New Indian-Chennai News + more

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்ககால மன்னர்களும் வர்க்க முரண்களும்


Guru

Status: Offline
Posts: 24791
Date:
சங்ககால மன்னர்களும் வர்க்க முரண்களும்
Permalink  
 


சங்ககால மன்னர்களும் வர்க்க முரண்களும்

 

 

முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -சார்லஸ் டார்வின் எழுதிய உயிரினங்களின் பரிணாமக் கொள்கையைத் தழுவி ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer 1820 – 1903) சில சமூக பரிணாமத்தினை பற்றி சமூகவியல் விதிகள் (Principles of Sociology ) என்னும் நூலில் பல கருத்துக்களை முன் வைத்தார்.

“உயிரினங்களின் பரிணாம முறையில் வளர்ச்சி அடைந்ததைப் போலவே சமூகமும் படிப்படியாக பரிணமித்து வளர்கிறது.  சமூக பரிணாமம் இயங்கு முறையில் அதன் தொடக்கத்தில் ஒரு சிறிய குழுவாக இருந்து பின்னர் பல கூட்டு நிலைகளை அடைந்து அதற்குபின் சமூகமாக மாறுதல் அடைகிறது.  பல குடும்பங்கள் ஒன்றிணைந்து குலங்கள் உருவாயின.  குலங்கள் இனக் குழுவாக ஒன்றுபட்டன.  இனக்குழுக்கள் ஒன்றிணைந்து தனி அரசு நாடாக அமைந்தன.  இவ்வாறு சமூகம் சிக்கல் நிறைந்த பரிணாம வளர்ச்சியில் விரிவடைந்தது.

ஸ்பென்சர் சமூகங்களை போரிடும் சமூகம் என்றும,; தொழில் சமூகம் என்றும் இரு வகைகளாகப் பிரிக்கிறார்.  போரிடும் சமூகத்தின் அதிகாரம் ஒரு மையத்தில் அமைந்திருக்கும்.  தொழில் சமூகத்தில் அதிகாரம் எல்லோரிடமும் பரவி இருக்கும்.  போரிடும் சமூகத்தில் கட்டுப்பாடு மிகுதியாக இருக்கும்.  கட்டுப்பாடு மைய அரசிலிருந்து பரவும்.  ஆனால் தொழில் சமூகத்தில் கட்டுப்பாடு அதிகமாக இருக்காது.  மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு, அவற்றின்படி கடந்து கொள்வர்.  போரிடும் சமூகத்தில் மைய அரசிலிருந்து கட்டளைகள் அவ்வபோது வந்து கொண்டு இருக்கும்.  மக்களின் வாழ்க்கை சுதந்திரமாக இருக்காது.  ஆனால் தொழில் சமூகத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ முடியும்.  போரிடும் சமூகத்தில் மக்களின் உரிமைகள், கட்டுப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர்களால் தங்களுடைய உரிமைகளை அனுபவிக்க முடியாது.  இத்தகைய சமூகங்கள் வெவ்வேறு பரிணாம நிலைகளில் இருக்கக் கூடும் என்று ஸ்பென்சர் கருதுகிறார்.”  (பக். 28-29 சமூகவியல், எஸ். சாவித்ரி)

இத்தகைய இருவேறுபட்ட சமூக அமைப்பு முறையையும் சங்க காலம் என்று கூறப்படும் காலத்திய சூழல் என்பதை உணர முடிகிறது. நில அடிப்படையிலான மக்கள் வாழ்வில் தொழிலுக்கு ஏற்றவாறே மக்கள் வாழ்வு ஒருபுறம் அமைந்திருந்தது.  மற்றொரு புறம் போர் அடிப்படையிலான சமூகச் சூழலை அறிய முடிகிறது. இருவேறு சமூக நிலையையும் காண முடிகிறது.  அடிப்படையில் இனக்குழு சிதைந்து, அடிமையுடைமை சமுதாயச் சூழலிருந்து மன்னர் உடைமை சமூகச் சூழல் மாற்றம் பெற்ற காலப்பகுதியென கருத இடமுண்டு.

சங்ககால அரசர்களும், அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்களும்
பழந்தமிழகத்தில் வேளிர்கள், வள்ளல்கள், மன்னர்கள், வேந்தர்களென பல படிநிலைகளைக் காண முடிகிறது.  அடிப்படையில் மன்னர் ஒன்றுபடாமல் தனித்தனி அரசியல், சமூகங்களபை; பிரிந்து வாழ்ந்து வந்ததற்கு நாட்டின் இயற்கையமைப்பே காரணம் என்று கே.கே. பிள்ளை குறிப்பிடுகின்றார்.

மலைகளும், குன்றுகளும், காடுகளும், சமவெளிப் பகுதிகளும் கடல் சார்ந்த பகுதிகளும், வெம்மணல் பரப்புகளுமென தமிழகம் புவியின் அனைத்து பூகோள நிலையையும் ஒருங்கே பெற்றிருந்ததே இதன் அடிப்படைக் காரணம்.

தமிழகம் கிரேக்கத்தைப் போன்று குன்றுகள் நிறைந்த நாடாக அமைந்துள்ளது.  குன்றுகளும், மலைகளும் குறுக்கிட்டுப் பகுத்துள்ள இந்நிலப்பரப்பை ஆண்ட அரசர்கள் பெரும்பாலும் குறுநில மன்னர்களாக அமைந்திருந்தனர்.  அவர்கள் ஆட்சிப் பரப்பும் குறிப்பிட்ட குன்றை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.  பாண்டிய நாட்டில் பழனி மலையைப் பேகன் ஆண்டான்; பறம்பு மலையை பாரி ஆண்டான்; கோடை மலையை வேட்டுவன் ஆண்டான்; பொதியை மலையை ஆய் ஆண்டான்; சோழநாட்டில் குதிரை மலையை அதியமானும், கொல்லி மலையை ஓரியும், தோட்டிமலையை பெருநற்கிள்ளியும் ஆண்டு வந்தனர்.  தமிழகம் சேர, சோழ, பாண்டியர்களால் ஆளப்பட்டு வந்தது என பொதுவாகக் கூறப்படினும் இந்நிலப்பரப்பு முழுவதும் ஒரே காலத்தில் வலிமைமிக்க மூவேந்தர்களால் ஆளப்பட்டதாகச் சான்று இல்லை.”  (பக். 22 தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்.)

இதனுள் அடிப்படையில் ஆங்காங்கே தனித்தனியே நிகழ்ந்த போர்களே முதன்மை சான்றுகளாகின்றன.  ஓர் நிலத்துள் நிகழ்ந்த போர் வேறு நிலத்தில் நிகழ்ந்ததில்லை எனின், சமவெளிப் பகுதியில் பேரரசுகள் தோற்றமும், உற்பத்தி பெருக்கவும், நாட்டை விரிவுபடுத்தி தம் பேரரசே ஆள வேண்டும் என்ற எண்ணமும் பல்வேறு வகையில் போர்களைத் தோற்றுவித்திருக்கிறது என கருதலாம்.

பண்டைத் தமிழகத்துள் வேந்தர்களும், குறுநில மன்னர்களும் ஒற்றுமையுடன் தம் எதிர் மன்னனையோ அல்லது குறுநில மன்னனையோ அழிப்பதற்கு ஒன்றுபட்டிருந்தனர் என்பதை வரலாற்று, இலக்கிய வழி அறிய முடியும்.

இவற்றுள் மூவேந்தரும் ஒன்றியிருந்த காட்சியை புறநானூற்றின் 58, 367-ஆம் பாடல்கள் குறிப்பிடுகின்றன.  367-ம் பாடலில் சேரமாண் மாரி வெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த பெருவழுதியும், சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒரு காலத்தே ஒன்றாய் ஓரிடத்தில் இருந்தனர்.  இதனை ஒளவை வாழ்த்தியதாக பாடலொன்று காணப்படுகிறது.  “குன்று தலை மணந்த மலைபிணித்து யாத்தமன் பொதுமைச் சுட்டிய மூவருலகமும்” (புறம். பா. 357) என்று மூவேந்தர்களை புகழ்வதை காண முடிகிறது.  எனின் அவர்கட்குள் பல போர் நிகழ்ந்தன என்பதே திண்ணம்.

தலையாலங்கானத்து செருவென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்பானை, சோழன் இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் கணைக்கால் இரும்பொறை ஆகியோரும், திதியன், எழின், எருமைய10ரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகிய குறுநில கிழார்களும் பாண்டியனை எதிர்த்து ஒன்றாக திரண்டு போரிட்டனர்.  எனின் அனைவரையும் புறமுதுகிட்டு ஒடச் செய்து, அவர்களைக் கொன்றான் என்று புறம் - 78 ஆம் பாடல் குறிப்பிடும்.  சின்னமனூர்க் கல்வெட்டும் இவன் புகழை எடுத்துரைக்கும். 

கரிகாலன், சேர, பாண்டியரையும், பதினோரு வேளிரையும் வெண்ணிறப் பறந்தலை என்ற இடத்தில் போரிட்டு வென்றதாக அகநானூறும் (246) பொருநராற்றுப்படையும் குறிப்பிடுகின்றன.  இப்போரில் சேரன் புண்பட்டான்.  இவ்விழிவை வீர மரணத்தால் போக்க நினைத்த சேரன் வடக்கிருந்து உயிர் துறந்தான்.  இந்நிகழ்ச்சியை கழாத்தலையார், வெள்ளி வீதியார் எடுத்துரைக்கக் காண்கிறோம்.”  (பக். 58, தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்)

சோழன் செங்கணானுக்கும், கணைக்கால் இரும்பொறைக்கும் போர் நிகழ்ந்திருக்கிறது.  அதில் சேரன் சிறையில் இடப்பட்டு உணவும், நீரும் தராமல் கொடுமைப்படுத்த மானம் பெரிதென உயிர்விட்ட செய்திகள் காணப்படுகிறது.  சேரன், செங்குட்டுவன் கிள்ளி வளவனோடு போரிட்ட 9 சோழ இளவரசர்களை ‘நேர்வாயில்’ எனுமிடத்தில் வீழ்த்தினான் என்பர்.  கிள்ளிவளவனுக்குத் துணைவலி தந்து அவனது அரசுரிமையை காக்கும் நோக்கம் கொண்டது இப்போர்.  போரில் ஈடுபட்ட ஒன்பது சோழ இளவரசர் யார் என்பது இலக்கியங்களில் குறிக்கப்படவில்லை.” (பக். 56, தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும்)

கண்ணகிக்கு கல் எடுக்க செல்ல, வடதிசை மன்னன் தடுக்க, அவனை வெற்றி கண்டு அவர்தம் தலைகளில் கல்லேற்றி வந்ததாக குறிப்பிடுவதுண்டு.

வேந்தர்களுக்கும் வேளிர்களுக்கும் பல முரண்பாடுகள் பொதுவாக தொடர்ந்து நிகழ்ந்திருக்கின்றன.  அது மட்டுமன்று, வேந்தர்களுக்கிடையேயும், வேளிர்களுக்கிடையேயும் பல முரண்பாடுகள் நிகழ்ந்து போர்கள் பல நிகழ்ந்திருக்கின்றன என்பதை எட்டுத்தொகை நூல்கள் நன்கு எடுத்துரைக்கின்றன.

உதாரணமாக, ‘பாரி’ என்னும் வள்ளல் இறந்துவிட, அவன் மகளை யாருமே திருமணம் செய்துகொள்ள வராத நிலையை அறிய முடிகிறது.  ‘இருங்கோவேள்’ எனும் பதிணென் வேளிருள் ஒருவனானவனும் கூட அவன் பெண்ணை ஏற்காததும், அதனால் கபில் (புலவர்) அவனை இகழ்ந்துரைப்பதையும் காண முடிகிறது.

அதே போல, பெருஞ்சேரல் இரும்பொறை என்பவன் ஆயர் குடியினரின் தலைவனான ‘கழுவுள்’ என்பானை வீழ்த்தி அவன் ஊரை எரிய10ட்டினான் எனவும், அதிகமானோடு சோழ பாண்டியர்களையும் வீழ்த்தினான் எனவும் ஏஐஐ ம் பத்தில் அரிசில் கிழார் குறிப்பிடுகின்றதை காணலாம்.

“கொல்லிக் கூற்றம் என்பது கொல்லி மலையைச் சூழ்ந்திருந்த நாட்டுப் பகுதி; இதற்கு உரியோனாக இருந்தவன் வல்வில் ஓரி : இவன் அதிகனுக்கும் இருபெரு வேந்தனுக்கும் நண்பனாதல் பற்றி அவர் படையணிகள் இவனுக்கு உதவியாகச் சென்றிருக்கலாம்.  ஓரியைச் சேரமான் அழித்த காலையில் அவனுக்கு உதவியாயிருந்தவன் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிக்காரி ஆவான்.  காரியை இப்போரின் பின்னர் சோழனும், அதிகனும் சேர்ந்து அழித்தனர்.  காரியின் அழிவுக்குப் பின்னர் பெருஞ்சேரல் இரும்பொறை தகடூரை முற்றி அழித்தான் எனப் பொருந்தும்” (பக். 244, பதிற்றுப்பத்து, புலிய10ர்கேசிகன்) என்று குறிப்பிடுகின்றார் புலிய10ர்கேசிகன்.  கழுவுள் பின்னர் இரும்பொறையை வணங்கி, அவன் கட்டுப்பாட்டுக்கு சென்றான் எனவும் பாடலின் வழி தெரிய வருகிறது.

‘பல்யாக சாலை செல் கெழு குட்டுவன்’ என்பான்.  குதிரைப் போரில் வல்லவர்களாக கொங்கர்களை அடக்கி ஆண்டதாகக் குறிப்புகள் காணப்படுகிறது.
ஆ கெழு கொங்கர் நாடகப்படுத்த
வேல் கெழு தானை வெருவரு தோன்றல்
(பதிற்றுப்பத்து, ஐஐஐ –ம் பத்து, பா. அ. 15-16) என்று குறிப்பிடுவதைக் காணலாம்.  மேலும்,
“பதிணென் குடியினரான வேளிர் குலத் தலைவர்களும் நின் ஆணையாகிய அவ்வொன்றனையே தாமும் சொல்லியவராக நினக்கு அடங்கியே விளங்குவர்” (பதிற்றுப்பத்து, புலிய10ர் கேசிகன், ப. 95) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐஏ -ம் பத்தில் சுட்டப்பெறும் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல்,
“பூழி நாட்டை படையெடுத்து தழீஇ
உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்தவன்” (ஐஏ-ம் பத்து, பா.அ : 6-8)

“முறைமையினாலே உண்டானதாகிய பூழி நாட்டைப் படையெடுத்துச் சென்று வென்று தன் நாட்டோடு சேர்த்துக் கொண்டவன்... கடம்பினைக் கொண்ட கடம்பின் பெருவாயில் என்னுமிடத்தில் இருந்தோனாகிய நன்னனை, அவனுடைய நிலையான போர் ஆற்றலையே முற்றவும் அறுத்து வெற்றிக் கொண்டவன்; பொன்னைப் போல விளங்கும் பூக்களைக் கொண்ட அவன் காவன் மரமான வாகைமரத்தை வேரொடும் வெட்டி அழித்தவன் (ஐஏ -ம் பத்து, புலிய10ர்கேசிகன், பக். 101) என்று கூறப்படுகிறது.

‘நன்னன்’ எனும் மன்னன் பெண்கொலை புரிந்தானென குறிப்பிடப்படுகிறது.  அவன் மாமரத்தின் கனியை கோசர் குல பெண் சாப்பிட்டதால் நன்னன் அவளைக் கொன்றதாகவும், பின்னர் ‘அகுதை தந்தை’ என்பானிடத்து பரிசில் பெற்ற யானையை அம்மரத்தில் கட்டி மரத்தை வேரொடு பிடுங்கி கோசர் மகிழ்ச்சியடைந்ததாகவும் குறுந்தொகை பா. 73, 298, போன்ற பாடலடிகள் மூலம் கூறப்பட்டுள்ளது.

மன்னர் குடும்ப முரண்
மன்னர் குடும்பத்திற்குள்ளாக முரண் ஏற்பட்டுள்ளது.  கோப்பெருஞ் சோழன் மகன்கள் இவரிடம் போரிட துணிகிறார்கள்.  இவரும் கோபமடைகிறார்.  பின்னர் மானம் கருதி வடக்கிருந்து உயிர் துறந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூறப்பட்ட சில எடுத்துக் காட்டுகளில் வழியாக, பண்டைய சமூகத்தில் பல்வேறு முரண்கள் நிகழ்ந்ததை அறிய முடிகிறது.  அடிமையுடைமைச் சமுதாயமும், பின்னர் உடைமை சமுதாயமும் இருவேறு தளத்தில் நின்று மோதிக் கொண்டன என கருத இடமுண்டு.  அதில் மன்னர் உடைமைச் சமூகம் வெற்றி பெற்ற நிலையையே பெரும்பகுதி இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன.

சமூக அமைப்பினை நன்கு ஆராய்ந்த காரல் மார்க்ஸ், அவர் சமூகப் படிநிலையையும், சமூகச் சூழலையும் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார உற்பத்தி முறையில் எழுகிற உறவுகள் தான் சமூக அமைப்பை நிர்ணயிக்கின்றன.  மூலப் பொருட்களைக் கையாண்டும், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தியும் பொருள் உற்பத்தி நடைபெறும் போது உற்பத்தியில் சம்பந்தப்பட்டவர்களிடையே எழுகின்ற உறவுகளே சமூக அமைப்பை நிர்ணயிக்கின்றன.  அவர்களிடையே உறவுகள் எவ்வாறு அமைகின்றன என்பதைப் பொறுத்துச் சமூகம் அமைகிறது.  உற்பத்திச் சக்திகள் யாருடைய உடைமையில் இருக்கின்றன என்பதைப் பொறுத்து உற்பத்தி உறவுகள் அமைகின்றன.  உடைமை முறையில் மாற்றம் ஏற்படும் போது, உற்பத்தி முறையிலும் மாற்றம் ஏற்படுகிறது.  அதன் விளைவாக பொருளாதார அமைப்பின் மீது அமைந்திருக்கிற சமூகமும் மாறுகிறது.” (பக். 177, சமூகவியல், எஸ். சாவித்ரி) என்று குறிப்பிடுவதாக சமூகவியலில் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழர்கள் கொங்கரை அடக்கும் பொருட்டு, ‘போர்’ எனும் ஊர்த் தலைவனாகிய ‘பழையன்’ என்னும் சேனாதியிடத்து வேற்படையை கொடுத்து வைத்திருந்தான் என,

“கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர்
வெண்கோட் டியானைப் போர்
பழையன் வேல்வாய்த் தன்னநின்” (நற். பா. 10 : 6-8) என்ற பாடலில் அறியலாம்.

கடல் பிறகோட்டிய செங்குட்டுவன் பழையனை அழித்ததாக பதிற்றுப்பத்து குறிப்பிடும்.

“இடும்பாவனத்தின் ஒரு புறத்தே பாசறையிட்டுத் தங்கினான்... வியஊரை அழித்தான்.  பின்னர் கரையின் எதிர்புறத்தை அடைந்து அங்கிருந்த கொடுகூரையும் அழித்து வென்றான்.  ‘பழையன்’ என்பவன் காத்து வந்த... வேம்பினது முழவு போன்ற அடிமரத்தை வெட்டி அவனையும் வென்றான்... தூய மங்கலவணிகளை அதனாலேயே இழந்து போனவரான பல பெண்டிரின்... கூந்தலைக் களைந்து அவற்றால் திரிக்கப்பெற்ற கயிற்றினாலே யானைகளை வண்டியிற் பூட்டி, அக்காவல் மரத்தை தன் கோநகர்க்கு எடுத்துச் சென்றான்”.  (ஏ -ம் பத்து, பக். 135, புலியூர்கேசிகன்)

குறிப்பாக, பழையன் சோழர்க்கு கட்டுப்பட்டவனாய் இருந்திருக்கின்றான்.  சேரனை, சோழர்கள் வெறுத்திருக்கின்றனர்.  அதனால், “வியலூர் - இது நன்னன் வேண்மானுக்கு உரியது’ “நறவு மகிழ் இருக்கை நண்மான் வேண்மான், வயலை வேலி வியலுருக்கு மறுகரையிலிருந்த ஆர்; இவையிரண்டும் ஆற்றங்கரை ஊர்கள், ‘பழையன்’ ஒரு குறு நில மன்னன்; பாண்டி நாட்டு மோகூருக்குத் தலைவனாக விளங்கியவன்; இவனுக்குரிய காவன் மரம் வேம்பு... சோழர் குடிக்குரியோரை இவன் வென்றதனை ‘சூடா வாகைப் பறந்தலை யாடுபெற ஒன்பது குடையும் நண்பகல் ஒழிந்த பீடில் மன்னர்’ எனப் பரணர் அகநானூற்றில் குறிப்பிடுவர்.

“சேரமான் கணைக்கால் இரும்பொறை காலத்திலும் மூவனென்பானொரு தலைவன் காணப்படுகின்றான்.  அவன் சேரனொடு பொரும் வகைசெய்து கொண்டு தீங்கு பல செய்தான்.  அதுபொறாத சேரமான் அவனைப் போரில் சென்று வென்று அவனுடைய பல்லைப்பிடுங்கித் தன் தொண்டிநகர் வாயிற் கதவில் வைத்துக் கொண்டான் என பொய்கையார் புகன்றுரைக்கின்றார்.” (பக். 22 ஐஐ – புறநானூறு, கழகம்)

மேலும், பதிற்றுப்பத்தின் வழியாக கோட்டைகளை முற்றுகையிடுவதையும், ஊரினை கொலுத்தியதைப் பற்றியே புகழ்ந்துரைக்கப்படுகின்றது.

இது போன்ற பல்வேறு வரலாற்று குறிப்புகளை சங்க இலக்கியங்களில் காண முடிகிறது.  பொதுத் தன்மையில் மூவரும் ஒன்றிணைந்து ஆட்சி செலுத்தினார்கள் என எங்கெணும் காண முடியவில்லை.

ஆக, பழந்தமிழகம் என்று குறிப்பிடப்படும் காலக்கட்ட சூழல் (கி.பி. 2-க்கு முற்பட்ட சூழல்)  ஆய்வின் அடிப்படையில் பல்வேறு சான்றாதாரங்களின் அடிப்படையிலும் மார்க்ஸ் குறிப்பிடும் சமூக பரிணாம கட்டமைப்பு முறை தௌ;ளியதாய் விளங்குகின்றது.  அதாவது இனக்குழு சமூகச் சூழல் நாளடைவில் அடிமையுடைமை சமூகமாக நிலை கொண்டிருக்கின்றது.  நில அடிப்படையிலான மக்களுள் தலைமைகள் தோன்றியிருக்கின்றனர்.  அத்தலைமைகளே பிற்காலத்துள் நிலவுடைமையாளர்களாக மாறியிருக்கின்றனர்.  அடிமைச் சமூகச் சூழலும் நிலபிரபுத்துவ சமூகச் சூழலுக்குமான காரணியாக மன்னர்கள் வள்ளல்கள், வேளிர்கள், குறுநிலக்கிழார்கள் ஆகியோருக்கிடையேயான முரண்பாடுகள் தெளிவுற அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்
1. அரசியல் பொருளாதாரம், லெவ் லியோன்டியெவ், முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ - 1975.
2. சமூகவியல், எஸ். சாவித்ரி, மோகன் பதிப்பகம், சென்னை - 1987.
3. தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும், ஆ. இராமகிருட்டிணன், சர்வோதய இலக்கிய பண்ணை, மதுரை - 2011.
4. சங்க நூல்கள் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு)

baluprabhu777@gmail.com

*கட்டுரையாளர்: - முனைவர் பா. பிரபு., உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீ மாலோலன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மதுராந்தகம் - 603 306, காஞ்சிபுரம் (மா). -



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard