New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்


Guru

Status: Offline
Posts: 23904
Date:
திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்
Permalink  
 


திருக்குறள் போற்றும் சமயம் -நுழைவாயில்

திருக்குறள் தமிழில் எழுந்த ஒரு மிக முக்கியமான நூல். திருக்குறள் இயற்றப்பட்ட காலம் முதலாக அது ஒரு தனி சிறப்பு இடம் பெற்றது. இயற்றிய அடுத்த நூற்றாண்டில் எழுந்த மணக்குடவர் உரையோடு அதற்கு பண்டைய காலத்திலேயே பத்து உரைகள் இருந்தன என்று ஒரு பாடல் கூறுவதில் ஐந்து மட்டுமே கிடைத்துள்ளன. வள்ளுவம் இயற்றிய அடுத்த  நூற்றாண்டு  தொடங்கி  திறனாய்வு செய்து திருவள்ளுவமாலை என்ற தொகுப்பும் எழுதப் பட்டு உள்ளது.

16ம் நூற்றாண்டு முதல் இந்தியாவை ஆக்கிரமித்து அடிமை செய்த  பல்வேறு ஐரோப்பிய நாட்டு கிறிஸ்தவ மிஷநரிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கி இருந்த போதிலும் பெரும்பாலோனோர் திருக்குறள் கற்றனர் என்பது வள்ளுவம் பரவலாக மடங்கள்/குருகுலப் பள்ளிகளில் போற்றிக் கற்றதும், பல்வேறு சுவடிகள் இருந்ததையும் உறுதி செய்யும். திருக்குறளின் சிறப்பை உணர்ந்து அது உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல் ஆகும 

சங்க இலக்கியத்தில் உள்ள யாப்பு நன்கு நெகிழ்ச்சி பெற்று இலக்கிய செறிவு அதிகமாகி பல புதிய சொற்கள் பயன்படுத்திம் இலக்கண மாற்றங்கள் அடைந்த பின்பு இடைக்காலத்தில் குறள் வெண்பாவில் இயற்றப்பட்ட நூல் திருக்குறள் ஆகும். திருக்குறளில் வள்ளுவர் பயன்படுத்தியுள்ள உவமைகள், மொழிநடை, சொல்லாட்சி போன்றவை தமிழ் மீது காதல் உள்ள அனைவரையும் ஈர்க்கும்.

திருவள்ளுவர் மிகவும் ஆழமான கருத்துக்களை எளிமையாக அனைவரும் புரியும் வழியில் எடுத்துக்காட்டியுள்ளார்.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு.  குறள் 339: நிலையாமை

திருவள்ளுவர் நாம் தூங்க செல்வது போன்று தான் நம் இறப்பு மீண்டும் தூங்கியபின் எழுவது போல தான் பிறப்பு என்கிறார்; நாம் மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து இந்த உலகில் வாழ்ந்து வருகிறோம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். குறள் 10: கடவுள் வாழ்த்து

இந்தப் பிறவிப் பெருங்கடலை கடப்பது இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே முடியும் என தெளிவாக கூறுகிறார்

 

திருவள்ளுவர்ஒருமுழுமையானஆத்திகர்

கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவர் பயன்படுத்தும் குணப்பெயர்கள் - தனக்கு உவமை இல்லாதான், வேண்டுதல் வேண்டாமை இலான், ஆதி பகவன், வாலறிவன் இந்தப் பதங்கள் எல்லாமே உலகைப் படைத்த கடவுளை - பரம்பொருள் அல்லது இந்திய ஞானமரபில் பிரம்மத்தையே குறிக்கும் 

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.           குறள் 2: கடவுள் வாழ்த்து

கற்பதன் முழு பயனே இறைவனின் திருவடியைப் பற்றிக் கொள்வதற்கே என வலியுறுத்துகிறார்

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.  குறள் 9: கடவுள் வாழ்த்து

இறைவன் திருவடியை தன் தலையால் வணங்காதவர் தலையில் உள்ள ஐம்பொறிகளால் பயனில்லை என்றும் திருவள்ளுவர் மிகத் தெளிவாக கூறுகிறார்

 

வள்ளுவர் பார்வையில் மனிதனின் கல்வியும் அறிவும் எதற்கு

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்

செம்பொருள் காண்பது அறிவு  : குறள் 358: மெய்யுணர்தல்

அறியாமையாகிய மீண்டும் மீண்டும் பிறப்பதில் இருந்து வீடுபேறு அடையும் வழியை தேடுவதற்கே அறிவு ஆகும்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. குறள் 351: மெய்யுணர்தல்

வாழ்வின் அடிப்படையான மெய்ப்பொருளை நாடாது மற்றவர்கள் மற்றவற்றை முக்கியம் என வாழ்வதால் தான் துன்பம் உள்ள பிறவிகள் உண்டாகிறது__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

திருவள்ளுவர்இறைவன்மறுப்பைமுழுமையாகநிராகரிக்கிறார்

தமிழ் மரபில் இருந்து விலகிய இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த கிறிஸ்தவ காலனி ஆதிக்க சக்திகளின் போதனைகளால் பிறப்பு மீண்டும் மீண்டும்  என்பது கிடையாது கடவுள் என்பது கற்பிதம் என மெய்யறிவு மாறான கோட்பாடு உடையவர்கள் திருக்குறளை தங்கள் வழியில் அர்த்தம் செய்து சிறுமை செய்ய எளிதாக "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறளை கூறுவார்கள்.

வள்ளுவர் மிகத் தெளிவாக கூறுவது என்ன

 எண்குணத்தான் எனும் இறைவன் திருவடிகளை தன் தலையால் வணங்காதவர் தலைகளில் உள்ள கண் காது மூக்கு என் போன்ற ஐம்பொறிகளால் பயனில்லை என்கிறார்

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி. குறள் 356:  மெய்யுணர்தல்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. குறள் 358: மெய்யுணர்தல்.

மீண்டும் மீண்டும் மிதக்கும் வழியினை அடைவதே வாழ்க்கையின் நெறியாகக் கொண்டு வாழ்வதே கல்வியறிவின் பையன் என்கிறார் இவற்றையெல்லாம் ஒருவர் ஏற்காவிடில் மிகத்தெளிவாக  மெய்யுணர்வை அறிவை ஏற்காதவர்கள் ஐம்புலன்களை கட்டுப் படுத்தினாலும் பயனில்லை என மிகத் தெளிவாக இறை நம்பிக்கைக்கு மாறான நாத்திகத்தை உலகத்தையும் அவர் மிகவும் தெளிவாக மறுக்கிறார் 

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. குறள் 354:மெய்யுணர்தல்.

இவற்றை நாம் மேலும் விரிவாக பல்வேறு அதிகாரங்களின் பிற குறட்பாக்களில் மூலம் மற்ற தலைப்புகளின் போது பார்க்கலாம்.

 திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள்குறள் வெண்பா மற்றும் யாப்பு போன்றவை இது திருக்குறள் ஆக்கப்பட்டு ஒரு நூறு ஆண்டுகளுக்கு உள்ளாக எழுந்ததே தமிழ் சமணர் மணக்குடவர் உரைஅவர் அங்கங்கே சமண கருத்துக்களை சுட்டிக்காட்டி இருந்தாலும் மிகத்தெளிவாக திருவள்ளுவர் சுட்டிக்காட்டுவது உலகை படைத்த கடவுள் தான் என காட்டுகின்றார். எனவே தமிழ் மரபை ஒட்டி மணக்குடவரின் உரையைப் அடிப்படையிலேயே நம் ஆய்வு தொடர்கிறது.

திருக்குறளின் மெய்யறிவை ஏற்காத திருக்குறள் போற்றும் இந்திய ஞானமரபின் மெய்யறிவு சிந்தனை இருந்து விலகி நாத்திக கருத்துக்களை வைத்துக்கொண்டு திருக்குறளை உரை செய்வது என்பது அந்நிய கிறிஸ்தவ மத மாற்ற சக்திகளுக்கு உதவுவதற்காக தான் என்பது அறிஞர்கள் ஏற்பதாகும்.

திருக்குறள் 1330 குறட்பாக்களையும் உணர்ந்து; வள்ளுவர் வழியில் இறை நம்பிக்கை, மீண்டும் மீண்டும் பிறப்பு  மற்றும் இறைவன் திருவடி உருவ வழிபாட்டை அடிப்படையில் நாம் இந்த ஆய்வினை தொடர்வோம்.__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

 திருக்குறள் கடவுள் வாழ்த்து காட்டும் திருவள்ளுவர் போற்றும் கடவுள் நம்பிக்கை 

ஆதி பகவன் முதற்றே உலகு இந்த உலகம் இறைமை எனும் பிரம்மத்திலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கிய திருவள்ளுவர் இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும் என அந்த அதிகாரத்தை முடிக்கிறார்.

கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:

#

குறட்பாவில் வள்ளுவர் சொல்லி உள்ளது

1

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாக கொண்டிருக்கின்றனஅதுபோல் உலகம் இறைவனில் இருந்து தொடங்கியது

2

அனைத்து அறிவும் ஆகி இருக்கும் இறைவன் நல்ல திருவடிகளைத் தொழுவதே, கற்ற கல்வியின் முழு பயன்.

3

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும்.கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.

4

விருப்பும் வெறுப்புமற்ற கடவுளின் திருவடிகளை மறவாமல் நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை

5

கடவுளின் பெருமை அறிந்து போற்றி வணங்குவோருக்கு நல்வினை தீவினை ஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை

6

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளை பக்குவப்படுத்திய கடவுளின் பொய்யற்ற ஒழிக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்கை வாழ்வர்.

7

தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் சேர்ந்தவரே அல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது

8

அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே பிற பொருள் இன்பம் கடலை நீந்திக் கடப்பர்

9

எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்ளின் தலைகளில் உடல்கண்காதுமூக்குவாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும் பயனற்றவையாகும்

10

கடவுளின் திருவடிகளை அடைந்தவர், மட்டுமே மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் பிறவி பெருங் கடலை கடப்பார். கடவுளின் திருவடிகளை அடையாதவர்  அதனைக் கடக்க இயலாது..

 __________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

 

 

திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல், துதிப்பாடல் நூல் அல்ல, எனவே கடவுள் வணக்கத்தின் அவசியத்தையும் அதன் பயனையும் மிகத் தெளிவாக வலியுறுத்தி உள்ளார். திருவடி பற்றுதல் என்பதில் இறைவனை மனதில் நிலை நிறுத்த உருவ வழிபாட்டினை ஏற்று போற்றுவதும் தெளிவாகும்.

 

கல்வி கற்பதன் பயன் இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள்வதற்கே என்கிறார் இந்த அதிகாரத்தில் திருவள்ளுவர் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் கிடைக்கும் பயனையும் கிடைக்காதவர்கள் அந்த பயனை அடைய முடியாது என்று கூறுவதாலும் கடவுளை மறுக்கும் சிந்தனையை அவர் சிறிதும் ஏற்க வில்லை என்பதை நாம் தெளிவாக உணரலாம்.

2.  வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

4. இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

7. தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.

8. தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.

9. குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.

10. பிறவிப் பெருங்கடல்  நீந்தார் இறைவன் அடிசேரா தார்.

 வள்ளுவர் உலகைப் படைத்த இறைவன் ஏற்கிறார் என்றும் இறை நம்பிக்கைக்கும் இயல்புக்கு மாறான அவற்றை முழுமையாக நிராகரிக்கிறார்,

இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும்பிறவாழி கடக்க இயலும் என்று மீண்டும் மீண்டும் வள்ளுவர் கூறுகிறார்.வேண்டுதல் வேண்டாமை இலான் மற்றும் தனக்குவமை இல்லாதான் என்றவை எல்லாமே திருவள்ளுவர் உலகைப் படைத்த கடவுளை மட்டுமே இங்கு கூறுகிறார் எந்த ஒரு மனிதனையும் குறிப்பிடவில்லை என்பது தமிழர் மரபில் அறிஞர்கள் ஏற்கின்றனர்

 திருவள்ளுவர் கடவுள் என்ற சொல்லை இந்த அதிகாரத்தில் பயன்படுத்தவில்லைஇறைவன் என்ற சொல்லை இருமுறை பயன்படுத்தியுள்ளார்ஆனால் இறைவன் என்ற சொல்லை பலமுறை அரசன் பொருளிலும்இறை என்ற சொல்லை கை மணிக்கட்டு என ஒரு குறள் கூறியுள்ளதால் கடவுள் வாழ்த்து உலகைப் படைத்த கடவுளை குறிக்கிறது என வள்ளுவரே பெயரிட்டார் என அறிஞர்கள் ஏற்கின்றனர்.

இறைவனைப் பொருள் புரிந்து பாட கூறும் நூல்கள் என்ன என அவரே  போற்றும் நூல்கள் - "அந்தணர் நூற்கும் அறத்திற்கும்பார்ப்பான் ஓத்துஅறுதொழிலாளர் நூல்,  நிறைமொழி மாந்தர் பெருமை கூறும் மறைமொழி என்றும் கூறுவது எல்லாமே வேதங்களை குறிப்பதுதான் என்பது தமிழர் மரபு ஆகும்__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.  குறள் 1: கடவுள் வாழ்த்து.

இன்னா நாற்பது

முக்கட் பகவ னடி தொழா தார்க்கின்னா
பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா
சக்கரத் தானை மறப்பின்னா வாங்கின்னா
சத்தியான் றாடொழா தார்க்கு.
 
சொல் பிரித்து பொருள் விளக்கம்:
முக்கண் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா
சக்கரத்தானை மறப்பு இன்னா ஆங்கு இன்னா
சத்தியான் தாள் தொழாதார்க்கு
 
எவை துன்பம் தரும்:
முக்கண் கொண்ட சிவனை வழிபடாமை, 
பனைக்கொடி கொண்ட பலராமனை நினையாமை, 
சக்கரப்படை கொண்ட மாலவனை மறத்தல்,
சக்தியான் வேலவனை வணங்காமை, 
ஆகியன துன்பம் தருவனவாம்.

 __________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

இனியவை நாற்பது - மூலம்[தொகு]

கடவுள் வாழ்த்து

கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

(அருஞ்சொற்பொருள்: கண்மூன்றுடையான்- சிவபெருமான்; துழாய்மாலையான்- திருமால்/பெருமாள்; முகநான்குடையான் - பிரமன்; ஏத்தல் - போற்றித்துதித்தல்.)

நூல்__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.__________________


Guru

Status: Offline
Posts: 23904
Date:
Permalink  
 

 வள்ளுவமும் அன்னியரும் நவீன திராவிடியார் புலவர்களும்

இந்தியாவை ஆக்கிரமித்த கிறிஸ்துவ மிஷநரிகள் மதம் பரப்ப தமிழ் கற்க, மக்கள் போற்றிய திருக்குறளை கற்று மொழிபெயர்க்கும் போது 18ம் நூற்றாண்டிலேயே ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனி 1730ல்  மற்றும் கரௌலா க்ரௌல் 1865 ஜெர்மன் 8மொழியில் மொழி பெயர்த்த திரிபுகளைத் தொடங்கினார். குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் "பிறவிப்பெருங்கடல்" என்பதன் பொருள் "Ocean of repeated births" ஆனால் 'sea of this birth' இருவரும் எனப் வள்ளுவத்தின் அடிப்படை ஆணிவேர் கருத்துக்களை திரித்தனர்.இது போலே பலத் திரிபுகள். திருக்குறள் உலகைப் படைத்த இறைவனை ஏற்கும் மெய்யியல் ஞான மரபு நூல் என்பதை திரிக்க எல்லீஸ் வள்ளுவத்தை சமணம் எனப் பரப்பி ஒரு காசும் வெளியிட்டார்.

G.U.போப் பைபிள் கற்காமல் வள்ளுவர் எழுதி இருக்க இயலாது, மயிலையில் பொ.ஆ.10ம் நூற்றாண்டில்  வாழ்ந்தவர் கிறிஸ்துவ கப்பல் வியாபாரிகள் மூலம் சுவிசேஷம் கற்று தான் திருக்குறள் இயற்றினார் எனப் பரப்பினார். கிறிஸ்துவக் குழு இந்த போப் கருத்தை வலியுறுத்த எழுந்த தேவநேயப்ப்பாவாணர், ஆர்ச் பிஷப் அருளப்பா குழு தெய்வநாயகம் என்பவர் பெயரில் பல நூல்களும், பின்னர் ஏன் ஒரு முனைவர் பட்டமும் வாங்கப்பட்டது__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard