New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகத்தின் தோற்றமும், தமிழின் தோற்றமும்


Guru

Status: Offline
Posts: 24709
Date:
உலகத்தின் தோற்றமும், தமிழின் தோற்றமும்
Permalink  
 


Nandakumar G

உலகத்தின் தோற்றமும், தமிழின் தோற்றமும் (2 ) கிபி :
கிருஸ்துவுக்குப் பின் (குழப்பமிலா காலவர்த்தமானம்)
கி.பி. 1 – 20
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சி, கோவூர் கிழார், தாமப்பல்கண்ணனார், ஐயூர் முடவனார், ஆவூர் முழங்கிழார், ஆலத்தூர் கிழார், மற்றோக்கத்து நப்பசலையார், இடைக்காடனார், ஆடுதுறை மாசத்தனார், வௌ¢ளைக்குடி நாகனார் வாழ்ந்த காலம்.

கி.பி. 10
உலக மக்கட்தொகை 170 மில்லியன். இக்காலத்து இந்தியா (எனக்கூறப்படும்) மக்கட்தொகை 35 மில்லியன்.

கி.பி. 21 – 42
குராப்பள்ளி துஞ்சிய பெருந் திருமாவளவன் ஆட்சி. சேரன் கூட்டுவன் கோதை, காரிகிழார், வௌ¢ளியம்பலத்துத், துஞ்சிய பெருவழுதி ஆகியோரின் காலம்.

கி.பி. 42 – 100
சோழன் செங்கணான், சோழன் நல்லுருத்திரன் ஆகியோரின் ஆட்சி. பாண்டியன் நன்மாறன் கலித்தொகையைத் தொகுத்தான், சேரமான் கணக்காலிரும்பொறை, இளங்கண்டிரக்கோ, இளவிச்சிக்கோ, கோக்கோதைமார்பன், குமணன், பெருஞ்சித்திரனார், பொய்கையார், மருத்துவன், தாமோதரன், நக்கீரனார், கீரன் சாத்தனார், பாண்டியன்
இலவந்திகைப்பள்ளி துஞ்சிய நன்மாறன் ஆகியோரின் அற்புதகாலம். கண் இமையின் கட்டமைப்பு திட்ட வரைவு- ஐரோப்பிய வகையும் (இடம்) மங்கோலிய வகையும் (வலம்) குறுக்கு வெட்டும் நேர் தோற்றமும். பெல்ஸின் ( bellz ) படி மார்ட்டின் (martin,1928 ) செய்த உருமாற்றம்.

கி.பி. 53
ஏசுநாதரின் தூதவரில் ஒருவரான செயின்ட் தாமஸ் இக்கால சென்னையில் மறைவு.

கி.பி. 101 – 120
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆட்சி.

கி.பி. 105
சைனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டது.

கி.பி. 107
ரோமப் பேரரசு அளவிற் மிகபெரியதான காலம்.

கி.பி.120-144
ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ஆட்சி. மூவேந்தர்கள் எதிர்த்தனர், ஆதிக்கும்ப கல்வெட்டு மூலம்.

கி.பி.145-175
வெற்றிவேற்செழியன் ஆட்சி. சிலப்பதிகாரக் கதை நடைப்பெற்ற காலம் கண்ணகிக்குக் கோயில் எடுத்தான் சேரன் செங்குட்டுவன். இலங்கை மன்னன் கயவாகு, சோழன் மாவண்கிள்ளி வாழ்ந்த காலம்.

கி.பி.175-200
கடைக்கழக இலக்கியங்கள் தொகுத்து வழங்கப்பட்டன. நற்றிணை (மாறன் வழுதி)- ஐங்குறுநூறு ( சேரன் யானைகட்சேய்) குறுந்தொகை (பூரிக்கோ- பாண்டியன்-உக்கிரப்பெருவழுதி) மனிதனுடைய மயிரின் நிறமும் விழித்திரையினதும் தோலினதும்
நிறம், கன்களின் வடிவம் ஆகியவற்றின் முக்கிய வகைகள்:பல்வேறு நிறங்கள் கொன்ட மயிர்கள், விரைப்பானவை (மேலே இடம்),சுருட்டையானவை (மேலே வலம்), அலை படிந்தவை; கண் வெளிறியது, கலப்பு நிறம் உள்ளது, கருமயானது (கரு விழியில்
மங்கோலிய வகையினரிடமும் புக்ஷ்மன்களிடமும் காணப்படும் இமையோர மடிப்பு காட்டப்பட்டிருக்கிறது); வெளிறியதும், இடைப்பட்டதும், ஆழ் நிறம் உள்ளதுமான தோல்.

கி.பி.180
இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதினார்.

கி.பி.200
இக்கால கம்போடியாவிலும், மலேசியாவிலும் தமிழ் அரசு.

கி.பி.250-275
வரகுண பாண்டியன் ஆட்சி

கி.பி.275-300
மாணிக்கவாசகர் காலம்.

கி.பி.300-700
தமிழகத்தின் தென்பகுதி களப்பிரகர்களின் ஆட்சி.

கி.பி.300-700
தமிழகத்தின் வடபகுதி பல்லவர்களின் ஆட்சி, பல்லவ மன்னர்கள் விசுணுகோபன், முதலாம் சிம்மவர்மன், இரண்டாம் சிம்மவர்மன், சிம்மவிசுணு ஆகியோரின் ஆட்சி.

கி.பி.358
துருக்கியைச் சேர்ந்த அன்ஸ் எனும் பெரும் போர் வீரன் ஐரோப்பா நாடுகளைப் படை எடுத்து வெற்றி கண்டான்

கி.பி.400
மனுதர்மம் அமைக்கப்பட்டது.

கி.பி.419
பெருநாட்டில் 150 அடி ஆதவன் கோவில் அமைத்தனர்.

கி.பி.450-535
தெற்கில் போதிதர்மர் காலம்.

கி.பி.570-632
முகமது நபிநாயகம் இஸ்லாமிய மதம் ஏற்படுத்தல். உருவ வழிபாடு இன்மை. ஒரே கடவுள் அல்லா என்ற தத்துவம்

கி.பி.590-631
சைவ நாயனார் திருநாவுக்கரசர் காலம். 312 திருமறைப்பாடல்களை இயற்றினார். இவரை அப்பர் என்றும் அழைப்பர்.

கி.பி.600-900
வைணவ ஆழ்வார்காலம். 4000 பாடல் கொண்ட நாலாயிர திவ்விய பிரபந்தம் தொகுக்கப்பட்டது.

கி.பி.610
நபி நாயகம் இஸ்லாமிய கருத்துக்களை கூறல்.

கி.பி.622
நபி நாயகம் மெக்கா தப்பிச் செல்லல்.

கி.பி.630-644
சைன திரு உலாப்பயணி யுவான் சுவாங் பயணம். தலைத் தோலின் ஊடாக வெட்டுக்கள்.இடம்- சுருட்டை மயிருடன்.வலம்- நேர் மயிருடன் படங்களின் ஓரங்களில் அதே மயிர்களின் குறுக்கு வெட்டுக்கள்.

கி.பி.641-645
அராபிய முகமதியர் எகிப்த், மெசபடோமியா, பெர்சியா நாடுகளைக் கைப்பற்றினர்.

கி.பி.650
திருஞான சம்பந்தர் காலம். 384 பாடல்களை கொண்ட திருமறையை இயற்றினார்

கி.பி.788
ஆதிசங்கரர் தோற்றம் (788-820) விவேக சூடாமணி இயற்றினார்.

கி.பி.800
இரண்டாம் அவ்வையார் அவ்வை குறள் இயற்றினார். நம்மாழ்வார் பெரும் வைணவ முனி. காரைக்கால் அம்மையார் 63 நாயன்மார்களில் ஒருவர். ஆண்டாள் கிருட்டிணன் பற்றிய பாடல்களை பாடியவர். பக்திமார்க்கம், புத்த மதம் தமிழ்நாட்டில் பரவுவதை தடுத்தது. கௌதம புத்தரை ஒன்பதாவது அவதாரமாக்கினர்.

கி.பி.825
சுந்தரர் நாயன்மார்களில் ஒருவர். இப்போதைய தென் ஆற்காட்டில் தோன்றினார். 38,000 சிவப்பாடல்களை எழுதியுள்ளார். தற்போது 100 பாடல்கள் கிடைத்துள்ளன. இவை திருமறை ஏழாவது புத்தகத்தில் சேர்ந்துள்ளன.

கி.பி.850
மாணிக்கவாசகர் தோற்றம். திருவாசகம் திருபள்ளி எழுச்சி, திருவெம்பாவை இவரது நூல்கள். வைணவர்களின் சமயக்கட்சி தமிழ்நாட்டில் ஆரம்பம்.

கி.பி.900
குண்டலினி யோகப் பயிற்சி மட்ஸ்சிந்தர நாதர் காலம். பத்கூம் மண்டையோட்டு முகடு (இடப்புற, நேர், மேலிருந்து தோற்றம்).

கி.பி.900
இந்தோனேசிய பேரரசு புத்தமதம் விடுத்து சைவத்தை ஆதரித்தது. 150 சைவக்கோவில்கள் கட்டப்பட்டன.

கி.பி.1000
உலக மக்கட் தொகை 256 மில்லியன். (இக்காலத்து கூறப்படும்)
இந்தியா மக்கட்தொகை 79 மில்லியன்

கி.பி.1000
சிகாண்டிநேவியாவைச் சேர்ந்த கடற் பயணிகள் வட அமெரிக்காவிலுள்ள நோவகோசியா அடைந்தனர்.

கி.பி.1000
பாலிநேசிய இனத்தவர் நியுசிலாந்துவை அடைந்தனர் உலகில் அதிக அளவில் பரவியுள்ளவர்கள்.

கி.பி.1000
துருக்கிய முகமதியர்கள் ஆப்கானித்தானம் பெசாவர் வழியாக இக்கால இந்தியாவில் முதல் முறையாக நுழைந்தவர்கள். முதலாவது ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்னர்.

கி.பி.1010
சைவ நூற்தொகுப்பு திருமறை நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்டது.

கி.பி.1017-1137
தமிழ்ச் சித்தாந்தி இராமனுசர் காலம். பக்தி மார்க்கம் கடைப் பிடிக்கப்பட்டது.

கி.பி.1024
முகமது கஜினி சோமநாதபுரம் கோவிலை அழித்தான்.

கி.பி.1040
சைனர்கள் திசை அறி கருவி கண்டுபிடித்தனர்.

கி.பி.1150
வீர சைவர் தலைமை மேற்கொண்டு பசுவண்ணா, மனிதநேயம், மனிதர்களிடையே சம நிலை, சிவலிங்க வழிபாடு இவற்றை போதித்தார்.

கி.பி.1197
நாலந்தாவில் புத்தசமய பல்கலைக்கழகம் முகமதியரால்
அழிக்கப்பட்டது.

கி.பி.1230-60
ஒரிசாவில் கொனர்க்கில் சூரியன் கோவில் கட்டப்பட்டது.

கி.பி.1232
போசள வீர நரசிம்மன் காவிரிக்கரையில் மகேந்திரமங்கலத்தில்
பாண்டியர்களையும், காடவ கோப்பெருஞ்சிங்கனையும் தோற்கடித்து, மூன்றாம் இராசராசனை விடுவித்து சோழ நாட்டை மீட்டு சோழரிடம் ஒப்படைத்தான். போசளர்கள் திருச்சிக்கு அருகாமையில் கண்ணூர் கொப்பத்தில் துணை தலைநகரை உருவாக்கினார்.

கி.பி.1250
சைவ சித்தாந்தி மெய்கண்டார் காலம்.

கி.பி.1268-1369
தமிழ் அறிஞர் வேதாந்த தேசிகர் காலம். வடகலை வைணவத்தை காஞ்சியில் அறிமுகப்டுத்தினார்.

கி.பி.1272
மார்க்கோ போலோ தற்போதைய இந்தியா வந்தார்.

கி.பி.1296
அலாவூதின் கில்ஜி பெரும்பாலான தற்போதைய இந்தியாவை தன் ஆட்சியில் கொண்டுவந்தார். அவருடைய தளபதி மாலிக்கப்பூர் இராமேசுவரம் வரை படை எடுத்து வென்றார்.

கி.பி.1300
கன்யாகுமரியில் முகமதிய மசூதி அமைக்கப்பட்டது.

கி.பி.1311
தமிழ்நாட்டில் முகமதியர் ஆட்சி வேரூன்றியது.

கி.பி.1333-1378
மதுரை ஒரு சுதந்திர சுல்தானியப் பகுதியாக முகமதியர் ஆட்சியில் இருந்தது, முகமதியர்களின் வெற்றியைக் கண்டு கொதித்த இந்துக்கள் தக்காணத் தின் கிழக்கில் புரலாய நாயக்கனும், கபாய நாயக்கனும் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

கி.பி.1340
போசள மன்னன் மூன்றாம் வல்லாலன் காலத்தில் மதுரை சுல்தான் சலாவுதீன் அசன்சாவை கொன்றான். சம்புவராயர்கள் சோழர் காலம் தொட்டு 16ஆம் நூற்றாண்டு வரை ஒமாயநாட்டு (திண்டிவனம்) மூன்னூற்றுப் பள்ளியை ஆண்டு வந்தார்கள். பிற்காலத்தில்
ஆற்காட்டு மாவட்டங்களையும் செங்கட்பட்டு மாவட்டத்தையும் உள்ளடக்கி இராஜகம்பீர இராச்ஜியம் என்ற பெயரில் ஆன்டனர். விருச்சிபுரத்தை இருக்கையாகக் கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்களுக்கு உட்பட்டிருந்தனர். சோழர்கள் படையில் சிறந்த பணி ஆற்றி உள்ளனர். அழகிய சிங்கன், இராஜராஜசம்புவராயன், திருபுவனவீரசம்புவராயன் அழகிய சோழசாம்புவராயன் அத்திமல்லன், வீரப்பெருமாள், எடிதிலி சம்புவராயன், இராஜகம்பீர சம்புவராயன் ஆகியோர் சம்புவராயர்களின் ஆரம்ப கால அரசர்கள்.

கி.பி.1336
விஜய நகரஅரசு(1336-1646) தொடர்ந்தது. அரிகரன் விஜயநகர அரசை நிறுவினான். அரிகரனின் தம்பியும் துணையரசனுமாகிய புக்கன் முகமதியர்களுக்கு எதிராக போர் செய்தான். கம்பணன் தமிழகம் உள்ளிட்ட தென்மண்டலத்தில் விஜயநகரத்தின் மகாமண்டலேசுவரனாக விளங்கினான். விஜயநகர ஆட்சிகாலத்தில் – தெலுங்கு பிராமணர்கள் தமிழகம் வந்தனர். துளுநாட்டைச் சேர்ந்த வேளாண். தொழில் செய்த ரெட்டியார்களும் வந்தனர். சௌராட்டிரர்களும் குஜராத்திலிருந்து வந்தனர்.
வருணாசிரமம் வழியுறுத்தப்பட்டது. போர்த்துகீசியர்கள் வழி வந்த கிறித்துவத் துறவிகள் தமிழகத்துக் கடலோர பகுதிகளில் சமயப்பணி ஆற்றினார். சிற்றம்பர் நாடிகள் என்ற புலவரும், இரட்டைப் புலவர்களும், காலமேகப் புலவரும் இக்காலத்தில் வாழ்ந்தனர். 15 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் கிருட்டிண தேவராயர் புலவர்களின் புரவலராக இருந்தார்.

கி.பி.1337
உலகம் முழுமையும் பிளேக் நோய் பரவி 75 மில்லியன் மக்கள் உயிர் கொள்ளை கொண்டது.

கி.பி.1350
தென்னிந்திய சித்தாந்தி அபிய திக்தத்திரர் காலம். சைவ, வைணவ வேற்றுமை அகற்ற பெரு முயற்சி எடுத்தவர்.

கி.பி.1440
ஜெர்மனியில் அச்சடிக்கும் இயந்திரம் சோகன்ஸ் கட்டன்பர்க் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.

கி.பி.1469-1538
சீக்கிய மதம் கண்ட குரு நானக் காலம்

கி.பி.1492
கிரிசுடோபர் கொலம்பஸ் இந்தியாவை கண்டுபிடிக்க எண்ணி சேன் செல்வி டோர் சென்று வட அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்.

கி.பி.1498
போர்த்துக்கல்லைச் சேர்ந்த வாசுகோடா காமா கடல் வழி முதன்
முதலாக கல்கத்தா வந்து சேர்ந்தார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24709
Date:
Permalink  
 

கி.பி.1500
திருப்புகழ் இயற்றிய தமிழ்ச் சித்தாந்தி அருணகிரிநாதர் காலம்.

கி.பி.1500
புத்த சைவ அரச குமாரர் சாவா விலிருந்து படையெடுத்து வந்த
முகமதியர்களால் வெளியேற்றப்பட்டார்.

கி.பி.1500
உலக மக்கள் தொகை 425 மில்லியன். தற்போதைய இந்திய மக்கள் தொகை 105 மில்லியன்.

கி.பி.1509
தமிழகத்தில் கிருட்டிணதேவராயர் ஆட்சி.

கி.பி.1510
போர்த்திகீசிய கத்தோலிக்கப் பாதிரியார் வருகை. ஐரோப்பியர் வருகை ஆரம்பம்.

கி.பி.1546
நாயக்கர்கள் ஆட்சி, விசய நகர ஆட்சிக்குப் பின்னர் இடைப்பட்ட காலத்தில் சூரப்ப நாயக்கரும், கிருட்டிணப்ப நாயக்கரும் ஆண்டனர்.

கி.பி.1565
விஜய நகர ஆட்சி முகமதியர்களால் அழிக்கப்பட்டது. முழுமையான மறைவு 1646ல் அமைந்தது.

கி.பி.1595
ஆயிரம் தூண்கள் கொண்ட சிதம்பரம் கோவில் அரங்க வேலை ஆரம்பிக்கப்பட்டு 1685ல் முற்று பெற்றது. சைவ சித்தாந்த விளக்க நூற்கள் தோன்றின. சூரியனார் மடத்தின் தலைவர் சிவாக்கிர யோகிகள் சிவஞான போதத்துக்கும், சிவஞான சித்தியாருக்கும் உரைநூற்கள் எழுதினார்.

கி.பி.1601
கிழக்கிந்திய கம்பெனி நிறுவப்பட்டது. ஆங்கிலக்கிழக்கிந்திய கம்பெனியர் சென்னை, கல்கத்தா, பம்பாய், ஆகிய இடங்களை தலைமையிடமாகக் கொண்டு 17 நூற்றாண்டு முற்பகுதியில் நாட்டு அரசியலில் ஈடுப்பட்டு ஆதிக்கத்தைப் பரப்பினர். 18 – ஆம் நூற்றாண்டின் நடுபகுதி வரை ஐரோப்பிய கம்பெனியர்கள் இந்தியாவில் அரசியல் ஆதிக்கத்தில் எவ்வித முன்னேற்றமுல் அடையவில்லை.

கி.பி.1619
யாழ்ப்பாணத் தமிழ் அரசு போர்த்துகீசியர்களால் கைப்பற்றப்பட்டது. 1658 வரையும் ஆதிக்கம் செலுத்தினர், பல ஆலயங்கள் அழிக்கப்பட்டன

கி.பி.1619
அமெரிக்காவில் முதன் முதலாக ஆப்பிரிக்கர்கள் அடிமையாக விற்கப்பட்டனர்.

கி.பி.1623-1659
திருமலை நாயக்கர் ஆட்சி. அரப்பணிகளும் கலைப்பணிகளும் அவருடைய புகழை வளர்த்தன. அழகிய தெப்பக்குளம், புதுமண்டபம், ஆவணிமூலை, இராயர் கோபுரம் – நாயக்கர்களால் கட்டப்பட்டன. 17 – ஆம் நூற்றாண்டில் எல்லப்பநாவலர் அருணாசலபுராணம், அருணைக் கலம்பகம், எழுதி சிவ எல்லப்ப நாவலர் என புகழ்பெற்றார். திருமலை நாயக்கனின் விருப்பப்படி மீனாட்சி அம்மைப் பிள்ளைத் தமிழைப் படைத்தார். காசியில் காசி மடம் எழுப்பினர். நாயக்கர் காலத்தில் முத்துத் தாண்டவர் – தமிழில் பல அற்புதமான கீர்த்தனைகள் இயற்றினார். பல அமிர்தக்கவிராயர், சர்க்கரைப்புலவர் என்போரும் குறிப்பிடத்தக்கவர்கள். இரத்தின கவிராயர் – மச்ச புராணம் எழுதினார்.

நாயக்கர் கால இலக்கியங்கள் பொற்கொல்லர் வீரகவிராயர் – இசை கலந்த நடையில் அரிச்சந்திரபுராணத்தை படைத்தார்.

அதிவீர ராமபாண்டியன், நளனின் துன்பியில் வரலாற்றை நைடதம் நூலாக்கினான் இலிங்க புராணம், மகா புராணம், கூர்ம புராணம் கரிவலம் வந்த நல்லூர் சிவனைப்போற்றி பதிற்றுப்பத்து, அந்தாதி இலக்கயம் போன்றவையும் எழுதினார். அதிவீரராம பாண்டியனின் தம்பி வராத்துங்க ராம பாண்டியன் எழுதிய உடலுறவு இன்ப விளக்கநூல் – கோக்கோகம். இவர்கள் பாண்டிய அரசக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

கி.பி.1627-1680
மராட்டிய மன்னன் சிவாஜியின் காலம். முகமதியர் ஆட்சிகளை வெற்றிக்கொண்டு மராட்டிய ஆட்சியை விருவுப்படுத்தினார்.

கி.பி.1628 – 1688
திருவைகுந்தத்தில் பிறந்த சைவ சித்தாந்தி குமர குருபரசாமிகள் கலிவெண்பா, கயிலைக் கலம்பம் படைத்தார்.

கி.பி.1650
சைவ மடமான தரும புரம் ஆதீனம் குரு ஞானசம்பந்தரால் மாயவரம் அருகில் அமைக்கப்பட்டது.

கி.பி.1676 – 1856
சிவாஜி தஞ்சையிலிருந்து சுல்தானிய ஆதிக்கத்தை ஒழித்ததுடன், 1677ல் தஞ்சையை மராட்டியர்களின் கீழ் கொண்டு வந்தார், விஜய நகரத்தின் வீழ்ச்சிக்கு பிண் மராட்டிய அரசு தோன்றியது. முகமதியர் அரசுகளை நசுக்கி முன்னேறியது. தஞ்சையை மராட்டியர்கள் ஆண்டனர். தமிழ்புலவர்களுக்கு அரசின் ஆதர்வு இல்லை. திருவாரூர் வைத்தியநாத்தேசிகர், வேதாரண்யம் தாயுமானவர், சுவாமிநாததேசிகர், சீர்காழி அருணாசலக் கவிராயர் (தமிழில் பல கீர்த்தனைகள் அமைத்த இசையறிஞர்) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இரன்டாம் சரபோசி மன்னர் சரஸ்வதி மகாலைக் கட்டினார்.

கி.பி. 1677
விஜய நகர பேரரசின் கடைசி வாரிசான ஸ்ரீரங்கனுடன் நாயக்கர் ஆட்சி முடிந்தது.

கி.பி. 1682-1689
அரங்க கிருட்டிண முத்துவீரப்பன் பதவிக்கு வந்தார். இவருடைய காலத்தில் கிருத்துவ துறவி ஜான்-டி-பிருட்டோ மதுரை பகுதியில் சமயத் தொண்டாற்றினார்.

கி.பி. 1688-1706
இராணி மங்கம்மாவின் காலம். உய்யக்கொண்டான் வாய்க்காலை செப்பனிடச் செய்தார். குளம் வெட்டி வளம் பெருக்கிட சாலைகளும் சோலைகளும், அன்னச்சாவடிகள், சத்திரங்கள், தண்ணீர்ப்பந்தல்கள் அமைத்தார். சமய சார்பற்ற குடிநலம் பேணினார். மதுரை பொற்றாமரைக் குளத்தின் அருகில் கல்யாண மண்டபத்தில் நினைவுச் சின்னமாக அவருடைய உருவம் ஓவியமாக உள்ளது. ‘மங்கம்மாள் மலைமேற் சோலை’ எனப் பாராட்டப் பட்டுள்ளது.

கி.பி. 1700
உலக மக்கட்தொகை 610 மில்லியன். தற்போதைய இந்திய மக்கட் தொகை 165 மில்லியன்.

கி.பி. 1705-1742
தமிழ் சைவ சித்தாந்தியும் கவியுமான தாயுமானவர் திருச்சிராப்பள்ளியில் வாழ்ந்த காலம். தாயுமானவர் பாடல்கள் பக்தி மார்க்கம் வழியானவை.

கி.பி. 1706
மங்கம்மாவின் பேரன் விஜயரங்க சொக்கநாதன் காலம். தொடர்ந்து விஜயரங்கனின் மனைவி மீனாட்சி ஆட்சி செய்தார். சந்தாசாகிப் மீனாட்சியை சிறைப்படுத்தினர். கி.பி 1786-ல் திருச்சியைக் கைப்பற்றினார். நாயக்கர் ஆட்சிக்கு முடிவு.

கி.பி. 1712
மருத பாண்டியன் சாதாரண நிலையிலும் தோன்றி திறமையாலும் தொண்டாலும் சிவகங்கையின் நிகரற்ற தலைவனாகத் தோன்றினார் மருது பாண்டியன். அரசியல் முன்னோக்குப் பார்வையும், செயல்வன்மையும், பெற்று சிவகங்கையின் ஒப்பற்ற தலைவன் ஆனார். 1712 ல் ஆங்கிலேயருக்கு எதிராக மக்களின் இயக்கம் ஒன்றை உருவாக்கிப் புரட்சி செய்து ஆங்கிலேயர் பிடிக்கவிருந்த சிவகங்கையை மீட்டார். அதைப் பழைய அரச குடும்பத்திடம் ஒப்படைத்தார்.

இராமநாதபுரத்து மேலப்பனும், சிங்கம் செட்டியும், முத்துக் கருப்பனும், தஞ்சை ஞானமுத்துவும் மருது பாண்டியனின் தலைமையை ஏற்றனர், திருநெல்வேலியில் உள்ள பாளையக்காரர்களின் பக்க வலிமையையும் சேர்த்துக்கொண்டு புரட்சிக்காரர்களின் கூட்டிணைப்பு ஒன்றினை உருவாக்கினார், வரிகொடா இயக்கம் இராமநாதபுரத்தில் துவங்கியது. மேலப்பன் தீவிரவாதியாக மாறினார். சிறைக்கு சென்று பின்னர் தப்பித்தார். இராமநாதபுரத்தில் வரிகொடா இயக்கத்தை துவங்கினார்.

கி.பி.1751
ஆங்கிலேய 26 வயது தளபதி இராபர்ட் கிளைவ் ஆற்காடு நகரை பிரெஞ்ச் அரசிடமிருந்து கைப்பற்றினாரர்.

கி.பி.1760 ஏப்பிரல் 4
பாண்டிசேரியும், காஞ்சிபுரம், நீங்கலாக எல்லாக் கோட்டைகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர்

கி.பி.1761
புதுச்சேரியையும், செஞ்சியையும், மேற்கு கரையிலுள்ள மாகியையும் ஆங்கிலேயருக்குக் கொடுத்து விட்டு பிரெஞ்சுக்காரர்கள் சரணடைந்தனர். 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பாளையக்காரர்களைப் பணிய வைக்கும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

கி.பி.1761
திருநெல்வேலியின் மேற்பகுதியில் நேர்க்காட்டும் சேவல் பாளையத்தை ஆண்ட புலித்தேவன் ஆங்கிலேயர்களுக்கு கடுமையான எதிர்ப்பைக் கொடுத்தான். பாளையக்காரர்களின் புரட்சிப்புயலை எழுப்பினான். 1761-ல் தோற்கடிக்கப்பட்டான்.

கி.பி.1761
சகவீர பாண்டியன் மகன் வீரப்பாண்டிய கட்டபொம்மன் முப்பதாவது வயதில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். மருது பாண்டியர்களுடன் நல்லுறவில் இருந்தார்.

கி.பி.1795-1799
பல பாளையங்களை ஆங்கிலேயர்கள் நசுக்கினர்.

கி.பி.1799
திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களால் தோற்கடிக்கப்பட்டார். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டிணம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

கி.பி.1799
செப்டம்பர் 5ம் தேதி கட்டபொம்மன் மேஜர் பார்னனுக்கு சரணடைய மறுத்தமையால் ஆங்கிலேயருடன் போர் நடந்தது. முதல் முயற்சியில் ஆங்கிலப்படை தோற்றது. மீண்டும் கோலார்பட்டி என்னுமிடத்தில் நடைப்பெற்ற போரில் வீரபாண்டிய கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டான். புதுக்கோட்டை காட்டில் மறைந்திருந்தான். காலப்பூர் என்ற காட்டிலிருந்த கட்டபொம்மனைப் புதுகோட்டை அரசன் விஜயரகுநாதத் தொண்டைமான் கைது செய்து ஒப்படைத்தான்.

கி.பி.1799
அக்டோபர் 16 – ஆம் தேதி கயத்தாற்றில் வீரபாண்டியன் தூக்கிலிடப்பட்டான். கடைசி நிமிடத்திலும் வீரத்தைக் காட்டி, இன உயர்வை நிலைநாட்டி விடுதலை உணர்ச்சியை வெளிப்படுத்தினான். பானர்மன் எழுதிய அறிக்கையில் “வீரபாண்டியக் கட்டபொம்மன் பகைவரும் போற்றும் பண்பிலும் வீரத்திலும் சிறந்திருந்தார். என எழுதப்பட்டிருக்கிறது.

கி.பி.1799
புரட்சிக்காரர்கள் காவல் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களைப் பெற்றனர். பண்டாரகங்களைச் சூறையாடிப் பட்டினியால் தவித்த மக்களுக்கு உணவு அளித்தனர். பாலமனோரியில் நடைப்பெற்ற போரில் சிங்கம் செட்டி கொல்லப்பட்டான்.

கோபாலநாயக்கர்:
திப்பு சுல்தான் படைத் துணையுடன் கோபாலநாயக்கர் கண்காணிப்பில் புரட்சிக்காரர்கள் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்பு பண்டங்களையும் பறித்தனர். விருப்பாட்சி பாளையக்காரராக விளங்கியவர் கோபால நாயக்கர். மருதபாண்டியருடனும் அண்டை தேசத்து துண்டாசியுடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்புடன் தென்னக கூட்டினை உருவாக்கினார். மருதபாண்டியன் தலைமையில் இராமநாதபுரம் சீமையானது. கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டிணைவுகளுடன் சேர்ந்து வலுப்பெற்றன. கன்னட தேசத்தில் தூண்டாசியும் கிருட்டிணப்ப நாயக்கரும், மலபாரில் கேரளவர்மனும் புரட்சித்தலைவர்களாக உருவாகி கூட்டிணைப்பு மூலம் ஆங்கிலேயரை எதிர்த்தனர். கோயம்புத்தூரிலும் சேலத்திலும் தேபக்தர்கள் இயங்கினர். ஈரோட்டு மூதார் சின்னனும், கானி சாகனும் தலைவர்களாகத் திகழ்ந்தார்கள்.

கி.பி.1800
இந்திய மக்கட் தொகை 200 மில்லியன்

கி.பி.1800 – 1801
தென்னிந்திய விடுதலைப்புரட்சி (முதல் விடுதலை போராட்டம்) உருவானது. மன்னர்கள் செயலிழந்தனர். பாளையக்காரர்கள் மக்களின் நலன்களைப் பேணி உரிமைகளைக் காத்து நின்றனர். கோட்டைகளையும் படைபலத்தையும் கொண்டு மக்கள் தொடர்பையும் நன்மதிப்பையும் பெற்றிருந்தனர். அயலார் ஆதிக்கத்தை ஏற்கவில்லை. திராவிட பண்பாட்டு நிறுவனங்களும், ஆங்கிலேய பண்பாட்டு நிறுவனங்களும் மோதின.

கி.பி.1800 – 1801
தமிழகத்தில் நடைப்பெற்ற முதல் விடுதலை போராட்டம், மருதபாண்டியனின் ஸ்ரீரங்கம் அறிக்கை, இந்திய விடுதலை இயக்கவரலாற்றின் துவக்க விழாவாகவும் எல்லைக் கல்லாகவும் அமைந்தது.

கி.பி.1801
மே22, பாஞ்சாலங்குறிச்சியில் போர், மழை, இடி, புயல், ஏற்பட்டது. பாஞ்சாலங்குறிச்சி வீழ்ந்தது. ஊமைத்துரை காயங்களுடன் கமுதியை அடைந்தபோது மருத பாண்டியன் வரவேற்பு அளித்தான்.

கி.பி.1801
அக்டோபர் 24 ஆம் நாள் வெள்ளை மருது, சின்ன மருது, செவத்தம்பி, முத்துக்கருப்பன் என பலரும் திருப்பத்தூரில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டனர்.

கி.பி. 1801
நவம்பர் மாதம் 16ஆம் நாள் ஊமைத்துரை பாஞ்சாலங்குறிச்சியில் கொல்லப்பட்டான்.

கி.பி. 1802-1857
சென்னை (தற்போதைய தென் இந்தியா) மாநிலத்தை ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி செய்தது.

கி.பி. 1804
இராமசாமி என்ற தாசன் தலைமையில் கோயம்புத்தூரில் ஒரு விடுதலை இயக்கம் தொடங்கப்பட்டது.

கி.பி. 1806
சூலை 10 ஆம் நாள் வேலூரில் சிப்பாய்க்கலகம்.

கி.பி. 1812
நெப்பொலியன் உருசிய போரில் மிகுந்த சேதத்துடன் திரும்பினான். 500,000 போராளிகளில் 20,000 போராளிகளே உயிருடன் திரும்பினர்.

கி.பி. 1814
முதல் புகை வண்டி விடப்பட்டது.

கி.பி. 1820
அமெரிக்காவை முதல் புலம் பெயர்ந்த இந்தியர் அடைந்தார்.

கி.பி. 1822-1892
யாழ்ப்பாணத் தமிழறிஞர் ஆறுமுக நாவலர் காலம். வேதங்களுடனும், ஆகமங்களுடனும் ஒத்து நோக்க தமிழில் பைபிளை மொழி பெயர்த்தார்.

கி.பி. 1823-1874
இராமலிங்க வள்ளலார் காலம். வடலூர் சத்திய சன்மார்க்க சபை அமைத்தவர். போலிக் கடவுட் தன்மையினை சாடியவர். மனித நேயத்தின் அவசியத்தை வலியுறுத்தியவர்.

கி.பி. 1825
அதிக அளவு தமிழர்கள் ரியூனின், மொரிசியஸ் தீவுகளுக்கு வெள்ளையர்களால் அனுப்பப்பட்டனர்.

கி.பி. 1835
19,000 தமிழர்களும் மற்றவர்களும் மொரிசியஸ் தீவுகளுக்கு வெள்ளையர்களால் அனுப்பப்பட்டனர்.

கி.பி. 1841
தென்னாற்காடு மாவட்டத்தில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக விவசாயிகள் கொதித்தெழுந்தனர்.

கி.பி. 1852
சென்னை தன்னுரிமை நலக்கழகம் தொடங்கப்பட்டது.

கி.பி. 1856
கத்தோலிக்க பாதிரியர் கால்டுவெல்டு “திராவிடர்” என்ற சொல் தென்னிந்தியரைக் குறிப்பதாகும் எனக் குறிப்பிட்டார்.

கி.பி. 1857
இந்தியச் சிப்பாய் கலகம்.

கி.பி. 1860
தமிழ் மக்களும், வங்காள மக்களும் இந்திய, ஆப்பிரிக்க ஆங்கிலேயரிடையே ஏற்பட்ட 51 வருட உடன்படிக்கையால் தோட்டத் தொழில் செய்ய ஆப்பிரிக்கா அனுப்பப்பட்டனர்.

கி.பி. 1869-1948
நாட்டின் தந்தை எனப்படும் மகாத்துமா காந்தியின் காலம். கத்தியின்றி இரத்தம் இன்றி சாத்வீக வழியில் இந்திய ஆளுரிமையைப் பெற்றுத் தந்தவர்.

கி.பி. 1875
சீமாட்டி பிளாவிட்சுகி சென்னை அடையாற்றில் கடவுணர்வு சங்கம் அமைத்தார். அன்னிபெசன்ட் அம்மையார் இந்த அமைப்பில் 1907-1933ல் தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

கி.பி. 1876
கிரகம் பெல் தொலைபேசி கண்டுபிடித்தார்.

கி.பி. 1877
ஈழ நாட்டின் ஆனந்த குமாரசாமி காலம். தமிழக ஓவியக் கலைகளை மேற்கத்திய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியவர்.

கி.பி. 1879
தாமசு ஆல்வா எடிசன் (1847-1931) மின் விளக்கு கண்டுபிடித்தார்.

கி.பி. 1879-1950
இரமண மகரிசி காலம். திருவண்ணாமலை முனி எனப்பட்டவர்.

கி.பி. 1885
இந்திய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.

கி.பி. 1885
விசையுந்து வண்டி கார்ல் பென்ஸ் என்ற ஜெர்மனியரால் செய்யப்பட்டது.

கி.பி. 1887-1920
இராமானுஜம்; உலகப் புகழ் கணித மேதை. ஈரோடு தமிழ் நாட்டில் பிறந்தவர்.

கி.பி. 1888-1952
சி.பி. இராதாகிருட்டிணன் காலம். இந்திய இரண்டாம் குடியரசுத் தலைவர்.

கி.பி. 1888-1970
சி.வி. இராமன்; ஆராய்ச்சியாளர். முதலாவதாக நோபல் பரிசு பெற்ற தமிழர்.

கி.பி. 1894
இந்தியர்களை வெளிநாடுகளுக்குக் கட்டாய வேலைக்காக அனுப்புவது நிறுத்த மகாத்மா செய்த மனு வெற்றியானது

கி.பி. 1893-1974
அறிவியல் அறிஞர் ஜி.டி நாயுடு காலம். தமிழ் நாட்டின் தொழில் நிறுவனர் ஆராய்ச்சியாளர்.

கி.பி. 1894-1977
தமிழீழத் தந்தை செல்வா காலம். வாழும் தமிழர் எங்கும் தன்னுரிமையுடன் இருக்க வேண்டும் என்று தன்னலமற்ற உழைப்பை நல்கியவர்.

கி.பி. 1897
சுவாமி விவேகானந்தா இராமகிருட்டிண மடத்தை நிறுவினார்.

கி.பி. 1898-1907
காலராவில் 370,000 மக்கள் உயிரிழ்ந்தனர். இருபதால் நூற்றாண்டில் தமிழ்நாடு. சென்னை மாநிலம் குமரிமுனை முதல் ஒரிசாவரையிலும், மலபார்கன்னடப்பகுதிகள், ஆந்திரதேசமும் இணைந்து விளங்கியது. இருபதாம் நூற்றாண்டு பிரச்சினைகளுடன் அடியேடுத்து வைத்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மக்களிடையே பண்பாட்டுணர்வும், பண்பாட்டு முனைப்பும் மேலோங்கி இருந்தன. பாரதியாரின் புரட்சிக்குரலும், வ.உ.சிதம்பரனார் இயக்கங்களும் மக்களை இழுத்தன. உரிமைக்குரல் கொடுக்க இனவாரி அமைப்புகள் தோன்றின.

கி.பி. 1900
செப்டெம்பர் 10 ஆம் நாள் தஞ்சை, மன்னார்குடி, மயிலாடுதுறை இணைத்து தஞ்சை மாவட்டம் ஆக்கப்பட்டது.

1902-1981
மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் காலம். அவர் எழுதிய தமிழ் ஆராய்ச்சி நூல்கள் பல.

1905-1912
தமிழகத்தில் வ.உ.சிதம்பரனார் தலைமையிலும் 1913 முதல் 1919 வரை பல தலைவர்கள் தலைமையிலும் விடுதலை இயக்கம் புரட்சிப்பாதையில் முன்னேறியது.

1905
பாரதியார் பொது மேடைகள் வழியாகவும் மையூற்றி முனை மூலமாகவும் தேசிய உணர்ச்சியைத் தூண்டினார்.

1908
தூத்துக்குடியில் அயலார் கப்பல் ஆதிக்கத்தை வ.உ.சிதம்பரனார் தலைமையில் எதிர்த்தனர்.

1908-1957
என்.எஸ்.கிருட்டிணன் காலம். வெள்ளித்திரை மூலமும் பாமரமக்களுக்கு பகுத்தறிவு படைக்கமுடியும் என்ற அப்பட்டமான உண்மையைப் புலப்படுத்தியவர். தற்கால நகைச்சுவைக்கு இலக்கணம் படைத்தவர்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 24709
Date:
Permalink  
 

1910
வ.வே.சு.ஐயர் நாடு விடுதலை வேண்டி. தியாகப்பலிக்கு தயாராகுங்கள். ‘பாரத மாதா அழைக்கின்றாள்’ ‘1857 திரும்புகிறது’ ஆகிய புத்தகங்கள் வெளியிட்டார். உருசியாவுக்குச் சென்று வெடிகுண்டு தயாரிப்பதை கற்றுவந்தார். சிறந்த தமிழறிஞர். கம்பனுக்கும் வள்ளுவருக்கும் உரை கண்டவர்.

1910-1998
சந்திர சேகர்; ஆரயிச்சியாளர். நோபல் பரிசு பெற்ற இரண்டாம் தமிழர்.

1911
சூன் 17 ஆம் நாள் மணியாச்சி புகைவண்டி நிலையத்தில் வாஞ்சிநாதன் ஆசுதுரையை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தன்னுயிரையும் போக்கிக் கொண்டார்.

1912
திராவிடர் அமைப்பு தோன்றியது. 1916 டிசம்பரில் தென்னிந்தியர் நல உரிமைக்கழகம் தோன்றியது. பின் நீதிக் கட்சி என்ற பெயருடன் இயங்கியது. வைதீகர் ஆதிக்கத்தாலும், சாதிக்கொடுமையாலும் புண்பட்டிருந்த மக்களிடத்தில் தனித்தமிழ்ப் பற்று ஏற்பட்டது.

1912-1974
மு.வரதராசனார் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இவருக்குத் தனியிடம் உண்டு. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதன் முதலாக பேரறிஞர் (டாக்டர்) பட்டம் பெற்றவர். 85 நூல்கள் எழுதியுள்ளார்.

1916
அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்.

1917
உருசியாவில் லெனின் தலைமையில் செஞ்சட்டையினர் ஆட்சி அமைத்தனர்.

1918
திரு.வி.கலியாணசுந்தரனார், கேசவபிள்ளை, வாடியா முதலியோர் சென்னையில் முதல் தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினர்.

டாக்டர் டி.எம்.நாயர், தியாகராக செட்டியார், கேசவப்பிள்ளை, நடே முதலியார் போன்றோர் சாமானியர் உரிமைகளுக்காகவும், வைதீகர்களின் ஆதிக்கத்துக்கு எதிராகவும் இயக்கங்களில் ஈடுபட்டனர்.

1918
முதல் உலகப் போர் முற்றுப் பெற்றது.

1920
தன்னாட்சி கட்சி (Home Rule League) தோற்றுவிக்கப்பட்டது. சுப்புராயுலு தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. வில்லிங்டன் சென்னை ஆளுநர்.

1921
தேவதாசியர் என்ற பெண்ணடிமை சட்ட பூர்வமாக நீக்கப்பட்டது. பெண்கள் ஓட்டுரிமை பெற்றனர்.

1922-1988
அகிலன் பிறந்தது பெங்களூர், புதுக்கோட்டை மாவட்டம். 1938லிருந்து 40 ஆண்டுகளாக தொடர்ந்து சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள் எழுதியவர். அவருடைய ‘பெண்’ என்ற நாவல் கலைமகள் நடத்திய நாவல் போட்டியில் அதன் முதல் ஆண்டிலேயே முதற் பரிசை பெற்றது. அதைத் தொடர்ந்து அவருடைய நாவல் படைப்புகள் ஞானப்பீடப் பரிசு, சாகித்திய அகதமிப் பரிசு, நேரு பரிசு, போன்ற ஏராளமான பரிசுகளைப் பெற்றன. அவருடைய படைப்புகள் வார்த்தைகளால் கட்டப்பட்ட கலை வடிவங்கள்.

1923
தன்னாட்சி கட்சியைத் தோற்கடித்து பனகல் அரசர் தலைமையில் அமைச்சரவை செயல்பட்டது.

1924
ஜான் மார்சல் (1876-1958) சிந்து சமவெளி புதைப்பொருள் ஆராய்ச்சியில் ஈடுப்பட்டார்.

1925
தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம்.

1926
தன்னாட்சி கட்சி ஆதரவுடன் சுயேட்சையான சுப்புராயன் அமைச்சரவையை ஏற்படுத்தினார்.

1927-1981
கவிஞர் கண்ணதாசன் “சங்க இலக்கியத்தைத் தங்க இலக்கியமாய் மனதில் தங்க வைத்தவன்” இக்கவிஞன். இராமநாதபுரம் சிறுகூடற்பட்டியில் பிறந்தவர். பேரறிஞர் அண்ணா பாசறையில் பாடம் படித்தவர். “காற்றுக்கு மரணமில்லை, கண்ணதாசன் கவிதைக்கும் மரணமில்லை”. ஆனாலும் இவர் 1981ல் அமெரிக்காவில் தன் உடல் துறந்தார்.

1930
முனுசாமி தலைமையில் நீதிக் கட்சி பதவிக்கு வந்தது.

1930-1959
பட்டுக் கோட்டை கலியாணசுந்தரம் மக்கள் கவிஞன். புரட்சி கவிஞர் பாரதிதாசன் தலைமையில் திருமணம் செய்து கொண்டவர். தன் பாடல்களால் தமிழ்த் திரையுலகில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தினார்.

1931
காமராஜர் மீது கொலைசதி, வெடி குண்டு வழக்கு. வ.உ.சி. வாதாடி காமராஜரையும் தொண்டர்களையும் காப்பாற்றினார்.

1932
சட்ட மறுப்பு இயக்கம் தொடக்கம். போப்பிலி அரசர் முதலமைச்சர் பதவி ஏற்றார்.

1932
அக்டோபர் 1 ஆம் நாள் சட்ட மறுப்பு நாள் திருப்பூர் குமரன் என்னும் குமாரசாமி தொண்டர்களுடன் கொடியேந்தி வந்தேமாதரம் முழங்கினார். காவல் துறையினரால் அடித்து கொல்லப்பட்டார். கொடி காத்த குமரன் அமரர் ஆனார். இராஜாஜி தலைமையில் உப்புச்சத்தியாகிரகம் திருமறைக்காடு (வேதாரண்யம்) யாத்திரை. ஓமந்தூர் இராமசாமி. ஓ.வி.அழகேசன், சர்தார் வேதரத்தினம், பம்பாய் தமிழ் பிரதிநிதி சுப்பிரமணியம் உள்ளிட்ட நூறு தொண்டர்கள் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”- நாமக்கல் கவிஞர் பாடலைப் பாடினார்கள்.

1934
போப்பிலி அரசர் முதலமைச்சர் ஆனார்.

1937
1937 வரை நீதிக்கட்சியினர் பதவியில் நீடித்தனர். நீதிக்கட்சியினரின் சாதனைகள். ஓர் இனத்தாரின் ஏகபோக பதவிக் குத்தகையை ஒழித்தது. உயர் பதவிகள் எளிதில் எல்லா இனத்தாருக்கும் கிடைக்க வழி வகுத்தது.

எளியோர் கல்வி பெற கட்டணச் சலுகையும் நிதி உதவியும் அளித்தது. பேரூர்களுக்கும், சிற்றூர்களுக்கும் கல்வி கிடைக்க தொடக்கப்பள்ளி கொண்டு வரப்பட்டது. மதிய உணவுத் திட்டம் வகுக்கப்பட்டது.

1925
ஆந்திர பல்கலைக்கழகம் உருவாகியது.

1928
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாகியது. தொழில் சட்டம், தொழில் விரிவாக்கம், தொழில் வளர்ச்சி, தொழில் நுட்ப ஆய்வு ஆகியவற்றிற்கு உதவியது. தேவதாசி முறையை ஒழிக்க சட்டமியற்றப்பட்டது.

1921
பெண்ணுக்கு வாக்குரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

1937
சி.இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் அமைச்சர் அவை சென்னை மாநிலத்தில் சுயாட்சியை நட்த்தியது. மதுவிலக்குச் சட்டத்தால் மக்களுக்கு நன்மை செய்தது.

1938
ஆலயம் புகும் சட்டம் சாமான்யர்களுக்கு சமய விடுதலை அளித்தது இந்தி கொள்கை இந்தி எதிர்ப்பை வரவழைத்தது. இந்தி எதிர்ப்பு கொள்கையால் பெரியார் சிறைக்குச் சென்றார்.

1938
தமிழியக்கம் இராசக்காமங்கலத்தில் தோன்றியது. இந்திக் கொள்கையின் தூண்டுதலால் திராவிட நாடு கொள்கை உருவானது.

1939
தாளமுத்து. மொழி காக்கும் பணியில் தன்னுயிர் ஈந்தத் தமிழர்.

1939
இரண்டாம் உலகப் போர் ஆரம்பம்.

1940
திராவிடநாடு கொள்கை வடிவம் பெற்றது.

1942
‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டம் வலுபெற்றது.

1944
சேலம் மாநாட்டில் திராவிடக் கழகம் உருவானது.

1945
மத்தானியேல் நாகர்கோவிலில் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை உருவாக்கினார். தமிழ்ப் பகுதிகளைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கும் இயக்கம் முழுவடிவில் இயங்கியது. 1945 நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு போட்டது. இரண்டாம் உலகப் போர் முடிவு. இறந்தோர் எண்ணிக்கை 6 மில்லியன்.

1947
காவல் துறையினர் திட்டமிட்டு தாய்த் தமிழக இயக்கத்தை ஒழிக்க முனைந்தனர். மக்கள் பொங்கி எழுந்தனர். மாங்காட்டுச் செல்லையா, தேவசகாயம் காவல் துறையினரால் கொல்லப்பட்டனர்.

1947
ஓமந்தூர் இராமசாமியின் தலைமையில் அமைச்சரவை ஏற்பட்டது.

1947
ஆகஸ்ட்டு திங்கள் 14 ஆம் நாள் நள்ளிரவு 12 மணிக்கு இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்றது. திராவிட பண்பாடு தொடர்பானவர்கள் பெரும்பாலோர் தமிழகத்தில் சமூகத் தீமைகளாலும், சாதித் தீமைகளாலும் நசுங்கித் தீர்வுகாணாது தவித்தனர் என்பது வரலாற்று உண்மையானது. மனோன்மணியம் சுந்தர்ம், ந.கந்தையா திராவிடர் பண்பாட்டுப் பழமையை, பெருமையை நிலை நிறுத்துவதில் கவனம் செலுத்தினர்.

1948
நாட்டின் தந்தை மகாத்மா, கோட்சே என்ற இந்து வட இந்தியரால் சனவரி 30 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1948
இலங்கை ஆங்கிலக் கட்டுக்குள் உட்பட்ட தனி நாடாகியது.

1948
மிராசு, ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது.

1949
திராவிட முன்னெற்றக் கழகம், “அண்ணா” என தமிழர்களால் பெருமையுடன் அழைக்கப்பெறும் தமிழ்ப் பேரறிஞர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் உருவானது.

1949
அம்பேத்கர் முன்னணியில் இந்திய அரசியல் சட்டம் எழுதப்பட்டது. தீண்டாமை ஒழிப்புச் சட்டமும் நிறைவேறியது.

1949
குமாரசாமி ராஜாவின் அமைச்சரவை பொறுப்பு ஏற்றது.
திராவிடர் கழகம். சமூகச்சீர்திருத்தப் பணிகளைத் தீவிரப்படுத்தியது. மூட நம்பிக்கைகள் திராவிடர்களின் தாழ்வுக்குக் காரணம் என்பதை முன் வைத்தது. தீண்டாமை ஒழிப்பில் தீவிரம் காட்டியது. பெண்ணுரிமை, மகளிர் கல்வி, விருப்ப மணம், விதவை மணம், அனாதை இல்லம், கருணை இல்லம், என்பன கழகத்தின் முக்கிய நோக்கங்களாயின.

1952
இராஜாஜி தலைமையில் ஆட்சி. குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வரும் பணியில் தோல்வியுற்று பதவியை இழந்தார்.

1952
தமிழரசுக் கழகத்தின் தலைவர் ம.பொ.சிவஞானம் சித்தூர் மாவட்டப் பகுதிகளை தமிழகத்துடன் இணைக்க உரிமைக்குரல் எழுப்பினார்.

1954
ஏப்ரல் 13 ஆம் நாள் பெரியாரின் நல்லாசியுடன் தமிழர் தலைவர் கு.காமராஜர் முதல்வரானார். “ஏழைக்குக் கல்விக் கண் திறந்தவர்” காமராஜர் என்ற புகழ் இவரைச் சூழ்ந்தது.

1955
அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் (1879 – 1955) மறைவு. தமிழ்நாடு கண்ட நடராசர் சிலையே உலகின் தலைசிறந்த வேலைப்பாடு என்றவர் இவர்.

1961
சென்னை மாநிலத்தை “தமிழ் நாடு” என்று பெயர் மாற்றல் செய்ய வேண்டுமென 78 நாட்கள் உண்ணா நோன்பு கொண்டு தன்னுயிரையும் ஈந்த தமிழர் “சங்கரலிங்கம் மான்பு தமிழகத்தைக் கண்ணீர்க் கடலில் மூழ்கடித்தது.

1962
காமராஜரின் அமைச்சரவை மூன்றாம் முறை பதவி ஏற்றது. அகில இந்திய அளவில் காமராஜர் திட்டம் வந்தது. காமராஜர் கட்சிப் பணி ஆற்றச் சென்றார்.

1962
அக்டோபர் 3 ஆம் நாள் பக்தவத்சலம் தலைமையில் அமைச்சரவை.

1963
அறிஞர் அண்ணா தலைமையில் இந்தி எதிர்ப்புப் போர் அரசியல் சட்ட எரிப்பு.

1964
மொழி காக்க திருச்சியில் தமிழ் மகன் சின்னச்சாமியின் தியாகத் தீக்குளிப்பு.

1964
ஜனவரி 26 ஆம் நாள் மொழி காக்கும் போராட்டத்தில் தன்னுயிரினையே தந்த தமிழ்மகன் சிவலிங்கம் சென்னையில் தீக்குளிப்பு.

1965
ஜனவரி 26 ஆம் நாளை இந்தித் திணிப்பு நாள் என அறிவித்து, திராவிடர் முன்னேற்றக் கழகம் துக்க நாளென்று அறிவித்து அமைதி ஊர்வலம் நடத்தியது.

1967
மார்ச் 6 ஆம் நாள் தமிழ்நாட்டில் 138 சட்டமன்ற இடங்களுடன் திராவிட முன்னேற்றக் கழகம் அறிஞர் அண்ணாதுரையின் தலைமையில் ஆட்சியில் அமர்ந்தது. உடன் “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு”ம் தமிழக ஆட்சியில் அமர்ந்தது. இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டினை சென்னையில் நட்த்தினார். சென்னை மாநிலம் 1967 ஜூலை 18 ஆம் நாள் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் பெற்றது. இப்பணி எதிர்நோக்கி தன்னுயிர் ஈன்ற சங்கரலிங்கம் மனம் அமைதி அடைந்திருக்கும். சுயமரியாதைத் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1965ல் மொழி காத்தல் என்ற உறுதியுடன் தம் உயிர் ஈந்த தமிழர்க்கு மதிப்பளித்து இருமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்திக்குத் தமிழ் மண்ணில் இடம் இல்லை என்ற நிலை முடிவானது.

1969
பிப்ரவரி 3 ஆம் நாள் அண்ணா மறைந்தார். நாவலர் நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராகப் பணி ஆற்றினார். தொடர்ந்து முறையாக கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டிற்கும், மீட்பும், உயர்விடமும் கிடைத்தன. உயர் கல்வியையும், நிர்வாக நடைமுறைகளையும் எளிமை ஆக்கியது. தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை மீட்டு உலகுக்கு எடுத்தியம்ப உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தைச் சென்னையில் நிறுவினர். கோயில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக்கினர். மாநிலங்களுக்கு சுயாட்சி கோரினர்.

1972
அக்டோபர் 15 ஆம் நாள் எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையில் அண்ணா திராவிட முண்ணேற்றக் கழகம் தோன்றியது.

1977
தி.மு.க. அரசு இந்திய அரசினால் பதவி நீக்கம் செய்யப்பட்டது, மக்களாட்சி முறையில் ஏற்பட்ட களங்கம்.

1977
எம்.ஜி.இராமச்சந்திரன் தமிழகத்தின் முதல்வரானார்.

1978
பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துண்வுத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டது. சிங்கள நாட்டிலிருந்து 100,000 தமிழர்கள் குடியுரிமை நீக்கப்பட்டு தமிழ் நாட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்திய அரசும் தமிழர் சம்மதமின்றி இதற்கு உடன்பட்டு ஒத்துழைத்தது.

1981
ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடத்தப்பட்டது. தஞ்சை, திருச்சி, கோயம்புத்தூரில் பல்கலைக்கழகங்கள் தோன்றின. தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம், கொடைக்கானலில் பெண்களுக்கு அன்னை தெரசா பல்கலைக்கழகம், திருச்சியில் – பாரதிதாசனார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூரில் – பாரதியார் பல்கலைக்கழகம்.

1983
புத்த மதம் சார்ந்த சிங்கள வெறியர்கள் தமிழ்ஈழ மண்ணில் வெறியாட்டம். 37 தமிழர்கள் ஈழச்சிறையில் படுகொலை செய்யப்பட்டனர். சாத்வீகம் சாத்தியமில்லை என்ற நிலையில் தமிழர்கள் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் ஆயுதம் தாங்கிய மறவர் பொறுப்பெற்றனர்.
” தமிழீழ விடுதலைப் புலிகள்” தமிழீழ தமிழர் உரிமை காக்கும் பணியில் தம் விலை மதிக்கவொண்ணா உயிர்க்கொடைக்கும் தயாராயினர்.

1983
பெண்களுக்கான பொறியியற் கல்லூரி உலகில் முதல் முறையாக தந்தை பெரியார் – மணியம்மை பெயரில் வல்லம், தஞ்சையில் நிறுவப்பட்டது.

1990
கிழக்கு, மேற்கு ஜெர்மனியின் “பெர்லின் தடுப்புச் சுவர்” பிப்ரவரி 12 ஆம் நாள் தகர்க்கப்பட்டது.

1990
உருசிய நாடு பொது உடைமை நிலை மாற்றப்பட்டு பல்வேறு கூறுகளாக, 12 குடியரசு நாடுகளாயின.

1992
ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

1997
கலைஞர் மு.கருணாநிதி தமிழக்த்தின் முதல்வரானார்.

2000
உலக மக்கட் தொகை 6200 மில்லியன். தமிழ் நாட்டின் மக்கட் தொகை 42 மில்லியன். உலக வாழ் தமிழர் எண்ணிக்கை 70 – 75 மில்லியன்.

2001
ஜெயராமன் ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார்.

2006
கலைஞர் மு.கருணாநிதி தமிழகத்தின் முதல்வரானார்.

2009
இலங்கையில் “தமிழீழ விடுதலைப் புலிகள்” தலைவர் மேதகு.வேலுபிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டார் என்ற செய்தியை சிங்கள இராணுவம் வெளியிட்டது. ஆனால் சில நாட்களில், அவர் உயிருடன் இருப்பதாக “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பினுடைய அதிகாரப்பூர்வ இணையதளம் அறிக்கை வெளியிட்டது.

ஆதாரம் :
http://tamil.numberonestar.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95…/



__________________


Guru

Status: Offline
Posts: 24709
Date:
Permalink  
 

உலகத்தின் தோற்றமும், தமிழின் தோற்றமும் (1) கிமு :
கிருஸ்துவுக்கு முன் (குழப்பமிலா காலவர்த்தமானம்)
கி.மு 14 பில்லியன்
பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 – 4 பில்லியன்
பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்
நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000
இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000
முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000
யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000
நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000
கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000
தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 – 35000
தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 – 20000
ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 – 10000
ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள்)

கி-மு. 10527
முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 – 6100
பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000
கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087
கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 – 3000
கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000
உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000
சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு – 4000
கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு – 3200
சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு – 3113
அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு – 3102
சிந்து சமவெளிக் தமிழர்களின் “கலியாண்டு” ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.
மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்
இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.

கி.மு – 3100 – 3000
ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு – 2600
எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு – 2387
இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு – 2000 – 1000
காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி – சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி – சம்பரன் ஆட்சி.

கி.மு – 1915
திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. – 1900
வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500
முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. – 1450
உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. – 1316
மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.

கி. மு. 1250
மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200
ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000
உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600
வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950
அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950
வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925
யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900
இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்
இபபோதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பி
யங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776
கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.
குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)

கி. மு. 750
பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700
சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543
கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600
லாவோ – துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600
கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 – 527
மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560
பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478
கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500
கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478
இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450
ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 – 348
சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400
கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 – 328
உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 – 270
மகன் இமயவரம்பன் – நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் – கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326
அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305
சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302
சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300
சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300
கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் – மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232
மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245
சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251
புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்.

கி.மு. 245-220
சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221
புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 – 200
கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180
குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200
முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200
தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87
ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62
செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி.

கி.மு. 62-42
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்து
ச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்
லாடம்)

கி.மு. 42-25
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31
உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9
இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1
கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த எல்லாம் சில காலம்.

கி.மு. 4
ஏசுநாதர் – கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்.

ஆதாரம் :
http://tamil.numberonestar.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard