New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம்


Guru

Status: Offline
Posts: 24765
Date:
சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம்
Permalink  
 


சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம்

பேராசிரியர் பெ. திருஞானசம்பந்தன்

 

பெரியார் திறந்த பல்கலைக் கழகம் 9-3-1985, 10-3-1985 ஆகிய இருநாள்களிலும் சென்னையில் அறிஞர் பெரு மக்கள் பங்கேற்ற சமஸ்கிருதமயம் - ஆதிக்கம் (Sanskritisation) பற்றிய ஒரு கருத்தரங்கத்தை நடத்தியது. அதில் ஆராய்ச்சி பூர்வமான கருத்துரைகள் எடுத்து வைக்கப்பட்டது.

 

சமற்கிருத மயமாக்கப்பட்டமை எனும் பொருள் பற்றிய கருத்தரங்கில் பேராசிரியர் பெ.திருஞானசம்பந்தன் உரை வருமாறு:

ஒரு மொழியின் இலக்கணம் சமகாலத்திய இலக்கி யத்தின் அடிப்படையிலேயே தோன்றுவதாகும். தொல் காப்பியர் காலத்து இலக்கணம் அவர் காலத்து வழங்கிய இலக்கிய மொழியின் அடிப்படையிலே அமைந்தது. அது போலவேதான் நன்னூல், பிரயோக விவேகம் முதலான இலக்கண நூல்களும். இக்கட்டுரையின் நோக்கம் வடமொழித் தாக்கம் தமிழிலக்கணத்தில் காலந்தோறும் எந்த அளவுக்கு இருந்திருக்கக் கூடும் என்று சிந்திப்ப தேயாகும். ஒரு சில இலக்கண நூல்களே, அவற்றுள்ளும் ஒரு சில இயல்புகளே இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படு கின்றன.

தொல்காப்பியர் காலத்தில் இலக்கியத்தில் வடசொற்கள் ஓரளவு பயின்று வரப்பட்டன என்பதை அவர் கூறும் சொற்பாகுபாட்டில் "வடசொல்" (சூ. 401) என்ற பிரிவைக் கூறியதனின்றும் அச்சொற்களைத் தமிழில் எவ்வாறு ஆளவேண்டும் என்றும் (சூ. 402) அவர் சொல்லியதனின்றும் அறிகிறோம்.

"அ" "இ" முதலான ஒலிகளைக் குறிப்பதற்குப் பிராதிசாக்கியங்களில் அ என்ற விகுதியும் "காரம்" என்ற விகுதியும் சேர்க்கப்படுகின்றன. காரம் என்பது செய்யப்படுதல் என்று பொருள்படும். தைத்திரிய பிராதிசாக்கியம் (116, 21) இகரம் என்றால் இ என்ற ஒலியையும் "யகரம்" என்றால் "ய்" என்ற ஒலியையும் குறிக்கும். தொல்காப்பியர் ஞ ந ம வ இயையினும் உகர நிலையும் (எழு. 298) என்ற சூத்திரத்தில் "அ", "காரம்" என்று மேற்கூறப்பட்ட இரண்டையும் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.

தொல்காப்பியர் காலத்தில் வேத நெறி நிற்போரும், சைனரும் பவுத்தரும் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததால் சமற்கிருதம், பாலி, அர்த்தமாகதி போன்ற கராக்ருதத்தையும் அவர் அறிந்திருக்கக் கூடும் என்பது எதிர்பார்க்கத்தக்கதே. தெய்வம், மாத்திரை, ஏது முதலான சொற்கள் இதற்குச் சான்று. ஆயினும் தொல்காப்பியர் தமிழ் மொழியின் சிறப்பியல்பைக் கருத்தில்கொண்டே சூத்திரங்களை இயற்றியிருக்கிறார் என்பதை மறுந்துவிடலாகாது. பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் கூறியிருப்பதுபோல் தொல்காப்பியரின் பெயர், வினை, இடை, உரி என்ற சொற்பாகுபாடு வடமொழி பிராதிசாக்கியங்களும் நிருக்தமும் கூறியுள்ள நாமம், ஆக்யாதம், உபசர்க்கம், நிபாதம் என்ற நால்வகைப் பிரிவை ஒட்டியது என்பது ஏற்கத்தக்கதல்ல. இடையும் உரியும், உபசர்க்கமும் நிபாதமும் போல்வன அல்ல, இலக்கண நூலை யாக்கும் முறையில் தொல்காப்பியரும் வடமொழி இலக்கணக்காரர்களும் ஏறத்தாழ ஒரே நெறியைப் பொருத்தும் இடங்களில் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். எடுத்துக்காட்டாக வேற்றுமை இயலில் வேற்றுமை அமைப்பு முறையும் அதன் பொருள் விளக்கங்களும் ஏறத்தாழ ஒத்துக் காணப்படுகின்றன. இத்தகைய நிலையை புணர்ச்சி விதிகளில் காண இயலாது. புணர்ச்சியில் இரு மொழிகளும் வெவ்வேறு போக்குடை யவை, ஒலியின் இயல்பை உணர்த்தத் தொல்காப்பியர் ஒலிகளை உயிர், மெய் என்று பகுத்தார். அய்தரேய ஆரண்யகமும் (II-2-1) இப்படியே கூறுகிறது. இக்கருத்து ஒலி இயலாருக்குத் தனித்தனியே இயல்பாக எழக்கூடிய ஒன்று என்று கொள்ள வேண்டும்.

வீரசோழியம் : ஆசிரியர் புத்தமித்திரனார் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் என்பது இவர் நூலை ஆக்கியுள்ள பாங்கிலிருந்தே தெரிகிறது. இவர் வடமொழி மரபுகளையும் தழுவி தமிழிலக்கணத்தை ஆக்கி யிருக்கிறார் என்பதை அவரே தெளிவாகச் சொல்கிறார். வடநூல் மரபும் புகன்றுகொண்டே உரைப்பன்(3) சந்திப் படலம், காரகப்படலம், தாதுப்படலம், கிரியா பதப்படலம் போன்ற பாகுபாடுகள் வடமொழியில் காரகம் (வேற்றுமை), தாது (சொல்லின் வேர்ப்பகுதி) கிரியை (வினை) முதலிய வடமொழி மரபுச் சொற்களையொட்டி ஆளப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தொல்காப்பியம் எழுத்து அதிகாரத்தின் புணரியலும் மயங்கியலும் கூறியிருப்பனவற்றை வீர சோழியம் சந்திப்படலத்தில் அடக்குகிறது.

புணர்ச்சி நிலைகளைக் கூறும்போது வடமொழி இலக்கண குறியீடுகளான லோபம் (கெடுதல்) ஆகமம் (தோன்றல்) ஆதேசம் (ஒன்றினிடத்துப் பிறிதொன்று வருதல்) என்ற மூவகை விகாரங்கள் (மாற்றங்களை) குறிப்பிடப் படுகின்றன; குண சந்தியும் விருத்தி சந்தியும் வடமொழிக்கே உரியனவாயினும் அவையும் ஆரியத்துள் காணப்படுவன வாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு யாது காரணமாயிருக்கக் கூடும்?

தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழியில் அருகி வழங்கிய வடசொற்கள் தமிழிலக்கியத்தில் 11ஆம் நூற்றாண்டில் குறிப்பாக சமண, பவுத்த காப்பியங்கள் மிகுதியாக வழங்கப் பெற்ற காரணத்தால் அத்தகைய தமிழிலக்கியங்களைப் பயிலுவோருக்கு உதவியாக இருக்கும் வகையில் வடமொழி இலக்கணக் கூறுகளையும் ஆசிரியர் அமைத்திருத்தல் வேண்டும் என்று கருதலாம். வடமொழியில் நகரம் எதிர்மறைப் பொருளைத்தரும். கெய்யை முதலாக உடைய சொல் தொடரின் "ந" என்பதில் உள்ள நகர ஒற்று கெட்டு அகரம் எதிர்மறையை உணர்த்தும். எ-டு ந+சுரன்=அசுரன் உயிரை முதலாக உடைய சொல் தொடரின் "ந" என்பது "அந்" என மாறும். எ-டு ந+இஷ்டம்=அநிஷ்டம். இவை போன்றவற்றை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

முதல் வேற்றுமையில் "சு" என்னும் உருபு சேர்ந்து பின்  கெடுகிறது என்பது வடமொழி இலக்கண மரபு. தமிழுக்கு இது பொருந்தாது. எனினும் வடமொழிக்கு ஈடாகத் தமிழ்மொழி இலக்கணம் இருக்கவேண்டும் என்ற தவறான கருத்தினால் அர், ஆர் முதலான உருபுகளோடு "அ" என்பதையும் இவர் சேர்த்துள்ளார்.

பவணந்தி : தமிழ் மொழிக்கே சிறப்பாக இலக்கணம் வரைந்தாரேனும் பவணந்தி வடமொழி மரபையும் கருத்தில் கொண்டவராதலால் எழுத்து அதிகாரத்தில் புறத்திலக்கண கூறப்புகுந்த நேரத்தில் சொல் இயல் என்று கூறாது பதவியல் என்று கூறினார்.

வடமொழிக்கு சிறப்பாக உள்ள "ரு" (R) முதலான எழுத்துக்கள் தமிழில் "இ" இரு என்றவாறு திரிகின்றன என்பதை ஏழாமுயிர் இய்யும் இருவும் என்று தொடங்கும் சூத்திரத்தில் (147) கூறுகிறார். வடமொழித் தொடர்கள் பல தமிழிலக்கியத்தில் அப்படியே பயிலப்பட்டு வந்ததால் அச்சொற்களில் காணப்படும் புணர்ச்சி முறையை உணர்ந்து கொள்வதன் பொருட்டுத் தமிழ்ப் புணரியல்களுக்குப் புறனடையாகப் பவணந்தி ஒரு சூத்திரம் அமைத்தார். அதில் வடசொலின் இயம்பிய கொளாதவும் - பொருந்தியவாற்றிற்கு இயையப்புணர்த்தல் யாவர்க்கும் நெறியே என்ற பகுதியில் வடமொழியில் பரம+ஆனந்தம்=பரமானந்தம் என்ற தீர்க்க (நெடில்) சந்தி, சூர்ய+உதயம் = சூர்யோதயம் என்ற குண சந்தி, சர்வ+அய்ச்வர்யம் - சர்வைச்வர்யம் என்ற விருத்தி சந்தி முதலியன விளக்கப்பட்டுள்ளன.

தமிழில் வழங்கிவரும் சொற்களுள் சில தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களைக் கொண்டவை "தற்சமம்" எனப்படும் எ-டு காரணம். ஒருசில வடமொழிக்கே சிறப்பான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு சுகி. மற்றும் சில பொதுவும் சிறப்புமான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு அரன், பின் இரண்டு வகைகளும் தற்பவம் எனப்படுபவை, பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும் ஈரெழுத்தானும் இயைவன வடசொல் என்ற சூத்திரத்தில் (274) ஆசிரியர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.

நச்சினார்க்கினியர் சொல்லதிகார வேற்றுமை இயலில் மூன்றாம் வேற்றுமை வாய்ப்பாடுகளைக் கூறும்போது (சூ75) "முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது" - இதனுண் முயற்சியில் என்பது காரகவேது; பிறத்தலான் ஒலி நிலை யாது என்பது ஞாபகவேது என்கிறார். இங்கே வடநூலார் கூறும் ஏதுவின் இருநிலைகளை உரையாசிரியர் காட்டுகிறார்.

தொல்காப்பியர் காலத்தில் வடசொற்கள் செய்யுளில் பயிலப்பட்டு வந்துள்ளதை அவர் எச்சவியலில் கூறும் சூத்திரம் (401) தெளிவுபடுத்துகிறது. வடசொற்கிளவி வட வெழுத்தோரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே என்ற சூத்திரத்தால் வடசொற்களை எவ்வாறு தமிழ் மொழியின் இயல்புக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இச்சொற்களுள் சான் றோர் செய்யுட் கண் வருவன, வாரி, மணி, காரணம், மீனம் போல்வன எனவும், ஒழிந்தோர் செய்யுட்கண் வருவன கமலம், ஞானம், தாரம் போல்வன எனவும் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், மேலே காட்டப்பட்ட "மீனம்" என்பது தமிழ்ச்சொல்லே என்பது இன்றைய மொழி ஆராய்ச்சியாளர் துணிபு, நச்சினார்க்கினியரின் இக்கூற்றை அக்காலத்து ஒப்பியல் ஆய்வு முறை இல்லாத நிலையை எண்ணி அமைதி கொள்ள வேண்டும்.

சேனாவரையர் (13நூ) தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் ஆங்காங்கு வடமொழி நூற்பொருளைத் துணையாகக் கொண்டு பொருள் கூறிச் செல்கிறார். எடுத்துக் காட்டாக பெயரியல் சூ. 182இன் உரையில் "இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலும் என விசேடித்தல் இரு வகைத்து" என்று குறிப்பிடுகிறார். இவற்றை வடநூலார் அயோக வியவச்சேதம், அந்யயோக வியவச்சேதம் என்பர்.

மூன்றாம் வேற்றுமை குறித்த சூத்திரத்திற்கு (சூ-74) உரை எழுதுகையில் சேனாவரையர் வடநூலுட் பொருள் வேற்றுமையல்லது உருபு வேற்றுமையான்; ஒரு வேற்று மையாக ஓதப்பட்டமையானும் என்று கூறுவது வடநூலுட் பல உருபுகள் உருவத்தில் மாறுபடினும் பொருளில் மாறுபடாவிடில், அவை ஒரு வேற்றுமையாகக் கொள்ளப்பட வில்லை என்பதை அவர் சுட்டுவதாக அமைகிறது.

வேற்றுமை இயலின் இரண்டாம் வேற்றுமை பற்றிய சூத்திர (சூ71) உரையில் செயப்படுபொருள் இயற்றப்படுவதும் வேறுபடுத்தப்படுவதும் எய்தப்படுவதும் என மூவகைப்படும் எனக் குறிக்கிறார். இவை பர்த்ருஹரியில் வாக்கியபதீயம் என்ற இலக்கணநூலில் நிர்வர்த்தியம், விகார்யம், பிராப்யம் என்று கூறப்படுகின்றன.

இது சேனாவரையரின் வடமொழி இலக்கணப் பயிற்சியைக் காட்டுகிறது. இவற்றினின்றும் சிவஞான முனிவர் கூறியதுபோல் சேனாவரையர் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்தவர் என்று கருத இடமளிக்கிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

ஒரு மொழியின் இலக்கணம் சமகாலத்திய இலக்கியத்தின் அடிப்படையிலேயே தோன்றுவதாகும். தொல்காப்பியர் காலத்து இலக்கணம் அவர் காலத்து வழங்கிய இலக்கிய மொழியின் அடிப்படையிலே அமைந்தது. அதுபோலவேதான் நன்னூல், பிரயோக விவேகம் முதலான இலக்கண நூல்களும். இக்கட்டுரையின் நோக்கம் வடமொழித் தாக்கம் தமிழிலக்கணத்தில் காலந்தோறும் எந்த அளவுக்கு இருந்திருக்கக் கூடும் என்று சிந்திப்பதேயாகும். ஒரு சில இலக்கண நூல்களே, அவற்றுள்ளும் ஒரு சில இயல்புகளே இங்கே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

தொல்காப்பியர் காலத்தில் இலக்கியத்தில் வடசொற்கள் ஓரளவு பயின்று வரப்பட்டன என்பதை அவர் கூறும் சொற்பாகுபாட்டில் ‘வடசொல்’ (சூ. 401) என்ற பிரிவைக் கூறியதனின்றும் அச்சொற்களைத் தமிழில் எவ்வாறு ஆளவேண்டும் என்றும் (சூ. 402) அவர் சொல்லியதனின்றும் அறிகிறோம்.

‘அ’ ‘இ’ முதலான ஒலிகளைக் குறிப்பதற்குப் பிராதிசாக்கியங்களில் ‘அ’ என்ற விகுதியும் ‘காரம்’ என்ற விகுதியும் சேர்க்கப்படுகின்றன. காரம் என்பது ‘செய்யப்படுதல்’ என்று பொருள்படும். தைத்திரிய பிராதிசாக்கியம் (116, 21) இகரம் என்றால் ‘இ’ என்ற ஒலியையும் ‘யகரம்’ என்றால் ‘ய்’ என்ற ஒலியையும் குறிக்கும். தொல்காப்பியர் ஞ ந ம வ இயையினும் உகர நிலையும் (எழு. 298) என்ற சூத்திரத்தில் ‘அ’, ‘காரம்’ என்று மேற்கூறப்பட்ட இரண்டையும் பயன்படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.

தொல்காப்பியர் காலத்தில் வேத நெறி நிற்போரும், சைனரும் பவுத்தரும் தமிழகத்தில் வாழ்ந்து வந்ததால் சமற்கிருதம், பாலி, அர்த்தமாகதி போன்ற கராக்ருதத்தையும் அவர் அறிந்திருக்கக் கூடும் என்பது எதிர்பார்க்கத்தக்கதே. தெய்வம், மாத்திரை, ஏது முதலான சொற்கள் இதற்குச் சான்று. ஆயினும் தொல்காப்பியர் தமிழ் மொழியின் சிறப்பியல்பைக் கருத்தில்கொண்டே சூத்திரங்களை இயற்றியிருக்கிறார்

என்பதை மறுந்துவிடலாகாது. பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் கூறியிருப்பதுபோல் தொல்காப்பியரின் பெயர், வினை, இடை, உரி என்ற சொற்பாகுபாடு வடமொழி பிராதிசாக்கியங்களும் நிருக்தமும் கூறியுள்ள நாமம், ஆக்யாதம், உபசர்க்கம், நிபாதம் என்ற நால்வகைப் பிரிவை ஒட்டியது என்பது ஏற்கத்தக்கதல்ல. இடையும் உரியும், உபசர்க்கமும் நிபாதமும் போல்வன அல்ல, இலக்கண நூலை யாக்கும் முறையில் தொல்காப்பியரும் வடமொழி இலக்கணக்காரர்களும் ஏறத்தாழ ஒரே நெறியைப் பொருத்தும் இடங்களில் பின்பற்றியிருக்கிறார்கள் என்பதைக் காணலாம். 

எடுத்துக்காட்டாக வேற்றுமை இயலில் வேற்றுமை அமைப்பு முறையும் அதன் பொருள் விளக்கங்களும் ஏறத்தாழ ஒத்துக் காணப்படுகின்றன. இத்தகைய நிலையை புணர்ச்சி விதிகளில் காண இயலாது. புணர்ச்சியில் இரு மொழிகளும் வெவ்வேறு போக்குடையவை, ஒலியின் இயல்பை உணர்த்தத் தொல்காப்பியர் ஒலிகளை உயிர், மெய் என்று பகுத்தார். அய்தரேய ஆரண்யகமும் (ஐஐ-2-1) இப்படியே கூறுகிறது. இக்கருத்து ஒலி இயலாருக்குத் தனித்தனியே இயல்பாக எழக்கூடிய ஒன்று என்று கொள்ள வேண்டும். 

வீரசோழியம் : ஆசிரியர் புத்தமித்திரனார் தமிழ், சமற்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் என்பது இவர் நூலை ஆக்கியுள்ள பாங்கிலிருந்தே தெரிகிறது. இவர் வடமொழி மரபுகளையும் தழுவி தமிழிலக்கணத்தை ஆக்கியிருக்கிறார் என்பதை அவரே தெளிவாகச் சொல்கிறார். வடநூல் மரபும் புகன்றுகொண்டே உரைப்பன்(3) சந்திப்படலம், காரகப்படலம், தாதுப்படலம், கிரியா பதப்படலம் போன்ற பாகுபாடுகள் வடமொழியில் காரகம் (வேற்றுமை), தாது (சொல்லின் வேர்ப்பகுதி) கிரியை (வினை) முதலிய வடமொழி மரபுச் சொற்களையொட்டி ஆளப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். தொல்காப்பியம் எழுத்து அதிகாரத்தின் புணரியலும் மயங்கியலும் கூறியிருப்பனவற்றை வீரசோழியம் சந்திப்படலத்தில் அடக்குகிறது.

புணர்ச்சி நிலைகளைக் கூறும்போது வடமொழி இலக்கண குறியீடுகளான லோபம் (கெடுதல்) ஆகமம் (தோன்றல்) ஆதேசம் (ஒன்றினிடத்துப் பிறிதொன்று வருதல்) என்ற மூவகை விகாரங்கள் (மாற்றங்களை) குறிப்பிடப்படுகின்றன; குண சந்தியும் விருத்தி சந்தியும் வடமொழிக்கே உரியனவாயினும் அவையும் ஆரியத்துள் காணப்படுவனவாக இந்நூலில் விளக்கப்படுகின்றன. இத்தகைய போக்கிற்கு யாது காரணமாயிருக்கக் கூடும்?
தொல்காப்பியர் காலத்தில் தமிழ் மொழியில் அருகி வழங்கிய வடசொற்கள் தமிழிலக்கியத்தில் 11ஆம் நூற்றாண்டில் குறிப்பாக சமண, பவுத்த காப்பியங்கள் மிகுதியாக வழங்கப் பெற்ற காரணத்தால் அத்தகைய தமிழிலக்கியங்களைப் பயிலுவோருக்கு உதவியாக இருக்கும் வகையில் வடமொழி இலக்கணக் கூறுகளையும் ஆசிரியர் அமைத்திருத்தல் வேண்டும் என்று கருதலாம். வடமொழியில் நகரம் எதிர்மறைப் பொருளைத்தரும். கெய்யை முதலாக உடைய சொல் தொடரின் ‘ந’ என்பதில் உள்ள நகர ஒற்று கெட்டு அகரம் எதிர்மறையை உணர்த்தும். எ-டு ந+சுரன்=அசுரன் உயிரை முதலாக உடைய சொல் தொடரின் ‘ந’ என்பது ‘அந்’ என மாறும். எ-டு ந+இஷ்டம்=அநிஷ்டம். இவை போன்றவற்றை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார்.

முதல் வேற்றுமையில் ‘சு’ என்னும் உருபு சேர்ந்து பின்  கெடுகிறது என்பது வடமொழி இலக்கண மரபு. தமிழுக்கு இது பொருந்தாது. எனினும் வடமொழிக்கு ஈடாகத் தமிழ்மொழி இலக்கணம் இருக்கவேண்டும் என்ற தவறான கருத்தினால் அர், ஆர் முதலான உருபுகளோடு ‘அ’ என்பதையும் இவர் சேர்த்துள்ளார்.

பவணந்தி : தமிழ் மொழிக்கே சிறப்பாக இலக்கணம் வரைந்தாரேனும் பவணந்தி வடமொழி மரபையும் கருத்தில் கொண்டவராதலால் எழுத்து அதிகாரத்தில் புறத்திலக்கண கூறப்புகுந்த நேரத்தில் ‘சொல் இயல்’ என்று கூறாது ‘பதவியல்’ என்று கூறினார்.

வடமொழிக்கு சிறப்பாக உள்ள ரு  (R) முதலான எழுத்துக்கள் தமிழில் ‘இ’ ‘இரு’ என்றவாறு திரிகின்றன என்பதை ‘ஏழாமுயிர் இய்யும் இருவும்’ என்று தொடங்கும் சூத்திரத்தில் (147) கூறுகிறார். வடமொழித் தொடர்கள் பல தமிழிலக்கியத்தில் அப்படியே பயிலப்பட்டு வந்ததால் அச்சொற்களில் காணப்படும் புணர்ச்சி முறையை உணர்ந்து கொள்வதன் பொருட்டுத் தமிழ்ப் புணரியல்களுக்குப் புறனடையாகப் பவணந்தி ஒரு சூத்திரம் அமைத்தார். அதில் ‘வடசொலின் இயம்பிய கொளாதவும் - பொருந்தியவாற்றிற்கு இயையப்புணர்த்தல் யாவர்க்கும் நெறியே’ என்ற பகுதியல் வடமொழியில் பரம+ஆனந்தம்=பரமானந்தம் என்ற தீர்க்க (நெடில்) சந்தி, சூர்ய+உதயம் = சூர்யோதயம் என்ற குண சந்தி, சர்வ+அய்ச்வர்யம் - சர்வைச்வர்யம் என்ற விருத்தி சந்தி முதலியன விளக்கப்பட்டுள்ளன.

தமிழில் வழங்கிவரும் சொற்களுள் சில தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான எழுத்துக்களைக் கொண்டவை ‘தற்சமம்’ எனப்படும் எ-டு காரணம். ஒருசில வடமொழிக்கே சிறப்பான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு சுகி. மற்றும் சில பொதுவும் சிறப்புமான எழுத்துக்களைக் கொண்டவை எ-டு அரன், பின் இரண்டு வகைகளும் தற்பவம் எனப்படுபவை, ‘பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும் ஈரெழுத்தானும் இயைவன வடசொல்’ என்ற சூத்திரத்தில் (274) ஆசிரியர் இதனைத் தெளிவுபடுத்துகிறார்.
நச்சினார்க்கினியர் சொல்லதிகார வேற்றுமை இயலில் மூன்றாம் வேற்றுமை வாய்ப்பாடுகளைக் கூறும்போது (சூ75) ‘முயற்சியின் பிறத்தலான் ஒலி நிலையாது’ - இதனுண் முயற்சியில் என்பது காரகவேது; ‘பிறத்தலான் ஒலி நிலை யாது’ என்பது ஞாபகவேது என்கிறார். இங்கே வடநூலார் கூறும் ஏதுவின் இருநிலைகளை உரையாசிரியர் காட்டுகிறார்.

தொல்காப்பியர் காலத்தில் வடசொற்கள் செய்யுளில் பயிலப்பட்டு வந்துள்ளதை அவர் எச்சவியலில் கூறும் சூத்திரம் (401) தெளிவுபடுத்துகிறது. ‘வடசொற்கிளவி வடவெழுத்தோரீஇ எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே’ என்ற சூத்திரத்தால் வடசொற்களை எவ்வாறு தமிழ் மொழியின் இயல்புக்கேற்ப மாற்றிப் பயன்படுத்தவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இச்சொற்களுள் சான்றோர் செய்யுட் கண் வருவன, வாரி, மணி, காரணம், மீனம் போல்வன எனவும், ஒழிந்தோர் செய்யுட்கண் வருவன கமலம், ஞானம், தாரம் போல்வன எனவும் நச்சினார்க்கினியர் எடுத்துக்காட்டுகிறார். ஆனால், மேலே காட்டப்பட்ட ‘மீனம்’ என்பது தமிழ்ச்சொல்லே என்பது இன்றைய மொழி ஆராய்ச்சியாளர் துணிபு, நச்சினார்க்கினியரின் இக்கூற்றை அக்காலத்து ஒப்பியல் ஆய்வு முறை இல்லாத நிலையை எண்ணி அமைதி கொள்ள வேண்டும். 

சேனாவரையர் (13நூ) தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் ஆங்காங்கு வடமொழி நூற்பொருளைத் துணையாகக் கொண்டு பொருள் கூறிச் செல்கிறார். எடுத்துக்காட்டாக பெயரியல் சூ. 182இன் உரையில் “இயைபின்மை நீக்கலும் பிறிதினியைபு நீக்கலும் என விசேடித்தல் இரு வகைத்து” என்று குறிப்பிடுகிறார். இவற்றை வடநூலார் அயோக வியவச்சேதம், அந்யயோக வியவச்சேதம் என்பர்.

மூன்றாம் வேற்றுமை குறித்த சூத்திரத்திற்கு (சூ-74) உரை எழுதுகையில் சேனாவரையர் ‘வடநூலுட் பொருள் வேற்றுமையல்லது உருபு வேற்றுமையான்; ஒரு வேற்றுமையாக ஓதப்பட்டமையானும்’ என்று கூறுவது ‘வடநூலுட் பல உருபுகள் உருவத்தில் மாறுபடினும் பொருளில் மாறுபடாவிடில், அவை ஒரு வேற்றுமையாகக் கொள்ளப்படவில்லை என்பதை அவர் சுட்டுவதாக அமைகிறது.

வேற்றுமை இயலின் இரண்டாம் வேற்றுமை பற்றிய சூத்திர (சூ71) உரையில் செயப்படுபொருள் ‘இயற்றப்படுவதும் வேறுபடுத்தப்படுவதும் எய்தப்படுவதும் என மூவகைப்படும் எனக் குறிக்கிறார். இவை பர்த்ருஹரியில் வாக்கியபதீயம் என்ற இலக்கணநூலில் ‘நிர்வர்த்தியம், விகார்யம், பிராப்யம்’ என்று கூறப்படுகின்றன. இது சேனாவரையரின் வடமொழி இலக்கணப் பயிற்சியைக் காட்டுகிறது. இவற்றினின்றும் சிவஞான முனிவர் கூறியதுபோல் சேனாவரையர் ‘வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்தவர்’ என்று கருத இடமளிக்கிறது.

பிரயோக விவேக ஆசிரியர் சுப்பிரமணிய தீட்சிதர் தாம் இயற்றிய நூலின் சிறப்பியல்பையும் பயனையும் கூறுமிடத்து ‘தொல்காப்பியனாரும் நன்னூலாரும் கூறிய வடமொழி இலக்கணம் பெற்ற தற்சமந் தற்பவமாகத் தத்தம் நூலுள்ளே எழுத்திற்கும் சொல்லிற்கும் காரணக்குறி இடுகுறியாகிய யோகரூட நாமங்களைச் சிறுபான்மை கூறினார். அவ்வாறு சிறுபான்மை கூறாது, யாம் இந்நூலுட் பெரும்பான்மையும் தற்சமம் தற்பவங்களாற் கூறினாம். இப்பெரும்பான்மையும் கூறியது, வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்று என்பதறியாது சம்ஞாபேதத்தாலும் பாடை வேற்றுமையாலும் இகழ்ந்து வேறென்பாரை நோக்கி என்க. இந்நூல் செய்ததற்கும் இதுவே பயன்’ என்று விளக்குகிறார். 

ஆகவே, இவர் அகத்தியத்திற்கும் தொல்காப்பியத்திற்கும் முதனூல் பாணினி இயற்றிய அஷ்டாத்யாயியும் இந்திரன் ஆக்கிய இலக்கணமும் என்று கொண்டார். சென்ற நூற்றாண்டில் கால்டுவெலும் இன்றைய நூற்றாண்டில் பர்ரோ, எமனோ, சுநீதிகுமார் சாட்டர்ஜி முதலான பல்வேறு ஆரிய திராவிட மொழியாய்வாளர்களும் இக்கூற்று முற்றிலும் தவறானது என்பதைத் தெள்ளிதின் நிலை நாட்டிவிட்டதை நீங்கள் அறிவீர்கள். இன்னும் சொல்லப்போனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இக்கருத்தைச் சிவஞானமுனிவர் தெளிவாகக் கூறிவிட்டார் என்பதை நாம் காண்கிறோம்.

காரகத்திற்குரிய பெயர்களுள் கருத்தா, கருமம், கரணம், அவதி, ஆதாரம் என்ற வடமொழிப் பெயர்களையே எடுத்தாள்கிறார். ஆறாம் வேற்றுமையைக் காரகமாகக் கொள்பவன் என்ற பொருளில் வரும் நான்காம் வேற்றுமைக்குரிய காரகத்தை மட்டும் ‘கோளி’ என்ற தமிழ்ச் சொல்லாகக் குறிப்பிடுகிறார்.

வடமொழியில் ஆண், பெண், அலி என்ற முப்பாலிலும் வரும் சொல் ஏழு வேற்றுமைகளையும், ஒருமை, இருமை, பன்மை என்ற மூன்று எண்களையும் கொண்டு உறழ 63 வடிவங்களைப் பெறுகின்றன. இவற்றிற்கொப்பத் தமிழிலும் 64 வடிவங்கள் உளவாக ஆசிரியர் கருதுகின்றார். பெயர் உருபு எட்டுடன் வேற்றுமை உருபு எட்டையும் உறழ்ந்து இவ்வெண்ணைப் பெறுகிறார். வினையியலில் துமந்தம், துவாந்தம் என்பவற்றைத் தமிழ்ச் சொற்களோடு தொடர்புபடுத்திக் காட்டுகிறார்.

இலக்கணக்கொத்து ஆசிரியர் சாமிநாத தேசிகர் தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். இவரது இலக்கணக் கொத்து வடமொழி இலக்கணத்தை உட்கொண்டு அமைந்துள்ளது. இவரது தீவிர வடமொழிப்பற்று இவரை ‘வடநூலை விட்டுத் தனியே தமிழ் நடவாது’ என்று கூறும் அளவிற்கு அமைந்துள்ளது. 17-ஆம் நூற்றாண்டில் அவர் காலத்தில் நிலவிய வடமொழிச் செல்வாக்கு, ‘அய்ந்தெழுத்தால் (ற, ன, ழ, எ, ஒ) ஒரு பாடை என்று அறையவும் நாணுவர் அறிவுடையோரே’ என்று அவர் கூறும் அளவிற்கு மிகுந்திருந்தது. வடநூலார் ‘சந்தியக்கரம்’ என்பதை ‘இணையெழுத்து’ என்றும் ‘ஏகவாக்கியம் பின்னவாக்கியம்’ என்பனவற்றை ‘ஒரு தொடர், பல தொடர்’ எனவும் மொழிபெயர்த்துக் கூறியுள்ளார்.

தொன்னூல் விளக்க ஆசிரியரான வீரமாமுனிவர் பொருளதிகாரத்தில் விரித்துரைக்கப்படும் பொருளாகத் தொல்காப்பியல் கூறிய அகம், புறம் என்பவற்றை விடுத்து அறம், பொருள், இன்பம், வீடு என்று கொண்டார். அதற்கு அவர் கூறும் காரணம்-பொருணூல் தந்த செந்தமிழுணர்ந்தோர் மற்றை யாவும் ஒழிய அகப்பொருள் எனச் சிற்றின்பம் ஒன்றையும், புறப்பொருள் எனப் படைச்சேவகம் ஒன்றையும் விரித்துரைத்தார். அங்ஙனம் பொதுப்படாது உரைத்த நூல் சிறுபான்மையாகையான் இங்ஙனம் அறம் முதல் நான்கிற்கேற்ப பொது நூலாக இவ்வதிகாரம் முடியும் எனவே கொள்க என்பதாகும். இப்படி வடநூலார் மரபையொட்டித் தண்டி முதலாயினோர் கூறியவாறு நால்வகைப் புருடார்த்தங்களே அகமும் புறமுமாம் என்பதோடமையாது இப்பொருள், வழக்கு, தேற்றம், தோற்றம் என மூவகைப்படும் என்றும், வடநூலார் இவற்றை ஆசாரம், விவகாரம், பிராயச்சித்தம் என்பர் என்றும் கூறினார். பொருளிலக்கணம் கூறவந்த வீரமாமுனிவர் மிருதி நூலில் கூறப்பட்டவற்றைக் கூறுவது வியப்பாகும். புறத்திணை ஒழுக்கத்தைக் கூற முற்பட்டவர், ‘வேதநூல், நீதிநூல், மனு நூல் முதலிய நூல் வழி விலக்கியனவும் விதித்தனவும் எடுத்துக்காட்டித் தன் பொருள் தோன்ற விளக்கல் நூற்புறத்திணையாம் என்றாலும் வடநூற் கருத்துகளை மரபுக்குப் புறம்பாக இலக்கண நூலில் அமைப்பது பொருத்தமாகப்படவில்லை.

ஆரிய மொழிகளைத் தமிழிடத்துரைக்குங்காலைப்  பொதுவெழுத்தால் வரும் பதமே சிறப்புடைத்து; அல்லன வருதல் சிறப்பன்று என்ற மரபு வழிப்பட்ட கருத்தை ஏற்றுக் கொள்கிறார். தமிழிலக்கணக் குறியீட்டுச்  சொற்களுக்கு ஒத்த தன்மை உடைய வடசொற்களைத் தருவதை ஆங்காங்கு காண்கிறோம். ‘வடநூலார் பகாப்பதத்தை ‘ரூடம்’ என்பர் (சூ.46) விகுதியை பிரத்தியயம் என்பர் (சூ, 84). அநீதி, அனாதி, நிராயுதன், நிருவிகல்பம் முதலான எதிர்மறை வடசொற்கள் தமிழில் பயில்வதால் அவற்றிற்குரிய வடமொழி இலக்கணத்தை 87ஆம் சூத்திரத்தில் தருகிறார். எனினும் ஒரு சில இடங்களில் தவறான செய்திகளையும் தருகின்றார் - ‘அடைமொழியை வடநூலார் அவ்வியயம்’ என்பர் (93) ‘தந்திரம்’ என்னும் வடமொழியை நூலென்று வழங்குவது தமிழ் வழக்கெனக் கொள்க’ என்றாற் போல்வன சில.

ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சிவஞான சுவாமிகள் வடமொழியையும் தமிழ் மொழியையும் கற்றுத் தெளிந்தவர். வடமொழித் தத்துவ நூல்களையும் தருக்க நூல்களையும் கற்றவர். அப்படிக் கற்றுத் தெளிந்த காரணத்தால்தான் அவருக்கு முன் வந்த இலக்கணக் கொத்து, பிரயோக விவேகம் போன்ற இலக்கண நூலாசிரியர்களைப் போலன்றி இவ்விரு மொழிகளும் இன்றைய மொழி நூலார் கூறுவதுபோல, வேறுபட்ட ஆரிய, திராவிட மொழியினங்களைச் சார்ந்தவை என்பதை இவர் தொல்காப்பியப் பாயிர விருத்தியில் பின்வருமாறு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். ‘அய்ந்திரம் நோக்கித் தொகுத்தான் எனின், தமிழ்மொழிப் புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல்லிலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம், புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும், குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப்பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படாமையானும்,
இரு மொழியறிவைப் பெற்றவராகலின் ஆங்காங்கு ஒப்புநோக்கு முறையில் சில கருத்துக்களைக் கூறிச் செல்கிறார். இத்தகைய ஒப்பாய்வு தெளிவைத்தரும்.

எடுத்துக்காட்டாக ‘அதங்கோட்டாசாற்கு அரில்தபத் தெரித்து, என்ற வரியில் தெரிவித்து என நிற்கப்பாலது ‘தெரித்து’ என ‘விவ்’ விகுதி தொக்கி நின்றது. இங்ஙனம் வருவனவற்றை வட நூலார் ‘அந்தர் பாவிதணிச்’ என்பர். பாயிரத்தின் சிறப்பியல்பைக் கூறும்போது யாப்பு, முதலிய பொருள், கேட்போர், பயன் இந்நான்கையும் வடநூலார் ஆனந்தரியம், விடயம், அதிகாரிகள், பிரயோசனம்’ என்று கூறுவர் என்கிறார். முத்தமிழ் இலக்கணம் அகத்தியரால் ஆக்கப்பட்டது ஏன் என்பதை விளக்கும்போது அவரது மற்றொரு கருத்தைக் காண்கிறோம் - ‘சோதிடம்’ முதலிய பிற கலைகளெல்லாம் ஆரியத்தினும் தமிழினும் ஏனைய மொழிகளினும், வேறுபாடு இன்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்க வேண்டாமையானும், இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் தமிழ் நிலத்துச் சில வேறுபாடு உடைமையின் அவற்றை வேறு விதிக்க வேண்டுதலானும், அதுபற்றி அகத்தியத்துள் இம்மூன்றுமே எடுத்தோதினார்.(2)

‘அகர இகரம் அய்காரமாகும்’, ‘அகர உகரம் ஒளகாரமாகும்’ என்ற சூத்திரங்கள் வடமொழி மரபை உளத்தில் கொண்டு போலும், சிவஞான முனிவர் இச்சூத்திரங்கள் சந்தியக்கரங்களை உணர்த்துகின்றன என்று கொண்டார். இக்கூற்றை மறுத்து, வேங்கடராஜுலு ரெட்டியார் அவர்கள் தொல்காப்பியம் எழுத்து அதிகார ஆராய்ச்சி என்ற நூலில், ‘இவை சந்தியெழுத்தின் இயல்பினைக் கூறுவனவாயின். ஆசிரியர், இவற்றைத் தனியெழுத்துக்களின் இயல்பினைக் கூறும் நூன்மரபில் வைத்திருப்பார். அவ்வாறன்றி, மொழியிலுள்ள எழுத்துக்களின் இயல்பினைக் கூறும் மொழி மரபில் இவற்றை வைத்திருத்தலின், மொழியிலுள்ள அய்காரத்திற்கு ‘அ, இ’ என்பது வரும் என்றும் ஒளகாரத்திற்கு ‘அ, உ’ என்பது வரும் என்றுமே அவர் கருத்துக் கொண்டார் என்பது அறியப்படும் என்று கூறியுள்ளார்.

‘அகரத்திம்பர் தோன்றும்’ என்னும் சூத்திரத்தின் பொருள் ‘அகர இகரமேயன்றி அவற்றோடு யகர மெய்யும் சேர்ந்து அய்காரமாகும். அகர உகரமே யன்றி அவற்றோடு வகர மெய் சேர்த்து ஒளகாரமாகும் என்றும் சிவஞான முனிவர் கூறியுள்ளார். இதற்கு அடிப்படையாக அவருக்கு அமைந்தது, ‘அய்காரத்தில் யுகரமும் ஒளகாரத்தில் வகரமும்; கலந்துள்ளன என்பது வடமொழி இலக்கண மாபாடியக்காரரான பதஞ்சலியாருக்கு உடன்பாடு என்பதாகும்.

“வடநூல் உணர்ந்தார்க்கு அன்றித் தமிழ் இயல்பு விளங்காது என்பதும் உணர்ந்து கோடற்கு அன்றே, பாயிரத்துள் “அய்ந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” என்று கூறுவதனின்றும் இருமொழியறிவின் இன்றியமையாத் தன்மையை சிவஞான முனிவர் உணர்ந்தவர்” என்பது பெறப்படுகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கலி.பூங்குன்றன்

அபாண்டம் - அழிபழி சுமத்துவது - அவாளின் பிறவிப் புத்தி

திருவள்ளுவர் மீது திரிநூல்காரர்களுக்கு அவ்வளவுப் பெரிய பற்றா? குறளின் கருத்தின் மீது கொள்ளை ஆசையா?

அப்படியெல்லாம் இருந்ததற்கான எந்தச் சுவடும் கிடையாது - கிடையவே கிடையாது.

தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில், திராவிட இயக்கம் பூத்த சித்தாந்த மண்ணில் நரிகள் நாட்டாண்மை செய்ய முடியாது என்பது தெரிந்த செய்தியே - அவாளுக்கு நம்மைவிட "நன்னாவே" தெரியும்.

ஊடுருவி அழிப்பது - திரிபுவாதம் செய்வதெல்லாம் இந்தத் திரி நூலார்க் கூட்டத்திற்குக் கைவந்த கலையாயிற்றே. அதனால்தான் கைவரிசையைக் காட்ட முனைந்து "கைகால் உடைந்து" கிடக்கின்றனர்.

"பார்ப்பனர்கள் படித்தவர்களே தவிர அறிவாளிகள் கிடையாது" என்பார் அண்ணல் அம்பேத்கர் (Learned Not Intelligent).

திருவள்ளுவர் விடயத்திலும் இப்பொழுது அதுதான் நடந்தது - நடந்தே விட்டது. திருக்குறள் எங்களுக்கு உடன்பாடுதான் என்று உரிமை கொண்டாடியிருக்கலாம்.

அதைவிட்டுவிட்டு திருவள்ளுவர் யார் தெரியுமா? எங்களவாள் - இந்து மதத்தைச் சேர்ந்தவாள் என்று காட்ட வேண்டும் எனத் திட்டமிட்டு, திருவள்ளுவர்க்குக் காவி ஆடை போர்த்தி நெற்றியிலே பட்டையையும், கழுத்திலே உருத்திராட்ச கொட்டையையும் அணிவிக்கப்போய் - அது எதிர் வினையை - விளைவை ஏற்படுத்தி, சங்பரிவார் பிஜேபி கூட்டத்தை சும்மா பதறப் பதறப் பந்தாடித் தீர்த்து வருகிறது தமிழகம்.

வாயை வைத்துக்கொண்டு சும்மாதான் இருக்க முடிந்ததா? அதுதான் இல்லை; ஒன்று கொடுத்து ஒன்பது வாங்கியே தீர வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர்.

இந்த வார 'துக்ளக்'கில் கூட திருவாளர் குருமூர்த்தி குடுமி என்ன எழுதுகிறது தெரியுமா?

'திருக்குறளை மலம்' என்று தந்தை பெரியார் கூறியுள்ளாராம் ('துக்ளக்', 13.11.2019, பக். 19)

இதே கருத்தைப் பார்ப்பனர் தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டு, தொலைக்காட்சிகளில் அபாண்டமாக இதே பொய்யைப் போக்கிரித்தனமாக உதிர்த்தனர்.

இந்த இடத்திலே சவால் விட்டே கேட்கிறோம் - தந்தை பெரியார் எப்பொழுது எந்த இடத்தில் இதனைக் கூறினார் என்பதை ஆதாரப்பூர்வமாகக் கூறட்டும் பார்க்கலாம். ஒரு சவால் அல்ல. பல சவால்களாகவே விடுகிறோம்!

அறிவு நாணயம் என்ற ஒன்று கடுகு மூக்கு அளவுக்கு இருக்குமானால் ஆதாரத்தோடு அடுத்த இதழில் எழுத முன் வரட்டும் இந்தக் குருமூர்த்தி வகையறாக்கள்!

விவஸ்தை கெட்டதுகளுக்கு ஏடு ஒரு கேடா!

எதையும் ஆதாரத்துடன் கூறும் அறிவு நாணயமின்றி அள்ளி விட்டு அள்ளி முடியும் அற்பத்தனம் அவர்களின் டி.என்.ஏயிலேயே அமைந்துவிட்டது போலும்!

முதல் திருக்குறள் மாநாடு நடத்தியவர் பெரியாரே! (1949இல்)

மலிவு விலையில் அச்சிட்டு மக்கள் மத்தியிலே கொண்டு சென்றவரும் அவரே! “குடிஅரசு" தலையங்கத்தின் மேற்பகுதியில் முதன்முதலில் குறளைக் கையாண்ட தலைவரும் அவரே!!

ஆனால் இவர்களின் நிலை என்ன? "தீக்குறளை சென் றோதோம்" என்ற ஆண்டாளின் பாடல் வரிக்குத் "தீய திருக் குறளை ஓதமாட்டோம்" என்று பொருள் கூறியவராயிற்றே - சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி. குறளை என்றால் குள்ளம், கோட்சொல் குற்றம் என்று பொருள் (மதுரைத் தமிழ்ப் பேரகராதியில்)

தொலக்காட்சியில் வாதம் புரிய வந்த ஒரு அம்பி, "அப்படி சங்கராச்சாரியார் சொன்னது உண்மைதான் - பிறகு மாற்றிக் கொண்டு விட்டார் தன் கருத்தை" என்று கூறுகிறார்.

அவருக்கு ஒரு சாவல்! சங்கராச்சாரியார் எப்பொழுது மாற்றிக் கொண்டார்? மாற்றிக் கொண்டு அவர் திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் குறித்தும் சொன்னது என்ன என்று சொல்லுங்கள் பார்க்கலாம்!

செத்துப்போன மூத்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி மட்டுமல்ல; அவரைத் தொடர்ந்து வந்த (தண்டத்தைவிட்டு இரவோடு இரவாக ஓடிய காம.... கோடி) ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார்?

"திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதலில் பத்துக் குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டு பொருட்பால், காமத்துப்பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை" என்று காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திர சரஸ்வதி கூறியதற்கு ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் 2.4.1982 அன்று நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதே!.

அதையும் தாண்டி "திருக்குறளில் உள்ள அறத்துப்பால் கிட்டதட்ட பகவத் கீதையின் தமிழாக்கமேயாகும்" (தினத்தந்தி, 16.4.2004) என்று சொன்னவரும் இதே சாட்சாத் ஜெயேந்திர சரஸ்வதிதான்!

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்று சொன்ன திருவள்ளுவர் எங்கே? "நான்கு வருணங்களையும் நானே படைத்தேன், அப்படி என்னால் படைக்கப்பட்டு இருந்தாலும் நானே நினைத்தால்கூட அதனை மாற்றியமைக்கவே முடியாது" என்று 'பகவான்' கிருஷ்ணன் சொன்னான் என்பது தானே கீதையின் வாசகம். (கீதை அத்தியாம் 4, சுலோகம் 13).

"சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்" என்று தொடங்கும் கீதையின் வரிகளைத் தொடர்ந்து சொல்லப்பட்ட குண-கர்ம விபாசக என்பதில் ஏதோ தத்துவார்த்தம் இருப்பது போல பேசினார் -  தொலைக்காட்சியில் பிஜேபி பிரமுகர்; என்ன தத்துவார்த்தம் என்பதை அவரால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

அவர்களின் லோகக் குருவான சந்திரசேகரேந்திர சரஸ்வதி அந்த "குணகர்ம விபாசக" என்பதற்கு என்ன பாஷ்யம் சொல்கிறார்?

"ஜாதி வித்யாஸமே இல்லை என்று பகவான் சொல்ல வில்லை; ஆனால், பிறப்பின்படி இன்றி, குணத்தின்படி கர்மாவைப் பிரித்துத் தரும் சதுர் வர்ணத்தைத் தாம் ஸ்ருஷ்டித்ததாகத் தான் சொல்கிறார். சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாசக என்றே சொல்கிறார் என்கிறார்கள்.

சரி, ஆனால், எத்தனை வயசுக்குமேல் இப்படிக் குணத்தை அறிந்து அதை அநுசரித்து அதற்கான வித்தையைப் பயின்று அதற்கப்புறம் தொழிலை அப்பியாஸம் பண்ணுவது? முக்கியமாக பிராமணனின் தொழிலை எடுத்துக் கொண்டால் இவன் ஏழெட்டு வயசுக்குள் குருகுலத்தில் சேர்ந்தால்தானே அப்புறம் பன்னிரெண்டு வருஷங்களில் தன் தொழிலுக்கானவற்றைப் படித்துவிட்டுப் பிறகு அவற்றில் தானே அநுஷ்டானம் பண்ண வேண்டியதைப் பண்ணவும், பிறருக்குப் போதிக்க வேண்டியதைப் போதிக்கவும் முடியும்? குணம் ஆன பிறகு (ஓர் அமைப்பில் உருவான பிறகு) தான் தொழிலை நிர்ணயிப்பது என்றால், கற்க வேண்டிய இளவயசு முழுதும் பல பேர் தொழிலைத் தெரிந்து கொள்ளாமல் வீணாவத £கவும், அப்புறம் சோம்பேறியாக ஒரு தொழிலுக்கும் போகப் பிடிக்காமல் இருப்பதாகவுமே ஆகும். அப்படியே கற்றுக் கொண்டு தொழிலுக்குப் போகும்போதும் சமூகத்துக்கு அவனால் கிடைக்கிற பிரயோஜனத்தில் வெகுவான காலம் நஷ்டமாயிருக்கும். க்ஷணகாலம்கூட வீணாக்காமல் ஒழுங்காக, விதிப்படி கர்மா பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும் என்று திருப்பித் திருப்பிச் சொல்லும் பகவான் இதை ஆதரித்துப் பேசியிருப்பாரா?

அப்படியானால் அவர் தியரியில் (கொள்கையளவில்) குணப்படி தொழில் என்றாலும், ப்ராக்டிஸில் (நடைமுறை யில்) பிறப்பால் தொழில் என்பதைத்தான் ஆதரித்தாரா? என்றால், பாலிடீஷியன்கள் (அரசியல்வாதிகள்) போல பகவான் கொள்கை ஒன்று, காரியம் இன்னொன்று என்று இருப்பவர் அல்ல."

('தெய்வத்தின் குரல்' முதல் பாகம், பக். 989,992)

பிஜேபியின் பேச்சாளர் தோழர் சீனிவாசன் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

பகவான் கிருஷ்ணனைக் காப்பாற்றப் போகிறாரா? அல்லது அவர்கள் லோகக் குருவைக் காப்பாற்றப் போகிறாரா?

எப்படி எப்படியோவெல்லாம் கர்ணம் அடித்து குட்டிகரணம் போட்டாலும் இன்னொரு இடத்திலே வசமாக சிக்கிக் கொள்ள வேண்டும்.

"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவ யோனியிலிருந்து பிறந்தவர்கள்" (கீதை அத்தியாம் 9, சுலோம் 321) என்று கீதை சொல்லுகிறதே - இதற்குப் பதில் என்ன?

பிறக்கும்போதே இந்த நிலை என்று ஆகிவிட்ட பிறகு குணம் எங்கிருந்து வந்தது? "கர்ம விபாசக" எங்கேயிருந்து குதித்தது?

மனுதர்மம் பற்றி பிரச்சினை எழுந்தபோது - அதனைக் காப்பாற்ற முடியாத கையறு நிலை ஏற்பட்டபோது அதே தோழர் சீனிவாசன் அவர்கள் மனுதர்மத்தைக் கை விட்டாரே பார்க்கலாம். நாங்கள் மனுதர்மத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காலத்தால் ஒழிக்கப்பட வேண்டியது என்ற பொருளில் பேசினார்.

அது உண்மையானால் திருக்குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகரைக் கை கழுவ வேண்டியிருக்கும்.

குறளின் அறத்துப்பாலில் கூறப்படும் அறம் பற்றி என்ன கூறுகிறார் பரிமேலழகர்!

"அதாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ஆம்... அஃது ஒழுக்கம், வழக்கம், தண்டம் என மூவகைப்படும்" என்று எழுதியுள்ளாரே.

மனுதர்ம சாஸ்த்திரத்தில் எவையெல்லாம் கூறப்பட்டு உள்ளனவோ அவற்றை ஏற்றும், எவை எல்லாம் தவிர்க்கப் பட்டுள்ளனவோ அவற்றையெல்லாம் தவிர்த்தும் திருவள்ளு வர் எழுதியுள்ளதாக பரிமேலழகர் எழுதியுள்ளாரே!

இந்த இடத்தில் பிஜேபி பேச்சாளர் தோழர் சீனிவாசன் யாரைக் கைவிடப் போகிறார்? மனுவையா? பரிமேலழ கரையா? மனுவின் அடிப்படையில் கருத்துக் கூறப்பட்ட திருவள்ளுவரையா?

மனுவைக் காப்பாற்ற முடியாத கிடுக்கிப் பிடியில் பிஜேபி பேச்சாளர் அந்த இடத்தில் வேறு வழியில்லாமல் அவ்வாறு கூறியிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். அதனை ஏற்றுக் கொள் ளாது; காரணம் மனுதர்மம் தான் இந்தியாவில் சட்டமாக இருக்க வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் கொள்கை யாகும். மனுவை ஏற்கவில்லை என்று கூறும் அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது?

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திலேயே மனுதர்மத்தை அலங்கரித்து எடுத்துச் செல்லப்படும் நிலையில் மனுதர் மத்தை அவர்களால் எப்படி தூக்கி எறியப்பட முடியும்? காதைப் பிடித்துத் திருகிவிடாதா ஆர்.எஸ்.எஸ்.?

1981 டிசம்பரில் பூனாவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பில் மனுதர்ம சாத்திர நூலை அலங்கரித்து எடுத்துச் சென்றார்களே! (Economic and Political Weekly, 6.3.1982)

திருவள்ளுவர் மீது காவியைப் போர்த்தும் காலித்தனம் ஒரு பக்கம் இருக்கட்டும். மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்துவது, இவர்களிடமிருந்து மாறுபட்ட கொள்கை உள்ளவர்களை அவர்களின் மறைவிற்குப் பிறகு சிறுமைப்படுத்துவது அல்லது தன்வசப்படுத்துவது என்பதும் பார்ப்பனர்களின் பிறவிப் புத்தியாகும்.

மறைந்த பகுத்தறிவாளர் அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி ஆர்.எஸ்.எஸ். வார இதழான “விஜயபாரதம்" என்ன எழுதியது தெரியுமா?

"விபூதி பூசிக் கொண்ட அண்ணாதுரை" என்ற தலைப்பில் "விஜயபாரதம்" என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழில் (6.12.2017 பக். 26,27) ஒரு செய்தி வெளிவந்தது.

"அண்ணா உடல் நிலை பாதிக்கப்பட்டு அடையாறு மருத்துவமனையில் இருந்த நேரம் அது. அவருடன் மருத்துவமனையில் இருந்த காவல்துறை அதிகாரி வே.ராமநாதன் தன் அனுபவங்களைப் பதிவு செய்துள்ளார்" என்று எழுதியது 'விஜயபாரதம்' எனும் ஆர்.எஸ்.எஸ். இதழ்.

"அண்ணாவைக் காண்பதற்காக சுத்தானந்த பாரதியார் அங்கு வந்தாராம். இடுப்பிலிருந்து விபூதிப் பையை எடுத்தாராம்  சுத்தானந்த பாரதியார்... கொஞ்சம் தயங்கினாராம். அண்ணாதுரை கடவுள் மறுப்பு கொள்கை உடையவராயிற்றே, விபூதி பூசிக் கொள்ள மாட்டாரே என்று அவர் எண்ணியிருக்க வேண்டும். ஆனால், அண்ணா தன் தலையைத் தூக்கி நெற்றியைக் காண்பித்தாராம். தயக்கமின்றி சுத்தானந்த பாரதியார் கரம் விபூதியைப் பூசிற்று."

இதுகுறித்து அப்பொழுதே "அண்ணா மீது அவதூறா?" என்று 'விடுதலை' (21.1.2017) கண்டனக் கணைகூட வீசியதே.

அப்படி நடந்திருந்தாலும் அதில் ஒன்றும் தவறு இல்லை. அண்ணாவின் பெருந்தன்மையைத்தான் அது காட்டும். கடவுள் வாழ்த்துப் பாடப்படும்பொழுது தந்தை பெரியார் எழுந்து நின்றதுண்டே! - அண்ணாவின் பெருந்தன்மையைக் கொச்சைப்படுத்துவது அவர்களின் கொச்சைப் புத்தியைத் தான் காட்டும்.

சங்கராச்சாரியாரின் விஷமம்!

இதோடு விடவில்லை, ஏதாவது விஷமம், அபாண்டத்தில் ஈடுபடவில்லை என்றால் இவாளுக்குத் தூக்கமே வராது - 24 மணி நேரமும் அது பற்றி சிந்தனை தான் - செயல்பாடுதான்!

இதோ இன்னொன்று: "அண்ணா இறந்தபோது பெரிய வருக்குத் தகவல் வந்தது. உடனே ஏகாம்பரேஸ்வரர் கோவில் மண் கொடுத்து சென்னைக்கு அனுப்பினார்கள். இந்த ஊர் மண்ணை அவரது சமாதிக்குள் வைக்கச் சொன்னார்கள். இன்றைக்கும் அண்ணா சமாதியில் இருக்கிறது காஞ்சிபுரத்து மண். இறந்தாலும் அண்ணா இந்த ஊர் மண்ணுடன் தான் இறந்திருக்கிறார்". ('குமுதம்', 28.12.2000, பக். 48).

அண்ணாமீது எவ்வளவு ஆத்திரம் இருந்தால், அவர் இறந்த பிறகும்கூட அவர்மீது அபாண்டம் சுமத்துவார்கள். "முதலில்லா வியாபாரம் - சோக மில்லா வாழ்வு" என்று சங்கராச்சாரியாரை அர்ச்சித்தவர் அண்ணாவாயிற்றே.

('திராவிடநாடு', 19.4.1942, "சங்கராச்சாரி பதவி தற்கொலை" என்னும் கட்டுரையில்).

அந்தக் கோபம்தான் அண்ணா இறந்த பிறகும் அவர்மீது அசிங்கத்தைத் தூக்கி எறிந்ததற்குக் காரணம்!

அந்த அபாண்டத்தைப் படித்ததும் திராவிடர் கழகம் வாளா இருக்க வில்லை. அதை வைத்துக்கொண்டு, 'பார்த்தாயா, அண்ணாதுரையே இப்படி' என்று எழுதுகோல் பிடிக்க அவாள் வட்டாரத்தில் ஆட்களுக்காப் பஞ்சம் - வருங்கால ஆய்வாளர்கள் இதனை சிக்கெனப் பிடித்துக் கொள்வார்களே! இதுகுறித்து அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளம் அவர்களிடம் கேட்கப்பட்டது.

அதற்கு உடனடியாக அண்ணாவின் அருமை மகன் டாக்டர்  பரிமளம் மறுப்பு எழுதினார்.

டாக்டர் அண்ணா பரிமளம் மறுப்பு - கண்டனம்!

அறிஞர் அண்ணாவின் மகன் டாக்டர் சி.என்.ஏ. பரிமளம் 'விடுதலை' ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு எழுதிய கடிதம் வருமாறு:

அன்புள்ள ஆசிரியர் அவர்கட்கு, வணக்கம்.

காஞ்சி சங்கராச்சாரியார் என் தந்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் பற்றி கூறிய சில கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மடலை எழுதுகிறேன்.

என் தந்தை பேரறிஞர் அண்ணாஅவர்கள் மறைந்தபோது அவரை அடக்கம் செய்த இடத்தில் காஞ்சி சங்கராச் சாரியார் காஞ்சி கோவிலில் இருந்து எடுத்த மண்ணை அனுப்பி அதை சந்தனப் பெட்டியில் வைத்ததாக துளிகூட உண்மையில்லாத ஒரு செய்தியை 'குமுதம்' இதழ் பேட்டியில் தெரிவித்திருந்தார்.

அண்ணா அவர்களின் மூத்த மகன் என்கிற முறையில் இதை நான் மறுக் கிறேன்; வன்மையாகக் கண்டிக்கிறேன். என் தந்தை அவர்கள் மறைந்து முப்பத் தோரு ஆண்டு களுக்குப் பிறகு இப்படி ஒரு செய்தியை வெளியிடுவது என்பது ஒழுக்கமற்ற, நாணயமற்ற ஒரு செயல்.

முன்னர் ஒருமுறை என் அன்னை இராணி அம்மையார் இவரைச் சந்தித் தாக ஓர் பொய்யான செய்தியை வெளி யிட்டார்; அதையும் மறுத்தேன். என் அன்னை மறைகிறவரை எந்தக் கோவிலுக்கும் செல்லாதவர். இப்படி அடிக்கடி உண்மை கலப்பற்ற பொய் செய்தியை இவர் சொல்லுகிறபோது எனக்கு என் தந்தை அண்ணா அவர்கள் 'ஆரியம் விதைக்காது விளையும் கழனி' என்று சொன்ன, சொற்றொடர் நினைவுக்கு வருகிறது. இப்படி அடிக்கடி நச்சு விதைகளை அவர் விதைப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளட்டும் எனக் கூறி, அவர் கூறியது உண்மையல்ல, அது மட்டு மின்றி இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என்பதை தமிழ்ச் சமுதாயத்திற்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்கள்

பரிமளம்

அபாண்டம் பேசுவது ஆரியத்தின் பிறவிக்குணம். அது திருந்துவதாக இல்லை போலும்!

கோவை - சதுமுகை என்னும் ஊரில் பிள்ளையாருக்கு செருப்பு மாலை போட்டு, கருஞ்சட்டையினர் மீது பழி போட் டது இந்து முன்னணி. காவல்துறை 'சரியாகக் கவனித்ததும்' அதைச் செய்தவர்கள் இந்து முன்னணியினர் என்பது அம்பலமாகிவிட்டது. மோசடி, பித்தலாட்டம், பழிதூற்றம் இவற்றின் ஒட்டுமொத்த வடிவம் தான் இந்துத்துவாவா? வெட்கக்கேடு.

"தி.க. தலைவர் வீரமணியின் குடும்பத்தினர் என்னை சந்தித்ததுண்டு" என்று இதே சங்கராச்சாரியார் அளித்த பேட்டியைத் தொடர்ந்து கழகத் தலைவர் வழக்குத் தொடுத்தார்.

சமாதானத்துக்கு ஆள் எல்லாம் அனுப்பிப் பார்த்தார், மசியவில்லை - அதற்குள் மரணம் அடைந்ததால் தப்பினார்.

முற்றும் துறந்த முனிவர்கள், மும்மலத்தையும் அறுத்த முனிபுங்கவர்களாயிற்றே! அவர்கள் எல்லாம் கூடவா இப்படிக் கீழ் நிலையில் இறங்குகிறார்கள் என்ற எண்ணம் வரலாம்.

முற்றும் துறந்தவர்களாவது - முனிபுங்கர்களாவது அவர்களுக்கு இருக்கும் பார்ப்பன இனப்பற்றுக்கு ஈடு இணை ஏது?



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.03.1935, குடிஅரசிலிருந்து...

யாருக்கு நன்மை தரும் இப்படிப்பட்ட இந்து மதம்?

மனு தர்ம சாஸ்திரம் என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டத் திட்டங்களால் அனுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும். எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப் படுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்துகொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமுகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமுகத்தார்கள் வரை இந்த மனுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்டத் திட்டங்கள் அமைந்துள்ள இந்து மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மனுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம்.

1.            பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசார மில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி செலுத்தலாகாது.  - அத்தியாயம் 8, சுலோகம் 20

2.            சூத்திரர் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமை உடையதாய் இருக்கும். அ.12, சு.43.

3.            சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றி யாகவும் பிறப்பது தமோ குணத்தின் கதி. அ.12. சு43.

4.            ஸ்திரீகள் புணர்ச்சி விஷயத்திலும், பிராம ணரைக் காப்பாற்றும் விஷயத்திலும் பொய் சொன் னால் குற்றமில்லை. அ.8. சு.112.

5.            நீதி ஸ்தலங்களில் பிரமாணம் செய்ய வேண்டிய பிராமணனைச் சத்தியமாகச் சொல்லு கிறேன் என்று சொல்ல செய்யவேண்டும். பிரமாணம் செய்ய வேண்டிய சூத்திரனைப் பழுக்கக் காய்ச்சின மழுவை எடுக்கச் சொல்ல வேண்டும்; அல்லது தண்ணீரில் அமிழ்த்த வேண்டும். சூத்திரனுக்கு கை வேகாமலும், தண்ணீரில் அமிழ்த்தியதால் உயிர் போகாமலும் இருந்தால் அவன் சொன்னது சத்தியம் என உணர வேண்டும்.- அ. 8. சு. 113-- 115.

6.            சூத்திரன் பிராமணனைத் திட்டினால் அவனது நாக்கையறுக்க வேண்டும்.  - அ.8. சு. 271.

7.            சூத்திரன் பிராமணர்களின் பெயர், ஜாதி இவைகளை சொல்லித் திட்டினால் 10 அங்குல நீளமுள்ள இரும்புத் தடியைக் காய்ச்சி எரிய எரிய அவன் வாயில் வைக்க வேண்டும்.  - அ.8  சு.271.

8.            பிராமணனைப் பார்த்து, நீ இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லுகிற சூத்திரன் வாயிலும் காதிலும் எண்ணெய்யைக்  காய்ச்சி ஊற்ற வேண்டும். அ.8  சு.272.

9.            சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தி லுட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்லது ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரை விட்டுத் துரத்த வேண்டும்.   - அ.8  சு.281.

10.          பிராமணனைக் காப்பாற்றும் பொருட்டு பிராமணரல்லாதாரைக் கொன்றவனுக்கு பாவ மில்லை.  -  அ.8.  சு.349.

11.          சூத்திரன் பிராமணப் பெண்ணைப் புணர்ந்தால் அவனது உயிர் போகும் வரையும் தண்டிக்க வேண்டும். பிராமணன் கொலை குற்றம் செய்தாலும் அவனைக் கொல்லாமலும், எத்தகைய தண்டனைக்கும் ஆளாக்காமலும் பொருளைக் கொடுத்து அனுப்பிவிடவேண்டும். - அ.8 சு.380

12.          அரசன் சூத்திரனை பிராமணர் முதலிய உயர்ந்த ஜாதிக்கு பணிவிடை செய்யும்படி கட்டளையிட வேண்டும். சூத்திரன் மறுத்தால் அவனைத் தண்டிக்க வேண்டும். - அ.8.சு.410.

13.          பிராமணன் கூலி கொடாமலே சூத்திரனிடம் வேலை வாங்கலாம்; ஏனென்றால் பிராமணனுக்குத் தொண்டு செய்யவே கடவுளால் சூத்திரன் படைக்கப் பட்டிருக்கிறான். - அ. 8  சு.413

14.          பிராமணன் சந்தேகமின்றி சூத்திரன் தேடிய பொருளைக் கைப்பற்றலாம். ஏனென்றால் அடிமையாகிய சூத்திரன் எவ்விதப் பொருளுக்கும் உடையவனாக மாட்டான் - அ.8.சு.417.

15.          சூத்திரன் பொருள் சம்பாதித்தால், அது அவனுடைய எஜமானனாகிய பிராமணனுக்குச் சேர வேண்டுமேயன்றி சம்பாதித்தவனுக்குச் சேராது. - அ. 9  சு. 416

16.          பிராமணனால் சூத்திர ஸ்திரீக்குப் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளைக்குத் தந்தை சொத்தில் பங் கில்லை.  - அ.8  சு. 155.

17.          பிராமணன் பொருளை அபகரித்த சூத்திரனை சித்திரவதை செய்து, கொல்ல வேண்டும். ஆனால் சூத்திரனுடைய பொருளை பிராமணன் தம் இஷ்டப்படி கொள்ளையிடலாம். - அ.9  சு.248.

18.          பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்.  - அ.9  சு. 317

19.          பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட் டிருந்தாலும் பூஜிக்கத்தக்கவர்கள் ஆவர்கள். - அ. 9 சு.319.

20.          பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்குத் துன்பம் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும். - அ.9 சு.320.

21.          சூத்திரனுக்கு பிராமணப்பணிவிடை ஒன்றே பயன் தருவதாகும். அவன் பிராமணனில்லாத விடத்தில் சத்திரியனுக்கும், சத்திரியனில்லா விடத்தில் வைசியனுக்கும் தொண்டு செய்ய வேண்டும். அதிகமான செல்வமும், பசுக்களும் வைத்திருக்கிறவன், பிராமணன் கேட்டு கொடுக்காவிட்டால், களவு செய்தாவது, பலாத்காரம் செய்தாவது அவற்றை பிராமணன் எடுத்துக் கொள்ள உரிமையுண்டு. - அ.11.  சு.12.

22.          சூத்திரன் வீட்டிலிருந்து கேளாமலும், யோசிக்காமலும் தேவையான பொருளைப் பிராம ணன் பலாத்காரத்தினால் கொள்ளையிடலாம். - அ.11.  சு.13.

23.          யோக்கியமான அரசன் இவ்விதம் திருடிய பிராமணனைத் தண்டிக்கக் கூடாது. - அ.11  சு.20.

24.          பெண்களையும் சூத்திரரையும் கொல்லுவது மிகவும் குறைந்த பாவமாகும். - அ.11  சு.66.

25.          ஒரு பிராமணன் தவளையைக் கொன்றால் செய்ய வேண்டிய பிராயச்சித்தம் ஏதோ, அதைத்தான் சூத்திரனைக் கொன்றாலும் செய்ய வேண்டும். - அ.11.  சு.131.

25           (அ)       அதுவும் முடியாவிடில் வருண மந்திரத்தை 3 நாள் ஜெபித்தால் போதுமானது -

அ.11.  சு.132.

26.          சத்திரியன் இந்நூலில் (மனுதர்ம சாஸ்திரத்தில்) சொல்லப் பட்டபடி ராஜ்யபாரம் பண்ணுவதே தவமாகும். சூத்திரன் பிராமண பணிவிடை செய்வதே தவமாகும். - அ.11  சு.285.

27.          சூத்திரன் பிராமணனுடைய தொழிலை செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்யின் பிராமண னேயாவான். ஏனெனில் கடவுள் அப்படியே நிச்சயம் செய்துவிட்டார். - அ.10. சு.75.

28.          பிராமணரல்லாதவன் உயர்குலத்தோரு டைய தொழிலைச் செய்தால் அரசன் அவனது பொருள் முழுவதையும் பிடுங்கிக் கொண்டு அவனை நாட்டை விட்டுத் துரத்திவிட வேண்டும். - அ.10  சு.96

29.          சூத்திரன் இம்மைக்கும், மோட்சத்திற்கும் பிராமணனையே தொழ வேண்டும். - அ.10. சு.96.

30.          பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த ஆடையும், கெட்டுப் போன தானியமும் சூத்திரனுடைய ஜீவனத்துக்கு கொடுக்கப்படும். - அ.10. சு.125

31.          சூத்திரன் எவ்வளவு திறமையுடையவனாகயிருந்தாலும் கண்டிப்பாய் பொருள் சேர்க்கக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்கவிட்டால் அது பிராமணனுக்கு துன்பமாய் முடியும். - அ.10.  சு.129.

32.          மனுவால் எந்த வருணத்தாருக்கு இந்த மனுதர்ம சாஸ்திரத்தால் என்ன தர்மம் விதிக்கப் பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும். ஏனென்றால், அவர் வேதங்களை நன்றாய் உணர்ந்தவர். - அ.2.  சு.7.

இன்னும் இதைப் போன்று ஆயிரக்கணக்கான அநீதியானதும், ஒரு சாராருக்கு நன்மையும், மறுசாராருக்குக் கொடுமையும் செய்வதுமான விதிகள் மனுதர்மத்தில் நிறைந்திருக்கின்றன. சுருங்கச் சொல்லுங்கால் பிராமணன் என்ற வகுப்பாரைத் தவிர, வேறு எந்த வகுப்பாருக்கும் அதில் யாதொரு நன்மையும் இல்லை என்றே கூறலாம். ஆகையால் தோழர்களே! இந்நூலை மனுதர்மம் என்று கூறு வதா? அல்லது மனுஅதர்மம் என்று கூறுவதா? சற்று யோசித்து முடிவு செய்யுங்கள்.



__________________


Guru

Status: Offline
Posts: 24765
Date:
Permalink  
 

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

(வாசக நேயர்களே,

ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.

இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)

 

சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் (24.8.1938) தமிழ் மாணவர் கழகத் திறப்பு விழாவைச் செய்த வித்வான் மா.இராசமாணிக்கம் பி.ஓ.எல். அவர்கள் செய்த சொற் பொழிவின் சாரம்:

தமிழின் பழமை

நம் தாய்நாடாகிய இந்தியா முழுவதும் ஆரியர் வருகைக்கு முன் தமிழ் பரவி இருந்ததென்பது ஆராய்ச்சி யாளர் துணிபாகும். திராவிட மொழிகள் அனைத்திலும் பழமையானது தமிழ்மொழி என்பதும் அவ்வாசிரியர் கொள்கை. தென்னிந்தியாவிலுள்ள தெலுங்கு, தமிழ், மலை யாளம், கன்னடம், துளுவம், குடகு என்னும் ஆறு செப்பஞ்செய்யப்பட்ட பல மொழிகளும், துடா, கோட்டா, கோண்ட், கூ, ஓராயன், இராஜ் மஹால் என்னும் செப்பஞ்செய்யப் படாத ஆறு இந்திய மொழிகளும் ஆக  இப்பன்னிரண்டும் தமிழ் மொழிக்கே நெருங்கிய உறவு முறையில் இருந்தாலும், இவற்றில் பழமையானது தமிழாக இருத்தலாலும் பண்டைத் தமிழே இவற்றிற்குத் தாய்மொழி எனக்கூறல் தவறாகாது. மேலும், சிந்துப் பிரதேச ஆராய்ச்சிகளிலிருந்தும்

பலுஜிஸ்தானத்தில் பேசப்படும் பிராகிமொழியிலிருந்தும் தமிழ் மொழி இந்தியா முழுவதும் அல்லாமல் பலுஜிஸ்தான வரை யிலும் ஆரியர் வருகைக்கு முன் பரவியிருந்தது என்பதை நிரூபித்துக் காட்டலாம்.

ஆரியர் கி.மு. 2600க்கு முன் இந்தியாவில் இல்லை யென்பது சர்.ஜான் மார்ஷல் முதலிய ஆராய்ச்சியாளர் துணிபு. எனவே கி.மு. 2600 முன் வரையில் நம் தாய் மொழியாகிய தமிழ் நம் தாய்நாடாகிய இந்தியா முழுவதும் பரவியிருந்தது என்பதை தமிழராகிய நாம் அறிந்து மகிழ்தல் வேண்டும். ஆரியர் வந்தவுடன் அவர்கள் மொழியாகிய வடமொழியை வட இந்தியாவில் இருந்த தமிழ் மக்கள் பேச நேரிட்டது. தமிழ் மக்களுடைய உச்சரிப்பு, பேச்சு முறை முதலியவற்றால் வடமொழியின் உச்சரிப்பும், பேச்சு முறையும் கெட்டதோடு தமிழ் மொழியின் உச்சரிப்பும் பிறவும் கெட்டு நாளடைவில் தமிழ் அழிநிலையை அடையத் தொடங்கியது. பெருவாரியான தமிழ் மக்களு டைய கூட்டுறவால் வேதகால வடமொழியே கெட்டு விட்டது. முதல் வேதமாகிய ரிக் வேதத்திலேயே இக்கெடு தலை காணலாமென்பது ஆராய்ச்சியாளர் முடிவு (டாக்டர் சனிதிகுமர்சட்டர்ஜி வரைந்துள்ள "வங்க மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்") நாளடைவில் வடமொழி தமிழர் கலப்பால் கேடுற்றுப் பிராக்கிருத மொழிகளாக மாறிவிட்டது. அவற்றில் ஒன்றுதான் புத்தர் பேசிவந்த பாலி பாஷை. இப்பிராகிருத மொழிகளும் நாளடைவில் கிரேக்கர், பராணீகர், துருக்கியர், ஆப்கானியர், மங்கோலியர் முதலிய பல நாட்டு மக்கள் தொடர்பால் (அவர் தம் மொழிகளின் கலப்பால் கெட்டு இன்று வழங்கப்படும் வங்காளி, பஞ்சாபி, சிந்தி, இந்தி, குஜராத்தி, மராத்தி, முதலிய வட இந்திய மொழிகளாகப் பரிணமித்தன. இவற்றிற்கு ''இந்திய ஆரிய மொழிகள்" என்பது இன்று வழங்கும் பெயராகும்.

வடமொழி கலப்பால் வருங்கேடு

இவ்வாறு வட இந்தியா முழுவதும் பல்வேறு நாட்டு மக்கள் குடி புகுந்து பல்வேறு மொழிகளைப் பேசத் தலைப்பட்டதும் பல்வேறு நாகரிகமும் வளரவே, தமிழ் மொழியோ, தமிழரோ இருத்தற்கு இடமில்லையாயிற்று. ஆயினும் இம்மொழிகளின் கலப்பால் கொலையுண்ட தமிழை வட இந்தியாவிலுள்ள கோண்ட், க, ஓராயரன், இராஜ்மஹால், பிராஹி முதலிய மொழிகளில் இன்னும் காணலாம். தமிழர் பழக்க வழக்கங்கள் சிலவும் இம் மொழிகளைப் பேசும் மக்களிடம் இன்னும் காணலாம்.

வட இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகள் தோன்றவே வட இந்தியாவுக்கு அடுத்த ஆந்திரநாடு ஆரிய நாகரிகத்திற்கு உள்ளாகி அங்கிருந்த மொழியும் வடமொழிக் கலப்புடையதாக ஆகி விட்டது. தெலுங்கில் உள்ள எல்லாச் சொற்களும் தமிழ்ச் சொற்களுக்குப் பெரிதும் பொருத்த முடையனவாகக் காணப்படினும் இன்றைய தெலுங்கு மொழி வடமொழியின் உதவியில்லாமல் இயங்க முடியாத பரிதாப நிலைக்கு வந்து விட்டது. இதே நிலைமை சுமார் கி.மு. 500 வருடங்களுக்கு முன்னரே கன்னட மொழிக்கும் நேர்ந்து விட்டது, அதே பரிதாப நிலை கி.பி. 8ஆம் நூற்றாண் டுக்குப் பிறகு மலையாளம், குடகு, துளுவம் முதலிய மொழி களுக்கும் ஏற்பட்டு விட்டது. அதாவது விந்திய மலைக்குத் தென்பாலிருந்த தமிழ் வடமொழிக் கலப்பேற்று தெலுங்காக வும், கன்னடமாகவும், மலையாளமாகவும். குடகு ஆகவும், துளுவமாகவும் மாறிவிட்டது.

தமிழின் பரிதாப நிலைமை

ஆனால், இந்தப் பெரிய மாறுதல் நமது தமிழ்மொழிக்கு உண்டாகவில்லை. ஏனெனில் தூய இரத்தவோட்டமுடைய அக்காலத்தமிழ் மக்கள் தம் தாய்மொழியை வடமொழிக் கலப்பு ஏற்படாமல் இயன்றவரையிலும் தடுத்து வந்தனர் என்பதை சங்க இலக்கியங்களைப் பயின்றார் நன்கு உணரக்கூடும். தொல்காப்பிய முதலிய சங்க நூல்களில் நூற்றுக்கு நான்கு சொற்களே உடமொழிச் சொற்களாகக் கூறலாம். பிற்காலத்திய சிலப்பதிகாரம், மணி மேகலை ஆகிய நூல்களில் - வடநாட்டு மதங்களாகிய பவுத்தமும், சமணமும் பரவிய காலத்தில் (கி.பி. முதல் இரண்டு நூற்றாண் டுகளில்) நூற்றுக்கு பத்துப் பதினைந்து வடசொற்கள் தமிழ் மொழியில் நுழைந்து விட்டன என்பதைத் தமிழ் அறிஞர் நன்குணர்வர். பின்னர்த் தேவார திருவாசக காலங்களிலும் (கி.பி. மூன்று முதல் எட்டு நூற்றாண்டுகள் முடிய) நாலாயிரப் பிரபந்தம் பாடப்பெற்ற காலங்களிலும் வட சொற்கள் நூற் றுக்கு இருபதுக்கு மேலாகத் தமிழ் மொழியில் இடங்கொண்டு விட்டன. பின்னர் வந்த வைணவ ஆச்சாரியர்கள் காலத்தில் வடமொழியும் தமிழ் மொழியும் கலந்த மணிப்பிரவாள நடைதோன்றிற்று. அந்நடையே அன்று முதல் இன்று வரை யில் கதாகலாட்சேபங்களிற் பாகவதர்களாலும், வைணவ அடியார்களாலும் பேசப்பட்டு வருகின்றது. பின்னர் வந்த கம்பராமாயணம் முதலிய நூல்களிலும், புராணங்களிலும், வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் கலப்புண்டன. வில்லி புத்தூராழ்வார் பாரதத்தில் நூற்றுக்கு அய்ம்பதுக்கு மேலாகவே வடசொற்கள் நுழைந்து விட்டன. இதற்குப் பிற்பட்ட காலத்தில் விஜயநகர அரசர்கள் ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்ட போதும் மகாராட்டிர ஆட்சி ஏற்பட்ட போதும் முறையே தெலுங்கு மொழிகளும், மகாராஷ்டிர மொழி களும் ஒரு சில உருது மொழிகளும் தமிழில் கலக்கலாயின. இவற்றின் பயனாய்க் குமரகுருபர சுவாமிகள் போன்ற சைவ ஆசாரியர் பாடிய பிரபந்தங்களிலும் 'சலாம், சொக்காய் போன்ற உருது சொற்கள் இடங்கொண்டு விட்டன. இவை போல் இடங்கொண்ட சொற்கள் பலவாகும். இது உரை கூறியவற்றால் பண்டைக் காலத்திலிருந்து தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களும் பிறமொழிச் சொற்களும் புகுந்து அவற்றின் பயனாய் நாம் தமிழ் மொழிச்சொற்களை இழந்து நிற்கின்ற பரிதாப நிலையையும், தமிழ் மொழி தன் தூய்மையை இழந்து நிற்கின்ற கேவல நிலையையும் நன்றாக அறியலாம்.

தாய் மொழிக் கவலையில்லாததால் வந்த கேடு

சுமார் 150 ஆண்டுகளாக ஆங்கிலம் அரசியல் மொழி யாக இருந்து வருவதும் அதனால் எழுதப்படும் தமிழும் பேசப்படும் தமிழும் எந்த அளவில் கெட்டிருக்கின்றது என்பதை அறிவுடையோர் நன்கு உணரக்கூடும். நமது பேச்சு மொழி பெரிதும் ஆங்கிலச்சொற்களையே கொண் டிருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள். எழுத்து முறையிலேயும் பீச்சு, பார்க், லைட் அவுஸ், ஹார்பர், ஹவர் (மணி) முதலிய நூற்றுக் கணக்கான சொற்கள் புகுந்து விட்டன என்பதை வெட்கத்தோடு கூறவேண்டிய நிலையில் இருக்கி றோம். சுருங்கக் கூறின் தமிழன் என்ற உணர்ச்சி இல்லா மையால் தான் நாம் நமது தாய்மொழிப் பற்றிய கவலையில்லாமல் விலங்கினும் கேடு கெட்ட தன்மையில் இருந்து வந்திருக்கிறோம். மேற் கூறிய பல மொழிகளின் கலப்பால் நமது நாகரிகமே மிகப்பெரிய அளவில் மாறுபட்டு விட்டது என்பதையும் சங்க நூல்களைப் படித்த தமிழறிஞர் நன்கு அறியக்கூடும். பண்டைத் தமிழர்கள் திருமணத்தில் வட மொழி மந்திரங்களில்லை; தீவலம் வருதல் இல்லை; தட் சணை பெற புரோகிதன் இல்லை; இது முற்றிலும் தமிழர்க்கே உரிய திருமணம'' என்று காலஞ்சென்ற சரித்திரப் பேராசிரிய ரான தோழர் பி.மு.சீனிவாச அய்யங்கார் கூறியுள்ளதை ("பண்டைத் தமிழர் சரித்திரம்'") உண்மைத் தமிழர்களாகிய நீங்கள் கவனித்தல் வேண்டும். அப்பண்டை மணமுறை இன்று இல்லாமற் போனதற்குக் காரணம் யாது? என்பதை நீங்களே உணருங்கள். மொழிக்கலப்பால் நாகரிகக்கலப்பும் ஏற்படும் என்பது இவ்வொன்றைக் கொண்டே உணரப்படும் நம் தமிழ்ப்பண்டிதர் தம் குழந்தைகட்குத் திருஷ்டி தோஷம் முதலியவை நீங்க முஸ்லிம் மத குருக்களிடம் சென்று வரு தலை நீங்கள் அறிவீர்கள். இந்தத்திருஷ்டி தோஷம் முதலிய வற்றை நீக்குவதற்கு நம் மதப்பெரியார்களோ கடவுளரோ பயன் அற்றவர்களா? இங்ஙனம் பலதுறைகளிலும் கருத் தூன்றிப் பார்க்கும் பொழுது தமிழர் நாகரிகம் உருக்குலைந்து விட்டது என்பதை அறிவுடையோர் மறுத்தல் இயலாது. போதாக்குறைக்கு ஆங்கில நாகரிகம் ஓர் அளவில் நன்மை செய்திருப்பினும் அது தமிழர் நாகரிகத்தையே பெரிதும் மாற்றிவிட்டது என்று அழுத்தமாகக் கூறலாம். இதற்குத் தமிழர் தம் அறிவீனமே காரணமாகும்.

என்ன செய்ய வேண்டும்?

நமது தமிழ் மொழி தூய்மையடைய வேண்டுமானால் நமது நாகரிகம் ஓரளவாவது நிலைத்திருக்க வேண்டுமானால் தமிழராகிய நாம் ''தமிழர்' என்ற அழுத்தமான உணர்ச்சி யோடு பண்டைத் தமிழர் கையாண்ட முறைகளை இக்காலத் திற்கேற்ற அளவில் கையாண்டு ஒரு மனப்பட்டவர்களாய் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து எறிந்து தமிழ் உணர்ச்சியோடு வாழ்வோமாயின் தமிழ்நாடும், தமிழ் மொழியும், தமிழ் நாகரிகமும் இன்றுள்ள அளவிலாவது நிலை பெற்றிருக்கக்கூடும். இன்றேல் "தமிழன் இறந்து விட்டான்; தமிழ்மொழி இறந்து விட்டது; தமிழ் நாடும் மறைந்து விட்டது" என்ற கேவல எண்ணத்துடன் விலங்கி னங்களாய் நடைப்பிணங்களாய் உயிருள்ள வரையில் ஊசலாடித் திரியும் கொடிய நிலையே ஏற்படும். இதனை நன்குணர்ந்து தமிழர் செந்நெறிப்பற்றி நடப்பாராக! தமிழ் நாடு, தமிழர், தமிழ் வாழ்வதாக!

- 'விடுதலை', 27.8.1938



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard