New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வின்சென்ட் செல்வக்குமார், சாது சுந்தர் செல்வராஜ், மோகன் சி லாசரஸ் காம லீலைகள், சர்ச் வரும் பெ


Guru

Status: Offline
Posts: 24778
Date:
வின்சென்ட் செல்வக்குமார், சாது சுந்தர் செல்வராஜ், மோகன் சி லாசரஸ் காம லீலைகள், சர்ச் வரும் பெ
Permalink  
 


வின்சென்ட் செல்வக்குமார்: அல்லேலுயாவில் ஒரு நித்தியானந்தா!

178
மோகன்-சி-லாசரஸ்                                                                                                                                                                                                      மோகன் சி லாசரஸ் https://www.vinavu.com/2012/07/03/angel-tv-vincent-selvakumar/

 “ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து எங்களை எகிப்து தேசத்திற்குச் செல்லும்படிக்கு ஆவியினால் வழிநடத்தினார்.  அங்கே சென்ற நாங்கள் செங்கடலின் ஆழத்தில் மறைந்து வாழும் 7 தலையும் 10 கொம்புகளும் கொண்ட மிருகத்தைக் கட்டி ஜெபிக்கும் படிக்கு எங்களை எகிப்துக்கு கொண்டு வந்ததாக ஆண்டவராகிய யேசுக் கிருஸ்து சொன்னார்”

“ஆவிக்குரிய உலகத்திற்கு நான் எடுத்துச் செல்லப்பட்டேன். அங்கே ஐநூறு மைல் நீளமும் ஐநூறு மைல் அகலமும் கொண்ட ஒரு பெரிய மைதானம் இருந்தது. அனேக பரிசுத்தவான்கள் கண்களில் கண்ணீரோடும் முகத்தில் அச்சத்தோடும் அந்த மைதானத்தைச் சுற்றி நின்றனர். அந்த மைதானத்தின் நடுவே தங்கமாக ஜொலிக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. அது மிகப் பெரிதாக இருந்தது திடீரென்று ஒரு எக்காளச் சத்தம் கேட்டது. “திறவட்டும்” என்கிற சப்தம் வெளிப்பட்டது. இரண்டு பெரிய தேவ தூதர்கள் தங்களது ரெக்கைகளை விரித்துப் பறந்து வந்து அந்த புத்தகத்தைத் திறந்தனர். பிரியத்துக்குரிய பிள்ளைகளே… அது தான் உங்கள் பாவக் கணக்குப் புத்தகம். சீக்கிரமே வருவேன் என்று சொன்ன தேவன் இதோ வந்து கொண்டேயிருக்கிறார். அவரைச் சந்திக்க நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா?”

வின்சென்ட்-செல்வகுமார்”தீர்க்கதரிசி” வின்சென்ட் செல்வகுமார்

நண்பர்களே… குழம்பிப் போகாதீர்கள். நீங்கள் வினவு தளத்தினுள் தான் இருக்கிறீர்கள். இன்னும் இந்த சாத்தானின் தளத்தை ‘தேவ’ பிள்ளைகள் யாரும் ஹாக் செய்து விடவில்லை. மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமா கதைகள் எல்லாம் ‘தீர்க்கதரிசி’ என்று தமிழகக் கிருத்துவ வட்டாரத்தில் கொண்டாடப்படும் வின்சென்ட் செல்வகுமாரால் சொல்லப்பட்டவைகள் தான்.

‘தீர்க்கதரிசி’ வின்சென்ட் செல்வகுமாரும், இன்னொரு ‘தீர்க்கதரிசி’ சாது சுந்தர் செல்வராஜ் என்பவரும் இணைந்து ஏஞ்சல் டி.வி என்று ஒரு அல்லேலுயா அக்கப்போர் சேனலை நடத்தி வருகிறார்கள். இந்த தொலைக்காட்சியில் இருபத்து நான்கு மணிநேரமும் மேலே சொல்லப்பட்டிருப்பதைப் போன்ற “பரஞ்சோதியும் பாயும் நாகமும்” பாணி தீர்க்கதரிசனங்களை அவ்விருவருமாக சேர்ந்து அவிழ்த்து ஆராதனை செய்து வருகிறார்கள்.

இவர்களது ‘தீர்க்கதரிசனங்கள்’ பெந்தெகோஸ்தெ வட்டாரங்களில் மிகவும் பிரபலம். ஊரில், உலகில் எங்கே நிலநடுக்கமோ, பஸ் விபத்தோ, வெள்ளமோ, கொள்ளை நோயோ எது நடந்தாலும் சரி – அதை விடுங்கள், விலைவாசி உயர்வு பெட்ரோல் விலை உயர்வைக் கூட தேவனின் இரண்டாம் வருகைக்கான அறிகுறிகள் தான் என்பதாக ‘தீர்க்கதரிசனங்கள்’ உரைப்பார்கள். அது மட்டுமல்ல, யாருடைய வாழ்வில் எப்போது ‘ஆவி’ குறுக்கிடும், அது என்ன விதமான ‘தரிசனங்களையும்’ ‘அபிஷேகங்களையும்’ அள்ளித்தரும் என்பது பற்றிய கன்சல்டேசனும் உண்டு.

இப்படி ஊர் உலகத்துக்கே குறி சொல்லும் தீர்க்கதரிசன வரத்தை வின்சென்ட் செல்வகுமாருக்கு அளித்த ‘ஆண்டவர்’ அவரைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை யாரிடம் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறீர்கள்? அதைத் தெரிந்து கொள்ள கொஞ்சம் காத்திருங்கள் – அதற்கு முன் மேற்படி அம்புலிமாமா பற்றி நக்கீரனின் சமீபத்திய அட்டைப்படக் கட்டுரையின் விவரங்களைப் பார்த்து விடுவோம்.

வின்சென்ட் செல்வராஜ் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். மேலே விவரிக்கப்பட்டுள்ள அம்புலிமாமாக் கதைகளை உற்பத்தி செய்யும் பாக்டரி ஒன்றை ராமநாதபுரம் அண்ணா நகரில் நடத்தி வருகிறார். அதன் பெயர் ‘தீர்க்கதரிசன மையம்’. முதலில் பத்து குடும்பங்களை சேர்த்துக் கொண்டு ஒரு ஜெப ஆலமாகத் தான் இந்த தீர்க்கதரிசன தொழிற்சாலை துவங்கப்பட்டது. காலப் போக்கில் ஆயிரக்கணக்கான கிருஸ்தவர்கள் வின்சென்டின் கதைகளால் ஈர்க்கப்பட்டு வரத் துவங்கியுள்ளனர். காசும் குவியத் துவங்கியுள்ளது.

வாயில் வந்ததையெல்லாம் உளற ஒரு மேடை; அந்த உளறல்களைக் கேட்க ஒரு கூட்டம்; கேட்டு விட்டு கை நிறைய காசு கொடுக்க சில நூறு முட்டாள்கள் என்று ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொள்கிறார். கடந்த சில வருடங்களில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்துள்ளார். போதுமான அளவுக்கு நண்டு கொழுத்து விட்ட பின் ஊர்மேயத் துவங்கியிருக்கிறது.

சாது-சுந்தர்-செல்வராஜ்சாது சுந்தர் செல்வராஜ்

அஸ்தரோத்தின் (விபச்சாரம் தொடர்பாக பைபிளில் வரும் பாத்திரம்)  ஆவி என்பது விபச்சாரத்துக்குரியது என்றும், அதை அழிக்கும் வரலாற்றுக் கடமையை தேவன் தன்னிடம் தந்திருக்கிறார் என்றும், இதற்காகவே தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பெண்ணாக மாற்றி வருவதாகவும் நெருங்கியவர்களிடம் சொல்லி வந்திருக்கிறார். அவசரப்பட்டு சிரித்து விடாதீர்கள் நண்பர்களே – காமெடியே இனிமேல் தான் ஆரம்பம். பெண்ணாக மாறி வரும் தனது உடலில் ஆண்டவர் கர்ப்பப் பையையும் உருவாக்கி வருவதாக அடித்து விட்டுள்ளார்.

பெண் குழந்தைகள் வைத்துள்ள விசுவாசிகளிடம் இந்தக் கதையைச் சொல்லி, அவர்கள் வீட்டிலிருந்து பெண் பிள்ளைகள் அணியும் துவைக்காத உடைகளை வாங்கியிருக்கிறார். அவற்றைத் தனிமையில் இருக்கும் போது அணிந்து கொண்டு அலைந்திருக்கிறார். பெண்களை மடியில் அமர வைத்துக் கொள்வது, மேலே கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களையும் அரங்கேற்றியிருக்கிறார். இந்தக் கூத்துக்களை ‘ஆண்டவராகிய யேசுக் கிருஸ்துவின் பெயரால்’ இராமநாதபுரம் விசுவாசிகள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் பெண்களோடு பாலியல் ரீதியில் பொறுக்கித் தனமாக நடந்திருப்பதும், அதிலும் சின்னப் பிள்ளைகளிடமும் கூட அத்துமீறியிருப்பதும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகத் துவங்கியிருக்கிறது. பல பெண்களிடம் தான் ஆணில்லை பெண் என்று சொல்லியே உறவு வைத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெருக்கமாக இருந்த பத்து குடும்பங்கள் விலகத் துவங்கியிருக்கிறார்கள் – இதில் அவரது நெருக்கமான உறவினர்கள் குடும்பங்களும் அடக்கம். உச்சகட்டமாக, தேவ லீலைகளின் கவுச்சி நாத்தம் தாங்காமல் அவரது வளர்ப்பு மகனாக சொல்லப்படும் ஜாய்ஸ்டனே விலகியிருக்கிறார்.

விலகியவர்கள் வின்சென்டின் நெருங்கிய கூட்டாளிகளான சாது சுந்தர் செல்வராஜிடமும், மோகன் சி லாசரஸிடமும் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள். ஒரு மொள்ளமாரியின் இதயத்தை இன்னொரு மொள்ளமாரியால் தானே புரிந்து கொள்ள முடியும்? மோகன் சி லாசரஸ் இந்த விவகாரத்தை அப்படியே அமுக்கியுள்ளார். மட்டுமின்றி, கடந்த சில வருடங்களாகவே இந்த பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் எழுந்து வந்த நிலையில், மோகன் சி லாசரஸ் இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து வெளிப்படையாகவே வின்சென்டோடு கூட்டணி வைத்து கொண்டு தனது பங்குக்கு அம்புலிமாமாவின் சுவிசேஷத்தை ஏஞ்சல் டீ.வியில் அளிக்கத் துவங்கியிருக்கிறார்.

டி.ஜி.எஸ் தினகரின் சீடரான மோகன் சி லாசரஸ், தனது குருவைப் போலவே கூசாமல் கட்டுக்கதைகளைத் தொடர்ந்து சொல்லும் திறன் கொண்டவர். உதாரணமாக, சமீபத்தில் அவர் விருதுநகரில் நடத்திய ஜெபக் கூட்டமொன்றில் “பெட்ரோல் விலை உயர்கிறது, அரிசி விலை உயர்கிறது, பருப்பு விலை உயர்கிறது; இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் பலனைத் தாருங்கள் ஆண்டவரே” என்று மேடை போட்டு ‘ஜெபிக்கிறார்’ அதையும் அங்கே வந்திருக்கும் தேவ ஆட்டுக்குட்டிகள் எந்தக் கேள்வியுமின்றி கேட்டுக் கொண்டு மார்பில் அடித்து ஜெபிக்கிறார்கள்.  ஆனால், மோகனுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை அவரிடம் சரியான ஊடகம் இல்லை.

தற்போது தனது நாலுமாவடி ‘இயேசு விடுவிக்கிறார்’ கம்பெனியை விரிவாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கும் மோகனுக்கு வின்சென்டிடம் இருக்கும் ஏஞ்சல் டி.வி ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்குகிறது. இதற்கு பிரதியுபகாரமாக வின்சென்டின் மேல் எழும் புகார்களை மறைக்க இவரும் அவருக்குத் துணை போயிருக்கிறார்.  இன்னொரு தீர்க்கதரிசியான சாது சுந்தர் செல்வராஜ் வின்சென்டின் நேரடிக் கூட்டாளி.

மோகன்-சி-லாசரஸ்மோகன் சி லாசரஸ்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேன்சி ட்ரஸ் போட்டிக்கு வருவது போல் யேசு கிருஸ்துவைப் போல் வேடமிட்டு தோற்றமளிக்கும் சுந்தர், வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் ஜீன்ஸிலும் டீசர்ட்டிலும் தான் கலக்குவாராம். இப்படித்தான் நித்தியானந்தாவும் அமெரிக்காவில் அலைந்ததாக அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருக்கின்றனர். ஏஞ்சல் டி.வியில் காம்பயரிங் செய்ய வரும் பெண்கள் மேல் கைபோடுவது போன்ற சில்லறை வக்கிரங்களில் துவங்கி முழு பொறுக்கித்தனங்களையும் செய்யக் கூடியவர் தான் சாது சுந்தர் செல்வராஜ். இதில், இவர் சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளின் குடியுரிமை வைத்திருக்கும் சர்வதேச பிரசிங்கியார்.

வின்சென்டின் வளர்ப்பு மகன் ஜாய்ஸ்டன், வின்சென்டிடம் இருந்து விலகிய போது ஏஞ்சல் டி.வியில் தீர்க்கதரிசனம் உரைத்த சாது, ‘ 2011-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தக்காளியைப் பிழிஞ்சா எப்படி சிதறி கிடக்குமோ அந்த மாதிரி நீ உடல் சிதறி செத்துப் போவாய்’ என்று ஆண்டவரின் ‘விருப்பத்தை’ பகிரங்கமான தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறார். இன்றுவரை ஆண்டவரின் விருப்பத்தை மீறி நல்ல ஆரோக்கியமாக வாழும் ஜாய்ஸ்டன், மேற்படி விசயத்தையும் நக்கீரன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அம்பலமாக்கியுள்ளார்.

எல்லா பிக்பாக்கெட்டுகளும் சொல்லி வைத்தது போல ஒரே டெக்னிக்கை பயன்படுத்துவது சாமியார்கள் மடாதிபதிகள் உள்ளிட்ட எல்லா மத ஆன்மீக குருக்களுக்கும் பொருந்தும். ஏறக்குறைய நித்தியானந்தா பயன்படுத்திய அதே டெக்னிக்கைத் தான் வின்சென்ட் செல்வக்குமாரும் பயன்படுத்தியிருக்கிறார். நித்தியின் ஆன்மீக செக்ஸ் காண்டிராக்ட் ஷரத்துகளின் படி, செக்ஸின் மூலமும் ஆன்மீக உச்சத்தை அடைய முடியுமாம். இதற்காக நித்தியைக் கிருஷ்ணனாகவும் பக்தைகள் தங்களை ராதையாகவும் பாவித்துக் கொண்டு ஆன்மீக ஆராய்ச்சியில் மூழ்க வேண்டியிருக்குமாம்.

தனது விசுவாசி ராஜ்குமார் என்பவரின் மனைவியின் மேல் தீர்க்கதரிசன வரம் இறங்கியிருப்பதாக ஒரு ஜெபக்கூட்டத்தில் அறிவித்திருக்கிறார் வின்சென்ட். பின்னர் தனியே அந்தப் பெண்ணை அழைத்த வின்சென்ட், மேற்படி தீர்க்க தரிசன வரம் முழுமையடைய வேண்டுமானால் தன்னோடு உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியிருக்கிறார். அந்தப் பெண்ணோ எதிரே இருப்பது தேவ ஆட்டுக்குட்டியல்ல – ஓநாய் என்பதைப் புரிந்து கொண்டு அங்கேயிருந்து தப்பிச் சென்று தனது கணவர் ராஜ்குமாரிடம் சொல்லி அழுதிருக்கிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த ராஜ்குமார் போலீசுக்குப் போயிருக்கிறார். சென்னையின் பாரம்பரிய பார்ப்பனக் குடும்பத்து பெண்ணான ஆர்த்தியும் இப்படித்தான் நித்தியானந்தாவிடம் ஏமாந்திருக்கிறார்.

அடுத்து என்ன நடந்திருக்கும் என்று தனியே சொல்ல வேண்டுமா நண்பர்களே? நீங்கள் நினைத்த அதே தான். போலீசு வழக்கம் போல் காசு வாங்கிக் கொண்டு பஞ்சாயத்துப் பேசி ராஜ்குமாரை மிரட்டி விரட்டியடித்து விட்டது.

லோக்கல் ரவுடியாக இருந்தாலும் சரி – ஆன்மீகக் கேடியாக இருந்தாலும் சரி; முதலில் ஓடிவந்து கிரிமினல்களை காத்து ரட்சிக்கும் காவல் தெய்வம் காக்கி கும்பல் தானே!

இதில் நக்கீரனுக்குப் பேட்டியளித்துள்ள கிறிஸ்தவ உரிமை இயக்கத்தின் தலைவர் ரெவ்ரன்ட் பாஸ்டர் சாம் ஜேசுதாஸ் சொன்னது தான் மொத்த கதையின் அவல நகைச்சுவை. வின்சென்டின் லீலா வினோதங்களை தாங்களும் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டதாகச் சொன்ன ஜேசுதாஸ், “எந்தக் கடவுளுமே நேரில் வந்து தண்டிக்காது, இளம் பெண்களின் வாழ்க்கையை சீரழித்த வின்சென்ட் செல்வக்குமாரை தண்டிக்க என் இயேசு தான் நக்கீரன் மூலம் வந்திருக்கிறார்” என்று சுவிசேஷம் அருளியிருக்கிறார். அந்தப்படிக்கு சங்கம் வளர்த்த மதுரையின் நக்கீரனார், இறையனாரை மட்டுமல்ல, ஏசு புரோக்கர்களையும் கேள்வி கேட்டவர் என்று இனி வரலாற்றில் பதிந்து கொள்ளலாம்.

சாம் ஜேசுதாஸின் வார்த்தைகளை விட சிறந்த ஒப்புதல் வாக்குமூலத்தை வேறு எவராலும் கொடுத்து விடமுடியாது. இரண்டாயிரம் வருடங்களாக ‘ இதோ இயேசு வருகிறார், நாளை வருவார், வெளக்கு வச்சதும் ரவைக்கு வந்துடுவார்.. நடுவுல பஸ்ஸு பஞ்சராயி லேட்டாகுது, ஆனாலும் மாட்டு வண்டி பிடிச்சாவது வந்து சேருவார்’ என்பதையே வார்த்தை மாற்றி வார்த்தை மாற்றிச் சொல்லி கம்பெனியை ஓட்டிக் கொண்டிருக்கும் கிருஸ்தவத்தின் உண்மையான யோக்கியதை இது தான்.

இந்தக் கேடி கிரிமினல்களை இல்லாத ஆண்டவனால் ஒருநாளும் தண்டிக்க முடியாது. தங்கள் வாழ்வை நெருக்கும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து தப்பிக்க இந்தக் கயவர்களை நாடும் மக்களின் லௌகீக அறியாமை விலகும் போது ஆன்மீக ஒளியின் பீஸ் பிடுங்கப்பட்டு விடும்.  நித்தியானந்தா துகிலுரிந்த போது மட்டும் கிருஷ்ணனா காப்பாற்ற ஓடிவந்தார்? மக்களிடம் அம்பலப்பட்டு அவர்களே காறித் துப்பிய பின் தானே ஆன்மீக பீடத்திலிருந்து ஒரு காமெடிப் பீஸாக கீழிறங்கியிருக்கிறார்.

மக்கள் தங்கள் மேல் மூடத்தனமான பக்தியும் முட்டாள்தனமான நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் என்பதும், தங்கள் வாயிலிருந்து வழியும் உளறல்களையெல்லாம் தத்துவங்களாகவும் தீர்க்கதரிசனங்களாகவும் ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நிலையும் தான் இந்த அயோக்கியர்களின் மூலதனம். அளவற்ற பணமும் அந்த பணம் தரும் அதிகார வர்க்க பரிச்சையமும், அந்த அதிகாரத் திமிர் தரும் மமதையும் தான் இவர்களை திமிரோடு தவறு செய்யத் தூண்டுகிறது.

கர்த்தருக்குள் பிரியமானவர்களே, உங்களில் எவருக்காவது கொஞ்சமும் சூடு சொரணை மிச்சமீதியிருந்தால் அடுத்த முறை உங்கள் பகுதியில் வின்சென்ட் செல்வகுமார், மோகன் சி லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் மற்றும் இது போன்ற கார்ப்பரேட் பாஸ்டர்கள்  மேடை போட்டு குருடர்களையும் செவிடர்களையும் குணமாக்குகிறோம் என்று வந்தால் செருப்பைக் கழட்டி அடிப்பீர்களா?

அப்படிச் செய்தால் அந்தச் செயலின் நியாயத்தை அந்திக் காலத்தில் தேவன் அங்கீகரிக்கிறாரோ இல்லையோ உங்கள் குடும்பத்தின் பெண் பிள்ளைகளாவது அங்கீகரிப்பார்கள்.

______________________________________

– சாத்தான் லூசிஃபர்

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: வின்சென்ட் செல்வக்குமார், சாது சுந்தர் செல்வராஜ், மோகன் சி லாசரஸ் காம லீலைகள், சர்ச் வரும் ப
Permalink  
 


கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்!

 

கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்!

https://christianityindia.wordpress.com/2012/10/08/1198-a-christian-nityananda-sexy-xian-pastor-cum-priest/

Sex harassment complaint against Vincent Selvakumar - OneIndiaTamil, 03-07-2012

“இன்னொரு நித்தியானந்தா போல செயல்படும்” பாலிய பலான போதகர் ஒருவர்தானா?: பெரும் பிரபலமான ஒரு கிறிஸ்தவப் போதகர் மீது அவர் சார்ந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்களே பரபரப்பான செக்ஸ் புகார்களை சுமத்தியுள்ளனர். இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாகவும் அவர்கள் பரபரப்பான குற்றச்சாட்டுக்களை அடுக்குகின்றனர்[1]. இப்படி ஊடகங்களில் குறைவாகவே செய்திகள் வந்துள்ளன. அதாவது இந்த போதகர் தான் “இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாக” சொல்லப்படுவதிலிருந்து மற்ற கிறிஸ்துவ பாலியல் கொடூரக் குற்றவாளிகளை மறைக்கப் பார்க்கின்றனர் என்று தெரிகிறது. ஒருவேளை, கிருத்துவ பலத்தால் இவையும் கூடிய சீக்கிரத்தில் மூடி மறைக்கப்படும்.

Sex harassment complaint against Vincent Selvakumar - Vinavu-1, 03-07-2012

ஊடகங்களின்  பாரபட்சமான  செய்திகள்: “tamil.oneindia” என்ற இணைத்தளம், அவரது பெயர் வின்சென்ட் செல்வக்குமார். பிரபலமான ஏஞ்சல் டிவியின் முக்கிய பங்குதாரர்களில் ஒருவர் இவர் என்றுகூறப்படுகிறது, என்று ஆரம்பிக்கிறது. ஆனால், நக்கீரன் சொல்வதோ, “கிறிஸ்துவர்கள் மத்தியில் பிரபலமான ஏஞ்சல் டி.வி.யின் அறிவிக்கப்படாத ஓனர்[2],” என்பதாகும். எது எப்படியாகிலும், டி.வி.செனல் வைத்து நடத்தினால், அதற்கென்று ஒரு கம்பனி இருக்கும், அது பதிவு செய்யப்படும்போது, உரிய ஆவணங்களைக் கொடுத்த்தான் செய்திருப்பர், அவற்றில் யார் சொந்தக்காரர், பார்ட்னர் அல்லது பங்குதாரர் என்பதை எளிதில் அறிந்து கொள்ளலாம். ஆகவே, இந்த ஊடக நிருபர்களுக்கு அவ்விவரங்களை அமுக்கிவிட்டார்கள் என்று தெரிகிறது.

Sex harassment complaint against Vincent Selvakumar - Vinavu-2, 03-07-2012

சர்ச் விட்டு சர்ச் பாயும் தந்திரம்  தொழிலை  விருத்தியாக்குவதற்கு தான்: வின்சென்ட் செல்வக்குமாருக்கு எதிராகத்தான் தற்போது கிறிஸ்தவர்கள் கொந்தளித்துள்ளனர். ராமநாதபுரத்தில் வசித்து வரும் வின்சென்ட் செல்வக்குமார் பாதிரியாராகவும் இவர் இருக்கிறார். அதாவது போதகர் என்று முன்னர் குறிப்பிட்டுவிட்டு இப்பொழுது, பாதிரியாகவும் உள்ளார் என்கிறார்கள். அதாவது போதகர் செக்ஸ் வேலைகளை செய்வது ரொம்ப சகஜம் அதையெல்லாம், கிருத்துவத்தில் கண்டு கொள்ள வேண்டாம், ஆனால், பாதிரி செய்தால், அது பெரிய விவகாரம். அதென்ன அப்படி ஒரு வித்தியாசம்? இவர் ஜெப ஆலயம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதில் நூற்றுக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் தற்போது வின்செட் செல்வக்குமாருக்கு எதிராக திரும்பியுள்ளனர். அவரது சபையை விட்டு விலகி விட்ட இவர்கள் தனியாக செயல்படத் தொடங்கியுள்ளனர்[3]. ஆக அந்த தனிச்சபைக்கு பணம் தனியாக வரும், அதற்கும் போதகர்கள், பாதிரிகள் இருக்கும், அங்கு தனியாக எல்லாவற்ரையும் ஆரம்பித்து விடிவார்கள் போல!

பாலியல் முறைகேடுகளில் மோசமான முறையில் ஈடுபட்டிருக்கிறார் என்றல் என்ன?: வின்சென்ட் செல்வக்குமார் பல்வேறு பாலியல் முறைகேடுகளில் மோசமான முறையில் ஈடுபட்டிருப்பதாக அவர்கள் குமுறுகிறார்கள். வின்சென்ட்டின் மோசமான செயல்பாடுகளால் அதிர்ச்சி அடைந்து அவரது சொந்த பந்தங்களும் கூட இந்த சபையிலிருந்து விலகி விட்டதால் பரபரப்பு கூடியுள்ளது. பைபிளை மேற்கோள் காட்டி இவர் செக்ஸ் லீலைகளில் ஈடுபடுவதாக குமுறலுடன் கூறுகிறார்கள் இவர்கள். பைபிளில் கூறியுள்ளவற்றை பெண்களிடம் கூறி அவர்களிடம் உறவு கொள்வதும், அவர்களை பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்குவதுமாக இவர் உள்ளாராம். சொன்னதை செய்கிறேன், செய்வதைச் சொல்கிறேன் என்ற பாணியில் இருக்கும் போது, பெண்கள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லையே? அந்த கேரள கன்னி எழுதியுள்ள புத்தகத்தைப் படித்திருந்தால், தப்பித்துக் கொண்டிருக்கலாமே?

வின்சென்ட்  செல்வக்குமார்  என்ற  பாதிரியின்  கொக்கோக  லீலைகள்: சிறுமியர், வயது வந்த குமரிகள், கன்னிகள், மணமானர் என்று பலதர பெண்களிடம் செக்ஸ் காமக்களியாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார் என்று விவரிக்கின்றனர்:

  • பெண்கள் மீது கை போட்டு பேசுவது (பெரும்பாலானவர்கள் – போதகர், பாதிரி, பிஷப் என்று – இதை மேடையில் செய்துவருகிறார்களே),
  • முத்தமிடுவது (இதை தனியாக வ்செய்வார்கள் போலிருக்கிறது),
  • பெண்கள், மாணவிகளின் உடைகளை தான் அணிந்து கொள்வது,
  • பெண்களிடம் பாலை கொடுத்து குடிக்கச் சொல்லி விட்டு பாதியில் வாங்கி தான் குடிப்பது (சரமாடும் கலையில் ஈடுப்பட்டிருப்பது),
  • நைட்டி, புடவையில் இருப்பது (இதெல்லாம் வசதியாக இருக்கும் போல),
  • நைட்டி உடையை அணிந்து கொண்டு பெண்களிடம் தவறான உறவு கொள்வது என சகலவிதமான அசிங்கமான செயல்களிலும் (அந்த சகலவிதமான அசிங்கச் செயல்கள் என்ன என்று கூறவில்லை) இவர் ஈடுபட்டு வருகிறாராம்.
  • தனது சபையில் வேலை பார்க்கும் வேலைக்காரப் பெண்ணைக் கூட இவர் விடுவதில்லையாம்.
  • இவர் ஒருமுறை ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்தபோது அதை அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் பார்த்து அதிர்ந்து போய் விட்டாராம் (கேரளாவில் இத்தகைய வழக்கு இன்றும் நடந்து வருகிறது).
  • சிறுமிகளையும் கூட இவர் விடுவதில்லையாம் (சிறுமியர் பாலியல், சிறுமியர் வன்புணர்ச்சி என்பது கிறுஸ்துவத்தில் சகஜமாக இருக்கிறது).
  • பல சிறுமிகளிடம் இவர் பாலியல் சில்மிஷங்களைச் செய்துள்ளாராம்.

லெனின் போன்றவர்கள் ஏன் இவற்றை வீடியோ எடுத்து சன்-டிவியில் போட்டு ஒளிபரப்பவில்லை?: தான் “இன்னொரு நித்தியானந்தா போல அவர் செயல்படுவதாக” செயல்படுகிறார் என்று கூறிவிட்டு, அந்த காமக்களியாட்டங்களை, கொக்கோக செக்ஸ் வேலகளை மேலாகக் கூறிவிட்டு, எல்லாம் அறிந்தவர்கள் நிறைய பேர்கள் இருந்தும், ஏன் விசுவாசமாக, ஒரு லெனின் கூட அவற்றை வீடியோ எடுக்கவில்லை? வின்சென்ட் செல்வக்குமாருக்கு பிரபலமான போதகரான சென்னையைச் சேர்ந்த மோகன் லாசரஸ், சாது சுந்தர் செல்வராஜ் உள்ளிட்டோர் ஆதரவாக உள்ளதாக இவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அதாவது கூட்டாகத்தான் செயல்படுகிறார்கள் போலிருக்கிறது.

நக்கீரன் கொடுக்கும் விவரங்கள்: கிறிஸ்தவர்கள் மத்தியில் வின்சென்ட் செல்வக்குமார் மீதான புகார்கள் பெரும் அதிர்ச்சி அலைகளையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துவர்கள் மத்தியில் பிரபலமான ஏஞ்சல் டி.வி.யின் அறிவிக்கப்படாத ஓனர்[4].  ராமநாதபுரம் மாவட்டத்திலேயே மிகவும் பிரபலமான கிறிஸ்துவ பாதிரியாரும் தீர்க்கதரிசியுமான(?) வின்சென்ட் செல்வக்குமார்.  இவருக்கு எதிராக இவரது சபை விசுவாசிகளே கொதித் தெழுந்திருக்கிறார்கள். என்ன காரணம்? என்று தோண்ட ஆரம்பித்த போதுதான் “கிறிஸ்துவத்திலும் ஒரு நித்யானந்தாவைப் போல் பல சில்மிஷங்களைச் செய்திருக்கிறார்’ என்ற பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் விசுவாசிகள் பலரும்[5].

வலம்புரி கல்யாண மஹாலில் புதிய சர்ச்சை ஆரம்பித்து  விட்டார்களா?: ராமநாதபுரம் அண்ணா நகரில் உள்ளது பிரபல பாதிரியார் வின்சென்ட் செல்வக்குமாரின் தீர்க்கதரிசன மையமாக மாற்றப்பட்ட ஜெப ஆலயம். ஆனால், அவரின் லீலைகளைக் கண்டு நொந்துபோன 500-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் அவரிடம் சண்டைபோட்டுவிட்டு  ராமநாதபுரம் வலம்புரி கல்யாண மஹாலில் தங்களது கிறிஸ்துவ ஆராதனையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மஹாலில் ஆராதனை நடத்திவருபவர்களும் வின்சென்ட் செல்வக் குமாரோடு பல வருடங்கள் ஊழியத்தில் இணைந்து பணியாற்றிய பாஸ்டர்களுமான ஜான் டேனியல், ஏசாயா மற்றும் சபை மூப்பர்கள் நம்மிடம் வேதனையோடு பேச ஆரம்பித்தார்கள்.

பல  வருடங்கள்  வின்சென்ட்  செல்வக்குமாரோடு  ஊழியத்தில்  இணைந்து  பணியாற்றிய  பாஸ்டர்களுமான  ஜான்டேனியல்,  ஏசாயா: அப்பொழுது இவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கும். பிறகு ஆதாரங்களை இவர்கள் கொடுப்பார்களா இல்லை கிருத்துவத்திற்கு கெட்ட பெயர் வரும் என்று அமுக்கி விடுவார்களா? “கர்த்தரோட ஊழியத்துக்காகத்தான் 

கல்யாணம் கூட பண்ணிக்காம இருக்கிறதா சொல்லி  ஆரம்பத்துல ஒரு பத்து 

குடும்பங்களை முதுகெலும்பா வெச்சுத்தான் இந்த ஊழியத்தை ஆரம்பிச்சாரு. 500-க்கும் மேற்பட்ட விசுவாசிகள் வர ஆரம்பிச்சாங்கபோகப்போக உபவாசஜெபம்,  ஸ்பெஷல் மீட்டிங் என்றால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்தாங்கஆனாசில வருடங்களில்  சபை விசுவாசிகள் திடீர்திடீர்னு சர்ச்சைவிட்டு வேறசர்ச்சுகளுக்கு போயிக்கிட்டிருந்தாங்க.  குறிப்பாவின்சென்ட் செல்வக்குமாருக்கு ரொம்ப ரொம்ப பக்கபலமா இருந்த  பத்துகுடும்பங்கள்ல உள்ளவங்களும்,  வின்சென்டோட சொந்த மாமா குடும்பமும் வெளியேறினதுதான் அத்தனை பேருக்கும் அதிர்ச்சி.”

பெண்ணாக  மாறிவரும்  கிருத்துவப் பாதிரிகளா  அல்லது  செக்ஸ்  ஆவியின்  விளையாட்டா?: பத்மா முதலியார், மணி ஐயர் போல, இப்பொழுது, ஒர்ய் செக்ஸ் ஆவி வந்துள்ளது. அதற்கு பெயர் “பத்மா”. அதாவது, இந்துக்களை வழக்கம் போல சாத்தான்கள், சாத்தான்களின் குழந்தைகள் என்றெல்லாம் ஏசிவருவதன் விஷமம்தான் இது. மேரி, மேக்தலின், போன்ற பெயர்களில் ஆவி வராது போல. “பைபிளில் அஸ்தரோத்தின் ஆவின்னு ஒண் ணு இருக்குஅது விபச்சாரத்தின் ஆவிஅதை அழிக்கக் கூடிய தூதனா தான் ஆண்டவர் என்னை தேர்ந்தெடுத்துருக்காருஅந்த விபச்சாரத்தின் ஆவியை நான் அழிக்கணும்னா ஆணாக இருந்தால் அழிக்க முடியாதுபெண்ணாமாறினா தான் அழிக்க முடியும்ஆண்டவர் எனக்கு வெச்ச பேரு பத்மா.  நான் ஆம்பளை இல்லநான் கொஞ்சம் கொஞ்சமா பெண்ணா மாறிக்கிட்டிருக்கேன்எனக்கு கர்ப்பப்பை இருக்குஇன்னும் கொஞ்சநாளில் முழுமையா பெண்ணா மாறிடுவேன் .  இதை  நான் யார்க்கிட்டேயும்  சொல்லல . நீங்களும்  யார்க்கிட்டேயும் சொல்லாம எனக்காக ஜெபம் பண்ணுங்க’, அப்படின்னு பெண் பிள்ளைகள் இருக்குற பெற்றோர்களிடம் சொல்லி யிருக்காரு வின்சென்ட்[6].

Christians question their biblical misinterpretation

எக்ஸ்-ரேடட்  பைபிள் – பைபிள்  படித்தால்  செக்ஸ்-குற்றங்கள்  பெருகுமா?:  பைபிளை எல்லோருக்கு கொடுக்கப்படவில்லை. ஏனெனில் அதைப் படித்துக் கெட்டுவிடுவர் என்ற பயம் தான்[7]. பிறகு அதிலுள்ள செக்ஸ் ரீதியிலான வார்த்தைகளை மாற்றினர், பல பைபிள்களை எடுத்துவிட்டனர். பிறகு எஞ்சியதைத்தான் இன்று புதிய ஏற்பாடு-பழைய ஏற்பாடு என்று கொடுத்துள்ளனர். பைபிள் ஒரு செக்ஸ் புத்தகம்[8], அதில் இல்லாத அசிங்களே இல்லை[9] என்று பற்பல கிருத்துவ பண்டிதர்கள், பேராசிரியர்கள் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்[10]. குறிப்பாக சிறுவர்கள் பைபிளைப் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. மற்ற மதப் புத்தகங்களைப் போல, பைபிளை சித்திரப்புத்தகம் / காமிக்ஸ் போல வெளியிட மேனாட்டவர்களே தயங்கினர். ஏனெனில் தந்தை மகளைப் புனைவது, சகோதரன் சகோதரனைப் புனைவது, பலப் பெண்களுடன் உடலுறவுக் கொள்வது, மாற்றார் அல்லது மற்றக் குடிப் பெண்களைக் கற்பழிப்பது[11] போன்ற விவரங்களைக் கண்டு கிருத்துவர்களே வெட்கப்பட்டனர்[12]. ஆகவே, “இவரது திரிபுவாதங்களை கிருத்துவர்களே எதிர்க்கின்றனர்.  செக்ஸைப் பற்றியும் வினோதமான வாதங்களை வைக்கிறார் என்று குற்றம் சாட்டப்படுகிறது[13], என்று இந்திய கிருத்துவர்கள் கூறுவது வேடிக்கையான விஷயம் தான். பைபிளைக் கூட சரியாகப் படிக்காமல், கிருத்துவர்களாக இருக்க்கிறார்கள் என்றுதான் தெரிகிறது. இந்தியக் கிறுத்துவர்கள் தங்களை பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும், மறுபரிசீலினை செய்ய வேண்டும். இத்தகைய பாலியல் குற்றங்களை ஏன் கிருத்துவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் என்ற பின்னணியை அறிந்து கொள்ள வேண்டும். இதைப் பற்றி விவரமாக பல பதிவுகளை செய்துள்ளேன். விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம், விவாதிக்கலாம்[14].

© வேதபிரகாஷ்

07-10-2012


[3] செக்ஸ் விஷயங்கள் கிருத்துவ நம்பிக்கையைக் குறைக்கும் என்றும் பைபிள் வசனன்ஹ்களை வைத்தே ஆராய்ந்து எடுத்துக் காட்டியுள்ளனர்:  http://dwindlinginunbelief.blogspot.in/search/label/sex

[8] எக்ஸ்-ரேடட் பைபிள் என்று பல புத்தங்கள் வந்துள்ளன. அவற்றில் எப்படி பைபிளில் இல்லாத செக்ஸே இல்லை என்பதனை எடுத்துக் காட்டியுள்ளனர்.

[14] https://christianityindia.wordpress.com/2011/07/17/trichy-teachers-beat-each-other-for-sex-or-otherwise/

https://christianityindia.wordpress.com/2011/09/10/vatican-refused-to-take-action-against-sex-absuers/

https://christianityindia.wordpress.com/2011/09/28/child-sex-abuse-teachaers-involved/

https://christianityindia.wordpress.com/2011/10/23/hindu-ndtv-don-bosco-pedophile-sex-crimes-christianity/

https://christianityindia.wordpress.com/2011/10/23/do-bosco-what-christians-want-to-convey-to-indians/

https://christianityindia.wordpress.com/2011/10/30/don-bosco-pedophile-what-christians-want-to-convey-to-indians/

https://christianityindia.wordpress.com/2011/12/04/young-christian-ouple-sex-denied-leading-to-murder/

https://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-rules/

https://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/

https://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midnight/

https://christianityindia.wordpress.com/2012/03/04/1095-mormon-sex-scandals/

https://christianityindia.wordpress.com/2012/03/05/wife-of-christian-priest-eloped-with-police/

https://christianityindia.wordpress.com/2012/03/11/yet-another-sex-catholic-fugitive-priest/

https://christianityindia.wordpress.com/2012/03/25/fugitive-rapist-from-america-arrested-in-india/

https://christianityindia.wordpress.com/2012/03/25/rapist-of-teens-can-be-considered-as-pedophile/

https://christianityindia.wordpress.com/2012/04/07/what-is-wrong-with-telc-crime-sex-money-power/

https://christianityindia.wordpress.com/2012/07/18/continuous-christian-sexploitation-pedophile-crimes/

https://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/

https://christianityindia.wordpress.com/2012/08/12/christian-bishops-selling-sex-pornographic-books-earning-billions/



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

TVயில் நேர்காணல்:

கேள்வி:  சத்தியம் TVயில் சகோ.வின்சென்ட் செல்வகுமார், சகோ.மோகன் சி. லாசரஸ், சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் ஆகியவர்களின் பாலியல் குற்றச்சாட்டு குறித்து நேர்காணல் நிகழ்ச்சி (ஒரு Fake) ஒரு ஏமாற்று நிகழ்ச்சி என்கிறார்களே?.

பதில்:  அது உண்மைதான் என்றே பலர் கருதுகிறார்கள். அந்த நேர்காணல் நிகழ்ச்சி திட்டமிட்டு செய்யப்பட்ட ஏற்பாடு ஆகும்.

முதலாவது சத்தியம் TVயின் முதலாளிகள் என்று அறியப்படுவர்களில் ஒருவர் மோகன் சி.லாசரஸ் என்பது எல்லாராலும் பேசப்படுவது என்பதை அறிவீர்கள். அப்படியிருக்கும்போது அவர்களைப்பற்றி நக்கீரன் என்ற வாரப்பத்திரிக்கையில் வெளிவந்த பாலியல் குற்றச்சாட்டுக்கு அவசர அவசரமாக விளக்கம் கொடுக்க வேண்டியது மிக அவசியம் என்று அந்த குறிப்பிட்ட மூன்றுபேர்கள் கருதினார்கள். கிறிஸ்தவ மக்களிடையே ஏற்பட்ட பெரிய அதிர்ச்சி அலைகளால் அவர்களின் ஊழியமே படுத்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டது. அதை சரிப்படுத்த தங்களை நிரபராதிகள் என்று மக்களுக்கு காட்ட வேறு எந்த மீடியாக்களும், TV நிலையங்களும் முன்வராத நிலையில் இனி தங்களின் சொந்த TVயின் மூலம்தான் செய்திகளை அறிவிக்கவேண்டும் என்ற நிலை உண்டானது.

ஆகவே தங்களுக்கு சாதகமான கேள்விகள்கேட்கும் நபர்களை தயார்ப்படுத்தி பல்வேறு இடங்களிலிருந்து தொலைபேசி வழியாக கேள்விகேட்க ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் மூன்று பேர்களின் ஊழல்களைப்பற்றி விவரம் அறிந்தவர்கள் அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் வெளிப்படையாக கேள்விகேட்டபோது பலருக்கு சத்தியம் டிவியின் தொலைபேசி லைன் கிடைக்காதபடி திட்டமிட்டு தடுத்தார்களே! நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது பலர் என்னோடும் தொடர்புக்கொண்டார்கள் நிகழ்ச்சியை சீக்கிரம் டிவியில் பாருங்கள். அவர்களிடம் நாங்கள் என்ன கேள்விகேட்பது என்றார்கள். உங்களுக்கு எது சந்தேகம் என்று தோன்றுகிறதோ அதை கேளுங்கள் என்றேன். அவர்கள் கேள்விகேட்க பலமுறை முயன்றார்கள் அவர்களுக்கும் லைன் கிடைக்காதபடி செய்துவிட்டனர். அந்த நேர்காணல் நிகழ்ச்சியே ஒரு நாடகம் அதை அவர்களே அரங்கேற்றம் செய்த நிகழ்ச்சியாகும். இதில் நான் ஆலோசனை கூறி என்ன பிரயோஜனம்!. அப்படியே நான் ஆலோசனை கூறினாலும் அது மேடையேறாதே!.

நக்கீரன் அலுவலகத்திலிருந்தும் சத்தியம் டிவி நேர்காணலில் கேள்விகள் கேட்க சிலர் மூலமும் ஏற்பாடு செய்யப்பட்டது என்று கேள்விப்பட்டேன். அவர்களுக்கும் தொலைபேசி லைன் கிடைக்காதபடி பொதுமக்கள் கேட்கும் கேள்விகள் வடிகட்டப்பட்டதாகவும் அறிந்தேன். அந்த மூவரணியை புகழ்த்தும் தொலைபேசி செய்திகளே TVயில் நேர்காணலில் கேட்க செய்தார்கள்.

நல்லவேளை TV நேர்காணல் நிகழ்ச்சியில் மேடையில் வக்கீல் ஒருவர் அமர்த்தி வைக்கப்பட்டிருந்தார். அவரும் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டவர்தான். என்ன கேள்விகள் கேட்கவேண்டும் என்று ஏற்கனவே அவரை ஆயத்தப்படுத்திதான் அவர் அழைக்கப்பட்டு வந்து உட்கார்ந்திருந்தார் என்று எண்ணுகிறேன். அவர்கள் எற்கனவே ஏற்பாடு செய்த கேள்விகளோடு அந்த ஊழியர்களின் திட்டத்தில் இல்லாத சிக்கலான சில கேள்விகளை அந்த வக்கீல் கேட்டுவிட்டார் என்றுதான் எண்ணுகிறேன். அவர் கேட்ட கேள்விகளுக்குத்தான் இவர்கள் மாயமாலத்தை பொறுக்க முடியாமல்தான் அவரே சுயமாக அந்த கேள்விகளை கேட்டுவிட்டார். அதில்தான் இவர்கள் பதில்கூற இயலாமல் திக்குமுக்காடிவிட்டார்கள். அவர்களின் பதற்றத்தை வெளியரங்கமாக மக்கள் கண்டார்கள். அன்று அந்த மூன்று பேர்களின் முகங்களும் பேய் அறைந்ததைபோல் காணப்பட்டதை மக்கள் கவனிக்க தவறவில்லை. இப்படி அந்த வக்கீல் தங்கள் திட்டத்தில் இல்லாத கேள்விகள்கேட்டு தங்கள் மூவரையும் சிக்கலில் மாட்டிவிடுவார் என்று அவர்கள் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை!.

சத்தியம் சத்தியமாகவே அறிவிக்கப்படும் என்ற அந்த சத்தியம் TV நிகழ்ச்சிமூலம் இந்த மூவரணியின் சாயம் வெளுத்துவிட்டது. இனி சத்தியம் TVயில் இப்படிப்பட்ட கிறிஸ்தவ நேர்காணல் நிகழ்ச்சியை நடத்த மோகன் சி.லாசரஸ்சுடன் அதன் இயக்குனர்களும் இனி அனுமதிக்க மாட்டார்கள் என்று நம்பலாம். இவர்கள் மூவரும் அன்று அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் முன்னுக்குபின் முரணாக பேசியதை பொதுமக்கள் TVயில் கண்டார்கள். அதனால் இவர்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டது. ஆகவே கடைசியாக அந்த சத்தியம் TVயில் தங்கள் நிலையைமட்டும் கூறி விளக்க முயன்றார்கள். ஆனால் அதுவும் இயலவில்லை. ஆகவே தங்கள் ஏஞ்சல் TV மூலமாக தன்னிலை விளக்கத்தை அறிவித்தார்கள். அதில் சத்தியம் TVயில் பேசியதை அப்படியே தலைகீழாக மாற்றி பேசினார்கள். ஆனால் இவர்கள் கொடுத்த விளக்கம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை.

ஜாமக்காரன்: இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் குறித்து பழைய பல விஷயங்களும் வெளி வரத்தொடங்கின. தனியார் TV சேனல் ஒன்றின் உரிமையை இவர்கள் ஏமாற்றி ஏஞ்சல் TVக்காக அந்த உரிமையை மாற்றி எடுத்து, அதன்பிறகுதான் ஏஞ்சல் TV தொடங்கினார்கள் என்ற இரகசியம் கொஞ்சகொஞ்சமாக ஜாமக்காரன் அலுவலகத்துக்கு செய்திகளாக வர ஆரம்பித்தது. சென்னை தாமரைபாக்கத்தில் உள்ள சகோ.ஜேம்ஸ் என்பவரிடம் விசாரித்தால் மேலும் பல விஷயங்கள் அறியலாம் என்று சிலரால் கூறப்பட்டது. அப்படியே சகோ.அகஸ்டின் பெங்களுரில் டிவி சேனல் நடத்துகிறவர் இவரிடம் விசாரித்தாலும் விவரம் அறியலாம் என்று அறியப்படுகிறது. நான் இவர்களில் யாரையும் சந்தித்ததும் இல்லை. தொடர்புகொண்டதும் இல்லை. ஏஞ்சல் டிவி நபர்களால் ஏமாற்றப்பட்ட நபர் இப்போதும் மனநொந்து வாழ்கிறார். தாங்கள் பணம்கட்டி டிவி நடத்தும் உரிமைபெற்ற TV சேனலை திருட்டுத்தனமாக (ஏஞ்சல் டிவி) தூதன் TV எடுத்ததை சைபர் பிராஞ்ச் போலீஸ்மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக்குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்த நபரிடம் ஏஞ்சல் டிவி ஆட்கள்மேல் நடவடிக்கை எடுக்கவா? என்று கேட்டார்கள். பாவம் அந்த நல்ல மனிதர் கிறிஸ்துவின் நாமம் தூஷிக்கப்படவேண்டாம் என்பதற்காக இவர்கள்மீது போலீஸ் எடுக்க இருந்த நடவடிக்கைகளை தடைசெய்தார் என்று கேள்விப்பட்டேன். அப்படி அவர் அன்று பெருந்தன்மையுடன் விட்டுக்கொடுத்திராமல் போயிருந்தால் சாதுசுந்தர் செல்வராஜ் அப்போதே கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார் என்று கூறுகிறார்கள். ஒருவரை அழித்து முன்னேறுவது என்பதை அரசியல் தலைவர்களினிடையே நான் கண்டிருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவின் பெயரை கூறி ஊழியம் செய்யும் இந்த ஊழியர்கள் இப்படிப்பட்ட கொடுமையான திருட்டு வேலை செய்து அந்த ஏழை மனிதனை ஏமாற்றி TV சேனல் உரிமையை தனதாக்கிக்கொண்ட சம்பவம் கேவலமானது. இதில் ஆண்டவர் நாமம் எப்படி மகிமைப்படும். அதனால்தான் தூதன் TVயில் தெய்வ பயம் இல்லாமல் வேதத்துக்கு முராணான, கிறிஸ்துவுக்கு பிரியமில்லாத நிகழ்ச்சிகளும், பொய் தீர்க்கதரிசனங்களும், வாலிபப் பெண்களின் கூத்தாட்டமும் கரைபுரண்டு காணப்படுகிறது. ஆவியானவரும் இவர்களைவிட்டு விலகிப்போனார். பரிசுத்த ஆவியானவருக்கு பதில் பிசாசின் 5 தலைநாகமும், நிர்வாண பெண்களின் ஆவிகளும்தான் இப்போது இவர்கள் முன் நிற்கிறது. அதன்பின் மேலும் பல சம்பவங்கள் அரங்கேறின. அவைகளை பிறகு கவனிப்போம்.

ஒருநாள் திடீரென தூதன் TV சேனல் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, கர்த்தர் தன்னை மறுபடியும் திபெத்துக்கு போக சொன்னதாக அறிவித்து, சோக பின்னனியுடன் ஏஞ்சல் டிவி ஊழியர்கள் அனைவரும் கண்ணீர்மல்க ஒவ்வொருவராக வணக்கம் கூறி விடைப்பெற்றார்களே. அதன் காரணம் என்ன? அதன்பின் யாரிடம் என்ன பேச்சு வார்த்தை நடந்ததோ தெரியவில்லை. ஏஞ்சல் டிவியில் வேலை செய்த பலரை பணம் கொடுக்காமல் வேலையைவிட்டு நீக்க செய்வதற்காக இவர்கள் பேசிவைத்த தந்திரமாக இருக்குமோ என்கிறார்கள். இவர்கள் யாவரும் நல்ல நடிகர்கள் என்று விளங்குகிறது. சில நாட்களில் மறுபடியும் அதே உரிமையை புதுபித்து ஒரு பெண் ஆளுமையின்கீழ் மறுபடியும் தூதன் TV நடத்த தொடங்கினார்கள். இவர்கள் ஆராதிக்கும் கடைசிகால தேவன் நிமிடத்துக்கு நிமிடம் இவர்களின் நாடகத்தின் திரைசீலையை மாற்றுகிறதை மக்கள் தெளிவாக அறியமுடிகிறது. இவர்களின் கடைசிகால தேவனே எருசலேமில் கொல்லப்படும் இரண்டுபேர் மரணத்தை ஏஞ்சல் TV மூலமாக காட்ட கடைசிவரை இவர்களை வாழவைப்பதாக இவர்கள் தேவன் வாக்கு கொடுத்திருக்கிறார் என்று நம்பலாம். நம் ஜீவனுள்ள தெய்வம் கடைசியில் அந்திகிறிஸ்துவை பாதாளத்தில் தள்ளி அழிக்கும்போது அவனோடு ஒரு பெரும்கூட்டமே அழிக்கப்படும். அதில் ஏஞ்சல் TVயும் அதன் தொடர்புடையவர்கள் அத்தனைபேரும் காணப்படுவார்கள்.

star2.gif12x12.gifஏஞ்சல் டிவியின் ஆரம்பகால சரித்திரத்தையும் பலர் இவர்களால் ஏமாற்றப்பட்டதையும் சேல்வேஷன் டிவி நடத்திய சகோ.ஜேம்ஸ் என்ற நல்ல ஊழியர் பாதிக்கப்பட்டதும் திரு.ஜான் முத்தையா என்ற முதலாளி அவர்களிடமும் இன்னும் இரண்டு முக்கிய நபர்களிடமும் விசாரித்தால் முழுவிவரம் கிடைக்கும் என்று பலர் கூற கேட்டேன். அதன் மேல்விவரங்களை குறித்தோ குறிப்பிட்ட நபர்களைக்குறித்தோ நான் ஒன்றும் அறியேன்.

star2.gif12x12.gifஇவர்கள் இப்போது புதிதாக ஒன்றைக்கூறுகிறார்கள். நெருப்பில்லாமல் புகைகிறது என்றார்கள். ஆனால் இவர்கள் விஷயத்தில் நெருப்பும் உண்டு, புகையும் உண்டு என்பது காதில் கேட்ட பல செய்திகள் மூலம் நம்ப வேண்டியுள்ளது.

star2.gif12x12.gifசமீபத்தில் நாலுமாவடி அலுவலகத்திலிருந்து குற்றச்சாட்டுடன் வெளியேற்றப்பட்ட சகோ.மோகன் சி.லாசரஸ்ஸின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமான நபர்கள் இருவர் நாலுமாவடி அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மனம்நொந்து இருக்கிறார்கள். இவர்கள் மோகன்.சி.லாசரஸ் பற்றிய திடுக்கிடும் செய்திகளின் பல ஆதாரங்களுடன் அவர்களைவிட்டு வெளியே வந்தும் அவைகளை வெளியிட மனதில்லாமல் மனவேதனையுடன் மனதில் புழுங்கிகொண்டிருக்கிறதாக அறிந்தேன். அவர்கள் அந்த தகவல்களையும், புகைப்படங்களையும் தவறானவர்களிடம் கொடுத்து அவைகளை வெளிப்படுத்திவிடகூடாதே என்று ஜெபிக்கிறேன்.

star2.gif12x12.gifநாலுமாவடி என்ற வெள்ளை துணியில் ஒரு கருப்பு புள்ளி இதற்கெல்லாம் காரணம் மோகன் சி.லாசரஸ் பொதுகூட்டத்தில் ஜெபத்தில் கூறிய பொய் வெளிப்பாடுகளாகும். ஜெபத்தில் பொய் வந்தாலே மற்ற எதையும் யாராலும் நம்பமுடியாதுபோகும். பொய் கூறி ஊழியம் செய்தால் இவர்கள் எத்தனை உயரத்துக்குபோனாலும் ஒருநாள் இவர்கள் நம்பிய பொய்க்கு பிதாவானவன் இவர்களுக்கு உதவாமல் இவர்களையே கீழே அதளபாதாளத்துக்கு இறக்கிவிடுவான். ஆனால் கர்த்தரையும் அவர் வசனத்தையும் நம்பினவன் ஒருநாளும் வெட்கப்பட்டு போனதில்லை.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஏஞ்சல் TV - சத்தியம் TV நேர்காணல் - நான் ரெடி.

கேள்வி:  தாங்களை TV சேனல்களில் நேர்காணல் நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளவும், மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரிடையாக பதில் அளிக்கவும் நாங்கள் ஏற்பாடு செய்தால் நீங்கள் வருவீர்களா?.

பதில்:  நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட அந்த இரண்டு TVயிலும் நேர்காணல் சம்பாஷைனைக்கு நீங்கள் என்னை அழைத்தால் நிச்சயமாக வருவேன். இதற்குமுன் இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லாதிருந்தது.

சத்தியம் TVயிலும் - ஏஞ்சல் TVயிலும் இந்த மும்மூர்த்திகளின் சம்பாஷனைகளை கண்டபோது நானும் இவர்கள்முன் அமர்ந்து சம்பாஷனையில் பங்குகொண்டு பேசவேண்டும் என்ற எண்ணம் உண்டானது. அந்த நிகழ்ச்சியில் முதலில் அவர்களையே கேள்விகேட்க சொல்லி நான் பதில் அளிக்கவேண்டும் என்று எண்ணுகிறேன். எல்லார் கையிலும் திறந்த வேதபுத்தகம் கண்டிப்பாக இருக்கவேண்டும். அப்படியே பாலியல் குற்றச்சாட்டின் சமயம் அவர்கள் ஏற்பாடு செய்த அந்த சத்தியம் TV நேர்காணலில் அவர்களிடம் கேட்ட அதே கேள்விகளையே மறுபடியும் கேட்க செய்யவேண்டும். அதன்பின் நானும் சில கேள்விகளை அவர்களிடம் கேட்கவேண்டும். அதற்கு அவர்கள் பதில் அளித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அப்போது நான் சில ஆதாரங்களையும் கையில் கொண்டுவருவேன். அதைக்குறித்தும் நான் கேள்விகள் கேட்கவேண்டும். அந்த நிகழ்ச்சி மட்டும் நடந்தால் நிச்சயம் அந்த நிகழ்ச்சியே அவர்களின் ஆவிக்குரிய நிலையை அவர்களுக்கு உணரவைக்கும். அதன்மூலம் அனைத்து கிறிஸ்தவர்களும் தங்களை திருத்திக்கொள்ளவும் கிறிஸ்தவர்களுக்கு விழிப்புணர்வு உண்டாகவும் அந்த நிகழ்ச்சி வழி உண்டாக்கும்.

2012 ஆகஸ்ட் ஜாமக்காரனில் நான் இவர்களைப்பற்றி எழுதியதை வாசித்தபின் பல வாசகர்களும், இவர்களின் உறவினர்களும், இவர்களின் நண்பர்களும் இவர்களைப்பற்றியே எனக்கு பல புதிய தகவல்களை சேகரித்து அனுப்பியுள்ளார்கள். அவைகளைப்பற்றியும் புகைப்படங்களோடு கூடிய சில விஷயங்களைப்பற்றியும் அந்த நேர்காணல் நிகழ்ச்சியில் அவர்கள் ஒவ்வொருவரிடமும் கேள்விகள் கேட்கவேண்டும்!.

அதோடு சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் அவர்கள் இமயமலை சென்ற விவரம், நேபாள் சென்ற விவரம் அங்கு தங்கிய கிறிஸ்தவ நண்பர்களின் விவரம் ஏஞ்சல் TV வானலை உரிமை இவர்களுக்கு எப்படி கிடைத்தது. நியாயமான முறையிலா? இவர் TV சேனல் தொடங்கிய ஆரம்பகால முயற்சியின்போது யார் யார்? பாதிக்கப்பட்டார்கள் என்பதெல்லாம் அங்கு பகிர்ந்துக்கொள்ளப்படும்.

இவர்கள் சகோ.ஜான் ரபீந்திரநாத் (பாளையங்கோட்டை) இயேசு வருகிறார் தோட்டத்துக்கு வருவதற்குமுன் இவர்களின் நிலை என்னவாக இருந்தது. சகோ.ரபீந்திரநாத் அவர்களிடம் வந்தபின் இவர்கள் நிலை என்னவானது என்பதையும் இவர் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டபோது அங்குள்ளவர்களால் கொடுமைப்படுத்தப்பட்டதாக இவர் கூறி அழுத சம்பவங்களின் பின்னணி அவர் கொடுமைப்படுத்தப்பட காரணம் என்ன?. இவைகளுக்கும் விடை கிடைக்கும். இவர் (சாதுசுந்தர் செல்வராஜ்) தாடி வளர்த்த ஆரம்ப காரணம் என்ன? தாடியில் இரண்டு பக்கமும் வெள்ளை கலர் சாயம் பூசுவது ஏன்? அந்த ஆரம்பகாலத்துக்குப்பின் உள்ள சம்பவங்கள் என்ன? எத்தனைமுறை இவர் இமயமலை சென்றார். இமயமலையில் அடிக்கடி தங்கும் இடம் எது?. இதுவரை சாதுசுந்தர் செல்வராஜ் இமயமலையில் ஒருவரையாவது கிறிஸ்துவுக்கு நேராக வழி நடத்தியிருக்கிறாரா? இவர் காண்பிக்கும் புகைப்படத்தில் உள்ள நபர் இயேசுவை ஏற்றுக் கொண்டவர் அல்லவே!. அப்படியிருக்க அவர்களையெல்லாம் ஏன் புகைப்படம் பிடித்து காட்ட வேண்டும்?.

இவர் அடிக்கடி இமயமலைக்கு போய் தங்கும் நபர்களின் குடும்பம் பல வருடத்துக்குமுன் பாப்திஸ்து சபை மிஷனரிகளால் கிறிஸ்தவர்களாக மாறியவர்களாகும். சாதுசெல்வராஜ் மூலமாக இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் யார்? இதன் விவரங்களையெல்லாம் அந்த நிகழ்ச்சியில் கேட்டு பகிர்ந்துக்கொள்ளப்படும். இவைகள் வாக்குவாதம் செய்ய அல்ல!. மேலும் இவரைப்பற்றிய அமெரிக்க செய்திகள் - போன்ற பல விஷயங்கள் யாவற்றிற்கும் இவரிடமிருந்து நேர்காணல் மூலம் பதில் பெற்றால் ஏஞ்சல் TVயை இவர் மூன்றாவது முறையாக நிறுத்திவிட்டு TV ஊழியர்களின் சோகமுகத்தை மறுபடியும் Angel TVயில் காட்டி அதோடு சாதுசுந்தர் செல்வராஜ் அவர்கள் ஏஞ்சல் டிவி பலம் கடைசியாக நேயர்களுக்கு வணக்கம் கூற வேண்டியிருக்கும்.

நேர்காணலுக்கு முக்கியமான கண்டிஷன்! (நிபந்தனை)

யார் TV நேர்காணலுக்கு என்னை அழைத்தாலும் என் கேள்வி - என் பதில் அதோடு அதில் சம்பந்தப்பட்டவர்களின் பதில்கள் யாவும் எடிட் செய்யக்கூடாது. என்னையே அவமானப்படுத்தும் கேள்விகளை அவர்கள் கேட்டாலும் அதையும் (எடிட்) நீக்ககூடாது. அப்படியே முழுவதுமாக அதை மக்கள் காணச்செய்யவேண்டும். பதிவு செய்யப்பட்ட அதன் காப்பி சம்பாஷனையில் கலந்துக்கொண்ட எல்லாருக்கும் கொடுக்கவேண்டும். அதை அப்படியே அவரவர்கள் பத்திரிக்கையில் வெளியிட TV நடத்துபவர்கள் அனுமதிக்கவேண்டும். நான் ரெடி!.

உச்சக்கட்ட பொய்:

ஏஞ்சல் TVயின் முதலாளி சாதுசுந்தர் செல்வராஜ் அவர்களின் சமீபத்திய உச்சக்கட்ட பொய் என்னவென்றால் இவர் இமயமலையில் ஒரு இடத்துக்குபோய் திரும்பும்போது மாலை 7 மணி மாலைநேரம் ஆகிவிட்டது. இருள் சூழ ஆரம்பித்தது. திரும்பி சேரவேண்டிய இடம் சென்றடைவதற்குள் சூரிய வெளிச்சம் மறைந்துவிடும். பிறகு எங்கும் ஒரே இருள் வழி கண்டுபிடிக்கமுடியாது. இந்த சூழ்நிலையில் சாதுசுந்தர் செல்வராஜ் இயேசுவிடம் ஜெபித்தாராம். இன்னும் 1½ மணி நேரத்துக்கு எனக்கு சூரிய வெளிச்சம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். கர்த்தர் உடனே அதன்படி செய்ய சூரியனை அங்கும் இங்கும் அசையாமல் நிற்கச்செய்தாராம். தான் தங்கும் இடம் சென்றடைந்தபின்தான் சூரியன் மெதுவாக மறைந்ததாம். இது ஒரு சரித்திர சம்பவம் என்று TVயில், தன் பிரசங்கத்தில் அறிவித்துள்ளார். தான் ஒரு யோசுவா, எசேக்கியேல் என்ற நினைப்பில் அப்படி கூறினாரா? அதை கேட்கும் நாமெல்லாம் மடையர்கள் என்று ஒரேயடியாக இவர் தீர்மானித்துவிட்டாரா? என்று அறியேன். வேதத்தில் பழைய ஏற்பாட்டு காலத்தில் சூரியன் நிறுத்தப்பட்டதற்கு இப்போதும் உலக சரித்திரத்தில் விஞ்ஞானிகள் கணக்கின் ஆதாரம் உண்டு. உலக கணக்கில் சில நாழிகைகள் வித்தியாசப்படுவதை சரித்திர விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இந்த ஆதாரங்களை அநேக வருடத்துக்கு முன்பே Dr.ஜஸ்டின் பிரபாகர் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதற்கு சரித்திர சான்றுகள் அடங்கிய பல ஆங்கில புத்தகங்கள் சாட்சி.

சகோ.சாதுசுந்தர் செல்வராஜ் விஷயத்தில் இவருக்காக சூரியன் நின்ற விஷயம், நாசா விஞ்ஞானிகள், இந்திய விஞ்ஞானிகள் அறிந்திருக்கவேண்டுமே!. இரவும், பகலும் கண்காணிக்கும் நவீன கருவிகளில் பதிவாகியிருக்க வேண்டுமே? ஆதாரம் உண்டா?.

இது ஜமக்காளத்தில் வடிகட்டின பொய் அல்லவா? இதற்கு சாதுசுந்தர் செல்வராஜ் தன் ஏஞ்சல் TVயில் ஆமாம் சாமி நிகழ்ச்சியிலாவது கண்டிப்பாக பதில் அளிக்கவேண்டுமே! செய்வாரா?. இதை செய்யவில்லையென்றால் இனி இவர் இமயமலையைப்பற்றியோ, திபெத்தைப்பற்றியோ பேசக்கூடாது என்று கேட்டுக்கொள்வோமா?.

சுமார் 100 ஆண்டுகள் கடந்த துண்டு இப்போது எங்கே? பதில் தேவை!

சாது சுந்தர் செல்வராஜ் மேலும் கூறிய மெகா பொய் 11.9.2012 ஏஞ்சல் TVயில் கூறியதாவது மதியம் ஒருநாள் இயேசு என்னை பரலோகத்துக்கு அழைத்து சென்றார். முழங்கால் படியிடு என்றார். நானும் முழங்கால் படியிட்டேன். உடனே மடித்த காவி கலர் சால்வையை என்மேல் போர்த்தினார். இது என்ன தெரியுமா?. இதுதான் என் தாசன் சாதுசுந்தர்சிங் தன்மேல் போட்டு எப்போதும் உபயோகித்த துண்டு ஆகும். இதை நான் யாருக்கும் கொடுக்கவில்லை. (பரலோகத்திலேயே அந்த பழைய துண்டை இயேசு பாதுகாத்து வைத்திருந்திருக்கிறார் போலும்). இனி இது உனக்கு என்று கூறி என்மேல் போர்த்தினார். இனிமேல் சாதுசுந்தர்சிங்கின் ஊழியத்தை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இனி அவர் ஊழியத்தை நீதான் தொடர்ந்து செய்யவேண்டும் என்றார். உடனே சாதுசுந்தர் சிங்கின் அபிஷேகம் என்மேல் இறங்கியது என்றார். (உடனே அதை பார்த்த சிலர் எனக்கு போன் செய்தனர். சாதுசுந்தர்சிங்கின் ஊழியத்தை தொடர்ந்து செய்யும்படி கர்த்தரால் கட்டளை பெற்ற இவர் இப்போது கண்ணம்மாவை அழைத்துக்கொண்டு சென்னை வீதியில் பாடிக்கொண்டு இருக்கிறார் ஏன்? இப்போது சாதுசுந்தர்சிங்கின் அந்த துண்டு எங்கே? அதை சாதுசெல்வராஜ் தன் டிவியிலாவது காட்டித்தான் ஆகவேண்டும்).

மோகன் சி.லாசரஸ் சொன்ன ஏமாற்று சம்பவம்:

மேலே சாதுசுந்தர் செல்வராஜ் கூறிய யோசுவாவின் சரித்திர அனுபவம்போலவும் நூற்றாண்டு கால துண்டுபோலவும் கதைகளை அவர் கூட்டணியில் உள்ள அவர் நண்பர் சகோ.மோகன் சி.லாசரஸ் கூறி அவர்களும் கூற தொடங்கிவிட்டார். எசேக்கியேல் காலத்து சம்பவம் ஒன்றை கூறுகிறார். (இயேசு விடுவிக்கிறார் பத்திரிக்கை 2012 செப்டம்பர் பக்கம் 12).

ஆந்திரா சகோ.ஏசன்னா அவர்கள் 2012 ஆகஸ்ட் மாதம் மரித்துப்போனார். ஜாமக்காரன் தன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

சகோ.ஏசன்னா அவர்களைப்பற்றி சகோ.மோகன் சி.லாசரஸ் கூறும்போது . . . சகோ.ஏசன்னா அவர்கள் வியாதி படுக்கையில் இருந்தபோது ஜெபிக்க சென்றேன். அப்போது நான் சொன்னேன். இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவான வியாதியாகும், ஆகவே அவர் மரித்துப்போவார் என்று கூறினேன். அவர் மரணத்துக்கு 6 மாதங்களுக்குமுன்பே ஏசன்னா மரிப்பதை கர்த்தர் என்னிடம் சொன்னார் என்று கூறினார். ஆனால் இந்த விவரத்தை இவர் ஜெபிக்கும்போது ஏசன்னாவிடம் கூறினரோ! இல்லையோ! என்பதை இவர் இங்கு குறிப்பிடவில்லை. ஆனால் எப்படி ஜெபித்திருப்பார் என்று நாம் யூகிக்கமுடியுமே! கர்த்தாவே இந்த ஊழியனை சுகப்படுத்தும் என்றுதானே ஜெபித்திருக்கவேண்டும். தன் வழக்கம்போல் நீர் அப்படி சுகப்படுத்தினதற்காக உம்மை துதிக்கிறேன் என்றுதானே கூறியிருப்பார். அது பொய் ஜெபம் அல்லவா. உண்மையில் ஏசன்னா மரிப்பார் என்று கர்த்தர் இவருக்கு அறிவித்திருந்தால் இவர் எப்படி ஜெபித்திருக்க வேண்டும்? கர்த்தாவே இவர் ஆத்துமாவை உம்மிடம் ஒப்படைக்கிறேன் என்றல்லவா ஜெபித்திருக்கவேண்டும்!. தனக்கும் தேவனுக்கும் நெருக்கம் அதிகம் ஒவ்வொருவரின் மரணத்தை குறித்தும் கர்த்தர் எனக்கு அறிவிப்பார் என்றல்லவா இவர் எழுதிய சாட்சிமூலம் அர்த்தமாகிறது. இன்னொரு பொய்யை பாருங்கள். ஒருநாள் ஏசன்னா கூறினாராம். நான் 6 மாதங்களுக்கு முன்பே கர்த்தரிடம் கேட்டுக்கொண்டேன். நான் மரிப்பதாகயிருந்தால் எனக்கு 6 மாத தவணை வேண்டும் இப்போது நான் சாகக்கூடாது என்று கேட்டேன் என்று ஏசன்னா கூறியதான் மோகன் சி.லாசரஸ் கூறுகிறார். அதன்படியே கர்த்தரும் சரியாக 6 மாதங்கள் முடியும் குறிப்பிட்ட அதே நாளில் சகோ.ஏசன்னா அவர்கள் மரித்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை நான் விமர்சிக்க இதை எழுதவில்லை. இன்னும் கவனியுங்கள். மோகன் சி.லாசரஸ் இந்த நிகழ்ச்சியை கூறுவதின்மூலம் தன் வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார். இவர் சுகமாகமாட்டார் என்பதை கர்த்தர் எனக்கு பல நாட்களுக்குமுன்பே சொல்லிவிட்டார். ஆனால் எசேக்கியேல் காலத்தில் நடந்ததைப்போல இப்போதும் எங்கள் ஊழியத்திலும் நடக்கும் என்பதற்காக ஏசன்னா ஜெபித்ததைப்போல யாருக்கும் தெரியாத ஒரு இரகசிய விவரத்தையும் அறிவித்து, அந்த இரகசியத்தையும் கர்த்தர் எனக்கு இரகசியமாக தெரிவித்துவிட்டார். சாவார் என்று நான் கூறியும் ஏன் அவர் இன்னும் சாகவில்லை தன் தீர்க்கதரிசனம் பொய்யாகிவிடுமே? அப்போதுதான் எசேக்கியேல் சம்பவம் சகோதரனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே அந்த நிகழ்ச்சியை இவ்வண்ணமாக திசை திருப்பிவிட்டாhர். 6 மாத தவணை ஏசன்னா கேட்டுக்கொண்டதால் அன்று நான் சாவார் என்று கூறியும், அவர் சாகவில்லை என்று இப்போது வாசகர்களுக்கு அறிவிக்கிறார். இதன்மூலம் ஒருவரின் சாவை வைத்து எத்தனையாக கர்த்தர் அளவு தன்னை உயர்த்தி காண்பிக்கிறார் என்பதை கவனியுங்கள்.

ஏஞ்சல் TV சாதுசுந்தர் செல்வராஜ் அவர்களும், நாலுமாவடி மோகன்.சி.லாசரஸ் அவர்களும் கூறிய இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுபோலவே பழைய ஏற்பாட்டு சம்பவமாக அமைந்துள்ளதே! எப்படி? சாதுசுந்தர் செல்வராஜ் கூறிய சூரியனைப்பற்றி கூறிய இமயமலை சம்பவம் அன்று யோசுவாவுக்கு கொடுத்த உலக அதிசய விசேஷ சம்பவமாகும். அடுத்தது மோகன் சி.லாசரஸ் கூறியது எசேக்கியல் ராஜாவுக்கு ஆயுள் நீட்டிக்கொடுத்த சரித்திர பிரசித்தப்பெற்ற அற்புத சம்பவம் ஆகும். பழைய ஏற்பாட்டுகாலத்தில் விசுவாசிகள் மரிக்க எப்போதும் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற உபதேசம் இல்லாத காலம். ஆனால் புதிய ஏற்பாட்டு சபை விசுவாசிகள் கிறிஸ்துவின் ஊழியர்கள் பிரசங்கிக்கும்போது விசுவாசிகள் எந்த நிமிடமும் மரிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். அப்படியே வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவதற்கும் ஒவ்வொரு நிமிஷமும் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்றுதானே போதிக்கிறார்கள். ஆனால் இவ்வளவு பெரிய ஊழியர் மரிக்க 6 மாத டைம் கேட்கிறார்? மற்ற கருத்துக்களை இதைவாசிக்கும் உங்கள் யுகத்துக்குவிடுகிறேன். நவீன ஊழியர்களிடம் எப்படியெல்லாம் கட்டுகதைகளின் உதாரணம் கரைபுரண்டு ஓடுகிறது! பாருங்கள்.

ஏமாற்று ஊழியம்

மற்றொரு ஏமாற்று ஊழியத்தை கவனியுங்கள்: 28.7.2012 சனிக்கிழமை அன்று டிவியில் சென்னை சாதுபால் சாலமோன் ஜெபிக்கும்போது இயேசுவே இந்த கூட்டத்தில் இன்னும் யார் வியாதியில் இங்கிருக்கிறார்கள்? காட்டும்! என்று இயேசுவையே இவர் மிரட்டுகிறார். தான்தான் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவதுபோல இது காணப்படுகிறதல்லவா! அதனால்தான் இவர் தன் ஜெபநேரத்தில் இயேசுவே இன்னும் வியாதியுள்ளவர் யார்? காட்டும்! காட்டும்! என்று கத்துகிறார். இதெல்லாம் என்ன பயங்கர ஊழியம். மேலும் இவர் நிறைய பெயர்களைகூறி அவர்களையும் சுகப்படுத்தும் என்று இயேசுவையே மிரட்டுகிறார். என்ன இது?

ஆசீர்வாதம் TV ஆலன்பால் கூட்டத்தில் ஜெபிக்கும்போது பரிசுத்த ஆவியானவரே மூவ்மூவ் அதோ அந்த மூலையில் ஒருவர் இருக்கிறார் மூவ் என்று அவர்களை சுகமாக்கும்படி பரிசுத்த ஆவியானவரையே விரட்டுகிறார். இவர் காட்டும் இடத்திலுள்ள ஆட்களை ஆவியானவர் போய் சுகப்படுத்தவேண்டுமாம்? இது ஓவராக இல்லை? இவர்களெல்லாம் மனதில் கர்த்தரைப்பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்?. இதை நேரில் பார்த்த எனக்குஆச்சரியம் ஏற்படவில்லை. கோபம்தான் வந்தது. இந்த நிகழ்ச்சிகள் டிவியில் மட்டும் காட்டப்படாமல்போயிருந்தால் உலக தமிழ் மக்களுக்கு இந்த ஊழியர்கள் செய்யும் இப்படிப்பட்ட தவறுகள் வெளி உலகுக்கு தெரிந்திருக்காது. இவர்கள் இயேசுவையும் ஆவியானவரையும் வேலைவாங்குவது யாருக்குமே தெரியாது போயிருந்திருக்கும்!. மேலே கூறியவைகள் யாரோ கூறியது அல்ல, நானே பார்த்தது EYE WITNESS ஆகும்.

விசுவாசிகளை ஏமாற்றும் பண ஊழிய திட்டம் - ஊழியம்

வியாபாரமாக தொடர்கிறது

கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் மேலே வாசித்த சில ஊழியர்களின் ஏமாற்றுகள் போலவே சென்னை ஊழியர்.ஆல்வின்தாமசும் ஆரம்பித்துள்ளார். சகோ.தினகரன் அவர்கள் முதன் முதல் தொடங்கிவைத்த ஊழிய ஏமாற்றுதிட்டங்கள். இந்தியாவில் இளம்பங்காளர் திட்டம் என்ற பெயரில் ஒருகுழந்தைக்கு அல்லது ஒருபிள்ளைக்கு 2000 செலுத்தினால் 25 வருட ஆசீர்வாதம், 25 வருட பாதுகாப்பு அந்த பிள்ளைகளுக்கு உண்டாகும் என்பதாகும். இந்த திட்டத்தை பெரியளவில் விளம்பரப்படுத்தினார்கள். தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அதன்பின் இந்தியா, வெளிநாடுகளிலும் வாழும் பல குடும்பங்களும் தாங்கள் பெற்ற பிள்ளைகள் பெயரில் இளம்பங்காளர் திட்டத்தில் பணம் அனுப்பி ஏமார்ந்துபோனார்கள். அதை பின்பற்றி பல ஊழியர்கள் பணம்பெரும் இப்படிப்பட்ட பெரிய திட்டத்தை கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் ஜனங்களிடம் வசூலித்து ருசி கண்டார்கள்.

சகோ.ஆல்வின் தாமஸின் பங்காளர் திட்டம்

இப்போது சென்னை சகோ.ஆல்வின் தாமஸ் என்ற ஊழியரும் தன் ஆலயம் கட்ட இந்த குறுக்கு வழியில் விளம்பரப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்துக்கு பெயர் Freedom Vision Partner - பீரிடம் தரிசன பங்காளர் திட்டம் என்பதாகும். இது கர்த்தர் ஆசீர்வதிக்கும் உண்மை திட்டம் என்பதை ஜனங்கள் அறிய உடனே இதைக்குறித்து சாட்சி வெளியிட ஒரு விளம்பரம் தயாரானது.

 ஒரு பெற்றோரின் சாட்சி: எங்கள் மகன் பிரேம்குமார் பீரிடம் தரிசன பங்காளராக இருக்கிறான். இதன்மூலம் நிறைய ஆசீர்வாதங்கள் கர்த்தர் எங்களுக்கு செய்துள்ளார். ஒரு வீடுகட்ட 45 லட்சம் என்று பில்டர்ஸ் கூறினார்கள். அதற்கு முன்பணமாக 4 லட்சம் கேட்டார்கள். கொடுத்தோம். ஆனால் அவர்களால் 5 வருடத்தில்கூட அந்த வீட்டை அவர்களால் கட்டிதரமுடியாது என்பதை நாங்கள் அறிந்து நாங்கள் கொடுத்த முன்பணம் 4 லட்சத்தை அவர்களிடம் திரும்பக்கேட்டோம். ஆனால் அவர்களோ 90000 பிடித்துக்கொண்டுதான் தருவோம் என்றார்கள் நாங்கள் சோர்ந்து போனோம். அப்போதுதான் பீரிடம் தரிசன பங்காளர் திட்டத்தில் ரூஹா எழுப்புதல் மையத்துக்கு காணிக்கை கொடுப்பதாக பொருத்தனை செய்தோம். என்ன ஆச்சரியம் உடனே நாங்கள் வீடுகட்ட கொடுத்த முன்பணம் முழுதொகையையும் உடனே எங்களுக்கு கிடைத்தது. அதில் 1,20000 (ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை) காணிக்கையாக பாஸ்டர்.ஆல்வின்தாமஸ் அவர்களிடம் கொடுத்து விட்டோம். பீரிடம் தரிசன பங்காளர் திட்டத்தில் என் மகன் பங்காளராக இருப்பதால் இது நாங்கள் பெற்ற நன்மையாகும் என்ற அர்த்தத்தில் மற்றவர்களும் இப்படிப்பட்ட பொருத்தனை செய்யவேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்ட ஏமாற்று விளம்பரம் ஆகும்.

 ஈமூ கோழி பண்ணையில் தங்கள் பங்கு தொகை செலுத்தினால் இரட்டிப்பு பணம் என்று ஆசைக்காட்டி மோசடி செய்த பல கோழி பண்ணை முதலாளிகள் இப்போதும் ஜெயிலில் இருக்கிறார்கள்!. இது பத்திரிக்கை செய்தி.

 கவர்ச்சி திட்டம்:

மேலும் சகோ.ஆல்வின்தாமஸ் கட்டும் ஆலயத்துக்கு காணிக்கை கொடுப்பவர்கள் பெயர்கள் யாவும் அப்படியே இனிஷியலுடன் பரலோகத்தில் பொறிக்கப்படும் என்று விளம்பரப்படுத்தியுள்ளார்கள். இதுபோதாதா?. ஜனங்களை கவர வசனம் தெரியாத கிறிஸ்தவ விசுவாசிகளையும் பாவத்தைவிட முடியாதவர்களையும் இந்த திட்டம் கவர்ந்துவிட்டது. எப்படியோ என் பெயர் பரலோகத்தில் எழுதப்படும். அதுபோதும் என்று திருப்திப்படுவார்கள். சகோ.தினகரன் அன்று ஆரம்பித்து வைத்த பொய் பங்காளர் திட்டம் எப்படி பரவி வியாபிக்கிறது பார்த்தீர்களா?.

 மேலே பங்காளர் திட்டத்தில் பணம் கொடுத்த பங்குதாரர்கள் பெற்ற நன்மை கடிதம் வெளியிட்டார்கள். ஆனால் அதேசமயம் பீரிடம் தரிசன பங்காளர் திட்டத்தில் பணம்போட்ட பலர் அடைந்த நஷ்ட சாட்சிகள் எங்கே? அவைகள் வெளிவரவில்லையே!. வெளியிட தைரியம் உண்டா? (பத்திரிக்கை பெயர்: ரூஹா சுவாச காற்று 2012 செப்டம்பர் பக்கம் 27. சென்னை)

 இப்படிப்பட்ட விளம்பர யுக்தியை கர்த்தர் சொல்லியிருப்பாரா என்று கொஞ்சம் மூளையை கசக்கி யோசித்துப்பாருங்கள்.

 (ஆலயம் கட்டுவதற்கு நான் எதிராளியல்ல - ஆனால் கர்த்தர் சொன்னார் என்ற பெயரில் கூறப்படும் இப்படிப்பட்ட பொய் திட்டம் கவர்ச்சி திட்டம் சரியல்லவே).



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

  ஏமாறாதே! ஏமாற்றாதே!!

அப்போஸ்தலர் நடபடிகள்

கேள்வி:  அப்போஸ்தலர் நடபடிகள் என்ற தலைப்பில் கடந்த ஜாமக்காரனில் எழுதிய Rev.T.D.ஜெபக்குமார் அவர்கள் கட்டுரையை நன்றாகத்தான் எழுதியுள்ளார். ஆனால் 2012 ஆகஸ்ட் மாத ஜாமக்காரனில் 29ம் பக்கத்தில் கொரிந்துவில் பேசப்பட்ட அந்நியபாஷையோ மனிதர் புரியமுடியாத பாஷை, அதை பேசுகிறவனே அதன் கருத்தை அறியமுடியாத ஒரு பாஷையாகும். 1 கொரி 14:2,11,14 என்று அவர் எழுதியிருப்பது உங்கள் கருத்துக்கு மாறுப்பட்டது என்கிறேன்?. அது சற்று குழப்பமாக தெரியவில்லை!

 பதில்:  Rev.T.D.ஜெபக்குமார் அவர்களின் கருத்து சரிதான் என்று எண்ணுகிறேன். அந்த வசனத்தை படித்துப்பாருங்கள். அந்த இடத்தில் அந்நியபாஷை அன்றைய சபைக்கு, அதாவது வேத புத்தகம் எழுதப்படாத காலத்துக்கு முன் உள்ள புதிய ஏற்பாட்டுக்கு குறிப்பாக கொரிந்து சபைக்கு அது வரமாக செயல்பட்டதால் அதற்கு வியாக்கியானம் கொடுப்பவன் தேவைப்பட்டது என்று அவர் கூறியிருப்பது சரிதான். புதிய ஏற்பாட்டு சபைக்கு வேதம் எழுதப்படாததற்குமுன் உள்ள கொரிந்து சபையில் அந்நியபாஷை என்ற வரம் தேவைப்பட்டதாக நம்பலாம்.

 சர்க்கரை வேண்டாம்

கேள்வி:  பாஸ்டர்.சுந்தரம் அவர்களின் சாட்சி மிகவும் பிரயோஜனம் உள்ளதுதான். ஆனால் ஜெபிக்கப்போன வீட்டில் காபி கொண்டுவந்தபோது கர்த்தர் உனக்கு சர்க்கரை வேண்டாம் என்று பாஸ்டர்.சுந்தரம் கூறினாராம். கர்த்தர் பாஸ்டர்.சுந்தரம் அவர்களிடம் சர்க்கரை வேண்டாம் என்று சொன்னதாக கூறுவது சரியா? கர்த்தர் அப்படி பேசுவாரா? இது மிகையாக அல்லது ஏற்ககூடாத விஷயம் அல்லவா?

 பதில்:  இதே கருத்தை பலர் எழுதிவிட்டனர். அதை வெளியிடும்போதே அவரின் அந்த செயல் எனக்கு மிகையாகத்தான் தோன்றியது. அந்த கட்டுரையை அனுப்பியவர்கள் முழுவதும் வெளியிட கேட்டுக் கொண்டார்கள். ஆனாலும் அந்த குறிப்பிட்ட சம்பவத்தையும், வேறு சிலதையும் நான் நீக்கியிருக்க வேண்டும். சுட்டிக்காட்டிய யாவருக்கும் நன்றி.

 மரித்தவர்கள் ஆலோசனை:

கேள்வி:  மரித்தவர்கள் பூமியில் வந்து தங்களுக்கு பலமுறை ஆலோசனையும் கூறியிருக்கிறார்கள். எங்கள் ஊழியத்தில் செத்துப்போன பல பரிசுத்தவான்கள் அவ்வப்போது வந்து ஆலோசனை கூறுகிறார்கள் என்று சகோ.மோகன் சி.லாசரஸ், சகோ.சாது சுந்தர் செல்வராஜ், சகோ.வின்சென்ட் செல்வகுமார் ஆகியவர்கள் டிவியில் கூறியதை நீங்கள் தவறு என்று எப்படி கூறலாம்?. மரித்துப்போன எலியா, மோசே மறுரூபமலையில் இயேசுவோடும், பேதுருவோடும் பேசி ஆலோசனை கூறினார்களே?.

 பதில்:  மனிதன் ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாய தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது என்பது கர்த்தரின் சட்டம். இதை மனிதன் மாற்ற முடியாது.

ஆனால் கர்த்தர் மாற்றலாம். சட்டம் இயற்றியவர் அந்த சட்டத்தை தன் பிரத்யேக காரியங்களுக்காக அவர் மாற்றுகிறார். உதாரணமாக, லாசரு, செத்துப்போன பெண் ஆகிய இவர்கள் யாவரும் செத்தபின் நியாய தீர்ப்புக்கு நிற்கவேண்டியவர்களாவர். ஆனால் நியாய தீர்ப்புக்கு முன்பாகவே இந்த உலகத்திலேயே அவர்களுக்கு மறுபடியும் உயிர்கொடுத்து எழும்ப வைத்து மீண்டும் இரண்டாம் முறை உலகத்தில் இயேசுகிறிஸ்து வாழவைத்தாரே!. தாம் என்ன செய்யபோகிறோம், எதற்காக செய்யபோகிறோம் என்பதை இயேசுகிறிஸ்து மட்டுமே அறிவார் என்று வேதம் கூறுகிறது. அதனால்தான் லாசரு சாகும்முன் வியாதி படுக்கையில் அவன் உயிரோடு இருக்கும்போதே அவன் மரிக்கப்போவதை இயேசுகிறிஸ்து அறிந்தும்விட்டார், அழைப்பு பெற்றும் அவனை உடனே சுகமாக்க போகாமல் அவன் சாகும்வரை காத்திருந்து அவன் மரித்தபின் அதன்பிறகு அவனை உயிரோடே எழுப்ப நான்காவது நாள் அவர் கல்லறைக்கு போகிறார். இதன் காரணத்தை சீஷர்கள் மட்டும் விளங்கிக்கொள்ளவேண்டி லாசருவின் இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது. தேவனுடைய குமாரனும் அதில் மகிமைப்படுவார் என்றார்.

லாசரு வியாதிப்பட்ட சமயத்தில் இயேசு அங்கு இருந்திருந்தால் அல்லது சகோதரிகள் லாசரு வியாதிப்பட்டிருப்பதை இயேசுவுக்கு அறிவித்தவுடன் இயேசுகிறிஸ்து அங்கு உடனே போயிருந்தால் உடனே அவனை வியாதியிலிருந்து சுகப்படுத்தியிருப்பார். அதனால்தான் தன் சீஷரிடம் கூறும்போது நான் லாசரு வியாதிப்படுக்கையில் இருந்த இடத்திற்கு அவர்கள் கூப்பிட்டவுடன் போகாததால், அதாவது நான் அந்த இடத்தில் இல்லாமல்போனதால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏது உண்டென்று உங்கள் நிமித்தம் சந்தோஷப்படுகிறேன் என்றார். அதாவது மரித்தப்பின்போவதை சீஷர்கள் அறிந்ததாலும் உலகத்தில் யாரும் செய்யாத அற்புதத்தை தான் செய்யபோவதாலும் அதன் காரணமாக சீஷர்கள் தன்மேல் கூடுதல் விசுவாசம் கொள்ளவும், தான் யார்? என்பதை அவர்கள் அறிந்துக்கொள்ள லாசருவின் உயிர்த்தெழுதல் வழி உண்டாக்கும் என்று இயேசுகிறிஸ்து கூறுகிறார். யோ 11:4,5. ஆகவே சில முக்கியமான நோக்கத்துக்காக தான் இயற்றிய சட்டத்தை தானே மாற்றி தன்னை யார் என்று உலகத்துக்கு வெளிப்படுத்துகிறார்.

இது மனுஷர்களுக்கு பொருந்தாது. மறுரூபமலை சம்பவமும் அப்படித்தான், தன் சீஷர்கள் தன்னைக்குறித்து விளங்கிக்கொள்ள தன்னோடுகூட அந்த மறுரூபமலை சம்பவத்தை அவர்களுக்கு காண்பிக்க இயேசுகிறிஸ்து அவர்களை அழைத்து சென்றார். இயேசுகிறிஸ்து ஒருவருக்குமட்டும்தான் செத்துப்போனவர்களோடு பேசமுடியும். செத்துப்போன நாயினுர் வாலிபன் சம்பவத்தில்கூட அப்படித்தான் அந்த பிணத்திடம் சென்று எழுந்திரு என்று நான் உனக்கு கட்டளையிடுகிறேன் என்று மரணத்தின்மீது தனக்குள்ள அதிகாரத்தை விளங்கப்பண்ணினார். சிறு பெண்ணே எழுந்திரு என்று மரித்துப்போன பெண்ணோடும் அப்படியே பேசினார்.

இதைப்போலவே இன்னொரு சம்பவம் கவனிக்கவும், இந்த ஜென்ம பாவசரீரத்துடன் யாரும் பரலோகம் போகமுடியாது, போகக்கூடாது. இயேசுவின் இரத்தத்தால் மனிதனின் பாவம் கழுவப்படவேண்டும். அதன்பின்தான் பரலோகம் போகவேண்டும். ஆனால் இதே இயேசுகிறிஸ்து மரணத்துக்கும் - ஜீவனுக்கும் தெய்வமாக இருந்தபடியால் பழைய ஏற்பாட்டு காலத்தில் அன்று எலியாவையும், ஏனோக்கையும் அவர்களின் சொந்த சரீரத்தோடயே பரலோகத்துக்கு அழைத்துக்கொண்டார். அப்படி அழைத்தவர் சாதாரணமானவரல்ல, மனித பாவங்களை கழுவுகிறவராவார் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஆகவே சில பிரத்யேக காரணங்களுக்காக இயேசுகிறிஸ்து மரித்தவர்களோடு பேசுவதும், மரித்தவர்களை உயிரோடு எழுப்புவதும், இயேசுகிறிஸ்துவுக்கு மட்டுமே இயலும். ஆனால் பூமியில் உள்ள எந்த மனிதர்களுக்கும் மரித்தவர்களோடு அப்படி பேச முடியாது. மரித்தவர்களும் பூமியில் இறங்கிவந்து மனிதர்களுடன் அல்லது ஊழியர்களுடன் பேசமுடியாது. ஆனால் பிசாசு செத்துப்போனவர்கள் ரூபத்தில் மனிதர்களுடன் பேசமுடியும் என்பதையும் அறிந்துக்கொள்ள வேண்டும்.

அடிச்சுவடுகள்

கேள்வி:  BYM ஸ்தாபகர் சகோ.R.ஸ்டான்லி அவர்களின் கட்டுரை அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறேனா? என்ற தலைப்பில் நல்ல கேள்வியுடன் எழுதப்பட்ட அந்த கட்டுரை நாலுமாவடி மோகன் சி.லாசரஸ் அவர்களின் பத்திரிக்கையான இயேசு விடுவிக்கிறாரில் மட்டுமே வெளிவந்துள்ளது. BYMன் அதிகாரபூர்வ பத்திரிக்கையான Blessing பத்திரிக்கையில் அது வெளிவரவில்லையே ஏன்?

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் வேறு எந்த பத்திரிக்கையிலும் அந்த கட்டுரை வெளிவரவில்லை? அதற்கு தனிப்பட்ட காரணம் ஏதாவது இருக்குமா?.

பதில்:  நீங்கள் அந்த கட்டுரையை வாசித்தீர்களா? வாசித்திருந்தால் சகோ.ஸ்டான்லி எழுதிய பல ஆலோசனைகள் யாரையோ மனதில் வைத்து எழுதியதுபோல காணப்படுகிறது. மேலும் அந்த கட்டுரை சகோ.ஸ்டான்லியின் தன்னிலை விளக்கமாகவும் தெரிகிறது. மேலும் BYM ஆசீர்வாதம் பத்திரிக்கையிலும் மற்ற யாருடைய பத்திரிக்கையிலும் அந்த கட்டுரை வெளிவரவில்லை என்பது ஆச்சரியமே?. வழக்கமாக அவர் எழுதும் கட்டுரைகள் துண்டுபிரதி வழியாகவும் வெளியிடப்படும். ஆனால் அந்த கட்டுரை மட்டும் அதுபோல வெளியிடப்படாதது ஏன்? என்று விளங்கவில்லை. மற்ற விவரங்களை நீங்களே கேட்டு விசாரித்துக்கொள்ளுங்களேன்.

அரவாணிகளைப்பற்றி

கேள்வி:  2012 செப்டம்பர் Blessing பத்திரிக்கையில் பக்கம் 5ல் திருநங்கையர்களைப்பற்றி (அரவாணிகளை) எழுதப்பட்டதை வாசித்தீர்களா? உங்கள் கருத்துக்கு அது முரணாக இருக்கிறதே?.

பதில்:  கேள்விகேட்கிற நீங்கள் யார்? உங்கள் கேள்வியின் நோக்கமென்ன? அந்த கட்டுரையில் ஒரு தவறும் இல்லையே!. இவர்கள் விஷயத்தில் எனக்கென்று கொள்கையோ திட்டமோயில்லையே!. அந்த கட்டுரையில் அரவாணிகளுக்கு மிக நல்ல ஏற்பாடுகளை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று காணப்படுகிறதே!. ஒரே ஒரு வித்தியாசம் அந்த கட்டுரையில் எத்தியோப்பியா மந்திரியை அரவாணி அல்லது திருநங்கையாக சித்தரித்தது சரியில்லை. அவர்தான் எத்தியோப்பியாவின் முதல் மிஷனரி இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக் கொண்டவர் என்று எழுதியிருப்பதுவரை மிகச்சரியான கருத்தாகும். இதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் எத்தியோப்பியா மந்திரி அரவாணியில்லை என்பதை அறியவேண்டும். மனந்திரும்புதல் எல்லாருக்கும் உரியது.

ஆனால் குறிப்பிட்ட எத்தியோப்பியா மந்திரி பெண்தன்மை உள்ள அரவாணியல்ல என்பதை கட்டுரை எழுதியவர் குறிப்பிடவில்லை. நம் வேதத்தில் குறிப்பிடும் அண்ணகர்கள், விதையடிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுகிறவர்கள் யாரும் பெண்தன்மை உள்ள அரவாணிகள் அல்ல. பெண்தன்மை உள்ள அரவாணிகளைப்பற்றியே வேதத்தில் ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

என் சொந்த கருத்து என்னவென்றால் அரவாணிகளுக்கு (திருநங்கைகள்) நிச்சயம் மறுவாழ்வு வேண்டும். ஆனால் அவர்களை யாரோடும் இணைத்து வாழவைக்க முடியாது. தனிப்பட்ட தொழில் படித்திருந்தால் அதற்கு தக்கதான வேலையை அவர்களுக்கு கொடுத்து உதவலாம். ஆனால் எங்கு இவர்களை வேலைக்கு தொழிலுக்கு சேர்த்துவிட்டாலும் அவர்கள் தனித்துதான் நிற்பார்கள். அவர்கள் மற்றவர்களோடு இணைந்து வாழ நினைத்தாலும் மக்கள் அவர்களைவிட்டு விலகிவிலகிதான் போவார்கள். இவர்கள் சொந்த குடும்பத்திலேயே அவர்கள் விலக்கி வைக்கப்பட்ட நிலை மிக பரிதாபம்தான்.

ஆகவே சேலத்தில் இன்னும் மற்ற இடங்களில் உள்ளபடி சுயதொழில் ஒன்றுதான் அவர்களை வாழவைக்கும் வழியாக அறியப்படுகிறது. ஹோமோ செக்ஸ் ஆண்புணர்ச்சிக்காரர்கள் கூட குடும்பத்தோடு பொதுமக்களோடு இணைந்து வாழமுடிகிறது. ஆனால் அரவாணிகளால் வாழ இயலவில்லை. காரணம் இவர்கள் உடுத்தும் பெண்களின் உடைதான் காரணமாயிருக்கும்.

விபச்சார பாவம் செய்பவர்கள் தங்கள் பாவத்தை அறிக்கையிட்டு மனந்திரும்புதலினால் அவர்கள்கூட சமூகத்தில் சேர்ந்து திருந்தி மறுவாழ்க்கை வாழமுடிகிறது. ஆனால் அரவாணிகள் தங்கள் உணர்ச்சிகளை ஜெபித்து கட்டுப்படுத்திக்கொண்டேன் என்று தீர்மானித்தாலும், அவர்களுடைய பாடி லேங்வேஜ் சமூகத்தில் இணைந்து மக்களில் ஒருவராய் வாழவைக்கவில்லை, வாழவும் முடியாது.

ஒரு ஆலயத்தில் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட மனந்திரும்பின கிறிஸ்தவ அரவாணிகள் ஆராதனையில் மற்றவர்களைப்போல் கலந்துக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தவர்கள் அனைவரும் எழுந்து வேறு இடத்தில் மாறி உட்கார்ந்துக்கொண்டார்கள். அவர்கள் அங்கு தனிமை ஆக்கப்பட்டார்கள். அதைகண்ட ஆயர் மிகவும் வேதனைப்பட்டு அரவாணிகளுக்கென்று காலை தனி ஆராதனை தொடங்கினார்.

இப்போது சுமார் 18 அரவாணிகள் ஆராதனையில் கலந்துக்கொள்கிறார்கள். நம் ஆண்டவர் யாரையும் வெறுக்கவில்லை. நிலைமை இப்படியிருக்கிறது. என்ன செய்ய? யாரும் இவர்களை ஒதுக்கவும் இல்லை. இரட்சிக்கப்பட்ட அரவாணிகள் சாட்சியுடனும், சமூகத்தில் கௌரவத்துடனும் வாழ அவர்களுக்காக ஜெபிப்பதை தவிர வேறு வழியில்லை. இயேசுகிறிஸ்து அவர்களையும் நேசிக்கிறார் என்பதை அறியவேண்டும். அவர்களுக்காகவும் இரத்தம் சிந்தினார்.

கர்த்தர் நேசிக்கும் அரவாணிகளை நாம் யாவரும் நேசிக்கும் வகையில் அவர்கள், பேச்சு நடவடிக்கைகள், அணுகுமுறைகள் யாவும் மிக நாகரீகமாக அமைய அவர்களுக்கு விசேஷ பயிற்சி கொடுக்கப்படவேண்டும். சமூகத்தில் ஒருவராக இவர்களும் இணைய இவர்களின் உடை உடுத்தும் முறை கண்டிப்பாக மாற்றப்படவேண்டும்.

அரவாணிகள் ஆண்களின் உடை உடுத்தினால் இவர்களுக்கு நிச்சயமாக புது வாழ்க்கை வாழ வழி உண்டு. இப்படிப்பட்ட அரவாணிகள் எத்தனை கோடிகளுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் இவர்கள் புடவை அல்லது சுடிதார் அணிந்துவந்தால் இவர்களுடன் இவர்கள் காரில் சேர்ந்து உட்கார யாருமே கூச்சப்படுவார்கள். ஆகவே அரவாணிகள் ஆண் உடை உடுத்தி தங்கள் அணுகுமுறையை, உடை முறையை மாற்றினால் நிச்சயம் சமூகத்தில் கலந்து வாழ வழி உண்டு.

வெளிநாடுகளில் வாழும் ஒரு சில அரவாணிகள் பெண்களின் உடை உடுத்துவதில்லை. அதனால் அவர்கள் சகஜமாக எல்லாருடனும் பழக பேச, உட்கார முடிகிறது. ஜெபிப்போம்.

குடும்பத்தைவிட்டு ஊழியம்:

கேள்வி:  கேரளா பகுதி செங்கனாசேரியிலிருந்து தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் மனைவி - மக்களைவிட்டு பிரிந்து சுதந்திரமாக தமிழ்நாட்டில் தமிழ் கிறிஸ்தவர்கள் வீட்டை சந்தித்து ஜெபித்துபோகிறார்? மனஸ்தாபம் கொண்டு நான் குடும்பத்தை பிரிந்தாலும் இப்போது மரித்தாலும் பரலோகம் போவேன் என்கிறார்? அவர் கூறுவது சரியா?

பதில்:  நீங்கள் கூறும் நபர் ஊழியம் செய்யக்கூடாது. மனைவியைவிட்டு பிரிந்து வாழ்கிறவர் ஊழியம் செய்யும் தகுதியை இழந்துவிட்டார். இப்படிப்பட்டவர்கள் கிறிஸ்தவ வீடுகளை சந்தித்து காணிக்கைக்காக ஜெபிப்பார்கள். அந்த ஜெபமும் கேட்கப்படாது.

அப்படிப்பட்ட ஊழியர்களை விசுவாசிகள் உற்சாகப்படுத்தக்கூடாது. எந்த ஊழியனானாலும் ஒரு சபையில் அவன் அங்கமாக இருக்கவேண்டும். அல்லது சொந்தமாக சபை நடத்துபவராக இருக்கவேண்டும் அல்லது ஒரு கிறிஸ்தவ ஸ்தாபனத்துடன் இணைந்து ஊழியம் செய்பவராக இருக்கவேண்டும். நீங்கள் குறிப்பிட்ட ஊழியர் மனைவி - பிள்ளைகளுடன் ஒப்புரவாகி இணைந்து குடும்பம் நடத்தும்வரை அவர் எந்த ஊழியமும் செய்யக்கூடாது. சீக்கிரமே அவர் தொழில் செய்து அல்லது ஒரு வேலையில் சேர்ந்து சுயமாக சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றவேண்டும். இப்படி சுற்றித்திரிய கூடாது. வேதத்தில் கூறியபடி முதலில் தன் சொந்த குடும்பத்தை காப்பாற்றவேண்டும் என்பது ஒழுங்கு. அதோடு இயேசுவை அறியாத மக்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு அல்ல) சுவிசேஷம் அறிவிக்கவேண்டும். இதுதான் ஒழுங்கு. ஜெபித்து காணிக்கை வாங்குவது கிறிஸ்தவ ஊழியம் அல்ல.

 

நித்திய ஜீவன்:கேள்வி:  தேவன் (பிதா) குமாரனாக அவதாரம் எடுத்தார் என்பது தவறு என்கிறார்களே? எப்படி?

பதில்:  குமாரனாக அவதாரம் எடுக்கவில்லை. அப்படி சிந்தித்தால் திரியோக கொள்கையில் தவறு உண்டாகும். இயேசுகிறிஸ்து நமக்கு போதிப்பதென்ன?.

யோ 17:3. ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என்றார்.

யார் நடத்துகிறார்கள்?

கேள்வி:  கோயமுத்தூர் CSI திருமண்டலத்தை இப்போது யார் நடத்துகிறார்கள்? திருமண்டலத்தில் உள்ள சில சபைகளில் என்ன நடக்கிறது?.

சமீபத்தில் எல்லா தினசரி செய்திதாள், பத்திரிக்கைகளிலும் CSI ஆலய சம்பவங்கள் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டு நாடே சிரிக்கும் நிலை உண்டானதே? இதற்கு யார் காரணம்?.

பதில்:  கோயமுத்தூர் CSI திருமண்டலம் தலையில்லாமல் ஆடிக்கொண்டிருக்கிறது. மேய்ப்பன் இல்லாத ஆடுகள்போல கடந்தகாலத்தைவிட மிக மோசமான நிலைக்கு போய் கொண்டிருக்கிறது. நியாதிபதிகள் புத்தகத்தின் கடைசி வரிகள் இப்படி கூறுகிறது.

அவனவன் தன்தன் பார்வைக்கு சரிபோனபடி செய்துவந்தார்கள். நியா 21:25.

கடந்த சில மாதங்களின் சம்பவங்களும், விவரமும் இப்போது வெளியிடவிரும்பவில்லை

 



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

Christians question their biblical misinterpretation



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 பணம் இருந்தால் தான் ஜெபம்…. மதப் போதகர் மோகன் சி லாசரஸின் அந்தரங்கங்களை புட்டு புட்டு வைக்கும் சகலை ...


Read more at: https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/young-man-wear-used-mask-in-vellore-qcn7md



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
வின்சென்ட் செல்வக்குமார், சாது சுந்தர் செல்வராஜ், மோகன் சி லாசரஸ் காம லீலைகள்
Permalink  
 


vincent.jpg vincent%2B02.jpg



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard