லகான் படம் நினைவிருக்கலாம். ஆமீர்கான் நடிப்பில் 2001ல் வந்த ஹிந்தி திரைப்படம். லகான் எனப்படும் வரியை தள்ளுபடி செய்ய போட்டிவைத்துக்கொண்டு ஆங்கிலேயர் அணியுடன் நம்மவர்கள் ஆடும் கிரிக்கெட் விளையாட்டு தான் படம்.
இதில் முறையாக பயிற்சி பெற்ற கிரிக்கெட்டின் நுணுக்கங்களை முழுக்க அறிந்து விளையாடும் ஆங்கிலேயர் அணி ஒரு பக்கம். கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாத.. நொண்டி, முடவன், கிறுக்கன் என்று கலந்தங்கட்டியாக பிடித்த பதினொருவருடன் ஆமீர்கான் அணி ஒருபக்கம்.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் Experts Vs Novices. ஒரு விஷயத்தை பூரணமாக அறிந்தவர்களுடன் அரைகுறைகள் மோதுவது. கடைசியில் சினிமா இலக்கணப்படி நாயகன் அணி வெற்றி பெறுகிறது.
இப்போதும் ஒரு கண்ணுக்கு தெரியாதா லகான் போட்டி நடந்துகொண்டுதான் இருக்கிறது. இம்முறை கிரிக்கெட் இல்லை மதம்.
ஒருபுறம் இந்தியர்களை மொத்தமாக மதம் மாற்றவேண்டும் என்ற ஒரே குறியுடனும் வெறியுடனும் அமைப்பு ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அசுரபலத்துடன் இயங்கும் கிறிஸ்துவ அமைப்புகள். ஜோஷுவா ப்ராஜெக்ட் என்று இதை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகின்றனர். இது வெள்ளையர் அணி.
மறுபுறம் RSS, VHP, அர்ஜுன் சம்பத், அனுமன் சேனா என்று பெயருக்கு இரண்டு மூன்று அமைப்புகள் இந்த கிறிஸ்தவ கோலியாத்தை எதிர்கொண்டு நிற்கின்றன. கூடவே முகநூலில் முக்கிக்கொண்டிருக்கும் என் போன்ற இருநூற்று சொச்சம் பேர். இதில் RSS மட்டுமே கொஞ்சம் வலுவான அமைப்பு என்றாலும் அவர்களின் முழுநேர பணி இது மட்டுமே இல்லை. இது ஆமீர்கானின் அணி.
பஸ் ஸ்டாண்டில் பிட் நோட்டிஸ், எழுப்புதல்-சுவிசேஷ கூட்டங்கள், பீச்சில் காற்று வாங்க நடக்கையில் கையை பிடித்து இழுப்பது, வீட்டுக்கு வீடு வந்து பெல்லடித்து தேவனின் மகிமையை சொல்வது, உன் கடவுள் சாத்தான் நீங்கள் கும்பிடுவது கல்லை என்று இழுவுபடுத்தி பேசுவது, கோவிலுக்குள் அத்துமீறி நுழைந்து ஜெபிப்பது என்று ஊருக்கு ஊர் அடாவடியாக, விடுமுறை நாட்களில் வேன் நிறைய ஆட்களை இறக்கி மதமாற்றத்தில் ஈடுபடுவது கிறிஸ்தவர் அணி.
'போகாதீங்க போகாதீங்க அவர்கள் ஏமாற்றுகிறார்கள்' என்று அலறிக்கொண்டு தடுப்பது மட்டுமே இந்துக்கள் செய்யும் பணி. இதற்கே அவர்கள் மீது ஆயிரம் பழி, ஊழியம் செய்பவர்களை தடுக்கிறார்களாம்.
கிறிஸ்தவ அமைப்புகள் செய்வது Attack இந்துக்கள் செய்வது Defense. அதிலும் அவர்கள் Organized இந்துக்கள் Disorganized.
இதில் மிக வேதனையான விஷயம் என்னவென்றால் இந்துக்கள் பலரும், நன்கு படித்தவர்கள் கூட இதை உணராது இருப்பது தான். மதஉணர்வு என்பது எனக்கும் என் இறைவனுக்குமான தனிப்பட்ட விஷயம். நான் என் தெய்வத்தை விடமாட்டேன். ஆனால் என் மதத்தில் இன்னொருவனை யாரோ மாற்றினால் எனக்கு கவலை இல்லை. இது தான் பெரும்பாலோனோரின் எண்ணம்.
எல்லாருக்கும் ஒரே கடவுள்தான் என்று அவனுக்கு தெரியாவிட்டால் என்ன எனக்கு தெரிந்திருக்கிறதே, கடைசியில் அவனும் நானும் ஒரே இடத்தை தான் அடைவோம் என்று தன் பரந்த மனதை திறந்து காட்டுகிறார்கள். சந்தோஷம், ஆனால் ஒரு நாள் உன் பாதையையே இல்லாமல் செய்த்துவிட்டால்? தென் அமெரிக்காவில் செய்தவர்கள் தானே?
இன்னும் சிலர் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை அப்படியெல்லாம் ஒன்று கூடிவிடவில்லை அனாவசியமாக புரளி பரப்புகிறார்கள் என்று நினைக்கிறார்கள். ஒரு முகநூல் விவாதத்தில் தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை 2.5% மட்டுமே உள்ளது என்று சொன்னார் ஒரு நண்பர். அதற்கு ஆதாரமாக அவர் 2011 சென்சஸ் விவரங்களை வேறு எடுத்து தந்தார்..
கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? சுற்றி சுற்றி பாருங்கள் ஒவ்வொரு பேட்டையிலும் புதிது புதிதாக எத்தனை சர்ச்சுகள் முளைத்துவருகின்றன. உங்களை சுற்றி இருப்போர், குறிப்பாக அடித்தட்டு மக்கள் சடாரென ஒருநாள் நீங்கள் தரும் பூஜை பிரசாதங்களை மறுப்பதையும் சண்டே பிரேயருக்கு போவதையும் கவனித்து பாருங்கள். எனக்கு நேரிடை அனுபவம் உண்டு. எங்கள் வீட்டில் வேலைசெய்தோர் அப்படி மாறியவர்கள்தான்.
இந்த முறை நான் சென்னை வந்தபோது ஊபரில் மூன்று பயணங்கள் செய்தேன்..எனக்கு வந்தடிரைவர்கள் மூவருமே கிறிஸ்தவர்கள். எங்கிருந்து இத்தனை கிறிஸ்தவர்கள் வருகிறார்கள்? எல்லாருமே மதம் மாறியவர்கள் தான். சரவணன் என்ற பெயரில் போன மாதம் இருந்தவன் இந்த மாதம் சைமன், பாண்டியன் இப்போது பீட்டர், தனசேகர் இப்போது டேனியல் சேகர்.
இன்னும் இப்போது வரும் செய்திகளில் பாருங்கள்..மெர்சி, ஜெர்சி என எத்தனை செய்திகளில் கிறிஸ்தவ பெயர்கள் அடிபடுகின்றன... சினிமாவாவை கிறிஸ்தவம் உள்ளிழுத்துக்கொண்டதை தனி சினிமாவாகவே எடுக்கலாம்.. அதிகம் மெனக்கிட வேண்டாம், படத்தில் பணியாற்றுவோர் பெயர்களை மட்டும் கவனியுங்கள்.. நான் சொல்வது கவலைக்குரியதா இல்லையா என தெரியும்.
புள்ளிவிவர கணக்கின்படி இவர்கள் வெறும் 2.5 சதம் மட்டும்தானா? இல்லை, கண்டிப்பாக இல்லை. நாங்கள் 25% சதம் என்று மோகன் லாசரஸ் மார்தட்டி சொல்கிறார் . இது உண்மை என்று ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. தமிழ்நாட்டில் 12% சதம் நேரடியாகவும் மீதி 13% சதம் மறைமுகமாவும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றனர். சலுகைகளுக்காக மட்டுமே இவர்கள் இந்துக்கள்.
பலதொகுதிகளில் வெற்றி தோல்வி நிர்ணயம் செய்யும் அளவுக்கு வளர்த்துள்ளனர், இதெல்லாம் ஒரே நாளில் வந்தவை அல்ல. திட்டம் போட்டு டார்கெட் வைத்து செய்கிறார்கள். ஒத்தாசைக்கு திராவிட கழக, சைமன், டேனியல் காந்திகளின் சீரிய உழைப்பின் பலன்.
ஏழ்மை, சாதி வித்யாசம், குடும்ப கஷ்டங்கள் என்று பலருக்கும் இருக்கும் பிரச்சனைகளுக்கு வழிபடும் கடவுள் தான் காரணம் என்று மூளைச்சலவை செய்து மதம் மாறினால் தீர்வு என்று பாமர மக்களை மனம் மாற்றுகிறார்கள் மதம் மாற்றுகிறார்கள். சிலருக்கு பணம் சிலருக்கு வேறு சில சௌகர்யங்கள்.
இந்து மதத்தில் நீங்கள் கீழ்ஜாதி என்று ஒதுக்கி வைத்தால் அவன் அப்படிதான் போவான் என்போருக்காக சொல்கிறேன். அங்கே போயும் அவன் கீழ்ஜாதி தான். தனி சர்ச், தனி சுடுகாடு தான். இங்கே தவறு இல்லை என மறைக்கவில்லை, நாங்களே நேராக்க முயற்சிக்கிறோம். ஆனால் அப்பம் பிரிக்கும் குரங்காய் நீங்கள் ஏன் நடுவில்?
ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? உங்களுக்காகத்தான் பாடிவைத்தானோ அந்த மீசைக்காரன்?
மதம் மாறுவது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதன் காரணங்கள் வழிமுறைகள் முக்கியம். மதம் என்பது தத்துவங்களின் தொகுப்பு இறைவனை தேடி தெளிய ஒரு வழிவகை. உதாரணம் மறுபிறவி, பாபம், புண்ணியம் எல்லாம் இந்து மதத்தின் தத்துவங்கள். பாம்பு, ஆப்பிள், ஆதாம், ஏவாள், பரலோக ராஜ்ஜியம் இவை கிறிஸ்தவ தத்துவங்கள்.
இருமதங்களின் தத்துவங்களை பூரணமாக உணர்ந்த ஒருவன் தனக்கு கிறிஸ்தவ வழி மேலானதாக தெரிவதாக எண்ணினால் அதில் தாராளமாக போகட்டும். ஆனால் எதையும் அறியாத பாமர மக்களை ஏமாற்றி மதம் மாற்றுவது சரியா?
அமெரிக்காவில் ஆஸ்திரேலியாவில் இந்து மதம் வளரவில்லையா இங்கே கிறிஸ்தவம் பரவினால் மட்டும் ஏன் உங்களுக்கு வலிக்கிறது? கிறிஸ்தவன் நாட்டின் டாலர் வேண்டும் கிறித்தவம் வேண்டாமா என்று சில மேதாவிகள் கேட்கின்றனர்.
வித்யாசம் இருக்கத்தான் செய்கிறது. அது தானாக சேர்ந்த கூட்டம். இந்து மதத்தின் அழகியலில், தத்துவங்களில், வண்ணங்களில், சடங்குகளில் ஈர்க்கப்பட்டு வருகின்றனர். பாலுக்கும் பிரெடுக்கும் ஈடாக அவர்களிடம் யாரும் மதத்தை எழுதி வாங்கவில்லை.
இன்னும் சிலர் இந்த மதம் பல நூற்றாண்டுகளாக இதை விட கொடூர தாக்குதல்களை தாங்கி வந்திருக்கிறது, யாரும் இதன் அஸ்திவாரத்தை கூட அசைக்க முடியாது. அதுவும் இல்லாமல் கண்ணனே தர்மம் அழியும் நேரம் நானே பிறப்பெடுத்து நேர்படுத்துவேன் என்றிருக்கிறேன், அதனால் அவன் பாடு என்று நாம் விட்டுவிடுவோம் என்று வேதாந்தம் பேசுகின்றனர்.
உண்மைதான், அந்த நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அதே கண்ணன் தான் கீதையில் செயலின் பலனை நான் அளிக்கிறேன். ஆனால் நீ செயல்படாமல் இருந்துவிடாமல் உன் கடமையை சரியாக செய் என்றும் சொல்லியிருக்கிறான். அந்த கடமை தான் இதுவும்.
சரி, நீட்டி முழக்கி என்ன சொல்ல வருகிறாய் என்கிறீர்களா?
Who moved my Cheese என்று ஆங்கிலத்தில் ஒரு வழக்கு உண்டு. அசட்டையாக இருந்தால் அசடாகி போவாய் என்று அர்த்தம்..நடுநிலை என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளாமல் இந்த அக்கிரமங்கள் எங்கே நடந்தாலும் தட்டி கேட்போம் என்று உறுதி எடுப்போம். இது தனிமனிதன் செய்யவேண்டியது.
எல்லாவற்றுக்கும் மேலாக மதமாற்றம் என்பதை முறைப்படுத்த சட்ட திருத்தம் வேண்டும். மதம் என்பது அடிப்படை உரிமை அதில் தலையிட்டு மாற்று மதத்தினரிடம் தம் மதத்தை விளம்பரப்படுத்தல் கிரிமினல் குற்றம் என்று சட்டமாக்கவேண்டும். இது அரசாங்கம் செய்யவேண்டியது.
ஆனால் மதம் பரப்புதல் எங்கள் உரிமை கடமை அதை தடை செய்யக்கூடாது என்றால் இப்படி வேண்டுமானால் செய்யலாம். மாதம் ஒரு முறை கிறிஸ்தவ பாதிரிமார்களும் இந்து மத அறிஞர்களும் டிவியில் நேரலையில் ஆரோக்கியமாக விவாதித்து கொள்ளட்டும்.
பூர்வ காலங்களில் மக்கள் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாற காரணம் அறிஞர் மட்டங்களில் நடந்த விவாதங்களும் அதில் அவர்களுக்கு கிடைத்த தெளிவுமே. இதை மீண்டும் கொண்டுவரலாம். ஆரோக்யமான விவாதங்கள் நடக்கட்டும்.
அதன் விளைவாக தத்துவங்களின் தாக்கத்தில் யாரேனும் இன்னொரு மதத்துக்கு மாறுவதானால் மாறிக்கொள்ளட்டும். அப்படி மாறுவோருக்கு ஒரு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெற்றால் தாராளமாக மதம்மாறலாம்.
இதை விடுத்து அடுத்த மதத்தை பற்றி யாரேனும் இழித்து பழித்து பேசினால் கடுங்காவல் தண்டனை என்று சட்டம் வரட்டும். எல்லாரும் அவரவர் வழிபாட்டு முறையில் இறைவனை எந்த இடையூறும் இல்லாமல் வணங்க வழி பிறக்கட்டும்.
புதிய இந்தியாவும் புத்துணர்வுடன் பிறக்கும் .. ஜெய் ஹிந்த் !!