New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளை, தமிழை போற்றுபவன் எப்படி ஈ.வெ.ராமசாமி நாயக்கரை மதிக்க இயலும்


Guru

Status: Offline
Posts: 23950
Date:
திருக்குறளை, தமிழை போற்றுபவன் எப்படி ஈ.வெ.ராமசாமி நாயக்கரை மதிக்க இயலும்
Permalink  
 


திருக்குறளை, தமிழை போற்றுபவன் எப்படி ஈ.வெ.ராமசாமி நாயக்கரை மதிக்க இயலும்???

பெரியார் ஈ.வெ.ரா. குடியரசில் இராமாயண ஆராய்ச்சி எழுதிக் கொண்டிருந்த நேரம். மாநாட்டு மேடையில் இராமாயணத்தைக் கடுமையாக தாக்கியதோடு கொளுத்தவும் செய்தார். இராமாயணத்தைப் போலவே குறளும் வைதீகத்தை ஆதரிப்பது என்று சொல்லி அதையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் பாவேந்தருக்கு அக்கருத்து உடன்பாடு இல்லை. திருக்குறளின் அடிப்படையில் கழகத்தை அமைக்க வேண்டும் என்பது அவர் கருத்து.”

1964ஆம் ஆண்டு பாரதி தாசன் மறைந்த போது பெரியார் அவர்கள் இரங்கலும் தெரிவிக்க வில்லை. இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள வில்லை. ஆனால் பாரதிதாசன் மறைவுக்குப் பிறகு திருவள்ளுவர், பாரதிதாசனை ஒப்பிட்டு பேசத் தொடங்கினார். பாரதி தாசனை உயர்த்தியும், திருவள்ளுவரை தாழ்த்தியும் பேசியதோடு, வள்ளுவர் படமே இருக்கக் கூடாது என்று பேசி வந்தார்.

( வேணு கோபால் சர்மா எழுதிய “உள்ளத்தில் எழுதிய ஓவியம்” கட்டுரை. கவிஞர் முருகு சுந்தரம் தொகுத்த “பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்” நூலிலிருந்து. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிடு. )

“விருது நகரில் திருக்குறள் மாநாடு. பெரியார் பேசும் போது ” மற்ற புராண இதிகாசங்களைப் போலத் திருக்குறளும் மோசந்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. இதுவும் தமிழருக்கு ஒவ்வாத நூலே!” என்று கூறினார்.

பெரியாருக்குப் பின் பேச எழுந்த பாவேந்தர் பெரியார் பேச்சை மறுத்தார். லேசாகக் கூட்டத்தில் அதிருப்திக் குரலும் , ஆரவாரமும் எழுந்தது. பாவேந்தர் பேச்சை முடித்துக் கொண்டார். பிற்பகல் நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று கூறி இவரைத் தடுத்து நிறுத்தி விட்டோம்.”

(மதுரை தனுஷ்கோடி ராஜூ எழுதிய “நோபிள் பரிசு கிடைத்திருக்கும்” கட்டுரை. கவிஞர் முருகு சுந்தரம் தொகுத்த “பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்” நூலிலிருந்து. பாரதி தாசன் பல்கலைக்கழகம் வெளியிடு.)

 

பெரியார் 1928 லிருந்து 1973 வரை தனது இறுதிக்காலம் வரை திருக்குறளையும், திருவள்ளுவரையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  __________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் பெரியார் 

 

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழித்த பெரியார்:

 

 

தமிழையும் தமிழ் இலக்கியங்களையும் பழித்த பெரியார்:
==============
"தமிழ் படித்து உனக்க ஆவதென்ன,
தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று தமிழை இழிவாகப் பேசினார் பெரியார்.
திருக்குறளில் மலவாடை வீசுகிறது என்று திருக்குறளை இழிவுபடுத்தினார் பெரியார்.

சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய தமிழ் இலக்கியங்களைக் குப்பைகள் என்று சொன்னார்.

திருக்குறளை மலம் என்று சொன்ன அதே பெரியார்தான் திருக்குறள் மாநாடு நடத்தினார் என்று சிலர் பெரியாரைப் புகழ்கின்றனர்.

திருக்குறளின் அருமை பெருமைகள் என்னவென்றே தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறிய பெரியாரை வைத்தே திருக்குறள் மாநாட்டை நடத்தியவர்கள் தமிழறிஞர்கள்தான்.
தமிழறிஞர்களின் விழிப்புணர்வு இல்லாமல் போயிருந்தால் கம்பராமாயண எரிப்புப் போராட்டம் செய்தது போல பெரியாரியவாதிகள் திருக்குறள் எரிப்புப் போராட்டம் நடத்திக்கொண்டிருந்திருப்பார்கள்.

விவேகானந்தன், இனியன் சம்பத், கல்பனா தாசன் ஆகிய மூன்று பேர் இணைந்து எழுதிய நூலான “ஈ.வெ.கி.சம்பத்தும் திராவிட இயக்கமும்” நூலில் பின்வருமாறு தெரிலிக்கப்பட்டுள்ளது.
“1949 பொங்கல் திருநாளையொட்டி சென்னையில் திருக்குறள் மாநாட்டைப் பெரியார் நடத்தினார். இதற்கு முன்பெல்லாம் அவர் மொத்தத்தில் புலவர்களே மோசம், தமிழ் இலக்கியமே குப்பை, தமிழே காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் கருத்துக் கூறியதால் தமிழ்ப்புலவர்கள் மத்தியில் கடும் கோபமும் எதிர்ப்பும் ஏற்பட்டன.
அண்ணா, சம்பத், நெடுஞ்செழியன் போன்றவர்கள் பெரியாரிடம் “புராணங்களை எதிர்க்கிற வேகத்தில் திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவற்றையும் சேர்த்துத் தாக்கிடுவது முறையல்ல. தமிழுக்கும் தமிழ் இலக்கியங்களுக்கும் நாமே பாதுகாப்பு. குறள் உலகப் பொதுமறை என்பதை நாம் உணர்த்த வேண்டும்” என்றெல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்பே ஒதிய பிறகு தாமதித்தேனும் பலன் ஏற்பட்டது. இப்போதூ பெரியார் தமிழ் இலக்கியங்களையும், புலவர்களையும் தாக்குவதை நிறுத்திக் கொண்டார்.”
(பக். 169)
மேற்கண்ட செய்தியின் படி திருக்குறள் மாநாடு அண்ணா, ஈ.வெ.கி.சம்பத், நெடுஞ்செழியன் ஆகியோரின் நிர்பந்தத்தின்படி நடத்தப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு எதிரான பெரியாரிடமே சில ஆண்டுகளாக அதுபற்றி நல்லவிதமாக  ஓதி வந்தபடியால் வேறு வழியின்றி திருக்குறள் மாநாடு நடத்த பெரியாரும் ஒப்புக் கொண்டார் என்பதும் விளங்கும்.
1950இல் மீண்டும் பெரியார் என்ற வேதாளம் முருங்கை மரம் ஏறியது. அவர் கூறுகிறார்: “வள்ளுவர் குறளையும் அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம் எல்லாம் போய் விட்டால் நமக்கு எது தான் நூல் என்று கேட்டார்கள். நான் இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது என்று பதில் கூறினேன். (விடுதலை 1.6.1950)
பெரியாருக்கு சாவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு வரையிலும் திருக்குறளின் மேல் நல்லெண்ணம் பிறக்க வில்லை.

27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் பெரியார் கூறுகிறார்:
“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான் குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?”
என்று கடைசிவரை திருக்குறளை ஏற்க மறுத்தார்.

பெரியார் வாயில் இருந்து உதிர்ந்த விஷ வார்த்தைகள்...
"சிலப்பதிகாரம் ஒரு தேவடியாள் கதை. தேவடியாள் எப்படி வெளியே அழகாக, உள்ளே வஞ்சகத்துடன் இருப்பாளோ அதுபோலவே சிலப்பதிகாரமும்"
"வள்ளுவன் மூடநம்பிக்கையும் ஆரிய மத கருத்தையும் சொன்னான். திருக்குறள் ஒரு மலம். அதை வீசி எறி"
"தமிழனுக்கு இலக்கியம், வரலாறு, குடும்பம், பண்பாடே கிடையாது. இங்கு பிராமணன் வந்து எழுதியதும், பிராமண அடிமை எழுதியதும்தான் இலக்கியம்"
"தமிழில் இலக்கியம், வரலாறு என்ன இருக்கிறது? தமிழை விட்டால் என்ன கேடு? தமிழ்த்தாய் சத்தில்லாமல், அதன் பிள்ளைகள் நடைப்பிணமாகவே இருக்கிறார்கள்."
"இந்தி எதிர்ப்பு அரங்குக்கு போனேன். இந்திக்கு பதில் இங்கிலீஷ் போதனாமொழி என ராஜகோபாலாச்சாரி சொன்னார். நான் இங்கிலிஷ் போதனாமொழி மட்டுமல்ல. பேச்சுமொழியாகவும் இருக்க வேண்டும். தமிழ் எழுத்துகளை நீக்கி, இங்கிலீஷ் எழுத்துகளை வைக்கவேண்டும் என்றேன்."
- பெரியார்
1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாட
ு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.
அப்போது தந்தை பெரியார் "உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது
?" (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார். தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் "தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?".
பிறகு அந்த நூலின் தலைப்பு "தமிழும் தமிழரும்" என்று மாற்றப்பட்டது. தற்போது வரை ஐந்து பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. "தமிழ் நீசபாஷை" என்று கூறும் ஆரிய நூல்களுக்கும், "பெரியார் தமிழ் காட்டுமிராண்டி மொழி" என்று எழுதிய இந்த நூலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.
ஈ.வே.ராமசாமி பற்றியும் திராவிடம் பற்றியும் தலைவர்கள் கருத்து:
பொதுவுடைமை போராளி சீவானந்தம்:
1957ஆம் ஆண்டில்
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பின் இரட்டைத்தன்மை குறித்தும், அவரின் சாதி ஒழிப்புக்கொள்கை குறித்தும் ஒரு பொதுக்கூட்டத்தில் தோலுரித்துப் பேசினார் பா.சீவானந்தம். அது வருமாறு: "விரும்பினால் இராம மூர்த்தியை ஆதரிப்பார், இராஜ கோபால ஆச்சாரியை ஆதரிப்பார், மாவூர் சர்மாவை ஆதரிப்பார், இது ஒர் சித்தம்! வேறொரு பித்தம் கிளம்பினால், அக்கரகாரத்தை ஒரு கை பார்ப்பேன் என்று ஆவேசம் காட்டுவார். நேற்று நடந்த பொதுத் தேர்தலில் காஞ்சிபுரம் டாக்டர் சீனிவாசனையும், ஸ்ரீரங்கம் வாசுதேவனையும், மதுரை சங்கரனையும் ஆதரித்தார். அதற்கு ஒரு காரணம் சொன்னார். இன்று ஜாதிஒழிப்பு சாக்கில் பிராமணர் மீது பாய்கிறார். இதற்கு ஒரு காரணம் சொல்லுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக அவர் ஜாதியை எப்படி ஒழித்து வந்திருக்கிறார். அதில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறார் என்பதை நாடறியும். அவர் காட்டிய வழியில் தமிழ்நாட்டில் ஜாதிய வெறியும், ஜாதிப்பூசலும் ஒழியவில்லை என்பது மட்டுமல்ல, மாறாக பெருகி வந்திருக்கிறது என்பதே என்னுடைய கருத்து" என்றார்.
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்:
பெரியார் 'தமிழ்நாடு தமிழருக்கே' முழக்கத்தை திடீரென்று 'திராவிட நாடு திராவிடருக்கே' என்று மாற்றினார். இதன் மூலம் எழுந்து வந்த தமிழ்த் தேசிய எழுச்சிப் போராட்டம் திசை திருப்பப்பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ள வில்லை. பெரியார் மீது 25 குற்றச்சாட்டுகள
ை கூறி நீதிக்கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பதவி விலகினார். பிறகு 1994இல் நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றம் செய்த போது அக்கட்சியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். இது குறித்து தான் நடத்திய 'தமிழர் நாடு' (1950) இதழில் எழுதினார்: "நான் திராவிடர் கழகத்தில் இருக்கவுமில்லை. விலகவுமில்லை. அவர்கள் தான் 'தமிழ் வாழ்க' என்பதிலிருந்து 'தமிழ்நாடு தமிழருக்கே' என்பதிலிருந்து 'தமிழ்க்கொடி' தூக்குவதிலிருந்து விலகிப்போனவர்கள்."
நாவலர் சோமசுந்தர பாரதியார்:
"தமிழன் தன்னைத் தமிழெனன்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டுத் திராவிடன், திராவிடன் என்று தோள் குலுக்குவதா? திராவிடன் என்ற பெயர் சங்க நூலிலே ஏது? சுயமரியாதை, சுயமரியாதை என்று ஆரியமொழி பேசினார்கள். நான் சொல்லிச் சொல்லி இப்போதுதான் தன்மானம் என்று தமிழாகப் பேசுகிறார்கள்" என்று இடித்துரைத்தார்.
1953 தங்கோவின் தமிழக எல்லை தற்காப்பு மாநாடில்,
"நாம் தமிழர்! நமது இனம் தமிழினம்! நமது நாடு தமிழ்நாடு! தமிழ்நாடு தான் நமது குறிக்கோள்! மொழிவழியாகப் பிரிந்து விட்ட போது திராவிடம் என்பதில் பொருள் இல்லை, திராவிடம் என்பது தமிழ்ச் சொல்லே அன்று" என்றார்.
அண்ணல் தங்கோ:
'திராவிடம்' என்ற சொல்லைக் கேட்டாலே காதில் நாராசம் பாய்ச்சியது போல இருக்கிறது " என்று 1950 முத்தமிழ் மாநாட்டில் பேசினார்.
உணர்ச்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்:
"அண்ணல்! பெரியாரும், அண்ணாத்துரையும் இல்லாத ஊருக்கு (திராவிட நாடு) வழிகாட்டி விட்டார்கள்!. தமிழினத்தை திசை திருப்பி விட்டார்கள். ஆனால் இறுதியில் உன்றனின் தனித்தமிழ்நாடு என்ற குறிக்கோளே வெற்றி பெறும்! அன்று தமிழகம் உன்னை நினைக்கும்" என்று தங்கோவிடம் கூறியுள்ளார்.
"நமக்கு திகவும் வேண்டாம் திமுகவும் வேண்டாம்" என்றார்.
குடும்ப விளக்கு நூலின் 2ஆம் பதிப்பு 1960லும் 3ஆம் பதிப்பு 1963லும் வந்தது. இவ்விரு பதிப்பிலும் மேற்படி பாடலில் வரும் திராவிடன் என்பது தமிழன் என்றும் திராவிட மக்கள் என்பது தமிழ்மக்கள் என்றும் மாற்றப்பட்டது.
"....தமிழன் என்று நீ செப்படா தம்பி"
என்றே இயம்பி அமிழ்து வந்தாள்
வாழிய தமிழ் மக்கள்!
வாழிய நற்றமிழ் வையகம் இனிதே!"
தமிழிலக்கியங்களெல்லாம் வெறும் குப்பைகள் என்று பெரியார் கூறினார். அப்போது,
பாவேந்தர் பாரதிதாசன்,
"நூலைப்படி-சங்கத்தமிழ் நூலைப்படி! -முறைப்படி நூலைப் படி! -சங்கத்தமிழ் நூலைப்படி!
காலையில் படி, கடும்பகலில் படி,
மாலை இரவு, பொருள்படும்படி!" என்று பெரியாருக்கு உறைக்கும்படி கூறினார்.
வடகெல்லை மீட்பு போராளி மா.போ.சிவஞானம்:
பெரியார்: தாய்ப்பாலை -தமிழை- எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு அது எதற்குப் பயன்படுகிறது?
ம.பொ.சி: தமிழ்மொழியோடு ஆங்கிலத்தையும் பயில வேண்டும், அதுவே பயிற்சி மொழியாக இருக்க வேண்டும் என்பதல்ல பெரியார் கட்சி. "தமிழைப் படிக்க வேண்டாம்; ஆங்கிலம் படித்தாலே போதும். அதுவே வீட்டு மொழியாக- நாட்டு மொழியாக இருக்கலாம்" என்பது தான். இது "பரங்கி மொழிப் பைத்தியம்" அல்லாமல் வேறு எதுவோ? ஆனால் பெரியார் இன்றளவும் வீட்டில் கன்னடமும் நாட்டில் தமிழும் பேசித்தான் நடமாடுகிறார். ஆங்கிலத்தில் பேசுவதில்லையே!
இப்படி தமிழர் தலைவர்களை புரக்கணித்து, எதிர்த்து தமிழியத்தை விழுங்கி திராவிட கருத்தியலை திணித்தார்.
தமிழர் இன அடையாள ஒழிப்பு
தமிழ் ஆட்சி மொழியாவதற்கு எதிர்ப்பு
தமிழ் எல்லை மீட்புக்கு மறுப்பு
என தமிழினத்திற்கு சொல்லொனா துரோகம் செய்தவர் தான் ஈ.வே.ராமசாமி.
இன்றைய தமிழரின் இழிநிலைக்கும், மரபு வளங்கள் இழந்த நிலைக்கும், தமிழ் அழிந்து வரும் நிலைக்கும், தமிழர் உரிமை இழப்பிற்கும், அயலார் ஆட்சிக்கும் காரணமானவர் தான் ஈ.வே.ராமசாமி.
அயலார்கள் தமிழர் மேல் எளிதாக அதிகாரத்தை செலுத்தவும், தமிழர்கள் மேல் விமர்சனங்கள் வைக்கவும், தமிழர் நாட்டில் அழிவு திட்டங்களை திணிக்கவும், மண்ணின் மைந்தர்கள் தாய் மண்ணை ஆள்வதை இனவாதம் என்று கருத்தாக்கம் செய்யவும், வழிவகுத்தவர் தான் இந்த ஈ.வே.ராமசாமி.
இவரின் முகத்திரையை பயன்படுத்தி தமிழர் விரோத அரசியல் நடத்தவே இவர் உதவுகிறார் என்பதை தாண்டி தமிழர்களுக்கு ஈள்ளளவும் பயனில்லை என்பதை தமிழர் இனம் உணர தொடங்கிய காலம் இது.
தமிழியத்தால் வஞ்சனைகளையும் பகைகளையும் வென்றெடுப்போம். நாளை பறக்கும் தமிழ் கொடி மீது உறுதி. அமைய போகும் தமிழர் நாட்டின் மீது உறுதி. திழைக்கப் போகும் தமிழர் நல்லாட்சி மீது உறுதி.

நன்றி

https://m.facebook.com/745804385461175/photos/a.755752121133068.1073741829.745804385461175/1212978348743774/?type=3__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
RE: திருக்குறளை, தமிழை போற்றுபவன் எப்படி ஈ.வெ.ராமசாமி நாயக்கரை மதிக்க இயலும்
Permalink  
 


திருக்குறள் ஒரு கெட்ட நாற்றம் – தந்தை பெரியார்

March 19, 2013

வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் பெரியார் 

முட்டாள்தனம் 

இந்த அதிசயக் காலத்தில் எனது தாய்மொழி, எனது தாய்நாடு இதற்காக எனது உயிரை விடுவேன் என்று முட்டாள்தனமாகப் பிடிவாதம் பிடித்தால், நாம் எப்போது முன்னேறுவது? உலகம் நாளுக்கு நாள் நமக்கு நெருக்கமாக வந்து கொண்டிருப்பதை எண்ணிப்பார்க்க வேண்டாமா?- ‘விடுதலை’(14.11.1972)யில் பெரியார்

ஹிந்தி இருக்கட்டும்

இந்தி வேண்டவே வேண்டாம் என்பதல்ல எங்கள் கொள்கை. அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது என்று நாங்கள் சொல்லுகிறோ ம். சில காரியத்திற்காக இந்தியைக் கட்டாயமாக்க வேண்டுமா னாலும் கட்டாயமாக்குங்கள். ஆனால் குழந்தைகளுக்கு வேண் டாம். பெரியவர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு வேண்டுமா னால் இருக்கட்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.- ‘விடுத லை’(07.10.1948)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ஒரு புளுகு 

….அந்தக் கண்ணகியைப் புகழ்வதும், தமிழச்சிக்கு உதாரணம் காட்டுவதும் தமிழர் சமுதாயத்துக்கு எவ்வளவு இழுக்கு தெரியுமா ? … இந்த சிலப்பதிகாரம் போல் வேறு அழுக்கு மூட்டை இலக்கி யம் இல்லவே இல்லை. இது ஒரு கற்பனைக் கதை. கண்ணகியும் ஒரு கற்பனை பெண் பிள்ளை. நூல் முழுதும் மடத்தனம். புளுகு. இப்படியா தமிழனுடைய வாழ்க்கைக்கு உதாரணம் காட்டுவது? – விடுதலை (28.3.60)யில் பெரியார்

சிலப்பதிகாரம் ‘தேவடியாள்’ மாதிரி 

இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், பாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக – அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப் பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய்கொண்டும், வளையல் அணிந்து மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப் படுகின்றதோ அது போலத்தான் இந்த சிலப்பதிகாரமும் ஆகும்.- விடுதலை (28.7.51)யில் பெரியார்

முக்கொலை 

போதாக்குறைக்கு ‘பெரியார் கல்லூரியில் படித்தவர்கள்’ என்றும் ‘நாங்கள் பகுத்தறிவுவாதிகள்’ என்றும் சொல்லிக் கொள்ளும் இன்றைய மந்திரிகள், ‘தமிழுக்கு, தமிழ் மொழிக்கு கேடு வந்தால் நாங்கள் பதவியை விட்டு வெளியேறிவிடுவோம்’ என்று சொல்கி றார்கள் என்றால் இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது? என்ன பெரியார் வாசனை இருக்கிறது? உயர்தர படிப்புகளை யெல்லாம் கல்லூரியிலும் கூட தமிழிலேயே ஆக்குகிறோம் என்றால், மக்களை முட்டாளாக்கு கிறோம் என்றுதானே பொருள்? இப்படி யான நிலை ஏற்பட்டால் இது முக்கொலை என்றுதானே ஆகும்? தமிழ் மொழியும் கெட்டு, பாட விஷயமும் பொருளும் கெட்டு, ஆங்கிலமும் கெடும்படி ஆவதால் இது மூன்று கொலை செய்த தாகத்தானே முடியும்? இதுதானா இந்தச் சிப்பாய்கள் வேலை? – விடுதலை (5.4.67)யில் பெரியார்

தமிழ் ஒன்றுக்கும் பயன்படாது 

தமிழ் படித்தால் பிச்சைகூட கிடைக்காது. தமிழ் படித்து பிச்சை எடுப்பதைத் தவிர வேறு உயிர் வாழ ஒன்றுக்கும் பயன்படவில் லை என்பதோடு, அதற்காகச் செலவு செய்த காலத்தை வேறு துறையில் செலவிட்டால், வாழ்வில் பயன் ஏற்பட்டிருக்கும் என்ப தை ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் கற்ற ஓர் அனு பவப் புலவர் பாடியுள்ளார்.–தந்தை பெரியார் விடுதலை (27.11.43) யில்..

தமிழின் பெயரால் பிழைப்பு 

நமது நாட்டில் வேறு வழியில் பிழைக்க முடியாதவர்கள், தமிழின் பெயரால் பிழைக்கத் துடிக்கிறார்கள். அவர்கள் துடிதுடிப்புத்தான், ‘தமிழைக் காக்க வேண்டும்’; ‘தமிழுக்கு உழைப்பேன்’, ‘தமிழுக் காக உயிர் விடுவேன்’ என்பது போன்ற கூப்பாடுகள். இதில் மற்ற மக்கள் சிக்குண்டு ஏமாந்து போகக்கூடாது.-தந்தை பெரியார் விடு தலை (16.3.67)

தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம் .

..தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ, வளர் வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? தாய்ப்பால் சிறந்தது என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால் தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தமற்ற வள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும். தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப்பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை, காலில் நடப்பதைத் தவிர உழைப்புக்கு – காரிய த்துக்கு பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும் படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின் றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம்கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப்பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க் கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைப வர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப் பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.- தந்தை பெரியார் ‘தாய்ப் பால் பைத்தியம்’ நூலில்

பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன்? 

சாதாரணமாகப் பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள். – தந்தை பெரியார் ‘அறிவு விருந்து’ நூலில்

தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது? 

நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக் கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ்வேண்டும்.’ இதுதானா? அய் யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர் க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல் களில் எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந் த தமிழ் ‘சுவை’ அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க் கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டு பிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக் கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும்’ நூலில்

வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன? 

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழி யை ஏற்றுக் கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலி ருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கு ம் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால்பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும், யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்ப தால், பல முண்டங்கள் பலவிதமாய் பேசி முடிக்கிறதே அல்லா மல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.- தந்தை பெரியார்

பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம் 

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.- தந்தை பெரியார்

தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் 

தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான் களாக.. தமிழ்ப் புலவராகவே வெகுகாலம் இருக்க நேர்ந்துவிட்ட தால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோ டு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண் டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள் வித்துவான் கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள்வரை இன்றைக்கும் அவர் களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவ தற்கில்லாதவர்களாக ஆகிவிட்டார்கள்.

தமிழால் என்ன நன்மை? 

தமிழ் தோன்றிய 3000-4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப் பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப் படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக் கிய இலக்கியங்களினால் இதுவரை தமிழனுக்கு ஏற்படுப்படுத் தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.

தமிழ் காட்டுமிராண்டி பாஷை 

இந்தத் தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? என்று இன்று கோபி த்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர்கூட சிந்தித்துப் பேசுவதி ல்லை. ‘வாய் இருக்கிறது; எதையாவது பேசி வயிறை வளர்ப் போம்’ என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத் தையோ பற்றி சிறிதுகூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், ‘தமிழ் மொ ழி 3000-4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி’ என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாகக் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாகய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணி யாகட்டும் மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றித் தெரிந்து கொள்ள உனக்குப் புத்தியில்லாவிட்டால், நீ தமிழைப் பற்றிப் பேசும் தகுதி உடையவனவாயா?

EVR ON RESERVATION:

ந்த மதத்துக்கும், எந்த ஜாதிக்கும் சலுகை கூடாது

மதங்கள் என்பவை எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமா கவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும்படிச் செய்வதுடன், அரசியலில் –அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும். ஜாதிக்கென்றோ, மதத்தி ற்கென்றோ எவ்விதச் சலுகையோ உயர்வு, தாழ்வோ, அந்தஸ் தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலிருந்து தனிப்பட்ட முறைக ளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகிய வை கண்டிப்பாய் இருக்கக் கூடாது.- தந்தை பெரியார்__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

27.12.1972இல் ‘கலைமகள்’ இதழுக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார்:

“குறளை எடுத்துக்குங்க. நான் மட்டும் தான் குறளை கண்டிக்கிறேன்…. நான்  குறள் மாநாடு நடத்தியதாலே சிலபேர் என்னைக் கண்டிச்சாங்க. கலைஞர் கூட அதை ஒண்ணையாவது விட்டுவிடக் கூடாதான்னு கேட்டாரு. குன்றக்குடி அடிகளாரும் கேட்டுக்கிட்டாரு. இரண்டாயிரம் வருடத்துக்கு முந்தியது குறள். அதை அப்படியே இப்பவும் நாம் ஏத்துக்கணும்னா?__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

Ananthakrishnan Pakshirajan

 

சமூகநீதி என்பது சாம்பார் சாதம் அல்ல. மாட்டுக்கறி பிரியாணியும் அல்ல. சாப்பிட்டு விட்டு நான் சாதியைப் போற்றுகிறேன் அல்லது சமூகநீதியைப் போற்றுகிறேன் என்று சொல்லிக் கொண்டு அலைவதற்கு.
இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில் அது பல பரிமாணங்களைக் கொண்டது. ஒரு இடத்தின், காலகட்டத்தின் சமூகநீதி மற்றொரு இடத்தில், மற்றொரு காலகட்டத்தில் பெருத்த அநியாயமாக மாறக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டின் திராவிடக் கட்சிகள் சமூகநீதி என்று சொல்லிக் கொண்டே தமிழ் நாட்டைச் சுரண்டியிருக்கின்றன. அதன் வளங்களைக் காணாமல் போக்கியிருக்கின்றன. பகல் கொள்ளை அடித்திருக்கின்றன. கல்வியைத் தனியார் மயமாக்கி சமூகநீதியையே புரட்டிப் போட்டிருக்கின்றன. இன்றையத் தமிழ்நாட்டின் மிகக் கேடு கெட்ட திருடர்கள் சமூகநீதி என்று சொல்லிக் கொண்டு அலையும் திராவிடத் திருடர்கள்தாம்.

மக்கள் இவர்கள் வாயை அடைக்கச் செய்ய வேண்டியவை இவை.

இவர்கள் நடத்தும் கட்சியில் புதிதாகச் சேர்பவர்களில் திருமணம் ஆகாதவர்கள் கலப்புத் திருமணம் செய்து கொள்வோம் அதுவும் தங்களை விடத் தாழ்ந்த சாதி என்று கருதப்படும் சாதியிலிருந்து செய்வோம் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும். திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்குக் கலப்புத் திருமணம் செய்து கொடுப்போம் என்ற உறுதிமொழியை அளிக்க வேண்டும். எந்த ஒரே சாதி திருமணத்திற்கும் இவர்கள் செல்லக் கூடாது. மீறுபவர்களை கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்.

இரண்டாவதாக ஒரு தொகுதியில் எந்த சாதிக்களுக்குக் குறைந்த எண்ணிக்கை இருக்கிறதோ (நாடோடி சாதியைத் தவிர!) அந்தச் சாதிகளிலேயே தாழ்த்தப்பட்ட ஒரு சாதியைச் சேர்ந்தவரைத்தான் இனி வரும் தேர்தல்களில் வேட்பாளராக நிறுத்துவேன் என்று உறுதி மொழி அளிக்க வேண்டும்.

அதே போன்று கிறித்துவர்கள் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் இடத்தில் அந்தச் சமூகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களைத்தான் வேட்பாளராக நிறுத்துவோம் என்று உறுதி மொழி அளிக்க வேண்டும்.

மூன்றாவதாக கட்சியில் இடைநிலைச் சாதிகள் அல்லாதவர்கள் அல்லது இடைநிலைச் சாதிகளில் மிகவும் தாழ்த்தப்பட்டவர்களைத்தான் மாவட்ட, வட்டச் செயலாளர்கள் ஆக்குவோம் என்ற உறுதி மொழியையும் அளிக்க வேண்டும்.

இவற்றைக் கேளுங்கள். திராவிடத் திருடர்கள் காணாமல் போய்விடுவார்கள்__________________


Guru

Status: Offline
Posts: 23950
Date:
Permalink  
 

பெரியாரியர் ஒருவர் பெரியார் ஏன் ராமனைக் குறி வைத்துத் தாக்கினார் என்பது புரிகிறதா, ராமன் கடவுளின் பெயர் அன்று கலவரத்தின் பெயர் என்று எழுதியிருக்கிறார். இது பொறுக்கித்தனத்தின் உச்சம். பெரியார் கற்றுக் கொடுத்த பாடம்.

பெரியார் ஹிட்லரின் அப்பட்டமான அடியாள். அவரது சீடர்கள் ஹிட்லரின் அடியாட்களுக்கு அடியார்கள். எந்த வெட்கமும் இல்லாமல் நாசி இனவெறியையும தூக்கிப் பிடித்து இந்துக் கடவுள்களை இழிவு செய்யும் திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்கள் முழுக்க முழுக்க இந்து விரோதிகள். இவர்களோடு கூட்டு வைத்திருக்கும் காங்கிரசிற்கும் பாஜகவை விமரிசிக்க எந்த உரிமையும் கிடையாது.

காந்தி ராமன் பெயரைச் சொல்லாத நாளே கிடையாது அவர் கலவரத்தைத் தூண்டி விட்டார் என்று சொல்ல முடியுமா? பெரியார் காந்தி ஒழிய வேண்டும் என்று கடைசி வரை சொல்லிக் கொண்டிருந்தார். அவரைத்தான் கலகக்காரர் என்று பெரியாரிய நாசி வெறியர்களே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard