தனித்தமிழ்
தனித்தமிழ் போற்றிய முதலிகளில் ஒருவர் அமரர் தேவநேயப் பாவாணர்; அவரது கீர்த்தனங்கள் சில -
தேவகுமார! உன் திருவடி சரணம்தீனதயாளம் உன் திவ்வியா பரணம்தீரென தாவரணம்.
பூமனு வாகிய புண்ணிய! சரணம்பூரண நீதியிற் பொலிந்தனை கிரணம்போற்றினேன் உன் சரணம்.
தேச மெங்கும் நலம் செய்தவா! சரணம்தீயரை மீட்கவே தெரிந்தனை மரணம்தேகமுற்றாய் விரணம்.
பாவியை மீட்டருள் பரமனே! சரணம்பக்தருக் குன்பதம் பயமறும் அரணம்பதிந்தருள் என் கரணம்.
வானவர் போற்றிடும் வலவனே! சரணம்வருந்தியெற் காகவே பரிந்தனை சரணம்வந்தருளாய் தருணம்.
யூதேயா தேச முற்ற யோக முள்ள பெத்தலேம்யூதாவின் மாகுலத்தில் ஏது நின்போல் இத்தலம்
என்னே! எனது பாக்யம் - இம்மையே
நித்திய சீவ னைமுன் நிமலனாந் தந்தை தந்தார்குற்றவூண் மாந்தி மாந்தன் குற்றுயி ரானான் ஏசுநற்றவன் தசையி ரத்தம் நன்மருந் துணவாய் நல்கச்சுத்தமா வாவி யாரும் சுகம்பெற வீசி னாரே !
மன்பல பாடை தீர்க்க தரிசன மறிவு மாயும்புன்றலைக் குழவிக் கேற்ற புருடனா யொழித்து விட்டேன்நம்புதல் விசுவா சத்தில் நனிபெரி தாக மன்னும்அன்பெனக் கில்லா விட்டால் ஆவதொன் றில்லை காணே.
--------------------------
ஏசு சாத்தானால் சோதிக்கப்பட்டது
[‘ப்ரோவ சமைய‘ என்ற மெட்டு]
ப.வனமே வாசம் வானப்பிர தேசம்
து. ப.
அணவுந் தேவேசும் ஆவியுப தேசம்உணரும் பிரகாசம் ஊழியப்பிர வேசம்(வனமே)
உ.
உண்பதில் நாற்பானாள் உபவாச மேனாள்உலகத்தே வானான் உன்னதன்பாற் போனான்தின்பொருளி லிச்சை தேவனைப் பரீட்சைதீயபேய ருச்சை தேறி யேசு ரட்சை
இதில் எல்லாமே தனித்தமிழ்ச் சொற்கள்தாமா ?