New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை த


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை த
Permalink  
 


பௌத்தம் இந்தியாவில் தேய்ந்து, குறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்று, கங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (11)

மே 13, 2017

பௌத்தம் இந்தியாவில் தேய்ந்துகுறைந்தது ஏன் – தர்மகீர்த்தியிடம் சங்கராச்சார்யா நான்குமுறை தர்க்கத்தில் தோற்றுகங்கையில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது (11)

Pre-christian Buddhism in Britain - Ireland

இடைக்காலம் வரை தென்னிந்தியாவில் ஜைனபௌத்தத்தின் தாக்கம்: ஆரம்பகாலங்களில், மத்தியத் தரைக்கடல் நாடுகளில் கிரேக்கர், அரேபியர் பிறகு முகமதியர் என்று அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு, முக்கியமாக தங்களது வியாபாரத்திற்கு முக்கியம் கொடுத்து வாழ்ந்ததால், இவர்கள் எண்ணிக்கைக் குறைய-குறைய தாக்குதல்கள் அதிகமாயின. குறிப்பாக பௌத்தம் ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளிலேயே முதல் நூற்றாண்டுகளில் அதிகமாகவே தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. டொனால்டு ஏ. மெக்கன்ஸி என்பவர் தன்னுடைய புத்தகத்தில் இவ்விவரங்களை ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்[1].  ஆனால், யூத-கிருத்துவ-முகமதிய மதங்கள் ஆதிக்கம் பெற்றுவந்த நிலையில், மற்றவர்களின் ஆதாரங்களை அழிக்க ஆரம்பித்தன. மற்ற நம்பிக்கையாளர்களையும் மதம் மாற்ற ஆரம்பித்தனர். அம்முயற்சிகளில், இம்மூன்று மதங்களுக்கிடையே இருந்த போட்டி, சன்டைகள், போர்கள் முதலியவை எடுத்துக் காட்டுகின்றன. அந்நிலையில் மற்ற மதங்களின் நிலை பற்றி சொல்லவேண்டியதில்லை. காலனிய ஆதிக்கம் வந்தபோது, ஐரோப்பியர் ஆசிய-ஆப்பிரிக்க-அமெரிக்க நாட்டு மக்களை அடக்கியாள திட்டமிட்டனர். 20 நூற்றாண்டுகள் வரை, அத்தகைய முறைகள் சித்த்ஆந்தம் மூலமும் செயல்பட்டது. அதற்கு சரித்திரம் [அவர்களே எழுதிய] உதவியது.

Pre-christian Buddhism in Britain - Ireland- donald Mackanzie

ஜைனபௌத்தர்கள் வடமேற்குவடக்குதெற்கு என்று நகர்ந்தது: மதமோதல்கள் அதிகமானபோது, ஜைன-பௌத்தர்கள், இடம் பெயர வேண்டியதாயிற்று. இவர்கள் மதம் மாற நேரிட்டது. தப்பித்தவர்களுக்கு, இந்தியா புகலிடம் அளித்தது. இடைக்காலத்தில், ஜைன-பௌத்த மதங்கள் முகமதியர்களின் தாக்குதல்களை தாக்குப் பிடிக்க முடியாமல், தெற்கில் நகர்ந்து செல்ல ஆரம்பித்தனர். முன்பும் அவர்களது மடாலயங்கள் இருந்தன. ஆனால், இடைக்காலத்தில், தங்களது அதிகாரத்தைத் தக்கக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. முன்பு, அவர்கள் மற்ற நம்பிக்கையாளர்களுடன் – இந்துக்களுடன், தங்களது நிலையை அறிந்து அனுசரித்து வாழ்ந்து வந்தனர். ஆனால், முகமதியர்களின் அடக்குமுறைகளினால், பெரிதும் பாதிக்கப்பட்டது இவர்கள் தாம். “களப்பிரர்களின்” கொடுமைகளை இங்கு விவரிக்க வேண்டிய அவசியம் இல்லை. முகமதியர் வடக்கில் கொள்ளை, கொலை அட்டகாசம், ஆதிக்கம் முத்லியவை அதிகமாகிய போது, அரசர்களின் நிலையும் மாறின. இதனால், இவர்கள் தெற்கு நோக்கி நகர்ந்தனர். ஆனால், முதல் நூற்றாண்டுகளில் இவர்கள் மற்றவர்களுக்கு அதிக கொடுமைகள் புரிந்ததால், மக்கள் விழிப்புக் கொண்டு, சைவம்-வைணவம் என்ற ரீதியில் ஜைன-பௌத்தர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். இதனால், ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் மூலம், விழிப்புணர்வு ஏற்பட்டது. 14ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் முகமதியர்களின் அட்டகாசம் ஆரம்பித்தது.

Buddha in Egypt

லாமா தாரநாதா என்பவரின் “இந்தியாவில் பௌத்தம்” என்ற நூல் கொடுக்கும் விவரங்கள்[2]: லாமா தாரநாதா 1575ல் பிறந்து, தனது 34ம் வயதில் [சுமார் 1609ம் ஆண்டு] “இந்தியாவில் பௌத்தம்” என்ற நூலை எழுதினார். இது “புத்த மஹாத்மியம்” என்றும் சொல்லலாம், ஏனெனில், முழுவதும் சரித்திரமாக இல்லாமல், புத்தர் மற்றும் பௌத்தத்தின் சிறப்பை, மேன்மையை மற்றும் வெற்றியை புகழ்ந்து எழுதப்பட்ட கதைகள் கொண்ட புராண நூலாக உள்ளது[3]. ஏ.ஐ. வோஸ்திரிகோவ், இந்நூல் 143 ஏடுகளைக் கொண்டிருந்தன, ஏ. குருன்வெடல் என்ற ஜெர்மானியர் மொழிபெயர்த்தார், மூல சுவடிகள் / ஏடுகள் ஐந்தாவது தலாய் லாமா காலத்தில் [1617-1682] பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டபோது, அழிக்கப்பட்டது[4].  இங்கு பௌத்தர்களை யார், எதனால், ஏன் தாக்கப்பட்டனர் என்று தெரியவில்லை, பிறகு மீண்ட ஆவணங்களை வைத்து, உருவான, அத்தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. இப்பொழுது, பௌத்தர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை[5].

Dharmakirti - Tranatha Buddhism in India

தர்மகீர்த்தியின் புகழும் பௌத்தத்தை பரப்பிய விதமும்: காககுஹா என்ற இடத்தில் தர்மகீர்த்தி என்ற புத்த பிக்ஷு இருந்தார். அவர் ஆறு தர்சனங்களை அறிந்த தத்துவ விற்பன்னர்களைத் தோற்கடித்து, பௌத்தத்தின் சிறப்பை எடுத்துக் காட்டினார். ஆயிரக் கணக்கான பிராமணர்கள் தோற்று, பௌத்தத்தை ஏற்றுக் கொண்டனர். நிர்கந்த, மீமாஸக, பிராமண, தீர்த்திக என்று எல்லா பிரிவினரையும் வெற்றிக் கொண்டார். மணியை அடித்து, “இன்னும் என்னுடம் வாதம் புரிய யாராவது உள்ளனரா?”, என்று கேட்டார். ஆனால், தப்பித்தவர் எல்லாம் விந்தியாசலம் தாண்டி ஓடி மறைந்தனர். அவர் பழைய சித்தாந்திகளின் வழிபாடு ஸ்தலங்களை, அவை அழிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்ததால், புதுப்பித்துக் கட்டினார்[6]. பிறகு, காட்டில் சென்று தியானம் செய்ய சென்று விட்டார். அதாவது அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் இடிக்கப் பட்டன, பௌத்தாலயங்களாக மாற்றிக் கட்ட்டப்பட்டன என்பதை அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், இத்தகைய, பௌத்தப் பற்று கொண்ட தர்மகீர்த்தி, பழைய கோவில்களை ஒன்றும் புதுப்பித்துக் கட்டியிருக்க மாட்டார்.  அதாவது, ஆறாம் நூற்றாண்டிலேயே அத்தகைய இடிப்புகள் நடந்துள்ளது என்பதனையும் கவனிக்க வேண்டும்[7].

Dharmakirtis - Sankara arguments

சங்கராச்சார்யதர்மகீர்த்தியை எதிர்கொண்டது: இந்நிலையில் சங்கராச்சார்யா, ஶ்ரீ நளேந்திரர் என்பருக்கு தான் வாதம் புரிய தயாக இருப்பதாக செய்தி அனுப்பினார். ஆனால், நாலந்தாவில் உள்ள பிக்ஷுக்கள் ஒரு வருடம் கழித்து வாதம் வைத்துக் கொள்ளலாம் என்று தள்ளி வைத்தனர். அதாவது, தெற்கில் சென்ற தர்மகீர்த்தியை வரவழைக்க நேரத்தை எடுத்துக் கொண்டனர். வாரணாசியில், அரசன் பிரதோத்யா / பிராதித்யா வாதத்திற்கு ஏற்பாடு செய்தார். சங்கராச்சார்யா, தர்மகீர்த்தியிடம், “தர்மகீர்த்தி தோற்றால் கங்கையில் மூழ்கடிக்கப்பட வேண்டுமா அல்லது மதம் மாற்றப்பட வேண்டுமா என்பதை நாம் தீர்மானிக்கலாம், ஆனால், நான் தோற்றால் கங்கையில் குதித்து என்னுயிரை மாய்த்துக் கொள்வேன்”, என்று எல்லோர் முன்னிலையிலும் அறிவித்தார்[8].  இருவரிடையே வாதம் ஆரம்பித்தது, ஆனால், சங்கராச்சார்யா எல்லா விதத்திலும் தோற்கடிக்கப் பட்டார். அவருக்கு பதில் அளிக்க எதுவும் இல்லாத நிலை ஏற்பட்டது. அந்நிலையில், கங்கையில் குதித்து, இறக்கத் தயாரானார். அப்பொழுது, தர்மகீர்த்தி தடுத்தார். ஆனால், ஒப்புக்கொள்ளவில்லை, தன்னுடைய சீடனான பட்ட ஆச்சார்யாவை நோக்கி, “மொட்டையெடித்துக் கொண்டு இவருடன் வாதம் புரிவாயாக, ஒரு வேளை உன்னால் வாதத்தில் ஜெயிக்க முடியவில்லை என்றாலும், நான் மறுபடியுமனுன்னுடைய மகனாகப் பிறந்து வந்து இவருடன் வாதிப்பேன்”, என்று கூறி, கங்கயில் குதித்து உயிரை விட்டார். தர்மகீர்த்தி சங்கர்ராச்சார்யருடைய சீடர்கள் பலரை பௌத்த மதத்திற்கு மாற்றினார். சிலர் தப்பி ஓடி விட்டனர்.

© வேதபிரகாஷ்

13-05-2017

Dharmakirti - ferocious

[1] Donald A. Mackanzie, Pre-Christian Buddhism in UK and Ireland, Blackie & Son Ltd, UK, 1928.

[2] Deviprasad Chattopadhyaya (ed.) and Lama Chimpoa (Trans.), Taranatha’s History of Buddhism in India, Motilal Banarasidas, New Delhi, 1990.

[3]   Deviprasad Chattopadhyaya , in his preface to this book writen on May 26, 1970, Preface, p.xxiii

[4] The original printing blocks of Taranatha’s works were largely destroyed “during the persecution of the Jo-nan~pa sect in the time of the Fifth Dalai Lama (Nag-bdan-bJo-bzanrgya-mtsho: A.D. 1617-1682) in the first half of the 17th century AD. Preface, p.xxiv.

[5] பௌத்தம் சைனாவினால் எப்படி கட்டுப்படுத்தப் பட்டது போன்ற விவரங்களையும் இவர்கள் படிப்பதில்லை, ஆராய்ச்சி செவதில்லை.

[6] He next went to *DravaIi and, by ringing a bell, proclaimed: ‘Is there anybody in this place capable of entering into a debate?’ Most of the tirthika-s ran away while some admitted that they were not capable of it. He rebuilt there all the older centres of the Doctrine which had been damaged. He sat on meditation in a solitary forest. 232

[7] ஏனெனில், முகமதியர்களாக மாறியவர்களில் பெர்ம்பாலோர் பௌத்தர்களாக இருந்த நிலையில், அவர்களது கோவில் இடிப்பு, விக்கிர-அழிப்பு சித்தாந்தம் இன்னும் அதிகமாகின என்பதை அவர்களது நடவடிக்கைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

[8] On the ev; of the debate between *Sal11karadirya and Sri Dharmakirti, * Sa111kara declared to the people in the

presence of the king: ‘In case of our victory, we shall decide whether to drown him into the *GaIlga or to convert him into a til’thika. In case of his victory, I shall kill myself by jumping into the *Gal1ga.’ 233.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard