New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம்


Guru

Status: Offline
Posts: 24601
Date:
சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம்
Permalink  
 


சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம் - 1

“பாம்பை கண்டால் விடு; பார்பானைக் கண்டால் அடி” என்ற உயர்ந்த கொள்கை பேசியவர்கள் பின்நாட்களில் நாங்கள் பிராமணர்களை எதிர்க்கவில்லைபிராமணீயத்தினைத்தான் எதிர்க்கிறோம் என மாற்றிபேசி தங்களை ஸாத்வீக வாதிகளாகக் காட்டிக்கொண்டார்கள்.

        பிராமணன் என்றால் புரிகிறது, ”பிராமணீயம்” என்றால் என்னஅதற்கு அவர்கள் தரும் விளக்கம் பிராமணர்களிடம் காணப்படும் பழக்கவழக்கங்கள்நம்பிக்கைகள் இவைதான் பிராமணீயம்.
        அதுசரி இந்த பிராமணீயம் எப்படி வந்ததுபிராமணர்களிடமிருந்தது. பிராமணர்கள் எங்கிருந்து  வந்தார்கள்கைபர்போலன் கணவாய் வழியாக. அவர்கள் பெயர் ஆரியர்கள்”  அவ்வாறு அவர்கள் வந்து 2000 வருடங்கள் ஆகிறது பல ஆய்வாளர்கள் ( ! ) சொல்லும் ஆய்வு அல்ல(து) காய்வு.
        ஆரியர்கள் வருகைக்கு முன்தமிழன் என்ற இனத்திடம் கடவுள்சகுனம்ஜோதிடம்ஜாதிதுறவுஇத்யாதிஇத்யாதி மூட நம்பிக்கைகள் கிடையாதாம்  அதாவது பிராமணீய நச்சு சிந்தனைகள் கிடையாதாம்    பிராமணர் என்னும் ஜாதி கிடையாது என்பதும் பகுத்தறிவாளர்கள் (!) பகுத்து அறிந்தது,
        
ஆரியர்கள்கைபர் போலன் கணவாய் வழியே வந்ததாக சொல்லப்படும் 2000 வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட சங்கத்தமிழ் இலக்கியங்களில் என்ன உள்ளது என ஆராய்ந்தால் பகுத்தறிவாளர்கள் எனத் தங்களை சொல்லிக் கொள்பவர்கள் சொல்லுவதெல்லாம் பகுத்தறியாதவை” என்பதும் பொய்” என்றும்  புலனாகிறது.
        சங்கத்தமிழ் இலக்கியங்கள் "பத்துப்பாட்டு""எட்டுத்தொகை""பதினெண் கீழ்க்கணக்கு" என வகைப்படுத்தப்படுகிறதுஇதில் உள்ள "எட்டுத்தொகை" நூல்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு இவற்றில் பிராமணர்களைப் பற்றிய குறிப்பும்பார்பனீய சிந்தனைகள் என இவர்கள் சொல்வதும் பண்டைய (தமிழ்தமிழக மக்களின் வழக்கமாகவும் நம்பிக்கைகளாகவும் இருந்ததையும் தெளிவாக்கிறது.
        பிராமணர்கள் அதாவது இவர்கள் சொற்படி "ஆரியர்கள்" வருவதற்கு முன்னே இவர்கள் சொல்லும் "பார்பனீய சிந்தனைகள்" அல்லது "பார்பனீயம்" சங்கத்தமிழ் இலக்கியங்களில் காணப்படுவதால்ஆரியர்கள் என இவர்கள் சொல்லும் பிராமணர்கள் கைபர்போலன் கணவாய் வழியாக வரவில்லைஇந்த பாரதம் என்னும் கர்ம பூமியின் தமிழகம் என்னும் புண்ணிய பிரதேசத்தின் மண்ணின் மைந்தர்கள் என்பதும் பார்பனீயம் என்ற ஒன்று பிராமணர்களால் உண்டாக்கப்பட்டதல்ல என்பதும்இது பகுத்தறிவுள்ளவர்கள் என சொல்லிக்கொள்ளும் பகுத்தறியும் திறம் அற்றவர்களால் உண்டாக்கப்பட்ட பொய் மூட்டை” என்பதும் தெளிவு.


DSC_4807.jpg
Add caption
 
 

 
 
 
 
        ஆன்மா வேறு உடல் வேறு என்பது சங்ககாலத் தமிழக மக்களின் நம்பிக்கை. இது ஆரியர்கள் தந்ததல்லபகவத் கீதை சொன்னது மட்டுமல்லதமிழ் இலக்கணம் கூடச் சொல்கிறது எழுத்துக்களில் உயிர் எழுத்து தானே தனித்து ஓசை பெற்று இயங்குவதுஉயிர் இல்லாது தனித்து இயங்காதது மெய்அதாவது உடல் தனித்து இயங்காது உயிருடன் உடல் சேர்ந்தால்தான் இயங்கும். இதனை குறிக்கவே தனித்து இயங்கும் எழுத்துக்களுக்கு உயிர் எழுத்து” என்றும் தனித்து இயங்காத எழுத்துக்கு உடல் என்பதனை குறிக்கும் மெய் என்பதாக மெய்எழுத்து” என்றும் வகைபடுத்தினர். உயிர்மெய் எழுத்து“ என்பது உயிருடன் மெய்(உடல்) சேர்ந்தால்தான் வேலை செய்யும் என்பதை உணர்த்த உயிர்மெய் எழுத்து என்றனர்.
        எத்தனை ஆழமான தத்துவம் இலக்கணத்தில். உடல் வேறு உயிர் வேறு , என்பதைக்குறிக்கும் தொல்காப்பிய சூத்திரங்கள்.... பகவத் கீதை சொன்னதை சொல்லிவிட்டன
        காலம் உலகம் உயிரே உடம்பே (தொல்காப்பியம் பொருள் கிளவி 58)
        சென்ற உயிரின் நின்ற யாக்கை (தொல்காப்பியம் பொருள் புறத்திணை 13)
         அப்படியானால் சங்ககால மக்கள் மறுபிறவி கடவுள் இவற்றினை நம்பினாராஎன்றால்ஆம் என்பதே தமிழ் சங்க இலக்கியம் காட்டும் பதில்.
        “ஒன்றே வேறே என்றிரு பால்வயின் ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்பமிக்கோன் ஆயினும் கடிவரை யின்றே“ இது தொல்காப்பிய பொருள் களவியல் சூத்திரம்.
        ஒரே நிலத்தவராகவோ அல்லது வேறு நிலத்தவராகவோ இருக்கலாம் உருவிலும் திருவிலும் ஒத்த இரு ஆண் பெண் இடையே கண்டு உண்டாகும் காதல் என்பது முன் செய்த வினைப்பயன் அதாவது ஊழ்வினை அதாவது போன ஜென்ம பலன் என்கிறது தொல்காப்பியம் .
        காதலுக்கு காரணம் ஜாதகத்தில் 7ம் இடம் எனப்படும் களஸ்த்திர ஸ்தானத்தில் ஸூர்யன் செவ்வாய் மற்றும் ராகு வரப்பெற்றவர்களுக்கு காதல் திருமணம் என்பது முன்வினைபயன். ஜோதிடர்கள் சொன்னால்  ஜாதகம்ஜோதிடம் ,பொய் என்பவர்கள் தொல்காப்பியம் சொன்னால் நம்பித்தானே ஆகவேண்டும்.      
        “மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற் கில்லை” காதல் திருமணம் செய்தாலும் கெட்டராசியிலும் கெட்ட நாளிலும் காதலியுடன் சேராமல் இருக்கும் ஒழுக்கம் தலைவனிடம் இல்லை என்கிறது . காதல் திருமணம் செய்த ஒருவரை தொல்காப்பியம் பொருள் களவியல் 45- இதிலிருந்து நல்ல நாள் கெட்டநாள் பார்க்கும் பழக்கம் இருந்ததை உணர முடிகிறது.
        “நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும்” ( தொல்காப்பியம் பொருள் புறம் ) அதாவது நாளாலும் பறவைகளாலும் உண்டாகும் பலன் பற்றி பலன் பார்க்கும் பழக்கம் ஜோதிடம் இவற்றிற்கும் தொல்காப்பியத்திற்கும் எத்தனை பொருத்தம் பார்தீர்களா?
        ஏன்யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற புறநானூறு 192வது பாடலை ஐ.நா. சபையில் வைக்க வேண்டிய வாசகத்தினை எழுதிய கணியன் பூங்குன்றன் ஜோதிடன் தானே - கணியம் என்றால் ஜோதிடன்(ம்). ஆக வேதத்தின் அங்கங்களில் ஒன்றான ஜோதிடம்ஜோதிடர் எல்லாம் தமிழ் பண்பாட்டில் ஒட்டி உறவாடியதை யார் மறக்கமுடியும்மறுக்கமுடியும்.
        மறு உலகு உண்டு என்பதை கல்வெட்டாக காட்டும் பல பதிவுகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது வீரத்தினை பற்றி பேசும் புறநானூரில் 134வது பாடல் வேள் ஆயை உரையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடுகிறார் இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆம்எனும் அரவிலை வணிகன் ஆ அய் அல்லன் “( இம்மையில் தீமை செய்தால் மறு பிறவியில் துன்பம் “)
        “பெறற்கு அரும் தொல்சீர்த் துறக்கம்” என பெரும்பாணாற்றுபடை பட்டினப்பாலை நூல்கள் சொர்க்கம் பற்றி பேசுகின்றன. நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்”  என நரகம் பற்றி சொல்கிறது புறநானூறு 5 வது பாடல் அருளையும் அன்பையும் நீங்கி விட்டவர்கள் நரகத்தில் உழல்வார்கள் இவர்களுடன் நீ சேராதே” என்கிறது இந்த பாடல்
        கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்னே வாளோடு தோன்றிய தமிழ் இனத்திற்கு இம்மை மறுமை நம்பிக்கை இல்லை என்றோநாள்சகுனம் பார்க்கும் நம்பிக்கை இல்லை என்றோ சொல்வது காதில் சுற்றும் பூ.

 

        அதுசரி தமிழன்” என்று ஒரு இனத்தின் பெயர் சங்க இலக்கியத்தில் இல்லைமேலும் தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல” என்று கூறி எந்த பொங்கலை தமிழர் திருவிழா” எனச் சொல்கிறார்களோ அந்த பொங்கல் கொண்டாடப்பட்டதாக  சங்க இலக்கியத்தில் ஆதாரம் இல்லை தெரியுமோ?  


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

சங்க இலக்கியங்களில் பிராமணீயம் – 2 - தாலி

  சங்க இலக்கியங்களில் பிராமணீயம் – 2 - தாலி

         தமிழர்கள் வைதீகத் திருமணத்தினை ஏற்கக்கூடாது என்றும் தாலி அடிமைச்சின்னம்” என்றும் பகுத்தறிவு அட்டை கத்திகள்” கண்டுபிடித்துள்ளன. இதற்குக் காரணம் வைதீக திருமணங்கள் பிராமணர்களால் நடத்தி வைப்பதும், பிராமண வெறுப்பிலிருந்து உண்டான பிராமண எதிர்ப்பு வெறியுமே   காரணம்.


        திராவிட கழக தலைவர் ஈ.வே. ராமசாமி முதல் இன்றைய கி.வீரமணி வரை தாலி அடிமை சின்னம்” என்றும் அதற்காக தாலி அறுப்பு போராட்டங்களும் நடத்தினார்கள் / பேசினார்கள். தாலி தமிழ் திருமணங்களில் கூடாது என்றனர். தாலி பார்பனீய அடையாளம் என்பதும் இவர்களது கண்டுபிடிப்பு.

        உண்மை என்ன எனில் தமிழ் சங்க இலக்கியங்கள் காட்டும் திருமண முறை வைதீக திருமணம் தான், இரண்டாவதாக இவர்கள் சொல்லும் தாலி” என்பது வைதீக தொடர்புடையது அல்ல,


        வேதவழி வைதீக திருமணங்களில் தாலி கிடையாது என்பதால் பகுத்தறிவாளர்கள் தாலி குறித்து கொண்டுள்ள கருத்து ஆராய்ச்சி இல்லாத அறைவேக்காட்டுத்தனம்.


        சங்கத்தமிழ் இலக்கியங்களில் திருமணம் மற்றும் சடங்குகள் குறித்து என்னதான் சொல்லியுள்ளது பார்ப்போமா...


        தொல்காப்பியம் என்பது பழமையான தமிழ் இலக்கண நூல். திருமணங்களை இரு வகையாக கூறுகிறது இந்நூல். அதாவது கற்புத்திருமணம், கற்பெனப் படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபின் கிழவன், கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே“ (தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல்-1)


        இரண்டாவது களவுத்திருமணம்” அதாவது மணப்பெண்ணின் பெற்றோருக்கு தெரியாமல் தலைவன் தன் ஊருக்குப் பெண்ணை அழைத்துச் சென்று செய்து கொள்ளும் திருமணம். களவுத் திருமணத்தினை தொல்காப்பியம் கற்புத்திருமணமாகச் சொல்லவில்லை, கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலை யான” (தொல்காப்பியம் பொருளதிகாரம்  கற்பியல் 2)

        ஆனால் கற்புத்திருமணமானாலும், களவுத்திருமணமானாலும் திருமணச்சடங்குகள் உண்டு என்கிறது தொல்காப்பியம்.


        வர்ணங்கள் நான்கு என்பதையும் அதில் கீழ் மேல் உண்டு என்றும், அந்தணர் அரசர் வணிகர் என்னும் மூவர்க்கும் ஏற்பட்ட சடங்குகள் அவர்கட்கு கீழ்பட்டவர்களுக்கும் அதே சடங்குகள் உண்டு என்கிறது சங்கத்தமிழ் இலக்கியம் மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” (தொல்காப்பியம் பொருளதிகாரம் கற்பியல் 3)


        திருமண சடங்குகளில் தற்போது முக்கியமானதாக கொள்ளப்படுவது மாங்கல்யதாரணம்” அதாவது  தாலிகட்டும் / அணிவிக்கும்  சடங்குக்கு மாங்கல்யதாரணம்” என்று பெயர். அதற்காகத்தான் முகூர்த்த லக்னம்” குறிக்கப்படுகிறது, ஆனால் பெண் கழுத்தில் தாலி கட்டும்படி வேதம் சொல்லவில்லை. மாங்கல்யம் தந்துநாநேந” எனத்துவங்கும் தாலி கட்டும் போது சொல்லப்படும் மந்திரம் வேதமந்திரம் இல்லை. இது ஒரு ஸ்லோகம் மட்டுமே . 

வேத மந்திரங்கள் எந்தஎந்த கர்மங்களில் கூறவேண்டுமோ அவைகளை ஸூத்திரக்காரரான ஆபஸ்தம்பர் இயற்றிய க்ருஹ்ய ஸூத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் அதில் மாங்கல்ய தாரணத்தின் போது சொல்லப்படும் மாங்கல்யம் தந்துநானேன என்ற வரிகள் இல்லை ஏனென்றால் அது வேத மந்திரம் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை. 

மேலும் இன்றும் நீங்கள் வைதீக திருமண பத்திரிகையில் பார்த்தால் பாணி கிரஹணம் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கும் அதாவது கையைப் பிடிப்பது இது விவாத்தினை குறிப்பது. ஸ்ரீ ராமாயணத்தில் ஜனகர் ஸ்ரீ ராமரிடம் சீதையை பாணிக்ரஹணம் செய்து கொள்ளுமாறுதான் கேட்கிறார்.

        வேதம் சொல்லாத தாலி காட்டும் பழக்கத்தினை வேதநெறி எனத் தவறாக எண்ணிய,  பகுத்தாராயாத பகுத்தறிவு அட்டைகத்திகள் தாலி, பிராமணீய சடங்கு என்றும், தாலி அடிமைச்சின்னம் என்றும் பேசி வந்தன. இதில் மேலும் வேடிக்கை என்னவெனில் பெண்சுதந்திரம் பற்றி பேசும் பலரும் இதற்கு ஆராய்சி இல்லாது ஆமாம் சாமி போடுவது.


        அப்படியானால் தாலி” யாருடைய பழக்கம்? யாருடைய சடங்கு?  


        தமிழ்நாட்டு மக்களின் பழக்கம்தான் தாலி, தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய, கிறிஸ்துவ, மதத்தினரிடையேயும் கூட, இன்றும் தாலி அணிவிக்கும் பழக்கம் காணப்படுகிறது. உலகமெங்கும் பரவியுள்ள இஸ்லாமிய கிறிஸ்துவ மதத்தினரிடையே மதபிடிமானம் அதிகம். ஆனால் உலகில் வேறு எங்கும், ஏன் பாரத தேசத்திலேயே கூட தமிழகம் அல்லாத மற்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், பிராமணர்கள், பிராமணர் அல்லாதவர்கள் என அனைவரிடமும் காணப்படாத தாலி என்னும் சடங்கு தமிழகத்தில் மட்டும் அனைத்து ஜாதி, மதத்தினரிடமும்   காணப்படுகிறது.


        “கருமணித்தாலி” தமிழக இஸ்லாமியர்களிடையே, சிலுவைத்தாலி“ தமிழக கிருஸ்துவர்களிடையே, தங்கத்தாலி” பிராமணர் அல்லாதவர்களிடையே பிராமணர்களிடையே தமிழகத்தின் கலாசார அடையாளமான தாலி மட்டும் இரண்டு தாலியாக அணிவிக்கப்படுகிறது, ஆம்! பெண் வீட்டினர் சார்பில் ஒன்று மாப்பிள்ளை வீட்டின் சார்பில் ஒன்று எனத் தமிழ் கலாச்சாரத்தினை மற்றவர்களைவிட ஒருபடி மேல் சென்று போற்றுகின்றனர் பிராமணர்கள்.


        தேவையற்ற தாலி அறுப்பு போராட்டங்களை அதாவது தமிழ் கலாச்சாரத்தினை புரியாமல் எதிர்க்கும் பழக்கமும், விபரம் புரியாது பிராமணீயம்” என்று முத்திரை குத்தி வெறுக்கும், எதிர்க்கும் முட்டாள்தனத்தினையும் பகுத்தறிவு அட்டைகத்திகள் கைவிடவேண்டும்.


        தங்கத்தாலான தாலியில் தான் வேட்டையாடி கொன்ற புலிப்பல்லினையும், ஒலிக்கும் மணிகளையும் இணைத்து உருவான தாலி அணிந்தவள் பற்றிய குறிப்பு அகநானூறு 7ஆம் பாடலில் 17, 18 வரிகளில் “ பொன்னோடு புலிப்பல் கோத்த புலம்புமணித் தாலி “ என உள்ளது. 


        “ஈகை யரிய இழையணி மகளிர்” என புறநானூறு தாலி பற்றிய குறிப்பை காட்டுகிறது. தமிழ் சங்க இலக்கியங்கள் தாலி பற்றியும் அது தமிழ்நாட்டின் பண்டைய கலாசாரம் என்றும் தெளிவாக்குகிறது.


        தாலி பற்றிய குறிப்புகள் வேதங்களில் இல்லை, தமிழ் இலக்கியங்களில் மட்டும் தான் உள்ளது. எனவே தாலி பிராமணர் உண்டாக்கிய சடங்கல்ல, அது தமிழக கலாசாரம்   என்பதை பகுத்தறிவு அட்டை கத்திகள் உணரவேண்டும்.

 
thaali.jpg
 
        
திருமணத்திற்கு நாள் நட்சத்திரம் பார்த்தல் தமிழ் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ளது தீய கோள்களின் தொடர்பு நீக்கிய வளைந்த வெண்மையான சந்திரனைக் கேடற்ற சிறந்த புகழினையுடைய உரோகிணி என்னும் நாள்வந்து அடைந்த நல்ல நாள் அது” என்று மணநாள் பற்றி பதிவு செய்கிறது கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள் கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென”  அகநானூறு 86வது பாடல் 6,7 வரிகள்.

        அந்த தெளிந்த ஒளியையுடைய திங்களை உரோகிணி கூடியதனால் எல்லாத்தோஷமும் நீங்கிய சுபநாள் சேர்க்கையில் திருமண வீட்டை அலங்கரித்துக் கடவுளைப்பேணி என்பதாக திருமணத்திற்கு நல்லநாள் பார்த்தல் முதல் கடவுளை வணங்குதல் வரை உள்ள நிகழ்வுகளை பதிவுசெய்கிறது புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி அம்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட் சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக் கடினர் புனைந்து கடவுட் பேணிப்” அகநானூறு 136வது பாடலின் 3-6 வரிகள்

        மணப்பெண்ணை வது” என்று அழைப்பது வழக்கம் இந்த சொல் பிராமணர்களிடையே வழக்கில் உள்ள வடமொழி சொல் வதுவை நன்மணம்” என்கிறது அகநானூறு 86-17வது வரி. வது என்னும் சொல் பருவம் அடையாத கன்னிப்பெண்ணை குறிக்கும், அகநானூறு மூலம் இன்று பலராலும் ஏன் சாரதா தடுப்பு சட்டத்தாலும் தடை செய்யப்பட்டுள்ள குழந்தை திருமணமே” வைதீக முறைபடியும் தமிழ் மரபுபடியும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

        திருமணத்தின் சம்ஸ்க்காரங்களில் ஒன்றான முதலிரவு எனப்படும் சாந்திமுகூர்தம்” அன்று பெண் வீட்டார் சார்பில் கொடுக்கப்படும் புடவையை பெண் அணிவித்துக்கொள்வது இன்றும் பிராமணர்களிடையே உள்ளது.  இந்த புடவைக்கு கோடிப்புடவை” எனப்பெயர். ஸ்ரீ ஆண்டாளும் தனது நாச்சியார் திருமொழியில் மந்திரக்கோடியுடுத்தி” (6-3) எனத் தனது திருமண நிகழ்வை பதிவு செய்கிறாள். இந்த வைதீக நெறியினையே       அகநானூரில் சங்க தமிழக / தமிழர்  திருமண மரபாகவும் பார்க்க முடிகிறது.

        முதலிரவின் அறையில் மணமாகிய பெண் முதுகினை வளைத்துக் கொண்டவளாக குனிந்தபடி கோடிப்புடவைக்குள்ளே அவள் நாணமுடன் இருந்ததை  கொடும்புறம் வளைஇக், கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த” அகநானூறு (86 – 21,22)  விவரிக்கிறது.

        தமிழ்வழி / தமிழர்வழி / சங்க இலக்கியம் காட்டும் திருமணம் வேதநெறி கொண்ட திருமணங்கள் தான். சங்ககாலம் முதல் நடந்துவரும் வைதீக திருமணத்தினை எதிர்ப்போர் சங்க இலக்கியத்தினையும், உண்மையான தமிழ் கலாச்சாரத்தினையும் எதிர்ப்பவர்கள் என்னும் பழியை ஏற்க நேரிடும். தமிழர் நெறியே வைதீக நெறிதான்.


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம் - 3 - தமிழும் ஸம்ஸ்கிருதமும்

 
சங்கத்தமிழ் இலக்கியங்களில் பிராமணீயம் - 3 
 
தமிழும்  ஸம்ஸ்கிருதமும்
 
தமிழகத்தில் பிராமணீய எதிர்ப்பின் மற்றொரு முகம் ஸம்ஸ்கிருத எதிர்ப்புஸம்ஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்பது தமிழ் இன மான காவலர்களின் (!) கண்டுபிடிப்புஸம்ஸ்கிருதம் செத்தமொழி அது பேச்சு மொழி அல்லவழக்கொழிந்த மொழிஇவை போன்ற வெறுப்பு எதிர்ப்பு கோஷங்கள் இவர்களது வாதம். இவர்களது வெறுப்பு வாதத்தின் மீது நாம் சிந்தனை செய்தால்...
 
சங்கத்தமிழ் இலக்கியத்தில்பண்டைய தமிழகத்தில் ஸம்ஸ்கிருதத்தின் நிலை என்ன?
 
இன மானவாதிகள்” சொல்வது போன்று ஸம்ஸ்கிருதம் பிராமண மொழியா?, அல்லது தமிழை போன்று உயர்ந்த மொழி இல்லையா?
 
தொல்காப்பியத்திற்கும் பழமையான நூல் அகத்தியம்இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழுக்கும் இலக்கணம் கூறப்பட்ட முழு முதல் நூல். இந்நூலின் சில சூத்திரங்கள் மட்டுமே உரையாசிரியர்களால் நமக்கு கிடைக்கிறது. இந்நூல் ஸம்ஸ்கிருதத்தினை நன்கு அறிந்த ஸம்ஸ்கிருத பெயர் கொண்ட  அகஸ்தியரால் எழுதப்பட்டது. திருத்தமான இலக்கணம் செய்து தமிழ் வளர்த்தவர் அகஸ்தியர்.
 
அகத்தியம் கற்றவருள் தொல்காப்பியர் சிறந்தவர் என்கிறது தொல்காப்பிய பாயிரச்சூத்திரம். “தொல்காப்பியர் காப்பியக்குடியை சேர்ந்தவர்” என்பதை அவரது பெயரிலிருந்தே அறியலாம்நாகை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் "தொல்காப்பியக்குடி" என்னும் பெயரில் ஒரு கிராமம் இன்றும் உள்ளது. அதாவது வடபகுதி முனிவருள் "பார்க்கவ" முனிவரின் மரபினர் "காவ்ய" கோத்திரத்தினைச் சேர்ந்தவர் தொல்காப்பியர்.
 
தொல்காப்பியத்திற்கு “பனம்பாரனார்” பாடிய சிறப்பு பாயிரத்தில் "ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்" என்கிறார். "ஐந்திரம்" என்பது இந்திரனால் செய்யப்பட்ட ஸம்ஸ்கிருத இலக்கண நூல்பாரத தேசமெங்கும் இந்நூல் பரவி இருந்தது  விண்ணவர் கோமான் விழுநூல்”  என இந்நூலை சிலப்பதிகாரம் பாராட்டுகிறது.
 
ராம பக்தனாம் அனுமனை ஐந்திரம் என்பதை அடைமொழியாக்கி "ஐந்திரம் நிறைந்தவன்” என்கிறது கம்பராமாயணம். ஐந்திரவி யாகரணமும் ஓதிஒரு நாளினில் வேதமொரு நாலுடன் கற்றான் அனுமன்” என்கிறான் வைஷ்ணவனான கம்பன். “இந்திரத்தை இனிதாக ஈந்தார் பூலும் என்கிறார் சைவராகிய  நாவுக்கரசர்.
 
ஐந்திரத்தின் சிற்சில பகுதிகள் தான் கிடைக்கின்றன,  அத வர்ணா சமூக’ அதாவது எழுத்துக்கள் கூடிக் கூட்டெழுத்துக்கள் ஆகும் என்பது ஐந்திரம்.
            ஸம்ஸ்கிருதத்தில் கூட்டெழுத்துக்கள் உண்டு தமிழில் இல்லை. ஆனால்தொல்காப்பியர் ஐந்திரம் என்னும் சமஸ்கிருத நூல் வழியில் அ+இ=ஐஅ+உ=ஔ என்று வரும் என விதி வகுத்துள்ளார். அகரம்இகரம் ஐகாரம் ஆகும்அகரம் உகரம் ஔகாரம் ஆகும். அகரத்திம்பர் யகரப் புள்ளி ஐஎன் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும் என்பன அச்சூதிரங்கள்.
 
      நான்கு வேதத்திலும் புலமை உள்ளவன் என்பதாலேயே "அதங்கோட்டு ஆசான்" என்பவர் அவைக்கு தலைமை தாங்க அவர்முன் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது.
 
தமிழ் இலக்கண நூல் அரங்கேற்ற சதுர்வேதமும் அறிந்தவன் தேவையாஇது பார்ப்பன சூழ்ச்சி என கூக்குரல் எழுப்பவேண்டாம்.
 
தமிழ் இலக்கண நூல் அரங்கேற்றத்திற்கு சதுர்வேதமும் அறிந்தவன் வேண்டும். ஏனெனில் "அறம்புரி அருமறைமறையோர் தேத்து” என நான்மறைகளைச் சொல்லுவது மட்டுமல்லாது நான்மறை நுணுக்கத்தினையும் தொல்காபியம் சொல்லுகிறது.
 
எழுத்துக்கள் பிறக்கும் இடம் எட்டு அவை “தலைமிடர் நெஞ்சுபல்உதடுநாக்குமூக்குஅண்ணம் (தாடை). இந்த எட்டு மட்டுமன்றி மூலாதாரத்திலிருந்தும் எழுத்தொலி பிறப்பதுண்டுஇதனை வெளிப்படையாக விளக்கமுடியாது. அந்தணர் வேதத்தில் காணலாம் என்கிறார் தொல்காப்பியர்
 
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியில்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளிஇசை ஆரில்தப நாடி
அன்பில்  கோடல் அந்தணர் மறைத்தே
அஃது இவண் நுவலாது எழுந்துபுறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அலபுநுவன் றிசினே (தொல் 102)
தொல்காப்பியத்தின் இந்த சூத்திரம் நமக்கு சொல்வது என்னவென்றால் தமிழில் எழுத்திலக்கணம் முழுவதும் அறிய வேண்டுமென்றால் ஸம்ஸ்கிருத வேதத்தின் துணை தேவை என்பதே,
ஸம்ஸ்கிருதம் அறிவியல்பூர்வமான மொழி இந்த மொழியில் தான் எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே எழுதவும் முடியும் அதனால்தான் கப யென்னும் எழுத்துக்களில் நான்கு விதமான உச்சரிப்பு கக்க, ga, gha, யென வருகிறது.
தமிழில் கப என்னும் எழுத்துக்கள் இருப்பினும் உச்சரிப்பின் போது ஸம்ஸ்க்ருத ஒலி உச்சரிப்பையே பயன்படுத்துகிறோம். உதாரணமாக பம்பரம்” என்னும் தமிழ் சொல்லில் முதல் எழுத்தில் வரும் ப வுக்கும் மூன்றாவது எழுத்தாக வரும் ப ba எனவும் உச்சரிக்கும் போது ஸம்ஸ்க்ருத எழுத்து ஒலியாக மாறுகிறதுஇதனால்தான் தமிழில் எழுத்திலக்கணம்  முழுவதும் அறிய ஸம்ஸ்கிருதம் அறியவேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.
தொல்காப்பியத்தின் இந்த சூத்திரம் நமக்கு சொல்வது என்னவென்றால் தமிழில் எழுத்திலக்கணம் முழுவதும் அறிய வேண்டுமென்றால் ஸம்ஸ்கிருத வேதத்தின் துணை தேவை என்பதே.
இலக்கண வேற்றுமை எட்டுமுதல் வேற்றுமையின் சிறு வேறுபாடே எட்டாம் வேற்றுமைஆதலால் முதலும் எட்டும் வேறானவை அல்ல என்பதால் ஏழு என்னும் வழக்கு முன்பு இருந்ததை அகத்தியமே சொல்கிறது. ஆனால் ஐந்திரம் என்ற ஸம்ஸ்கிருத இலக்கண நூலின் வழியில் வேற்றுமை எட்டு என்கிறது அகத்தியம்.
      “வேற்றுமை தாமே ஏழ் என மொழிப” என்று தமிழ் மரபுப்படி ஏழு வேற்றுமையை கூறுகின்ற தொல்காப்பியர் கூட ஸம்ஸ்கிருத இலக்கண நூலாம் ஐந்திர மரபுப்படி விளியொடும் எட்டே” என்று அகத்தியர் காட்டிய வழியில் முடிக்கிறார்.
 
      தமிழ் இலக்கண நூலாம் அகத்தியத்தில் நமக்கு கிடைத்துள்ள சில சூத்திரங்களிலேயே சையம்திசைஆனந்தம் அராகம்சொச்சகம்வயிரம்மயன்பொத்தகம்சேனைகம்பலம்காலம்ஆனந்தப்பையுள்பாலன்குமாரன்தானம்விருத்தம்’ பல ஸம்ஸ்கிருத சொற்கள் காணப்படுகின்றன.
 
      தொல்காப்பியரோ பன்னிரு நிலத்தினும் வழங்கிவரும் சொற்களைத் தமிழில் கையாளலாம் என்று சொற்களில் (திசைச் சொல்லையும்) ஸம்ஸ்கிருதத்திற்கு மட்டும் தனியிடம் தந்து தமிழில் கையாள விதியை விளக்குகிறார்சேர்த்துக்கொள்கிறார்.
            வட சொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ
              எழுத்தொடு புணர்ந்த சொல்ஆ கும்மே,
                       ’சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்' 
என்கிறது தொல்காப்பியம்.
      தமிழும் ஸம்ஸ்கிருதமும் எதிர் எதிர் மொழி என்னும் வறட்டு பொய் வாதத்தினை தமிழ் சங்க இலக்கியங்கள் மறுக்கின்றன. மாறாக தமிழ்தாய் என்றால் ஸம்ஸ்கிருதம்தந்தை என்கிறாள் ஔவை மூதாட்டி தன் ஆத்திச்சூடியில்.
     
      ஆம்! அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், “அன்னை” என்று தமிழ் வார்த்தையை பயன்படுத்திய ஔவை “தந்தை” எனத் தமிழில் குறிப்பிடாமல் ‘பிதா” என ஸம்ஸ்கிருதச் சொல்லை பயன்படுத்தியதிலிருந்து என்ன புரிகிறது?
      ஔவை வாக்குப்படி தமிழ் தாய் மொழிஸம்ஸ்கிருதம் தந்தை மொழி. தாயினையும் தந்தையையும் பிரித்தல் சரியா?  தந்தையை தாய்க்கு எதிராக எண்ணுவதும்,எதிராக்குவதும் சரியாகுமாதமிழுக்கு எதிராக ஸம்ஸ்கிருதம் என எண்ணுவதும்எழுதுவதும்பேசுவதும் தாய்க்கு ஆம் தமிழுக்கு செய்யும் துரோகம்.
 
      ஸம்ஸ்கிருதம் கலக்காத சங்கத்தமிழ் இலக்கியம் எதுவுமே இல்லையே. ஸம்ஸ்கிருதம் கலக்காத பக்தி இலக்கியம் கூட எதுவுமே இல்லை.
     
      தமிழ் இனமானவாதிகளுக்கு ஒரு செய்தி “தமிழன்’ என்று ஒரு இனத்தின் பெயர்,சங்கத்தமிழ் இலக்கியங்களில் இல்லை. "தமிழன்" என்ற சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர் பூதத்தாழ்வார்தான் தனது இரண்டாம் திருவந்தாதியில் 74 வது பாசுரத்தில் பெருந்தமிழன்" என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.

 
booththalwar.jpg
 
 
      ஆழ்வார் வாக்கினை அடியார்களாகிய நாமும் உரக்கச் சொல்வோம் "நாமே பெருந்தமிழன்" என்று.
        வாழிய செந்தமிழ்! வாழிய ஸம்ஸ்கிருதம்!
        வாழிய பாரத மணித்திருநாடு! வந்தே மாதர(ஓ)ம்       


__________________


Guru

Status: Offline
Posts: 24601
Date:
Permalink  
 

 

 சங்க இலக்கியங்களில் பிராமணீயம்- 4 - பசுவும், பஞ்சகச்சமும்




இந்தியாவின் முதல் சட்டம் பசுவதை தடுப்பு சட்டமாகஅதாவது பசுக்களை கொல்வதை தடுப்பதாக இருக்கவேண்டும் என்றார் ஸ்ரீமான் காந்திஜி.
         பசுவதை தடுப்பு என்பது இன்று ஹிந்துத்துவம் என்றும் ஹிந்துத்துவ வாதிகளின் கருத்து அல்லது ஆசை என்றும் சனாதன வாதம் எனவும் கூறப்படுகிறது. காந்தியவாதம் மட்டுமல்ல, சனாதன தர்மம் சொன்னதைத்தான் தமிழ் சங்க இலக்கியம் சொல்கிறதுசனாதன தர்மம் சொன்னது என்றால் பகுத்தறிவு அட்டைக்கத்திகள் உடனே அதை பிராமணீயம் எனலாம். தமிழ் இலக்கியமும் அதையே சொல்லும்போது ஹிந்துதுவம் என்றோமதவாதம் என்றோ பிராமணீயம் என்றோ அதை வெறுக்கமுடியுமாமறுக்கமுடியுமா?   
        சங்க இலக்கியங்கள் வரலாற்றுடன் தொடர்பு கொண்டவைபுறத்துறை இலக்கியமான புறநானூறு 9ஆம் பாடல் "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்" 
        பசு இனமும்பசு இனம் போன்ற இயல்புடைய அந்தணரும்பெண்களும் நோயாளிகளும்நீத்தார் கடன் செய்ய பொன் போன்ற பிள்ளைகளைப் பெறாதவர்களும்பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள் எம்முடைய அம்பை விரைந்து செலுத்தப் போகிறோம் எனவே நல்ல பாதுகாப்பான இடத்திற்கு உடனடியாகத் தானே சென்று விடுங்கள் என்று அறநெறியில் நடக்கும் பாண்டியன் பால்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் போர்க்கால செயலை  வாழ்த்தி நெட்டிமையார்” என்னும் புலவர் பாடுகிறார்.
இரு அரசர்களுக்கு இடையே போர் நடக்கும் போது பார்ப்பனர்களும்பெண்களும் நோயாளிகளும்பிள்ளையில்லாதவர்களும் அரசனின் அறிவிப்பு கேட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிடலாம் ஆனால் பசுக்கள் எப்படி அறிவிப்பை அறியவும் பாதுகாப்பான இடத்திற்கும் செல்லவும் முடியும். எனவே பசுக்களை பாதுகாக்கவே ஒரு முறை கையாளப்பட்டது.
போர் ஆரம்பிக்க நினைக்கும் மன்னன் தன் எதிரி நாட்டினில் எல்லையில் உள்ள பசுமாடுகளை பிடித்து வருவார்கள் இதற்கு பெயர் "ஆநிறை கவர்தல்"இதனை "வெட்சித்திணை" என்றும்இதனை அறத்திற்கு உட்பட்ட செயல் என்றும் பதிவு செய்கின்றனர் சங்க புலவர்கள். போர் துவங்குவதற்க்கு அறிவிப்பாக பசு பிடித்து வருவது உள்ளது. இதனையே குறிக்கிறது இன்றும் வழக்கத்தில் உள்ள 'சண்டைக்கு எடுபிடி மாடுபிடி" என்னும் பழமொழி.         இடையர் ஜாதி மக்கள் தங்கள் பசுக்கள் கவர்ந்து செல்லப்பட்டதை அரசனிடம் கூற பசுக்களை மீட்டு வர வீரர்கள் “கரந்தை மாலையை” அணிந்துகொண்டு செல்வதை "கரந்தைத்திணை" என்கிறது தமிழ் இலக்கியம்.

        சங்க இலக்கியம் கூறும் "ஆநிறை கவர்தலும்" , "ஆநிறை மீட்டலும்"  குறித்த பதிவுகள் மஹாபாரதத்திலும் காணப்படுகின்றன.

 
 
kamadenu.jpg

 
        பாண்டவர்கள் 12 ஆண்டுகள் மறைவாக வாசம் செய்ய மச்ச நாட்டு அரசனாகிய விராடனுடைய நாட்டில் இருந்த போது பாண்டவர்கள் அங்கு இருக்கலாம் என்பதாக அறிந்துகௌரவர்கள் விராடனுடைய நாட்டின் மீது படையெடுக்க அறிவிப்பாக ஆநிறை கவர்தலை செய்ததும்ஆயர்கள் அரசனிடம் கூறியதும் பின் பாண்டவர்கள் ஆநிறை மீட்பிற்காக கௌரவர்களுடன் போர் செய்ததும் மஹாபாரதத்தில் கோகர்ஹண பர்வத்தில் 37 வது அத்தியாயத்திலும்55 வது அத்தியாயத்திலும் உள்ளது.
        பசு பாதுகாப்பு என்பதும்பசு வழிபாடு என்பதும் இந்த தேசத்திற்கு முழுவதுமான பண்பாடு அதாவதுபாரத தேசத்திற்கான பண்பாடு எதுவோஅதுவே தமிழ் பண்பாடு வேத நெறியான வைதீக நெறி எதுவோ அதுவே தமிழர் நெறி.  மஹாபாரதம் என்னும் ஐந்தாவது வேதமாகியவடமொழி இதிகாசம் என்ன சொன்னதோ அதையே பசு விஷயத்தில் தமிழ் சங்க இலக்கியமும் சொல்கிறது. அதையே தான் தேசியவாதியான காந்தியும் சொல்கிறார். வடக்கும் தெற்கும் பசு விஷயத்தில் வேறுபடவில்லை.
        பிராமண எதிர்ப்பு இயக்கங்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் தமிழறிஞர் கி.ஆ.பெ. விஸ்வநாதம் அவர்கள். இவர் பஞ்சகச்சத்தினையே தன் உடையாக அணிந்து வந்தார்பஞ்சகச்சம் பிராமணர்கள் உடையாச்சே என பலர் கேட்டபோது அவர் சொன்ன பதில் - இல்லை இது தமிழர் உடை என்பது. பாரத தேசமெங்கும் பஞ்சகச்சத்தினை அணியும் பழக்கம் ஜாதி வேறுபாடின்றியும் வடக்கு தெற்கு என்னும் பாகுபாடின்றியும் உள்ளது,
 
பஞ்சகச்சமும் பசுவும் பிராமணீய அடையாளங்கள் அல்ல தேசிய அடையாளங்கள். பாரதீய அடையாளங்கள்அதுவே தமிழ் கலாசார நெறி. 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard