New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மத-ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்


Guru

Status: Offline
Posts: 24614
Date:
பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மத-ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்
Permalink  
 


 பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்? பௌத்தர்கள் இந்தியாவில் மத-ரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையா, பொய்யா? (14)

மே 15, 2017

பௌத்தம் இந்தியாவில் வலுவிழந்தது ஏன்பௌத்தர்கள் இந்தியாவில் மதரீதியில் கொடுமைப்படுத்தப்பட்டது உண்மையாபொய்யா? (14)

T W Rhys Davids Buddhist scholar

ரைஸ் டேவிட்ஸ் 1894லிலேயேஅதாவது 125 வருடங்களுக்கு முன்பே இதெல்லாம் பொய் என்று மறுத்துள்ளார்: டி. டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸ் [Thomas William Rhys Davids (1843-1922)] என்பவர் பௌத்தமத ஆராய்ச்சியில் தலைசிறந்தவர். அவரது “பௌத்த இந்தியா” (Buddhist India) என்ற புத்தகம் இன்றளவிலும் மிக்கியமாக உள்ளது. பாலி டெக்ஸ்ட் சொஸைடி உருவாக்கியதில் (1881), நூல்களை, சேகரித்ததில், பதிப்பித்ததில் (more than 25,000 pages, www.palitext.com) பெரும் பங்காற்றியுள்ளார். அவர் 1894லிலேயே, அதாவது 125 வருடங்களுக்கு முன்பே, இப்பொழுது பிரச்சார ரீதியில் பௌத்தர்கள் ஹிந்துக்களால் இந்தியாவில் கொடுமைப்படுத்தப் பட்டனர், கொன்று குவிக்கப் பட்டனர், அவர்களது விஹாரங்கள், பள்ளிகள், சின்னங்கள் இடித்து நொறுக்கப்பட்டன, எரிக்கப் பட்டன, சங்கரர் மற்றும் அரசர்கள், குறிப்பாக பிராமணர்கள் இத்தகைய மத-தண்டனைகளை நிறைவேற்றினார்கள் போன்ற குற்றச்சாட்டுகளை ஆய்ந்து, அவையெல்லாம் சரித்திர ஆதாரமற்றது என்று எடுத்துக் காட்டியுள்ளார். இருப்பினும் பிரசார பீரங்கிகளை வைத்துகொண்டு, அதில் சரித்திர-ஆதாரமில்லாத வெடிமருந்துகளை நிரப்பி, பொய்களை வெடித்து, கட்டுக்கதைகளைப் பரப்பி வரும் சித்தாந்த எழுத்தாளர்கள்-பேச்சாளர்கள் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. நமது “மின்தமிழ்” அறிஞர்கள் சிலரும் அத்தகைய வினாக்களை எழுப்பியுள்ளார்கள். ஆகையால், அக்கட்டுரையை மொழி பெயர்த்துத் தருகிறேன்.

T. W. Rhys Davids, “Persecution of the Buddhists in India” in the Journal of Palitext Society, 1894, Vol.IV, pp.87-92.

Mihirakula -son of Toramana-, coming from Mongolia, a Hun king reportedly destroyed Buddhism!

மிஹிரகுலன் படையெடுப்பின் போது பௌத்தர்கள் அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டது: யுவான் சுவாங் தனது பிரயாணகுறிப்புகளில் (புத்தகம்.IV; Julien 1.196; Beal.1., 171) மிஹிரகுலன் என்ற காஷ்மீர அரசன், தன்னுடைய ஆப்கானிஸ்தானின் மீதான படையெடுப்பின் போது (சுமார் 400 AD) பௌத்த ஆலயங்கள், விஹாரங்கள் முதலியவற்றை இடித்துத்தள்ளியதாகவும், எண்ணிலடங்காத அந்த பௌத்த நாட்டு மக்களைக் கொன்றுகுவித்ததாகவும் சொல்கிறார் (ஜூலியன்.1.196; பீல்,1,171). பிறகு வோங்-பு என்பவரும் ஆறாவது நூற்றாண்டு இறுதியில் எழுதும்போது, இந்த நிகழ்ச்சிகளைக்குறிப்பிட்டுள்ளார். “தசைகளான ரத்த ஆறாக ஒடிக்கொண்டிருந்தது” (Beal’s “Catena”, p.139). பீல் இது மத-ரீதியில் நடத்தப்பட்டக் கொடுமை என்கிறார். ஆனால், ஒரு நாட்டின்மீது படையெடுத்து செல்லும் நிகழ்ச்சி, எவ்வளவு கொடுமையாக இருந்தாலும், மதசாயம் கொடுக்கமுடியாது. வெற்றிக்கொண்டவன், அந்த ராஜ்ஜியத்தை, தனது ஆளுகைக்குட்படுத்திய பின்பு, அத்தகைய கொலை, அழிவு நிகழ்ச்சிகள் அவன்மீது ஏற்றிச்சொல்லப்படுகிறது. மேலும் ராஜதரங்கிணி அவன் 3,00,00,000 மக்களை கொன்று குவித்ததால் அவனை ஒரு ராக்சஸன் என்று குறிப்பிடுகின்றது (I.312). ஆனால் அத்தகைய கொலைக்கு எந்த மதநோக்கும் இல்லை. மேலும் வேடிக்கை என்னவென்றால், அவனது மந்திரிகள் பௌத்தர்கள் ஆவார்கள்! ஆகவே அவன், ஒரு கொலைக்கார, வெறிபிடித்த பைத்தியம் எனலாம். அத்தகைய விவரங்கள் இருந்தால், அவன் மதரீதியில் கொடுமை புரிந்தான் எனலாம். ஆனால், உள்ள விவரங்கள் அவ்வாறு இல்லை.

Buddhism and violence

புத்தரின் எலும்புகளைப் பகிர்வதில் ஏற்பட்ட போர்கள்: பன்னா (சம்யுத்தா IV.61; திவ்யவதனா.38) என்ற அருமையான கதையில் சூன-பராந்தகர்கள் எவ்வாறு புதிய கருத்துகளைப் பரப்புகின்றவர்களைக் கொடுமைப்படுத்திகின்றனர் கூறப்படுகிறது. அவர்களது, அத்தகைய கொடிய நடத்தை. சத்தர்மா புண்டரீகா (X.25) என்ற நூலில் வரும் பாடலை நினவுபடுத்துகிறது, “எந்த பிராசரகன் மீதாவது கொம்புகள், கட்டைகள், முற்களால் ஆன ஆயுதங்கள், கெட்ட வார்த்தைகள் விழுந்தால், அவன் பொருமையாக என்னை நினைத்துக்  கொள்வனாக”. பாதிக்கப்பட்டவனே, அதை மத-ரீதியிலான நடந்த கொடுமை என்று சொல்லமாட்டான். ஆகவே, சரித்திர ஆசிரியன் இந்த வார்த்தையினை உபயோகப்படுத்தும்போது கவனமாக இருக்கவேண்டும். இத்தகைய கதையும் தாதாவாசன என்று நூலில் காணப்படுகிறது (P. T. S. J., 1884, II.94 and IV.13), ஒரு நிகந்தன் தனது குஹசிவா என்ற பக்கத்து வீட்டுக்காரனை, “தானே செத்த உடம்பின் எலும்பை வணங்கும்போது, அவன் மற்றவர்களின் கடவுளர்களை இகழ்ந்து பேசுகிறான்”, என்று ஒரு ஹிந்து அரசனிடம் புகார் கூறி அவனது இதயத்தில் விரோதத்தை வளர்க்க முயல்கிறான். அரசன் அந்த எலும்பை எடுத்து வரச்சொல்லி ராணுவத்தை தூதுவனுடன் அனுப்புகிறான். ஆனால், அவனே மதம் மாறுகிறான், பிறகு அரசனும் மதம் மாறுகிறான். ஆனால், படைகள் தாக்குகின்றன, குஹசிவா போரிட்டு இறக்கிறான் (IV.20), ஆனால், அந்த “புனித-எலும்பு” இலங்கைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இதைக்கூட ஒரு “மத-யுத்தம்” என்று சொல்லலாமேத் தவிர “மத-ரீதியிலான கொடுமை” ஆகாது.

Persecution of the Buddhists in India - Sasanka as per Bana and Zuanzang

சசாங்கன் வங்காளத்தில் பௌத்தர்களைத் தண்டித்தது, கொடுமைப் படுத்தியது: பிறகு வங்காளத்தின் அரசன் சசாங்கனைப் பற்றியக் குறிப்புகள், யுவான் சுவாங் சொல்லியபடி உள்ளன (Julien 1.349, 422; Beal 2.42, 91). அதன்படி, சசாங்கன், போ-மரத்தை அழித்ததுடன், புத்தரின் உருவத்தை எடுத்து விட்டு மஹேஸ்வரின் உருவத்தை வைத்தான். புத்தனுடைய மதத்தைத் தூக்கி எறிந்தான், சங்கத்தைப் பிரித்துவிட்டான். பின்னர் நடக்கும் பிராயணங்களை அறிய வேண்டி, தனது ஆயுள்காலத்தை நீட்டியிருக்க முடியாது (J. R. A. S., 1893, p.147). சசாங்கனுடைய பௌத்தத்திற்கு எதிரான விரோதம் எப்படி இருந்தாலும், அவன் பௌத்தர்களை கொடுமைப்படுத்தினான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது”. அந்த திவ்யவதன கதைகளில் (ப,433, 434), பிறகு வருகிறான், புஸ்யமித்ரன். அவன் அசோகனுக்குப் பிறகு ஆறாவது அரசனாக இருக்கிறான், மௌரிய அரசர்களுக்கு கடைசியாக இருக்கிறான். இங்குதான், நாம் சோதித்துப் பார்க்கும் வகையில், கடைசியாக உடற்றல்/மத-ரீதியில் தண்டித்தல் (persecution) என்ற நிலை இருப்பதாகத் தெரிகிறது. இங்கு, சசாங்கன் புத்தனுடைய மதத்தை வேரறுக்கத் தீர்மானித்ததுடன், அவர்களுடைய விஹாரங்களை இடித்துத் தள்ளியதுடன், ஒரு சிரமணனுடைய தலையை எடுத்து வந்தால் அவனுக்கு 100 தீனார்கள் தரப்படும் என்று அறிவித்ததாகவும், பிறகு “அர்ஹத்துகள்” எனப்படுகின்ற பௌத்தர்கள் தண்டிக்கப்பட்டதாகவும் விவரங்கள் காணப்படுகின்றன. ஆனால், அக்கதை எழுதிய ஆசிரியரே ஒப்புக்கொள்வதாவது, உடனடியாக அந்த உடற்றல் நிறுத்தப்பட்டது என்பதாகும். இந்த கதையினை உறுதி செய்யும் வகையில் எந்த ஆதாரமும் இல்லாததால், நாம் நமது தீர்ப்பினை திருத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sasanka

மௌரியன் பௌத்தத்தை தண்டித்தான், கொடுமைப் படுத்தினான் என்பது முரணானது: “திவ்யவதன” என்ற இந்த கதையில் வரும் இந்த விவரங்கள் அடங்கிய பத்தி – ஒரு தேதியை தரும் வகையிலும் அல்லது ஒரு அரசனின் ஆட்சியைப் பற்றிக் குறிப்பிடுவதிலும், மிகவும் ஆவலைத்தூண்டும் வகையில் உள்ளது. உண்மையில், அந்த பத்தி “அசோகவதன” என்ற கதையில் வருகிறது. தொகுக்கப்பட்ட அக்கதைகள் பல காலங்களைச் சேர்ந்த பல அவதானங்களிலிருந்து பெறப்பட்டு இப்பொழுதைய உருவெடுத்துள்ளது. புஸ்யமித்திரன் எந்த கடைசி மௌரியனுக்கு படைதளபதியாக இருந்தானோ அவனைக் கொன்று, இரண்டாம் நூற்றாண்டில் BCE சுங்க வம்ச ஆட்சியை நிறுவியதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதற்கு அத்தாட்சியாக உள்ளதோ முன்னுக்கு முரணான உள்ள புராணங்களில் உள்ள அரசர்களின் பட்டியல்கள் தாம் (They are all given in Miss Duff’s forthcoming “Indian Chronology,” of which she has kindly allowed me to see the proofs. See also Lassen’s “In.Alt.,” 2.271, 345). இந்த புராணங்கள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இவ்வாறு, இந்த வடிவத்தில் இப்பொழுது உள்ளன. இங்கு இந்த விவரங்கள், அதாவது புஸ்யமித்திரனைப் பற்றியவற்றை உண்மை என்று ஏற்றுக்கொள்வதானால், அவன் ஒரு மௌரியன் என்று கொள்ளவேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்டால், அவன் தான் மௌரிய வம்சத்தின் கடைசி அரசன் என்றாக மாட்டான்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- Sudhanvan

குமாரில பட்டரின் தூண்டுதலால்சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மதரீதியிலான தண்டனை:  கடைசியியாக, எட்டாம் நூற்றாண்டின் முதல் பாதி காலக்கட்டத்தில் குமாரில பட்டரின் தூண்டுதலால், சுதன்வன் என்பவன் மேற்கொண்டதான மத-ரீதியிலான தண்டனை விவரங்கள் வருகின்றன. “மாதவ” என்பரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் “சங்கர திக் விஜயம்” என்ற நூலில் இவைக் காணப்படுகின்றன. “ஆனந்தகிரி” என்பவரால் தொகுக்கப்பட்ட சங்கர விஜயத்திலும் இந்த விவரங்கள் உள்ளன. அங்கு குறிப்பிடும் ஒரு அரசன் தனது, “எந்த ஒரு வேலைக்காரன் பௌத்தர்களை கொல்லாமல் இருக்கிறானோ, அவன் கொல்லப்படுவான்” என்று பிரகடனப் படுத்தியதாக உள்ளது. ஆனால் அத்தகைய “பிரகடனம்” அமூல் படுத்தப்பட்டதா இல்லையா என்பது தெரியவில்லை. ஏனெனில், எந்த விவரங்களும் கொடுக்கப்படவில்லை. அதே மாதிரி எந்த ஒரு புத்தனும் தண்டிக்கப்பட்டதாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. அந்த ஆணை இமயமலையிலிருந்து குமரிமுனை வரை செல்லும் என்பது அபத்தமாக உள்ளது. இவையெல்லாம் பல நூற்றாண்டுகள் கழித்து, கட்டுக்கதைப் பாடல்கள் வடிவில் எழுதப்பட்டவையாகும். அத்தகைய பாட்டுகளில் அளவுக்கு அதிகமாகவே புலவர்கள் அல்லது பாட்டு எழுதியவர்கள் அத்தகைய செய்திகளை சேர்த்துள்ளார்கள் என்பது தெரிகின்றது. மேலே குறிப்பிட்டுள்ள எல்லாகுறிப்பிகளிலிலும், இதுதான் மிகவும் பலஹீனமாக உள்ளது, இருப்பினும், நாம் இதை ஏன் கவனிக்க வேண்டும் என்றால், இது தான் மிகவும் அதிகமாகக் குறிப்பிடப்படுகிறது (See Telang’s Mudrarakshasa., pp.xlviii-liii., and the Journal of the Bombay Branch R. A. S., 1892, pp.152-155. Wilson, Dict., xix; Colebroole, Essayas, 1. 323).

பௌத்த எச்சங்கள் சிதிலங்களில் காணப்படுவது, அவை பலமுறைத் தாக்கப் பட்டுள்ளன என்பதிக் காட்டுகின்ற்ன: நான் கவனித்த வரையிலும், இந்தியா முழுவதிலும் உள்ள பௌத்த நினைவு சின்னங்களின் தற்பொழுதுள்ள நிலை தான் எனக்கு ஆதாரமாகத் தெரிகின்றது. காபூலிலிருந்து வங்காளம் வரை, தெற்கில் தக்காணத்திலிருந்து இலங்கை வரை, பௌத்த பள்ளிகள், விஹாரங்கள் அழிவில் உள்ளன. சாரநாத்தில் அகவாழ்வு மேற்கொண்டபோது, பல இடங்களில் தீயிட்டதற்கான மற்றும் வேண்டும் என்றே இடிக்கப்பட்டது என்பதற்கான பல அடையாளங்கள் காணப்பட்டன, “இவையெல்லாம் – மதகுருமார்கள், கோவில்கள், விக்கிரங்கள் முதலியவை மொத்தமாக – ஒருதடவைக்கு மேல் தாக்கப்பட்டன, தீயிட்டுக் கொளுத்தப்பட்டன” என்ற முடிவிக்கு வரலாம். (Cunningham, Archaeological Reports, 1.121-128). இலங்கையில், நானே அத்தகைய அழிக்கப்பட்ட சின்னங்களைப் பார்த்திருக்கிறேன். இலங்கையைப் பொருத்த வரையிலும், உண்மையென்னவென்றால், தமிழக படையெடுத்து வந்தவர்கள் மற்றவர்கள் புதையலை வேட்டையாட வந்தார்களேயொழிய, தமக்குப் போட்டியாக வந்துள்ள மதத்தினை அழிக்க வரவில்லை, என்பது அவர்களது சாதாரணமான போர்முறைகளிலிருந்து தெரிகின்றது. (See especially Chapter 55, verse 21, and Chapter 80, verses 65-69). மத-துவேசம், வெற்றிக்கொண்டவர்கள் அதிகமாக இருக்கும்போது, போரின் முடிவில் தீவிரவாதத்துடன் வெளிப்பட்டிருக்கும் என்பதனை அறியலாம். ஆனால், இவையெல்லாம் அத்தகைய மத-ரீதியிலான தண்டனை யுத்தங்கள் அல்ல. இவையெல்லாம் சாதாரணமான போர்களில் எந்த அளவிற்கு வன்செயல்கள் ஏற்படுமே அந்த அளவில்தான் ஏற்பட்டுள்ளன, அதேமாதிரிதான் இந்தியாவிலும் ஏற்பட்டுள்ளன என்று நியாமான முடிவிற்கு வரலாம்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- nothing mentioned in Pali texts

பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மதரீதியிலான கொடுமைகள்தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை: இருப்பினும், இந்திய சரித்திர ஆசிரியர்கள் நாலந்தா மற்றும் மற்ற இடங்களில் ஏற்பட்ட முகமதியர்களின் கொடுமைகளை பயங்கரமாகச் சித்தரிக்கின்றனர். எந்த ஒரு ராணுவ காரணம் / தேவையும் இன்றி, அத்தகைய பழமை வாய்ந்த பல்கலை கழகத்தை – கட்டிடங்களை அழித்ததோடு அல்லாமல், புத்தகங்களை எரித்துள்ளார்கள், தம்மைக் காத்துக் கொள்ளத் தெரியாத மாணவர்களையும் கொன்றுள்ளார்கள். இங்கு மததுவேசம் / வெறி இல்லை என்று மறுக்கமுடியாது அல்லது அவர்களது அறியாத காட்டுமிராண்டித்தனத்தை சாதாரணமாக குறைக்கூற முடியாது. சாரநாத்தில் காணப்படுகின்ற அத்தகைய கொலைகள் மற்றும் தீயிட்டுக் கொளுத்துதல் முதலிய காரியங்கள், அந்த அருமையான மென்மையான கைகளே செய்திருக்க வேண்டும். பாலி மொழியிலுள்ள பீடகங்களிலேயே அத்தகைய மத-ரீதியிலான கொடுமைகள்/ தண்டனைகள் பற்றிய எந்த குறிப்புகளும் இல்லை. நிகந்தர்களின் தூண்டுதலால் மொகல்லான என்பவன் கொல்லப்பட்ட நிகழ்ச்சி “தம்மபாத உரையில்” காணப்படுகிறது. ஆனால் அது தனிமனித குற்றச்செயலாக உள்ளது (Dhammapada Commentary, pp.298 and following; compare J.1.391).

பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள்: அங்குலிமாலன் தாக்கப்பட்டதற்கு எந்தவித மதக்காரணமும் இல்லை (M.2.96). மாகந்தியன் என்ற துறவி தனது பிராமண நண்பனிடம் புத்தருக்கு எதிராக வெறுப்பும், காழ்ப்புடன் கூறுவதும் அத்தகைய நிலையில் இல்லை. ஏனெனில், “புத்தர் நமது சூத்திரங்களில் வேவு பார்க்கிறார்” (M.1.502) என்றுள்ளது. ஆனால் அந்த பிராமண நண்பன் அவனிடம் எந்த இரக்கத்தையும் காட்டவில்லை. பிறகு அந்த துறவியே தனது கருத்தை மாற்றிக்கொள்கிறான். பாலி மொழி நூல்களில் பிராமணர்கள் உயர்வாகப் பேசப்படுகிறார்கள், மற்றும் பிராமணன் என்ற வார்த்தை எப்பொழுதுமே ஒரு மதிக்கப்படும் பட்டம் / கௌரவமுள்ளவன் போன்றே உபயோகப்படுத்தப் படுகிறது. சங்கத்திற்கும் பிராமணர்களுக்கும் இடையே நிரந்தரமான உரையாடல்கள்- சந்திப்புகள் மிகவும் அடக்கத்துடனும் மரியாதையுடனும் இருந்து வந்துள்ளன.

 

கதையாக எழுதியவர் ஆதாரங்களுடன் எழுதவில்லை: நான் [ரைஸ் டேவிட்ஸ்] குறிப்பிட்ட பிற்கால குறிப்புகள், சமூக மாற்றங்களை ஊக்குவிக்கும் கிருத்துவர்கள் ஆசார கிருத்துவர்களால் அல்லது ரோமாபுரி ஆட்சியாளர்களால் அரசியல் கலந்த முறையில் கிருத்துவர்கள் தண்டிக்கப்பட்டது போன்று, இவையெல்லாம் இல்லை. புஸ்யமித்திரன் கதைக்கு எந்த ஆதாரமும் / உண்மையும் இல்லை என்று நான் சொல்லவேண்டியதில்லை. இப்பொழுதுள்ள அந்த கதைகொண்ட ஆவணம் தவறான விவரங்களைக் கொண்டுள்ளன, மேலும் அதை எழுதிய ஆசிரியருக்கு எந்த விவரமும் முழுவதுமாகத் தெரிந்திருக்கவில்லை என்பது தெரிவதால், நாம் முடிவான தீர்ப்புக்கு கருத்துருவாக்கம் கொள்ள முடியாது. எது எப்படியாகிலும், தத்துவார்த்த ரீதியில் எதிர்-எதிரான கருத்துகளைக் கொண்ட மதங்கள் ஆயிரக்கணக்கான வருடங்கள் மிகுந்த அமைதியுடன் வாழ்ந்துள்ளனர் என்பதுதான் உண்மை.

சகிப்புத்தன்மை – சிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும்: பௌத்த அரசன் அசோகனுடைய மெச்சக்கூடிய சகிப்புத்தன்மையினை, மேற்கத்திய சரித்திர ஆசிரியன் ஒப்புக்கொள்ள மறுக்கும் விஷயம் விந்தையான போக்காக உள்ளது. ஆனால் அத்தகைய சகிப்புத்தன்மை என்பது முந்தைய காரணங்களின் மீது ஆதாரமாக உள்ளது. இத்தகைய சிறப்புத்தன்மை முழுவதுமாக இந்திய மக்களையே சாரும். மேலும், அசோகனுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, கங்கைச் சமவெளியில் மிகத்தலைச்சிறந்த ஞானம் மற்றும் கலாச்சாரம் இருந்து பரவியிருந்தது, மேனாட்டவர்கள் இதுவரை சரியான முறையில் அறியப்படவில்லை என்பது, என்னுடையக் கருத்து (The Mahavamsa (p.128) tells of the tolerance of the Tamil conqueror Elara towards the beliefs of his Buddhist subjects, and (pp.232-235) of proceedings taken by Buddhist kings against heretics of the same faith. See also Chapter 78). [என்னுடைய மேற்காணும் கட்டுரை தட்டெழுத்தில் இருக்கும்போது, சர் ஜான் வேர் எட்கார் (Sir John Ware Edgar) என்பவரும் அதேமாதிரியான முடிவை தமது கட்டுரையில் வெளியிட்டுள்ளார் Fortnightly Review, Vol.xxvii., 1880, p. 821, என அறிகிறேன். ஆனால் அதை நான் பார்க்கவில்லை என்பதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்]. T. W. Rhys Davids. இவ்வாறு ரைஸ் டேவிட்ஸ் தன்னுடைய கட்டுரையை முடிக்கிறார்.

Persecution of the Buddhists in India - Rhys Davids- acknowledging John Ware Edgar

ரைஸ் டேவிட்ஸின், ஆராய்ச்சியின் நாணயத் தன்மை: இங்கு ஒரு  ஆராய்ச்சியாளரின் நேர்மையை பாருங்கள். ஒத்தக்கருத்தை, அதே முடிவை மற்றொருவரும் ஆதாரங்களுடன் தனக்கு முன்பேயே கூறியுள்ளார் என்றபோது அவரைக் குறிப்பிட்டு அவரது ஆய்வுக் கட்டுரையை, முன்னமேயுள்ள பதிவுசெய்யப்பட்ட எழுத்துகளை அறிந்து ஏற்றுகொள்கிறார், முறையோடு ஆதரிக்கிறார். ஆனால், இன்றோ எங்கு தமது நிலை மாறிவிடுமோ, ஆராய்ச்சித்திறன்-மதிப்பு குறைந்துவிடுமோ என்று பயந்து அதை மறைக்கத் துணிகின்றனர், மறைக்கின்றனர். அதுமட்டுமல்லாது, சந்தர்ப்பம் / நேரம் கிடைத்தால், அத்தகைய ஆய்வுகட்டுரையிலுள்ள விஷயங்களையும் சேர்த்துக் கொண்டு, ஏதோ இவர் எல்லாவற்றையும் பார்த்துதான் தமது ஆய்வுகட்டுரையை உருவாக்கியுள்ளார் என்ற தோற்றத்தை தயாரித்து நம்புகின்ற முறையில் அளிப்பார். ஆராய்ச்சியாளர்களுக்கு உண்மையை அறிய திறன் வேண்டும், அறிந்தபின் ஒப்புக்கொள்ளத் துணிவு, பக்குவம் வேண்டும். ஆனால் சித்தாந்தரீதியில் இயங்குபவர்கள் தமது நிலை, பதவி, ஆதிக்கம், கிடைக்கும் வசதிகள் முதலியவற்றை மனத்தில் கொண்டு, அவற்றை இழக்கக் கூடாது என்ற நிலையில் இருக்கும்போது, உண்மையைபற்றி கவலை இல்லை தான். அறிந்த பின்னரும், இல்லை நான் இப்படிதான் வாதிடுவேன், பேசுவேன், எழுதுவேன் என்றாலும் ஒன்றும் செய்யமுடியாது.

 

வேதபிரகாஷ்
01-10-2009.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard