4:48. நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கமாட்டான்; இதைத்தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்; யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக மிகவும் பெரிய பாவத்தையே கற்பனை செய்கின்றார்கள்.
நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல் (முஹம்மதே!) உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம். இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், (அவரது) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியோருக்கும் தூதுச் செய்தி அறிவித்தோம். தாவூதுக்கு ஸபூரை வழங்கினோம். (அல்குர்ஆன் 4:163)
(முஹம்மதே!) உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை அவன் உமக்கு அருளினான். இது தனக்கு முன் சென்றவற்றை உண்மைப் படுத்துகிறது. இதற்கு முன் மனிதர்களுக்கு நேர் வழி காட்ட தவ்ராத்தையும், இஞ்சீலையும் அவன் அருளினான். (பொய்யை விட்டு உண்மையைப்) பிரித்துக் காட்டும் வழி முறையையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் வசனங்களை ஏற்க மறுப்போருக்குக் கடுமையான வேதனை உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; தண்டிப்பவன். (அல்குர்ஆன் 3:3)
நபி (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டதைப் போன்றே எல்லா வேதங்களும் அருளப்பட்டன என்பதையும், அந்த வேதங்களில் உள்ளவற்றை திருக்குர்ஆன் உண்மைப்படுத்துகிறது என்பதையும் இந்த வசனங்கள் எடுத்துரைக்கின்றன.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 42:51)
இறைத் தூதர்களிடம் அல்லாஹ் பேசுவதற்கு மூன்று விதமான வழிகளைக் கையாள்வதாக இந்த வசனம் தெரிவிக்கின்றது. எனவே இந்த மூன்று வழிகளின் அடிப்படையில் தான் தவ்ராத், இஞ்சீல், ஸபூர் உள்ளிட்ட எல்லா வேதங்களும் அருளப்பட்டுள்ளன.
ஆச்சா...
எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழி கேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர் வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 14:4)
குர்ஆனில் நான்கு வேதங் களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அவைகள் பின்வருமாறு:
1. ஸபூர்: தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)
2. தவ்ராத்: மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (நூல்: புகாரீ 4116, 4367)
3. இஞ்சில்: ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)
4. திருக்குர்ஆன்: முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)
இந்த நான்கு வேதங்களின் பெயர்கள் மட்டுமே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
அந்த நான்கு வேதங்களும் :
1. தவ்ராத் - இது மூஸா நபியவர்களுக்கு ஹிப்ரு மொழியில் அருளப்பட்டது.
2. ஸபூர் - இது தாவூத் நபியவர்களுக்கு கிரேக்க மொழியில் அருளப்பட்டது.
3. இன்ஜீல் - இது ஈஸா நபியவர்களுக்கு சிரிய மொழியில் அருளப்பட்டது.
4. அல் குர்ஆன் - இது முகமதுவுக்கு அரபி மொழியில் அருளப்பட்டது.
ஆனால் பாருங்க...
2:130. இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர; நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்; நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.