New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளை கொளுத்தச் சொன்ன பெரியார்! – ஓவியர் வேணுகோபால் சர்மா


Guru

Status: Offline
Posts: 24778
Date:
திருக்குறளை கொளுத்தச் சொன்ன பெரியார்! – ஓவியர் வேணுகோபால் சர்மா
Permalink  
 


திருக்குறளை கொளுத்தச் சொன்ன பெரியார்! – ஓவியர் வேணுகோபால் சர்மா

திருக்குறளை கொளுத்தச் சொன்ன பெரியார்!

– ஓவியர் வேணு கோபால் சர்மா

1964ஆம் ஆண்டு பாரதி தாசன் மறைந்த போது பெரியார் அவர்கள் இரங்கலும் தெரிவிக்க வில்லை. இறுதிச் சடங்கிலும் கலந்து கொள்ள வில்லை. ஆனால் பாரதிதாசன் மறைவுக்குப் பிறகு திருவள்ளுவர், பாரதிதாசனை ஒப்பிட்டு பேசத் தொடங்கினார். பாரதி தாசனை உயர்த்தியும், திருவள்ளுவரை தாழ்த்தியும் பேசியதோடு, வள்ளுவர் படமே இருக்கக் கூடாது என்று பேசி வந்தார்.

பாரதிதாசன் உயிரோடு இருந்திருந்தால் வள்ளுவரை தனக்கு எதிராக நிறுத்தும் பெரியாரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பை கட்டாயம் தெரிவித்திருப்பார்.

பெரியாரும், பாரதிதாசனும் ஒரே மேடையில் பேசிய நிகழ்வுகள் பலவுண்டு. திருக்குறளுக்கு எதிராக பெரியார் பேசிய போதெல்லாம் பாரதிதாசன் உடன்பட மறுத்தும் கூச்சலுக்கு இடையே ஓங்கியும் பேசியுமுள்ளார்.

இது குறித்து திருவள்ளுவர் படம் வரைந்து தமிழகமெங்கும் கொண்டு சேர்த்த ஓவியர் வேணு கோபால் சர்மா அவர்கள் பெரியாரின் திருக்குறள் எதிர்ப்பை தான் எழுதிய கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளார். இவர் பாரதிதாசனின் உற்ற நண்பருமாவர். அது பின்வருமாறு:

“இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த நேரம். சென்னை நகர மக்களெல்லாம் குடிபெயர்ந்து வேற்றூர்களுக்குச் சென்று கொண்டிருந்தனர். திருச்சி தேவர் ஹாலில் சுயமரியாதை மாநாடு ஒன்று நடைபெற்றது. திருவாளர்கள் செளந்தர பாண்டியன், பெரியார் ஈ.வெ.ரா., பட்டுக்கோட்டை அழகிரி சாமி, ஈழத்தடிகள், அறிஞர் அண்ணா, போன்ற பெரிய தலைவர்கள் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். பாவேந்தரும் மேடையில் இருந்தார். மற்றொரு நாற்காலி வரச்சொல்லி என்னை அழைத்து அருகில் உட்கார வைத்துக் கொண்டார். நெற்றியில் குங்குமம் அணிந்து ஆத்திகக் கோலத்துடன் அமர்ந்திருந்த என்னை எல்லோரும் ஒரே மாதிரியாகப் பார்க்கத் தொடங்கினர். யாரோ ஒரு சு.ம. தோழர் பாவேந்தரின் அருகில் வந்து “யாரிவர்?” என்று மெதுவாகக் கேட்டும் விட்டார்.

பாவேந்தர் அந்தத் தோழரைப் பார்த்து “அவரா? அவர் ஓர் உலகம்!போ!போ! என்று கூறினார். எதிர்ப்புக்கு அஞ்சாத அவர் துணிச்சலை நான் வியந்தேன். அவர் மீது நான் கொண்டிருந்த மரியாதை பன்மடங்கு உயர்ந்தது.

அப்போது பெரியார் ஈ.வெ.ரா. குடியரசில் இராமாயண ஆராய்ச்சி எழுதிக் கொண்டிருந்த நேரம். மாநாட்டு மேடையில் இராமாயணத்தைக் கடுமையாக தாக்கியதோடு கொளுத்தவும் செய்தார். இராமாயணத்தைப் போலவே குறளும் வைதீகத்தை ஆதரிப்பது என்று சொல்லி அதையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதையும் கொளுத்த வேண்டும் என்று சொன்னார். ஆனால் பாவேந்தருக்கு அக்கருத்து உடன்பாடு இல்லை. திருக்குறளின் அடிப்படையில் கழகத்தை அமைக்க வேண்டும் என்பது அவர் கருத்து.”

( வேணு கோபால் சர்மா எழுதிய “உள்ளத்தில் எழுதிய ஓவியம்” கட்டுரை. கவிஞர் முருகு சுந்தரம் தொகுத்த “பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்” நூலிலிருந்து. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிடு. )

அவரைப் போலவே , பாரதிதாசனின் மற்றொரு நண்பர் மதுரை தனுஷ்கோடி ராஜு என்பவர். இவர் மதுரையில் பாரதிதாசன் மன்றம் அமைத்து நடத்தியவர். மதுரையில் பாரதிதாசனுக்கு மணி விழா நடத்த முற்பட்டவர். அன்றைய சென்னை மாகாண முதல்வர் குமாரசாமி அவர்களிடம் பாரதிதாசனை அழைத்துச் சென்று பாராட்டு பெற்றுத் தந்தவர். அவர் எழுதிய கட்டுரை பின்வருமாறு:

“விருது நகரில் திருக்குறள் மாநாடு. பெரியார் பேசும் போது ” மற்ற புராண இதிகாசங்களைப் போலத் திருக்குறளும் மோசந்தான். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காட்டுமிராண்டிக் காலத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தக் காலத்துக்குப் பொருந்தாது. இதுவும் தமிழருக்கு ஒவ்வாத நூலே!” என்று கூறினார்.

பெரியாருக்குப் பின் பேச எழுந்த பாவேந்தர் பெரியார் பேச்சை மறுத்தார். லேசாகக் கூட்டத்தில் அதிருப்திக் குரலும் , ஆரவாரமும் எழுந்தது. பாவேந்தர் பேச்சை முடித்துக் கொண்டார். பிற்பகல் நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று கூறி இவரைத் தடுத்து நிறுத்தி விட்டோம்.”

(மதுரை தனுஷ்கோடி ராஜூ எழுதிய “நோபிள் பரிசு கிடைத்திருக்கும்” கட்டுரை. கவிஞர் முருகு சுந்தரம் தொகுத்த “பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்” நூலிலிருந்து. பாரதி தாசன் பல்கலைக்கழகம் வெளியிடு.)

பெரியார் திருக்குறளை எதிர்த்த காலத்திலேயே அதனை ஆதரித்து பாரதிதாசன் பேசியுள்ளார் என்பது வெள்ளிடை மலை. இது தெரிந்தும் பெரியார் வள்ளுவத்தை எதிர்க்க பாரதிதாசனை கேடயமாக பயன்படுத்தியதை தெரியாமல் செய்த செயலாக எண்ணத் தோன்றவில்லை.

wp-1566143475906.jpg?w=1108



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
RE: திருக்குறளை கொளுத்தச் சொன்ன பெரியார்! – ஓவியர் வேணுகோபால் சர்மா
Permalink  
 


திருக்குறள் ஒரு ஆரிய நூல்- பெரியார். வியாபாரம் செய்யும் வீரமணி!

திருக்குறள் ஒரு ஆரிய நூல்- பெரியார். வியாபாரம் செய்யும் வீரமணி!

திருக்குறளை வைத்து வியாபாரம் செய்யும் வீரமணி!

1968ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா ஆட்சியில் சனவரி முதல் நாளில் இரண்டாவது உலகத்தமிழ்மாநாடு நடத்தப்பட்டது. அப்போது திருவள்ளுவர், கம்பர் உள்ளிட்ட பத்து தமிழ்ச்சான்றோர்களின் சிலை திறக்கப்பட்டது.

அப்போது பெரியார் ” உலகத்தமிழ் மாநாடாம்! வெங்காய மாநாடாம்! இது எதற்கு? கும்பகோணம் மாமாங்கத்துக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?” (விடுதலை 15.12.1967) என்று அறிக்கை விட்டார்.

தனது எதிர்ப்பை மேலும் காட்டுவதற்காக பெரியாரால் ஒரு நூல் வெளியிடப்பட்டது. அந் நூலின் பெயர் “தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி?”. பிறகு அந்த நூலின் தலைப்பு “தமிழும் தமிழரும்” என்று மாற்றப்பட்டது.

1968 முதல் தற்போது வரை ஆறு பதிப்புகள் திராவிடர்கழகம் சார்பில் வெளி வந்துள்ளது. இன்னும் புத்தகக் கண்காட்சியில் மலிவு விலை பதிப்பாக அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“தமிழும் தமிழரும்” நூலில் பெரியார் அவர்கள் தமிழ்மொழி மீதும், தமிழினத்தின் மீதும், தமிழ்ச் சான்றோர்கள் மீதும் வன்மத்தை கக்கியிருப்பார். குறிப்பாக தொல் காப்பியர், திருவள்ளுவர், கம்பர் ஆகிய மூவரையும் மதவுணர்வுள்ள ஆரிய அடிமைகளே என்று தலைப்பு தந்து சாடியிருப்பார்.

அந்த நூலிலிருந்து சில பகுதிகள்:

முக்கியப் புலவர்களும் மத உணர்வுகள்ள ஆரிய அடிமைகளே!

இன்று தமிழ் உலகில் தமிழ்ப்புலவர்களில் இரண்டு, மூன்று தமிழ்ப்புலவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. அவர்கள் (1)தொல்காப்பியன் (2)திருவள்ளுவர் (3)கம்பர்

இம்மூவரில்,

1. தொல்காப்பியன் ஆரியக் கூலி, ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாக செய்து விட்ட மாபெரும் துரோகி.

2. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் அளவில் பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் முறையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றான்.

3. கம்பன் இன்றைய அரசியல்வாதிகள் தேச பக்தர்கள் பலர் போல் அவர் படித்த தமிழ் அறிவை தமிழர் எதிரியாகிய பார்ப்பனருக்கு ஆதரவாய் பயன்படுத்தி தமிழரை இழிவுபடுத்தி கூலி வாங்கிப் பிழைக்கும் மாபெரும் தமிழர் துரோகியே ஆவான்! முழுப் பொய்யன்! முழுப்பித்தலாட்டக்காரன்!

இம் மூவர்களும் சாதியையும் , சாதித் தொழிலையும் ஏற்றுக் கொண்டவர்கள்…

இதைப் படிக்கும் தமிழருக்கு கோபம் வருவது ஒருபுறம் இருக்கட்டும். 1949இல் பெரியார் தான் திருக்குறளுக்கு மாநாடு நடத்தினார் என்று கூறும் அதே வீரமணிதான் பெரியாரின் “தமிழும் தமிழரும்” நூலையும் அச்சடித்து வியாபாரம் செய்து வருகிறார்.

உண்மையிலேயே திராவிடர் கழகத் தலைவர் வீரமணிக்கு அறிவு நாணயமிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? 1968இல் பெரியார் பேசியது தவறு என்பதைக் ஒப்புக் கொண்டு இந்நூலை தொடர்ந்து வெளியிடுவதையும், விற்பனை செய்வதையும் நிறுத்தியிருக்க வேண்டும்.

அதை விடுத்து தொடர்ந்து வெளியிடுவதன் நோக்கம் என்ன? வீரமணிக்கு வியாபாரம் ஒன்றைத் தவிர வேறொன்றும் நோக்கம் இல்லை என்பதுதான் தெரிய வருகிறது.

திருக்குறளை ஆதரித்தும், வியாபாரம் செய்வோம். திருக்குறளை எதிர்த்தும் வியாபாரம் செய்வோம் என்பதுதான் வீரமணியின் தாரக மந்திரம்.

பெரியாரை வைத்து பிழைக்கும் இந்த வீரமணிக்குத் தான் இன்றைய மாநாட்டில் சிவப்புக் கம்பள வரவேற்பு!

வெட்கம்! வெட்கம்!

(சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் 12.8.2019இல் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதில் தி.க. வீரமணி கலந்து கொண்டு பேசினார்.)



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

v21.jpg

குவைத், ஜன. 1- திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப் பட்டிருக்க வேண்டும் என்று குவைத் திருக்குறள் மாநாட்டில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை வருமாறு:

திருக்குறளுக்கு 10 பேர் உரை எழுதினர்.

இதுவரை கிடைத்த உரைகள் மணக்குடவர், பரிப் பெருமாள், பரிதி யார், காலிங்கர், பரிமேலழகர் உரைகளே கிடைத்துள்ளன.

பரிமேலழகர் உரை பெரிதாகப் பேசப்படுகிறது.

பரிமேலழகர் வடமொழியில் புலமை மிக்கவர் ஆதலின் வடமொழி வைதிக வாடை வழிந்தோடும் வகையில் உரை எழுதப்பட்டுள்ளது.

திருக்குறளில் அறத்துப் பாலுக்கு முன்னுரையாக அவர் எழுதியதிலிருந்தே வெளிப்படையாகவே தெரிகிறது.

“அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலும் ஆம். அஃது ஒழுக்கம், வழக்கு, தண்டம் என மூவகைப்படும்“ என்று எழுதியுள்ளார். மனுதர்மம் என்பது “ஒரு குலத்துக்கொரு நீதி” சொல்வதாகும்.

இதனை மனோன்மணியம் சுந்தரனார் அவர்களே தமிழ்த் தாய் வாழ்த்தில் கூறுகிறார். “நீராருங் கடலுடுத்த” என்று தொடங்கும் சுந்தரனாரின் பாடலில் “வள்ளுவர் செய்திருக் குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி” என்றார்.

“ஸ்மிருதிகள் பதினெட்டில் மனு ஸ்மிருதிக்கு விரோதமாய் மற்ற பதினேழு ஸ்மிருதிகளும் ஒரே வாக்காய்ச் சொல்லியிருந் தாலும் அது ஒப்புக் கொள்ளத் தக்கதன்று; மனுஸ்மிருதிக்கு விரோதமான ஸ்மிருதி புகழ் அடையாது” என்று மனுதர்ம சாஸ்திரத்தின் பீடிகை கூறுகிறது.

அத்தகைய மனுதர்மம் பிறப்பின் அடிப்படையில் பேதம் பேசுகிறது.

“அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்று வதற்காக தன் முகம், தோள், தொடை, பாதம் இவைகளினின்று உண்டான பிராமண, க்ஷத்திரிய, வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உரிய உபயோகமான கருமங்களைத் தனித்தனியாய்ப் பகுத்தார்” (மனுதர்மம் அத்தியாயம் - 1  சுலோகம் - 87).

பிறப்பின் அடிப்படையில் பேதம்  கற்பிக்கும் மனுதர்மம் எங்கே?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

 

செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972) என்று கூறும் குறள் எங்கே!

“எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒக்கும்; அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்பது கிடையாது” என்று விளக்கம் கூறுகிறார் ‘இராவண காவியம்‘ புகழ் புலவர் குழந்தை.

அறத்துப்பாலில் ‘மக்கட் பேறு’ என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் ஒரு குறள்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

 

மக்கட்பேறு அல்ல பிற  (குறள் 61)

இதற்குப் பரிமேலழகர் என்ன விளக்கம் சொல்லுகிறார்? ‘அறிவறிந்த’ என்ற அதனான் ‘மக்கள்’ என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனால் புதல்வர் பேற்றினது என்று கூறப் பட்டது’ என்று பரிமேலழகர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியுமா?

திருக்குறள்  கூறும் மக்கள் பேறு என்பது ஆண் மக்க ளையே குறிக்கிறது என்று பரிமேலழகர் குறிப்பிடுவது மனு தர்ம சிந்தனையாகும்.  “பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும், யெவனத்தில் கணவன் ஆக்ஞையிலும், கணவன் இறந்த பின் பிள்ளைகள் ஆக்ஞையிலும் இருக்க வேண்டியதல்லாமல், ஸ்திரீகள் தன் சுவாதீனமாக ஒரு போதும் இருக்கக் கூடாது” (மனுதர்மம் அத்தியாயம் 5 - சுலோகம் 148) என்கிற  மனுதர்ம சிந்தனைதான் பரிமேலழகருடையது.

இந்த நிலையில் திருவள்ளுவர்க்குக் காவி சாயம் பூசுவதும், பட்டை தீட்டுவதும் எந்த நோக்கத்தில் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

திருவள்ளுவரை ஒரு சிறு ஆதிக்கக் கும்பல் ஓர் இந்துத் துவாவாதியாக சித்தரிப்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸின் குருநாதர் என்று போற்றப்படும் எம்.எஸ்.கோல்வால்கர் Bunch of Thoughts என்ற நூலை எழுதி இருக்கிறார்.

தமிழில் ‘ஞானகங்கை’  என்ற பெயரிலும் அது வெளி வந்துள்ளது. அதன் இரண்டாம் பாகம் - பக்கம் 49இல் என்ன எழுதுகிறார்?”

“திருக்குறள் சிறந்த ஹிந்துக் கருத்துக்களை தமிழ்மொழி யில் எடுத்துக் கூறும் ஹிந்து நூல்” என்று எழுதி இருக்கிறார்.

ஆண்டாள் எழுதிய திருப்பாவைப் பாடலில் வரும் ‘தீக்குறளைச் சென்றோதோம்“ என்ற வரிக்கு மறைந்த காஞ்சிபுரம் மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்?

“தீய திருக்குறளை ஓத மாட்டோம்“ என்று அவர் கூறுவதன் நோக்கம் என்ன? குறளை என்ற தமிழ்ச் சொல் லுக்கு கோட் சொல்லுதல் என்று பொருளாகும். ஆனால் திருக்குறள் என்று பொருள் கூறி குறளைச் சிறுமைப்படுத் துகிறார்.

அடுத்து வந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கூறுவதையும் கவனிக்க வேண்டும்.

“நல்ல குணம் வளர - அறத்துப்பாலில் வள்ளுவர் என்ன சொல்லி இருக்கிறாரோ, அதைச் சொல்லிக் கொடுத்தால் போதும். வேதத்தின் சாரம் அதில் உள்ளது. திருக்குறளில் பொருட்பால், காமத்துப்பால் முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. காமத்துப்பாலை இந்தக் கால சினிமாக்களே சொல்லிக் கொடுத்து விடுகின்றன” (‘தினமணி’ - 16.3.1982) என்கிறார்.

திருக்குறள்மீது இவர்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்வுக்கு இதைவிட என்ன ஆதாரம் வேண்டும்?

அறத்துப்பால் கருத்துகள் மனுதர்மம் நூலைத் தழுவி எழுதப்பட்டவை. பொருட்பாலில் உள்ள கருத்துகள் அனைத் தும் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தைத் தழுவி எழுதப் பட்டவை; காமத்துப்பால் கருத்துகள் அனைத்தும் காம சூத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்று கூறுகிறார்கள் என்றால் திருக்குறளின் மேன்மையை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்பது புலனாகவில்லையா?

திருக்குறள் தீண்டத்தகாததாம்!

1796-இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியா£ற்ற வந்த எல்லீஸ் துரையவர்கள் தமிழ் படிக்க விரும்பினார்.

அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்தி தாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.

எல்லீஸ் தனக்கு தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பார்ப்பனர் களிடம், “கந்தசாமி திருக்குறள் கொடுத் தாரென்றார்”. அதற்கு அவர்கள், “அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத் தகாதது” என்றனர். காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண் ணம்.

ஏன் இப்படி பார்ப்பனர்கள் கருதுகிறார்கள் என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ்துரை கேட்க “எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம். எங்கள் வீதிக்குள் பார்ப்பனர்கள் வந்தால் உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகி விடும் என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பார்ப்பனர்கள் வந்த வழியிலும், சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்” என்று கூறினாராம்.

உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.

1819-இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.

(“குறளும் அயோத்திதாசரும்“ என்ற தலையங்கத்தில் ‘செந்தமிழ்ச் செல்வி’ மார்ச் 2000)

வ.வே.சு. அய்யர் “The Kural or the Maxims of Thiruvalluvar (1916)” என்று ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதியிருக்கிறார்.

அதில் அவர் கூறுவது என்ன?

“திருவள்ளுவரின் தந்தை பகவன் என்ற பார்ப்பனர்; இவரது தாயார் ஆதி என்ற பறைச்சி” என்று எழுதியுள்ளார். இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன?

இவற்றைப் புரிந்து கொள்வதற்கு ஈரோட்டுக் கண்ணாடி தேவைப்படும்.

பெரியார் தமிழுக்கு என்ன செய்தார் என்று சிலர் கேள்வி கேட்கப் புறப்பட்டுள்ளனர்.

பரண் மீதும், புலவர்கள் மத்தியிலும் இருந்த திருக்குறளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றவர் பெரியார்.

முதன் முதல் திருக்குறளுக்காக 1949ஆம் ஆண்டில் சென்னையில் மாநாடு நடத்தியவரே பெரியார் தானே! (1949 ஜனவரி 15,16)  வள்ளுவர் குறள் மாநாடு” என்ற தலைப்பிட்டு அடைப்புக் குறிக்குள் “தமிழர் நெறி விளக்க மா நாடு” என்று விளக்கியிருந்தார்.

திருக்குறளை அச்சிட்டு மலிவு விலையில் மக்களிடம் பரப்பியவரும் பெரியாரே!

முதலில் 6 அணா என்று வெளியிட்டார். கொள் முதல் பார்த்ததில் 5 அணாவுக்கு விற்றாலே கட்டுப்படியாகும் என்று சொல்லி  5 அணாவுக்கு விற்பனை செய்துள்ளார் (ஆதாரம்: விடுதலை1.2.1953)

‘குடிஅரசு’ இதழ் தலையங்கத்துக்கு மேலே திருக்குறளைக் கையாண்டவரும் பெரியாரே! (13.1.1935 முதல்)

ஆரியக் கொள்கைகளை மறுக்க எழுதப்பட்ட நூல்தான் திருக்குறள் என்கிறார் பெரியார். புத்தர் செய்த வேலையைத் தான் திருக்குறளும் செய்திருக்கிறது என்கிறார்.

திருக்குறளை முஸ்லிம்கள், கிறித்தவர்கள்கூட ஆதரிப் பார்கள் என்கிறார்.

நீ யார் என்று கேட்டால் திராவிடனே - திருக்குறளனே என்று கூறுங்கள் என்கிறார் பெரியார்.

என்ன மதத்தினன் என்று கேட்£ல் ‘வள்ளுவர் மதம்‘ என்று சொல்லுங்கள். உங்கள் நெறி என்னவென்றால் “குறள் நெறி” என்று சொல்லுங்கள் என்றார்.

திருக்குறள் மாநாட்டில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

(1) ஆண்டுதோறும் வள்ளுவர் குறள் மாநாடு நடத்துவது.

(2) குறளுக்கு எளிய உரை ஒன்று காணக் குழு ஒன்று அமைத்து உரையை வெளியில் கொண்டு வருவது.

(3) அந்தக் குழுவைத் திரு.வி.க. அவர்கள் தலைமையில் அமைப்பது. இந்தக் குழுவிற்கு திருக்குறளார் வீ. முனுசாமி அவர்கள் செயலாளராகவும், நாவலர் இரா. நெடுஞ்செழியன், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார் ஆகியோர் உறுப்பினர்களாகவும் தேர்வு செய்யப் பெற்றனர்.

இவையெல்லாம் தந்தை பெரியாரால், திராவிட இயக்கத் தால் நடைபெற்ற ஆக்கப் பூர்வமான செயல்பாடுகளே!

தந்தை  பெரியாருக்குப் பிடித்த குறள்களில் மிகவும் முக்கியமானது -

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

 

மானங் கருதக் கெடும்.                      (குறள் 1028)

“பொதுத்தொண்டு செய்பவன் கால நேரம் பார்க்கக் கூடாது; மான அவமானம் பற்றியும் கவலைப்படக் கூடாது” என்று திருவள்ளுவர் கூறுவதை பல இடங்களிலும் எடுத்துப் பேசியவர் பெரியார்!

காரணம் பெரியாரின் பொது வாழ்வில் அன்றாடம் அவர் சந்தித்தவை இவை .

கல்லடி, அழுகிய முட்டை வீச்சு, செருப்பு வீச்சு - இவை பிரச்சாரத்தின்போது ஆரம்பக் கால கட்டங்களில் தந்தை பெரியார் சந்தித்தவை.

ஏச்சுப் பேச்சுகளுக்கும் குறைச்சல் இல்லை என்றாலும் அவற்றை துச்சமாகக் கருதி - பொதுத் தொண்டுக்கு நாம் கொடுக்க வேண்டிய விலை என்றே கருதினார்.

“பொது வாழ்வில் மானம் பாராதே” என்று தன் தொண்டர்களுக்கும் அறிவுரை கூறினார்.

அந்த வகையில்தான் திருவள்ளுவரின்

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

 

மானங் கருதக் கெடும்.                      (குறள் 1028)

என்ற குறளை ஏற்றிப் போற்றினார்.

தந்தை பெரியார் சுய சிந்தனையாளர் - அவர் சொன்னார் - இவர் சொன்னார் என்ற எடுத்துக்காட்டுகளைக் கூறி தன் கருத்துக்கு வலு சேர்க்கும் தன்மை அவரிடம் கிடையவே கிடையாது.

மடை திறந்த தன் கருத்துகளை அடை மழையெனக் கொட்டுவார். அதே நேரத்தில் அவற்றை ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்றும் வற்புறுத்தியவர் அல்லர்.

“என் அறிவுக்குப் பட்டதை சொல்லுகிறேன்.  உன் அறிவுக்குப் பட்டது என்றால் ஏற்றுக் கொள்வீர்! இல்லை யென்றால் தள்ளி விடுங்கள்” என்பார்.

அதைத்தான் திருவள்ளுவர்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

 

மெய்ப்பொருள் காண்பது அறிவு.   (குறள் 355)

 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

 

மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (குறள் 423)

திருவள்ளுவனாரின் இந்தக் குறள்களை தந்தை பெரியார் மிகவும் நேசித்தார் - செல்லும் இடங்களில் எல்லாம் எடுத்துக் கூறினார்.

மிக முக்கியமாகக் கவனிக்கத்தக்கது - குறள் ஆரிய எதிர்ப்பு நூல் என்று தந்தை பெரியார் சொன்னதற்குக் காரணம் உழவைப்பற்றிய குறளின் கருத்தும், மனுவின் கருத்தும் இரு வேறு தத்துவங்களின் முரண்பாடாகும்.

உழவுத் தொழில் என்பது உயிர்களை வாழ வைக்கக் கூடியது. தமிழில் வேளாண்மை என்ற சொல்லுக்கு விவசாயம் என்ற பொருள் மட்டுமல்ல  - விருந்து உபசரித்தல் என்றும் பொருள் அதனால்தான் திருவள்ளுவர் இரு குறள்பாக்களில் அதன் முதன்மைத் தன்மையைப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

உழவுக்கென்றே தனி அதிகாரமாக பத்துப் பாடல்களை ஆக்கித் தந்துள்ளார்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது

 

எழுவாரை எல்லாம் பொறுத்து    (குறள் 1032)

உழவுத் தொழில் அல்லாமல் பிற தொழில்களில் ஈடு பட்டிருப்போர் அனைவரையும் சேர்த்து, உழவர்களே தாங்க வேண்டியிருப்பதால் அவர்கள் உலகத்தார் என்று சொல்லப்படும் தேருக்கு அச்சாணி என்கிறார் திருவள்ளுவர்.

மற்றொரு குறள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்

 

தொழுதுண்டு பின் செல்பவர் (குறள் 1033) என்கிறார்.

உழவுத் தொழிலைச் செய்து உணவுப் பொருளை ஈட்டி அதனை உண்டு வாழ்பவர்களே உரிமையோடு வாழ்பவர்கள் ஆவர். மற்றவர்கள் எல்லோரும் அவ்வுழவுத் தொழில் செய்வோரைப் பின்பற்றி செல்பவர்கள் ஆவார்கள்.

உண்மை இவ்வாறு இருக்க மனுதர்மம் உழவுத் தொழில் பற்றி என்ன சொல்லுகிறது?

“பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருது கின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில், இருப்புக் கொழு நுதியுடைய கலப்பை, மண் வெட்டி, இவற்றைக் கொண்டு பூமியையும் பூமியில் வாழும் சிறிய உயிரினங்களையும் வெட்ட நேரிடுகிறதன்றோ? (மனு தர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 8)

நகத்தில் மண் படாமல் வாழ்வோர் பார்வை எத்தகையது என்பது இதன் மூலம் விளங்க வில்லையா? அந்த பயிரிடும் தொழில் இல்லையென்றால் இந்த ஆதிக்கக்காரர்கள் எதை உண்டு உயிர் வாழ்வார்கள்!

இதன் உள்நோக்கம் உழைப்பு இல்லாமல் பிழைப்பவர்கள் அதனை சாத்திர ரீதியாக பார்த்து பாதுகாக்கும் ஏற்பாடு என் பதே

திருக்குறளில் கடவுள், மதம், கோயில், ஜாதி, ஆத்மா, மோட்சம், நரகம், மறுபிறப்பு என்ற சொற்களுக்கே இட மில்லை.

அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடிய வள்ளுவனார் “வீடு” பற்றிப் பாடவில்லை.

“திருக்குறளுக்கே உரித்தான தனித்தன்மை இதுவே! ஆனால் வ.வே.சு. அய்யர் என்ன கூறுகிறார்?

திருவள்ளுவர் நான்காவதாக வீட்டுப் பேற்றைப் பற்றி தனியாக ஏதும் கூறவில்லை. மனித குலத்துக்கு ஆன்மிக உண்மைகளைப் பார்ப்பனர்களைத் தவிர வேறு எவரும் போதிக்கக் கூடாது என்ற பழங்கால வைதிக (வேத) விதிகளுக்கு திருவள்ளுவர் தம்மை உட்படுத்திக் கொண்டார் என்று இந்துக்கள் கூறுகிறார்கள்” என்று வ.வே.சு. அய்யர் கூறுவது - திருவள்ளுவர் ஒரு சூத்திரர் என்பதை சுற்றி வளைத்துக் கூறும் பார்ப்பனத் தன்மையதாகும்.

இந்த இடத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.யின் கருத்து கவனிக்கத்தக்கதாகும்.

திருக்குறளிலும் சில இடைச்செருகல்கள் நடந்திருக் கின்றன என்பது செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் கணிப்பாகும்.

அவரும் திருக்குறளுக்கு உரை எழுதியவர்தான். அறத்துப் பாலுக்கான உரை மட்டும் அவர் எழுதினார் - மற்றவற்றை முடிக்குமுன் அவர் கண் மூட நேர்ந்தது கெட்ட வாய்ப்பே!

திருக்குறள் பாயிரத்தில் முதல் மூன்று அதிகாரங்களான கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை ஆகியவை திருவள்ளுவரால் இயற்றப்பட்டவை அல்ல என்றும், அவை திருவள்ளுவர் காலத்துக்குப் பிற்காலமும், முந்தைய உரையாசிரியர்கள் காலத்துக்கு முற்காலமுமாகிய இடைக் காலப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை என்று முடிவு செய்கிறார்  வ.உ.சி.  அந்த மூன்று அதிகாரத்துக்கு ‘இடைப்பாயிரம்‘ என்று பெயர் சூட்டியுள்ளார்.

உலகில்  அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது பைபிள்  என்பார்கள். இரண்டாவது இடத்தில் இருப் பது திருக்குறளே.

நியாயமாக திருக்குறள் தேசிய நூலாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டு இருக்க வேண்டும் - கலைஞர் அவர்கள் திமுக மாநாட்டிலும், மானமிகு ஆசிரியர் கி. வீரமணி அவர் கள் திராவிடர் கழக மாநாட்டிலும் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியதுண்டு.

இன்று இல்லை என்றாலும், இந்தியாவுக்கு மட்டுமல்லாது - உலக மறையாக திருக்குறள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் வந்தே தீரும். கன்னியாகுமரியில் கடலில் திருவள்ளுவரின் 133 அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் 133 அடி உயர சிலையும், முதல் அமைச்சர் கலைஞரால் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அந்தத் திசையில் குவைத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி யும் வரலாற்றில் பதிவு பெறும் என்பதில் அய்யமில்லை. கடல் கடந்தும் தமிழ் உணர்வோடு பணியாற்றும் அருமைத் தோழர்களுக்கு நன்றி! நன்றி!! வாழ்க வள்ளுவம்!!!

இவ்வாறு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

page4_02.jpg

page3_02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

page7_05.jpgpage7_03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

page3_02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

page1_03.jpg  page2_05.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

page3_02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

page6_02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டாக்டர் தெ. ஞானசுந்தரம், எம்.ஏ., பிஎச்.டி., டிப்.(வடமொழி) தமிழ்த்துறைத் தலைவர்,

கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, சென்னை - 600 102.

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெருமக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம்  (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் சென்னை கந்தசாமி (நாயுடு) ஆடவர் கல்லூரி, தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் தெ. ஞானசுந்தரம் உரை வருமாறு:

v24.jpg

v25.jpg

இப்பெயர் மாற்றங்கள் நிகழ்வதற்குத் திருக்கோயில் ஆட்சிமுறையில் ஆரியர்கள் இடம்பெற்றமையும், ஆட்சியாளர்கள் வடமொழியை மதித்து வளர்ப்பவர்களாக இருந்தமையும் முக்கியமான காரணங்கள் எனலாம். காலப்போக்கில் பாமர மக்களிடையே வடமொழியே தெய்வத்தோடு பேசுவதற்கு ஏற்ற மொழி என்னும் தவறான எண்ணம் எப்படியோ வேர்கொண்டது. அதனால், தங்களுக்குப் புரியாத மொழியில் திருக்கோயில்களில் வழிபாடு நிகழ்த்துவதைப் பெருமையாகக் கருதினர்.

தோத்திரமும் சாத்திரமும்

சமய நூல்களில் தோத்திரங்களாக இருப்பவற்றில் நல்ல தமிழ் காணப்படுகிறது. ஆனால், சமய முடிவுகளை விளக்கும் சாத்திரங்களில்தாம் வடமொழிக் கலப்பு மிகுதியாக உள்ளது. சைவம், வைணவம் இரண்டிலும் இந்நிலையினைக் காணலாம். சைவத் திருமுறைகள் இனிய எளிய இசைத்தமிழில் அமைந்துள்ளன. ஆனால், சமய முடிவுகளைப் பேசும் பதினெண் சாத்திரங்களும் அவற்றின் உரைகளும் வடமொழிக் கலப்பு மிக்கன. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம் தேனாய்ப் பாலாய்த் தித்திக்கும் தமிழில் அமைந்திருக்க அதன் உரைகளும், விசிட்டாத்துவைத முடிவுகளைக் கூறும் சாத்திரங்களும் வடமொழி கலந்த மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ளன.

தோத்திரங்கள் நல்ல தமிழிலும் சாத்திரங்கள் வடமொழி விரவிய நடையிலும் அமைந்துள்ளமைக்குக் காரணம் உண்டு. தோத்திரங்கள் இறைவனை நினைந்து கசிந்து உருகிய உருக்கத்தைத் தெரிவிப்பன; உள்ளத்து உணர்ச்சியை வெளிப்படுத்துவன. அப்பாடல்கள் மற்றச் சமயத்தவர்களோடு வாதிடுவதற்கும் இறைவனின் தலைமைத் தன்மையினை நிலைநாட்டுவதற்கும் துணைக் கருவிகளாக அமையலாம். ஆனால், அவை அந்நோக்கத்திற்காக எழுந்தவை அல்ல, சாத்திர நூல்கள் இதற்கு முற்றிலும் மாறுபட்டவை. அவை தங்கள் சமய முடிவுகள் பிற சமய முடிவுகளினும் மேம்பட்டவை என அறிவார்ந்த திறத்தால் நிலைநாட்ட முயலுபவை.

தத்துவ உலகில் வடமொழியின் மேலாண்மை

இந்திய தத்துவ உலகின் பொதுமொழியாக வடமொழியே நெடுங்காலமாக இருந்துவந்துள்ளது. அத்துவைதம், துவைதம், விசிட்டாத்துவைதம் ஆகிய மூன்று கோட்பாடுகளும் தங்கள் கருத்துக்களை விளக்குவதற்கு முதல்நூலாகக் கொண்டது வடமொழியில் உள்ள வேதவியாசரின் பிரம்ம சூத்திரத்தைத்தான். இம் மூவகைக் கோட்பாட்டினரும் தங்கள் கருத்துக்கேற்பப் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்கம் கண்டனர், அத்துவைதப் போக்கில் ஆதிசங்கரரும், துவைதப் போக்கில் மத்வரும், விசிட்டாத்துவைதப் போக்கில் இராமானுசரும் பேருரை வரைந்தனர். இம்மூன்று கோட்பாடுகளையும் மறுத்துச் சிவாகமங்களின் துணைகொண்டு பிறிதொரு கோட்பாட்டை வலியுறுத்துவது சைவ சித்தாந்தம். வேதக் கருத்துகளை விளக்குவதற்கு கருவிகளாக அமைந்துள்ள சிக்கை, வியாகரணம், சந்தம், நிருத்தம், சோதிடம், கற்பம் முதலியவற்றைப் பற்றிய நூல்கள் வடமொழியிலேயே உள்ளன. ஆதலின் சாத்திரக் கருத்துகளை விளக்கும்போது வடமொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்துவது எளிமையாகவும் வசதியாகவும் அமைந்தது.

மேலும், சாங்கியர், புத்தர், சமணர் முதலானோரின் சமயக் கருத்துகளும் வடமொழியில் இருந்தமையால் அவர்களோடு கட்சியாடவும் அது பொதுமொழியாக இருந்தது. இக்காரணங்களால் சாத்திரங்களில் வடசொற்கள் மிகுந்த அளவில் கலப்பது தவிர்க்க இயலாத ஒன்றாயிற்று. பொதுமக்களுக்கு அரிய சாத்திர உண்மைகளை விளக்கும்போது வடமொழி கலந்து சொல்லும் போக்கே மேற்கொள்ளப்பட்டது. நல்ல தமிழில் உள்ள நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தை விசிட்டாத்துவைத வெளிச்சத்தில் விளக்க முற்பட்ட உரையாசிரியர்கள் வடமொழி கலந்த நடையினை மேற்கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். மற்றொரு காரணம் அவர்கள் வேதத்தில் முங்கிக் குளித்து மணலெடுத்தவர்களாய்த் திகழ்ந்தமையாகும். சிவஞான போதத்திற்கு மாபாடியம் செய்த சிவஞான முனிவரும் தமிழ் இலக்கண இலக்கியங்களில் துறைபோயவராய் இருந்தபோதிலும், தூய தமிழில் உரை வரையாமல் வடசொற்களைத் தற்சம விதிப்படி தமிழாக்கி வழங்குவதனைக் காணலாம்.

சமயக் கணக்கர்கள் தங்கள் கொள்கைகளை நிலைநாட்டுவதில் முனைந்து நின்றார்களே தவிர, மொழித் தூய்மையில் கருத்துச் செலுத்தினார்கள் அல்லர். இதனால் இலக்கியங்களிலும் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ள நல்ல தமிழ்ச் சொற்களையும் கூட விடுத்து வடசொற்களைப் பயன்படுத்தினர். இதனைக் கீழ்வரும் சான்றுகள் வலியுறுத்தும்.

தொடரும்..



__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

"திருக்குறளை மலம் என்று விமர்சித்தாரா பெரியார்?... 'துக்ளக்கின்' கோணல் பார்வை...." என்கிற தலைப்பில் 30 மற்றும் 31-05-19 ஆகிய இரு நாட்கள் விடுதலையில் நீண்ட கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன...
மயிலாடுதுறை கி.தளபதிராஜ் என்பவரால் எழுதப்பட்டிருந்தது. கட்டுரையிலிருந்து சிறு பகுதி... "நடைபெற்று முடிந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி தமிழ் 'இந்து' பத்திரிக்கைக்கு ஒரு பேட்டியளித்துள்ளார். "தமிழையும், தமிழர்களையும் காட்டு மிராண்டிகள். திருக்குறள் மலம் என்றெல்லாம் விமர்சித்தவர் பெரியார். எனவே, தமிழகத்தை பெரியார் பூமி என்பதை யாரும் ஏற்க மாட்டார்கள்" என்று பதிலளித்திருக்கிறார். பெரியார் மலம் என்று திருக்குறளை எப்பொழுதேனும், எங்கே யாயினும் விமர்சித்திருக்கிறாரா?
பெரியார் மலம் என்று எதைச் சொன்னார்? திருக்குறள் ஆரிய தர்மத்தை மனுதர்மத்தை அடியோடு கண்டிப் பதற்காகவே ஏற்பட்ட நூல் என் பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர் மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை. மக்கள் நல்வாழ்க்கைக்குக் கேடாக வந்து சேர்ந்த ஆரிய அதர்மத்தை ஒழிப் பதை நோக்கமாகக் கொண்டு, ஒரு மறுப்பு நூலாகவே திருக்குறள் எழு தப்பட்டதாகவே என்னால் கருத முடிகிறது. திருக்குறள் ஆரியக் கொள்கைகளை மறுக்க அவைகளை மடியச் செய்ய அக்கொள்கைகளில் இருந்து மக்களைத் திருப்ப எழுதப் பட்ட நூல் என்றுதான் நான் கருதுகிறேன்." என ஈவெராமசாமியின் பேச்சை மேற்கோள் காட்டிய கட்டுரையாளர், ஈவெராமசாமியின் திருக்குறள் ஆதரவு நிலையை பற்றி பேச "'விடுதலை' 17.1.1949, 1949 திருக்குறள் மாநாட்டு உரைகள், 'குடிஅரசு' 7.5.1949, 'குடிஅரசு' 8.11.1949, 'குடிஅரசு' 30.4.1949, 'குடிஅரசு' 7.5.1949, 'விடுதலை' 14.4.1949 என பல ஆதரவு தரவுகள தருகிறார்.
தொடர்ந்து, 'திருவள்ளுவரை சமதர்ம ஞானி என்றும், பொதுவுடைமை வாதி என்றும், நாத்திகர் என்றும், திருக் குறளை தமிழர்களின் நீதிநூல் என்றும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த கண்டன நூல் என்றும் பாராட்டியும், போற்றியும் மாநாடுகள் கூட்டிப் பெருமைப்படுத்திய தந்தை பெரியாரை, திருக்குறளை மலம் என்று விமர்சித்ததாக திரித்திருக்கிறார் ஆடிட்டர் குரு மூர்த்தி. கோயபல்ஸ் பிரச்சாரங்கள் தமிழ்நாட்டில் ஒரு போதும் எடுபடாது என்பதை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளே உணர்த்தி விட்டன." என கட்டுரையை நிறைவு செய்கிறார். திருக்குறள் மற்றும் வள்ளுவர் விஷயத்தில் ஆரிய குருமூர்த்தி சொன்னது உண்மையா அல்லது தி.க.வினர் சொல்வது உண்மையா, "யார் கோயபல்ஸ்" என பார்த்துவிடுவோம்.
காந்தியடிகள் சொன்னது, "ஒரே விஷயம் சார்ந்து தான் இருவேறு காலகட்டங்களில் இருவேறு கருத்துக்களை கூறியிருந்தால், கடைசியாக சொன்னதையே தன் கருத்தாக கொள்ள வேண்டும்." காந்தியடிகள் சொன்னது போல் - ஈவெராமசாமி, மாறுப்படும் தம் முரண்பட்ட கருத்துகளுக்காக அப்படி எதுவும் சொல்லி இருக்கிறாரா என தேடியபோது, அப்படி எதையுமே சொல்லவில்லை. அதனால் தான் ஈவெராவாதிகள், ஈவெராமசாமி சொன்னதில் - தங்களுக்கு சாதகமான விஷயங்களை மட்டும் எடுத்து கொண்டு, பாதகமான விஷயங்களை, ஈவெராமசாமியே சொல்லி இருந்தாலும் கூட, மறைக்கிற ஈனத்தனமான வேலையை செய்வதிலேயே குறியாய் இருக்கிறார்கள். அந்த வேலையை தான் திருவள்ளுவர் விஷயத்திலும் செய்திருக்கிறார்கள். கட்டுரையாளர் கி.தளபதிராஜ், "ஈவெராமசாமி திருக்குறள் பற்றி பல காலக்கட்டங்களிலும் சொன்னதை முழுமையாக அறியாமல் சொன்னாரா அல்லது ஈவெராமசாமி முட்டாள்தனமான முரண்பாடுகளை தெரிந்து கொண்டே தான் சொன்னாரா என நமக்கு தெரியவில்லை.
ஒரு வேளை தெரியாமல் சொல்லி இருந்தால், இந்த கட்டுரையை வாசித்தாவது நல்ல அறிவு பெறட்டும் என வாழ்த்துவோம். கட்டுரையாளர் '1949ம் ஆண்டில் ஈவெராமசாமி சொன்னதை மட்டும் ஆதாரமாக காட்டுகிறார். அதற்கு முன்போ, பின்போ திருக்குறளை பற்றி பேசவில்லையா? பேசி இருக்கிறார். ஆனால் அந்த பேச்சுகளை எல்லாம் தி.க.காரனால் பேச முடியாது. அவை திருக்குறளை பழித்து பேசியவை. 1949ம் ஆண்டு முழுக்க திருக்குறளுக்கு ஆதரவாக பேசிய ஈவெராமசாமி, ஒரு ஆறு மாதம் கழித்து - அதாவது 1950ம் ஆண்டு என்ன பேசினார் என பார்ப்போம். ஈவெராமசாமியின் யோக்கியதை என்னவென்று தெரியும். "குறளை மலம்" என்று சொன்னாரா, கோயபல்ஸ் யார் என புரியும்.
"வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..?” என்று பதில் கூறுவேன். - ஈவெராமசாமி, விடுதலை (1.6.50) இதற்கு என்னய்யா அர்த்தம் கி.தளபதிராஜ். ஒரு ஆறு மாதங்களுக்குள் ஈவெராமசாமிக்கு தான் திருக்குறள் பற்றி என்ன ஒரு பெரிய மாற்றம். ஆறு மாதங்களுக்கு முன் ஈவெராமசாமி, திருக்குறளை சரியாக முகர்ந்து பார்க்கவில்லை போலும். அதனால் மல வாடை தெரியவில்லையோ. ஈவெராமசாமி முதல் முதலாக 1929ல் திருக்குறள் என்ன கருத்து சொன்னார் என பார்ப்போம். கால வரிசைப்படி ஒரு விஷயத்தை அலசி ஆராய்கிறோம்.
ஆரம்பத்தில் ஒன்றை விமர்சித்து, பிறகு அதை ஏற்பதில் தவறொன்றும் இல்லை. காரணம் அந்த மாற்றம், நம் அறிவு பக்குவபடுவதால் நிகழ்வது. ஆனால் அதுவே, நேர்மையற்று, தன் கருத்துகளை திரும்ப, திரும்ப மாற்றி கொண்டே இருந்தால் - அதை பக்குவபடல் என சொல்லமாட்டோம். பித்தலாட்டம், அயோக்கியதனம் என சொல்ல மாட்டோம். 1929ல் ஈவெராமசாமி திருக்குறளை பற்றி கூறியது. "திருவள்ளுவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு
புறச்சான்றுகளையும் விட்டு விட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப்பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு
ஆதாரமானதாய்க் காணப்படவில்லை. அவரது குறளில் இந்திரன், பிரம்மா,விஷ்ணு முதலிய தெய்வங்களையும் மறுபிறப்பு, செர்க்கம், நரகம், மேல்லோகம், பிதுர்,தேவர்கள் முதலிய ஆரியமத சம்பிரதாயங்களையும் மூடநம்பிக்கையையும் கொண்ட விஷயங்களையும் பார்க்கலாம்.''
"எனவே, இவற்றைக் கொண்டு திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர் தற்காலப் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள், புராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு,
பார்ப்பனீயம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும்
தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதயவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச்
சமயத்தவர் என்றும், உள்ளூக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்துகொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளூம் இப்போதைய
சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார். - ஜனவரி 20, 1929 குடியரசு ' இதழில் ஈவெராமசாமி 'சித்திரபுத்திரன்' என்னும் புனை
பெயரில் எழுதிய கட்டுரை.
திருக்குறளை பற்றி இத்தகைய கருத்து தெரிவித்த ஈவெராமசாமி தான், "திருக்குறளுக்கு மாநாடு நடத்தும் அளவுக்கு பின்னாளில் புத்தி தேர்ச்சி அடைந்தார்" என்பது பாராட்டுக்குரியது. ஆனால் திருக்குறளுக்கு மாநாடு நடத்திய மறுவருஷமே, திருக்குறளை 'மலத்தோடு' ஒப்பிட்டார், அவர் அறிவில் பழுது இருப்பதாக தானே அர்த்தம். ஒருவனுக்கு பார்வை குறைபாடு இருந்தால், நல்ல மருந்துவரை அணுகி, கண்ணை நன்றாக பரிசோதித்து மருத்துவர் கூறும் கண்ணாடியை தான் அணிய வேண்டுமே தவிர, எவனோ சிபாரிசு செய்தான் என்பதற்காக "ஈரோடு கண்ணாடியை" அணிந்தோமேயானால், கி.தளபதிராஜை போல் இருக்கிற பார்வையையும் தொலைத்துவிட்டு தான் எழுதுவோம்.
ஈவெராமசாமி தம் இறுதி காலங்களில், திருக்குறள் குறித்து என்ன மாதிரியான கருத்தை கொண்டிருந்தார்? "மலம்" என்று சொன்னவர் தம் நிலையை மாற்றி கொண்டாரா அல்லது பழைய மாதிரி அறிவு பழுதுபட்டு போய் பேசினாரா என பார்த்தோமேயானால், தி.க.காரன் எவ்வளவு பெரிய, "கோயபல்ஸ்" என்பது தெரியும். "நான் பாரதிதாசனைப் பற்றிப் புரிந்து கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்லவேண்டும். அப்படிப் புரிந்து கொண்டிருந்தார்களானால் வள்ளுவன் படத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அதாவது வள்ளுவன் படம் உள்ள இடங்களிலெல்லாம் பாரதிதாசன் படத்தை வைத்திருப்பார்கள்; வைக்க வேண்டும். எதற்காக வள்ளுவன் படத்தை வைக்க வேண்டுமென்று கருதி வைத்திருக்கின்றார்களோ அதைவிட புதுமையான, புரட்சியான கருத்துக்களை, மக்களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.
அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு - சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. - ஈவெராமசாமி- விடுதலை' 22.4.1970. குறளை மலத்தோடு ஒப்பிட்டது போதாது என்று, வள்ளுவர் படத்தையும் குப்பை தொட்டியில் எறிய சொல்கிறார் ஈவெராமசாமி. இது தான் ஈவெராமசாமியின் அறிவின் யோக்கியதை. ஒரு மனிதனின் படைப்புகளை விமர்சிப்பது என்பது வேறு. அவன் குப்பை தொட்டியில் எறி என சொல்வது வேறு. "குப்பை தொட்டியில் எறி" என சொல்வதில் அறிவு வெளிப்படவில்லை. கடைந்தெடுத்த வன்மம் தான் வெளிப்படுகிறது. இத்தகைய யோக்கியதை ஈவெராமசாமிக்கு ஒருவன் வக்காலத்து வாங்கினால், அவன் ஈவெராமசாமிக்கு மேலான பித்தலாட்டக்காரனாக இருப்பான்.
ஈவெராமசாமியின் குறள் ஆதரவு யோக்கியதையை பார்த்தோம். இனி ஈவெராவாதிகளின் குறள் ஆதரவு யோக்கியதை எத்தகையது என பார்ப்போம். முன்னாள் தொல் பொருள் ஆய்வுத்துறை இயக்குநர் நாகசாமி என்பவர், "திருக்குறள் மனுதர்மத்தின் சாரம் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் நூல் ஒன்றை வெளியிட்டுவிட்டார் என கி.வீரமணி, நாகசாமியை விரட்டி விரட்டி கண்டனக்கூட்டம் போட்டார். 1929ல் ஈவெராமசாமி திருக்குறள் குறித்து சொன்னதை தான் நாகசாமி திரும்ப சொல்கிறார். 2015ம் ஆண்டு ஒரு அறிவிப்பு வந்தது.
தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத்திடமிருந்து. "காலத்திற்கு பொருந்தாத பிற்போக்குதனமான நூல் திருக்குறள் . ஆகையால் அதை உலகப்பொதுமறையாக ஏற்று கொள்ள முடியாது, விவாதத்திற்கும் தயார், சீமானுக்கு தமிழ்நாடு தவஹீத்ஜமாஅத் சவால்..." என.
நாகசாமி விஷயத்தில் பொங்கிய கி.வீரமணி, பிணமாய் காட்சியளித்தார் தமிழ்நாடு தவஹீத்ஜமாஅத் விஷயத்தில். இது தான் ஈவெராவாதிகளின் திருக்குறள் ஆதரவு யோக்கியதை. திராவிடனின் அரைவேக்காடு அறிவு, ஆரியனிடம் வேண்டுமானால் செல்லும்படியாகுமே ஒழிய, தமிழர்களிடம் அவன் அறிவு, "மதிப்பிழந்த செல்லாக்காசு".


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஈவெராமசாமியின் முட்டாள்தனமான முரண்பாடுகள்/////
"உண்மையாகவே உணர்ச்சியுடன் திருவள்ளுவர் படத்தைத் திறந்து வைப்பதாயிருந்தால், முதலில் கம்பனுடைய படம் ஒன்றைக் கொளுத்திச் சாம்பலாக்கிவிட்டு, பிறகுதான் திருவள்ளுவரைப் பற்றிப் பேசத் துவங்க வேண்டும். திருவள்ளுவருடைய கொள்கைகளையும், அவருடைய பாட்டின் அருமையையும், அவற்றால் திராவிட நாடு பெற்றிருக்க வேண்டிய பலனையும் கம்பனது ராமாயணம் அடியோடு கெடுத்துவிட்டது. பார்ப்பன சூழ்ச்சிக்குப் பலியான கம்பனால், இந்நாட்டில் நிலவியிருந்த திராவிடக் கலாச்சாரமே பாழாக்கப்பட்டுப் போய்விட்டது. ஆரியப் பண்புகளையும், ஆரிய நடைமுறைகளையும் போற்றிப் புகழ்ந்து, அவற்றை திராவிட மக்கள் ஏற்கும்படி அழகுறத் தமிழில் பாடி மக்களை ஏய்த்து விட்டான் கம்பன். - 13.11.1948 - குடி அரசு.
ஈவெராமசாமி என்ன சொல்கிறார் என்றால், "திருவள்ளுவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையை கம்பன் எடுத்து கொண்டான். கம்பனை படத்தை எரித்து சாம்பலாக்கிவிட்டு, வள்ளுவர் படத்தை திறந்து வைக்க வேண்டும்." என்கிறார். ஈவெராமசாமிக்கு எரிப்பதில், உடைப்பதில் அலாதி சந்தோசம். கேட்டால் "கலகக்காரன் அப்படி தான் இருப்பான்" என்பார்கள். இந்த கலகக்காரனின் யோக்கியதையை முழுமையாக வாசித்தால் "இவன் கலகக்காரனல்ல... பைத்தியக்காரன்" என பிடிபடும். கம்பனின் படத்தை எரித்துவிட்டு, எந்த வள்ளுவனின் படத்தை வைக்க வேண்டும் என ஈவெராமசாமி சொன்னாரோ, அதே வாயால், "வள்ளுவனின் படத்தை குப்பையில் எறிந்துவிட்டு பாரதிதாசன் பாடத்தை வைக்க வேண்டும்" என்கிறார்.
"நான் பாரதிதாசனைப் பற்றிப் புரிந்து கொண்ட அளவுக்கு மற்றவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப் புரிந்து கொண்டிருந்தார்களானால் வள்ளுவன் படத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு அதாவது வள்ளுவன் படம் உள்ள இடங்களிலெல்லாம் பாரதிதாசன் படத்தை வைத்திருப்பார்கள்; வைக்க வேண்டும். எதற்காக வள்ளுவன் படத்தை வைக்க வேண்டுமென்று கருதி வைத்திருக்கின்றார்களோ அதைவிட புதுமையான, புரட்சியான கருத்துக்களை, மக் களை பகுத்தறிவுவாதிகளாக்கக் கூடிய கவி தைகளை எழுதியவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத் துச் செல்வதாகவும், முற்போக்கு - சமுதாயத்திற்கு ஏற்றதாகவும் அவரது கவிதைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. - விடுதலை' 22.4.1970"
குறளை விமர்சிப்பதற்கும், வள்ளுவர் படத்தையே குப்பையில் தூக்கி எறிய வேண்டும் என சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது. முன்னது கருத்தை சொல்கிறது என்றால், பின்னது வன்மத்தை சொல்கிறது. அப்படி என்னய்யா தவறாய் எழுதினான் எங்கள் வள்ளுவர். "உலகிலேயே வன்முறை செய்" என தூண்டாத ஒரே மறை திருக்குறள். உலகின் எந்த மத வேதப்புத்தகமும், வன்முறையை புகட்டாமல் நிறைவடையவில்லை. வள்ளுவன் சொன்னதெல்லாம் "நல்வாழ்க்கை வாழுவது பற்றி மட்டுமே. ஒழுக்கத்தை போதிக்கின்ற எதுவும் ஈவெராமசாமிக்கு அடிமைதனத்தை வைப்பதாகுமே. அதனால் வள்ளுவனை எதிர்க்கிறார். கேட்டால் பெண்ணடிமைதனத்தை புகட்டுகிறது என்பார். அவன் வாழ்ந்த காலத்திலிருந்த நடைமுறையை அவன் எழுதி இருக்கிறானேயன்றி, ஈவெராமசாமியை போல், திருமணத்தையே தடை செய்ய வேண்டும் என சொல்லி, மணியம்மை எனும் சிறு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து சொல்லுக்கும், செயலுக்கும் சம்பந்தமில்லாது ஈவெராமசாமியை போல், அசிங்கமான வாழ்க்கை வாழவில்லையே வள்ளுவன்.
கம்பனின் படத்தை எரித்து சாம்பலாக்கிவிட்டு, வள்ளுவர் படத்தை வைக்க சொன்ன ஈவெராமசாமி, அதே வள்ளுவர் படத்தை குப்பையில் தூக்கி எறிய சொல்லிவிட்டு பாரதிதாசனின் படத்தை மாட்ட சொல்கிறார். இது தான் ஈவெராமசாமியின் இலக்கிய தமிழ் குறித்த அறிவு. வெட்கக்கேடான பரிணாம வளர்ச்சி. சரி - பாரதிதாசனின் கவி திறமையை, சமூக விழிப்புணர்வு பாடல்களை எப்போதும் மதிப்பில் வைத்திருந்தாரா என்றால் அதுவும் கிடையாது. ஈவெராமசாமியால் கம்பனுக்கு விழுந்த அடி, திருவள்ளுவருக்கு நேர்ந்த அவமானம், பாரதிதாசனுக்கும் ஈவெராமசாமியால் அருளப்பட்டது. எதையும் மாற்றி மாற்றி ஈவெராமசாமியின் யோக்கியதை என்னாவது.
ஒரு சமயம், அண்ணாதுரை, பாரதிதாசனை சிறப்பிக்க வேண்டி தம் நண்பர்கள் முல்லை முத்தையா, டி.என். இராமன் முதலானோரின் ஓத்துழைப்புடன் பாரதிதாசனுக்கென ரூ. 25,000 ரூபாய் திரட்டினார்கள். 28.07.1946 ஆம் ஆண்டு ஞாயிறு அன்று நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் தலைமையில் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்
பாரதிதாசனுக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. தமிழர்களுக்கெல்லாம் அன்று ஒரே சந்தோஷம். தமிழ் கவிஞன் பாரதிதாசனை பெருமைபடுத்துகிறோம்ம் என்பதற்காக. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ஒருவர் மட்டும் எரிச்சல் பட்டார். யார் அது. உலக தமிழர்களின் பொதுமறை திருக்குறளையே, காட்டுமிராண்டி புத்தியுடன் மலத்துடன் ஒப்பிட்ட ஈவெராமசாமியே தான்.
எரிச்சல்பட்டு ஈவெராமசாமி கூறியது. ‘‘பாரதிதாசனுக்கு என்ன வந்தது? இரண்டு பாட்டுப் பாடிவிட்டால் ஒரு புலவர். அவருக்கெல்லாம் பண முடிப்பு. இதற்கெல்லாம் அண்ணாத்துரையின் முயற்சி''...
(ம.வெங்கடேசன் - பெரியாரின் மறுபக்கம் – அத்தியாயம் 4) ஒரு கவிஞனுக்கு பொருளாதாரரீதியாக உதவி செய்வது ஏன். வறுமையின் காரணமாக, அவனின் படைப்பாற்றல் சோர்ந்துவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய பணமுடிப்பு. இதிலும் குறை கண்டுவிட்டார் ஈவெராமசாமி. அவர் உழைத்த பணத்திலா இயக்கம் நடத்தினார். நன்கொடை திரட்டி தானே. அதையே பாரதிதாசனுக்கு செய்யும்போது கசக்கிறது.
ஈவெராமசாமி மட்டும் வைரமுத்து காலம் வரை உயிரோடு இருந்திருந்தால், வைரமுத்துவுக்கு ஒரு கூட்டம் போட்டு, "பாரதியாரும், பாரதிதாசனும் கவிஞர்களா... ஒருவன் ஆரியத்தை தூக்கி பிடித்தான்... ஒருவன் காட்டுமிராண்டி மொழி தமிழை தூக்கி பிடித்தான்.
வைரமுத்து ஒருவர் தான் "டேக் இட் ஈஸி பாலிசி" என தமிழோடு ஆங்கிலத்தையும் தூக்கி பிடித்தார்.
அதனால் இருவரின் படைப்பையும் தூக்கி குப்பையில் எறிந்துவிட்டு, தோழரும் கவிஞருமான வைரமுத்துவையும், அவரின் பாடல்களையும் கொண்டாட வேண்டும். இரண்டாயிரம் ஆண்டில் தோன்றிய முதல் திராவிட கவிஞன் வைரமுத்து" என புளுகி கொண்டிருந்திருப்பார். இன்றைக்கு அந்த வேலையை தானே கி.வீரமணி செய்து கொண்டிருக்கிறார்.


__________________


Guru

Status: Offline
Posts: 24778
Date:
Permalink  
 

ஈவெராமசாமியை ஒழுங்காக படித்தவர்களுக்கும், அரைகுறையாய் படித்தவர்களுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. ஈவெராமசாமியை அரைகுறையாய் படித்தவர்களுக்கு மட்டுமே, அவர் 'பெரியார்'. முழுமையாக வாசித்தவர்களுக்கோ, அவர் 'ஈவெராமசாமி' மட்டுமே. ஈவெராவை ஒழுங்காகவும், முழுமையாகவும் வாசித்தவர்கள் - ஈவெராமசாமியை திருவள்ளுவரோடு ஒப்பிட்டு திருவள்ளுவரை இழிவுபடுத்தும் தவறான செயலை செய்ய மாட்டார்கள். ஈவெராவை அரைகுறையாக வாசித்து - கி.வீரமணி சொன்னதில் கொஞ்சம், சுப.வீரபாண்டியன் சொன்னதில் கொஞ்சம் என ஈவெராவை கற்றவர்கள் தான் - ஈவெராமசாமியை திருவள்ளுவருடன் ஒப்பிட்டு திருவள்ளுவரை இழிவு செய்வார்கள். அப்படி தான் 10ம் வகுப்பு தமிழ் முதல் தாளில், ஈவெராமசாமியை திருவள்ளுவருடன் ஒப்பிட்டு ஒரு வினா விடை கேட்கப்பட்டுள்ளது. கேள்வி தாளை தயார் செய்தவர்கள் - ஈவெராவையும் முழுமையாக படிக்கவில்லை. திருவள்ளுவரையும் முழுமையாக படிக்கவில்லை என்பது தான், அந்த வினாவை வாசிக்கையில் தோன்றியது.. முதலில் - தமிழ் முதல் தாளை கொஞ்சம் வாசிப்போம். "ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்னும் வள்ளுவன் வாய்மொழியை நன்குணர்ந்த பெரியார் ஒரு நாடு வளத்துடன் இருக்க வேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒத்த ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும். ஒழுக்கமென்பதும் கற்பென்பதும் பெண்களுக்கு மட்டும் என்றில்லாமல் ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவாகும் என்பது அவர் தம் கருத்து. பெரியார் சமூக முரண்களையும் மூடகருத்துகளையும் எதிர்த்தவர். தொலைநோக்கு பார்வையுடையவர் பகுத்தறிவுக்கு பொருந்தாதவற்றை அறுத்தெரிந்தவர் சமூக மாற்றத்தை விரும்பியவர்." இந்த பத்தியிலிருந்து சில வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. திருவள்ளுவரும், ஈவெராமசாமியும் எங்கெங்கெல்லாம் வேறுபடுகிறார்கள் என்கிற உண்மையை அறிந்தால், இந்த பத்தியிலுள்ள அபத்தம் புரியும். ஒழுக்கம் பற்றி பேசுகையில், எங்ஙனம் இருவரும் வேறுபடுகிறார்கள். திருவள்ளுவர் ஒழுக்கத்தை பற்றி பேசும்போது, ஒரு இடத்தில் தேவை என்றும், இன்னொரு இடத்தில் தேவை இல்லை என்றெல்லாம் பேசவில்லை. மேலும் - ஈவெராவை போல், கடவுள்களின் ஒழுக்கத்தை பற்றி மட்டும் பேசிவிட்டு, மனிதர்களுக்கான ஒழுக்கத்தை அடிமைத்தனம் என எங்கும் கூறவில்லை. ஒரு இடத்தில் ஒழுக்கத்தை உயர்வாக பேசிவிட்டு, இன்னொரு இடத்தில் ஒழுக்கத்தை ஏமாற்றுவேலை என ஈவெராமசாமி கூறியதை போல், திருவள்ளுவர் மாற்றி மாற்றி பேசியதில்லை. "ஒழுக்கம் என்னும் வார்த்தையும், எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. " என்கிறார் ஈவெராமசாம. அவர், ஒழுக்கம் என்ற வார்த்தையை அப்படி தான் கேவலமாக பயன்படுத்தி இருப்பார் போலும். கற்பு என்று வருகிறபோது, ஈவெராமசாமி கற்பை ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்று சொன்னதைவிட, கற்பு தேவை இல்லை என்கிற தொணியில் தான் ஈவெராமசாமி நிறைய பேசுகிறார். அதற்கொரு உதாரணம். "ஆண்கள் கண்டிப்பாய்த் திருமணம், வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொள்ளக் கூடாது. ஆண்கள் மாத்திரம் நன்றாகப் படித்து, வாழ்க்கைக்குப் போதுமான நல்ல வருவாயுடன் வாழ்ந்தால், அதற்கேற்றபடி பெண்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வந்து சுகம் கொடுத்து, சுகம் பெற்றுக் கொண்டு போவார்கள். - ஈவெராமசாமி- "விடுதலை" 02.03.1969" அந்தந்த நேர மூடுக்கு ஏற்றாற் போல் பேசுவது ஈவெராமசாமியின் இயல்பு. எதிலும் முரண்படாமல் பேசுவது திருவள்ளுவர் இயல்பு. அதனால் தான் துணிச்சலாக, "எப்பொருள் யார் யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பதறிவு" என்றார். தன் பகுத்தறிவு பேச்சில் 1008 ஓட்டைகள் இருந்ததால் தான் ஈவெராமசாமி இப்படி பேசினார். "என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை." இப்படி சொல்கிற நபரை பகுத்தறிவு வட்டத்தில் அடைக்க கூமுட்டைகளால் தான் முடியும். ஈவெராமசாமியின் தொலை நோக்கு பார்வை பற்றி வினா தாளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈவெராமசாமியின் தொலைநோக்கு பார்வை எவ்வளவு கேவலமானது என அறிந்து கொள்வோம். "ஈவெராமசாமியால் அறிவார்ந்த திட்டம் என ஆசிர்வதிக்கப்பட்ட பாகிஸ்தான், இன்று உலகெங்கும் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது. ஈவெராமசாமியால் 'நாசமாய் போக' என சபிக்கப்பட்ட இந்தியா, இன்று உலகெங்கும் அறிவியலாளர்களையே ஏற்றுமதி செய்கிறது". இது தான் ஈவெராமசாமி அசிங்கமான தொலை நோக்கு சிந்தனை. மூட நம்பிக்கைகளை எதிர்ப்பது, பெண்ணடிமைதனத்திற்கு குரல் கொடுப்பது போன்ற விஷயத்தில், மதத்திற்கு ஒரு நியாயம் கடைபிடிக்கிற இழிவான ஈவெராவாதிகளை நாம் பகுத்தறிவாதிகள் என ஒப்பு கொள்வதில்லை. பிறகென்ன - தமிழ் பெண்கள் தலை நிமிர்ந்தார்கள் என சொல்ல. ஈவெராமசாமி காலத்தைவிட, இன்று முக்காடு போடுகிற பெண்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது - அதை பற்றி பேசுகிற அறிவோ, துணிச்சலோ இல்லாதவன் என்ன பெண்ணியவாதி, என்ன பெரியாரியவாதி. திருவள்ளுவர் - சாதிக்கொரு நீதியோ, பணக்காரனுக்கு ஒரு நீதியோ என ஈவெராவாதிகளை போல பிரித்து சொல்லவில்லை. அதனால் திருவள்ளுவரோடு ஒப்பிட கூடாத நபரை ஒப்பிட்டு, கேள்வி தாள் தயாரித்திருக்கிறார்கள். அடுத்து ஈவெராவின் பார்வையில் திருவள்ளுவர் மதிப்பு மிக்க நபராக இருந்தாரா? அப்படி இருந்திருந்தால் கூட, திருவள்ளுவரோடு ஈவெராமசாமியை ஒப்பிட்டதை சிறிதளவேனும் சகித்து கொள்ளலாம். ஆனால் திருவள்ளுவரை, ஈவெராமசாமி - தம் பிற முரண்பாடுகளை போல போற்றியும், தூற்றியும் அல்லவா இரட்டை வேடம் போட்டார். ஈவெராமசாமி, பகுத்தறிவாதியான புதிதில் திருவள்ளுவரை கடுமையாக விமர்சித்தார் - காரணம் திருவள்ளுவர் பகுத்தறிவுகாரராய் இல்லாமல் பார்ப்பன அடிமையாய் இருந்தார் என. "திருவள்ளுவர் யாராயிருக்கலாம் என்று பார்ப்போமானால், அவர் தற்காலப் பார்ப்பனர்களை மாத்திரம் குற்றம் சொல்லிக் கொண்டு அவர்களால் கற்பிக்கப்பட்ட தெய்வங்கள், புராணங்கள் முதலியவற்றை எல்லாம் ஏற்றுக் கொண்டு, பார்ப்பனீயம் என்னும் பார்ப்பனக் கொள்கைகளை ஒரு சிறிதும் தளர்த்த மனமில்லாதவர்களாய் இருந்து கொண்டு தங்களைப் பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்றும், தாங்கள் பெரிய கல்வி கேள்வி ஆராய்ச்சி முதயவைகளில் தேர்ச்சி பெற்ற வல்லவர்கள் என்றும் சொல்லிக்கொண்டு தங்களை வெளியில் சமரச சன்மார்க்கச் சமயத்தவர் என்றும், உள்ளூக்குள் சைவ சமயம்தான் தன்னுடைய மதம் என்றும் மற்றும் இதுபோல் உள் ஒன்றும் புறமொன்றும் செய்கை ஒன்றுமாய் இருந்துகொண்டு தங்களை ஒரு பெரிய சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளூம் இப்போதைய சீர்திருத்தக்காரரைப் போல்தான் காணப்படுகிறார்" என்கிற ஈவெரா, மேலும் கூறுகிறார். "அவரைப் பற்றிக் கிடைத்திருக்கும் புராணமோ அல்லது அவரது சரித்திரக் கதையோ மிகவும் அசம்பாவிதமும் ஆபாசமானதுமாய்க் காணப்படுகின்றது. இவ்வளவு புறச்சான்றுகளையும் விட்டு விட்டு அகச்சான்று என்பதாகிய திருவள்ளுவர் குறளைப் பார்த்தாலோ, அதுவும் மயக்கத்திற்கிடமானதாக இருக்கின்றதே ஒழிய ஒரு தெளிவுக்கு ஆதாரமானதாய்க் காணப்படவில்லை. குடி அரசு – கட்டுரை – 20.01.1929" மேற்கண்டவாறு சொன்ன ஈவெராமசாமி, பிறகு திருக்குறளை பற்றி இப்படி கூறுகிறார். "திருக்குறள் ஆரிய தர்மத்தை-மனுதர்மத்தை-அடியோடு கண்டிப்பதற்காகவே ஏற்பட்ட நூல் என்பதையும் நீங்கள் உணர வேண்டும். அதுவும் மக்களுக்கு வெறும் தர்மங்களை மட்டும் உபதேசிக்க எழுதப்பட்ட நூல் என்று என்னால் கொள்ள முடியவில்லை - 1949" என்னவொரு மாற்றம் ஈவெராமசாமியிடம். திருவள்ளுவர் மீண்டுமொரு முறை வந்து பிறந்து, "முதலில் நான் எழுதிய திருக்குறள் தவறு. இது தான் சரி" என்று இன்னொரு முறை எழுதினாரா? திருவள்ளுவெரன்ன - ஈவெராமசாமியை போல் மாற்றி மாற்றி பேசவும், எழுதவும் கூடியவரா. அதே திருக்குறள் தான். ஈவெராமசாமியின் அறிவில் தான் பழுது இருந்திருக்கிறது. மீண்டும் திருக்குறளை ஆற அமர படித்து பாராட்டி இருக்கிறாராம். இந்த அறிவு - திருக்குறளை தூற்றுவதற்கு முன்பே இருந்திருக்க வேண்டாமா - ஈவெராமசாமிக்கு. அவருக்கு என்றைக்கு அந்த அறிவு இருந்தது - திருவள்ளுவர் விஷயத்தில் மட்டும் இருந்துவிட. திருக்குறளை புகழ்ந்த மறுவருஷமே ஈவெராமசாமி என்கிற வேதாளம் திரும்ப முருங்கை மரமேறியது - திருக்குறளை தூற்றி. "வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு’ என்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது..? (1.6.50)” இந்த ஈவெராமசாமியின் அறிவு எதில் சேர்த்தி. முதலில் திருக்குறளை விமர்சித்து பிறகு ஏற்றார். ஈவெராமசாமி அறிவு ட்யூப் லைட் தான். அவர் எல்லாவற்றிலும் லேட் பிக்கப் தான். ஆனால் மீண்டும் திருக்குறளை பழிப்பது என்ன அறிவு நாணயம். அப்படியெனில், திருவள்ளுவரை பாராட்டி திருக்குறள் விழா நடத்தியது ஈவெராமசாமி கனவில் நடந்ததா? எதையும் ஒழுங்காக வாசிக்காமல் மேதாவிதனமாக பேச வேண்டியது. ஈவெராமசாமி, ஒவ்வொரு முறையும் திருக்குறளை தவறாக புரிந்து கொண்டு தவறாகவே விமர்சித்திருக்கிறார் என தானே அர்த்தம். ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு, "சூப்பர்" என்றோ, "பாடாவதி" என்றோ விமர்சிக்கும் ஒரு ரசிகனுக்கும், ஈவெராமசாமிக்கும் என்ன பெரிய வித்தியாசம் உள்ளது. கடைசி கடைசியாய், உலக பொதுமறை எழுதிய எங்கள் வள்ளுவரை எவ்வளவு கேவலமாய் இழிவு செய்கிறார் என்பதையும் சொல்லி விடுகிறேன். "நேற்று ஒரு பள்ளியில் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்துப் பேசும் போது, வள்ளுவன் படத்தைத் தூக்கி எறிந்து விட்டு பாரதிதாசன் படத்தை வைக்க வேண்டுமென்று சொன்னேன். -விடுதலை" -06.08.1968. ஆக, திருவள்ளுவரை தன் காலமெல்லாம் விமர்சித்த ஈவெராமசாமியை - திருவள்ளுவருடன் ஒப்பிட்டு வினா தாள் தயாரித்தது சரியல்ல என்பதே நம் கருத்து. ஈவெராமசாமி திருக்குறளை ஒழுங்காக படிக்கவில்லை என்றால், வினா தாள் தயாரித்தவர்கள் - திருவள்ளுவரை சரியாக படித்த அளவு, ஈவெராமசாமியை செம்மையாக படிக்கவில்லை என சொல்லலாம்.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard