New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்


Guru

Status: Offline
Posts: 24769
Date:
நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
Permalink  
 


காங்கிரஸ்காரர்களின் பணிவான கவனத்திற்கு!
இதற்கு உங்கள் ரீயாக்சன் என்னவோ?!

இந்த நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்

சட்டத்திலே சாதியைக் காப்பாற்ற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்; அந்தப்படி செய்ததற்கு அடிப்படைக் காரணம் காந்தி. காந்தி பெயரைச் சொல்லித்தான் சாதிக்குப் பாதுகாப்பான ஏற்பாடு செய்ய முடிந்தது. எனவே, இந்த நாட்டில் காந்தி சிலை இருப்பது அவமானம் என்கிறேன். இன்று காங்கிரஸ்காரர்கள் சொல்லுகிறார்களே, “வெலிங்டன் சிலை இருக்கக் கூடாது; விக்டோரியா ராணி சிலை கூடாது; நீலன் சிலை கூடாது’ என்று; அதுபோல காந்தி சிலை எங்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்று சொல்ல எனக்கும் உரிமையுண்டு. ஒரு வெலிங்டனும், நீலனும் செய்யாத அக்கிரமத்தை எங்களுக்கு காந்தி செய்துள்ளார்.

காந்தி மனதார ஏமாற்றி, சாதியைக் காப்பாற்றப் பலமான சட்டம் செய்து கொண்டு, பார்ப்பானுக்குப் பாதுகாப்புக் கொடுத்து, நம்மை என்றும் அடிமையாக இருக்க ஏற்பாடு செய்துவிட்டுப் போய்விட்டார். நம்மவனோ நான் நாயக்கனாயிற்றே, நான் கவுண்டனாயிற்றே என்று நினைத்துக் கொண்டு சூத்திரன் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறானே தவிர, வேறு என்ன? தெரியாமல் தொட்டால், நெருப்பு சுடாமல் விடுமா? தெரியாதது போலவே இருந்து விட்டால், சூத்திரப் பட்டம் இல்லாது போய்விடுமா?

ராசகோபாலாச்சாரியார் மதுரையில் பேசும்போது, “சிலர் தீண்டாமை ஒழிய வேண்டுமென்றதைத் தப்பாகப் புரிந்து கொண்டு, சாதியே ஒழிய வேண்டுமென்கிறார்கள். காந்தி ஒருக்காலும் சாதி ஒழிய வேண்டும் என்று சொல்லவில்லை; சாதி காப்பாற்றப்பட வேண்டுமென்றார்’ என்று பேசினார். சாதி ஒழியக் கூடாது என்று சொல்லத் தைரியம் வந்துவிட்டதே, என்ன சங்கதி என்று பார்த்தால் ஒவ்வொன்றாகத் தெரிகிறது. காந்தி வருணாசிரம தர்மத்தை (சாதியை) காப்பாற்ற வேண்டும் என்று சொன்னதை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதன்படியே சாதியை அசைக்க முடியாதபடி சட்டம் செய்து விட்டார்கள். இது, காந்தி மனதாரச் செய்த துரோகம். இந்தப் பித்தலாட்டம் உங்களுக்குத் தெரியாது.

டாக்டர் அம்பேத்கர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இதில் காந்தி செய்த பித்தலாட்டங்களை நல்லபடி எடுத்துப் போட்டுள்ளார். “தீண்டாமை ஒழிப்புக்குக் காங்கிரசும் காந்தியும் செய்தது என்ன?’ என்பது அந்தப் புத்தகம்.

நான் காங்கிரசில் இருந்தபோதே சமுதாயத் துறையில் சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் என்று நிறையப் பேசியிருக்கிறேன். அப்போது காந்தி, “தீண்டப்படாதவர்களைக் கிணற்றில் தண்ணீர் எடுக்க விடாவிட்டால் வேறு தனிக் கிணறு கட்டிக் கொடு. கோவிலுக்குள் விடாவிட்டால் வேறு தனிக் கோவில் கட்டிக் கொடு’ என்றார்; பணமும் அனுப்புகிறேன் என்றார். அப்போது நாங்கள்தான் அந்த ஏற்பாட்டை எதிர்த்தோம். “கிணற்றில் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று இழிவுபடுத்தும் இழிவுக்குப் பரிகாரமில்லாவிட்டால் அவன் தண்ணீரில்லாமலே சாகட்டும்’ என்றேன்.

“அவனுக்கு இழிவு நீங்க வேண்டும் என்பது முக்கியமே தவிர, தண்ணீரல்ல’ என்றேன். கோயில் பிரவேசம் வேண்டுமென்று கூப்பாடு போட்டோம். என் கூக்குரலுக்குக் கொஞ்சம் மரியாதை உண்டு என்பது ராஜாஜிக்குத் தெரியும். கோயில்களுக்குள் தீண்டப்படாதவர்கள் என்பவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தோம். கேரளத்தில் பெரிய ரகளையாகிக் கொலையும் நடந்து விட்டது. ராஜாஜி, காந்தியிடம், “ராமசாமி பேச்சுக்கு மரியாதை உண்டு; ரகளை ஆகும். ஆதலால் கோவிலில் நுழைய விட்டுவிட வேண்டியதுதான்’ என்றார். அதற்குப் பிறகும், “சூத்திரன் போகின்ற அளவுக்குப் பஞ்சமன் போகலாம்’ என்றார்கள். நான், “சூத்திரனும் பஞ்சமனும் ஒன்றாகி, நாங்கள் இன்னும் கொஞ்சம் மட்டமானோமே தவிர, பார்ப்பான் அப்படியேதானே இருக்கிறான். சாதி ஒழிய வேண்டுமா, வேண்டாமா? என்றேன்.

அப்போதிருந்தே காந்தி, சாதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற முயற்சியில் பார்ப்பனருக்கு உடந்தையாகவே இருந்து பல மோசடிகள் செய்து, நம்மை ஏமாற்றி விட்டார். காந்திக்கு இருந்த செல்வாக்கு, நம்மைப் பார்ப்பானுக்கு அடிமையாகவும் பார்ப்பான் பார்ப்பனனாகவே இருக்கவும்தான் பயன்பட்டது. இன்னும் சாதி ஒழிப்புக்கு விரோதமாக “காந்தி சொன்னது; காந்தி மகான் காட்டிய வழி’ என்று கூறிச் சட்டத்திலும் பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.

காந்தி செய்த மோசடி மக்களுக்குத் தெரிய வேண்டும். அதனால்தான், “காந்தியின் படத்தை எரிப்போம்; எங்கள் நாட்டில் காந்தி சிலையிருப்பது கூடாது அகற்ற வேண்டும்’ என்று சொல்லுகிறோம். காந்தியின் பெயரைச் சொல்லித்தானே பிழைக்கிறோம்; காந்திக்கு மரியாதை கெட்டுவிடும் போலிருக்கிறதே என்று நினைத்து அரசாங்கத்திற்கு சாதியை ஒழிக்க உணர்ச்சி வரலாம். “ஆகா! காந்தி படத்தை எரித்தால் ரத்தக் களறி ஆகும்!’ என்கிறார்கள். ஆகட்டுமே என்ன நஷ்டம்?

(தர்மபுரியில், 19.9.1957 அன்று ஆற்றிய உரை. “விடுதலை’ 9.10.1957)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
RE: நாட்டில் காந்தி சிலைகள் இருப்பதே அவமானம் – பெரியார்
Permalink  
 


1950 சனவரி 26ம் தேதிய பலம் 1947 ஆகஸ்டு 15ம் தேதியை போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும்.அதே முதலாளிதான்,அதே பணப்பெட்டிதான்,அதே தராசுதான்,அதே படிகள்தான்,அதே சரக்குதான்,அதே பித்தலாட்டம்தான் ஆனால் விலாசம் அதாவது 'டிரான்ஸ்வர்' செய்யப்பட்டது மற்றும் மாற்றம் அடைகிறது.குடியரசு ஆட்சி என்ற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதே பலத்துடன் ,மேலும் அதே பாதுகாப்புடன் 26ம் தேதி முதற்கொண்டு நடைபெற போகிறது.

இந்த உண்மையை தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று சொல்ல கூடாது ?.உண்மையை எடுத்து சொல்ல நாம் ஏன் பயப்படவேண்டும்?.அக்கிரமத்தை எடுத்து சொல்ல நமக்கேன் அச்சம் ?

- பெரியார் (விடுதலை -20.01.1950)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

" பிரிட்டிஷ் ஸர்க்கார் திராவிடஸ்தான் கொடுக்காவிட்டால் தாமும் தமது சகாக்களும் முஸ்லீம்களாகிப் பாகிஸ்தான் கேட்கப் போவதாக திரு. ஈ.வே.ராமசாமி நாயக்கர் பயமுறுத்துகிறார்.
இந்தக் கஷ்டமெல்லாம் எதற்கு? வெள்ளைக்காரர்களாகவே மாறிவிட்டால் இந்தியா முழுவதையுமே ஆளலாமே?"
(கல்கி -1943)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

 நமக்கு இப்போது சினிமா ஒரு தொல்லையாக ஆகிவிட்டது.அதற்காக ஒரு சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு,சினிமா பார்க்காதே என்று வேண்டுகோள் பிரச்சாரம் ஆரம்பிக்க வேண்டும்.

#பெரியார் (விடுதலை / 19-7-1972)



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

கலப்புத்திருமணம் செய்தால் சாதி ஒழியாது - பெரியார்

// நம் நாட்டிலேயே எத்தனையோ தாசிகள் இருக்கிறார்கள்;நாமாவது ஒரு கலப்பு மணத்தைச் சொல்லுகிறோம்,இவர்கள் ஆயிரம் கலப்பு மணம் செய்து பிள்ளைகள் பெறுகிறார்களே..அந்த சாதிக்குள் கூட சாதி போவதில்லையே? அதிலும் பலசாதிகளாக்குகிறோம்.அவர்களும் மேல்சாதி ஆகத்தானே பார்க்கிறார்கள்?

பட்டிக்காட்டு தாசிகள் சாதி பார்த்துதான் புழங்குகிறார்கள்.இதனால் கலப்பு மணத்தால் சாதி போய்விட்டதென்று கூறமுடிகிறதா?

இப்போது நானும்தான் கலப்புமணம் செய்துள்ளேன்.தோழர் சாமி சிதம்பரனார்,தோழர் சா.குருசாமி,தோழர் எஸ்.இராமநாதன் முதலியவர்களுக்குத்தான் கலப்பு மணம் செய்து இருக்கிறார்கள்.அதனால் சாதி போய்விட்டதா? ஏதோ வசதி இருப்பதால் மக்கள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் எங்களுக்கு குழந்தைகள் இருந்து அவர்களுக்கு கலியாணம் ஆக வேண்டுமானால் அப்போது தகராறுதான்.'கலப்புச் சாதியைச் சேர்ந்தவர்கள்' என்று கூறி கலப்பு சாதியார்கள்தாம் ஒருவருக்குள் ஒருவர் செய்துகொள்ளுவார்கள்.//


#பெரியார் (22-2-1952 விடுதலை)

மலையாளிகளிலே பெரும்பாலும் பார்ப்பானுடைய தேவடியாள் மகன்தான்,அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை,திருட்டுத்தனமல்ல.அவனே பெருமைப்பட்டுக் கொள்வான்- 'நான் யார் தெரியுமா? நான் இந்த நாயர் பசங்களுக்கா பிறந்தேன் அந்த பிராமணனுக்கு பிறந்தேன்! என்பான்.காசு கொடுத்து போவான்.

இப்போது அவனுக்கும் உணர்ச்சி வந்துவிட்டது எங்களோடு சேர்ந்து பேசுகிறான்.நானும் சேர்ந்து கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறான்.தெலுங்கனும் இருக்கிறான் கன்னடியனும் வருவான்.அப்போதுதான் அடுத்தவன் வரமுடியும். #பெரியார் 19/12/1973 டி-நகர் சொற்பொழிவு



__________________


Guru

Status: Offline
Posts: 24769
Date:
Permalink  
 

பெரியார் சிந்தனைகள் :
ஆரியர்கள் யோக்கியதை என்ற கட்டுரையை அவர் 5/1/1936ல் எழுதினார். அதில் அவர் சொல்கிறார்:
"ஜெர்மானியர்கள் தம்மை ஆரியர்கள் என்று சொல்லிக்கொண்டு ஜெர்மனி தேசத்திலுள்ள யூதர்களுக்கு ஜெர்மனியில் இருக்க உரிமையில்லை என்று சொல்லி விரட்டியடித்த தன்மைபோலத்தான் இந்தியாவிலுள்ள மக்களால் ஆரியர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டிய நிலைமையில் இருக்கிறார்கள். ஜெர்மானியர்கள் யூதர்களை விரட்டியடிப்பதற்குச் சொல்லிய காரணங்கள், இந்தியர்கள் ஆரியர்களை விரட்டியடிக்கலாம் என்பதற்குப் பொருத்தமானதாகவே இருக்கின்றன என்பது கவனிக்கத்தக்கதாகும். அதாவது ஜெர்மானியர்கள் யூதர்களை விரட்டி அடித்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லுகிறார்கள்.
அவைகளில் ஒன்று, யூதர்கள் தமக்கு என்று தேசமில்லாதவர்கள் என்றும், தேசமில்லாத அதாவது ஜிப்ஸி - மலை ஜாதியார் லம்பாடிகள் - கூடாரத்தோடு திரிகிறவர்கள் போன்றவர்கள் என்றும் அப்படிப்பட்டவர்களை ஒரு நாட்டில் வாழவிட்டால் அவர்கள் அந்த நாட்டின் வளப்பத்தையும் முற்போக்கையும் காட்டிக்கொடுத்து ஜீவிக்கிறவர்களாகி விடுவார்கள் என்பது. இரண்டாவது, யூதர்கள் சரீரத்தில் பாடுபடமாட்டாதவர்கள், சரீரத்தினால் பாடுபடாதவர்கள் ஊரார் உழைப்பைக் கொள்ளை கொண்டு வாழுபவர்களாவார்கள் என்றும், ஊரார் உழைப்பால் வாழுகின்றவர்கள் மனித சமுகத்துக்கு சயரோகம் போன்ற வியாதிக்கு சமமானவர்கள் என்பதோடு தம் சோம்பேறி வாழ்க்கைக்கு ஆக நாட்டையும் மனித சமுகத்தையும் பிரிவினையிலும் கலகத்திலும் தொல்லையிலும் இழுத்து விட்டுக்கொண்டு சமாதான பங்கத்தை விளைவித்து மிக குறைந்த விலைக்கு எதையும் காட்டிக்கொடுப்பார்கள் என்பதாகும். இந்த இரண்டு காரணங்களும் இன்று நம் நாட்டில் ஆரியர்கள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனகளாதியோரிடம் இருந்து வருகின்றன. முதலாவது ஆரியர்களுக்கு இன்னதேசம் என்பதாகவே ஒன்று இல்லை என்பதோடு, ஆரியர்கள் என்பவர்கள் சரீரத்தினால் பாடுபடாமல் மதம், புரோகிதம், ஜாதி உயர்வு, அரசியல் உத்தியோகம், தேசியத் தலைமை என்கிறதான சூழ்ச்சித் தொழில்களால் சிறிதும் சரீரப்பாடுபடாமல் மற்ற ஆரியரல்லாத மக்கள் உழைப்பினாலேயே வஞ்சக ஜீவியம் நடத்துகிறவர்களாய் இருக்கிறார்கள்.
இவர்களுக்குத் தங்கள் வாழ்க்கை, தங்கள் ஆதிக்கம் என்பதல்லாமல் மற்றபடி எந்தத் தேசத்தைப் பற்றியோ, எவ்வித ஒழுக்கத்தைப் பற்றியோ, எந்தச் சமுகத்தைப் பற்றியோ சிறிதும் கவலை இல்லாதவர்களாய் இருக்கிறார்கள். இந்தக் காரணத்தாலேயே நமது பழைய ஆதாரங்கள், அகராதிகள் ஆகியவற்றில் ஆரியர்கள் என்றால் மிலேச்சர்கள் என்றும், ஒருவிதக் கழைக்கூத்தர்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன."
----------
“பிளக்கும் கொள்கை முற்றுகிறது” என்று 04.1.1947ல் குடியரசு இதழில் துணைத் தலையங்கம் ஒன்று எழுதினார் :
“பாலஸ்தீனம் அராபியர்களுக்கு சொந்தமான நாடுதான். ஆனால் இந்தியாவில் எவ்வாறு போக்கிடமில்லாத ஆரியர் குடியேறினார்களோ அதைப் போலவே வேறு போக்கிடம் இல்லாத லம்பாடிக் கூட்டம் போன்ற யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறி விட்டனர். இப்போது பாலஸ்தீனத்தில் சகல உரிமைகளையும் கேட்கின்றனர். இங்குள்ள ஆரியர்களைப் போலவே!”
“ஆரியர்களைப் போலவே யூதர்களுக்கும் சொந்த நாடில்லை. ஐரோப்பாவை விட்டுத் துரத்தப்படுகின்றனர். இங்கிலாந்திலும் இடம் இல்லை என்கின்றனர். அமெரிக்காவுக்கும் வரக்கூடாது என்கின்றனர்.”
“இந்த நாட்டு ஆரியர் நிலையும் அதுதான். இவர்களுக்கும் சொந்தநாடு என்பது கிடையாது. இவர்களை எங்கு விரட்டினாலும் அங்கே தொல்லைதான். யாரும் ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள்.”
“ஆகையால்தான் இவர்களுக்கு தனி நாட்டைப் பிரித்துக் கொடுத்து, ஆரியஸ்தான் அல்லது இந்துஸ்தான் என்ற பகுதியில் ஒதுக்கி வைத்துவிடுவது நல்லது என்று நாம் கூறுகிறோம்.”


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard