திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுவோர்!
இஸ்லாமியர் ஆகியோர் சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.
இதைவிடப் பெரிய கொடுமை என்ன வென்றால் தற்காலத்தில் நாஸ்திகம் பேசும் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் பொதுவுடைமை வாதிகளும்கூட, திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.முதலில் மேற்படி ஜைனம் முதலிய மதங்களின் கருத்துக்களுக்கும் நாஸ்திகக் கருத்துக்களுக்கும் அணுவளவும் திருக்குறளில் இடமில்லை என்பதைத் தக்க ஆதாரங்களோடு நிரூபிப்போம்.
திருக்குறளின் முதற்குறளிலேயே இறைவனே உலகிற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது. இக்கருத்து நாஸ்திகர்களுக்கும் பொருள்முதல் வாதிகளுக்கும் உடன்பாடான கருத்தன்று.மேலும் தெய்வ வழிபாடு, ஊழ் என்று சொல்லப்படும் விதி,மறுபிறப்பு,வினைப்பயன்,வேத வைதிக நெறி,இல்லறப் பெண்களின் ஒழுக்கம்,கற்பு, பிறனில் விழையாமை, கள்ளுண்ணாமை,புலால் மறுத்தல், தவம்,துறவு இவற்றைப் பற்றிய விஷயங்கள் எல்லாம் திருக்குறளில் சிறப்பாகச் சொல்லப் படுகின்றன.பகுத்தறிவுவாதிகள் என்று தங்களை அடையாளப் படுத்திக்கொள்ளும் நாஸ்திகர்களுக்கும், பொதுவுடைமை வாதிகளுக்கும் திருவள்ளுவர் கூறும் இவ்விஷயங்களிலெல்லாம் உடன்பாடு உண்டா? திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இன்றைய பகுத்தறிவுவாதிகளின் தந்தை என்று சொல்லப்படும் பகுத்தறிவுப் பகலவனுக்கு ஆண்களின் ஒழுக்கம்,பெண்களின் கற்பு,மரபுவழியான திருமணமுறை,பிறனில் விழையாமை இவையெல்லாம் பிடிக்காத விஷயங்கள்.திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது என்றும்,திருமணமுறை ஒழிக்கப்படவேண்டும் என்றும்,ஒருவனுடைய மனைவி உப்பு,மிளகாயைப்போல் அவனுக்கு மட்டும் தனி உடைமைச் சொத்தாக நினைப்பது தவறு என்றும்,கற்பு,விபசாரம் போன்ற வார்த்தைகள் பெண்களின் சுதந்திர வாழ்க்கைக்கு எதிரானவை என்றும்,திருக்குறள் பெண்களை அடிமையாக்கி விட்டது என்றும்,திருக்குறள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கெட்ட நாற்றமுள்ள மலம் என்றும் இவர்களின் தந்தையான பகுத்தறிவுப் பகலவனே கூறியிருக்கிறார். பொதுவுடைமை ஸித்தாந்த வாதிகளுக்கெல்லாம் ஆசான் என்று சொல்லப்படும் கார்ல் மார்க்ஸ்,பெண்ணைத் திருமணம் செய்தால், அவள் தனிஉடைமை ஆகிவிடுவாள் என்றும், அவளைப் பொதுவுடைமையாக்கி எல்லா ஆண்களுக்கும் பொதுவான விபசாரியாக்கவேண்டும் என்றும் private property and communism என்ற தலைப்பில் economic and philosophic manuscript of 1844 என்பதில் எழுதியுள்ளார்.இப்படியெல்லாம் கூறியிருக்கின்ற இந்த ஆசான்களின் வாரிசுகளான இன்றைய பகுத்தறிவு வாதிகளுக்கும், பொதுவுடைமை வாதிகளுக்கும் திருக்குறளை உரிமைகொண்டாட என்ன அருகதை இருக்கிறது?இவர்களுக்கும் திருக்குறளுக்கும் என்ன ஸம்பந்தம்?திருக்குறளைப் பற்றிப்பேசக்கூட இவர்களுக்கு உரிமையும் தகுதியும் இல்லை.ஆகவே, திருக்குறள் நாஸ்திக நூலும் அன்று.திருவள்ளுவர் நாஸ்திகரும் அல்லர்.அதனால் இந்த நாஸ்திக இயக்க வாதிகள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறள் பற்றியும் கருத்துச்சொல்வது என்பது ஒரு மட்டரகமான அரசியல் என்றுதான் சொல்லவேண்டும்.
மூன்றாவதாக, சமணர்களும் பௌத்தர்களும் வேள்விக்கும் அதற்கு அடிப்படையான வேதங்களுக்கும் எதிரானவர்கள். திருவள்ளுவர்,
நான்காவதாக, பூமியில் விளையும் கிழங்குவகைகளைக்கூட சாப்பிடக்கூடாது என்னுமளவிற்கு அஹிம்ஸையை வலியுறுத்துவது சமண சமயம்.ஆனால் உழவுத்தொழிலான வேளாண்மையை ஆதரித்துப் பத்துப்பாடல்கள் பாடியுள்ளார் திருவள்ளுவர்.இதனாலும் திருவள்ளுவர் சமணக்கொள்கைக்கு எதிரானவர் என்பது தெளிவாகிறது.பௌத்தம் அஹிம்ஸையை வலியுறுத்தினாலும் கொல்லாமல் தானாகவே இறந்த விலங்கின் மாமிசத்தை உண்ணலாம் என்று சொல்கிறது அந்தமதம்.ஆனால் திருவள்ளுவரோ,
“தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்”
என்ற குறட்பாவின் மூலம் பிற உயிர்களின் மாமிசத்தை உண்பவர்களைக் கண்டிக்கிறார். இவர் எப்படி பௌத்தராக இருக்கமுடியும்?
ஐந்தாவதாக,துறவறம்,நிலையாமை ஆகியவற்றையே முழுமையாக வலியுறுத்தும் சமண பௌத்த சமயங்களுக்கு இல்லற இன்பம், காம சுகம், மக்கட்பேறு முதலியவை எல்லாம் ஸம்பந்தமில்லாத விஷயங்கள்.ஆனால் திருவள்ளுவர் இல்லறம், அங்கீகரிக்கப்பட்ட தர்மதோடு கூடிய காம சுகம், இவற்றையெல்லாம் ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார்.இதனாலும் சமண பௌத்தக் கருத்துக்களுக்கும் திருக்குறளின் கருத்துக்களுக்கும் எந்தவித உறவும் இல்லை என்பது புலனாகிறது.
ஆறாவதாக அசோகர், புத்தசமயத்தைத் தழுவியபின் போரைக் கைவிட்டார் என்று சொல்லப்படுகிறது.அதனால் போர் புத்த சமயத்துக்கு, உடன்பாடான விஷயமன்று என்பது புலப்படுகிறது. தாவரங்கள்,புழு பூச்சிகள்,கண்ணுக்குத் தெரியாத உயிரினங்கள், இவற்றைக் கூடக் கொல்லக்கூடாது என்ற கொள்கையை உடைய சமணர்கள் மனிதர்களைக் கொல்லும் போரை ஒருபோதும் ஆதரிக்கமாட்டார்கள். ஆனால் திருவள்ளுவரோ போரை ஆதரித்துப் பல குறட்பாக்கள் எழுதியுள்ளார்.இதனாலும் திருவள்ளுவரின் கருத்து சமண பௌத்த மதக்கருத்துக்களுக்கு முரணானது என்பது புலனாகிறது. இந்த ஆறு முக்கியமான காரணங்களின் அடிப்படையில் பார்த்தால், சமணர்களும் பௌத்தர்களும், திருவள்ளுவரையும் திருக்குறளையும் சொந்தம் கொண்டாட, எந்தவித நியாயமும் உரிமையும் அணுவளவும் இல்லை என்பதுதான் புலப்படுகிறது.
இதைத்தவிர, கிறிஸ்தவரும் இஸ்லாமியரும்கூடத் திருவள்ளுவரையும் திருக்குறளையும் உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.கிறிஸ்தவ மதத்திலும் இஸ்லாமிய மதத்திலும் புலால் உணவு அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.ஆனால் திருக்குறளில் புலால் உணவு கண்டிக்கப்பட்டிருக்கிறது.அதனால் திருவள்ளுவரை கிறிஸ்தவர் என்று கூறுவதற்கோ இஸ்லாமியர் என்று கூறுவதற்கோ எந்தவிதமான அடிப்படையுமில்லை.
திருக்குறளில் கடவுள் வாழ்த்து-இரண்டாவது குறளில் “நற்றாள் தொழார் எனின்” என்று வருகிறது.இதில் வரும் ‘தொழுதல்’ என்ற வார்த்தை, இஸ்லாமுக்குரிய வார்த்தை என்றும், முஸ்லிம்கள்தான் வழிபாட்டை ‘தொழுதல்’ என்று சொல்வார்கள் என்றும், மற்ற மதத்தினர் வழிபாட்டுக்கு அச்சொல்லைப் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்குபெறும் ஒரு இஸ்லாமியர் கூறிவருகிறார்.இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால், இந்த இஸ்லாமியருக்குத் தன் மதத்தைப்பற்றியும் மற்ற மதங்களைப்பற்றியும் ஆழமான அறிவு இல்லை என்பதுதான் தெரிகிறது.இஸ்லாமியரின் வழிபாட்டுக்கு அரபி மொழியில் “நமாஸ்” என்று பெயர்.அச்சொல்லுக்கு இணையாகத், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் தமிழில் உள்ள "தொழுகை" என்ற சொல்லை அமைத்துக்கொண்டார்கள். 'நின் தாள் நிழல் தொழுதே’ என்றும், ‘நிற் பேணுதும் தொழுதே’ என்றும், ‘நின் அடி தொழுதனெம்’என்றும் சங்க இலக்கியமான பரிபாடலில் ‘தொழுதல்’ என்ற சொல் திருமால் வழிபாட்டைக் குறித்துச் சொல்லப்படுகிறது.ஆகவே "தொழுதல்" என்ற சொல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமே உரியது என்று கூறும் இந்த இஸ்லாமியருக்கு, மதங்கள் ஸம்பந்தமான அடிப்படை அறிவு இல்லை என்றுதான் கூறவேண்டியுள்ளது. அதனால் திருக்குறளையும் திருவள்ளுவரையும் சொந்தம் கொண்டாட இஸ்லாமியருக்கோ கிறிஸ்தவர்களுக்கோ எந்தவித உரிமையும் இல்லை என்பது தெளிவாகிறது.ஆனால் ஏன் அவர்கள் திருவள்ளுவரைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள் என்றால் அதுவும் ஒரு அரசியல்தான்