New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தேவேந்திர குல வேளாளர்கள்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
தேவேந்திர குல வேளாளர்கள்
Permalink  
 


"தேவேந்திர குல வேளாளர்" என்ற பெயர் மாற்ற கோரிக்கையில் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கின்றன.இது பல ஆண்டுகளாகவே நடந்து கொண்டேதான் இருக்கிறது.இதில் இப்போது ஒரு பெரிய தேசிய கட்சி தலையிடும் போது அதனுடைய வீரியமிக்க சத்தம் பொது வெளிக்கு வருகிறது இது எதார்த்தம்.

ஆனால் இந்த விவாதங்கள் உணர்ச்சிகரமாக மட்டுமே நடக்கிறது,அந்த பிரச்சனையும் அப்படிப்பட்டதுதான்.இதிலிருக்கும் நடைமுறை சிக்கலை யாரும் சரியாக பேசியது போலவே தெரியவில்லை.அதை விளக்க முற்படுகிறேன்.

முதலில் "தேவேந்திர குல வேளாளர்" என்று அழைக்கப்பட்டதற்கு வரலாற்று தரவு கிடையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.குடும்பர்,பண்ணாடி, காலாடி,கடையர்,பள்ளர்,வாதிரியார் ஆகிய பிரிவுகள் தங்களை தேவேந்திர குலம் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.இவர்களை ஒன்றாக இணைப்பது உழவு தொழிலும்,தாங்கள் இந்திரனை வணங்கும் குடி என்பதும்தான்.

மருதநில மக்களின் தலைவன் (அ) தெய்வம் இந்திரன்.அவனுக்குத்தான் இந்திரவிழா எடுக்கப்பட்டது இங்கே.இந்திர குலத்தை சேர்ந்த மருதநில மக்கள் என்பதாலும்,ஏர்கலப்பை விவசாயத்து முந்திய எருமை உழவை செய்தவர்கள் என்பதாலும் தங்களை வேளாண் குடிகள் என்ற வட்டத்திற்குள் வர எங்களுக்கு நியாயம் உள்ளது என்று நூறாண்டுகளாக கேட்கிறார்கள்.

உழவுத் தொழிலை செய்பவர்கள் எல்லாம் வேளாளர் கோரிக்கை வைப்பது போலொன்று கிடையாது இந்த கோரிக்கை என்பதை நீங்கள் உற்று கவனித்தால் புரியும்.தங்களுடைய மருதநில தொடர்பு,இந்திர குலம் போன்றவற்றை வைத்துதான் தங்களை 'வேளாளர்' என்ற பொதுக்குடையின் கீழ் கொண்டு வர விரும்புகிறார்கள்.நிற்க.

இப்போது வேளாளர் என்பது ஒரு சாதிப்பெயராக உள்ளது.உண்மையில் அது சாதிப் பெயரல்ல,அதை இன்னொரு தனிப்பதிவில் பேசுவோம்.ஆனால் இன்று வேளாளர் என்பதே ஜாதியின் பெயராக உள்ளது.திருநெல்வேலி சைவ வேளாளர்,சோழிய வேளாளர்,தொண்டை மண்டில வேளாளர்,பாண்டிய வேளாளர்,கொங்கு வேளாளர்,துளுவ வேளாளர் என்று பகுதி சார்ந்த அடையாளத்துடன் வேளாளர் என்பதே சாதிப்பெயராக உள்ளது.

இப்போது தேவேந்திரர்களும் தங்களை வேளாளர் என்றால் என்ன வித்தியாஸம் என்று மற்ற வேளாளர்கள் கேட்கிறார்கள்? இதுதான் இந்த பிரச்சனையின் நடைமுறைச் சிக்கலே.இரண்டு தரப்பும் சுமூகமாக பேச வேண்டிய இடமே இதுதான்.இதில் வேளாள எதிர்பாளர்களும்,பள்ளர் எதிர்ப்பாளர்களும் சேர்ந்து கொண்டு இருபக்கமும் உத்தி பிரிந்து பிரச்சனையை குழப்புகிறார்கள் அல்லது பெரிதுபடுத்துகிறார்கள் என்பதை இருவருமே புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் நான் வேளாளர்களுக்கு சொல்வது 'அரித்துவார மங்கலம் செப்பேட்டினை' மீள்கட்டுமானம் செய்வதை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.அதன் குறிப்பிட்ட செய்தியை கீழே கொடுத்துள்ளேன்👇

|| கங்கா குலவங் ஷோத்துபர்களான குலதிலதராகிய - வெள்ளாழர் மரபெல்லாமிருவத்தொரு தலைமுறையும் ஈடேறும் பொருட்டு வடக்கு திருக்காளத்திமலையும்,தெற்குக் கன்னியாகுமரியும்,மேற்கு மலைநாடும் கிழக்கு நாகப்பட்டிநத்திருநகரமும் யிப்படி யேற்றப்பட்ட நான்கெல்லைக்குமுட்பட்ட வெள்ளாழரிநத்தாலே தொண்டைமண்டலத்து வெள்ளாழர்,சோழிய வெள்ளாழர் காரைக்காட்டு வெள்ளாழர்,செயின வெள்ளாழர்,காரணிகமான வெள்ளாழர் கொடிக்கால் வெள்ளாழர்,ஊற்றத்தூர் வெள்ளாழர்,துளுவ வெள்ளாழர் மிழலைக்கூற்ற வெள்ளாழர்,வெண்பாநாட்டு வெள்ளாழர்,இன்னமும் வெள்ளாளரென்று யாதொரு குலத்தாருண்டு அவர்களிலே ||

இதில் தெளிவாக கங்கா குலத்தின் அதிபர்கள் என்று இதில் மேலே குறிப்பிட்ட வேளாளர்களை குறிப்பிடுகிறது.கங்கா குல உத்தமன்தான் சேக்கிழாரே.'கங்கை குலம் தழைக்க' என்றுதான் எல்லா வேளாள கீர்த்தி பாடல்களும் சொல்கின்றன.

பாகீரதி குலத்தார்,நதி குலத்தார்,கங்கா குலத்தார் என்றுதான் 19 ம் நூற்றாண்டு வரை இந்த ஜாதிய கூட்டணி தங்களை அழைத்துக் கொண்டது.ஆனால் திராவிடத்தின் பின்னால் சென்று நூற்றாண்டு அடையாளமான 'கங்கா குலத்தை' ஏன் கைவிட்டீர்கள் என்று யோசித்துள்ளீர்களா?

இப்போது தேவேந்திரர்கள் 'கங்கா குலம்' என்று தங்களை அழைத்துக் கொள்ளவில்லை.பிள்ளை,முதலி, கவுண்டர் போன்ற பட்டங்களை அவர்கள் உரிமை கோரவில்லை.அவர்கள் தங்களை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம் எங்களுடைய பட்டங்களை பயன்படுத்திக் கொள்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள் என்பதை நாம் கூர்நோக்கத் தவறக்கூடாது.

'வன்னிய குல ஷத்திரியர்' என்று போட்டுக் கொள்வதால் வேறு யாருமே ஷத்திரியர் இல்லை என்று அர்த்தம் இல்லை.அதே போல எல்லா ஷத்திரியர்களும் தான்தான் என்றும் அர்த்தம் இல்லை.வன்னிய குலத்தில் நான் ஷத்திரியர் என்று அர்த்தம்.பார்க்கவ குல ஷத்திரியரும் உள்ளார்கள்தானே.நாடார்கள் தங்களை பாண்டிய குல ஷத்திரியர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.ஆந்திராவில் 'ஜலஷத்திரியர்' கூட இருக்கிறார்கள்.

கங்கா குல வேளாளர்கள், தேவேந்திர குல வேளாளர்கள் இரண்டும் வேறு வேறு மூல குலங்களை சார்ந்தது என்பது வெள்ளிடை மலை.மண்டல சதகங்கள்,காராளர் கிளை வளப்ப மாலை,திருக்கை வழக்கம்,ஏர் எழுபது எல்லாமே தெளிவாக கங்கா குலத்தைதான் குறிப்பிடுகிறது.இப்படியிருக்கும் போது எப்படி இத்தனை காலம் 'கங்கா குலம்' என்ற அடைமொழியை கைவிட்டீர்கள்? என்று சிந்திக்க வேண்டும்.

'அரித்துவார மங்கலம் செப்பேட்டை' சான்றாக வைத்து அந்தந்த ஜாதிகள் 'கங்காகுலம்' என்பதை தங்களது ஜாதி சான்றிதழில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இதை எடப்பாடி முதல்வராக இருக்கும் போதே உங்களால் செய்துகொள்ள முடியவில்லை என்றால்? பின் எப்போதும் செய்ய முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இப்போது இதில் நான் பார்க்கும் தீர்வுகள் இதுதான்.ஒன்று பழைய வேளாளர் கூட்டமைப்பு தங்களை பழையபடி 'கங்கா குலம்' என்று அழைத்துக் கொள்வது.அடுத்தது,ஒரு சமரச உடன்படிக்கைக்கு வந்து அவர்களை வெறுமனே 'தேவேந்திர குலத்தார்' என்று போட்டுக்கொள்ள வேண்டும் என்ற பரஸ்பர புரிந்துணர்வுக்கு வருவது.அடுத்தது,அவர்களது பட்டியல் வெளியேற்றத்தை நிபந்தனை இல்லாமல் ஆதரிக்க வேண்டும்.அவர்களை மருதநில மரபார்ந்த வேளாண் குடியாக மதிக்க வேண்டும்.

அதே போல தேவேந்திரர்களும் இதை தங்களுக்கு சாதகமானதாக எடுத்துக் கொண்டு பேச்சுவார்த்தையை துவங்க ஒத்துழைக்க வேண்டும்.வீம்பு பேசுவதை இரண்டு தரப்புமே கைவிட வேண்டும்.மற்றபடி,என்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடு 'கங்கா குல வேளாளர்' 'தேவேந்திர குல வேளாளர்' என்பதே ஆகும்

 

Sundar Raja Cholan
17 hrs · 
.
90 ஆண்டுகளாக திராவிட இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு உரிய நீதியை பெற்றுத் தருகிறோம் என்று,அதை பொது விவாதமாக்கியிருக்கிறது பாஜக.பெரியார் 1929 ல் மறுத்து இழிவாக பேசிய ஒன்றை,2019 ல் அதையே பெருமையாக பேசி,பெற்றுத் தருகிறோம் உங்கள் கோரிக்கையை என்று மோடி சொல்லியிருக்கிறார்

பெரியார் 29-9-1929 ல் திருச்சியில் 'சாதி ஒழிக' என்ற தலைப்பில் சொற்பொழிவு செய்துள்ளார்.அதில் அன்றைய நீதிக்கட்சியின் அமைச்சர் PT ராஜன் அதாவது இன்று திமுகவின் ஐடிவிங் PTR தியாகராஜனின் தாத்தா,கலந்து கொண்டிருக்கிறார்.அந்த கூட்டமே 'சாதி ஒழிக' என்ற தலைப்பில் 'தேவேந்திர குல வேளார்கள்' என்று பள்ளர் உரிமை கோரும் குரலை வீழ்த்துவதே நோக்கமாகும்.

அதற்கு அவர் வலுவான தரப்பாக பல விஷயங்களை அடுக்கிக் கொண்டே வருகிறார்.அதாவது,விஸ்வ பிராமணர்,தேவாங்க பிராமணர்,சவுராஷ்ட்டிர பிராமணர் என்று அழைத்துக் கொள்வதால் அவர்களுக்கு என்ன மரியாதை கிடைத்துவிட்டது என்கிறார்? அது மட்டுமல்ல தேவேந்திர குலமென்பதை பற்றியே வசைபாடுகிறார்.

|| தேவேந்திர குலம் என்பதும் எனக்கு இழிவாகத்தான் தோன்றுகிறது.என்ன காரணத்தின் பொருட்டு இந்தப் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறீர்களோ அது எனக்குத் தெரியாது.ஆனால்,'தேவேந்திரன்' என்றால் எனக்குப் பெருத்த அசிங்கமாகயிருக்கிறது.ஏனென்றால், தேவேந்திரனைப் பற்றிக்கூறும் புராணக் கதைகள் தேவேந்திரனை அவ்வளவு இழிவாகக் கூறுகின்றன.அவன் வேசி மகனிலும் இழிந்த ஜென்மம் என்பதாகவே அவைகள் உரைக்கின்றன.|| - பெரியார்

இப்படி பள்ளர்கள் உயர்வாக நினைக்கும் 'தேவேந்திர குலம்' என்ற பதத்தையே அடிக்கிறார் பெரியார்.அடுத்தது அவர்கள் வேளாளர் என்று கோருவதை பற்றி சொல்வதை கவனியுங்கள்.

|| நீங்கள் உங்களை வேளாளர் என்று அழைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள்.வன்னியர்கள் தங்களை ஷத்திரியர்கள் என அழைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.செட்டியார்கள் தங்களை வைசியர் என்று அழைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள்.நாடார் பெருமக்களும் ஆரிய வழியில் குறுக்கே பூணூல் போட்டிருந்தனர்.இதெல்லாம் தன் சாதியை தவிர்த்து நமக்கு மேலே பல சாதிகள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்வது ஆகும் || - பெரியார்

|| உங்களை நீங்கள் எந்தச் சாதியில் சேர்த்துக் கொண்டு பேசினாலும் அதனால் ஒருவித நலனும் ஏற்படாது.இப்பொழுது அருகே உட்கார்ந்திருக்கும் கனம் மந்திரி நம் மாகாணத்திற்கே முதன் மந்திரியாய் இருந்த போதிலும்,நம் இந்திய நாட்டுக்கே மந்திரியாக இருக்கக்கூடிய யோக்கியதை அவருக்கிருந்த போதிலும்,அவர் ஒரு பெரிய வேளாள குலத்தவராய் இருந்த போதிலும் அவரைத் தாழ்ந்த குலத்தவராகச் சேர்த்திருக்கிறார்கள்.இந்த வித்தியாஸம் ஒழிய சாதிப்பெயர்கள் ஒழிய வேண்டும் || - பெரியார்

பெரியார் சுற்றி வளைத்து ஒரு ஜாதி இன்னொரு ஜாதியாக அடுக்கு நிலையில் மாற்றத்தை கொண்டு வரவே கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.எங்களுக்கு மேல் பார்ப்பான் கிடையாது ஆனால் எங்களுக்கு கீழே எல்லோரும் உண்டு.இதை ஏற்கவில்லை என்றால்? பார்ப்பன ஒழிப்பு,சாதி ஒழிப்பு என்ற போகாத ஊருக்கு வழி.இதுதான் திராவிட இயக்கத்தின் வரலாறே.

ஓரிடத்தில் ஜாதிப் படிநிலையை பற்றி பெரியார் சொல்கிறார்."வெள்ளாள முதலி - வெள்ளாஞ் செட்டிகளான சோழபுரத்தார்,சித்தக்காட்டார்,
பஞ்சுக்காரர்,அடுத்து கார்காத்தார். இவர்களுக்கு அடுத்து சோழிய வேளாளர்.இவர்களுக்கு அடுத்து துளுவர்,கொடிக்கால் அடுத்தது அகம்படியர் - மறவர் - கள்ளர்,அடுத்தது கவரைகள்,கம்மவர்கள்" என்று இந்த படிநிலைகளை சொல்லி இவர்கள் ஒரு சக்தியாக எழ வேண்டும் பார்ப்பனரை எதிர்க்க வேண்டும் என்கிறாரே அல்லாமல் பட்டியல் பிரிவு மக்களை இவர்களோடு கடைசி வரை பெரியார் சேர்க்கவே இல்லை.

கடைசி வரை சூத்திரர்களுக்கு நிகராக பஞ்சமர்களை கொண்டு வருகிறீர்களே என்பதுதான் அவரது கேள்வியாக இருந்தது சாதி ஒழிப்பில்.'பிராமணர் - சற்சூத்திரர் &
சூத்திரர்- பஞ்சமர் இப்படித்தான் பெரியார் அடுக்குகளை வகுத்துக் கொண்டார்.இதில் பிராமணரின் அதிகாரமட்டத்தை வீழ்த்தி பட்டியல் பிரிவினர்களை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள பிராமண வெறுப்பை பரப்பினார்.காங்கிரஸ் இந்தியா முழுக்க செய்கிற அரசியலை தமிழகத்தில் இந்த வகையில்தான் பெரியார் வீழ்த்தினார்.பிராமணர் + பட்டியல் பிரிவினர் என்ற இணைவை துல்லியமாக தடுத்தார் பெரியார்.

1963 வரை இந்த கூட்டணி எங்கே ஏற்பட்டாலும் அதை சுட்டிக் காண்பித்துக் கொண்டே இருந்தார்.பிராமணர் + பட்டியல் சாதிகள் + சிறுபான்மையினர் இணைவதை பற்றி விமர்சித்து எழுதியுள்ளார்.அம்பேத்கரை பார்ப்பனர்கள் விலை கொடுத்து வாங்கிவிட்டார்கள் என்று கூட விமர்சித்திருக்கிறார்.நமக்கு நாதியில்லை என்று அவர் சொல்வது சற்சூத்திர&சூத்திர ஜாதிகளை நோக்கி.இதற்கு எதிராக அல்லது இந்த அதிகாரத்தை தகர்க்க வரும் எல்லாவற்றையும் பார்ப்பன சதி என்று மட்டையடியாக அடித்தார்.

பிராமணனை வென்று ஏகாதிபத்திய ஆண்டைகளாக நாங்களே இருப்போம் என்பதுதான் பெரியாரின் இறுதி வாதம்.அதனால்தான் கலப்புத்திருமணம் என்பது பிராமணனல்லாத சாதிகளுக்குள் நடப்பது இல்லை என்று ஜாதித் தூய்மையை பேணுகிறார்.ஆனால் ஒன்று தெளிவு,பெரியார்
1929 லேயே 'தேவேந்திர குல வேளாளர்' என்ற பெயர் மாற்றத்தை எதிர்த்தவர்.அவர் வழியிலேயே நடந்த திராவிட இயக்கமும் அந்த வழியில் தேவேந்திரர் விஷயத்தில் நடந்துகொண்டது.நிற்க.

பல ஆண்டுகளாக தங்கள் பல்வேறு உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குலத்தான் அல்லது தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க அந்த மக்கள் போராடுகிறார்கள்.அதற்கு தமிழகத்தில் சாதகமான அரசியல் குரல் இல்லை.முக்குலத்தோர் போலவோ,வன்னியர் போலவோ,நாடார் போலவோ,கொங்கு வெள்ளாளர் போலவோ தேவேந்திரர்களின் குரலை ஒரு பொருட்டாகவே யாரும் கருதவில்லை.

கடைசி வரை திமுக தலைவர் கருணாநிதி தானொரு தாழ்த்தப்பட்டவர் சம்பந்தி என்று வசனம் பேச மட்டுமே பயன்படுத்தினாரே ஒழிய அவர்களது பழைய கோரிக்கைக்கு செவிமடுத்ததே இல்லை.2011 ல் ஆட்சி போகும் போது ஒருநபர் ஆணையம் ஒன்றமைத்தார் அவ்வளவுதான்.

முதன் முறையாக இந்தியாவில் மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற பிரதமர் மோடி அவர்களின் கோரிக்கையை ஆதரித்தார்.பசுவை தெய்வமாக கும்பிடும் மக்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றார்.பல மாநிலங்களில் இதுபோன்ற பல ஜாதிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை பாஜக அரசுகள் நிறைவேற்றித் தருகிறது என்பது கவனிக்கத்தக்கது.மற்றபடி இங்கே இது ஒரு பரஸ்பர புரிந்துணர்வில் நடக்க வேண்டியது.ஒரே நாளில் நடந்துவிடாது.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

#நினைவோடையில்..

#காமராஜர் #பெரியார்

அதாவது 1936ல் பெரியார் எங்கிருந்தார்? என்ன கட்சியில் இருந்தார்?ஆனால் அன்று சத்தியமூர்த்தி சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் அவரின் பிரதான சீடர் காமராஜர் செயலாளர்.1940 முதல் சென்னை மாகாண காங்கிரஸ் தலைவர் காமராஜரே.சத்தியமூர்த்திக்கும் ராஜாஜிக்கும் நடந்த யுத்தத்தில் சத்தியமூர்த்தியின் பிரதான தளபதி காமராஜர்.அதன் வழி அதிகாரத்தை அடைந்தார் அவர்.இதையெல்லாம் பெரியார் செய்து கொடுத்தாரா?

அடுத்தது முதல் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தது பெரியார் என்கிறார்கள்.சரி அதை கொண்டு வர பெரியார் என்ன அதிகாரத்தில் இருந்தார் அன்று? ராஜபக்ஷே தோற்றதற்கு சீமான் மதுரையில் மேடை போட்டு முழங்கியதுதான் காரணம் என்பது போல உள்ளது.

சுதந்திரம் அடைந்து முதல் தேர்தலை சந்திக்க வேண்டும் காங்கிரசிற்கு.மேல்தட்டு மக்களின் வாக்குகள் முழுமையாக வரும்,தலித்துகளின் வாக்குகளும் வரும்.அதே போல எல்லா மக்களின் வாக்குகளும் வருமா? என்று யோசிக்கும் போது,காமராஜர் தெற்கே இருந்து ஒரு பிற்படுத்தப்பட்ட முகமாக தன்னை முன்னிறுத்தும் போது,அதை இந்தியா முழுக்க பயன்பெறும் விதம் சட்டதிருத்தமாக செய்கிறார் நேரு.இந்த புகழ் முழுக்க நேரு,காமராஜரையே சாரும்.

காமராஜரை முதலமைச்சர் ஆக்கினார் பெரியார் என்கிறார்கள்.இதைத்தாண்டி வேறென்ன அபத்தம் இருக்க முடியும்? 1952 ல் நச்சுப்பாம்பு காமராஜர் என்றும், அவரை தோற்கடிக்க வேண்டும் எம்பி தேர்தலில் என சபதமேற்று ஜிடி நாயுடுவை ஸ்ரீவில்லிப்புத்தூரில் நிற்க வைத்து காமராஜருக்கு எதிராக அவரை படுதோல்வி காண வைத்த மகான் ஆயிற்றே பெரியார்.இவர்தான் காமராஜரை முதல்வராக்கினாரா 1954ல்??

ராஜாஜி - சத்தியமூர்த்தி கோஷ்டி மோதல் அப்படியே ராஜாஜி Vs காமராஜர் என்று இருந்தது.ராஜாஜியோ நேருவுக்கும் அச்சுறுத்தல் எனவே காங்கிரஸ்ஸில் இருந்து அவரை வேகமாக அப்புறப்படுத்த காமராஜர் எடுத்த நடவடிக்கையை அவரும் கண்டுகொள்ளவில்லை.காமராஜர் கோஷ்டி வெற்றி பெற்றது முதல்வரும் ஆனார்.எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகக்காரணம் கீ.வீரமணி என்றால் எப்படி சிரிப்போம் அப்படித்தான் பெரியார் காமராஜரை முதல்வராக்கினார் என்பதும்.

பெரியார் ஒரு கருத்துருவாக்கி,டெல்ட்டா மற்றும் வடமாவட்டத்தில் அவருக்கு கொஞ்சம் செல்வாக்கு இருந்தது.எனவே அது காமராஜருக்கு பயன்பட்டது.காமராஜரை விட்டால் தமிழனுக்கு நாதியில்லை,திமுகவின் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை காலிகளின் போராட்டம் அரசு இரும்புக்கரம் கொண்டு ஓடுக்க வேண்டும்.தமிழ்நாட்டில் காங்கிரஸ்க்கு எதிரானவர்கள் காமராஜர் எதிர்ப்பாளர்கள் என்று முத்திரை குத்தினார் பெரியார்.

நேரு,சாஸ்த்திரி இறந்த போது காமராஜர் பிரதமராக வேண்டும் நேருவுக்கு நிகரான தியாகி என்று எழுதியவர் பெரியார்.இவையெல்லாம் "இலை மலர்ந்தால் ஈழம் மலரும்" 'அம்மையார் ஊழல் செய்தார்கள் என்றால் அவரோடு மாறி மாறி கூட்டணி வைத்தவர்கள்?' என்றெல்லாம் சீமான் அதிமுகவிற்கு பேசி வலு சேர்த்தது போலத்தான் பெரியார் அன்று குறிப்பிட்ட மாவட்டங்களில் காமராஜருக்கு ஆதரவாக செய்து வந்தார்.

காமராஜருக்கு 54 - 67 வாழ்த்துப்பா வாசித்து வந்த பெரியார் அதன் பிறகு கருணாநிதிக்கு வாசிக்க ஆரம்பித்துவிட்டார்.அதிகாரத்துக்கு ஜால்ரா தூக்குவதுதான் புரட்சி.பெரியார் சொல்லி எதையாவது காமராஜர் செய்திருக்கிறாரா?

பிராமணர் அல்லாத மந்திரி சபை காமராஜருடையது என்றார் உடனே ஆர்.வெங்கட்ராமன் எம்.பி பதவியை ராஜினாமா செய்ய வைத்து மேலவை வழியே தொழில்துறை அமைச்சராக்கினார் 57ல்.காமராஜர் ராஜாஜி எதிர்ப்பாளர்தானே தவிர பிராமண எதிர்ப்பாளர் இல்லை.ராஜாஜியின் மகனுக்கே கிருஷ்ணகிரியில் எம்பி சீட் கொடுத்தார்.

வே.மதிமாறன் காமராஜர் ஆட்சியின் இருண்ட காலம் என்று பெரியார் திடலில் பேசியிருக்கிறாராம்.அதற்கு வீரமணி மேடை போட்டு கொடுத்தாராம்.அப்படியானால் அந்த இருண்ட காலத்திற்கு சாமரம் வீசி விளக்கை அணைத்தவர் பெரியார் என்பதையும் அவர் திராவிடத்தை காமராஜரிடம் அடமானம் வைத்திருந்தார்,அண்ணாதான் மீட்டார் மற்றும் உண்மையான திராவிடத்தை காத்தவர்கள் அண்ணா,கருணாநிதி,எம்ஜிஆர்,ஜெ என்று உரக்க சொல்லுங்கள். 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard