந்து நின்றார்கள்.”என்று அவர் திட்டவட்டமாக போதித்தார்.இதற்கெல்லாம் கால்டுவெல் சொன்ன தீர்வு என்னவென்றால் தென்னாட்டவர்கள் ஸம்ஸ்க்ருதத்தின் தாக்கத்தை முழுமையாக அகற்றவேண்டும்.தங்கள் பண்பாட்டின் மூல வேரை விவிலிய சட்டங்களின் உதவியோடுதான் தேடி அடைய வேண்டும் என்பதே.ஆன்மிக விஷயத்தில் எவற்றையெல்லாம் கிறிஸ்தவம் ஏற்றுக்கொள்கிறதோ அவையெல்லாம் திராவிடர்களின் உண்மையான பூர்விக அடையாளம்.எவற்றைக் கிறிஸ்தவம் ஏற்றுக்கொள்ளாதோ அவையெல்லாம் வந்தேறி பிராம்மணர்கள் இங்கு விதைத்த மூட நம்பிக்கைகள் என்பதால் திராவிடத்தமிழர்கள் அவற்றை ஒதுக்கிவிடவேண்டும்.உதாரணமாக உருவ வழிபாட்டை கிறிஸ்தவர்கள் ஏற்பதில்லை.ஆனால் அவ்வழிபாடு பரவலாகத் தமிழர் பண்பாட்டில் காணப்படுகிறது.இதைக் கால்டுவெல் எப்படி விளக்குகிறார் என்றால் “தமிழ் மொழியில் காணப்படும் குறைந்த அளவிலான ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை அகற்றிவிட்டால் தமிழ் தூய்மையான செம்மொழி ஆகிவிடும். அதுபோல தமிழ்ப் பண்பாட்டில் பிராம்மணர்களால் புகுத்தப்பட்ட சிலை வழிபாடு போன்ற மூட நம்பிக்கைகளை அகற்றிவிட்டால் திராவிடத் தமிழர்களின் மதமும் தூய்மைப்பட்டுவிடும்” என்று விளக்கம் கொடுக்கிறார்.அந்தத் தூய்மையான திராவிடத் தமிழ் மதம்தான் கிறிஸ்தவம் என்று காட்டுவதே அவரது தலையாய நோக்கம்.

கால்டுவெல்லின் இவ்வித ஆய்வுக் கருத்துக்களால் கவரப்பட்ட இங்கிருந்த சிலர் பிராம்மண த்வேஷத்தையும் ஸம்ஸ்க்ருத த்வேஷத்தையும் வளர்த்துக்கொண்டு தமிழ் இனம், தமிழ் மொழி, தமிழ் சமயம் என்ற தனிப்பட்ட கருத்துருவங்களை ஏற்படுத்த முனைந்தார்கள்.அந்தத் தனித்துவத்தை முதன் முதலில் ஏற்படுத்தியவர் வேதாசலம் பிள்ளை என்ற மறைமலை அடிகள்.இவர் தனித்தமிழ் இயக்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி வேறு மொழிச்சொற்கள் கலவாத தமிழைப் பயன்படுத்தவேண்டும் என்ற கொள்கையைப் பரப்பினார். அதனால்தான் வேதாசலம் என்ற தனது வடமொழிப் பெயரைக்கூட மறைமலை என்று மாற்றிக்கொண்டார். கால்டுவெல்லின் ஆய்வுக்கருத்துக்களுக்கு உருவம் கொடுக்க முன்வந்த முதல் தமிழர் இவர்தான்.கால்டுவெல் சொன்னபடியே இவர் வடமொழியையும் பிராம்மணர்களையும் வெறுத்து ஒதுக்கினார். வடமொழி வேத இலக்கியக் கலப்பற்ற சைவமே தமிழரின் உண்மையான தூய்மையான சைவம் என்ற கொள்கையை உடையவர் மறைமலை.இவரது நூல்களிலும் பிராம்மண த்வேஷம்,ஸம்ஸ்க்ருத த்வேஷம் என்ற விஷத்தைக் கொட்டியிருக்கிறார்.1923 மார்ச் 22-ஆம் தேதி இவர் நெல்லூர் சென்றிருந்தபோது அப்பகுதியில் பிராம்மணர்கள் அதிகம் வாழ்வதைக் கண்டு பொறுக்காமல், “ இப்பகுதியில் பிராம்மணர்கள் செல்வாக்கு அதிகம்.ஓ!எப்போது பிராம்மணர்கள் இந்தியாவில் அவர்கள் இருந்த இடம்கூடத்தெரியாதவாறு ஒரேயடியாகப் பூண்டோடு ஒழிக்கப்படுவார்களோ!” என்று எழுதினார்.

இந்த மறைமலை வேளாள குலத்தைச் சேர்ந்தவர்.இவரது தந்தை சோழிய வேளாளர்.தாய் சேனைத்தலைவர் செட்டியார் சாதியைச்சேர்ந்தவர்.எனினும் தன்னை வேளாளராகவே வெளிப்படுத்திக்கொண்டார் இவர்.கிறிஸ்தவர்கள் ஏற்படுத்திய ஆரிய-திராவிடக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்ட இவர் தனக்கு சாதகமாக அந்தக்கோட்பாட்டை விளக்கினார்.தனது “வேளாளர் நாகரிகம்” என்ற நூலில் “வேளாளர்களே தமிழகத்தின் பூர்வ குடிகள்.அவர்களே திராவிடர்கள். சைவசமயத்தைக் கடைப்பிடித்து சிவ வழிபாடு செய்து வந்த வேளாளர்கள் உயர்ந்த நிலையில் இருந்தபோது ஆரியர்களான பிராம்மணர்கள் இந்திரன் போன்ற சிறு தெய்வங்களையும் ராமன் ,கிருஷ்ணன் போன்ற அரசர்களயும் வழிபட்டார்கள்.போரின் மூலம் வேளாளர்களை வெற்றிகாண முடியாது என்பதை உணர்ந்துகொண்ட பிராம்மணர்கள் சமாதான முறையில் அவர்களை அணுகி வேளாளர்களின் சமய சம்ப்ரதாய முறைகளை நகல் செய்து ஜாதி அமைப்பில் தலைமை இடத்தைப்பிடித்துக்கொண்டனர்”என்று எழுதுகிறார்.வேளாளர்கள் ஆரியக் கலப்பற்ற தூய தமிழர்கள் என்றும் அவர்களின் மதம் சைவ ஸித்தாந்தமே என்றும் அடிக்கடி கூறுவார்.ஆனால் உண்மை வேறுவிதமாக உள்ளது.மெய்கண்டாரின் “சிவஞான போதம்”என்ற நூல்தான் சைவஸித்தாந்தக் கோட்பாடுகளை முறைப்படி சொல்லும் நூல்.இது ரௌரவ ஆகமம் என்ற வடமொழி நூலில் உள்ள 12 சூத்திரங்களின் தமிழ் மொழிபெயர்ப்புதான்.இந்த ஸம்ஸ்க்ருத சூத்திரங்கள் தான் சைவ ஸித்தாந்தத்துக்கே அடிப்படை.

இந்து சமயத்தின் ஒரு அங்கமே சைவம் என்பதையும் தமிழும் வடமொழியும் ஒரே பண்பாட்டின் இரு கூறுகள் என்பதையும் இந்த மறைமலை ஏன் ஏற்கத்தவறினார்? ஏனெனில் கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த தனித்தமிழ்க் கொள்கையும் அவர்கள் பிரபலப்படுத்திய பிராமணத்வேஷமும் ஸம்ஸ்க்ருத த்வேஷமும் மறைமலைக்கு மிகவும் பிடித்துவிட்டது.நாத்திகரும் திராவிடக் கழகத்தை நிறுவியருமான ஈ.வே ராமசாமியுடன் நல்லிணக்கமாக இருந்தவர் இவர்.ராமசாமி ராமன், கிருஷ்ணன் போன்ற வைணவ தெய்வங்களை இழிவுபடுத்தும்போதெல்லாம் அமைதியாகக் கேட்டு ரசித்துக்கொண்டிருந்த இந்த மறைமலை, சிவனையும் சைவத்தையும் ராமசாமி இழிவுபடுத்தியவுடன் ராமசாமியுடனான தனது தொடர்பைத் துண்டித்துக் கொண்டுவிட்டார். அவ்வளவு சிறந்த “பண்பாளர்”இவர்.இதை ஏன் இங்கு சொல்லவேண்டி வந்ததென்றால் இவை அனைத்துக்கும் காரணம் கால்டுவெல் விதைத்த விதைதான் என்பதைத் தெளிவுபடுத்தவே.

மறை மலைக்குப்ப்பின் அவரது அடிச்சுவட்டைப் பின்பற்றித் தனித்தமிழ் இயக்கம் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது,இன்று இந்த இயக்கத்தில் முதன்மைப் பொறுப்பில் இருப்பவர் சத்தியவேல் முருகன் என்ற மின்னியல் பொறியாளர்.இவர் சைவ ஸித்தாந்த இறையியலாளர் என்று தன்னை அழைத்துக் கொள்கிறார்.வைதிகச் சடங்கு ஸம்ப்ரதாயங்களைக் கடுமையாக இகழ்ந்து பேசும் இவர் மறைமலையைப்போல் பிராம்மணர்களைக் கண்டபடி வசைபாடுவார்.கருணாநிதி ஆட்சியில் தை முதல் நாளைத் தமிழ்ப்புத்தாண்டாக மாற்றியபோது மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றவர் இவர். இவரது இயக்கத்தில் இருக்கும் கலையரசி நடராசன் என்ற மூதாட்டி நாத்திகர்களோடு தொடர்புடையவர்.கிறிஸ்தவர்களின் எண்ணத்தை பூர்த்திசெய்துகொண்டிருக்கும் இந்தத் தனித்தமிழ் இயக்கத்தினருக்கு கிறிஸ்தவ மிஷிணரிகளிடமிருந்து ரகசியமாகப் பணம் வருகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

03- லெமூரியாக் கண்டக் கற்பனை

கால்டுவெல் “திராவிடர்கள்" என்ற தனி அடையாளத்தைத் தங்களுக்குக் கொடுத்தவுடன் இங்குள்ள தமிழர்களுக்கு ஒரே குஷிதான்.அதேநேரத்தில் “காட்டுமிராண்டிகளாக இருந்த தொல்பழம் தமிழர்களான திராவிடர்கள், நாகரிகத்தை ஆரியர்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டார்கள்”என்று கால்டுவெல் சொன்னதுதான் அவர்களுக்குப் பிடிக்கவில்லை.அதற்காக அவர்கள் திராவிட இனத்தின் பூர்வ குடிகள் நாகரிகத்தில் எல்லோரையும் விடமேம்பட்டவர்களாய் ஒரு பொன்னுலகில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிக்க வழிகிடைக்குமா என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில்தான் அவர்களுக்கு ஒரு கற்பனை ஒளி தெரிந்தது. அதாவது “இறை ஞான சபை”(Theosophical Society) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் நிறுவப்பட்டது. தென்னிந்தியாவிலும் அதன் அலுவலகம் இருந்தது. இந்தச்சபை யினர்தான் லெமூரியாக் கண்டக் கற்பனையை உருவாக்கியவர்கள். பல்லாயிரம் வருடங்களுக்குமுன் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த மனிதர்கள் இந்தக் கண்டத்தில் வாழ்ந்ததாகவும் அவர்களே தமிழர்களின் மூதாதையர்கள் எனவும் பெருவெள்ளத்தால் இந்தக் கண்டம் அழிந்துவிட்டதாகவும் ஒரு கதையைக் கட்டிவிட்டார்கள். பழந்திராவிடர்கள் நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்ற கால்டுவெல்லின் கருத்தால் மனம் புண்பட்டிருந்த தமிழ் ஆர்வலர்களுக்கு லெமூரியாக் கற்பனை மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்தது. “அப்பாடா.எப்படியோ நமது இனத்துக்குப் பெருமை சேர்ந்துவிட்டது”என்று பெருமூச்சுவிட்டுப் புளகாங்கிதம் அடைந்தார்கள். தமிழ் இலக்கியங்களில் வரும் கடற்கோள்களால் ஏற்பட்ட அழிவுகள் பற்றிய செய்திகளை இந்த லெமூரியாவோடு இங்குள்ள தமிழார்வலர்கள் முடிச்சுப்போட்டு விட்டார்கள்.ஐரோப்பியக் கற்பனைகளின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ளாமல் இங்குள்ளவர்கள் அவர்கள் சொல்வதையே வேதவாக்காக ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.இந்த லெமூரியக்கற்பனையைத் தங்களது இன அறிவியல் ஆய்வுகளோடு இணைத்து விவிலியம் சொல்லும் மனித குல வரலாற்றின் அடிப்படையில் லெமூரியாவில் வாழ்ந்தவர்களனைவரும் ஆதிக் கிறிஸ்தவர்களே என்று நிலைநாட்டு வதுதான் ஐரோப்பியர்களின் நோக்கம்.அப்படிச் செய்தால்தானே இக்காலத் தமிழர்களிடம் “உங்களுடைய மூதாதையர் எல்லாம் லெமூரியாவில் வாழ்ந்த மிகச்சிறந்த நாகரிகத்தையுடைய ஆதிகிறிஸ்த வர்கள்தான் .தற்காலத்தில் நீங்கள் பிராமணர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி உங்களது பழைய மரபை மறந்துவிட்டீர்கள்.ஆகவே உங்களுடைய மூதாதையரின் சிறந்த மதத்துக்கு மாறுங்கள்”என்று மூளைச்சலவை செய்து மதம்மாற்றமுடியும்! கிறிஸ்தவர்களின் இந்த உள்நோக்கம் புரியாமல் “உள்நோக்கத்தோடு சொல்லப்பட்ட கற்பனையாகவே இருந்தாலும் இருந்துவிட்டுப்போகட்டுமே.நமக்கு ஒரு சிறந்த வரலாறு கிடைத்துவிட்டது,.” என்று நினைத்து மகிழ்ந்தார்கள்/மகிழ்கிறார்கள் இங்குள்ள தமிழபிமானிகள்.பள்ளிகளில் தமிழ்ப்பாடத்திட்டத்தில் இந்தக் கற்பனைக்கோட்பாட்டை சேர்த்து தமிழ்க்குழந்தைகளுக்கு போதிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.தேவநேயப் பாவாணர் என்பவர் ஒரு இந்தியத்தமிழ் கிறிஸ்தவர். இந்த லெமூரியக் கற்பனைக்கோட்பாட்டைக் கால்டுவெல்லின் “திராவிடர்கள் ஆரியர்களால் ஏமாற்றப்பட்டார்கள்” என்ற கருத்தோடு இணைத்தார். இவரது கருத்தை நிரூபிக்கப்பட்ட உண்மையாகவே கருதி த் தமிழ்ப் படிப்புகளில் இணைத்துவிட்டார்கள்.எல்லாவற்றிலும் வர்கப் போராட்டத்தைப் பார்க்கும் மார்க்ஸியவாதிகளுக்கும் இந்த லெமூரியக் கற்பனை ஏற்புடையதாக இருந்தது.

மறைந்த கண்டங்கள் என்ற கருத்துருவம் தவறானது என்றும் அதற்கு ஆதாரமில்லை என்றும் நிலவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்திய பின்பும் இந்த லெமூரியக்கற்பனையில் மூழ்கித் திளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் இக்காலத் தமிழன்பர்கள்.ஐரோப்பியன் கோடு போட்டால் இங்குள்ளவர்கள் ரோடு போட்டுவிடுவார்கள்.ஆய்வு என்ற பெயரில் கற்பனைக்கோட்டைகளைக் கட்டும் கலையை ஐரோப்பியர்களிடமிருந்து கற்றுக்கொண்ட இங்குள்ள பிரிவினை வாதத் தமிழர்கள் தமிழர்களுக்கென்று தனி அடையாளம் தனிமதம் இவற்றைக்கட்டமைக்க வேண்டும் என்பதற்காக ஆதாரமற்ற, கற்பனைவளம் மிகுந்த கட்டுக்கதைகளை வண்டி வண்டியாக எழுதிக்குவிக்கிறார்கள். அடிப்படை ஆதாரம் எதுவும் இன்றி சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தங்கள் எண்ணத்துக்கு அநுகூலமாகத்திரித்து ஆதித்தமிழர் சமயம் ஆசீவகம் தான் என்று சமீப காலத்தில் ஒருவர் நூல் எழுதினார்.பண்டைத்தமிழர்கள் நாத்திகர்கள்தான் என்றும் சில “ஆய்வு”முடிவுகள் சொல்கின்றன. இதுதவிர திராவிடத்தமிழனின் மேன்மையை நிரூபிக்க பூமியில் அகழ்வாய்வுகள் செய்யப்படுகின்றன.பூமிக்கடியில் கிடைக்கும் ஒருசில ஓட்டாஞ்சல்லிகளை எடுத்துவைத்துக்கொண்டு இது பண்டைத்தமிழன் பயன்படுத்தியது,10000 வருடங்களுக்கு முற்பட்டது” என்று சொல்லிப் பூரிப்படைகிறார்கள்.அரசாங்கச் செலவில் ஆதிச்சநல்லூர்,கீழடி போன்ற இடங்களில் இவ்வாய்வு நடைபெறுகிறது. கீழடி ஆய்வுகளைப் பார்வையிட தி.மு.க எம்.பி கனிமொழி சென்றபோது அவருடன் ஒரு பாதிரியாரும் செல்கிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்று இதுவரை நான் முன்வைத்த விஷயங்களின் அடிப்படையில் எல்லோருக்கும் புரியும்.கால்டுவெல் விதைத்த விஷவித்துதான் இப்படியெல்லாம் விஷ வ்ருக்ஷமாக வளர்ந்து நிற்கிறது.

ஐரோப்பியர்கள் தங்களை மேம்பட்ட ஆரிய இனத்தைச்சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்திக்கொண்டிருந்த போது கால்டுவெல் ஏன் பிராம்மணர்கள்மீது வெறுப்பை உமிழ்ந்தார் எனில் அவரது மதமாற்ற முயற்சிக்கு முக்கியத் தடையாக இருந்தவர்களே பிராமணர்கள்தான்.தங்கள் நோக்கத்துக்குத் தடையாக இருப்பவர்க்ள் யாராக இருந்தாலும் அவர்களை இழிவுபடுத்துவது என்பது கிறிஸ்தவர்களின் கொள்கை.திருநெல்வேலிப்பகுதியில் உள்ள மக்களை மதம்மாற்ற கால்டுவெல் அங்கு சென்றபோது அங்குள்ள நாடார் ஸமூகத்தினர் மதம் மாற மறுத்துவிட்டனர்.எவ்வளவோ முயற்சித்தும் கால்டுவெல்லால் அவர்களை மதம்மாற்ற முடியவில்லை.அதனால் அப்பகுதி நாடார்கள் மீது கோபமடைந்த கால்டுவெல்,நாடார் சமூகத்தைப்பற்றி மிகவும் கீழ்த்தரமாக இழிவுபடுத்தி எழுதியிருந்தார்.இந்துமதம் ஆரிய சூழ்ச்சிகள் நிறைந்தது என்றும் திராவிடத்தமிழர்கள் இந்துத்வ சிந்தனையிலிருந்தே விலகிவிடவேண்டும் என்றும் திராவிடத்தமிழர்களுக்கு என்று தனித்தன்மைவாய்ந்த ஒரு மதம் இருந்தது என்றும் அம்மதம் கிறிஸ்தவ மதக்கொள்கைகளோடு தொடர்புகொண்டது என்றும் தான் சென்ற இடங்களிலெல்லாம் கால்டுவெல் பிரச்சாரம் செய்தார்.

கிறிஸ்தவர்களின் பொதுவான எண்ணவோட்டம் பற்றிக்கூற வேண்டுமானால், “கிறிஸ்தவமே உலகில் உள்ள எல்லாமதங்களையும் விடச் சிறந்த மதம்.உலக மதங்களின் வரலாறு,மனித இனங்களின் வரலாறு,மொழிகளின் வரலாறு இவை அனைத்தையும் விவிலியக் கருத்துக்களின் அடிப்படையில்தான் கொள்ளவேண்டும்.” என்பதே அவர்களின் எண்ணம்.இந்த நிலைப்பாட்டுடன்தான் அவர்கள் மதம்பரப்பும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.விவிலியச்சட்டத்தோடு பொருந்தும் விஷயங்கள் மற்றவர்களின் மதங்களில் இருந்தால் அவற்றை கிறிஸ்தவமயமாக்கிவிடுவதும் பொருந்தாத விஷயங்கள் இருந்தால் அதை மூட நம்பிக்கை என்று ஒதுக்குவதும் அவர்களது வழக்கம்.

கால்டுவெல் இந்தியா என்ற ஒரு மொத்த தேசிய நீரோட்டத்திலிருந்து தென்னிந்திய மக்களை இனரீதியாகப் பிரித்துத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்.அதே நேரத்தில் வில்லியம் ஜோன்ஸ் போன்றவர்கள் ஒட்டுமொத்த இந்து மதத்தையே கபளீகரம் செய்து கிறிஸ்தவத்துக்குள் அடைக்க முயன்றுகொண்டிருந்தனர்.தமிழ்நாட்டு மக்களை மதம்மாற்றத் தமிழகம் வந்த பாதிரியார்கள் எப்படித்தமிழைக் கற்றுக்கொண்டார்களோ அதைப்போல வடமொழியில் உள்ள இந்துமதக் கருத்துக்களைத் திரித்து கிறிஸ்தவமயமாக்கப் பல கிறிஸ்தவர்கள் ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொண்டார்கள்.அவர்களில் முக்கியமானவர் சர்.வில்லியம் .ஜோன்ஸ்(Sir William Jones-1746-1794).இவர் ஸம்ஸ்க்ருதத்தை வழுவறக் கற்றவர்.ஸம்ஸ்க்ருத மொழியின் மேன்மை குறித்து இவர் பல சந்தர்ப்பங்களில் பேசியிருந்தாலும் இந்தியாவைப்பற்றிய இவரது பார்வை விவிலியப் பார்வையாகவே இருந்தது.பல மொழிகள் பேசும் இந்திய மக்களை இவர் விவிலிய அடிப்படையில் பல இனங்களாகப் பிரித்தார். கிறிஸ்தவ மதம் ஒன்றே உலகில் மிகத்தொன்மையானதும் மேன்மையானதுமான மதம் என்பதில் இவர் உறுதியாக இருந்தார்.உலகில் உள்ள அனைத்துப் பண்பாடுகளுக்கும் மூல புருஷன் நோவாதான் என்றும் ஹாம்,ஷெம்,ஜாப்பேது என்ற அவனது மூன்று புதல்வர்களில் ஹாமின் சந்ததியினர்தான் இந்துக்கள் என்றும் கூறினார் ஜோன்ஸ்.தனது ஸம்ஸ்க்ருத இலக்கிய அறிவைப்பயன்படுத்தி வடமொழியில் உள்ள புராண இதிஹாஸ நிகழ்வுகளையும் நபர்களையும் விவிலியக்கதைகளோடு ஒப்பிட்டுக் காட்டினார்.கிறிஸ்தவத்தின் முத்தன்மைக் கொள்கையின் திரிந்துபோன இழிந்த வடிவம்தான் இந்து மதத்தில் உள்ள மும்மூர்த்திக் கொள்கை என்றார் இவர்.இந்து தெய்வமான ராமரே விவிலியம் சொல்லும் ரஹ்மா என்றும் ராமனின் புதல்வனான குசனே ஹாமின் பேரனான கூஸா என்றும் நோவாவின் ப்ரளயத்துக்குப் பிறகே ராமர் தலைமையில் மக்கள் இந்தியாவில் குடியேறினர் என்றும் ஸ்வாயம்புவ மனுவே ஆதாம் என்றும் வைவஸ்வத மனுவே நோவா என்றும் நோவாவின் படகில் இருந்த எட்டுமனிதர்களே ஸப்த ரிஷிகளும் மனுவும் என்றும் பேபல் கோபுரத்தைக்கட்டிய ஹாமின் வாரிசான நிம்ரோத் என்ற மன்னனே விஷ்ணுவின் நரசிம்மாவதாரம் என்றும் கூறி இந்துக்கள் தங்களின் புராணக்கதைகளை விவிலியத்திலிருந்தே காப்பியடித்து தங்கள் நடையில் எழுதிக்கொண்டார்கள் என்று திட்டவட்டமாகக் கூறினார். விவிலியக் கதைகளோடு பொருத்தமுடியாத இந்துமத விஷயங்களைப் பொருந்தும்படி திரிப்பது அல்லது புராணக்கற்பனை என்று சொல்லி நீக்கிவிடுவது என்பது இவரது கொள்கை.எவற்றை விவிலியத்தோடு ஒத்துப்போவதாக ஜோன்ஸ் கருதினாரோ அவைமட்டும் இந்தியர்களின் வரலாறாகக் கருதப்பட்டது.ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஆதிகிறிஸ்தவர்களின் வாரிசுகளாகக் காட்டவேண்டும் என்பதே ஜோன்ஸின் நோக்கம்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

 04- நொபிலியின் கற்பனை வேதம்

          19-ஆம் நூற்றாண்டின் மிஷினரிகள் கிருஷ்ண வழிபாடு கிறிஸ்துவின் காலத்துக்குப் பின்தான் இந்தியாவில் தோன்றியது என்று ஒருகதைவிட ஆரம்பித்தார்கள். “கிருஷ்ணன் கதைகள்தான் அதிக அளவில் கிறிஸ்தவத்திலிருந்து கடன்வாங்கப்பட்டவை என்ற வில்லியம் ஜோன்ஸின் கருத்தை ஆதாரமாக்கித் தங்களின் இந்தக்கருத்தை முன்வைத்தார்கள். வரலாற்று ஆய்வாளர்களால் இக்கருத்துக் கண்டிக்கப்பட்டுவிட்டது.காலாவதியாகிப்போன இந்தக் கருத்தை இன்றும் மிஷினரிகள் தங்களின் மதமாற்றப் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஸ்ரீக்ருஷ்ணரின் வரலாறு குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் தெளிவான கருத்தைக் கூறியுள்ளனர். கொலம்பியா ருட்ஜெர்ஸ் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான எட்வின் ப்ரையண்ட்(Edwin Bryant) ஏசுவுக்கு முந்தைய காலக்கட்டத்திலேயே அதாவது கி.மு நான்காம் நூற்றாண்டிலேயே க்ருஷ்ண வழிபாடு இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார்.மேலும் அவர் ஏசு கிறிஸ்து வாழ்ந்ததாகச் சொல்லப்படும் காலத்துக்கு சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கிருஷ்ண பக்திக்கான ஆதாரங்களை கிரேக்கர்களே அளித்திருக்கிறார்கள் என்று குறிப்பிடுகிறார். அதற்கு ஆதாரமாக இந்தியாவில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள க்வாலியரிலிருக்கும் பிஸ்லாவுக்கு அருகில் உள்ள பெஸ்நகர் ஹெலியோடோரஸின் கருடஸ்தம்பத்தைக் காட்டுகிறார்.இந்த ஸ்தம்பம் (தூண்) ஹெலியோடோரஸ்(Heliodorus) என்ற கிரேக்கரால் கி.மு.100-ஆம் அண்டு எழுப்பப்பட்டது.இவர் ஒரு க்ருஷ்ண பக்தர்.அந்த கருடஸ்தம்பத்தில் “தேவதேவனான வாஸுதேவன் எனப்படும் முழுமுதற் கடவுளுக்காக இந்த கருடஸ்தம்பம் ஹெலியோடோரஸ் என்பவரால் எழுப்பப்பட்டது” என்ற பொருளுள்ள வரிகள் பிராம்மி எழுத்தில் காணப்படுவதாகத் தொல்லியல் துறை ஆவணம் தெரிவிக்கிறது.ஆகவே கிறிஸ்தவர்களின் எண்ணம் க்ருஷ்ணன் விஷயத்தில் மண்ணைக் கவ்விவிட்டது.

மதம் மாற்றும் விஷயத்தில் உலகில் உள்ள மற்ற மதங்களைவிட கடலளவு தத்துவ சாஸ்த்ரங்களைக் கொண்ட இந்து மதத்தை எதிர்கொள்வதே கிறிஸ்தவர்களுக்குப் பெரும் சவாலாக இருந்தது.அதனாலேயே அவர்கள் தங்கள் பணிக்கு இந்தியாவை முக்கியக் கேந்திரமாகக் கொண்டிருந்தார்கள்.தங்கள் எண்ணத்தைப் பூர்த்திசெய்துகொள்ள எத்தகைய யுக்தியையும் அவர்கள் மேற்கொள்வார்கள்.எந்த எல்லைக்கும் செல்வார்கள்.இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை மதம் மாற்றுவதில் பெரிய தடையாக இருப்பவர்கள் பிரம்மணர்களே என்பதை மிகத்தெளிவாகப் புரிந்துகொண்ட அவர்கள் சிலநேரங்களில் பிராம்மண வேடம் போடக்கூடத் தயங்கியதில்லை.கிறிஸ்தவ மதக்கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும்போது தங்களை யாரும் மிஷினரிகள் என்று அறிந்துகொள்ளாமல் இருக்க இப்படிப்பட்ட மோசடிவேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ராபர்ட்டொ டி நொபிலி(Roberto de Nobili-1577-1656) என்கிற ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் தன்னை ஒரு பிராம்மணராகக் காட்டிக்கொண்டு ஒரு பெரிய மோசடிவேலையைச் செய்தார்.நான்கு வேதங்களில் இருக்கும் சில விஷயங்களைத் திரித்து கிறிஸ்தவமயமாக்கி அதற்கு 'ஐந்தாவது வேதம்' என்று பெயர்கொடுத்தவர் இவர்.பாரதத்தின் தொன்மையான ஆன்மிகப் பாரம்பரியத்தைக் கிறிஸ்தவத்தின் ஒரு இழிந்த உட்பிரிவாகக் காட்ட முயன்ற மோசடிப் பேர்வழிகளில் இவர் முக்கியமானவர். இவரது கண்டுபிடிப்பான ஐந்தாவது வேதத்துக்கு “ஏசுர் வேதம் “(Ezour Veidam) என்ற பெயர் கொடுக்கப்பட்டது.இதற்கு ஐரோப்பாவில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.சிறந்த அறிஞர் என்று பிரசித்தி பெற்ற வால்டேர் கூட இந்தப் புனைவு வேதத்தைப் புகழ்ந்து இதை இந்தியாவின் புனித நூல்களின் வரிசையில் சேர்த்தார். 1774-ல் இந்தியாவுக்கு வந்த பியர் ஸோனேராட்(Pierre Sonnerat) என்ற ஃபிரெஞ்ச் அறிஞர் நொபிலி கண்டுபிடித்த இந்த “ஐந்தாவது வேதம்”ஒரு மோசடி நூல் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.தனது இந்தியப் பயணம் குறித்த குறிப்பில்,

“இந்த நூல் ஆசிரியர் எல்லாவிஷயங்களையும் கிறிஸ்தவத்துக்குள் அடைக்க முயற்சிக்கிறார்.இதை உருவாக்கியவர் பிராம்மண வேடத்தில் இருக்கும் மிஷினரியே என்பதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளாமல் இருப்பதற்காகச் சில தவறான விஷயங்களையும் இதில் புகுத்தியிருக்கிறார்.வால்டேரும் மற்ற சிலரும் இந்த நூலை மதிப்புக்குரியதாக்கி இந்தியப் புனிதநூல் வரிசையில் சேர்க்கத் தகுதியற்ற நூல் இது”என்று எழுதியிருகிறார்.மேற்கத்திய மோசடிப் பேர்வழிகளின் மத்தியிலும் விபீஷணர்கள் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கு ஒரு ஆறுதல் தரும் விஷயம்.இந்த ஐந்தாவது வேத மோசடிவேலை எடுபடாமல் தோல்வியில் முடிந்தது.நொபிலிக்குக் கெட்டபெயரும் இதனால் வந்து சேர்ந்தது.இந்த மோசடி நடந்து சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மாக்ஸ் முல்லர் நொபிலியின் இந்தச் செயலைப் புகழ்ந்து கூறினார்.இத்தகைய சமய வெறிபிடித்த மாக்ஸ் முல்லரை,அவர் நமது வேதங்களை மொழிபெயர்த்தார் என்பதற்காகவே விவேகாநந்தர் “மோக்ஷ முல்லர்” என்று அழைத்துப் பெருமைப்படுத்தியது துரத்ருஷ்டவசமானது.

இந்த மோசடி தோல்வியுற்ற பின்னும் கிறிஸ்தவ மிஷினரிகள் கிறிஸ்தவமே உண்மையான வேதமதம் என்பதை மக்களிடம் பிரச்சாரம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இந்தப் பொய்ப் பிரச்சாரம் ஓரளவுக்கு மக்களிடம் போய்ச்சேரத்தான் செய்தது.இன்றும் தமிழகத்தின் தென்மாவட்ட கிராமப்புற மக்கள் வேதமதம் என்றால் அது கிறிஸ்தவம்தான் என்று நினைக்கிறார்கள். பைபிளை வேதப்புத்தகம் என்றும் சர்ச்சை வேதக்கோயில் என்றும் குறிப்பிடுவதைக் காணலாம்.எங்கள் பகுதியில் உள்ள இந்துக்கள் கிறிஸ்தவர்களைக் குறிப்பிடும்போது “அவுக வேதக்கார வீடு”என்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

நொபிலியின் இந்த மோசடியின் தொடர்ச்சியாகப் பல கிறிஸ்தவர்கள் இன்றும் பல வேதச்சொற்களுக்குக் கிறிஸ்தவ வடிவம் கொடுத்து இந்துக்களைக் குழப்பி வருகின்றனர்.உதாரணமாக புருஷ ஸூக்தத்தில் வரும் “ப்ரஜாபதி” என்ற சொல்லை ஏசு கிறிஸ்துவோடு இணைத்து ஏசு கிறிஸ்துவின் வருகையை இந்திய வேதங்கள் முன்கூட்டியே அறிவித்துவிட்டன என்றும் ஏசு கிறிஸ்துவின் வருகைக்குப் பிறகுதான் வேதமதம் முழுமை பெற்றது என்றும் பரப்பிவந்தார்கள்.இவர்கள் கிறிஸ்தவத்தில் ஒரு பிரிவான “ப்ரஜாபதி” மதத்தவராம்.இந்துக்களின் புண்யத்தலங்களிலும் இந்துக்கள் எதிர்ப்புத்தெரிவிக்கும் இடங்களிலும் இந்தப் பிரச்சாரம் பெரிய அளவில் செய்யப்பட்டது.இந்த பிரச்சாரங்களுக்கு தி.மு.க அமைச்சர்கள் தொடர்ந்து ஆதரவளிப்பது வழக்கம்.தி.மு.கவின் கடந்த கால ஆட்சியில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜன் கன்னியாகுமரியில் நடந்த இந்தப் பிரச்சாரக் கூட்டத்துக்கு ஆதரவளித்தார் என்னும் விஷயம் தி.மு.க-வின் உண்மை முகத்தைக்காட்டுகிறது.

இதுதவிர இந்துக்களின் ஆலய வழிபாடு,சமூகப்பழக்கங்கள் மற்றும் பண்டிகைகள் இவற்றுக்கும் கிறிஸ்தவ வண்ணம் பூச ஆரம்பித்துவிட்டார்கள்.இந்து ஆலயங்களில் நடப்பதுபோல் சர்ச்சுகளில் ஸ்வாமி புறப்பாடு,த்வஜ்ஸ்தம்ப வழிபாடு இவையெல்லாம் நடக்கிறது. விஜயதசமியை ஒரு குழந்தைக்குக் கல்வித் தொடக்க நாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள்.அன்றைய தினத்தில் நெல்லைத் தரையில் பரப்பி குழந்தையின் வலதுகை ஆள்காட்டிவிரலைப் பிடித்து “ஹரி நமோத்து சித்தம்”என்று ஆசிரியர் எழுதுவது வழக்கம்.இந்த விஜய தசமியைக் கிறிஸ்தவமயமாக்கி அரிசியைக்கீழே பரப்பி “ஏசுவே தெய்வம்”என்று குழந்தையின் விரலைப்பிடித்து எழுத வைக்கிறார்கள். விஜயதசமிக்கு ஒருகிறிஸ்தவ வரலாற்றுப் பின்னணியையும் கொடுத்தார்கள்.அதாவது அன்றைய தினத்தில்தான் எஹோவா ஏசுவுக்கு ஞானத்தை அளித்தாராம்.இந்து மதத்தில் கல்விக்கும் செல்வத்துக்கும் உரிய கடவுளரான முறையே ஸரஸ்வதியையும் லக்ஷ்மியையும் நீக்கிவிட்டு அவ்விடத்தில் கிறிஸ்தவ அடியார்களான பவுலையும் செபாஸ்தியனையும் வைத்தார்கள்.இதைவிட ஒருபடி மேலே போய் இந்துக்களின் மஹாசிவராத்ரி என்பது ‘மெசய்யா ராத்ரி”என்பதன் திரிபுதான் என்றார்கள்.அந்த நாளில்தான் ஏசு தன் சீடர்களைத் தூங்காமல் இருக்கச் செய்தாராம்.தென்னிந்தியப் பகுதிகளில் இந்துக்களின் மரபுவழியான பண்டிகைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் எல்லாம் மிஷினரிகளால் எப்படி கிரிஸ்தவ வண்ணம் பூசப்படுகின்றன என்பதற்கு இவையெல்லாம் சில உதாரணங்கள்.அதாவது இந்துக்களின் பழக்க வழக்கங்கள்,பண்டிகைகள் அனைத்துமே கிறிஸ்தவத்திலிருந்து வந்ததுதான் என்பதை நிலைநாட்டுவதற்கான முயற்சிதான் இது.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

  07- செயின்ட் தாமஸ் கட்டுக்கதை

 பரதநாட்டியம் இந்திய மரபியலில் உள்ள ஒரு கலை.இந்தக்கலை ஒழுக்கக் கேட்டை விளைவிப்பது என்று 19-ஆம் நூற்றாண்டுவரை கிறிஸ்தவர்கள் கூறிவந்தார்கள்.ஆனால் இந்துக்கள் அவர்களது விமர்சனத்துக்குத் தக்க பதிலடிகொடுத்து பரத நாட்டியத்தை ஊக்குவித்தனர்.1936-ல் ருக்மிணிதேவி அருண்டேல் என்பவர் சென்னையில் “கலாக்ஷேத்ரா”என்ற ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தி அதன்மூலம் இசை,நடனம் முதலியவற்றைக் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார்.அந்த நிறுவனத்தில் எல்லோரும் இசை நடனம் இவற்றில் பயிற்சி பெற்றனர்.தங்களது விமர்சனத்துக்கும் மீறி பரதநாட்டியம் ஊக்குவிக்கப்படுவதைக்கண்ட கிறிஸ்தவர்கள் பரதநாட்டியத்துக்குக் கிறிஸ்தவச்சாயம் பூச முற்பட்டனர்.பரத நாட்டியத்தில் முக்கிய தேவதையாக வழிபடப்படுபவர் நடராஜ வடிவிலான சிவன். பரதநாட்டியம் திராவிடக்கலை என்றும் சிவன் திராவிடன் என்றும் கூறி தங்களது வழக்கமான புனைசுருட்டு வேலையை ஆரம்பித்துவிட்டனர்.ஏற்கனவே திராவிடர்களின் ஆதிமதம் கிறிஸ்தவம்தான் என்று சொல்லிவரும் கிறிஸ்தவ மிஷினரிகள் பரத நாட்டிய தெய்வமான சிவன் திராவிட தெய்வம் என்று கூறுவதன் மூலம் பரத நாட்டியத்தைக் கிறிஸ்தவக் கலையாகக் காட்டமுற்பட்டனர்.1977-ல் ஒரு கத்தோலிக்கப்பாதிரியாரால் கலைக்காவேரிக் கலைக்கல்லூரி ஒரு பண்பாட்டு நிறுவனமாக நிறுவப்பட்டது. இந்தக்கலைக் கல்லூரியில் கிறிஸ்தவர்கள் பரதநாட்டியம் பயில்கிறார்கள்.இங்குள்ள் இந்து குருமார்களே பயிற்சியளிக்கிறார்கள்.பாவ முத்திரைகளில் கிறிஸ்தவ சமயத்துக்கு ஏற்றவகையில் முத்திரைகள் கற்பிக்கப்பட்டுப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.ஏசுவின் பாடல்களுக்கு நடனம் கற்பிக்கப்படுகிறது.இக்கல்லூரியில் பயின்று பட்டம்பெற்று வெளிநாடு சென்று பரதநாட்டியம் ஆடியவர்களும்/ஆடுபவர்களும் உண்டு.

கிறிஸ்தவர்கள் சிவனை திராவிட தெய்வமாக்கியவுடனே இங்குள்ள திராவிடத்/தனித்தமிழ்க்கும்பல்கள் “சிவன் தமிழ்த் தெய்வமே.சிவ வழிபாடு தமிழில்தான் செய்யப்படவேண்டும்.கோயிலில் அர்ச்சனை முதல் கும்பாபிஷேகம் வரை தமிழில்தான் மந்திரங்கள் சொல்லவேண்டும்”என்று சொல்லிக் கோயில்களுக்கு முன் போராட்டம் நடத்தக்கிளம்பிவிட்டார்கள். இந்தத் தனித்தமிழ்க் கும்பல்களை எந்த லிஸ்டில் சேர்ப்பது? கிறிஸ்தவனின் குள்ள நரிவேலை எப்படி வேலைசெய்கிறது பாருங்கள்.கிறிஸ்தவனின் பார்வையில் தொல்பழம் திராவிடத்தமிழன் கிறிஸ்தவ மதத்தைச்சேர்ந்தவன் என்பதால் சிவனை திராவிடன் என்று சொல்வது சிவனை ஏசுவோடு பிணைப்பதற்கே.இதுபுரியாமல் இங்குள்ளவர்கள் “தமிழர் தெய்வம் சிவனே”என்று சொல்லி இந்தியச்சிந்தனையிலிருந்து சிவனைப் பிரிக்க நினைக்கிறார்கள்.இது எவ்வளவு ஆபத்தில்போய் முடியும் என்பதை இங்குள்ளவர்கள் உணரவில்லையா அல்லது மிஷினரிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு இப்படிக் கூச்சலிடுகிறர்களா என்பதைச் சிந்திக்கவேண்டியிருக்கிறது.

கிறிஸ்தவர்கள் தமிழில் உள்ள சமய இலக்கியங்களிலும் தங்களது மோசடி வேலையைச் செய்திருக்கிறார்கள்/செய்துகொண் டிருக்கிறார்கள்.ஜார்ஜ் உக்லோ போப்(George Uglow Pope-1820-1908) என்பவர் ஒரு பிரசித்திபெற்ற ஒரு கிறிஸ்தவ மிஷினரி.இவர்தான் தமிழில் உள்ள சமய இலக்கியங்களின் இந்துத் தன்மையை நீக்கி அவற்றுக்குக் கிறிஸ்தவ வடிவம் கொடுத்தவர்.இவரது முதல் மொழிபெயர்ப்பு நூல் திருக்குறள்.திருக்குறளை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.மனித இனத்தின் சமூக,பாண்பாட்டு,வாழ்வியல் ஒழுக்கங்களைக் கூறும் ஒரு சிறந்த நீதிநூல்தான் தமிழில் உள்ள திருக்குறள்.இந்த நூல் கிறிஸ்தவ நெறிகளை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது என்றார் போப்.இந்நூலுக்குப் பெருமை சேர்ப்பதாகச்சொல்லிக்கொண்டு,இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த போப் தனது மொழிபெயர்ப்பின் முன்னுரையில் “திருவள்ளுவர் ஏசுவின் மலைப்பிரசங்கத்தைக் கிறிஸ்தவமதப் பிரச்சாரகர்களிடமிருந்து கேட்டறிந்தபின்தான் திருக்குறளை இயற்றினார் என்று எழுதியிருக்கிறார்.திருக்குறளின் கருத்துக்கள் கிறிஸ்தவ மூலங்களிலிருந்து பெறப்பட்டவைதான் என்று திட்டவட்டமாகக் கூறினார் போப்.அதேநேரத்தில் கால்டுவெல் திருக்குறளைச் சமணநூல் என்று கூறினார்.ஏனெனில் திருக்குறள் போன்ற அழகான நேர்த்தியான நூலைப்படைக்கும் ஞானம் தொல்பழம் தமிழர்களுக்கு இல்லை என்று கால்டுவெல் கருதினார். கால்டுவெல்லைப் பொருத்தவரை பழந்தமிழர்கள் ஞானம்,பண்பாடு இவையெல்லாம் இல்லாத காட்டுமிராண்டிகளே.சரி.இந்தநூலைச் சமணநூல் என்று சொல்வதால் கால்டுவெல்லுக்கு என்ன லாபம் என்றால், அவர் இந்துமதத்தில் எதிர்கொள்ளவேண்டியிருந்த அளவிற்கு சவால்கள் சமண மதத்தில் எதுவும் இல்லை.கிறிஸ்தவர்களுக்கு சமணமதம் ஒரு பொருட்டே இல்லை.அதை நாத்திக மதம் என்று ஒரே வரியில் தள்ளிவிடுகின்றனர். திருக்குறளை இந்து மதத்திலிருந்து விலக்குவதற்கான யுக்தியே இது.திருக்குறளைப் பற்றிய கால்டுவெல்லின் பார்வை இதுவென்றால் 19-ஆம் நூற்றாண்டின் மற்ற மிஷினரிகள், G.U. போப்பின் திருக்குறள் பற்றிய கற்பனைப்புனைவுகளை ஆதரித்தனர். இந்தப்புனைவுகளை மேலும் வலுப்படுத்தக் கற்பனையான ஒரு ஆதாரத்தை உருவாக்கினார்கள் அவர்கள்.அதுதான் செயின்ட் தாமஸ் இந்தியா வந்ததாகச் சொல்லப்படும் புனைசுருட்டுக் கதை.செயின்ட் தாமஸ் என்பவர் ஏசுவின் சீடர்களில் ஒருவரான கிறிஸ்தவ மதபோதகர்களில் ஒருவர்.அவர் கி.பி. 52-ல் மதப்பிரச்சாரத்துக்காகத் தமிழகத்துக்கு வந்தார் என்றும் திருவள்ளுவருக்கு ஞானஸ்நாநம் செய்வித்து அவரை கிறிஸ்தவராக மாற்றினார் என்றும் தாமஸிடம் பல ஞானக்கருத்துக்களைக் கேட்ட பின்பே திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார் என்றும் பரங்கிமலை எனப்படும் செயின்ட் தாமஸ் மௌன்டில் இந்து மதத்தைச்சேர்ந்த ஒரு பிராமணரால் கொல்லப்பட்டார் என்றும் கதை விட்டுக்கொண்டிருந்தார்கள். இந்தக் கற்பனைக் கதையையே மிஷினரிகள் தங்களின் வலிமையான ஆயுதமாகப் பிடித்துக்கொண்டார்கள்.இதன் மூலம் இந்துப் பண்பாட்டைத் தமிழ்நாட்டிலிருந்து அபகரிக்கவும் ஆன்மிக ரீதியில் தமிழர்களை இந்துக் கலாச்சாரத்திலிருந்தும் பண்பாட்டிலிருந்தும் பிரித்தெடுக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.தாமஸ் இந்தியா வந்தார் என்பதையும் அவர் சென்னையில் கொல்லப்பட்டார் என்பதையும் ஆரம்பத்தில் கிறிஸ்தவர்களின் மேலிடமே மறுத்துவிட்டது.பல கிறிஸ்தவ அறி ஞர்களும் அதற்கு ஆதாரமில்லை என்று கூறிவிட்டனர்.W.W.ஹண்டர்(W..W.Hunter)என்ற கிறிஸ்தவர் செயின்ட் தாமஸ் தென்னிந்தியாவிற்கு வந்து மரணமடைந்தார் என்ற புனைவுக்கதை போர்ச்சுகீசியர்களின் மதவெறியால் எழுந்தது என்று கூறுகிறார்.தாமஸின் மரணம் குறித்து ஒரு அதிகார பூர்வ கத்தோலிக்க வெளியீடு

“கி.பி. 72 ஜூலை 3 ஆம் தேதியன்று அப்போஸ்தலர் இந்த மலையை நெருங்கிக்கொண்டிருந்தபோது சில சென்னாம்பரன பிராம்மணர்கள் ஒரு கோயிலுக்கு பலிக்காகச்சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் தாமஸை தங்கள் வழிபாட்டில் பங்கேற்க அழைத்தார்கள்.தாமஸ் அவர்களது அழைப்பை ஏற்க மறுத்ததுடன் அவர்களது வழிபாட்டுத்தலத்தை சிலுவையால் அழித்தார்.இதனால் ஆத்திரமடைந்த பிராம்மணர்கள் தாமஸை ஈட்டியால் குத்திக் கொன்றனர்” என்று விவரிக்கிறது.செயின்ட் தாமஸ் கொல்லப்பட்ட இடம் என்று சொல்லப்படும் மௌன்டில் உள்ள வழிபாட்டுத்தலத்தில் உள்ள ஓவியமொன்றில் கருப்புத்தோலும் குடுமியும் உள்ள ஒரு மனிதன் பக்தியுடன் வழிபாட்டில் மூழ்கியிருக்கும் தாமஸின் முதுகில் குத்திக்கொல்வதுபோல் காணப்படுகிறது.மார்கோ போலோ தனது குறிப்பில் “தாமஸ் அவரது குடிலுக்கு வெளியே காட்டில் அவருடைய தேவனான இறைவனுக்கு பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அவரைச்சுற்றி மயில்கள் நின்று கொண்டிருந்தன.அப்போது உருவ வழிபாடு செய்யும் காவி என்கிற சாதியைச்சேர்ந்த ஒருவன் ஒரு மயிலைக்கொல்லத் தனது வில்லிலிருந்து விடப்பட்ட அம்பு தாமஸைக்கொன்றுவிட்டது”என்று எழுதியிருக்கிறார்.

தாமஸின் மரணம் குறித்துச் சொல்லும் கத்தோலிக்கச் சபையின் கருத்தும் செயின்ட் தாமஸ் மௌன்டில் உள்ள ஓவியம் வெளிப்படுத்தும் கருத்தும் மார்கோபோலோவின் கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்படுவது எதைக்காட்டுகிறதென்றால் இந்த தாமஸ் கதை வஞ்சக எண்ணம் கொண்ட கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்ட புனைசுருட்டுக்கதை என்பதையே காட்டுகிறது. கால்டுவெல் போன்றோரின் “பிராமணர்கள் கொடூர நெஞ்சம் கொண்டவர்கள்.இரக்கமற்றவர்கள்” என்ற கருத்துக்கு ஆதாரமாகப் புனையப்பட்ட கதை இது.இந்தப் பொய்க்கதை பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் பல்வேறு அறிஞர்களால் தவிடுபொடி யாக்கப்பட்டபின்பும் இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள கிறிஸ்தவ அமைப்புகள் இன்றும் ஆதாரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதற்காக அயல்நாட்டுக் கிறிஸ்தவ அமைப்புகளிலிருந்து ஆதரவும் பணமும் வந்துகொண்டிருக்கின்றன.

சென்னையைச் சேர்ந்த ஆர்ச் பிஷப் அருளப்பா என்பவர் இந்த செயின்ட் தாமஸ் புனைகதைக்கு ஆராய்ச்சி வடிவம் கொடுக்கவும் ஆதாரங்களைத் திரட்டவும் ஒரு தகுதியான நபரைத்தேடிக் கொண்டிருந்தார்.அப்போதுதான் ஜான் கணேஷ் என்ற கணேஷ் அய்யரை சந்தித்தார்.இந்த ஜான் கணேஷ் என்பவர் ஸ்ரீரங்கத்தில் வசித்துவந்தவர்.கணேஷ் அய்யரான இவர் மதம் மாறியபின் ஜான் கணேஷ்,பால் கணெஷ்,பால் கௌதமன்,ஆசார்யாபால் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டார்.வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் இடம் சூழ்நிலை இவற்றுக்குத்தக்கவாறு தன் பெயரை மாற்றிக்கொள்வார்.தனது ஆராய்ச்சிக்கு ஆழமான கிறிஸ்தவ ஞானம் கொண்ட ஜான் கணேஷ் உதவியாக இருப்பார் என்று எண்ணினார் அருளப்பா.அவர் ஜான் கணேஷிடம், “நான் செயின்ட் தாமஸ் பற்றி ஒரு ஆய்வு செய்கிறேன்.தாமஸ் இந்தியா வந்தார் என்பதற்கும் அவர் திருவள்ளுவருக்கு ஞானஸ்நாநம் செய்துவைத்தார் என்பதற்குமான ஆதாரங்களைத் தேடித்தர உங்களால் முடியுமா?”என்று கேட்டார்.அதற்கு ஜான் கணேஷ் “அதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன”என்று பதிலளித்தார்.ஜான் கணேஷின் பதிலால் மகிழ்வடைந்த அருளப்பா, அவரிடம் ஆராய்ச்சியைத்தொடங்கும்படி கூறி பணமும் கொடுத்தார்.பணத்தைப்பெற்றுக்கொண்ட கணேஷ் அய்யர் தனது ஆராய்ச்சியைத்தொடங்கினார்.அவ்வப்போது அருளப்பாவோடு கலந்தாலோசித்துக் கொள்வார். இருவரும் வெளிநாடுகளுக்கும் பயணம் செய்வது வழக்கம்.சில நாட்களுக்குப்பின் ஜான் கணேஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக அருளப்பா போலீஸில் கேஸ் கொடுத்தார்.போலீஸ் ஜான் கணேஷைக் கைது செய்தது.நீதி மன்றம் வழக்கை விசாரித்துப் பணமோசடிக்குற்றத்துக்காக ஜான் கணேஷுக்கு இரண்டுமாத சிறைத் தண்டனை விதித்தது.தண்டனை முடிந்துவந்த ஜான் கணேஷை “The illustrated Weekly of India”என்ற பத்திரிகை பேட்டி எடுத்தது.1987 ,மே 2-ஆம் தேதி இதழில் “What wrong have I done?”என்ற தலைப்பில் ஜான் கணேஷ் அளித்த பேட்டி ஒரு கட்டுரையாக வெளிவந்தது.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

06.  செயின்ட் தாமஸ் கட்டுக்கதைத் தொடர்ச்சி

“The Illustrated Weekly of India”-வில் வெளிவந்த ஜான் கணேஷுடனான பேட்டியில் ஜான் கணேஷ் முன்வைத்த விஷயங்களின் ஸாரம் பின்வறுமாறு:

“எனது குடும்பத்தின் வறுமையால் நான் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்தேன்.மக்களைக் கவரும் வண்ணம் கிறிஸ்தவ மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டேன்.கிறிஸ்தவ நெறிகளில் எனக்கிருந்த ஆழமான அறிவைக் கண்டு வியந்த ஆர்ச் பிஷப் அருளப்பா ஒருநாள் என்னை அன்புடன் அழைத்து என்னிடம், “கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய ஆழமான ஞானமுடைய உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டி உள்ளது.செயின்ட் தாமஸ் இங்கு வந்ததற்கும் அவர் திருவள்ளுவருக்கு ஞானஸ்நானம் செய்துவைத்தார் என்பதற்கும் ஆதாரங்களை நீ சேகரித்துத்தரவேண்டும்.இதை நீ செய்தால் உனக்கு சர்வ தேச அலவில் புகழும் நிறையப் பணமும் கிடைக்கும்” என்று கூறினார்.முதலில் நான் சற்றுத் தயங்கினேன்.தென்னிந்தியாவில் கிறிஸ்தவ மதத்தைப்பற்றிய பழமையான வரலாற்றுச்சின்னங்களோ ஏட்டுச்சுவடிகளோ இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.செயின்ட் தாமஸ் முதலாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்தார் என்ற குறிப்பு சில நூல்களில் காணப்பட்டாலும் அந்த நூல்கள் குறிப்பிடும் செயின்ட் தாமஸும் ஏசுவின் சீடர்களில் ஒருவரான செயின்ட் தாமஸும் ஒருவர்தானா என்பது பற்றிய சந்தேகங்களுக்கு இன்றுவரை விடை கிடைக்கவில்லை.இருபது ஆண்டுகளுக்கு முன்பு கேரளா வந்திருந்த அன்றைய பிரதமர் நேரு அங்கிருந்த விஷயம் தெரிந்த கிறிஸ்தவப் பாதிரிமார்களிடம் “செயின்ட் தாமஸ் உண்மையிலேயே இந்தியா வந்தாரா என்பது குறித்துத் தெளிவான விளக்கத்தை நீங்கள் அளிக்கவேண்டும்”என்று கேட்டார்.அதற்கு அந்தப் பாதிரிமார்கள் புன்முறுவலைத்தவிர வேறு எந்த பதிலையும் அளிக்கவில்லை.ஏசுவின் சீடரான செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதுதான் உண்மை.அதனால்தான் புன்முறுவலை பதிலாக அளித்தார்கள் அந்தப் பாதிரியார்கள்.இந்த விஷயங்களை எல்லாம் நான் அருளப்பாவிடம் கூறினேன். அதற்கு அவர், “அப்படியானால் நாம் அதற்கான ஆதாரங்களை உருவாக்க வேண்டும்.பழங்காலப் பனை ஓலைகளிலும் செப்பேடுகளிலும் இருப்பதாக அறிவிக்க வேண்டும்.இப்படிச் செய்தால் நாம் நிலை நாட்ட எண்ணியிருக்கும் கருத்துக்களுக்கு வரலாற்று ஆதாரங்கள் என்ற போர்வையைப் போர்த்தி நமது கருத்துக்களுக்கு மேலும் வலிமை சேர்க்கலாம்”என்று கூறினார். இத்தகைய போலி ஆதார அவணங்களைத் தயாரிக்க என் மனம் இடங்கொடுக்கவில்லை.ஆனால் எனது வறுமைச் சூழ்நிலை என் மனசாட்சியைப் புறந்தள்ளிவிட்டது.முடிவில் சம்மதித்தேன்.நானும் அவரும் சேர்ந்து செயின்ட் தாமஸ் இந்தியா வந்தார் என்பதற்கும் அவர் திருவள்ளுவருக்கு ஞாநஸ்நாநம் செய்துவைத்தார் என்பதற்கும் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூலே என்பதற்குமான ஆதரங்களை தயாரித்தோம்.அவர் சொல்லச் சொல்லப் பழுப்பு நிறமுள்ள ஓலைகளில் எழுத்தாணி கொண்டு ஓலைச்சுவடி எழுத்துக்களைப்போல் எழுதினேன்.பொருள் கொள்ள முடியாத அளவிற்கும் சில வரிகளை எழுதினேன்.இம்மாதிரிப் போலிச் சுவடிகளைத் தயாரிக்கும்போது மிகவும் கவனமாகச் செய்யவேண்டியிருந்தது.இச்செயல் செய்யும்போது மன சாட்சி உறுத்தலால் என்மனம் கலக்க முற்றது.எனது நண்பர் சண்ட் யாகோ அவ்வப்போது எனது கலக்கத்தைப் போக்கிவந்தார்.இப்படி ஏராளமான சுவடிகள் தயாரிக்கப்பட்டன.பிறகு அவற்றைப் போலவே பழுப்புநிறக் காகிதங்களில் எழுதினேன்.அக்காகிதங்களை ஒரு அட்டையில் ஒட்டி போட்டோ எடுத்தேன்.பழங்கால ஓலைச்சுவடிகள் போல் காட்சியளிக்கும் இவற்றை ஓலைச்சுவடிகள்பற்றி அறியாதவர்களிடம் காட்டினால் அவர்கள் நம்பிவிடுவார்கள். இந்தப் போலி ஆவணத் தயாரிப்புக்காக நான் கேட்கும்போதெல்லாம் அருளப்பா ஆயிரமாயிரமாகப் பணத்தை அள்ளியள்ளி எனக்குக் கொடுத்தார்.”

ஜான்கணேஷின் இந்த தன்னிலைவிளக்க வாக்கு மூலத்திலிருந்து கிறிஸ்தவப் பாதிரியார்களின் சூழ்ச்சியையும் தங்களின் கருத்தை நிலைநாட்டப் போலி ஆதாரங்களைத் தயாரிக்கும் ஈனச்செயல்களிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.ஜான் கணேஷ் கைது செய்யப்பட்ட போது அவரது வீட்டிலிருந்த ஏராளமான போலி ஓலைச்சுவடிகளையும் ஆவணங்களையும் போலீஸார் கைப்பற்றினர். அவரது வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டது.

ஜான் கணேஷை சந்திப்பதற்கு முன் அருளப்பாவும் தெய்வநாயகம் என்பவரும் சேர்ந்து எழுதிய நூல்தான் “பேரின்ப விளக்கு”.இதில் திருவள்ளுவர் தாமஸிடம் ஞானஸ்நாநம் பெற்றதாக எழுதியுள்ளனர்.அந்நூலில் சொல்லப்பட கருத்துக்களுக்கு ஆதாரம் தேடத்தான் ஜான் கணேஷை அருளப்பா தேர்ந்தெடுத்தார். தெய்வநாயகம் என்பவர் இந்துவாக இருந்து மதம் மாறிய தீவிர கிறிஸ்தவர்.அவர் தமிழ்ச் சமய இலக்கியங்களில் தனக்குத்தோன்றியபடி கிறிஸ்தவக்கருத்துக்களைக் கண்டுபிடிக்க முனைந்தார். 1986-ல் “விவிலியம்-திருக்குறள்-சைவ சித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு”என்ற ஆய்வு நூலுக்காகச் சென்னைப் பல்கலைய்கழகம் தெய்வநாயகத்துக்கு முனைவர் பட்டம் வழங்கியது. இந்த ஒப்பாய்வு நூலில் விவிலியக்கருத்துக்களிலிருந்தே திருக்குறள் உருவான தென்றும் சைவ சித்தாந்தத்தில் உள்ள கருத்துக்கள் கிறிஸ்தவக்கருத்துக்களே என்றும் கூறப்பட்டுள்ளது.இது தமிழகத்தில் பெரும்பான்மையாக உள்ள சைவ மக்களை மதம் மாற்றுவதற்கான ஒரு யுக்தி.இந்தத் திருக்குறள் அபகரிப்பு விஷயத்துக்கும் சைவ சித்தாந்த அபகரிப்பு விஷயத்துக்கும் அடித்தளமிட்டுக்கொடுத்தவர் G.U.போப் தான்.

பொதுவாகக் கிறிஸ்தவர்கள் முதலில் மற்றவர்களின் மதக்கருத்தைக் கடுமையாக விமர்சிப்பார்கள்.அந்த விமர்சனங்களுக்கு சம்பந்தபட்டவர்கள் தக்க பதிலடிகொடுத்து அவர்களின் வாயை அடைத்துவிட்டால் அப்படியே பல்டியடித்துத் தாங்கள் விமர்சித்த மதக்கருத்தைச் சிறந்த கருத்துக்களாக ஏற்றுக்கொண்டு அவற்றைக் கிறிஸ்தவ மயமாக்கிவிடுவார்கள். அதாவது அந்த மதக்கருத்து விவிலியத்திலிருந்துதான் வந்தது என்று கூறிவிடுவார்கள்.இதுதான் கிறிஸ்தவர்களின் வழக்கம். ஆரம்பத்தில் கிறிஸ்தவர்கள் சைவ சித்தாந்தத்தைக் கடுமையாக விமர்சித்தார்கள்.உதாரணமாக 1841-ல் இலங்கையில் இருந்த ஒரு கிறிஸ்தவ அமைப்பு நடத்திவந்த “Morning Star” என்ற பத்திரிகை(இது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் வரும் இரு மொழிப்பத்திரிகை.) சைவ மதத்தையும் சைவர்களையும் தாறுமாறாகத் தாக்கி எழுதியது.சைவம் மனிதனை ஒழுக்கத்துடன் வாழவைக்காது என்றும்,சைவர்கள் மிகப்பெரிய ஏமாற்றுக்காரர்கள்,பொய்யர்கள், ஏழைகளைக் கொடுமைப்படுத்துபவர்கள், அகங்கரம் பிடித்தவர்கள் என்றும் அந்தப் பத்திரிகை எழுதியிருந்தது.மேலும் சைவம் பிராமணர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அதில் சிறந்த விஷயம் எதுவும் இல்லை என்றும் கிறிஸ்தவ நெறிகளுக்கு இணையாக அதில் எதுவும் இல்லை என்றும் இலங்கை மிஷினரிகள் கூறிவந்தனர்.சைவத்தின் மீதான இந்தக் கடுமையான தாக்குதல் கிறிஸ்தவர்களின் எதிர்பார்ப்புக்கு நேர் மாறான எதிர்வினையையே உருவாக்கியது. இலங்கைவாழ் தமிழ்ச்சைவ அறிஞர்கள் இந்த மிஷினரிகளின் தாக்குதல்களுக்குத் தக்கபதிலடி கொடுத்தனர்.விவிலியத்தை எழுத்தெண்ணிப்படித்த சிறந்த சைவ அறிஞரான ஆறுமுக நாவலர் சைவத்தின் உயர்வையும் விவிலியத்தில் உள்ள குறைபாடுகளையும் மிஷினரிகள் உணரும் வகையில் தெளிவாக விளக்கினார்.அதற்குப்பிறகுதான் மிஷினரிகள் தங்கள் நிலைப்பட்டை மாற்றிக்கொண்டு சைவத்தை எதிர்ப்பதைவிட கிறிஸ்தவத்துக்குள் அதை செரிக்க வைப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து அந்த முயற்சியில் இறங்கினர்.அதற்காகவே G.U.போப் சைவ பக்தி இலக்கியங்கள் மீது கைவைத்தார்.அவர் முதலில் எடுத்துக்கொண்ட சைவ நூல் திருவாசகம்.இந்த நூலை ஆழ்ந்து படித்து இதன் பெருமையை வெளிப்படுத்துவதுபோல் “திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்றெல்லாம் கூறி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.உடனே இங்குள்ள தமிழர்களுக்கு எல்லையற்ற சந்தோஷம். “ஒரு அந்நியன் பாருங்கள், நம் சமய நூலைப் படித்துவிட்டு அதன் பெருமையைப்புரிந்துகொண்டு அவன் மொழியில் மொழி பெயர்த்திருக்கிறான்.இதுதான் திருவாசகத்தின் பெருமை”என்று தங்களுக்குள் புளகாங்கிதம் அடைந்தனர். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் கூடத் தமிழ் வளர்த்த ஆங்கிலேயர் வரிசையில் போப் புகழப்பட்டிருந்தார்/புகழப்படுகிறார். அவரது சொல்லான “திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்”என்ற வசனம் பள்ளிப்பாடங்களில் இன்னும் இடம்பெறுகிறது.இன்றும் தமிழர்கள் போப்பிற்கு நன்றி கூறுகின்றனர்.

ஆனால் போப்பின் நோக்கத்தை அவரைப்பாராட்டும் நம்மவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள வில்லை.தனது திருவாசக மொழிபெயர்ப்பின் முன்னுரையில் “தாவீதின் கீதங்கள் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எப்படியோ அப்படித்தான் சைவர்களுக்கு இந்தத் திருவாசகம்.ஹீப்ரூ புனிதநூல்கள் முதல் இன்றைய கிறிஸ்தவப்பாடல்கள் வரை மொத்த ஐரோப்பிய உன்னதப்பாடல்களையும் தமிழ் நாட்டில் உள்ள அறிஞர்களைக்கொண்டு தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்.” என்று எழுதியிருக்கிறார்.இதிலிருந்து என்ன தெரிகிறதென்றல் கிறிஸ்தவ நூலை விடத் திருவாசகத்தை அவர் ஒன்றும் பெரிதாக எண்ணிவிடவில்லை என்பது தெரிகிறது.அவரது உள்நோக்கமும் புரிகிறது.

போப் தனது திருவாசக மொழிபெயர்ப்பை மிஷினரிகளுக்குக் காட்டி சைவத் திருமுறைகளின் முக்யத்வத்தை விளக்கினார்.வேத மரபிற்குத் தொடர்பில்லாத மதம் சைவம் என்றும் அதுவே பழந்தமிழர்களின் மதம் என்றும் சில விஷயங்களில் கிறிஸ்தவத்துக்கும் அதற்கும் ஒற்றுமை இருக்கிறது என்றும் போப் விளக்கினார்.கிறிஸ்தவர்கள், “கிறிஸ்தவம் ஒன்றுதான் உலகில் தோன்றிய உன்னதமான சிறந்த மதம்.உலகில் உள்ள மற்ற மதங்களெல்லாம் கிறிஸ்தவத்திற்குப்பிறகு தோன்றியவை.அவற்றில் ஏதாவது நல்ல அம்சங்கள் இருந்தால் அவை கிறிஸ்தவத்திலிருந்து பெறப்பட்டவையே.”என்ற கருத்தை உறுதியாக மனதில் வைத்துக்கொண்டுதான் மற்ற மதங்களின் மீது தங்களின் பார்வையை வைப்பார்கள்.தங்கள் கருத்துக்கு ஆதாரம் இருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படுவதில்லை. “எந்த வகையிலாவது” தம் கருத்தை நிலை நாட்டிவிடவேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் அவர்கள்.சைவமே ஆதித்தமிழர் சமயமென்று சொல்வது சைவத்தை இந்துத்தன்மையிலிருந்து நீக்குவதற்காக. அதில் உள்ள சில கூறுகள் கிறிஸ்தவத்தோடு ஒத்துப்போவதாகக் கூறுவது எளிமையாக சைவர்களை மதம் மாற்றுவதற்காக.

போப் தமிழ் நூல்களில் தனக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றிக்கூறும்போது அவை விவிலத்தோடு பொருந்தியிருப்பதாகக் கூறுவார்.தனக்குப்பிடிக்காத விஷயங்களைப் பற்றிப் பேசும்போது பிராம்மண ஆதிக்கத்தால் வந்த மூட நம்பிக்கைகள் அவை என்று சொல்லிவிடுவார்.போப்பின் இந்த நிலைப்பாட்டையே பின்னால் வந்த மிஷினரிகள் எடுத்துக்கொண்டு அதற்கேற்றபடி செயல்பட ஆரம்பித்தனர்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

 07. தெய்வநாயகத்தின் திருகுதாளம்

        1969-ல், இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறிய தெய்வநாயகம் “திருவள்ளுவர் கிறிஸ்தவரா?”என்ற தலைப்பில் ஒருநூலை எழுதினார்.இந்த நூலின் மையக்கருத்து ‘இந்தியாவுக்கு வந்த செயின்ட்தாமஸால் மதம் மாற்றப்பட்ட திருவள்ளுவர் தாமஸிடம் கிறிஸ்தவ நெறிகளைக் கற்றபின்பே திருக்குறளை எழுதினார்’ என்பதே. ‘ஏசுவின் மலைப்பிரசங்கத்தைக் கிறிஸ்தவ அறிஞர்களிடமிருந்து கேட்ட பின்பே திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார் என்று போப் கூறினார்.ஆனால் தெய்வநாயகமோ அதற்கு ஒருபடி மேலே சென்று ‘திருவள்ளுவர் தாமஸை நேரில் சந்தித்துத் தாமஸிடம் ஞாநஸ்நாநம் பெற்றார்’ என்று எழுதிவிட்டார்.தெய்வநாயகத்தின் இந்த நூலுக்கு வாழ்த்துரை எழுதியவர் தி.மு.க தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதி. திராவிடக் கழகத்தை உருவாக்கிய ஈ.வே ராமசாமி திருக்குறளில் ஆரியக்கருத்துக்கள் இருப்பதால் அதை மலம் என்று இகழ்ந்தார்.பின்னாட்களில் ஆரிய பிராமணியத்தை எதிர்க்க ஒரு ஆயுதமாகத் திருக்குறளைப் பயன்படுத்தினர் அவர் வழிவந்த திராவிட வாரிசுகள்.தெய்வநாயகத்தின் நூலுக்குக் கருணாநிதி வாழ்த்துரை வழங்கியதன் மூலம் திருக்குறள் ஒரு கிறிஸ்தவ நூல் என்பதை திராவிட சிந்தனை ஏறுக்கொண்டுவிட்டது என்பது தெளிவாகிறது.1972-ல் சென்னையில் இருக்கும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்ற கருத்துக்கும் திருக்குறள் ஒரு கிறிஸ்தவநூல் என்ற கருத்துக்கும் வலிமை சேர்க்க ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்தது. இந்தக் கருத்தரங்கம் திராவிடக்கட்சிகளின் ஆதரவில் நடந்தது.திராவிடக் கட்சிகளை ஆதரிக்கும் இந்துக்களுக்கு இது அதிர்ச்சியைக் கொடுத்தது.ஏனெனில் திராவிடம் என்ற கருத்தியலே கிறிஸ்தவம் உள்ளே நுழைவதற்கான ஒரு தந்திரம் என்பது அவர்களுக்கு அப்போது புரியவில்லை.

தெய்வநாயகத்தின் இந்த அதீதமான கற்பனைப் புனைவுகள் பொறுப்புள்ள தமிழ்க் கிறிஸ்தவ இறையியலாளர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எஸ். ராசமாணிக்கம் என்ற ஏசு சபைப் பாதிரியார்(வேங்கடேச்வரா பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர்) தெய்வநாயகத்தின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்து விமர்சித்தார். “திருக்குறளில் இருக்கும் கிறிஸ்தவத் தொடர்பில்லாத விஷயங்களுக்கு தெய்வநாயகம் அளிக்கும் விளக்கம் கிறிஸ்தவ இறையிலாளர்களால் ஏற்கமுடியாதவை என்பது தெளிவு.ஏசுவின் பெயர்கூடத் திருக்குறளில் இல்லை.இந்திரன், விஷ்ணு, லக்ஷ்மி இவை போன்ற வைதிகத் தெய்வங்கள்தான் திருக்குறளில் இடம்பெற்றுள்ளன.ஆகவே தெய்வநாயகத்தின் ஆராய்ச்சிமுறைகள் திருப்தியளிப்பவையாக இல்லை” என்று அவர் கூறுகிறார்.திருக்குறள் ஆராய்ச்சிக்கென்றே தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட கே.சீனிவாஸன் என்ற தமிழறிஞர் இந்துவாக இருந்து கிறிஸ்தவராக மதம் மாறியவர். 1975-ல் தெய்வநாயகத்தின் கருத்துக்களை விமர்சித்து “இந்த மனிதர் திருக்குறளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுமட்டுமல்ல, கிறிஸ்தவமத வரலாற்றைக் கூடச் சரியாக இவர் புரிந்துகொள்ளவில்லை என்ற சந்தேகமே ஏற்படுகிறது”என்று எழுதினார். ஆனால் எந்தவித அறிவுசார்ந்த விமர்சனங்களும் தெய்வநாயகத்தின் அரசியல் ரீதியிலான மத அடிப்படை வாதத்தை அசைக்கக்கூட முடியவில்லை.இந்த அறிஞர்களின் அறிவுபூர்வமான விமர்சனங்களுக்கெல்லாம் எந்த பதிலும் சொல்லாமால் அவற்றை எளிமையாகக் கடந்து சென்ற தெய்வநாயகம் 1980-ல் “திருக்குறளும் பைபிளும்”என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார்.1983-ல் தெய்வநாயகம் எழுதிய “விலிலியம்-திருக்குறள்-சைவ சித்தாந்தம்-ஓர் ஒப்பாய்வு”என்ற ஆய்வுக்காகச் சென்னைப் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.மதிப்புக்குரிய நிறுவனமாகக் கருதப்பட்ட உலகத்தமிழ் நிறுவனம் தெய்வநாயகத்தின் ஆராய்ச்சியைத் தனது பதிப்பாகவே வெளியிட்டது. இச்செயல் இங்குள்ள சைவ அறிஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 1986-ல் அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனமும் தர்மபுரம் ஆதீனமும் இணைந்து நடத்திய இரண்டுநாள் கருத்தரங்கில் தெய்வநாயகதின் ஆய்வில் உள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டன.1991-ல் சிறந்த சைவ அறிஞரான அருணவேல் முதலியார் தெய்வநாயகத்தின் கருத்துக்கு மரபு சார்ந்த மறுப்புரை நூல் ஒன்றை எழுதினார்.இந்த நூலில் உள்ள கருத்துக்களை தெய்வநாயகம் அறிவு பூர்வமாக எதிர்கொள்ளவில்லை.மாறாகத் திராவிட இனமேன்மைப் பற்றாளர்களையும் சாதிய வாதிகளையும் தூண்டிவிட்டு “இந்த நூல் திராவிட இனத்தை அடிமைப்படுத்த நினைக்கும் ஆரியச் சதி”என்று வசைபாட வைத்தார்.

அதே காலக்கட்டத்தில் திருவள்ளுவர்-செயின்ட் தாமஸ் சந்திப்பை நிரூபிக்க கிறிஸ்தவர்களால் அகழ்வாய்வுகளும் செய்யப்பட்டன. கேரளாவில் சபரிமலைக்கு அருகில் உள்ள வனப்பகுதிகளில் கி.பி. 57-ஐச்சார்ந்த,செயின்ட் தாமஸால் நிறுவப்பட்ட ஒரு சிலுவை கிடைத்துள்ளதாகக் கத்தோலிக்கச் பாதிரியார் ஒருவர் அறிவித்தார்.நீலக்கல் என்ற இடத்திற்கு அருகில் உள்ள ஒரு மகாதேவர் கோயிலுக்கு அருகில் சபரிமலை சாஸ்தாவின் புண்ணிய மலைப் பகுதியில் அந்தச் சிலுவை கிடைத்ததாகச் சொல்லப்பட்டது.உடனே தாமதமில்லாமல் அவ்விடத்தில் ஐந்தடி உயர கிரானைட் சிலுவை ஒன்று சடங்கு முறைகளோடு கத்தோலிக்கப் பாதிரியார்களால்

எழுப்பப்பட்டது.அங்கு வழிபாடுகளும் தொடங்க ஆரம்பித்தன.கிறிஸ்தவர்களிலேயே சிலர் இதை வன்மையாகக் கண்டித்தனர்.டாக்டர் சி.பி. மாத்யூ என்ற கிறிஸ்தவர் ஒரு பிரதான நாளேட்டில் “சிலுவை வடிவத்தில் கிடைத்ததாகச் சொல்லபடும் கிரானைட் துண்டு கேரளாவின் சமுதாய நல்லிணக்கத்தையே துண்டுபோடப் போகிறது.அது சம்பந்தமாக ஏதாவது முக்யத்வம் இருக்குமானால் அதை முடிவு செய்யவேண்டியது அகழ்வாய்வுத் துறைதன்.குறுகிய மனம் படைத்த சில சுயநலக் கிறிஸ்தவ மத வெறியர்கள் இதற்குப் பின்னணியில் உள்ளனர்.ஆனால் பொதுவான கிறிஸ்தவ சமூகத்துக்கு இந்த நிகழ்வுடன் எந்தத் தொடர்பும் இல்லை”என்று எழுதியிருந்தார்.

அந்த நேரத்தில் சபரிமலைப்பகுதியில் சிலுவை நிறுவப்பட்டதைக் குறித்துக் கேரள இந்துக்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.இந்துக்களின் எதிர்ப்புக்குத் தாக்குப்பிடிக்க முடியாத கிறிஸ்தவர்கள் பின்வாங்கினர்.அங்கிருந்த சிலுவையும் காணாமல் போய்விட்டது.

புகழ்பெற்ற தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் நாகசாமி சாந்தோமில் அமைத்துள்ள செயின்ட் தாமஸின் கல்லரையில் தாம் மேற்கொண்ட அகழ்வாராச்சி முடிவுகளைப்பற்றிக்கூறும்போது செயின்ட் தாமஸ் இந்தியாவுக்கு முதலாம் நூற்றாண்டில் வந்தார் என்பதைக் கிறிஸ்தவப் பாதிரிமார்களே மறுத்து எழுய செய்திகளை எடுத்துக்காட்டி, “செயின்ட் தாமஸ் இந்தியா வந்தார் அவரது பூதவுடல் சாந்தோம் சர்ச்சில் உள்ளது” என்ற கற்பனைக்கும் மீறிய கட்டுக்கதை இந்தியாவில் மதம் பரப்புவதற்குப் போர்ச்சுகீசியர்கள் கையாண்ட ஒரு தந்திரமேயாகும்”என்று மிகத்தெளிவாக எடுத்துரைத்தார். ஆனால் அதற்கெல்லாம் மசியவில்லை வேதநாயகம்.கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை அவர்கள்கள் சொல்வதுதான் ஆதாரமுள்ள செய்தி. தங்களது கருத்து முற்றிலும் ஆதாரமற்றது என்பது அவர்களின் மனச்சாட்சிக்கே தெரிந்தாலும் தங்கள் நிலைபாட்டிலிருந்து அணுவளவும் மாற மாட்டார்கள்.அவர்கள் சொல்வதைத்தான் திரும்பத்திரும்பச் சொல்வார்கள்.தெய்வநாயகத்துக்குக் கொடுத்த முனைவர் பட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தி சைவர்கள் போராட்டங்களும் நடத்தினர்.ஆனால் பல்கலைக்கழகம் அவருக்குக்கொடுத்த முனைவர் பட்டடத்தைத் திரும்பப் பெறவில்லை.சென்னைப்பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தத்துறை என்ற ஒரு பிரிவு இருக்கிறது.அந்தப்பிரிவில் உள்ள ஆசிரியர்கள் கிறிஸ்தவர்களே.அப்படியிருக்கும்போது எப்படி அவருக்குக்கொடுத்த முனைவர் பட்டத்தைத் திரும்பப்பெறுவார்கள்! இன்றைய சூழலில் பல்கலைகழகங்களில் பட்டங்கள் வாங்குவது என்பது மிகச்சாதாரண விஷயம்.பணமும் செல்வாக்கும் இருந்தால்மட்டும்போதும்.ஆய்வு என்ற பெயரில் வெறும் குப்பைகளை எழுதிக்கொடுத்தாலும் முனைவர் பட்டம் வாங்கிவிடலாம். இப்படி ஆய்வு என்ற பெயரில் பரம அபத்தங்களை எழுதி முனைவர் பட்டம் பெற்ற தெய்வநாயகம் போன்றோர் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டால் அந்தக் கருத்து விமர்சனத்து அப்பாற்பட்டது என்றும்,அந்தக் கருத்தை முனைவர் பட்டம் பெற்ற மற்றொருவர் மறுத்தால் அதை ஆரிய சூழ்ச்சி என்றும் சொல்லும் ஈனப்பிறவிகள் தமிழார்வலர்கள் என்னும் போர்வையில் இங்கு இருக்கிறார்கள். தெய்வநாயகம் சொன்னால் அது ஆய்வுக் கருத்து.அதை மறுத்து நாகசாமி சொன்னால் அது ஆரிய சூழ்ச்சி” என்று சொல்லும் இங்குள்ளவர்கள் கிறிஸ்தவனின் மலத்தைத் தின்பவர்கள்.தெய்வநாயகமும் அவரது கூட்டாளிகளும் இன்றுவரை செயின்ட் தாமஸ் புனைகதையோடு திருவள்ளுவரை முடிச்சுப்ப்போட்டுப் பிரச்சாரம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இந்த தெய்வநாகயகம் சமீபத்தில் ஒரு டி.வி சானலில் உட்கார்ந்து கொண்டு “திருக்குறளை நாங்கள்தான் போற்றினோம். நாங்கள்தான் போற்றுகிறோம். இங்கு வேறு யார் போற்றினார்கள்”என்று வாய்கூசாமல் துணிச்சலாகக் கூறுகிறான்.தமிழகத்தில் திருக்குறள் வெகுவாகப் போற்றப் பட்டதால்தான் தமிழர்களை மதம் மாற்றத் திருக்குறளுக்குக் கிறிஸ்தச்சாயம் பூச முற்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருக்குறளைக் கையால் தொட்டுப் பார்ப்பதற்கு முன்பே இங்கிருந்தசைவர்கள் திருவள்ளுவருக்குக் கோயில் கட்டி வழிபட்டவர்கள்.வைணவர்கள் தங்கள் தத்துவ நூல்களில் திருக்குறளை மேற்கோள்காட்டி மகிழ்ந்தவர்கள். ஆனால் இந்த மத வெறிக் கிறிஸ்தவன் “திருக்குறளை நாங்கள்தான் போற்றினோம்” என்கிறான்.இந்தக்கொடுமையை எங்கே போய்ச் சொல்வது! தெய்வநாயகம் போன்றோரின் நூல்களுக்கு அணிந்துரை,வாழ்த்துரை எல்லாம் வழங்கி இங்குள்ள தி.க,மற்றும் தி.மு.க வினர் “திராவிடம் என்றாலே அது கிறிஸ்தவக் குறியீடுதான் என்பதையும் தாங்கள் அனைவரும் திரைமறைவில் கிறிஸ்தவ மதத்தவர்தான் என்பதையும் தெளிவாக்கிவிட்டனர்.தற்போதும் கிறிஸ்தவர்ளுக்குத் துணைபோகும் திராவிட ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடக்கிறது.அதனால்தான் இந்த தெய்வநாயகம் போன்றோரால் வெளியே வந்து இவ்வளவு துணிச்சலாகப் பேசமுடிகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

 08. இராமாயணத்தை இனவாதக்கதையாகக் காட்டுதல்

      திராவிடத் தமிழனுக்கென்று ஒரு தனித்தன்மைவாய்ந்த ஒரு மதம் இருந்தது என்றும் அது ஆரியம் கலவாதது என்றும் ஒரு கருத்தைக் கிறிஸ்தவர்கள் கிளப்பிவிட்டவுடன் இங்குள்ள சில சைவர்கள் சமய விஷயங்களில் ஸம்ஸ்க்ருதம் கலவாத ஒரு தூய சைவத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று நினைத்தனர்.இவர்கள் சைவர்ளுக்குள் தனிப்பிரிவாகவே தோன்றினர்.மறைமலை அடிகள், எம்.எஸ் பூரணலிங்கல் பிள்ளை போன்றவர்கள் இப்பிரிவைச் சேந்தவர்கள். கிறிஸ்தவ மிஷினரிகளால் கட்டமைக்கப்பட்ட கருத்துருவத்தை அப்படியே எற்கும் இவர்கள் மத விஷயத்திலான தங்களின் எண்ணம் எந்த அளவுக்குக் கிறிஸ்தவர்களுக்கு சாதகமாகப் போகும் என்பதை உணரவில்லை. “நம் நிலைப்பாடு கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாகப் போனாலும் பரவாயில்லை.ஸம்ஸ்க்ருதம் ஒழியவேண்டும். ஸம்ஸ்க்ருதக் கலப்பில்லாத சைவத்தை நாம் உருவாக்கவேண்டும்’ என்பதில் இவர்கள் ஒருவித வெறியுடன் இருந்தார்கள். இது சைவ மதத்துக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தியது. சைவ சித்தாந்தத்தை ஸம்ஸ்க்ருத நூல்களுக்கு எதிராக ஐரோப்பியக் காலனியர்கள் காட்டியபோது பல தமிழ் அறிஞர்களும் சைவ அறிஞர்களும் 19-ஆம்நூற்றாண்டிலேயே எதிர்த்தார்கள். உதாரணமாக ஜே.எம். நல்லசாமிப்பிள்ளை என்ற ஒரு சைவ சித்தாந்த அறிஞர் ஜி.யு.போப்புடன் நட்பு வைத்திருந்தார்.போப்பின் உண்மையான முகத்தைத் தெரிந்துகொண்டபின் அவரிடமிருந்து விலகிவிட்டார். ஸம்ஸ்க்ருத நூல்களுக்கும் சைவ சித்தாந்தத்துக்கும் தொடர்பில்லை என்று கூறப்பட்டதை அவர் கடுமையாக எதிர்த்தார்.அவர் இதுபற்றிக்கூறும்போது,

“நாம் பயன்படுத்தும் எல்லாப் பதங்களும் வடிவங்களும் ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன.ஸம்ஸ்க்ருதத்தில் இருக்கும் கடலனைய ஆகம இலக்கியங்களுடன் தமிழ் இலக்கியங்களை ஒப்பிடமுடியது….நம் தமிழ் ஆசார்யர்களும் பெரும் ஸம்ஸ்க்ருத அறிஞர்களேயாவர்….இந்த அற்புதமான மதமும் தத்துவமும் வேதங்களையும் ஆகமங்களையும் அடிப்படையாகக் கொண்டவையே.” என்று கூறுகிறார். ஆனால் இதையெல்லாம் தனித்தமிழ்ச் சைவர்கள் ஏற்கத்தயாராக இல்லை.அவர்கள் கிறிஸ்தவன் சொன்ன அந்த ஆதித்தமிழர் சமயத்தை மீட்பதிலேயே குறியாக இருந்தார்கள். பின்னாட்களில் அந்த ஆதித்தமிழர் மதம் கிறிஸ்தவம் தான் சைவ சித்தாந்தமே கிறிஸ்தவ சித்தாந்தம்தான் என்று கிறிஸ்தவர்கள் சொல்லிவிட்டார்கள். கால்டுவெல்லும் ஜி.யு.போப்பும் போட்ட தடத்தில் பயணிக்கும் இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக “இந்தியா ஒரு கிறிஸ்தவ தேசம்”என்ற தலைப்பிலஒரு புத்தகம் சமீபத்தில் வெளிவந்துள்ளது.தமிழ் உட்பட எல்லா இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.தமிழனின் ஆன்மிக மரபைக் கிறிஸ்தவ மயமாக்கும் முயற்சியாக, சைவம்,வைணவம் இவற்றில் மறைந்திருக்கும் உண்மைகள் எல்லாம் ஆதி இந்தியக் கிறிஸ்தவமே என்று சொல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்நூல் சொல்கிறது.இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பிரிவினையைத் தோற்றுவித்துத் தங்களின் எண்ணத்தைப் பூர்த்திசெய்து கொள்வதே கிறிஸ்தவர்களின் வேலை.அது இங்குள்ள சிலருக்குப்புரிவதில்லை. கிறிஸ்தவர்கள் உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ஏற்படுத்திய இனவாத அரசியலால் அந்தந்த நாடுகளில் பிரிவினை வாத உணர்வுகளும் இனச் சண்டையும் ஏற்பட்டுப் பெரும் அழிவுகளே ஏற்பட்டன.மாக்ஸ் முல்லரும் கால்டுவெல்லும் இலங்கையில் உள்ள சிங்களர்களை ஆரியர்கள் என்றும் தமிழர்களை திராவிடர்கள் என்றும் வகைப்படுத்தினார்கள்.இலங்கையில் இருந்த இறை ஞானச்சபை(Theosophical Society) இந்த ஆரிய இனக்கோட்பாட்டைப் பரப்பியதுடன் பௌத்தப் புத்தெழுச்சியைத் தூண்டியது.இந்தப் பாகுபாடு காலனிய ஆட்சியாளர்களால் தூண்டிவிடப்பட்டது. சமீப காலங்களில் அந்நாட்டில் நடந்த இன அடிப்படையிலான மோதல்களுக்கும் அவற்றால் ஏற்பட்ட பேரழிவிற்கும் கிறிஸ்தவர்கள் கிளப்பிவிட்ட இந்த இனவாதக்கோட்பாடே காரணம். இந்தியப் புராண இதிஹாசங்கள் எல்லாமே ஆரிய திராவிட மோதல்களைப்பற்றிய விளக்கம்தான் என்று பிரச்சாரம் செய்தார்கள் கிறிஸ்தவர்கள். இராமாயணமே திராவிட ஆரிய இனமோதல்தான் என்றார்கள். இந்தக் கிறிஸ்தவர்களின் கருத்தை நம் நாட்டின் முன்னாள் பிரதமரான நேருவும் ஆதரித்தார்.சமீப காலத்தில்கூட இராமாயணச் செய்திகளுக்குத் தவறான விளக்கம் கொடுத்து இலங்கையில் நடக்கும் இன மோதல்களுக்கும் அழிவுகளுக்கும் தூபம் போடப் பட்டது.இலங்கையில் உள்ள தமிழ்ப் பிரிவினை மேலாதிக்க வாதிகள் தங்களது இராமாயண வெறுப்பைத் தங்கள் இனவாத அரசியலில் பயன்படுத்தினார்கள். விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ வானொலி “இலங்கையின் மண்” என்ற ஒரு நாடகத்தை ஒலிபரப்பியது.அந்த நாடகத்தில் இராமனை ஆரியப்படையெடுப்பாளராகவும் இன்றுள்ள சிங்களர்களுடன் அவருக்கு இனரீதியான தொடர்பு இருந்ததாகவும் ராவணனைப் பெருமைமிக்க திராவிடப் பேரரசனாகவும் அவனது அரசை ஆரியர்கள் பறித்துக்கொண்டதாகவும் சித்தரித்துக் காட்டப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவரான பிரபாகரன் அந்த நாடகத்தைப் பாராட்டி அனுப்பிய செய்தியில் “இன்றைய இனப்போரும் இராமாயண நிகழ்வுகளின் தொடர்ச்சியே என்று கூறினார்.ஒரு பிரிவினைவாத உணர்வுடைய ஒரு இயக்குனரால் இயக்கப்பட்டு சமீபத்தில் தமிழ்நாட்டில் வெளிவந்த “காலா” என்ற திரைப்படத்திலும் இதேபோக்கில் இராமாயணம் இழிவாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது.இவை அனைத்திற்கும் காரணம் கிறிஸ்தவர்களே. இராமாயணத்தில் வரும் வானரர்களுடன் தென்னிந்திய மக்களை ஒப்பிடும்போக்கு பிரிட்டிஷ் காலினிய ஆட்சியாளர்களாலேயே உருவாக்கப்பட்டது. இதைவைத்து இந்தியாவில் பழங்காலத்தில் நடந்துவந்த ஆட்சியைவிடத் தங்கள் ஆட்சி மேலானது என்று ஆங்கிலேயர்கள் காட்டிக்கொண்டனர்.அதற்கு உதாரணமாக 1886-ல் மதராஸ் கவர்னரான மவுண்ட்ஸ்டார்ட் எல்ஃபின்ஸ்டோன் கிராண்ட் டஃப்(Mountstuart Elphinstone Grant-Duff) சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகளின் முன்னிலையில் இராமாயணம் குறித்துப் பேசும்போது, “ஐரோப்பியர்களான நாங்கள் சில நேரங்களில் உங்களை மோசமாக நடத்தியிருக்கலாம்.ஏன்,எங்களில் சிலர் இந்தியர்களைக் ‘கருப்பர்கள்’ என்றுகூட அழைத்திருக்கலாம்.ஆனால் நாங்கள் ஒருபோதும் தென்னிந்தியர்களை கர்வம்பிடித்த ஸம்ஸ்க்ருத இலக்கியவாதிகள் போல் குரங்குகள் என்று அழைத்ததில்லை.”என்று பெருமையாகக் கூறினார். திராவிடர்கள் என்று இவர்களால் வகைப்படுத்தப்பட்ட தென்னிந்திய மக்களை நமது புனித இதிஹாசமான இராமாயணத்துக்கு எதிராகத் திருப்பும் சதி வேலை இது.அரசியலுக்காகவும் மதம்பரப்பும் நோக்கத்துக்காகவும் எப்படி வேண்டுமானலும் நம் புராண இதிஹாசங்களைத் திரிப்பார்கள் இவர்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

மேற்கத்தியர்களிலேயே சிலர் இராமாயணம் குறித்த இந்தப் பார்வையை மறுக்கின்றனர்.கலிபோர்னியா பல்கலைக்கழக பெர்க்லி தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் ஸம்ஸ்க்ருதத்திலும் முனைவர் பட்டம் பெற்றவர்.அவர் ராமாயணம் பற்றிக் கூறுகையில் “ஒரு குறுகிய காலக்கட்டத்துக்கு துரத்ருஷ்ட வசமாக இந்த இதிஹாசத்தை ஆரிய திராவிடப் பண்பாட்டு மோதல்களின் பார்வையில் பார்ப்பது ஒரு வழக்கமாக இருந்துவந்தது.இந்த வழக்கம்,என் பார்வையில்,இந்தக்காவியத்தின் அடிப்படை ஆன்மாவைப் புரிந்துகொள்ளாததால் எழுந்ததாகும்.ராமனாலும் ராவணனாலும் முன்வைக்கப்படும் இருவேறு வாழ்க்கைப் பார்வைகளின் மோதலையே இக்காவியம் காட்டுகிறது.,கம்பனின் சிறப்பு என்னவெனில் இவ்விரண்டையும் அழகான சொற்களில் அற்புதமாகக் காட்டுகிறார். இங்கு ராவணன் பிராமணன் என்பதையும் மறந்துவிடக்கூடது”என்று கூறுகிறார். ஆனால் இங்குள்ள திராவிட வாரிசுகள் “இராமாயணம் ஒரு ஆரிய திராவிடமோதல் கதை”என்ற சில கிறிஸ்தவர்களின் கருத்தை ஏற்றுக் கொண்டு “ராவண காவியம்” எழுதி இராமாயணத்தையும் “கம்ப ரஸம்”எழுதிக் கம்பனையும் இழிவுபடுத்தினார்கள்.இராமன் படத்துக்குச் செருப்புமாலை போடும் அளவுக்குக் கூட வன்மம் இங்குள்ளவர்கள் மனதில் ஏற்பட்டது.இவற்றுக்கெல்லாம் கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த ஆரிய திராவிட இனவாதக்கோட்பாடே காரணம்.

இந்த இனவாதக் கோட்பாடு மொத்த இந்திய நாட்டையே துண்டுபோடும் அளவுக்குப் பிரிவினை வாத உணர்வையும் இங்கு உருவாக்கிவிட்டது.பிரிவினை வாத அரசியல் கட்சிகள் தோன்றின. திராவிடக் கழகத் தலைவரான ஈ.வே.ராமசாமியின் பிரதான சீடரான சி.என்.அண்னாத்துரை 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க)என்ற ஒரு கட்சியை உருவாக்கினார்.இந்தக்கட்சி பிரிவினைவாதக் கருத்தியல் கொண்டது. விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியாவைக்கூறு போடுவது குறித்த அவரது எண்ணத்தைப் பின்வரும் அவரது பேச்சின் மூலம் புரிந்துகொள்ளலாம்.

“இந்தியா ஒரு கண்டம்.அது பல்வேறு நாடுகளாகப்பிரிக்கப் படவேண்டும்.இந்தியா ஒரே நாடாக இருந்தால் அதற்குள் ஆரிய ஆதிக்கம் அதிகரிக்கும்.ஆரிய ஆட்சியின் கீழ் மற்ற இனங்களின் நன்மை நசுக்கப்படும்.பல்வேறு இனங்களை ஒரே நாடாக மாற்றுவது கலகங்களுக்கும் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும்.இந்தியாவில் ரத்த ஆறு ஓடுவதைத்தடுக்க ஒரே வழி இனங்களின் அடிப்படையில் இந்தியாவைத் துண்டுதுண்டாகப் பிரிப்பது மட்டும்தான்….இதுவரை இந்தியாவில் ஒரு இனம் மற்றோர் இனத்தின் கழுத்தை நெறிக்காமல் இருக்கக் காரணம் இங்கு பிரிட்டிஷ் துப்பாக்கிகள் இருப்பதுதான்.பிரிட்டிஷார் இந்தியாவைவிட்டுச்சென்றால் இந்தியா மரணங்களின் விளைநிலமாகிவிடும்”

யேல் பல்கலைக்கழகம் இந்தப் பிரிவினைவாதியான அண்ணாவை ஆதரித்தது.இதையெல்லாம் வைத்துப் பார்க்கின்ற பொழுது இங்குள்ள பிரிவினைவாத உணர்வாளர்களின் பின்னணியில் சில அந்நிய சக்திகள் இருக்கின்றன என்பது தெளிவாகிறது. தமிழ்நாட்டில் தற்போது திராவிட இனவாதம் மட்டுமல்ல, ஏகப்பட்ட இனவாதங்கள் தோன்றிவிட்டன.தனித்தமிழ்ச் சைவம் என்று மதரீதியிலான ஒரு பிரிவு.தனித்தமிழ் இனம் என்ற இனரீதியிலான ஒருபிரிவு,இவற்றின் அடிப்படையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், நாம் தமிழர் கட்சி,விடுதலைச் சிறுத்தைகள்,அம்பேத்கர் மக்கள் இயக்கம்,புரட்சி பாரதம்,தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம்,தமிழக முற்போக்கு மக்கள் கட்சி,தமிழக வாழ்வுரிமைக் கட்சி இப்படி ஏகப்பட்ட சிறு சிறு பிரிவுகள்.இந்தப்பிரிவுகள் எல்லாமே இன வாதத்தையும் ஆரிய,பிராம்மண எதிர்ப்பையும்தான் தங்களின் கொள்கைகளாக முக்கியத்துவப் படுத்துகின்றன.

தி.மு.க சில நாட்களுக்குப் பிறகு தனித்தமிழ்நாடு என்ற கனவை மறந்துவிட்டது. ஆனால் இன்றும் இங்குள்ள மற்ற பிரிவினை வாத இயக்கங்களும் கட்சிகளும் “தனித்தமிழ் நாடு” என்று பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.இதற்குக் காரணம் அந்நிய நாட்டு கிறிஸ்தவ மிஷினரிகளின் ஆதரவும் பணமும் பக்க பலமாக இவர்களுக்கு இருப்பதுதான்.இங்குள்ள பிரிவினை வாதிகளுக்கும் கிறிஸ்தவ மதவாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு எப்போதுமே உண்டு.இருபிரிவினருமே ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்தான். அமெரிக்காவில் தெய்வநாயகத்தின் ஆதரவாளர்கள் “உலகத்தமிழ் ஆன்மிக விழிப்புணர்வு இயக்கம்”(World Tamil Spiritual Awareness Movement) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்.2006-ல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட “பெரியார் தமிழ்ப்பேரவை”என்னும் திராவிடவாத அமைப்பு தெய்வநாயகத்துக்கு “மக்கள் வளர்ச்சிக்குப் பாடுபடும் ஆன்மிகத் தலைவர்” என்ற விருதை அளித்தது.இந்த அமைப்பின் தலைவர் கடுமையான தமிழ்ச் தேசிய வாதியான ப.ழ.நெடுமாறன்.இதனால் இங்குள்ள பிரிவினை வாதிகள் எல்லோருமே கிறிஸ்தவக் கைக்கூலிகள்தான் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

    09. ஆதாம்-ஏவாள் மனித இனத்துக்கே பெற்றோரா?

      வரலாறு என்ற பெயரில் கிறிஸ்தவர்களால் கட்டமைக்கப்பட்டுப் பரப்பப்பட்ட இனவாத,பிரிவினைவாதக் கருத்துக்கள் அனைத்தும் சமீபகால ஆய்வுகளால் தவிடுபொடியாக்கப் பட்டுவிட்டன.ஆரிய-திராவிட இனப்போராட்டம் என்பதெல்லாம் அரசியல் ரீதியான கட்டுக்கதை என்பதை அம்பேத்கார் உள்ளிட்ட பல இந்திய அறிஞர்களும், பல மேற்கத்திய அறிஞர்களும் ஆதார பூர்வமாக நிரூபித்திருக்கின்றனர் சிந்துச் சமவெளி நாகரிகம் பற்றி சர்.ஜான்.மார்ஷல் வெளியிட்ட உள்நோக்கம் கொண்ட கருத்துக்கள் அனைத்தும் சமீபகால ஆய்வுகளால் தள்ளப்பட்டு விட்டன.ஆனால் இன்னும் தமிழ்நாட்டில் உள்ள பிரிவினைவாதிகள் கிறிஸ்தவர்களிடம் பணம்வாங்கிக் கொண்டு அந்த இனவாதக் கொள்கைகளையே ஆதரித்துக் கொண்டு இங்கு த்வேஷத்தை வளர்த்து வருகின்றனர்.

   தமிழினம்,தமிழ்ப் பண்பாடு,தமிழ்மொழி இவைமட்டுமே தனித்துவமான சிறப்பு வாய்ந்தவை என்று நிரூபிக்கவேண்டும் என்பதே இங்குள்ள தமிழார்வலர்களின் எண்ணம்.இதற்காக இவர்கள் சங்க இலக்கியங்களை ஆய்ந்து பார்த்தார்கள். அவற்றில் வடமொழிப் புராணக் கருத்துக்கள் அதிகம் காணப்படுவதால் அவை இவர்களின் எண்ணத்துக்கு அனுகூலமாக இல்லை.அதனால் அதை விட்டுவிட்டுத் தமிழ் நாகரிகத்தின் தொன்மையை நிரூபிக்க அகழ்வாராய்ச்சிகள் செய்ய ஆரம்பித்தனர். இவர்கள் மனதில் உள்ள எண்ணத்தையே அகழ்வாய்வு முடிவுகளாகக் காட்டுகின்றனர்.அகழ்வாய்வுக் குழுவில் உள்ள யாராவது ஒரு அதிகாரி இவர்களின் எண்ணத்துக்கு மாறுபாடாகக் கருத்துச் சொல்லிவிட்டால் அந்த அதிகாரியை அந்தக் குழுவிலிருந்து நீக்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள் இதில் முக்கியமாக   கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு அகழ்வாய்வு நடக்கும் இடத்திலும் ஒரு கிறிஸ்தவர் நிற்கிறார். சர்வதேச தமிழ் ஆராய்ச்சி நிறுவனங்களிலெல்லாம் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் கிறிஸ்தவர்களே. ஆக்ஸ்ஃபோர்டில் ஸம்ஸ்க்ருதத்துக்கு இருக்கை ஏற்படுத்தியதே இந்துக்களை கிறிஸ்தவர்களாக்கத்தான். அதேபோல மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு இருக்கை அமைப்பதும் இதற்காகத்தான்.எல்லா இருக்கைகளிகலும் இருப்பவர்கள் கிறிஸ்தவர்கள்தான்.இதிலிருந்து என்னதெரிகிறது?தொன்மையான தமிழ்நாகரிகம் கிறிஸ்தவ நாகரிகம்தான் என்று நிரூபிப்பதற்கான முயற்சிதான் இது.

   இதுவரை கிறிஸ்தவர்கள் எப்படி மன,இன,மத,மொழி,பண்பாட்டு ரீதியில் இந்திய மக்களை துண்டாடியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம்.இனி அவர்களது பித்தலாட்ட வேலைகளை ஒவ்வொன்றாகக் கிழித்தெரிவோம்.

     கிறிஸ்தவர்கள் தங்களது மதநூலான பைபிளை அடிப்படையாகக் கொண்டே மனிதவரலாற்றை நிர்ணயிக்கிறார்கள்.ஆனால் இவர்களது இந்தமதப் புத்தகம் ஆதி முதல் ஒரேமாதிரியாக இருக்கவில்லை.பழைய ஏற்பாடு என்பது யூதர்களின் பைபிள்.புதிய ஏற்பாடு என்பதுதான் கிறிஸ்தவர்களின் பைபிள்.ஏசுகிறிஸ்து மறைந்து இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகே அவர் சொன்னதாகக் கூறப்படும் கருத்துக்கள் புதிய ஏற்பாடாக நூல்வடிவம் பெற்றன.அதன்பிறகும் பல நூற்றாண்டுகள்வரை பைபிள் படிக்கக் கிறிஸ்தவர்களேகூட அனுமதிக்கப் படவில்லை.மறைந்திருந்து படித்தவர்களும் வேட்டையாடப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்கள்.ஆதியாகமம் என்ற பழைய ஏற்பாட்டிலிருந்துதான் கிறிஸ்தவர்கள் தங்களது சரித்திரத்தையும் மனிதகுல சரித்திரத்தையும் கட்டமைக்கிறார்கள்.இந்தப் பழைய ஏற்பாட்டிலேயே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன.பழைய ஏற்பாட்டில் ப்ரளயம் குறித்து கி.மு.9-ஆம்நூற்றாண்டில் எழுதப்பட்ட யஹவிஸ்ட் (Yahavist) வாசகத்துக்கும்,கி.மு.6-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாசர்டோடால்(Saserdotal) வாசகத்துக்குமிடையே பெரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன.இவை அந்தந்தக் காலங்களில் வாழ்ந்த யூதப் பாதிரியார்களால் எழுதப்பட்டவை.இந்த வேறுபட்ட இரண்டு நூல்களில் இருந்த செய்திகளின் தொகுப்பே தற்போது நடைமுறையில் இருக்கும் King James Version of Bible.

 “பழையஏற்பாடு”என்ற இந்த பைபிள் நூல் சுமார் 900 ஆண்டுகளாகப் பல இலக்கிய ஆசிரியர்களால் கர்ணபரம்பரைச் செய்திகள் சிலவற்றை மிகைப்படுத்தியும் தங்களுக்குப் பிடிக்காததை விடுத்தும்,சிலவற்றைத் திரித்தும்,சிலவற்றைப் பிறநாட்டு மதநூல்களிலிருந்து எடுத்துப் புகுத்தியும் எழுதிவைக்கப்பட்டது”என்று ஜெருசலத்தில் உள்ள பைபிள் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஃபாதர்டிவாக்ஸ்(Father DeVaux) என்பவர் திட்டவட்டமாக நிலைநாட்டியுள்ளார்.

  இனி பைபிள் சொல்லும் உலகத் தோற்றம் பற்றிய கருத்தையும் மனித இனவரலாற்றையும் பார்ப்போம்.விலிலியக் கால அளவுகள் பிரிட்டிஷ் புராட்டஸ்டன்ட் பாதிரிகளால் நிறுவபட்டவை.17-ஆம் நூற்றாண்டில் ஆர்ச்பிஷப் அஷர் (Archbishop Usher) கி.மு.4004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி உலகம் படைக்கப்பட்டதாக அறிவித்தார்.மாக்ஸ் முல்லர் இதை வேதவாக்காக எண்ணிச் செயல்பட்டார்.அவரது சரித்திர ஆய்வுகளை இதன் அடிப்படையிலேயே மேற்கொண்டார்.கிறிஸ்தவ உலகமே இந்தக் கருத்தை அங்கீகரித்தது.(ஆனால் இந்தக் கருத்து உலகப் படைப்புபற்றிய விஜ்ஞானக் கருத்தோடு ஒத்துப் போகவில்லை.உலகம் தோன்றி பல லக்ஷம் வருடங்கள் ஆகின்றன என்று சொல்லும் இந்துமதக் கோட்பாடே விஜ்ஞானக் கருத்தோடு பொருந்துவதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.) சிருஷ்டியின் தொடக்கத்தில் மூன்று நாட்கள் காலை,மாலைஇவற்றைப் படைத்த இறைவன் நான்காம் நாள்தான் சூரியனையும் நக்ஷத்ரங்களையும் படைத்தார் என்று பைபிளில் சொல்லப்படுகிறது.இங்கு ஒரு கேள்வி எழுகிறது.காலை,மாலைகளைப் படைத்தபின் இறைவன் சூரியனைப் படைத்தார் என்றால் சூரியன் இல்லாதபோது காலை,மாலை எப்படி ஏற்படும்?பைபிளில் உள்ள இக்கருத்து அறிவுக்குப் பொருத்தமானதா?இதற்கு விலிலிய விச்வாசிகளே பதில் சொல்லவேண்டும் ஆனால் பதில் சொல்லமாட்டார்கள்.

           மனித குலம் அனைத்திற்கும்ஆதியான ஒரேதந்தைதாய் ஆதாமும் ஏவாளும்தான் என்று பைபிள் சொல்கிறது. அதாவது உலகம் தோன்றிய பின் முதலில் தோன்றியவர்கள் அவ்விருவர் மட்டுமே,அவர்களைத் தவிர வேறு யாரும் அப்போது இல்லை என்பதே பைபிளின்  கருத்து.அந்த ஆதாம் ஏவாள் தம்பதியருக்கு இரண்டு புத்திரர்கள் பிறந்தார்கள்.அவர்களில் மூத்தவன் பெயர் கெயின்(Cain).இவன் முரட்டுத் தனமான குணம் உடையவன்.இவனது தம்பி ஆபேல்(Abel) என்பவன் நல்ல குணசீலன்.முரடனான கெயின் பொறாமையால் தன்  தம்பி ஆபேலைக் கொன்றுவிட்டான்.அதனால் சினமடைந்த இறைவன் அவன ஏடன் (Eden)தோட்டத்திலிருந்து விரட்டிவிட்டார்.அப்போது அவன்“ என்னை யாராவது கொன்றுவிடுவார்களோ என்று எனக்கு பயமாக இருக்கிறது,எனக்கு அருளவேண்டும்”என்று இறைவனை நோக்கி வேண்டிக் கொண்டான்.உடனே இறைவன் அவனது உடலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி“ இந்த அடையாளத்தைப் பார்ப்பவர்கள் உன்னைக் கொல்லமாட்டார்கள்”என்று கூறினார்.பிறகு அவன் நோட்(Nod) என்ற தேசத்துக்குச் சென்று அங்கே இருந்த ஒருபெண்ணை மணந்து ஈனாக் என்ற புத்திரனைப் பெற்றான்.-இது பைபிள் ஆதியாகமம்-வம்சாவளி (Genesis) கூறும் செய்தி.இச்செய்தியிலிருந்து நம்மனதில் ஏற்படும் சில கேள்விகள்:ஆதியில் ஆதாம்-ஏவாள் தம்பதியருக்குப் பிறந்த இருவரில் ஒருவன் கொல்லப்பட்டுவிடுகிறான்.அதன்பிறகு மீதமிருப்பவர்கள் ஆதாம்,ஏவாள்,மற்றும் அவர்களின் மூத்த மகனான கெயின் என்ற மூவர் மட்டுமே.இவர்களைத் தவிர உலகில் வேறுயாரும் இல்லை.அப்படியிருக்கும்போது“யாராவது பார்த்தால் என்னைக் கொன்றுவிடுவார்கள் என்ற பயம் எனக்கு இருக்கிறது”என்று கெயின் இறைவனிடம் கேட்டது எப்படி?அதை  ஏற்றுக்கொண்டு இறைவன் அவன் உடலில் அடையாளப்படுத்தியது எப்படி?“முட்டளே!உங்கள் மூவரைத் தவிர வேறுயாருமே இப்போது இல்லாதபோது ஏன் பயப்படுகிறாய்?”என்று ஏன் பைபிளின் இறைவன் கேட்கவில்லை.?ஆதியில் அந்த மூவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்று கூறும்போது நோட் என்ற பிரதேசத்தில் கெயினால் மணக்கப்பட்ட அந்தப் பெண் யார்?அவளைப் பற்றிய குறிப்போ ஆதாம்-ஏவாள் தம்பதியருக்கும் அந்தப் பெண்ணுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்தோ எந்தச் செய்தியும் பைபிளில் காணப்படவில்லையே,ஏன்?இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கின்றபொழுது படைப்பின் தொடக்க காலத்தில்ஆதாம் ஏவாளைத் தவிர வேறு இனத்தைச் சேர்ந்த மனிதர்கள் யாரும் உலகில் இல்லை,அவர்களே மனித குலத்தின் ஆதித் தாய்தந்தையர் என்று கூறும் பைபிள் கருத்தோடு நோட் பிரதேசத்தில் ஒரு பெண் இருந்தாள் என்று சொல்லும் அதே பைபிளின் கருத்து முரண்படுகிறதே?அப்படியானால் ஆதாம் ஏவாளைத் தவிர வேறு மனித இனமும் அப்போது இவ்வுலகில் இருந்தது என்பதுதானே அதற்குப்பொருள்.?இது அறிவுக்குப் பொருந்தக்கூடிய வரலாறா?இக்கேள்விகளுக்கு விவிலிய விச்வாசிகள் பதில் சொல்ல வேண்டும்.ஆனால் பதில் சொல்லமாட்டார்கள்.

     பைபிளின்படி யூத,அரேபிய இனங்களுக்குத்தான் ஆதாமும் ஏவாளும் பெற்றோரேயொழிய மனிதகுலம் முழுமைக்கும் அவர்கள் பெற்றோர்கள் அல்லர்.ஆனால் மனிதகுலம் முழுமைக்கும் அவர்கள்தான் ஆதிப் பெற்றோர் என்று கூறுவது நோட் பிரதேசப் பெண்ணை கெயின் மணந்தான் என்ற செய்தியால் அடிபட்டுப் போய்விடுகிறது. யூதர்கள்,அராபியர்கள்,அஸ்ஸிரியர்கள் இவர்களை எல்லாம் செமட்டிக் இனமக்கள் என்று அழைத்தார்கள். ஐரோப்பியக் கிறிஸ்தவ மதத்தவர்களும் சமூகவியலாளர்களும் யூத,அரபு வம்சங்களின் ஆதிப் பெற்றோரான ஆதாம் ஏவாளின் காலத்தை பைபிள் ஆதியாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு கோத்திரப் பரம்பரையினரின் காலத்தின் அடிப்படையில் கி.மு.3000 ஆண்டிற்குக்  கொண்டுசென்றனர்.அதாவது மனித இனமே கி.மு 3000-த்தில்தான் தோன்றியது என்றும் உலகில் உள்ள மற்ற நாகரிகங்கள் எல்லாம் இக்காலத்திற்குப் பிறகே தோன்றியதாகவும் ஒரு கருத்தைக் கட்டமைத்தார்கள். அதன் அடிப்படையில் இந்தியாவின் தொன்மையான நாகரிகமும் இந்தக்கால அளவுக்குப் பிற்பட்டது என்று காண்பித்தால் செமட்டிக் இன நாகரிகமே இந்திய நாகரிகத்துக்கு முற்பட்டது என்று இந்தியர்களை நம்பவைக்கலாம். செமட்டிக் இனமக்களின் ஆதிப் பெற்றோரே இந்தியர்களுக்கும் ஆதிப்பெற்றோர் என்று நம்பவைக்கத் தடை இருக்காது.அதனால் கிறிஸ்தவ மதத்தை இந்தியாவில் பரப்புவதும் மிக எளிதாகும் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள். இவர்களின் இந்தக் கற்பனைக் கோட்டையை சிருஷ்டி செய்யத்தான் ஜெர்மானிய கிறிஸ்தவப் பாதிரிமார்கள் மாக்ஸ் முல்லரை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார்கள்.-__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

10. அறிவை அடகுவைத்த மாக்ஸ் முல்லர்

         

ஃப்ரெட்ரிக் மாக்ஸ் முல்லர் (Friedrich Max Muller) 1823-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள தெஸ்ஸோ (Dessau) என்ற ஊரில் பிறந்தார்.உலகப் பேரறிஞர்களின் வரிசையில் முக்கிய இடத்தை வகிப்பவர் இவர்.எந்தச் சூழ்நிலையில் இவர் இந்திய வேதங்களை மொழிபெயர்க்கக் கிறிஸ்தவர்களால் இங்கு அனுப்பிவைக்கப்பட்டார் என்பதை முதலில் பார்ப்போம்.

        17-ஆம் நூற்றாண்டில் ராபர்ட். டி நொபிலி என்ற கிறிஸ்தவ சமயப் பரப்பாளர் தன்னை ஒரு பிராம்மணராகக் காட்டிக்கொண்டு ஐந்தாவது வேதம் என்ற ஒரு கற்பனை வேதத்தை உருவாக்கிச் செய்த மோசடி வேலைகளையும் அந்த மோசடிவேலைகள் பயனற்றுப் போனதையும் சென்ற பகுதிகளில் பார்த்துள்ளோம்.18-ஆம் நூற்றாண்டில் நொபிலியைப் பின் தொடர்ந்தவர் ரோமன் கத்தோலிக்கச் சமயப் பரப்பாளரான அப்பே துபாய்ஸ்(Abbe Dubois) என்பவர்.பிரெஞ்சுப் புரட்சியால் அகதியான அவர் இந்தியாவுக்கு வந்து நிரந்தரமாக இங்கேயே தங்கிவிட்டார். சிலவிஷயங்களில் நொபிலியைப் போலவே செயல்பட்ட அவர் கர்னாடக மாநில இந்துக்களைக் கிறிஸ்தவர்களாக்க முயன்று அம்முயற்சியில் தோல்வியைத் தழுவினார்.1793-ல் வில்லியம் கேரி (William Carey) என்பவரின் தலைமையில் ஒரு கிறிஸ்தவ ஞானஸ்நாநக் குழு இந்தியாவுக்கு வந்தது.1799-ல் கல்கத்தாவில் சிராம்பூர் மிஷன்”(Serampore Mission) என்ற கிறிஸ்தவச் சபை வில்லியம் கேரியால் நிறுவப்பட்டது.கேரியும் அவரது நண்பர்களும் சேர்ந்து மதம் மாற்றும் மோசடி வேலைகளில் ஈடுபட்டனர்.பிரம்ம ஸமாஜத்தின் நிறுவனரான ராஜா ராம் மோஹன் ராய் அவர்களின் அறிவுபூர்வமான எதிர்ப்பால் அவர்களது மதம் மாற்றும் மோசடி வேலைகள் எடுபடவில்லை.கிழக்கிந்தியக் கம்பெனியின் பிரதான கேந்திரமாக விளங்கிய கல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் 1815 முதல் 1831 வரை அறிவுசார் விவாதக் களத்தில் மன்னராகத் திகழ்ந்தவர் ராஜா ராம் மோஹன் ராய் என்றால் அது மிகை இல்லை.

         லண்டன் மிஷன் சொசைட்டியைச் சேர்ந்த வில்லியம் ஆடம்(Wiilliam Adam) என்ற சமயப் பரப்பாளர் ராஜா ராம் மோஹன் ராயைக் கிறிஸ்தவராக மாற்ற முயன்று தோல்வி கண்டார். விவிலியத்தின் மூவிறைக் கோட்பாட்டை(Trinitarianism)(பிதா-புத்ரன்-பரிசுத்த ஆவி) எதிர்த்து இந்திய வேதத்தின் ஓரிறைக் கோட்பாட்டை(Unitarianism) நிலைநாட்டி வாதம்புரிந்த ராஜாராம் மோஹன் ராயின் வாதம் ஆடமை மிகவும் கவர்ந்தது. ராஜா ராம் மோஹன் ராயின் ஆணித்தரமான வாதத்தினால் மெள்ள மெள்ள விவிலியத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழந்தார் ஆடம்.முடிவாக ஆடம் கிறிஸ்தவத்தைக் கைவிட்டு வேத மதத்தைத் தழுவினார்.தனது மாற்றத்தை வெளிப்படையாகக் கிறிஸ்தவ மேலிடத்திடமும் தெரிவித்துவிட்டார். கிறிஸ்தவ உலகில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

         மதவிஷயங்களில் கருத்தியல் ரீதியாக ராஜா ராம் மோஹன் ராயை எதிர்த்து நிற்க முடியாமல் கிரிஸ்தவத் திருச்சபைகள் திகைத்து நின்றன.அவற்றின் மதம் மாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தன.இந்து மதத்தில் உள்ள ஒரு முக்யஸ்தரைக் கூடக் கிறிஸ்தவராக்க முடியவில்லையே என்ற கவலை கிறிஸ்தவ மதப்பரப்பாளர்களைப் பற்றிக்கொண்டது.பிரான்சிலிருந்து இந்தியாவுக்கு வந்த அப்பே துபாய்ஸ் தனது முப்பது ஆண்டுகால மதம் மாற்றும் பணியில் முழு வெற்றியை அடையமுடியவில்லை.  “மதம் பரப்பும் பணிக்காக நான் இந்தியாவில் தங்கியிருந்த காலக் கட்டத்தில் பெரிய அளவில் என் பணியில் வெற்றிகாண முடியவில்லை. ஆண்,பெண் இரு பாலாரிலும் சுமார் நூறிலிருந்து முன்னூறுக்கு உட்பட்டவர்களையே என்னால் மதம் மாற்ற முடிந்தது.இந்த எண்ணிக்கையில் மூன்றில் இரு பங்கினர் பறையர்கள் அல்லது பிச்சைக்காரர்கள்.மற்றவர்களில் சூத்திரர்கள் நாடோடிகள்,ஜாதிப்ரஷ்டம் செய்யபட்டவர்கள், கிறிஸ்தவர்களோடு திருமண முறையில் தொடர்பு கொண்டவர்கள்,வேறு சில காரணம் உடையவர்கள் இவர்களெல்லாம் அடங்குவர்.”என்று தனது குறிப்பு ஒன்றில் எழுதியிருந்தார் அப்பே.

         1823-ல் பிரான்சுக்குத் திரும்பிய அப்பே இந்தியர்களை மதம் மாற்ற வேறு ஒரு வழியைக் கண்டுபிடித்தார். “இந்திய வேதங்களில் பலதெய்வக் கோட்பாடு உள்ளது என்பதை இந்தியர்களிடம் நிரூபித்துக் காட்டி அதன் சிறுமையையும்  ஒரே தெய்வக் கோட்பாட்டையுடைய கிறிஸ்தவத்தின் மேன்மையையும் எடுத்துக் கூறுவதுதான்  அந்த வழி.கிறிஸ்தவ மதப் பரப்பாளர்களில் உலகில் மேல்நிலையில் இருந்தவர்கள் இந்த வழியை அங்கீகரித்தனர்.அதன்படி இந்திய வேதங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் பல கடவுட் கொள்கையே அவற்றில் உள்ளது  என்பதை நிரூபிக்கவும் சரியான ஒரு நபரைத் தேட ஆரம்பித்தார்கள்.அதற்குத் தகுதியான நபர் கிடைத்துவிட்டால் ராஜா ராம் மோஹன் ராயின் வாதங்களைத் தகர்த்துவிட முடியும் என்று தங்களுக்குள் முடிவு செய்துகொண்டார்கள்.அந்தப் பணிக்காகக் கிறிஸ்தவத் திருச்சபைகள் தேடிக் கண்டுபிடித்த நபர்தான் ஜெர்மானியரான மாக்ஸ் முல்லர்.

         1847-ல் கிழக்கிந்தியக் கம்பெனி மாக்ஸ் முல்லரை வேதங்களை மொழிபெயர்க்க நியமித்தது.எட்டு ஆண்டுகளில் இப்பணியை முடித்துத்தரவேண்டும் என்பது ஒப்பந்தம்.அச்சுக்கு ஏற்ற வகையில் அவர் மொழிபெயர்த்துத் தரும் பக்கம் ஒன்றுக்கு நான்கு பௌண்ட்(அப்போது ஒரு ப்ரிட்டிஷ் பௌண்ட் என்பது பத்து இந்திய ரூபாய்களுக்குச் சமம்) பணத்தை சம்பளமாகத் தருவதாகக் கம்பெனி ஒப்புக்கொண்டது.அப்போது முல்லர் இருபத்தைந்து வயதுகூட நிரம்பாதவராக இருந்தார்.தனது ஸம்ஸ்க்ருதக் கல்வியைப் பூரணமாக முடித்திராத நிலையில் அவர் வேதங்களை மொழிபெயர்க்கும் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.ஜெர்மன் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட அவருக்கு அப்போது ஆங்கிலத்திலும் போதிய பரிச்சயமில்லை.இந்த நிலையில் அவர் இந்த வேதமொழிபெயர்ப்புப் பணியைத் துணிந்து ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் அவரது வறுமையே.ஒருவெளை உணவுக்குக்கூட வழியில்லாமல் பெரும் கஷ்ட நிலையில் இருந்த அவருக்கு பிரிட்டிஷ் அரசின் இந்த உதவி பெரும் வரப்பிரசாதமாகத் தெரிந்தது.தனக்குக் கொடுக்கப்பட்ட பணிக்கு முற்றிலும் தான் தகுதியற்றவர் என்பதை நன்றாக அவர் அறிந்திருந்தார்.பொறுப்பை ஏற்றுக்கொண்டபிறகு ஆங்கிலத்தையும் ஸம்ஸ்க்ருதத்தையும் கற்கத்தொடங்கினார்.தனது சாதாரணமான ஸம்ஸ்க்ருத அறிவைக்கொண்டு வேதங்களை மொழி பெயர்க்கத் தொடங்கினார்.

           வேத ஸம்ஸ்க்ருத்தைச் சாதாரண ஸம்ஸ்க்ருத அறிவால் புரிந்துகொள்ள இயலாது. யாஸ்கரின் நிருக்தத்தையும் பதஞ்சலியின் மஹாபாஷ்யத்தையும் பாணினியின் அஷ்டாத்யாயியையும் வழுவறக் கற்காமல் வேதத்தை விளக்க இயலாது.இவற்றில் எதிலும் போதிய ஞானமில்லாத முல்லர் இந்தப்பணியில் இறங்கியது ஒரு பெரும் ஸாஹஸச்செயலே. தனக்கிருந்த குறைந்தபட்ச ஞானத்தைக் கொண்டு தனக்கு உணவளித்தவர்களுக்குத் தன் விச்வாசத்தைக் காட்டத் தனது மன சாட்சியை அடகுவைத்துவிட்டு வேதவாக்கியங்களுக்குத் தவறான பொருள் எழுதினார்.

    ஆரம்பத்தில் ஒரு வேத அறிஞர் என்ற முறையில் இந்தியர்களுக்கு அவர் மீது ஒரு மதிப்பு இருந்தது.தனது விடாமுயற்சியால் அறிவை வளர்த்துக்கொண்டவர் என்ற முறையில் அவரை அறிஞர் என்று அழைப்பது பொருத்தமானதே.ஆனால் இந்தியர்கள் போற்றும் அளவுக்கு ஒரு பெரிய நன்மையை அவர் இந்தியர்களுக்குச்          செய்து விடவில்லை என்பது அவர் வேதங்களை விளக்கிய விதத்திலிருந்தே அறியலாம்.இவரைத் தவிரவும் பெரும்பாலான ஐரோப்பிய அறிஞர்கள் வேதமொழிபெயர்ப்பில் ஈடுபட்டனர்.அவர்களெல்லாம் அறிவுத் தேடலுக்காகவும் வருங்கால சந்ததியினரின் பயன்பாட்டுக்காகவும் மட்டுமே வேதங்களை மொழிபெயர்த்தனர்.அவர்களெல்லாம் பெரும்பாலும் ஜெர்மானியர்களாக இருந்ததாலும் அறிவுத் தேடலைத்தவிர வேறு எந்த உள்நோக்கமும்(குறிப்பாக இந்திய வேதத்தைக் கொச்சைப்படுத்திக் கிறிஸ்தவத்தைப் பரப்பும் உள்நோக்கம்) இல்லாதவர்களாக இருந்ததாலும் மாக்ஸ் முல்லரின் மொழிபெயர்ப்புப் பிரபலமடைந்த அளவுக்கு அவர்களின் மொழிபெயர்ப்புப் பிரபல மடையவில்லை.மேலும் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜெர்மானிய மொழியிலும் பிரெஞ்ச் மொழியிலும் இருந்ததால் உலக அளவில் மக்களின் பார்வைக்கு அவை செல்லவில்லை.

       “எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியனுக்கு அஸ்தமனமில்லை” என்று தற்பெருமை பேசும் ஒரு நாட்டின் மொழியான ஆங்கிலத்தில் முல்லரின் மொழிபெயர்ப்பு இருந்ததால் அது எல்லோரையும் மிக எளிதாகச் சென்றடைந்தது.தனக்கு உணவளித்த எஜமானர்களுக்கு விச்வாசத்தைக் காட்டும் விதத்திலேயே முல்லர் வேதத்தை மொழிபெயர்த்தார்.முக்கியமாக வேதம் தொகுக்கப்பட்ட காலத்தை விவிலியக்கால அளவுக்குள் அடக்கிவிடவேண்டும் என்ற நோக்கத்துடனும் வேதத்தில் பலதெய்வக்கொள்கையே இடம்பெற்றுள்ளது என்ற கருத்தை நிறுவும் நோக்கத்துடனும்தான் முல்லர் வேதத்தை மொழிபெயர்த்தார்.கிறிஸ்தவ மதப்பரப்பாளர்கள் வேதம் குறித்து எவ்விதமான கருத்தைக்கொண்டுள்ளார்களோ அவ்விதமான கருத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வேதத்தை மொழிபெயர்த்தார் முல்லர்.

         ‘திராவிட’ என்ற சொல் ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் என்று கால்டுவெல் சொன்னதுபோல வேதத்தில் இடம்பெறும் ‘ஆர்ய’ என்ற சொல்லை ஒரு இனத்தைக்குறிக்கும் சொல்லாக முதன் முதலில் விளக்கியவர் முல்லர்தான்.அவரது சமகாலத்தில் வாழ்ந்த ஸ்வாமி தயாநந்தர் வேதச்சொற்களுக்கு முல்லர் தரும் விளக்கங்கள் பரம அபத்தமானவை என்று கடுமையாக விமர்சித்தார். ஆனால் அவரது விமர்சனம் எதிர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தியது. அவரது விமர்சனத்தால் முல்லர் மேலும் பிரபலமடைந்தார்.50 ஆண்டுகாலம் ஆங்கில அரசாங்கத்தின் ஆதரவால் பணம், புகழ்,பதவி என்று ராஜபோகத்தில் திளைத்தார் முல்லர்.தனது வேத மொழிபெயர்ப்பு இந்தியாவின் தலைவிதியையே தலைகீழாக மாற்றிவிடும் என்று கனவு கண்டார்.ஆனால் அவரது வேத மொழிபெயர்ப்பால் கிறிஸ்தவத் திருச்சபைகள் எண்ணியபடி எந்த ஒரு பயனும் விளையவில்லை. அவரால் ராஜாராம் மோஹன்ராயின் “வேதம் ஓரிறைக் கோட்பாட்டைக்கொண்டதுதான்”என்ற கருத்தைத் தகர்க்க முடியவில்லை. மோஹன் ராயை மதம் மாற்றவும் முடிவில்லை.பிரம்ம ஸமாஜத்தில் உள்ள மற்றவர்களையும் மதம் மாற்ற முடியவில்லை.

       ருக்வேதத்தில் சொல்லப்படுவது ஓரிறைக்கோட்பாடுதான் என்பதை முல்லரின் மனசாட்சிக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.ஆனால் “ரிக் வேதத்தில் ஓரிறைக்கோட்பாடு சொல்லப்படவில்லை.அது பலதெய்வக் கோட்பாட்டையே பேசுகிறது” என்று கிறிஸ்தவமதத்திருச் சபைகளின் திருப்திக்காக நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார் முல்லர்.அதைச் செய்யாவிடில் தனக்குப் பணம்கொடுத்து ஆதரித்தவர்களுக்கு துரோகம் செய்ததாகிவிடுமே என்று அவரது மனம் சிந்தித்தது.இதற்காகப் பல ஆண்டுகள் ஆழமாக சிந்தித்து 1859-ல் வேதமதத்துக்கு “ஹீனோதெயிஸம்”(Henotheism) என்று ஒரு பெயரை வழங்கினார். “கண்ணுக்குப் புலப்படாத பரந்து விரிந்த ஒரு சக்தியைத் தான் காணும் பொருள்களின் மீதெல்லாம் இருப்பதாகப் பாவித்து  அதன் மீது நம்பிக்கைவைத்து வழிபடுவதே ஹீனோதெயிஸம்” என்று விளக்கினார் முல்லர்.

           ஹீனோதெயிஸத்துக்கு முல்லர் தந்த இந்த விளக்கத்திலிருந்து வேதம் பலதெய்வக் கோட்பாடுடையதன்று என்பதை அவரே ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.வேதத்தின் கடவுட்கொள்கை விஷயத்தில் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியாத நிலையில் வேதம் ஓரிறைக் கோட்பாட்டையுடையது என்று கூறுவோர்க்கும் வேதம் பலதெய்வக் கோட்பாட்டையுடையது என்று நிரூபிக்க விழைவோர்க்கும் திருப்திதரும் வகையில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை வீழ்த்துவது என்பதுபோல இவ்வித விளக்கத்தை அளித்தார் முல்லர்.4.12.1875-ல் முல்லர் ஆர்கில் கோமகனுக்கு(Duke of Argyll) எழுதிய கடிதத்தில்

“ஆரிய இனத்தின் ஆதிமதம் சுத்தமான ஓரிறைக் கோட்பாடுடையதுதான்.இது முற்றிலும் உண்மை.ஆயினும் சில சந்தேகங்களுக்கும் மறுப்புகளுக்கும் இடம் கொடுப்பதாக அது இருக்கிறது.. தற்காப்பற்ற இந்த ஓரிறைக்கோட்பாடு தனக்குத் தெரியாமலேயே பலதெய்வக் கோட்பாட்டுக்கு வழிவகுத்துக் கொடுத்து விட்டது.” என்று எழுதியிருப்பது மாக்ஸ் முல்லரின் மனசாட்சியின் குரலாகும்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

11. மாக்ஸ் முல்லர் என்னும் கர்ணன்

கற்றறிந்த சிறந்த அறிவாளி ஒருவன் சிலசூழ்நிலைகளில் சிலநேரங்களில் தன் மனசாட்சிக்கு விரோதமாகப் பேசினாலும் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் உண்மை நிலையை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ வெளிப்படுத்திவிடுவான். ஒரு அறிவாளியின் மனநிலை இதுதான். மெத்தப்படித்தவரான மாக்ஸ் முல்லரின் நிலையும் இதுதான்.

        மிகச்சிறந்த அறிஞரான மாக்ஸ் முல்லர் ஆங்கிலேயர்கள் போட்ட ரொட்டித் துண்டுக்காகவும் வெண்ணெய்க்காகவும் தன் அறிவாற்றலை அடகுவைத்தார்.தன் உடலுக்காகத் தன் ஆன்மாவை அடகுவைத்துத் தன் எஜமானர்களின் திருப்திக்காகச் செயல்பட்டார்.நொபிலி போன்றவர்களைப்போல் அவர் ஒரு வெறிபிடித்த மதப்பரப்பாளர் அல்லர்.அதேநேரத்தில் தனக்குச் சோறு போட்டு வளர்த்தவர்களுக்குச் செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதற்காகத் தன் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் தன்னை ஒரு கிறிஸ்தவ விச்வாசியாகவே வெளிப்படுத்திக்கொண்டார்.அவரது பேச்சுக்களும் எழுத்துக்களும் கிறிஸ்தவ மதப்பரப்பாளர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. ஆனால் சிலநேரங்களில் அவரது மனசாட்சி உறுத்திக்கொண்டே இருந்தது.

         மாக்ஸ் முல்லர் ஸம்ஸ்க்ருதத்தின் மீது தணியாத மோகம் கொண்டிருந்தார்.அவரது இந்த மோகம் பல கிறிஸ்தவர்களுக்கு வெறுப்பை எற்படுத்தியது.கீழைநாட்டு மொழிகள் மீது இவர்கொண்டிருந்த மோகத்தைக் கண்டு கிறிஸ்தவ மத வெறியரான மெக்காலே இவரைக் கடுமையாகக் கடிந்து கொண்டார்.அதன்பிறகு தன் மனதில் தோன்றிய சில விஷயங்களைப் பொதுவெளியில் பேசுவதைத் தவிர்த்தார்.  இந்து மதத்தின் வேரை அறுப்பதற்காகவே ஆங்கிலேயர்கள் வேதத்தை மொழிபெயர்க்க அவரை நியமித்தார்கள்.அதனால் அவர் அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டியிருந்தது.இந்தியப் பண்பாட்டின் தொன்மையை அவர் நன்கு அறிந்திருந்தும் அதை வெளிப்படையாகக் கூற இயலாத நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தார். .ஆக்ஸ்ஃபோர்டின் எல்லைக்குள்ளேயே அவர் வாழவேண்டியிருந்தது.கிறிஸ்தவ வெறியர்கள் எல்லாம் அவருடைய ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கண்காணித்துவந்தனர்.இந்த நிலையில் அவர் மிகப் பரிதாபமான வாழ்க்கையே வாழ நேர்ந்தது.தனது கருத்தை சுதந்திரமாகத் தெரிவிக்கும் உரிமையை அவர் இழந்துவிட்டார்.தங்கள் காரியத்தை நிறைவேற்றிக்கொள்ளப் பெரிய அளவில் பணம், பதவி,புகழ்,செல்வாக்கு இவற்றையெல்லாம் ஆங்கிலேயர்கள் அவருக்குக் கொடுத்துப் போஷித்துவந்தார்கள்.மிகப் பெரிய “வேத அறிஞர்” என்ற பிரசித்தியை உலக அளவில் அவருக்கு எற்படுத்தியிருந்தார்கள்.தனக்கு இவ்வளவு நன்மை செய்த ஆங்கிலேயர்களுக்குப் பாதகமாக நடந்து கொண்டாலோ, பேசினாலோ என்ன நடக்கும் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.அதனால் தான் தன் மனசாட்சிக்குப் புறம்பாகவும் தன்னை போஷித்தவர்களின் திருப்திக்காகவும் கருத்துக்களைத் தெரிவித்தார்.அதே நேரத்தில் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வேத இலக்கியங்களின் மீது தனக்குள்ள மரியாதையை சூசகமாக வெளிக்காட்ட அவர் தயங்கியதில்லை.கிறிஸ்தவர்களின் திருப்திக்காக அவர் பிராமணர்களையும் வேதத்தையும் வெறுப்பதுபோல் காட்டிக் கொண்டார் என்பதும் தன் மனசாட்சியின்படி பிராம்மணர்களையும் வேதத்தையும் போற்றியிருக்கிறார் என்பதையும் அவரது எழுத்துக்களிலிருந்தும் பேச்சுக்களிலிருந்தும் அறியமுடியும்.மொழி இலக்கணங்களைப் பற்றிப் பேசும்போது பிராம்மணர்களின் அறிவாற்றலைப் புகழும் வகையில்,

“. Their achievements in grammatical analysis, which date from the sixth century, B. C., are still unsurpassed in the grammatical literature of any nation. The idea of reducing a whole language to a small number of roots, which in Europe was not attempted before the sixteenth century by Henry Estienne,57 was perfectly familiar to the Brahmans, at least 500 B. C-( Lectures of Mak Mueller on The Science of Language-Part-3)

(இலக்கண ஆராய்ச்சியில் அவர்களது (பிராமணர்களது) சாதனைகளை கி.மு.6-ஆம் நூற்றாண்டின் தொடக்கித்திலேயே காணமுடியும்.அந்த சாதனைகள் மற்ற எந்த நாட்டின் இலக்கண இலக்கியத்தாலும் இன்றுவரை விஞ்சமுடியாதபடியே இருக்கின்றன.ஒரு மொத்த மொழியையும் ஒரு குறைந்த எண்ணிக்கையிலான வேர்ச்சொற்களின் அடிப்படையில் சுருக்கிவிடுவது என்பது சுமார் கி.மு.ஐநூறிலேயே பிராம்மணர்களுக்கு மிகச்சிறப்பாகவே தெரிந்திருந்தது.16-ஆம் நூற்றாண்டின் ஹென்ரி ஐஸ்டீனுக்கு முன்னால் ஐரோப்பாவில் யாரும் அம்முயற்சியில் ஈடுபடவில்லை.) என்று பேசியிருக்கிறார்.

ஸம்ஸ்க்ருத இலக்கண ஆசிரியரான பாணினியைப் பற்றிக் குறிப்பிடும்போது,

. It is the perfection of a merely empirical analysis of language, unsurpassed, nay even unapproached, by anything in the grammatical literature of other nations.

(அது (அஷ்டாத்யாயி) ஒரு மொழியைப் பற்றிய வெறும் ஒரு அனுபவ அடிப்படையிலான ஆய்வின் பூரணத்வமாகும். மற்ற எந்த நாடுகளின் இலக்கண இலக்கியத்தில் உள்ள எந்த விஷயமும் அதை விஞ்ச முடியாது,நெருங்கவும் முடியாது.) என்று பேசியிருக்கிறார்.

        அதே நேரத்தில் தனக்கு ஆதரவளித்த கிறிஸ்தவர்களின் திருப்திக்காக பிராமணர்கள் மீது வெறுப்பையும் உமிழ்ந்தார். ஆதிகாலம் தொட்டு வேதம் அதன் மூலபாடத்தில் மாற்றமே இல்லாமல் இன்றுவரை சுத்தமாக இருப்பதற்குக் காரணம் பிராம்மணர்களின் அசாதாரண நினைவாற்றலே-என்று பிராமணர்களைப் புகழும் முல்லர் ,பிராம்மணர்களைப்பற்றி இல்லாதது பொல்லாததையெல்லாம் சொல்லி அவர்களைப் பற்றிய வெறுப்பைக் கிறிஸ்தவ உலகில் விதைத்தார்.கிறிஸ்தவ மதப்பரப்பாளர்கள் அவர் பாணியிலேயே பிராம்மண வெறுப்பைப் பின்பற்றித் தங்கள் மதம் பரப்பும் செயலில் ஈடுபட்டனர். அந்த வெறுப்பு இன்றுவரை நாட்டில் பரவலாக இருந்துவருகிறது.

       சுருக்கமாகச் சொன்னால் மஹாபாரதத்தில் வரும் கர்ணனின் நிலைதான் முல்லரின் நிலை.தனக்கு முகவரி அளித்தவனுக்கு விச்வாசமாக இருக்கவேண்டும் என்று நினைத்து துரியோதனனின் தீய செயல்களுக்கெல்லாம் தன் மனசாட்சியை அடகுவைத்துவிட்டுத் துணைபோனான் கர்ணன். “எனது செயல் தர்மத்துக்குப் புறம்பானது என்று நன்றாகவே எனக்குத் தெரியும். துரியோதனனின் சந்தோஷத்துக்காகவே அதை நான் செய்தேன். அதற்காகத் தற்போது  வருந்துகிறேன்” என்று ஸ்ரீகிருஷ்ணனிடம் தன்னிலை விளக்கமளித்தான் கர்ணன். ஆனால் முல்லர் தனது தன்னிலை விளக்கத்தை அளிக்க ஸ்ரீகிருஷ்ணனைப் போன்ற நம்பகத் தன்மைவாய்ந்த நபர் யாரும் அப்போது அவர் கண்களில் படவில்லை.

        ஆங்கிலேயர்கள் ஒருவேலையைச் செய்ய ஒரு நபரை சம்பளத்துக்கு நியமித்தால் அந்த வேலையை அந்த நபர் செய்து முடித்தவுடன் அந்த நபரைப் பெரிதாகக் கண்டுகொள்ள மாட்டார்கள்.இது அவர்களின் இயல்பான குணம்.மாக்ஸ் முல்லர் விஷயத்திலும் அப்படியேதான் நடந்தார்கள். மாக்ஸ் முல்லர் தனது வேத மொழிபெயர்ப்பை நிறைவு செய்தவுடன் ஆங்கிலேயர்கள் அவர்மீது முன்பு வைத்திருந்த அபிமானத்தை வைக்கவில்லை.அதற்குப்பின் அவர் ஒரு சபிக்கப்பட்டவராகவேதான் வாழ்ந்துவந்தார். அவரது தாய்நாட்டினரும், ஆங்கிலேயனுக்குத் துணை போனதால் அவரை துரோஹி என்றே அழைத்தனர்.ஜெர்மனிக்கு அவர் திரும்பிப்போனால் அவரைத் தூக்கிலிட அவர்கள் திட்டமிட்டிருந்தார்கள். இந்திய அறிஞர்கள், இந்துமதத்தைப் பழித்துப் பேசி அதை அழிப்பதற்க்கான முயற்சியில் கிறிஸ்தவர்களுக்குத் துணைபோனவர் என்ற முறையில் அவரை வெறுத்தார்கள்.இந்த நிலையில் அவர் தனது வாழ்வின் கடைசி நாட்கள் வரை முகமூடி வாழ்க்கைதான் வாழமுடிந்தது.தனது மனம் திறந்து சில கருத்துக்களைத் தன் வாழ்நாளுக்குள் அவரால் வெளிப்படுத்த முடியாமலே போய்விட்டது.தனது வேதமொழிபெயர்ப்பு சரியானதில்லை என்பதை மனப்பூர்வமாக அறிந்திருந்தார் அவர். 1845—ல் இம்பீரியல் ரஷ்யன் அகாடமியில் பணிபுரிந்த போத்லிங்க்(Boehtlingk) என்பவர் வேத மொழிபெயர்ப்பைத் தன்னோடு சேர்ந்து செய்யுமாறு முல்லரை அழைத்தபோது ஏதோ சில காரணங்களால் முல்லர் அதற்கு இசையவில்லை. ஆனால் “My Autobiography” என்ற தனது சுயசரிதை நூலில்

“போத்லிங்க் ஒருவரே இந்த வேலையை என்னைவிடச் சிறப்பான முறையில் செய்துவிடமுடியும்.ஏனெனில் அவர் என்னைவிட அனுபவத்தில் மூத்தவர் என்பது மட்டுமின்றி சாயணரின் விளக்கவுரையில் ஆங்காங்கே மேற்கோள் காட்டப்படும் பாணினியின் இந்திய இலக்கண நூலை அவர் என்னைவிட ஆழமாகப் படித்தவர்.” என்று எழுதியுள்ளார். இதன்மூலம் தான் பாணினியை முழுமையாகக் கற்கவில்லை என்பதை மாக்ஸ் முல்லர் ஒப்புக்கொள்கிறார் என்பதை அறியமுடிகிறது. அதனால் வேதச்சொற்களை அவர் மொழிபெயர்த்த விதம் தான்தோன்றித்தனமானது என்பதுடன் அவரை ஆதரித்த கிறிஸ்தவ மேலிடங்களின் எண்ணத்தைப் பூர்த்திசெய்யும் வகையிலும் அமைந்திருந்தது என்பதுதான்  நிதர்சனமான உண்மை.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

12. மாக்ஸ் முல்லரின் மனசாட்சி

மாக்ஸ் முல்லர் ஒரு சமயத்தில் தான் ஓர் ஆங்கிலேயனாகப் பிறக்கவில்லையே என்ற ஒரு வருத்தத்தை மனதில் கொண்டிருந்தார்.ஆங்கிலேயர்கள் தங்கள் வேலை முடியவேண்டும் என்பதற்காகத்தான் அவரைப் பல வகையில் போஷித்தார்களேயொழிய மற்றபடி அவர் மீது ஒரு பெரிய அபிமானத்தை ஒன்றும் அவர்கள் வைக்கவில்லை. இன அடிப்படையில் அவர் ஒரு ஜெர்மானியர் என்ற பார்வையைத்தான் அவர்மீது ஆங்கிலேயர்கள் வைத்திருந்தார்கள். அதனால்தான் தாங்கள் ஒப்படைத்த வேத மொழிபெயர்ப்பு வேலையை அவர் ஒழுங்காக நிறைவேற்றுகிறாரா என்று அவரை எப்போதும் கூர்ந்து கவனித்து வந்தார்கள்.  ஆரம்பக் காலக் கட்டத்தில் ரிக் வேதப் பகுதிக்குள் அவர் மனதளவில் நுழைந்தபோது ரிக் வேத உபதேசங்களைக் கண்டு ஆச்சரியத்தால் மெய்சிலிர்த்துப் போய்  விலிலியத்தின் மீதுள்ள தனது நம்பிக்கையை இழந்தார். தனது நூல் ஒன்றின் முகவுரையில்  “மற்ற மதங்களை ஒரு வரலாற்று ஆசிரியன் ஆய்வு செய்வதுபோல் தன் சொந்த மதத்தையும் அவ்விதம் ஆய்வு செய்யப் பயப்படுவானாகில் அவன் சிறிதும் நம்பிக்கை இல்லாத மனிதன் ஆகிறான்” என்று ஒரு கருத்தை எழுதியிருந்தார். சில நேரத்தில் அவர் பேசிய இப்படிப்பட்ட கருத்துக்களை வைத்து அவர்மீது அங்கிலக் கிறிஸ்தவர்கள் எரிச்சலடைந்தார்கள்.அதனால் அவரைத் “திருச்சபைக்கு முரணானவர்” என்று அவர்கள் பலமுறை சாடினார்கள்.இதனால் கடுப்புற்ற முல்லர் ஒரு சமயம் கொஞ்சம்கூட யோசிக்காமல் “ஆக்ஸ்ஃபோர்டில் ‘திருச்சபைக்கு முரணானவன்’ என்று நான் மீண்டும் தாக்கப்படுகிறேன்.தானாகத் தேர்வு செய்துகொண்ட கருத்தின்படி அவ்வாறு திருச்சபைக்கு முரணாக இல்லாதவன் அல்லற்படுவானாக”என்று எழுதினார்.இதன்மூலம் திருச்சபைக்கு முரணாக இல்லாதவன் துன்பப்படுவான் என்பது முல்லரின் கருத்தாகத்தெரிகிறது. இவ்வாறு திருச்சபைக்கு முரணான கருத்துடையவர்களுக்கு மரணதண்டனை கொடுப்பதுதான் கிறிஸ்தவர்களின் வழக்கம்.ஆனால் இந்துக்களை கிறிஸ்தவர் களாக்குவதில் தங்களுக்குத் துணைபுரிபவர் முல்லர் என்பதால் அவரை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

          மாக்ஸ் முல்லர் தனது வாழ்நாளின் கடைசிக் காலங்களில் வேத விஷயங்களில் தான் செய்த தவறுகளைத் திருத்திக்கொள்ள நினைத்தார். ஆனால் அது அவ்வளவு தூரம் எடுபடவில்லை. ஆரம்பத்தில் வேதத்தில் இடம் பெறும் “ஆர்ய” என்ற சொல்லை ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லாகவே அவர் கருதினார். ஆனால் பிற்காலத்தில் தனது கருத்துத் தவறானது என்பதை உணர்ந்து, “ஆர்ய”என்ற சொல் ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் அன்று.அது ஒரு மொழியைக் குறிக்கும் சொல்தான்”என்று விளக்கமளித்தார்.ஆனால் அவரது இந்த விளக்கத்தை ஏற்காமல்  இன ஆராய்ச்சியாளர்கள் “ஆர்ய”என்றால் அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல் என்ற அவரது பழைய விளக்கத்தையே ஆதரித்தனர். அதனால் கடுப்புற்ற முல்லர்’

I have declared again ang again that if I say Aryan,I mean neither blood nor bones,nor skull or hair.I mean simpliy those who speak the Aryan Language.Aryan in scientific Language is utterly inapplicable to race.It means language and nothing but language. “To me an ethnologist who speaks of Aryan blood,Aryan race,Aryan eyes and hair is as great a sinner as a Linguist who speaks of dolichocephalic or brachycephalic grammar”

 

(ஆரியன் என்று நான் சொன்னால் அச்சொல் இரத்தத்தையோ,எலும்புகளையோ,மண்டை ஓட்டையோ முடியையோ ( உடலமைப்புகளை) குறிக்காது என்பதை நான் பலமுறை திரும்பத் திரும்பக் கூறியிருக்கிறேன்.ஆரியன் என்ற சொல் ஒரு மொழியைக் குறிப்பதன்றி ஒரு இனத்தைக் குறிக்காது.அது மொழியைத்தான் குறிக்கிறது.மொழியைத்தவிர வேறு எதையும் குறிக்காது.என்னைப் பொறுத்தவரை  ஆரியன் இரத்தம்,ஆரிய இனம்,ஆரியன் கண்கள், ஆரியன் முடி என்று பேசும் ஒரு மனித இன ஆய்வாளன் நீள் மண்டை அகராதி,உருண்டை மண்டை இலக்கணநூல் என்று பேசும் ஒரு மொழியியலாளன் எவ்வளவு பெரிய பாவியோ அவ்வளவு பெரிய பாவியாவான்) என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் கூறியிருக்கிறார். தான் திருத்திச் சொன்ன பிறகும் தனது பழைய கருத்தையே கட்டிக்கொண்டு அழுகிறார்களே என்ற ஆத்திரம் அவரது இந்த வரிகளில் புலப்படுவதை நாம் காணமுடியும்.ஆனால் “ஆர்ய”என்ற சொல் குறித்த முல்லரின் பழைய விளக்கம் தங்களுக்குச் சாதகமாக இருந்ததால் ஆங்கிலக் கிறிஸ்தவர்கள் அந்த விளக்கத்தையே விடாமல் பிடித்துக்கொண்டனர்.முல்லர் தன் தவறைத் திருத்திச் சரியாகச் சொன்ன பின்பும் அவர்கள் அதை ஏற்கவில்லை.இன்றுவரை அவரது பழைய கருத்தே நடைமுறையில் இருந்துவருகிறது.பள்ளிக் கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் இன்றுவரை  அவரது பழைய கருத்தே குழந்தைகளுக்குப் பாடமாகக் கற்பிக்கப்படுகிறது.அதுதான் ஆங்கில ஆட்சியில் கல்வித்திட்டத்தை அமைத்துக் கொடுத்த கிறிஸ்தவ மதவெறியரான மெக்காலேயின் சதிவேலை.

         வேத காலத்தை விவிலியக் கால அளவுக்குள் அடைப்பதற்காக மாக்ஸ் முல்லர் “வேதம் தொகுக்கப்பட்ட காலம் கி.மு.1200” என்று ஆரம்பத்தில் ஒரு கருத்தை முன்வைத்தார். ஆனால் அவர் வேதத்தை முழுமையாக ஆய்வு செய்தபோது அதன் தொன்மையைக் கண்டு திகைப்படைந்து,

.”…Whether the Vedic Hymns were composed in 1000 or 1500 or 2000 or 3000 years B.C. no power on earth will ever determine”

(வேத மந்திரங்கள் தொகுக்கப்பட்ட காலத்தை கி.மு.1000 என்றோ,1500 என்றோ,2000 என்றோ,3000 என்றோ அறுதியிட்டுக் கூற பூமியில் உள்ள எந்த சக்தியாலும் எப்போதுமே முடியாது.) என்று கூறிவிட்டார். அப்போதும் கூட கி.மு 3000-க்குமேல் வேத காலத்தைக் கொண்டுசெல்ல அவர் மனம் இசையவில்லை.காரணம் தனக்கு உணவளித்த எஜமானர்களுக்குக் காட்டிய விச்வாசம். எனினும் தன்னையும் அறியாமல் “வேதகாலத்தை நிர்ணயிக்க பூமியில் எந்த சக்தியாலும் முடியாது” என்று அவர் சொன்னது வேதத்தின் தொன்மைச் சிறப்பை அவர் அறிந்திருந்தார் என்பதையே காட்டுகிறது.

 

           கிறிஸ்தவத் திருச்சபைகளின் திருப்திக்காகவே அவர் பல கருத்துக்களை மறைத்தும் திரித்தும் சொன்னார் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.உலகில் மற்ற நாடுகளில் உள்ள நாகரிகங்கள் எல்லாம் இந்திய வேத நாகரிகத்தின் தாக்கத்தால் உருவானவை என்பது முல்லருக்கு நன்றாகவே தெரியும்.1882-ல் வெளியான “India” என்ற தனது நூலில் “ பல்வேறு அறிஞர்கள் முன்வைத்தபடி வேற்று நாட்டின் தாக்கம் இந்தியப் பண்பாட்டில் இருக்குமோ என்பது குறித்து நான் மிக நுட்பமாக ஆராய்ந்த பிறகு (இந்தியாவின்) அந்த மொழியிலோ மதத்திலோ அல்லது தொன்மையான சடங்குகளிலோ எவ்விதமான அயல் நாட்டுத் தாக்கத்தின் சாயல் கூட இல்லை என்று நான் கூறுவேன்.”என்று எழுதியிருக்கிறார்.ஆனால் அவரே 4.12.1899-ல் கேல் (Kiel) நகரில் இருந்த பேராசிரியர் ட்யூஸன்(Deussen) என்பவருக்கு எழுதிய கடிதத்தில் “ இந்தியாவுக்கும் ஏதென்ஸுக்கும் மிக அருகில் உள்ளது அலெக்ஸாந்த்ரியா.அதனால் ஆன்மிகப் பரிமாற்றம் சாத்திய மானதுதான்.அவற்றால் நமக்கென்ன நன்மை? ஸிரியாவின் பார்தேஸினியர்கள்(Bardesenes)  அலெக்ஸாந்த்ரியாவைவிட விரைவாக இந்தியாவைப் பற்றி அறிந்துகொண்டார்கள்.அலெக்ஸாந்த்ரியா இந்தியாவிடமிருந்து பெற்ற தாக்கம் பற்றிய கருத்தை இந்திய அரசியல் தூதர்களாக ரோமுக்கு வந்தவர்களிடம் கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்தி வைத்திருந்தேன்.என்றாலும் சத்தியத்தைச் சந்தித்தே ஆகவேண்டும்” என்று எழுதியிருகிறார். “கஷ்டப்பட்டுத் தடுத்து நிறுத்தி வைத்திருந்தேன்” என்று அவர் எழுதியிருப்பது தன் எஜமானர்களின் திருப்திக்காக இந்து மதத்துக்குரிய மதிப்பை அவர் தர விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.எனினும் “சத்தியத்தைச் சந்தித்தே ஆகவேண்டும்”என்று அவர் கூறியிருப்பது அலெக்ஸாந்த்ரியா இந்தியாவிடமிருந்துதான் பண்பாட்டைக் கற்றுக்கொண்டது என்ற சத்தியம் அவருக்குத் தெரிந்திருந்தது என்பதையே காட்டுகிறது.

          இப்படித் தனது எஜமானர்கள் போட்ட சோற்றுக்காகச் சில உண்மைகளைச் சில நேரங்களில் அவர் மறைத்துப் பேசினாலும் சூசகமாகவும் மறைமுகமாகவும் சரியான கருத்துக்களை எடுத்துரைத்த சந்தர்ப்பங்கள் அவர் வாழ்வில் இதுபோல் பல உண்டு. தன் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவர்களுக்குக் கடன்பட்டிருந்த மாக்ஸ் முல்லர் தன் வாழ்நாளில் ஒரு இந்திய அறிஞரைக் கூட மதம் மாற்ற முடியாமலேயே கல்லறைக்குள் புகுந்துவிட்டார். வேத இலக்கியங்களைக் கற்ற மேற்கத்திய அறிஞர்களில் பலர் இந்து மதத்திற்கு மாறி வந்தார்களேயொழிய இந்திய அறிஞர்கள் யாரும் கிறிஸ்தவர்களாகவில்லை.

            ஆனால் 18,19-ஆம் நூற்றாண்டுகளில் ஆழமான தத்துவ சிந்தனைகள் இல்லாத, உலகியல் வாழ்வையே பெரிதும் விரும்பிய வசதிமிக்க சில இந்தியர்கள் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்கள். காரணம் வெள்ளைக்காரியை மணப்பதற்காகவே.அவர்கள் மதம் மாறியதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை.பாலியல் ரீதியாக வெள்ளைத்தோலில் கவர்ச்சி யுடையவர்கள் ஆசியாக் கண்டத்தில் மிகுதி. வெள்ளைக் காரியை மனைவியாகப் பெற்றிருப்பது சமூஹப் பொருளாதார அந்தஸ்தை உயர்த்துவதோடு வெள்ளையரின் ஆட்சி உள்ள நாடுகளில் வளமையைப் பெருக்கும் மூலதனமாகவும் அது கருதப்பட்டது..__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

13.   மாக்ஸ் முல்லரின் மறுபக்கம்

கிறிஸ்தவ மத விஷயங்களில் பெரிய சிந்தனையாளரான இங்கர்ஸல்(1833-1899) முல்லரின் சமகாலத்தில் வாழ்ந்தவர். கிறிஸ்தவ மதத்தின் கட்டுக் கதைகளையும் புளுகு மூட்டைகளையும் தவிடு பொடியாக்கியவர் இவர்.இவருடைய கிறிஸ்தவ மத எதிர்ப்புக் கருத்துகளை எதிர்கொள்ள முடியாமல் கிறிஸ்தவ மத ஆதரவாளர்கள் திக்கு முக்காடிப் போனார்கள்.கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக இங்கர்ஸல்லோடு வாதம் புரிந்தால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தாலேயே முல்லர் அவரோடு மதவிஷய விவாதங்கள் செய்வதைத் தவிர்த்துவந்தார்.

           சிறந்த அறிவுப் பண்புமுடைய மாக்ஸ் முல்லர் தனது நேர்மையை ஆங்கிலேயரிடம் அடகுவைத்திருந்ததால் கிறிஸ்தவக் கொள்கை தவறானது என்று தெரிந்திருந்தும் அதற்கு ஆதரவாக நடந்துகொண்டார்.அதனால் அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய உண்மை முகம் பலருக்குத் தெரியாமலேயே இருந்தது.

         முல்லரின் ஆதரவாளரும் இந்திய இலக்கிய இயல் ஆய்வாளருமான ஜே.எச் வொயிட்(Voight) என்ற ஜெர்மானியர் “F.Max Mueller-The Man and his Ideas)” என்ற தனது நூலில் முல்லரின் சமய நம்பிக்கை பற்றிக் கூறுகையில் “மாக்ஸ் முல்லரின் மத நம்பிக்கை பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.இந்து தர்மத்தையும் ஸம்ஸ்க்ருதத்தையும் அழித்து இந்தியாவைக் கிறிஸ்தவ நாடாக்க அவர் கடும் முயற்சிகளை மேற்கொண்டதாக அவர் குற்றஞ்சாட்டப்படுகிறார்.மாறாக மதமாற்றமில்லாமல் அவர் இந்து மதத்தைத் தழுவியிருக்கிறார் என்ற கருத்தும் இருக்கிறது.இந்த இரண்டு கருத்துமே தவறானவை” என்று எழுதியுள்ளார்.ஆனால் இந்த இரண்டு கருத்துமே சரியானவைதான் என்பதையும் வொயிட்டின் கருத்து சரியில்லை என்பதையும் முல்லரின் வார்த்தைகளைக் கொண்டே நிரூபிப்போம்.ஆக்ஸ்ஃபோர்டில் இருந்த செவாலியர் பன்செனுக்கு (CHEVALIER BUNSEN) 25 .8. 1856-ல் எழுதிய கடிதத்தில் மாக்ஸ் முல்லர்

 “India is much riper for Christianity than Rome or Greece were at the time of St. Paul. The rotten tree has for some time had artificial supports… For the good of this struggle I should like to lay down my life, or at least to lend my hand to bring about this struggle”

(செயின்ட் பால் அவர்களின் காலத்திய ரோம் அல்லது க்ரீஸ் நாடுகளைவிடக் கிறிஸ்தவத்தை ஏற்குமளவிற்குப் பக்குவப்பட்டிருக்கும் நாடு இந்தியா.பட்டுப்போன மரத்துக்குச் சில செயற்கை முட்டுக்கள் கொடுக்கப்படுகின்றன…..இப்படியொரு போராட்டத்துக்காக(மதம் மாற்றும் போராட்டத்துக்காக) அது தரவிருக்கும் பலனுக்காக என் உயிரை விடவோ அல்லது குறைந்தபட்சம் என் ஆதரவைத் தரவோ விரும்புகிறேன்) என்று எழுதியிருக்கிறார்.

           இந்தக்கடிதம் அவர் வயிற்றுப் பிழைப்புக்காக ஆங்கிலேயர் போட்ட எலும்புத்துண்டுக்கு மயங்கி கிறிஸ்தவ வெறிபிடித்து இருந்த காலத்தில் எழுதியது.இந்து மதத்தைப் “பட்டுப்போன மரம்”என்று குறிப்பிட்டிருக்கிறார் என்றால் அவர் எவ்வளவு மதவெறியாக அப்போது இருந்திருக்கவேண்டும்!

வயிற்றுக்காக இப்படிப்பட்ட கீழ்த்தரமான வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தாலும் பின்னாட்களில் வேதத்தையும் இந்து மதத்தையும் அவர் போற்றியர் என்பதும் உண்மைதான். தனது 50-ஆண்டு காலக் கடும் உழைப்பில் வேத மொழிபெயர்ப்புடன் பல இந்திய ஸம்ஸ்க்ருத வேத வேதாந்த நூல்களையும் மொழிபெயர்த்திருக்கிறார் அவர். “Sacred Books of the East” என்ற அவருடைய நூல் தொகுதிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.பகவத் கீதை மற்றும் வேதாந்த நூல்கள் சொல்லும் கருத்துக்களையெல்லாம் அவர் வழுவறக்கற்றவர்.இந்திய வேதாந்தத் தத்துவத்தில் அவர் மிகவும் ஈடுபாடு கொண்டவர்.வேதாந்தம்  பற்றிய தனது நிலைப்பாட்டைத் தனது சொற்பொழிவு ஒன்றில் கூறும்போது ஸ்கோபென்ஹோ என்ற அறிஞர் சொன்ன “உபநிஷத்துக்களில் பொதிந்துள்ள போதனைகளைப்போல் பயனுள்ளதும் ஒருவனை உயர்த்துவதுமான வேறொன்று கிடையாது.என் வாழ்க்கையிலும் சரி,மரணத்திலும் சரி அதுவொன்றே எனக்கு நிம்மதி”என்ற கருத்தை மேற்கோள் காட்டித் தனது இதயம் விரும்புவது உபநிஷத் சொல்லும் வேதாந்தமே என்று விளக்கினார். மற்றோரிடத்தில்  “வேதாந்தம் கூறும் ஆன்மா அழிவற்றது என்ற கருத்தை நான் நம்புகிறேன். நம்முடைய தனிப்பட்ட தன்னுணர்வு அழிக்கப்பட்டால் அல்லது முழுமையாக மாற்றமடைந்துவிட்டால் நாம் நாமாக இல்லாமல் வேறொருவராகி விடுவோம். மரணத்துக்குப்பின் ஒருவன் தொடர்கிறான். அதாவது ஆன்மா அழிவற்றது என்பதில் எனக்கு சந்தேகமில்லை” என்று பேசியிருக்கிறார்.இது அவர் இறப்பதற்கு முன் 1897-ல் கூறியது.

           ஆன்மா பற்றிய இந்த இந்திய வேதாந்தக் கருத்தைக் கிறிஸ்தவம் ஏற்றுக்கொள்வதில்லை. இதிலிருந்து என்ன புரிகிறதென்றால்  முல்லர் கிறிஸ்தவர்களுக்கு பலவிதங்களில் உதவியிருந்தாலும் அவர் மனப்பூர்வமாக ஏற்றது இந்தியத் தத்துவத்தைத்தானே தவிர கிறிஸ்தவக் கொள்கையையன்று என்பது புரிகிறது.இந்திய வேதாந்தக் கருத்தில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அவரது சமய நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதோடு கிறிஸ்தவ சமயக்கோட்பாட்டில் அவருக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெளிவுபடுத்திவிட்டது.

       28-10.1900 –ல் மாக்ஸ் முல்லர் மறைந்த பின்னரே அவரைப் பற்றிய பல ஸ்வாரஸ்யமான விவரங்கள் வெளியே வந்தன.அவரது மறைவுக்குப் பின் அவரது மனைவியான ஜியார்ஜினா அவரது வாழ்க்கை வரலாற்றுக்குத் தேவையான பல தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் இறங்கினாள்.அதற்காக விளக்கங்கள் பெறப் பலருக்குக் கடிதம் எழுதினாள். தன் கணவர் கிறிஸ்தவத்தை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவரா என்பது குறித்து விளக்கங்கள் பெற செயின்ட் கில்ஸ் (St.Gilse)  என்ற கிறிஸ்தவ மத குருவுக்கு ஒரு கடிதம் எழுதினாள்.அந்த மதகுரு அவளுக்கு எழுதிய பதில் கடிதத்தில் “முல்லருக்குக் கிறிஸ்துவின் மீது திடமான நம்பிக்கை அவர் தேவகுமாரன் என்பதில் மனப்பூர்வமான சம்மதம் ஆகியவை இருந்தாலும் அந்த நம்பிக்கை சுவிசேஷங்களில் சொல்லப்படும் அற்புதங்களின் காரணமாகவோ அல்லது எந்தவிதமான கிறிஸ்தவத் திருச்சபையின் ஆதிக்கத்தாலோ அல்ல.”என்று எழுதியிருந்தார்.ஏசு கிறிஸ்து நிகழ்த்தியதாகக் கிறிஸ்தவர்கள் கூறும் அற்புதங்களில் முக்கியமானவை மூன்று.1.அவர் ஒரு கன்னியின் வயிற்றில் பிறந்தவர். 2.மரணத்துக்குப் பின் அவர் மீண்டும் உயிர் பெற்றெழுந்தார்.3.தேகத்தோடு அவர் விண்ணுலகம் சென்றார்.ஏசுவின் இறைத் தன்மைக்கு இந்த அற்புதங்களே அடித்தளமாக்கப்பட்டன. கிரிஸ்தவ மதச்சட்டப்படி இந்த அற்புதங்களை ஏற்காதவர்களும் மறுப்பவர்களும் எசுவின் இறைத்தன்மைமீது நம்பிக்கையற்றவர்கள். முல்லர் சுவிசேஷத்தில் உள்ள இதுபோன்ற அற்புதங்களை ஏற்காதவர் என்று செயின்ட் கில்ஸ் ஜியார்ஜினாவுக்கு எழுதிய பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி பார்த்தால் ஏசுவின் இறைத்தன்மையை முல்லர் ஏற்கவில்லை என்பது தெரிகிறது. ஏசுவின் இறைத்தன்மையை ஏற்காதவன் கிறிஸ்தவனாக இருக்கமுடியாது.இப்போது ஜியார்ஜினாவின் கேள்விக்கு விடை தெளிவாகக் கிடைத்துவிட்டது. முல்லரின் மறைவுக்குப்பின் அவரது மனைவி ஜியார்ஜியானாவின் பெயரால் 1902-ஆம் ஆண்டு அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளிவந்தது.

           செஞ்சோற்றுக் கடன் தீர்க்க மாக்ஸ் முல்லர் தனது வாழ்நாள் முழுவதும் தன் மனசாட்சியை மறைத்துக்கொண்டு கிறிஸ்தவப் போர்வையில் வாழ்ந்துவந்தாலும் அவர் அவ்வப்போது தன்னையறி யாமலேயே இந்துமதத்தின் மீது தனக்குள்ள அபிமானத்தை வெளிக்காட்டிக் கொண்டுதான் இருந்தார்.நன்றாகப் படித்தவன் சிலகாரணங்களுக்காக எவ்வளவுதான் பொய் சொன்னாலும் ஒருநேரத்தில் அவனது மனசாட்சி அவனையும் மீறி வெளிப்பட்டுவிடும் என்பதற்கு முல்லரின் வாழ்க்கை ஒரு உதாரணம்.

       மாக்ஸ் முல்லர் கிறிஸ்தவராகப் பிறந்தார்.கிறிஸ்தவராகவே வளர்ந்தார்.ஆனாலும் முறைப்படி மதமாற்றம் செய்யப்படாத ஒரு இந்துவாகவே காலமானார் என்பதைக் கிடைத்துள்ள வலிமையான ஆதாரங்கள். நமக்குத் தெரிவிக்கின்றன.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

14. ஏசு கிறிஸ்துவின் வரலாறு

 "Who controls the past controls the future: who controls the present controls the past."என்று ஜார்ஜ் ஆர்வெல் (George Orwell)என்ற ஆங்கில இலக்கிய எழுத்தாளர் தனது “1984”என்ற நாவலில் எழுதியுள்ளார்.அதாவது “கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துபவன் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறான். நிகழ்காலத்தைக் கட்டுப்படுத்துபவன் கடந்த காலத்தைக் கட்டுப் படுத்துகிறான்”என்பது இவ்வரிக்குப் பொருள். வலிமையுள்ளவனே முக்காலத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறான் என்பதே இதன் உட்பொருள். “வரலாறு வலிமையும் அதிகாரமும் உள்ளவர்களால்தான் எழுதப்படுகிறது.அதனால் அந்தக் கடந்தகால உண்மைச் சம்பவங்கள் சுயநலத்துக்காகத் திரிக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் எழுதப்பட்டு அதற்கு வரலாறு என்ற பெயர் கொடுக்கப் படுகிறது.”என்பதை விளக்குமிடத்தில் இவ்வரியை எழுதுகிறார் ஆர்வெல்.அவர் சொல்வது முற்றிலும் உண்மை.

             கடந்த 2000ஆண்டுகளாக மேற்கத்திய உலகில் வலிமைபெற்ற அதிகார அமைப்பாக விளங்குவது ரோமன் கத்தோலிக்க சர்ச் ஆகும்.ஆகவே ரோமன் கத்தோலிக்கச் சர்ச் எதை விரும்புகிறதோ அது சரித்திரம் ஆக்கப்படுகிறது.வலிமை பெற்ற அங்கிலக் கிறிஸ்தவர்கள் எந்தெந்த நாடுகளில் காலனிகளாக வந்து அரசாட்சி செய்தார்களோ அந்தந்த நாட்டின் வரலாறுகளையெல்லாம் திரித்தும் மறைத்தும் தங்களுக்கு வசதியாக எழுதி வைத்தார்கள். ஆனால் இன்றும் எவ்விதமாற்றமும் இன்றி அவர்கள் எழுதிய வரலாறுதான் நடப்பில் உள்ளது.அதற்கு நம் நாடும் விதிவிலக்கன்று. “ஆரியர்கள் என்ற ஒரு இனம் வெளியிலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்து இங்குள்ள பூர்வ குடிகளை விரட்டினர்”என்ற கட்டுக்கதையை வரலாறு என்ற பெயரில் எழுதிவைத்தார்கள் ஆங்கிலக் கிறிஸ்தவர்கள். இந்தக்கட்டுக்கதையை இந்தியப் பள்ளிக்குழந்தைகளுக்குப் பாடமாக்கத்  திட்டம் வகுக்கப்பட்டது. “பாரதியர்களின் பாரம்பரியப் பண்பாட்டையும் பண்புகளையும் மாற்றி அவர்களை ஐரோப்பிய மன நிலை கொண்டவர்களாக ஆக்குவதற்கு ஏற்ற பாடத்தைப் புகுத்திவிட்டால் பின்னர் அவர்களும் அவரகளது தலைமுறையினரும் வெள்ளைத்தோல் ஐரோப்பியர்களாக மாறிவிடுவர்.அதன்பின் வெள்ளைக்காரர்களாகிய நாம் இந்த நாட்டை ஆள்வது எளிது” என்ற எண்ணத்தின் அடிப்படையில் இந்த நாட்டுக் கல்வித்துறையில் பாடத்திட்டங்களை வகுத்துக்கொடுத்தவர் கிறிஸ்த மத வெறியரான மெக்காலே. வெள்ளையர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேறி 70 வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் அவர்கள் எழுதிவைத்த வரலாறுதான் பள்ளிக்கூடங்களில் பாடமாக இருக்கின்றது என்பதும் அதை மாற்றி உண்மை வரலாற்றை எழுதி அதைப் பாடமாக்க இங்கு யாருக்கும் துணிவில்லை என்பதும் நிதர்சனமான உண்மை.அந்த அளவுக்கு இங்குள்ள சிலரின் மனநிலையில் அழிக்கமுடியாத ஐரோப்பிய வண்ணத்தைத் தீட்டியிருக்கிறார்கள் ஆங்கிலேயர்கள். நன்றாகப்படித்த பல இந்தியர்களே “ஆரிய இனம் வெளிநாட்டிலிருந்து வந்ததுதான்” என்ற ஆங்கிலேயன் எழுதிவைத்த வரலாற்றை இன்றும் நம்பி எற்கின்ற மனநிலையில்தான் உள்ளனர். ஜார்ஜ் ஆர்வெல்லின் கூற்று 100% சரியானது என்பதை இதனால் உணர முடிகிறது.

            ஜேம்ஸ் மில் (James Mill-1820) என்ற மேற்கத்திய வரலாற்று ஆசிரியர் இந்திய வரலாற்றை இந்து,முஸ்லிம் ,பிரிட்டிஷ் காலம் என்று மூன்று காலக்கட்டங்களாகப் பிரித்து எழுதினார். உண்மையில் இந்து,முஸ்லிம்,கிறிஸ்தவ காலம் என்றுதான் எழுதியிருக்க வேண்டும்.ஆனால் அவர் “பிரிட்டிஷ் காலம்” என்று எழுதியதற்குக் காரணம் உள்நோக்கம்.இந்தியாவில் பிரிட்டிஷ் காரர்கள் மட்டுமின்றி போர்ச்சுகீசியர்கள்.பிரெஞ்சுக்காரர்கள் டச்சுக்காரர்கள் ஆகியோரும் சில பகுதிகளை ஆண்டுவந்தனர். இவர்கள் எல்லோருமே கிறிஸ்தவர்கள் தான். அதனால் கிரிஸ்தவ காலம் என்று வகைப்படுத்தினால் இந்தக் கிறிஸ்தவர்கள் இந்தியாவை ஆண்டகாலத்தில் நிகழ்ந்த கொடுமையான சம்பவங்களுக்குக் கிறிஸ்தவ மதம் பொறுப்பேற்க வேண்டிவரும். அதைத் தவிர்ப்பதற்கே கிறிஸ்தவ காலம் என்பதற்கு பதிலாக பிரிட்டிஷ் காலம் என்று குறிப்பிட்டார்.மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள் இதுமாதிரியான தந்திரங்களை எல்லாம் செய்வார்கள்.

இந்தியாவில் கிறிஸ்தவர்கள் ஆண்டகாலத்தில் இந்தியாவின் பழமையான ஏட்டுப்பிரதிகளைப் பாதுகாக்கிறோம் என்று சொல்லி மூலைமுடுக்கிலிருந்த ஏட்டுச்சுவடிகளையெல்லாம் சேகரித்து அவற்றில் பெரும்பாலானவற்றைத் தீயிலிட்டும் கடலில் போட்டும் அழித்தார்கள். எந்த விஷயம் கொண்ட சுவடிகளையெல்லாம் அழித்தார்கள் என்பது தெரியவில்லை.எவற்றைத் தங்கள் நாட்டுக்குக்கொண்டுபோனார்கள் என்பதும் தெரியவில்லை.அதைப்போல எகிப்தில் உள்ள அலெக்ஸாந்த்ரியாவின் நூலகத்தில் இருந்த சுவடிகளில் உள்ள கருத்துக்கள் ஏசு கிறிஸ்துவின் கருத்துக்களுக்கு முரணாக இருந்ததாக அறிவிக்கப்பட்டு கி.பி.391-ல் போப் தியோபிலஸ் (Theophilus) என்பவரால் எரித்து அழிக்கப்பட்டன.அதில் தப்பிய சுவடிகள் கி.பி. 642-ல் நடந்த இஸ்லாமியப் படையெடுப்பின்போதும் சிலுவைப்போரின் போதும் “தெய்விக”விசாரணையின்(Inquisition) போதும் அழிக்கப்பட்டன. பண்டைய எகிப்திய ரோமானிய நாகரிகங்களைக் காட்டும் நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ சமயத்துக்கும் பண்பாட்டுக்கும் ஆதரவான கருத்துக்கள் அந்த நூல்களில் இல்லாததால் அவை அழிக்கப்பட்டன.அதனால் இன்றைய சூழ்நிலையில் உலக வரலாற்றை எழுத மூலச்சுவடிகள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. எனினும் அகழ்வாராய்ச்சி மூலமும் கிடைக்கின்ற நூல்களைக்கொண்டும் பண்பாட்டு எச்சங்களைக் கொண்டும்தான் சில விஷயங்களைத் தற்காலத்தில் அறிய முடிகிறது.

       தங்களது சமய வரலாற்றின் அடிப்படையிலேயே உலகில் உள்ள மற்ற நாடுகளின் வரலாற்றைக் கட்டமைப்பதுதான் கிறிஸ்தவர்களின் வழக்கம்.ஆனால் இவர்களது சமய வரலாறே இவர்கள் சொல்வதுபோல் தூய்மையானதாகவோ உண்மை யானதாக்வோ  ஒழுங்கானதாகவோ இல்லை என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் ஏராளமாக உள்ளன.கிறிஸ்தவ சமயம் ஆரம்பம் முதல் இன்றுவரை ஒரே மாதிரியாகத்தான் இருந்ததா என்றால் இல்லை என்பதுதான் உண்மை.முதலில் கடவுளால் சொல்லப்பட்டதாக (Gospel) இவர்களால் பஹுமானிக்கப்படும் இவர்களது வேத நூலான பரிசுத்த ஆகமத்தில்(Bible) கூறப்படும் ஏசுவின் வரலாற்றைப் பார்ப்போம்.

          கி.மு.ஆறாம் ஆண்டில் பெத்லகேம் நகரில் வாழ்ந்த மேரி என்ற பெண்ணுக்கும் ஜோஸப் என்ற ஒரு தச்சருக்கும் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது.திருமணத்திற்கு முன்பே மேரி கர்பவதியாய் இருந்ததால் ஜோஸப் அவளை மணக்க மறுத்தார். அச்சமயம் ஜோஸப்பின் கனவில் இறைவன் தோன்றி “மேரி பரிசுத்த ஆவியால் கருவுற்றிருக்கிறாள்.ஆகவே நீ அவளை நிராகரிக்காமல் ஏற்றுக்கொள்” என்று கூறியதால் ஜோஸப் அவளை மணந்தார்.மேரியின் வயிற்றில் பிறந்த குழந்தையே ஏசு.அப்போது பாலஸ்தீனத்தை ஆண்டுவந்த ஹெராட்(Herod) மன்னனிடம் சில ஜோதிடர்கள் “ஒரு கன்னிக்குப் பிறந்த குழந்தையால் உன் ஆட்சிக்கு ஆபத்துவரப்போகிறது” என்று கூறினார்கள்.அதனால் பயந்த அரசன் கன்னிக்குப் பிறந்த குழந்தையைக் கன்டுபிடிக்க முயற்சித்தான். அனால் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.அதனால் தன் நாட்டில் உள்ள இரண்டு வயதுக் குழந்தைகளையெல்லாம் கொல்ல உத்தரவிட்டான்.அதனால் பயந்த ஜோஸப் தப்பிக்க எண்ணித் தன் மனைவி மேரி மற்றும் குழந்தை ஏசுவுடன் பக்கத்து நாடான எகிப்திற்கு தப்பிச் சென்றார்.சிலகாலம் கழித்து ஹெராட் மன்னன் இறந்தபின் ஜோஸப் தன் குடும்பத்துடன் பாலஸ்தீனத்துக்குத் திரும்பி வந்து கலிலி(Galilee) கடற்கரை அருகில் உள்ள நாசரேத் (Nazareth) என்ற நகரில் வாழ்ந்து வந்தார்.ஏசு தனது 30-ஆம் வயதில் யூதர்களின் குல வழக்கப்படி ஜோர்டன்(Jordan) நதியில் ஜான் என்பவரால் ஞானஸ்நாநம் செய்யப்பட்டு யூத மரபுக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.அந்த நேரத்தில் வானிலிருந்து புறாவின் வடிவில் வந்த பரிசுத்த ஆவி ஏசுவின் உடலுக்குள் புகுந்துகொண்டது. ஏசுவுக்கு ஞானஸ்நாநம் செய்துவைத்த ஜான் ஏசுவை “கடவுளின் மகன்”என்று அறிவித்தார். அதன்பிற்கு ஏசு பாலைவனப்பகுதிக்குச் சென்று 40 நாட்கள் பிரார்த்தனை செய்தார்.அந்தச் சமயத்தில் சாத்தான் மூன்று முறை அவரது மனதைக் கலைக்க முயற்சித்தான்.ஆனால் சாத்தானின் முயற்சி பலிக்கவில்லை. அதன்பிறகு ஏசு கலிலியோப் பகுதிக்கு வந்து அதன் அருகில் உள்ள கிராமங்களில் தன் ஆன்மிகப் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.அவருக்கு சீடராகப் பலர் வந்தார்கள்.மொத்தம் அவரது சீடர்கள் 12 பேர்.அவர்களில் ஏசுவின் சஹோதரர்களான தாமஸ், ஜேம்ஸ் ஆகியோரும் அடங்குவர்.மேரி மக்தலேன்(Mary Magdalene) என்னும் ஒரு பெண் சீடரும் ஏசுவுக்கு இருந்தாள்.

            ஒருநாள் ஏசு ஜெருசலேம் நகரில் உள்ள யூதக் கோயிலுக்குச் சென்றார்.அங்கு சில வியாபாரிகள் பலியிடுவதற்குத் தேவையான பறவைகளையும் விலங்குகளையும் விற்பனை செய்ய வந்திருந்தனர்.அதைக் கண்ட ஏசு அவ்வியாபாரிகளை அடித்து விரட்டினார்..பிறகு ஏசு பல கிராமங்களுக்குச் சென்று பல அற்புதங்களைச் செய்ததுடன் கிராம மக்களிடம் “மிகவிரைவில் தேவனுடைய் ராஜ்யம் அதாவது மெஸையாவின் ஆட்சி வரப்போகிறது”என்று பிரச்சாரம் செய்தார்.யூதர்கள் எதிர்பார்த்த மெஸையா தானே என்றும் தன்னை நம்பினால் சொர்க்க வாழ்வு நிச்சயம் என்றும்,தானே யூதர்களின் அரசன் என்றும் பிரசங்கம் செய்தார்.இந்தப் பிரச்சாரத்தால் சில மக்கள் ஏசுவை நம்பினர்.சில முக்ய யூதப் பிரமுகர்களும் பூசாரிகளும் ஏசுவின் பேச்சை எதிர்த்தனர்.

           அச்சமயம் பாலஸ்தீனத்திலிருந்த ரோமானிய ஆட்சியை நீக்கிவிட்டு யூதர்களின் ஆட்சியை நிறுவ ஜியாலட்ஸ் என்ற ஒரு தீவிரவாதக்குழு முயற்சித்து வந்தது. யூத சமய குருமார்களும் பரிசேயர் என்ற மதத் தலைவர்களும் ஏசுவை ஜியாலட்ஸ் தீவிரவாதியாகக் கருதி ரோமானிய ராஜப் பிரதிநிதியான  பிலாத்து என்பவனிடம் ஏசுவின் மீது ராஜத்ரோஹக் குற்றத்தையும் யூதக்கோயிலில் புகுந்து அங்கு பலிக்காக விலங்குகளையும் பறவைகளையும் விற்பனை செய்யவந்த வியாபாரிகளை அடித்து விரட்டியதால் மதத்ரோஹக் குற்றத்தினையும் சாட்டினர்.அதைக்கேட்ட பிலாத்து ஏசுவுக்கு மரண தன்டனை விதித்தான். அந்த நாட்டு வழக்கப்படி ஏசுவை சிலுவையில் ஏற்றிக்கொல்ல உத்தர விட்டான். அதன்படி ஏசுவை ஒரு பரம்புக் காட்டிற்குக் கொண்டு சென்று சிலுவையில் அறைந்தார்கள்..அவர் மரணமடையப் பல மணிநேரம் ஆனது. தன் உயிர் விடும் சமயத்தில் “ஏலி ஏலி லாம சபக்தாநி”(என் தேவனே! என் தேவனே! என்னை ஏன் கைவிட்டீர்கள்?) என்று சொல்லிக்கொண்டே உயிர் நீத்தார்.அவர் இறந்தபோது அவரது தாய் மேரியும்,அவரது சில சீடர்களும் மேரி மக்தலேனும் அருகில் இருந்தனர்.அவர் இறந்த சமயத்தில் பூமி நடுங்கியது.புதைகுழிகளுக்குள் இருந்தவர்கள் உயிர்பெற்றெழுந்து நகர வீதிகளில் நடந்து வந்தனர்.அவர் இறந்த பிறகு அவரது சீடர்கள் அவரது உடலை ஒரு குகைக்குள் இருந்த கல்லறையில் வைத்து மூடினர்.அவர் இறந்தபின் மூன்றாம் நாள் சடங்குகள் செய்வதற்காக அந்தக் கல்லறை உள்ள இடத்துக்குச் சில பெண்கள் வந்தார்கள்.அங்கு கல்லறை திறந்து கிடப்பதைக் கண்டு ஆச்சரியமுற்றனர். அப்போது அங்குவந்த தேவதூதர்கள்.”ஏசு உயிர்த்தெழுந்து கலிலி சென்றுவிட்டார்.அங்கு சென்றால் அவரைக் காணலாம்:” என்று கூறினர்.அதன் பிறகு ஏசு பலமுறை தன் சீடர்களுக்குக் காட்சி கொடுத்தார்.,அதன்பின் சரீரத்தோடு விண்ணுலகம் சென்றார்.மீண்டும் அவர் ஒருமுறை பூமிக்கு வந்து தன்னை நம்பியோர்க்கு நிரந்தர சொர்கத்தையும் தன்னை நம்பாதவர்க்கு நிரந்தர நரகத்தையும் கொடுப்பார்-இதுதான் பைபிள் சொல்லும் ஏசு வரலாற்றின் சுருக்கம்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

15. பைபிளில் முரண்பாடு

      பைபிளில் சொல்லப்படும் இந்த ஏசு வரலாற்றில் நமக்குச் சில சந்தேகங்கள் எழுகின்றன. ஏசு பிறந்ததிலிருந்து தனது 30 வயது வரை அவர் என்ன செய்தார் என்பதற்கான குறிப்புகள் பைபிளில் இல்லை. அது தவிர ஏசு இறந்தபின் மூன்றாம் நாள் உயிர்பெற்று வந்து தன் சீடர்களுக்குக் காட்சி கொடுத்தார் என்று சொல்லும்போது அவர் இரண்டாவது முறையாக பூமிக்கு வந்துவிட்டார் என்பது தெளிவாகிறது.ஆனால் இன்னும் ஏசுவின் இரண்டாம் வருகை நிகழவில்லை எனவும் இனிமேல்தான் இரண்டாம் வருகை நிகழும் என்றும் அப்போதுதான் இதுவரை இறந்த கிறிஸ்தவர்களுக்கும் உயிரோடிருப்பவர்களுக்கும் நித்ய ஜீவன் கிட்டும் என்றும் கிறிஸ்தவர்கள் கூறுவது எப்படி? யூதர்களின் பழைய ஏற்பாட்டில் மெசயா என்னும் கிறிஸ்து தனது முதல் வருகையின் போது ராஜாவாக உலகை ஆட்சி செய்வார்”என்று கூறப்பட்டுள்ளது.அதன்படி ஏசுவின் வரவு  பழைய ஏற்பாட்டில் சொல்லப்படும் கிறிஸ்துவின் வரவாக இருந்தால் அவர் உலகை ஆட்சிசெய்திருக்கவேண்டும்.ஆனால் அவர் ராஜத்ரோகக் குற்றத்துக்காகவும் மதத்ரோகக் குற்றத்துக்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இதன்படிபார்த்தால் “வருவார்”  என்று பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மெஸயா ஏசுவல்ல என்பது புலனாகிறது.கிறிஸ்தவ நம்பிக்கைப்படி ஏசுதான் பழைய ஏற்பாடு சொல்லும் மெஸயா எனக்கொண்டால் அவரது முதல்வரவில் அந்நூலில் சொன்னபிரகாரம் அவர் ராஜாவாக இருந்திருக்கவேண்டும்.மேலும் அவர் சிலுவையில் மரணித்தபின் மூன்றாம் நாள் நித்ய ஜீவன்பெற்று உயிர் பெற்று வந்து தன் சீடர்களுக்கும் மீன்பிடிப்போருக்கும் ஆங்காங்கே ரகசியமாகக் காட்சியளித்தும், உலகிற்கு ஞாயம் வழங்கவும் நித்ய ஜீவன் வழங்கவும் தவறிவிட்டார்.ஆனால் ஏசுவின் இந்த இரண்டாவது வரவு மறைக்கப்பட்டு இனிமேல்தான் இரண்டாம் வரவு நிகழப்போவதாகக் கிறிஸ்தவர்கள் கதைவிடுகின்றனர்.

     ஏசு “இங்கு நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன் மரணத்தை ருசிப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்”(லூக்கா-9-27) என்று கூறினார். இதன்பொருள் “இங்கு நிற்கும் உங்களில் சிலர் சாவதற்கு முன் நான் மீண்டும் வருவேன்”என்பதாகும்.இந்த வாக்கின்படி அவர் மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். ஆனால் அவர் உயிர்த்தெழுந்ததால் அப்போதிருந்தவர்களுக்கும் நித்ய ஜீவன் கிட்டவில்லை. இன்றுவரை எந்த மனிதருக்கும் நித்ய ஜீவன் கிடைக்கவில்லை. ஆனால் ஏசுவின் இரண்டாம் வருகை இனிமேல்தான் நிகழும் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.

            தடைசெய்யப்பட்ட ஞானப்பழத்தை ஏவாள் உண்டதற்காகப் பெண்ணினத்திற்கே பிரசவ வேதனை என்னும் பெரிய சாபத்தையும் ஆதாம் உண்டதற்காக மனித இனத்துக்கே மரணம் என்னும் சாபத்தையும் கர்த்தர் வழங்கினார் என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. கன்னி மேரி கர்த்தரால் ஏசுவின் பிறப்புக்குக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டவள். கர்த்தரின் அருளால் பரிசுத்த ஆவி அவளில் புகுந்தது.அதனால் அவள் தேவகுமாரனைப் பெற்றுத்தர முடிந்தது. பரிசுத்த ஆவியின் பாதுகாப்பில் வாழ்ந்த இந்தப் பெண்மூலம் பெண்களுக்குக் கர்த்தரால் ஏற்பட்ட பிரசவ வேதனை என்னும் சாபம் ஏன் நீங்கவில்லை?ஆசீர்வதிக்கப்பட்டவரான ஏசுவால் மனித குலத்தின் மீதும் பெண்கள் மீதும் ஆதியில் கர்த்தர் இட்ட சாபத்தை ஏன் நீக்க முடியவில்லை? அதற்கு ஏன் ஏசு எம்முயற்சியம் எடுக்கவில்லை? இரண்டாயிரம் வருடத்திற்கு மேலாகியும் இறைகுமாரனின் “இரண்டாம் வருகை” ஏன் நிகழவில்லை?

    கிறிஸ்தவத்தில் “சாத்தான்” என்ற ஒரு தத்வம் பிரசித்தமானது. இந்த சாத்தான் கர்த்தருக்கு எதிரானவன்.உலக மனிதர்கள் அனுபவிக்கும் வறுமை,நோய்,மரணம் போன்ற அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் இவனே என்று சொல்லப்படுகிறது. இந்தச் சாத்தானைப் பலமுறை ஏசு சந்தித்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது.தேவகுமாரனான அவர் அவனை  அழித்து அவனால் ஏற்படும் துன்பங்களிலிருந்து மனிதகுலத்தை ஏன் காப்பாற்றவில்லை? மாறாக கர்த்தர் தானே சொன்னபடி பூமியில் பிரிவினை வாதங்களும் துன்பங்களுமல்லவா நடைமுறையில் உள்ளன?

            “பூமியில்  நான் சமாதானத்தை நிலை நிறுத்த வந்தேன் என்று எண்ணாதீர்கள்.நான் சமாதானத்தை உண்டாக்க வரவில்லை. பிரிவினையை உண்டாக்க வந்தேன்.எவ்வாறெனில் தந்தைக்கும் மகனுக்குமிடையில் தாய்க்கும் மகளுக்குமிடையில் மருமகளுக்கும் மாமிக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்க வந்தேன்.(மத்தேயு-10:34.35)

“தன் தகப்பனையும் தாயையும் பிள்ளைகளையும், சகோதரர்களையும் வெறுக்காதவன் எனக்குச் சீடனாக இருக்க மாட்டான்(லூக்கா-14:26)

இவை கர்த்தர் ‘திருவாய் மலர்ந்தருளியவை’

ஏசு கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்.தேவ குமாரன். பாவம் சிறிதுமற்றவர். அப்படிப்பட்டவருக்கு ஏன் கொடிய தண்டனை கிடைத்தது.? அவர் மக்களின் பாவங்களைக் கழுவ இரத்தம் சிந்தினார் என்கிறார்கள். பாவிகளைக் காப்பாற்ற ஒரு பாவமும் செய்யாத ஒருவரை இரத்தம் சிந்தவைத்த கர்த்தர் நீதிமானா?ஏசு வாழ்ந்த காலத்தில் அவர் மீது நம்பிக்கை வைத்தவர்களே நித்ய ஜீவனைப்பெற முடியாமல் அல்லலுற்றது ஏன்? இவ்விதமான கேள்விகளுக்கெல்லாம் வெறும் மழுப்பலைத்தவிர கிறிஸ்தவர்களிடம்  ஞாயமான பதிலை நாம் எதிர்பார்க்க முடியாது.

உலக வரலாற்றையே தங்களின் வேத நூலான பைபிளின் அடிப்படையில் எழுத முயற்சித்தார்கள்/முயற்சிக்கிறார்கள்  கிறிஸ்தவர்கள். இந்த நிலையில் அவர்களின் அந்த வேத நூலான பைபிள் எந்த அளவுக்கு உண்மையானது அதில் சொல்லப்படும் விஷயங்கள் வரலாறு என்று சொல்லுமளவிற்கு நம்பகத்தன்மை வாய்ந்தவையா என்பதை நாம் ஆய்வு செய்தே ஆகவேண்டும்    நவீந கால வரலாற்று நூல்களைப் போல் கிறிஸ்தவ சமயம் குறித்த வரலாறுகள் ஆதியில் வரிசைக் கிரமமாக யாராலும் எழுதிவைக்கப்படவில்லை.பைபிளில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சுவிசேஷங்களில் ஆங்காங்கே சொல்லப்படும் தகவல்களை சேகரித்துப் பின் வந்தவர்கள் எழுதிவைத்தார்கள்.ஆனால் பைபிளிலோ அதுசார்ந்த தூணைநூல்களிளோ ஏசுவின் பிறந்தநாளும் இறந்த நாளும் காணப்படவில்லை.இன்று கிறிஸ்தவர்களால் அநுசரிக்கப்படும் தேவ மாதாவான கன்னிமேரி கர்பம்தரித்த நாள்,புனித வெள்ளி, ஈஸ்டர்,கிறிஸ்துமஸ் இவையெல்லாம் கற்பனையாகக் கடைபிடிக்கும் நாட்களே.

ஏசுவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நான்கு சுவிசேஷங்களிலும் ஏராளமான முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

ஏசுவின் தாத்தா பெயர் ‘யாக்கோபு”என்று மத்தேயு-1:16-ல் சொல்லப்படுகிறது.ஆனால் லூக்கா-3:23-ல் அவர் பெயர் ‘ஹேலி’ என்று சொல்லப்படுகிறது

புதிய ஏற்பாட்டில் யோவான் ,லூக்கா,மார்க்,மத்தேயு ஆகியோர் எழுதிய சுவிசேஷங்களில் ஏசு சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளது, ஆனால் அப்போஸ்த்லர் நடவடிக்கைகள்-5:30-ல் அவர் மரத்தில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது.

ஏசு தனது சுவிசேஷப் பிரசங்கத்தை ஓர் ஆண்டு நடத்தினார் என்று மார்க்,மத்தேயு ,லூக்கா மூன்றும் கூறுகின்றன.இரண்டு ஆண்டுகள் நடத்தினார் என்று யோவான் கூறுகிறது.

ஏசு மரித்தவுடன் வானுலகம் எய்தினார் என்று லூக்கா கூறுகிறது. ஆனால் இறந்து 40 நாட்களுக்குப் பிறகே அவர் வானுலகம் சென்றதாக அப்போஸ்தலர் நடவடிக்கைகள் கூறுகிறது.

ஏசு மரித்தபின் மூன்றுமுறை மற்றவர்களுக்குத் தோற்றமளித்ததாக லூக்கா கூறுகிறது.ஒரே ஒரு முறையே தோற்றமளித்ததாக  மத்தேயு கூறுகிறது.

ஏசு உயிர்த்தெழுந்தபின் முதலில் தோன்றியது யுதேயாவில் என்கிறது லூக்கா.அவர் முதலில் தோற்றமளித்தது கலிலியில் என்கிறது மத்தேயு.

ஏசுவின் சிலுவையைச் சுமந்து சென்றவன் சீமோன்-மத்தேயு-27:32-34,மார்க்-15:21-23,லூக்கா-23:26-27.தம்முடைய சிலுவையைத் தானே சுமந்து சென்றார்-யோவான்-19:17

ஏசு சிலுவையில் அறையப்பட்டிருந்தபோது அவருக்கு இரு பக்கங்களிலும் சிலுவையில் அறையப்பட்டிருந்த இரண்டு திருடர்களும் அவரை நிந்தித்தார்கள்.-மத்தேயு-27:39-14. அவர்களில் ஒரு திருடன் ஏசுவை நிந்தித்தான்,மற்றொருவன் அவருக்கு ஆதரவாகப் பேசினான்—லூக்கா 23:40-43

அன்னை மேரி,மற்றொரு மேரி ஆகியோர் முன்னிலையில் வானிலிருந்து இறங்கி வந்த தேவ தூதன் கல்லறைக் கல்லைப் புரட்டினான்.-மத்தேயு-28:12

அப்பெண்கள் அங்கு வருவதற்கு முன்னரே கல்லறைக்கற்கள் புரட்டித் தள்ளப்பட்டிருந்தன.

பைபிளில் காணப்படும் இதுபோன்ற  முரண்பட்ட கருத்துக்களை வைத்துப் பார்க்கின்றபோது பைபிளின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது.இந்த முரண்பாடுகளுக்கு இதுவரை எந்த கிறிஸ்தவரும் ஞாயமான விளக்கத்தைக் கொடுக்கவில்லை.கொடுக்கவும் மாட்டார்கள் ஏனெனில் அது அப்படித்தான்!__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

16.  கொடிய கட்டளைகள்

          புதிய ஏற்பாட்டைப் போலவே பழைய ஏற்பாட்டிலும் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன.உதாரணமாக ஆதியாகமம் 6:3-ல் மனிதனின் வயது 120 ஆண்டுகளே என்று கர்த்தர் கூறுகிறார்.ஆனால் ஆதி மனிதனான ஆதாம் முதல்  ஆபிரஹாம் வரை 129 வயத்துக்குமேல் வாழ்ந்ததாக பைபிள் குறிப்பிடுகின்றது.நோவா 950 வருடங்கள் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. இது எப்படி? ஆபிரஹாம் என்பவர் ஆதாமிலிருந்து 20-ஆம் சந்ததியாவார்.யூத மற்றும் இஸ்லாமிய மதங்களுக்குத் தந்தை ஆபிரஹாம்.இஸ்லாமியர்கள் ஆபிரஹாமை ‘இப்ராஹிம்’ என்று அழைக்கிறார்கள்.அதனால்தான் யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை ஆபிரஹாமிய மதங்கள் என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.

          பழைய ஏற்பாட்டில் முதல் ஐந்து புத்தகங்களும் மோசே எழுதியது என்று சொல்லப்படுகிறது.ஆனால் இப்புத்தகங்களில் மோசே இறந்த நிகழ்வும் அவர் புதைக்கப்பட்ட நிகழ்வும் சொல்லப்படுவதால் இவற்றை மோசே எழுதியிருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது..யூத-கிறிஸ்தவ மத நம்பிக்கையில் முக்கியமான ஒரு விஷயம் பிரளயக்கதை.ஆதாமின் பத்தாவது சந்ததியான நோவாவின் காலத்தில் ஒரு பெருவெள்ளம் ஏற்பட்டு உலகம் முழுவதும் அழிந்துவிட்டதாக பைபிள் ஆதியாகமம் 6:2.4-ல் கூறப்படுகிறது. கர்த்தரால் படைக்கப்பட்ட இவ்வுலகில் வானிலிருந்து வந்த தேவ குமாரர்கள் பூலோகப் பெண்களுடன் உடல் உறவுகொண்டு பல பிள்ளைகளைப் பெற்றார்கள்.அந்தப்பிள்ளைகள் பலவான்களாகி உலகத்தில் அக்கிரம காரியங்களைச் செய்தார்கள்.அதனால் மனம் நொந்த கர்த்தர் தான் படைத்தவைகளை அழிக்க நினைத்தார். அக்காலத்தில் நோவா மட்டும் நல்ல மனிதனாக இருந்தார். கர்த்தர் அவரையும் அவரது குடும்பத்தையும் அழிவிலிருந்து காக்க எண்ணினார்.அதனால் கர்த்தர் நோவாவிடம் சொன்னபடி 300 முழ நீளமும்50 முழ அகலமும் 30 முழ உயரமும் கொண்ட ஒரு பேழையைச் செய்து அதில் தனது குடும்பத்தையும் உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிகளின் ஆண்-பெண் இணைகளையும் ஒரு வருடத்திற்குத் தேவையான உணவுகளையும் ஏற்றிவைத்துக்கொண்டு ஒரு மலை உச்சிக்குச் சென்ற நோவா வெள்ளம் வடியும் காலம் வரை காத்திருந்து பூமி தென்பட்டவுடன் அப்பேழையிலிருந்து வெளிவந்தார்.அதன்பின் உலகில் அவரது சந்ததிகள் பெருக ஆரம்பித்தன. இந்தப் பிரளய வெள்ளத்தில் அந்தப் பேழையிலிருந்த வர்களைத் தவிர உலகிலுள்ள புல்பூண்டு உட்பட அனைத்து உயிரினங்களும் அழிந்துவிட்டதாக பைபிள் கூறுகிறது.

            ஆதாமிலிருந்து 1056 வருடங்களுக்குபிறகு நோவா பிறந்தார்.நோவா பிறந்து 600 வருடங்களுக்குப் பின் பெருவெள்ளம் உண்டானது.அதாவது பைபிளின்படி இந்த நோவாகாலப் பெருவெள்ளம் உண்டானது உலகம் தோன்றி 1656 வருடங்களுக்குப் பிறகு ஆகும்.யூதர்களின் தந்தையான ஆபிரஹாம் ஆதாமிலிருந்து இருபதாவது தலைமுறையாக கி.மு 1948 ஆம் வருடம் பிறந்தவர்.ஆகவே ஆபிரஹாம் பிறப்பதற்கு 292 வருடங்களுக்கு முன் பெருவெள்ளம் நிகழ்ந்திருக்கிறது.அதாவது சுமார் கி.மு 2040 –வது ஆண்டில் நிகழ்ந்ததாகக் கொள்ளலாம்.பைபிளின்படி அதன் பிறகுதான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாகரிக வளர்ச்சி பெற்றார்கள். பெருவெள்ள நிகழ்ச்சி நடந்தபின் 300 வருடங்களுக்குள் தோன்றிய ஆபிரஹாம் காலத்தில் மனிதர்கள் நாகரிகவளர்ச்சியில் மேம்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. நவீன அகழ்வாராய்ச்சிகள் கூட ஆபிரஹாம் காலம் நாகரிக வளர்ச்சி பெற்றிருந்தகாலம் என்பதை நிரூபிக்கின்றன. பெருவெள்ளத்தால் மனித சமூஹமே ஒட்டுமொத்தமாக அழிந்துபோயிருந்தால், ,வெள்ளம் வடிந்தபின் 300 ஆண்டுகளுக்குள் அதாவது 3 தலைமுறைக் காலத்திற்குள் அவ்வளவு பெரிய நாகரிக வளர்ச்சியை எப்படி இந்த மனித சமூஹம் அடைந்திருக்க முடியும்.? அந்தப் பெருவெள்ளக் காலத்திற்கு முன்னரே எகிப்திய, சுமேரிய நாகரிகங்கள் உச்சத்தில் இருந்ததை வரலாறு காட்டுகிறது..ஆகவே நோவா காலப் பெருவெள்ளம் பூமி முழுவதையும்  அழித்துவிட்டது என்று சொல்வது உண்மை வரலாற்றுக்குப் புறம்பான செய்தி.ஆகவே இப்படிப்பட்ட முரண்பாடுகளைக்கொண்டுள்ள ஒரு நூல் எப்படி கடவுளின் சொல்லாக(Gospel) இருக்கமுடியும்? இந்த நூலின் அடிப்படையில் மனிதகுல வரலற்றை எழுதினால் அவ்வரலாறு எப்படி உண்மையாக இருக்கமுடியும்?

            சுமர் 3500 ஆண்டுகளுக்கு முன்பு யூதர்களிடையே 12 வகையான சாதிப்பிரிவுகள் இருந்தன.அவற்றைக் ‘கோத்திரங்கள்’ எனத் தற்போது அழைக்கிறார்கள். இக்கோத்திரத்தினர் அனைவரும் ஏக இறைக் கோட்பாட்டை உடையவர்கள். அவர்கள் வணங்கிய அந்த ஏக இறைவனுக்கு “யெகோவா” என்று பெயர்.இந்தப் பெயர் ‘கூரியோஸ்’ (Kurios)என்று கிரேக்க மொழியிலும் ‘டோமினஸ்’ (Dominus)என்று லத்தீன் மொழியிலும் ‘லார்ட்’ (Lord) என்று ஆங்கிலத்திலும் கர்த்தர் என்று தமிழிலும்  மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது..யூதர்கள் வாழ்ந்த பாலஸ்தீன நாட்டைச் சுற்றிலும் வேறு மதத்தைப் பின்பற்றும் மக்களும் வாழ்ந்துவந்தனர்..அவர்களைப் ‘புற ஜாதியினர்’ என்று அழைக்கிறது பைபிள்.இந்த புற ஜாதியினர் உருவவழிபாடு செய்பவர்கள்.தனித்தனி தெய்வங்களை வழிபட்டுவந்தனர்.

          விக்ரஹ ஆராதனையை எதிர்ப்பவர்களும் ஒரே தெய்வ வழிபாடு கொண்டவர்களும் பிற தெய்வங்களை வழிபடுதல் குற்றம் என்ற கொள்கை உடையவர்களுமான யூதர்களுக்கும் இந்தப் புற ஜாதியினருக்குமிடையில் மதவிஷயங்களின் அடிப்படையில் நடந்த பெரும் போர்களைப் பற்றி பைபிள் குறிப்பிடுகிறது.இத்தகைய சமய மோதல்களின் போது இஸ்ரேலியர்கள்(யூதர்கள் ) நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றிக் கர்த்தர் அவர்களுக்குக் கீழ்க்கண்டபடி கட்டளையிட்டுள்ளதை பைபிளில் காணலாம்

1 அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்து,கடவுள் சிலைகளை உடைத்து அவர்களது தோட்டங்களயும் அழியுங்கள்.-யாத்-34:13:14

2 வேறுதேவதைகளை வணங்கும் அவர்களின் குழந்தைகளை அவர்களின் கண்களுக்கு முன்னிலையிலேயே மோதிக் கொல்லுங்கள்-எண்-31:17,18

நீ அவர்களது கொள்கைகளைப் பின்பற்றாமல் அவர்களின் சிலைகளை உடைத்து நொறுக்கு.-யாத்-23:24

அவர்கள் தங்கள் தெய்வத்தை வழிபடுமிடங்களையெல்லாம் முற்றிலும் அழித்துவிடு.உபா-12:2

அவர்களின் பலிபீடங்களையும் சிலைகளையும் தகர்த்து அவர்களின் தோப்புகளை எரித்துவிடுங்கள்.அவர்கள் வணங்கும் தேவர்களின் பெயர் கூட அங்கு இல்லாமல் செய்துவிடுங்கள்.உபா-12:3

மற்ற தெவங்களை வணங்குவதற்காக உன் சகோதரனோ,உன் மனைவியோ உன் பெண்ணோ உன் புத்திரனோ உன் உயிருக்குயிரான  தோழனோ உன்னை அழைத்தால் அவர்கள் மீது இரக்கம் கொள்ளாமல் அவர்களைக் கொன்றுவிடு-உபா13:6-9

        இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்பு பைபிளில் இடம்பெற்றுள்ள இவ்வாக்கியங்கள் .நிறைவேற்றப்பட வேண்டியவை என்று அன்றைய யூதர்கள் நம்பி அதன்படி நடந்தார்கள். பின்னாட்களில் கிறிஸ்தவர்களும். இந்தக் கர்த்தரின் கட்டளைகளின் படியே நடந்தனர்.கர்த்தரின் இந்தக் கட்டளைகள் நிறைவேற்றப்பட்டால்           மட்டுமே நாடு சுத்தமாகி செல்வம் கொழித்து மக்கள் நோயற்ற வாழ்வு வாழ்வர் என்று இவர்கள் நம்புகிறார்கள்.இந்த நம்பிக்கையின் விளைவுதான் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மதத்தின் பெயரால் நடந்த கொலை,கொள்ளை கற்பழிப்பு,,யுத்தங்கள் இவையெல்லாம்.கிறிஸ்தவர்கள் தங்கள் இறைவனை அன்பே வடிவானவன் என்கின்றனர்.(அன்பே பிரதானம்! அன்பே பிரதானம்!) அன்பு வடிவான இறைவன் இப்படிப்பட்ட கொடிய கட்டளைகளை உண்மையிலேயே பிறப்பித்தாரா? அல்லது இறைவன் இக்கட்டளைகளை இட்டதாக இவர்கள் எழுதிவைத்தார்களா? நிச்சயம் இவர்கள் எழுதிவைத்ததுதான்.-.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

17. செயின்ட் பால் கிறிஸ்தவம்

      பைபிளின்படி கர்த்தரால் முதலில் தோற்றுவிக்கபட்ட யூதர்களே உலகில் முதன்முதலில் நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் என்றும் அவர்கள் பெரிய வரலாறு உள்ளவர்கள் என்றும் நல்ல புத்திக் கூர்மையும் ஆற்றலும் மிக்கவர்கள் என்றும் புகழ்ந்துரைக்கப்படுகிறார்கள்.கர்த்தரே யூதர்களின் ஜாதிக்காரர் என்று சொல்லப்படுகிறது. “இஸ்ரேல் இனத்தில் 12 ஜாதிகள்(கோத்திரங்கள்) உள்ளன.அவற்றைப் பாதுகாக்கவே கர்த்தர் உலகிற்கு வந்தார்”.-மத்-10:5,6.இந்த வசனத்தால் கர்த்தர் யூதர்களை மட்டுமே பாதுகாப்பவர் என்பதும் மற்றவர்களைப் பாதுகாக்க மாட்டார் என்றும் தெரிகிறது.அந்த அளவிற்கு யூதர்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்கள் என்கிறது பைபிள்.ஆனால் இந்த வசனம் யூதர்கள் விஷயத்திலேயே பொய்த்துப் போய்விட்டதை வரலாற்றில் நாம் காணமுடியும்.பழைய ஏற்பாடு முழுவதும் கிறிஸ்தவர்களின் ஆதிசத்திய வேதமாக எற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றது. பழைய ஏற்பாட்டில் உள்ள சில பகுதிகளை இஸ்லாமும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் யூதர்கள் அவ்வளவு புகழுக்குரியவர்களாக வரலாற்றில் இல்லை என்பதுதான் உண்மை.அவர்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்கு அடிமைகளாகவே இருந்தனர் என்றுதான் வரலாறு சொல்கிறது.கர்த்தர் தனக்கு மிகவேண்டியவர்களும் தன் ஜாதிக்காரர்களுமான  யூதர்களைக் கைவிட்டது ஏன் என்ற கேள்விக்கும் பதிலில்லை.

       அரேபியப் பாலைவனப் பகுதிகளில் தோன்றிய யூதர்கள் தங்களின் இனம் பெருகியவுடன் சுமார் கி.மு 1500-ல் நாடோடிகளாகக் கிழக்கு திசைநோக்கி வந்தனர்.அவர்கள் வந்தடைந்த பகுதி  யூப்ரடிஸ்-டைக்ரிஸ் நதிகள் பாயும் செழுமையான மெசபடோமியச் சமவெளி. சுமார் கி.மு. 4000 முதற்கொண்டே இப்பகுதியில் மிகச்சிறந்த சுமேரிய நாகரிகம் மலர்ந்திருந்தது. அப்பகுதிகளில் ஏற்கனவே பாபிலோனியர்கள் எகிப்தியர்கள்,பெனிஷியர்கள்,கனானியர்கள்,பெலிஸ்தியர்கள்,அராபியர்கள் என்ற பலவேறு பிரிவினர்கள் வாழ்ந்துவந்தனர். அவர்களோடு யூதர்கள் பலமுறை சண்டையிட்டும் அவர்களை வெல்ல முடியவில்லை. அதனால் அங்குள்ள அரசுக்குக் கீழ்ப்படிந்த சிறு குடிகளாய் யூதர்கள் வாழப் பழகிக்கொண்டனர்.அத்துடன் அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடமிருந்தே நாகரிகத்தையும் கற்றுக்கொண்டனர்.அப்பகுதி மக்களிடையே நிலவிவந்த மதம்,இலக்கியம் பண்பாடு,நம்பிக்கைகள் இவற்றிலிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்ட யூதர்கள் அவற்றின் அடிப்படையில் தங்களது மத நூலான பழைய ஏற்பட்டை எழுதினர்.

           யூதர்கள் ஆரம்பத்தில் பல நாடுகளில் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.அவர்கள் எந்தெந்த நாடுகளில் அடிமைகளாக இருந்தார்களோ அந்தந்த நாட்டின் மரபுகளையும் கற்றுக்கொண்டனர்.பல மன்னர்களின் ஆட்சிகளின் கீழ் அடிமைகளாகவே இருந்த அவர்கள் தங்களுக்கு விடுதலை கிடைக்காதா என்று ஏங்கியதுடன் தங்களைக் கர்த்தர் கைவிட்டுவிட்டதாக நினைத்து வருந்தினர். அச்சமயத்தில்தான்  டேனியல், இசயா என்ற இரு யூத தீர்கதரிசிகள் “மெஸயா”என்ற கொள்கையை உருவாக்கினர்.அந்தக் கொள்கையின் படி "கர்த்தர் மீண்டும் யூதர்களின் நாட்டுக்கு வந்து யூதர்களைப் பாதுகாப்பார். மக்கள் கவலைகொள்ளவேண்டாம்.சிதறுண்டு காணாமல் போன யூத கோத்ரங்களை ஒன்று சேர்ப்பார்.யூதர்களைத் துன்புறுத்திய பாபிலோன் நாட்டு மன்னனுக்குத் தண்டனை வழங்குவார்.ஒன்று சேர்க்கப்பட்ட யூதர்களுக்குத் தாமே அரசனாக இருப்பார்”என்று சொல்லப்படுகிறது. எசெக்கியேல்-28:25,30:3, செப்பனியா3:19,20, எரோமியா51:24,51:36, ஆகியவற்றில் இவ்விஷயத்தைக் காணமுடியும்.இந்த மெஸயாக் கொள்கை யூதர்களிடம் பிரபலமாக இருந்தது.எனினும் யூதர்களுக்குத் துன்பங்களும் அவமானங்களும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தன.கி.மு 333-63 காலங்களில் கிரேக்கப் படையெடுப்பினால் யூத்ர்கள் துயருற்றனர்.கி.மு 63- 313 வரை யூத நாடு ரோமானியருக்கு அடிமைப்பட்டிருந்தது. அக்காலக்கட்டத்தில் டேனியல், இசயா அகியோர் சொன்ன மெஸயா எப்போது வருவார் என்ற ஏக்கத்தில் யூதர்கள் இருந்தனர்.அக்காலத்தில் சில போலி மெஸயாக்கள் தோன்றித் தங்களே  அந்த மெஸயா என்று கூறி உலாவந்தனர்.அந்த நேரத்தில் தான் நாசரேத் என்ற ஊரில் வாழ்ந்த ஏசுவே அந்த மெஸயா என்று பிரபலப்படுத்தப்பட்டது.

      ஏசுவின் போதனைகளை சில யூதர்களே ஆதரித்தனர் பல யூதர்கள் ஆதரிக்கவில்லை. ஏசு யூத குலத்தில் தோன்றி அதன் மத ஸம்ப்ரதாயங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.அவர் தன்னை ஒரு போதகராக வர்ணித்துக்கொண்டாரே யொழியப் புதிய ஒரு மதத்தை ஸ்தாபிக்க வந்தவராகத் தன்னைக் கூறிக்கொள்ளவில்லை.ஏறகனவே யூதசமயத்தில் இருந்த கோட்பாடுகளை சீர்திருத்தம் செய்ய வந்ததாகவே கூறியுள்ளார்.(மத்-5:17)ஆனால் யூதர்கள் அவரது இறைக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.அவரை ஒரு பொய்யான தீர்க்கதரிசி என்றார்கள் யூதர்கள்.அவருக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார்கள்.இன்றுவரை யூத சமயத்தினர் ஏசுவின் கொள்கைகளை ஏற்பதில்லை.யூதர்களின் நம்பிக்கைப்படி இன்றுவரை மெசையா வரவில்லை.

         ஏசு சிலுவையில் அறையப்பட்ட பிறகு மறைந்திருந்து வாழ்ந்த யூத விடுதலைப்படையினர் ரோமானிய ஆட்சிக்கு எதிராகக் கலகம் செய்தனர்,அந்தக் கலவரத்தில் ஜெருஸலேம் ஆலயம் ரோமானியர்களால் அழிக்கப்பட்டது. “நானே யூதர்களின் மன்னன்” என்று ஏசு சொன்னதால் கலவரத்திற்குக் காரணம் ஏசுதான் என்று கருதி ஏசுவின் சீடர்கள் மீது கொடூரத் தாக்குதல் ஏவிவிடப்பட்டது. ஏசுவின் சீடர்கள் தப்பியோடித் தலைமறைவாயினர்.அந்த நேரத்தில் ரோமானிய ஆட்சியாளர்களுடன் சேர்ந்துகொண்டு ஏசுவின் சீடர்களுக்குக் கொடுமையைச் செய்தவர் சால்(Saul of Tarsus) என்ற பால்(Paul).இவர் பெஞ்சமின் கோத்ரத்தைச் சேர்ந்த ஒரு யூதர்.கிரேக்க நாட்டில் பிறந்து ரோமானியக் குடியுரிமையைப் பெற்றவர். அக்காலத்தில் ரோமானிய பிரஜை என்றால் சமூகத்தில் பெரிய மரியாதை உண்டு.ரோமானிய ஆட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட இவர் ரோமானியப் படையில் சேர்ந்துகொண்டு யூத விடுதலைப் போராட்டக் குழுக்கள் மீது தாக்குலை நடத்தியவர்.திடீரென்று ஒருநாள் இவருக்கு வானத்திலிருந்து “என் மக்களைக் கொல்லாதே” என்று ஒரு அசரீரி கேட்டதாகவும் அதன் பின் ஆதி கிறிஸ்தவர்களைக் கொல்லும் வேலையைக் கைவிட்டுப் பரிசுத்த ஆவிக் கிறிஸ்தவராக மாறிவிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.இவர் கிறிஸ்தவராக மதம் மாறியபின் "செயின்ட் பால்" என்று அழைக்கப்படலானார். கிறிஸ்தவ சமய விஷயத்தில் தானாகவே சொந்தமாகச் சில கொள்கைகளை ஏற்படுத்தி ரோமானியர்களின் ஆதரவுடன்  பரப்பிவந்தார். ஏசுவின் இறப்புக்கு யூதர்களே காரணம் என்றும் ரோமானியர்கள் காரணமில்லை என்றும் கூறி ரோமானியர்களின் அன்புக்குப் பாத்திரமானார்.ஆனால் இவரையும் இவரது கொள்கைகளையும் ஏசுவின் குடும்பத்தாரும் சீடர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.ஏசுவின் குடும்பத்தார், ஏசு தான் வாழ்ந்த காலத்தில் போதித்த கருத்துக்களைப் பரப்பிவந்தனர். ஆனால் ஏசுவின் தொண்டராகத் தன்னைக் காட்டிகொண்ட பால் தனது கருத்துக்கள் எல்லாம்  பரிசுத்த ஆவிமூலம் தனக்கு நேரடியாகக் கிடைத்தவை என்று கூறிப் பிரசாரம் செய்துவந்தார். ஏசுவின் குடும்பத்தினருக்கும் இவருக்குமிடையே கருத்து வேறுபாடுகளால் அடிக்கடி மோதல்கள் வெடித்தன.

       ஏசுவின் குடும்பத்தாரும் ஏசுவின் சீடர்களான,தாமஸ், ஜேம்ஸ்,பீட்டர் போன்றோரும் யேசுவின் கொள்கை யூதசமயக் கொள்கையே என்றும் அதனை சீர்திருத்தம் செய்யவே ஏசு உலகிற்கு வந்து உயிர்துறந்தார் என்றும் பிரச்சாரம் செய்தனர்.ஆனால் பால் வேறுவிதமாகப் பிரச்சாரம் செய்தார். கர்த்தரால் தடைசெய்யப்பட்ட பழத்தை உண்டதால் மனித குலத்துக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்கவே ஏசு உலகிற்கு வந்தார் என்று பிரச்சாரம் செய்தார். மிகுந்த செல்வத்துடன் விளங்கிய பக்கத்து நாட்டுக்காரர்களான புற ஜாதியருமான கிரேக்கர்களையும் ரோமானியரையும் கவர்வதற்காக “ஏசுவின் போதனைகள் யூதர்களுக்கு மட்டுமன்று,புற ஜாதியினருக்கும்தான்” என்று பிரச்சாரம் செய்தார்.யூதர்கள் ஏழைகளாகவும் கிரேக்க ,ரோமானியர் பணக்காரர்களாகவும் இருந்ததால் கிரேக்க, ரோமனியர் ஏற்றுக்கொள்ளுமளவிற்கு ஏசுவின் போதனைகளில் மாற்றம் செய்து பிரச்சாரம் செய்தார்.மேலும் கிரேக்க, ரோமானியர்கள் மரணத்திற்கு பயப்படுபவர்கள்.அவர்களின் பயத்தைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு அதற்குத் தக்கபடி புதுக்கொள்கைகளை உருவாக்கிப் பரப்பிவந்தார்.அதுவரை யூத கிறிஸ்தவத்தில் இருந்த சுன்னத் செய்தல் ,பலிக்கோட்பாடு முதலியவற்றை நீக்கிவிட்டார் பால்.இவையெல்லாம் கிறிஸ்தவர்களுக்குத் தேவையில்லை என்றார்.பரிசுத்த ஆவிக்கோட்பாட்டை நிறுவியதோடு கிரிஸ்தவத்தில் பல மாற்றங்களைச் செய்து ஒரு புதிய வடிவத்தில் கிறிஸ்தவத்தை உருவாக்கினார். இவரது கோட்பாடுகள் பிரச்சாரத்துக்கு வந்தபின் ஏசு குடும்பத்தினர் மற்றும் அவரது சீடர்களால் போதிக்கப்பட்ட ஏசுவின் உண்மையான கோட்பாடுகள் மக்கள் மத்தியில் எடுபடாமல் போய்விட்டன. ஏசுவைக் கண்ணால்கூடக் கண்டிராத  பாலின் கோட்பாடே மக்களால் பெரிதும் விரும்பப்பட்டுப் பிரசித்தியடைந்தது.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

18. கிறிஸ்தவம் ஒரு மதமாக அங்கீகரிக்கப்படல்

             கி.பி.33-ல் ஏசு உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது.ஏசுவின் வாழ்க்கை வரலாறு குறித்த நாடோடிக் கதைகள் அக்காலத்தில் பாலஸ்தீனப் பகுதியில் உலாவி வந்தன.ஏசுவின் வாழ்க்கை வரலாற்றை நம்பியவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து அவரது போதனைகளைப் பரப்பிவந்தனர்.அவ்வகையான குழுக்களில் ஒரு குழுவின் தலைவர்தான் செயின்ட் பால்.அவர் காலத்தில் சுவிசேஷங்கள் எதுவும் எழுதப்படவில்லை. அவர் ஏசுவை நேரடியாக சந்தித்தவர் இல்லை.ஏசுவின் போதனைகளை அருகிலிருந்து கேட்டவரும் இல்லை.ஓரிறைக் கோட்பாட்டில் நம்பிக்கைகொண்டிருந்த பால் கிரேக்க ரோமானியப் பகுதிகளில் அக்காலத்தில் பிரசித்தியடைந்திருந்த இந்து, பௌத்த செல்வாக்கையும் உருவ வழிபாட்டையும் பலதெய்வ வழிபாட்டையும் ஒழிக்க நினைத்தார்.அத்துடன் ரோம ஸம்ராஜ்யத்துக்கு எதிரான போராளிகளை ஒழிப்பதிலும் ரோம அரசுக்கு உதவியாக இருந்தார்.அதற்காக ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கவும் எண்ணினார்.அச்சமயம் ரோமானிய,கிரேக்கப் பகுதிகளில் உலாவி வந்த ஏசுவின் கதைகளைத் தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ளப் பயன்படுத்திக்கொண்டார்.

       ஏசுவின் குடும்பத்தினரும் அவரது சீடர்களும் ஏசு உபதேசித்த அறிவுமார்க்க போதனைகளை உபதேசித்து வந்தனர்.இந்தக்குழுவினர் யூதக் கிறிஸ்தவர்கள் (Judeo Christians) என்று அழைக்கப்பட்டனர். அதாவது “ஒழுக்கத்துடன் இருந்துகொண்டு அறச் செயல்களைச் செய்பவன் சொர்கத்தை அடைவான்.அவனுக்கு நித்ய ஜீவன் உண்டு.தெய்வ ஞானம் பெற்றால்தான் இரட்சிப்புக் கிடைக்கும். கற்பனையான நம்பிக்கை மூலம் இறைவனை உணரமுடியாது.தர்ம சிந்தனையோடு வாழ்ந்தாலே நல்ல கதி கிடைக்கும். பாவ மன்னிப்புக்காக வாரந்தோறும் சர்சுக்குச் செல்லத் தேவையில்லை.தீய செயல் செய்பவன் நரகத்தை அடைவான்”என்பதே அவர்களது போதனைகளின் சாரம்.இது பெரும்பாலும் எல்லா மதங்களிலும் சொல்லப்படுகிற செய்திதான். ஏசுவே சொர்கம்,நரகம் இவற்றைப் பற்றி விரிவாகப் பேசியிருக்கிறார்.ஆனால் செயின்ட் பாலுக்கு இக்கருத்து ருசிக்கவில்லை. ‘ஒருவன் தர்ம நெறியோடு வாழ்பவனாயின் பாவ மன்னிப்புக் கேட்க அவன் சர்ச்சுக்குச் செல்லத் தேவையில்லை’ என்ற இக்குழுவினரின் கொள்கை பிரபலமானால் சர்ச்சின் தேவையும் பாவ மன்னிப்புக் கொடுக்கும் பாதிரியார்களின் தேவையும் இல்லாமல் போய்விடும் என்றும் மனித வாழ்வில் ஒழுக்கங்களைக் கடைப்பிடிப்பதும் அறத்தோடு வாழ்வது என்பதும் மிகவும் சிரமம் என்றும் அதன்மூலம் இறைவனை அடைவது என்பது அதனினும் கடினம் என்றும் பால் எண்ணினார், அதனால் கிறிஸ்தவத்தை எளிமைப்படுத்தவும் கிரேக்க,ரோமனியர்களைக் கவர்வதற்காகவும் சாமான்ய ஜனங்களைத் தன்பால் ஈர்ப்பதற்காகவும்  “விசுவாசம்” என்ற புதிய கோட்பாட்டை உருவாக்கினார்.இந்தக் கோட்பாட்டின்படி “ஒருவன் நித்ய ஜீவனைப்பெற்று சொர்கத்தை அடைய அவனது ஒழுக்கமோ அறச்செயல்களோ உதவாது. ஏசுவின் மீது விசுவாசம்(நம்பிக்கை ) வைப்பது ஒன்றே நித்ய ஜீவனை அளிக்கும்” என்று சொல்லப்பட்டது. அதாவது ஒருவன் எவ்வளவு தர்மவானாக இருந்தாலும் ஏசுவின் மீது அவனுக்கு நம்பிக்கை இல்லையென்றால் அவனுக்கு நற்கதி இல்லை. ஒருவன் எவ்வளவு அயோக்யனாக இருந்தாலும் ஏசுவின் மீது நம்பிக்கை இருந்தால் அவனுக்கு நிச்சயம் நித்ய ஜீவன் உண்டு என்பதே இக்கோட்பாட்டின் விளக்கம். நெறிமுறையற்ற வாழ்க்கை வாழ்வதில் பிரியம் உள்ளவர்களுக்கும் மரணம்,நரகம் இவற்றைப் பற்றிய பயம் உள்ளவர்களுக்கும் இந்தத் தத்துவம் மிகவும் பிடித்துப் போய்விட்டது. இக்கோட்பாட்டால் ஈர்க்கப்பட்ட மக்கள் நாம் எப்படி வாழ்ந்தாலும் ஏசு மீது நம்பிக்கைமட்டும் வைத்தால் அவர் நம் பாவத்தைக் கழுவி மரணத்திலிருந்து விடுவித்து நித்ய ஜீவனை நமக்கு  அளிப்பார் என்று நம்பி கூட்டம் கூட்டமாக செயின்ட் பால் கிறிஸ்தவத்தில் இணைய ஆரம்பித்தனர்.

        மேலும் யூத சமயத்திலிருந்து கிறிஸ்தவத்தைத் தனிமைப்படுத்தினார் பால். தன்னை ஆதரிக்காத யூதர்களை எதிர்த்தார்.எசுவின் குடும்பத்தினரும் சீடர்களும் தனிமைப் படுத்தப்பட்டனர்.இவ்வண்ணமாக ஏசுகுடும்பத்தார் மற்றும் அவரது சீடர்களின் போதனைகள் அழிக்கப்பட்டு பாலின் விச்வாச கிறிஸ்தவமே’(Pauline Christianity)  வெற்றி பெற்றது.

        பாலின் கிறிஸ்தவ மதம் ரோமை முக்கியக் கேந்திரமாகக் கொண்டு செயல்பட்டது..உலகில் வேகமாகப் பரவ ஆரம்பித்தது.பரவிய இடங்களிலெல்லாம் சர்ச்சுகள் உருவாக்கப்பட்டன. பிஷப்புகளும் உருவானார்கள்.பாலின் கிறிஸ்தவத்திற்கு எதிரான நூல்களும் கலாசார மையங்களும் அழிக்கப்பட்டன. கிறிஸ்தவத்திற்கு மாறிய மக்களே இந்தப் ‘புனிதப்படுத்தும்”பணியைச் செய்தனர்..

        கி.பி நான்காம் நூற்றாண்டில் ரோமாபுரியின் மேற்குப் பகுதியை கான்ஸ்டன்டைன்(Constantine) என்ற அரசன் ஆண்டுவந்தான். இவன் தன் ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டிக்கொள்ளப் பல கொலைகளையும் குற்றங்களையும் செய்தவன். அதனால் ரோமானிய மக்கள் அவன்மீது கடும் அத்ருப்தியில் இருந்தனர். தனது அரசாட்சியில் மூத்த அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவனுக்குக் குறைந்தது. அதனால் மனம் நொந்த அவன் தான் செய்த பாவத்திற்குப் பிராயிச்சித்தம் தேட எண்ணினான்.அப்போது ரோமில் இருந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவ தேவாலயம் அவனது பாவத்தை நிவர்த்தி செய்ய முன்வந்தது.அரசன் தேவாலயத்துக்கு வந்து கர்த்தரிடம் தன் பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டால் அவனுக்கு ஏற்பட்ட பாவமும் பழியும் நீங்கும் என்று அந்த தேவாலய குருமார்கள் சொன்னார்கள்.கத்தோலிக்க குருமார்களின் ஆலோசனையின்படி தேவாலயம் சென்று பாவ மன்னிப்புக் கேட்டான் கான்ஸ்டன்டைன்.உடனே கத்தோலிக்கத் திருச்சபை அவனது பாவம் நீங்கிவிட்டதாக அறிவித்தது.அதற்கு நன்றிக் கடனாக கத்தோலிக்கத் திருச்சபைக்கு மத சுதந்திரத்தையும் வலிமையான அதிகாரத்தையும் கொடுத்தான் கான்ஸ்டன்டைன்.

         கான்ஸ்டன்டைன் கி.பி. 312-ல் நடந்த உள்நாட்டுப் போரில் மக்ஸண்டியஸ்(Maxentius) என்ற முன்னாள் ரோம அரசனுடன் போரிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனது படைவீரர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்த வீரர்களின் கேடயங்களில் க்ராஸ் (Cross) சின்னத்தைப் பொறிக்கும் படி கட்டளையிட்டான்.குறுக்கு நெடுக்காகப் போகும் சூரிய ஒளிக்கதிரின் அடையாளமான க்ராஸ் சின்னம் அன்றைய நாளில் ரோமில் நடப்பிலிருந்த ஹெலன்(Pagon Religion) சமயத்தின்  சின்னமாகும்.அந்தச் சின்னத்தைத்தான் கேடயங்களில் பொறிக்கச் சொன்னான் கான்ஸ்டன்டைன்.அந்த உள்நாட்டுப்போரில் கான்ஸ்டன்டைன் வெற்றி பெற்றான்.அவனது படைவீரர்களின் கேடயங்களில் பொறிக்கப்பட்டிருந்த க்ராஸ் சின்னத்தின் மகத்வத்தால்தான் அவன் வெற்றி பெற்றதாகவும் அந்த க்ராஸ் சின்னம் ஏசுவின் சிலுவை அடையாளமே என்றும் கத்தோலிக்க குருமார்கள் அரசனிடம் சொன்னார்கள். அதுவரை க்ராஸை ஹெலன் சமயச்சின்னமாக நினைத்திருந்த அரசன் கான்ஸ்டன்டைன் கத்தோலிக்கக் குருமார்கள் சொன்னதை நம்பி ஏற்றுக்கொண்டான். .

       ரோமின் கிழக்குப்பகுதி அரசனான லிஸினியசும்(Licinius) கான்ஸ்டன்டைனும் சேர்ந்து  கி.பி. 313-ல் வெற்றிக்குக் காரணமான க்ராஸ் சின்னத்தையுடைய கிறிஸ்தவத்தை ஒரு மதமாக அங்கீகரித்து ஒருஅறிக்கை வெளியிட்டனர். அதற்கு மிலன் பிரகடனம் (Milan edict) என்று பெயர்.  இந்த மிலன் பிரகடனத்தின் மூலம்தான் அதுவரை வெறும் கோட்பாடுகளாக இருந்த கிறிஸ்தவம் ஒரு மதம் என்ற வடிவத்தைப் பெற்றது.

         ரோமானிய அரசு தங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு கத்தோலிக்க குருமார்கள் கிரேக்க,ரோமானியர்களின் பழம்பெரும் சமயமான ஹெலன் மதத்தினரையும் கிறிஸ்தவத்தில் இருந்த மற்ற பிரிவினரையும் ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதனால் நாட்டில் மதக்கலவரங்கள் தோன்றின. இந்த மதக் கலவரங்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவும்   கிறிஸ்தவ மதத்திற்குள் அப்போதிருந்த பல்வேறுவிதமான கோட்பாடுகளை ஒழுங்குபடுத்தி நாட்டில் ஒரே கிறிஸ்தவத்தை நிலைநாட்டி நாட்டை அமைதிப்படுத்தவும் ஒரு ஏற்பாடு செய்தான் கான்ஸ்டன்டைன். அதற்காக கி.பி 325-ல் நைஸியா (தற்போதைய துருக்கியில் இஸ்னிக் என்னும் பெயரில் உள்ளது இந்நகரம்) என்னும் நகரில் ஒரு கிறிஸ்தவ மாநாட்டை  நடத்தினான்.மாநாட்டிற்கு 1800 பிஷப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.ஆனால் 300 பிஷப்புகள் மட்டும் மாநாட்டில் கலந்துகொண்டனர்.ஒரு மாத காலம் மாநாடு நடைபெற்றது.

1.   மனித குமாரன் ஏசுவுக்கும் வானில் உள்ள கர்த்தருக்குமான தொடர்பை விளக்குவது.

2.   ஏசு வானுலகப் பிதாவின் மைந்தனா அல்லது பூமியில் பிறந்த ஜோஸப்பின் வளர்ப்பு மகனா அல்லது பூமியில் வாழ்ந்த ஓரு மகானா என்பதை முடிவு செய்தல்.

என்பதே மாநாட்டின் நோக்கம்.

மாநாட்டின் முடிவுக்கு அனைத்து பிஷப்புகளும் உடன் படவேண்டும்.உடன்படாதவர்கள் இலியா என்னும் தீவுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று அரசன் அறிவித்தான்.கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

1.கிறிஸ்துவே ஒரே இறைவன் தந்த ஒரே இறைவன். ஒளியிலிருந்து தோன்றிய ஒளி.உண்மையான இறைவனிடமிருந்து வந்த உண்மையான இறைவன்.

2. இறைவன் மூலம் பூமியில் பிறந்தவரே ஏசு.அவர் இறைவனால் செயற்கையாகச் செய்யப்பட்டவர் அல்லர்.

    இதுவே நைஸியா பிரகடனம் என்று அழைக்கப்படுகிறது.

     பிஷப் ஆரியாஸ் என்பவரின் தலைமையில் உள்ள ஒரு குழு இந்தத் தீர்மானங்களை எதிர்த்தது.ஏசு ஒரு மகான் தானே தவிர அவர் கடவுளின் குமாரன் அல்லர் என்று ஆரியாஸ் தெரிவித்தர்.அதனால் அவரும் அவரது குழுவில் இருந்தவர்களும்  நாடு கடத்தப்பட்டனர் அவர்களது தத்துவ நூல்கள் எரிக்கப்பட்டன. மறைமுகமாக அந்நூல்களைப் படித்தவர்களும் கண்டுபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

        இந்த மாநாட்டில்தான் அதுவரை கிறிஸ்தவர்களின் வார விடுமுறைநாளாக இருந்த சனிக்கிழமை மாற்றப்பட்டு  ஞாயிற்றுக் கிழமை விடுமுறைநாளாக அறிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை ஹெலன் சமயத்தினரின் விடுமுறைநாள். அன்றைய ஹெலன் சமயத்தினரின் க்ராஸ் வடிவிலான சூரிய ஒளிக்கதிர் சின்னம்  கிறிஸ்தவர்களின் சிலுவையே என்று அறிவிக்கப்பட்டது.கொலைக் கருவியாக இருந்த சிலுவை "புனிதச்"சின்னமானது.இப்படி ரோமாபுரியின் பழம்பெரும் சமயமான ஹெலன் சமயத்தை அடியோடு அழிக்க அதன் அடையாளங்கள் கிறிஸ்தவ மயமாக்கப் பட்டன.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

19. வெறியாட்டம்

           முதலாவது கிறிஸ்தவ அரசன் என்றும் முதல் பிஷப் என்றும் கருதப்படும் ரோமானியப் பேரரசன் கான்ஸ்டன்டைன்  கி.பி.324-ல் கிறிஸ்தவத்தை அரசாங்க மதமாக அகீகரித்து அதற்குத் தடையில்லாத அதிகாரத்தையும் கொடுத்தவுடன் அம்மதத்திற்கு ஒரு தனித்தன்மையை உருவாக்க அம்மதத்தின்  குருமார்கள் நினைத்தார்கள்.அதற்கு ஒரே வழி மற்ற மதங்களின் கோட்பாடுகளை இகழ்ந்து அவற்றை அழித்தொழிப்பதுடன் மற்ற மதங்களின் வழிபாட்டுத் தலங்களையும் அழிப்பதுதான் என்ற முடிவுக்கு வந்தார்கள். கிறிஸ்தவத்தை ஏற்காதவர்களையும் எதிர்ப்பவர்களையும் ஒழிக்க நினைத்தார்கள்.அதன்படி செயல்படவும் ஆரம்பித்தார்கள். ரோம அரசும் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்தது.அவர்கள் அரங்கேற்றிய கொடூரங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

     கான்ஸ்டன்டைன் ஆத்தோஸ் பகுதியிலிருந்த ஹெலன் சமயத்தினரை அப்பகுதியிலிருந்து வெளியேற உத்தரவிட்டான். திதிமாவில் இருந்த அப்போலோ தெய்வத்தின் கோயிலும் இடிக்கப்பட்டது. அரசனது உத்தரவின் பேரில் ஜெருசலெம், அண்டோலியாப் பகுதிகளில் இருந்த கோயில்கள் இடித்துத் தள்ளப்பட்டன.

     கி.பி.330-ல் கான்ஸ்டன்டைன் தன் பெயரால் 'கான்ஸ்டான்டிநோபிள்' என்ற ஒரு நகரத்தை நிர்மாணம் செய்தான். மாற்று மதத்தினரின் கோயில்களில் உள்ள செல்வங்களை அபகரித்துக் கொண்டுவந்தே இந்த நகரை நிர்மாணம் செய்தான்.இந்த நகரத்தில் கிறிஸ்தவர்கள் மட்டுமே வசிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டான்.தற்போது துருக்கியில் இஸ்தான்புல் என்று அழைக்கப்படும்  நகரம் இதுதான்.

       கி.பி. 335-ல் ரோமானிய ராஜ்யத்தில் வாழ்ந்த குறி சொல்வோர்,ஆரூடம்,ஜோதிடம் பார்ப்பவர்கள்,தத்துவ ஞானிகள் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

         ஹெலன் சமயத்தைச் சார்ந்தவனாக இருந்துகொண்டே கிறிஸ்தவத்தை ஆதரித்த கான்ஸ்டன்டைன் கி.பி.337-ல் நோய்வாய்ப்பட்டு மரணத்தை எதிர்பார்த்திருந்தபோது அவன் விருப்பப்படி கிறிஸ்தவர்களால் ஞானஸ்நாநம் செய்துவைக்கப்பட்டான்.

          கி.பி 337 முதல் 350-வரை ரோம ராஜ்யப் பகுதிகளில் வாழ்ந்த மற்ற சமயத்தவர் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டனர்.கி.பி 353-ல் உருவ வழிபாடு செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். கி.பி 354-ல் கோயில்கள் அழிக்கப்பட்டு பூசாரிகள் கொல்லப்பட்டனர்.மற்ற சமய நூலகங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.கிறிஸ்தவ சமய நூல்களைத் தவிர மற்ற சமய நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.கி.பி 356-ல் உருவ வழிபாடு செய்பவர்களைக் கொல்ல மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கி.பி 357-ல் பிரச்னம்,ஜாதகம் ,கைரேகை பார்த்தல் தடைசெய்யப்பட்டது. கி.பி 359-ல் சிரியாவில் உள்ள ஸ்கைதோபோலிஸ் (Skythopolis) நகரில்தான் கிறிஸ்தவர்கள் முதன்முதலில் மரண முகாமை ஆரம்பித்தார்கள்.ரோம ராஜ்யத்தில் எஞ்சியிருந்த மாற்று மதத்தினர் அந்த நகருக்குக் கொண்டுவரப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர்.கிபி 364-ல் ஆன்டியோச் நகரில் இருந்த மாற்று மதப் புத்தக சாலை எரிக்கப்பட்டது.கிபி 370-ல் கிழக்கு ரோம ராஜ்யத்தில் அதிகமாக இருந்த பிற சமயத்தினரின் நகரங்கள் எரிக்கப்பட்டதுடன் மடங்களும் ஆச்ரமங்களும் அழிக்கப்பட்டன.பூசாரிகள் உயிருடன் எரித்துக் கொல்லபட்டனர்.கிபி.400-ல் விசாய் நகரிலிருந்த மாற்று மதத்தவரை பிஷப் நிஸிட்டாஸ் என்பவர் கட்டாய மதமாற்றம் செய்தார்.கிபி.401 முதல் 405 வரை பாலஸ்தீனத்திலிருந்த மற்ற மதக்கோயில்கள் இடிக்கப்பட்டன.மற்ற மதத்தினரோடு கிறிஸ்தவர்கள் தொடர்புவைத்துக் கொள்ளக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.அப்படித் தொடர்பு வைத்திருந்தவர்கள் ஊரைவிட்டும் மத்தைவிட்டும் விலக்கப்பட்டனர். கி.பி 406-ல் சைப்ரஸ் தீவிலிருந்த மாற்றுமதக் கோயில்கள் இடிக்கப்பட்டன. இப்படித் தொடர்ந்து ரோமாபுரியில் கொடூரங்கள் நடந்து கொண்டே இருந்தன.

           கி.பி 415-ல்எகிப்து நாட்டின் அலெக்ஸாண்ட்ரியா நகரில் ஹிபாடியா என்ற பேரழகு மிக்க ஒரு இளம்பெண் வசித்துவந்தாள்.அவள் ஹெலன் சமயத் தத்துவ ஞானி. சிறந்த கவிஞராகவும் இருந்தாள்.அவளது சிந்தனைகளும் செயல்பாடுகளும் கிறிஸ்தவத்திற்கு எதிரானது என்று குற்றம்சாட்டி அவளைக் கொலை செய்ய அந்நாட்டு பிஷப் சிரில் என்பவன் உத்தரவிட்டான்.அந்த உத்தரவின்படி அவள் கொலை செய்யப்பட்டதுடன் அவளது உடல் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு நகரெங்கும் வீசப்பட்டது. அக்காலக் கட்டத்தில் வட ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள அனைத்துக் கோயில்களும் சிலைகளும் உடைக்கப்பட்டன.அங்கிருந்த கோயில் பூசாரிகள் சிலுவையில் அறையப்பட்டும் தீயிடப்பட்டும் கொல்லப்பட்டார்கள்.கி.பி 438-ல் ரோமானிய நாட்டில் பிளேக் நோய் பரவி ஆயிரக் கணக்கானோர் இறந்தனர்.இதற்குக் காரணம் சாத்தான் வழிபாட்டுக்காரர்களே(உருவ வழிபாடு செய்பவர்கள்) என்று கிறிஸ்தவமத குருமார்கள் கூறினார்கள்.அதனால் அங்கு எஞ்சியிருந்த மற்ற மதக்காரர்கள் தேடிக் கண்டுபிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.

             கிரேக்க நாட்டிலிருந்த மற்ற மதத்தினரின் கோயில்களும் இடிக்கப்பட்டன.ஏதென்ஸ் மற்றும் ஒலிம்பியா நகரிலிருந்த புராதனக் கலை அம்சம் கொண்ட கோயில்களும் நினைவுச் சின்னங்களும் அழிக்கப்பட்டன.உருவ வழிபாடு செய்பவர்கள் எங்கு காணப்பட்டாலும் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டனர்.ரோம ராஜ்யத்தில் இருந்த அனைத்து மக்களுக்கும் ஞாநஸ்நாநம் கட்டாயமாக்கப்பட்டது.

              பண்டைய ரோமானிய கிரேக்க,எகிப்திய கலாசார அடையாளங்களும் அழகுகொஞ்சும் கலை வடிவங்களும் சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டுவிட்டன.எங்கு பார்த்தாலும் மக்களின் அலறல், அழுகுரல் மற்றும் அவர்களின் சாப ஒலிகள், சித்திரவதை,தீயிடுதல்,புராதனச் சின்னங்கள், கோயில்கள் இவற்றை இடித்தல்,பூசாரிகளைக் கொல்லுதல் இப்படிப்பட்ட கொடூரங்களைக் கிறிஸ்தவம் தோன்றிய நாளிலேயே அரங்கேற்ற ஆரம்பித்து விட்டது.ஆரம்பக் கிறிஸ்தவத்தின் மனிதநேயமற்ற இப்படிப்பட்ட கொலை வெறியாட்டங்கள் கொஞ்சநஞ்சமன்று.   “அவர்களின் குழந்தைகளை அவர்களின் கண்களுக்கு முன்னேயே கொல்லுங்கள். அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களின் சிலைகளைத் தகர்த்து, அவர்களின் தோப்புகளையும் வெட்டிப்போடுங்கள்.” முதலிய பைபிள் வசனங்களை மேற்கோள்காட்டித் தங்களின் இப்படிப்பட்ட கொடூரச் செயல்களை நியாயப்படுத்திக் கொண்டார்கள் கிறிஸ்தவ குருமார்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

20. பைபிள் உருவான வரலாறு

  கிறிஸ்தவர்கள் தங்களின் மதநூலான பைபிளை மிகப்புனிதமாகக் கருதுகின்றனர். அதைக் கடவுளின் சொல்லாக (Gospel) மதிக்கின்றனர். பரிசுத்த ஆவியால் சொல்லப்பட்டு மனிதர்களால் எழுதப்பட்டது என்பது அவர்களின் நம்பிக்கை.ஆனால் பைபிள் உருவான வரலாறு வேறுமாதிரியாக உள்ளது.

      அவர்களின் சமய நூலான பைபிள்,அதாவது பழைய ஏற்பாடு,புதிய ஏற்பாடு இரண்டுமே காலத்திற்கும் சமயத்திற்கும் தக்கவாறு அந்தந்தக் காலக் கட்டங்களில் வாழ்ந்த மதகுருமார்களால் தங்களின்  விருப்பத்திற்கேற்ற வகையில் மாற்றியும் கூட்டியும் குறைத்தும் எழுதப்பட்டவையே.எழுதியபின் மூலத்தை அழித்துவிடுவார்கள் .மூலம் இருந்தால் இவர்களது மோசடி வேலைகள் வெட்ட வெளிச்சமாகிவிடுமல்லவா,அதனால்தான்.

      பைபிளின் பழைய எற்பாடு ஏசுவின் காலத்திற்கு முன்பே எழுதப்பட்டது என்றாலும் அது இன்றுள்ள வடிவத்தில் அப்போது இல்லை.இஸ்ரேல் நாட்டுக் கடவுளைப் பற்றிப் பலவிதமான நூல்கள் இருந்தன.ஆனால் அவைகளுக்கு மொத்தமாக வழிபாட்டு நூல் என்ற அங்கீகாரம் அப்போது கிடைக்கவில்லை.கி.பி 90-ல் யவ்னே(Yavneh) நகரில் நடைபெற்ற சமயக் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்ட பின்னர் அவற்றில் 39 நூல்கள் மட்டும் பழைய ஏற்பாடாக அங்கீகரிக்கப்பட்டன.மற்றவை அங்கீகரிக்கப்படவில்லை.அதனால் அவை அழிக்கப்பட்டுவிட்டன.ஆனால் அவை அன்றைய காலத்தில் இருந்ததற்கான குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் வரும் பல்வேறு வசனங்கள் மூலம் அறியமுடிகிறது.இவர்களது மதநூல் ‘கடவுளின் சொல்’ என்று இவர்கள் சொல்வது உண்மையானால் அதில் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொண்டு சிலவற்றைத் தள்ளவேண்டிய அவசியம் என்ன? இவர்கள் ஏற்றுக்கொண்ட பகுதிகள்தான் கடவுள் சொன்னவை என்று எந்த அடிப்படையில் இவர்கள் தீர்மானித்தார்கள்?

        புதிய ஏற்பாட்டின் நிலைமையும் இதுதான். பல்வேறு காலங்களில் பல்வேறு பகுதிகளில் புழக்கத்தில் இருந்த சுவடிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அத்தியாயங்களின் தொகுப்புதான் புதிய ஏற்பாடு. கி.பி 325-ல் நடந்த நைசியா மாநாட்டில்தான் புதிய ஏற்பட்டைத் தயாரிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

           ரோமப் பேரரசன் கான்ஸ்டன்டைன் அவையில் தலைமை மதகுருவாக இருந்தவர் பிஷப் யூஸிபியஸ் (Eusebius கி.பி 260-339).இவர் கான்ஸ்டன்டைனின் நெருங்கிய நண்பரும் ஆவார்.இவர்தான்  நைசியா மாநாட்டிலும் தலைமை பிஷப்பாக இருந்தவர்.ஏசுவை வரலாற்று நாயகனாக மாற்றி பைபிளுக்கு ஒரு முழுவடிவம் கொடுத்தவர் இவரே.பல எழுத்தாளர்களின் உதவியோடு பைபிளை இவர் தயாரித்தார்.ஒரே மாதிரியான 50 புதிய ஏற்பாட்டுப் பிரதிகள் தயாரிக்கப்பட்டு கான்ஸ்டன்டைனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு ரோம்,ஹிப்போ,கார்த்தேஜ் ஆகிய நகரங்களில் நடைபெற்ற மதகுருமார்களின் கூட்டங்களில் பரிசுத்த வேதாகமத்தில் பல விஷயங்கள் சேர்க்கப்பட்டன. இப்படித்தான் புதிய ஏற்பாடு முழு வடிவம் பெற்றது. ஆனால் யூஸிபியஸ் தயாரித்த மூலப் பிரதிகள் 50-இல் ஒன்றுகூட இன்று இல்லை.யூஸிபியஸின் கால இறுதியிலும் அதன் பின்னரும் திட்டமிட்டு அவை அழிக்கப்பட்டுவிட்டன.மூலப்பிரதிகள் இருந்தால் பிற்காலத்தில் புதிய எற்பாட்டில் சேர்க்கப்பட்டவையும் நீக்கப் பட்டவையும் வெட்டவெளிச்சமாகிவிடுமல்லவா? அதனால்தான் அப்பிரதிகளை அழித்துவிட்டார்கள்.

        இந்த யூஸிபியஸ் என்பவர்தான் முதன் முதலில் வரலற்று மோசடியைச் செய்து அதை நியாயப்படுத்திய பெருமை உடையவர்.உண்மை வரலாறு தமக்கு பாதகமாக இருந்தால் அதை மாற்றி எழுதி சாதகமாக்கிக் கொள்ளலாம் என்பதை இவர்தான் முதன்முதலில் ஆரம்பித்து வைத்தார்.அதனால் வரலாற்றில் பெரும் மோசடிகள் செய்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

     ஏசு மறைந்த பிறகு பாலஸ்தீனப் பகுதியில் வாழ்ந்த யூதர்களைப் பற்றிப் பல வரலாற்று நூல்கள் எழுதியவர் ஜோஸ்பியஸ் (கி.பி37-96) என்ற வரலாற்று அறிஞர்.அவர் எழுதிய நூல்களில் அப்பகுதிகளில் நடந்த சம்பவங்கள் ஒன்றுவிடாமல் பதிவுசெய்யப்பட்டுள்ளன.ஆனால் அந்நூல்களில் ஏசுவைப்பற்றிய செய்திகள் ஒன்றுகூடஇல்லை.ஆனால் அப்புத்தகங்களில் பிற்காலத்தில் வந்த யூஸிபியஸ் ஏசுவைப் பற்றிய செய்திகள் கொண்ட இரண்டு பத்திகளை இடைச்செருகல் செய்துள்ளார் என்பதை வரலாற்று அறிஞர்கள் தெளிவுபடுத்துகின்றனர்.

“Rise and Fall of the Roman Empire” என்ற நூலில் யூஸிபியஸைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டடுள்ளது.

“Eusebius indirectly confesses that he had included stories that would do credit to the glory of Christianity and he had suppressed all that could tend to discredit Christianity”(கிறிஸ்தவத்துக்குப் புகழ்சேர்க்கும் படியான கதைகளைப் புகுத்தியும் கிறிஸ்தவத்துக்கு சிறுமை சேர்க்கும் எல்லா விஷயங்களையும் மறைத்தும்விட்டதாக யூஸிபியஸே மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார்)

            எட்வர்ட் கிப்பன்(Edward Gibbon) என்ற அறிஞரும் இப்படியே கூறுகிறார். ஃபோர்தம் பல்கலைக்கழகத்தின் ப்ரொட்டஸ்டன்ட் அறிஞரான டாக்டர் ராபர்ட் எல் வில்கன்(Dr.Robert L. Wilken) என்பவர் “The Myth of Christian Beginnings,History’s Impact on Belief”என்ற நூலில் “Eusebius wrote a History of Christianity in which there is no real history.Eusebius was the first thoroughly dishonest and unfair historian in ancient times”( யூஸிபியஸ் எழுதிய கிறிஸ்தவ வரலாற்றில் உண்மையான வரலாறு இல்லை.பழங்காலத்தில் முற்றிலும் நேர்மையற்ற, மோசமான வரலாற்று ஆசிரியர் யூஸிபியஸ்தான்)

           இப்படி எத்தனையோபேர் யூஸிபியஸின் நேர்மையற்ற செயலைக் கண்டித்துள்ளனர். இப்படிப்பட்ட மஹா மோசமான பேர்வழியின் ஆலோசனைப்படிதான் பைபிள் முழுவடிவம் பெற்றதென்றால் அந்த பைபிள் எப்படி வரலாற்று ஆவணமாக இருக்க முடியும்?. பின்னாட்களில் வரலாற்றைக் கூட்டியும் குறைத்தும் திரித்தும் தங்களுக்கு சாதமாக எழுதிவைத்த மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்களுக்கெல்லாம் மூல குருவும் முன்னோடியும்  யூஸிபியஸ்தான்.

           அன்றைய பாலஸ்தீனத்தில் வழக்கத்திலிருந்த மொழிகள் அராமிக்( Aramic) ஹீப்ரு(Hebrew) என்ற இரண்டு மொழிகள்தான்.ஏசு அராமிக் மொழியில் பேசியதாகச் சொல்லப் படுகிறது. ஏசு குறித்த சம்பவங்கள் பாலஸ்தீனத்தில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.ஆனால் மத்தியதரைக் கடலுக்கு அப்பால் பாலஸ்தீனத்திருந்து 3000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோம் நகரத்தில்தான் ஏசு குறித்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ள புதிய ஏற்பாடு ஏழுதப்பட்டது.அதுவும் ரோமுக்கு அருகில் உள்ள கிரேக்க நாட்டின் மொழியில்.இன்று காணப்படும் பைபிள் பிரதிகள் எல்லாம் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட பைபிளின் மொழி பெயர்ப்புகள் தான்.கி.பி 1385-.ல் ஹீப்ரு மொழியில் புதிய ஏற்பாடு தயாரிக்கப்படும் வரை பாலஸ்தீன யூதர்களுக்குத் தங்கள் குலத்தவரான ஏசு ஒரு கடவுள் என்றோ அவரைப் பற்றிப் புதிய ஏற்பாடு எழுதபட்டிருப்பது பற்றியோ ஒன்றும் தெரியாது.அதைப்போல கிரேக்க மொழியில் புதிய எற்பாட்டை எழுதியவர்களுக்கு  யூதர்களின்  வரலாறு மற்றும் கலாசாரம் பற்றித் தெரியாது.அதனால்தான் புதிய ஏற்பாட்டில் ஏசு காலத்தில் யூதநாட்டில் இருந்த யூத விடுதலை இயக்கங்கள் பற்றியோ யூத விடுதலைப் போர்கள் பற்றியோ ஜெருசலேம் கோயில் அழிக்கப்பட்டது பற்றியோ எந்தக் குறிப்பும் இடம்பெறவில்லை.மேலும் ஆதியில்? புதிய எற்பாடு ஹீப்ரு மொழியில் இருந்ததாகக் கூறுகிறார்கள் கிறிஸ்தவர்கள்.ஏசு அராமிக் மொழியில் பேசியிருக்கும்போது ஏன் ஆதியில் புதிய எற்பாடு ஹீப்ரு மொழியில் எழுதப்பட்டது? ஏசு உபதேசித்ததாகச் சொல்லப்படும் விஷயங்கள் அவர் பேசிய மொழியில் அல்லவா இருக்கவேண்டும்? மேலும் ஹீப்ரு மொழியில் இருந்த அந்த மூல பிரதியும் காணாமல் போய்விட்டது என்று பைபிளிலேயே கூறப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டின்(King James version) மூன்றாம் பக்கத்தில் இவ்விஷயம் கீழ்க்கண்டவாறு உள்ளது.

“ The New Testament,which has total of 27 books begins with four Gospels,which record the life and teachings of Christ from four different view points.Although the original autograph no longer exists”(இருபத்தேழு புத்தகங்களைக் கொண்ட புதிய ஏற்பாடு நான்கு சுவிசேஷங்களுடன் ஆரம்பிக்கிறது.அவை ஏசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் நான்கு வித்தியாசமான கோணங்களில் பதிவு செய்கின்றன.எனினும் அதன் மூலப் பிரதி காணாமல் போய்விட்டது.)

          ஆகவே அஸ்திவாரமே ஆட்டம் கண்டுள்ள இந்தப் “பரிசுத்த” வேதாகமச் செய்திகளை எப்படி நம்பத்தகுந்த வரலாற்றுச் செய்திகளாகக் கொள்ளமுடியும்? அதனால்தான் வரலாற்று அறிஞர்கள் புதிய எற்பாட்டை ஒரு வரலாற்று ஆவணமாக ஏற்றுக் கொள்வதில்லை.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

21.  பைபிள் கடவுள் சொல்லா?

          ரோமானியப் பேரரசன் கான்ஸ்டன்டைன் கிறிஸ்தவத்தை அரசாங்க மதமாக அங்கீகரித்தபின் ரோமானிய கிறிஸ்தவர்கள் மாற்று மதத்தினரையும் வேறுபட்ட கிறிஸ்தவக் கொள்கையுடையவர்களையும் வேட்டையாடிக் கொன்றனர்.(இதை விரிவாகக் கடந்த பகுதிகளில் பார்த்துள்ளோம்) எனினும் அவ்வப்போது கிறிஸ்தவத்துக்கு எதிரான கருத்துக்கள் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருந்தன.ஏசுவின் கதைகள் நம்பத் தகுந்ததாக இல்லை என்று அப்போதே சிலர் குரலெழுப்பினர். இத்தகையோரின் அறிவு பூர்வமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள் கிறிஸ்தவர்கள்.ஆனால் அவர்களால் அறிவுபூர்வமாக அவர்களது கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியவில்லை.இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் செயின்ட் பால் உருவாக்கிய “விசுவாசம்”என்னும் தத்துவத்தை தங்களின் எதிரிகளுக்கு பதிலாக அளித்தார்கள் கிறிஸ்தவர்கள்.கி.பி.381-ல் கான்ஸ்டான்டி நோபிளில் நடந்த பிஷப்புகளின் சமயக் கலந்தாய்வுக் கூட்டத்தில் கிறிஸ்தவத்துக்கு எதிரான கெள்விகளுக்கு பதில் அளிக்கவும் கிறிஸ்தவத்தை வலிமைப்படுத்தவும் ஒரு விசுவாசப் பிரமாணம் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி தங்களால் பதில் அளிக்கமுடியாத மதம் சார்ந்த கேள்விகளுக்கெல்லாம் “இது எங்கள் விசுவாசம்”(நம்பிக்கை) என்ற பதிலையே அளித்தார்கள். கிறிஸ்தவர்கள். அதாவது பைபிளில் சொல்லப்படும் விஷயங்களைப் பற்றியோ ஏசுவின் வாழ்க்கை வரலாறு குறித்தோ ஒருவன் அறிவு சார்ந்த விமர்சனக் கேள்வியை எழுப்பினால் “நாங்கள் அதை நம்புகிறோம்.அது எங்கள் நம்பிக்கை”என்பதுதான் கிறிஸ்தவர்களின் பதிலாக இருக்கும்.இன்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில்,

“விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கர்த்தரை நம்புகிறேன்.அவரது ஒரே மகனாகிய ஏசுவை நம்புகிறேன்.இவர் தூய ஆவியால் கருவுற்ற கன்னி மேரிக்குப் பிறந்தவர். பிலாத்தின் அதிகாரத்தில் கொடுமைகளை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டார்.மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.விண்ணகம் சென்று தந்தையாகிய கர்த்தரின் வலப்பக்கத்தில் அமர்ந்து இருக்கிறார்.இங்கு வாழ்வோருக்கும் இறந் தோருக்கும்  தீர்ப்பு வழங்க அவர் மீண்டும் வருவார்.தூய ஆவியை நம்புகிறேன்.தூய கத்தோலிக்கத் திருச்சபையை நம்புகிறேன் .பாவ மன்னிப்பை நம்புகிறேன்.சொர்கத்தில் கிடைக்கும் நித்ய வாழ்வை நம்புகிறேன். ஆமென்”என்று விசுவாசப் பிரமாணம் வாசிக்கப்படுவதைக் காணமுடியும்.விசுவாசப் பிரமாணத்தில் சொல்லப்படும் விஷயங்களில் ஒருவன் முழுநம்பிக்கை வைத்தால்தான் அவன் கிறிஸ்தவனாக இருக்கமுடியும்.ஆகவே தங்களுடைய மதத்தை அறிவுபூர்வமான கருத்தியல் ரீதியிலும் வரலாற்று அடிப்படையிலும் நிரூபிக்க முடியாத கிறிஸ்தவர்கள் வேறுவழியின்றி நம்பிக்கை என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட்டார்கள்.ஆனால் இந்த நம்பிக்கையையும் தங்கள் வசதிக்கேற்ப காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் இவர்கள் மாற்றிக்கொள்வார்கள். செயின்ட் பாலின் பரிசுத்த ஆவிக் கொள்கையை வலியுறுத்தினால்  உருவ வழிபாட்டை நம்புகின்ற இந்தியா போன்ற நாடுகளில் கிறிஸ்தவத்தைப் பரப்புவது சிரமம் என்று கருதிய கிறிஸ்தவர்கள் தங்களது புராதனமான சமயக் கொள்கையை காற்றில் பரக்கவிட்டுவிட்டு ஏசுவின் உருவத்தையும் கன்னி மேரியின் உருவத்தையும் வழிபடும் நிலைக்கு வந்துவிட்டனர்.

         பரிசுத்த ஆவியை பிரச்சாரம் செய்வதற்கு பதிலாக ஏசுவின் உருவத்தை முன்னிருத்தும் யுக்தி 1980-ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கிறிஸ்தவ மாநாட்டில் இறுதிசெய்யப்பட்டது.

          மேலும் பிற்காலத்தில் பைபிளில் காணப்படும் சிலவசனங்களை தங்கள் சௌகரியத்துக்காகத் தள்ளிவிட்டார்கள் கிறிஸ்தவர்கள்.

அவற்றுள் சிலவற்றைக் காண்போம்:

1.உங்கள் தலைமுடியை முடியாமலும் தாடியின் ஓரங்களை வெட்டாமலும் இருங்கள்.-லெவி-1927

(இந்த வசனத்தின்படி கிறிஸ்தவர்கள் தலைமுடியைப் பரட்டையாக விரித்துப் போட்டுக்கொண்டு முழுத்தாடியுடன் இருக்க வேண்டும்.ஆனால் கிறிஸ்தவர்கள் யாரும் தற்காலத்தில் அப்படி இல்லை).

2.ஓய்வு நாளில்  (ஞாயிற்றுக்கிழமை) நீங்கள் உங்கள் வீட்டில் தீ மூட்டக் கூடாது(சமைக்கக்கூடாது).-யாத்-35:3

(இன்று எந்தக் கிறிஸ்தவரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை சமைக்காமல் இருக்கிறார்கள்?)

3.ஆண்குழந்தைகள் பிறந்த எட்டாவது நாளில் குறியின் நுனித்தோலை வெட்டிவிடவேண்டும் -ஆதி-17:11-13 (விருத்த சேதனம்- முஸ்லிம்களில் இது சுன்னத்து எனப்படுகிறது.)

(ஆனால் இன்று கிறிஸ்தவர்கள் யாரும் சுன்னத் செய்வதில்லை.)

4.ஆப்ரஹாமின் சந்ததிக்கு மட்டுமே இரட்சிப்பு உண்டு-லூக்கா-19:9

(இந்த வசனத்தின்படி உலகில் உள்ள மற்ற இனத்தவரைக் கிறிஸ்தவக்கடவுள் ரட்சிக்கமாட்டார் என்பது தெரிகிறது.இந்த வசனத்தை மாற்றி இன்று மற்ற இனத்தவரை மதம் மாற்ற உலகிலுள்ள எல்லோருமே ஆப்ரகாமின் சந்ததியர்தான் என்று பொய்வரலாறு எழுத ஆரம்பித்துவிட்டார்கள் கிறிஸ்தவர்கள்.)

5.என் பெயர் யெகோவா-எரோ:16:21

(ஆனால் கிரேக்க பைபிளில் காணப்படாததான ஏசு, கிறிஸ்து,கர்த்தர்,தேவன்,ஆண்டவன் என்ற பெயர்களால் கடவுளை கிறிஸ்தவர்கள் பின்னாட்களில் அழைக்க ஆரம்பித்துவிட்டனர்.)

மேலும் பைபிளின் சில கருத்துக்களை மக்கள் மத்தியில் பரவவிடாமல் மறைத்தும் வருகிறார்கள் கிறிஸ்தவர்கள்.அவற்றுள் சில:

1.திருமணம் செய்யாதிரு-தீமொத்தேயு-4:2,உனக்குக் குழந்தைகள் வேண்டாம்-எரோ-16:2

(கல்யாணம் செய்துகொண்டு குழந்தை,குட்டிகளோடு இருக்கும் கிறிஸ்தவர் ஒருவர் இந்த வசனத்தை வெளியில் சொல்ல முடியுமா?)

2.சித்தப்பன் ,பெரியப்பன் மகளை/மகனை திருமணம் செய்யலாம்-எண் 36:11

(இந்த வசனம் மேலே சொல்லப்பட்ட “திருமணம் செய்யாதிரு”என்ற வசனத்துக்கு முரணாக உள்ளது. மேலும் தவறான உறவுமுறைத் திருமணத்தை இது அங்கீகரிக்கிறது. திருமண முறையில் தூய்மையான உறவுமுறைகளைக் கொண்டுள்ள இந்தியா போன்ற நாடுகளில் மதம் பரப்ப இவ்வசனங்கள் இடையூறாக இருக்கும் எனக்கருதியே இவற்றை மறைக்கிறார்கள்.)

3.என் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக,-எரோ20:14

(இவ்வசனத்தின்படி இவர்கள் கண்டுபிடித்த ஏசுவுன் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் சபிக்கப்பட்ட நாளாகும்.இவ்வசனத்தைச் சொன்னால் இவர்களின் கற்பனைக் கண்டுபிடிப்பான கிறிஸ்துமஸை யார் விரும்பிக் கொண்டாடுவார்கள்.?அதனால்தான் இவ்வசனத்தையும் கண்டுகொள்ளமாட்டார்கள்.)

4. நான் உலகை ஞாயம் தீர்க்க வரவில்லை.-யோவான் 12:47

(இந்த வசனம் கடவுள் ஞாயம் தீர்க்க வரமாட்டார் என்று சொல்கிறது.இவ்வசனம் வெளியில் தெரிந்தால் “ஏசு மீண்டும் வந்து உலக மக்களில் இதுவரை இறந்தவர்களுக்கும் தற்போது இருப்பவர்களுக்கும் இரட்சிப்பைக் கொடுத்து நித்ய சொர்கத்தைக் கொடுப்பார்” என்று இவர்கள் செய்யும் பிரசாரம் பொய் என்று தெரிந்துவிடும்)..

       இப்படிக் கிறிஸ்தவர்கள் தங்களின் சௌகர்யத்துக்காக பைபிளில்  உள்ள வசனங்களைப் பின்பற்றாமல் இருப்பதுடன் அந்நூலில் உள்ள வசனங்களுக்குப் புறம்பாகவும் நடந்து வருகிறார்கள். இப்படியிருக்கும்போது பைபிளை கடவுளின் சொல் என்று அவர்கள் கூறுவது எப்படி ஏற்புடையதாகும்? கடவுளின் சொல்லை மீறலாமோ?

மேலும் பைபிளில் சொல்லப்பட்ட பல வசனங்கள் பொய்த்துப் போய்விட்டன.அவற்றுள் சில:

1.ஆபிரஹாம் சந்ததியினர்(யூதர்கள்) யாருக்கும் அடிமைகளாக இருந்ததில்லை.-யோவான்8:33

(ஆனால் உண்மைநிலை வேறு. பலதலைமுறையாக கர்த்தரின் ஜாதியினரான யூதர்கள் எகிப்து,ரோமானிய,பாபிலோனிய அரசர்களுக்கு அடிமையாகவே இருந்துள்ளனர். அதனால் இந்த வசனம் பொய்த்துப் போய்விட்டது.)

2.இனி ஜலப் பிரளயம் கிடையாது-ஆதி-9:11,9:15

(இந்த 2000 வருடத்திற்குள் எத்தனையோ வெள்ளம், சுனாமி இவற்றால் ஏற்பட்ட பேரழிவுகளை உலகம் கண்டுவிட்டது.)

3.உங்கள் ஆண்களிலும் பெண்களிலும் மலடு இருப்பதில்லை.-உபா-7:14

(கிறிஸ்வர்களில் பலபேர் குழந்தையில்லாமல் இருக்கிறார்கள் என்பது இவ்வசனத்தைப் பொய்யாக்கிவிட்டது.)

        கிறிஸ்தவர்களின் சமய நூலான பைபிள் அவர்களின் நம்பிக்கைப்படி எல்லாம் வல்ல கடவுளின் சொல்லாக இருந்தால் இம்மாதிரியான வசனங்கள் பொய்த்துப் போனதேன்? கடவுளின் சொல் பொய்யாகலாமோ? இக்கேள்விகளுக்கு கிறிஸ்தவர்கள் பதில் சொல்லமாட்டர்கள்.ஏனெனில் அவர்கள் விசுவாசத்தில் விசுவாசம் உள்ளவர்கள்.

          அதனால் பைபிளில் இடம்பெற்றுள்ள முரண்பாடான செய்திகளையும்,சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு பைபிள் கருத்துக்களுக்கு முரணா\ன முறையில் கிறிஸ்தவர்கள் பிரச்சாரம் செய்வதையும்   வைத்துப் பார்க்கின்றபோது பைபிள் கிறிஸ்தவப் பித்தலாட்ட வேலைகளின் ஒரு தொகுப்பு நூல் என்பதுதான் தெளிவாகப் புலனாகிற விஷயம். .-தொடரும்__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

22. போப்பாண்டவர்கள்

   கடவுளின் சொல்லாகக் (Gospel) கிறிஸ்தவர்களால் மதிக்கப்படும் பைபிள் என்னும் நூல் கடந்த 2000 வருடங்களாக உலகில் கட்டவிழ்த்துவிட்ட கொடூரங்கள் எண்ணற்றவை.அவற்றில் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.

          ஐரோப்பாவின் மேற்குப் பகுதியில் உள்ள ஐபீரியன் தீபகற்பத்தில் (Iberian peninsula) ஸ்பெயின் ,போர்ச்சுக்கல்,மற்றும் பிரான்ஸ் நாட்டின் வடபகுதிகள் அடங்கியுள்ளன.இப்பகுதிகள் முதல் நூற்றாண்டுவரை ரோமானிய ஆட்சியின்கீழ் இருந்தன.கி.பி 4-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்த ஐபீரியன் தீபகற்பம் விசிகோத்(Visigoth) என்ற ஜெர்மானிய நாடோடிக் கும்பலின் ஆட்சியின் கீழ்வந்தது.இந்தக் கும்பலும் கிறிஸ்தவர்கள் தான்.இவர்களின் ஆட்சிகாலத்தில் ஆதியில் இறைவன் கொடுத்த சாபத்தைக் காரணம் காட்டிப் பெண்கள் கடுமையாக அடக்கி ஒடுக்கப்பட்டனர்.விவசாய நிலங்கள் அனைத்தும் தேவாலயங்கள் மற்றும் பிரபுக்களின் பொறுப்பில் இருந்தன.அந்த நிலங்களைக் குத்தகைக்கு எடுத்துப் பயிரிடும் விவசாயிகளுக்குக் கடுமையான நிலவரி விதிக்கப்பட்டது.மேலும் விவசாயிகள் அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர்.தேவாலயத் தலைவர்கள் (மதகுருமார்கள்) எந்த நேரத்திலும் யார் வீட்டுக்குள்ளும் நுழைந்து அங்குள்ள பெண்களை அனுபவிக்கச் சலுகை வழங்கப் பட்டிருந்தது.தேவாலய குருமார்கள் தங்கள் வீட்டுக்கு வந்து இன்பம் துய்ப்பதைத் தங்களது பெரும் பாக்யமாகக் கருதினார்கள் அன்றைய மக்கள்.

          இந்த நேரத்தில்தான் அரேபியாவில் இஸ்லாம் தோன்றி கிறிஸ்தவத்துக்கு எதிராக வளர்ந்தது.உலகம் முழுவதும் அல்லாவுக்குச் சொந்தம். உலகம் முழுவதையும் அல்லாவின் ஆட்சியின் கீழ்க்கொண்டுவரவேண்டும் என்ற வெறியுடன் அரேபியர்கள் செயல்பட்ட காலம் அது.கிறிஸ்தவ நாடுகளாக விளங்கிய ஈரான்,ஈராக்,பாலஸ்தீனம்,எகிப்து ஆகிய நாடுகள் இஸ்லாமின் பக்கம் சாய்ந்தன.இஸ்லாமிய தளபதி தாரிக் என்பவன் தலைமையில் வந்த ஒரு இஸ்லாமியப் படை ஐபீரியன் தீபகற்பத்தையும் வசமாக்கிக் கொண்டது.தாங்கள் வென்ற ஐபீரியன் தீபகற்பத்தை “அல் அண்டாலஸ்’(Al Andalus)என்று முஸ்லிம்கள்  அழைத்தனர்.அதுவரை விசிகோத் என்னும் கிறிஸ்தவர்களிடம் அடிமைப் பட்டுக்கிடந்த அப்பகுதி மக்கள் இஸ்லாமியர்களால் விடுதலை அடைந்ததாக எண்ணி மகிழ்ந்தனர்.( அடிமைப்பட்டு நொந்துபோயிருந்த அந்த மக்களுக்கு அப்போது புதிதாக வந்த இஸ்லாம் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.அவ்வளவுதான். மற்றபடி கட்டாய மதமாற்றம் செய்வதிலும் மற்ற மதத்தினர்மீது கொடூரங்களை ஏவி விடுவதிலும் கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமியர் ஒன்றும் சளைத்தவர்கள் அல்லர்.இஸ்லாமியரும் மத ஸஹிப்புத் தன்மையற்றவர்களாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை வரலாற்றில் நாம் காணமுடியும். கிறிஸ்தவர்களின் கொள்கைக்கும் நடைமுறைக்கும் வேறுபாடு இருப்பதுபோல், இஸ்லாமியரின் சமத்துவம் சஹோரத்துவம் என்பதெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தான்.)அப்பகுதியிலிருந்த பலர் தாங்களாகவே இஸ்லாமுக்கு மதம் மாறினர். இஸ்லாத்துக்கு மாறாதவர்கள் மீது ஜிஜியா என்னும் வரி விதிக்கப்பட்டது. காமக்களியாட்டத்திலும் செல்வச் செழிப்பிலும் மிதந்து கொண்டிருந்த தேவாலய மதகுருமார்களின் சலுகைகள் இஸ்லாமிய அரசால் பறிக்கப்பட்டுவிட்டன. இதனால் அங்கிருந்த கிறிஸ்தவ மதகுருமார்கள் செய்வதறியாது தவித்தனர்.

          731 ஆண்டுகள் இஸ்லாமியர்கள் ஐபீரியப்பகுதியை ஆண்டனர். 1492-ல்  நாட்டின் வடபகுதியில் உள்ள ஒரு மலையடி வாரத்தில் ஒளிந்து வாழ்ந்துகொண்டிருந்த ஸ்பெயினின் முந்தைய அரச மரபைச்சேர்ந்த ஃபெர்டினன்ட்(Ferdinand) என்ற ஒருவன் அப்பகுதியிலிருந்த கத்தோலிக்கப் பாதிரிமார்களை ஒன்றிணைத்து இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு சமயப் படையை உருவாக்கினான்.இவனது படைக்கும் இஸ்லாமியப் படைக்கும் கர்னாடா என்ற இடத்தில் கொடூரமான போர் நடந்தது.போரில் இஸ்லாமியப்படை தோல்வியடைந்தது.பூலோக சொர்கம் என்று அழைக்கப்பட ஸ்பெயின் ,போர்ச்சுகல்,பிரான்ஸ் ஆகிய நாடுகள் இஸ்லாமியரிடமிருந்து கைவிட்டுப்போயின. போரில் வெற்றிகண்ட கிறிஸ்தவர்கள் அங்கு வாழும் இஸ்லாம்யருக்கு எதிரான கொடுஞ்செயல்களில் ஈடுபடத்தொடங்கினர்.அப்போது ஐபீரியப் பகுதியின் கத்தோலிக்க கார்டினலாக இருந்த சிஸ்நிரோல்ஸ் (Cisnerols)  என்ற பாதிரியார். மதம் மாறிய இஸ்லாமியர்களைக் கொடுமைக் குள்ளாக்கினார்.அங்கிருந்த இஸ்லாமியர்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.மதம் மாற மறுத்தவர்கள் கொல்லப்பட்டனர்.அரேபிய சமய நூல்களும்,கல்விநிலையங்களும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. அரேபிய மொழி தடைசெய்யப்பட்டது.இஸ்லாம் மதமும் தடை செய்யப்பட்டது.இஸ்லாமிய நடை,உடை, பழக்க வழக்கங்கள் அனைத்தும் சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டன.கர்னாடாவின் அருகில் இருந்த  கலிரா நகரம் முழுவதும் அழிக்கப்பட்டு அங்கிருந்த இஸ்லாமியர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.ஐபீரியப் பகுதியில் 700 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சிக் கொண்டிருந்த இஸ்லாம் அப்பகுதியில் சுவடுகூட இல்லாமல் அகற்றப்பட்டது.இஸ்லாமியரின் ஐரோப்பிய பூவுலக சொர்கலோகக் கனவும் சிதைந்துபோனது.

          கிறிஸ்தவத்தில் போப்பாண்டவர் பதவி என்பது ஒரு அதிகாரம் மிகுந்த பதவி. போப்பாண்டவரின் கத்தோலிக்கக் கிறிஸ்தவ ஆட்சி கடந்த 2000 வருடங்களாக இத்தாலியில் உள்ள வாட்டிகன் நகரிலிருந்து நடைபெற்றுவருகிறது.உலகெங்கும் உள்ள கத்தோலிகக் கிறிஸ்தவ மதத்தினருக்கு வாட்டிகன்தான்  தலைமைப் பீடம். போப்பாண்டவர் என்பவர் ஏசுவுக்குப் பிரதிநிதியாகவும் பைபிள் விஷயங்களை வியாக்யானம் செய்யும் ஏக பிரதிநிதியாகவும் விளக்குகிறார்.ஏசுவின் சீடர்களில் ஒருவரான சைமன் பீட்டர்((கி.பி. 33-67ஆட்சிக்காலம்)தான் முதல் போப் ஆவார். ஏசுவிடமிருந்து சொர்கலோகச் சாவியை நேரடியாகப் பெற்றவர் என்ற பெருமைக்  குரியவர் இவர்.(மத்தேயு 16:16) இவர் சிறந்த நன்னடத்தை உடையவர் என்றும் ஏசுவிடமிருந்து தான் பெற்ற உபதேசங்களின் படி மக்களை வழிநடத்தினார் என்றும் சொல்லப்படுகிறது.இவர் காலத்தில் ஏற்பட்ட பெரும் கலவரம் காரணமாக இவர் தலைகீழாகச் சிலுவையில் அடிக்கப்பட்டு இறந்ததாகச் சொல்லப்படுகிறது. இவருக்குப் பிறகுவந்த போப்பாண்டவர்களில் பெரும்பான்மையோர்  பீட்டர் ஏற்படுத்தியிருந்த நேறிமுறைகளைக் காற்றில் பறக்க விட்டுவிட்டனர்.பல போப் பாண்டவர்கள் கிறிஸ்தவ நெறிகளிலேயே நம்பிக்கை யற்றவர் களாகவும் பில்லி சூனியங்களை நம்புபவர்களாகவும் காமக்களி யாட்டங்களில் பற்றுள்ளவர்களாகவும் வெறிபிடித்த கொலைகாரர் களாகவும் இருந்தனர்.மேலும் அவர்கள் இயற்கை மரணமடையாமல் ஏதாவதொரு முறையில் கொலைசெய்யப்பட்டே இறந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

             கிளிமெண்ட் VI  (Clement VI)என்பவர் ஒரு போப்.1342-லிருந்து 1352-வரை இவர் போப்பாண்டவராகப் பதவிவகித்தார். இவர் ஆடம்பர வாழ்க்கையிலும் அழகான பெண்களுடன் சல்லாபிப்பதிலும் ஆர்வம் உள்ளவர்.இவரது மாளிகையை ஏராளமான அழகிகள் அலங்கரித்தனர்.இவரது காம வெறியாட்டத்தைப் பற்றி பெட்ரார்க்(Petrarch) என்ற அக்கால எழுத்தாளர்,

“போப் மாளிகையில் நடைபெற்ற காமக் களியாட்டம், கற்பழிப்பு, பெண்கடத்தல் இவற்றைகூட நான் வர்ணிக்க விரும்ப வில்லை. எத்தனை பேர்களின் மனைவிமார்கள் திருடப்பட்டு போப் மாளிகைக்குக் கொண்டுவரப்பட்டனர் அல்லது எத்தனை இளம் பெண்கள் போப்பிற்கு ஆசை நாயகிகளாக ஆக்கப்பட்டனர் என்பதைக் கூடச்சொல்ல விரும்ப வில்லை.பாதிப்படைந்த கணவன்மார்களும் பெற்றோரும் எவ்விதமாக வாய் அடைக்கப்பட்டனர் என்பதை நினைக்கும்போதுதான் பயம் ஏற்படுகிறது.அதைத் தவிரப்  பல குடும்பத் தலைவர்கள் தங்கள் வீட்டுப் பெண்களைச் சில தங்கக் காசுகளுக்காகப் போப் மாளிகைக்கு விற்றார்கள் என்பதையும் பிறகு அந்தப் பெண்கள் என்ன ஆனார்கள் என்பதையும் நினைக்கும் போது பெரும் வேதனையாக உள்ளது”

என்று எழுதியிருக்கிறார். போப்பாண்டவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகார பலத்தைக்கொண்டு எப்படியெல்லாம் ஆட்டம் போட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

       இந்தக் கிளமென்ட் காலத்தில்,1348-ல் நாட்டில் ப்ளேக் நோய் பரவி பெருவாரியான மக்கள் இறந்தனர்.இதற்குக் காரணம் யூதர்களின் பாவச்செயல்தான் என்று தீர்மானித்து அங்கு வாழ்ந்த ஒன்றுமறியாத யூதர்கள் அனைவரும் கொத்துக் கொத்தாகக் கொலைசெய்யப்பட்டனர்.

      மக்களை நல்வழிப்படுத்த நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் போப்பாண்டவர்கள் பைபிள் வசனங்களையே மதியாமல் இப்படிக் காம வெறியர்களாகவும் கொலைகாரர்களாகவும் இருந்தார்கள் என்பது வரலாற்றில் கல்வெட்டாக உள்ளது..__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

23. சிலுவைப் போர்

   அக்காலத்தில் ஐரோப்பியர்களிடையே கிறிஸ்தவம் முழுமையாக ஊடுருவி இருந்தது. மக்கள் அச்சமயத்தை நம்பினர்.மத நம்பிக்கை பாவங்களிலிருந்தும் நரக வேதனையிலிருந்தும் விடுவிக்கும் என்று நம்பினர்.எளிய வாழ்க்கை, நேர்மை இவற்றைக் கடைப்பிடித்தனர்.

அதேநேரத்தில் அதிகாரபலம் மிகுந்த போப்பாண்டவர்களும் பிஷப்புகளும் புனித பீட்டர் காட்டிய நெறிமுறைகளை மீறி அளவற்ற சுகபோக வாழ்க்கையில் மிதந்தனர்.முகத்தை மழித்துக்கொண்டதுடன் திருமணம் செய்துகொண்டனர்.பணம் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தனர்.ஆடம்பர வாழ்க்கையிலும் காமக்களியாட்டத்திலும் ஈடுபட்டிருந்த அவர்கள் உள்நாட்டுப் போர்களிலும் கலந்து கொண்டனர்.தங்களது அதிகாரம் கடவுளால் நேரடியாகத் தங்களுக்கு வழங்கப்பட்டது என்றும் ஐரோப்பிய மக்கள் அனைவரையும் சொர்கத்துக்கு அழைத்துச் செல்லுதல் தங்களது பொறுப்பு என்றும் போப்பாண்டவர்கள் கூறிக்கொண்டனர்.எனினும் அவர்களது அதிகாரம் ரோம் நகருக்கு அப்பால் செல்லுபடியாகவில்லை.இங்கிலாந்து ,ஸ்பெயின், பிரான்ஸ்,ஜெர்மனி,வடக்கு இத்தாலி ஆகிய பகுதிகளில் இருந்த பிஷப்புகள் போப்பாண்டவரின் அதிகாரத்தை மீறி சுதந்திரமாகச் செயல்பட்டனர்.தாங்களே இறைவனின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டனர். அவ்வமயம் அந்த நாடுகளை ஆண்டுவந்த அரசர்களும் தங்களை இறைவனின் பிரதிநிதிகளாகக் கூறிக் கொண்டனர். போப்பாண்டவர்களுக்கு பதிலாக அரசர்களே பிஷப்புகளை நியமனம் செய்தனர். இதனால் பிஷப்புகளுக்கும் அரசர்களுக்கும் இடையில் அதிகாரப் போட்டி ஏற்பட்டது. போப் கிரிகரி VII  தனக்கு அடிபணியாத ஜெர்மானிய அரசன் ஹென்றி IV –ஐ கிறிஸ்தவ மதத்திலிருந்து நீக்கினார். அதனால் வெகுண்ட அரசன் அவரை கைதுசெய்து நாடுகடத்தினான்.அவர் அவமானத்தால் மனமுடைந்து இறந்துபோனார்.பிறகு அந்த அரசன் தனக்கு வேண்டிய கிளமென்ட் III என்பவரை போப்பாக நியமித்தான். ஆனால் பதவிப் போட்டி இரண்டு ஆண்டுகள்வரை நீடித்தது. முடிவாக போப் அர்பன் II (Urban II) என்பவர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். அர்பன் சாமர்த்யமாகத் தனக்கு முன்னிருந்த கிளமென்ட்டிடமிருந்து முழு அரச அதிகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.அத்துடன் தனது அதிகாரத்தை ஐரோப்பா முழுவதிலும் பரவச் செய்ய எண்ணினார்.அதற்கான சந்தர்பத்தை எதிர்பார்த்திருந்த வேளையில் கான்ஸ்ன்டாண்டிநோபிளை இஸ்லாமியர்கள் தாக்கவிருப்பதாகவும் அந்நகரைக் காப்பற்ற ராணுவ உதவி வேண்டுமென்றும் கிழக்கு ரோமானிய அரசன் போப்பிடம் தூது அனுப்பினான்.அதை நல்ல வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்ட போப் கிறிஸ்தவப் புனிதத் தலங்களை இஸ்லாமியரிடமிருந்து காப்பாற்ற ஐரோப்பா முழுவதிலும் உள்ள மக்கள்,பிஷப்புகள்.அரசர்கள் ஆகியோரின் ஆதரவைத் திரட்டினார்.போப்புக்குப் போதுமான ஆதரவு கிடைத்தாலும் அன்பைப் போதிக்கும் கிறிஸ்தவத்திற்காகப் போப் தலைமையில் போரில் உயிர்களைக் கொல்வது ஞாயமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது.அப்போது பைபிளில் சொல்லப்பட்டுள்ள பல யுத்தங்களை எடுத்துக்காட்டி எப்படியோ போருக்கான ஞாயத்தைக் எடுத்துரைத்தார் போப்.மதத்திற்காகப் போர் செய்வது புனிதப்படுத்தப்பட்ட கொடுஞ்செயல் (Sanctified Violence) என்று பெயர் சூட்டப்பட்டது.இந்தப்போர் கிறிஸ்துவின் யுத்தம்( Warfare of Christ) என்றே அழைக்கப்பட்டது போப்பாண்டவரின் படைகளுக்கு ‘ஏசுவின் சேனை’ என்று பெயரிடப்பட்டது.இதுவே ‘சிலுவைப்போர்’(Crusade) எனப்பட்டது.இப்படிப்பட்ட போர்கள் பதினான்குக்கும் மேற்பட்டவை. அவற்றில் ஒன்பது பிரபலமானவை.11 முதல்13 நூற்றாண்டுவரை வெவ்வேறு காரணங்களுக்காக இப்போர்கள் நடைபெற்றன.இந்த யுத்தங்கள் அனைத்தும் பாலஸ்தீனத்திலுள்ள ஜெருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைக் குறிவைத்தே நடத்தப்பட்டன. ஜெருசலேம் நகரம் யூதர்கள்,கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் மூவருக்குமே புனித நகரமாகக் கருதப்படுகிறது.

          யூதர்கள் வழிபடுவதற்காக முதன் முதலில் கர்த்தருக்கான கோயிலை மன்னன் சாலமன்தான் ஜெருசலேம் நகரில் கட்டினான்.முன்பு நடந்த பல போர்களில் அக்கோயில் பலதடவை அழிக்கப்பட்டுத் திரும்பத் திரும்பக் கட்டப்பட்டது. அக்கோயிலில் ஒரு சுவர் மட்டும் இடிபடாமல் உள்ளது.அந்தச் சுவரையே யூதர்கள் வழிபட்டு வருகிறார்கள்.ஏசு சிலுவையில் அறையப்பட்டு இறந்து மீண்டும் உயிர்பெற்றெழுந்தது இவ்விடத்தில்தான் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.அதனால் கிறிஸ்தவர்களுக்கு இது புனித இடமாக உள்ளது.இந்த நகரில்தான் முகமது நபி சல் தனது ஆயுள் முடிவின்போது பூத உடலோடு விண்ணுலகிற்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். அதனால் இந்நகரம் முஸ்லிம்களுக்கும் புனித இடமாக உள்ளது.இப்படி மூன்று பகுதிகளாக இந்த நகரம் பிளவுண்டு இருப்பதுடன் கடந்த 2000 வருடங்களில் பல பேரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது.

            போப் அர்பனால் துவக்கி வைக்கப்பட்ட முதலாம் சிலுவைப் போரின்போது போப் நிகழ்த்திய  ‘போர்ப் பிரகடன’ உரை உலகில் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.போரில் இறக்கும் கிறிஸ்தவர்கள் நேரடியாக சொர்கத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு நித்ய ஜீவனை அனுபவிப்பார்கள் என்றும்,போரில் கலந்துகொள்ளும் விவசாயிகள் யூதர்களிடம் கடன் வாங்கியிருந்தால் அதைத் திருப்பிக் கொடுக்கத் தேவையில்லை என்றும் போருக்குச் செல்வோரின் வீடுகளும் நிலங்களும் அவர்கள் போரிலிருந்து திரும்பி வரும் வரை தேவாலய நிர்வாகிகளால் பாதுகாக்கப்படும் எனவும் அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டது.பெரும் திரளான மக்கள் இப்போரில் கலந்துகொண்டனர்.ஜெருசலேமில் இருந்த யூதர்கள் இஸ்லாமியருடன் சேர்ந்துகொண்டு ஏசுவின் சேனையை எதிர்த்தனர்.ஜெருசலேம் நகரம் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. போரில் ஏசுவின் படைவென்றது. ஜெருசலேம் கிறிஸ்தவர்களின் வசமானது.இது 11-ஆம் நூற்றாண்டில் நடந்தது. இந்த போர்தான் முதல் சிலுவைப் போர். இப்படி கி.பி 8 ஆம் நூற்றாண்டு முதல் 15-ஆம் நூற்றண்டுவரை இந்தச் சிலுவைப் போர்கள் நடந்தன. இப்போர்களில் நடந்த கொடூரங்கள் சொல்லொணாதவை. ஜெருசலேம் நகரிலும் மற்ற நகரங்களிலும் வசித்த இஸ்லாமியர்களும் யூதர்களும் கொல்லப்பட்டு அவர்களது வசிப்பிடங்கள் கிறிஸ்தவர்களால் ஆக்ரமிக்கப்பட்டன.ஜெருசலேம் நகரத்தில் நடந்த கொடூரத்தை ஒரு கிறிஸ்தவர் கீழ்க்கண்டவாறு வர்ணிக்கிறார்.

“வெட்டப்பட்ட மனிதத் தலைகளும் கைகளும் கால்களும் ஜெருசலேம் நகரெங்கும் குவியல் குவியலாகக் காணப்பட்டன. அங்கு நடந்து செல்லவேண்டுமானால் அவற்றின் மீது மிதித்துத்தான் செல்லவேண்டும்.இவற்றையெல்லாம்விட யூதர்களின் ஆலய வளாகத்தில் நடந்தவைகள் மிகக் கொடூரமாவை.அதை விவரித்தால் உங்கள் உடல் நடுங்கும்.,உங்களுக்கு அது கற்பனையாகவும் தோன்றலாம்.அதனால் சுருங்கச்சொல்கிறேன்.அக்கோயில் வளாகத்தில் ஒருவன் நடப்பதாக இருந்தால் அவனது முழங்கால் வரை ரத்தம் நிரம்பியிருக்கும்”

       ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று அன்பை போதித்த ஏசுநாதரின் கொள்கைகளை மக்களிடம் போதிக்க வேண்டிய போப்பாண்டவர்கள் மக்களிடம் கொலை வெறியைத் தூண்டி ஐரோப்பிய நிலத்தை மனித ரத்தத்தில் மூழ்கடித்தனர்..

      இந்த யுத்தங்களின் காரணமாக எதிர்பார்த்தபடியே போப்பாண்டவரின் அதிகாரம் ஐரோப்பிய நிலப்பகுதி முழுவதையும் சென்றடைந்தது.இதனால் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் பெரும் பகைமை ஏற்பட்டது. அது இன்றுவரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

24. மார்டின் லூதர்

         11-ஆம் நூற்றாண்டிலேயே கிறிஸ்தவத்துக்குள் பிளவுகள் தோன்ற ஆரம்பித்தன. எனினும் அந்தப் பிளவு பெரிய அளவில் உருப்பெற்றது 16-ஆம் நூற்றாண்டில்தான்.16-ஆம் நூற்றாண்டில் மேற்கத்திய நாடுகளில் பணப்புழக்கம் வழக்கத்திற்கு வந்துவிட்டதால் சொத்துப்பத்துகள் வைத்திருப்பவரைவிட பணம்வைத்திருப்போரே செல்வந்தர்கள் என்ற நிலை. வந்துவிட்டது.அப்போதைய போப்பாண்டவர் லியோ X வாட்டிகன் நகரில் புனித பீட்டரின் நினைவாக ஒரு தேவாலயம் எழுப்ப முயற்சித்தார். அதற்குப் பெரும் பணம் தேவைப்பட்டது.அந்தப் பணத்தைத் திரட்ட போப் ஒரு காரியம் செய்தார். “பாவ மன்னிப்புப் பத்திரங்கள்” (Indulgence document)என்ற பத்திரங்களைத் தயார்செய்து அதை மக்களிடம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தார். அந்தப் பத்திரங்களைப் பணம் கொடுத்துப் பெற்றுக்கொள்வோரின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் அவர்களுக்கு சொர்கவாழ்வு நிச்சயம் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.எனினும் மக்களிடம் ஒரு சந்தேகம் எழுந்தது.இதுவரை செய்த பாவங்கள் பத்திரம் வாங்குவதன் மூலம் நீங்கினாலும் பத்திரம் வாங்கியபின் செய்யும் பாவங்களுக்குப் பரிகாரம் என்ன என்ற கேள்வி மக்கள் மனதில் உதித்தது. அதற்குக் கத்தோலிக்கத் திருச்சபை இதுவரை செய்த பாவம், இனிமேல் செய்யும் பாவம் இரண்டுமே பத்திரம் வாங்குவதால் நீங்கிவிடும் என்று விளக்கமளித்தது. இவ்விளக்கத்தைக் கேட்டபின் ஏராளமான மக்கள் பணம் கொடுத்து அப்பத்திரங்களை வாங்கினர்.அதனால் போப்பாண்டவரிடம் பெரிய அளவில் நிதி சேர்ந்தது.போப்பாண்டவரின் இச்செயலைப் பலநாட்டு அரசர்கள் விரும்பவில்லை.குறிப்பாக ஜெர்மனி நாட்டின் கத்தோலிக்க மத குருவான மார்டின் லூதர் போப்பாண்டவரின் இச்செயலைக் கடுமையாக எதிர்த்தார்.போப்பாண்டவர் பாவ மன்னிப்புப் பத்திரம் மூலம் பணம் திரட்டுவது மக்களை ஏமாற்றவே என்றும் அவரது செயலுக்கு பைபிளில் ஆதாரமில்லை என்றும் கடுமையாகச் சாடினார்.மேலும் போப்பாண்டவரைக் கடுமையாக விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தார் லூதர்.இதேபோல அயர்லாந்தில் ஜான் கல்வின்(John Calvin) என்பவரும் பிரிட்டனில் ஜான் நக்ஸ் (John Knox) என்பவரும் கத்தோலிக்க சமயத்திலிருந்து விலகி தனித்தன்மையான கிறிஸ்தவ இயக்கங்களைத் தொடங்கினர்.இதன் காரணமாக 1534-ல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து என்னும் புராட்டஸ்டண்ட் சபை தோன்றியது.இந்தப் புராட்டாஸ்டண்ட் பிரிவுக்கு லூத்தரே கர்த்தா.

         இந்தக் கத்தோலிக்க,புராட்டஸ்டண்ட் பிரிவுகளுக்குள் சமயக் கருத்துக்களில் பல வேறுபாடுகள் உண்டு.பொதுவாகப் போப் பாண்டவரின் முக்யத்வத்தையும் அதிகாரத்தையும் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவம் ஏற்கவில்லை.போப்பாண்டவரைக் கடவுளின் பிரதிநிதியாகப் பார்ப்பதை மார்டின் லூதர் ஏற்றுக் கொள்ளவில்லை.

          லூதர் ஆரம்பத்தில் யூதர்கள்மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார்,ஏசுவும் அவரது சீடர்களும்  யூதகுலத்தில் பிறந்தவர்கள்  என்பதுதான்  யூதர்கள்மீது அவர் வைத்திருந்த மதிப்பிற்குக் காரணம். ஏசு தங்கள் குலத்தில் பிறந்தவர் என்று தெரிந்திருந்தும் யூதர்கள் ஏசுவையும் பரிசுத்த வேதாகமத்தையும் எற்க மறுப்பது அவருக்கு வியப்பை அளித்தது. ஜெர்மனியில் உள்ள யூதர்களைக் கிறிஸ்தவத்துக்கு மாற்ற அவர் முயற்சித்தார்.ஆனால் முதலில் வாக்குக் கொடுத்திருந்த யூதர்கள் பின்னர் வாக்குத் தவறி மதம் மாற மறுத்துவிட்டனர்.இதனால் கடுப்புற்ற லூதர் அப்போதுமுதல் யூதர்கள் மீது தன் வெறுப்பைக் காட்ட ஆரம்பித்தார்.யூதர்களையும் அவர்களது வழிபாட்டு முறைகளையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த லூதர் அவர்களைப் பழிவாங்கவும் எண்ணினார்.அதனால் யூதர்களும் அவர்களது பொய்களும்(Jews and Their Lies) என்ற ஒரு நூலை எழுதினார்.அந்த நூலில்,

        “யூதர்கள் ஒழுக்கமில்லாத சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது பூர்வீகமும் சுன்னத் செய்தலும்,சட்ட விதிகளும் உணவுப் பழக்க வழக்கங்களும் குப்பைக்குச் சமம்.அவை சாத்தானின் மலத்துக்கு இணையானவை. மனிதக் கழிவுகளை நோக்கிப் பன்றிகள் ஓடுவதுபோல் சாத்தானின் கழிவை  நோக்கி யூதர்கள் ஓடுகின்றனர்.அவர்களது வழிபாட்டுத் தலமும் கழைவறை போன்றது.” என்று எழுதியுள்ளார்.

          யூதர்கள் மீது போர் தொடுக்க ஏழு ஆலோசனைகளைk கிறிஸ்தவர்களுக்கு இந்நூலில் வழங்கியுள்ளார் லூதர்.அவை,

1.யூத மதக் கோயில்களை அழிக்கவேண்டும். அதன் இடிபாடுகளைக் கண்ணுக்குத் தெரியாவண்ணம் எறியவேண்டும்.

2.யூதர்களின் வீடுகளை எரித்து அழித்துவிட்டு அவர்களை ஊருக்கு வெளியே உள்ள விளைநிலங்களில் வசிக்கக் கட்டாயப் படுத்தவேண்டும்.

3.யூதர்களின் புனித நூல்களை அழிக்க வேண்டும்.

4.யூத குருமார்களின் பிரசங்கங்களைத் தடை செய்யவேண்டும் மீறினால் அவர்களைக் கொலை செய்யவேண்டும்.

5.சாலைகளிலும் தெருக்களிலும் யூதர்களை நடமாட விடக்கூடாது.

6.அவர்களது நிலபுலன்களையும் தங்க ஆபரணங்களையும் பிடுங்க வேண்டும்.

7.யூதர்களை அடிமைகளாக்கி விவசாயக் கூலிகளாக்க வேண்டும்.

என்பனவாகும்.

         யூதர்களின் மீது மார்டின் லூதர் கொண்டிருந்த இப்படிப்பட்ட கடுமையான வன்மம்தான் 400 வருடங்களுக்குப் பிறகு ஹிட்லரின் யூத வெறுப்புக்கு அடிகோலியது.லூதரின் இந்த நூலை வழிகாட்டியாகக் கொண்டே ஹிட்லர் யூதர்கள்மீது கொடூரத் தாக்குதல்களை நடத்தினார்.

         கத்தோலிக்க,புராட்டஸ்டண்ட் பிரிவுகளுக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு பெரும் பகையாக மாறி 1618 முதல் 1648 வரை முப்பதாண்டுகாலப் பெரும் போராக உருவெடுத்தது.இந்தக் கொடிய பெரும் போர் பொஹிமியன் (Bohemian War) போர் என்று அழைக்கப்பட்டது.கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களை எதிர்த்து புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் நடத்திய இந்தப்போர் மத்திய ஐரோப்பாவில் பெரும் அழிவை ஏற்படுத்தியது.இப்போரின் விளைவாக எண்பது லக்ஷம் மக்கள் செத்து மடிந்தனர். பஞ்சம் பட்டினி ,பசி அழுகுரல் இவை நாடெங்கிலும் பரவியது.நாட்டில் கொடிய தொற்று நோய்கள் பரவின.

            மார்டின் லூதரின் காலத்தைக் கிறிஸ்தவ சமய மறுமலர்ச்சிக் காலம் என்று சிலர் வர்ணிக்கின்றனர். அது தவறு, லூதர் ஏற்படுத்திய மறுமலர்ச்சி ஏசு போதித்ததாகச் சொல்லப்படும் அன்பையும் கருணையையும் வலியுறுத்தவில்லை. மாறாக த்வேஷத்தையே வளர்த்து பல்லாயிரக்கணக்கான மக்களின் அழிவுக்குத்தான் வித்திட்டது.   __________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

25. அடிமை வியாபார முறை

       கிறிஸ்தவர்களிடையே நிலவிவந்த/நிலவிவரும் இனவெறுப்பு, நிறவெறி இவற்றுக்கும் பைபிளே அடிப்படை.பைபிள்-ஆதியாகமம்-9:21-29-ல் ஒரு கதை சொல்லப்படுகிறது.பெருவெள்ளத்தில் இறைவனால் காப்பற்றப்பட்ட நோவாவிற்கு மூன்று மகன்கள் இருந்தனர்.அவர்கள் ஷெம்(Shem),ஹாம்(Ham),ஜாப்பேத்(Japheth) என்பவர்கள் ஆவர்.இம்மூன்று பேர்களின் சந்ததியினரே உலகில் பல்கிப் பெருகினர்.ஒருநாள் நோவா அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஆடை அவிழ்ந்தது கூடத் தெரியாமல் நிதானமின்றி நிர்வாணமாகப் படுத்திருந்தான். அதனைக் கண்டு அவனது மகனான ஹாமும் பேரனான கானானும்(Canaan) சிரித்தனர்.அவனது மற்ற இரு மகன்களான ஷெமும் ஜாப்பேத்தும் நிர்வாணமாகக் கிடந்த தந்தையை ஆடையால் மூடினர்.சிறிது நேரத்தில் போதை தெளிந்து எழுந்த நோவா தனது நிர்வாணத்தைக் கண்டு நகைத்த ஹாமுக்கும் கானானுக்கும் சாபங்களைக் கொடுத்தான்.“உன்னுடைய வம்சத்தவர்கள் கறுப்பு நிறமுடையவர்களாகவும் முட்டாள்களாகவும் இருப்பார்கள்.மற்ற இரண்டு இனத்தவருக்கும்( ஷெம்,ஜாப்பேத்)  அவர்களுடைய சந்ததியினருக்கும் உன் சந்ததிகள் அடிமைகளாக இருப்பார்கள்” என்பதே அந்த சாபம்.

        பைபிளில் உள்ள இந்தக் கதையே மனித சமுதாயத்தில் உடல் நிறத்தைக் கொண்டு மனிதர்களை உயர்ந்தவர்,தாழ்ந்தவர் என்று பிரித்துப் பார்க்கும் தன்மையைக் கிறிஸ்தவர்களிடம் ஏற்படுத்தியது. ஜாபேத்தின் வம்சாவளியினர்தான் உயர்ந்த இனம் (வெள்ளைநிற முடையவர்கள்,வெள்ளைக்காரர்கள்) என்றும் அவர்கள் ஐரோப்பா மற்றும் கிரேக்க நாட்டில் வசிப்பவர்கள் என்றும் வகைப்படுத்தினார்கள். பின்னாட்களில் மேற்கத்திய அறிஞர்களால் ஆரிய பிராமணர்களும் இவ்வினத்தில் சேர்க்கப்பட்டனர். ஷெமின் வம்சாவளியினர் (மஞ்சள் நிறம் கொண்டவர்கள்) மனித குலத்தில் நடுத்தர வர்கத்தினர் ஆவர்.ஈரான் நாட்டினர்,சுமேரியர்கள்,அசிரீரியர்கள்,அரேபியர்கள் இவர்களெல்லாம்  இவ்வினத்தைச் சேர்ந்தவர்கள்.

      இஸ்ரவேல்,லெபனான்,சிரியா, ஆகிய நாடுகளில் வசிப்பவர்களும் ஆப்ரிக்க, ஆஸ்த்ரேலியப் பழங்குடியினரும் ஹாமின் வம்சாவளியினர்( கறுப்பு நிறமுள்ளவர்கள்) என்று வகைப்படுத்தப்பட்டனர்.இவர்கள் நாகரிகமற்ற,உயர் பண்பாடற்ற,ஒழுக்கமற்ற, தந்திர புத்தியும் வஞ்சக எண்ணமும் கொண்ட கூட்டத்தினர் என்றும் அடிமைகளாக அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டனர். இந்தியாவில் உள்ள திராவிடர்களும் ஹாமின் மகனான கானானின் சந்ததியினராக அடையாளப்படுத்தப்பட்டனர்.

      பைபிளில் காணப்படும் இந்த நோவாவின் கதையே கானானின் சந்ததியினரான கறுப்பு நிறமுடையவர்களை அடிமைப்படுத்துவதற்கு தெய்வ அனுமதி உண்டு என்றும் அதில் தவறில்லை என்றும் ஐரோப்பியர்கள் கருதியதற்கு ஆதாரமாகும்.கறுப்புநிற மக்களை அடிமையாக்குவது இறைவனுக்குச் செய்யும் அர்ப்பணமாகக் கருதப்பட்டது.

       புராட்டஸ்டண்ட் இயக்கத்தை உருவாக்கிய மார்டின் லூதர் ஒரு வெறிபிடித்த யூத வெறுப்பாளர் மட்டுமல்ல.ஹாமின் சந்ததியினரான கறுப்பு நிறத்தவர்கள் சாத்தானின் தன்மை கொண்டவர்கள் என்று நம்பியவர்.இப்படி உடலின் பௌதிக அமைப்பின் அடிப்படையில், ஒழுக்கம்,பண்பாடு இவையற்ற, அடிமைத்தனத்திற்கே லாயக்கானவர்கள் என்று ஒரு குறிப்பிட்ட மனிதர்களை அடையாளப்படுத்தும் இறையியல் கோட்பாட்டை பைபிள்தான் அளித்தது.

       போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஜெயித்தவனுக்கு அடிமையாகத் தொண்டுபுரிந்ததையும் பொருளாதார அடிப்படையில் ஒருவனுக்கு மற்றொருவன் அடிமையாக ஊழியஞ் செய்வதையும் வரலாற்றில் பார்த்திருக்கிறோம்.ஆனால் பிறவியிலேயே சிலர் அடிமைகளாகவே பிறந்தவர்கள் என்றும் அவர்களை வியாபாரப் பொருளாக்கி யார் வேண்டுமானாலும் வாங்கலாம் விற்கலாம் என்றும் ஒரு கோட்பாட்டை உலகில் கிறிஸ்தவப் பண்பாண்பாட்டைத் தவிர வேறு எந்தப் பண்பாட்டிலும் பார்க்கமுடியாது.

        “புற ஜாதிக்காரர்களை உன் அடிமையாக்கிக்கொள்.அவர்களில் ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கலாம்”-லெவி 25:44.

இந்த பைபிள் வசனமே அடிமை வியாபாரத்திற்கு வித்திட்டது. இந்த வசனத்தால் அடிமை வியாபாரத்துக்குத் தங்களுக்கு தெய்வ அனுமதி கிடைத்துவிட்டதாகக் கருதினார்கள் கிறிஸ்தவர்கள்.மேலும் அடிமைகளை நடத்தவேண்டிய விதம் குறித்தும் யாத்ராகமம் 21:2-6,20,21-லும் லூக்கா-12:47,48-லும் விளக்கப்பட்டுள்ளது.

          கி.பி.1452-ல் போர்ச்சுகல்தான் முதன் முதலில் இந்த அடிமை வியாபாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.அதைத்தொடர்ந்து டச்சுக்காரர்களும் ஸ்பெயின் நாட்டினரும் பிரிட்டிஷ் காரர்களும்  அடிமைகளை விலைக்கு வாங்கி விற்க ஆரம்பித்தனர்.

         ஆப்ரிக்காவின் மேற்கில் அமைந்துள்ள செனகல்(Senegal) நாட்டின் தலைநகரான டாகர்(Dakar) என்னும் நகரம் ஒரு துறைமுக நகரமாகும்.இந்நகரிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் கடற்பயணத் தொலைவில் இருப்பது கோரி(Goree) என்னும் தீவு.சுமார் 900 மீட்டர் நீளமும் 300 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் குட்டித்தீவிலிருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பகுதிகளுக்கு நேரடியாகக் கப்பல் மூலம் செல்லலாம்.இத்திவீல் அடிமைகள் இல்லம் என்ற ஒரு கட்டிடத்தை டச்சுக்காரர்கள் கட்டியிருக்கிறார்கள்.இங்கிருந்துதான் ஐரோப்பியர்கள் ஆப்ரிக்க நாட்டுக் கருப்பர்களைத் தங்களது காலனி நாடுகளுக்குக் கொண்டுசென்றனர்.  ஆப்ரிக்காவிலிருந்து கடத்திக் கொண்டு  வரப்பட்ட அல்லது விலைக்கு வாங்கப்பட்ட கறுப்பின அடிமைகள் இந்தக் கட்டிட வளாகத்தில் நிறுத்தப்படுவர்.அடிமைகளை விலைக்கு வாங்க விரும்பும் வியாபாரிகள் கட்டிட மாடியிலிருந்து கூர்ந்து கவனிப்பார்கள். நல்ல தேக புஷ்டியுள்ள ஆண் அடிமைகளை நல்ல விலைக்கு வாங்குவார்கள்.பெண் அடிமைகள் துணை வேலைக்காகவும் அனுபவிப்பதற்காகவும் கொண்டு செல்லப்படுவார்கள். குடும்பத்திலுள்ளவர்கள் பிரிக்கப்பட்டுப் பெயர்களும் மாற்றப்பட்டு வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். அத்துடன் அவர்களது குடும்பமும் அழிந்துவிடும்.ஆண் அடிமைகள் கழுத்தில் இரும்பு வளையங்கள் பூட்டபட்டுக் கைகால்கள் இரும்புச் சங்கிலியால் பிணைக்கப்பட்டுக் கப்பலில் ஏற்றப்படுவார்கள்.பெண் அடிமைகளைக் கப்பலின் மேல் தளத்திற்குக் கொண்டுசென்று இஷ்டத்திற்குப் பாலியல் வன்புணர்வு செய்வார்கள்.அப்போது அப்பெண் அடிமைகளுக்குச் செய்யப்படும் கொடூரம் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை.சுமார்  இரண்டு கோடி ஆப்பிரிக்கர்கள் கோரித் தீவின் வழியாகக் கப்பலில் ஏற்றிக்கொண்டு செல்லப்பட்டனர்.கப்பலிலிருந்து கடலில் குதிக்க முயன்ற அடிமைகள் வெள்ளையர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு ஆளாயினர்.நோயுற்று இறந்தவர்கள் கடலில் வீசி எறியப்பட்டனர்.சுமார் 300 வருட காலம் (1536-1848) இந்த அடிமை வியாபரம் நடைபெற்றது.அக்காலத்தில் கோரித்தீவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட ஆப்பிரிக்க அடிமைகளில் 6 லக்ஷம் பேர் இப்படி இறந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்திவரப்பட்ட அடிமைகள் பருத்திப் பண்ணைகளில் வேலை செய்யவும் சாலைகள், இருப்புப் பாதைகள், அணைகள்,கால்வாய்கள் இவற்றை அமைக்கவும் ஈடுபடுத்தப்பட்டனர். கறுப்புநிற அடிமைகளின் உழைப்பு, வியர்வை, ரத்தம் இவற்றால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்  வளம் கொழித்தது.அந்த நாடுகளில் உள்ள மாட மாளிகைகளும் கோபுரங்களும் கறுப்பின அடிமைகளால் கட்டப்பட்டவையே .அமெரிக்காவின் வெள்ளை மாளிகைகூட அவர்களால் நிர்மாணிக்கப்பட்டதுதான்.இப்படி “உன்னை நீர்பாயும் படியான தோட்டத்தைப்போல வளப்படுத்துவேன்”என்று வெள்ளையர்களை நோக்கிக் கர்த்தர் கூறிய வசனம் நிறைவேற்றப்பட்டது.-

      1843-ல் “Bible Defence of Slavery” என்ற நூல் அமெரிக்காவில் வெளியானது. இதை எழுதியவர் ஜோசய்யா ப்ரீஸ்ட்(Josiah Priest) என்பவர். இந்நூலின் பல பதிப்புகள் வெளியாயின. இந்ந நூலில் பைபிள் ஆதாரத்துடன் அடிமை முறை ஞாயப்படுத்தப்பட்டு எழுதப்படிருந்தது.அமெரிக்காவில் இந்த நூலுக்குப் பெரிய வரவேற்பு எற்பட்டு இந்த நூலாசிரியரும் கௌரவிக்கப்பட்டார்.ஆப்ரிக்க நீக்ரோக்களை அமெரிக்கர்கள் எப்படி நடத்தினார்கள் என்பது உலகிற்கே தெரியும்.ஆப்ரஹாம் லிங்கனுக்குப் பிறகும் உடல்நிற ரீதியிலான பாகுபாடு வெள்ளையர்கள் மனதிலிருந்து இன்றுவரை முற்றிலும் அகலவில்லை என்பதே உண்மை.

          இதில் கொடுமை என்னவென்றால் கிறிஸ்தவர்களாக மாறிய ஆப்ரிக்கர்களே ஐரோப்பியர்கள் சொன்ன பைபிள் கதையை உண்மையென நம்பி அக்கதை தங்களைப் பற்றிய சரித்திரம் என்று நம்பிக்கொண்டிருப்பதுதான்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

26. வேற்று நாட்டினர் பற்றிய பைபிள் வசனம்

          “நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கு,தெற்கு,கிழக்கு,மேற்கு ஆகிய திசைகளை நோக்கிப்பார்.நீ பார்க்கின்ற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததியினருக்கும் சாஸ்வதமாக இருக்கும்படி செய்வேன்.உன் சந்ததிகளை பூமியின் துகள்களைப்போல் பெருகச்செய்வேன்….உனக்கே இந்த பூமி முழுவதையும் தருவேன்.ஆதியாகமம்-13:14-17

         இம்மாதிரியான பைபிள் வசனங்கள் தங்களுக்குகே சொல்லப்பட்டதாக ஐரோப்பியர்கள் நம்பினார்கள்.மற்ற நாட்டுப் பூர்வகுடி மக்களை அடக்கி அடிமைப்படுத்தி ஆளுமை செய்வதற்குத் தங்களுக்கு தெய்வீக அனுமதி கிடைத்துள்ளதாக இந்த வசனங்களின் மூலம் நம்பினார்கள்.இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர்கள் மற்ற நாட்டுப் பூர்வகுடி மக்களுக்கு இழைத்த கொடுமைகள் ஏராளம்.

        இன்றிலிருந்து 500 ஆண்டுகளுக்கு முன்பு இன்று நாம் காணும் U.S.A என்ற அமெரிக்க நாடு வெவ்வேறு கலாசாங்களைப் பின்பற்றும் வெவ்வேறு இனமக்களால் நிரம்பியிருந்தது. இத்தாலியைச் சேர்ந்த கிறிஸ்டோஃபர் கொலம்பஸ்(Christopher Columbus)  என்பவர் ஸ்பெயின் நாட்டு அரசின் நிதி உதவியுடன் புதிய நிலப்பரப்புகளைக் கண்டுபிடிப்பதற்காகவும் அந்நிலப்பரப்புகளில் காணப்படும் விலையுயர்ந்த பொருட்களைக் கைப்பற்றுவதற்காகவும் கடற்பயணம் மேற்கொள்ள நியமிக்கப்பட்டார்.அவர் வட அமெரிக்கா,தென் அமேரிக்கா பகுதிகளைக் கண்டார்.அப்போது வட அமெரிக்கா,தென் அமெரிக்கா இவற்றுக்கு இடையில் இருந்த ஏராளமான தீவுகளில் மாயன்கள்(Mayans), இன்காஸ்(Incas),அஸ்டெக்ஸ்(Aztecs) என்ற இனத்தவர்கள் வாழ்ந்துவந்தனர்.வட அமெரிக்கக் காடுகளில் செவ்விந்தியர்கள் என்ற இனத்தவர்கள் வாழ்ந்தனர்.(இந்த இன மக்களின் இறைவழிபாடு மற்றும் பழக்க வழக்கங்களில் ஸநாதன தர்ம நெறியின் சுவடுகள் காணப்படதாக ஆய்வுகள் கூறுகின்றன) அப்பகுதிகளில் ஸ்பெயின் நாட்டு வெள்ளையர்கள் கால் பதித்தவுடன் அப்பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடிமக்களை அழித்துத் தங்கள் மக்களை அங்கு குடியேற்றினர்.அதனால் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆனந்தமாக வாழ்ந்துவந்த மாயன்கள்,இன்காஸ் அஸ்டெக்ஸ் இனங்களும் அவர்களது பண்பாடுகளும்  முழுமையாக அழிக்கப்பட்டதுடன் அங்குள்ள வளங்களும் சூரையாடப்பட்டன..

   வட அமெரிக்காவில் ஐரோப்பியக் கிறிஸ்தவர்கள் நுழைவதற்கு முன் அங்கு வாழ்ந்த செவ்விந்தியர்களின் எண்ணிக்கை ஒன்றரைக்கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது.அன்புடனும் மனித நேயத்துடனும் வாழ்ந்த அம்மக்கள் முன்னோர்களையும் இயற்கையையும் வழிபட்டனர்.இவர்களின் தொழில் வேட்டையாடுவதும் மீன் பிடிப்பதுமாகும்.பெண்கள் மக்காச்சோளம் பயிரிட்டனர்.இவர்கள் வாழ்ந்த பகுதி வளமிக்கதாக இருந்தது,

        அற்புதமான வாழ்க்கை வாழ்ந்துவந்த இம்மக்கள் இருந்த நிலப்பரப்பில் 1513-ல் ஜுவான்  போன்ஸ் –ட்-லியென்(Juan Ponce-de-leon) என்ற ஸ்பெயின் நாட்டுக் கடற்படைத் தளபதி காலடியெடுத்து வைத்தது முதல் இம்மக்களுக்குத் துன்பம் ஏற்படத் தொடங்கியது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அமெரிக்க நாட்டின் வளத்தைக் கருத்திற்கொண்டு பல நாட்டு வெள்ளையர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு வந்து குடியேறத் தொடங்கினர். முதலில் அங்கு வந்தவர்கள் ஆண்கள்தான். அங்கு வந்த அவர்களை அங்கு வாழ்ந்த பூர்வகுடிகளான செவ்விந்தியர்கள் மகிழ்வுடன் வரவேற்று உபசரித்துத் தங்க இடமும் குளிரிலிருந்து காத்துக்கொள்ளக் கம்பளி ஆடைகளையும் உண்ண உணவும் கொடுத்து மகிழ்ந்தனர். “நரிக்கு இடம் கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்கும்” என்ற நம் பகுதிப் பழமொழிக்கேற்பத் தங்களை மனித நேயத்தோடு வரவேற்று உபசரித்த அந்தப் பூர்வகுடி மக்களின் வாழ்க்கைக்கே உலைவைக்க ஆரம்பித்தார்கள் அங்கு குடியேறிய வெள்ளையர்கள்.வஞ்சகம், சூது,நம்பவைத்து ஏமாற்றுதல் இவற்றால் அம்மக்களில் செல்வங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அபகரித்தனர்.அந்தப் பூர்வகுடிமக்களிடம் வில்,அம்பு,ஈட்டி முதலிய ஆயுதங்கள்தான் இருந்தன.அங்கு குடியேறிய வெள்ளையரிடம் துப்பாக்கி,பீரங்கி போன்ற ஆயுதங்கள் இருந்தன்.அதனால் அந்தப் பூர்வகுடிமக்களால் வெள்ளையர்களை போரிலும் தீவிரமாக எதிர்கொள்ள இயலவில்லை.அங்கு நடந்த போர்களில் ஏராளமான செவ்விந்தியர்கள் வெள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்படனர். இந்தப் பூர்வகுடி மக்களின் பேரழிவிற்கும் நாடு பிடிக்கும் நடைமுறைக்கும் முதல் அமெரிக்க ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டன் முதல் 20-ஆம் நூற்றாண்டுவரை பதவியில் இருந்த அமெரிக்க ஜனாதிபதிகள் அத்தனை பேரும் பொறுப்பாவார்கள். 1513-ல் அமெரிக்காவில்  கால்வைத்த ஐரோப்பியக் கிறிஸ்தவர்களை விருந்தினராக வரவேற்று உபசரித்த அங்கிருந்த பூர்வகுடிமக்கள் அந்தக் கிறிஸ்தவ வெள்ளையர்களாலேயே ஏமற்றல்,தந்திரம் போன்ற சூழ்ச்சிகளால் பூண்டோடு அழிக்கப்பட்டனர்.

        16,17-ஆம் நூற்றாண்டுகளில் ஆஸ்த்ரேலிய நிலப்பரப்புக் கண்டுபிடிக்கப்பட்டது.அப்போது ஆஸ்த்ரேலியா மக்கள் வசிக்காத நாடு என்று கருதப்பட்டது. அதனால் கைதிகளைக் குடியமர்த்தும் நாடாக அந்த நாட்டை ஐரோப்பியர் பயன்படுத்த நினைத்தனர்.1788-ல் முதன் முதலில் பிரிட்டிஷ் அரசாங்கம் தனது கைதிகளை அந்நாட்டில் குடியேற்றியது.அவர்கள் அங்கு குடியேறியபோதுதான் அந்நாட்டில் பல லக்ஷம் பூர்வகுடிமக்கள் இருப்பது தெரிய வந்தது.அதன்பிறகு அங்கு சென்ற வெள்ளையர்கள் அங்குவாழ்ந்த பூர்வ குடிகளைப் பலவிதங்களில் கொன்றொழித்தனர்..

    காட்டு நாய்களைப்போல் பூர்வ குடிமக்களைச் சுட்டுக்கொல்வது கர்த்தருக்குச் செய்யும் தொண்டாகக் கருதினார்கள் வெள்ளைக் கிறிஸ்தவர்கள்.அப்போதிருந்த பிஷப் போல்டிங்க்(Bishop Polding 1845) என்ற பாதிரியார் எவ்வளவு பூர்வகுடிகளைச் சுட்டுத் தள்ளுகிறோமோ அவ்வளவு வெள்ளையர்ளுக்கு நன்மை என்று கூறினார்.

       ஆஸ்த்ரேலியாவில் பூர்வகுடிகள் வசிக்கும் இடங்களில் உள்ள ஆண்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பூர்வகுடிகள் பயன்படுத்தும் நீர் நிலைகளில் ஆரசெனிக்(Arsenic) என்னும் விஷம் கலக்கப்பட்டது.நோயற்று வாழ்ந்த அந்தப் பூர்வகுடிகளில் பலர் அங்கு வந்த ஐரோப்பியர்களால் பரப்பப்பட்ட  இன்ஃப்லுயென்சா,அம்மை,பாலியல்நோய்கள் இவற்றுக்கு ஆளாகி மடிந்தனர் பூர்வகுடி மக்களின் வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. தப்பியோடியவர்கள் பாலை நிலத்திற்கு ஓடி அங்கேயே பசியால் மடிந்தனர்.பூர்வ குடி மக்களின் பெண்களையும் குழந்தைகளையும் கடத்திவந்து கிறிஸ்தவப் பாதிரிமார்களிடமும் கன்யாஸ்த்ரீகளிடமும் ஒப்படைத்தனர்.பாதியார்களும் கன்யா ஸ்த்ரீகளும் அப்பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினர். குழந்தைகள் அனாதை ஆச்ரமத்தில் விடப்பட்டனர். உலகிலேயே முதன் முதலில் அனாதை ஆச்ரமம் தொடங்கப்பட்டது ஆஸ்த்ரேலிய நாட்டில்தான்.இத்தகைய ‘குழந்தைத் திருட்டு’ இன்றும் ஆஸ்த்ரேலியாவில் நடந்துகொண்டுதான் இருக்கிறது..

         இப்படிப்பட்ட இனப்படுகொலைகளை வெள்ளையர்கள் தங்களின் பரிசுத்த வேதாகமத்தைச் சான்றாக்கி  ஞாயப்படுத்திக் கொண்டனர்.எரோமியா-அதிகாரம்16-ல் மற்ற நாட்டு மக்களைப் பற்றிக் கர்த்தர் கூறியதாகப் பின்வறுமாறு உள்ளது.

“மிகக் கொடிய நோயால் அவர்கள்(வேற்று நாட்டு மக்கள்) சாவார்கள்.அவர்களுக்காக அழுபவர்களும் அவர்களை அடக்கம் பண்ணுபவர்களும் இருக்கமாட்டார்கள்.பஞ்சத்தால் மடிந்துபோகும் அவர்கள் நிலத்திற்கு எருவாவார்கள்.அவர்களது சடலங்கள் ஆகாயத்தில் உலவும் பறவைகளுக்கும் பூமியில் உள்ள விலங்குகளுக்கும் இரையாகும்.ஆகையால் நீ அவர்களுக்காக வருந்தாதே.எமது சமாதானம்,கிருபை இரக்கம் இவையெல்லாம் அந்த ஜனங்களுக்கு இல்லை.-வசனம்-4,5

ஆதியாகமம் 12:2-ல் “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி உன்னை ஆசீர்வதித்துப் பெருமைப் படுத்துவேன்” என்றும் 22:17-ல் உன் சந்ததியை வானத்தில் உள்ள நக்ஷத்ரங்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் பெருகச் செய்வேன். உன் சந்ததியினர் தங்களது சத்துருக்களின் வாசல்களைத் தனதாக்கிக் கொள்வார்கள்”என்றும் கூறப்பட்டுள்ளது.

        ஆதியாகமத்தில் வரும் கர்த்தரின் இந்த வாக்குறுதி வசனங்கள்  ஆஸ்த்ரேலியாவிலும் அமெரிக்காவிலும் நிறைவேற்றப் பட்டுவிட்டன. அழிந்ததுபோக மீதமுள்ள ஆஸ்த்ரேலியப் பூர்வ குடி மக்கள் கிறிஸ்தவத்தைத் தழுவியிருந்தாலும் இன்றும்கூட இரண்டாந்தரக் குடிகளாகவே கருதப்படுகின்றனர்.எல்லாவகையிலும் வெள்ளையர்களைவிட அவர்கள் பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

27. தெய்வீக விசாரணை(Inquisition)

             16-ஆம் நூற்றாண்டுவரை கத்தோலிக்கக் கிறிஸ்தவ குருமார்கள் தங்கள் சமயத்தவரையே பைபிள் படிக்க அனுமதிக்கவில்லை.அதுவரை ஆயர்கள் ,பேராயர்கள் பிஷப்புகள்,போப்பாண்டவர்கள் சொல்வதுதான் வேதவாக்காகவும் கடவுளின் கட்டளையாகவும் இருந்தது.இந்த நடைமுறை பலருக்குப் பிடிக்கவில்லை.பல எதிர்ப்புகள் தோன்ற ஆரம்பித்தன. இந்த எதிர்ப்பைச் சமாளிக்க கத்தோலிக்க குருமார்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அதற்குப் பெயர்தான் “தெய்வீக விசாரணை” (Inquisition).தேவாலய நிர்வாகிகளுக்கு எதிராகப் பேசுபவர்கள், எழுதுபவர்கள்,போப்பாண்டவர்கள், ஆயர்கள் இவர்களை விமர்சிப்பவர்கள், மதமாற்றத்தை எதிர்ப்பவர்கள்,பலவந்தமாக மதமாற்றம் செய்யபட்டபின்பும் ரகசியமாகத் தங்களது பழைய மத நூல்களை வாசிப்பவர்கள், மதம் மாற மறுக்கும் யூதர்கள், இஸ்லாமியர்கள், இந்துக்கள் போன்ற மாற்று மதத்தினர்கள் இவர்களெல்லாம் குற்றவாளிகளாக இந்த “தெய்வீக விசாரணைக்கு” உட்படுத்தப்பட்டனர்.குற்றவாளிகளைக் கண்டுபிடித்து  இந்த விசாரணையின் அடிப்படையில் ‘நீதி’ வழங்கும் நீதிபதிகளாக இருப்பவர்கள் கிறிஸ்தவ குருமார்கள்.இவர்கள் யாரைக் குற்றவாளி என்று முடிவுசெய்கிறார்களோ அவர்களுக்கு அரசு தண்டனை வழங்கும்.இப்படி மத குருமார்களும் அரசு இயந்திரமும் சேர்ந்து இவ்விஷயத்தில் செயல்பட்டனர். இவ்வித விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு குற்றவாளி என்று முடிவு செய்யபட்டவர்களுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள்  மிகக் கொடூரமானவைகளாக இருக்கும்.

          இரண்டு மூங்கில் மரங்களுக்கு இடையில் குற்றவாளியைத் தலைகீழாகக் கட்டிவைத்து அந்த மூங்கில் மரங்களை இழுத்து உடலை இரண்டாகப் பிளத்தல்,ரம்பங்களால் உடலின் பாகங்களைத் துண்டு துண்டாக அறுத்தல்,இயந்திரங்களுக்கு இடையில் உடலை வைத்துத் திருகு ஆணிகளை வைத்துத் துளையிட்டுக் கொல்லுதல்,தீயீட்டுக் கொளுத்திக் கொல்லுதல் இது மாதிரியான தண்டனைகள் கொடுக்கப்படும்.

          முதன் முதலில் இந்த தெய்வீக விசாரணை நீதிமன்றம் 12-ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில்தான் தொடங்கப்பட்டது.அதன் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவற்றின் காலனி நாடுகளுக்கும் இந்த அக்ரமச் செயல் பரவியது.கத்தோலிக்கர்கள் மட்டுமின்றி புராட்டஸ்டண்ட்டுகளும் இந்த விசாரணை நீதி மன்றங்களை நடத்தினர்.இவ்விசாரணையை மிகத்தீவிரமாக நடத்திய நாடுகள் ஸ்பெயினும் போர்ச்சுகலும்தான்.இந்த நாடுகளில் 1496-ல் இந்த தெய்வீக நீதி விசாரணை தொடங்கப்பட்டது.இவ்விரு நாடுகளிலும் இஸ்லாமிய ஆட்சி  முற்றிலுமாக அகற்றப்பட்டுவிட்டதால் அங்கு இஸ்லாம் தடை செய்யப்பட்டிருந்தது.ரகசியமாக யாராவது இஸ்லாமை பின்பற்றுவதாகத் தெரிந்தால் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு இந்த தெய்வீக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுப் பலர் முன்னிலையில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.போர்ச்சுகல் நாட்டில் வாழ்ந்து வந்த யூதர்கள் பத்துமாத காலத்திற்குள் நாட்டைவிட்டு வெளியேற வெண்டும் என்றும் வெளியேறும்போது தங்கள் குழந்தைகள், வீடுகள்,நிலங்கள் இவற்றையெல்லாம் தேவாலயத்தில் ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும் என்றும் அந்த நாட்டு அரசு கட்டளை பிறப்பித்தது. தங்களின் குழந்தைகள் கிறிஸ்தவர்களிடம் வளர்வதைவிடச் சாவதே மேல் என்று கருதிய யூதர்கள் தங்கள் குழந்தைகளைத் தாங்களே கொன்றுவிட்டுச் சென்றனர்.

        16-ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கோவாப் பகுதி போர்ச்சுகலின் காலனியாய் இருந்தது.அப்பகுதிக்கும் இந்த தெய்வீக விசாரணை பரவியது.16-ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப பிரான்சிஸ் சேவியர்(Francis Xavier) என்ற ஸ்பெயின் நாட்டுப் பாதிரியார் இந்தியாவுக்கு வந்தார்.அப்போது இந்தியாவில் மொகலாய ஆட்சி நடைபெற்றது.ஆனால் அந்த ஆட்சி டில்லி மற்றும் ஆக்ராப் பகுதிகளைத் தாண்டி இந்தியாவில் விரிவடையவில்லை.இந்தியாவின் மற்ற பகுதிகளை பல்வேறு சிற்றரசர்கள் ஆண்டுவந்தனர். தென்னிந்தியாவின் தெற்கு,தென் கிழக்கு,தென்மேற்குப் பகுதிகளில் திருவிதாங்கூர் ஸமஸ்தான மன்னரின் ஆட்சி நடைபெற்றது.இந்த ஸமஸ்தான மன்னர் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்துவந்த பரதர் என்று சொல்லப்படும் மீனவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தத் தவறிவிட்டார்.கடலில் சென்று மீன்பிடித்து வியாபரம் செய்யும் இம்மக்கள் அப்பகுதியில் வாழ்ந்த இஸ்லாமியர்களால் வியாபார ரீதியில் வஞ்சிக்கப்பட்டனர்.மீனவர்களின் கடற்பொருட்களுக்குச் சரியான விலைகொடுக்காமல் இஸ்லாமியர்கள் ஏமாற்றி வாங்கினர். மேலும் மீனவப் பெண்கள் அனைவரையும் தங்கள் இஷ்டத்திற்குக் கற்பழித்துக் கெடுத்தார்கள் இஸ்லாமியர்கள்.இந்தச் சூழ்நிலையில் தங்கள் வாழ்க்கைக்கு ஏதாவதொரு விடிவுகாலம் பிறக்குமா என்று அந்த மீனவ மக்கள் ஏங்கிக் கொண்டிருந்த வேளையில்தான்1541-ல் போர்ச்சுகீசிய காலனியாக விளங்கிய கோவாவுக்கு புனித பிரான்சிஸ் சேவியர் வந்து சேர்ந்தார்.அப்போது கடற்கரையோரத்தில் வாழ்ந்துவந்த மீனவர்களான பரதர்கள் மலபாரில் தங்கியிருந்த பிரான்சிஸ் சேவியரிடம் வந்து இஸ்லாமியரிடமிருந்து தங்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் தாங்கள் எல்லோரும் கிறிஸ்தவ சமயத்துக்கு மாறத் தயாராக இருப்பதாகவும் சொன்னார்கள்.அவர்களின் கோரிக்கையை ஏற்று போர்ச்சுகீசியப் படை அவர்களுக்குப் பாதுகாப்பு அளித்தது. அதனால் இந்துக்களாக இருந்த அந்த பரதர்கள் கிரிஸ்தவத்துக்கு மாறினார்கள். அவர்களது பெயர்களும் மாற்றப்பட்டன.பரதர் என்ற அவர்களது குலப்பெயரே ஃபெர்னாண்டோ (Fernando) என்று மாற்றப்படது.

         கோவாவில் இருந்த மற்ற இந்துக்களையும் இஸ்லாமியர்களையும் வெளிநாட்டிலிருந்து அகதிகளாக அங்கு வந்திருந்த யூதர்களையும் மதம் மாற்றும் முயற்சியில் பிரான்சிஸ் சேவியர் தீவிரமாக ஈடுபட்டார்.ஆனால் அவரது எண்ணம் ஓரளவுக்குமேல் பலிக்கவில்லை. அதனால் மதம் மாறாதவர்களை தெய்வீக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அப்போதைய போர்ச்சுகல் அரசுக்கு 16.5.1545-ல் ஒரு கடிதம் எழுதினார் சேவியர். அந்தக்கடிதத்தைப் பார்த்த அப்போதைய போர்ச்சுகல் அரசன் ஜான் III  கோவாவில் இருந்த தனது கவர்னருக்குக் கீழ்க்கண்டபடி ஒரு உத்தரவைப் பிறப்பித்தான்.

        “இந்துக்களின் ஆலயங்களும் ஆலயங்களிலுள்ள சிலைகளும் உடைக்கப்படவேண்டும்.சிலைகள் செய்பவர்கள் எங்கிருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும்.பிராம்மணர்களுக்கும் அவர்களை ஆதரிப்பவர்களுக்கும் உயர்ந்த பட்ச தண்டனை கொடுக்கவேண்டும்.இந்துசமய திருவிழாக் காலங்களில் பஜனைகள், பாடல்கள் பாடக்கூடாது.பந்தல் அமைக்கக் கூடாது.வெற்றிலை,பாக்கு வினியோகம் செய்யக்கூடாது.முன்னோர்களுக்கான தெவசங்களை அனுஷ்டிப்பதோ ஏகாதசி முதலிய விரதங்கள் இருப்பதோ கூடாது.அறுவடைத் திருவிழா கொண்டாடக் கூடாது.வீடுகளில் தென்னைமரம் ,துளசிச்செடி இவற்றை வளர்க்கக் கூடாது. இறந்தவர்களின் வீடுகளைச் சாணம் கொண்டு பூசக்கூடாது.ஆண்கள் முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியக்கூடாது.பெண்கள் மேலாடை அணியக்கூடாது.”

         இந்த உத்தரவை மீறி  நடந்தவர்கள் தெய்வீக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.மதம் மாற மறுத்தவர்கள் இவ்வித விசாரணையின் பேரில் இருட்டறையில் அடைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப் பட்டனர்.இந்தச் சித்திரவதையில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.சிலர் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டனர். இக்கொடுமைகளைச் சொல்லி மாளாது. இதுபற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்துள்ளன. அவற்றைப் படிக்கும்போது நம் இரத்தம் உறைந்து விடும்,அவ்வளவு கொடுமைகள். இந்தக் கட்டாய மத மாற்றத்துக்கும் இந்த விசாரணைக்கும் பயந்து அப்பகுதியில் உள்ள பிராமணர்களும் இஸ்லாமியர்களும் யூதர்களும் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டனர்.1812-வரை கோவாவில் இந்த தெய்வீக விசாரணைக் கொடுமை நடந்தது. அதன்பிறகு உலக அளவில் இந்த செயல்பாட்டுக்கு எதிர்ப்புகள் தோன்றியதால் இந்த விசாரணைமுறை கைவிடப்பட்டது.

       இந்தக் கொடுமைகளுக்குக் காரணமான  பிரான்சிஸ் சேவியர் மதம்பரப்ப சீனாவுக்குச் சென்றபொழுது குவான்டூங் தீவில் கப்பலுக்காகக் காத்திருந்தபோது விடாத காய்ச்சலால் மரணமடைந்தார். இவர் செய்த சேவைக்காக இவரது உடல் கோவாவிற்குக் கொண்டுவரப்பட்டு அங்குள்ள ஒரு தேவாலயத்தில் ஒரு கண்ணாடிப் பேழையில் இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.இவரது மத சேவைக்காகப் புனிதர் என்று இவர் அறிவிக்கப்பட்டதுடன் இவரது பெயரால் ஏராளமான வழிபாட்டுத் தலங்களையும் கல்வி நிலையங்களையும் கிறிஸ்தவர்கள் உருவாக்கியுள்ளனர்.

       கோவாவில் தனது மதவெறி ஆட்டத்தைத் தொடங்கிவைத்த இந்த பிரான்சிஸ் சேவியர் ஒட்டு மொத்த இந்தியாவின் சமூக நிலையைப் பற்றி 1543-ல் ரோமானிய ஏசு சபைக்குக்குத் தான் எழுதிய கடிதத்தில்,

“We have in these parts a class of men among the pagans who are called Brahmins.They keep up the worship of gods,the superstitious rites of religion,frequenting the temples,and taking care of idols….If it were not for the opposition of Brahmins we should have them all embracing the religion of Jesus Christ”.(இந்தப் பகுதி மக்களில் (இந்தியாவில்) பிராமணர்கள் என்ற ஒரு பிரிவினர் உள்ளனர்.அவர்கள்தான் கோயில்கள் சிலைகள் இவற்றைப் பராமரிப்பவர்களாகவும்,மூட நம்பிக்கையான மதச் சடங்குளை நடத்திவைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். பிராமணர்களின் எதிர்ப்புமட்டும்  இங்கு இல்லாவிட்டால் இங்குள்ள எல்லோரையும் யேசு கிறிஸ்துவின் மதத்தை ஏற்றுக்கொள்ளச் செய்துவிடமுடியும்) என்று எழுதியிருக்கிறார்.  __________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

28. சூனியக்காரி வேட்டை(Witch Hunting)

   கிறிஸ்தவ  சமயத்தில் பெண்களுக்கு உயர்ந்த இடம் வழங்கப்படவில்லை.பெண்கள் சாத்தானின் பிரதிநிதிகளாகக் கிறிஸ்தவ மதத்தில் சொல்லப்படுகிறார்கள்.மந்திரவாதிகள் சூனியக்காரிகள், வயதான பெண்கள் அழகான,புத்திக் கூர்மையுள்ள பெண்கள் இவர்களெல்லாம் சாத்தானின் மறு உருவங்கள் என்று கிறிஸ்தவம் சொல்கிறது.உடலில் மச்சம்,மறு இவையுள்ள பெண்கள் அனைவரும் சாத்தானின் கூட்டாளிகள் என்றும்  இவர்களோடு இரவில் சாத்தான் உறவுகொள்வதற்கான அடையாளம்தான் அவர்களின் உடம்பில் உள்ள மறுக்களும் மச்சங்களும் என்றும் சொல்லப்படுகிறது.15 ஆம் நூற்றாண்டு தொடங்கி சமீப காலம்வரை சாத்தானைக் கொல்வது என்ற பெயரில் பெண்களைக் கொல்லும் சூனியக்காரி வேட்டை((Witch Hunting) கிறிஸ்தவ நாடுகளில் தீவிரமாக நடந்துவந்தது.

செயின்ட் பால் பெண்களைப் பற்றிக் கூறும்போது,

“அவர்கள் (பெண்கள்) தடை செய்யப்பட்ட பழத்தை உண்டதால் மனித குலத்துக்கு நீங்காப் பழியைக் கொண்டுவந்தவர்கள்.அதனால் அவர்கள் கர்த்தரை வணங்கும்போதும் பிரார்த்தனை செய்யும்போதும் தலையில் முக்காடு போட்டு மூடிக் கொள்ளவேண்டும்.ஆணின் தலை கர்த்தரின் தலை போன்றது.ஆனால் பெண்ணின் தலை மனிதனிடமிருந்து பெறப்பட்டது.(கொரி-11:3,9) தேவாலயத்துக்குள் அவர்கள் அமைதியாக இருக்கவேண்டும். அங்கு அவர்களுக்குப் பேச அனுமதி இல்லை. தேவாலயத்தில் அவர்கள் பிரசங்கிப்பது அவமானச் செயல்.(கொரி-14:34,35) ஏனென்றால் உலகில் முதன்முதலில் சாத்தானால் எமாற்றப்பட்டவள் பெண்தான்.முதற்பாவியும் அவளே(திமோதி-2:11-14) என்று சொல்லியிருக்கிறார்.

 

    இவை தவிர கிறிஸ்தவ குருமார்களும் எழுத்தாளர்களும் பெண்களைப் பற்றிக் கூறியிருப்பது மிகவும் கொடுமையானது.  அவற்றில் சில பின்வருமாறு:

2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாதிரியார் டெர்டுலியன்(Tertullian-155-220),

“உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஏவாள் போன்றவளே.நீங்கள் (பெண்கள்) நரகத்திற்கான வாசல்.தடை செய்யப்பட்ட ஞானப்பழத்தைப் பறித்தவள் நீயே.கர்த்தரின் தடையை முதலில் உலகில் மீறியவளும் நீயே”. என்று கூறியுள்ளார்.

அதே நூற்றாண்டில் வாழ்ந்த புனித கிளமென்ட்(Bishop of Rome St.Clement),

“கர்த்தரின் தடையை மீறியதன் மூலம் பெண்ணாகிய நீ ஒரு பெண்ணாக இருப்பதற்கே வெட்கப்படவேண்டும்.”என்று கூறியுள்ளார்.

கான்ஸ்டாண்டிநோபிள் ஆர்ச் பிஷப் ஜான் க்ரைசோஸ்டாம்(John Chrysostom)-(கி.பி..347-407)

“ஆண்களின் வாழ்க்கையில் பெண்கள் தேவையான ஒரு கெட்டபொருள்.ஆசைப்பட வைப்பவர்கள் அவர்களே.அழிவுக்கான சாதகிகளும் அழகிய சூத்திரதாரிகளும் அவர்களே.”என்று கூறுகிறார்.

“பெண்கள் களைப்படைந்தால் என்ன,பிரசவ சமயத்தில்(ஆதியில் கர்த்தரின் கட்டளையை மீறிப் பாவம் செய்ததற்காக) அவர்கள் இறந்தால் என்ன?அப்படிப்பட்ட துயரங்களைச் சுமந்து இறப்பதற்காகவே அவர்கள் இந்த பூமியில் உள்ளார்கள்’ என்று புராட்டஸ்டண்ட் மதஸ்தாபகரான மார்டின் லூதர் கூறியுள்ளார்.

         பெண்களுக்கு எதிரான இப்படிப்பட்ட மதக்கருத்துக்களின் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் ஏராளம்.பெண்கள் மீதுள்ள வெறுப்பால் கி.பி.1450 முதல் 300 வருட காலம் தேவாலய ஆயர்களால் பெண்கள் மிகப்பெரிய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.ஆதியில் கர்த்தரால் பெண் சமூகத்திற்குக் கொடுக்கப்பட்ட சாபத்தைத் தவிர, “சாத்தான் ,பேய்,பிசாசு ஆகியவற்றை வணங்கி வசப்படுத்துவது பெண்களின் இயற்கையான சுபாவம்.பெண்கள் மிக்பெரிய தந்திரக்காரிகள்,மந்திர வாதிகள் ,சூனியக்காரிகள்.மனிதனின் உடல் நலம் பிரார்த்தனை மூலம் கர்த்தரின் அருளால் பெறப்படவேண்டுமேயொழியப் பாட்டி வைத்தியத்தால் அன்று.பாட்டி வைத்தியம் மூலிகை வைத்தியம் இவற்றின் மூலம் வியாதிகளை குணமாக்குவது என்பது பெண்களுக்குச் சாத்தான் கொடுத்த மந்திர தந்திர சக்தியே.பெண்களின் அழகும்,அறிவும் ,புத்திக் கூர்மையும் ஆண்களை ஏமற்றுவதற்காகச் சாத்தானால் பெண்களுக்கு வழங்கப்பட்டவையே.”என்பது போன்ற குற்றச்சாட்டுகளும் மத குருமார்களால் பெண்கள் மீது வைக்கப்பட்டன.குடும்பத்தில் இருக்கும் வயதான கிழவிகளும் அறிவு பூர்வமாகப் புத்திக் கூர்மையுடன் பேசும் பெண்களும் சாத்தானின் வடிவங்களான சூனியக்காரிகளாகப் பார்க்கப்பட்டனர்.

          கி.பி 1488-ல் போப்பாண்டவர் ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.தேவாலயங்களை அழிக்க சூனியக்காரிப் பெண்கள் சாத்தானுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் இந்த ஒப்பந்தத்தை அழிக்க ஆண்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் அந்தப் பிரகடனத்தில் சொல்லப்பட்டிருந்தது.நாட்டில் ஏற்படும் நோய்,பஞ்சம்,பசி இவற்றுக்கும் தனிக் குடும்பங்களில் ஏற்படும் கஷ்டத்திற்கும் இந்த சூனியக்காரப் பெண்கள்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.அதனால் சூனியக்காரிகள் என்ற பெயரில் பல பெண்கள் கொல்லப்பட்டனர்.

        எந்த ஆணும் தனக்குப் பிடிக்காத பெண்ணைச் சூனியக்காரி என்று சொல்லிச் சூனியக்காரி வேட்டைக்கு அவளை உட்படுத்தலாம்.மனைவியைப் பிடிக்காத கணவன் தன் மனைவியைச் சூனியக்காரி என்று சொல்லலாம்.தகப்பன் மகளையும் சகோதரன் சகோதரிகளையும், தனக்கு இணங்காத பக்கத்து வீட்டுப் பெண்ணையும் சூனியக்காரிகள் என்று சொல்லித் தீர்த்துக்கட்ட முடியும்.மேலும் எந்தப் பெண்களின் உடம்பிலாவது மறு,மச்சம் தழும்பு,தடிப்பு இவை காணப்பட்டால் அப்பெண்கள் இரவில் சாத்தானோடு உறவு கொண்டதற்கான அடையாளமே அத்தழும்புகள் என்று சொல்லி அவர்களை கொன்றுவிடுவார்கள்.தேவாலயப்பணியாளர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்படி வேண்டுமென்றே குற்றம் சாட்டப்பட்ட பெண்கள் நடுவீதியில் பலர் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டு,உடல் முழுக்க உள்ள ரோமங்கள் சிறைக்கப்பட்டுப். பல்வேறு சித்திர வதைகள் செய்யப்பட்டுக் கொல்லப்படுவார்கள். “நான் சூனியக்கரிதான்” என்று அவர்கள் வாயாலேயே சொல்லும்வரை சித்திரவதை செய்யபடுவார்கள்.எந்தப் பெண்ணாவது உண்மையைச் சொல்ல விழைந்தால் அப்பெண்ணின் நாக்கைத் துண்டித்து விடுவார்கள்.

         ஒருசமயம் ஆர்ச் பிஷப் செயின்ட் ஆண்ரூஸ்(St.Andrews) உடல்நலம் குன்றி இருந்தபோது அவருக்கு வைத்தியம் பார்க்க பைரிகிம் என்ற ஊரிலுள்ள அலிசோன் என்ற பெண் வந்தாள். வைத்தியம் முடிந்து பிஷப் குணமானவுடன் அவளை மந்திரக்காரி என்று குற்றஞ்சாட்டி உயிருடன் எரித்துவிட்டார்கள்.

         வீரத்திற்கும் அழகிற்கும் பெயர் பெற்ற ஜோன் ஆஃப் ஆர்க்(Jone of Arc-1412-1431) பிரான்சில் பிறந்த பெண்மணி.அப்பெண் தனது 16-ஆவது வயதில் படை திரட்டிக் கொள்ளையர்களை அடக்கியதுடன் உள்நாட்டுக் கலகத்தையும் அடக்கினார்.அன்று நடந்த வாரிசுரிமைப் போரில் ஆங்கிலப் படையைத் தோற்கடித்து பிரான்சின் வெற்றிக்கு உதவினார். மற்றொரு போரில் ஆங்கிலப் படையால் கைது செய்யப்பட்டுப் போர்க்கைதியாகக் கிறிஸ்தவ மதகுருமார்களின் மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார்.மதகுருமார்களின் மன்ற விசாரணையில் இப்பெண்ணின் வீரம் சாத்தானால் வழங்கப்பட்டுள்ளது என்றும் இப்பெண் மதக்கோட்பாடுகளுக்கும் திருச்சபைக்கும் புறம்பானவள்,மந்திர வாதி,சூனியக்காரி என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு தீயிலிட்டு எரிக்கப்பட்டார்.அப்போது அப்பெண்ணுக்கு வயது 19.ஜோனை நிற்க வைத்துத் தீயைச் சிறியதாக வளர்த்துக் கொஞ்சம் கொஞ்சமாக எரித்தார்கள்.அவரது முழு உடம்பும் எரிந்து சாம்பலாக வெகுநேரமானது. அதுவரை அலறிக் கொண்டே இறந்தார் அந்தப்பெண்.

 

            இம்மாதிரியான நடமாடும் பெண்வேட்டை நீதிமன்றங்கள்  ஐரோப்பியக் கிறிஸ்தவ நாடுகள் முழுவதிலும் பரவலாக இருந்தன.அவற்றில் முதன்மையானது ஸ்பெரெஞ்ஜர்(Sprenger) என்பவர் தலைமை வகித்த நீதிமன்றம். அவர் “பெண்களின் புத்திக் கூர்மை சாத்தான் பெண்களுக்கு வழங்கியுள்ள ஆயுதம் என்றார்.”ஆங்கிலத்தில் பெண்கள் “Femina”  என்று அழைக்கப்படுவர். “Fe” என்றால் ‘இறை நம்பிக்கை’ என்றும் “mina” என்றால் ‘இல்லாதது’ என்றும் பொருள்.அதனால் பெண்கள் இறை நம்பிக்கையற்றவர்கள்.”என்று விளக்கம் கொடுத்தார் அவர். 

     ஐரோப்பிய நாடுகளில் 20-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கொடுமையான சூனியக்காரி வேட்டை என்னும் பெண்வேட்டை நடந்து வந்துள்ளது. பெண்கள் மட்டுமின்றி கிழவர்கள் கிழவிகள், நொண்டிகள், குருடர்கள், மன நலம் குன்றியவர்கள் அறிவாளிகள், அழகான பெண்கள் ஆகியோரும் கொல்லப்பட்டனர். இதற்கெல்லாம் கீழ்க்கண்ட பைபிள் வசனங்களே காரணம்.

வீட்டில் கிழவர்கள் கூடாது”-சாமுவேல்2:31,32

“குருடர்களும் நொண்டிகளும் கர்த்தருக்கு ஆகாது”-லெவி-21:17-20

“கிறுக்கர்களையும்,அறிவாளிகளையும் கொல்லவும்”லெவி-20:27

“அழகு ஆபத்தானது”-31:30

      இப்படிச் சூனியக்காரி வேட்டை என்ற பெயரில் 1484-முதல் 300 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் 90 லக்ஷம் பெண்கள் சூனியக்காரிகள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

          கிறிஸ்தவ மத குருமார்கள் சாத்தானின் பிரதிநிதிகளா? பெண்கள் சாத்தானின் பிரதிநிதிகளா? கூறுங்கள் அன்பர்களே!-__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

29. பைபிள் கற்றுக்கொடுத்த கொடூரம்

      அன்பையும் சமாதானத்தையும் போதிப்பதாகச் சொல்லப்படும் கிறிஸ்தவ மதமும் அதன் வேத நூலான பைபிளும் கடந்த 2000 வருடங்களாக உலகில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு முதலிய கொடூரங்களையே அரங்கேற்றி வந்திருக்கிறது. கடவுளால் சொல்லப்பட்டு மனிதர்களால் எழுதப்பட்டதுதான் தங்களின் வேத நூலான பைபிள் என்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.ஆனால் பல்வேறு காலக் கட்டங்களில் இருந்த கிறிஸ்தவ குருமார்களால் சூழ்நிலைகளுக் கேற்பவும் தங்களுக்குச் சாதகமாகவும்  பலமுறை கூட்டியும் குறைத்தும் திருத்தியும் எழுதப்பட்டதுதான் கிறிஸ்தவ வேதநூலான பைபிள் என்பது தெள்ளத் தெளிவான ஆய்வுகளின் மூலம் நிறுவப்பட்டுள்ளது.ஏசுவின் நேரடி சீடர்களால் சொல்லப்பட்ட கருத்துக்களை எல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, செயின்ட் பால் விசுவாச தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவத்தை உருவாக்கினார். அதுவே தற்போது நடைமுறையில் உள்ளது. “ஒருவன் எவ்வளவு பாவத்தைச் செய்தவனாயினும் /செய்பவனாயினும்/ செய்யப்போகின்றவனாயினும் கன்னியிடம் ஏசுவின் பிறப்பு, சிலுவையில் அவரது இறப்பு,அவர் மறுபடி உயிர்த்தெழுந்தது இவற்றின் மீது மனப்பூர்வமான நம்பிக்கை வைப்பவனாக இருந்தால் அவனுக்கு நரகம் இல்லை, சொர்கமே உண்டு.எந்தப் பாவம் செய்தாலும் பாவ மன்னிப்புக் கேட்டுவிட்டால் அந்தப் பாவம் மன்னிக்கப்பட்டுச் சொர்கமும் நித்ய ஜீவனும் உண்டு.”-இதுவே செயின்ட் பால் உருவாக்கிய கோட்பாடு. இந்த விசுவாச தத்துவம், பாவ மன்னிப்புக் கோட்பாடுகளால் தங்களின் எப்படிப்பட்ட செயல்பாடுகளுக்கும் மன்னிப்பு உண்டு என்று கருதி கிறிஸ்தவர்கள் வரம்பு மீறி செயல்பட்டனர்.அவர்கள் செய்த கொடூரங்களுக்கும் இவ்விதமான கோட்பாடுகளே காரணம்.

         ஏசு சிலுவையில் அறையப்படுவதற்கு யூதர்களே காரணம் என்று சொல்லி உலகெங்கிலும் உள்ள யூதர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கொலை செய்தார்கள்.மற்ற நாட்டுப் பூர்வீகக் குடிகளையும் கொன்றொழித்தார்கள் ஒரு கிறிஸ்தவன் ஒரு யூதனைக் கொன்றால் அவனுக்குச் சொர்கம் நிச்சயம் என்றார்கள் கிறிஸ்தவ குருமார்கள்.அதனால் முதலில் யூதர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக்கொன்றார்கள் கிறிஸ்தவர்கள்.பிறகு கொலையில் பழக்கம் ஏற்பட்டவுடன்,சித்திரவதை செய்து கொல்லலாம் என்று முடிவுசெய்து, பல கொடூரங்களைச் செய்தனர்.கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து அப்படியே இடுப்புவரை கீறிச் சதையை வெளியில் எடுப்பது, விரல்களை ஒவ்வொன்றாக ரம்பத்தால் அறுப்பது,தலையில் உள்ள முடிகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கி முழுத்தலையையும் ரத்தக் காயமாகிவிட்டுக் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை ஊற்றுவது போன்ற குரூரங்களின் எல்லைளைத் திறந்து காட்டினார்கள்.

        மற்ற நாடுகளில் உள்ளவர்களை ஒழித்துக்கட்டியும் தங்களுக்கு அடிமைகள் ஆக்கியும் அநநாடுகளில் உள்ள வளங்களைக் கொள்ளையடித்தும்  தங்களுக்குச் செழுமை சேர்த்துக் கொண்டார்கள். துப்பாக்கி,பீரங்கி,கபடம்,சூது, ஏமாற்றுதல்,பொய் சொல்லி வஞ்சித்தல், நோய்களைப் பரப்புதல் போன்றவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தி மற்ற நாட்டுப் பூர்வீகக் குடிகளைக் கொன்ற “தூய கத்தோலிக்க ஆட்சியாளர்களைக் கண்டிக்கவோ,அவர்களுக்கு அறிவுரை கூறவோ உலகில்  யாரும் முன்வரவில்லை.உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் நன்மையை விரும்பும் போப்பாண்டவரும் மௌனமாகி ஸ்பெயின் வெறியர்களுக்கு அநுகூலமாகவே இருந்தார்.அப்போது லாஸ் காஸஸ் (Las Casas) என்ற ஒரு கத்தோலிக்கப் பாதிரியார் மத்திய அமெரிக்காவின் பூர்வ குடிமக்களுக்கு ஸ்பெயின் நாட்டுக் கிறிஸ்தவர்களால் ஏற்பட்டுள்ள கொடூரங்களைக் கண்டித்து அப்போதைய போப்பாண்டவரான பயஸ் V (Pious v) என்பவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அமெரிக்காவில் உள்ள பூர்வ குடிமக்களுக்கு ஸ்பெயின் நாட்டினர் செய்யும் கொடுமைகள் உடனே நிறுத்தப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டதுடன் பின்வரும் கோரிக்கைகளையும் வைத்திருந்தார்.

 

“தங்களைப்(போப்பாண்டவரை) பலர் (ஸ்பெயின் நாட்டினர்) புகழ்கிறார்கள்.ஆனால் அவர்கள் உண்மை என்னும் மரத்தை நோக்கிக் குறைக்கும் வெறி நாய்கள்.எனவே தாங்கள் கீழ்க்கண்ட தெய்வீக ஆணையைப் பிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

1.உருவ வழிபாட்டைத் தடை செய்வதற்காகவும் பைபிளைப் பரப்புவதற்காகவும் கிறிஸ்தவர்கள் போர் செய்யலாம் என்ற கோட்பாட்டை பைபிளிலிருந்து நீக்க வேண்டும்.

2.கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நிலபுலன்களையோ,வீடுகளையோ தங்களின் உடைமைகளாகக் கொள்ளத் தகுதியற்றவர்கள் என்ற கொள்கைப் பிரகடனத்தைத் தள்ளுபடி செய்யவேண்டும்.

3.வெற்றி கொள்ளப்பட்டு அடிமையாக்கப்பட்ட மக்கள் பைபிளையும் பாவமன்னிப்பையும் புரிந்துகொள்ளும் திறமையற்றவர்கள் என்று நம்மவர்களால் உருவாக்கப்பட்டுள்ள தத்துவத்தை உடனே தள்ளுபடி செய்ய வேண்டும்.

4.பூர்வ குடிகளான உள்ளூர் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கம்,வெள்ளி,நவரத்தினங்கள் ஆகியவற்றை அம்மக்களிடமே திருப்பியளிக்கவேண்டும்.மேலும் அவர்களை அடிமை வேலைகளிலிருந்து விடுவிக்கவேண்டும்”

        ஆனால் இந்தக் கோரிக்கைகளுக்குப் போப்பாண்டவர் செவி சாய்க்கவில்லை.மேலும் மேலும் இம்மாதிரியான சமயக் கொடுமைகளும் பூர்வகுடிகளான உள்ளூர் மக்களைச் சாத்தான்கள் என்றும் அவர்களின் வாரிசுகளைச் சாத்தானின் பிள்ளைகள் என வர்ணிக்கும் கொடுமையும் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

      1893-ல் சுவாமி விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் ஸ்பெயின் நாட்டுக் கிறிஸ்தவர்களின் மிருகத்தனத்தைக் கண்டித்துப் பேசும்போது,

“நாங்கள் கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்துள்ளோம்.இம்மாநாட்டில் நீங்கள் தினமும் “கர்த்தரை ஏற்றுக்கொண்டவனே செழிப்பான்”என்று திருப்பத் திரும்பப் பேசுகிறீர்கள்.ஏசுவை ஏற்றுக்கொள்ளவும் அறிவுரை வழங்குகிறீர்கள்.ஆனால் அவ்வாறு செழிப்படைந்த இங்கிலாந்து நாட்டை நாங்கள் கூர்ந்து நோக்குகிறோம்.நீங்கள் அடைந்துள்ள செல்வம் கர்த்தரால் வழங்கப்பட்டது அல்ல.அவை 25-கோடி ஆசிய மக்களின் குரல் வளையை நெறித்து வலியப் பெற்ற செழிப்பே என்பது எங்களுக்குத் தெரியும்.கிறிஸ்தவ ஐரோப்பாவின் செல்வம் மேற்கிந்தியத் தீவுகளையும் மெக்ஸிகோ நாட்டின் பூர்வகுடி மக்களையும் கொள்ளையடித்ததால் பெறப்பட்ட செல்வம் என்பதும்,அவை அங்குள்ள மக்களின் தொண்டையைக் கிழித்து எடுக்கப்பட்டது என்பதும் சரித்திர பூர்வமாக எங்களுக்குத் தெரியும்”

என்று பகிரங்கமாக உலகறியச் சொன்னது குறிப்பிடத் தக்கது.

          கிறிஸ்தவர்கள் உலகில் அரங்கேற்றிய அனைத்துக் கொடூரங்களுக்கும் அவர்களின் வேத நூலும் அதன்மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையுமே காரணம்.தங்களுக்கு வசதியாக எழுதிவைத்துக் கொண்டதைக் கடவுளின் சொல்(Gospel)என்று சொல்லி மக்களை நம்பவைத்து அதன் அடிப்படையில் தங்களுக்கு விருப்பமானவற்றையெல்லாம்செய்து தங்களின் செயல்பாடுகளுக்குச் சமய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள் அவர்கள். அவ்வப்போது இருந்த ஆட்சியாளர்களும் சமய வட்டத்துக்குள் தங்களை நிலைப்படுத்திக்கொண்டதால் அரசாங்க அதிகார பலத்தோடு தங்களின் எண்ணங்களை எளிமையாகப் பூர்த்திசெய்து கொண்டார்கள் கிறிஸ்தவ மத வெறியர்கள். .__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

30. கிறிஸ்தவக் காம வெறி

            “Catholic” என்ற ஆங்கில வார்த்தைக்கு “பரந்த மனப்பான்மையுள்ள” “சகிப்புத்தன்மையுள்ள” “எல்லோருக்குமான” “பொதுவான” என்ற பொருள்கள் உண்டு என்பதை அகராதிகள் மூலம் அறிகிறோம்.ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை எந்த அளவுக்குச் சகிப்புத்தன்மையும் பரந்த மனப்பான்மையும் கொண்டதாக இருந்திருக்கிறது/இருக்கிறது என்பதை கிறிஸ்தவ மதவரலற்றை ஆதிமுதல் அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.உலகனைத்தையும் படைத்ததாகச் சொல்லப்படும் பைபிளின் கடவுளே ஒரு குறிப்பிட்ட மனித இனத்தின் மீது மட்டும் கரிசனம் காட்டுபவராகவும் மற்ற இனத்தவர்கள் மீது வெறுப்பைக் காட்டுபவராகவும் பைபிளே குறிப்பிடுகிறது.அந்த அடிப்படையில்தான் கிறிஸ்தவர்கள் மனித இனங்களைப் பாகுபடுத்திப் பார்க்கிறார்கள். ஆகவே கிறிஸ்தவத்தில் காணப்படும் அத்தனை இழிந்த கோட்பாடுகளுக்கும் நடைமுறைகளுக்கும் அதன் வேத நூலான பைபிளே அடிப்படை.

      “பரிசுத்த வேதாகமம்” என்று சொல்லப்படும் பைபிள் பரிசுத்த ஆவியால் சொல்லப்பட்டு மனிதனால் எழுதப்பட்டது என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.அம்மதத்தினர் அந்நூலை அப்படிக் கருதுவதில் வியப்பொன்றும் இல்லை.மத போதகர்கள் பைபிளை மார்போடு அணைத்துக் கொண்டிருப்பதை இன்றும் நாம் காண்கிறோம். அம்மதத்தினரின் வீடுகளில் இன்றும் குழந்தைகள் தங்களின் தலையணையின் கீழ் பைபிளை வைத்துக்கொண்டு தூங்குவது வழக்கமாக உள்ளது. இத்தகைய ஒரு புனிதமான நூல் எக்காலத்திலும் எவ்வித மாற்றமும் இன்றி முரண்பாடுகள், சந்தேகங்கள்,விமர்சனங்கள் இவற்றுக்கு அப்பாற்பட்டதாக அசிங்கங்களும் அனாசாரங்களும் அற்றதாக இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவன் பய பக்தியோடு படித்து அதன் பொருளைத் தன் மனைவி மக்களுக்கும் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆகியோருக்கும் விளக்கும்படியாக இருக்கவேண்டும்.புனிதமாகக் கொண்டாடப்படும் ஒரு மதநூலுக்கு இதுதான் லக்ஷணம். ஆனால் பைபிள் புனித நூலுக்கான இந்த அளவுகோலின் அடிப்படையில் அமைந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.ஆதியில் கிரேக்க நாட்டில் எழுதப்பட்ட பைபிள் இப்போது இல்லை.காலப்போக்கில் பல மாற்றங்களுக்கும் குறைத்தல், கூட்டல்,முதலிய திருத்தங்களுக்கும் உட்பட்டு இப்போது ஒரு புதிய வடிவில் உள்ளது அந்த நூல்.

      பைபிளில் உள்ள முரண்பாடுகள் குறித்து ஏற்கனவே பார்த்துள்ளோம்.முறையற்ற உறவுமுறையில் ஆண்,பெண்களின் அசிங்கமான தொடர்புகளையும் பைபிள் விவரிக்கிறது.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

       வேதாகமத்தில் பிரபலமாகப் பேசப்படும் அரசன் டேவிட்(David) .இவன் தனது அரண்மைனைக்கு அருகில் வசித்த உரியா என்பவனின் மனைவி பத்சேபாள் என்பவளுடன் உறவு கொண்டிருந்ததை சாமுவேல்-11:2-5-ல் காணலாம்.இந்த முறையற்ற உறவின் மூலம் பிறந்தவனே ‘சாலமன்’ என்னும் “புத்திக்கூர்மை”யுள்ள அரசன்.டேவிடின் மற்றொரு மகனான  அப்சலோமும் டேவிடின் மகள் தாமர் என்பவளும்(அண்ணண்-தங்கை) உடலுறவு கொண்டதை சாமுவேல்-13:1-14 விவரிக்கின்றது.ஆதியாகமம் 19:30-38-ல் லோத் என்ற மகானின் வரலாறு சொல்லப்படுகிறது.அதில் லோத்துக்கும் அவனது மகள்களுக்கும் இடையே நடந்த காமக் களியாட்டங்களும் லோத்தின் மூலம் அவனது பெண்கள் குழந்தைகள் பெற்றுக்கொண்டதும் விவரிக்கப்படுகின்றது.

        இம்மாதிரியான பைபிள் கருத்துக்களின் மூலம் உறவுமுறை மீறிய பாலியல் உறவுகளையும் காமக்களியாட்டங்களையும் கிறிஸ்தவம் அங்கீகரிக்கின்றது என்பது தெளிவாகின்றது.

  ஸ்பெயின் நாட்டுக்காரர்கள் தங்களைத் “தூய்மையான கிறிஸ்தவர்கள்” என்று அழைத்துக் கொள்வது வழக்கம்.அவர்கள் ஹிஸ்பானியோலா (Hispaniola) என்ற மேற்கிந்தியத் தீவில் 1517-ல் காலடியெடுத்து வைத்தனர்.அத்தீவிலிருந்த பூர்வீக வாசிகள் ஸ்பெயின் நாட்டினரை வானிலிருந்து இறங்கிவந்த இறைதூதர்கள் என்று நம்பி அவர்களுக்குத் தங்க இடம், உணவு இவையெல்லாம் கொடுத்து அன்புடன் உபசரித்தனர்.அந்தீவு வாசிகளின் உணவுகளை நன்றாக தின்று கொழுத்த அந்த ஸ்பானிஷ் வீரர்கள் “உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைப்பது” என்று நம்மூர்களில் சொல்வார்களே அந்தப்பழமொழிக்கேற்ப அத்தீவு வாசிகளின் பெண்களிடம் மெள்ள மெள்ளத் தங்களது காமவிளையாட்டுக்களை ஆரம்பித்தனர். அத்தீவிலுள்ள முக்கியப் பிரமுகர்களின் வீட்டிலுள்ள பெண்களிடமும்  மற்றும் அத்தீவின் அரசனது மனைவியிடமும் தங்களது மிருகத்தனமான காம வெறியாட்டங்களை நடத்தினர்.அதற்குப் பிறகுதான் அத்தீவில் வசித்தமக்கள் அவர்கள் தேவதூதர்கள் இல்லை என்பதையும் ஒழுக்கம் கெட்ட மூடர்கள் என்தையும் புரிந்துகொண்டனர். அம்மக்களால் போரில் அவர்களை எதிர்கொள்ள முடியவில்லை. கிறிஸ்தவர்களின் இவ்விதமான பாலியல் வெறிக்கு மேற்படி பைபிள் வசனங்களே அடிப்படை.

         மேலும், “அவர்களின் பலிபீடங்களை இடித்து,அவர்களின் சிலைகளைத் தகர்த்து,அவர்களின் தோப்புகளை வெட்டிப் போடுங்கள்”-யாத்-34:13 போன்ற வசனங்களால் அடுத்தமதக்காரன் அடுத்த நாட்டுக்காரன் ஆகியோர்மீது வெறுப்பை வளர்த்துக்கொண்டனர் கிறிஸ்தவர்கள். “நான் மகனுக்கும் தகப்பனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் மருமகளுக்கும் மாமிக்கும் இடையில் பிரிவினையை உண்டாக்க வந்தேன்”-மத்-10:34 போன்ற வசனங்களால் குடும்ப உறவுமுறைகளும்  தகர்ந்துவிட்டது.

           இப்படிப்பட்ட பைபிள் கோட்பாடுகளால் கிறிஸ்தவத்தைப் பின்பற்றும் மேற்கத்திய நாடுகளில் குடும்பம்,மற்றும் சமூக வாழ்க்கைக்கான  நெறிமுறைகள் இல்லாமல் போனதுடன் வம்சாவளி,பூர்வீகம் என்ற நிலைகளைப் பராமரிக்க முடியாமலும் போய்விட்டது.திருமணம் என்பது ஆண்-பெண் இருவருக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படுகின்றது.திருமணமான ஆண்,பெண் இருவருமே நெறிமுறையற்றுச் சுதந்திரமாக வாழ்கிறார்கள்.விரிவான குடும்ப அமைப்பு,சமூகம்,சொந்தபந்தம் என்பவை எல்லாம் அங்கு இல்லை.அமெரிக்காவில் 47 சதவீதக் குழந்தைகள் மாற்றாந்தாய்,தகப்பனிடம் வாழ்கின்றனர்.10 சதவீத ஆண்களும் பெண்களும் திருமணமாகாமலேயே சேர்ந்து வாழ்கின்றனர். விவாகரத்தில் முடியும் திருமணங்கள் ஸ்வீடனில் 55 சதவீதமாகவும் அமெரிக்காவில் 46 சதவீதமாகவும் இங்கிலாந்தில்43 சதவீதமாகவும் இருக்கின்றன.ஸ்வீடன் நாட்டில் வெறும் 5 சதவீதக் குழந்தைகள்தான் திருமணத்தின் மூலம் பிறக்கின்றன என்பது அதிர்ச்சியான தகவல்.இம்மாதிரியான சீரழிந்த வாழ்வில் சிக்கித் தவிக்கும் பெரும்பான்மையானோருக்கு நிலையாக வசிப்பதற்கு ஒரு வீடு தேவை என்ற நிலை இல்லை.பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் வீட்டை விற்றுவிட்டுக் கார்களிலும் வேன்களிலும், திறந்தவெளிக் கூடாரங்களிலும் வசிப்பது அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.

        விசுவாசம், பாவமன்னிப்பு, கர்த்தரை ஏற்பவனே செழிப்பான் போன்ற கோட்பாடுகளால் எப்படிவேண்டுமானலும் வாழலாம்  என்ற எண்ணத்தை மக்கள் மனதில் உருவாக்கிக் குடும்பம் ,உறவு, அன்பு,கருணை,பந்தம்,பாசம் ஒழுக்கம்,மனநிம்மதி போன்றவற்றுக் கெல்லாம் இடமில்லாமல் செய்து மக்களின் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட மிருகங்களின் வாழ்க்கையைப் போல் மேற்கத்திய நாடுகளில் உருவாக்கிவைத்திருக்கிறது கிறிஸ்தவம்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

31. கிறிஸ்தவம் பற்றி மேற்கத்திய அறிஞர்களின் விமர்சனம்

       அன்பு, கருணை,ச கோதரத்வம், நன்னடத்தை இவற்றை யெல்லாம் ஏசுநாதர் போதித்தார் என்று சொல்லப்படுகிறது.ஆனால் இத்தன்மைகள் எதுவுமே கிறிஸ்தவ மதத்தில் பின்பற்றப்படவில்லை என்பதுதான் உண்மை.ஏசுநாதரின்  கொள்கைகளையும் அவர் மக்கள் மத்தியில் பிரசங்கித்த கருத்துக்களையும் இருட்டடிப்புச் செய்துவிட்டுப் புதிய கோட்பாடுகளை உருவாக்கியவர் செயின்ட் பால்.இந்தப் பாலின் புதிய கிறிஸ்தவக் கொள்கை தான் உலகத்தில் கிறிஸ்தவர்கள் செய்த அனைத்துக் கொடூரங்களுக்கும் காரணம்.அதனால்தான் கிறிஸ்தவம் பற்றியும் பைபிள் பற்றியும் பல மேற்கத்திய அறிஞர்களே விமர்சித்துள்ளனர்.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

       ஹோலோமெஸ் கோர் (Rev-V.A-Holomes Gore) என்பவர் “ஏசுவின் சீடர்களான ஜான்,பீட்டர் மற்றும் ஏசுவின் சகோதரரான ஜேம்ஸ் ஆகியோர் கட்டிக்காத்த ஏசுவின் ஆன்மிகக் கொள்கைகள் செயின்ட் பால் அவர்களால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.ஒளியை இருள் தோற்கடித்துவிட்டது”என்று கூறுகிறார்.

“ செயின்ட் பால் ஏசு போதித்த நன்னடத்தைகளைக் கிறிஸ்தவத்திலிருந்து நீக்கி நம்பிக்கைக் கோட்பாட்டை முன்நிறுத்தியுள்ளது உலகிற்குக் கிடைத்துள்ள பெரும் சாபம்” என்று  வில் டுராண்ட்(Will Durant)என்ற அறிஞர் கூறுகிறார்.

     “ஏசுவின் மலைப்பிரசங்கம் பால் உருவாக்கிய கிறிஸ்தவத்துக்கு முற்றிலும் எதிரானது.”என்று மார்டின் பபர்(Martin Buber) என்ற யூதத்தத்துவ  ஞானி “The  two types of Faith”என்ற தனது நூலில் கூறுகிறார்.

      “கிரேக்க,கத்தோலிக்க,மற்றும் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவ இறைத் தத்துவங்கள் எல்லாம் செயின்ட் பால் சுவிசேஷத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதே தவிர ஏசுவின் கொள்கைகளிலிருந்து அல்ல.”என்கிறார் ஆல்பர்ட் ஸ்வெட்சர்(Allbert Schweitzer) என்ற அறிஞர்.

        “மந்திர வாதிகளும்,சூனியக்காரிகளும் உலகில் ஆரம்பகாலத்திருந்தே இருந்ததாகவும் அவர்கள் பூமியிலிருந்து அழிக்கப்படவேண்டும் என்றும் பைபிள் கூறுகிறது.அதன்படி 900 வருட காலமாக மேற்கத்திய உலகில் நடத்தப்பட்ட வேட்டையில் கோடிக்கணக்கான அத்தகையோர் கண்டுபிடிக்கப்பட்டுத் தீயிலிடப்பட்டும் ஆணியடிக்கப்பட்டும் வதைசெய்யப்பட்டும் கொல்லப்பட்டனர். ஆனால் அவ்வாறு அவர்களைக் கொன்றது தவறு என்று இன்றைய கிறிஸ்தவ மதத்தினர் உணர்ந்துவிட்டனர். ஆனால் கொல்வதற்குக் கட்டளையிட்ட வாசகம் பைபிளிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை. இது தவறல்லவா?அதுபோல, ப்ரைவி கவுன்சில் (Praivy council,London) தீர்ப்பின்படி ஏசுவை நம்பாதவர்களுக்கு நிரந்தர நரகம் என்று பிரச்சாரம் செய்வது தடைசெய்யப்படுள்ளது. ஆனால் அதைப் போதிக்கும் வாசகங்கங்கள் இன்னும் பைபிளில் உள்ளது.இன்று இந்த நாட்டில் பெண்களையும் குழந்தைகளையும் கொல்வதற்குக் கொடுக்கப்பட்டுள்ள போதனைகள் பின்பற்றப்படவில்லை.ஆனால் அந்த போதனைகள் பைபிளில் நீக்கப்படாமல் உள்ளது.இத்தகைய கபடத்தை என்னென்பது?” என்று அமெரிக்க எழுத்தாளரான மார்க் ட்வெயின் (Mark Twain) கூறுகிறார்.

        இவற்றையெல்லாம் விட கிறிஸ்தவத்தையும் அதன் வேத நூலான பைபிளையும் மிகக் கடுமையாக விமர்சித்த மேற்கத்தியர்கள் பலர் உண்டு.அவர்கள் சொன்னவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

       “எது மோசமானது? பழைய ஏற்பாடா? புதிய ஏற்பாடா? தீய நூல்களெல்லாம் தீயிலிடப்படுமானால் உயர்ந்த ஜ்வாலைகள் எழுவது விவிலியத்திலிருந்துதான்”-சார்லஸ் ஸ்மித்

      “இறைவனைப் போற்றுவதற்காகப் பொய்களைக் கூறுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை.இறைவன் சர்வல்லமையுள்ளவன் என்ற கருத்தை அழிப்பது விவிலியம் மட்டுமே.-ரூபர்ட் ஹ்யூக்ஸ்

       எலிசபெத் காடி ஸ்டாண்டன் என்ற பெண்மணி “பெண்களை அடிமைப் படுத்துவதையும் இழிவு செய்வதையும் கற்பிக்கும் நூல் விவிலியத்தைத் தவிர வேறொன்று இருப்பதாக அறியேன்” என்று கூறுகிறார்.

       “இன்றைய உலகில் மிகப்பெரும் தீமையில் இருப்பது ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைதான்”-எச்.ஜி. வெல்ஸ்.

       “கிறிஸ்தவம் ஒரு மிகப்பெரிய சாபக்கேடு;உள்ளார்ந்தும் விரிவானதுமான ஒரு நெறி பிறழ்ச்சி:பழிவாங்கும் தன்மைக்கு ஊக்கம்தரும் ஒரு நஞ்சு அது. அது ஒரு இழிந்த மார்கம்.மனித இனத்தின் மாபெரும் குறைபாடு அது.”-நீஷே-ஜெர்மன் தத்துவ  ஞானி.

        தாமஸ் பெயின்(Thomas Paine) என்ற அறிஞர் “Age of Reason”என்ற தனது நூலில்  “கிறிஸ்தவம் என்பது நாத்திகத்தின் ஒரு வகை என்றே எனக்குத் தோன்றுகிறது. ஒருவிதத்தில் அது கடவுளை மறுத்து,கடவுளைவிட ஒரு மனிதன் மீது நம்பிக்கை கொண்டது. அருள் வெளிப்பாட்டை ஏற்காமல்,இறையுண்மைக் கொள்கையில்லாமல் உடல்வேறு,ஆன்மா வேறு என்ற கருத்தை ஏற்காமல் ஒரு பொருண்மை வாத கொள்கையைக்( Monism) கொண்டதாகக் கிட்டத்தட்ட ஒரு நாத்திகமாகவே இருளுக்கு மங்கலான ஒரு ஒளிபோல் இருக்கிறது.சூரியனுக்கும் பூமிக்குமிடையே சந்திரன் கிரகணத்தை உண்டுபண்ணுவதுபோல மனிதனுக்கும் அவனைப் படைத்தவனுக்கு மிடையில் ஒளி ஊடுருவ முடியாத ஒரு கிரகணமாகவே கிறிஸ்தவம் உள்ளது……கிறிஸ்தவ போதனைகள் எனப்படும் நான் கு சுவிசேஷங்களும் முறையே மாத்யூ,மார்க்,லூக் ஜான் என்போரால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுவது வெறும் கற்பனையே தவிர உண்மையில் அவை அவர்களால் எழுதப்பட்டவையல்ல.பழைய ஏற்பாட்டைப் போலவே அவை தாங்கியிருக்கும் பெயர்களைக் கொண்டோரால் எழுதப்படாமல் பிறரால் தயாரிக்கப் பட்டதாகும்…..தன்னைப்பற்றியோ தன் பிறப்பு மற்றும் பெற்றோர் பற்றியோ ஏசு எழுதவில்லை.புதிய ஏற்பாடு என்று சொல்லப்படும் விவிலியத் தொகுதியில் ஒருவரி கூட அவரால் எழுதப்படவில்லை. அவருடைய வரலாறே மற்றோரின் படைப்புதான்…… விவிலியத்தைக் கொண்டு எதையும் நிரூபிக்கமுடியும் என்று திரும்பத் திரும்பக் கூறப்பட்டு வருகிறது. விவிலியம் நிரூபிப்பிதை ஏற்பதற்கு முன் அதுவே உண்மையானதுதானா என்பது நிரூபிக்கப்பட்டாக வேண்டும்…அது பொய்யாகவோ சந்தேகத்திற் கிடமுள்ளதாகவோ இருக்குமானால் அது எதையும் நிரூபிக்கும் என்பதை எவ்விதத்திலும் ஏற்கமுடியாது. வெளிப்படுத்தப்பட்ட சமயமான கிறிஸ்தவத்திலிருந்து நாம் கற்பதென்ன? மனிதனுக்கு உபயோகமற்றதும் அவனைப் படைத்தவனுக்குச் செய்யப்படும் இழிவும்தான்.விவிலியம் போதிப்பதென்ன? கொலை, கொள்ளை, கொடுமை ஆகியவையே.அதன் ஏற்பாடுகள் தெரிவிப்பதென்ன?திருமணத்திற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த ஒரு பெண்ணுடன் கடவுள் சிற்றின்பத்தில் ஈடுபட்டார் என்பதை நாம் நம்ப வேண்டும் என்பதுடன் அந்த நம்பிக்கையே மதம் ஆகிறது என்பதும்தான்”

        சுமார் 200 வருடங்களுக்கு முன் பெயினால் கிறிஸ்தவத்தின் மீது வைக்கப்பட்ட இந்தக் கடுமையான விமர்சனத்தை இன்றுவரை எந்தக் கிறிஸ்தவனும் நேர்மையாக எதிர்கொண்டு பதில் சொல்ல முன் வரவில்லை.கிறிஸ்தவத்தையும் பைபிளையும் விமர்சித்து யாராவது அறிவுபூர்வமான கேள்விகளைக் கேட்டுவிட்டால் அவர்களை ‘நாத்திகர்’ என்று முத்திரை குத்துவது கிறிஸ்தவர்களின் வழக்கம்.அவர்கள் சொல்லும் முட்டாள்தனங்களை அங்கீகரிப்பவனே அவர்களின் பார்வையில் ஆத்திகன்.

         தாமஸ் பெயின் சிறந்த இறைநம்பிக்கை உள்ளவர்.அதே நேரத்தில் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் வெளிப்படுத்தப்படும் பொய்கள்,புரட்டுகள்,கொடூரங்கள்,அசிங்கங்கள் இவற்றை ஏற்காதவர். மாக்ஸ் முல்லர் பிறப்பதற்கு முன்பே கிறிஸ்தவத்தைப் பற்றிய தாமஸ் பெயினின் விமர்சனம் வெளிவந்துவிட்டது.ஆனால் அதை அறிவு பூர்வமாக மறுத்து  முல்லரால் ஒரு சிறு விளக்கம் கூடக் கொடுக்க முடியவில்லை.ராபர்ட் க்ரீன் எங்கர்சல் (Robert Green Ingersoll) என்பவர் ஒரு அமெரிக்க வழக்கறிஞரும் சிந்தனையாளரும் ஆவார்.மாக்ஸ் முல்லரின் சமகாலத்தவர். இவர் பைபிள் பற்றியும் கிறிஸ்தவம் பற்றியும் எதிர்மறையான கருத்துக்கொண்டிருந்தார். பைபிளையும் கிறிஸ்தவத்தையும் கடுமையாக விமர்சித்தார் இவர்.இவரது விமர்சனத்தையும் கிறிஸ்தவத்தை இந்தியாவில் வளர்க்க ஆங்கிலேயர்களால் நியமிக்கபட்ட  முல்லரால் எதிர்கொள்ள முடியவில்லை. பைபிள் பற்றிய இங்கர்சல்லின் விமர்சனங்களில் ஒன்று கீழ்க்கண்டபடி:

“If a man would follow, today, the teachings of the Old Testament, he would be a criminal. If he would follow strictly the teachings of the New, he would be insane.”

(ஒரு மனிதன் இன்று பழைய ஏற்பாட்டின் போதனைகளைப் பின்பற்றுவானாயின் அவர் ஒரு குற்றவாளியாகவே ஆகிவிடுவான்.புதிய ஏற்பாட்டின் போதனைகளை அவன் உறுதியாகப் பின்பற்றுவானயின் அவன் ஒரு பைத்தியமாக இருப்பான்).__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

32. மதம் மாற்றும் யுக்திகள்

        பல மேற்கத்திய அறிஞர்களே கிறிஸ்தவத்தையும் அதன் வேத நூலான பைபிளையும் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர்/ விமர்சித்து வருகின்றனர்.  அவர்களது அறிவுபூர்வமான விமர்சனங்களுக்கெல்லாம் நேர்மையான முறையில் கிறிஸ்தவர்களால்  பதில் அளிக்க முடியவில்லை. தங்களது மதம் பரப்பும் வெலையைக் கிறிஸ்தவ மிஷினரிகள் இன்றும் தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். கிறிஸ்தவத்தை பரப்பக் கிறிஸ்தவர்கள் மேற்கொள்ளும் யுக்திகள் பொய் சொல்லுதல், வஞ்சனை செய்தல், ஏமாற்றுதல், மிரட்டுதல், கொலைசெய்தல் என்பவையே.இடம்,சூழ்நிலை இவற்றுக்குத் தக்கவாறு இவற்றில் ஏதாவது ஒரு யுக்தியைக் கையாள்வார்கள்.உலகில் பல நாடுகளில் பெரும்பாலும் கொலை, கொள்ளை, மிரட்டல் போன்ற  வன்முறை யுக்திகளைப் பயன்படுத்தித்தான் தங்கள் மதத்தை ஸ்தாபித்துள்ளார்கள் கிறிஸ்தவர்கள் என்பதை எற்கனவே பார்த்துள்ளோம். இவர்கள் வன்முறையால் மதம்பரப்பிய நாடுகளில் இருந்த பூர்வீக மதங்கள் எல்லாம் இவர்களால் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன.இவர்கள் மதம் பரப்புவதற்கு அன்றுமுதல் இன்றுவரை பெரிய தடைகளாக உள்ளவை இந்தியா,சைனா,மியான்மர் என்று சொல்லபடும் பர்மா,ஸ்ரீலங்கா என்ற நான்கு நாடுகளே.

          மற்ற நாடுகளைவிட இந்தியாவில் தங்கள் மதத்தைப் பரப்புவதென்பது ஆரம்பம் முதலாகவே கிறிஸ்தவர்களுக்கு ஒரு பெரும் சவாலாகவே இருந்துவந்திருக்கிறது.இந்தியாவுக்கு அவர்கள் வந்த காலத்தில் அவர்களின் நாடுகளிலேயே அவர்களின் மதத்தை விமர்சிக்கும் அறிஞர்கள் தோன்றிவிட்டார்கள்.மதம் மாற்றும் விஷயத்தில் மிரட்டல் உருட்டலால் இனி சாதிப்பது எளிதன்று என்பதை அவர்கள் உணரத்தொடங்கினார்கள். இந்திய அறிஞர்களுக்கு முன்னால் கருத்தளவில் தங்கள் மதத்தை ஞாயப் படுத்தவும்  தூக்கிப்பிடிக்கவும் அவர்களால் இயலவிலை. தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஸநாதன மதத்தை இரும்புக் கோட்டையாக நின்று பாதுகாத்து வந்த பிராமணர்களை வாதவிவாதங்களில் அவர்களால் அசைத்துக் கூடப்பார்க்க முடியவில்லை.கிறிஸ்தவ மிஷினரிகளுக்கு அன்றும் சரி இன்றும் சரி இந்தியாவில் சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள்/இருப்பவர்கள் பிராம்மணர்களே.அதனால் இந்தியாவில் மதம் பரப்பும் விஷயத்தில் ஏமாற்றுவது,பொய்சொல்வது என்ற இரண்டு யுக்திகளைக்கொண்டுதான் தம் காரியத்தைச் சாதித்துக் கொள்ளமுடியும் என்ற  முடிவுக்கு வந்தார்கள் கிறிஸ்தவர்கள்.

        அப்பே துபாய்ஸ்(Abbe Dubois) என்பவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். கிறிஸ்தவ சமயப் பரப்பாளரான அவர் 1792-ல் மதம் பரப்புவதற்காக இந்தியாவுக்கு வந்தார். அவரது மதம் பரப்பும் வேலையை முதன் முதலில் பாண்டிச்சேரியிலும் மைசூரிலும் தொடங்கினார்.அவரது வேலைக்குப் பெரும் இடையூறாக இருந்தவர்கள் பிராம்மணர்கள்.அதனால் பிராம்மணர்கள்மீது மிகுந்த சினமடைந்த அவர் தனது கடிதம் ஒன்றில்

“ஒவ்வொரு இந்துவும் உண்மையை (கிறிஸ்தவத்தை) ஏற்றுக் கொள்ளாதவர்களாகவே உள்ளனர்.குறிப்பாக பிராம்மணர்கள் எதிர்ப்பு வேலையில் கைதேர்ந்தவர்களாக இருக்கின்றனர்.உலகிலேயே இவர்கள்தான் பெரிய முட்டாள்கள்.இவர்களிடம் நிறைய புத்தகங்கள் உள்ளன.அவற்றில் மோசமான கருத்துக்களும் பொய்களும் நிரம்பி உள்ளன. அந்தப் பொய்களையே அவர்கள் சாமான்ய இந்துக்களுக்குப் போதிக்கின்றனர்.பிராம்மணர்கள் சூது மிக்கவர்கள். அவர்களைக் கையாள்வது மிகவும் சிரமம்.இவர்கள் மிகவும் கோழைகள். இவர்களைப் புகழ்ந்து பேசினால் இவர்களிடமிருந்து எதையும் சாதித்துக்கொள்ளமுடியும்.இவர்களுக்கு முன் யோசனையும் நன்றி யுணர்வும் அறவே கிடையாது”

என்று எழுதியுள்ளார்.

         பிராம்மணர்கள் மீது தனக்கு இருந்த கோபத்தை இப்படி வெளிக்காட்டிய இந்தப் பாதிரியார் தனது மதம் மாற்றும் பணியில் வெற்றி பெற முடியவில்லை.அதனால் மனம் உடைந்தபடியே  அவர் 15.1,1823-ல் இந்தியாவை விட்டு பிரான்சுக்குத் திரும்பிச் சென்றார்.அவர் திரும்பிச் செல்லும் முன் 16..11.1816-ல் ஒரு கடிதம் எழுதி வெளியிட்டார்.அக்கடிதத்தில்,

“இன்றைய சூழலில் கிறிஸ்தவத்துக்காக நாம் எவ்வளவு மதமாற்றப் பணிகள் செய்தாலும் இந்துக்களை மதம் மாற்றுவது கடினமாக உள்ளது.காரணம் நமது கிரிஸ்தவ மதத்திற்கு எதிரான உண்மைகள் அவர்களிடம் உள்ளன.நாம் இன்று இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்ப பெரும் யுக்திகளையும் பணத்தையும் உபயோகிக்கிறோம்.ஆனால் போதுமான வெற்றி இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை. இதுபோன்ற வாய்ப்பு வசதிகள் இந்துக்களுக்கு,குறிப்பாக பிராம்மணர்களுக்கு இருக்குமானால் மேற்கு ஐரோப்பா முழுவதையும் சிவா,விஷ்ணு வழிபாட்டிற்குக் கொண்டுவந்து விடுவார்கள்.”

என்று எழுதியிருந்தார்.

          இப்படி இந்தியாவுக்கு வந்த  கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்கள் பிராம்மணர்களை வெறுத்துத் தூற்றினாலும் (மத ஸம்ப்ரதாய வழிபாட்டு விஷயங்களிலும் சடங்கு ஸம்ரதாய விஷயங்களிலும் பிராம்மணர்கள் சொல்வதையே மற்ற இந்துக்கள் பின்பற்றும் நிலை இந்தியாவில் உள்ளதால் ) இந்துக்களை மதம் மாற்ற பிராம்மணர்களைப் போலவே தங்களது நடை,உடை பாவனைகளை மாற்றிக்கொள்ள ஆரம்பித்தனர்.ராபர்ட்-டி நொபிலி, துபாய்ஸ் மற்றும் பலர் பிராமணர்கள் போல் வேட மணியவும் பழக்க வழக்கங்களை மேற்கொள்ளவும் தயங்கியதில்லை.பிராமணர்களைக் கபடதாரிகள் என்று தூற்றியவர்கள் தாங்கள்  “ஐயர்”என்று அழைக்கப்படுவதை விரும்பினர்.சீகன் பால்க் ஐயர்,போப் ஐயர் இப்படிப் பல ஐயர்கள் கிறிஸ்தவர்களில் உண்டு.(இந்த பிராமண வேடம் இன்றும் கிறிஸ்தவ வட்டாரத்தில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது) இந்த இரட்டை வேடத்தைப் பொதுமக்கள் விரும்பவில்லை.இந்த யுக்தியும் பலிக்காமல் போனதால் பிராமணர்களை மற்ற இந்துக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டார்கள். அதாவது பிராம்மணர்கள் இந்தியாவின் பூர்வ குடிகள் அல்லர் என்றும் அவர்கள் வெளிநாட்டிலிருந்து இங்கு வந்து இந்தியாவின் பூர்வ குடிகளான திராவிடர்களைத் தங்களுக்கு அடிமையாக்கித் தங்களின் மத சம்பந்தமான பழக்கவழக்கங்களை அவர்களின் மீது திணித்தார்கள் என்றும் பிராம்மணர்கள் இந்தியாவுக்கு வருவதற்கு முன் இந்தியாவில் இருந்தவர்களுக்கு ஒரு பழைமையான மதம் இருந்ததென்றும் அது கிறிஸ்தவம்தான் என்றும் கதைவிட ஆரம்பித்து இங்கு பிரிவினையைத் தோற்றுவித்தார்கள்.அச்சமயம் இங்கிருந்த பிராம்மண எதிர்ப்பாளர்களுக்கு இக்கருத்துப் பிடித்துப்போய்விட்டது.இக்கருத்தின் அடிப்படையில் இங்கிருந்த பிராம்மண எதிர்ப்பாளர்கள் பிராமணர்கள்மீது வெறுப்பை உமிழ ஆரம்பித்தனர்.அதுவே நீதீக்கட்சி,அதன்பின் திராவிடர் கழகம் என்று பரிணமித்தது. இந்தப் பிராமண வெறுப்பாளர்கள் ஏற்கனவே பிராம்மண வெறுப்பாளர்களாக இருந்த  கிறிஸ்தவர்களை ஆதரிக்கத் தொடங்கினர்.அதன்பிறகு ஆரிய-திராவிட இனக்கோட்பாட்டின் அடிப்படையில் இங்கு தோன்றியுள்ள அனைத்துப் பிரிவினைவாத இயக்கங்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.இந்தப் பிரிவினை வாதக் கும்பல்கள் எல்லாம் “பல்லாயிரம் ஆண்டுகளாக நாமெல்லாம் பிராம்மணனின் சூழ்ச்சிக்கு அடிமையாக இருந்திருக்கிறோம்.பிராம்மணனின் சூழ்ச்சியையும் நமது உண்மை அடையாளத்தையும் நமக்குக் காட்டித்தந்து நம் இனத்தைப் ‘பெருமைப்படுத்தியவர்கள்’ கிறிஸ்தவர்களே”என்று நினைத்துக்கொண்டு கிறிஸ்தவர்களுக்கு நன்றி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சொல்லும் ஆரிய-திராவிட இனவாதக் கருத்தின் உள்நோக்கம் புரியாமல் அவர்களது மதம் மாற்றும் பித்தலாட்ட வேலைகளுக்கு இங்குள்ள திராவிட இயக்கங்களும் பிரிவினைவாத இயக்கங்களும் உதவி செய்துகொண்டிருக்கிறார்கள்.தங்களுக்கு ஆதரவாக இருக்கும் இந்தப்பிரிவினைவாத இயக்கங்களுக்கும் கட்சிகளுக்கும் மறைமுகமாக கிறிஸ்தவ மிஷினரிகள் பலவிதமான உதவிகள் செய்துவருகிறார்கள்.

        சைனாவைத் துண்டு துண்டாக்கிப் பலவேறு குட்டி நாடுகளாக்கும் முயற்சியை மேற்கத்தியக் கிறிஸ்தவர்கள் பல வருடங்களாக மேற்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் எதுவும் அங்கு பலிக்கவில்லை.அதைப்போல் பர்மாவையும் கிறிஸ்தவ மயமாக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

       ஸ்ரீலங்காவில் இன எழுச்சி என்ற பெயரில் விடுதலைப் புலிகளை அரசுக்கு எதிராகத் தூண்டிவிட்டு அந்நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தித் தங்களின் மதம் மாற்றும் வேலைகளுக்காக விடுதலைப் புலிகளை ஆதரித்தார்கள் மேற்கத்தியக் கிறிஸ்தவர்கள்.விடுதலைப் புலிகளின் தலைவரான  பிரபாகரனும் கிறிஸ்தவர்கள் விதைத்த ஆரிய-திராவிட இனக்கோட்பாடை ஆதரித்தவர்தான்.விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் செயல்பட்ட சில இயக்கங்களும் கட்சிகளும்கூடக் கிறிஸ்தவ மிஷினரிகளின் ஆதரவைப் பெற்றவையே. இதனால் இலங்கையில் பல லக்ஷம் மக்கள் கொல்லப்பட்டனர். பிரபாகரனும் கொல்லப்பட்டு விடுதலைப் புலிகள் முற்றிலுமாக ஸ்ரீலங்காவில் ஒழிக்கப்பட்டவுடன் அந்நாட்டைக் கிறிஸ்தவ மயமாக்க நினைத்த கிறிஸ்தவர்களின் கனவு மண்ணோடு மண்ணானது. அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட இலங்கை அதிபரான ராஜபக்சே மீது போர்க் குற்றம் சுமத்தி சர்வதேச அளவில் நீதிவிசாரணை என்ற பெயரில் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயன்றார்கள்.ஆனால் ராஜ பக்சேயின் தலைமுடியில் ஒருமுடியைக்கூட இன்றுவரை அவர்களால் பிடுங்க முடியவில்லை. இன்னும் ராஜபக்சே மீது அவர்களுக்கு உள்ள கோபம் தணியவில்லை.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

33.  பிரச்சார யுக்தி

       மதம் பரப்பும் வேலையில் சூழ்நிலைக்கும் சந்தர்ப்பத்திற்கும் தக்கபடி கிறிஸ்தவர்கள் எந்த வேடத்தையும் புனைவார்கள். எந்தவித யுக்தியையும் கையாள்வார்கள். முதலில் கர்த்தரே கடவுள் என்றார்கள். பிறகு கர்த்தரின் மகனான ஏசுவும் கடவுள்தான் என்றார்கள்.அதன் பிறகு ஒரு கடவுள் கொள்கையிலிருந்து பிதா,சுதன்,பரிசுத்த ஆவி என்ற மூவிறைக் கோட்பாட்டை ஏற்படுத்தினார்கள்.இவர்கள் எங்கெங்கெல்லாம் மதம்பரப்பச் செல்கிறார்களோ அங்கங்கு உள்ள மக்களின் நம்பிக்கை, பழக்கவழக்கம் இவற்றுக்குத் தக்கவாறு தங்களது மதக்கொள்கையை மற்றிக்கொண்டு “உங்கள் பழக்கவழக்கமெல்லாம் எங்கள் மதக்கொள்கையிலிருந்து வந்தவைதான்” என்று சொல்லி அங்குள்ள மக்களை மதம் மாற்ற முயற்சிப்பது அவர்களின் வழக்கம். கடந்த 600 வருடங்களாக இந்தியாவில் கிறிஸ்தவ சமயம் பரப்பப் பட்டுவருகிறது.எனினும் மக்கள் மத்தியில் இன்னும் அச்சமயம் பிரபலமாகவில்லை. 1980-ல் தாய்லாந்தில் நடைபெற்ற கிறிஸ்தவ மாநாட்டில் “இந்துக்களிடம் கிறிஸ்தவம் சென்றடைய எளிய வழிகள் என்ன? இந்துக்களை மதம்மாற்ற பைபிள் தத்துவங்களை எப்படி மாற்றிப் பிரச்சாரம் செய்வது?” போன்ற தலைப்புகளில் விவாதம் நடந்தது. அதன் அடிப்படையில் இந்தியாவில் மதம் பரப்ப ஒரு சில யுக்திளைக் கையாள முடிவு செய்தார்கள்.இந்து சமயத்தில் உள்ளதுபோல் கடவுளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தால்தான் இந்தியாவில் மதம் மாற்றமுடியும் என்றும் பரிசுத்த ஆவிக்கோட்பாடு இந்தியாவில் எடுபடாது என்றும் முடிவுக்கு வந்தனர்.அதனால் இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்ப விரும்பியவர்கள் செயின்ட் பாலின் பரிசுத்த ஆவிக்கோட்பாட்டைப் பிரசாரப்படுத்தத் தயங்கி ஏசுவின் உருவத்தை முன்வைத்தனர்.கிறிஸ்தவத்தின் பிரதானக் கொள்கையான உருவ வழிபாடு கூடாது என்ற கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டனர்.

           உருவ வழிபாடு அதாவது விக்ரஹ ஆராதனை கிறிஸ்தவ சமயம் ஏற்காத ஒன்று. ஆனால் இன்று இந்தியாவில் உள்ள சர்ச்சுகளில் ஏசுவின் உருவமும் மாதாவின் உருவமும் சிலைவடிவில் வைக்கப்பட்டுக் கிறிஸ்தவர்களால் வழிபடப்படுகிறது. ஏன் இப்படி மாற்றினார்கள் எனில் இந்தியாவில் உள்ள மக்கள் எல்லாம் உருவ வழிபாடு செய்பவர்களாகையால் அவர்களைக் கிறிஸ்தவத்தை நோக்கி இழுக்க இது ஒரு யுக்தி.பைபிளில் உள்ள பல வசனங்கள் தங்களது மதமாற்றப் பணிக்கு இடையூறாக இருந்த தால் அவ்வசனங்கள் மக்களிடம் போய்ச் சேராதபடி மறைக்கபட்டன.உதாரணமாக “கடவுளை நேசி.அதைப் போல புற ஜாதியினரையும் நேசி”(யோவான்-13:34,35) “மற்றவர்களின் குறைகளைக் காண்பதை நிறுத்திவிட்டு முதலில் உன் குறைகளை கவனி”(மத்-7:3-5) போன்ற வசனங்கள் மறைக்கப்பட்டன. மற்ற மதக்காரர்களையும் அவர்களது தெய்வங்களையும் வாரிசுகளையும் சாத்தான்கள் என்று வர்ணிக்கும் கிறிஸ்தவர்களுக்கு இவ்வசனங்கள் இடையூறாக இருக்குமல்லவா?அதனால்தான் இவ்வசனங்களையெல்லால் மக்களிடம் போய்ச்சேராமல் மறைத்தார்கள். “ஏசுவை நம்புகிறவனே செழிப்பான்” “வருத்தப்பட்டுப் பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள்” “ஏசுவின் ரத்தமே ஜயம்” போன்ற வாசகங்கள் மட்டுமே மக்களிடம் அதிகமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டன/செய்யபடுகின்றன. “கர்த்தரை ஏற்பவனே செழிப்பான்” என்ற பைபிள் வசனத்தை மாற்றி “ஏசுவை நம்புகிறவனே செழிப்பான்” என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

          மேலும் இங்குள்ள இந்து சமயத்தில் பின்பற்றப்படும் அனைத்துப் பழக்கவழக்கங்களையும் காப்பியடித்து அவர்களுடைய சொந்தப் பழக்கவழக்கங்கள் போல் காட்டிக்கொண்டு பாமரமக்களை ஏமாற்றி மதம் மாற்றுகிறார்கள். கர்த்தராகிய ஏசு “புற ஜாதியினரின் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டாம். அப்படிப் பின்பற்றினால் பூமியிலிருந்து அழிக்கப்படுவீர்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.ஆனால் மதம் மாற்றுவதற்காக கலாசாரப் பண்பாட்டு அபகரிப்பு வெட்கமில்லாமல் நடந்துவருகிறது.

       கருத்தியல் ரீதியில் இந்து மதத்தை எதிர்த்து நிற்க முடியாமல் போனதால் வேறுவிதத்தில் தங்களின் நிலைப்பாட்டை மற்றிக்கொண்டார்கள் கிறிஸ்தவர்கள்..500 வருடங்களுக்கு முன் இந்தியாவுக்கு வந்த அந்நிய மத குருமார்கள் ஒரே இறைவன் ஒரே புத்தகம் (Solo Scripture) என்ற கொள்கையோடு இந்தியாவுக்கு வந்தனர்.கருத்த அட்டையுடன் தடித்த புத்தகமான பைபிள் ஒன்றே உலகில் எல்லாக் கேள்விகளுக்கும் விடைசொல்லும் புத்தகமென்றும் அதை விளக்குவதற்கு வியாக்யான நூல்கள் தேவை இல்லை என்றும் கிறிஸ்தவ மத குருமார்கள் நம்பினார்கள்.அதனால் உலகில் இருந்த மற்ற நாட்டு கலாசர,மத,இலக்கிய  நூல்கள் எல்லாம் சாத்தான்களால் உருவாக்கப்பட்டவை என்று கூறி அவை எல்லாவற்றையும் அழித்தனர்.மதம் பரப்ப அவர்கள் இந்தியாவுக்கு வந்தபோது இந்திய மத இலக்கியங்களையும் சாத்தானால் உருவாக்கப்பட்டவை என்றுதான் கூறினார்கள். இந்திய சமய இலக்கியங்கள் எல்லாம் ஆதியில் பிராமணர்களின் பதுகாப்பில் இருந்ததால் அவர்களால் அவற்றைத் தேடி அழிக்கமுடியவில்லை. முடிந்தவரை தேடிக்கண்டுபிடித்து கிடைத்ததைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு போனதுடன் பலவற்றைக் கடலில் தூக்கி எறிந்தார்கள். பிராமணர்களின் பதுகாப்பில் இருந்த வேதங்கள் மற்றும் பல வைதிக இலக்கியங்களை அவர்களோடு நல்லுறவோடு பழகி வாங்கி ஆராய்ச்சி  என்ற பெயரில் அவ்விலக்கியங்களை இழிவு செய்ததுடன் இந்து மதம் பற்றித் தவறான கருத்தைப் பரப்பினார்கள். அதே நேரத்தில் மனசாட்சியுள்ள சில மேற்கத்திய ஆய்வாளர்கள் இந்திய வேதங்களின் தொன்மையையும் சிறப்புக் கூறுகளையும் உலகறியச் சொன்னபோது மதம் மாற்றும் கிறிஸ்தவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்கள். இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்பவெண்டுமென்றால் இந்தியர்களிடம் பைபிளை விளக்கிச்சொல்ல இந்திய சமய இலக்கியங்களிலிருந்துதான் மேற்கோள்களை எடுக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

 34. பிரச்சாரப் பித்தலாட்டம்

            ஆரம்பத்தில் இந்தியச் சமய இலக்கியங்களை விமர்சித்தும் இழிவுபடுத்தியும் பேசி வந்த கிறிஸ்தவர்கள் இந்தியச் சமய அறிஞர்களால் நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டனர்.அத்துடன் பல மேற்கத்திய அறிஞர்களும் இந்தியச் சமய இலக்கியங்களின் தொன்மையையும் சிறப்பையும் உலகறிய வெளிப்படுத்திக் கூறிவிட்டதால் இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்புவது என்பது கிறிஸ்தவர்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்தது. அதனால் இந்தியச் சமய நூல்களின் வழியில் பைபிளை விளக்கினால்தான்  இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்பமுடியும் என்ற முடிவுக்கு வந்தார்கள் 20-ஆம் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்கள்.இந்தியச் சமய நூல்களின் அடிப்படையில் பைபிளை விளக்கினால்தான் இந்தியச் சமய நூல்கள் அனைத்தும் பைபிளுக்குப் பிறகு தோன்றியதாகக் காட்டமுடியும் என்று நினைத்தார்கள். அந்த முடிவின்படி 28.6.2008-ல் “New Community Bible” என்ற ஒரு நூல் பைபிளுக்கு வியாக்யான நூலாக எழுதப்பட்டது. இந்த நூல் மும்பை முதலிய 20 முக்கிய நகரங்களில் வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்டவர் ஆஸ்வால்ட் என்னும் மும்பை நகர ஆர்ச் பிஷப்.மும்பையில் உள்ள ஹோலி நேம் கத்தீட்ரலில் வெகு சிறப்பாகப் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த நூலில் இந்திய வேதங்கள், உபநிடதங்கள், இதிஹாஸ புராணங்கள் இவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு பைபிள் கருத்துக்கள் விளக்கப்பட்டுள்ளன. பைபிளை கடவுளின் சொல்(GOSPEL) என்றும் பைபிளைத் தவிர்த்து மற்ற சமய நூல்களெல்லாம் சாத்தானால் எழுதப்பட்டவை என்றும்  கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்களால் சாத்தானால் எழுதப்பட்டவை என்று சொல்லப்படும் நூல்களின் உதவியோடு தங்களது “கடவுளின் சொல்லை”விளக்க முயல்கிறார்கள். எத்தனை முரண்பாடு! எவ்வளவு பெரிய பித்தலாட்டம்!

          அதேநேரத்தில் இந்தியச் சமய நூல்களைக்கொண்டு பைபிள் விளக்கப்படுவது மிகப்பெரிய அவமானச் செயலென்று கத்தோலிக்க சமயத்தைச் சேர்ந்த பல குருமார்களே கண்டித்தனர். ஆனால் அந்தக் கண்டனங்களையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்த மோசடி வேலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. கத்தோலிக்கர்களின் இந்த மோசடிவேலையைப்  புராட்டஸ்டண்டுகளும் பின்பற்ற ஆரம்பித்தனர். அப்பிரிவினரில் விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்டர் A.N.பால் என்பவரும் சென்னையைச் சேர்ந்த தாயப்பன் என்பவரும்தான் இவ்வித மோசடி வேலைகள் செய்வதில் முதன்மையானவர்கள். மேற்படி பால் “இந்து ஆலயங்களில் ஏசு கிறிஸ்துவுக்கு மறைமுக ஆராதனை” என்ற தலைப்பில் 2012-ஆம் வருடத்தில் ஒரு துண்டுப் பிரசுரத்தை எழுதிப் பரப்பினார். மேலும் இந்திய சமய நூல்களில் ஏசு கிறிஸ்து சொல்லப்பட்டுள்ளார் என்றும் பிரச்சாரம் செய்தார்.சில ஸம்ஸ்க்ருத மந்திரங்களுக்குத் தொடர்புடையவையாக சில பைபிள் கருத்துக்களை இவரது துண்டுப் பிரசுரத்தின் மூலம் விளக்கியதோடு இந்து ஆலயங்களில் ஓதப்படும் மந்திரங்கள்  ஏசுவையே குறிப்பதாக விளக்கினார்.மதம் பரப்பவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எப்படிப்பட்ட மோசடி வேலைகளையும் செய்யக் கிறிஸ்தவர்கள் தயங்கமாட்டர்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

          நாட்டின் தென்பகுதியில் கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட மோசடிகளை செய்துகொண்டிருக்கிறார்கள்.இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து மிஸோராம் ,மேகாலயா அகியவற்றைக் கிறிஸ்தவம் முழுமையாக ஆக்ரமித்துவிட்டது.வடகிழக்குப் பகுதியில் உள்ள மற்ற மாநிலங்களான மணிப்பூர்,அருணாசலப் பிரதேசம், திரிபுரா,அஸ்ஸாம் அகியவை கிறிஸ்தவமய மாக்கப்பட்டு வருகிறது. இம்மாநிலங்களில் பிரிவினைவாதமும் பயங்கரவாதமும் போதைப் பொருள் உபயோகமும் மேலோங்கி இருக்கின்றன.திரிபுராவின் விடுதலைப்படை மற்றும் MNF,MSCN,NNCT ஆகிய பயங்கரவாத அமைப்புக்கள் இம்மாநிலங்களை இந்தியாவிலிருந்து பிரித்து இவற்றில் ஏசு ராஜ்யத்தை நிறுவக் கடந்த 40 ஆண்டுகளாக ஆயுதமேந்திப் போராடி வருகின்றனர். NLFT என்ற திரிபுரா விடுதலைப்படை 2013-ல் திரிபுராவில் ஸரஸ்வதி பூஜை நடைபெறாதபடி தடுத்துவிட்டது. துப்பாக்கி முனையில் இந்துக்களைக் கிறிஸ்தவர்கள் இம்மாநிலங்களில் மதம்மாற்றி வருகின்றனர்.ஆளும் அரசாலும் இதைத் தடுத்துநிறுத்த முடியவில்லை.இப்படி வடநாட்டில் வன்முறை மூலம் மதம் பரப்பும் கிறிஸ்தவர்கள் தென்னாட்டில் “கிறிஸ்தவத்தின் அடிநாதம் அன்பு, சமாதானம் சகோதரத்துவம் இவை மூன்றும்தான்”என்று பிரச்சாரம் செய்துகொண்டு நாட்டின் ஒற்றுமைக்காக ஜெபக்கூட்டங்கள் நடத்துகிறார்கள்.எவ்வளவு பெரிய பித்தலாட்டம் பாருங்கள்!.

        ஒருவன் மற்றொருவனின் பொருளைத் திருடிவிட்டுத் திருடியவன் திருட்டுக் கொடுத்தவனைப் பார்த்துத் “திருடன் திருடன்” என்று கத்தினானாம். அதைப்போலக் கிறிஸ்தவத்தில் உள்ள பல பைபிள் கதைகள் ஸநாதன மதத்திலிருந்து காப்பியடித்துச் சிற்சில மாறுதல்களுடன் எழுதப்பட்டவைதான். பல மேற்கத்திய அறிஞர்களாலேயே இது நிறுவப்பட்டுவிட்டது.அகில உலகக் கல்விக்கழகம் (UNESCO) மனித இனத்தின் முதல் இலக்கியம் “ரிக்வேதம்”தான் என்று சமீபத்தில் தெரிவித்துள்ளது.அதன் பிரதியொன்றைத் தனது நூலகத்தில் வைத்திருக்கிறது.மனித இனத்தின் ஆதிமதம் ஸநாதன வேத மதமே என்பதும் பல்வேறு மேற்கத்திய அறிஞர்களால் நிறுவப்பட்டுவிட்டது. உண்மையை ஏற்கமுடியாத சூழ்நிலையில் வெட்கமில்லாமல் எங்கள் பைபிளிலிருந்துதான் இந்தியச் சமயக்கருத்துக்கள் தோன்றியுள்ளன என்று கூறிக்கொண்டு திரிகிறார்கள் கிறிஸ்தவர்கள்.கிறிஸ்வத்துக்கு முன் தோன்றிய புராதன மேற்கத்திய மதங்களான கிரேக்க, ரோமானிய மதங்களிலும்  அமெரிக்கப் பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி மக்களின் சமயங்களிலும் நமது ஸநாதன மதத்தின் சுவடுகள் இருப்பதைக் காணமுடியும்.உலகம் முழுக்க ஒரு காலத்தில் ஸநாதன மதக்கோட்பாடுகளையே ஏதோ ஒருவகையில் கடைப்பிடிக்கும் மக்கள் இருந்திருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தங்களின் எண்ணத்திற்கும் நோக்கத்திற்கும் பாதகமாக இருந்ததால்தான் தாங்கள் கால்வைத்த நாடுகளில் உள்ள புராதனச் சமய நூல்களையெல்லாம் அழித்து விட்டார்கள் கிறிஸ்தவர்கள்.இந்தியாவில் அந்த வேலை பலிக்கவில்லை. காரணம் இந்திய வேத இலக்கியங்கள் அனைத்தும் பிராம்மணர்களின் பாதுகாப்பில் இருந்ததுடன் அத்யயன பரம்பரம்பரையில் வேதங்களை பிராம்மணர்கள் மனதிலேயே பாதுகாத்து வைத்திருந்தார்கள்.

         இன்று உலக அரங்கில் கிறிஸ்தவம் அறிஞர்கள் மத்தியில் எள்ளிநகையாடப்பட்டு வருகிறது.ஏசுவின் போதனைகளில் முரண்பாடு காணப்படுவதாலும் ( ஓரிடத்தில் வன்முறையை ஆதரித்தும் இன்னோரிடத்தில் வன்முறையைக் கண்டித்தும் வரும் உபதேசங்கள்) வேறு சில அறிவு பூர்வமான காரணங்களாலும் ஏசு என்ற ஒரு வரலாற்று நபர் உண்மையிலேயே இருந்தாரா?அல்லது அது வெறும் கற்பனைப் பாத்திரமா? என்ற கோணத்தில் அறிஞர்களின் வட்டாரத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வுகளில் “ஏசு என்பவர் ஒருவர் உண்மையில் இல்லை.அது ஒரு கற்பனைக் கதாபாத்திரமே என்றும் அதேபோல செயின்ட் பால் என்பவரும் ஒரு கற்பனைக் கதாபாத்திரமே என்றும் அவர் எழுதியதாகச் சொல்லப்படுபவை அனைத்தும் போலியானவை என்றும்  வலிமையான ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுவிட்டன. இம்மாதிரி ஆய்வு நூல்கள் பலமொழிகளில் ஏராளமாக வெளிவந்துள்ளன. .இந்நிலையில் வெறும் நம்பிக்கை, பாவமன்னிப்பு இவற்றையே முக்கியக் கொள்கைகளாகக்கொண்ட,நல் வாழ்க்கைக்கு வேண்டிய நெறி முறைகள் இல்லாத கிறிஸ்தவத்தை மக்கள் தற்காலத்தில் ஏற்கத் தயாராக இல்லை. அதனால் கிறிஸ்தவம் உலகளவில் தற்போது தளர்ந்துதான் காணப்படுகிறது. இங்கிலாந்தில் 2010-ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி சர்ச்சுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கை 5 சதவீதத்துக்கும் குறைவானவர்களே.மேற்கத்திய நாடுகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்தியர்களால் வாங்கப்பட்டு இந்துக் கோயில்களாக மாற்றமடைந்துவருகின்றன.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

 35. இந்தியாவில் மதம் பரப்பும் யுக்தி

     மேற்கத்திய நாடுகளில் தற்போது கிறிஸ்தவம் கிட்டத்தட்ட வீழ்ச்சியடைந்துவிட்டது என்றே கூறலாம்.அங்குள்ள பல தேவாலயங்கள் தானியக்கிடங்குகளாக மாறிவருகின்றன.அவற்றை இந்துக்கள் வாங்கி கோயில் கட்ட முனைந்துவருகிறார்கள்.கல்வி அறிவு மிக்க மேற்கத்தியர்கள் தற்காலத்தில் (அந்தக்காலத்திலேயே பலர் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள்.) இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு யோகா,த்யானம்,ப்ராணாயாமம்,உருவ வழிபாடு இவற்றில் மிகுந்த நாட்டம் கொண்டுள்ளனர்.நாளுக்கு நாள் கீழைநாட்டு சமய நெறிகள் அங்கு வளர்ந்துவருகின்றன.கிறிஸ்தவம் மனிதனை நல்வழிப்படுத்தும் இயக்கமாகவோ,மனிதன் தன்னை உணர வழிவகை செய்யும் தத்துவங்கள் அடங்கிய மதமாகவோ இல்லை.அதனால் சிந்திக்கும் திறனுள்ள மக்களை அந்தச் சமயம் தன்பால் ஈர்க்க முடியவில்லை.மேலும் ஆதியிலிருந்ததுபோல் அம்மதத்திற்கு அரசாங்க ஆதரவு தற்போது மேற்கத்திய நாடுகளில் இல்லை. “கிறிஸ்தவம் அன்பைப் போதிக்கிறது” என்ற பிரசாரத்தை மேற்கத்தியர்கள் நம்பத் தயாராக இல்லை.ஏனெனில் கிறிஸ்தவ சமயத்தின் வரலாற்றை ஆதிமுதல் அறிந்தவர்கள் அவர்கள். இந்தியா போன்ற நாடுகளில் உள்ள பெரும்பாலான மக்களுக்குக் கிறிஸ்தவ சமயத்தின் ஆதி வரலாறு தெரியாது.அதனால் “அன்புதான் கிறிஸ்தவத்தின் அடிநாதம்.சமத்துவம்,சகோதரத்துவம் இவையே கிறிஸ்தவக் கொள்கை “ என்ற பொய்களைப் பிரச்சாரப்படுத்தி இந்தியா போன்ற நாடுகளில் மதம்பரப்ப நினைக்கிறார்கள்.மேலும் இந்து சமயத் தத்துவங்கள் இந்திய மக்களின் வாழ்வியல் நெறிகளோடு பின்னிப் பிணைந்திருப்பதால் அவர்களால் தங்களின் மதக்கோட்பாடுகளை முன்நிறுத்தி இங்கு பிரச்சாரம் செய்ய முடியவில்லை.அதனால் இந்து சமய நூல்களையும் விழாக்களையும் பண்டிகைகளையும் கிறிஸ்தவ மயமாக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார்கள். இந்தக் கலாச்சார ஊடுருவலைச் செய்ய பணபலம், ஆள்பலம் இங்குள்ள அரசியல் பலம் இவற்றை உபயோகித்து வருகின்றனர்.

         மேலும் ஆசிய, ஆப்ரிக்க நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் கிறிஸ்தவத்தைப் பரப்ப நேரடியாகவும் மறைமுகமாகவும் சில திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது.ஆதியில் ஆரியன்-திராவிடன் என்ற இனபேதத்தை இந்தியாவுக்குள் உருவாக்கிய கிறிஸ்தவர்கள் இந்தியாவில் உள்ள பலவேறு பிரந்தியங்களில் இனபேதம், ஜாதிபேதம், மொழிபேதம் இவற்றையும் உருவாக்கத் திட்டமிட்டனர். இவற்றைச் செயல்படுத்த சர்வதேச கிறிஸ்தவம் உலக அரங்கிலும் இந்தியாவிற்குள்ளும் பல பிரிவினைவாத இயக்கங்களையும் ஜாதிச் சங்கங்களையும் நேரடியாக நடத்தியும் மறைமுகமாக ஆதரித்தும் வருகிறது.கிரிஸ்தவத்தோடு மறைமுகமாகக் கைகோர்த்து நிற்கும் இந்தப் பிரிவினைவாத மற்றும் ஜாதி அடிப்படையிலான இயக்கங்களுக்கு நிதி ஆதாரத்தை வலுவாக்குவது மேலைநாட்டுக் கிறிஸ்தவமே.அத்துடன் இவ்வியக்கங்களுக்கு உள்நாட்டு அரசியல் ஆதரவும் ஊடக ஆதரவும் பெருமளவில் உண்டு.தமிழை மற்ற மொழிகளிலிருந்து முழுமையாகப் பிரித்து அதற்குச் சிறப்புப்பெருமை வழங்குதல் என்ற பெயரில் மொழிவெறியை உருவாக்கி இந்து மத வைதிக இலக்கியங்களின் மொழியான ஸம்ஸ்க்ருதத்தின் மீது வெறுப்பை உருவாக்குதல் , அரியன்-திராவிடன் ,தமிழன்-தமிழன் அல்லாதவன்,தலித்- தலித்தல்லாதவர்கள் என்று பிளவுபடுத்துதல், இந்துமதம் என்பதைச் சிதைத்துத் தமிழன் மதம்- தமிழனல்லாதவனின் மதம் இப்படிப் பல்வேறு பிரிவினைகளை கிரிஸ்தவர்களே இங்கு உருவாக்கினார்கள்.இந்தப் பிரிவினைகளின் அடிப்படையில் இங்கு தோன்றிய கட்சிகளும் இயக்கங்களும் கிறிஸ்தவத்தைப் பரப்பும்  மறைமுக நோக்கம் கொண்டவைகள்தான்.இங்கு “தமிழ்மொழி மற்றும் தமிழ் நாகரிகத்தின் தொன்மையையும் சிறப்பையும் நிலைநாட்ட அகழ்வாய்வு செய்கிறோம்,கல்வெட்டு ஆய்வு செய்கிறோம்”என்று சொல்வதன் நோக்கம் கிறிஸ்தவத்தைப் பரப்ப ஆதாரம் தேடுவது ஒன்றேதான்.தொல்காப்பியம் முதலிய தமிழின் தொன்மையான இலக்கியங்கள் எல்லாம் இவர்களின் நோக்கத்திற்கு இடையூறாக இருப்பதால் ஏதாவது பொய்யையும் புரட்டையும் சொல்லி இங்குள்ளவர்களை நம்பவைக்க அகழ்வாய்வின் மூலம் ஆதாரம் தேட முனைகிறார்கள். அகழ்வாய்வு என்ற பெயரில் ஏதாவது ஒரு இடத்தைத் தோண்டி அங்கு கிடைத்த ஒரு ஓட்டாஞ் சல்லியை எடுத்துவைத்துக்கொண்டு “இது 10000 வருடங்களுக்கு முற்பட்டது.இது ஆதித்தமிழன் பயன்படுத்தியது.பைபிளில் இந்த ஓட்டாஞ் சல்லியைப் பற்றிய குறிப்பு வருகிறது.ஆகவே ஆதித் தமிழன் சமயம் கிறிஸ்தவம்தான்”என்று பிதற்றுவார்கள்.அகழ்வாய்வு செய்யுமிடத்தில் நிற்கும் அதிகாரிகளில் யாராவது தங்கள் எண்ணத்திற்கு மாறாக மனசாட்சிப்படி கருத்துச் சொல்லிவிட்டால் “அந்த அதிகாரி ஆரியச் சார்புடையவர்”என்று முத்திரைகுத்தி அவரை அகழ்வாய்வுக் குழுவிலிருந்து நீக்கிவிடுவார்கள். இதுதான் “நடுநிலை” ஆராய்ச்சியின் லக்ஷணம்.தமிழ் நாட்டில் அகழ்வாராய்ச்சி செய்யும்  குழுவில் இருப்பவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள்.ஆய்வு செய்யப்பட்ட இடங்களைப் பார்வையிட அடிக்கடி அங்கு ஒரு பாதிரியர் சென்று வருவார். அவருடன் இங்குள்ள கிறிஸ்தவ அபிமான அரசியல் கட்சியின் முக்கியப் பிரமுகரும் செல்வார்.இப்படிப்பட்ட அகழ்வாராய்ச்சி மூலம் வெளிப்படும் கருத்துக்கள் எப்படியிருக்கும் என்பதை நாமே ஊகித்துக்கொள்ளலாம்.

            இது தவிர, இங்குள்ள ஜாதி ஆர்வலர்கள்,மொழி ஆர்வலர்கள்,சுற்றுப்புரச்சூழல் மற்றும் மனித உரிமை இயக்க ஆர்வலர்கள்,கலை இலக்கிய மன்றங்கள் ஆகியவற்றின் ஆதரவும் கிறிஸ்தவ மதத்திற்கு உண்டு. சென்னையில் “Institute of Asian Studies”என்ற ஒரு நிறுவனம் இருக்கிறது. இதன் நிர்வாகி ஒரு கிறிஸ்தவர்.தமிழ் மக்களின் இன ரீதியிலான உள் உணர்ச்சியைத் தூண்டிவிடும்படியாகவும் இந்திய நாட்டின் ஒருமைப்பட்டுக்கு ஊறு விளைவிக்கும்படியாகவும் இந்த நிறுவனம் செயல்பட்டுவருகிறது.சைவ சமயம் கிறிஸ்தவத்திலிருந்து வந்தது என்றும் பௌத்தமும் கிறிஸ்தவமும்தான் தமிழர்களின் மதம் என்றும் சிவன் திரவிடத்தமிழ்க்கடவுள் என்றும் தமிழர்களின் மதம் இந்து மதத்திலிருந்து வேறுபட்டது என்றும் இந்த நிறுவனம் பிரச்சரம் செய்துவருகிறது. இந்த நிறுவனத்தின் கோட்பாட்டைத்தான் தனித்தமிழ்ச்சைவம் என்ற ஒரு இயக்கம் இங்கு பிரச்சாரம் செய்கிறது.இந்தத் தனித்தமிழ்ச் சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்பு உண்டு.கிட்டத்தட்டத் தனித்தமிழ்ச் சைவர்களை கிறிஸ்தவர்களின் கைக்கூலிகள் என்றே சொல்லலாம்.தனித்தமிழ்ச் சைவத்தின் முன்னோடியான மறைமலையே கிறிஸ்தவன் கல்பித்த ஆரிய-திராவிட இனக்கோட்பாட்டை ஏற்றுக்கொண்டு மேலும் பல பிரிவினை வாதங்களை முன்வைத்தவர்தான்.சிறந்த சைவத்தமிழர்  என்று சைவர்களால் இன்றும் போற்றப்படும் மறைமலை வெள்ளையன் இங்கு விதைத்த பிராம்மண த்வேஷம் என்னும் விஷ விதைக்குத் தன்னால் முடிந்தவரை நீரூற்றி வளர்த்தவர்தான்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

36. பிரிவினைவாத இயக்கங்கள்

        2001-ஆம் ஆண்டு  தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகரில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. “United nations world conference against Racism and Racial Discrimination,(Zenobhobia and Intolerence”(இனக்கொள்கை மற்றும் இனப்பாகுபாடு பற்றிய ஐக்கிய நாடுகளின் சபைக்கூட்டம்) என்று அதற்குப்பெயர். அந்தக் கருத்தரங்கில், “கடந்த 2000 வருடங்களாக யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலைக்குக் காரணம் ஆரிய பிராம்மணர்களின் ஜாதிக்கோட்பாடு கிறிஸ்தவத்துக்குள் ஊடுருவியதுதான்,  அவை கிறிஸ்தவ சமயத்தில் உள்ள உள்ளார்ந்த குறைபாடுகள் அல்ல” என்ற கருத்து முன்வைக்கப் பட்டு அதுவே இறுதியாக்கப்பட்டது. தங்களுக்குச் சாதகமான வகையில் வரலாற்றைத் திரிப்பதுடன் தங்களின் இழிசெயல்களை எவ்வளவு சாமர்த்யமாக மூடிமறைக்கிறார்கள் பாருங்கள்.இவையெல்லாமே இந்திய சமுதாயத்தின் ஒற்றுமைத் தன்மையைக் குலைத்துத் தங்களின் மத அறுவடையை இந்தியாவில் செய்ய இவர்கள் போடும் திட்டம்.

        மூன்று பயங்கரமான வைரஸ்களால் இந்திய தேசத்தின் ஒருமைப்பாடு தற்போது சிதைந்துபோகும் நிலையில் உள்ளது. ஒன்று,பாகிஸ்தானோடு தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். இரண்டாவது சீனாவால் தூண்டிவிடப்பட்டு இந்தியாவுக்குள் ஊடுருவும் மவோயிஸ ,மார்க்சிய அடிப்படைவாதம்.மூன்றாவது மனித உரிமை என்ற போர்வையில் மேற்கத்திய நாடுகளால் திராவிட தலித் அடையாளத்தை இந்தியச் சூழலிலிருந்து பிரித்தெடுக்க முயற்சிக்கும் அடிப்படைவாதம் .தலித்துகளை இந்திய சமுதாயத்திலிருந்து பிரித்து இந்து மதத்தை தலித்துகளுக்கு எதிரானதாகக்காட்ட சர்வதேச அளவில் கிறிஸ்தவ அமைப்புக்கள் ஒரு பெரிய சதிவேலையைச் செய்துவருகின்றன. கிறிஸ்தவமே தலித்துக்களுக்கு நன்மைசெய்யும் மதம் என்று கூறிக்கொண்டு இந்திய தலித்துகளை மதம் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் கிறிஸ்தவர்கள்.அவர்களது சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் இங்குள்ள சில தலித்துகளும் மதம் மாறியிருக்கின்றனர்.இங்குள்ள பல தலித் இயக்கங்களுக்கு உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் கிறிஸ்தவர்களின் அதரவும் இருக்கிறது.

        2009-ல் நடந்த ஜெனிவா மாநாட்டில் தென்னிந்தியக் கிறிஸ்தவ சபையிலிருந்து ஒரு பிஷப் தலித்துக்களுக்கு எதிரான பல்வேறு கொடுமைகளைச் சுட்டிக்காட்டி அந்தக் கொடுமைகளுக்கெல்லாம் “இந்து சமயக்கோட்பாடுகளே” காரணம் என்றும் கூறினார்.சர்வதேச அளவில் உள்ள கிறிஸ்தவ சபைகளும் நிறுவனங்களும் தலித்துகளை ஆதரிக்கவேண்டும் என்றும் கூறினார்.இந்திய அரசாங்கம் காவல்துறை மூலமோ,சட்டத்தின் மூலமோ தலித்துகளுக்கு நீதிவழங்கத் தவறிவிட்டது என்றும் கூறிய அவர் தலித்துகள் விஷயத்தில் ஐரோப்பியத் தலையீடு அவசியம்” என்றும் கூறினார்.

        ‘சாத்தான் வேதம் ஓதிய கதை’ என்பதைப் போல உலகில் சபிக்கப்பட்ட ஹாமின் சந்ததியினர் என்று ஒரு குறிப்பிட்ட இன மக்களை ஈவு இரக்கமின்றிக் கொன்று குவித்ததோடு இந்திய தலித் திராவிடர்களும் ஹாமின் சந்ததியினரே என்று அறிவித்த இந்த “உத்தமர்கள்” தலித்துகளுக்கு நன்மை செய்கிறோம் என்று கிளம்பியிருக்கிறார்கள் என்றால் அதன் உள்நோக்கம் கிறிஸ்தவ மதவரலாறு தெரிந்தவர்களுக்கு எளிமையாகப் புரியும்.ஆனால் இங்குள்ள பாமர தலித்துகளுக்குக் கிறிஸ்தவத்தின் ஆதிவரலாறு தெரியாது.அதனால் இந்த நயவஞ்சகக் கிறிஸ்தவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிப் பல தலித்துகள் அவர்கள் விரித்த வலையில் விழுந்துகொண்டிருக்கிறார்கள்.

       இலங்கையில் தமிழ்-ஈழம் என்ற பிரிவினை இயக்கத்தை உணர்வு பூர்வமாகத் தூண்டிவிட்டு அதை ஒரு பயங்கரவாத இயக்கமாக மாற்றிப் பல லக்ஷம் மக்களின் அழிவுக்குக் காரணமானது அந்நியக் கிறிஸ்தவ மதகுருமார்களின் போதனைகள்தான்.சர்வதேச தமிழ் ஈழ ஆராய்ச்சி மன்றம், ஸ்விட்ஸர்லாந்து நாட்டில் உள்ள தமிழ்க் கூட்டமைப்பு,  கலிஃபோர்னியாப் பலகலைக்கழகம் இவை நடத்திய  ஒரு கருத்தரங்கில் தமிழ் ஈழப்பிரிவினைக்கு வரலாற்று ரீதியிலான தார்மீக தத்துவம் ஒன்று புனையப்பட்டது.இலங்கை வாழ் தமிழர்களின் பெருமையும் தனித்துவமும் வெகுவாகப் புகழப்பட்டதுடன் தமிழ்-ஈழப் பிரச்சனை காஷ்மீர் பிரிவினைவாதம் போன்றதே என்றும் நியாயப்படுத்தப்பட்டது. கிறிஸ்தவக் கைக்கூலிகளாக இருக்கும் இங்குள்ள சில தமிழின உணர்வாளர்களும் அரசியல் கட்சிகளும் அந்த பயங்கரவாத இயக்கத்துக்கு ஆதரவளித்தனர்.

         இவ்வகையான மேலை நாட்டு ஆதரவையும் தமிழ்நாட்டில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் இருக்கும் சில புல்லுருவிகளின் ஆதரவையும் நம்பிக் களத்தில் குதித்த தமிழ் ஈழப் பிரிவினைவாதிகளின் நிலை இறுதியில் என்ன ஆயிற்று.? பேரழிவுதான் மிச்சம்.இலங்கையைச் சூழ்ந்துள்ள கடல் நீர் முழுவதும் இலங்கைத் தமிழர்களின் ரத்தத்தால் சிவப்பானது.இன்று அந்தப் பேரழிவிலிருந்து எஞ்சிய பல தமிழ்க்குடிகள் அங்கு உணவு, உடை,உறைவிடம் எதுவுமின்றி நிராதரவாகப் பிச்சை எடுக்கும் நிலையில் உள்ளனர்.இவ்வளவும் கிறிஸ்தவர்கள் தங்களின் மதத்தைப் பரப்ப மேற்கொண்ட பித்தலாட்டங்களின் விளைவுதான். கிறிஸ்தவர்களால் தூண்டிவிடப்பட்ட இந்தத் தனித்தமிழ் இனக்கொள்கை  இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டையே பிரிக்குமளவுக்குப் பிரிவினை வாத உணர்வை இங்குள்ள தமிழர்களிடமும் உருவாக்கிவிட்டது.

        1967-க்குப்பின் இந்த இன்வெறி உணர்வால் தமிழகம் பெரிய ஆபத்தைச் சந்தித்துவருகிறது.இந்தி எதிர்ப்புப் போராட்டம், “தமிழர் என்ற ஒரு இனமுண்டு.அதற்கென ஒரு தனி குணமுண்டு” என்று பரணி பாடுதல்,இவையெல்லாம் பிரிவினையை ஊக்குவிக்கும் விதமாக இங்கு நடந்தது.இதற்கெல்லாம் காரணம் மதம்பரப்பும் நோக்கம் கொண்ட கிறிஸ்தவ மிஷினரிகள்தான்.

        சுதந்திரத்துக்கு முன்பே தனிதிராவிடநாடு கோரிக்கை சில பிரிவினை வாதிகளால் வைக்கப்பட்டது. ஆனால் அக்கோரிக்கை தள்ளுபடி செய்யப்பட்டது.திராவிட இயக்கத்தலைவரான ஈ.வே.இராமசாமி இந்திய சுதந்திரத்துக்கு எதிராகச் செயல்பட்டவர். வெள்ளையனின் பூட்ஸ் நக்கிகளில் முதன்மையானவர் இவர். “இந்தியாவுக்கு நீங்கள் சுதந்திரம் கொடுத்தாலும் சென்னை மாகாணப்பகுதியை மட்டுமாவது (அதாவது தமிழ்நாட்டை மட்டும்) நீங்கள் ஆளவேண்டும்”என்று வெள்ளையனிடம் கேட்டுக் கொண்டவர்தான் ஈ,வே,இராமசாமி.

        அதன்பின் தனித் தமிழ்நாடு என்ற வாதத்தை இங்கு ஆரம்பித்தது தி.மு.க தான்.பிறகு அக்கட்சி சில அரசியல் காரணங்களால் அக்கொள்கையை வெளிப்படையாகக் காட்டவில்லை. ஆனால் மற்ற பிரிவினைவாத இயக்கங்கள் அக்கொள்கையை வலுவாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.இக்கொள்கையை வலியுறுத்தும் அமைப்புகளில் முக்கியமானது “தமிழ்த் தேசியப் பேரியக்கம்” என்ற ஒரு அமைப்பு.இதன் தலைவர் பெ.மணியரசன் என்பவர்.இவர் ஒரு மார்க்ஸிஸ்ட். விடுதலைப் புலிகளோடு தொடர்புடையவர். கிறிஸ்தவ இயக்கங்களோடும் தொடர்புடையவர். தனித் தமிழ் நாடுக் கோரிக்கையில் பிடிவாதமாக இருக்குமிவர்  இந்திய இறையாண்மைக்கு எதிராகப் எப்போதும் பேசுபவர். அதனால் பலமுறை சிறை சென்றவர். 2.2.1990-ல் சென்னைப் பெரியார் திடலில் நடந்த ஒரு மாநாட்டில் இவர் கலந்துகொண்டார்.அம்மாநாட்டில் தான் தமிழ் நாட்டைத் மாநிலம் என்று அழைக்காமல் தமிழ் தேசமென்று அழைப்பது,இந்திய தேசியத்தைப் புறக்கணிப்பது, இந்தியாவை ‘தேசம்’ என்று அழைக்காமல் ‘ஒன்றியம்’ என்று அழைப்பது என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டினால் தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளையும் என்ற அடிப்படையில் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்ட குற்றத்துக்காக மணியரசன் கைது செய்யப்பட்டார்.

          இது தவிர,        தமிழக இளைஞர் முன்னணி,தமிழக மாணவர் முன்னணி,மக்கள் அதிகாரம்,புரட்சி மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியச் சங்கம், புதிய ஜனநாயக மையம், புரட்சி மாணவர்கள் முன்னணி,மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,பூவுலகின் நண்பர்கள்,எதேச்சாதிகார எதிர்ப்பு இயக்கம்,பெண்கள் எழுச்சி இயக்கம்,அரசு ஒடுக்கல் எதிர்ப்புக் கூட்டமைப்பு,சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி, சமூக நல மாணவர் எழுச்சி இயக்கம்,சமநீதி வக்கீல்கள் சங்கம்,சிவில் உரிமைகள் பாதுகாப்பு மையம்,சட்டப் பஞ்சாயத்து,சமூகக் காடு,சேலம் மக்கள் ஃபோரம்,உக்கடம் மக்கள் உரிமை பாதுகாப்பு இணைப்பு மையம்,தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி,தமிழ் நீதிக்கட்சி,தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்,தமிழ் தேசிய மக்கள் கட்சி,தமிழ் தேசியப் பாதுகாப்பு இயக்கம்,தமிழ் தேச விடுதலை இயக்கம்,சாதி ஒழிப்புப் பொதுவுடைமை முன்னணி, தமிழ்ப் பேரரசுக் கட்சி,ஈழத் தமிழகம் இயக்கம், இளந்தமிழகம், தமிழ் தேசிய முன்னணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழர்கள் இலக்கியப் பண்பாட்டுப் பேரவை, தமிழ் மையம், தமிழ்ப் புலிகள், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை,இளந்தமிழர் இயக்கம்,தமிழக உழவர் முன்னணி இவையெல்லாம் இந்தத் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் உட்பிரிவுகள்.இவை எல்லாமே தமிழ், தமிழர், தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு  தமிழ்நாட்டை இந்திய நாட்டிலிருந்து துண்டாகப் பிரிக்க நினைக்கும் பிரிவினைவாத விஷக் கிருமிகள். இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் கிறிஸ்தவ மிஷினரிகள் இருக்கின்றன.இந்த இயக்கங்களுக்கு மிஷினரிகளிடமிருந்து பணமும் ஏராளமாக வருகிறது.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

 37. பிரிவினைவாத ஆபத்து

              1958-ல் “நாம் தமிழர் கட்சி”என்ற ஒருகட்சியை ஆதித்தனார் என்பவர் உருவாக்கினார்.இந்தக் கட்சியின் முக்கியக் கொள்கையும் தனித் தமிழ்நாடுதான். இக்கட்சியினர் தங்களது பிரிவினைவாத வெறி உணர்வால் இந்திய வரைப்படத்தில் தமிழ்நாட்டைமட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளை எரித்துத் தங்கள் இனவெறி உணர்வை வெளிப்படுத்தினர்.அதனால் இக்கட்சியின் தலைவரான ஆதித்தனார் கைது செய்யப்பட்டார்.இவருக்கும் கிறிஸ்தவர்களோடு நெருக்கம் உண்டு.18.5. 2009-ல் சீமான் என்ற ஒரு திரைப்பட இயக்குனர் ‘நாம் தமிழர் இயக்கம்’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்.சைமன் என்ற பெயரையுடைய கிறிஸ்தவரான இவர் சீமான் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார்.18.5.2010-ல் நாம் தமிழர் இயக்கம் நாம் தமிழர் கட்சியாக உருப்பெற்றது.இந்தக் கட்சியின் கொள்கையும் தனி ஈழம் தனித் தமிழ்நாடு என்பதுதான்.இக்கட்சியின் தலைவரான சீமான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்.கிறிஸ்தவ மிஷினரிகளோடும் தொடர்பு வைத்துக்கொண்டு அவ்வப்போது இந்துமதத்தையும் இந்திய தேசியத்தையும்  இழிவுபடுத்திப் பேசுபவர்.

     ஐரோப்பிய மிஷினரிகள் தமிழக மண்ணில் கால் வைத்தபோதே தமிழகத்தில் தமிழினப் பிரிவினை வாதத்தை விதைத்து விட்டார்கள்.தமிழர்களை ஒரு தனிப்பட்ட இனமாகக் காட்டியவர்கள் ஐரோப்பியக் கிறிஸ்தவ மிஷினரிகள் தான்.

          ‘மே 17 இயக்கம்’ என்ற பெயரில் ஒரு இயக்கம் உள்ளது. இதுவும் பிரிவினைவாத இயக்கம். இதன் அமைப்பாளர் திருமுருகன் காந்தி என்பவர். இவரும் ஒரு கிறிஸ்தவர்தான்.டேனியல் என்ற தன் உண்மைப் பெயரை மாற்றி வைத்துக்கொண்டிருக்கிறார் இவர். தனித்தமிழ்நாடு,தனி ஈழம் இந்துமத எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு என்பவைதான் இந்த இயக்கத்தின் முக்கியக் கொள்கைகள். கிறிஸ்தவ அமைப்புக்களோடும் பிரிவினை வாதிகளோடும் இவருக்குத் தொடர்பு உண்டு.மதர் தெரசா அறக்கட்டளையிலிருந்து இந்த இயக்கத்துக்குக் கோடிக்கணக்கில் பணம் வருகிறது.

         பழ.நெடுமாறன் என்பவர் ஒரு தமிழ்த் தேசிய வாதி.ஈழப் பிரச்சனையில் முழுமையாக ஈடுபட்டு,தமிழர் தேசிய இயக்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்.மேலும் இவர் தமிழீழ விடுதலை ஆதரவாளர் கூட்டமைப்பின் தலைவரும் ஆவார்.உலகத்தமிழர் பேரவையின் நிறுவனருமான இந்த நெடுமாறன் தன் பேச்சு மற்றும் எழுத்துக்கள் மூலம் தனித்தமிழ் தேசியத்தை பிடிவாதமாக ஆதரித்ததுடன் இந்திய தேசியத்துக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் குரல் கொடுத்துவந்தார்.இந்திய ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு ஏற்படும் வகையிலும் தமிழ், தமிழர்,தமிழ்நாடு இவை மூன்றையும் ஒன்றுபட்ட இந்தியாவிலிருந்து பிரித்தெடுக்கும் வகையிலும் பேசியும் எழுதியும் வந்தார்.2002-ல் “தமிழ் ஈழம் சிவக்கிறது” என்ற தலைப்பில் இவர் எழுதிய நூல் இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் விளைவிக்கும் கருத்துக்களைக் கொண்டிருந்ததால் இவர் கைது செய்யப்பட்டார்.இவரது மற்ற நூல்களும் பறிமுதல் செய்யப்படன.இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்ததால் அவரது நூல்கள் அனைத்தையும் அழித்துவிடும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

           ‘தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்’ என்ற ஒரு அமைப்பின் பொதுச்செயலாளர் தியாகு என்பவர். “தோழர் தியாகு”என்று பிரபலமானவர். இவர் ஆரம்பத்தில் மார்க்ஸிய வாதியாக இருந்து நெக்ஸலைட்டாக மாறியவர். அதனால் இவருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.பிறகு இவருக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.சிறையிலிருந்து வெளிவந்தபின் தனது நெக்ஸலைட் மனோபாவத்தை மாற்றிக்கொண்டாலும் தமிழ்,தமிழர்,தமிழ் தேசியம் என்ற பிரிவினைக் கருத்தில் உறுதியாகத்தான் இருக்கிறார்.1994-ல் சுப.வீரபாண்டியனுடன் இணைந்து “தமிழ்த் தமிழர் இயக்கம்’ என்ற ஒரு அமைப்பை உருவாக்கினார்..அதிலிருந்து “தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்’ உருவானது.இவற்றுடன் தமிழ்த் தேசிய பொதுவுடைமைக்கட்சி சேர்ந்து ‘தமிழ்த்தேசிய முன்னணி’ என்ற ஒரு அமைப்பு உருவானது. ‘சமூக நீதித் தமிழ்த் தேசம்” என்பதுதான் இவ்வியக்கங்களின் பொதுமுழக்கம்.

        இப்படி இந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைத்து இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைத் தனியாகப்பிரித்துவிட இந்தப் பிரிவினைவாத இயக்கங்கள் என்னும் விஷச்செடிகள் ஏராளமாகத் தமிழ்நாட்டில் முளைத்திருக்கின்றன.இந்த நெடுமாறனும் தியாகுவும் சட்டப்படி தேசத்ரோகக் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறை சென்றவர்கள்.இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள். கிறிஸ்தவன் விதைத்த இனவாதக் கொள்கைமீது நம்பிக்கை கொண்டவர்கள்.அப்படிப்பட்ட இவர்களோடு தொடர்பு கொண்டுள்ள சுப.வீரபாண்டியன்,அருள்மொழி போன்ற தி.க வினரும் தேசத்ரோகக் குற்றவாளிகள்தான்.இங்குள்ள தொலைக்காட்சிச் சானல்கள் இந்த நெடுமாறன்,தியாகு போன்றோரையும் சுப.வீ.அருள்மொழி போன்றோரையும் விவாத நிகழ்ச்சிளுக்கு வரவழைத்து நாட்டு நடப்புகள் குறித்து அவர்களிடம் கருத்துக் கேட்கின்றன. இங்குள்ள தொலைக்காட்சி ஊடகங்களும் தேசத்ரோகம் செய்யும் சக்திகளுக்கே துணைபோகின்றன என்பது இதனால் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது. 

         இப்படிப் புற்றீசல் போல ஏராளமான பிரிவினைவாத இயக்கங்கள் இங்கு தோன்றுவதற்கு கிறிஸ்தவ மிஷினரிகளே காரணம்.இந்த இயக்கங்களுக்கெல்லாம் இங்குள்ள பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றான திமு.க ஆதரவு கொடுத்துவருகிறது.அ.தி.மு.க திராவிடக் கட்சிகளில் ஒன்றாக இருந்தாலும் அக்கட்சி என்றும் பிரிவினை வாத சக்திகளுக்கு ஆதரவு கொடுத்ததில்லை.அந்தக் கட்சி ஆட்சியில் இருக்கும் காலத்தில் இப்பிரிவினைவாத சக்திகள் கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இம்மாதிரியான பிரிவினைவாத இயக்கங்களை கிறிஸ்தவம் உருவாக்கியுள்ளது..__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

38. மிஷினரிகளும் திராவிட இயக்கங்களும்

       “மனித உரிமை இயக்கம்” என்ற பெயரில் சில அமைப்புகள் இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் இயங்கிவருகின்றன.இங்குள்ள இவ்வமைப்புகளுக்கும் வெளிநாட்டிலுள்ள அமைப்புகளுக்கும் தொடர்பு உண்டு.இந்த அமைப்புகளுக்கும் கிறிஸ்தவ அமைப்புகளுக்குமிடையே நெருக்கமான உறவு உண்டு. உண்மையிலேயே மனித உரிமைகள் எங்கு மீறப்படுகின்றனவோ அங்கெல்லாம் இந்த அமைப்பினர்கள் செல்லமாட்டார்கள், பயங்கரவாதமென்னும் ஆயுதத்தால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஜனங்களை கொடூரமாகக் கொன்று குவித்த ஒரு குற்றவாளி நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டால் மனித உரிமை என்ற பெயரில் அந்தக் குற்றவாளிக்குப் பரிந்து பேசுவதுதான் இந்த மனித உரிமை இயக்கங்களின் வழக்கம்.பிரிவினை வாதிகளுக்கும் பயங்கர வாதிகளுக்கும் குற்றவாளிகளுக்கும் ஆதரவு கொடுக்கும் இந்த மனித உரிமை இயக்கங்கள் மிகவும் ஆபத்தானவை, இதைப்போல பயங்கர வாதிகளையும் பிரிவினை வாதிகளையும் குற்றவாளிகளையும் தியாகிகள் போல் சித்தரிக்கும் பத்திரிக்கைகளும் நம் நாட்டில் உண்டு.    

              பிரிவினை வாதத்தின் வேரான திரவிடர் கழகத்திற்கும் அதன் வழி நடக்கும் தி.மு.க-வுக்கும் கிறிஸ்தவ மிஷினரிகளின்  ஆதரவு எப்போதுமே உண்டு. இவர்களின் ஆதரவும் மிஷினரிகளுக்கு உண்டு.தி.மு.க-வுக்கும் மிஷினரிகளுக்கும் இடையில் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்று உண்டு.அதாவது “நீங்கள் இந்து மத வெறுப்பையும் இந்தியதேசியத்துக்கு எதிர்ப்பையும்  அரசியலாகச் செய்யுங்கள். எங்களுக்கு மதம் பரப்ப உதவுங்கள்.எங்கள் சமூக ஓட்டெல்லாம் உங்களுக்குத்தான்” என்று கிறிஸ்வ மிஷினரிகள் தி.மு.க-வுடன் ஒப்பந்தம் செய்துள்ளன.இஸ்லாமிய அமைப்புகளும் தி.மு.க-வுடன் அவ்விதமே ஒப்பந்தம் செய்துள்ளன. அதை வெளிப்படையாகவே தி.மு.க-வினர் காட்டிக்கொள்கிறார்கள். தீபாவளி போன்ற இந்துப் பண்டிகைகளுக்கு தி.மு.க வினர் வாழ்த்துச் சொல்ல மாட்டார்கள்.ஆனால் பக்ரீத்,ரம்ஜான்,கிறிஸ்துமஸ் போன்ற இஸ்லாமிய, கிறிஸ்தவப் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் சொல்வார்கள். கிறிஸ்தவ,இஸ்லாமியப் பண்டிகைகளில் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏற்பாடு செய்துள்ள விருந்துகளிலும் கலந்து பங்கேற்பார்கள்.இதற்குக் காரணம் அன்னிய மதத்தவர்களோடு இவர்களுக்கு இருக்கும் உறவும் அவர்களோடு செய்துகொண்ட ஒப்பந்தமும்தான்.  

      அதைப்போல தி.க வுடனும் எழுதப்படாத ஒப்பந்தம் செய்துள்ளார்கள் கிறிஸ்தவ மிஷினரிகளும் முஸ்லிம்களும்.அதாவது “உங்களது நாத்திக வாதத்தை இந்து மத்தினரிடம் மட்டும்தான் வெளிப்படுத்த வேண்டும். நீங்கள் இந்து மத தெய்வங்களை மட்டுமே இழிவுபடுத்திப் பேசவேண்டும். உங்கள் நத்திகவாதத்தை எங்கள் விஷயத்தில் காட்டக்கூடாது. அப்படிச்செய்தால் உங்களுக்கு நிறையப் பணம் தருவோம்.எங்கள் மதத்திற்கு ஆட்களும் சேர்வார்கள்” என்பது தி.க-வுடனான மிஷினரிகளின் ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தங்களின் அடிப்படையில்தான் தி.க செயல்பட்டுவருகிறது.

       பிரிவினைவாத விஷயத்தில் முன்பு இருந்ததைவிட தற்போதுள்ள ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது.அதன் ஆரம்பமாகத்தான் 1990-ல் மணியரசனால் சென்னை மாநாட்டில் இந்தியாவை ‘ஒன்றியம்’ என்றுதான் அழைக்கவேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கருத்தைத் தற்போது தி.மு.க அரசு செயல்படுத்தியிருக்கிறது.1949 –லிருந்து தி.மு.க தலைவர்கள் யாருமே பயன்படுத்தாத “ஒன்றியம்” என்ற சொல்லைத் தற்போதைய தி.மு.க அரசு மத்திய அரசைக் குறித்துப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.அதாவது மத்திய அரசை ‘மத்திய அரசு’ என்று அழைக்காமல் ‘ஒன்றிய அரசு’ என்றுதான் அழைக்க வேண்டுமாம்.இந்த ஒன்றியம் என்ற சொல்லுக்கு ஒரு உள்ளர்த்தம் உண்டு.அதாவது “தமிழ்த் தேசியமான நான் (தமிழ்நாடு) நானாக விருப்பப்பட்டு உன்னோடு (இந்திய தேசத்தோடு) சில சௌகரியத்திற்காக சேர்ந்திருக்கிறேன்.எந்த நேரத்திலும் நான் பிரிந்துபோகலாம்” என்று கருத்து,.இன்றைய தி.மு.க-வால் பயன்படுத்தப்படும் இச்சொல் பிரிவினை வாதத்தின் வித்து.ஒரு காலத்தில் சோவியத் யூனியன் பிரிந்தது போல இங்கும் ஆகலாம்.தேசநலனுக்கும் தேசியத்துக்கும் இந்த ‘ஒன்றியம்’ என்ற சொல் ஒரு பெரும் சவால் ஆகும்.மிஷினரிகளின் ஆசைகளில் ஒன்று இதன்மூலம் நிறைவேறிவிட்டது.

        தத்துவார்த்த ரீதியில் இந்துமதத்தை எதிர்கொள்வது இயலாத காரியம் என்பதை உணர்ந்த கிறிஸ்தவர்கள் பிரிவினைவாதம், இனவாதம்,மொழிவெறி முதலியவற்றைத் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இது ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, தற்போது இங்குள்ள பாமரர்களிடம் பணத்தாசையைக் காட்டியும் மேலும் பல ஆசைகளைக் காட்டியும் பொய்களைச் சொல்லியும் பயமுறுத்தியும் “எங்கள் மதத்தில் சேராவிட்டால் உங்களுக்குத் துன்பமும் துயரமும்தான் வாழ்வில் பெருகும். எங்கள் மதத்தில் சேர்ந்தால் உங்கள் நோய்களைக் குணப்படுத்தி விடுவோம். உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்போம். உங்களுக்கு வீடுகட்டித் தருவோம்” என்றெல்லாம் பிரச்சாரம் செய்து மதம் பரப்ப ஆரம்பித்துவிட்டார்கள்.

        தூத்துக்குடியைச் சேர்ந்த மோகன்.சி லாஸரஸ் என்பவர் ஏசு விடுவிக்கிறார் என்ற ஒரு சபை நடத்திவருகிறார். இவர் 2004-ஆம் ஆண்டு திருப்பதியில் நடத்திய ஒரு கூட்டத்தில் ‘இங்குள்ளவர்கள் மதம் மாறாவிட்டால் விரைவில் இங்கு(திருப்பதியில்) தேவனின் அக்னி விழும் என்று இந்துக்களை பயமுறுத்திப் பிரச்சாரம் செய்தார். எட்டு வருடம் கழித்து தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது கிறிஸ்தவ சமயத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே வைகுண்டம் கிடைக்கும் என்று பேசினார்.எப்படிப்பட்ட இரட்டை வேடம் பாருங்கள்! திருப்பதிமலைமேல் சர்ச் கட்டுவேன் என்று கூறிய ஒரு மாநிலத்தின் முதல்வர் அவர் என்ன கதியானார் என்பது உலகறிந்த விஷயம். “திருப்பதி மலைமீது அக்னி விழும்” என்று பிரார்த்தனை செய்த இந்த மோகன் .சி.லாஸரஸை பெருமாள் எப்போது “கவனிக்கப்” போகிறார் என்று தெரியவில்லை.

            இப்படி மதம் பரப்புவதற்காக ஆசை காட்டுவதற்கும் பொய் பேசுவதற்கும் கிறிஸ்தவர்கள் அஞ்சுவதும் இல்லை கூச்சப்படுவது மில்லை.மக்கள் மனதை மாற்ற எந்த எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள்.இதைத்தானே கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன் பாலும் அவரது வழித்தோன்றல்களும் செய்துவந்தார்கள்.

           இதுவரை கிறிஸ்தவம் தோன்றிய விதத்தையும் கடந்த 2000 வருடங்களாக கிறிஸ்தவர்கள் செய்துவந்த பித்தலாட்டங்களையும் மதம் மாற்றுவதற்காக அவர்கள் செய்த/செய்துவரும் மோசடிவேலைகளையும் மிகச்சுருக்கமாக இந்தப் பதிவுகளின் மூலம் எழுதியிருக்கிறேன். கிறிஸ்தவதத்தின் உண்மை முகத்தைக் கிழித்து ஆதிமுதல் அம்மதம் செய்துவந்த கொடூரங்களயும் அக்ரமங்களையும் தோலுரித்துக் காட்டிப் பலமொழிகளில் விரிவாக எழுதப்பட்டு இதுவரை வெளிவந்த  புத்தங்கங்கள் பல்லாயிரக்கணக்கில் உள்ளன. வலைத்தளப் பதிவுகளிலும் இது சம்பந்தமாக ஏராளமான செய்திகள் காணக் கிடைக்கின்றன.அவற்றுள் தமிழ்,ஆங்கிலம்,மலையாளம் இந்த மூன்று மொழிகளில் உள்ள சுமார் 50 புத்தகங்களைப் படித்து அவற்றிலிருந்து உள்வாங்கிய விஷயங்களை கிரமப்படுத்தியும் சுருக்கியும் தெளிவாக்கியும் இந்தப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.

       கிறிஸ்தவர்களின் மோசடி வேலைகளை அம்பலப்படுத்தும் வகையில் எத்தனை நூல்கள் வெளிவந்தாலும் கிறிஸ்தவர்கள் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர்கள் தங்களின் பித்தலாட்ட வேலைகளை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இனி இந்துக்களாகிய நாம் செய்யவேண்டியது என்ன என்பதைப் பார்ப்போம்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

39. இன்றைய சூழ்நிலையில் நாம் செய்யவேண்டியது

 இந்தியாவில் எக்காலத்திலும் இந்திய இறையியல் தத்துவங்களை எதிர்கொண்டு வெற்றிபெற்று தங்களின் தத்துவங்களை நிலைநிறுத்தி மதம் பரப்ப கிறிஸ்தவர்களால் இயலாது. மாக்ஸ் முல்லர், ஜோன்ஸ் போன்ற ராக்ஷஸர்களையே தூசியாக நினைத்து ஊதிவிட்டார்கள் நம் நாட்டு மதத்துறை அறிஞர்கள். அப்படியிருக்கும்போது தெய்வநாயகம்,மோகன் சி.லாஸரஸ் போன்றோரை எல்லாம் ஒரு பொருட்டாக நினைக்கவேண்டிதில்லை. இந்து மதத்தின்மீது கிறிஸ்தவர்கள் வைத்த விமர்சனங்களுக்கெல்லாம் ஏற்கனவே நம் முன்னோர்கள் பதில் சொல்லிவிட்டார்கள்.அந்த விமர்சனங்கள் செத்த பாம்பாகிவிட்டன.அதே விமர்சனங்களையே திரும்பத் திரும்ப இன்றுள்ள கிறிஸ்தவ மிஷினரிகள் கூறிக்கொண்டு தங்களின் மதம் பரப்பும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் தற்போது நாம் செய்யவேண்டியது என்னவென்றால் அவர்கள் வைக்கும் விமர்சனங்களுக்கு விளக்கம் கூறிக்கொண்டு இருக்காமல் திருப்பி அவர்களின் மதத்தின் மீது விமர்சனங்களை நாம் வைக்கவேண்டும்.உதாரணமாக நம் மதத்தில் உள்ள ஒரு சில புராணச் செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றை அவர்கள் “இதெல்லாம் மூட நம்பிக்கை” என்று சொன்னால் அவர்களின் மதத்தில் வண்டி வண்டியாக மண்டிக் கிடக்கும் பல விஷயங்களை மூடநம்பிக்கை என்று நாம் சுட்டிக்காட்ட வேண்டும். “ராமன் கடலில் அணைகட்டியது சாத்தியமா”என்று அவன் நம்மை நோக்கிக் கேட்டால் “செத்தவன் மூன்றாம் நாள் உயிர்த்தெழுவது சாத்தியமா?”என்று நாம் திருப்பி அவனிடம் கேட்கவேண்டும்.இப்படிக் கேட்டால் ஓடிவிடுவார்கள்.

        கிறிஸ்தவத்தின்படி பாவத்தின் சம்பளம் மரணம்.பாவ மன்னிப்புக் கேட்டுவிட்டால் பாவம் போய்விடுகிறது. மேலும் ஏசு பாவிகளுக்காக இரத்தம் சிந்தி அவரது மக்களின் பாவங்களைக் கழுவிவிட்டார்.அதனால் அவர்கள் பாவமில்லாதவர்களாகிவிட்டார்கள். அதனால் அவர்களுக்கு மரணம் இல்லை.அப்படியானால் இன்று கிறிஸ்தவர்கள் நோயாலும் வயது முதிர்ச்சியாலும் மரணமடைவது ஏன்? ஏசுவின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் நோய்கள் எல்லாம் குணமாகும் என்கிறார்களே,உலகில் கொரானாவால் கிறிஸ்தவர்கள் யாருமே இறக்கவில்லையா? இப்படிபட்ட கேள்விகளை எழுப்பினால் தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

          தற்போது கிறிஸ்தவர்கள் குறிவைப்பது இந்தியாவில் கிராமப்புறங்களில் உள்ள கல்வியறிவற்ற ஏழை மக்களைத்தான்.இந்தியாவில் ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாத ஏழைமக்கள் பலகோடிப் பேர் இன்றும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் வசப்படுத்தித்தான் தங்களது மதம் மாற்றும் வேலையைக் கிறிஸ்தவர்கள் செய்கிறார்கள். உணவு, உடை, உறைவிடம் என்ற மூன்று அடிப்படைத் தேவைகளுக்கே திண்டாடும் மக்கள் அவற்றை எவன் அளிக்கிறானோ அவன் சொன்னதைத்தானே கேட்பார்கள்.இம்மாதிரி இடங்களில் நடக்கும் மதமாற்றங்களைத் தடுக்கவேண்டும் என்றால் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நாம் நிறைவேற்றச் செய்யவேண்டியதைச் செய்ய வேண்டும். ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ,டச்சுக்காரர்கள் இவர்களெல்லாம் நம் நாட்டுக்கு வந்தபோது முதன்முதலில் அவர்கள் இங்கே கட்டியது மருத்துவ மனைகளும் கல்விக் கூடங்களும்தான்.இங்குள்ள சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டுதான் அதை அவர்கள் செய்தார்கள்.இன்றும் கிறிஸ்தவர்கள் நிறுவிய கல்வி நிலையங்களும் இலவச மருத்துவமனைகளும் இங்கு ஏராளமாக இருக்கின்றன. இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் குறிப்பாக ஏழை இந்துக்களின் அத்தியாவசிய உடனடித் தேவைகளை உடனே நாம் பூர்த்திசெய்யாவிடில் அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு “உங்களுக்கு வீடு கட்டித்தருகிறோம்,உங்கள் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறோம், உங்களுக்கு மாதாமாதம் இவ்வளவு பணம் தருகிறோம்”என்றெல்லாம் கூறி அநத ஏழைகளை வசப்படுத்திக் கிறிஸ்தவன் உள்ளே நுழைந்துவிடுவான்,கஷ்டத்தில் உள்ள மக்கள் தங்கள் கஷ்டத்தை எவன் தீர்க்கிறானோ அவன் சொல்லைத்தானே கேட்பார்கள்.? இதைத்தடுக்க என்ன செய்யவேண்டும் என்றால்    நம் நாட்டு மக்கள் அனைவரும் குறிப்பாக கிராமப்புற ஏழை இந்துக்கள் கல்வி பயிலவும் ,மருத்துவ வசதி பெறவும் முறையே கட்டணமில்லாத அல்லது குறைந்த கட்டணத்துடன் கூடிய  கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவ மனைகள் இவற்றை ஏற்படுத்த இந்துமதம் வளரவேண்டும் என்று நினைக்கும் கோடீஸ்வர இந்துக்கள் மற்றும் இந்து மத மேலிடங்கள் முன்வரவேண்டும்.சுருக்கமாக இந்த நாட்டில் ஏழ்மையில் உள்ள இந்துக்களின் உலகியல் அடிப்படைத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டால்தான் அவர்கள் மதம் மாறுவதிலிருந்து அவர்களைத் தடுக்கமுடியும்.

           அடுத்தது பிரச்சாரம்.எப்படிக் கிறிஸ்தவர்கள் ஊர் ஊராக, வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்கிறார்களோ அப்படியே நாமும் நம் மதத்தைப் பிரச்சாரம் செய்யவேண்டும்.இன்று கிராமப்புற இந்துக்களிடம் சென்று ராமரின் அப்பா பெயர் என்ன என்று கேட்டுப் பாருங்கள்.திரு திரு என்றுதான் விழிப்பார்கள். ஒரு 60 வருடங்களுக்கு முன்புவரை கிராமப்புரங்களில் வயதானவர்கள் இதிஹாசக் கதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொண்டுமிருந்தார்கள். அவர்களுக்குப் பொழுதுபோக்கே அதுதான்.ஆனால் இன்றைய தலைமுறையில் அது காணாமல் போய்விட்டது. நமது சமய நெறிகள் கிராமப்புற் மக்களுக்குச் சென்றடையாதவரை அவர்களைக் கிறிஸ்தவர்களிடமிருந்து காப்பற்ற முடியாது. இந்து இயக்கங்களும் இந்து மத அன்பர்களும் கிராமப்புறங்களுக்குச் சென்று நம் மத நெறிகளைப் பிரச்சாரம் செய்யவேண்டும்.

          அடுத்து அரசாங்கம்.நாம் எவ்வளவுதான் முயற்சி எடுத்தாலும் ஆட்சியிலிருப்பவர்கள் இந்து மத ஆதரவாளர்களாக இருந்தால்தான் நம் மதத்தைக் காப்பது சாத்தியமாகும்.எந்த ஒரு மதமும் அரசாங்க ஆதரவில்லாமல் வளர முடியாது. இன்று நம்நாட்டில் உள்ள மத்திய அரசு மற்ற எல்லா மதங்களையும் ஆதரிப்பதுடன்  இந்த நாட்டின் சொந்த மதத்திற்கு மிகுந்த பாதுகாப்பு அளித்து வருகிறது. இது ஒரு நல்ல விஷயம்.ஆனால் மாநில அரசு இந்து மதத்திற்கு விரோதமாகவும் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது.அதனால்தான் தற்போது கிறிஸ்தவ இஸ்லாமியரின் ஆட்டம் தமிழ்நாட்டில் தீவிரமாக உள்ளது.இங்குள்ள இந்துக்களே இந்து விரோதக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்றால் இதைவிடக்கொடுமை என்ன வேண்டும்? வடநாட்டில் உள்ளதுபோல் இந்து மத உணர்வுள்ள இந்துக்கள் தமிழ்நாட்டில் மிகக்குறைவு.மேலும் மத விஷயத்தில் கிறிஸ்தவ, இஸ்லாமியர்களுக்கும் திராவிடக் கட்சிகளான , தி.க மற்றும் தி.மு.க வுக்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உண்டு என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதனால் கிறிஸ்தவர்கள் இங்கு எளிமையாகத் தங்கள் வேலைகளைச் செய்ய முடிகிறது. இதைத்தடுக்க இங்கு அரசியல் மாற்றம் தேவை.மக்களிடம் குறிப்பாக இளைய தலைமுறையினரிடம் இந்து உணர்வைத் தூண்டி இந்து விரோதக் கட்சிகளைத் தேர்தல் நேரங்களில் புறக்கணிக்கும்படி அவர்களுக்கு அறிவுறுத்தவேண்டும்.

         மேலும் 1947-ல் ஆங்கிலேயன் நம் நாட்டைவிட்டுச்சென்ற பின்பும் அவன் எழுதிய பல சட்டங்களைத்தான் இன்னும் நம் அரசியல் சட்டப்புத்தகங்களில் எழுதிவைத்துக்கொண்டு பின்பற்றுகிறோம். மத்தியில் இரண்டு அவைகளிலும் போதிய பலம் உள்ள அரசால் தான் சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரமுடியும்.அந்த பலம் தற்போதுள்ள அரசிடம் போதுமான அளவு இருக்கிறது. அதனால் இவர்களால் சட்டத்திருத்தம் கொண்டுவரமுடியும். குறிப்பாகத் தற்போது கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் சிறப்புச் சலுகை வழங்கும் சட்டப்பிரிவை நமது அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து உடனடியாக நீக்கவேண்டியது மிக மிக அவசியம்.இந்தச் சட்டப்பிரிவை வைத்துக்கொண்டுதான் இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் அளவுக்குமீறி ஆட்டம் போடுகிறார்கள். சிறுபான்மையினருக்கென்று இப்படிப்பட்ட சிறப்புச் சலுகைச் சட்டம் உலகில் எந்த நாட்டிலும் இல்லை.இந்தச் சட்டப்பிரிவு நமது அரசியல் சட்டத்தில் இனியும் இருந்தால் இன்னும் இருபது வருடங்களில் இந்த நாட்டு மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் கிறிஸ்தவர்களாகவும் முஸ்லிம்களுமாகத்தான் இருப்பார்கள். இந்துக்கள் இங்கு சிறுபான்மையினராகிவிடுவார்கள்..   __________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

40.  குடும்பக் கட்டுப்பாடு

      உலக மக்கள்  தொகையில் 32 சதவீதம் கிறிஸ்தவர்கள் என்றும் 23 சதவீதம் முஸ்லிம்கள் என்றும் 15 சதவீதம் இந்துக்கள் என்றும் ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. உலகில் 157 நாடுகளில் கிறிஸ்தவம் இருக்கிறது.10 நாடுகளில் இஸ்லாம் இருக்கிறது.3 நாடுகளில் மட்டுமே இந்து மதம் இருக்கிறது. மேலும் 2050-ல் இந்தியாவில் முஸ்லிம்கள்தான் அதிகம் இருப்பார்கள் என்று ஒரு புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. இந்த புள்ளிவிவரங்கள் இந்துக்களாகிய நமக்கு ஒரு மறைமுக எச்சரிக்கை விடுகிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். கிறிஸ்தவன் ஏழை மற்றும் பாமர இந்துக்களை பலவகைகளில் ஆசைகாட்டி மதம் மாற்றிக்கொண்டிருக்கிறான்.அதேநேரத்தில் முஸ்லிம்கள் லவ் ஜிஹாத் என்ற பெயரில் இந்துப் பெண்களைத் தங்கள் வலையில் விழ வைக்கிறார்கள். அதாவது கிறிஸ்தவன் இந்துக்களை கிறிஸ்தவர்களாக்க முயற்சிக்கிறான்.இஸ்லாமியன் இந்துக்களின்  ஜனத்தொகை வளராதபடி இந்துக்களின் கருவை அறுக்கிறான். அந்தக்கருவறுக்கும் வேலைதான் லவ் ஜிகாத்.அதேநேரத்தில் ஒரு விஷயத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.அதாவது லவ் ஜிகாத் என்ற பெயரில் முஸ்லிம் விரித்த வலையில் நம்பெண்கள்தான் வலியப் போய் விழுகிறார்கள். அதற்குக்காரணம் நாம் நம் பெண் குழந்தைகளுக்கு நம் குடும்ப மரபுகளை, நம் கலாசாரத்தைத் தெளிவாகக் கற்றுக்கொடுக்கவில்லை. அதுதவிர நம் பெண்குழந்தைகளை பள்ளி,கல்லூரிகளுக்கு அனுப்பிப் படிக்கவைக்கும்போது 99 சதவீதம் பெண்குழந்தைகள் கலாசார மரபுகளை மீறி எப்படிக் காதலிப்பது என்பதைத்தான் அங்கு கற்றுக்கொள்கிறார்கள்.இப்போது உள்ள கல்வி முறையும் அப்படித்தான் உள்ளது. பெண்குழந்தைகளின் சீரழிவிற்கு இதுவே காரணம். இந்தப் பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது கர்னாடக மாநிலம்  கதக் மாவட்டத்தைச்சேர்ந்த எம்.பி.ஏ  பட்டதாரியான ஒரு பிராமணப்பெண் ஆட்டோ ஓட்டும் ஒரு முஸ்லிமை விரும்பிச் சீரழிந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வந்தது. அந்தப் பெண் எம்.பி.ஏ படித்து என்ன பயன்? அந்தப் பெண் சீரழிந்ததற்கு அந்தப் பெண்ணும் அவளது குடும்பத்தினருமே காரணம்..  அவளது பெற்றோர் “நமது பெண் நன்றாகாகப் படித்து பெரிய பதவிக்கு வரவேண்டும்” என்ற எண்ணத்தில் அவளைப் படிக்கவைத்திருப்பார்கள். ஆனால் பள்ளி,மற்றும் கல்லூரிகளில் மற்ற பாடங்களோடு “உன் விருப்பப்படி எவனை வேண்டுமானாலும் காதலிக்கலாம். மதம், ஜாதியெல்லாம் அதற்குத் தடையில்லை””என்ற கல்வியும் போதிக்கப்படுகிறது. இப்படித்தானே நம் கல்வி முறையும் இருக்கிறது? அந்தக்கல்வி முறைதான் அந்தப் பெண்ணின் சீரழிவிற்குக் காரணமாகிறது. 99 சதவீதம் பெண்கள் இப்படிச் சீரழிகிறார்கள்.ஒரு சதவீதம் பெண்கள் மட்டும் எப்படியோ இதிலிருந்தெல்லாம் தப்பித்துவந்து தங்கள் குடும்ப கௌரவத்தையும் தங்கள் பெற்றோரின் கனவுகளையும் காப்பாற்றுகிறார்கள். குடும்ப கௌரவம், கலாசாரம் பெண்குழந்தைகளின் எதிர்காலம் இவற்றையெல்லாம் சரியாகப் பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்பதைப் பெண்குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்களின் முடிவுக்கே விட்டுவிடுவோம்.                   

           இந்திராகாந்தி காலத்தில் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்பட்டது. அதாவது இந்துக்கள் இரண்டு குழந்தைகளுக்குமேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்பது சட்டம் ஆனால் இந்தச் சட்டம் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இல்லை. அவர்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் எத்தனை பிள்ளைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.அவர்களின் மதத்திலேயே அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களின் விஷயத்தில் இந்த சட்டம் இல்லையாம்.இந்திராகாந்தி கொண்டுவந்த இந்தச் சட்டம் இந்துக்களின் ஜனத்தொகை குறைவதற்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய ஜனத்தொகை வளர்வதற்கும் வழிவகுத்தது.இந்தச் சட்டம் வந்த பிறகு நம் நாட்டில் இந்து மக்கள் பெரும்பாலும் இரு குழந்தைகளுக்குமேல் பெற்றுக்கொள்வதில்லை.. அதற்குமேல் பெற்றுக்கொண்டால் அது என்னமோ ஒரு அசிங்கச்செயல்போலக் கருத ஆரம்பித்து விட்டார்கள்.தற்காலத்தில் ஒரு குழந்தையே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.அந்த அளவிற்கு இந்து மக்களின் மனநிலையை அந்த சட்டம் மாற்றிவிட்டது.ஆனால் சிறுபான்மையினர் என்ற அடிப்படையில் கிறிஸ்தவ,இஸ்லாமியருக்கு சிறப்புச் சலுகைகள் அரசியல் சட்டத்தில் உள்ளதால் அவர்களுக்கு இந்தக் குடும்பக் கட்டுப்பாடுச் சட்டம் இல்லை.அவர்கள் தங்கள் மதக்கொள்கைப்படி பல பெண்களை மணந்துகொண்டு பல பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நாம் மட்டும்தான் இந்தக் குடும்பக் கட்டுப்பாடுச் சட்டத்தை அனுஷ்டித்து வருகிறோம். அவர்களின் மதங்களில் மட்டுமல்ல. நம் மதத்திலும் பல பிள்ளைகள் பெற்றுக்கொள்ளலாம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது.குறைந்த பட்சம் பத்துப்பிள்ளைகள் வரைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. (தஶாஸ்யாம் புத்ராநாதேஹி).ஆனால் நம் மக்கள் நமது மதம் சொல்லும் கருத்துக்களைப் புறந்தள்ளிவிட்டு அரசியல் வாதிகளின் வஞ்சகத் திட்டங்களுக்குப் பலியாகிவருகின்றனர். இன்றும்  ஒரு குழந்தைக்குமேல் பெற்றுக்கொண்டாலே அது அசிங்கம் என்ற மனப்போக்கு வசதி வாய்ப்புள்ளவர்களிடம் கூட இருந்து வருகிறது. சிலருக்குக் குழந்தைப்பேறே இல்லை.சிலர் அதிகப்படியான குழந்தைகள் பெறமுடியாத உடல் நிலை கொண்டவர்களாக இருக்கிறார்கள். இதெல்லாம் விதிவிலக்குகள்.பல குழந்தைகள் பெற்றுக்கொள்ள  எல்லாவிதமான வாய்ப்புகளும் அமையப் பெற்றவர்களும் கூட ஒரு குழந்தைக்குமேல் வேண்டாம் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டதுதான் மிகவும் அபாயகரமான விஷயம்.இந்த மன நிலையோடு மக்களிருந்தால் இந்துக்களின் வாரிசுகள் பெருகாது.இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் பெருகிக்கொண்டுதான் போவார்கள்.இந்த நிலை நீடித்தால் புள்ளிவிவரத்தில் சொல்லப்பட்டபடி 2050-ல் இந்தியாவில் பெரும்பாலும் அன்னிய மதத்தவர்கள்தான் இருப்பார்கள்.குழந்தை பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் இந்துக்களிடம் மனமாற்றம் அவசியம்.இந்து அமைப்புகள் மற்றும் இந்து மேலிடங்களின் பிரச்சாரங்களில் இந்துக்கள் அதிகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற கருத்தையும் வலியுறுத்தவேண்டும்.

                காங்கிரஸ்காரர்கள் என்றுமே கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியருக்கும் ஆதரவானவர்கள்தான். அதனால்தான் இந்துக்களின் எண்ணிக்கை பெருகவிடாமல் தடுக்கும் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை இந்திராகாந்தி கொண்டுவந்தார். நேருவின் குடும்பத்தில் கிறிஸ்தவ இஸ்லாமியக் கலப்பு எப்போதும் உண்டு.நேரு மௌண்ட்பேண்டன் மனைவியான லேடி மௌண்ட்பேண்டனை ஆசைநாயகியாக வைத்துக்கொண்டிருந்தார்.அவர் மகள் இந்திரா ஒரு இஸ்லாமியரைத் திருமணம் செய்துகொண்டார்.இந்திராவின் மகன் ராஜீவ் ஒரு கிறிஸ்தவப் பெண்ணை மணந்துகொண்டார். காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவரின் குடும்பமே இப்படி இருந்ததால்தான் ஆரம்பம் முதலாகவே காங்கிரஸ் கட்சி கிறிஸ்தவ,இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதும் இந்து மதத்தினரைப் பின்னுக்குத் தள்ளுவதுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்திருக்கிறது.அவ்வித நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்திராவால் கொண்டுவரப்பட்ட குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம்.

         அடுத்ததாக இந்துக்கள் தங்கள் வாரிசுகளை இந்து நெறிமுறைகளோடு வளர்க்கவேண்டும். ஆங்கிலக் கல்வியும் கலாசாரமும் பெரும்பாலும் இங்கு ஊடுருவிவிட்ட நிலையில் இன்று பல இந்துக் குடும்பங்களில் தங்களது கலாசாரமரபுகளை முற்றிலும் மறந்துவிட்டார்கள் என்றால் அது மிகையில்லை.நமக்கான நடை, உடை, பாவனை அனைத்தும் மாறிப்போய் முற்றிலும் மேற்கத்திய நடை உடை பாவனைகளே நம் இந்துக் குடும்பங்களில் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. கிறிஸ்தவன் வந்து மதம் மாற்றுவதற்கு முன்பே இங்குள்ள இந்துக்கள் பலர் அவனது பண்பாட்டைப் பின்பற்றத் தொடங்கிவிடுகின்றனர். உதாரணமாக,ஒரு குழந்தைக்குப் பிறந்தநாள் என்றால் அந்தக் குழந்தை பிறந்த வருடாந்தர நட்சத்திரத்தன்று ஆயுள் விருத்திக்காக ஆயுஷ்ய ஹோமம் செய்வது அல்லது அன்றைய தினத்தில் ஒரு கோயிலுக்குச் சென்று அந்தக்குழந்தையின் பெயருக்கு ஒரு அர்ச்சனை செய்வது என்பதுதான் நமது இந்து மரபு.ஆனால் இன்று பல இந்துக் குடும்பங்களில் இந்தப் பழக்கங்களையெல்லாம் விட்டுவிட்டு மேற்கத்தியப் பழக்கமான கேக் வெட்டும் பழக்கத்தை பின்பற்றத் தொடங்கிவிட்டார்கள். சில பிராம்மணக் குடும்பங்களில் கூட காலையில் ஆயுஷ்ய ஹோமம் செய்துவிட்டு மாலையில் கேக் வெட்டுகிறார்கள். அந்த அளவிற்கு மேற்கத்தியக் கலாசார மோகம் நம்மவர்களை ஆட்கொண்டுவிட்டது. இது மிகவும் ஆபத்தான மோகம்.ஆகவே நம் கலாசாரத்துக்கு அன்னியமான இந்தக் கேக் வெட்டும் பழக்கததை இந்துக்கள் முதலில் கைவிடவேண்டும்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

41. நம்மவரின் அன்னிய மோகம்

         ஆடை அணியும் முறையிலும் இந்துக்களில் உள்ள ஆண்,பெண்கள் கிட்டத்தட்ட மேற்கத்திய ஆடை முறைக்கே மாறிவிட்டார்கள்.இந்து ஆண்களும் பெண்களும் நமது மரபு ஆடைகளைக் கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும். “இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் படிக்கவும் வேலைபார்க்கவும் வெளியிடங்களுக்குச் செல்லவேண்டியிருப்பதால் மரபு ஆடைகள் சௌகரியமாக இல்லை,அதனால் நவீன அடைகளை அணியவேண்டியுள்ளது” என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் வீட்டிலிருக்கும் போதும் விழாக் காலங்களிலும் ஆலயங்களுக்குச் செல்லும்போதும்கூட அவ்வித நவீன ஆடைகளை அணிவது சரியன்று.அதைப்போல ஆண்கள் தவிர்க்க முடியாத இடங்கள் தவிர மற்ற இடங்களில் பேன்ட் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஆலயங்களுக்கு வரும்போது வேஷ்டி, அங்க வஸ்த்ரம் இவற்றோடுதான் வரவேண்டும்.கோயில்களுக்கு வரும்போது சட்டை அணியக்கூடாது.அதே போல் பெண்களும் மரபு ரீதியிலான உடை அணிந்துகொண்டுதான் கோயிலுக்கு வரவேண்டும்.இவ்வழக்கம் கேரளக் கோயில்களில் மிகச் சிறப்பாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தப் பழக்கம் நாட்டில் உள்ள எல்லா ஆலயங்களிலும் பின்பற்றப் படவேண்டும்.

         இதுதவிர இந்து ஆண்களில் பெரும்பாலானோரிடம்  வீடுகளில் இருக்கும்போது கைலி கட்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது.இது இந்து மரபுக்கு முரணான வழக்கம்.கைலி முஸ்லிம்களுக்கு உரியது. அது நம்முடைய ஆடையில்லை. அலுவலகங்களில் வேலைபார்க்கும் சில பிராமணர்களேகூட  வீட்டில் கைலி கட்டிக்கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.பரம அபத்தமான இந்தப் பழக்கத்தை இந்துக்கள் முதலில் கைவிடவேண்டும்.முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் எங்கிருந்தாலும் அவர்கள் தங்களது ஆடைப் பழக்கத்தை மாற்றிக்கொள்ளாமல் இன்றும் சரியாகப் பின்பற்றுவதை நாம் பார்க்கிறோம்.நம் மக்கள் மட்டும் நமது மரபு சார்ந்த ஆடைப் பழகத்தை விட்டுவிட்டு மற்றவர்களின் மரபு ஆடைகளை அணிய ஆசைப்படுகிறார்கள்.இதற்குக் காரணம் என்னவென்றால் நம் கலாசாரத்தின் முக்யத்வம்  பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை என்பதுதான். நமது மதம், பண்பாடு, கலாசாரம் சார்ந்த நெறிமுறைகளின் முக்யத்துவத்தை நம் மக்களிடம் வலியுறுத்தி எடுத்துச்சொல்ல இங்கு ஆளில்லை.இந்து மதத்தின் மேலிடங்கள் தூங்கிக் கொண்டிருக்கின்றன. சில இந்துக்  குடும்பங்களில் சில விஷயங்களில் வளர்ந்துவரும் இப்படிப்பட்ட அன்னிய மோகம் முடிவில் அன்னிய மத்தத்தவர்களின் எல்லாவிதமான பழக்க வழக்கங்களையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய சூல்நிலைக்குக் கொண்டுபோய்த் தள்ளிவிடும்.அந்த நிலையில் அன்னியன் நம் மக்களை மதம் மாற்றுவது மிக எளிதாகப் போய்விடும். ஆகவே இந்து மத பிரசாரகர்கள் இம்மாதிரியான விஷயங்களைத் தங்கள் பிரச்சாரங்களில் விளக்கிப்பேசி மக்கள் மனதிலிருக்கும் அன்னிய மோகத்தை அகற்றவேண்டும். தங்களது பாரம்பரியப் பழக்க வழக்கங்களை எல்லாநிலையிலும் பின்பற்ற அவர்களைத் தூண்ட வேண்டும்.

               எவ்வளவுதான் நவீனக் கல்விமுறை பயின்றாலும் வெளிநாட்டில்போய் படித்தாலும் நம் பிள்ளைகளுக்கு நம் குடும்ப மரபுகளின் முக்யத்வத்தை எடுத்துச்சொல்லி அதில் அவர்கள் உறுதியாக இருக்கும்படி செய்யவேண்டும்.நம் பிள்ளையாயினும் பெண்ணாயினும்  நம் குடும்ப மரபுக்கும் நமது பண்பாட்டுக்கும் நமது சமயத்துக்கும் முரண்பாடான பழக்கவழக்கத்தைக் கொண்டிருந்தால் பிள்ளைப் பாசத்தால் அதைக்கண்டு கொள்ளாமல் விடுவது தவறு. “நீ செய்வது தவறு.நம் குடும்ப மரபுக்கு நீ செய்யும் காரியம் முரணானது. இதை நீ மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்” என்று கண்டிப்புடன் சொல்லி அப்பிள்ளையைத் திருத்தவேண்டும். தகுந்த நேரத்தில் அப்படித் திருத்தாவிட்டால் அந்தப் பிள்ளை அல்லது பெண் முறையே ஒரு அன்னிய மதப் பெண்ணையோ ,பையனையோ திருமணம் செய்துகொண்டு போய் அன்னிய மதத்தவரின் வாரிசுகளைப் பெற்று வளர்த்துக் கொண்டிருப்பார்கள். இதுதான் நடக்கும்.  ஒரு இஸ்லாமியன் தன் குழந்தைளை எங்கு அனுப்பி எவ்விதமான கல்வி படிக்கவைத்தாலும்  தனது சமய, குடும்ப மரபுகளை அக்குழந்தைகளுக்கு மனதில் ஆழமாகப் பதியும்படி போதித்துத்தான் வளர்க்கிறான்.அக்குழந்தைகளும் அவ்வட்டதைவிட்டு வெளியில் வருவதில்லை.வரவும் முடியாது.உரிய காலத்தில் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை நடத்தவேண்டும் என்றும் தொழுகை செய்யும்போது எப்படி உடை அணிய வேண்டும் என்றும்,எப்படித் தொழவேண்டும் என்றும் ஒரு முஸ்லிம் தன் குழந்தைக்குச் சொல்லிக்கொடுத்து வளர்க்கிறான். அப்படியே அந்தக் குழந்தையும் பின்பற்றுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் இன்றைய இந்துக்களின் நிலை என்ன? இன்றைய சூழ்நிலையில் ஒரு இந்துத் தகப்பனுக்கே கோயிலில் எப்படி வழிபடவேண்டும் என்று தெரியவில்லை.கைலி அல்லது பேண்ட் சர்ட் போட்டுக்கொண்டு கோயிலுக்கு வருகிறான்.கோயிலில் எப்படி வழிபடவேண்டும் என்ற நெறிமுறை அவனுக்குத் தெரியவில்லை. அருகில் உள்ள நகரத்திலிருந்து எங்கள் ஊர்க்கோயிலுக்கு  ஒருவர் வழிபடவந்தார். அவர் ஒரு அரசு ஊழியர்..அவர் கோயிலை வலமிருந்து இடமாகச்|(Anti clock wise) சுற்றிவந்தார். நான் அவரிடம் இப்படிச் சுற்றக்கூடாது இடமிருந்து வலமாகத்தான் சுற்ற வேண்டும் என்றேன்.உடனே அவர் இதுவரை பல கோயில்களில் இப்படித்தான் சுற்றியிருக்கிறேன். இதுவரை இது தவறு என்று யாரும் சொல்லவில்லை,நீங்கள்தான் முதன்முதலில் சொல்லியிருக்கிறீர்கள் .இனித் திருத்திக்கொள்கிறேன் என்றார். இவரே விஷயம் தெரியாமல் இருக்கும்போது இவர் பிள்ளைக்கு எப்படிச் சரியாகச் சொல்லிக் கொடுப்பார்? இப்படி எத்தனையோ இந்துக்களுக்கு நமது மதம் சம்பந்தமான பலவிஷயங்கள் தெரியாமலிருக்கிறது.ஆனால் முஸ்லிகளிலோ கிறிஸ்தவர்களிலோ தங்கள் மத சம்பந்தமான பண்பாடு சம்பந்தமான விஷயங்களை அறியாதவன் எவனும் இருக்கமாட்டான். ஆகவே நம் பண்பாடுகளை, சமயமரபுகளை, வழிபாட்டு முறைகளை நம்மவர்களுக்கே தெளிவாக எடுத்துச் சொல்லவேண்டிய கட்டாய நிலையில் நாம் உள்ளோம்.அதை நம் இயக்கங்களும் மதத்துறைப் பிரபலங்களும் பிரசார ரீதியில் செய்யவெண்டும்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

     42.  தற்காலக்   கல்விமுறை

        அன்னியக் கலாசார,கல்வி மோகத்தில் மூழ்கிக் கிடக்கும் நம் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக நமது கலாசாரத்தை மறந்து வருகிறார்கள்.பல இந்துக்கள் தமது ஆண் குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் கிறிஸ்தவப் பள்ளிக் கூடங்களிலும் கல்லூரிகளிலும் சேர்க்கிறார்கள். தம் பிள்ளைகள் கல்வியில் சிறந்துவிளங்குவார்கள் என்று கருதி அங்கு கொண்டுபோய்ச் சேர்க்கிறார்கள்.அனால் கிறிஸ்தவ இஸ்லாமியக் கல்வி நிலையங்களில் பாடதிட்டங்களோடு சேர்த்து அவர்களது மதக் கருத்துக்களையும் போதிக்கிறார்கள்.அவர்களது பண்பாட்டையும் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்தப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் ஒரு இந்து மாணவி நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ளமுடியாது.வளையல் அணியமுடியாது.ஒரு இந்து மாணவனோ மாணவியோ ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தால் அவர்கள் படிப்பு முடிந்து வெளியில் வரும்பொது 99 சதவீதம் கிறிஸ்தவராகத்தான் வெளியே வருகிறார்கள். வெளியில் வந்தபின் தங்களது குடும்ப மரபுகளை அவர்கள் முற்றிலும் மறந்துவிடுகிறார்கள்.அதன் பிறகு அவர்களுக்குக் தங்களது சொந்தக் குடும்பப் பழக்கவழக்கங்களை போதித்தாலும் அதை எற்றுக் கொள்ளமுடியாத அளவிற்கு அவர்களது மனநிலையை மாற்றி வைத்திருக்கிறார்கள். இம்மாதிரியான சூழ்நிலையில்தான் இம்மாதிரிப் பள்ளிகளில்,கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் பலர் மிக எளிமையாக மதம் மாற்றப்படுகிறார்கள்.இங்கு படிக்கும் ஏதோ ஒருசிலர் மட்டும் தங்களது  குடும்ப மரபுகளை மறவாமல், அன்னியர் வலையில் விழாமல் தப்பித்து வெளியே வருகிறார்கள். சமீபத்தில் கூடக் கிறிஸ்தவப் பள்ளியில் படித்த ஒரு மாணவி தன்னை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டதாக ஒருதகவல் வெளிவந்தது.கிறிஸ்தவர்கள் செய்யும் பித்தலாட்டத்தை மூடிமறைக்க இங்குள்ள கிறிஸ்தவ பூட்ஸ் நக்கி  ஞாயஸ்தர்கள் “அங்கு மதமாற்றம் நடக்கவில்லை:அந்தப் பெண் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமன்று”என்றெல்லாம் கதைத்தார்கள். ஆனால் இங்குள்ள கிறிஸ்தவப் பேராயர் ஒருவன் “மதம் மாற்றுவது எங்கள் உரிமை.அதை நாங்கள் செய்தே தீருவோம்.எங்கள் பள்ளிக்கூடம் பிடிக்காவிட்டால் வேறு பள்ளிக் கூடத்தில் சேர வேண்டியதுதானே.எங்கள் பள்ளியில்தான் படிக்கவேண்டும் என்று நாங்களா கட்டாயப் படுத்தினோம்?”என்று வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டான். கல்விக் கூடங்கள் மூலம் கிறிஸ்தவன் தன் மதமாற்ற வேலையைச் செய்கிறான் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?.இதன் பிறகும் தங்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவப் பள்ளிக் கூடத்தில்தான் சேர்க்கவேண்டுமா என்பதைப் பெற்றோர்கள்தான் முடிவுசெய்துகொள்ளவேண்டும்.கிறிஸ்தவ இஸ்லாமியப் பள்ளிக் கூடங்களில் நம் பிள்ளைகளை சேர்க்காமல்                                  இருப்பதுதான் உத்தமமான காரியம்.சேர்த்த பின்பு ஐயோ,அப்பா என்று கதறுவதில் எந்தப்பயனும் இல்லை.

         அடுத்து கல்விமுறை. தற்காலத்தில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் இருக்கும் கல்விமுறை குழந்தைகளுக்கு நற்பண்பையும் ஒழுக்கத்தையும் நம் பண்பாட்டையும் கற்றுத் தருவதாக இல்லை. பண்பட்ட நம் கலாசார மரபுகள் எல்லாம் நம் பாடதிட்டத்தில் இல்லை. நம் நாட்டு வரலாற்றுப் பாடத்திட்டத்தில் நம் நாட்டில் சிறந்து விளங்கிய மன்னர்களின் வரலாறு இல்லை.நம்மை இங்கு வந்து அடிமைப்படுத்திய இஸ்லாமிய,கிறிஸ்தவ ஆட்சியாளர்களைப் பற்றிய செய்திகள் தான் பாடங்களாகக் கற்பிக்கப்படுகின்றன. ஷாஜஹான் தன் காதலிக்குக் கட்டிய கோயிலைப்பற்றி வரலாற்றுப் பாடத்தில் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஔரங்க சீப் இந்துக்களுக்குச் செய்த கொடுமைகள் பாடத்தில் இடம்பெறவில்லை.அதேபோல நம் தேசத்துக்குப் பெருமை தரும் பலவரலாற்றுச் செய்திகள் திட்டமிட்டு மறைக்கப் பட்டுவிட்டன. ஒழுக்கங்கெட்ட நபர்களைப் பெரிய பிம்பங்களாகக் காட்டி அவர்களைப்பற்றிய செய்திகள் பள்ளிப் பாடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.மெக்காலே வடிவமைத்த கல்வித்திட்டம்தான் இன்னும் இருக்கிறது. இதுதவிர இன்று பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பெரும்பாலும் இந்துக் கலாசார மரபுகளின் மீது நம்பிக்கையற்ற நாத்திக,கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும்தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் போதிக்கும் கல்விமுறை எந்த லக்ஷணத்தில் இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.சமீப காலங்களில் ஆசிரியர்கள் மாணவிகளைப் பாலியல் ரீதியில் சீண்டுவது, மாணவி ஆசிரியரைக் காதலிப்பது, ஆசிரியர் சக ஆசிரியையோடு பாலியல் தொடர்பு வைத்திருப்பது, மாணவன் ஆசிரியையைக் காதலிப்பது, இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன.இவை அனைத்துக்கும் காரணம் நம் இந்துப் பண்பாட்டைப் போதிக்கும் கல்விமுறை பள்ளிப்பாடத்திட்டங்களில் இல்லாததும் இந்துப் பண்பாட்டின் மீது நம்பிக்கைய்ற்றவர்கள் ஆசிரியர்களாகவும் ஆசிரியைகளாகவும் இருப்பதும்தான்.தற்போது உள்ள சூழ்நிலையில் இந்துப் பண்பாட்டின்மீது நம்பிக்கைகொண்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் படிக்கப் பள்ளிக்கு அனுப்பவே பயப்படுகிறார்கள். ஆகவே நம் எதிர்கால சந்ததியினர் நம் நாட்டின் உண்மை வரலாற்றையும், நம் நாட்டின் வீரமும் தீரமும் மிகுந்த வரலாற்று நாயகர்களைப் பற்றியும், நம் இந்து மரபுகளைக் கட்டமைத்த பெரியோர்களைப் பற்றியும் நமது பண்பாட்டைப் பற்றியும், மரபுகளைப் பற்றியும் அறிவதற்கும், அவர்கள் ஒழுக்கத்தோடும் பண்போடும் வளர்வதற்கும் தற்போதுள்ள கல்விமுறையை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும். இதை மத்திய அரசுதான் செய்யமுடியும். இந்த மாற்றம் உடனடியாக நிகழப்போவதில்லை. தற்போது மாநிலத்தில் உள்ள அரசின் கொள்கை மத்திய அரசின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. அதனால் கல்வித்துறைச் சீர்திருத்தம் வரவேண்டுமென்றால் மாநிலத்திலும் ஆட்சிமாற்றம் வரவேண்டும்.அந்த மாற்றத்துக்கு மக்களை ஆயத்தப்படுத்தவேண்டியது இந்துப் பிரச்சார இயக்கங்களின் கடமை.அதுவரை நம் இந்து மாணவ மாணவிகளுக்கு நம் இந்து கலாசாரக் கல்வியை போதிக்க பிரத்யேகமான கலாசார வகுப்புக்களையாவது நாம் நடத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பள்ளியில் சென்று படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில், அதாவது விடுமுறை நாட்களில் அல்லது நேரம் கிடைக்கும்போது நமது இந்து சமய,கலை கலாசார, இலக்கிய,பண்பாட்டுக் கருத்துக்களை நம் குழந்தைகள் கற்றுக்கொள்ள வசதியாக தனியாக வகுப்புக்கள் நடத்தப் படவேண்டும்.அவ்வகையான வகுப்புக்களை நடத்த நமது சமய ,ஸம்ப்ரதாய பிரபலங்கள்,பிரச்சாரகர்கள் முன்வரவேண்டும்..இவ்வித வகுப்புகளில் நமது நாட்டின் உண்மை வரலாறு எப்படி அன்னியரால் திரிக்கப்பட்டது என்பதையும், நமது உண்மையான  வரலாற்றையும் அத்துடன் நமது கலாச்சாரப் பண்பாட்டுக் கலை இலக்கியங்கள்,சமய இலக்கியங்கள் இதிஹாஸ புராணங்கள் தத்துவ சாஸ்த்ரங்கள் முதலியவற்றையும் பாடங்களாக நடத்தவேண்டும். இவற்றில் தேர்ச்சியடைந்த வல்லுனர்கள் தன்னார்வலர்களாக வந்து இப்பணியைச் செய்யவேண்டும். வீட்டிலேயே இம்மாதிரியான பாடங்களைச் சொல்லி கொடுக்கக் கூடியவர்கள் இருந்தால் நம் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளுக்கு வீட்டிலேயே கூடப் பாடம் எடுக்கலாம்.நம் எதிர்கால சந்ததியினரைக் காப்பாற்ற இது ஒன்றுதான் வழி.

         கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் தங்கள் வாரிசுகளுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தங்களது சமயக் கல்வியை உணவோடு சேர்த்து உணர்வுடன் ஊட்டிவிடுகிறார்கள். ஆனால் நம் இந்து மக்களில் பெரும்பாலோர் அப்படியில்லை. சுமார் அறுபது வருடங்களுக்கு முன் இருந்த நிலை இப்போது நம் இந்துக் குடும்பங்களில் இல்லை. நாங்களெல்லாம் சிறு குழந்தைகளாக இருந்த காலத்தில் எங்களது பெற்றோர்கள் நமது இதிஹாஸக் கதைகளைச் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்கள். நற்பண்புகளையும் நல்ல பழக்கவழக்கங்களையும் போதித்தார்கள்.அப்போது எங்களுக்கு அமைந்த ஆசிரியப் பெருமக்களும் படிப்புடன் பண்பையும் போதித்தார்கள். அக்காலத்தில் எங்கள் குழந்தைப் பருவத்தில் ஒரு பொருளை ஒருவரிடம் கொடுக்கும்போது அல்லது ஒரு பொருளை ஒருவரிடமிருந்து வாங்கும்போது இடது கையால் கொடுத்தாலோ வாங்கினாலோ அதைத் தவறு என்று சொல்லி எங்கள் பெற்றோர்கள் கண்டிப்பார்கள். எதைக் கொடுத்தாலும் வாங்கினாலும் வலது கையைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று எங்களுக்கு அறிவுரை சொல்வார்கள். ஆனால் இன்றைய காலத்தில் பெரியவர்களே இந்த முறையைப் பின்பற்றுவதில்லை. இக்காலத்தில் ஒரு அலுவலகத்தில் போய் அங்குள்ள ஒரு அதிகாரியிடம் ஏதாவது கொடுத்தால் அந்த அதிகாரி இடதுகையால் அதை வாங்குகிறான். இடது கையாலேயே கொடுக்கிறான். இந்த அரசு அதிகாரிக்கு ஒரு சாதாரண ஒழுக்க நடைமுறை கூடத் தெரியவில்லை என்றால் இவன் எப்படிப் படித்திருப்பான்,எப்படி அரசு வேலைக்கு வந்திருப்பான் என்பதெல்லாம் ஆய்வுக் குரியவையாகின்றன.இப்படிப்பட்ட இழிந்த செயல்பாடுகள் நம்மவர்களிடம் தோன்றிவிட்டன. இதற்குக் காரணம் நமது பண்பாட்டைச் சரியாக கற்றுக் கொடுக்காததும் கற்றுக் கொள்ளாததும்தான்.__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

 43. முடிவுரை

     இன்று பெரும்பாலும் நம் இந்துக் குடும்பங்களில் குழந்தைகளுக்கு நமது மரபுப் பழக்கவழக்கங்களை போதிப்பதற்கு பதிலாக அன்னியப் பழக்கவழக்கங்களைத்தான் போதித்து வளர்க்கிறார்கள். உணவு, உடை, பேச்சு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் நம் பிள்ளை ஒரு ஆங்கிலேயக் குழந்தையைப் போல்தான் இருக்கவேண்டும் என்று பல பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் அக்குழந்தை பெரியவனாகி குடும்ப நெறிமுறைகளைச் சிதைக்கும் போதுதான் “ஆஹா! நம் குழந்தையை இப்படி வளர்த்திருக்கக் கூடாது”என்று ஒரு இந்துப் பெற்றோர் கவலையடைகின்றனர்.அப்போது கவலைப்பட்டு என்ன பயன்?

       ஆகவே நம் குழந்தைகளை நம் மரபுப்படியே வளர்க்கவேண்டும்.நம் வீட்டில் உள்ள சிறு குழந்தைகளை தினமும் அவரவர் மரபுப்படி கோயிலுக்குப் போகச் சொல்லவேண்டும். அல்லது வீட்டிலேயே இறைவழிபாடு செய்யக் குழந்தைகளைத் தூண்ட வேண்டும்.

        நமது இந்து மரபில் நெற்றிக்கு இட்டுக் கொள்வது என்பது முக்கியமான ஒன்று. ஒவ்வொரு இந்துவும் இந்து மதத்தில் அவரவர் பின்பற்றும் மரபுக்குரிய புனித அடையாளங்களை நெற்றியில் கட்டாயம் அணியவேண்டும்.பெரும்பாலான இந்துக்கள் தற்காலத்தில் இதைப் பின்பற்றுவதில்லை. பல இந்துக்களின் நெற்றிகள் பாழ் நெற்றிகளாகவே உள்ளன. தீட்டுக் காலங்கள் தவிர மற்ற நேரங்களில் நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல் இருக்கக் கூடாது என்பது நமது இந்து மரபு. ஏன் இந்த மரபை பல இந்துக்கள் பின்பற்றுவதில்லை? கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் எக்காலத்திலும் எவ்விடத்திலும் தனது மத நடைமுறையைப் பின்பற்றும்போது  ஒரு இந்து தன் மரபைப் பின்பற்றத் தயங்குவது ஏன்? காரணம் தற்கால இந்துக்களுக்கு தங்களது பண்டைய மரபுகளின்மீது பிடிப்புக் குறைந்து வருகிறது. தற்காலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் பெரும்பாலான இந்து மாணவ மாணவியர் தங்கள் நெற்றிகளில் எதுவும் இட்டுக் கொள்வதில்லை.அரசு அலுவலகங்களில் மற்றும் பல இடங்களில் வேலைபார்க்கும் பெரும்பாலான இந்துக்களின் நெற்றிகள் வெற்றிடமாகவே உள்ளன. இதற்கும் காரணம் அன்னியப் பழக்கவழக்கங்களின் தாக்கம்தான். “நீங்கள் ஒரு இந்து.நீங்கள் ஏன் நெற்றியில் எதுவும் இட்டுக்கொள்ளவில்லை?”என்று கேட்டதற்கு ஒருவர் சொன்னபதில் “நான் கிறிஸ்தவரையும் இஸ்லாமியரையும் சகோதரர்களாகப் பாவிக்கிறேன்.அவர்கள் நெற்றியில் எதுவும் அணியாதபோது நான் மட்டும் அணிந்தால் சரியாக இருக்காது” என்பது. இதுமாதிரி ஒரு முட்டாள்தனம் எங்காவது உண்டா? எவ்வளவுதான் நம்முடன் ஒரு கிறிஸ்தவனோ இஸ்லாமியனோ நெருங்கிப் பழகினாலும் அவனது சமய மரபை நமக்காக விட்டுவிடுவானா? ஒருக்காலும் விடமாட்டான். பிறகு ஏன் இந்த இந்துக்களுக்கு மட்டும் இந்த இழிவான சிந்தனை? இம்மாதிரி சிந்தனையுள்ள இந்துக்கள் பலபேர் இருக்கிறார்கள். இவர்களைத்தான் முதலில் திருத்தவேண்டும்.இல்லாவிட்டால் ஒழுங்காக இருக்கும் பல இந்துக்களை இவர்களே கெடுத்துவிடுவார்கள்.ஆகவே ஒவ்வொரு இந்துவும் தன் ஸம்ப்ரதாயத்துக்குரிய புனிதச் சின்னங்களை நெற்றியில் எப்போதும் அணிந்து கொள்ளவேண்டும்.தங்கள் குழந்தைகளுக்கும் அந்தப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். மனிதநேய அடிப்படையில் எல்லோருடனும் அன்பாக இருப்பது, கஷ்டநிலையில்அடுத்தவர்க்கு உதவிசெய்வது இம்மாதிரியான பொது நற்குணங்கள் சாதி, மத பேதத்தைத் தாண்டி எல்லோருக்கும் இருக்கவேண்டியது அவசியம்தான். ஆனால் இம்மாதிரியான மனிதநேயப் பண்புகளுக்காக தங்களது சமய மரபுகளை, குடும்ப மரபுகளை கைவிடவேண்டிய அவசியமில்லை.ஒரு நல்ல இந்துவாக இருந்துகொண்டு எல்லோருடனும் நட்புடனும் அன்புடனும் இருக்கலாம்.அடுத்தவர்களின் மீது நாம் செலுத்தும் அன்பும் நட்பும் நம் மரபுகளைச் சீர்குலைக்கும் அளவிற்கு இருக்கக்கூடாது.அதனால் தொன்மையான நமது கலாசார மரபுகளைக் கைவிட்ட இந்துக்களை முதலில் நாம் கரைசேர்க்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்து மேலிடங்களும்,பிரச்சாரகர்களும் தற்கால இந்துக்களிடம் “ஒவ்வொரு இந்துவும் கண்டிப்பாக தங்களது மரபின்படி நெற்றிக்கு வலியுறுத்திக் கூற வேண்டும்.

 

        பொதுவாக எந்த ஒரு விஷயமும் பிரச்சாரத்தால்தான் மக்களைச் சென்றடையமுடியும். நமது மதத்தில் உள்ள மேலிடங்கள்  ஊர் ஊராகச்சென்று பிரச்சாரம் செய்வதோடு உலகநாடுகளுக்கும் சென்று நமது சமய மரபுகளைப் பிரச்சாரம் செய்யவேண்டும். இப்படி நாம் சொன்னால் உடனே சிலர் “நம் ஸம்ப்ரதாயத்தில் வெளிநாடு செல்லக்கூடாது என்று விதி உள்ளது” என்பார்கள். அதாவது ஜீவனம் செய்வதற்காக தனம் சம்பாதிக்க ஒரு பிராமணன் கடல்தாண்டி அன்னிய தேசம் செல்லக்கூடாது என்றுதான் சொல்லப் பட்டுள்ளது. ஆனால் பகவானுடைய புகழைச் சொல்ல,நம் சமய நெறியைப் பரப்ப  வெளிநாடு செல்லக் கூடாது என்று எந்த நூலும் சொல்லவில்லை. எம்பெருமானுடைய திருநாம ஒலி கேட்டால் “நரகமே சொர்க்கமாகும்” என்கிறார் ஆழ்வார். அதை செய்து காட்டியவர் அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கத்தின் ஸ்தாபகரான பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல. பிரபுபாதா அவர்கள். “கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல், மலியப் புகுந்திசைபாடி யாடி யுழிதரக்கண்டோம்.” என்ற ஆழ்வாரின் அமுதச்சொல் பலித்துவிட்டது. ஆழ்வார்கள் தீர்க்க தரிசிகள் அல்லவா! இன்று உலகம் முழுக்க கிருஷ்ணபக்தி பரவிவிட்டது.பெருந்திரளாக வெளிநாட்டுமக்கள் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் விரும்பிச் சேர்ந்து வருகிறார்கள்.இன்னும் சில வருடங்களில் மேற்கு உலகம் முழுவதும் கிருஷ்ண மயமாகிவிடும்.”ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்” என்பதை தனது அரிய முயற்சியால் செய்துகாட்டியவர் பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல.பிரபுபாதா அவர்கள். நம் மண்ணில் தோன்றிய, உலகம் போற்றும் ஸ்ரீராமாநுஜ ஸித்தாந்தத்தை உலகில் உள்ள பல்வேறு தேசத்து மக்களுக்கும் கொண்டுசென்ற பெருமை பக்தி வேதாந்த ஸ்வாமி ஸ்ரீல.பிரபுபாதா அவர்களையே சேரும் என்றால் அது மிகையில்லை.

         நமது ஸநாதன ஆன்மிகத் தத்துவங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. உலகில் உள்ள ஜீவாத்மாக்கள் அனைத்தையும் ஈர்க்கும் சக்திவாய்ந்தவை. இரும்பை ஈர்க்கும் காந்தம் போன்றவை. இரும்பு உள்ள இடத்திற்கு காந்தத்தைக் கொண்டு செல்லவேண்டும்.ஆகவே பிரச்சாரம் ஒன்றுதான் நமது ஸனாதன மதத்தை உலகில் உள்ள எல்லாத் தரப்பு மக்களிடத்தும் கொண்டுபோய்ச் சேர்க்கும்.அதை நமது சமய மேலிடங்கள் மேற்கொள்ள வேண்டும்.

       கிறிஸ்தவன் சமீப காலத்தில் மேற்கொள்வது பிரச்சார யுக்திதான். நமது மதத்தை வளர்க்க அதையே நாமும் மேற்கொள்ள வேண்டும்.எதிரி எந்த யுக்தியைக் கையாள்கிறானோ அதே யுக்தியைக் கையாள்வதே தர்மம். “கத்தி எடுத்தவன் கத்தியாலே அழிவான்” (மாத்யூ-35:52) என்று அவனது மதநூல் கூறியதையே அவன் லட்சியம் செய்யவில்லை.மோசடி செய்பவன் மோசடியாலே அழிவான் என்பதும் கிறிஸ்தவனுக்குப் புரியவில்லை.

       எவ்வளவுதான் மோசடிவேலை செய்தாலும் இந்துமதத்தை என்றும் அழிக்க முடியாது என்பதை கிறிஸ்தவர்களில் சிலர் தெளிவாக உணர்ந்து விட்டார்கள்.  ஆர்தர் ஜார்ஜ் வில்லியர்ஸ் பீல் (Arthur George Villiers Peel 1869–1956)  என்பவர் 1912 –ல்  “The Future of England” என்ற நூலை எழுதினார்.அந்நூலில்  அவர் இந்தியாவில் மதம் மாற்றும் ஆங்கிலக் கிறிஸ்தவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அறிவுரை என்பதைவிட எச்சரிக்கை என்றே சொல்லவேண்டும். அந்த அறிவுரையைக் கிறிஸ்தவ சமயப் பரப்பாளர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. அதேநேரத்தில் அவர் சொன்ன விஷயத்தில் 100 சதவீதம் நியாயம் உள்ளது என்பதை நடைமுறையிலேயே நாம் பார்த்து வருகிறோம்.ஜார்ஜ் பீல் அவர்கள் கிறிஸ்தவர்களுக்கு விடுத்த அந்த எச்சரிக்கயோடு இந்தத் தொடர் கட்டுரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்.அந்த எச்சரிக்கை பின் பின்வருமாறு:

“அவர்களின்(இந்துக்களின்) சமய நம்பிக்கையை நாம் அழிக்க முற்பட்டால் நமது சமய நம்பிக்கையை நாசமாக்க அவர்களும் முனைவார்கள்.அவர்கள் புத்தியற்றவர்கள் அல்லர். அவர்களது தியானத்தின் வலிமை உண்மையை நாம் கூர்ந்து நோக்குமாறு செய்துவிடும்.அவர்களின் ஞான ஆற்றல் நம்மை அவர்களுக்கு அடிமைப்படுத்திவிடும்…….நாம் வருவதற்கு முன் அவள் (இந்தியா) கொடுங்கோலர்கள் மற்றும் காட்டுமிராண்டிகளின் விளையாட்டுக் கூடமாகவோ நடைபாதையாகவோ இருந்தாள். அவள் அப்போது இறந்தவளாக இருந்திருக்கலாம் அல்லது உறங்கி யிருக்கலாம். உறங்குபவள் விழித்துவிடுவாள். சடலம் என்று நினைக்கப்பட்ட இந்திய ஞானம் உயிர்பெற்று எழுந்து நின்றுவிடும். சடலமென்று கருதப்பட்ட நபர் உறக்கத்தில் இருந்தவர்தான்.மரணிக்கவில்லை.தற்போதைய சூழலை எதிர்த்து நின்று, இந்துமதம் ஒருநாளும் தோற்காது”

           பீல் சொன்னபடி தற்போதைய இந்தியா உறக்கத்திலிருந்து விழித்துக்கொண்டாள்.ஆனால் இன்னும் படுக்கையிலிருந்து எழுந்திருக்கவில்லை. விழித்துக் கொண்டபின் எழுந்துதானே ஆகவேண்டும்.                     ஜெய் ஹிந்த்__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard