New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

மே 12, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன் – சங்கரர் பௌத்தர்களைக் கொன்றாரா அல்லது பௌத்தர்கள் அவரைக் கொன்றார்களா? (10)

Sankara vijaya accounts

ஆதி சங்கரர் பௌத்தர்களைக் கொன்று குவித்த கதை உருவானது: இனி ஆதிசங்கரர் எப்படி படைகளுடன் திக்விஜயம் செய்து, சென்றவிடமெல்லாம் பௌத்தர்களைக் கொன்றுகுவித்தார் என்ற குற்றச்சாட்டைப் பார்ப்போம். இக்கருத்தை இன்றைய பௌத்தர்கள், நியோ-பௌத்தர்கள், அம்பேத்கரைட்ஸ், தி.கவினர், மற்ற ஹிந்து-விரோத குழுக்கள் முதலியோர் பரப்பி வருகின்றனர். உண்மையினை ஆராயாமல், சில மேற்கத்தைய ஆராய்ச்சியாளர்களும் அதை பிரசாரம் செய்து வருகின்றனர்.
K. Jamanadas, Tirupati Balaji was a Buddhist Shrinewww.ambedkar.org/Tirupati/Tirupati.pdf
K. S. Bhagavan,  Adi Shankara’s Anti-people philosophy, The Modern Rationalist, Vol.XII, no.6, Feb.1985, pp.8-12.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -1, The Modern Rationalist, Vol.XII, no.7, March 1985, pp.5-6.
………………………., Sankara’s Vandalism and Hindu culture -2, The Modern Rationalist, Vol.XII, no.8, April 1985, pp.5-10.
David N. Lorenzen, Warrior Ascetics in Indian History, Journal of the American Oriental Society, Vol. 98, No. 1 (Jan. – Mar., 1978), pp.61-75 (article consists of 15 pages).
இவையேல்லாமே, “சங்கரவிஜயம்” என்ற நூற்களில் காணப்படும், சில வரிகளை வைத்துக் கொண்டு, அத்தகைய குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர். ஆதிசங்கரரைத் தாக்கும் போக்கில், இந்துமதத்தை தூஷிக்க வேண்டும் என்ற போக்குதான், இவர்களின் எழுத்துகளில் உள்ளதே தவிர, உண்மையினை அறிய வேண்டும் என்ற ஆராய்ச்சி நெறி காணப்படவில்லை.

Sankara vijaya texts - later period

18-19வது நூற்றாண்டுகள் வரை திருத்தப்பட்ட சங்கரவிஜயங்கள்: உள்ள “சங்கரவிஜயம்” எனப்படும் நூல்களைப் படிக்கும்போது, காஞ்சிமடம் மற்றும் சிருங்கேரிமடம் இவற்றிற்குள் உள்ள பூசல்கள், சண்டைகள் அத்தகைய சங்கரவிஜய எழுத்துப் பிரதிகளில் தத்தமது மடத்தின் பெருமையினை பறைச்சாற்றிக் கொள்ள பல மாற்றங்களையும், இடை செருகல்களையும் செய்துள்ளார்கள் எனத்தெரிகிறது.
ஸ்ரீராம சாஸ்திரிகள், ஆனந்தகிரி சங்கரவிஜயத்தில் ஸ்ரீகாஞ்சி ஸ்ரீமடம், ஸ்ரீ காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
…………………………, வ்யாஸாசலீய சங்கரவிஜயம், காமகோடி ப்ரதீபம் வெளியீடு, சென்னை, 1961.
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003.
நடுநிலையில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இவரின் ஆராய்ச்சியின்படி, சங்கரவிஜயங்கள் எல்லாம் 18-19ம் நூற்றாண்டுகள் வரை எழுதப்பட்டு வந்துள்ளன. அதாவது, திருத்தங்கள், மாற்றங்கள், இலைசெருகல்கள் ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஆகையால், சரித்திர ரீதியாக அவை சொல்வதை எடுத்துக் கொள்ளமுடியாது. மற்ற எல்லா மடங்களும் ஆதிசங்கரர் காலம் 509-477 BCE என்று பின்பற்றும்போது, சிருங்கேரி 788-820 CE தேதியை பயன்படுத்துகிறது. ஆகவே ஆதிசங்கரர் முதல் தற்பொழுதுள்ள சங்கராச்சாரியார்களின் பட்டியல்களும் அவ்வாறே உள்ளன. அதாவது சிருங்கேரியின் பட்டியலின்படி 36வது மடாதிபதி பாரதி தீர்த்தர் ஆவர். முதல் எட்டு மடாதிபதிகளுக்கு தேதிகள் குறிப்பிடவில்லை. பத்தாவது மடாதிபதி வித்யா சங்கர தீர்த்த என்பவருக்கு C.1228-C.1333 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
A. K. Sastri, A History of Sringeri, Prasaranga, Karnataka University,  Dharwad, 1982, Appendix – III.
காஞ்சிமடம் மடாதிபதிகளின் வரிசைபடி 509-477 BCEலிருந்து ஆரம்பித்து
தற்பொழுதையவர் 69வதாக உள்ளார். பொதுவாக, இம்மடங்கள் தங்களது தொன்மையினை எடுத்துக் காட்டிக் கொள்ள மேற்கொண்டுள்ள போட்டியில், ஆதிசங்கரரின் தொன்மையினை பாதிக்கும் முறையில், சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் இறங்கியுள்ளனர். அதனால், அவற்றில் காணப்படும் வேறுபாடுகளை, இந்துவிரோதிகள் தங்களுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்கிறார்கள்.

Sankara vijaya accounts

காலின் மெகன்ஸிஓலைச்சுவடி சேகரிப்புபிரதியெடுத்தல்பிழை / திருத்தங்கள் பெருகுதல்: காலின் மெகன்ஸி என்பவர் பல இடங்களுக்குச் சென்று, லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் (இந்தியாவின் அக்காலப் புத்தகங்கள்), முக்கியமான நாணயங்கள், அத்தாட்சி பொருட்கள் முதலியவற்றை சேகரித்து இங்கிலாந்திற்கு அனுப்பி வந்தார். ஆனந்தானந்தகிரி அல்லது ஆனந்தகிரி என்பவரால் எழுதப்பட்ட சங்கரவிஜயம் அதில் இருந்தது. மெகன்ஸி அதைப் படித்துவிட்டு, “சங்கரரின் கட்டுக்கதை” என்று குறிப்பிட்டார்.
Colin Mackanzie, The Oxford Catalogue of Sanskrit Manuscripts, Bibilotheica Indica series, London, 1881.
ஆனால், நம் மக்களோ அக்கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டு சரித்திரம் ஆக்க முயற்ச்சிக்கின்றனர். மெகன்ஸி சில நேரங்களில் ஓலைச்சுவடிகள் அரிதாக இருந்தால் பிரதியெடுக்கச் செய்து அதனை வைத்து அசலை எடுத்திச் சென்றுவிடுவார். அவரிடம் வேலைப் பார்த்தவர்கள் இந்திய பண்டிதர்களே. 18-19வது நூற்றாண்டுகளில், ஆங்கிலேயர்கள் இந்திய சமூகத்தைச் சாதிகளின்மீதும், சமயப்பிரிவுகள், குறிப்பாக சமய-உட்பிரிவுகள் மூலம் பிரிக்க முயன்றனர். இதற்காக பல “ஜாதி-சரித்திரங்கள்” எழுதவைத்தனர்.
அதுமட்டுமல்லாது, நீதிமன்றங்களில் தமது மதப்பிரச்சினைகளை எடுத்துச் செல்லத் தூண்டி அதற்கேற்ற ஆதாரங்களைக் கேட்க ஆரம்பித்தனர். அவ்வாறு கேட்கும்போது, இந்தியர்கள் ஆதாரங்கள்/அத்தாட்சிகளை எடுத்துவருவர், அவற்றை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யுங்கள் என்று கூறலாம் அவற்றை அபகரித்து விடலாம் என்பதுதான் அவர்களின் யுக்தி.

sringeri - Kanchi controversies

புதிய சங்கர விஜயங்கள் உருவானது எப்படி?: உதாரணத்திற்கு, 1844ல் காஞ்சிபுரத்தில் “தாதாங்க-ப்ரதிஸ்தா” என்ற சடங்கை ஜம்புகேசஸ்வரத்தில் உள்ள அம்பாள் அகிலாண்டேஸ்வரிக்கு செய்வதற்கு இரண்டு மடங்களும் போட்டியிட்டன. உடனே ஆங்கிலேயர்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாணப் பணித்தனர். விவரம் அறியாது அவ்வாறே சென்றன. ஆதாரம் கேட்டபோது, காஞ்சிமடம் “சிவ-ரஹஸ்யம்” மற்றும் “மார்க்கண்டேய-சம்ஹிதை” என்ற இரண்டு நூல்களை ஆதாரமாக சமர்ப்பித்தனராம். ஆனால், சிருங்கேரிக்கு அத்தகைய ஆதாரம் இல்லாதபோதுதான், இந்த சங்கரவிஜயம் இப்பொழுது உலாவரும் “வித்யயரண்யரின் சங்கரவிஜயம்” எனப்படும் நூல் உருவாக்க்கப்பட்டதாம்!
W. R. Antarkar, Sankara-Vijayas: A Comparative and a critical study, Veda Sastra Pandita Raksha Sabha, Mumbai, 2003, ப.46.
பிறகு படிப்படியாக மற்ற விவரங்கள் சேக்கப்பட்டன. டபிள்யூ. ஆர். அந்தர்க்கர் எடுத்துக்காட்டுபவை:

  1. சித்சுக பிரதியில் “ஜைனர்கள், மஹாவீரர்”, என்றிருந்தது சதாநந்த,
    சித்திவிலாச பிரதிகளில், “பௌத்தர்கள், பௌத்த குரு” என்று மாற்றப்பட்டுள்ளது (ப.28).
  2. மற்ற சங்ரவிஜங்களில், சிவன் சங்ரராக அவதாரம் எடுக்கும்போது, பிரஹத்-சங்கரவிஜயத்தில், விஷ்ணுவே புத்தராக அவதாரம் எடுக்கிறார் (ப.56).
  3. ஒரு குறிப்பிட்ட சங்கரவிஜய பிரதிகளிலேயே உள்ள சுலோகங்கள் 11 முதல் 473
    வரை வித்தியாசப்படுகின்றன (ப.49-51).
  4. மத்வ, ஆனந்தகிரி முதலிய சங்கரவிஜயங்களைத் தவிர, மற்றவைகளில் ஜைனர்கள், பௌத்தர்கள் குறிப்பிடப்படுவதில்லை.
  5. சிருங்கேரி சங்கரவிஜயத்தில் “‡பனர்”, “திகம்பரர்” என்ற வார்த்தகள்
    அதிகமாகவும் “புத்த” என்ற வார்த்தை குறைவாகவும் உபயோகப்படுத்தப் பட்டுள்ளன.
  6. “மத்வரால்” எழுதப்பட்டது என்பது, 1798 வரை ததருத்தி எழுதப்பட்டு
    வருகிறது (ப.49).
  7. ஐரோப்பியர்களே, சீனர்களின் குறிப்புகளை அளவிற்கு மீறி நம்பவேண்டாம்
    என்று எச்சரித்துள்ளனர். இருப்பினும் நாம், அவற்றை முழுவதுமாக
    நம்பொகிறோம் (ப,98).

Sankara vijaya accounts- vimsara-he preaching to Arabs

ஆதி சங்கரர் அரேபியாவுக்குச் சென்று போதித்தது: சீன-குறிப்புகளினின்றுதான் இந்த சர்ச்சை எழும்பியுள்ளதால், ஆதாரங்கள் இல்லாமல், சரித்திர ஆசிரியர்கள் மற்றவர்கள், இதனை பெரிது படுத்து எழுதுவது தகாததாகும். ஆகவே, ஆங்கிலேயர்களும் தமது பங்கிற்கு இடைசெருகல்கள் செய்திருந்தால், அது அவர்களுக்குத் தான் தெரியும். எனவே, இந்தியர்கள் பல விதங்களில் பாதிக்கப்படும் நிலையில்தான் இருக்கின்றனர். ஆதிசங்கரர் அரேபியாவிற்கு சென்று போதித்தது: இன்னும், வேடிக்கை என்னவென்றால், சங்கரர் தமது திக்விஜயத்தில் அரேபியாவிற்குக் கூடபோனார், ஆகாயத்திலிருந்தே அரேபியர்களுக்கு போதித்தார் என்றும் உள்ளது! “விம்ஸர” என்ற நூல், “ஆதிசங்கரர் 64 நாட்களுக்கு வானத்தில் இருந்து கொண்டே வேதங்களின் மூன்று மார்க்கங்களான, கர்மா, உபாஸனா மற்றும் ஞானம் முதலியவற்றை அங்கு வாழ்ந்த யூகிக்களுக்கு அரேபிய மொழியிலேயே உபதேசித்தார். அவர்களும் சிரத்தையாக அப்படியே வார்த்தைக்கு வார்த்தை அரேபிய மொழியிலேயே அவற்றை எழுதி வைத்துக் கொண்டனர். அவைதாம் பிறகு புனித குரான் ஆனது”.
K. V. Subbaratnam, The Date of Sri Sankara, Vani Vilas Press, Srirangam, 1987, p.24
[கடல் கடந்து சென்றால், சங்கரரையும் ஒதுக்கிவைத்து விடுவார்கள் என பயந்து, அவரை ஆகாயத்தில் பறக்கவிட்டதுடன், ஆகாயதிலேயே அதாவது பூமியின்மீது கால்கள் படாமல் நிறுத்திவைத்தது நன்றாகவே தெரிககறது! பாவம், இடைச்செருகல் செய்தவர், காலத்ததற்கேற்ற்வாறு செய்துள்ளார் போலும்!]

Sankara and Kapalikas

ஜைன-பௌத்த சர்ச்சை நூல்கள் இத்தகைய நூல்களுக்கு தூபம் போட்டது: முன்பு வாதங்களில் தோற்றவர்கள் மேற்கில் கடலுக்கு அப்பால் அனுப்பப்பட்டனர் என்று குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது. ஆகவே இவற்றை வைத்துக் கொண்டு, முகமது நபியே, சங்கர அத்வைதம் அவ்வாறு அறிந்து, தானும் பலகடவுளர்களை வழிபட்டு வந்த அரேபியர்களை ஒன்றுபடுத்தி, ஒருபுதிய மதத்தை நிறுவினார் என்று வாதிடலாம். ஏனெனில், முகமது நபி, மெக்காவில் இருந்த 360 விக்கிரங்களை உடைத்தாரம். அப்பொழுது, அவர்களின் வேண்டுக்கோளுக்கு இணங்க, ஒரே ஒன்றை விட்டுவைத்தாராம். அதுதான் காஃபாவில் உள்ள விக்கிரம் / கருப்பான வெள்ளைக்கல். உண்மையில், ஆராய்ச்சிரீதியில், காலக்கணக்கியல் மற்றும் இதர ஆதாரங்களுடன், அத்தகைய கருதுகோளை சித்தாந்தம் ஆக்கலாம், சித்தாந்தத்தை ஆதாரங்களுடன் மெய்ப்பிக்கலாம், சரித்திரமாக்கலாம். [இப்பொழுது ஆதிசங்கரர் தமது அத்வைதத்தை இஸ்லாத்திலிருந்து காப்பியடித்துதான் உருவாக்கினார் என்று சரித்திர ஆசிரியர்கள் தாராளமாக எழுதி வருகிறார்கள்].

Sankara and Kapalikas- fight

ஆதிசங்கரர் சுதன்வன் படைகளுடன் சென்றாரா?: இனி, சங்கரதிக்விஜயத்திற்கு வரும்போது, குறிப்பாக, “மத்வர்/மத்வாச்சாரியார்” என்பவர் எழுதியாகச் சொல்லப்படும் சங்கரவிஜயத்தின்படி, “சங்கரர் சுதன்வ என்ற அரசன், மற்றும் பக்தகோடிகளுடன் தனது தத்துவத்தைப் பரப்புவதற்கும் மற்றும் அதனை எதிர்ப்பவர்களை வாதிட்டு ஜெயிப்பதற்கும் புறப்பட்டார்” (காண்டம்.15, வரி.1). இதில் என்ன வேடிக்கை என்றால், குறிப்பாக பற்பல இந்துமதப் பிரிவினர்களைத்தான் வெற்றிகொண்டார் என்றுள்ளது. நியாயவாதிகளை வென்றார், கபிலருடைய சித்தாந்தத்தை முடித்தார், வைஷ்ணவத்தை மண்ணோடு மண்ணாக மறையச் செய்தார் (10.118-119). காபாலிகர்களுடந்தான் சண்டை ஏற்பட்டது தெரிகிறது. ஒரு காபாலிகன், சங்கரரை, அவரது சீடன்போல நடித்து, கொல்லவருகிறான். அதிலும், “நரசிம்மரே” வந்து, அதாவது மற்றொரு சீடர் பத்மபாத “நரசிம்மராகி”, காபாலிகனைக் கொன்று, சங்கரரைக் காப்பாற்றியதாக உள்ளது (காண்டம்.11). எனவே இக்கதைகளை நம்பமுடியாது, என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நியாயம், தர்மங்களை விடுத்த பிராமணர்களை கடுமையாகச் சாடுகிறார். மற்ற திமிரான எதிராளிகளை வென்று மேற்கு கடலுக்கு அப்பால் அனுப்பி விடுகிறார் (15.29). சாக்தகள், பாசுபத-காபாலிகர்கள், வைணவர்கள் இவர்களை வென்றதாக பல இடங்களில் உள்ளது (15.164). [இதையெல்லாம் படித்தால், அவர்களுக்குத் தான் கோபம் வரவேண்டும்]
K. V. Subburatnam, Sri Sankara Vijayam Test in Devanagari with English Translation, Akhila Bharata Sankara Seva Samiti, Srirangam, 1972.
முன்னுரையில், கே. ஆர். வெங்கடராமன் குறிப்பிடுவதாவது, “சுதன்வ என்பது கவியின் படைப்பு”, அதாவது கற்பனைப் பாத்திரம். ஏனெனில், எப்படி சிவன் சங்கரராக, முருகன் குமாரில பட்டராக பிறந்தார்களோ இந்திரனே சுதன்வனாகப் பிறந்தான், என்று சங்கரவிஜயங்கள் கூறுகின்றன. மேலும் சிருங்கேரிமட சங்கராச்சாரியாரே (அதாவது ஸ்ரீ மத்வர் பிறகு, ஸ்ரீ வித்யாரண்யர் (1380-1386) என்ற பெயருடன் மடாதிபதியானார்) இதை எழுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சரித்திரத்தன்மையற்ற அந்த ஆவணங்களின் நிலையை நன்றாக அறிந்து கொள்ளலாம்.

சுதன்வன்” அரசன் –ஒரு கட்டுக்கதை: சரித்திர-ரீதியில் சுதன்வ என்ற அரசன் இருந்தது, அரசாண்டது என்ற குறிப்பே இல்லை. ஆகையால், இது 18-19வது நூற்றாண்டுகளில் சங்கரவிஜயம் எழுத ஆரம்பித்த மடங்களின் சார்புடையவர்களின் கற்பனையே ஆகும். இருப்பினும் அவன் படைகளுடன், வில்-அம்புகளுடன் சென்று காபாலிகர்களைக் கொன்றதால், அதே மாதிரி, பௌத்தர்களையும் கொன்றிருப்பான், என்று ஒருவர் குறிப்பிட்டதும், அதை மற்றவர்கள் எடுத்து தங்களது எழுத்துகளில் எடுத்தாள ஆரம்பித்து விட்டனர்! இனி விவரமாகப் பார்ப்போம்.

சுதன்வன் குமாரில பட்டரின் தூண்டுதலால் பௌத்தத்தை ஒடுக்கியது: கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்ப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. மேலும் அது ஒரு மறைமுக மிரட்டல் ஆணையாக உள்ளது. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. அதே மாதிரி எந்த ஒரு பௌத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது.
T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.
See Telang, Mudrarakshasa., pp.xlviii-liii.,
………………., The Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155.
Wilson, Dict., xix;
Colebroole, Essayas, 1. 32.

Sankara was defetated by Buddhists

பௌத்தர்கள் உருவாக்கிய சர்ச்சைக்குள்ள நூல்கள்: சமீபத்தில், கே. டி. எஸ். சரௌ என்ற ஆராய்ச்சியாளரும், இவ்விஷயத்தை நுணுக்கமாக ஆய்ந்து பௌத்தம் இந்தியாவில் தேய்ந்தது பலநிலைகளில் – மத-சடங்கு முறை முதல் சங்கத்தின் பிரச்சினைகள் வரை – ஏற்பட்டது என எடுத்துக் காட்டியுள்ளார்.
K.T.S. Sarao, On the Question of Animosity of the Brāhmaṇas and Persecution by Brāhmaṇical Kings Leading to the Decline of Buddhism in India, The Chung-Hwa Institute of Buddhist Studies, Taipei Chung-Hwa, Buddhist Studies, No. 10, (2006).

ஆகவே, அக்கதைகளின் ஆரம்பம் என்னவென்று பார்த்தால் பௌத்தர்களின் “கதைகள்” தாம் என்று தெரிகின்றன. 7ம்-8ம் நூற்றாண்டுகளுக்கு மேல் பல காலங்களில் பலரால் எழுதப்பட்ட தொகுப்பு நூல்களில் தான் அத்தகைய விவரங்கள் காணப்படுகின்றன. முதன் முதலில் யுவான் சுவாங் (629-645), என்ற சைனாவின் புத்த யாத்திரிகர் வருகிறார். அவர் இந்தியாவில் தான் பார்த்தது, கேட்டது என்று எழுதிவைத்துள்ளதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்துள்ளனர். பௌத்தர்கள் தமது மத-ரீதியில், சாதகமாக எழுதும்போது அவ்வாறுதான் எழுதுவார்கள். ஆனால் சரித்திர ஆசிரியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அந்த விவரங்களை மற்ற அத்தாட்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து, கல்வெட்டு-கட்டிடங்களின் நிலை பார்த்து முடிவிற்கு வரவேண்டும். மௌரிய பேரரசு ஆதிசங்கரர் இவற்றை இணைக்கும் மற்றும் அவற்றை காலக்கணக்கீட்டில் வரிசையாக வைத்து அவ்வாறே இந்திய சரித்திர நிகழ்ச்சிகள் முறைப்படுத்தும் வலுக்கட்டாயமான முயற்ச்சியும் இதில் தெரிகின்றது. இது ஒரு 1200 ஆண்டுகளில் கட்டிவைக்க முயன்ற திட்டம். இக்காலகட்டத்தில் தான் உண்மையிலேயே, எழுதப்பட்டுள்ள சரித்திரத்தின் படி, ஜைன-புத்த மதங்கள் மிகவும் உச்சநிலையில் இருந்தன. ஆனால், “சனாதன மதம் / ஹிந்து மதம்” காப்பவர்களான குப்தர்களோ குறுகிய காலத்தில் தோன்றி “பொற்காலத்தையும்” ஏற்படுத்தி, திடீரென்று மறைந்து விடுகின்றனர்.

சைனாவில் பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டது: முன்னமே குறிப்பிட்டபடி, சைனாவில் பௌத்தம் தழைத்தோங்கிய நிலையில் இருந்தாலும், அங்கு பௌத்தர்கள் தண்டிக்கப் பட்டது தெரிகிறது. டாங்க் வசத்தின் வுஜாங் (Tang Emperor Wuzong) என்ற சைன அரசன் 845ல் மிகப்பெரிய அளவில் பௌத்தர்களைத் தண்டித்தான் என்று தெரிகிறது. அவன் பொருளாதார காரணங்களுக்காக அவ்வாறு பௌத்தர்களைத் தாக்கியதாக கூறுகிறார்கள். அயல்நாட்டு தாக்கத்தை முழுவதுமாக அழிக்கவும், அவன் அத்தகைய கொடிய முறையைக் கையாண்டதாகத் தெரிகின்றது. எனவே அத்தகைய அடக்குமுறை, படிப்படியாக வளர்ந்து, பௌத்ததிற்கு எதிராக செயல்பட்டிருக்க வேண்டும். பொருளாதார காரணம் காட்டியிருந்தாலும் (விஹாரங்களில் தங்கம் இருந்தது), அத்தகைய நிலை, மக்கள் பௌத்தத்தை பெரிதளவில் ஆதரித்த நிலப்பாடுத் தெரிகிறது. எனவே, திடீரென்று, ஆட்சியாளர்கள், அத்தகைய பிரபமான-மக்கள் மதத்திற்கு எதிராக அடக்குமுறையை ஏவிவிட்டிருக்க முடியாது. ஒரு சைன யாத்திரிகர், யுவான் சுவாங் எழுதியதை வைத்து, இந்தியர்களைக் குறைக்கூறும் இன்றைய இந்தியர்கள், சரித்திர ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் சைனாவில் பௌத்தம் அவ்வாறு ஒடுக்கப்பட்டதைப் பற்றி பேசுவதில்லை. ஏனெனில், ஹூணர்களோ அல்லது பௌத்தர்களோ அல்லது யாரோ அவ்வாறு வெளியேறி இருந்தால், அவர்கள் இந்தியாவில் நுழைந்திருந்தால், ஏன் என்று ஆராய்ச்சி செய்யவேண்டும். பௌத்தம் இருந்தும், வன்முறை இருந்தது ஏன், எதற்காக அவர்கள் மீது அத்தகைய அடக்குமுறை ஏற்பட்டது என்பதற்கு பதில் சொல்லியாகவேண்டும்.

வேதபிராகாஷ்
30-09-2009.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard