பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்! பெரியாரிய ஆதரவாளர்கள் பெரியாரைப் படிக்கும் தவறைச் செய்யாதவர்கள் என்பதை நான் மீண்டும் மீண்டும் ஏன் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்பது இப்போது புரியும் என்று எண்ணுகிறேன்.
தந்தை பெரியார் சிந்தையில் தமிழ்ச் சமுதாயம்! 02.03. 1969ல் பெரியார் ஒரு கட்டுரை எழுதினார். அட்சர லட்சம் பெரும் கட்டுரை. அதிலிருந்து சில வரிகள்: "ஆண்கள் இருப்பிடமாக வருவாய்க்கேற்ப லைன் - வீடுகளில் இரண்டு அறை, அல்லது மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களும் இப்படியே தான் இருக்க வேண்டும். பிள்ளைகள் பெறுவதை இரண்டுக்கு மேல் இல்லாமல் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும். பிள்ளைகளுக்குப் படிப்பு (எஸ்.எஸ்.எல்.சி) வரை சர்க்கார் கொடுத்து விடுகிறார்கள். பணம் கையில் மீதி இருக்குமானால் பாங்கியில் போட்டு விட வேண்டும். காதலனிடத்தில் காதலுக்கு ஆக பணம் பெறக் கூடாது. தமது இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த வேண்டும் ஆணை.
இந்த நிலையை 1932-ல் நான் மேல் நாடுகள் பலவற்றில் நேரில் பார்த்தேன். அதாவது பலருக்கு பாஸ்போர்ட் லவ்வர் - லவ்லேடி தான். குடும்பத்துடன் இருப்பவர்களும் உணவு விடுதியில் உணவு கொள்ளுவதையும், வாடகை அறைகளில் தனித்தனியாக வாழ்வதையும் பார்த்தேன்."
"ஆகவே, திருமணம் என்பது ஒரு பெண்ணைச் சுவாதீனமற்ற அடிமையாக்குவது மாத்திரமல்லாமல், ஓர் ஆணும் இல்லற முறைக்கு - கவலைக்கு அடிமையாகிறான், தன்னைப் பலி கொடுத்து விடுகிறான்."
"இதனால் மனித வளர்ச்சி, உலக வளர்ச்சி பெருமளவிற்குத் தடைப்பட்டு விடுகிறது. ஜீவனும், துக்க சாகரத்தில் அழுந்திக் கிடக்க நேரிடுகிறது.
நான் சொல்லுகிறேன், இந்தச் சுதந்திரத்திற்குப் பெண்கள் இசைய மாட்டார்கள். அவர்களுக்கு ஓர் எஜமான் இல்லாவிட்டால் ஆடை நழுவுவது போன்ற உணர்ச்சி இருக்கும்.
ஆனால், ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது.
ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள். ஒரு 10, 20-பேரிடையில் இப்பழக்கம் ஏற்பட்டால் இது பரவிவிடும். யாரும் தவறாகவும் கொள்ள மாட்டார்கள்."
இவர் காட்டும் உலகில் பெண்கள் "சுகம் கொடுப்பதும், சுகம் பெறுவதும்" படிப்பையும் வருவாயையும் பொறுத்திருக்கிறது! பெண்ணைப் போகப் பொருளாகவும் பணத்திற்காக (காதலுக்காக பணம் கேட்கக் கூடாது, ஆனால் குழந்தை வளர்ப்பிற்காக, பொருளாதார முன்னேற்றத்திற்காகக் கேட்கலாம்!) உடலைக் கொடுக்கும் இயந்திரமாகவும் எஜமானனை விரும்புபவளாகவும் காட்டும் இவர்தான் பெண் விடுதலைக்கு அடையாளம்!
இன்றைய தினமும் சில ஸ்தலங்களில் கலவி சுகம் கொடுக்கப் பார்ப்பனப் பெண்களும் இருந்து வருகிறார்கள். அதற்கு பார்ப்பன இளைஞர்களே தரகராக இருந்து வருகிறார்கள். சில இடங்களில் அர்ச்சகர்கள் தங்களுக்கு ஒரு மனைவியும் பக்தர்களுக்கு ஒரு மனைவியும் உடையவர்களாக இருக்கிறார்கள்….. இன்று பார்ப்பனருக்கு எது எப்படிப் போனாலும் தங்களுக்குப் பெரிய சாதி என்கிற பட்டம் அந்தஸ்து இருந்தால் போதும்; அதற்காக எந்தக் காரியத்தையும் எப்படியும் நடத்திக் கொள்ளலாம் என்பதை உயர்தருமமாகக் கொண்டிருக்கிறார்கள்" -விடுதலை தலையங்கம்- 4.3. 1969)
எழுதியது பெரியார்!
ஹிட்லரின் அடியாட்கள் கூட இந்த அளவிற்குக் கீழ்த்தரமாக யூதர்களைப் பற்றி எழுதியிருக்க மாட்டார்கள்.
பெண்களைப் போகப்பொருள்களாகக் கருதி அவர்களை விபச்சாரிகள், குச்சுக்காரிகள் என்று தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்த ஒப்பற்ற ஒரே தலைவர் பெரியாராகத்தான் இருக்க முடியும்.
முதலில் 1965 ல் அறிவிக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பற்றி பெரியார் விடுதலையில் வரிசையாக எழுதியது.👇
இன்றும் மாணவர்கள் காலித்தனம். பஸ்ஸைக் கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் (விடுதலை 26.1.1965)
அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் அத்து மீறிய வன்செயல். 2000 மாணவர்கள் ஊர்வலம். கலைந்து செல்ல கண்ணீர்ப் புகை. மாணவர்கள் கற்களை வீசினர். (விடுதலை 28.1.1965)
போலீசார் அத்து மீறியதாகக் கூறப்படுபவை அபாண்டமே. ( சனவரி 25, 26 ஆம் நாட்களில்) சட்டத்தையும், ஒழுங்கையும் பராமரிக்க அவர்கள் பாடுபட்டனர். வக்கீல் சங்கத் தீர்மானத்திற்கு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் சங்கம் கண்டனம்.
திருச்சியில் மாணவர்கள் காலித்தனம். பஸ்க்கு தீ. தபால் நிலையம் கொள்ளை. (விடுதலை 10.2.1965)
பொள்ளாட்சியில் போராட்டத்தை ராணுவம் அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர் (விடுதலை 13.2.1965)
இதையெல்லாம் விட 1965 மே மாதம் "கிளர்ச்சிக்கு தயாராவோம்" என்ற அவரது நூலில் ஒருபடி மேலே போய் எழுதுகிறார்.அது கீழே உள்ளது.👇
//இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம்… தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?
ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்”//
ஆங்கிலேயர்களால் தான் நமக்கு ரயில் கிடைத்தது, ஆங்கிலேயர்கள் நமக்கு ரயில் தடங்களை விட்டு சென்ற பின்பும் பலர் ஆங்கிலேயர்களை கரித்துக்கொட்டுவது ஏன்?
பகிர்வு 1: ரயில் தடம் ஆங்கிலேயர்கள் நமக்கு அளித்த வரப்பிரசாதம் என்று ஆங்கிலேயர்களை உயர்த்தி பேசுவது மிக சொற்பமான எண்ணிக்கையில் உள்ள சிலரிடம் உண்டு (அதனால் இந்த தலைப்பை முதலில் பார்க்கலாம்) ஆனால் அதற்கு நாம் கொடுத்த விலை என்ன என்பதை தெரிந்து கொள்ள முற்படவேண்டும்.
இது 1865ஆம் ஆண்டின் ரயில் பாதை. இதில் ரயில் தடத்திற்கும் பருத்தி விளைகின்ற இடத்திற்கும், நிலக்கரி சுரங்கம் இருக்கும் இடத்திற்கும், துறைமுகங்களுக்கும் தொடர்புள்ளதை காண முடியும்
நமது வளங்களை கொள்ளை அடிப்பதே ரயில் தடத்தின் தலையாய நோக்கம். (நிலக்கரி, பருத்தி, இரும்பு தாது etc etc) பின்னர் ராணுவ வீரர்களை இடம்மாற்றுவதற்கும் இது பயன்படுத்திக்கொள்ளப்பட்டது.
ஒரு காலத்தில் திமிங்கிலத்திடம் இருந்து எண்ணெய் தயாரித்து வந்தனர் (மின்சார காலத்திற்க்கு முன் விளக்குகளை ஏற்ற பயன்பட்டது), பின்பு இந்தியாவில் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் ஆங்கிலேயர்களால் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது, இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியில் நிலக்கரி முக்கிய பங்காற்றியது.
தனது எண்ணெய் போக்குவரத்திற்கு ஏதுவாக தற்போது பாகிஸ்தானில் உள்ள கவாடர் துறைமுகத்தையும் சீனாவில் உள்ள கஷ்கர் என்னும் இடத்தையும் இணைக்கும் திட்டமான CPEC பற்றி பலர் அறிந்ததே. அதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால், சீன வங்கிகள் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க, கட்டுமான ஒப்பந்தல் அனைத்தும் சீன நிறுவனங்கள் கை பற்ற, சீன நிறுவனங்கள், சீன ஊழியர்களை பணியமர்த்தி, பாகிஸ்தானில் உட்கட்டமைப்பு வேலைகளை செய்துவருகின்றனர். பணம் சீனாவில் இருந்து வந்து பின்னர் சீனாவிடமே செல்கிறது, ஆனால் கடன் கட்டப்போவது பாகிஸ்தான். இதற்கு பெயர் தான் நவீன காலனித்துவம். இதை விட மோசமாகவே இருந்தது இங்கிலாந்தின் காலனித்துவம்.
Concept அதே தான், இந்தியாவின் வளங்களை கொள்ளை அடிக்க, ரயில் தடம் பதிக்கப்பட்டது, கட்டுமானத்தின் ஒப்பந்தம் தனியார் இங்கிலாந்து நிறுவனங்களுக்கு இரட்டிப்பு விலையில் வழங்கப்பட்டது, (பகல் கொள்ளை என்பதை தாண்டி மிகவும் மோசனான கொள்ளை) உதாரணத்துக்கு 1கிமீ ரயில் தடம் பாதிக்க மற்ற நாடுகளில் இங்கிலாந்து 100 பவுண்ட் கட்டுமான கட்டணம் விதித்தால் இந்தியாவின் ரயில் தடத்திற்கு 200 பவுண்ட் விதித்தது. இந்த விதத்தில் இந்திய பணம் இங்கிலாந்துக்கு சென்றது.
இங்கிலாந்து முதலீட்டாளர்களை நொடித்துவிடாமல் பார்த்துக்கொள்ள, அவர்களின் முதலீட்டு பணத்திற்கு உத்தரவாதமும், மூலதனத்தின் வருமானமாக 5% வட்டியும் கொடுத்தது. ரயில் தடத்தை முடிக்க சுமார் 20 வருடங்கள் பிடித்தது. அந்த காலத்தில் வருமானம் இல்லாத காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு தவணை பணம் இந்தியாவில் இருந்தே சென்றது. இந்த விதத்திலும் இந்திய பணம் இங்கிலாந்துக்கு சென்றது.
போதாத குறைக்கு ரயில் துறை லாபகரமாக இயங்காவில்லை என்றால், வருவாய் பற்றாக்குறையும் இந்தியாவிடம் இருந்தே எடுக்கப்பட்டது. அதாவது வருமானம் ஆங்கிலேயர்களுக்கு சென்றது, இழப்பு ஏற்பட்டால் நம்முடைய பணத்தின் துணையுடன் இழப்பீடு ஈடுசெய்யப்பட்டது. (plan பிரமாதம் இல்ல??)
அடுத்ததாக, ரயில் இயக்குவது மற்றும் பராமரிப்பது போன்ற அணைத்து வேலைகளுக்கும் இங்கிலாந்து குடிமக்களே பணியமர்த்தப்பட்டனர். ஒரு சராசரி இந்தியரின் ஊதியத்தை விட பலமடங்கு ஊதியம் ஆங்கிலேயர்களுக்கு அளிக்கப்பட்டது. ஒரு ஆங்கிலேய குடிமகன் தனது சம்பளப்பணத்தின் பெரும்பகுதியை எங்கு அனுப்பிவைப்பார் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டிய அவசியம் இல்லை. இந்த விதத்திலும் இந்திய பணம் இங்கிலாந்துக்கு சென்றது.
மஹாத்மா காந்தி காலத்திலும் முதல் வகுப்பில் ஆங்கிலேயர்கள் அல்லாதோர் பயணிக்க தடை இருந்தது.
19ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவில் கூட வெள்ளையர்களுக்கென்று தனியாக (Hotel) தங்கும் விடுதி இருந்ததாம். கப்பலில் பயணிக்கும் வெள்ளையர்கள் அல்லாத மாலுமிகள் இங்கு (ஆஸ்திரேலியாவில்) தங்குவதற்கு மிகவும் சிரமப்பட்டதாக சிலர் என்னிடம் கூறியதுண்டு.
நம்மிடமும் எஃகு தொழிநுட்பமும், உற்பத்தி செய்யும் திறனும், தொழிற்ச்சாலைகளும் இருந்த போதிலும், இங்கிலாந்தில் இருந்தே எஃகு கொள்முதல் செய்யப்பட்டது. இந்த விதத்திலும் இந்திய பணம் இங்கிலாந்துக்கு சென்றது. (இந்திய எஃகு துறையை பற்றி மற்றொரு பதிவில் காணலாம்)
மெதுவாக ரயில்வே ஊழியர்களில் இந்தியர்களின் பங்கு அதிகரித்தது, பராமரிப்பு/ பழுது பார்க்கும் வேளையிலும் இந்தியர்கள் இடம்பிடித்தார்கள், மெதுவாக என்ஜினின் தொழிநுட்பங்களை கற்றறிந்து சுயமாக உள்நாட்டிலேயே என்ஜின்களை தயாரித்து வெற்றிகண்டார்கள். இதனால் வெகுண்டெழுந்த ஆங்கிலேய அரசு 1912ஆம் ஆண்டில் இந்தியர்களின் இந்த முயற்சிக்கு தடை விதித்தது. இந்தியர்கள் கற்றறிந்த கலை அடுத்த தலைமுறையினருக்கு செல்லவில்லை, விளைவு சுதந்திரத்திற்கு பிறகும் சுமார் 30 வருடங்களுக்கு நாம் என்ஜின்களுக்கு இங்கிலாந்தையே சார்ந்து இருக்க நேர்ந்தது. இந்த விதத்திலும் நமது பணம் இங்கிலாந்துக்கு சென்றது.
சுதந்திரத்திற்கு பிறகு ரயில்வே தேசியமயமாக்கப்பட்டிருந்தாலும் மஹாராஷ்டிராவில் உள்ள Yavatmal மற்றும் Acalpur இடையே உள்ள ரயிளுக்கு (ஆங்கிலேயர்கள் காலத்தில் பருத்தியை துறைமுகத்துக்கு கொண்டுசெல்லும் நோக்கில் கட்டப்பட்ட வழித்தடம்) 2016ஆம் ஆண்டு வரை இந்தியா ஆண்டு தோறும் 1 கோடி ரூபாய் கட்டணம் கட்டி வந்தது. 2016ஆம் ஆண்டில் அந்த வழித்தடம் முடிவுக்கு வந்தது.
ஆங்கிலேய காலனித்துவத்தினை ருசி பார்க்காத தாய்லாந்து நாட்டிலும் இன்று ரயில் உண்டு. ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்யாமல் இருந்திருந்தாலும் நம்மிடம் இன்று ரயில் பாதைகள் இருந்திருக்கும்.
"கிளர்ச்சிக்கு தயாராவோம்" என்ற நூலில் ஈ வெ ராமசாமி நாயக்கர் எழுதுகிறார்.அது கீழே உள்ளது.👇
//இந்தி எதிர்ப்பு என்ற பெயரால் நடத்தப்பட்டக் காலித்தனம்… தமிழ்நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்தப் பள்ளியில் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைக்கார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும் இந்தி கட்டாயம் என்று கட்டி விட்டது கண்டு எல்லா மக்களும் சிந்திக்காமல் இந்தி இந்தி என்று இல்லாத ஒன்றை இருக்கின்றதாக எண்ணிக் கொண்டு மிரள்வதா?
ஆரம்பத்தில் நான்கு காலிகளைச் சுட்டு இருந்தால் இந்த நாசவேலைகளும், இத்தனை உயிர்ச் சேதமும் உடைமைச் சேதமும் ஏற்பட்டிருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடியடி, துப்பாக்கி? எதற்கு? முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளாய்? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்”//.. இதை தான் இந்த அரசாங்கம் பயங்கரவாத இஸ்லாமிய கும்பலின் மீது ஒரு முறை காவல் துறை பிரயோகம் செய்து இருந்தால் நன்றாக இருக்கும்