New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பிக்குனிகளை மடாலயங்களில் சேர்த்துக் கொண்டாதால் உண்டா


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பிக்குனிகளை மடாலயங்களில் சேர்த்துக் கொண்டாதால் உண்டா
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பிக்குனிகளை மடாலயங்களில் சேர்த்துக் கொண்டாதால் உண்டான விளைவுகள் (7)

மே 11, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? – பிக்குனிகளை மடாலயங்களில் சேர்த்துக் கொண்டாதால் உண்டான விளைவுகள் (7)

Buddha and women

பெண்களும், பௌத்தமும்: பாலி எழுத்துகளில், வினய மற்றும் இதர சுத்தங்களில் எங்குமே புத்தரின் தனிமட்ட மனிதரின் கவர்ச்சியால் பெண்கள் அதிக அளவில் சங்கத்தில் சேர்ந்தனர் என்பதற்கான எந்தகுறிப்பும் இல்லை.

Eliot, Hinduism and Buddhism, London, 1921, Vol.I, p.248.

  1. B. Horner, Women under Primitive Buddhism: Laywomen and Almswomen, Motilal Banarasidas, New Delhi, 1999, p.96.

பெண்கள் பௌத்தத்தில் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர் என்பதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆனால், புத்தரைப் பின்பற்ற பெண்கள் வந்தனர் என்பது உண்மை.

பெண் துறவு விசடத்தில் ஜைனத்தின் தாக்கம்: நிச்சயமாக, ஜைன மதத்தின் தாக்கத்தால், பௌத்ததில் பிக்குனிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டனர் எனலாம். மஹாவீரர் தன்னுடைய காலத்திலேயே, தன்னைப் பின்பற்றுபவர்களை நான்கு பிரிவுகளாகக் கொண்டார்:

  1. ஆண்துறவியர்.
    2.        பெண்துறவியர்.
    3.        புதிதாக மதத்தில் சேர்ந்த ஆண்கள்.
    4.        புதிதாக மதத்தில் சேர்ந்த பெண்கள்.

இதோ போல, பௌத்தர்களும், பெண்துறவியரை தமது இயக்கத்தில் / சங்கத்தில் சேர்த்துக்கொண்டனர்.

புத்தரின் முதல் மறுப்பும்பிற்படி அனுமதியும்: “பிக்குனிகள்” – பெண் பௌத்த சந்நியாசிகளை உருவாக்குவதில் அதிலும், சங்கத்தில் சேர்ப்பதை மிகவும் கடுமையாக எதிர்த்து வந்தார். ஏனெனில், ஆண்பிக்குகள் வழிதவறி நடந்தால் நடக்கும் நிலையை அறிந்தே அவ்வாறு அம்முறையை மறுத்து வந்தார். இருப்பினும், ஆனந்தா என்ற அவருடைய, மிகவும் விசுவாசமான சீடனின் வேண்டுக்கோளுக்கு இணங்கி பெண்களை பிக்குனிகளாக ஏற்றுக்கொள்வதை ஆமோதித்தார். இருப்பினும் அவர் சொன்னதாவது, “இது சங்கத்தின் காலத்தைக் குறைக்கப் போகிறது” என்பதாகும். இதனால், அவர்களுக்கு மிகவும் கடினமான சட்டதிட்டங்களும், கட்டுப்பாட்டு விதிமுறைகளும் விதிக்கப்பட்டன. “பிக்குனி பதி மோக்க” (பிக்குனியின் மோக்ஷப் பாதை) என்று அவர்களுக்குத் தனியாக விதிமுறைகள் இருந்தன. அவர்களுடைய சென்று-வரும் இயக்கம், வசிக்கும் இடங்கள் முதலியன கவனமாகக் கண்காணிக்கப்பட்டன.

Buddha and women-2

பிக்குனி பதி மோக்க” (பிக்குனியின் மோக்ஷப் பாதைவிதிகள்: அத்தகைய கட்டுபாடுகள் (சுல்ல வக்க, வினய பீடிக):

  1. பிக்குனி எவ்வளவு வயதானாலும், பிக்குவிற்கு மரியாதைச்  செல்லுத்த வேண்டும், ஆனால், பிக்கு அவ்வாறு பதிலிற்கு செய்யவேண்டியதில்லை.
  2. “வஸ”காலத்தை, பிக்குனிகள், பிக்கு இல்லாமல் கழிக்கக்கூடாது.
    [பிக்குனி, எந்த காரணத்திற்கும் மடாலயத்தில் பிக்குகள், அவர்கள்
    இருந்தாலும், இல்லையென்றாலும், வசிக்கும் இடத்திற்கு / இடத்தைக் கடந்து செல்லக் கூடாது.]
  3. “உபோசதா” சடங்கு எப்பொழுது நடக்கும் என, பிக்குவிடமிருந்து
    கேட்டுத்தெரிந்து கொள்ளவேண்டும், மற்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கும் நாளையும் தெரிந்து கொள்ளவேண்டும்.
  4. “பாவர்னா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குனி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.
  5. “மானத்தா” என்ற முறையை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்படது) பிக்கு-சங்கத்தில் முதலிலும், பிறகு பிக்குனி-சங்கத்தில் மறுபடியும் செய்யவேண்டும்.
  6. “பிக்குனி பதி மோக்க” விதிமுறையின்படி, ஆறு பசித்தியா விதிகளில் பயிர்ச்சி பெற்ற பிறகு, “உபசம்பதா” முறையிலும் இரண்டு சங்கங்களிலும் தனித்தனியாக பயிர்ச்சி பெறவேண்டும்.
  7. பிக்குனி, ஒரு பிக்குவை திட்டவோம் நிந்திக்கவோ, தூஷிக்கவோ கூடாது.
  8. பிக்குனி, ஒரு பிக்குவை கடிந்து கொள்ளவோ, குறைகூறவோ கூடாது. மேற்குறிப்பிட்ட “உபோசதா” மற்றும் “பாவர்னா” தேதிகளை குறிக்க பிக்குகளிடன் வாதிடக்கூடாது. ஆனால், பிக்குகள், பிக்குனிகளை கடிந்து கொள்ளலாம். [இந்த “பாவர்னா” என்ற முறை (ஒருவன் தான் செய்த தவறுகளை – பார்த்தது, கேட்டது மற்றும் சந்தேகப்பட்டது) பிறகு கிருத்துவத்தில் “பாவ-மன்னிப்புக்கோரல்” (confession) என்றாகியதா எனநோக்கத்தக்கது. பௌத்தத்திலிருந்து, கிருத்துவம் உருவானது, பெறப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்கெனவே எடுத்துக்காட்டியுள்ளனர்.]

Buddha and women-3

பிக்குனிகளுக்கு விதிக்கப்பட்ட இதர தடைகள்: பிக்குனிகள், காடுகளில் வசிக்க அனுமதி அளிக்கப்படவில்லை, ஆனால் வெளிப்புற வீடுகள் மற்றும் ஆஸ்ரமங்களில் வசிக்கலாம். குளிப்பதற்கு, அலங்கார பொருட்கள் உபயோகிப்பதற்கு பல தடைகள் இருந்தன. பிக்குகள் மற்றும் பிக்குனிகளுக்கு இடையே உணவு, ஆடை, மற்றும் இதர பொருட்கள் கொடுக்கல்-வாங்கல் செயல்களில் பல கட்டுப்பாடுகள் இருந்தன.

Ramesan, Glimpses of Buddhism, A.P. Govt. archaeological series No.2, Hyderabad, 1961, pp.187-189.

நடைமுறை பிரச்சினைகள்: “பாவமன்னிப்பு” போன்ற சடங்குகள், அதுவும் பிக்குனிகள் பிக்குகள் முன்பு செய்யவேண்டும் என்பன, பிக்குகள் பிக்குனிகளை அடக்கியாள ஏதுவாயிற்று எனத்தெரிகிறது. மேலும், மேற்காணும் விதிக்கப்பட்ட எட்டு விதிகளும், பிக்குக்களுக்கு சாதகமாக உள்ளதை காணலாம். அதாவது “ஆணாதிக்கரீதியில் உள்ளதை தெரிந்து கொள்ளலாம். இதனல்தான், அத்தகைய அடக்குமுறைகளை தாங்காமல், சில பிக்குனிகள் சங்கத்தை விட்டு விலக நேரிட்டத்து என்ற குறிப்பிகளும் கானப்படுகின்றன. இதிலிருந்து, பெண்கள் சந்நியாசிகளாக அனுமதிக்கப்பட்டது, பௌத்தத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது தெரிகின்றது. விஹாரங்களில் ஆண்-பெண் துறவிகள் இருப்பது, அவர்கள் பல நேரங்களில் சந்தித்துக் கொள்வது, பேசுவது, தமது பொருட்களை பரிமாற்றம் செய்து கொள்வது முதலிய காரியங்கள் நிச்சயமாக கட்டுப்பாடுகளை மீற வைக்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கலாம். இதை மனத்தில் வைத்துகொண்டுதான், புத்தர் முதலில் பெண்கள் சங்கத்தில் சேருவதை ஊக்குவிக்கவில்லை.

Buddha and women-4

ஜைனபௌத்த பெண் சந்நியாசிகள் – வேறுபாடு: ஜைனத்தில், பெண்சாமியார்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். மொட்டை அடித்துக்கொண்டு, தீட்சை பெற்றுவிட்டால், அவர்கள் உண்மையிலேயே கடுமையான துறவர வாழ்க்கையினை நடத்தியாக வேண்டும். முக்கியமாக, அஹிம்சை சித்தாந்தத்தை முழு அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், உணவு முறை கட்டுப்பாடு இருந்தது. அவ்வுணவு, எளிமையாக சாத்வீக ஆகாரமாக இருந்தது. அதாவது மனக்கட்டுப்பாட்டை தளர்க்கும், சலனத்தை ஏற்படுத்தும், உணர்ச்சிகளைத் தூண்டும் காய்கறிகள், பொருட்கள் உபயோகப்படுத்தி உணவு சமைக்கமுடியாது. ஆகவே, மாமிச உணவு என்பதற்கு பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் இருப்பிடம் தனியாக இருந்தது. பௌத்த பிக்குனிகளைப்போல, விஹார வாழ்க்கை வாழமுடியாது. பௌத்தத்தில், எவ்வாறு “மழைக்கு ஒதுங்கிய நிரந்தரமற்ற ஆவாஸ-ஆராம வாழ்க்கை”, பிறகு பற்பல வசதிகளோடு “நிரந்தர விஹார வாழ்க்கை” ஆனது என்பது ஏற்கெனவே விலக்கப்பட்டது. ஆகையால், பௌத்தத்தில், அத்தகைய கட்டுப்பாடுகள் முதலில் இருந்தாலும், பிற்பாடு தளர்ந்தது, பிரச்சினைகள் ஏற்பட்டது, பிக்குனிகள் சங்கத்திலிருந்து வெளியேறிது-வெளியேற்றப்பட்டதிலிருந்து நன்றாகவேத் தெரிகின்றது.

Buddha and women-5

பிக்குனிகள் சங்கத்தை விட்டு விலகுவது: பிக்குனிகள், சங்கத்தில் சேர்ந்த பிறகு, வெளியேருவது என்பது நினைத்துப் பார்க்கமுடியாத காரியம். அவ்வாறு அவர்கள், சங்கத்தைத்துறப்பது என்றால், தமது முடிவை “மூன்று முறை” அறிவிக்கவேண்டும். ‘சந்தகாலி’, என்ற பிக்குனியின் வெளியேற்றம் மற்றும் இதர பெண்களின் வெளியேற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, பிக்குனிகள் சந்நியாசி வாழ்க்கையினைத் துறந்து, மறுபடியும் இல்லறத்தில் புகுந்ததாகத் தெரிகிறது. இதைத்தவிர, சங்கத்தைத் துறந்து செல்லும் மற்றொரு முறையும் இருந்தது. அது தற்கொலை செய்து கொள்வதுதான். சிஹா என்ற பிக்குனியின் தூக்குப்போட்டுகொண்டு தற்கொலை செய்து கொண்ட குறிப்பு உள்ளது. டி லா வல்லி பௌஸின் என்பவர், எப்படி சில பிக்குகள் தமது கழுத்துகளை அறுத்துக்கொண்டனர் என்று குறிப்பிடுகின்றார்.

de la Vallee Pousin, Nirvana, Paris, 1925, p.22.

Mara attacking Buddha Amaravati 2nd cent CE

மேத்தியா என்பவன், பெண்களை அவதூறாக பேசியதற்காக, சங்கத்தை விட்டு வெளியேற்றப்பட்டதாக, குறிப்பிடப்படுகிறது.

[இத்தகைய முறையும், ஜைனத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஜைனத்தில், பொதுவாக, உண்ணநோன்பு இருந்து தமது வாழ்க்கையினை முடித்துக்கொள்வர். சந்திரகுத மௌரியன், சிரவணபெலகோலாவிற்கு வந்து “வடக்கிருந்து” உயிர் துறந்தத்தை இங்கு நோக்கத்தக்கது. பௌத்தத்தில், பிறகு, தற்கொலை என்பது குறைந்த அளவில் அத்தகைய தண்டனையாக அல்லது உயிர்துறப்பதாகக் கொள்ளலாம். எது எப்படி இருப்பினும், அஹிம்சை போதிக்கும் இம்மதங்கள் இத்தகைய “ஹிம்சா-முறைகளை” மதத்தை / சங்கத்தை / இயக்கத்தைத் துறப்பதற்கு விதித்துள்ளது வினோதமே. தற்கொலை எண்ணம் எழுவது, அச்செயலைத் தூண்டுவது, செய்விப்பது முதலியன மனோதத்துவ ரீதியில் உள்ள விஷயங்கள் ஆகும். அது நிச்சயமாக அஹிம்சா முறையற்ற-நன்முறையற்ற வன்முறை-தீவிரவாத எண்ணங்களை மனத்தில் விதையிட்டு, வளர்க்கும், ஊக்குவிக்கும் முறையாகும். [பெண்கள் சங்கத்தைத்துறக்க மூன்றுமுறை தமது முடிவை அறிவிக்கவேண்டும் என்பதும், இஸ்லாத்தில், ஒரு மனைவியை விவாகரத்து செய்யும்போது, மூன்றுமுறை அவ்வாறு அறிவிப்பது நோக்கத்தக்கது].

பஹ்ருத், தக்ஸசிலா, அமராவதி, அஜந்தா, எல்லோரா முதலிய சிற்பங்கள் மற்றும் சித்திரங்களை வைத்துப் பார்க்கும்போதும், அங்கிருந்த மடாலயங்களில் இருந்த வசதிகளைப் பார்க்கும்போதும், பிக்குகள் “விஹார வாழ்க்கையை” மிகவும் வசதியாகவே வாழ்ந்தது தெரிகிறது. அதுமாதிரியே, பிக்குனிகளும் வாழ்ந்துள்ளனர். எனவே, புத்தர் எதிர்பார்த்தபடியே, பிக்குனிகளை சங்கத்தில் அனுமதித்தது, சங்கத்தின் காலத்தைக் குறைத்துவிட்டது என்றே தெரிகிறது.

வேதபிரகாஷ்
23-09-2009

குறிப்பு: இத்தொடர் கட்டுரை 2009ல் மின் தமிழ் என்ற தளத்தில் வெளியிடப்பட்டது, விவாடிக்கப்பட்டது. ஆனால், சில காலத்திற்கு பிறகு, இக்குழுவினர் என்னை நீக்கி விட்டனர். இப்பொழுது, அதை அப்படியே கிடைக்கும் வரை, இங்கு மறு பதிவு செய்கிறேன்.

10-05-2017

புத்த பூர்ணிமா.

Mara attacking Buddha Amaravati 2nd cent CE-2

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard