திருக்குறள் கடவுள் வாழ்த்து காட்டும் திருவள்ளுவர் போற்றும் கடவுள் நம்பிக்கை
ஆதி பகவன் முதற்றே உலகு இந்த உலகம் இறைமை எனும் பிரம்மத்திலிருந்து தொடங்குகிறது எனத் தொடங்கிய திருவள்ளுவர் இறைவன் திருவடியைப் பற்றிக் கொண்டால் மட்டுமே மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவிப் பெருங்கடலைக் கடக்க முடியும் என அந்த அதிகாரத்தை முடிக்கிறார்.
கடவுள் வாழ்த்து அதிகாரப் பாடல்களின் சாரம்:
#
குறட்பாவில் வள்ளுவர் சொல்லி உள்ளது
1
எழுத்துக்கள்எல்லாம்அகரத்தைமுதலாககொண்டிருக்கின்றன. அதுபோல்உலகம்இறைவனில் இருந்து தொடங்கியது
2
அனைத்து அறிவும் ஆகி இருக்கும் இறைவன் நல்ல திருவடிகளைத் தொழுவதே, கற்ற கல்வியின் முழு பயன்.
3
அன்பரின்அகமாகியமலரில்வீற்றிருக்கும்.கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.
4
விருப்பும்வெறுப்புமற்றகடவுளின் திருவடிகளை மறவாமல்நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை
5
கடவுளின் பெருமைஅறிந்துபோற்றி வணங்குவோருக்குநல்வினைதீவினைஆகிய இரு வினைகளும் வந்து சேர்வதில்லை
6
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து பொறிகளை பக்குவப்படுத்திய கடவுளின் பொய்யற்ற ஒழிக்க நெறியில் நின்றவர், நிலைபெற்ற நல்வாழ்கை வாழ்வர்.
7
தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் சேர்ந்தவரேஅல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது
8
அறக்கடலான கடவுளின் திருவடிகளை சேர்ந்தவரே பிற பொருள் இன்பம் கடலை நீந்திக் கடப்பர்
9
எண்குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவர்ளின் தலைகளில்உடல், கண், காது, மூக்கு, வாய்எனும்ஐம்பொறிகள்இருந்தும் பயனற்றவையாகும்
10
கடவுளின் திருவடிகளை அடைந்தவர், மட்டுமே மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் பிறவி பெருங் கடலை கடப்பார். கடவுளின் திருவடிகளை அடையாதவர் அதனைக் கடக்க இயலாது..
திருக்குறள் வாழ்வியல் வழிகாட்டி நூல், துதிப்பாடல் நூல் அல்ல, எனவே கடவுள் வணக்கத்தின் அவசியத்தையும் அதன் பயனையும் மிகத் தெளிவாக வலியுறுத்தி உள்ளார். திருவடி பற்றுதல் என்பதில் இறைவனை மனதில் நிலை நிறுத்த உருவ வழிபாட்டினை ஏற்று போற்றுவதும் தெளிவாகும்.
கல்வி கற்பதன் பயன் இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள்வதற்கே என்கிறார் இந்த அதிகாரத்தில் திருவள்ளுவர் இறைவன் திருவடியைப் பற்றிக் கொள்வதால் கிடைக்கும் பயனையும் கிடைக்காதவர்கள் அந்த பயனை அடைய முடியாது என்று கூறுவதாலும் கடவுளை மறுக்கும் சிந்தனையை அவர் சிறிதும் ஏற்க வில்லை என்பதை நாம் தெளிவாக உணரலாம்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.
வள்ளுவர் உலகைப் படைத்த இறைவன் ஏற்கிறார் என்றும் இறை நம்பிக்கைக்கும் இயல்புக்கு மாறான அவற்றை முழுமையாக நிராகரிக்கிறார்,
இறைவன் திருவடிகளைப் பற்றிக் கொள்வதால் மட்டுமே பிறவிப் பெருங்கடலைக் கடக்க இயலும்; பிறவாழி கடக்க இயலும் என்று மீண்டும் மீண்டும் வள்ளுவர் கூறுகிறார்.வேண்டுதல் வேண்டாமை இலான் மற்றும் தனக்குவமை இல்லாதான் என்றவை எல்லாமே திருவள்ளுவர் உலகைப் படைத்த கடவுளை மட்டுமே இங்கு கூறுகிறார் எந்த ஒரு மனிதனையும் குறிப்பிடவில்லை என்பது தமிழர் மரபில் அறிஞர்கள் ஏற்கின்றனர்
திருவள்ளுவர் கடவுள் என்ற சொல்லை இந்த அதிகாரத்தில் பயன்படுத்தவில்லை. இறைவன் என்ற சொல்லை இருமுறை பயன்படுத்தியுள்ளார்; ஆனால் இறைவன் என்ற சொல்லை பலமுறை அரசன் பொருளிலும்; இறை என்ற சொல்லை கை மணிக்கட்டு என ஒரு குறள் கூறியுள்ளதால் கடவுள் வாழ்த்து உலகைப் படைத்த கடவுளை குறிக்கிறது என வள்ளுவரே பெயரிட்டார் என அறிஞர்கள் ஏற்கின்றனர்.
இறைவனைப் பொருள் புரிந்து பாட கூறும் நூல்கள் என்ன என அவரே போற்றும் நூல்கள் - "அந்தணர் நூற்கும் அறத்திற்கும்; பார்ப்பான் ஓத்து, அறுதொழிலாளர் நூல், நிறைமொழி மாந்தர் பெருமை கூறும் மறைமொழி என்றும் கூறுவது எல்லாமே வேதங்களை குறிப்பதுதான் என்பது தமிழர் மரபு ஆகும்.
திருவள்ளுவர் இறைவன் மறுப்பை முழுமையாக நிராகரிக்கிறார்
தமிழ் மரபில் இருந்து விலகிய இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்திருந்த கிறிஸ்தவ காலனி ஆதிக்க சக்திகளின் போதனைகளால் பிறப்பு மீண்டும் மீண்டும் என்பது கிடையாது கடவுள் என்பது கற்பிதம் என மெய்யறிவு மாறான கோட்பாடு உடையவர்கள் திருக்குறளை தங்கள் வழியில் அர்த்தம் செய்து சிறுமை செய்ய எளிதாக "எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் என்ற குறளை கூறுவார்கள்.
வள்ளுவர் மிகத் தெளிவாக கூறுவது என்ன
எண்குணத்தான் எனும் இறைவன் திருவடிகளை தன் தலையால் வணங்காதவர் தலைகளில் உள்ள கண் காது மூக்கு என் போன்ற ஐம்பொறிகளால் பயனில்லை என்கிறார்.
மீண்டும் மீண்டும் மிதக்கும் வழியினை அடைவதே வாழ்க்கையின் நெறியாகக் கொண்டு வாழ்வதே கல்வியறிவின் பையன் என்கிறார் இவற்றையெல்லாம் ஒருவர் ஏற்காவிடில் மிகத்தெளிவாக மெய்யுணர்வை அறிவை ஏற்காதவர்கள் ஐம்புலன்களை கட்டுப் படுத்தினாலும் பயனில்லை என மிகத் தெளிவாக இறை நம்பிக்கைக்கு மாறான நாத்திகத்தை உலகத்தையும் அவர் மிகவும் தெளிவாக மறுக்கிறார்
இவற்றை நாம் மேலும் விரிவாக பல்வேறு அதிகாரங்களின் பிற குறட்பாக்களில் மூலம் மற்ற தலைப்புகளின் போது பார்க்கலாம்.
திருக்குறளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், குறள் வெண்பா மற்றும் யாப்பு போன்றவை இது திருக்குறள் ஆக்கப்பட்டு ஒரு நூறு ஆண்டுகளுக்கு உள்ளாக எழுந்ததே தமிழ் சமணர் மணக்குடவர் உரை. அவர் அங்கங்கே சமண கருத்துக்களை சுட்டிக்காட்டி இருந்தாலும் மிகத்தெளிவாக திருவள்ளுவர் சுட்டிக்காட்டுவது உலகை படைத்த கடவுள் தான் என காட்டுகின்றார். எனவே தமிழ் மரபை ஒட்டி மணக்குடவரின் உரையைப் அடிப்படையிலேயே நம் ஆய்வு தொடர்கிறது.
திருக்குறளின் மெய்யறிவை ஏற்காத திருக்குறள் போற்றும் இந்திய ஞானமரபின் மெய்யறிவு சிந்தனை இருந்து விலகி நாத்திக கருத்துக்களை வைத்துக்கொண்டு திருக்குறளை உரை செய்வது என்பது அந்நிய கிறிஸ்தவ மத மாற்ற சக்திகளுக்கு உதவுவதற்காக தான் என்பது அறிஞர்கள் ஏற்பதாகும்.
திருக்குறள் 1330 குறட்பாக்களையும் உணர்ந்து; வள்ளுவர் வழியில் இறை நம்பிக்கை, மீண்டும் மீண்டும் பிறப்பு மற்றும் இறைவன் திருவடி உருவ வழிபாட்டை அடிப்படையில் நாம் இந்த ஆய்வினை தொடர்வோம்.